இரவு 12:30 தேவா தனது வீட்டில் படுத்து இருந்தான்… கண்கள் மூடி இருந்தது.. ஆனால் உறக்கம் தான் வருவேன்னா என போக்கு காட்டி கொண்டு இருந்தது.. மனம் தேவையில்லாத சிந்தனைகளில் உழன்றது… அவனை வெறுமை சூழ்ந்து இருந்தது.. தனிமையை விரும்பி ஏற்றவன் தான், ஆனால் ஏனோ சமீப காலமாக இந்த தனிமை அவனுக்கு பிடிக்கவில்லை…
இவ்வளவு நாள் இந்த தனிமையில் இருந்து தப்பிக்க அவனுக்கு கைக்கொடுத்த மது மாது இரண்டையுமே சமீப காலமாக அவன் நாட வில்லை… அதுவும் அவனுக்கு பிடிக்காமல் போனது… அவனின் மனம் எதையோ எதிர்பார்க்கின்றது அது என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக அதை தெரிந்து கொள்ள அவன் விரும்பவில்லை..
அப்போது அவனின் மொபைல் சிணுங்கியது.. பார்க்காமலே ஆன் சொத்து காலில் வைத்தவன் “தினம் பத்து மணிக்கு கத்துற எருமை என்ன இன்னைக்கு லேட்டா கத்துது” என எதிர்முனையிலிருந்த சூர்யாவை நக்கலாக கேட்டான்..
“தேவா தேவா” சூர்யா குரல் பதட்டமாக ஒலிக்க
“என்னடா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் குரல்”
“டேய் தேவா பாப்பு பாப்புக்கு”
“அவளுக்கு என்னாச்சுடா” படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து அமர்ந்தபடி கேட்டான்…
“அது வந்து தேவா ஒரு சின்ன தப்பு பாப்புக்கு”
“என்னாச்சு டா டேய் சூர்யா சொல்லி தொலைடா, சூர்யா சூர்யா” என்றபடி போனை காதிலிருந்து எடுத்து பார்க்க சார்ஜர் இல்லாமல் அது உயிரை விட்டு இருந்தது..
அவசரமாக அதை சார்ஜரில் போட்டவனுக்கு என்னவோ ஏதோ என மனம் வேகமாக அடித்து கொண்டது…
“தேவா நான் இரண்டு நாள் வீட்டில் இருக்க மாட்டேன் டா..
நான் மட்டுமில்ல வீட்டிலிருக்க எல்லாரும் சேர்ந்து நம்ம ராகவ் மாமனாரோட சொந்த ஊரில் கோவில் திருவிழா இருக்காம்..
“அந்த திருவிழா இரண்டு மூணு நாள் இருக்குமாம்.. இனியா வீட்டிலிருந்து தான் அம்மனுக்கு பட்டு நகை தாலி எல்லாம் கொடுப்பாங்கள்ம்.. சக்தி வாய்ந்த அம்மனாம்.. கண்டிப்பா குடும்பத்தோட எல்லாரும் வரனும் இனியா அப்பா கூப்பிட்டு இருக்காங்க…
நம்ம வீட்டில் எல்லாரும்.. இனியா வீட்டில் அவ தங்கச்சி மட்டும் வரலை ஏதோ எக்சாம் இருக்காம்.. இன்னைக்கு நைட்டு இரண்டு குடும்பமும் ஒன்றன் உடுமலை பேட்டை கிளம்புறோம்”.. இன்று மாலை தேவாவுக்கு அழைத்த அவனின் அம்மா மீனாட்சி இவன் கேட்காமலே அனைத்தையும் சொல்ல, ஆர்வமே இல்லாமல் கேட்டவனுக்கு, தியாவை பற்றி அவர் கூறியதும்,
‘ஆமா இவ அப்படியே எக்சாம் எழுதி கிழிச்சிட்டு தான் மத்த வேலையை பார்ப்பா, அவங்க கூடவே போக வேண்டியது தானே, தனியா இங்க இருந்து என்னத்த கழட்ட போறா, தீடிர்ன்னு என்ன படிப்பு மேல்ல அவ்ளோ அக்கறை’ என அப்போதே எரிச்சல் உண்டானது.
