நிவர்த்தனனும் மேக விருஷ்டியும் அங்கிருந்து நகர… “என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்” என தளர்வாய் அமர்ந்தார் மைதிலி. கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவான் என சோமசுந்தரம் அவருக்கு ஆதரவு கூற…
“சரிங்க அப்புறம் உங்க ஆசைப்படியே உங்க ஊர்ல கல்யாணத்த வைக்கலாம். ஆனாலும் எனக்கு அதுல இன்னும் கொஞ்சம் பயமும் நெருடலும் இருக்கத்தான் செய்யுது” மனதை உருக்கும் நிகழ்வுகள் வாட்டி எடுக்க, “உங்களுக்கும் சரி, நம்ம புள்ளைங்களுக்கும் சரி ஏதும் ஆகிடக் கூடாது.
அந்த பயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே தான் இருக்கு. இதெல்லாம் மீறி ரிஸ்க் எடுத்து இருக்கேனா அது உங்களுக்காக மட்டும் தான். அங்க கல்யாணம் நடக்குறதுக்கு அந்த நாள்ல இருந்து இப்ப வர அதே ப்ரொசீஜர் இருக்கும் தான…
பழனி அண்ணன்கிட்ட கால் பண்ணி பேசிருங்க. திரும்பவும் சொல்றேன் நீங்க கேட்டு அவங்க முடியாதுன்னு சொன்னா நான் பிஸ் பண்ண மாதிரி இங்க தான் கல்யாணம் ஓகே.” என்றார் மைதிலி மனமானது ஒரு நிலைப்பாட்டில் இல்லாது தவிப்பாக. ஏனென்றால் நடந்தேறிய சம்பவங்களின் தாக்கங்கள் அப்படி.
“அதெல்லாம் எதுவும் ஆகாம பார்த்துக்கலாமா. நான் முதல்ல அங்க கால் செஞ்சு கேட்கிறேன். அப்புறம் உன் மனசுக்காக அங்க இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் செஞ்சு பாதுகாப்பு கேட்குறேன்” என்றவர், “திரும்பவும் ஒரு டைம் கேக்குறேன். ஷாம் மேகாக்கு சரியா வருவான் தானே!” கேட்டார் தயங்கத்துடன்.
“ஏங்க நிவர்த்தனனுக்கு இருக்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்குதா. என் பொண்ணுக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து இருக்க மாட்டேன்னு நீங்க நினைக்கிறீங்களா” சற்று ஆதங்கமாக கேட்டவரிடம் மனமோ மீண்டும் பதட்டத்தை தழுவியது.
“அதெல்லாம் இல்ல மா…” மனதில் தன்னால் தான் தன் மகளுக்கு இப்பிடி ஒரு இக்கட்டான நிலை என நொந்து கொண்டவர், பொண்ணு பாத்துட்டு பேசுனதுலயிருந்து இப்ப வரைக்கும் மாப்பிள்ளை கிட்ட நம்ம பேசுனதே இல்லயே மா.
எல்லாத்துக்கும் உன்னோட ஃப்ரண்ட் வீட்ல இருந்து தான் நமக்கு பதில் வருது. நம்ம பொண்ணும் நம்ம விருப்பம் தான் அவ விருப்பம்னு சொல்லிட்டா. நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கிறது தான் ஒவ்வொரு தாய் தகப்பனோட கடமை அதனால தான் கேட்டேன்” என்றார் சோமசுந்தரம் தளர்வாய்.
“புரியுதுங்க ஷாம்ல லண்டன்ல பிஸியா இருக்கிறதால நம்ம கிட்ட பேச முடியல. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஷாமும் சரி மேகாவும் சரி ஒன்னா லண்டன்ல தான செட்டில் ஆக போறாங்க.
அப்ப ரெண்டு பேரும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பார்த்துட்டு தான் இருக்க போறாங்க. சோ, அப்ப எல்லாத்தையும் பேசிக்க போறாங்க. நடக்கிறது நல்லதுக்குனே நம்புவோம்” என்றவர் மேலும் ஏதும் பேசி வார்த்தையை வளர்க்காது அங்கிருந்து என் நகர்ந்துக் கொண்டார்.
ஆனால் அவர் மனமும் சீக்கிரமே கல்யாணத்த முடிக்கணும் என அதிவேகமாக ஆயாசபட்டு கொண்டது. நிவர்த்தனனுக்கும், சோமசுந்தரத்திற்கும் கலயாணத்தை குறித்த விருப்பம் இல்லா மனத்தளர்வுகளின் காரணங்களால்.
