“ஏங்க உங்களைத் தாங்க அப்பத்தில் இருந்து ஷ்ராவனி மேடம்னு கூப்பிட்டு இருக்கேன் உங்க காதுல விழுகலையா” என்றான் தஷகிரிவன் .
அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு இருக்க” என்றாள் ஷ்ராவனி.
“எதுக்கு கூப்பிடுவாங்க சப்ஜெக்ட்ல டவுட் நீங்க என்னோட ப்ரொபசர் தானே உங்ககிட்ட தானே டவுட் கேட்க முடியும் ” என்ற தஷியை முறைத்தவள், “நிஜமாவே டவுட் கேட்க தான் என்னை கூப்பிட்டியா” என்றாள் ஷ்ராவனி.
“பின்னே என் கூட சினிமாவுக்கு வாங்கனு சொல்றதுக்கா கூப்பிட்டேன், சினிமா டிக்கெட் கூட ஒன்றும் பிரச்சனை இல்லை எடுத்திடலாம் வர்றீங்களா?” என்ற தஷகிரிவனை முறைத்தாள் ஷ்ராவனி .
“மேடம் அப்படி மட்டும் பார்க்காதீங்க கண்ணு ரெண்டும் கீழே விழுந்திட போகுது” என்ற தஷகிரிவனை அவள் மேலும் மேலும் முறைத்திட, “ஏங்க இப்படி பார்த்துக் கொண்டே இருந்தீங்கன்னா அந்த முட்ட கண்ணு ரெண்டும் கழன்று விழுந்திட போகுதுங்க , அந்த அளவுக்கு பார்க்கிறீங்க” என்ற தஷகிரிவனைபார்த்து, “போடா லூசு” என்றபடி அவள் நடக்க ஆரம்பிக்க, “என்ன மேடம் இது டவுட்ன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு போயிட்டு இருக்கீங்க” என்றான் தஷகிரிவன் .
“என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது உனக்கு டவுட் எல்லாம் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்தும் போது வராதா நான் இன்னொரு கிளாசுக்கு போயிட்டு இருக்கும்போது தான் உனக்கு டவுட்டு கேட்க தோணுமா?” என்ற ஷ்ராவனியிடம், “அப்படி இல்லைங்க இப்போ தான் நீங்கள் கொடுத்த நோட்ஸை வாசித்து பார்த்தேன் ஆத்தி நமக்கு இது புரியலையே அப்படின்னு தோணுச்சு அதுதான் ஓடி வந்துட்டேன் உங்கள தேடி” என்ற தஷகிரிவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவள், “சரி உட்காரு சொல்லி தரேன்” என்று அங்கு இருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து அவனுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தாள் .
அவனும் அவளை ரசித்தபடியே இருக்க, “என் மூஞ்சில என்ன படமா ஓடுது நோட்புக்கை பாரு” என்று அவள் கூறிக் கொண்டிருக்க, “படத்தை மட்டும் இல்லைங்க கோவில் சிலையை கூட பசங்க ரசிக்க தான் செய்வோம்” என்றான் தஷகிரிவன் .
அவனை பார்த்து தலையில் அடித்தவள் “நான் ஒன்றும் கோவில் சிலை கிடையாது, உயிருள்ள பொண்ணு” என்றாள் ஷ்ராவனி .
“செதுக்கி வைத்த சிலை மாதிரி தான் இருக்கிங்க நீங்க உங்களை போய் பொண்ணுன்னு சொல்றீங்க” என்ற தசகிரிவனிடம், “ரொம்ப ஐஸ் வைக்காதே நான் உருகிட போறேன்” என்றாள் ஷ்ராவனி.
“உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்” என்று பாடியவன் அவளிடம்”உங்களை உருக விட்டுடுவேனா என்ன கவலைப்படாதீங்க அதெல்லாம் நான் இருக்கும் போது நீங்க உருகிட மாட்டீங்க” என்று அவன் கூறினான்.
“நீ இப்ப என்கிட்ட டவுட்டு கேட்டுட்டு இருக்கியா இல்லை கடலை போட்டு இருக்கியா” என்றாள் ஷ்ராவனி .
