Home Novelsவிடிய மறுக்கும் இரவே06. விடிய மறுக்கும் இரவே 🥀

06. விடிய மறுக்கும் இரவே 🥀

by ஸ்ரீ வினிதா
4.8
(84)

விடியல் – 06

கல்லூரி வளாகத்தின் பக்கவாட்டில் அழகாக சீரமைக்கப்பட்ட புல்வெளிப் பகுதி அது.

அதன் நடுவில் விரிந்திருந்த பீப்பல் மரம் (அரச மரம்) பெரிய குடைபோல அனைவருக்கும் நிழலளித்துக் கொண்டிருந்தது.

அதன் அடிப்பகுதியில் வட்டமாக அமைத்த கல் பெஞ்ச் மாணவர்கள் கூடும் மிகப் பிரபலமான இடம்.

அந்தப் பெஞ்சின் ஒரு பக்கத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் நம் வர்ணா.

அவள் கண்களில் எப்போதும் மின்னிக் கொண்டிருக்கும் குறும்பு இன்று சற்று அதிகமாகவே இருந்தது.

“ஏய் எப்படிடி ப்ராஜெக்ட்ல ஹை மார்க்ஸ் வாங்கின..? இன்னைக்கு உண்மைய சொல்லிடுவேன்னு சொன்னியே.. ப்ளீஸ் சொல்லுடி..” என வர்ணாவின் முன்னே நின்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவளுடைய தோழி பவித்ரா.

“ஏய் வரு நீதான் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்தா உண்மைய சொல்லிடுவேன்னு சொன்னியே.. ரெண்டு பாக்கெட் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்துட்டேன்.. அவ்வளவையும் முழுசா தனியா சாப்பிட்டுட்டு உண்மைய சொல்லாம இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்க..? இப்ப சொல்லப் போறியா இல்ல நாங்க கோவிச்சுகிட்டு கிளம்பட்டுமா..?” என மான்யா கேட்டாள்.

“ஹேய் மானு கூல்.. வை டென்ஷன்..?” என்றாள் வர்ணா.

“அடியேய்..” சீறினாள் மான்யா.

“ஏய்.. அது ஒரு பெரிய கதைடி..” என இழுத்தாள் வர்ணா.

“எவ்வளவு பெரிய கதையா இருந்தாலும் பரவாயில்ல.. எங்களுக்கு தெரிஞ்சே ஆகணும்..” என்றனர் அவளுடைய தோழிகள்.

பின்னே இதுவரை அவள் ஒரு ப்ராஜெக்டைக் கூட அவளாக எழுதி வந்ததில்லை. அப்படியே அவளின் பின்னால் சுற்றும் ஆடவர்களை வைத்து எழுதி முடித்தாலும் அவளுடைய புள்ளிகள் மிகவும் சராசரியாகவே கிடைக்கும்.

அப்படி சராசரி புள்ளி எடுப்பவள் இன்று ஒரே நாளில் கல்லூரியில் அதிக புள்ளிகளைப் பெற்று பிரபலமாகிவிட அவளுடைய தோழிகளுக்கு சூரியன் மேற்கில் உதித்த கதையாகிப் போனது.

“சரி.. சரி.. சொல்றேன்.. மாதவன்கிட்டதான் ப்ராஜெக்ட் பண்ணச் சொல்லிக் கொடுத்தேன்.. ஆனா அந்த எரும மாடு மிட்நைட்ல முடியாதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.. என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ சும்மா ஹீரோ மாதிரி பில்டிங்ல தாவித்தாவி ஒரு ஸ்பைடர் மேன் என் ரூமுக்கு வந்தான்டி.. செம ஹேண்ட்ஸம்.. சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வெச்சிருந்தான்.. அவன்தான் எனக்கு நோட்ஸ் சொல்லிக் கொடுத்தான்.. ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டு ப்ராஜெக்ட் எழுதினேன்..” என்ற வர்ணாவை வெட்டவா குத்தவா என்பதுபோல் அவளுடைய தோழிகள் முறைத்து வைத்தனர்.

“ஏய் என்னங்கடி.. இப்போ எதுக்குடி முறைக்கிறீங்க..? சத்தியமா.. பிராமிஸா.. பிங்கி பிராமிஸா சொல்றேன்.. ஸ்பைடர்மேன்தான்டி எனக்கு சொல்லிக் கொடுத்தான்..” என்றாள் வர்ணா.

“ஆமா.. மிட்நைட்ல ஸ்பைடர் மேன் இவ ரூமுக்கு பாஞ்சு வந்து இவளுக்கு நோட்ஸ் சொல்லிக் கொடுத்தாரு.. வேற என்ன பண்ணாரு..? லிப் கிஸ் தந்துட்டு போகலையா..?” என பவித்ரா முறைப்புடன் கேட்க,

“சீச்சீ.. லவ் மட்டுந்தான்டி சொன்னான்..” என்றாள் வர்ணா.