தியாவை தேவா பார்த்தே இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும்.. என் பின்னாடி வராத என எத்தனை முறை திட்டியும் அவள் கேட்பதாக இல்லை..
அதனால் கடந்த முறை ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தான்.. அத்தோடு இனியாவுக்கும் அழைத்து விஷயத்தை சொல்லி உன் தங்கச்சிக்கு கொஞ்சமாச்சும் புத்தி சொல்லிவை என கத்தியவன், இன்னோரு தடவை என் பின்னாடி வந்த உங்கப்பன் கிட்ட தான் சொல்லுவேன் என மிரட்டியும் அனுப்பி இருந்தான்..
அதிலிருந்து தியா அவனை சந்திக்க முயற்சிப்பது இல்லை.. அப்பாடா தொல்லை விட்டுச்சு என்ற நிம்மதியும் எழுந்தது.. அப்பா மேல்ல இவ்வளோ பயம் வச்சு இருக்கவளுக்கு லவ் ஒன்னு தான் கேடு என்ற கோவமும் எழுந்தது..
இப்போதும் அவள் மீது கோவம் வந்தது அவங்க கூடவே போய் இருக்க வேண்டியது தானே, தனியே இருந்து என்ன பிரச்சினை இழுத்து வைத்து கொண்டாளோ என, உடம்புக்கு ஏதும் முடியலையோ அதான் சூர்யாவுக்கு கூப்பிட்டு இருப்பாளோ என பலப்பல யோசனையோடும் பதட்டத்தோடும்
சார்ஜரிலிருந்த போனை அப்புடியே ஆன் செய்து சூர்யாவுக்கு அழைக்க,
“தேவா அது வந்து அது வந்து பாப்பு நான் பாப்பு” பதற்றத்தில் வார்த்தை வரவில்லை சூர்யாவிற்கு,
“என்னடா நீ சொல்றகொஞ்சம் புரியுற மாதிரி சொல்லி தொலை” என்ற தேவா தனது கார் சாவியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்… அவனுக்கு புரிந்தது ஏதோ பெரிய பிரச்சினை என்று,
“தேவா சாரிடா அது வந்து நாளைக்கு உன் ப்ர்த்டே வருதுல, அதனால பாப்பு உனக்கு சர்ப்ரைஸா இன்னைக்கு நைட்டு 12 மணிக்கு கொண்டலாம் சொல்லி ப்ளான் பண்ணாடா. நான் எவ்வளேவோ வேண்டாம் சொன்னேன்டா. ஆனா பாப்பு தான் அப்பா, அம்மா நைட்டு 10 மணிக்கு ஊர்க்கு போறாங்க. அவங்க சொந்த ஊர்ல கோவில் விசேஷம் அதற்காக உங்க வீட்டு ஆளுங்க. அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் ஊருக்கு போறாங்க. வரதுக்கு இரண்டு நாள் ஆகும் ப்ராப்ளம் வராது சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டதால சரின்னு ஒத்துக்கிட்டேன்டா.
