மறுநாள் காலை தேவா தியாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது… தேவா போலீஸ் ஸ்டேஷனில் பேசிய வீடியோ சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்தது…
அதை அறிந்த மகேஸ்வரனுக்கு அதீத மகிழ்ச்சி உண்டானது… தேவாவின் வாழ்வு இப்புடி மாறியதில் அதுவும் தன்னால் தடம் மாறியதில் இன்று வரை குற்ற உணர்வில் உழன்றவருக்கு இப்போது அது கொஞ்சம் குறைந்தது போன்று இருந்தது… இனி தேவா வாழ்க்கையும் இயல்பாக அனைவரை போன்றும் குடும்பம் குழந்தை என்று அவன் வாழ்வு சிறப்பாக அமையும்… தேவா மகிழ்ச்சியாக இருப்பான் என்பதை எண்ணி அவர் மகிழ்ந்தார்…
அதற்கு நேர் எதிராக அதீத கோவத்தில் இருந்தார் ஜீவாவின் தந்தை செந்தில்… தேவா தியா திருமணம் விஷயம் அறிந்ததும் எப்போதும் போல் ஜீவாவின் அன்னை கௌரி ” என் பையனும் உயிரோட இருந்திருந்தா அவனும் இந்நேரம் இப்புடி கல்யாணம் பண்ணி சந்தோஷமான வாழ்ந்து இருப்பான்ல, எல்லாத்தையும் ஒன்னுமில்லாமா பண்ண அவனுக்கு மட்டும் எல்லாமே நல்லதா நடக்குதே, கடவுளே உனக்கு கண் இல்லையா, இப்புடி அவனை உயிரோட விட்டு வச்சு இருக்கியே” என்று தேவாவிற்கு வழக்கம் போல சாபங்களை அள்ளி தெளித்து விட்டு எப்போதும் போல் ஜீவா படத்தின் முன்பு அமர்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்…
மகனின் இழப்பு, மனைவியின் கண்ணீர் இரண்டையும் பார்க்கையில் செந்திலுக்கு தேவா மீது தான் இன்னும் இன்னும் கொலைவெறி உண்டானது… தாங்கள் மகனை இழந்து ஒவ்வொரு நாளையும் நகர்த்த முடியாமல் துன்பத்தில் வாடும் போது அவன் மட்டும் காதல், கல்யாணம் என்று சந்தோஷமாக இருப்பதா, தானே நேரிடையாக தேவாவை ஏதாவது செய்து விடலாம் என்று கூட யோசனை தோன்றியது…
ஆனால் சற்று நேரத்திலே திவேஷ் அன்று கூறியது நினைவு வந்தது.. தேவா மறுபடியும் சந்தோஷமா இருக்கனும்… அப்புடி அவன் மகிழ்வின் உச்சியில் இருக்கும் போது அவனை கீழே தள்ளி விட வேண்டும்… அதன் பிறகு தேவாவே தன்னை அழித்துக் கொள்வான்… அதுவரை அமைதியாக இருங்க என்று கூறியது நினைவு வந்தது.. மறுபடியும் தன் மொபைலை எடுத்து தேவா தியா திருமண வீடியோவை ப்ளே செய்து பார்த்தார்… அதில் இருக்கும் தியாவை பார்த்து ஓ…. தேவாவோட சந்தோஷம்ன்னு திவேஷ் சொன்னது இந்த பொண்ணை தானா, பார்த்துக்கலாம் இந்த சந்தோஷத்தை கொஞ்ச நாள் கழிச்சு அந்த தேவா வாழ்க்கையில் இருந்து அழிச்சு காட்டுறேன்… பிடிச்சவங்களோட இழப்பு எப்புடி இருக்கும்னு அந்த தேவாவிற்கு காட்டுறேன் என்று தியாவை பார்த்தபடி வன்மத்துடன் மனதில் நினைத்துக் கொண்டார்…
மஞ்சுவின் மூலமாக வெண்ணிலாவுக்கும் தேவா திருமணச் செய்தி போய் சேர்ந்தது… ” இப்ப அதுக்கு என்ன? யாரோ யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறாங்க அதை எதுக்கு என்கிட்ட சொல்ற போனை வை மஞ்சு எனக்கு வேலை இருக்கு” என்று சாதரணமாக கூறி விட்டு மொபைலை வைத்து விட்டாள்… நான் சாதரணமாக தான் இருக்கின்றேன் என்று வெகு இயல்பாக நடக்க தான் முயற்சித்தாள்..