“அதுக்கு மேடம் என்ன சொன்னீங்க..?”

“அப்படி எல்லாம் லவ் பண்ண முடியாது.. வேணும்னா வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிக்கிறேன்னு சொன்னேன்..” என்றாள் வர்ணா.

“அப்படியே இந்த கல்லை தூக்கி அவ தலையில போடு பவித்ரா..” என சீறிய மான்யாவோ எழுந்து சென்றுவிட பவித்ராவும் அவளின் பின்னே சென்றுவிட்டாள்.

“இப்போ எதுக்கு இவளுங்க இவ்வளவு சிலுத்துகிறாளுங்க..? நாம உண்மையத்தானே சொன்னோம்..? இவளுங்க நம்பாததுக்காக அந்த ஸ்பைடர் மேன காலேஜுக்கா கூப்பிட முடியும்..? பாவம் அவன் நைட் ஃபுல்லா திருடிட்டு இப்போ நல்லா அவனோட வீட்ல குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பான்..” என எண்ணியவள் தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிய கணம் சற்றுத் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தான் அவளுடைய எண்ணத்தின் நாயகனான ஸ்பைடர் மேன்.

சற்றுத் தள்ளி ஒரு கரு நிற கார் நின்றது.

கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்து பக்கா மாடல் போல நடந்து வருபவனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா.

“’அடப்பாவி நைட்ல திருடறது போதாதுன்னு காலைலயே திருட வந்துட்டியா..?’ என எண்ணியவள் அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ தன்னுடைய அலைபேசியை காதில் வைத்து எதையோ கோபமாகப் பேசியவாறு நடந்தவன் தனக்கு நேரே சற்று தொலைவில் நின்றிருந்த வர்ணாவைக் கண்டதும் சட்டென தன் தொலைபேசியை உள்ளே வைத்தான்.

‘ஓ மை காட் இந்த காலேஜ்லயா இவ படிக்கிறா..?’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் அப்படியே தெரியாதது போல வேறு புறம் திரும்பி நடக்கத் தொடங்கி விட,

“ஓய் ஸ்பைடர் மேன்..” என கத்தி அழைத்தாள் வர்ணா.

‘கிழிஞ்சுது போ..’ என தனக்குள் எண்ணிக் கொண்டவன் அப்போதுதான் அவளைப் பார்ப்பது போல திரும்பிப் பார்த்து சிரித்து வைத்தான்.

“ஹேய் குல்பி… நீ இங்க என்ன பண்ற..?”

“ஹாங்… படம் பார்க்க வந்தேன்…” என்றாள் இடக்காக.

“என்ன.. கிண்டலா..?”

“பின்னே.. காலேஜுக்கு எதுக்கு வருவாங்க..? நான் இந்த காலேஜ்லதான் படிக்கிறேன்… அது சரி நீ இவ்வளவு சூப்பரா ட்ரெஸ் பண்ணிட்டு இங்க எதுக்கு வந்திருக்க..?” என அவனைப் பார்த்துக் கேட்டாள் வர்ணா.

“என் தம்பிய காலேஜ்ல சேர்க்கலாம்னு வந்தேன்…” என்றான் அவன்.

“வாவ்… உன்னோட தம்பி எங்க..?”

“இப்போதான் பேசவே வந்திருக்கேன்… எல்லாம் ஓகே ஆயிடுச்சுன்னா அதுக்கப்புறம் அவன் வருவான்…” என்றான் அவன்.

“அப்படியா..? ஓகே ஓகே… சரி நீ போய் பேசிட்டு வா… நான் இங்க வெயிட் பண்ணுறேன்…” என்றவள் மீண்டும் அந்த கல் பெஞ்சில் அமர்ந்துகொள்ள, அவளை ஆழ்ந்து பார்த்தவன் “இப்போதான் பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்க…” என்றான் சிரித்துக்கொண்டு.

“ஏன்… நைட்ல பாக்கும்போது என்னைப் பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலையா..?” என மூக்கு விடைக்கக் கேட்டாள் அவள்.

“எப்போ பார்த்தாலும் அந்த பெரிய தொள தொள டிஷர்ட் போட்டுதான் உன்னைப் பார்த்திருக்கேன்… இப்பதான் துப்பட்டா எல்லாம் போட்டு ஒரு பொண்ணா பாக்குறேன்… ஹேர் ஸ்டைல் பண்ணி, பொட்டு வச்சு, கண்ணுக்கு மை போட்டு செமையா இருக்க…” என அவன் ஒவ்வொன்றாக வர்ணிக்க,

அவளுக்கு கன்னங்கள் சிவந்தன.

