காதலே -08
நண்பனாக,காதலனாக கணவனாக கனவுகளில் வாழ்ந்த நிதிஸுன் ஞாபகங்கள் எழுந்ததென்னவோ உண்மை தான் எதிர் காலம் இல்லாத இந்தக் காதல் பற்றி வீட்டில் சொல்லவா முடியும் ஒரு தலைக் காதல் என்றாலும் உண்மையாகக் காதலித்தாள் தானே.’வாழ்கை போகும் வழியில் வாழலாம்’ என எண்ணிக் கொண்டாள்.அப்படியே பல எண்ணங்களுள் அழுகையில் கரைந்தவள் தாய் வரும் அரவம் கேட்கவே கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து அமர “எல்லாம் நல்லதா அமையும் கவலைப்படாதமா , நாளைக் முகம் டல்லா இருக்கும், நானும். அப்பாவும் உனக்கு எப்போதும் நல்லததான் செய்வம் , எதையும் யோசிக்காமல் தூங்குமா ” என மகளின் நெற்றியில் முத்தமிட்டு போர்வையை பேர்த்தி விட்டு வெளியேறினார் வாணி.
இரவு வானை வெறித்தபடி நின்றிருந்தான் நிதிஸ். அன்று “வெளிய போ” என ராமை சொன்னதோடு ராம் நிதிஸோடு பேசுவதில்லை, தரங்கினியை சந்திக்க போவது என்றாலும் நிதிஸை அலுவலகத்தில் விட்டுத்தான் செல்வான் ராம்.ஆனால் இப்போது அலுவலகம் முடிந்தே தரங்கினியை சந்திக்கத் தொடங்கி இருந்தான் நிதிஸுன் அழைப்பை ஏற்பதில்லை அவன் குறுஞ்செய்திகளை பார்ப்பானே தவிர பதில் அனுப்ப மாட்டான்.
‘ என்ன விட அழுத்தக்கானார இருப்பான் போல’ என எண்ணிக் கொண்டான். சிறுவயது இருவரின் குறும்புகள் ஞாபகம் வரவே இதழோரம் சிறு புன்னகை இன்றும் பிராமிற்கு அழைக்க அவன் நம்பர் பிசியின் வரவே அவன் அறைக் கதவை தட்டினான் நிதிஸ்.
ராமும் கதவை திறக்க “பேசணும் வா” என்றான். “ஓகே” என்றவன் “பேபி குட் நைட் நாளைக்கு பார்க்கலாம்” என அழைப்பை துண்டித்து விட்டு நிதிஸைப் பின் தொடர்ந்து சென்றான் ராம்.
ராம் மொட்டை மாடிக்கு வர இருளை வரித்த படி நின்ற நிதிஸ் ” சாரி” அன்று ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன் என்றான் ராம் எதுவும் சொல்லவில்லை ஒரு பெருமூச்சு மட்டுமே.
“தரங்கிணி வீட்ட என்ன சொல்றாங்க” எனக் கேட்க “அவள பிரஷர் பண்றாங்க ” டாட் பேசிருக்கார்,என்றான். போங்கடிங்க டிலே பண்ணாம செய்வோம் என்றால் நிதிஸ். அதற்கு ராமோ “இல்லை” என தலையாட்டியவன் “உன்னோடது முடியட்டும்” என்றான் அழுத்தமாக.
“என்னால சில ஃபீலிங்க்ஸ்ல இருந்து வெளியே வர முடியல, அந்த குரல் என் உயிர் மூச்சோட கலந்துட்டு” என்றான்.தானும் காதலிப்பவன் தானே நிதிஸின் உணர்வுகள் புரிந்தாலும் எந்த ஒரு முகம் தெரியாத காதலை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதுதான் ராமின் கேள்வி.
நிதிஸ் “ஒருவேளை அது யாருனு கண்டே பிடிக்காம முடியலனா? என்ன பண்ணுவ”
“என்ன பண்ணலாம்?” என்ன பணண்லாம் என நிதிஸ் ராமிடமே கேட்க “கல்யாணம் தான்” என்றான் ராம் . ” ம்ம் கல்யாணம் பண்ணிக்க தான் வேணும் ஆனா கொஞ்சம் டைம் வேணும்” என்றான்.”தட்ஸ் குட்” என்றான் ராம்.
