694
விடியல் – 07
உடற்பயிற்சிக்கு பதிலாக தன்னை படுக்கைக்கு அழைக்கும் கணவனை முறைத்துப் பார்த்தாள் நந்தினி.
என்ன மனிதன் இவன் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
நான் என்ன அவன் உடற்பயிற்சி செய்யும் இயந்திரமா..?
எனக்கு உணர்வுகள் என்ற ஒன்று ஏராளமாக இருக்கின்றனவே… அதைப் பற்றி அவனுக்கு சிறு துளி அளவு கவலை கூட இல்லையா..? என தனக்குள் மருகிக் கொண்டிருந்தாள் அவள்.
யுகேஷ் வர்மாவின் பார்வையோ அவள் மீது அழுத்தமாகப் பதிந்தது.
அவளை நெருங்கி வந்தவன் “இப்போ எதுக்கு அமைதியா இருக்க..?” எனக் கேட்டான்.
இதற்கு என்ன பதில் சொல்வது..?
அவளுடைய தலை தானாகக் குனிந்தது.
“நந்தினி… வாட்..?” என்றான் அவன் சிறு எரிச்சலுடன்.
அவளுக்கோ தேகம் பதறியது.
அவன் ‘வா’ என்று அழைத்ததும் அப்படியே சென்று படுக்கையில் படுத்துக்கிடக்க நான் என்ன தாசியா என எண்ணியவளுக்கு சரேலென விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“டாமிட்… இப்போ எதுக்கு அழற..?” எனக் கேட்டான் அவன்.
இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் பிரச்சனையாகி விடும் என்பதைப் புரிந்தவள், மெல்லிய குரலில் “நாம கொஞ்சம் பேசிப் பழகி புரிஞ்சுக்கிட்டு…” என தயக்கத்துடன் இழுக்க,
“எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல… இன்னும் 30 மினிட்ஸ்ல நான் ரெடியாகி வேலைக்குப் போகணும்…” என்றான் அவன்.
“நான் என்ன மிஷினா..?” என பொறுக்க முடியாமல் வெளிப்படையாகக் கேட்டு விட்டாள் அவள்.
“நீ மிஷினா இருந்தா உன்கிட்ட இப்படி பேசிட்டு இருக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லையே… மனுஷியா இருக்குறதாலதான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்…” என்றானே பார்க்கலாம்.
அவளுக்கோ உள்ளே ஏதோ நொறுங்கும் உணர்வு.
அவனுடைய வார்த்தைகளுக்கு எப்படிப் பதில் கொடுப்பது என்றே புரியவில்லை.
கோபமும் வந்தது.
அழுகையும் வந்தது.
அவனோ பொறுமை இழந்து அவளை நெருங்கி அவளுடைய பின் தலையைத் தன் கரத்தால் பற்றி தன்னை நோக்கி அவளை இழுக்க,
அதிர்ந்த பெண்ணவளுக்கோ உதடுகள் அழுகையில் துடித்தன.
முத்தமிட முயன்றவன் அழுகையில் துடித்த அவளுடைய உதடுகளைப் பார்த்ததும் சட்டென விலகினான்.
“ஓ காட்… உனக்கு என்னதான்டி பிரச்சனை..?”
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… நீங்க என்கிட்ட இப்படி நடந்துக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு…”
“வாட்..? ஆர் யு மேட் நந்தினி..? நான் உன்கிட்ட இப்படி நடந்துக்காம வேற யார் கிட்ட இப்படி நடந்துக்க முடியும்..? யோசிச்சுதான் பேசுறியா..?” கோபத்துடன் கேட்டான் அவன்.
“அதுக்கு என்னோட சம்மதமும் வேணும்ல..? ஏதோ கால் கேர்ளை கூப்பிடுற மாதிரிதான் கூப்பிடுவீங்களா..?” என அவள் அழுகையுடன் கேட்க,
அவளை விட்டு விலகி நின்றான் அவன்.