“என்ன நீ இவ்வளவு பப்ளிக்கா என்னை சைட் அடிக்கிற..?” என அதிர்ந்தவாறு கேட்டாள் அவள்.

“அதுக்காக ரூம் போட்டா சைட் அடிக்க முடியும்..? இப்போ அழகா இருக்க.. பிடிச்சிருக்கு… சொன்னேன்…” என்றவன் அவளை நெருங்கி வந்து, அவளுடைய கழுத்தோடு ஒட்டி சுருண்டு கிடந்த துப்பட்டாவை அவளுடைய மார்பை மறைத்தவாறு கீழே இழுத்துவிட்டவன் “துப்பட்டாவ இப்படித்தான் போடணும்…” என்றான்.

அவனுடைய செயலில் அதிர்ந்துவிட்டாள் அவள்.

அவன் திடீரென அருகே வந்து துப்பட்டாவை இழுத்து சரி செய்ததும் அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது.

“என்னாச்சு குல்பி..? பயந்துட்டியா..?”

“ம்ம்…” என தலையசைத்தாள் அவள்.

“அடிப்பாவி… ரெண்டு நைட் உன்னோட ரூம்ல யாருமே இல்லாதப்போ உன்கூட தனியா இருந்து பேசும்போதெல்லாம் நீ பயப்படல… இவ்வளவு பப்ளிக் பிளேஸ்ல பேசிட்டு இருக்கும்போது பயப்படுறியே..? என்ன மேக் டி நீ..?”

“ஹி ஹி… ஆமால்ல… என்னோட ரூம்ல நீ என் பக்கத்திலேயே வரமாட்ட… எப்பவுமே தள்ளி நின்னுதான் பேசுவ… இப்போ திடீர்னு இவ்வளவு பக்கத்துல வந்து என்னோட துப்பட்டாவைப் பிடிச்சு இழுத்ததும் பயந்துட்டேன்.. சாரி ஸ்பைடர் மேன்..‌

நீ மட்டும் திருடனா இல்லாம இருந்திருந்தா என்னோட வெயிட்டிங் லிஸ்ட்ல உன்னைத்தான் நான் ஃபர்ஸ்ட்டா வச்சிருப்பேன்…” என்றாள் அவள்.

“சீக்கிரமாவே உன்னோட வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து லவ்வரா நான் ப்ரமோஷன் வாங்குறேன்…” என்றான் அவன் இமை சிமிட்டிச் சிரித்தபடி.

“ஆசை தோசை…” எனச் சிரித்தாள் அவள்.

“ஓகே… நீ வெயிட் பண்ணு… நான் என் வேலைய முடிச்சுட்டு வரேன்…” என்றவன்,

“இந்த பெஞ்சில உட்காரு… அதுல வெயிலா இருக்கு…” என அக்கறையாக அவளிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, அவளுக்கோ அவனுடன் பேசும்போதெல்லாம் ஒரு இதமான உணர்வு.

அவன் சென்றதும் அவனுடைய காரைப் பார்த்தவள் “சே… இந்த காரைப் பத்தி அவன்கிட்ட கேட்க மறந்துட்டோமே…” என எண்ணியவள் சற்று நேரம் வேடிக்கை பார்த்தவாறு அங்கேயே அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அதே இடத்திற்கு பவித்ராவும் மான்யாவும் வந்து சேர்ந்தனர்.

“என்னடி.. என்னை விட்டுட்டு உங்களால இருக்க முடியலையா..?” என்றாள் வர்ணா.

“நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குமாம்… போடி இவளே… நான் என்னோட நோட்புக்கை விட்டுட்டு போயிட்டேன்… அதை எடுக்க வந்தேன்…” என்றாள் பவித்ரா.

“ஏய்… இப்போ எதுக்குடி கடுப்பாகுறீங்க..? சத்தியமா ஸ்பைடர் மேன்தான் எனக்கு நோட்ஸ் சொல்லிக் கொடுத்தாரு… இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் இங்க வருவாரு… வெயிட் பண்ணுங்க… உங்க எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்கிறேன்…” என்றாள் அவள்.

“ஏய்… என்னடி சொல்ற..? அப்போ நிஜமாவே ஒருத்தன் மிட்நைட்ல வந்தானா..? அவன்தான் உனக்கு நோட்ஸ் எல்லாம் சொல்லிக் கொடுத்தானா..? ப்ரொபோஸ் வேற பண்ணானா..? அவன் இங்கேயும் வந்திருக்கானா..?” என மான்யாவும் பவித்ராவும் மாறி மாறி கேள்விகளை அடுக்க,

சிரித்தபடி “ஆம்…” என தலை அசைத்தாள் அவள்.