ஏனோ அன்றைய காலை பொழுது அவளுக்கு வழமையான மற்ற நாளை போல் அமையவில்லை.. தொட்ட அனைத்து வேலையும் தடுமாற்றதுடன் முடிந்தது… என்ன ஏது என்று தெரியாமல் மெலிதான ஒரு வலியை உணர முடிந்தது… தனியே இருப்பதால் தான் வேண்டாத சிந்தனைக்கு வழிவகுக்கின்றது என்று எண்ணி அவசர அவசரமாக குளித்து மருத்துவமனை கிளம்பி சென்றாள்… நல்ல வேளை திவேஷ் இரவு சென்றது அவன் மட்டும் இருந்திருந்தால் அவளின் இந்த முகத்தை பார்த்தே அவள் மனதை படித்து இருப்பான்… பின்பு வீண் சண்டை எழுந்திருக்கும் என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி ஆட்டோவில் கிளம்பினாள்…
சூர்யா அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழிறங்கி சமையல் அறை நோக்கி சென்றான்… அங்கும் யாரும் இல்லாததால் கீழ் இருந்த மற்ற அறைகள் வீட்டின் பின்புறம் தோட்டம் வாசல் என்று ஒரு வித பதட்டதுடன் தேட எங்கும் அவன் மனைவியும் குழந்தையும் இல்லை… ச்சே என்றபடி தலையில் கை வைத்தபடி போர்டிகோவிலே அமர்ந்தான்… காலையில் கண் விழித்த போதே நேற்று இரவு ஷோபனாவை அறைந்தது நியாயபகம் வர அவளை சமாதானம் சொய்யலாம் என்று தேடி வர எங்குமே அவள் இல்லை…
சூர்யா எப்புடி நூறு சதவீதம் சிறந்த நண்பனோ அதை விட இருநூறு சதவீதம் சிறந்த கணவனும் கூட, மனைவி ஷோபனா மீது கொள்ளை காதல்… இவர்கள் செட்டிலே முதலில் திருமணம் செய்தது சூர்யா தான்… அதுவும் ஷோபனா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது அதையும் மீறி அவர்கள் சம்மதமின்றி நடந்த திருமணம்…
நேற்று இரவு ஷோபனா பேசியது போன்று தான் தேவா பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து இந்த ஐந்தாண்டுகளாக பேசுவாள்… தேவா நட்பை விடும்படி சண்டை இடுவாள்.. ஆனால் சூர்யா மனைவியை ஏதேதோ பேசி கொஞ்சி சமாளிப்பானே ஒழிய மாறி சண்டையிட மாட்டான்… அவனுக்கு தெரியும் அவன் மனைவியை தூண்டி விடுவதே அவனின் உடன்பிறப்பு மஞ்சு தான் என்று, அதனால் அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டான்… நேற்று இரவு அவன் இருந்த மனநிலையில் தேவா மீது இருந்த கோவத்தையும் சேர்த்து மனைவியின் கன்னத்தில் இறக்கி விட்டான்…
அச்சோ உண்மையாவே கோவிச்சுக்கிட்டு அவங்க அப்பன் வீட்டுக்கு போய்ட்டா போலயே, என் பொண்டாட்டி கோவிச்சிட்டு போய்ட்டாளே, இப்ப நான் என்ன பண்ணுவேன்… ஏற்கெனவே என் மாமானார் அந்த ஆளுக்கு என்னை கண்டாலே ஆகாது… இப்ப அடிச்சேன் வேற தெரிஞ்ச்சு அவ்ளோ தான்.. கண்டிப்பா டீவோர்ஸ் வாங்கி கொடுத்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான்.. டேய் தேவா நாயே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு சம்சாரி ஆக்கிட்டு நான் சன்னியாசம் வாங்க வேண்டிய நிலை வந்துரும் போலயே, என்று தலையில் கை வைத்து புலம்பி கொண்டு இருந்தவன் நெற்றியில் தீடிரென குளிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்… ஷோபனா தான் அவன் நெற்றியில் தீருநீறு பூசி விட்டு அவனை முறைத்துக் கொண்டே வீட்டிற்கு உள்ளே சென்றாள்…
