யுகித் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ந்த ரகுலன், இறுதியில் அவன் சொல்லாமல் விட்டதில் குழம்பித் தவித்து அவனைத் பின்தொடர்ந்தவாறே, “யுகி! இப்ப நீ என்ன சொல்ல வர?” என்று அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தி கேட்டான்.
தோளைக் குலுக்கிய யுகித்தோ,”கார்ல கூட்டிட்டு போறியா? இல்லை டாக்ஸி புக் பண்ணிக்கவா?” என்று வினவ.
“உன்னை கூப்பிடறதுக்கு தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கேன். அப்புறம் என்னடா கேள்வி இது.ஆனா யுகி நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே?” என்று நண்பனை முறைத்தான் ரகுலன்.
“ நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வேற கேள்வி கேட்டா அந்த கேள்விக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம். இது சின்ன குழந்தைக்குக் கூடத் தெரியும். நானே ரொம்ப டயர்டா இருக்கேன். நல்லா ரெஸ்ட் எடுக்கணும். கார்ல ஏதாவது பேசிகிட்டே இருந்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதே.” என்றவாறே ரகுலனின் காரில் ஏறி அமர்ந்தான் யுகித்.
ட்ரைவர் சீட் பக்கம் ஏறிய ரகுலனோ,“ நான் ஒன்னும் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை. அதேப் போல நீயும் வெண்ணிலாவை டிஸ்டர்ப் பண்ணாதே. அது தான் உனக்கும் நல்லது. நகுல் வேற சும்மா இருக்க மாட்டான்.”என்று கூற.
“அப்படியா ?” என்ற யுகித், நக்கலாக சிரித்தான்.
“யுகித்! பி சீரியஸ்!”
“ ரகு! உன் தம்பியை அன்னைக்கு சும்மா விட்டது, உனக்காகவும், அவனோட பெஸ்டிக்காவும் தான். ஆனால் இப்பவும் அதே அளவு பொறுமையா இருப்பேனான்னு கேட்டா அது எனக்கே தெரியாது. சோ! அவனையும் கொஞ்சம் என் கிட்ட கவனமா இருக்க சொல்லு.” என்று யுகித் அழுத்தமான குரலில் கூறியவன், கண்களை இறுக மூடிக்கொண்டான்.
‘என் தம்பிக்கே இந்த மிரட்டல்னா, வெண்ணிலாவை நினைச்சா பயந்து வருதே. கடவுளே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த ரீயூனியன் மீட்டிங் நல்லபடியா முடியணும்.’ என்று வேண்டியபடி ரகுலன் காரை எடுத்தான்.
***********************
“நிலா எப்ப வர?” என்று இவர்களது பஞ்சபாண்டவ க்ரூபிலிருந்து சபரீகா வினவினாள்.
“நான் காலைல தான் கிளம்புறேன். இங்கே இருந்து பக்கம் தானே. ரீயூனியன் க்ரூப்ல மெசேஜ் போட்டுருந்தேனே. பார்க்கலையா?”
“அந்த க்ரூப்புக்கு போகலை நிலா. நிறைய மெசேஜ் வந்துட்டே இருக்கு. ட்ரஸ்ஸெல்லாம் வேற பேக் பண்ணிட்டு இருக்கேன். நாங்க நைட் கிளம்புறோம்.”
“நாங்கன்னா யாருடி? உன் ஹஸ்பெண்ட் வர்றாரா?”
“அவரு வரலை. கம்பெனிமீட்டிங்காக பெங்களூர் போயிருக்கிறார். நான், மஹி,ஹரி மூணு பேரும் ஒன்னா தான் கிளம்புறோம். நேரா நகுல் வீட்டுக்குத் தான் போறோம். நீயும் அங்க வர்றியா?” என்று வினவ.
“ஓ! நான் வரலை. நீங்க என்ஜாய் பண்ணுங்க.”
” நீயும் வா நிலா! நம்ம காலேஜ் படிச்சப்ப, ஒன்னா தானே போவோம், வருவோம் அதே மாதிரி கெத்தா போகலாம் டி.” என்று மஹதி மெசேஜ் செய்ய.
எப்பொழுதும் போல் மகி சொல்றது கரெக்ட் தானே! ஹரிஷ் கூற.
“டேய் ஹரி! நீ இன்னமும் வளரல மஹிக்கு சின்-சான் போடறத விடலை.” என்று வெண்ணிலா மெசேஜை தட்ட.
