தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(8)

4.8
(6)

அவளுக்கு வேறு வழி தெரியவில்லை அவன் என்ன சொன்னாலும் கேட்டு தான் ஆக வேண்டும் அமைதியாக தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்ற குகனிடம் பாத்திரம் எல்லாம் கழுவனுமே அதான் என்றாள் சஷ்டிப்ரதா. எப்படி மேடம் இந்த டிரஸ் போட்டுட்டு வெளியே வர கூடாது அதனால் பாத்திரம் கழுவுறேன் என்ற பெயரில் டிரஸ்ஸை ஈரமாக்கனும் அது தானே உன்னோட ப்ளான் என்ற குகன் ஏப்ரானை எடுத்து அவளுக்கு கட்டி விட்டவன் இப்போ பாத்திரம் கழுவு டிரஸ்ஸும் நனையாது, பாத்திரமும் சுத்தமாகும் என்று கூறிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.

 

படுபாவி படுபாவி எப்படியாவது தப்பிக்கலாம் என்று பார்த்தால் விட மாட்டான் போலையே இந்த மாதிரி டிரஸ் போட்டு நான் சுத்துறதை என் சித்தி பாத்துச்சு அவ்வளவு தான் என்னை உயிரோடு எரித்து விடும் என்று நொந்து கொண்டாள் சஷ்டிப்ரதா.

 

 

அவனோ அவளை அழைத்துக்கொண்டு சென்றான். மீட்டிங் முடியும் வரை நீ இந்த ரூம்ல ஸ்டே பண்ணு என்று அவளை ஒரு அறையில் விட்டு விட்டு அவன் சென்று விட அவளது மொபைல் ஃபோன் ஒலித்தது.

 

அதை எடுக்கலாமா வேண்டாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க சரி எடுக்கலாம் என்று அவள் அட்டன் செய்து காதில் வைத்தாள்.

 

சஷ்டி உன் அப்பாவை யாரோ அடித்து போட்டு இருக்காங்க என்று கார்த்திகா பதற்றத்துடன் கூறிட என்னம்மா சொல்றீங்க எப்படி ஆச்சு. யாரு அடிச்சது என்று சஷ்டிப்ரதா கேட்டிட யாரு என்ன எதுவுமே தெரியவில்லை சஷ்டி ஆனால் அவரை பலமா அடித்து இருக்காங்க எனக்கு பயமா இருக்கு நீ எங்கே இருக்க என்றார் கார்த்திகா.

 

நான் தான் சொன்னேனே அம்மா ஆஃபீஸ் டூர் என்று அவள் கூறிட பொய் சொல்லாதேடீ உன் ஃப்ரண்ட் யாத்ரா கிட்ட கேட்டேன் ஆஃபீஸ் டூர் எல்லாம் எதுவும் இல்லை என்று அவள் சொல்லி விட்டாள் என்று கார்த்திகா கத்திட நான் விஷ்ணு கூட தான் இருக்கிறேன் அம்மா என்றாள் சஷ்டிப்ரதா.

 

நினைச்சேன் டீ நீ அந்த அனாதை பையன் கூட தான் இருப்பன்னு ஏன் டீ உனக்கு எங்களை விட அவன் தான் முக்கியமா போயிட்டான்ல என்று அவளை வசை பாடிக் கொண்டே இருக்கவும் ஃபோனை கட் செய்து விட்டாள்.

 

அவளுக்கு திரும்பி தன் வீட்டிற்கு செல்லும் எண்ணம் துளியும் இல்லை. ஒரு மாதம் முடிந்த பிறகு தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் மட்டுமே இருந்தது.

 

 

விஷ்ணு கண் விழித்து எழுந்து விட்டால் போதும் என்று தான் தோன்றியது. இந்த உலகத்தில் அவளுக்கு என்று இருக்கும் ஒரு உண்மையான உறவு அவன் மட்டுமே. அவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள். அந்த நேரம் அறைக்குள் வந்தான் குகநேத்ரன்.

 

என்ன ப்ரதா அழுதுட்டு இருக்க என்ன விஷயம் என்று அவன் கேட்டிட ஒன்றும் இல்லை என்றவள் நான் வீட்டுக்கு போக அனுமதிப்பீங்களா குகன் என்றாள் சஷ்டிப்ரதா.

 

மீட்டிங் முடிந்தது லஞ்ச் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று அவன் கூறிட உங்க வீட்டுக்கு இல்லை என் வீட்டுக்கு என்றாள் சஷ்டிப்ரதா. அங்கே எதற்கு என்று அவன் கேட்டிட என் ஸ்டெப் ஃபாதருக்கு ஆக்சிடென்ட் என்றாள் சஷ்டிப்ரதா.