அதுக்காக காரமடை தாண்டி ஒரு பண்ணை வீட்டுல எல்லா ஏற்பாடும் பண்ணோம் டா. கடைசியாக பாப்புவ அந்த வீட்டுல விட்டுட்டு ஆர்டர் பண்ண கேக் வாங்க நான் வெளியே வந்துட்டு திரும்ப போய் பார்க்கும் போது, தியாவை போலிஸ் ஜீப்ல ஏத்திட்டு போயிட்டாங்கடா, நானும் இங்க ஸ்டேஷன் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சா ரொம்ப தப்பு தப்பா சொல்றானுங்கடா, பாப்பு மேல்ல ட்ரக்ஸ் அண்ட் ப்ரா”…
அதற்கு மேல் சூர்யா கூறிய எதையுமே தேவா கேட்கவில்லை… போனை காருக்குள் விசறியடித்து இருந்தான்… அவ்வளவு கோவம். தியா மீது அவள் தன் மீது வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதல் மீது, சூர்யா மீது, அதையும் தாண்டி அவளை ஸ்டேஷன் அழைத்து சென்ற போலிஸ் மீது அவர்களை கொல்லும் அளவு கோவம் வந்தது… அவனின் கோவம் அதிகரித்தது போன்று இதய துடிப்பும் அதிகரித்தது காரின் வேகமும் கூடியது ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய போலிஸ் ஸ்டேஷனுக்கு 15 நிமிடத்தில் வந்து சேர்ந்தான்…
காரில் இருந்து இறங்கிய வேகத்திலே தன்னருகே வந்த சூர்யாவை அறைந்து இருந்தான்… “பரதேசி நாயே வயசு பொண்ணை இந்நேரத்திற்கு வெளிய கூட்டிட்டு வருவியா” என்று மேலும் அவனை அடிக்க பாய்ந்த தேவாவை தடுத்த சபரி…
“சார் ப்ளீஸ் இது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சார்… பர்ஸ்ட் தியா வை வெளிய கொண்டு வரலாம் சார். அந்த இன்ஸ்பெக்டர் வேணும்னே தியாவை அசிங்கப்படுத்தம்னு மோட்டிவோட தான் சார் பண்றான்… ஏன்னா தியா அப்பாவுக்கும் இந்த ஆளுக்கும் ஆல்ரெடி ப்ராப்ளம் இருக்கு சார்… அதான் சான்ஸ் கிடைச்சதும் பழிவாங்க ட்ரை பண்றான்… நான் எவ்வளவோ தியாவை பத்தி சொல்லி பார்த்துட்டேன் சார் கேட்கவே மாட்டேங்கிறான் … பத்தாக்குறைக்கு ப்ரஸ் லோக்கல் மீடியா எல்லாம் சொல்லிட்டான் சார்” சபரி சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டே ஸ்டேஷன் நோக்கி நடந்து கொண்டு இருந்தான் தேவா…
“லாயர்” தேவா கேட்க,
“கால் பண்ணிட்டேன் வந்துட்டு இருக்கார் என்று சொன்ன சூர்யா நல்ல வேளை இரண்டு ஃபேமிலியும் இப்ப வெளியூர் போயி இருக்காங்க தேவா அவங்க மட்டும் இருந்திருந்தா பிரச்சினை பெரிசா ஆகிருக்கும்ல” என்று சொல்லி முடிப்பதற்குள்,
இரண்டு மூன்று கார் வந்து ஸ்டேஷன் முன்பு நின்றது.. அதிலிருந்து தியா மற்றும் தேவா குடும்பத்தினர் இறங்கி அவசர அவசரமாக உள்ளே சென்றனர்…
“தேவா இவங்க எல்லாம் எப்புடி டா வந்தாங்க இப்ப என்ன பண்றது” என்ற சூர்யாவை முறைத்து விட்டு தேவாவும் உள்ளே சென்றான்..
