வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௮ (8)

4.8
(24)

அம்பு..!! – ௮ (8)

“ஐயையோ.. முதலுக்கே மோசம் பண்ணிருவா போலயே..  சொக்கா.. என்னை காப்பாத்து.. இவ வேற கொஞ்சம் நிமிண்டி விட்டா போதும்.. பத்திட்டு எரியறா..   இந்த அப்பா வேற ஓவரா பேசி இவளை கிளப்பி கிளப்பி விடுறாரே..”

நாலா பக்கமும் விழிகளை உருட்டியபடி திருதிருவென விழித்துக் கொண்டு இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்து திண்டாடிக் கொண்டிருந்தான் இந்தர்..

“டேய் இந்திரா.. உன் நிலைமை ரொம்ப மோசமாயிரும் போலயேடா..  ஏடாகூடாமா  இப்படி ரெண்டு டார்ச்சர்க்கு நடுவுல மாட்டிக்கிட்டியேடா.. சிக்கினா சின்னாபின்னமாக்காம விடமாட்டாங்க.. இன்னைக்குன்னு பார்த்து இந்த பிரித்வியை வேற காணோம்.. கொஞ்சம் கூட இருந்து ஏதாவது ஹெல்ப் பண்ணுவான்னு பாத்தா நேரம் பார்த்து எங்க தொலைஞ்சான்னு தெரியல பாவிப்பய.. டேய் எரும.. எங்கடா போய் ஒழிஞ்ச?”

மனதிற்குள் ப்ரித்விக்கும் அர்ச்சனை செய்தபடியே வில்விழியிடம் திரும்பி..

“வில்லி..” என்று அவசரப்பட்டு அழைத்தவன் நாக்கை கடித்தபடி “இன்னைக்கு உன் நாக்குல சனி அவர் இஷ்டத்துக்கு தாண்டவம் ஆடிகிட்டு இருக்காரு டா.. ஏற்கனவே கிளம்பி போறேன்னு சொல்லிக்கிட்டிருக்கா.. இதுல இவர் முன்னாடி வில்லின்னு வேற கூப்பிட்டுட்டோம்.. இப்ப சலங்கை கட்டி ஆடப்போறா..”

பாவமாய் அவள் புறம் பார்த்தவன் “ஹிஹி” என்று அசிங்கமாக இளித்துவிட்டு “சாரி.. விழின்னு கூப்பிட வந்து டங்கு ஸ்லிப்பாயிடுச்சு.. கொஞ்சம்  இரு விழி.. அப்பா கிட்ட நான் பேசறேன்.. அதுக்குள்ள அவசரப்பட்டு நீ எந்த முடிவும் எடுத்திராத.. ” என்றவன்

தன் தந்தை பக்கம் திரும்பி “அப்பா.. நான் சொல்றதை முதல்ல கேளுங்க..” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம் சரியாக கேட்டை திறக்கும் சத்தமும் ப்ருத்வி குதிரையை ஓட்டி உள்ளே வர குதிரையின் குளம்படி சத்தமும் கேட்டது..

அதை கேட்டு ஆசுவாசமாய் ஒரு பெருமூச்செடுத்த இந்தர் “அப்பாடா வந்துட்டான்.. கொஞ்சம் சமாளிக்கலாம் இவரை.. கொஞ்சம் விட்டா பத்து நிமிஷத்துல என் மொத்த வாழ்க்கையையும் அழிச்சிருப்பாரு.. எவ்ளோ கஷ்டப்பட்டு இவளை சமாதானப்படுத்தி இழுத்துட்டு வந்து இருக்கேன்.. மொத்தத்தையும் ஒரு டயலாக்கை வச்சு முழுசா காலி பண்ணி தரை மட்டமாக்க பார்க்கறாரு.. இந்த அப்பாங்கள்லாம் ஏன் தான் இப்படி இருக்காங்களோ..”

இப்படியே யோசனையில் இருந்தவனின் சிந்தனையை கலைத்தார் மார்க்கண்டேயன்..