ச்சே வெள்ளிக்கிழமையா கோவிலுக்கு போயிட்டு வந்துருப்பா போல, ஒரு செகண்ட் பயந்துட்டேன்.. பொண்டாடிங்கூட வாழறதும் கஷ்டம் பொண்டாட்டி இல்லாமா வாழறதும் கஷ்டம், அடடா என்ன ஒரு தத்துவம் வர வர நாமளும் பாப்பு கூட சேர்ந்து ரொம்ப அறிவாளி ஆகிட்டோம் போலே என்றபடி உள்ளே செல்ல, அங்கு அவன் மனைவி சமையல் அறையில் பாத்திரங்களை உருட்டும் ஸ்டைலிலே சூர்யா புரிந்து கொண்டான்… அவன் மனைவி தன் மீது எவ்வளவு கோவத்தில் உள்ளாள் என்பதை,
சமையலறை வாயிலில் நின்றபடி மனைவியை பார்த்தான் எப்படி சமாதானம் செய்வது என்றபடி, தக்காளி பழ நிறத்தில் சேலை அணிந்து முடியை இருபுறம் சிறிது எடுத்து சின்ன பின்னல் இட்டு, மீதி முடியை இடை வரை தளர விட்டு முல்லை பூ சூடி இருந்தாள்… நெற்றியில் சின்ன கல்பொட்டு வைத்து அதன் மேல் சிறு கோடு போல் திருநீறு கீற்று நெற்றி வகுட்டில் குங்குமம் என மங்களரமாக நின்று இருந்த மனைவியை ரசித்தப்படியே உள்ளே நுழைந்தவன் பின்னிருந்து அவளை அணைத்து தோளில் தாடையை பதித்து,
ஷோபி சாரிடி ஏதோ டென்சன்ல அடிச்சுட்டேன்… சாரிடி என்று நேற்று அறைந்த கன்னத்தில் முத்தமிட,
டேய் பர்ஸ்ட் என்னை விட்டு தள்ளி போடா உன் சாரி பூரி ஒன்னும் வேண்டாம்… உனக்கு அவன் தானே முக்கியம்.. நான் இரண்டாம் பட்சம் தான அவனுக்காக அடிக்கிற அளவுக்கு வந்துட்டல, போ போ அவன் கிட்டையே போ, என்கிட்ட பேசாத என்றாள், அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றபடி,
நீ எனக்கு இரண்டாம்பட்சமா, யார் சொன்னதுடி அப்புடி, நீ என் உயிர், உலகம்டி, காத்து கூட இல்லாமா நான் உயிர் வாழ்ந்துருவேன்.. ஆனா என் காதல் மனைவி என் ஷோபி குட்டி பக்கத்தில்ல இல்லைன்னா ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாது.. ஐ லவ் யூ சோ சோ சோ மச் டி உனக்கு தெரியாதா என்றபடி கழுத்தில் முத்தமிட்டான்..
என்னது பேசுனது ரொமாண்டிக்கா இல்லையா, அப்ப ரொமாண்டிக்கா ஏதாவது பண்ணட்டுமா என்றவன் அவளை கைகளில் அள்ள, விடுடா விடுடா என்று அவளின் திமிறலை பொருட்படுத்தமால் அறைக்குள் வந்தவன், மனைவியை மெத்தையில் இறக்கி விட்டு அவள் மேல் படர்ந்து இதழை சிறைப்பிடித்து, நேற்று இரவு சண்டை நடந்த மெத்தையில்லே சமாதானத்தில் இறங்க, முதலில் கோவத்தில் முரண்டு பிடித்த ஷோபனா மெல்ல மெல்ல கணவனின் தொடுகையில் கரைந்தவள் அவனின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைக்க துவங்கினாள்…
பாகம் 30
காலை மணி பதின்னோன்றை தாண்டி இருந்தது… சூரிய வெளிச்சம் மூடி இருந்த திரைசிலையையும் மீறி உறங்கி கொண்டு இருந்தவள் மீது சுளீரென பட, அதனால் இதற்கு மேல் எவ்வளவு இழுத்து போர்த்தி படுத்தாலும் தூங்க முடியாது என்பதால், மெல்ல மெல்ல உறக்கத்தை விடுத்து கண் விழித்தாள் தியா…
நேற்று நடந்த களேபரத்தில் அதிகாலை தொடக்கத்தில் தான் உறங்கினாள் என்பதால், தூங்கி வழிந்து கொண்டே எழுந்து அமர்ந்தவளுக்கு என்ன இது நம்ம ரூம் மாதிரி இல்லையே என்று கண்ணை நன்றாக கசக்கி விட்டு பார்த்தாள்.. நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவு வந்தது… அதும் தேவா அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்த நொடியை நினைக்கையில் உள்ளத்தினில் பூரிப்பும் எல்லை இல்லா இன்பமும் அதோடு இதுவரை அவள் அறியா வெட்கமும் அவளை ஆட்கொண்டது..