“கடலை போடத்தான் ஆசை நீங்க தான் கருணையே காட்ட மாட்டேங்கிறீங்களே அட்லீஸ்ட் பாடத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கை வச்சாவது உங்க கூட பேசுகிறேனே” என்ற தஷகிரிவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி .
“இப்போ தானங்க சொன்னேன் கண்ணு ரெண்டும் விழுந்துற போகுதுனு திரும்பத் திரும்ப இப்படியே முட்ட கண்ண உருட்டி உருட்டி பார்த்தால் என்ன அர்த்தம்” என்றான் தஷகிரிவன் .
“போடா லூசு” என்று அவள் எழுந்து கொள்ள பார்க்க, “இப்ப எங்க போறீங்க என் கூட பைக்ல எல்லாம் வந்தீங்க, நல்லா தான் பேசினீங்க இப்போ எல்லாம் நான் இருக்கிற பக்கம் திரும்பி கூட பார்க்கிறதில்லை என்னங்க உங்க பிரச்சனை.உங்க நைனா தானே பிரச்சனை உங்களுக்கு என்னை புடிச்சிருக்கு தானே உங்க நைனா கிட்ட பேசி நம்ம கல்யாணத்தை நான் முடிச்சுக் காட்டுகிறேன் நீங்க கவலைப்படாதீங்க” என்ற தஷகிரிவனை பார்த்த ஷ்ராவனி “எங்க அப்பாவ பத்தி என்ன தெரியும் உனக்கு இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் என் அப்பா பத்தி உனக்கு என்ன தெரியும்? எதுவுமே தெரியாது அவர் ஒரு முடிவு எடுத்தார்னா அது தப்பாவே இருந்தாலும் அதை தான் செய்யணும் அப்படிங்கிற பிடிவாதம் உள்ள ஒரு மனுஷன் அவர்கிட்ட போயி இவரு பேசி என்னை கல்யாணம் பண்ணிப்பாராம் நடக்கிறத பேசு” என்றாள் ஷ்ராவனி.
“நான் நினைச்சேனா நடத்திக் காட்டாமல் விடமாட்டேன். உங்க அப்பாவோட பிடிவாதத்தை நீங்க சொல்லி இருக்கீங்க நீங்க பார்த்து இருக்கலாம் என்னோட பிடிவாதத்தை நீங்க பார்த்ததில்லை பார்ப்பீங்க உங்களை கல்யாணம் பண்றது தான் என் வாழ்க்கையில மிகப்பெரிய லட்சியம்னே வச்சுக்கோங்க உங்க அப்பா சம்மதத்தோட உங்க கழுத்துல நான் தாலி கட்டுவேன் அது நடக்கும் நடத்திக் காட்டலைன்னா என் பெயரை நான் மாத்திக்கிறேன்” என்றான் தஷகிரிவன்.
“நீ பெயரை மாத்துவியோ, இல்லை ஊரை மாத்துவியோ அதை பத்தி எல்லாம் எனக்கு கவலையே கிடையாது. தயவு செஞ்சு என்னை விட்டுடு” என்ற ஷ்ராவனியிடம் , “அது எப்படி முடியும் அதெல்லாம் முடியாது நான் முடிவு பண்ணிட்டேன் அப்படின்னா மாத்திக்கவே மாட்டேன். என்னைக்குமே என் மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க. உங்களைத் தவிர வேற யாரும் எனக்கு பொண்டாட்டியாக வர முடியாது அதேபோல உங்களுக்கும் என்னை தவிர இன்னொருத்தன் புருஷனா வர முடியாது வரவும் விடமாட்டேன். மேடம் நான் ராவணன். ராவணன் சீதையை சிறை எடுத்து தான் நம்ம கதைகளில் படிச்சிருக்கோம். நான் இந்த மண்டோதரியை சிறை எடுக்க போகிறேன் . என்கிட்ட இருந்து உங்களை யாராலயும் பறிக்க முடியாது அதனால நீங்க தேவையில்லாததெல்லாம் யோசிக்காமல் நாம எப்படி லவ் பண்ணலாம் நம்ம பியூச்சர்ல எப்படி வாழலாம் அப்படி மட்டும் யோசிங்களேன் ப்ளீஸ்” என்றான் தஷகிரிவன்.