திவேஷ் தன் வீட்டில் அமர்ந்து சிரித்து கொண்டு இருந்தான்.. தான் திட்டமிட்டது அனைத்தும் அப்புடியே நடக்கின்றது என்றெண்ணி, தேவாவை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது… தன் மனைவியின் முன்னாள் காதலன் அந்த நினைப்பே தேவா மீது எப்போதும் ஒரு வெறுப்பை உண்டாக்கி வைத்திருந்தது…
தியா அவள் மீது தனிபட்ட முறையில் எந்த கோபமோ வெறுப்போ இல்லை தான்.. ஆனால் என்று தேவாவை விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்டானோ அன்றிலிருந்தே அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை… அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று காத்திருந்தான்… ஆனால் நேரிடையாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள விரும்பவில்லை… சமயம் பார்த்து காத்திருந்தவனுக்கு ஹர்ஷா தியா சண்டை சரியாக வந்து சேர்ந்தது… அதே போல் தியா சூர்யா பேசியதை ஒட்டு கேட்டவன் தியா தந்தைக்கும் அந்த போலிஸிக்கும் இருந்த பிரச்சினையும் பயன்படுத்தி காய் நகர்த்த அது சரியாக வேலை செய்தது…
“தியாமா நீ நல்லா இருக்க தானே, உனக்கு ஏதோ பிரச்சினைன்னு போன் வந்துச்சுடா, ஆமா நீ இங்க என்ன பண்ற ஹரிணி வீட்டுல விட்டுட்டு தானே நாங்க கிளம்புனோம்”;பதட்டத்துடனும் அழுகையுடனும் கேட்டார் யமுனா, தியாவால் பதில் பேச முடியவில்லை தலை குனிந்து அழுது கொண்டு இருந்தாள்…
“ஹலோ சார் எதுக்காக என் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்து வச்சு இருக்கீங்க” கோவமாக கேட்டார் பாலகிருஷ்ணன் எதிரே இருந்த ஏ.சி.பியை பார்த்து,
“உங்க பொண்ணை அரெஸ்ட் பண்ணி இருக்கோம் அதுவும் ட்ரிக்ஸ் அண்ட் பிராத்தல் கேஸ்” என்று அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறியதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆனது…
“ஏய் யாரை பார்த்து என்ன சொன்ன? என் மேல்ல இருக்க பகையில்ல என் பொண்ணு மேல்ல வீண் பழி போட்டனா சும்மா இருக்க மாட்டேன்” பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டரிடம் எகிற,
“ஹலோ மரியாதையா பேசுங்க, நான் என்னமோ உன் வீட்டுல இருந்த பொண்ணை அரெஸ்ட் பண்ண மாதிரி சொல்றீங்க. ஆர்.எஸ்.புரத்தில்ல தானே உன் வீடு, காரமடைல்ல இந்த அர்த்த ராத்திரியில்ல உன் பொண்ணுக்கு அங்க என்ன வேலை” என கேட்க,
“காரமடையா” என அதிர்ந்தனர் மொத்த குடும்பமும்,
“இப்ப இருக்க வசதியான பொண்ணுங்களுக்கே இது தான் வேலை நட்ட நடு ராத்திரியில் போதையை போட்டுட்டு கண்ட கண்டவன் கூட எல்லாம் ஆட்டம் போட வேண்டியது”
“ஏய்”… பாலகிருஷ்ணன் சரவணை அடிக்க போக,
“யோவ் என்ன என்னை அடிக்க வர சொல்லு உன் பொண்ணுக்கு அங்க என்ன வேலை
அதுவும் இவ்வளோ அலங்காரம் பண்ணிட்டு யாருக்காக காத்து இருந்தா”,
“எனக்காக காத்துட்டு இருந்தா” என்றபடி உள்ளே வந்தான் தேவா.. அவனை பார்த்து மொத்த குடும்பமும் குழம்பி போனது… ஏற்கெனவே நடப்பது எதுவுமே புரியாமல் நின்று இருந்தவர்களுக்கு இது மேலும் குழப்பத்தை தான் தந்தது…