அதே வெட்கத்துடன் மெத்தையின் மறுபுறம் பார்க்க தேவா இல்லை… எங்க போனாரு என்று மெத்தையில் இருந்து எழுந்து வீடு முழுக்க தேட தேவா இல்லை.. கால் பண்ணி பார்க்கலாம் என்று மொபைலை எடுக்க அறைக்கு வர, அவளின் மொபைலுக்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது… அது தேவா எழுதி வைத்து இருந்த பேப்பர் பிரித்து படித்தாள் அதில்,
“ஏய் கீழே கிச்சன்ல டிபன் வாங்கி வச்சு இருக்கேன்… பக்கத்தில் இருக்க கவர்ல உனக்கு தேவையான ஒரு செட் டிரெஸ் இருக்கு.. இப்ப அதை குளிச்சிட்டு போட்டுக்கோ.. அப்புறம் உனக்கு என்ன வேணுமோ போய் வாங்கிக்கலாம், இந்த குளிக்கிறது ப்ரெஸ் பண்றது எல்லாம் உனக்கு நான் கொடுத்த ரூம்ல போய் பண்ணு, என் ரூமை யூஸ் பண்ண கூடாது சொல்லிட்டேன்.. நான் வரதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். பார்த்து பத்திரமா இரு” என்று தேவா எழுதி வைத்து விட்டு சென்று இருந்தான்…
அருகில் இருந்த கவரை பிரித்து பார்த்தாள்… அதில் ஒரு நீல நிற முட்டி தாண்டிய டாப்பும் அதே நிறத்தில் பலசோ பேண்ட்டும் இருந்தது.. தேவா தியாவை பெரும்பாலும் இந்த உடையில் தான் பார்த்து இருக்கான்.. அதான் அதே போல் வாங்கி வைத்திருக்கிறான் என்பது தியாவுக்கு புரிந்தது…
“ம்க்கும் இந்த பாவா ரொம்ப ஸ்டீரிட்டு தான்ப்பா” என்று உதட்டை சுழித்தாலும், தனக்கு வேண்டியதை கேட்கும் முன் வாங்கி வைத்திருப்பவனை நினைக்கையில் கணவனின் மேல் காதல் பெருகியது.. சிரிப்புடனே மொபைலை பார்க்க டிஸ்ப்ளேயில் இருந்த தியா அம்மா அப்பா போட்டோவை பார்த்த
அடுத்த நொடி முகம் வாடியது பெற்றோரை எண்ணி, உடனே தனது மொபைலை கையில் எடுத்து தனது அம்மா யமுனாவிற்கு அழைத்தாள்.. முழு ரிங் போயி கட்டானது மறுமுனை எடுக்கவில்லை… அடுத்து பல முறை அழைத்தும் பயனில்லை யமுனா எடுக்கவே இல்லை..
தியாவுக்கு கஷ்டமாக இருந்தது… இந்த திருமணம் அவர்களுக்கு பெரிய ஏமாற்றம், அதனால் அவர்கள் கோவம் நியாயமானது என்பது புரிந்தாலும், அவர்களின் கோவத்தையும் ஒதுக்கலையும் தாங்க முடியவில்லை.. கஷ்டமாக இருந்தது… இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கையிலே இனியா போன் செய்து இருந்தாள்…
அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ “என்றாள் சுரத்தே இல்லாத குரலில்,
“தியாகுட்டி எப்புடி இருக்கடா என்ன ஆச்சு ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு, ஏதாவது பிரச்சனையா மாமா உன்னை சத்தம் போட்டாங்களா” என்று பதறி போய் இனியா விசாரிக்க..
“அது எல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை”..