“எனக்கு ரொமான்ஸ் பண்ணி உன்னை மூடு ஏத்தி, பெட்ல மத்த ஆம்பளைங்க மாதிரி கொண்டாட எல்லாம் முடியாது… அப்படி பண்ணவும் தெரியாது.. நேத்து நைட் நான் எப்படி இருந்தேன்னு பார்த்தல்ல..? எப்பவும் அப்படித்தான் இருப்பேன்… உன்னை நேற்று கஷ்டப்படுத்தினதா எனக்கு எந்த ஞாபகமும் இல்ல… நீ கஷ்டப்பட்டதாவும் எனக்குத் தெரியல… இதுதான் நான்…
உனக்கு எப்ப பிடிக்குதோ அப்ப சொல்லு… அப்பவே உன்கூட பிஷிகல் ரிலேஷன்ஷிப்ல இருந்துக்கிறேன்… இதுக்கு மேல நானா உன்கிட்ட வந்து இது வேணும்னு கேட்க மாட்டேன்…” என எரிச்சலுடன் கூறியவன் குளியல் அறைக்குள் நுழைந்துவிட, வித்துப் போய் விட்டாள் அவள்.
அவள் மனம் பதறிக்கொண்டே இருந்தது.
அவளுடைய மனதில் தோன்றியதைச் சொன்னால் இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்றுதான் நினைத்தாள்.
ஆனால் இனி தன்னை நெருங்கவே மாட்டேன் எனக் கூறிவிட்டு அவன் சென்றுவிட, அவளுக்கோ மனதிற்குள் அச்சம் முகிழ்த்து விட்டது.
எல்லா ஆண்களும் தன்னுடைய மனைவிகளிடம் இப்படித்தான் நடந்துகொள்வார்களா..?
அவர்களுடைய ஆசையை மனைவிதான் தீர்த்துவைக்க வேண்டுமோ..?
ஒருவேளை நான் மறுத்தால் வேறு ஏதாவது பெண்ணிடம் சென்றுவிடுவாரா..?
அவள் நெஞ்சம் பதறி விட்டது.
சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது…
ஐயோ… என்ன கொடுமை இது..?
அவன் நெருங்கி வந்தாலும் அவனுடன் கலந்து விட முடியவில்லை..
அவன் வேண்டாமென விலகிச் சென்றாலும் பயமாக வேறு இருந்தது.
இனி அவன் அழைத்தால் எந்த மறுப்பும் இன்றி அவனுக்கு உடன்பட வேண்டும் என்று எண்ணியவளுக்கு மீண்டும் விழிகளில் கண்ணீர் திரண்டது.
அவன்தான் தானாக இனி வந்து என் முன்னே நிற்க மாட்டேன் என்று கூறிவிட்டானே.
அவள்தான் கேட்க வேண்டுமோ..?
சீச்சீ…
மனதைக் கவராத கணவனிடம் எப்படி அவளால் உறவை நாட முடியும்..?
அவளாக ஒருபோதும் அவனிடம் சென்று உறவுக்காக நிற்கவே மாட்டாள்.
இனி அவன் அழைத்தால் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனுடன் கலந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தவளுக்கு மனம் நன்றாகக் குழம்பிப் போய்விட்டது.
தான் செய்தது சரியா, தவறா.. என அவளுடைய பெண் மனம் தவிக்கத் தொடங்கியது.
சற்று நேரத்தில் வெளியே வந்தவன் அவளைப் பார்க்கவே இல்லை.
தரையில் படுத்து புஷ்-அப் செய்யத் தொடங்கியவனின் தேகம் இறுகி விரிவதைப் பார்த்து வியந்து போனாள் அவள்.
நேற்றைய இரவில் அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை.
பார்க்கும் நிலையிலும் அவள் இருக்கவில்லை.
இன்று அவனுடைய படிக்கட்டு தேகத்தின் மீது அவளுடைய பார்வை பதிந்தது.
20 நிமிடங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தவன் எழுந்தபோது, அவனுடைய தேகம் முழுவதும் வியர்வை வழிந்தது.
துவாலையை எடுத்துத் துடைத்துக் கொண்டவன், தன்னுடைய போன் அழைப்பதை உணர்ந்து, அதை எடுத்துப் பேசத் தொடங்கினான்.
“சொல்லு…”
“…”
“இன்னும் 15 நிமிஷத்துல ஸ்டேஷன் வந்துருவேன்…”
“…”
“அந்த ட்ரக்ஸ் பிரச்சனை என்ன ஆச்சு..?”
