லிப்டிற்குள் புழுக்கம் வேறு பாடாய்ப்படுத்த வைஷ்ணவி வேர்வையில் குளித்து இருந்தாள் . குகனும் கூட வேர்வையில் குளித்திருந்தான் .அவனது ஃபோனின் நெட்வொர்க்கும் திடீரென்று கட் ஆகிவிட இருவருக்கும் தான் ஐயோ என்று ஆனது.
இப்போ என்ன சார் பண்றது போன் நெட்ஒர்க் வரவில்லையே என்று பதறியவளிடம் வைஷ்ணவி ரிலாக்ஸ் பதட்டப்படாமல் இருங்க ஒன்றும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தான் குகன்.
ஹெல்ப் என்று லிஃப்ட்டின் கதவை தட்ட ஆரம்பித்தான் .அந்த சத்தமாவது கேட்டு ஏதாவது செய்வார்கள் என்று ஆனால் எந்த பயனும் இல்லை .
என்னம்மா வாசலில் நின்று கையை பிசைஞ்சுட்டு இருக்கீங்க என்ற ஷ்ராவனியிடம் அக்கா இன்னும் வரல டி போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னே வருது என்றார் காயத்ரிதேவி.
என்ன சொல்றீங்க அக்கா போன் எல்லாம் சுவிட்ச் ஆப் பண்ண மாட்டாளே நெட்வொர்க் இல்லாமல் இருக்கும் என்ற ஷ்ராவனி தானும் தன் சகோதரிக்கு கால் செய்து பார்க்க போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது .
அப்பா வரும் டைம் ஆச்சு இன்னும் வைஷ்ணவியை காணோம் என்று பதற்றமாக கூறிக் கொண்டிருந்த காயத்ரியிடம் அம்மா அக்கா ஒன்னும் குழந்தை இல்லை வந்துருவாள் என்றாள் ஷ்ராவனி .
இல்லைடி கல்யாணம் பேசுனதுக்கு அப்புறம் வேலைக்கு போறதுக்கு உங்க அப்பா மூஞ்சிய காட்டிட்டு இருந்தாரு. இப்ப பாரு இவ்வளவு லேட்டா வந்தால் நாளையிலிருந்து அவளை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னாலும் சொல்லிடுவாருன்னு எனக்கு பயமா இருக்கு என்றார் காயத்ரி .
சும்மா ஏதாச்சும் புலம்பாதிங்க அக்கா வந்துருவாள் என்ற கூறினாள் ஷ்ராவனி . அவளுக்குமே கலக்கமாகத்தான் இருந்தது அந்த நேரம் சரியாக கதிர்வேலனும் வந்து விட்டார் .
என்ன நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கீங்க வைஷ்ணவி எங்கே என்ற கதிர்வேலனிடம் என்னங்க வைஷ்ணவி இன்னும் வீட்டுக்கு வரலை அவளோட போன சுவிட்ச் ஆஃப்னு வருது எனக்கு பயமா இருக்கு புள்ளைக்கு எதுவும் ஆயிடுச்சா என்னன்னு தெரியல மனசு எல்லாம் படபடன்னு அடிச்சிட்டு இருக்கு என்ற காயத்ரி தேவியிடம் அவள் என்ன குழந்தையா ஆபீஸ்ல வேலை அதிகமா இருந்தாலும் இருக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் என்றார் கதிர்வேலன்.
இல்லங்க வழக்கமா எவ்வளவு வேலையா இருந்தாலும் ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருவாள். மணி ஏழரை ஆச்சு அதுதான் எனக்கு பதட்டமா இருக்கு என்றார் காயத்ரி தேவி.
