“ப்ச்! ஒன்னும் வேலைக்கு ஆகலை.” என்று உதட்டைப் பிதுக்கினாள் வெண்ணிலா.
“அப்புறம் ஏன் நிலா இவ்வளவு லேட்டா வர்ற? உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம் தெரியுமா?” நகுலன் முறைக்க.
“சாரி டா! ஏதோ நினைவுல அப்படியே உட்கார்ந்துட்டேன். அதான் உங்க அண்ணன தூது விட்டியா?” என்று வினவியவாறே நகுலனின் அருகில் அமர்ந்தாள் வெண்ணிலா.
“அண்ணனையா? காலைலப் பார்த்தது தான். அதுக்கப்புறம் அவனை ஆளையேக் காணோம். அப்புறம் எப்படி அவனை தூது விட முடியும்? என் அண்ணனை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்குத் தூக்கம் வராதே.”என்று பல்லைக் கடித்தான் நகுலன்.
“ உங்கண்ணனை வம்பிழுக்க,
எனக்கு என்ன வேண்டுதலா? அவரு தான் வாண்டடா வர்றாரு. வாட் கேன் ஐ டூ.” என்றாள் வெண்ணிலா.
“என்னமோ பண்ணித் தொலை. இப்போ உனக்கு டீ சொல்லவா? வேண்டாமா?” என்று நகுலன் வினவிக் கொண்டிருக்கும் போதே, ஆவி பறக்க டீயை கொண்டு வந்து நீட்டினான் ஹரிஷ்.
“நண்பன்டே!” என்று அவனைப் பார்த்து புன்னகைத்தவளோ,டீயை வாங்கி பருக ஆரம்பித்தாள்.
டீ குடித்து முடிக்கும் வரை, வேறு எதிலும் கவனத்தை செலுத்தாதவள்,
“ஓகே டியர்ஸ் வாங்க… எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது. இன்னைக்கு ஓல்டு ஸ்டூடெண்ட்ஸ வெல்கம் பண்றதுக்காக ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம். வாங்க ஆடிட்டோரியம் போகலாம்.” என்று வெண்ணிலா கூற.
“இவ மாறவே இல்லை. கல்ச்சுரல்ஸ்னா போதும் முத ஆளா போய் உட்கார்ந்துப்பா.” என்று அவளது தலையில் லேசாக தட்டினாள் சபரிகா.
“ப்ச்! வளர்ற பிள்ளையை தலையில் அடிக்காதடி.” என்றாள் வெண்ணிலா.
“எது வளர புள்ளையா நீ? அடியே எவ்வளவு நாளானாலும் இதுக்கு மேல வளர மாட்டே.” என்ற சபரிகா கேலி செய்ய.
அவளை முறைத்தாள் வெண்ணிலா.
சரியாக அப்பொழுது, “முஸ்தபா! முஸ்தபா!” என்ற பாட்டு கேட்கவும்.
எல்லோரும் வெண்ணிலாவைப் பார்க்க.
“எதுக்குடா என்னையப் பார்க்குறீங்க” என்றவளுக்கும் பழைய நினைவு லேசாக எட்டிப் பார்க்க, முகத்தில் புன்னகை வந்தது.
“ ஒன்னும் இல்லையே?” என்று கோரஸாக கூறியபடி அவளை நக்கலாகப் பார்க்க.
“எல்லாம் அந்த நெடுமரத்தால வந்தது.”என்று மெல்லிய குரலில் கூற.
“ஹேய் நிலா! யுகி அண்ணா பாவம். அவர் பாட்டுக்கும் சிவனேன்னு வெளிநாட்டுல இருக்காரு. அவரை ஏன் இழுக்குற?” என்று சபரீகா யுகித்திற்காக வக்காலத்து வாங்கினாள்.
“என்னது உங்க அண்ணன் வெளிநாட்டுல சிவனேன்னு இருக்காராமாம். அவரை இப்ப தான் பார்த்தேன். ஐய்யனாராட்டம் முறைச்சிட்டு திரியுறாரு.” என்ற வெண்ணிலாவை, அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“ எதுக்கு இவ்வளவு ஷாக்?”என்று பொதுவாக வினவினாள் வெண்ணிலா.