நேரம் கடந்து செல்ல, அறைக்குள் இங்கும் அங்கமாக நடந்து கொண்டிருந்தான் நிவர்த்தனன்.
“உள்ள வரலாமா சார்?” என குரல் கொடுத்து கையில் சாப்பாடுடன் வந்து நின்றாள் மேக விருஷ்டி அறை வாசலில்.
“ப்ச்… சிசி என்ன நீ பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க, உள்ள வா…” அவள் கையை பிடித்தவன் இழுத்துக் கொண்டவன் வர, “டேய் பொறுமையாடா… சாப்பாடு கொட்டிக்க போகுது” என தமையன் இழுவைக்கு வந்த அமர்ந்தாள் மேக விருஷ்டி.
“அக்கா, உனக்கு இந்த கல்யாணத்துல…” என ஆரம்பித்தவன் வாய்க்குள் சாப்பாட்டை அடைத்து இருந்தாள் மேக விருஷ்டி.
வாய் முழுக்க சாப்பாடு வைத்த வண்ணம் அவனும் அவளை முறைக்க, “ஃபர்ஸ்ட் சாப்பிடு எதைப்பத்தியும் யோசிக்காத. எதுக்குடா இவ்வளவு டென்ஷன் ஆகுற நீ” என்றவள் சாப்பாட்டை பிசைந்து அவனுக்கு ஊட்டினாள்.
அவனும் சாப்பாட்டை அவளுக்கும் ஊட்டியவன், “ஃபர்ஸ்ட் நீ எதுக்குக்கா இப்படி இருக்கிற?” என்றான் அலுத்து கொண்டு.
“ஃப்ரீயா விடுடா அத பத்தி எதையும் யோசிக்காத… பேச்சை மாற்றியவள், சரி சொல்லு நீ கண்டிப்பா ஆஸ்ட்திரேலியா போய் தான் ஆகணுமா. ஏன்டா, உன் டீனால அந்த சர்ஜரி பண்ண முடியாதா…?”
“கண்டிப்பா போய் தான் ஆகணும் சிசி. அவராலும் முடியாதுன்னு இல்ல. பட், அவர் பொண்ணு அப்டிங்கிறதால மெண்டலி அவரு ஸ்டேபிளா இல்ல. அதனால தான் அவர் என்ன இந்த சர்ஜரி ஹண்டில் பண்ண சொன்னாரு. இது ஆல்ரெடி பிக்ஸ் பண்ண ஷெட்யூல் தான் சிசி” என்றான் தோளை குலுக்கி.
யோசித்தவள், “சரி அப்ப பார்த்து பத்திரமா போயிட்டு வா… பட் கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே அங்க இருக்கணும் ஓகே வா” என்ற அவளிடம்,
“சரி நீ தூங்கு… நானும் தூங்க போறேன், குட் நைட் டா…” என்றவள் அவன் தலையை அழுத்தி எழுந்து வாசலை அடைய…
“அக்கா…”
“என்னடா…” அவள் திரும்ப
“வேலைக்கு ரிலீவ் லெட்டர் கொடுத்துட்டியா…” குரலில் கவலை பரவ
“ஹிம் கொடுத்து தான ஆகணும், கொடுத்துட்டேன்” புன்னகை இல்லாது இதழ் விரிந்தது.
“அப்போ உன்னோட பேவர்ட் மார்னிங் ஷோ… அண்ட் இன்னுழவன்…” அவன் குரல் இழுக்க,
பெருமூச்சு இழுத்து விட்டவள், “எல்லாம் நமக்கு எப்போதும் நிலையா கிடைக்காது டா. கிடைக்கத ஏத்துக்க வேண்டியது தான்” என்றவள் வெற்று புன்னகை உதிர்த்து “தூங்கு டா… ரொம்ப யோசிக்காத பைத்தியம் ஆக்கிருவ. அப்பிடி பைத்தியம் ஆகணும்னு நினைச்சன்னா உன்னோட க்ரஷ்ஷ நினைச்சுக்கோ” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள் அறை கதவை சாற்றி.