எல்லோரும் அதற்கு சிரித்து வைத்திருந்தனர்.
“பாவம் டி ஹரி. முன்னையே அப்படித்தான். இப்போ நம்ம மஹிக்கு மனைவிங்குற பதவி வேற கிடைச்சாச்சு. அப்புறம் என்ன? மனைவி சொல்லே மந்திரம். நம்ம மஹதி வாக்கே வேத வாக்கு.” சபரீகா கேலி செய்ய.
“நான் வரலை. இந்த க்ரூப்புக்கு வந்ததுல இருந்து அந்த எருமை என் கூட பேசலை. அவங்க வீட்டுக்கு என்ன கூப்பிடவும் இல்ல. நான் எப்படி வர்றது.” என்று வெண்ணிலாவின் பதில் வர.
இவ்வளவு நேரம் இவர்களது அரட்டையில் கலந்துக் கொள்ளாமல் இருந்த நகுல், ஷு போட்டாவை அனுப்பி பிஞ்சுடும் என்று அனுப்ப.
“ஷு பிஞ்சா பரவாயில்லை, நான் புதுசு வாங்கித் தர்றேன்.” என்று வெண்ணிலா பதிலனுப்ப.
“நீ யாரு எனக்கு ஷு வாங்கித் தர?”
“என்னையா யாருன்னு கேட்குற? நான் உன் ப்ரெண்டுடா.”என்று வாய்ஸ் டைப்பிங் அனுப்பியவளின் குரல் நடுக்கத்தை உணர்ந்த நகுலனோ, வேகமாக டைப் பண்ண ஆரம்பித்தான்.
“இப்போ மட்டும் ப்ரெண்டுன்னு உரிமைக் கொண்டாடுற? உண்மையான நட்புனா, சுக துக்தத்துல பங்கெடுத்துக்குறது தான். நாங்க யாரும் வேணாம்ன்னு ஓடி ஒளிஞ்சுட்டு, இப்போ வர்றாங்க, வெத்தலை பாக்கு வச்சு வீட்டுக்கு அழைக்கலைன்னு… மத்த மூணு பேரும் நான் கூப்பிட்டாமல் அவங்களாத் தான் வர்றாங்க. ஆனா நீ அங்க வராம இருக்கிறது தான் உனக்கு நல்லது. நேர்ல வந்தா அவ்ளோ தான்…” என்று அனுப்ப.
“டேய்! உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆள் இந்த வெண்ணிலா கிடையாது. நாளைக்கு வருவேன். உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ.” என்று வெண்ணிலா சவால் விட.
நகுலைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சிரித்து வைத்திருந்தனர்.
“அடேய் எருமைகளா! ஒருத்தி கோபமா மெசேஜ் போட்டா, இப்படி சிரிச்சு வச்சிருக்கீங்களே. உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது.” என்று அழு குரலில் வெண்ணிலா கூற.
“அப்படியே உனக்கு ரொம்ப நகுல் மேல ரொம்ப கோவம். அவனும் உன் மேல கொலைவெறில இருக்கிறான். இதெல்லாம் நாங்க நம்பணும். உங்க ரெண்டு பேரைப் பத்தி எங்க எல்லோருக்கும் நல்லா தெரியும். நீ பசிக்குதுன்னா போதும் அவ்வளவு தான், எப்படி பெத்த அம்மா பிள்ளைக்கு பசிக்குதுன்னு சொன்னா பதறுவாங்களோ, அப்படி பதற ஆரம்பிச்சிடுவான். அதான் அவனோட கோபத்துக்கு மதிப்பு.” என்று நக்கலாக சபரீகா கூற.
“ப்ச்! பரி! அம்மாவோட கம்பேர் பண்ணாதே. அவங்களைப் பத்தி பேசுனாலே எனக்கு பிடிக்கலை. அவங்களும் சுயநலமே இல்லாமல், அன்பை மட்டுமே தர்ற நீங்களும் ஒன்னு கிடையாது. அதனால நகுலை யார் கூடவும் கம்பேர் பண்ணாதே. எனக்குன்னு இருக்குற உறவு நீங்க நாலு பேரும் மட்டும் தான்.” என்று குரல் நடுங்க கூறினாள் வெண்ணிலா.
என்ன நிலா பழசெல்லாம் மறக்கலையா என்று ஆளாளுக்கு பதறி வினவ.
“அடேய் நான் என்ன அம்னீஷியா பேஷண்டா. பழசெல்லாம் மறக்க? நான் அழகான, ஆரோக்கியமான பொண்ணு. என்று ஃபார்ம்க்கு வந்த வெண்ணிலா கலகலவென நகைக்க.