“என்னடா.. அவ இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்கா.. நீ எந்த ரியாக்ஷனும் இல்லாம வாயை மூடிட்டு இருக்கே..”

அவர் கேட்ட அதே நேரம் உள் நுழைந்த ப்ருத்வி வில்விழியை பார்த்த வியப்பில் விழி விரித்து “மலரு.. எப்ப வந்த? முதல்ல எங்க போன நீ? இப்ப எப்படி இருக்க..?” என்று உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தவன் அப்போதுதான் சக்தியை கவனித்திருக்க

“ஆமா.. இதாரு க்யூட்டி பை.. ஹாய் குட்டி. க்யூட்டா டால் மாதிரி இருக்கீங்களே.. குட்டி பொண்ணு..” என்று குழந்தையின் நாடியில் கைவைத்து கொஞ்சினான்..

“மலர்.. உங்க குழந்தையா? அப்ப இங்கே இருந்து போகும்போது பிரக்னண்டா இருந்தியா? இந்த இளவரசி பேர் என்ன?” என்று நேராக மலரை விசாரிக்க தொடங்க

மார்க்கண்டேயனோ  “ஏ.. ப்ருத்வி… நல்லா விசாரிச்சு முடிச்சிட்டியா? இல்ல உள்ளே இருந்து ஒரு ஆரத்தி தட்டு எடுத்துட்டு வந்து நீயும் உங்க அம்மாவும் சேர்ந்து ஆர்த்தி எடுத்து அவளை பூரண கும்பம் வெச்சு வரவேற்க போறிங்களா?” என்று நக்கலாக கேட்டார்..

அவனோ அவர் பேச்சில் இருந்த நக்கலை அலட்சியப்படுத்தியவன் “ஆரத்தி எடுக்கணும் தானப்பா..? இந்தர் மக.. இந்த வீட்டு இளவரசி முதல் முதலா இந்த வீட்டுக்குள்ள வரா.. நியாயமா பார்த்தா ஆரத்தி எடுத்து தானப்பா உள்ள கூப்பிடனும்.. புள்ள பெத்து முதல் முதலா வீட்டுக்கு தூக்கிட்டு வர மருமகளை புகுந்த வீட்ல ஆரத்தி எடுத்து தானே உள்ள கூப்பிடுவாங்க.. மானுவை அப்படி தானே கூப்பிட்டீங்க.. என்னம்மா நீங்களும் அப்படியே நிக்கிறீங்க? அவங்களை வெளியில நிக்க வெச்சே பேசிக்கிட்டு இருக்கீங்க?”

ப்ருத்வி கேட்க சகுந்தலாவோ இருதலை கொள்ளி எறும்பாய் தவித்து போனாள்..

மார்க்கண்டேயனை பார்த்து பார்வையாலேயே அவள் கெஞ்ச “சரி சரி.. சொல்ற மாதிரி என் பேத்தி முதல் முதல்ல இந்த வீட்டுக்கு வந்துருக்கா.. அவளை இப்படி வெளியில நிக்க வச்சு பேச வேண்டாம்.. சக்கு.. போ.. போய் ஆரத்தி எடுத்துட்டு வா.. ஆனா இந்த ஆரத்தி என் பேத்திக்கு மட்டும்தான்..” என்றார் இறுக்கமான குரலில்..

“ஐயோ.. மறுபடியும் வில்லங்கத்தை கூட்டுறாரே.. இவ வேற இப்ப தொடங்கிடுவாளே..” என்று நினைத்தவன் ப்ருத்விக்கு கண்ணை காட்டி “டேய் கொஞ்சம் சமாளி டா..” என்று சத்தமின்றி வாயசைத்து சொல்லவும் அவனும் கண்ணை மூடி திறந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகை செய்தான்..

வில்விழி இந்தரை முறைத்தபடி பல்லை கடித்துக்கொண்டு நின்றிருக்க சகுந்தலாவோ மார்க்கண்டேயன் சொன்னதுதான் தாமதம்.. வேகமாக உள்ளே போய் ஆரத்தி கரைத்து அடுத்த இரண்டாவது நிமிடம் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார்..

