Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௰௨ (12)

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௰௨ (12)

by Competition writers
4.8
(41)

அம்பு – ௰௨ (12)

இரவு வேலைகளை முடித்துக் கொண்டு சகுந்தலா கொடுத்த பால் சொம்புடன் இந்தரின் அறைக்குள் நுழைந்தாள் வில்விழி..

உள்ளே நுழைந்தவுடன் கதவை தாழிட்டவள் பாலை ஒரு குவளையில் ஊற்றி அவன் கையில் கொடுத்து

“ஏங்க.. இந்தாங்கங்க.. இந்த பால குடிங்க.. அத்தை உங்களுக்கு கொடுக்க சொன்னாங்கங்க..” என்று பணிவான குரலில் பேச

அவனோ முகம் சுருக்கி “எது.. ஏங்க.. இந்தாங்கங்கவா? இப்ப எதுக்குடி ஏங்க வீங்கன்னு என்னவோ போல பேசற? என்னடி இது அசிங்கமா ஏங்க என்னங்கன்னுகிட்டு..”

“ஓ.. ஏங்கன்னு கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்கலையா? அப்படின்னா.. அத்தான்னு கூப்பிடவா? இல்ல… சுவாமி..? இல்லனா.. பிராண நாதா..? நீங்க எப்படி கூப்பிடனும்னு சொல்றீங்களோ அப்படியே கூப்பிடுறேங்க.. மாமா தான் சொல்லி இருக்காங்களே.. உங்க பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு..”

“என்னடி..? நக்கலா..? இங்க பாரு.. நீ கோவமா இருக்கேன்னு புரியுது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு டி மலரு.‌. அவர் முன்னாடி நீ என்னை மரியாதையா கூப்பிட்டுக்கோ.. ஆனா அவர்தான் இப்ப இங்க இல்லல்ல? இப்ப எதுக்குடி இப்படி எல்லாம் கூப்பிட்டு என் உயிரை எடுக்கிற..?”

“என்னங்க நீங்க? இப்படி எல்லாம் சொல்றீங்க? உங்களுக்கு இந்த மாதிரி கூப்பிடுறது எல்லாம் பிடிக்கலைன்னா உங்களுக்கு எப்படி கூப்பிட்டா பிடிக்கும்னு சொல்லுங்க.. அப்படியே கூப்பிடுறேங்க..”

அவள் இன்னும் அப்படியே குழைந்து பேசிக்கொண்டு இருக்க அவனுக்கோ எரிச்சல் மண்டியது..

“ம்ம்ம்.. எனக்கு டேய் இந்தருன்னு கூப்பிட்டா புடிக்கும்.. அப்படியே கூப்பிடு..”

“அய்யய்யோ.. அதெப்படிங்க? அப்படியெல்லாம் கூப்பிட முடியாது.. அப்படி கூப்பிட்டா மாமா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாரு.. சாப்பிடும் போது அவர் சொன்னார் இல்ல.. அப்போ நீங்களும் அமைதியா உட்கார்ந்து கேட்டுக்கிட்டு தானே இருந்தீங்க..?”

“ஐயோ மலரு.. மேல மேல இரிடேட் பண்ணாத என்னை..  என்னால அவரை எதிர்த்து பேச முடியாதுடி.. ஒரு நாள்ல அவர் முன்னாடி மேக்ஸிமம் நீ ஒரு ஒன் ஹவர் இருப்பியா? அந்த ஒன் ஹவர் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி.. மத்த நேரம் எல்லாம் எப்பவும் போல என்னோட கேஷுவலா இரு.. இந்தர் நீ வா போனே பேசு.. ப்ளீஸ்..” அவன் கெஞ்ச அவளோ முரண்டு பிடித்தாள்..

“அய்யய்யோ.. உங்க கிட்ட பேசிட்டு இருந்ததில மறந்துட்டேன் பாருங்க..” என்றவள் சட்டென அவன் காலில் விழவும் பின்னால் நகர்ந்து நின்றவன் “ஏய் லூசு.. என்னடி பண்ற? எந்திரிடி.. எதுக்குடி இப்ப என் கால்ல விழற?” என்க

“ரூமுக்குள்ள வந்த உடனே புருஷன் கால்ல விழணுமாங்க..”

அவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல கண்ணை இறுக்கமாய் மூடித் திறந்தவன்

“இப்ப நீ இப்படி ங்க போட்டு கூப்பிடறதை நிறுத்த போறியா இல்லையா?”

“இல்லைங்க.. அப்படித்தான் கூப்பிடுவேன்.. என்னை மாமா அப்படித்தான் கூப்பிட சொல்லி இருக்காரு..”

அவள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற அதற்கு மேல் பொறுக்க முடியாதவன் “இப்படியே விட்டா நீ பேசிக்கிட்டே போவ.. உனக்கு எப்பவும் மலரோட அதிரடி இந்தர்தான் லாயக்கு.. உன்கிட்ட எதுக்கு நான் கெஞ்சிகிட்டு இருக்கேன்?” என்றவன் சட்டென அவளை இழுத்து அவள் இதழோடு இதழ் சேர்த்து இருந்தான்..

அவன் மார்பில் கை வைத்து தன்னிலிருந்து பிரித்து தள்ளியவள் அவனை எரிப்பது போல் முறைத்து

“ஒன்னும் தேவை இல்ல.. அவரு என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்புவேன்னு சொல்றாரு.. கேட்டுக்கிட்டு சும்மா தானே இருந்தீங்க.. அவரோட ரூல்ஸெல்லாம் எப்படியும் என்னால ஃபாலோ பண்ண முடியாது.. கொஞ்ச நாள்ல எப்படியும் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பிடுவாரு.. நீங்க தனியாவே இருந்து பழகிக்கோங்க..”

இப்படி சொன்னவள் கட்டிலிலிருந்து ஒரு தலையணையை எடுத்து தரையில் போட்டு அப்படியே கட்டாந்தரையில் ஒருக்களித்து அவனுக்கு எதிர்ப்புறமாக முகம் திருப்பி படுத்துக்கொண்டாள்..

“ஐயோ கொல்றாளே..” என்று மேலிருந்து கீழாய் தன் முகத்தை கைகளால் அழுந்த மூடி திறந்தவன் “ஏய் மலரு.. கட்டில் மேல படுடி..” என்றான் கட்டளையாக

அவன் பேசியது எதுவுமே காதில் விழாதது போல் அவள் அப்படியே படுத்து இருக்க “ஓ அவ்ளோ திமிராயிடுச்சா மேடமுக்கு.. இருடி வரேன்..” என்றவன்

அப்படியே தரையில் இருந்து அவளை கையில் அள்ளி எடுக்க அவளோ கால்களை உதறிக் கொண்டு அவனில் இருந்து திமிற முயன்றாள்.. ஆனால் அவளுடைய எந்த முயற்சிக்கும் பலன் இல்லாமல் போனது..

அவன் தான் பிடிவாதக்காரனாயிற்றே.., அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அழுத்தமாய் பிடித்தபடி அவள் சுதாரிக்கும் முன் அவள் மேல் முழுதுமாய் படர்ந்து இருந்தான்..

அவள் இதழை தன் இதழால் மூடியவன் அவனை எதிர்ப்பதற்கு அவளுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை..

நொடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை தொடர்ந்து இருந்தது அந்த வன்மையான இதழ் ஆக்கிரமிப்பு..

முதலில் எதிர்த்தாள் தான்.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இதழ் ஆக்கிரமிப்பில் அனலில் இட்ட மெழுகாய் அவள் கோபம் எல்லாம் உருகி வழிந்து ஓடி இருந்தது..

அதன் பிறகு அவளை அந்த மயக்கத்தின் பிடியிலிருந்து மீளவே விடவில்லை அவன்..

