விடாமல் துரத்துராளே 20

4.7
(20)

பாகம் 20

நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்…‌ 12 மணி வரை வெண்ணிலாவுடன் தான் பேசி கொண்டு இருந்தான்.. போனை வைத்து ஒரு மணி நேரமாகியும் உறக்கம் வருவேன்னா என்றது… திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உறக்கம் வராது தான். 

தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கின்றது…ஏதேதோ மண்டைக்குள் வந்து குழப்புக்கின்றது..‌ அவனின் உள்ளுணர்வு ஏதோ ஒன்றை அவனுக்கு சொல்கிறது… ஆனால் அது என்ன என்பது தான் அவனுக்கு புரியவில்லை… 

நமக்கு ஏதாவது கெட்டது நிகழ போகின்றது என்றால் சில சமயம் இப்புடி தான் நமது மனம் அதை நமக்கு காட்டி கொடுக்கும். தேவாவிற்கும் அதே தான் ஆனால் அவன் அதை உணரவில்லை. 

சிறிது நேரம் பாட்டு கேட்கலாம் அப்போது மனது அமைதியாகும் என்று நினைத்தவன். அங்கு இருந்த டீபாயில் வைத்திருந்த தனது மொபைலை எடுக்க தனது இடது கரத்தை நீட்டினான்…

அப்போது தான் ஒன்றை கவனித்தான். அவனின் இடது கரத்தின் மோதிர விரலில் அணிந்திருந்த அவனின் நிச்சய மோதிரம் காணவில்லை.. அந்த மோதிரம் வெண்ணிலாவின் தேர்வு. அவளே தேவாவிற்காக ஆசை ஆசையாக நகைப்பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்தது… 

அச்சோ தேவா மோதிரத்தை ‘எங்கடா போட்ட’ என்று தலையில் அடித்து கொண்டு அறை முழுக்க தலை கீழாய் புரட்டி போட்டு தேடி பார்த்தான்.. பாத்ரூமில் கூட போய் பார்த்தான்.. மோதிரம் கிடைக்கவில்லை…

 அய்யோ நிச்சயதார்த்த மோதிரம் காணலைன்னு சொன்னா நிலா அபசகுணம் அது இது சொல்லி வருத்தப்படுவாளே, நல்லா யோசி தேவா நல்லா யோசி என்று தலையில் இரண்டு கை வைத்து கண்களை மூடி யோசித்து பார்த்தான்… இரண்டு நொடிகளில் நியாபகம் வர கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பினான் மருத்துவமனைக்கு..‌ 

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன் மோதிரத்தை கழட்டி வைத்ததை எடுக்கவில்லை…

மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கினான் தேவா… அப்போது செக்யூரிட்டி ஓடி வந்து “என்னாச்சு டாக்டர் நீங்க கல்யாணத்திற்கு லீவ் தானேபோட்டு இருக்கீங்க… இந்த நேரத்தில் இங்க வந்துருகீங்க ஏதாவது பிரச்சினையா டாக்டர் என்று பதறியபடி கேட்டார்…

தேவா மோதிர நினைவில் இருந்ததால் அந்த செக்யூரிட்டியின் பதற்றம் அவன் கருத்தில் பதியவில்லை.. 

“ஒன்னும் இல்லை அண்ணா என்னோட திங்க்ஸ் ஒன்னா மறந்து என் கேபின்லேயே விட்டுடேன். அதை எடுக்க தான் வந்தேன் அண்ணா” என்று செக்யூரிட்டியிடம் பதில் கூறிய படியே தனது அறைக்கு சென்று பார்த்தான். அவன் டேபிளின் மீது மோதிரம் இருக்க. அப்பாடா என்றபடி மோதிரத்தை எடுத்து விரலில் மாட்டி கொண்டான். அந்த செக்யூரிட்டியும் தேவா அருகிலே நின்றான்…  

அவனை பார்த்து சிரித்த தேவா அந்த செக்யூரிட்டியிடம் பேசியபடியே நடந்தான்… இன்னைக்கு நைட்டு டியூட்டி யாருண்ணா…

“டாக்டர் ஜீவா இல்ல வர்ஷா மேடம் சார் இல்ல இல்ல சாரதா மேடம் என்று உளறினார் செக்யூரிட்டி… எங்க அண்ணா அவங்களை காணோம் என்று கேட்டான் தேவா பார்வையை தனது விரலில் இருந்த மோதிரத்தில் பதித்த படியே, அவர் முகத்தை பார்த்து இருந்தால் தேவாவிற்கு தெரிந்திருக்கும் அவர் முகத்தில் இருந்த பயம்…