“அம்மா பாத்தும்மா.. தட்டு கீழே விழுந்திட போகுது..”

“அதெல்லாம் விழாதுடா..”  என்றவர் பேத்தியை கண்ணார கண்டு கொண்டே கண்கள் பனிக்க ஆரத்தி எடுத்து அவள் நெற்றியில் பொட்டை வைத்துவிட்டு தன் மகன் நெற்றியில் வைத்தவர் ஏதோ தைரியத்தில் மருமகள் நெற்றியிலும் சட்டென வைத்துவிட “சக்கு..” என்று உறுமினார் மார்க்கண்டேயன்..

அவரோ மார்க்கண்டேயன் பக்கம் கூட திரும்பாமல் தட்டை பிருத்வியிடம் தந்து “டேய்.. போய் இதை வெளியில் கொட்டிட்டு வாடா..” என்றார்..

“அட என்னம்மா.. என்னை போய் இந்த வேலை எல்லாம் வாங்குறீங்க..”

அவன் கேட்க இந்தருக்கோ அதை கேட்டு சட்டென புறை ஏறியது..

“அடே..ய்.. உடன் பிறந்தவனே.. இதுக்கே இப்படி சலிச்சிக்கற? ஹைய்யோ.. இன்னும் நான் கண்டிஷன் எதையுமே சொல்லலயே.. அந்த கண்டிஷன் எல்லாம் கேட்டா இந்த வேலை செய்யறதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு புரிஞ்சுக்கவடா தங்கம்.. இப்போதிலிருந்தே பழகிக்கோ.. அம்மா தான் உனக்கு முதல் வேலை கொடுத்து இருக்காங்க.. ப்ராக்டிஸ் செஷன் தொடங்கிருச்சுடா உனக்கு..”

உள்ளுக்குள் பல கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க  சங்கடம் நிறைந்த புன்னகையுடன் சிரித்த முகமாக நின்றிருந்தான் இந்தர்..

சகுந்தலா அதற்கு மேல் பொறுமை இல்லாமல் பட்டென இந்தரின் கையில் இருந்து சக்தியை வாங்கிக்கொண்டு குழந்தையின் முகம் முழுவதும் முத்தமிட்டு

“செல்ல குட்டிமா.. இந்த வீட்டு மகாலக்ஷ்மி டா நீ.. எங்கேயோ போய் கண்காணாத இடத்துல பிறந்து இப்படி கஷ்டப்பட்டு இருக்கியே? இங்க இருந்து இருந்தா உன்னையும் உங்கம்மாவையும் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்திருப்பேன்.. எவ்வளவு பேர் இருக்கோம் உன்னை பார்த்துக்கறதுக்கு.. இப்படி நீயும் உங்க அம்மாவும் எங்கேயோ போய் அனாதை மாதிரி வாழ்ந்து இருக்கீங்களேடா..” என்று புலம்பியவர்

அதற்கு மேல் அங்கு நிற்க கூட இல்லை.. உள்ளே சென்று ஒரு கதிரையில் அமர்ந்தவர் மடியில் பிள்ளையை வைத்துக் கொண்டு அவளோடு பேசி விளையாட ஆரம்பித்து விட்டார்…

சக்தியோ அவர் ஏற்கனவே ஏதோ தனக்கு ரொம்ப பரிச்சயமானவர் என்பது போல பார்த்தவுடன் அவரோடு ஒட்டிக்கொண்டாள்.. எப்போதும் போல தன் மழலை பேச்சால் கொஞ்சி குலாவி பேசி அவரை மயக்க தொடங்கி விட்டாள் அவள்..