“வேற என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பேசுற”,
“யமுனாக்கு ஒரு பத்து பதினைஞ்சு டைம் கால் பண்ணுனேன் தெரியுமா எடுக்கவே இல்லை… அதான் கஷ்டமா இருக்குடி. இனியா எனக்காக மம்மி டாடி கிட்ட கொஞ்சம் ரெக்மெண்டேஷன் பண்ணுடி” என்று தியா கெஞ்ச,
“அட ஏன்டி நீ வேறா, இப்ப இருக்க நிலைமைக்கு எனக்கே யாராவது மம்மி டாடிகிட்ட ரெக்மெண்டேஷன் பண்ணணும் போல இருக்கு”..
ஏன் ஏன் என்னாச்சு? தியா கேட்த
“எல்லாம் உன்னால தான் எருமை, அவ தேவாவ காதலிக்கிற விசயம் உனக்கு முன்னவே தெரியும்ல, ஏன் எங்க கிட்ட பர்ஸ்டே சொல்லலை, அவ கூட சேர்ந்து நீயும் எங்களை முட்டாள் ஆகிட்டல்ல, இனிமே எங்க கூட பேசதா வீட்டுக்கு வராத, எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க இரண்டுமே எங்களுக்கு வேண்டாம்னு மம்மி சொல்லிட்டாங்கடா, நானும் தான் கால் பண்ணுனேன் எடுக்கவே இல்லை” என்று வருத்தமாக இனியா கூற,
தியா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
“எருமை எருமை எதுக்கு இப்ப சிரிக்கிற எருமை” என்று இனியா எரிச்சல் பட
“ஒண்ணும் இல்லடி வோய் ப்ளட் சேம் ப்ளட் அதுக்கு தான் சிரிச்சேன்… என்னை மட்டும் இல்லாம உன்னை சேர்த்து மம்மி துரத்தி விட்டுட்டாங்களே அதை நினைக்கும் போது” என்று மறுபடியும் தியா சிரிக்க ஆரம்பிக்க, இனியா மறுபடியும் பேயே பிசாசே திட்ட ஆரம்பித்தாள்..
“ஓகே ஓகே கூல் இனியா மம்மி டாடி தானே ஒரு ஒன் வீக் இல்லைன்னா பத்து நாள் அதுக்குள்ள அவங்களா பேசுவாங்க. இல்லைன்னா நான் எதுக்கு இருக்கிறேன் பேச வச்சு காட்டுறேன் பாரு, அப்படியெல்லாம் கோவமா இருக்கட்டும்னு யமுனாவையும் பாலகிருஷ்ணனையும் விட முடியாது அவங்க நம்ம கிட்ட பேசி தான் ஆகணும்.. சரி நான் இப்ப போனை வைக்கிறேன்” என்று தியா கூற,
“இருடி ஒரே ஒரு நிமிஷம் அத்தை உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அதுக்கு தான் நான் கால் பண்ணது.. இரு அவங்க கிட்ட தரேன் பேசு” என்ற இனியா தேவா அன்னை மீனாட்சியிடம் கொடுத்தாள்…
,”ஹலோ தியாம்மா என்ற மீனாட்சி என்ன பண்றீங்கடா, தேவா என்ன பண்றான், என் மேல்ல கோவம் நான் கால் பண்ணுனா எடுக்க மாட்டேங்கிறான், அங்க எந்த பிரச்சினையும் இல்லையே, ” என்று விசாரிக்க,
“பாவா வெளிய எங்கயோ போய் இருக்காங்க அத்தைம்மா.. நாங்க நல்லா இருக்கோம் எந்த பிரச்சினையும் இல்லை அத்தைம்மா” என்று தியா கூற,
மேலும் மீனாட்சி “என் தேவாவுக்கு கல்யாணம் ஆகிட்டு, பண்ணவே மாட்டேன் சொல்லி அடம் பிடிச்சவன் உன்னை கல்யாணம் பண்ணுனதில் நான் இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமாடா, எல்லாத்துக்கும் நீ தான் நீ மட்டும் தான் காரணம் ரொம்ப தாங்க்ஸ்டா அப்புறம் தியா” என்று ஏதோ கேட்க வந்து மீனாட்சி தயங்க,
“என்ன அத்தைம்மா எதுவா இருந்தாலும் தயங்கமா கேளுங்க”..