தொடர்ந்து அவள் மேனி எங்கும் வெடித்து சிதறும் எறி குண்டுகளாய் மாறி இருந்த அவன் மூச்சு காற்றின் வெப்பத்தினால் அவளை காமத்தீயில்  எரித்து தன்  முத்த கணைகளால் அவளை அதிரடியாய் தாக்கி அவளின் உடை என்னும் பாதுகாப்பு கவசத்தை மொத்தமாய் அகற்றி மோகமென்னும் வாளேந்திய விரல்கள் கொண்டு அடி முதல் நுனிவரை தீண்டி தீண்டி  நகங்களையும் பற்களையும் காதல் போரின் உச்சத்தில் ஆயுதங்களாய் மாற்றி காயத் தடங்களை உண்டாக்கி அவளை ஆதி முதல் அந்தம் வரை ஆட்கொண்டு மிச்சமில்லாமல் அவன் செய்த காதல் யுத்தத்தில் மொத்தமாய் வீழ்ந்து போயிருந்தாள் வீரநங்கை அவள்..

அவனிலும் காதல் காயங்களுக்கு குறைவில்லை. ஆனால் தினம் தினம் அவளோடு கட்டில் போரிட்டு காயங்கள் கொள்ள தானாகவே சித்தமாகி இருந்தான் அவன்..

தினமும். இப்படி தான் மார்க்கண்டேயனின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்கொண்டு இறுகி போய் கோவம் கொண்ட கிளியாய் தங்கள் அறைக்கு வருபவள் இந்தரின் அதிரடி காதலில் அவனின் ஆசை கிளியாய் மாறி போவாள்..

இன்று வரை அவனின் ஆளுமையான காதலுக்கு அடிமையாக தான் கிடக்கிறாள்.. இப்போதும் அவளின் அனுமதியின்றி அவன் அவளின் இதழ் தீண்டிய வேளை பழைய மலர்விழியாக அந்த ஒரு சில நொடிகள் அவன் ஆதிக்கத்தில் கட்டுண்டு தான் இருந்தாள்..

அவனின் இந்த அடாவடி காதல் தன்னை பலவீனமாக்குவதாகவே உணர்ந்தாள் அவள்.. அவன் மேல் இருந்த காதலுக்காகவே மார்க்கண்டேயனின் அடக்குமுறைகளை வேறு வழியின்றி வாயை மூடி ஏற்க வேண்டியதாயிற்று அவளுக்கு.. அதன் விளைவு தான் இப்போது அவளிட்ட அந்த கடைசி நிபந்தனை..

முடிந்தவரை அவன் கட்டுப்பாட்டுக்குள் தான் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தாள் அவள்.. ஆனால் அந்த நிபந்தனை அவனை விட அவளை தான் பாடாய் படுத்த போகிறதென்று அப்போது அறியவில்லை அவள்..

இன்று அந்த சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்திருந்த வில்விழி மனதில் திரையில் ஓடுவது போல் அந்தப் பழைய காட்சிகள் ஓட அவள் விழிகள் ஒரு நொடி கலங்கியது.. யாருக்கும் தெரியாமல் அவள் தன் கண்ணீரை வெளிவராமல் உள்ளே இழுத்துக் கொணடது இந்தர் கண்களுக்கு தப்பவில்லை..

கையில் குழந்தையுடன் சற்று தள்ளி நின்றிருந்தவன் அவள் பின்னால் சென்று நின்று அவள் தோளை ஆறுதலாய் அழுத்தமாய் பற்றி கொடுக்க தோளில் இருந்த அவன் கைகளின் அழுத்தம் அவளுக்கு இதமாய் தான் இருந்தது அந்த நொடி..

“சரி சாப்பிடலாமா அத்தை?” என்றவள் மார்க்கண்டேயனை பார்க்க அவரோ அவளை முறைப்படி சகுந்தலாவின் தட்டில் உணவை பரிமாற ஆரம்பித்தார்..

இந்தர் குழந்தையை கையில் ஏந்தியபடியே சிரமப்பட்டு விழிக்கு உணவை பரிமாறிக் கொண்டிருக்க சக்தி விழி தட்டில் இருந்த உணவை காட்டி “மம்மு சத்தி மம்மு தா..” என்றாள்..

“ஓ பசிக்குதா சக்திமா.. ?”