“ஒரு ஆப்ரேஷன் சா…” என்று கூற வந்தவன் தனது நாக்கை கடித்து கொண்டு “காபி சாப்பிட கேண்டின் போயி இருக்காங்க சார்” என்றார்…

தனது கார் அருகே வந்த தேவா “அண்ணா என்னோட கல்யாணத்திற்கு மறக்காமா வந்திருங்க என்று செக்யூரிட்டியிடம் கூறி விட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினான்… கார் மருத்துவமனை வளாகத்தை தாண்டிய பின்பு தான் செக்யூரிட்டிக்கு மூச்சே வந்தது… 

இந்த செக்யூரிட்டி ஜீவாவின் ஆள்… இன்று நடக்கும் அவலம் அறிந்தவர்… அவர் மட்டுமல்ல இன்று பணியில் இருக்கும் சில டாக்டர்ஸ் நர்ஸ் கூட ஜீவாவிற்கு உதவி செய்பவர்கள் தான் அதனால் தீடிரென தேவா வந்ததும் செக்யூரிட்டி மிகவும் பயந்து விட்டார்…

தியாவை இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மயக்கத்திலேயே வைத்து இருந்தனர்… அவளுக்கு விழி திறக்க முடியவில்லை என்றாலும் தன்னை சுற்றி ஏதோ தவறாக நடக்கின்றது என்பது மட்டும் ஆழ்மனதிற்கு தெரிந்தது… அதிலிருந்து மீள வழி தான் தெரியவில்லை… இன்று தான் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்… அறுவை சிகிச்சை அறையில் திவேஷ், ஜீவா, லேடி டாக்டர் வர்ஷா மற்றும் இரண்டு நர்ஸ்கள் இருந்தனர்..

திவா ஃபுல்லா செக் பண்ணிட்ட தானே தியாவுக்கு எல்லாம் நார்மல் தானே எந்த ப்ராப்ளமும் இல்லையே ஸ்டார்ட் பண்ணலாமா?

“ம்ம்’… என்றான் திவேஷ் சுரத்தே இல்லாத குரலில், அவனுக்கு இந்த பாவத்தை செய்ய சுத்தமாக பிடிக்க வில்லை..‌ வேண்டாம் என்னை விட்டுரு, நீ என்ன வேணா பண்ணிக்கோ என்று எப்போதும் போல் நடக்கும் அவலத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் எர்ரமே திவேஷ்ற்கு… ஆனால் ஜீவா உபயோகிக்கும் வெண்ணிலா என்னும் மந்திரம் அவனையும் இந்த பாவத்தில் பங்கெடுத்து கொள்ள வைத்து இருக்கின்றது…  

பாவச்செயல் செய்தால் மட்டுமல்ல கண் முன் நடக்கும் அநியாயத்தை நமக்கு என்ன வந்தது என்பது போல் தட்டி கேட்காமல், தடுக்கமால் வேடிக்கை பார்ப்பது அந்த பாவச்செயல் செய்வதை விட மிகப் பெரிய பாவம் என்பது திவேஷ்க்கு புரியவில்லை..

சர்ஜிக்கல் ப்ளேடை கையில் எடுத்த ஜீவா தியா அருகே சென்று வெட்ட போகும் போது அதி வேகமாக அந்த அறை கதவு உடைப்பட்டு திறந்தது… 

அனைவரும் அதிர்ச்சியுடன் கதவின் புறம் திரும்பி பார்க்க

அங்கு கண்களே இரத்த சிவப்பாய் மாறும் அளவு அதீத கோவத்தில் ரூத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் தேவா…

தேவேந்திரன் அனைவர் இதழும் முனுமுனுக்க மயக்கத்தில் இருந்த தியாவின் காதின் வழி நுழைந்து ஆழ்மனதில் ஆழ பதிந்தது அந்த பெயர்.. 