“ஒருவேளை அவங்க,அந்த குரல் ஆல்ரெடி திருமணம் ஆகினவங்களா இருந்தா ? “இப்படி எல்லாம் நானும் யோசிச்சேன்டா அந்த குரலுக்கு ஒரு ரசிகனா எப்பவும் இருப்பேன்” என்றான் உறுதியான குரலில் . வித்தியா பொய் சொன்னதையே தாங்கிக் கொள்ள முடியாது நிதிஸ் புலம்பியது ராமுக்கு தெரியும் தானே மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என தான் ராம் இப்போது கேட்டது.
தமையன் என்பதை தாண்டி ராமுக்கும் நிதிஸுற்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. நண்பர்கள் போல் தான் இருவரும்.
தமையனின் சிந்தனை நிம்மதியே தந்தது. “ஸ்டூடியோவில் வித்யா ஸ்ரீ ப்ரொபோஸ் பண்ணா?”என்றான் நிதிஸ். “கங்கிராட்ஸ் ப்ரோ” நிதிஸ் அவனை முறைத்துப் பார்க்க ராமோ உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு அதான் வாரத்துக்கு ஒரு ப்ரோபோசல் வருது என்றான் ராம் பேசிய தோரணையில் நிதஸுக்கோ சிரிப்பு தான் வந்தது அவன் தோளில் கை போட்டவன்,” அத விடுற இந்த வித்தியாவக் கண்டாலே காண்டாகுது என்ன செய்றன்டே தெரியல” என்றான் .அது “சரி அவகிட்ட என்ன சொன்ன?” “சார் என ஒரு நாள் தனது அலுவலக அறையினுள் நுழைந்தாள் வித்யா.
” சார்” என்னை தான் கொண்டு வந்த பையன் அவனிடம் கொடுக்க அதில் ஒற்றை ரோஜாவும் ஒரு லவ் யூ என் பிரிட்டிங்ஸ் காட்டும் இருந்தது அவளோ தன் பாட்டுக்கு பேச தொடங்கினார் லவ் யு சார் நீங்களும் என்னை லவ் பண்றீங்கன்னு தெரியும் நான் லவ்வ ஓபன் பண்ணிட்டேன் என்றால் அழகாக புன்னகைத்து வாட்ஸ் நொன்சன்ஸ் வித்யஸ்ரீ எனக்கு அர்ச்சித்தவன் எப்போதும் சாதுவாகப் பேசியவன் என்று இப்படி பேச இரண்டு விட்டால் வித்யா ஏற்கனவே வித்யா மேல் கோபத்தில் கை நீட்டி விடுவேனோ என பயந்தவன் என்றவரை பொறுமையாக பேசினான்.
சாரி வித்யா ஆல்ரெடி எனக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு உன்ல அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துகிட்டே போல அத இப்படி லவ்வுன்னு நினைச்சுட்ட இங்க எல்லார் போலவும் தான் நீயும், உன் கரியர்ல போக்கஸ் பண்ணு, அத விட்டுட்டு லவ் பின்னாடி திரியாத உனக்கு பெஸ்ட் பியூச்சர் இருக்கு என்றான் நிதிஸ்.அவன் பேசப் பேச வித்யாவோ அதிர்ச்சியில் உறைந்து போனவளுக்கு செருப்பால் அடித்த உணர்வு.
“அப்படியே அதிர்ச்சியில் எதுவும் பேசாம போயிட்டா” என்றான் பெருமூச்சுடன்.” வேற எப்படி கண்டுபிடிக்கிறேன்னு தெரியல” “நானும் அந்த வெட்டிங் பற்றி என்னோட ஸ்டஃப் கிட்ட கேட்டேன் அந்த பொண்ணு வெட்டிங்க்குக்கு போயிருந்தா, தெரியலைன்னு சொன்னா பிறகு கேட்டு சொல்றேன்னு சொன்னா, ரெண்டு நாளுல ஆபீஸ்ல வச்சு சொன்னா ஏதோ ரிதம் இசை குழுவாம் கான்டக்ட் நம்பர் தந்தா, ஏதோ லோக்கல் மியூசிக் போல”என்றான் ராம். இதான் கண்ட்ரோல் நம்பர் யூஸாகுமானு பாரு என ராம் கொடுத்த தொலைபேசி இலக்கத்தை தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டான் நிதிஸ் “லேட் நைட் ஆகிவிட்டடு வா தூங்கலாம்” என நிதிஸையும் அழைத்துக் கொண்டு சென்றான் ராம்.