“
பைத்தியமா நீ நான் எப்போ உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்” என்ற ஷ்ராவனியிடம் , “சொல்லித்தான் புரியணும்னு இல்லையே உங்களோட மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்ங்க” என்றான் தஷகிரிவன்.
“நல்லா சினிமா பார்த்து கெட்டு சீரழிஞ்சு போயிருக்க உன் கிட்ட எல்லாம் பேசி பிரயோஜனமே இல்லை” என்ற ஷ்ராவனியிடம், “என்னை தவிர நீங்க வேற யார்கிட்ட பேச போறீங்க மேடம்” என்றான் தஷகிரிவன் .
“சரியான பைத்தியக்கார பையன் போடா லூசு” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து செல்ல செல்லும் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் தஷகிரிவன்.
“என்ன மச்சான் உன் ஆளு கிட்ட பக்கம் பக்கமாக டயலாக் பேசிட்டு இருந்த போல” என்று வந்த விஷ்ணுவிடம், “என்ன ஓட்டு கேட்டியா?” என்றான் தஷகிரிவன்.
“அய்யோ சத்தியமா ஒட்டெல்லாம் கேட்கலைடா இந்த வழியாக கிராஸ் பண்ணும்போது நீ பேசின அந்த வசனங்கள் எல்லாம் என் காதில் வந்து விழுந்து விட்டது” என்ற விஷ்ணுவிடம், “எப்போ மச்சான் கழுதையா மாறின” என்றான் தஷகிரிவன் .
“நான் எப்படா கழுதையானேன். நான் மனுஷன் டா” என்ற விஷ்ணுவை முறைத்தவன், “ஒட்டு கேட்பது கழுதையோட குணம்னு சொல்லுவாங்க போன ஜென்மத்துல கழுதையா இருந்தியோ இப்படி ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் பேசும்போது ஒட்டு கேட்கிறியே வெட்கமா இல்லை உனக்கு” என்றான் தஷகிரிவன் .
“என்னது ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா எப்படா அந்த பிள்ளைக்கு புருஷன் ஆன” என்ற விஷ்ணுவிடம், “என் காதலை சொன்ன அன்னைக்கே நான் அவளுக்கு புருஷன் ஆயிட்டேன்” என்றான் தஷகிரிவன்.
“அட பைத்தியக்கார பயலே தாலின்னு ஒன்னு கட்டுனா தாண்டா நம்ம ஊர்ல புருஷன்னு ஒத்துக்குவாங்க சும்மா காதலை சொல்லுற அன்னைக்கே புருஷன் நான் என் பொண்டாட்டி நீ என்று சொன்னால் செருப்பால அடிப்பாங்கடா” என்றான் விஷ்ணு.
“இல்லை இல்லை உன் வாய்க்கு நீ தான் என்கிட்ட செருப்படி வாங்க போற போனால் போகுது தங்கச்சி புருஷன் ஆச்சே ஒன்றும் சொல்லக்கூடாது ஒன்றும் பண்ண கூடாதுன்னு நானும் விட்டுகிட்டே இருக்கேன் மகனே என்னைக்கு வெளுத்து கட்ட போறேன்னு தெரியல நல்லா என்கிட்ட வாங்க போற” என்றான் தஷகிரிவன் .
“உன்கிட்ட வாங்கலைன்னா என்ன அதான் உன் தங்கச்சிகிட்ட வாங்குறேனே நல்ல ஊமைக் குத்தா குத்துறாடா உடம்பெல்லாம் வலிக்குது அடிவாங்கியே. உன் தங்கச்சி கிட்ட அடி வாங்குவதற்கு தான் எங்க அப்பா, அம்மா என்ன பெத்து போட்டாங்களோ என்னவோ” என்ற விஷ்ணுவிடம், “அப்படியே பேசிட்டே இரு மச்சான் என் தங்கச்சிக்கு போன் பண்ணி நீ இப்போ என்ன எல்லாம் சொன்னியோ அதெல்லாம் சொல்லி தந்து இன்னைக்கு உன்னைய செருப்பாலே அடிக்க சொல்கிறேன்” என்றான் தஷகிரிவன் .