தேவாவை அங்கு கண்டதும் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி ஜீவா உட்பட… அவனுக்கு அனைத்து விஷயமும் தெரிந்து தான் இங்கு வந்து இருக்கின்றான் என்பது அருகில் உதடு கிழிந்து கன்னங்கள் இரண்டும் வீங்கி கன்றி போய் நிற்கும் செக்யூரிட்டியை பார்த்தே புரிந்து கொண்டான் ஜீவா…

ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பிய தேவாவிற்கு சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை… அதற்கு மேல் காரை நகர்த்த அவனின் கை கால்கள் ஒத்துழைக்க மறுத்தது…அவனின் இருதயம் பந்தய குதிரை போல் வேகமாக துடித்தது… உள்ளுர்ணவோ ஏதோ தவறு நடக்கின்றது என்று திரும்ப திரும்ப கூறியது… காரை நிறுத்தி விட்டு சீட்டில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்தான்… 

அப்போது தான் செக்யூரிட்டி அவன் மருத்துவமனை சென்றதிலிருந்து காரில் ஏறும் வரை பின்னாடியே வந்தது. அவர் முகத்தில் வழக்கத்திற்கு மாறான பதற்றம் பயம் இருந்தது. கேள்வி கேட்ட போது தடுமாறியது அனைத்துமே நினைவு வந்தது…ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்ற அடுத்த நொடி காரை திருப்பி மருத்துவமனைக்கு செலுத்தினான்… 

காரை மருத்துவமனைக்கு பின்புறம் நிறுத்தி விட்டு பின் கேட் வழியாக சத்தம் இல்லாமல் தேவா வரவும், செக்யூரிட்டி தேவா வந்த விஷயத்தை யாரிடமோ போனில் சொல்லி கொண்டு சீக்கிரமா வேலையை முடிக்க சொல்லு பயமா இருக்கு என்றது காதில் விழ, செக்யூரிட்டியை தேவா சிறப்பாக கவனித்ததில் அனைத்தையும் அவனிடம் சொல்லி விட்டான்..‌

  

“என்னடா இது எல்லாம்” என்றபடி ஜீவாவை நோக்கி முன்னேறினான் தேவா… தேவாவின் பார்வை முழுவதும் ஜீவா திவேஷ் மேல் தான் இருந்தது. மெத்தையில் இருந்த தியாவை அவன் பார்க்கவில்லை… 

ஏழு வருடங்கள் நண்பனாய் பழகியவர்களின் உண்மை முகம் கண்டு தேவாவிற்கு கோவத்தை விட அதிர்ச்சியும் வருத்தமுமே அதிகமாக இருந்தது…

“தேவா வேண்டாம் என் விஷயத்தில் தலையிடாத அது உனக்கு நல்லதுக்கில்ல பேசாமா எதையும் கண்டுக்காமா ஒதுங்கி போயிரு.. உனக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம் வேண்டாம் தேவா போயிரு” என்று பயத்தை வெளி காட்டாமல் பின்னோக்கி நகர்ந்தபடி கையில் வைத்திருந்த சர்ஜிக்கல் ப்ளேடை காட்டி ஜீவா மிரட்ட, 

“நானும் அதை தான் சொல்றேன் ஜீவா வேணாம் எல்லாத்தையும் விட்டுரு, ஒரு டாக்டரா இருந்திட்டு இப்புடி எல்லாம் செய்ய உனக்கு அசிங்கமா இல்ல… நம்ம வேலை உயிரா காப்பாத்துறதுடா, உயிரை எடுக்கிறது இல்லை” என்றபடி தேவா முன்னேற, 

ஜீவா அவனை நோக்கி கத்தியுடன் பாய்ந்தான்… தன் மேல் கத்தி படாதவாறு அவனின் வலது கையை இறுக்கமாக பிடித்து தடுத்தபடியே “வேணாம் சொன்னா கேளுடா” என்க. 

ஜீவாவோ கத்தி இருந்த வலது கையை தளர்த்த முடியாமல் தேவாவின் கண்ணை குத்த முயல, தேவா அவனின் கழுத்தை பிடித்து பின்புறம் தள்ளினான்..‌ அதில் நிலை தடுமாறிய ஜீவா கீழே விழ தியாவை படுக்க வைத்து இருந்த இரும்பு கட்டிலின் முனை பின்னந்தலையில் பட்டு கீழே சரிந்தான் ஜீவா…

அந்த இடத்தில் இருந்த அனைவருமே சில விநாடி செயலற்று அனைவருமே அதிர்ச்சியில் நிற்க, அதே நேரம் மகேஸ்வரனும் அங்கு வந்தார்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!