விழி கேட்க “அம்முகுட்டி.. பசிக்குதாடா செல்லம்? இதோ ஒரு செகண்ட்ரா..” என்றவன் விழியின் தட்டில் சாதமும் குழம்பும் ஏற்கனவே பரிமாறி இருக்க “விழி.. நீ சாப்பிட்டுக்கிட்டு இரு.‌ நான் அதுக்குள்ள குட்டி பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்..” என்றான்..

ப்ருத்வி அவன் உதவிக்கு முன் வந்தான் “டேய்.. நான் வேணா விழிக்கு பரிமாறுறேன்டா.. நீ குழந்தையை பார்த்துக்கோ..” என்க

“இல்ல ப்ருத்வி.. அவர் தான் எனக்கு பரிமாறணும்..” மார்க்கண்டேயனை அர்த்தமாய் பார்த்தபடி சொன்னாள் அவள்..

“கவலைபடாதீங்க.. இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.. மானுவை எப்படியும் கன்வின்ஸ் பண்ணி இன்னைக்கு மதியத்துக்குள்ள கூட்டிட்டு வந்துருவேன்.. சோ உங்க டியூட்டி நைட்ல இருந்து ஸ்டார்ட் ஆயிடும்..நீங்க வேணா அவர்கிட்ட இருந்து சக்தியை வாங்கி அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க..”

விழி சொன்னதை கேட்டு ஒரு புறம் மான்விழியும் மகனும் தன்னிடம் வரப்போவதை எண்ணி மகிழ்ச்சி கொண்டவன்  “கூல்.. சக்தி செல்லம் சித்தா கிட்ட வரிங்களா?” என்று இந்தரிடம் இருந்து குழந்தையை கைகளை நீட்டி அழைக்க

சக்தியோ இந்தரின் கழுத்தை இறுக்கமாய் கட்டிக்கொண்டு அவன் தோளில் புதைந்தபடி “அவ்வா அவ்வா.. சித்தா நானா..” என்று அவனிடம் வர மறுத்து பிடிவாதம் பிடித்தாள்..

விழி “சக்திமா சித்தா ஒன்னை ஹார்ஸ்ல கூட்டிட்டு போவாரு.. ஹார்ஸ் ரைட் போலாம்..”

விழி சொன்னது தான் தாமதம்.. சட்டென முகத்தை நிமிர்த்திய சக்தி இந்தரின் கைகளில் இருந்து பிருத்வியின் கைகளுக்கு சடார் என தாவினாள்..

பிருத்வியோ இதை எதிர்பார்க்காதவன் திடீரென அவள் தன்னிடம் தாவி வரவும் “ஊஊஊ.. சக்தி குட்டி உங்களுக்கு ஹார்ஸ்னா அவ்வளவு பிடிக்குமா? வாங்க வாங்க போலாம்..” என்று உற்சாகமாய் அவளை தூக்கிக்கொண்டு ஒரு கிண்ணத்தில் அவளுக்கான உணவை பிசைந்து எடுத்துக்கொண்டு ஷ்யாம்கர்ணாவிடம் சென்றான்..

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயனுடைய கைகளின் அழுத்தத்தில் சாப்பாட்டு கரண்டி படாத பாடுபட்டது..

சக்தியை சிறுவயதில் இருந்தே விழி தைரியம் உள்ள பெண்ணாக வளர்க்கிறாள் என்று புரிந்து போனது இந்தருக்கு..

தன் மகள் இப்படிப்பட்ட பயமின்றி வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது அவனுக்கும் பெருமையான விஷயமாய் தான் தோன்றியது..

மார்க்கண்டேயன்.. இந்தர்.. இருவர் பக்கமும் திரும்பிய விழி “நீங்க ரெண்டு பேரும் கண்டினியூ பண்ணுங்க.. ஏன் நிறுத்திட்டிங்க? நாங்க சாப்பிடுறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்..” என்க

அவளை தீவிரமாய் முறைத்த மார்க்கண்டேயன் அந்த கோவத்துடனேயே குழம்பை அலட்சியமாய் சகுந்தலா தட்டில் வீசுவது போல் ஊற்ற அது தட்டை சுற்றி வெளியில் எல்லாம் சிந்தி பக்கத்தில் இருந்த சகுந்தலாவின் கைகளிலும் சுட சுட சிந்தி இருந்தது..