“அவள் கையால அடிச்சாலே வலி தாங்க முடியாது இதுல செருப்பால வேற அடிக்க சொல்றியா ஆத்தாடி உன் தங்கச்சியோட செருப்பே ரெண்டு கிலோ இருக்கும் டா அதுல அடிச்சா நான் செத்துருவேன்டா ஆளை விட்டுருங்கடா” என்ற விஷ்ணு ஓடியே விட்டான். அவனைப் பார்த்து சிரித்து விட்டு தன் வேலையை கவனித்தான் தஷகிரிவன்.
“வைஷு, வைஷு, வைஷு என்ற மகிழாவிடம், “என்ன” என்றாள் வைஷ்ணவி .
“உன்னை நான் மூன்று தடவை கூப்பிட்டேன். இப்பதான் என்னனு கேட்கிற” என்ற மகிழாவிடம், “இல்லை மகிழா ஏதோ யோசனை” என்றாள் வைஷ்ணவி.
“என்கேஜ்மென்ட் முடிச்சிட்டு கல்யாண கனவில் இருக்கியா? உன் மூஞ்சிய பாத்தால் கல்யாண கனவு மாதிரியே தெரியலையே” என்ற மகிழாவிடம், “பிடிக்காத ஒரு கல்யாணத்துல எப்படி கனவு கண்டிட்டு இருக்க முடியும்” என்றாள் வைஷ்ணவி.
” நீ எப்போ தான் உன் அப்பாகிட்ட சொல்ல போற” என்ற மகிழாவிடம், “எப்படி சொல்ல முடியும் நிச்சயதார்த்தமே முடிஞ்சிருச்சு” என்றாள் வைஷ்ணவி.
“வைஷு என்ன இவள் இப்படி சொல்றாள்ன்னு நினைக்காதே, அப்பா அம்மாவுக்காக உன் வாழ்க்கையை தொலைச்சுராதே” என்றாள் மகிழா.
“அப்பாவை மீறி இதுவரைக்கும் பேசினதில்லை இப்பவும் பேச முடியலை எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலைன்னா கூட என் அப்பா நான் நல்லா இருப்பேன்னு நம்பி அமைச்சு கொடுக்கிறார் என்னால மீற முடியவில்லை” என்றாள் வைஷ்ணவி.
“முட்டாள் தனமா இருக்கு வைஷு உன் அப்பா ஒன்றும் வாழப்போவதில்லை வாழ போறது நீ உன்னோட விருப்பம் தான் முக்கியம் . அப்பா அம்மாவுக்காக அப்பா அம்மாவுக்காக என்று சொல்லிட்டு உன் வாழ்க்கை இழந்துடாதே பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ” என்ற மகிழா சரி சரி ஜி.எம் வராரு நம்ம பேசிட்டு இருந்தால் திட்டுவாரு என்று வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
“வைஷ்ணவி” என்ற குகநேத்ரனை நிமிர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி.
“என்னாச்சு ஒர்க் பண்ணாமல் ஏதோ யோசனையாகவே இருக்கீங்க” என்ற குகனிடம், “ஒன்றும் இல்லை சார் லேசா தலைவலி” என்றாள் வைஷ்ணவி .
“உடம்பு சரி இல்லைனா லீவு போட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கலாமே. ஆபீஸ் வரணும்னு ஒன்றும் அவசியம் இல்லையே” என்றான் குகநேத்ரன்.
“இல்லை சார்” என்று அவள் ஏதோ சொல்ல வர , “பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு போறதுனா தாராளமா போங்க ஒன்றும் பிரச்சனை இல்லை” என்றான் குகநேத்ரன். “இல்லை சார் ஒன்னும் பிரச்சனை இல்லை மேனேஜ் பண்ணிக்குவேன்” என்ற வைஷ்ணவி அமர்ந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் . அவளது கவனம் வேலையில் இல்லை என்பதை குகனும் கவனிக்க தவறவில்லை.
….. தொடரும்….