நயமொடு காதல் : 04

4.8
(4)

காதல் : 04

பார்வதி குளித்துவிட்டு வந்ததும், அனைத்தையும் அங்கிருந்த டைனிங் டேபிளில் வைத்து தனது கையால் பரிமாறினாள் அன்னம். 

“உனக்கு எதுக்கு அன்னம் சிரமம்? நாங்க பாத்துக்குறோம்..” என்ற பார்வதியிடம், 

“ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ஊருக்கு வந்து இருக்கீங்க.. உங்களை கவனிக்க வேண்டாமா அத்தை.. நீங்க இங்க இருந்து போற வரைக்கும் எதுவும் பண்ண வேணாம்.. உங்களை நான் பார்த்துக்கிறன்..” என்றாள். பின்னர் இருவருக்கும் உணவு கொடுத்துவிட்டு, 

“அத்தை ராத்திரிக்கு நானே சமைச்சு கொண்டு வந்து தர்றேன்.. நீங்க எதுவும் செஞ்சு கஷ்டப்பட வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள். 

அன்னலட்சுமி சென்றதும் பார்வதியும் கிருத்திஷூம் பயணக் களைப்பு தீர நன்றாக தூங்கினார்கள். 

…………………………………………………

“ஐயோ மம்மி… ஏன் இப்பிடி செஞ்ச? இப்பிடி உன்னோட புரூஷன்கிட்ட என்னை சிக்க வைச்சிட்டு போயிட்டியே.. ஐயோ பசிக்குதே.. கடவுளே உனக்கு என்மேல இரக்கமே இல்லையா?” என்று புலம்பிக் கொண்டு இருந்த ரோகித் தலையில் ஒரு கொட்டு வைத்தார் ஜனகன். 

“ஐயோ இப்போ அடிக்கவும் செய்றாறே..” என்று அழுது கொண்டு இருந்தான். இதைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றார். 

“ஏன்டா டேய்.. இந்த வெங்காயம் வெட்ட சொன்னது அவ்வளவு பெரிய குத்தமா? ஏன்டா உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு தரணும் அதுவும் காலேஜ் போறதுக்கு முன்னாடியே தரணும்னா, நீயும் என் கூட ஹெல்ப் பண்ணா தானே என்னால சீக்கிரமா சமையலை செய்து முடிக்க முடியும்..”

“ஏன் டாடி இத்தனை நாள் அம்மா தனியாகத்தானே எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.. அவங்க இப்படி எல்லாம் வேலை சொன்னதே இல்லை.. ஆனால் இப்போ நீங்க சமைக்க வந்ததில இருந்து அதைச் செய்.. இதை எடுத்து குடுன்னு என்னைப் போட்டு என்னபாடு படுத்துறீங்க? இதெல்லாம் டூ மச் டாடி.. இருங்க மம்மி வரட்டும் உங்கள போட்டு கொடுக்கிறேன்..” என்றான். 

“அத அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல வெங்காயத்தை வெட்டி முடிடா..” என்று அவனுடைய தலையில் மறுபடியும் தட்டிவிட்டு சமையலை பார்த்துக்கொண்டார் ஜனகன். 

ஒரு மாதிரியாக ரோகித்தும் அழுது அழுது தன்னுடைய வேலைகளை செய்து கொடுத்துவிட்டு ரெடியாகச் சென்றான். அவன் ரெடியாகி வரும் போது ஜனகன் சாப்பாட்டை அவனது டிபன் பாக்ஸில் போட்டு அனுப்பி வைத்தார். 

இங்கே காலேஜில் ரோஹித்துக்காக அவனது நண்பர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். ரோஹித் வந்ததும், “ஹாய் டியூட்.. இன்னைக்கு ப்ராஜெக்ட் சப்போர்ட் பண்ணனும் எல்லாம் ரெடியா?”

“ஆமாடா இந்த ப்ரொஜெக்டை கொடுத்துட்டன்னா நான் ரொம்ப ஹாப்பி.. ரொம்ப கஷ்டப்பட்டு பண்ண ப்ராஜெக்ட் இது.. அப்புறம் நமக்கு இருக்கிற அந்த ரெண்டு எக்ஸாம்ஸையும் முடிச்சுட்டு நான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இந்தியாக்கு போய்டுவேன்..” என்றான். 