“சாரி சரண், இனிமே வீடியோஸ் போட மாட்டேன் எல்லா காதலும் கல்யாணத்துல சேர்ரல்ல தானே, என்னோடதோ ஒரு தலை காதல் எந்த எதிர்காலமே இல்லைன்னு புரியுது இருந்து இந்த பாழாபோன மனசு இந்த காதல தானே தேடுது,”என விரக்தியை பேசியவள்.
“ஒரு தலை காதல தந்த இந்த தருதல மனசுக்கு வந்த எனும் பாடல் அடிகளைப் பாடியவள் அப்படியே அப் பதிவையும் தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றியவள் நேரம் சென்றறே தூங்கிப் போனாள்.
மறுநாள் பறவைகள் சத்தத்தில் கண்விழித்தாள் கனிமலர் உடலும், மனமும் ஒருவித சோர்வைத் தர குளித்து உலர் உடைய அணிந்து வெளியே வர தாய் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார். “எழுந்துடியா கனி இந்தம்மா” காஃபி கொடுக்க அவளும் அதறை வாங்கிப் பருக, “காஃபிய குடிச்சிட்டு கொஞ்சம் ஹால கிளீன் பண்ணுமா, சோபாக்கு புது கவயர் போடு” என் மகளுக்கு வேலைகளை பணித்தவர் காலை உணவை செய்யத் தொடங்கினார்.
கனியும் காஃபியை குடித்துவிட்டு வெளியே வந்து ஹாலை மப்பண்ணி புது சோபாக் கவய்களை மாற்றினாள். நேரமும் செல்ல “கனி ரெடியாகு” என தாய் சொல்ல உயிர்ப்பே இல்லாத தயாராகினாள். தாய் மற்றும் தந்தை பக்கத்து உறவினர்கள் சிலர் வந்திருந்தனர் வாணி அவர்களை வரவேற்று உபசரித்தார்.
வெளியே வாகன சத்தம் கேட்க கனிக்கு ஒருவித அழுத்தம் மனதில் “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க” எனக்கு கனியின் ஒன்றுவிட்ட சகோதரி சொல்லியபடி அறையில் நுழைய கனியோ நகத்தைக் கடித்து துப்பியைக்ஷ படி ஒருவித பதட்டத்தில் இருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து அமர்ந்து பேச்சுக்களும் சுக நலனில் தொடங்கி ஆரம்பமாகின மணமகனின் தாயோ “ஒரு பொண்ணுன்னு சொன்னாங்க நல்லா செய்வாங்க போல, சேலத்துல ஒரு வீடு இருக்காம் என தனக்கு அருகில் இருந்து தனது நாத்தனாரிடம் ரகசியம் பேச தொடங்கினார்.
மாப்பிள்ளையின் தகப்பனும் தம்பிக்கு பேங்க்ல கொஞ்சம் கெடுபிடி ஜாஸ்தி என் மகன் புகழை பாட மேகநாதன் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
” மாப்பிள்ளை தம்பி என்ன பேசாம இருக்கீங்க” என்ன ஒரு பெரியவர் கேட்க, லேசாக புன்னகைத்தவன் எதுவும் பேசவில்லை மாப்பிள்ளை தாயோ “என்ன வாணி பொண்ண கண்ணுல காட்ட மாட்டீங்களா என ஜாடை பேச “மலர்” என வாணி அழைக்க உறவு பெண்களுடன் வந்தாள் கனி.
அனைவருக்கும் கஃபியை கொடுத்தவள் மாப்பிள்ளைக்கும் கொடுக்க அவனும் மலரை ஏறிட்டு பார்த்தவன் காஃபியை எடுத்துக்கொண்டான் இனிப்புகளும், பலகாரங்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
“மாப்பிள்ளை,பொண்ணு தெரியுமா? ” இல்ல நான் படிச்சது,வேலை எல்லாமே சென்னையில தான் அதனால தெரியல அங்கிள்.