“…”
“எவன் வந்தாலும் என்னோட பர்மிஷன் இல்லாம யாரையும் லாக்கப்ல இருந்து வெளிய விடாதே…” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு, தன் முன்னே நின்ற நந்தினியைப் பார்த்தான்.
“வாட் நவ்..?” என்றான் அவன்.
“எதுக்கு கோபப்படுறீங்க..?” விட்டால் அழுதுவிடுவது போலக் கேட்டாள் அவள்.
“ப்ச்… எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்… இப்போ உனக்கு என்ன வேணும்..?”
“சாப்பிட வாங்க…”
“அதுக்கெல்லாம் டைம் இல்ல… இன்னும் நான் ரெடியாகல… நோ தேங்க்ஸ்…” என்றவன் குளிப்பதற்குச் சென்றுவிட, பெருமூச்சுடன் கீழே சென்றாள் அவள்.
அங்கே உணவுத் தட்டோடு சோபாவில் அமர்ந்திருந்தாள் அமுதா.
“ஹாய் அமுதா…” என்ற நந்தினிக்கு, அமுதாவுடன் பழகினால் சற்று மனதுக்கு அமைதியாக இருக்கும் என்று தோன்றியது.
இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் இருக்கும் என எண்ணியவள், அவள் அருகே சென்று அமர, அமுதாவோ ஹாய் என்று கூடச் சொல்லவில்லை.
ஒரே ஒரு புன்னகை அதுவும் கண்களை எட்டாத புன்னகையை உதிர்த்துவிட்டு மறுபுறம் திரும்பிக் கொள்ள, நந்தினிக்கு முகத்தில் அடித்தாற் போல இருந்தது.
‘இந்த வீட்ல அண்ணனுக்கு தப்பாம தங்கச்சியும் பொறந்திருக்கா.. ரெண்டு பேரும் சிடுமூஞ்சிங்க..’ என மனதிற்குள் எண்ணியவள்,
இவளுக்கு அருகே அமர்ந்திருப்பதை விட இந்த போலீஸ்காரனின் அன்னை எவ்வளவோ மேல் என எண்ணியவாறு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
“ஹாய் மருமகளே… குட் மார்னிங்…” என்றார் சுஜாதா சிரித்த முகத்துடன்.
‘தேங்க் காட்… இவங்க நம்ம டைப்தான்..’ என எண்ணிய நந்தினியோ “குட் மார்னிங்…” என்றாள் புன்னகையுடன்.
“என்ன சொல்றான் உன் புருஷன்..?”
“அவரா..?” என தயங்கினாள் நந்தினி.
என்ன இருந்தாலும் அவர் அவனுடைய அன்னை ஆயிற்றே.
அவனைப் பற்றி அவரிடமே குற்றப் பத்திரிகை வாசிப்பது நன்றாகவா இருக்கும் என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் அவள்.
“அட பரவால்ல… சொல்லுமா… உன்கிட்ட நல்லா பேசுறானா..? இல்ல உன்கிட்டயும் சிடுசிடுன்னுதான் நடந்துக்கிறானா..?”
“உங்களை நம்பி சொல்லலாமா அத்தை..? நான் சொன்னதுக்கு அப்புறம் நீங்க மாமியார் கொடுமை எல்லாம் பண்ண மாட்டீங்களே..?” என தயக்கத்துடன் கேட்க, அவருக்கோ பொங்கியது சிரிப்பு.
“ஹா ஹா… ஏம்மா… என்னைப் பாத்தா உனக்கு மாமியார் கொடுமை பண்ணுற மாதிரியா தெரியுது..? இந்த வீட்ல உன் புருஷன்தான் கொடுமை பண்ணுவான்… நாங்க எல்லாரும் அப்பாவிங்க…” என்ற அவளுடைய அத்தையை அவளுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.
“ஹா ஹா… சோ ஸ்வீட் அத்தை நீங்க… ரொம்ப நல்லா பேசுறீங்க… ஐ லைக் யு…” என்றாள் அவள்.
“வந்த அடுத்த நாளே மாமியாருக்கு ஐஸ் வைக்கிறியா..?” எனக் கேட்டார் சுஜாதா.
“அப்படியெல்லாம் இல்ல அத்தை… நிஜமாவே உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு…”
“சரிம்மா… யுகேஷ் எங்க..?”