தேவாவோ அவர்களை யாரையும் பார்க்கவும் இல்லை… அவனின் பார்வை மொத்தமும் தியா மீது தான்… அவனின் குரல் கேட்கும் வரை தலை குனிந்து அழுது கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அவனை தான் பார்த்தாள்…
கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது… எப்போதுமே அந்த விழிகளில் அவனுக்கான காதலையும் சிரிப்பையும் மட்டுமே பார்த்து இருக்கிறான்… முதன் முறையாக அவள் அழுது பார்க்கின்றான்… ஏதோ ஒன்று அவன் மனதை அழுத்தியது… அவள் அழுக்கைக்கு காரணமானவர்களை கொல்லும் வெறி உண்டானது…
அவளின் அருகே வந்து கண்ணீரை துடைத்து விட்டவன், தன் தோளோடு அவளை அணைத்தவாறே, “இவ என்னை லவ் பண்றா நான் அவளை லவ் பண்றேன் கல்யாணமும் பண்ணிக்க போறேன். எனக்காக தான் அவ அங்க காத்துட்டு இருந்தா,
நாளைக்கு என் பிறந்த நாள் அதுக்காக சின்னதா ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி ரெடி பண்ணி இருந்தா, ஆனா நான் போறதுக்கு முன்னாடி இந்த போலிஸ்கார் அங்க போய்ட்டார்.. ஏற்கெனவே இவங்க அப்பா மேல்ல இருந்த கோவத்துல வேணும்னே இப்புடி பொய் கேஸ் போட்டு இருக்கிறார்” என்றான் தேவா அங்கு இருந்த பத்திரிகைக்கார்களிடம்,
மறுபடியும் அனைவருக்கும் அதிர்ச்சி இனியாவை தவிர, அவளுக்கு தான் முன்னரே இந்த காதல் விவகாரம் தெரியுமே,
“இது என்ன புது கதை சொல்லிட்டு இருக்க” என்றார் ஏ.சி.பி சரவணன்…
“இது கதை எல்லாம் இல்ல. எங்க மாமா சொல்றது தான் நிஜம்… எங்க இரண்டு வீட்லையுமே இவங்க கல்யாணத்தை பேசி முடிச்சிட்டோம். இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணம்… என் தங்கச்சி மாமாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும் நினைச்சி தான் அங்க போனா… நாங்களும் அங்க தான் போக ரெடியா இருந்தோம்… இந்த ஏ.சி.பி சார் தான் எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டார்” இனியாவும் தன் தங்கையை காப்பாற்ற அடித்து விட்டாள் பொய்யை,
“இனியா என்ன இது” என கோபப்பட்ட தந்தையிடம் “டாடி ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க. எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் விட்டு வெளிய போனதுக்கு அப்புறம் பேசிக்கலாம். சுத்தியும் பிரஸ் போலிஸ் ப்ளீஸ் டாடி என்று மெதுவாக கூறினாள்…
பாலகிருஷ்ணனுக்கு பற்றி கொண்டு வந்தது. தியாவை பார்க்கும் போது மொத்த குடும்ப மானத்தையும் இவனுக்கா வாங்கி விட்டாளே என்று, யமுனாவுக்கோ தன் மகள் தப்பான ஒருவனை தேர்ந்தெடுத்து விட்டாளே என்று மனது அடித்து கொண்டது…
அங்கு இருந்தவர்களிலே தேவா கூறியதை கேட்டு மகிழ்ந்தது இரண்டு ஜீவன். ஒன்று தியா மற்றொன்று தேவாவின் தாய் மீனாட்சி… மகனுக்கு திருமணம் நடக்காதா என்று ஏங்கி தவித்தவர் அல்லவா, இப்போது தியாவிற்காக அவன் வரிந்து கொண்டு சண்டைக்கு நிற்கின்றான் என்றால் அவள் மீது ப்ரியம் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார்..