“ உண்மையாலுமே யுகி அண்ணா வந்திருக்காங்களா நிலா. இல்லை கனவு கினவு கண்டியாடீ?” என்று சபரீகா தயக்கத்துடன் வினவ.
“கொன்றுருவேன்.” என்று அவளது கழுத்தை நெறிக்க போனாள் வெண்ணிலா.
“ ஹேய் நிலா! டென்ஷனாகதடி… யுகி அண்ணா பாரின்ல இருக்குறதா நிகில் தான் சொன்னான். வேணும்னா நிகிலையே கேளு.” என்று மஹதி, வெண்ணிலாவை அமைதிப்படுத்த முயன்றாள்.
‘வெளிநாடு என்ன, சந்திர மண்டலத்தில இருந்தா கூட மதன் சாருக்காக அந்த நெடுமரம் வருவான். நான் தான் யோசிக்காமல் விட்டுட்டேன்.” என்று முணுமுணுத்தாள் வெண்ணிலா.
“உன் கிட்ட எதுவும் யுகி அண்ணா வம்பு பண்ணாறா?” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறே, நிகிலன் வினவ.
“எங்கண்ணன் தான் யுகி அண்ணா வர மாட்டாங்கன்னு சொன்னார். ஆனால் இப்போ யுகி அண்ணா வந்துருக்காங்க. அதுவும் இல்லாமல் உன்னை வம்பிழுக்குறது போல இந்தப் பாட்டு வேற ஸ்டூடண்ஸ் பாடுறாங்க. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு” என்று யோசனையாக நகுலன் கூற.
“காலேஜ் பாட்டுன்னாலே இந்தப் பாட்டு தான் பாடுவாங்க. இதுக்கப்புறம் எவ்வளவோ பாட்டு வந்திருச்சு. ஆனாலும் இந்த அளவுக்கு எதுவுமே இல்லை. சரி வாங்க நம்ம போய் வைப் பண்ணி, ஆடிட்டோரியத்தை கலக்குவோம்.” என்றாள் வெண்ணிலா.
“நாம போறதுக்குள்ள பாட்டே முடிஞ்சிடும்.” என்று மஹதி கூற.
அதேப் போல முஸ்தபா, முஸ்தபா பாட்டை மறுபடியும் பாட சொல்லி, இவர்களும் பாடியவாறே ஆடினர்.
அப்பொழுதுதான் உள்ளே வந்த யுகித்தோ, யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்கும் வெண்ணிலாவைப் உணர்ச்சியற்ற பார்வை பார்த்து விட்டு ஸ்டேஜுக்கு பக்கத்தில் நின்ற, பிரகாஷிடம் சென்றான்.
வெண்ணிலா ஆடிக் கொண்டிருந்தாலும், யுகித் அங்கு வந்ததை கவனித்தவள், அவன் நேராக ப்ரோக்ராம் ஆர்கனைஸ் செய்துக் கொண்டிருந்த மாணவனிடம் சென்று பேசுவதையும் கவனித்து விட்டாள்.
‘அடப்பாவி! அப்போ நீ தான் அவன்கிட்ட போய் இந்தப் பாட்டை போட சொல்லியிருக்கியா? இதுத் தெரியாமல் உனக்கு சப்போர்ட் வேற பண்ணியிருக்கேன். நீ திருந்தவே மாட்ட.’ என்று மனதிற்குள் அவனைத் திட்டியவள், பழைய நினைவில் ஆழ்ந்தாள்.
அன்று (காதல் பண்ணியது)
யுகித்தின் கோபத்தில் வெண்ணிலா பயந்ததெல்லாம் ஒரு சில நிமிடங்களே.
அதற்குப் பிறகு சுதாரித்தவளோ, “ஹலோ! சீனியர்ங்குறதுக்காக நீங்க என்ன பண்ணாலும் சும்மா இருப்பேன்னு நினைக்காதீங்க. இப்போ நான் என்ன பண்ணேன்னு இப்படி மிரட்டுறீங்க. நானும் பொறுமையா இருக்கணும்னு நினைக்கிறேன். விட மாட்டேங்குறீங்களே.”
“ஓஹோ! இது தான் பொறுமையா இருக்குறதா?” என்று நக்கலாக வினவினான் யுகித்.
“ஏய் பொண்ணுன்னு கை நீட்டாமல் பொறுமையா இருக்குறேன். என்னமோ நல்லவ மாதிரி பேசுற. அதான் ஏற்கனவே மதன் சார் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்ட தானே. அப்புறம் என்ன?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவினான் யுகித்.