“இல்லடா அது வந்து தேவாவை உனக்கு உண்மையா பிடிக்குமா” என்று மீனாட்சி கேட்க,
அதை கேட்டு சிரித்த தியா “இந்த கேள்வியை நேத்து இது தான் சமயம்னு தாலி எடுத்து உங்க பையன் கையில்ல கொடுக்கறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும்” என்ற தியா பதிலில் மீனாட்சி முகம் அந்த புறம் சுருங்கி விட்டது…
“அப்புடினா உனக்கு தேவாவ,
“பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் நைட்டு 12 மணிக்கு எதை பத்தியும் கவலை படமா அவரை பார்க்க போற அளவுக்கு பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ஆனா உங்க பையனுக்கு தான் என்னை சுத்தமா பிடிக்காது” என்றாள்..
அதை கேட்ட மீனாட்சி அந்த புறம் சிரித்து, “பிடிக்காமலா உன் கழுத்தில் தாலி கட்டுனான்.. அவனுக்கும் நீ னா இஷ்டம் தான் போல உனக்காக நேத்து எவ்ளோ சண்டை போட்டான் பார்த்தல்ல” என்று கூற,
“அட ஏன் நீங்க வேற, அவருக்கு என்ன பிடிக்காது… நான் தான் பின்னாடியே துரத்தி பிடிவாதமா அவர் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு இருக்கேன்” என்றாள் தியா..
“போடி லூசு உன் பிடிவாதம் அவனுக்கு பிடிச்சதால்ல தான் இப்ப நீ அவனுக்கு பொண்டாட்டி ஆகி இருக்க.. அவனுக்கு விருப்பம் இல்லைன்னா நீ எவ்ளோ பிடிவாதமா அடம் பண்ணுனாலும் குண்டு ஊசி நுழையற அளவுக்கு கூட அவன் வாழ்க்கையில்ல இடம் தந்து இருக்க மாட்டான்” என்ற மீனாட்சியிடம்,
“அத்தைம்மா இது எல்லாம் உண்மையோ பொய்யோ ஆனா கேட்கிறதுக்கு நல்லா இருக்கு” என்று கூற இருவரும் சிரித்தனர்…
“இன்னைக்கு தேவாவோட பிறந்த நாள்… அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தேவா பிறந்த நாள்னா வீடே ஜே ஜேன்னு இருக்கும்… அப்புடியே திருவிழா மாதிரி கொண்டாடுவாங்க… அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு அவனுக்கு என் கையாலயே செஞ்ச”,
“பால்பாயசம் செஞ்சு தருவீங்களா”
“இல்ல”
“கேசரியா”
“இல்லடி கேரட் அல்வா செஞ்சு கொடுப்பேன்.. தேவாவுக்கு கேரட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்.. அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேட்பான்.. அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு கேரட் அல்வா சாப்டு தான் கேக் சாப்பாடுகூட சாப்டுவான்… ஆனா இப்ப எல்லாம் மாறி போயிட்டு” என்று மீனாட்சி வருத்தப்பட,
“அத்தைம்மா இப்ப என்ன கேரட் அல்வா தானே, நான் செஞ்சு பாவாக்கு கொடுக்கிறேன்.. இதுக்கு போய் வருத்தப்படுலாமா”,
“உனக்கு சமைக்க தெரியுமா”?
“தெரியாது தான் ஆனா உங்க மருமகளுக்கு கற்பூர புத்தி சொல்லி கொடுத்தா உடனே கத்துப்பேன்.. அத்தோடு என் பாவாக்கு பிடிக்கும்னு சொல்லிட்டீங்க.. அதனால்ல நான் எவ்ளோ கஷ்டப்பட்டுனாலும் செஞ்சு கொடுப்பேன்.. கேரட் அல்வா ரெசிபி மட்டும் சொல்லிங்க” அசத்திரேன் என்று தியா வீரமாக கூற,
மருமகளை பற்றி ஒன்றும் தெரியாத மீனாட்சி அப்பாவியாக கேரட் அல்வா செய்முறையை எந்தெந்த பொருள் எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து விட்டு போனை வைத்தார்… அவருக்கு தெரியவில்லை அவரின் மருமகள் இதை வைத்து செய்ய போகும் கூத்தை,
