விடாமல் துரத்துராளே 19

4.5
(28)

பாகம் 19

நேற்று பள்ளி சென்ற மகளை  காணாமல் அழுது அழுது மயக்கத்திற்கே சென்று விட்டார் யமுனா. இனியாவும் தங்கையை காணாது அழுதபடியே தாய் அருகில் இருந்தாள்… பாலகிருஷ்ணன் மகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

பணத்திற்காக தியா கடத்தப்படவில்லை என்பது காவல் துறைக்கு நன்றாக தெரிந்தது. பணத்திற்காக கடத்தி இருந்தால் பாலகிருஷ்ணனனை தொடர்பு கொண்டு இருப்பார்கள்.  வேறு தப்பான தொழிலில் செய்ய ஏதாவது கும்பல் கடத்தி இருக்குமா, இல்லை தொழில் முறை போட்டியில் யாராவதே கடத்தி இருப்பார்களா என்று காவல் துறை விசாரிக்க அதுவும் இல்லை…காவல் துறை கண்டு பிடிக்க முடியாதபடி எந்த ஒரு தடயமும் இல்லாமல் கனகச்சிதமாக தியாவை கடத்தி இருந்தனர்… 

“டேய் என்னடா இவ்வளோ கூல்லா உக்கார்ந்து சாப்பிட்டு இருக்க. உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா” என்றான் திவேஷ் ஜீவாவை பார்த்து 

“எதுக்குடா பயப்படனும்”,

“என்னது எதுக்கு பயப்படனுமா? இப்ப நாமா பண்ணிறக்கறதும். இனிமே பண்ண போறதும் எவ்வளவு பெரிய விஷயம். மாட்டுனா காலம் முழுக்க ஜெயில்ல உக்கார்ந்து களி திங்கனும், எனக்கு பக்கு பக்குன்னு இருக்குடா, 

“அது எல்லாம் மாட்ட மாட்டோம்டா. எனக்கு இது என்ன புதுசா நான் ஏற்கனவே இந்த மாதிரி இரண்டு மூணு தடவை பண்ணி இருக்கேன்.. மாட்டாவா செஞ்சேன்.. யாருக்கும் சந்தேகம் வராமா எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணி இருக்கேன்” என்றான் ஜீவா சாப்பிடப்படியே, 

“நீ இவ்வளோ நாளா மாட்டாததற்கு காரணம் கார்த்திக் மகேஸ்வரன் சார் உன் மேல்ல வச்சு இருக்க நம்பிக்கை. அப்புறம் இன்னோரு விஷயம் நீ இவ்வளோ நாள் கை வைச்சு இடம் எல்லாம் படிக்காதவங்களும் ஆதரவுக்கு யாரும் இல்லாத ஜனங்க மேல்ல. ஆனா இந்த பொண்ணு அப்புடி இல்ல பெரிய இடம். இந்நேரத்திற்கு இந்த பொண்ணை காணோம்னு போலிஸ்ல கம்பளைண்ட் பண்ணி இருப்பாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜீவா. எதுவும் வேண்டாம்டா இந்த பொண்ணை விட்டுருலாம்” என்றான் திவேஷ். அங்கு மயக்கத்தில் இருந்த தியா வை கை நீட்டி காண்பித்தபடி,

“அடச்சீ தொடை நடுங்கியான உன்னை போய் கூட்டு சேர்த்தேன் பாரு.‌என்ன சொல்லனும்”என்று தன் தலையில் அடித்து கொண்ட ஜீவா. 

மேலும் கோவமாக “இப்ப எதுக்குடா நொய் நொய்னு புலம்பிகிட்டே இருக்கே. இந்த பொண்ணை விட்டுரனுமா, ஓ…. விட்ரலாமே எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. நீ வெண்ணிலா கல்யாணத்தில்ல எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடி அட்சதை தூவ ரெடியா இருக்கானா சொல்லு, வாங்குன அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டு இந்த பொண்ணை கொண்டு போய் அவ விட்டுல விட்டுட்டு வரலாம்” என்றான் ஜீவா கோவமாக.

அதற்கு பின் திவேஷ் வாயை திறக்கவில்லை. 

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழி நான் அனைவரும் கேள்வி பட்டு இருப்போம். அதன் அர்த்தம் நாம் கடவுள் முன்பு எப்படி உண்மையாக பயபக்தியுடன் நிற்போமோ அதே போல் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ அதை நாம் பொய் புரட்டு ஏதும் இல்லாமல் நேர்மையுடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும்.  சுப்ரிம் கோர்ட் ஜட்ஜிலிருந்து சாதாரணமான பெட்டி கடை நடத்துபவர் வரை இது தான் பொருந்தும்.. 

  மேலே சொன்ன பழமொழிக்கே ஏற்ப  வருமானம் குறைவாக இருந்தாலும் தன் வேலையை நேசித்து அதில் நேர்மையாக நடப்பவர்கள். இரண்டாவது வகையினரோ ஏதாவது ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்து அதன் மூலம் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

தேவா சூர்யா எல்லாம் முதல் வகையை சேர்ந்தவர்கள்… அவன் மருத்துவத்துறையை சேவை மனப்பான்மையுடேனே தேர்ந்து எடுத்தான். மகேஸ்வரனும் கூட தன்னுடைய மருத்துவமனையின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை மட்டுமே செய்து வந்துள்ளார்.. அதில் ஒன்று தான் ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருத்துவத்தை இலவசமாக செய்தது… ஆனால் ஜீவாவோ இரண்டாவது வகையினரை சேர்ந்த ஒரு ஆள்… தான் படித்த மருத்துவத்தை தவறான முறையில் பயன்படுத்தி வந்தான். 