“சூப்பர்டி… அந்த இன்டெலிஜென்ட் யாருன்னு இன்னைக்கு நாங்க பார்த்தே ஆகணும்… ப்ளீஸ் எங்களுக்கு இன்ட்ரோ கொடு… நெக்ஸ்ட் டைம் ப்ராஜெக்ட் ஏதாவது கொடுத்தாங்கன்னா நாங்களும் அவர்கிட்டயே ஐடியா கேட்டுப்போம்…” என்றாள் மான்யா.

“சரிடி… வெயிட் பண்ணுங்க… அவர் வரட்டும்…”

“ஓகே.. ஓகே.. நீ மட்டும் இன்னைக்கு அவரை இன்ட்ரோ கொடுத்தீன்னா சிவகார்த்திகேயனோட ‘மதராஸி’ படத்துக்கு உன்னை தியேட்டருக்கு கூட்டிட்டு போறோம்…” என்றாள் மான்யா.

“வாவ்… அடிப்பாவிகளா… என்கிட்ட சொல்லாமலே பிளான் பண்ணிட்டீங்களா..?”

“நீ எங்ககிட்ட பொய் சொல்றேன்னு நினைச்சுட்டோம்… சாரிடி…”

“சரி சரி… விடு… எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணுங்கடி… கண்டிப்பா நான் வரேன்…” என்றாள் வர்ணா.

பத்து நிமிடம் வரை காத்திருந்த பவித்ராவோ “சரி… உன் ஸ்பைடர் மேன் வந்தா வெயிட் பண்ணச் சொல்லு… நான் வாஷ்ரூமுக்கு போயிட்டு வரேன்…” என எழுந்தவள், மான்யாவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட,

அவர்கள் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் அவளைத் தேடி அங்கு வந்தான் அவன்.

“நல்லவேளை வந்துட்ட.. எங்க நீ வராம போயிருவியோன்னு பயந்துட்டேன்…” என்றாள் வர்ணா.

“எதுக்கு..? என் மேல லவ் வந்துடுச்சா..? என்னைப் பாக்குறதுக்கு அவ்வளவு ஆவலா வெயிட் பண்ணியா..?” என ஆர்வமாகக் கேட்டான் அவன்.

“சேச்சே… ரொம்ப ஆசைப்படாதீங்க சார்… உன்னைப் பத்தி என் பிரெண்ட்ஸ்கிட்ட சொன்னேன்… அவங்க உன்னை மீட் பண்ணணும்னே ஆசைப்பட்டாங்க… உன்னை மட்டும் இன்ட்ரோ கொடுத்தா என்னை ‘மதராஸி’ படத்துக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க…” என்றதும் அவனுக்கு சட்டென முகம் மாறிவிட்டது.

“என்னாச்சு ஸ்பைடர் மேன்..?” என அவனுடைய முக மாற்றத்தை உணர்ந்து கேட்டாள்.

“இல்ல குல்பி… நான் சீக்கிரமா கிளம்பணும்…”

“ப்ளீஸ் ப்ளீஸ்… இப்போ மட்டும் நான் உன்னை இன்ட்ரோ கொடுக்கலைன்னா, நான் பொய் சொன்னேன்னு நினைச்சுட்டு வாழ்நாள் முழுக்க கேலி பண்ணுவாங்க… நீ இங்கயே வெயிட் பண்ணு… நான் ஓடிப்போய் அவங்களைக் கூட்டிட்டு வந்துடுறேன்…” என்றவள், அவனை அங்கேயே நிறுத்திவிட்டு வாஷ்ரூமை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அவனுக்கோ பெருமூச்சு.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“ஏய்… எங்கடி உன்னோட ஸ்பைடர் மேன்..?” என கோபமாகக் கேட்டாள் பவித்ரா.

“கிளம்பிட்டான் போலடி…” எனக் கூறியவளை முறைத்த மான்யாவோ “எங்ககிட்ட பேசாதடி…” எனச் சீறிவிட்டு பவித்ராவை அழைத்துக்கொண்டு சென்றுவிட, வர்ணாவுக்கு விழிகள் கலங்கிவிட்டன.

சற்றுத் தொலைவில் நின்ற அந்த காரும் இப்போது இல்லை என்பதைக் கண்டவளின் முகம் வாடியது.

“ஐ ஹேட் யூ ஸ்பைடர் மேன்..” என்றவளின் உதடுகள் அழுகையில் துடித்தன.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 84

No votes so far! Be the first to rate this post.

You may also like

2 comments

Manish September 21, 2025 - 2:29 am

Super super

Reply
Nirmala Devi September 21, 2025 - 10:56 am

Super super super super interesting

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!