“நீங்க என்ன சொல்றீங்க சொல்றது ஒன்னும் புரியல.”
“பாப்பாவா நீ நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியாமலிருக்கா.”
“ப்ச்! நான் போறேன். நீங்க உளறுறதைக் கேட்க எனக்கு டைமில்லை.”
“நடிக்காதே!”
“ நான் ஒன்னும் நடிக்கல சீனியர். என்ன விஷயம்னு சொல்லுங்க இல்லன்னா ஆள விடுங்க.”
“மதன் சார் என்னைக் கூப்பிட்டு, ரேகிங் பண்ணியான்னு கேட்டு வார்ன் பண்ணாரு.” என்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்த வெண்ணிலாவோ, “அப்படியா? ஒரு சாரா, அவரோட கடமையை தான் செஞ்சிருக்காரு.” என்றாள் வெண்ணிலா.
“யுகா! பேசிட்டு இருக்கும் போதே எதுக்கு இவ்வளவு கோபப்படுற?” என்று தீபிகா கண்டிக்க.
மூச்சை உள்ளிழுத்து கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான் யுகித்.
“நான் ஒன்னும் பொய் சொல்லலை பேபி. வம்பு வேணாம்னு தான் சீனியரைப் பார்த்ததும் அங்கிருந்து எழுந்து வந்துட்டேன். ஆனால் பின்னாடியே வந்து…” என்றவள் தயக்கத்துடன் யுகித்தை பார்க்க.
அவனுக்கு படபடப்பு வந்துவிட்டது. ‘எங்கே தான் அவளை கீழ் விழாமல் தடுப்பதற்காக அணைத்ததை தீபிகாவிடம் சொல்லிவிடுவாளோ?’ என்று பதறியவன் வேகமாக,
“தீபு! மதன் சார்ட்ட போய் என்னைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கா.” என்றான்.
“நான் என்ன சின்ன பிள்ளையா, சீனியர் என்னை வம்புழுக்கிறாரு. என்னென்னு கேளுங்க சார்னு கண்ணைக் கசக்கிக் கிட்டு அவர்க்கிட்ட போய் நிக்க.” என்றாள் வெண்ணிலா.
“அப்புறம் சாருக்கு எப்படி தெரியும் என்னைக் கூப்பிட்டு அவர் வார்ன் பண்ணாரு” என்று யுகித் மீண்டும் ஆரம்பிக்க.
“ அது எனக்கு எப்படி தெரியும். நான் சொல்லலை பேபி.”
“பொய் சொல்றா! நம்பாதே தீபு.” என்று இருவரும் மாறி மாறி தீபிகாவிடம் முறையிட.
இருவர் பக்கமும் திரும்பித், திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த தீபிகாவுக்கு கழுத்து வலிக்க ஆரம்பித்தது.
“ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்திருங்களா?” என்று தீபிகா கத்தினாள்.
இருவரும், ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே வாயை மூடினர்.
“நிலா! நீ சார் கிட்ட சொல்லலை தானே.” என்று தீபிகா வினவ.
“ பேபி ; நான் கம்ப்ளைன்ட் பண்ணலை.திரும்ப எந்த பிரச்சினைலையும் இன்வால்வாகாமல் இருக்கணும்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னைப் படிக்கவே விடமாட்டாங்க. படிச்சு நல்ல வேலைல சேர்ந்து பாரின்ல செட்டிலாகணும்னு ஏகப்பட்ட கனவுகள் இருக்கு. அதுக்கு இடைஞ்சல் வர மாதிரியான காரியம் எதுவும் செய்ய மாட்டேன். உங்க ப்ரெண்டோட எந்த வம்புத்தும்புக்கும் நான் போக மாட்டேன். அதேப் போல அவரையும் என் லைன்ல க்ராஸ் பண்ண வேண்டாம்னு சொல்லிடுங்க.” என்றவள் நண்பர்களை தேடிச் சென்றாள்.
“எங்க நிலா போன? எங்களோட தானே பேசிட்டு இருந்த?” என்று நகுலன் வினவ.