தியாவும் சென்று அவசர அவசரமாக குளித்து ரெடியாகி கிச்சன் சென்று கேரட் அல்வா செய்வதற்கு மீனாட்சி சொன்ன பொருட்கள் ஒன்று ஒன்றாக தேடி எடுத்தாள்… பால், சர்க்கரை, பாதாம், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, நெய் எல்லாம் இருந்தது… கேரட்டை தவிர, “அய்யோ கேரட் இல்லையே என்ன பண்ணலாம்” என்று தியா யோசிக்கும் போதே, வெளியே கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் என்று காய் வண்டி சத்தம் கேட்க,
“ஆஹான் இவங்ககிட்ட கேரட் இருக்கும் வாங்கிட்டு வந்து கேரட் அல்வா செஞ்சு கொடுத்து பாவா கவுத்துரனும்ப்பா, ஆனா என்கிட்ட கையில்ல காசு இல்லையே என்ன பண்ணலாம்.. அதான் போன் இருக்கே இப்ப தான் ஜிபே பண்ணிக்கலாம்” என்று போனையும் அங்கிருந்து ஒரு பேக்கையும் எடுத்து கொண்டு வெளியே வந்தாள்…
தேவா காரில் வீட்டை நெருங்கும் போது அவன் வீட்டின் முன்பே ஏதோ சலசலப்பு சற்று கூட்டமாகவும் இருந்தது… அதை பார்த்தவன் தியாவுக்கு தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணி காரில் இருந்து அவசரமாக இறங்கி அங்கு நின்று இருத்தவர்களை விலக்கி விட்டு பார்த்தான்…
அங்கு தியாவுடன் ஒருவன் வாக்குவாதம் செய்வது தெரிந்தது.. உடனே கோவமாக அவர்கள் அருகில் நெருங்கிய தேவா, “ஏய் யார் நீ எதுக்கு என் வொய்ஃப் கிட்ட பிரச்சினை பண்ற” என்று கோவமாக கேட்க,
சார் “நான் இந்த ஏரியாவுல காய்கறி வியாபாரம் பண்றவன் சார், நான் எந்த பிரச்சினையும் பண்ணல, இந்த பொண்ணு தான் என்கிட்ட பிரச்சினை பண்ணுது” என்று சொல்ல,
“ஏதே நான் பிரச்சினை பண்றானா, பாவா இவரை நம்பாதீங்க, இவர் தான் என்னை ஏமாத்த பார்க்கிறார்”..
தேவா,” என்னடி ப்ராப்ளம் எதுக்கு நீ வீட்டை விட்டு வெளிய வந்த காய்கறி வியாபாரம் பண்றவர்கிட்ட உனக்கு என்ன வேலை அதை பர்ஸ்ட் என்கிட்ட சொல்லுடி “என்று தேவா கேட்க,
“நான் கேரட் வாங்கலாம்னு வந்தேன்”..
எதுக்குடி?
“கேரட் அல்வா பண்றதுக்கு” என்றவளை ஏறங்க இறங்க பார்த்தவன் அது எதுக்குடி என்று முறைக்க,
“அதை அப்புறம் சொல்றேன் பாவா, இந்த அநியாயத்தை கேளுங்க பாவா”,
“இந்த அண்ணாகிட்ட வந்து நூறு கேரட் எவ்ளோன்னு கேட்டேன்.. 20 ரூபாம்மான்னு சொன்னாங்க… சரின்னு சொல்லி நூறு கேரட் வாங்கினதுக்கு அப்புறம் 500 ரூவா சொல்றாங்க பாவா, இது தப்பு தானே, ஏன்னு நான் கேட்டா என்கிட்டேயே சண்டை போடுறாங்க இந்த அண்ணா” என்று தியா புகார் கூற,
அந்த காய் விற்கும் நபரை பார்த்த தேவா “என்னங்க இது எல்லாம் சின்ன பொண்ணு கிட்ட இப்புடி எல்லாம் ஏமாத்துறது நியாயமா” என்று கோவமாக கேட்க,
அந்த நபரோ சார் “பர்ஸ்ட் உங்க வொய்ஃப் கையில்ல வச்சு இருக்க பேக்கை வாங்கி பார்த்துட்டு அப்புறம் என்கிட்ட கோவப்படுங்க சார்” என்று கூற,
தியா கையில் இருந்த பேக்கை வாங்கி பார்த்த தேவா லேசாக அதிர்ந்து “என்னடி இது” என்று கேட்க,
“நூறு கேரட் பாவா” என்று பதில் அளித்த மனைவியை தேவா முறைக்க,
எதுக்கு இவரு முறைக்கிறாரு “கவுண்ட் பண்ணி பாருங்க பாவா நூறு கரெக்ட்டா
இருக்கும்.. நான் கணக்குல புலி என்றவளின் பதிலில் தேவாவிற்கு தான் எங்காவது முட்டி கொள்ளலாம என்று இருந்தது…