“என்னடா சொல்ற இந்திய போறியா? எங்ககிட்ட சொல்லவே இல்ல..” “ஆமாண்டா எங்க அம்மாவும் அண்ணனும் குலதெய்வம் கோயிலுக்கு இந்தியா போயிருக்காங்க.. எக்ஸாம் இருக்கிறதா என்னால போக முடியல.. இத முடிச்சிட்டு நான் ரொம்ப ஃப்ரீயா போய் இந்தியாவை சுத்திட்டு வந்துருவேன்.. ஐ லவ் இந்தியா..” என்று ரோஹித் கூறினான். 

“சூப்பர் மச்சான்.. ஆனால் உன்னோட ஹிட்லர் அண்ணா எதுவும் சொல்ல மாட்டாரா?”

“ஆமா ரோகித் எனக்கு உன்னோட அண்ணா இந்தியாக்கு ஒரு கோயிலுக்கு போயிருக்கிறாருனா நம்பவே முடியல..”

“டேய் என் அண்ணனுக்கு நீங்க வேணும்னா பயப்படலாம் ஆனால் நான் பயப்பட மாட்டேன்.. சீக்கிரமா எக்ஸாம் முடிச்சிட்டு போயிட்டு வர்றேன்..”

“சூப்பர் டா போய் என்ஜாய் பண்ணு..” பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ப்ராஜெக்ட்டை கொடுத்துவிட்டு, தமது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு கேண்டீனில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ஜூனியர் பொண்ணு இரா வந்து, “ஹாய் சீனியர்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டாள். 

“ஓ எஸ் தாராளமா பேசலாம் சொல்லு இரா என்றான். 

“அது வந்து சீனியர் நான் உங்ககிட்ட தனியா பேசணும்..”

“மச்சான் இரா உன்கிட்ட தனியா பேசணும்னு சொல்றா போ போய் பேசிட்டு வா..” என்று நண்பர்கள் கூறி அவனைக் கலாய்த்தார். 

“டேய் சும்மா கலாய்க்காதிங்கடா.. ஓகே இரா வா போகலாம்..” என்று அவளை நண்பர்களிடம் இருந்து சற்று தூரத்தில் அழைத்து வந்தான். 

அங்கே வந்ததும் இரா அவனைப் பார்த்து ஏதோ பேச வருவதும் பின்னர் பேச தயங்குவதுமாக அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தாள். 

அதைப் பார்த்த ரோஹித், “என்ன இரா எனி ப்ராப்ளம்? எதுக்கு எப்படி பேசணும்னு என்னை கூட்டிட்டு வந்திட்டு இப்படி எதுவும் பேசாம அமைதியா இருக்க? என்னாச்சு எதுவா இருந்தாலும் சொல்லு.. ஐ வில் ஹெல்ப் யூ..” என்றான். 

“ப்ராப்ளம் எதுவும் இல்லை சீனியர்.. நான் உங்க கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு பேசணும்.. ஆனா இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல..”

“எதுவா இருந்தாலும் சொல்லு இரா.. ஏதோ சொல்லனும்னு தனியா வரச் சொன்னே.. அப்புறம் என்ன சொல்லு..” என்று ரோஹித் சொன்னதும் இரா தலையை குனிந்து கொண்டு, 

“சீனியர் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்..”

“எனக்கு தான் உன்னை பிடிக்கும் இரா..” என்றான் ரோஹித். 

அவளும், “சீனியர் பிடிக்கும்னா.. ஐ மீன்.. நான் உங்களை.. ஐ லவ் யூ.. உங்களை ரொம்ப காதலிக்கிறேன்..” என்றாள். 

இதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தான். “இரா.. இரா.. என்ன ஏதாவது ப்ராங் பண்றியா?”

“நோ சீனியர் இட்ஸ் ட்ரூ.. நிஜமா சொல்றேன்.. எக்ஸாம் முடிஞ்ச அப்புறம் நீங்க காலேஜ்ஜை விட்டு போயிடுவீங்க.. அப்புறம் உங்களை மீட் பண்ணுவேனா இல்லையானு தெரியாது.. அதுதான் இன்னைக்கு வந்து சொல்றேன்.. எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு..” என்றாள் மறுபடியும். 

………………………………………………….