சரி நான் போய் பாத்துட்டு வரேன் என்ற கதிர்வேலன் தனது பைக்கில் மகளை தேடிக்கொண்டு சென்றார். அவளது அலுவலகத்தில் சென்று விசாரிக்க வாசலில் இருந்து செக்யூரிட்டி எல்லாருமே போயிட்டாங்க சார் என்று தான் கூறினார். இல்லைங்க என் பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரலை பஸ் ஸ்டாண்ட் எல்லாமே தேடி பாத்துட்டேன் போய் செக் பண்ணுங்க என்றிட எம்டி சாரோட கார் மட்டும் தான் சார் இருக்கு வேற யாரும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது வைஷ்ணவியின் ஸ்கூட்டர் அங்கு நிற்க அது என் பொண்ணோட ஸ்கூட்டர். இங்க தான் இருக்கு மேல தான் இருப்பாங்க என்று கதிர்வேலன் செக்யூரிட்டியிடம் கூறிட செக்யூரிட்டியும் சென்று பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டு அப்பொழுது தான் லிப்ட்டின் அருகில் சென்றார் .
லிஃப்ட் ஏதோ பிரச்சனையாக இருப்பதை உணர்ந்தவர் சார் லிஃப்ட்ல ஏதோ பிரச்சனை போல என்று கூறிக் கொண்டிருக்கையில் லிப்டிற்க்குள் குகன் கத்திக் கொண்டிருப்பதும் செக்யூரிட்டியின் காதில் விழுந்தது .
ஐயோ சார் உள்ள யாரோ மாட்டிக்கிட்டாங்க போல என்று நினைத்த செக்யூரிட்டி லிப்ட்டில் என்ன பிரச்சனை என்று ஆராய ஆரம்பித்தார்.
உடனடியாக தசகிரிவனுக்கு தகவல் கொடுக்க அடுத்த பத்து நிமிடங்களிலே அவனும் வந்துவிட்டான் ஆட்களை அழைத்துக்கொண்டு என்ன பிரச்சனை என்று பார்ப்பதற்கு.
இங்கே வைஷ்ணவிக்கு மயக்கம் வறுவது போல் இருந்தது. சார் என்னால முடியல மூச்சு விடுறதுக்கு கூட ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அவள் கூறிக் கொண்டிருக்கையில் வைஷ்ணவி ப்ளீஸ் ஒன்னும் இல்லை ரிலாக்ஸா இருங்க என்று கூறினான் குகன் .
என்னால முடியல என்று அவள் மயங்கி அவன் மீது சரிய அவனும் மூச்சு பேச்சு இல்லாமல் கிடைக்கும் அவளுக்கு தன் மூச்சினை கொடுத்துக் கொண்டிருக்க சரியாக அந்த நேரம் லிப்ட் ஆன் ஆகியது அவன் அவளுக்கு தன் மூச்சுக்காற்றை கொடுத்துக் கொண்டிருந்த நேரம் லிப்டின் கதவு திறந்து கொள்ள அவர்கள் இருவரும் இருந்த கோலத்தை கண்ட கதிர்வேலன் வைஷ்ணவி என்று கோபத்தில் கத்தினார்.
அவளும் மயக்கத்தில் கிடக்க குகன் தான் அதிர்ந்த திரும்பிட வாசலில் தனது சகோதரன் வைஷ்ணவியின் தந்தை இருவரும் நின்றிருக்க குகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் தன்னவள் மயங்கி கிடப்பதை உணர்ந்தவன் சட்டென்று அவளை கைகளில் ஏந்தி கொண்டு வெளியே வர என்ன காரியம்டா பண்ணிட்டு இருக்க என்று தான் கேட்டார் கதிர்வேலன் .
தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க அவங்க மயங்கி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தாங்க அதனால தான் என்று அவன் கூறிக் கொண்டிருக்கையில் அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்தவர் தன் மகளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு அங்கு இருந்த பெஞ்சில் படுக்க வைத்து அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தார் .
ஆனால் அவளோ எழுதப்பாடு இல்லை நான் தான் சொல்றேன் அவங்க மயங்கி போயிட்டாங்க அவங்களுக்கு மூச்சு பேச்சில்லை. மூச்சு திணறல் இருக்கு என்று குகன் கூறிடம் கதிர்வேலன் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க அண்ணா ப்ளீஸ் கார் எடுங்க என்று கூறிவிட்டு வைஷ்ணவியை தூக்கிக்கொண்டு காரில் கிடத்தியவன் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றான் . கதிர்வேலனும் அவர்களுடனே சென்றார்.