“ஓ! யாருடா அந்த அழகான பொண்ணு. நீயெல்லாம் ஆன்ட்டியாகி ரொம்ப வருஷமாச்சு. ஆமாம் நாளைக்கு நீ மட்டும் வர்றியா? இல்லை உங்க பேமிலில இருந்தும் வர்றாங்களா?” மஹதி வினவ.
“நான் மட்டும் தான் வர்றேன். எதுக்குங்குறேன்? எதுக்கு அந்த டிஸ்டர்பென்ஸெல்லாம்? தனியா வந்தோமா, ஜாலியா இருந்தோமான்னு இருக்கணும்.”
“ சரி தான். நீ நல்ல விவரமா தான் இருக்க. ஆனால் எனக்குத் தான் அந்தக் சான்ஸ் இல்லை.” என்று மஹதி மெசேஜ் தட்ட.
“டேய் ஹரி! நீ டிஸ்டர்பென்ஸாம்! என்னன்னு மஹியை கேளு.” என்று வெண்ணிலா கொளுத்திப் போட.
“சும்மா விளையாட்டுக்கு சொல்றா. அப்படித்தானே மஹி.” என்று தனது சரிபாதிக்கு வழக்கம் போல சப்போர்ட்டுக்கு வந்தான்.
“அவன் என்னைக்கு மஹியை விட்டுக்கொடுத்திருக்கான் இன்னைக்கு விட்டுக் கொடுக்க. இதெல்லாம் தெரிஞ்ச கதை தானே. இதைப் பத்தி பேசிட்டே இருந்தா ஊருக்கு கிளம்ப டைமாகிடும் பை.” என்ற சபரீகா ஆஃப்லைனுக்கு செல்ல.
மற்றவர்களும் விடைப் பெற்றனர்
இரவெல்லாம் உறங்காமல், பரபரப்புடனே இருந்த வெண்ணிலாவோ, அதிகாலையில் கிளம்பினாள்.
“கார்ல ட்ராப் பண்றேன்.”என்ற தீரனிடம்,
“ பஸ்ல ட்ராவல் பண்ணி ரொம்ப நாளாச்சு மாமா. இங்கே இருக்குற கொடைக்கானல் தானே. இரண்டே மணி நேரத்துல அங்க விட்டுடப் போறாங்க. அப்புறம் கொடைக்கானல் நான் பொறந்து வளர்ந்த ஊரு. கண்ணைக் கட்டி ஏதாவது சந்துல விட்டாக் கூட கரெக்டா போயிடுவேன். பயப்படாதீங்க.” என்று ஒரு வழியாக போராடி தனியாக செல்வதற்கு சம்மதம் வாங்கினாள் வெண்ணிலா.
பேருந்தில் ஏறியதும், “ஐயம் ஆன் தி வே.” என்று செல்ஃபி எடுத்துப் போட்டாள் வெண்ணிலா.
கொடைக்கானலில் காலை வைத்ததும் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது அவள் பிறந்து வளர்ந்து ஓடித் திரிந்த இடம் தான்.
ஆனால் இங்கு வந்ததும் , மறக்க நினைத்த நினைவுகள் கண் முன்னே வர கண்கள் கலங்கியது.
கண்ணை சிமிட்டி, கண்ணீரைத் தடுக்க முயன்றவளின் நடைத் தடுமாற, கீழே விழப் போனாள்.
அவளைத் தாங்கிப் பிடித்தன இரு கரங்கள்.
வந்தா வா, வரலைன்னா போ என்று சொன்ன நகுலன், இவள் காலையில் போட்ட செல்ஃபியை வைத்தே பேருந்தில் வருகிறாள் என்று புரிந்து பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்தான்.
அவள் இறங்கியதிலிருந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தடுமாறும் போது தாங்கிப் பிடித்திருந்தான்.
ஐந்து வருடங்களாக தனியே அடக்கி வைத்து இருந்த உணர்வுகளை, உற்ற நண்பனைக் கண்டதும், அவனது தோளில் கண்ணீராக இறக்கி வைத்தாள்.
நகுலன் முகமும் கலங்கியிருந்தது.
அவர்கள் இருவரையும் ஒருவன் வெறுப்புடன் பார்த்து விட்டு சென்றதை வெண்ணிலாவும் கவனிக்கவில்லை. நகுலனும் கவனிக்கவில்லை.