“அப்பா.. எதுவா இருந்தாலும் மலரை உள்ள கூப்பிட்டு பேசிக்கலாம் பா.. மலரை உள்ள கூப்பிடுங்க.. அவ அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கட்டும்.. நம்ம மூணு பேரும் தனியா பேசலாம்.. அவனோட ஒரு வார்த்தை கூட பேசாம மலரை வெளியில போக சொன்னீங்கன்னா அது எப்படிப்பா நியாயமாகும்.. இப்ப மலர் வெளியில போனா நஷ்டம் மலருக்கு மட்டும் இல்ல.. உங்க பிள்ளைக்கும் தான்.. புரிஞ்சுக்கோங்க பா.. என்ன பேசணும்னாலும் நிதானமா பேசி முடிவெடுங்க.. இந்தர் ஏதோ சொல்லணும்னு நினைக்கிறான்.. அவனும் சொல்லட்டும்.. நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அதையும் சொல்லுங்க.. பேசி முடிவெடுப்போம் பா.. அவசரப்பட்டு முடிவு எடுக்க இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல.. அவங்க மூணு பேரோட வாழ்க்கை பா..”

ப்ருத்வி பேசுவதையே ஆச்சரியமாக பார்த்திருந்தாள் வில்விழி.. இவ்வளவு தெளிவாக பேசுபவன் எப்படி மான்விழியையும் தன் குழந்தையையும் இவ்வளவு நாளாக பிரிந்து இருக்கிறான் என்று வியப்பாக இருந்தது அவளுக்கு..

“சரி சக்கு.. இவளை உள்ள கூட்டிட்டு போ.. நானும் இந்தரும் ப்ருத்வியும் கொஞ்சம் பேசிட்டு வரோம்..” என்று மார்க்கண்டேயன் சொல்லி முடிக்கவில்லை..

சகுந்தலா குழந்தையுடன் வேகமாய் வந்து “அம்மாடி.. வாம்மா உள்ள..” என்று மலர்விழியை கட்டி அணைத்து தன்னுடன் கூட்டி போக  மார்க்கண்டேயனோ அவரைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தார்..

சட்டென மார்க்கண்டேயனை பார்த்து எச்சில் விழுங்கியவர் “அதுக்கு தானங்க பேச போறீங்க.. எப்படியும் நல்ல முடிவா சொல்லுவீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்..” என்று தயங்கி தயங்கி சொல்லிக் கொண்டே அதற்கு மேல் அவர் புறம் பார்க்காது தலையை குனிந்து கொண்டு வேகமாக வில்விழியின் தோளில் கை வைத்து அழைத்துப் போனார்..

அதற்குள் ப்ருத்வியோ “அப்பா நான் இந்தர் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசும் பேசணும்.. நாங்க ரெண்டு பேரும் ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசிட்டு வரோம்.. நீங்க இங்கயே இருங்க..” என்க

“அதை என் முன்னாடியே பேசுங்க.. அது என்ன தனியா பேசுறது..?” என்று மார்க்கண்டேயன் கேட்க

“இல்லப்பா.. அது.. உங்க முன்னாடிலாம் பேச முடியாது.. நாங்க சின்ன பசங்க.. ஏதாவது பேசிப்போம்.. ஒரு ஃபைவ் மினிட்ஸ் தான்பா… நான் பேசிட்டு உடனே வந்துடறேன்..” என்று அவன் முகம் சுருக்கி கெஞ்ச..

“சரி சரி.. பேசிட்டு வா..” என்றவரும் அப்படியே அங்கிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டவர்

உணவு மேஜை முன்னே அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த வில்விழியையும் சகுந்தலாவையும் நடுநடுவே தன் பிஞ்சு விரல்களால் அவர்கள் முகங்களை தன் புறம் திருப்பி அவர்களோடு அவர்கள் கதைப்பது போலவே தானும் புரியாத மொழியில் கதைத்துக் கொண்டிருந்த சிறியவளையும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்..

இந்தரும் ப்ருத்வியும் ஒரு அறைக்குள் சென்ற மறு நொடியே இந்தர் வேகமாய் கதவைத் தாழிட்டு “டேய் ப்ருத்வி.. எப்படியாவது அப்பாவை சமாளிக்க ஹெல்ப் பண்ணுடா.. சுத்தமா முடியலடா.. இந்த வில்லி வேற என்கிட்ட இருந்து எப்ப பிச்சுக்கிட்டு போகலாம்னு காத்திருக்கா.. ரெண்டு பேரையும் சமாளிக்கறதுக்குள்ள எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு..”