 

அவனுக்கு ஆக்சிடென்ட் எல்லாம் ஒன்றும் ஆக வில்லை நான் தான் ஆளை வச்சு உறிச்சு எடுத்தேன் என்றான் குகநேத்ரன். அவனை கேள்வியாக அவள் பார்த்திட உன் கிட்ட தப்பா நடந்து கொண்டான் என்று சொன்னியே பணிஷ்மென்ட் வேண்டாமா அதனால் தான் என்றான் குகன்.

 

ஓஓ எனக்காக தான் அவரை நீங்க அடிச்சிங்களா என்ற சஷ்டிப்ரதாவிடம் ஆமாம் உனக்காக தான் அவனை அடித்தேன். பெத்த பொண்ணு மாதிரி நடத்த வேண்டிய பொண்ணை ரேப் பண்ணின பொறுக்கியை அடிக்காமல் கொஞ்சுவாங்களா என்றான் குகன்.

 

அவனை நீங்க அடிச்சீங்க சரி உங்களை யார் அடிக்கிறது என்றாள் சஷ்டிப்ரதா. என்னை அடிக்கனுமா நான் என்ன தப்பு பண்ணினேன் என்றான் குகன்.

 

நீங்களும் என்னை ரேப் தானே பண்ணுனீங்க என்ற சஷ்டிப்ரதாவிடம் நீ ஒன்றும் பதினோரு வயது பொண்ணு இல்லையே அது மட்டும் இல்லாமல் நான் உன்னை கட்டாயப்படுத்தி இன்டிமேட்டா இருக்க வில்லையே. என்னோட அப்ரோச் கொஞ்சம் ஹார்ஸா இருந்திருக்கலாம் பட் நம்ம அக்ரிமென்ட் இது தானே. ஒரு மாதம் முழுக்க நீ என் கூட ஸ்டே பண்ணனும், பெட் ஷேர் பண்ணனும் என்று கூறினான் குகன்.

 

அவள் பதிலேதும் பேசாமல் மௌனமாக நின்றிருக்க லுக் ப்ரதா நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க இப்போ கூட ரெடி தான் நீ தான் என்னோட ஆஃபரை அக்செப்ட் பண்ணிக்க முடியாது என்று சொல்லி விட்ட அதனால் சும்மா என்னை ப்ளேம் பண்ணாதே.

 

நீ என்ன டிராமா பண்ணினாலும் அக்ரீமென்ட் கேன்சல் பண்ணவே மாட்டேன். அப்பறம் உனக்கு கொடுத்த ஆஃபரை என் கூட இருக்கிற இந்த ஒன் மந்த்ல அக்செப்ட் பண்ணினால் ஓகே அதர்வைஸ் ஆஃபர் கேன்சலாகிரும் என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட அவள் தான் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

 

அறைக்குள் மீண்டும் வந்தவன் நீ சாப்பிட வர வில்லையா என்று கேட்டதும் பசி இல்லை என்றாள் சஷ்டிப்ரதா. பொய் சொல்லாதே வா என்று அவளை இழுத்துக் கொண்டு சென்று சாப்பிட அமர்ந்தான்.

 

ஏன் இப்படி பண்ணுறீங்க குகன் என்று பற்களைக் கடித்த சஷ்டிப்ரதாவிடம் இது ஹோட்டல் அதனால் பொறுமையா இருக்கிறேன் இல்லைன்னு வை நீ பல்லைக் கடிக்கிறதுக்கு உன் பல்லு முப்பத்தி இரண்டும் சிதறிடும் எந்த சீனும் கிரியேட் பண்ணாமல் சாப்பிடு என்று கூறிவிட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவளுக்கும் வேறு வழி இல்லையே அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 

 

என்னங்க யாரு உங்களை இப்படி அடிச்சு போட்டது என்று அழுத கார்த்திகா விடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தார் ராஜேஷ். அவருக்கே தெரியாதே யார் தன்னை அடித்தது என்று.

 

ஆனால் அடித்தவன் கொலை வெறியோடு அடித்தது மட்டும் நியாபகம் இருக்கிறது.

 

கார்த்திகா மனதிற்குள் புழுங்கினார். தன் கணவனால் இனி குடும்ப வாழ்க்கையில் ஈடு பட முடியாது என்று மருத்துவர் கூறிய விசயத்தை எப்படி கணவரிடம் கூறுவது என்று.