“கிடைக்கிறத வச்சி அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதுல தப்பு இல்லக்கா. ஆனா திணிக்கப்படுற வாழ்க்கைல அட்ஜஸ்ட் பண்றது ரொம்ப தப்புக்கா…” என்றவன் சகோதரி எதிர் கால வாழ்க்கை நினைத்து வராத தூக்கத்தை வர வைத்தான் விழிகளை முடி.
காலை பொழுதானது விடிய, வீட்டில் சூப்ரப்பாதம் ஒலித்து கொண்டிருக்க, ஜாகிங் உடையில் வெளியே வந்தான் இன்னுழவன்.
வந்தவனோ, “குட் மார்னிங் அப்பத்தா… ” என்றவன் குரலுக்கு வீட்டு முற்றத்தில் கண்டாங்கி புடவையோடு காதில் ஹெட்போனன், காலில் ஷு சகிதம் ஓடிக் கொண்டிருந்த அம்பிகாமாவோ “குட் மார்னிங் டா மை டியர் பேராண்டி…” என அவனை நோக்கி ஓடி வர…
இன்னுழவன் அவரை நோக்கி சென்றான்.
அந்நேரம் சரியாக அகரனும் வீட்டின் முன் வாசலில் வந்து சேர, வெளியே நடை பயிற்சி செல்லலாம் என்று சென்ற சக்திவேலோ, வந்து நின்ற அகரனை பார்த்து முகம் சுழித்து மீண்டும் வீட்டிற்க்குள் திரும்பினார்.
சக்திவேலின் முகம் சுழிப்பு மனதை வாட்டினாலும், நண்பனுக்காக அதைப் புறம் தள்ளி அவர் பின்னோடு சென்றான் அகரன்.
இங்கோ இன்னுழவனும், அம்பிகாமாவும் நேருக்கு நேர் ஓடி வந்து கொண்டிருக்க, எதிர்பாராத விதமாய் கவனிக்காது அவர்களுக்கு குறுக்கே வந்து சேர்ந்தார் சக்திவேல்.
இருவரும் வந்த வேகத்தில் சக்திவேலை மாறி மாறி இடித்திருக்க தரையில் விழுந்தார், “அம்மா…” என்று கத்திய வண்ணம் பொத்தென்று.
அதைப் பார்த்து அகரன் வேகமா “அப்பா…” என அவரை தூக்க சென்றவன் கையை எட்டி பிடித்து தடுத்து இன்னுழவன் மௌனமாய் நகைத்து நிற்க, “அட எருமை ரெண்டு அதுலட்டு (அத்லெட்) ஓடிக்கிட்டு இருக்கும் போது உன்ன எவன்டா குறுக்க வர சொன்னா…” என சக்திவேலிடம் காலையிலயே சீண்டி விளையாடினார் அம்பிகாமா.
மூவரை பார்த்து ஏழு மூலத்துக்கு முறைத்தவர், “ஆத்தா…” என கத்த,
“அடேய் எருமை மாட்டு பயலே, உன் முன்னாடி தான நிற்கிறேன். எதுக்கு தொண்டை கிழிய கத்துற. அடி ரொம்ப பலமோ… சரி இரு உன் பொண்டாட்டிய வர சொல்றேன்” என இன்னுழவனிடம் கண்ணடித்து அவர் நகர, இன்னுழவனும் சூசகமாய் கண்ணடித்தவன், “சரி நான் ஜாகிங் போயிட்டு வரேன் அப்பத்தா” என அகரன் தோள் மேல் கை போட்டு அங்கிருந்து அகன்றான்.
அகரனை பார்த்து முகம் சுழித்த சக்திவேலை கண்டு கொண்டான் இன்னுழவன். அதனால் தான் கண நேரத்தில் அப்பத்தாவுடன் போடபட்ட திட்டமே சக்திவேலின் இத்தடுமாற்றம்.
சக்திவேலு இடுப்பை பிடித்து படி எழுந்து நிற்க அவருக்கு கை கொடுத்து வந்து நின்றார் கோதாவரி.
“என்ன பெத்ததும் சரியில்ல, நான் பெத்ததும் சரியில்ல. அப்பா விழுந்து கிடக்கிறானே தூக்குவோமேன்னு நான் பெத்ததுக்கும் தோணல, ஐயோ பையன் விழுந்துட்டான்னு என்ன பெத்ததும் பதறல… சை எல்லாம் என் விதி” என புலம்பியவாரு உள்ளே வந்து சேர்ந்தார் சக்திவேல்.