அவன் சொன்னதை கேட்டவன் “அது ஒன்னும் ப்ராப்ளம் இல்லடா.. கொஞ்சம் மலர் அட்ஜஸ்ட் பண்ணி பழையபடி இந்த வீட்ல அப்பாவோட  ரூல்ஸை ஃபாலோ பண்ணி இருந்துக்கிட்டான்னா அப்புறம் அப்பாவ சமாளிச்சுடலாம்.. ஆனா அவர்கிட்ட அவ பழைய படி மானு மாதிரி அவர் சொன்னதெல்லாம் கேட்டு நடப்பான்னு பிராமிஸ் பண்ணனும்..”

அவன் சொன்னதை கேட்ட இந்தருக்கு தலையே சுற்றியது..

“டேய்.. அரை மண்டையா.. விஷயம் புரியாம உளரிட்டே போகாதடா.. அப்பாவோட ரூல்ஸை அவ ஃபாலோ பண்ணறது இருக்கட்டும்.. அந்த வில்லி என்கிட்ட சில பல கண்டிஷன்களை போட்டு இருக்காடா..”

“என்னது..? கண்டிஷனா..? இரு இரு.. அது என்ன அப்போலருந்து வில்லி வில்லின்னு சொல்லிட்டு இருக்கே.. நீ வில்லின்னு கூப்பிடுறதுக்கும் நீ அவளை பார்க்கிற பார்வைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கே டா..” அவனை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி கேட்டான் பிருத்வி..

“டேய் அவ பேரை வில்விழின்னு மாத்திக்கிட்டு இருக்காடா.. பேரிலேயே தெரியுது இல்ல.. அவ எப்படி போனவ எப்படி திரும்பி வந்து இருக்கான்னு.. இனிமே பழைய மலரை தேடுனாலும் கிடைக்க மாட்டா.. வில்லுலருந்து வர்ற அம்பு மாதிரி கண்டிஷன் போட்டே கொல்றாடா மனுஷனை.. அந்த கண்டிஷன் எல்லாம் ஃபாலோ பண்ணா தான் என்னோட சேர்ந்து இருப்பேன்னு சொல்றா.. இல்ல மறுபடியும் குழந்தையை தூக்கிட்டு என்னை விட்டு போயிருவேன்னு மிரட்டுறாடா.. இந்த முறை அவ என்னை விட்டு போனா அப்புறம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்கு தொண்டை அடைக்க

“புரியுதுடா.. சரி.. பார்த்துக்கலாம் விடு.. ஆமா.. அப்படி என்ன கண்டிஷன் போட்டா அவ..?” என்று கேட்க

“அவ போட்டது கண்டிஷனே இல்லடா.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அணுகுண்டு.. அதை அப்பா முன்னாடி சொல்றதுக்கே பயமா இருக்குடா எனக்கு..”

“அப்படி என்னடா கண்டிஷன்? ரொம்ப சஸ்பென்ஸை ஏத்தாம சொல்லித் தொலைடா.. எனக்கு மண்டை வெடிக்குது..”

“அது.. இந்த வீட்ல இனிமே பொம்பளைங்க ராஜ்யம் தானாம்.. அவங்கதான் இந்த வீட்ல நடக்கிற எல்லாத்தையும் டிசைட் பண்ணுவாங்களாம்.. அவங்க செஞ்ச அத்தனை வேலைகளையும் நம்ம செய்யணுமாம்.. குழந்தைகளை பாத்துக்குறதுல இருந்து சமையல் வேலை வரைக்கும்..”

“நம்ம செய்யணுமா? ஆமா.. இந்த நம்பங்குறது..”

அவன் சந்தேகமாய் இழுக்க இந்தரோ அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்து விட “அப்பாவையும் சேர்த்து தான்டா சொல்றா..”

இன்னும் கொஞ்சம் விட்டால் அவன் அழுது விடுவான் போல இருந்தது..

“சோலி முடிஞ்ச்சு”

என்ற பிருத்வியோ நம்ப முடியாமல் விழி விரித்து அவனையே மலங்க மலங்க பார்த்து கொண்டு இருந்தான்..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!