என்ன ஆச்சு டாக்டர் என்று குகன் கேட்டிட அவளை பரிசோதித்த மருத்துவர்கள் ஒன்னும் இல்லை ரொம்ப நேரமா லிஃப்ட் உள்ளே இருந்ததுனால அவங்களுக்கு மூச்சு விட சிரமமாகி மூச்சு திணறல் வந்திருக்கு மத்தபடி ஒன்னும் இல்ல என்று கூறினார் மருத்துவர்.
மருத்துவமனையில் கண்விழித்த வைஷ்ணவியின் முன் கதிர்வேலன் நின்று இருக்க அப்பா என்று அவள் கூறினார். அவர் எதுவும் பேசவில்லை வீட்டுக்கு போலாமா வைஷு என்று மட்டும் தான் கூறினார் .
சார் என்று குகன் ஏதோ பேச வர சாரி தம்பி நடந்தது என்னன்னு தெரியாமல் உங்களை அவசரப்பட்டு கை நீட்டிட்டேன் என்று கூறியவர் மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் .
தசகிரிவனோ இந்த ஹிட்லர் தான் வைஷ்ணவிக்கும் அப்பாவா அப்போ வைஷ்ணவியும், ஷ்ராவனியும் அக்கா தங்கச்சியா என்று யோசித்துக் கொண்டிருக்க அண்ணா என்று அவன் அருகில் வந்தான் குகநேத்ரன் .
என்ன அண்ணா யோசிச்சிட்டு இருக்கீங்க என்ற குகனிடம் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாமனார் தான்டா என்றான் தஷகிரிவன்.
என்ன அண்ணா சொல்லுற என்ற குகனிடம் நான் லவ் பண்றேன்னு சொன்னேனே என்னோட ப்ரொபசர் அவங்க வேற யாரும் இல்லை வைஷ்ணவியோட சிஸ்டர் தான் இன்னைக்கு கூட ஷ்ராவனி என் கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டாங்க என்று வினித்தின் போட்டோவை காட்டி இவனை பத்தி விசாரிக்கணுமாம் என்று தசகிரீவன் கூறிட இவனை எனக்கு தெரியும் அண்ணா என்றான் குகநேத்ரன்.
என்ன சொல்லுற இவனை உனக்கு தெரியுமா என்ற தசகிரிவனிடம் ஆமாம் அண்ணா இவன் ஒரு பொண்ணு கூட நம்ம ஹோட்டலுக்கு வருவதை நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.
என்ன சொல்ற என்ற தசகிரிவனிடம் ஆமா அண்ணா அவன் ரெகுலர் கஸ்டமர் என்று குகநேத்திரன் கூறிட பொண்ணு கூட வர்றானா? அப்ப அவனை பத்தின ஃபுல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணனும் என்றான் தசகிரிவன். ஒரு டென் மினிட்ஸ் என்ற குகன் யாருக்கோ போன் செய்திட அண்ணா அவன் இப்போ கூட ரூம் போட்டு இருக்கிறான். கூட அந்த பொண்ணும் இருக்கிறாளாம் என்று குகன் கூறிட உடனே அவனை கையும், களவுமாக பிடிக்கனும் என்றான் தஷகிரிவன்.
கண்டிப்பா அண்ணா என்று குகன் கூறிட தஷகிரிவன் ஏதோ ஒரு திட்டத்தை கூறிட குகனும் அது படி செய்ய ஆரம்பித்தான்.
வைஷ்ணவி தன் தந்தையையே பார்த்து கொண்டு இருக்க வைஷு உனக்கும், வினித்துக்கும் நடக்கப் போற கல்யாணத்தை நிறுத்தலாம் என்று நான் முடிவு பண்ணி இருக்கிறேன் என்றார் கதிர்வேலன்.
….தொடரும்…