“என்ன அன்னம் ரொம்ப நேரமா ஏதோ யோசிச்சிட்டு இருக்க?”

“ஆமா அப்பா.. சாயந்தரம் அத்தைக்கும் மாமாக்கும் என்ன கொண்டுபோய் குடுக்கலாம்னு யோசிக்கிறன்?”

“அப்படியா கண்ணு.. பார்வதிக்கு பஜ்ஜி ரொம்ப பிடிக்கும்.. அதுவும் மொளகா பஜ்ஜி ரொம்ப விரும்பி சாப்பிடுவா”

“சரிங்க அப்பா.. அப்போ நான் மொளகா பஜ்ஜியே அத்தைக்கு பண்ணி எடுத்திட்டு போறேன்..” 

“சரிம்மா..” என்று அவர் சொன்னதும், அதை செய்வதற்காக குதித்துக் கொண்டு ஓடினாள் அன்னலெட்சுமி. 

கிருத்திஷூம் பார்வதியும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். மாலை வேளை தனது வீட்டில் அவர்களுக்காக சுட்ட பஜ்ஜியையும் தேநீரையும் எடுத்துக் கொண்டு வந்தாள் அன்னம். 

வாசலில் நின்று, “அத்தை.. அத்தை..” என்று அழைத்தாள். உள்ளே இருந்து பதில் வரவில்லை. அதன் பின்னர் மீண்டும், “அத்தை… மாமா..” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தவள் தான் கொண்டு வந்ததை எல்லாம் அங்கிருந்த டைனிங் டேபிளில் வைத்து விட்டு, நடுக்கூடத்தில் நின்று அவள் அழைக்க, அந்தச் சத்தம் கேட்டு முதலில் எழுந்தது கிருத்திஷ்தான். 

சத்தம் கேட்டதும், அவன் தான் இருந்த கோலத்தை மறந்து வெளியே வந்தான். அவனைக் கண்டதும் உடனே தனது கண்களை இரு கைகளாலும் மூடிக்கொண்டு, “ஐயோ மாமா ஏன் இந்தக் கோலத்துல வந்து இருக்கிறீங்க?” என்று மறுபக்கம் திரும்பி நின்று கேட்டாள் அன்னம். 

“என்ன கோலமா? நான் நல்லாத்தானே இருக்கிறன்..” என்று அவன் குனிந்து பார்க்க, ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தான். 

அவனுக்கு தான் நன்றாக இருப்பதாகவே தோன்றியது. ஆனால் அன்னத்துக்கு உடம்பில் குறுகுறு என்று இருந்தது. தான் இதுவரை எந்த ஆண்களையும் இப்படி பார்த்ததில்லை அல்லவா. அதனால் அவளுக்கு வெட்கமாக இருந்தது. “ஐயோ மாமா இது கிராமம் எங்கே இப்படி போட மாட்டாங்க.. சரி நீங்களும் அத்தையும் பஜ்ஜியை சாப்பிட்டு இதை குடிங்க நான் அப்புறமா வரேன்..” என்று தடுமாறி தடுமாறி பேசியவன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். அவளது ஓட்டத்தை பார்த்த கிருத்திஷ் முகத்தில் புன்னகை ஒன்று தோன்றியது. அதை கவனித்தவாறு வந்தார் பார்வதி. 

“யார் வந்தது கண்ணா?”

“அன்னம்தான் அம்மா.. என்னை பார்த்திட்டு அந்தப் பக்கம் திரும்பி நின்னு பஜ்ஜியை சாப்பிட சொல்லிட்டு ஓடிட்டா..”

“ஓடாம என்ன பண்ணுவா.. இது ஒண்ணும் அமெரிக்கா இல்லை.. இது கிராமம்.. இங்க இருக்கிற வரைக்கும் இப்படி எல்லாம் போடாதே சரியா..” என்று சொன்னார். 

“மம்மி ஆரம்பிச்சிட்டீங்களா? என்னவோ பண்ணுங்க..” என்று விட்டு, “சரி நான் ஃப்ரெஷாகிவிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு சென்றான். 

தாயும் மகனும் இருவரும் சேர்ந்து திண்ணையில வந்து அமர்ந்து கொண்டு, அன்னம் கொண்டு வந்த பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டு, தேநீரையும் குடித்துக் கொண்டிருந்தனர். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!