சகுந்தலா “ஸ்ஸ்ஸ்ஸ்..” என்ற சின்ன முனகலோடு அந்த எரிச்சலை கடந்து விட

வில்விழியோ “பொண்டாட்டிக்கு சாப்பாடு போடும்போது கவனம் சாப்பாட்டுல இருந்தா பரவால்ல.. நினைப்பெல்லாம் வேற எங்கேயோ இருந்தா இப்படித்தான் தாறுமாறா ஆகும்.. உங்களால ஒரு குழம்பை கூட பார்த்து ஊத்த முடியாதா?”

அவள் கேட்டு முடிக்கவில்லை.. சகுந்தலாவும் இந்தரும் “விழி..!!” என்று அதிர்ந்து போய் சீற

அவளோ மிகவும் கூலாக “இப்ப எதுக்கு ரெண்டு பேரும் டென்ஷன் ஆகுறீங்க? முன்ன ஒரு தடவை மான் விழி பிருத்விக்கு சாப்பாடு போடும் போது தெரியாம வெளியில கொஞ்சம் சாப்பாட்டு சிந்திட்டா… அதுக்கு இவர் இப்படித்தானே சொன்னாரு.. இப்ப அவர் பண்ணும் போதும் அதே நியாயம் தானே..? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?” என்றாள்..

மார்க்கண்டேயனோ பல்லை அழுந்த கடித்த படி ஒன்றும் செய்ய முடியாமல் அவளை பார்க்க “டென்ஷன் ஆகாதீங்க மாமா.. ஒரு பொறுப்பை எடுத்துட்டு இருக்கீங்கன்னா அதை சரியா செய்யணும் இல்ல..? மான்விழியாவது டேபிள்ல தான் சிந்தினா.. நீங்க பாருங்க.. அத்தை கையில் எல்லாம் சுட சுட குழம்ப ஊத்தி வச்சிருக்கீங்க?”

அவள் அப்படி சொன்னதும் தான் தன் அன்னையின் கை சிவந்திருப்பதை பார்த்த இந்தர் “அம்மா ரொம்ப எரியுதா? நான் வேணா மருந்து போட்டு விடட்டுமா?” என்று கேட்க

“டேய்..  உன் பொண்டாட்டி தான் ட்ராமா பண்றான்னா நீயும் எதுக்குடா அவ கூட சேர்ந்து ஆடுற?அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.. இந்த மாதிரி சக்குக்கு சின்ன சின்னதா நிறைய சூடு பட்டு இருக்கு.. அதெல்லாம் அவளுக்கு வலிக்காது.. இதெல்லாம் பெரிய சூடுன்னு மருந்து போடறானாம்… இந்த மாதிரி ஒன்னும் இல்லாத உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ரொம்ப கவலைப்படாம இதோ உன் பக்கத்துல உக்காந்து இருக்காங்களே அந்த மேடம்.. அவங்களை கவனி.. ஏ சக்கு.. எவ்வளவு நேரம்டி சாப்பிடுவே.. சீக்கிரம் சாப்பிடு.. உன் பக்கத்திலேயே எவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்கறது?”

மார்க்கண்டேயன் படபடவென பொரிய

“ஏன் மாமா.. கால் வலிக்குதா? வலிச்சாலும் பரவால்ல.. அத்தை இப்படி தானே நின்னுட்டு முட்டி வலியோட உங்களுக்கு பரிமாறுவாங்க..? நீங்களும் அதே மாதிரி பரிமாறுங்க…” என்றாள் மார்க்கண்டேயனை அழுந்த பார்த்தபடி..