ஆரோக்கியம் மருத்துவமனைக்கு வரும் படிப்பறிவு இல்லாத ஆதரவு இல்லாத ஜனங்களின் உடல் உறுப்பை திருடி அது தேவைப்படுபவர்களுக்கு விற்பது. யாரிடம் இருந்து உடல் உறுப்புகளை எடுக்கின்றனரோ அந்த அப்பாவிகளின் இறப்பையும் வெளியே தெரியாத மாதிரி பார்த்து கொண்டனர்…

   இந்த படுபாதக செயலை தான் ஜீவா செய்து வந்தான். அதற்கு அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் சில டாக்டர்ஸ் நர்ஸ் வார்டு பாய்களும் அவனுக்கு உதவி புரிந்து வந்ததனர். அதனாலே  இந்த விஷயம் மருத்துவமனை நிர்வாகத்திற்ககோ மகேஸ்வரனுக்கோ தெரியவில்லை..தெரியாத மாதிரியும் நடந்து கொண்டனர்… 

திவேஷ்ற்கு ஜீவா செய்யும் இந்த தவறு தெரியும். ஆனால் இதுவரை அவன் இதை செய்தது இல்லை. அதே போல் தவறு செய்யும் ஜீவாவை நல்ல நண்பனாய் கண்டித்தும் இல்லை… அவனை கூட்டு சேர்க்க ஜீவா எத்தனை தடவை முயன்றும் திவேஷ் ஒத்து கொள்ளவில்லை..  அது எல்லிஸ் பாவம் நான் செய்ய மாட்டேன் என ஒதுங்கி இருந்தவனை வெண்ணிலாவை வைத்து இந்த தடவை ஒத்து கொள்ள வைத்தது விட்டான் ஜீவா..

இதுவரை ஜீவா மாட்டி கொள்ளாதற்க்கு இன்னோரு காரணம் திவேஷ் கூறியது போன்று அவன் இதுவரை தேர்ந்தெடுத்தது எல்லாம் ஆதரவுக்கு யாரும் இல்லாத அப்பாவிகள் தான்…  

இம்முறை வெளிநாட்டில் வாழும் மிகப்பெரிய பணக்காரன் ஒருவன் தன் இஷ்டத்திற்கு இளமை காலத்தில் புகை, மது, மாது, போதை மருந்து என்று ஆட்டம் போட, இப்போது நடுத்தர வயதில் அவனின் உடல் உறுப்புகள் பழுதடைந்து விட்டது. உடனடியாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்… 

அதற்கு தான் இந்தியாவில் இருக்கும் ஜீவாவை போன்ற மருத்துவர்கள் சிலரை  நாடி முன்பணமாக பெரிய பணக்கட்டு ஒன்றை கொடுத்து அதே இரத்த வகையை சேர்ந்த உடல் உறுப்பு வேண்டும் கிடைக்குமா என்று கேட்க ஜீவாவும் ஒத்து கொண்டான். 

ஆனால் அந்த பணக்காரனின் இரத்த வகையோ AB Negative..

அந்த  இரத்த வகை இந்தியாவில்  அரிதான வகை.. 

 இந்திய மக்கள் தொகையில் சுமார் 0.5%  மட்டுமே உள்ளது.. 

இதன் அரிதான தன்மை காரணமாக, அவசியமான சமயங்களில் இந்த ரத்தத்தை பெறுவது கூட சிக்கலாக உள்ள நிலையில், அதே இரத்த வகையை சேர்ந்த உடல் ஆரோக்கியமான நபர்கள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தேடியும் ஜீவாவிற்கு கிடைக்கவில்லை.. 

 

அப்போதும் தான் தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்… அவளுக்கும் AB Negative இரத்த வகை தான். ஆனால் தியாவை மற்றவர்கள் போல் எளிதாக அவள் மேல் கை வைக்க முடியாது. ஏனெனில் அவளுக்கு தாய் தந்தை உள்ளனர். அதிலும் படித்தவர்கள் நல்ல வசதியானவர்களும் கூட, ஆதலால் சரியாக எந்த வகையிலும் போலீஸ் கண்டு பிடிக்காத மாதிரி திட்டமிட்டு தியாவை கடத்தி உள்ளான்… 

“திவா போ தியாவிற்கு மயக்கம் தெளியற நேரம் ஆக போகுது. போய் மயக்க ஊசி போடு” என்றான் ஜீவா. 

திவேஷ் அமைதியாக நிற்க, “திவா பயப்படாதா எந்த பிரச்சினையும் வராது நான் இருக்கேன். நான் சொல்ற மாதிரி மட்டும் செய். தியாவை எப்பவும் மயக்கத்திலையே வச்சிரு. இன்னைக்கு நைட் ஆப்ரேஷன், அது முடிஞ்சதும் தியா உயிரோட இருக்க மாட்டா. அவ உடம்பு கூட இந்த ஹாஸ்பிட்டல் தாண்டி வெளியே போகாது என்றான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!