இன்ஸ்பெக்டர் சரவணவனின் பாடு தான் திண்டாட்டம் ஆனது… திவேஷ் பேச்சை கேட்டு இந்த விஷயத்தில் இறங்கி இருக்க கூடாதோ என்று தோன்றியது… இருந்தாலும் “உங்க வீட்டு பொண்ணு தப்பு பண்ணுனதை மறைக்க ஆளு ஆளுக்கு பொய் சொல்றீங்களா, நீங்க சொல்றது உண்மைன்னு நான் எப்புடி நம்புறது” என கேட்க,
இங்கு மீனாட்சிக்கோ சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, “இப்ப என்ன சார் நாங்க சொன்னது உண்மை தான்னு நிருபிக்கனும் அவ்ளோ தானே” என்ற மீனாட்சி தன்னருகே நின்று இருந்த இனியா கையிலிருந்து கைப்பையை வெடுக்கென பிடிங்கி அதற்குள் இருந்து ஒரு பாக்ஸை எடுத்தார்…
திருவிழாவில் அம்மனுக்கு சாற்ற வைத்திருந்த மஞ்சள் கயிற்றோடு கோர்த்து இருந்த தாலி அதில் இருக்க, அதை எடுத்தவர் தேவா கையில் கொடுத்து “தேவா தியா கழுத்தில் கட்டு. அப்புறம் நம்ம பெரிசா ரிஷப்சன் வச்சிக்கலாம்… இப்போதைக்கு நம்ம திவ்யாவும் நம்ம குடும்ப மானம் தான் முக்கியம் அதனால் கட்டு” என்றார் இந்த சந்தர்பத்தை விட்டால் மகன் திருமணம் நடப்பது ரொம்ப கஷ்டம் என்பதால்,
சந்தர்ப்பதை பயன்படுத்தி கொள்ள நினைத்த மீனாட்சியை தேவா குடும்பத்தினர் முறைத்தனர்.. எதுவும் வாய் திறந்து பேச முடியாதே சுற்றியும் மீடியா கண்கள் இவர்களை பார்த்து கொண்டு இருக்கிறதே, பாலகிருஷ்ணனும் யமுனாவும் பார்வையால் பொசுக்கினார்கள் மீனாட்சியை அவர்களை விட உக்கிரமாக முறைத்தான் அவரின் மகன் தேவா…
“சும்மா நாடகம் போடாம எல்லாரும் வெளியே போங்க. காசு இருந்தா எல்லா தப்பையும் மறைச்சிடலாம் நினைக்காதீங்க நாளைக்கு கோர்ட்ல வந்து பார்த்துகோங்க.. யோவ் ஏட்டு இந்த பொண்ணு மேல்ல ட்ரக் அண்ட் ப்ராத்தல் கேஸ் போடு என சரவணன் தியா தந்தை மீது இருக்கும் பகையை தீர்த்து கொள்ள சொல்லி முடிப்பதற்குள்
மீனாட்சி கையிலிருந்த தாலியை வாங்கி வேகமாக தியா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கி இருந்தான் தேவா..
பளிச் பளிச் என்று அதை சுற்றி இருந்த பத்திரிக்கைகார்கள் படமாக்கி கொண்டனர்.. சபரியும் சூர்யாவும் கூட தங்கள் மொபைலில் படம் பிடித்து கொண்டனர்… கெட்டத்திலையும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்வாங்க அது இது தான் போல என்று சூர்யா நினைத்து கொண்டான்…
இன்றைக்கு இந்த சூழ்நிலையில் இந்த திருமணம் நடக்கவில்லை என்றால், எப்போதும் நடந்து இருக்காது.. தியாவும் அவனும் தலைகீழாக நின்றாலும் தேவா மனதை மாற்றி இருக்க முடியாது.. யப்பா சரவணா ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்குப்பா என அந்த இன்ஸ்பெக்டர்க்கு நன்றி சொல்லி கொண்டு இருந்தான்..
இப்புடி ஒரு சூழ்நிலையை உருவாக்கிய மகளை பாலகிருஷ்ணன் வெறுப்புடன் பார்த்தார்.. யமுனா இவ வாழ்க்கையை இவளே அழிச்சுக்கிட்டாளே என்ற கவலையோடு பார்த்தார்..