இந்தரோ மனதிற்குள் “வேளைக்கு ஒரு வில்லங்கம் பண்ணுவா போல இருக்கே.. இந்த ஆறு மாசமும் எப்படித்தான் சமாளிக்க போறோமோ தெரியல.. இந்த சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நியாயம் பேசுறா… இன்னும் நடந்த பெரிய பெரிய விஷயத்துக்கலாம் இவ எப்படி பழிவாங்க போறாளோ தெரியலயே.. அப்பா செஞ்சதுக்கெல்லாம் வச்சி செய்யப் போறா.. அப்பா நீங்க காலிதான்” மானசீகமாக தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்..

கையில் சக்திக்கான உணவு கிண்ணத்தோடு ஷ்யாம்கர்ணாவிடம் அவளை தூக்கி வந்த பிருத்வி

“சக்தி குட்டி.. இவன் பேர் ஷியாம்கர்ணா.. சொல்லு.. ஷ்யாம்கர்ணா..”

சக்தியோ “சாட்சா..” என்று மழலை குரலில் வாய்க்கு வந்த பேரை அழைக்க “டேய் கர்ணா.. உன் பேரு சாட்சாவாம்… ஹான்.. ஹிந்தில சாச்சான்னா சித்தப்பான்னு அர்த்தம் டா.. சரியாத்தான் கூப்பிடுறா அவ.. ஆமா சக்திமா.. இவன் சாச்சா தான் உனக்கு..” என்றான்..

ஷ்யாம்கர்ணா குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது போல் தன் முகத்தால் வருட சத்தியோ பயமின்றி ஷ்யாம்கர்ணாவின் முகத்தில் சந்தோஷ சிரிப்போடு கையால் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்..

“அப்படியே சக்திமா கொஞ்சம் கொஞ்சமா சித்தா கிட்ட மம்மு சாப்பிடுவீங்களாம்..” என்று குட்டி குட்டி கவளங்களாக சக்தியின் வாயில் உணவை ஊட்டினான் ப்ருத்வி..

“டேய்.. நீங்க சமத்தா சாப்பிட்டீங்கன்னா நீங்களும் சித்தாவும் ஒரு ரவுண்டு ரைடு போயிட்டு வரலாம் உங்க சாச்சா கூட..”

அவன் சொன்னதும் மகிழ்வோடு விழிகளை விரித்த சக்தி சந்தோஷத்தில் கைகள் இரண்டையும் வேகமாக தட்டினாள்..

“இதே மாதிரி உன் அண்ணா சின்ட்டூவையும் கர்ணா கிட்ட உங்க சித்தி பழக விட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. ஹீம்.. எங்க..?” பெருமூச்சு விட்டவன் தொடர்ந்து குதிரையை காட்டிய படியே உணவை ஊட்ட சக்தியும் சமத்துப் பிள்ளையாய் சாப்பிட்டு முடித்து இருந்தாள்..

சக்தியோடு காலி கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவன் விழியிடம் “விழி.. சக்திக்கு சாப்பாடு கொடுத்துட்டேன்.. அவளை ஒரு ரைடு கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?”

“குதிரை சவாரியா? ஹைய்யோ.. பயங்கரமா என்ஜாய் பண்ணுவா.. அதெல்லாம் ஒரு ரவுண்டோட முடிக்க விடமாட்டா… நிச்சயமா ஒரு அஞ்சு ஆறு ரவுண்டாவது போகணும்னு சொல்லுவா.. உங்களுக்கு பரவாயில்லையா?”

விழி கேட்கவும் “இதைவிட எனக்கு என்ன வேலை இருக்கு? நம்ம சக்தி பாப்பாவோட ஜாலியா ரவுண்டு சுத்திக்கிட்டே இருக்கலாம்.. என் செல்ல குட்டி.. பாப்பு குட்டி..”

சக்தியை கொஞ்சிய படியே இருந்தவனை மெல்லிய புன்னகையோடு பார்த்திருந்தார்கள் அங்கிருந்த நால்வரும்..

அவன் சின்ட்டூ இல்லாமல் எவ்வளவு தவிக்கிறான் என்று புரிந்து போனது விழிக்கு.. உண்டு முடித்து

விட்டு முதலில் தன் பிறந்த வீட்டிற்கு சென்று மான்விழியை எப்படியாவது சின்ட்டுவோடு அங்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தாள் அவள்..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!