மை டியர் மண்டோதரி..15

5
(2)

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன்.

“பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலை” என்றான் குகநேத்ரன்.

” அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையா இருந்தால் உனக்கு என்ன தம்பி” என்ற தசகிரிவனிடம்,  “என்ன அண்ணா அப்படி சொல்ற , அந்த பொண்ணை எனக்கு புடிச்சிருக்கு அவள் நல்லா இருக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா” என்றான் குகன்.

“அவளுக்கு இன்னொருத்தனோட நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு, இனி அவள் நல்லா இருந்தால் உனக்கு என்ன, நல்லா இல்லை என்றால் உனக்கு என்ன” என்றான் தசகிரீவன்.

“என்ன அண்ணா அப்படி சொல்றீங்க அந்த பொண்ணு நான் லவ் பண்ணின பொண்ணு அவள் நல்லா இருக்கணும் அவள் எனக்கு கிடைக்கலனாலும் பரவாயில்லை நல்லா இருக்கணும், சந்தோஷமா இருக்கணும், நிம்மதியா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறவன் தான் உன்னோட தம்பி. நான் ஆசைப்பட்ட பொண்ணு எனக்கு கிடைக்கவில்லை அப்படின்னா அவள் நாசமா போகணும்னு நினைக்கிற கேவலமான புத்தி எனக்கு கிடையாது” என்றான் குகநேத்ரன்.

“சரி அந்த பொண்ணு கிட்ட நீயே கேட்கலாமே” என்றான் தசகிரிவன். “எப்படி அண்ணா நான் போய் கேட்கிறது அந்த பொண்ணு தப்பா நினைச்சுக்கிருச்சுனா” என்ற குகனிடம், “தப்பா நினைக்கறதுக்கு என்னடா இருக்கு ஒரு ஃப்ரண்டா நீ அவள்கிட்ட கேளு அவளுக்கு என்ன பிரச்சனைன்னு ஒருவேளை உன்கிட்ட சொல்லலாமே ஒரு வேளை அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் கூட இருக்கலாம்” என்றான் தஷகிரிவன்.

” எனக்கு என்னவோ என் மேல தான் தப்பு இருக்கோன்னு தோணுது அண்ணா, அன்னைக்கு அந்த பொண்ணு கிட்ட விரும்புறேன்னு சொன்னது தப்புன்னு தோணுது ,  எங்கேஜ்மென்ட் டைம்ல நான் சொல்லி அதனால அந்த பொண்ணு மனசுல” என்று தயங்கிய குகனிடம், “இதோ பாரு குகன் அந்த பொண்ணு கிட்ட கேட்கிறது தான் நல்லது கேட்காமல் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ அப்படின்னு உனக்குள்ள ஒரு குழப்பத்தை ஏற்படுத்திட்டு இருக்காதே அந்த பொண்ணு கிட்ட என்ன கேட்கணுமோ நேரடியா கேளு ஒருவேளை அவளோட இந்த குழப்பத்திற்கு நீ காரணமா இல்லாமலும் இருக்கலாம் அதனால நேரடியா கேட்கிறது தான் நல்லது” என்றான் தஷகிரிவன்.

“என்னக்கா டல்லா இருக்க” என்ற ஷ்ராவனியிடம் , “ஒன்றும் இல்லையே” என்றாள் வைஷ்ணவி.

” பொய் சொல்லாதே உன் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை” என்ற ஷ்ராவனியிடம் , “எப்படி ஷ்ராவி சந்தோஷம் இருக்கும் , அம்மாவும் நமக்கு சப்போர்ட்டா இல்லை அப்பாகிட்ட பேசவே முடியாது. இந்த கல்யாண எனக்கு பிடிக்கவில்லை என்று அவர்கிட்ட எப்படி சொல்றது” என்றாள் வைஷ்ணவி .

“நீ தான் அக்கா சொல்லணும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் இந்த ரெண்டு மாசத்துக்குள்ள என்ன பண்ண முடியுமோ அதை பண்ணி இந்த கல்யாணத்தை நிப்பாட்டனும் விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை பண்ணி வாழ்க்கை முழுக்க கஷ்டப்படாதே அக்கா” என்றாள் ஷ்ராவனி.

“எப்படி ஷ்ராவி அவர்கிட்ட போனாலே எனக்கு பயமா இருக்கு பேசவே பயமா இருக்கு” என்று கூறிய வைஷ்ணவியிடம், “இரண்டு பேருமே போய் பேசுவோம் அக்கா” என்றாள் ஷ்ராவனி.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இருவரும் தன் தந்தையின் முன் போய் நின்றனர்.  “என்னமா அக்கா தங்கச்சி இரண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க என்ன விஷயம்” என்றார் கதிர்வேலன்.

” அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் ஷ்ராவனி. “என்ன விஷயம் சொல்லுமா” என்ற கதிர்வேலனிடம், “அப்பா அந்த மாப்பிள்ளை பற்றி நல்லா விசாரிச்சிங்களா?” என்றாள் ஷ்ராவனி.

“எந்த மாப்பிள்ளை உனக்கு நான் எந்த மாப்பிள்ளையும் இன்னும் பார்க்கலையே” என்ற கதிர்வேலனிடம் “எனக்கு பார்த்த மாப்பிள்ளை  இல்லைப்பா அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை” என்றாள் ஷ்ராவனி.

“விசாரிக்காமல் தான் உன் அப்பா நிச்சயதார்த்த வரைக்கும் போவேனா? மாப்பிள்ளையோட அப்பா ரொம்ப தங்கமான மனுஷன் அவர் வளர்த்த பிள்ளை எப்படி தப்பாகும் அவரை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும் அவர் வளர்த்த பையன் தப்பானவரா இருக்க மாட்டான். அப்படிங்கற  நம்பிக்கை எனக்கு இருக்கு அது மட்டும் இல்லை மாப்பிளை பற்றியும் விசாரிச்சேன் நல்லவர்தான்” என்றார் கதிர்வேலன்.

“அந்த மாப்பிள்ளை நல்லவராவே இருந்துட்டு போறாரு ஆனால் அவரை  அக்காவுக்கு பிடிக்க வில்லை அப்பா” என்றாள் ஷ்ராவனி .

“பிடிக்கலையா பிடிக்கலைன்னா என்ன அர்த்தம்” என்ற கதிர்வேலனிடம், “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைப்பா” என்றாள் ஷ்ராவனி .

“அக்காவுக்கு விருப்பம் இல்லையா உனக்கு விருப்பம் இல்லையா அக்காவுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது உனக்கு எதுவும் பொறாமையா?” என்ற கதிர்வேலனை பார்த்து ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அப்பா, அக்காவுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் நான் ஏன் பொறாமைப் பட போறேன் “என்றாள் ஷ்ராவனி.

“வைஷ்ணவி அமைதியாக தான் இருக்கிறாள்.  வந்ததுல இருந்து நீ தான் பேசிட்டு இருக்க அக்காவுக்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்று நீ சொல்லிக்கிட்டு இருக்க உன் அக்கா இதுவரைக்கும் சொல்லலையே நான் கேட்டப்ப உங்க விருப்பம் தான் என் விருப்பம்னு சொன்னாள்.  இப்ப என்ன புதுசா மாப்பிள்ளை பிடிக்கலை ஏன் உன் அக்காவுக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கா அப்பாவுக்கு தெரியாமல் நீங்க வேற எதுவும் மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்களா” என்றார் கதிர்வேலன்.

” அப்பா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைப்பா” என்ற வைஷ்ணவியிடம், “பின்னே என்ன,  இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல் ஊரைக் கூட்டி நான் நிச்சயம் பண்ணினதுக்கு அப்புறம் எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்ற என்ன பழக்கம் வைஷு” என்றவர், “காயத்ரி” என்று கத்தினார் .

“என்னங்க என்ன விஷயம்” என்று வந்த காயத்ரியின் கன்னத்தில் பளார் என அறைந்த கதிர்வேலன், “என்னடி பொண்ணு வளர்த்து வச்சிருக்க நிச்சயதார்த்தம் முடிச்சதுக்கு அப்புறம் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிட்டு இருக்காள் என்ன இதெல்லாம்” என்று கேட்டிட, “என்ன சொல்றீங்க எனக்கு ஒன்றுமே தெரியலையே” என்றார் காயத்ரி .

“உனக்கு என்ன தாண்டி தெரிஞ்சிருக்கு. நீதான் இந்த பொண்ணுங்களோட அம்மா உன் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு தைரியம் இருந்தால் நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த மாப்பிள்ளை பிடிக்க வில்லை என்று சொல்லுவாங்க” என்றார் கதிர்வேலன்.

“என்ன வைஷு இதெல்லாம்” என்ற காயத்ரியிடம் , “என்னடி கொஞ்சிட்டு இருக்க இதோ பாரு வைஷ்ணவி உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் அப்பா உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றேன். நான் பார்த்த மாப்பிள்ளையும் சரி , அந்த குடும்பமும் சரி நல்ல குடும்பம் தான் நல்ல மாப்பிள்ளை தான்.  பிடிக்கலை,  வைக்கலை இந்த மாதிரி தேவையில்லாத விஷயங்களை பேசிட்டு இன்னொரு முறை என் முன்னாடி வந்து நிற்காதீங்க.  உங்க அப்பா உங்க ரெண்டு பேருக்கும் நல்லதை மட்டும் தான் செய்வேன்.  நல்லதை மட்டும் தான் அமைத்துக் கொடுப்பேன் அளவுக்கு அதிகமாக உங்களை படிக்க வச்சது தான் தப்பா போச்சு. என்னையவே கேள்வி கேட்கிறீங்க. அக்காவும், தங்கச்சியும் இனிமேல் வேலைக்கு போகக்கூடாது வீட்டிலேயே கிடங்க.  வேலைக்கு போறதுனால தானே சம்பாதிக்கிறதுனாலதான திமிர் எடுத்து போய் அப்பா பேச்சுக்கு மறுப்பேச்சு பேசிட்டு இருக்கீங்க. நாளைல இருந்து நீங்க ரெண்டு பேருமே வேலைக்கு போக வேண்டாம் வீட்டிலேயே கிடங்கள்” என்று கோபமாக திட்டிவிட்டு சென்றுவிட்டார். கதிர்வேலன்.