“இப்ப சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சரவணன் நீங்க தீடிர்னு காரமடைல்ல இருக்க குறிப்பா அந்த வீட்டுக்கு மட்டும் ஏன் வந்தீங்க.. அதுவும் ஒரு பொண்ணு தனியா இருந்தா உடனே அரெஸ்ட் பண்ணுவீங்களா, அப்புடி ஏதும் புது சட்டம் இருக்கா என்ன, எனக்கு ஏதும் தெரியாது அப்புடி ஏதும் சட்டம் இருக்கா உங்களுக்கு தெரியுமா என சுற்றி இருந்த பத்திரிக்கையாளர்களையும் கேட்டவன் எதுக்காக இது எல்லாம் பண்ணுனீங்க இன்ஸ்பெக்டர் சரவணன்” என்று சரியான கேள்வியை கேட்டான் தேவா…
“அந்த வீட்டில் தப்பு நடக்கிறதா அங்க பக்கமிருந்து கம்பளைண்ட் வந்து இருந்துச்சு” மென்று முழுங்கியபடி சரவணன் சொல்ல
“எங்க அதை காட்டுங்க”? தேவா கேட்க
அது வந்து அது வந்து இன்ஸ்பெக்டர் சரவணன் திணறினார்…
“இவரை என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க… அப்ப தான் நாங்க கிளம்புவோம்”என்றான் தேவா… பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்டதுமே தியாவிற்கு குளு குளு என்று இருந்தாலும்,
சரவணனும் வேறு வழியின்றி தியாவிடம் மன்னிப்பு கேட்க அனைவரும் வெளியே வந்தனர்…
எங்க முகத்திலேயே இனிமே முழிக்காத எங்களை பொறுத்தவரை எங்க இரண்டாவது பொண்ணு செத்துட்டா என்ற பார்வையை மட்டும் மீடியா இன்னும் இருப்பதால் பார்த்து விட்டு பாலகிருஷ்ணனும் யமுனாவும் காரில் ஏறி செல்ல,
தியாவிற்கு கவலையாகி போனது..
அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று, ஆனாலும் சமாதானப்படுத்திக்கலாம் தியா.. உன் மம்மி டாடி புரிஞ்ச்சுப்பாங்க என தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டாள்..
இனியாவோ தியாவிடம் “உன் மேல்ல எனக்கு கோவம் தான்.. ஆனாலும் எப்பவும் உனக்கு நான் இருப்பேன்.. மம்மி டாடி கிட்ட நான் பேசுறேன் நீ ஹாப்பியா இரு” என்றவள் தேவாவிடம் “நல்லா பார்த்துக்கோங்க” என கூற,
அவளையும் முறைக்கத் தான் செய்தான் தேவா..
“அவ பண்ணினதுக்கு இவர் என்ன நம்மளை முறைக்கிறாரு” என்றபடி அவளேடைய காரில் ஏறியவளுக்கு தியா தேவா கல்யாணம் பற்றி பெரிய கவலை எல்லாம் இல்லை.. என்று தேவா இனியாவிற்கு அழைத்து உன் தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணு என்று கூறினான் அப்போதே தேவா பற்றி மற்றவர்கள் கூறி இருந்த பெண் பித்தன் என்ற பிம்பம் இனியாவிற்கு மாறி இருந்தது..
அனைவரும் சென்ற பிறகு சபரி, சூர்யா, தேவா, தியா மட்டுமே அங்கு இருந்தனர்.. தேவாவை நினைத்து கொஞ்சம் கலவரமாக இருந்தாள் தியா… “மச்சான் விடு எல்லாம் சரியாகிடும் என்று தியாவை பார்த்து கூறிய சபரி, அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறவனை கூட பார்த்து இருக்கேன்.. ஆனா அர்த்த ராத்திரியில் முத ஆளா நீதான் கல்யாணம் பண்ணி இருக்க காங்கிரஸ் நாளைக்கு மறக்கமா டீரிட்டு கொடுத்து இரு” என்றவன் தேவா முறைத்த முறைப்பில் எனக்கு ஸ்டேஷன்க்குள்ள வேலை இருக்கு என்று நைசாக நழுவி கொண்டான்…
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.9 / 5. Vote count: 32
No votes so far! Be the first to rate this post.
Post Views:804
1 thought on “விடாமல் துரத்துராளே 26”
Manish
Sis updates regularah kudunga…. actually it’s a nice story ✨
Sis updates regularah kudunga…. actually it’s a nice story ✨