இன்னுழவன், அகரன் இருவரும் தனது காலை நேர ஓட்டப் பயிற்சியினை முடித்திருக்க, “சரி டா நான் வீட்டுக்கு போறேன். அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். நீ பொறுமையா வா…” என அவ்விடம் விட்டு நகர்ந்தான் அகரன்.
செவ்வானம் சிவந்து சூரியன் வெளிவரும் அந்த வேலை தன்னில், இளம் தென்றல் காற்றோடு சிறிதாய் மலைச்சாரல் மொட்டு பூமி துளைக்க, அதில் உருவான மண்மனம் நாசி தன்னை துளைக்க , அழகாய் காட்சியளிக்கும் ரம்யமான இயற்கை வனப்பை ரசித்த வண்ணம் தன் செவி மடலில் எடுத்து மாட்டிய காதோலிப்பானுக்கும் கையில் இருந்த அலைபேசிக்கும் ஒருசேர உயிர் கொடுத்தான் இன்னுழவன்.
உயிர் கொடுத்தவன் காதுகளில் தேனாய் வந்து பாய்ந்தது அவன் உயிர் விரும்பியின் குரல் மொழிகள்.
“அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கத்தை காலை தேநீர் நேர தென்றல் நிகழ்ச்சியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது நான் உங்கள் மேக விருஷ்டி.
நாளைய நாள் யாருக்கும் நிச்சயம் அல்ல. அதே மாதிரி ஏன் அடுத்த நொடியும் நிலையானது இல்ல. இது தான் நடக்கும்னு நம்மளால கன்ஃபார்மா சொல்லவும் முடியாது. நடக்க இருக்கத மாற்றவும் முடியாது இறைவனின் படைப்பில்.
சோ இருக்கிற லைஃப்ல கிடைக்கிற நேரங்கள சந்தோசமா வாழலாமே எல்லோரும். ஓகே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் பேமிலிஸ் இன்னைக்கு…” என்ற சுறுப்பான மொழியில் நிகழ்ச்சியை ஆரம்பித்தவள், பத்து இலக்க எண்ணங்களை கூறி முடித்த அடுத்த கணம் அவளை அழைத்திருந்தது காற்றலைப்பேசி.
“ஹலோ இன்னிக்கு என்கிட்ட முதல்ல பேசப்போற அதிர்ஷ்டசாலி யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டவள் மனமோ அவள் விரும்பிய குரலுக்கு வெளி சொல்லாது ஏங்கியது.
“ஹலோ ரெயினி ஏஞ்சல்” என அவள் ஏக்கத்திற்க்கு இதத்தை கொடுத்திருந்தான் இன்னுழவன் கொஞ்சல் மொழியில் தன்னில் இன்றும்.
அவளின் காலை வணக்கம் அவன் இதயத்தை வருடி செல்ல, “பாருடா இன்னைக்கு ரெயினி ஏஞ்சல் என்னோட குரலுக்காக ஏங்கிட்டு இருந்த மாதிரி தெரியுதே! வழக்கமா நான் தான் உன் குரல எதிர்பார்ப்பேன். ஆனா இன்னைக்கு எல்லாமே உல்டாவா இருக்குதே!” என்றவன் முன் கேச முடியை சூரியன் பார்த்து கோதிவிட்டான் அலப்பரிய சந்தோசத்தோடு.
“ஹிம் எதை வச்சு அப்படி சொல்றீங்க இன்னுழவன் சார், நான் உங்களை எதிர்பார்த்தேன்னு” என்றவள் அவனிடம் கேள்வி தொடுக்க, அவள் மனமோ நீ தான அவன் குரல கேட்டதும் வாய பிளந்த என காரி துப்பியது.
“ஏன்னா இவ்வளவு நாளா என் குரல கேட்டா இன்னைக்கு நீங்க தானா அப்படின்னு தான் வார்த்தை வரும். பட் இன்னைக்கு அப்படி இல்லையே. காலை வணக்கம்னு சிரிச்சாப்புல சொல்றீங்களே!” என்றவன் நகைக்க,
“வழக்கமா காலருக்கு சிரிச்சாப்புல வணக்கம் சொல்றது தானே சார், என்னோட வேலையும் அதான…!” அவள் சமாளிக்க
“ஹலோ சார்… கோவமாக குரல் எழுப்பியவள் எனக்கு ஏன் கழுத்து சுழிகிக்க போகுது” என்றவள் அவனை விரும்பிய தன் நிலையை முழு பூசணிக்காயாய் மறைத்தாள்.