“ஷ்ராவனி,வைஷ்ணவி” என்ற தந்தையின் அழைப்பில் இருவரும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தனர்.

“என்னம்மா என்னமோ பேசணும்னு சொன்னீங்க. அக்காவும் ,தங்கச்சியும் பேயறைச்சது  மாதிரி நின்னுட்டு இருக்கீங்க என்ன விஷயம்” என்றார் கதிர்வேலன்.

” ஒன்றும் இல்லைப்பா கொஞ்சம் பர்சேசிங் போகணும் அதுதான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்க வந்தோம்” என்றாள் வைஷ்ணவி .

ஷ்ராவனி ஏதோ சொல்ல வர அவளது கையை இறுக்கி பிடித்து விட்டாள் வைஷ்ணவி.  அவளிடம் கண்களால் அமைதியாக இருக்கும் படி கூறியவள் தன் தந்தையை பார்த்துக் கொண்டிருக்க,  “சரி பார்த்து போயிட்டு வாங்க” என்று கூறினார் கதிர்வேலன்.

“என்னக்கா இது பர்ச்சேசிங் போகனும்னு சொல்லிட்டு இருக்க” என்ற ஷ்ராவனியிடம் , “வேற என்ன சொல்ல சொல்ற ஷ்ராவி,  நீ மட்டும் போயி இந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கலை இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அப்படின்னு சொன்னேன்னு வச்சுக்கோயேன் அம்மாவை போட்டு அடிப்பாரு என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக்கன்னு, நான் ஊரை கூட்டி நிச்சயம் பண்ணிட்டேன் இந்த மாப்பிள்ளை நான் பார்த்த மாப்பிள்ளை அவன் குடும்பத்தை எனக்கு தெரியும்,  அவன் அப்பனை எனக்கு தெரியும். அவன் வளர்ப்பு நல்லா இருக்கும் .அவன் தப்பானவனா இருக்க மாட்டான். அக்காவும் தங்கச்சியும் வேற எவனையும் இழுத்துட்டு ஓடுறதுக்கு பிளான் பண்றீங்களா .இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் நம்மளால எதுக்கு அம்மா அடி வாங்கணும் அதனால தான் நான் எதுவும் பேசல அதோட மட்டுமா விட்டிருப்பாரு நம்ம ரெண்டு பேரையும் வேலைக்கு போக வேணாம்னு சொல்லி வீட்டில் பூட்டி வச்சாலும் வைப்பார் பயமா இருக்குடி வேணாம்டி” என்றாள் வைஷ்ணவி .

“பைத்தியமா அக்கா நீ அவர் வீட்டுக்குள்ள பூட்டி வைப்பாருங்கிறதுக்காக பிடிக்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட போறியா?” என்றாள் ஷ்ராவனி.

“அதுதான் என் தலையெழுத்து
என்றால் என்ன பண்ண முடியும்” என்ற வைஷ்ணவி கண்களை துடைத்துக் கொண்டாள்.

“என்ன சித்தி அப்பா கிட்ட சித்தப்பா விட்டு பேச சொல்றேன்னு சொல்லி எவ்வளவு நாளாச்சு இன்னும் எதுவுமே பேசாமல் இருக்கீங்க. கல்யாண வேலை வேற நடக்க போகுது பயமா இருக்கு” என்றாள் ஷ்ராவனி.

“சித்தப்பா இன்னும் ஊரிலிருந்து வரலைம்மா வரட்டும் வந்ததுக்கு அப்புறம் அப்பா கிட்ட அவரை கூட்டிட்டு வந்து பேச சொல்றேன் நீ பயப்படாதே நம்ம வைஷுவை அந்த பொறுக்கிக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைக்க உன் சித்தி அனுமதிக்க மாட்டேன் என்னை நம்பலாம்” என்றார் வளர்மதி. “உங்களை தான் சித்தி நம்பிட்டு இருக்கேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தவள் எதார்த்தமாக திரும்பிட, “என்ன மேடம் யாரையோ நம்பிட்டு இருக்கேன்னு சொல்றீங்க யார் யாரையோ  நம்புறீங்க என்ன நம்ப மாட்டீங்களா?” என்றான் தஷகிரிவன் .

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!