 

 

என்ன ப்ரதா இன்னும் கிளம்பாமல் இருக்க என்ற குகனிடம் ப்ளீஸ் கொஞ்சம் நான் போடுற மாதிரி டிரஸ் கொடுங்க குகன் என்று அவள் கெஞ்சிட சிறிது நேரம் அவளைக் கெஞ்ச விட்டு ரசித்தவன் சரி ஓகே என்று ஒரு உடையை கொடுத்து அணிய சொன்னான்.

 

நல்ல வேளை அது ஒரு மேக்ஸி கவுன். அவள் அதை அணிந்து கொண்டு வர அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து அவளது பின் கழுத்தில் முத்தமிட்டவன் இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க ப்ரதா அவசியம் இன்னைக்கு ஆஃபிஸ் போகனுமா என்று கிறக்கமாக அவன் கேட்டிட அவளுக்கு தான் இதயம் பக்கு பக்கென்று அடித்துக் கொண்டது.

 

குகன் ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நைட்டு பார்த்துக்கலாமே என்று அவள் கூறிட நமக்கு ஃபர்ஸ்ட் பகல் தானே ப்ரதா ஆல்ரெடி நடந்துச்சு என்று அவன் கண்ணடித்திட அவளுக்கோ கடவுளே இவன் கிட்ட இருந்து என்னால தப்பிக்கவே முடியாதா என்று அவள் நொந்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் அவனது மொபைல் போன் ஒலித்தது.

 

அவளை விட்டு விலகி ஃபோனை அட்டன் செய்து பேச ஆரம்பித்தான் குகன். என்னம்மா நீங்க ஏன் இப்படி பண்ணுறீங்க என்று பற்களை கடித்த குகன் சரி வரச் சொல்லுங்க ஆஃபீஸ் தான் கிளம்பிட்டு இருக்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்தான் குகன்.

 

ப்ரதா உனக்கு கால் டாக்ஸி புக் பண்ணி இருக்கேன். நீ அதில் ஆஃபீஸ் வந்து விடு நான் அர்ஜென்ட்டா கிளம்பனும் என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவளும் கால் டாக்ஸி வரும் வரை காத்திருந்தாள்.

 

 

கால் டாக்ஸி வரவும் அவளும் அலுவலகம் வந்து சேர்ந்தாள். ஹாய் சஷ்டி என்ற யாத்ரா என்னப்பா நான்கு நாளில் ஆளே அழகா மாறிட்ட பிண்ணல் ஃப்ரீ ஹேரா மாறிடுச்சு சரோஜா தேவி கால சுடிதார் மாறி மேக்ஸி எல்லாம் அதுவும் துப்பட்டா இல்லாமல் வாவ் சூப்பரா இருக்க என்றிட அவளிடம் லேசான புன்னகையை பதிலாக கொடுத்து விட்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் சஷ்டிப்ரதா.

 

 

ரிசப்ஷனில் அவள் அமர்ந்திருக்க ஒரு நவநாகரீக யுவதி ஒருத்தி அங்கே வந்தாள். எக்ஸ் கியூஸ் மீ என்ற குரலில் நிமிர்ந்த சஷ்டிப்ரதாவிடம் மிஸ்டர் குகநேத்ரன் இருக்காரா அவரை பார்க்கனும் என்றாள் அந்த நவநாகரீக யுவதி.

 

 

உங்க கிட்ட அப்பாயின்மென்ட் இருக்கா என்ற சஷ்டிப்ரதாவிடம் டானியா வந்திருக்கேன்னு உங்க எம்.டி கிட்ட சொல்லு என்றாள் அதிகாரமாக.

 

அவளும் இண்டர்காமில் அவனுக்கு அழைத்து சார் உங்களைப் பார்க்க மிஸ்.டானியா வந்திருக்காங்க என்று கூறிட அவங்களை உள்ளே அனுப்பு ப்ரதா என்று கூறிவிட்டு அவன் காலை கட் செய்தான்.

 

மிஸ்.டானியா உங்களை எம்.டி வரச் சொன்னார் நேரா போயி லெப்ட் கட் பண்ணினால் ஃபர்ஸ்ட் ரூம் என்று அவள் கூறிட அவளது கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தாள் டானியா.

 

சஷ்டிப்ரதாவோ அதிர்ந்து அவளைப் பார்க்க நீ சாதாரண ரிசப்ஷனிஷ்ட் நான் உங்க எம்டியை கல்யாணம் பண்ணிக்க போறவள். வார்த்தைக்கு வார்த்தை மிஸ்.டானியா

என்று சொல்லிட்டு இருக்க இடியட் கால் மீ மேடம் என்றாள்.

 

 

 

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!