அப்போ சென்னை வாசின்னு சொல்லுங்க என்றார் பெரியவரோருவர சிரித்தபடி.
மேலும் பேச்சு வார்த்தைகள் தொடர கனி ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள் மாப்பிள்ளையின் தாயோ “பிள்ளைக்கு என்ன செய்வீங்கன்னு சொன்னா இப்பவே எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம் என்றார்.
மேகநாதனோ “சேலத்துல பொண்ணுக்கு வீடு கட்டி இருக்கு , நகை ஒரு ஐம்பது பவுன் வரும், பணமா……” என அவர் தொடங்க “அப்போ கல்யாணச் செலவ நீங்களே பாத்துக்கோங்க”என்றார்.
மாப்பிள்ளையின் தாய் வந்ததிலிருந்து பணம், நகை, வீடு என சொத்துக்கள் பற்றி ஒரு விதமாகவே பேசிக் கொண்டிருந்தார் அவர் பேச்சு அனைவருக்கும் எரிச்சலையே தந்தது.
‘இவருடன் மலர் எப்படி காலம் கழிப்பாள்’ எனும் சிந்தனையே வாணிக்கு மேகநாதன் அவர்கள் சொன்ன அனைத்திற்கும் சம்மதம் சொல்ல அன்றே நிச்சயதாம்பாளம் மாற்றப்பட்டு தேதியும் குறித்தனர். இரண்டு மாதங்கள் கழிய அதாவது ஐப்பசி மாதம் எட்டாம் தேதி நாள் குறிக்கப்பட்டது.
கனிக்கு ஏதோ மனது அழுத்த அவர்கள் கிளம்பும் வரை பொறுமையாக இருந்தாள்,நாம பேசிடு இருக்கமா பொண்ணயும மாப்பிளையையும் பேசச் சொல்லுங்க வாழப்போனது அவங்க தானே.”என்ற பெரியவர் தம்பி பொண்ணோட பேசணுமா? என கேட்க அவனும் தாயைப் பார்த்தபடியே எழுந்தான் கனியோ என்ன செய்வதென்று தெரியாது.எழுந்து வெளியே தோட்டத்திற்கு வர தோட்டத்தின் மத்தியில் மாமர கிளைகளில் ஊஞ்சல் போட்டிருந்தது.வந்தவள் அதில அஅமர கதிரோ மரத்தில அகைகட்டிய பஞி அவளைத் தான் பார்த்தான்.
சிவப்பும், பச்சையும் சேர்ந்த சேலையில் அழகாக இருந்தாள். ஒருபுறம் வளர்ந்து பெரிய மரங்கள் மா ,வாழை, தென்னை, கொய்யா என்பனவும் கேட்டில் இருந்து வீடு வரை வரிசையாக இரு மருங்கிலும் வளர்த்து சீராக வெட்டப்பட்ட புற்களும் பார்ப்பதற்கு அழகாகவும் குளுமையாகவும் இருந்தது.
“கனிமலர் என்ன படிச்சிருக்கீங்க?”
” சைபர் செக்யூரிட்டி”
” எங்க வேலை செய்றீங்க?”
“சாஃப்ட் டெக்ல”
“ஓ சூப்பர் ரொம்ப பெரிய கம்பெனி தான் நானும் சென்னையில் ஜூபி பேங்க்ல தான் வொர்க் பண்றேன்” என்றான் கதிர் .
மாப்பிள்ளை பெயர் கதிர் என்றதோடு சரி அவன் யார்? எவர்? என்று எதுவுமே அவளிடம் சொல்லப்படவில்லை .”என்கிட்ட எதுவும் பேசணுமா?” என்று கதிர் கேட்க அவளோ “இல்லை” என தலையாட்டினாள்..”கல்யாணத்க்துல விருப்பம் தானே” அவளோ தலையை குனிந்தபடியே நிற்க அப்போது கதிரின் அலைபேசிக்கு அழைப்பு வர அவனும் “எஸ் கியூஸ் மீ ” என் அங்கிருந்து அகலத் தான் கனிக்கு மூச்சே வந்தது.