“அது… அந்த சீனியர் முறைச்சுப் பார்த்துட்டே வந்தார். வம்பு வேணாம்னு ஒதுங்கி போகலாம்னு பார்த்தேன். ஆனால் துரத்தி வந்து சண்டை போட்டுட்டு போறார்.”
என்று சற்று முன் நடந்ததைக் கூற.
“யுகா அண்ணா ரொம்ப நல்ல டைப். ஆனால் உன் கிட்ட மட்டும் ஏன் கோபப்படுறார்னு தெரியலை.” என்றான் நகுலன்.
நாட்களும் வேகமாக ஓட,கல்லூரி தொடங்கி பத்து நாட்களாகிருந்தது.
புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக வெல்கம் பார்ட்டி நடைபெற்றது.
“ஹேய்! எவ்வளவு நேரம் அந்த ப்ரோக்ராமை பார்க்குறது. போரிங்கா இருக்கும். நம்ம எங்கேயாவது வெளியே போகலாமா?” என்று மஹதி வினவ.
“நமக்காகத் தான் இந்த பார்ட்டியே. நம்மளே அவாய்ட் பண்ணா எப்படி? வாங்க ஆடிட்டோரியம் போகலாம்.” என்று எல்லோரையும் இழுத்துக் கொண்டு சென்றாள் வெண்ணிலா.
இவர்கள் போன நேரம், நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்த பெண்ணோ, “ நம்ம கல்லூரிக்கு வந்திருக்கும் புதிய மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக நம் கல்லூரி இசைப் புயல் யுகித் பாட வருகிறார்.” என்றுக் கூற.
தலையை கோதிக் கொண்டு புன்னகையுடன் துள்ளிக் குதித்து மேடை ஏறினான்.
“பில்டப்லாம் ஓவரா இருக்கே.” என்று கிண்டலடித்துக் கொண்டே வந்து அமர்ந்தாள் வெண்ணிலா.
ஆனால் அவன் பாடப் பாட இவள் தன்னை மறந்து ரசித்தாள்.
அவன் பாடி முடித்ததும் விடாமல் கைத் தட்டினாள்.
“ஹே! யுகாண்ணாவை கிண்டல் பண்ண? இப்ப கைத்தட்டுற?” என்று நகுலன் வினவ.
“ப்ரோக்ராமை தொகுத்து வழங்கியவர் பண்ண பில்டப் அப்படி. ஆனால் நல்லா பாடுறாரு. பல்லவி, சரணம் எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்கு.” என்றாள் வெண்ணிலா.
“ஹேய் பாட்டைப் பத்தி இவ்வளவு விஷயம் தெரியுமா?” என்று ஆச்சரியமாக சபரீகா வினவ.
“ம் பாட்டு, டான்ஸ் எல்லாமே அத்துப்படி.”
“சூப்பர். சகலகலாவல்லி தான் போ.” என்று அவளை பாராட்டினாள் சபரீகா.
அதே நேரத்தில் இவர்களை தாண்டி யுகித் செல்ல.
“ சீனியர்!’ என்று அவனை அழைத்தாள் வெண்ணிலா.
“ என்ன?” என்பது போல் யுகித் பார்க்க.
“ சூப்பரா பாடினீங்க. அதுவும் இந்த பாட்டு எங்களுக்காகவே பாடுற மாதிரி இருந்தது. தேங்க்ஸ்.” என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள் வெண்ணிலா.
“குட் ஜோக்! உங்களுக்காகலாம் நான் பாடல.”
“அப்படியா? ஆனால் நீங்க பாடுன முஸ்தபா முஸ்தபா பாட்டுல உள்ள ராகிங் பண்றது நட்புக்காக தானேங்குற வரி எங்களுக்கு தூது விட்ட மாதிரி தானே இருக்கு.” என்று விடாமல் வினவினாள் வெண்ணிலா.
“அதுக்காக தான் பாடினேன். ஆனால் உங்களுக்கு இல்லை. மதன் சாருக்கு புரியணும்ன்றதுக்காக பாடுனேன்.” என்று கேலியாக பார்த்து விட்டு செல்ல.
“இந்த அசிங்கம் தேவையா?” என்று நண்பர்கள் கேலி செய்ய.
“இதெல்லாம் கல்லூரியில் வாழ்க்கையில் சகஜமப்பா.” என்று தோளைக் குலுக்கி சிரித்தாள் வெண்ணிலா.’