“கோவ மட்டும் பொசுக்கு பொசுக்குன்னு வந்துருது ஏஞ்சலுக்கு” அவன் செல்லமாய் குற்றம் சாட…
“ஹலோ இன்னுழவன் சார் கால் மீ ஏஞ்சல் மேடம் ஆர் மேக விருஷ்டி…” என்றவள் அவன் ஒருமை அழைப்பை திருத்தி மீண்டும் சினமாய் சாடினாள்.
மௌனமாய் சிரித்தவன், “ஓகே ஏஞ்சல் மேடம் உங்கள பாத்துட்டு இருக்கேனா.. மழைய பார்த்துக்கிட்டு இருக்கேன். நீங்களும் மழையும் ஒன்னு தானே எனக்கு” என்றான் இதழ் கடித்து.
“பெருமூச்சு இழுத்து விட்டவள் நான் கூட நேரிலேயே வந்துட்டீங்களானு கொஞ்சம் பயந்து போயிட்டேன்” என்றவள் ஆயாசப்பட…
“வேணும்னா சொல்லு ஏஞ்சல் உனக்காக உன் முன்னாடி நான் வந்து நிக்க எப்பவோ தயார் தான்” என்றவன் பேச்சின் கூற்றை அவதானித்தவள் மேலும் இப்படியே பேச்சை தொடர்ந்தால் சரி வராது எனக் நினைத்தவள்,
“ஓகே இன்னுழவன் சார் உங்களுக்கு இன்னைக்கு என்ன பாடல் வேணும்?” கேட்டாள் அவன் கொண்ட பேச்சை திசை மாற்றும் பொருட்டு பெருமூச்சுடன்.
அவளின் மூச்சுக்காற்றானது அவன் உயிர் வரை தழுவி செல்ல விழிகளை முடி அதை இரசித்தவன் “சுதாரிச்சிட்டா…” மௌன மொழி தன்னில் அதரம் மடித்து கடித்தவன்,
“மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்…
உன் வாசம் அடிக்கிற
காத்து என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே…”
பாடலின் வரிகளை இன்னுழவன் பாடி முடிக்க, “இந்தப் பாட்டுக்கு ஏத்தாப்புல, அந்த மாதிரி ஒரு சூழல் இருந்தா ரொம்ப அழகா இருக்கும்ல” என தன்னை மறந்து அவன் குரலில் லயித்திருந்தவள் உலறியிருந்தாள்.
அவள் கூறியதைக் கேட்டு வசீகிரமாய் புன்னகைத்தவன், “நான் அந்த மாதிரி ஒரு சூழல்ல தான் இருக்கேன் ரெயினி ஏஞ்சல். பட் நீ மட்டும் மிஸ்ஸிங்” என்றான் ஏகத்துக்கு ஏக்க குரலில் மோகத்தை மறைத்து.
அவளை கட்டி இழுக்கும் அவனின் காந்தக் குரலுக்கு கஷ்டப்பட்டு கடிவாளம் இட்டவள், “ஓகே இன்னுழவன் சார் அந்த மாதிரி ஒரு சூழலல்ல நீங்க ஹேப்பியா இருக்குறதுக்கு என்னோட வாழ்த்துக்கள். எப்போது இந்த மாதிரி ஹேப்பியா இருங்க நீங்கள் கேட்ட பாடல் இதோ உங்களுக்காக” என அவன் அழைப்பை வேகமாக துண்டித்தவள் மனமோ…
“நீங்க என்ன மட்டும் தான் மிஸ் பண்ணுவீங்க இன்னுழவன், நான் உங்க எல்லாரையும்மே மிஸ் பண்ண போறேன்” என்றவள் விழிகள் நீர் கோர்க்க மௌனமாய் அழுதது.
அறியாது தான் போனாள் தன்னுடைய தற்போதைய சந்தோஷத்திற்கும் தனக்காக நிர்ணயித்து வைத்திருக்கும் வருங்கால சஞ்சலத்திற்கும் இவனே முழு முதற்க்காரணம் என.
இனி வரும் காலம் பாவையவளின் மன சஞ்சலம் தீர்த்து அவளோடு சஞ்சரிப்பானா…?
செங்கோதை வருவாள்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் லைக் plus comment பண்ணுங்க. உங்க support தான் என்னோட energy 🙂.