“அவர் ரெடியாயிட்டு இருக்காரு அத்தை…”
“சாப்பிட கூப்பிட்டியா..?”
“ம்ம்… டைம் இல்லன்னு சொல்லிட்டாரு அத்த…”
“இவன் இப்படித்தான் மா… சாப்பாட்டுல கவனமே இல்ல… நான் ஏதாவது சொன்னா எனக்குத்தான் திட்டு விழும்… இப்போ போனா சம் டைம் நைட்தான் வீட்டுக்கு வருவான்… வெளிய அவனுக்கு சாப்பாடு பெருசா செட் ஆகாது… முடிஞ்சா இந்த ரெண்டு தோசையை மட்டும் மேல கொண்டு போய் அவனுக்கு கொடு…” என்றார் அவர்.
“சரி அத்தை…” என வாங்கியவளுக்கு,
‘இதற்கு அவன் என்னவெல்லாம் சொல்லப்போகிறானோ..?’ என்ற பயம்தான் உள்ளூர எழுந்தது.
“சரி அத்தை… நான் போய் இதைக் கொடுத்துட்டு வரேன்…”
“சரிம்மா… நீ போய் அவனுக்கு சாப்பாட்டைக் கொடு… அவன் வேலைக்குப் போனதுக்கு அப்புறமா நாம பேசலாம்…” என்றார் சுஜாதா.
சரியென தலை அசைத்தவள், இரண்டு தோசைகளைத் தட்டில் எடுத்து வைத்தவாறு அறைக்குள் நுழைந்தாள்.
அவனோ காக்கி சட்டையின் பட்டன்களை அணிந்து கொண்டிருந்தான்.
அவளுக்கு அவனிடம் பேசவே தயக்கமாக இருந்தது.
“ஏங்க..?”
“எஸ்..?”
“இந்த ரெண்டு தோசை மட்டுமாவது சாப்பிடுங்களேன்…”
“நான் உன்கிட்ட ஆல்ரெடி டைம் இல்லன்னு சொன்னேன்…” என்றான் அவன் அழுத்தமாக.
“இல்ல ஆனா…”
“ப்ச்… ஷூ போட்டுட்டு இப்பவே கிளம்பிடுவேன்… டைம் இல்ல…” என்றவனின் முன்பு பெருமூச்சுடன் வந்து நின்றவள்,
தோசையைப் பிரித்து சட்னியில் தொட்டு அவனுடைய வாய்க்கு நேராக நீட்ட, அவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.
“நீங்க ரெடியாயிட்டே சாப்பிடுங்க… நான் ஊட்டி விடுறேன்…” என்றாள்.
“ஃபைன்…” என்றவன், அவள் கொடுத்த தோசையை வாங்கி உண்ணத் தொடங்கி விட, அவளுக்கோ மனநிலை சற்று இதமாக மாறியது.
அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்தவாறு தோசையை அவள் ஊட்ட, சாப்பிட்டுக் கொண்டே தயாராகி முடித்தவன் “தேங்க்ஸ்…” என்றான்.
அந்த ஒற்றை வார்த்தையில் மகிழ்ந்து போனாள் அவள்.
அவளுடைய முகம் பூவாய் மலர்ந்தது.
அவனோ துப்பாக்கியை எடுத்து சரி பார்க்க, எச்சில் விழுங்கியவாறு அவனைப் பார்த்தவள்
“நிறைய பேரை ஷூட் பண்ணி இருக்கீங்களா..?” எனக் கேட்டாள்.
“ம்ம்…”
“எத்தனை பேரு..?”
“18 பேரைக் கொன்னுருக்கேன்… எக்கச்சக்கமான பேரை சூட் பண்ணி இருக்கேன்…” என்றவன்,
துப்பாக்கியை சொருகிக்கொண்டு நிமிர்ந்து நிற்க, அவளுக்கு பேச்சே வரவில்லை.
அதிர்ந்து நின்றவளை அழுத்தமான பார்வையுடன் ஏறிட்டவன், எதுவும் சொல்லாமலேயே கிளம்பி சென்று விட்டான்.
“கொலைகார போலீஸ்…” என முணுமுணுத்துக் கொண்டாள் அவள்.
1 comment
Super super super super super super