அவள் பேச…
அவன் இரசிக்க…
குறுக்கே கரடியாய் அழைதிருந்தார் மைதிலி அவளை போனின் வாயிலாக.
அவ்வளவு நேரம் இன்னுழவனுடன் புதிதாய் பூத்த மலராய் பேசிக் கொண்டிருந்தவள் முகமது அலைபேசியின் திரையை பார்த்தவுடன் சுருங்கியது.
முகம் மட்டும் சுருங்கவில்லை குரலும் தளர்ந்தது.
அனைத்தையும் மறந்து பேசியவள் மனமும் விழிகளும் வெறுமையை உமிழ்ந்தது.
இன்னுழவன் கண்ணில் இருந்து அதுவும் தப்பவில்லை.
இன்னுழவனை ஏறெடுத்து பார்த்தவளோ “சரிங்க நீங்க பாத்து போங்க இருங்க. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும். சாரி உங்கள நான் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிகோங்க.
அண்ட் தேங்க்ஸ் சரியான நேரத்துல கார்ல சத்தம் கொடுத்ததுக்கு. அந்த தாத்தா வெயில்ல நின்னது எனக்கு தெரியாது. நான் டென்ஷன்ல இருந்தனா அதனால கவனிக்கல” என்றவள் போன் விடாது அடித்தது.
இவ்வளவு நேரம் தன்னுடன் துள்ளி குதித்து பேசிக் கொண்டிருந்தவளின் நொடி நேர முக வாடலை கண்டவன் மனமோ கணக்க ஆரம்பித்து விட்டது.
அவளின் தளர்ந்த வதனத்தை கொடுத்த அந்த அலைபேசியை பறித்து உடைக்கும் அளவிற்கு கோவம் கனல் கன்றது இன்னுழவனிற்கு உள்ளுக்குள்.
ஏதும் செய்யாது அவனும் அமைதியாக தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவளை உள்ளுக்குள் அனல் வீச.
போனுக்கு உயிர் கொடுத்து காதில் வைத்தவளும், “மா நான் வந்துட்டேன் மா… இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கே வந்துருவேன், எப்படி வரணும்னு எனக்கு லொகேஷன் மட்டும் ஷேர் பண்ணுங்க” என்றாள் எரிச்சல் கலந்த சலிப்புடன்.
எதிர்புறத்தில் மைதிலியோ, “மேகா நீ ஊருக்குள்ள என்ட்ரி ஆகும் போது எனக்கு கால் பண்ணுன்னு சொல்ல தான செஞ்சேன். ஏன் சொல்லல? நீ தனியாலாம் வர வேண்டாம். இரு நானும் அப்பாவும் வண்டி எடுத்துட்டு வர்றோம்” என்றார்.
அவர் பேச்சி மேலும் அவளுக்கு எரிச்சலூட்ட “அம்மா நீங்க வண்டியில வந்தாலும் நான் என் வண்டியில தானே வர முடியும். எதுக்கு இவ்வளவு பயப்படுறீங்க. ஏம்மா என்ன போட்டு படுத்துறீங்க. முடியல மா மூச்சு முட்டுது” என்றவள் அலுத்து கொண்டு அலைபேசியை துண்டித்திருந்தாள் பெரும் மூச்சுடன்.
இங்கு அவளின் சம்பாஷனையை கேட்ட இன்னுழவனுக்கோ அதுவும் கடைசி கடைசியாக அவள் கூறிய வார்த்தையில் சர்வமும் ஒடுங்கியது. இதயம் ஒரு கணம் வேலை நிறுத்தம் செய்தது.
மீண்டும் அவனை பார்த்தவள், “வளர்ந்த சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” கேட்க,
என்ன என அவன் புருவம் தூக்க…
“இங்க சோமசுந்தரம் இல்ல… இல்ல… ஆறுமுகனார் தாத்தா வீட்டுக்கு எப்பிடி போகணும்?” என்றாள்.
“மூச்சு முட்டுற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு அத்தை இப்பிடி பயப்புடுறாங்க? பிடிக்காத கல்யாணத்த குடும்பத்தையே எதிர்த்து என் நடத்த நினைக்கிறாங்க?” என பல கேள்விகளை மௌனமாய் தனக்குள் கேட்டு வைத்தான்.
“அவங்களுக்கு நீங்க என்ன வேணும்?” கேட்டான் தெரிந்தும் தெரியாதது போல்.
“அவரு என் தாத்தா”
“அப்போ சோமசுந்தரம்?”
“அவரு என் அப்பா?”
“ஓ… ஏதும் பிரச்சனையா?” அவன் கேட்க,
அவள் புருவம் சுருக்க
“இல்ல ஏதோ அப்ப டென்ஷன், இப்போ கூட இவ்வளவு டென்ஷன் அதான் கேட்டேன் தப்பா நினைச்சிகாத்திங்க”
“இல்ல இல்ல அதெல்லாம் இல்ல. ஊர்ல இருந்து தனியா வரேன்ல அதான் அம்மா பயப்படுறாங்க வேற ஒன்னும் இல்ல. கொஞ்சம் வழி சொல்றிங்களா” கேட்டாள் கெஞ்சுதலாக.
இவ்வளவு நேரம் அவளின் துடுக்கு பேச்சில் இரசித்து மிதந்தவன், இப்பொழுது அவளின் கெஞ்சல் மொழியினையும் இரசித்தாலும் மனமானது காரணம் தேடி அலைந்தது.
பெருமூச்சுடன் இன்னுழவனும் வழியை சொல்ல, அவனுக்கு நன்றி வைத்து சிறு தலையசைபுடன் அங்கிருந்து நகர்ந்தாள் மேக விருஷ்டி.
செல்லும் அவளை தான் இமை அசையாது பார்த்து நின்றான் இன்னுழவன்.
வயலை கடந்து கார் கதவை திறந்தவளோ மீண்டும் அவளை நோக்கயவளாய், “ஹலோ சார் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க நான் யார் கூடயும் கடலை போடலாம் இல்ல. நான் என் தம்பி கூட தான் பேசிட்டு வந்துட்டு இருந்தேன். எனக்கு எல்லாமே என் அப்பாவும் அம்மாவும் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்திருக்காங்க ” என ஏறி காரை எடுத்து புறப்பட்டாள்.
மேக விருஷ்டி வீட்டை அடைய யோசனையுடனே வீட்டை அடைந்து உணவருந்தாது உடை மாற்றி கார்மென்ட்ஸை அடைந்திருந்தான் இன்னுழவன்.
கார்மெண்ட்ஸில் வேலைகள் ஆயிரம் கிடக்க அத்துணையும் ஒதுக்கி வைத்து தீவிர யோசனையுடன் அவன் இருக்க, “டேய் அந்த யூரோப் லோடு செக் பண்ணிட்டியா டெஸ்பேஜ் பண்ணிடலாமா?” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்திருந்தான் அகரன் கையில் கோப்புகளுடன்.
யோசனையோடு அமர்ந்திருந்தவன் முன் அமர்ந்தவன், “டேய் என்ன யோசனை எல்லாம் தீவிரமா இருக்கு. நாளைக்கு உன் மாமா பொண்ணு கல்யாணத்தை பத்தி யோசிக்கியா… அதெல்லாம் பக்கா எந்த பிரச்சனையும் இல்லாம கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்றான் அகரன் உறுதியாக.
அவன் பதிலுக்கு இடவலமாய் தலையசைத்த இன்னுழவனோ “ஹீம்… ஹிம்… இப்ப அந்த கல்யாணம் நடக்கணுமானு தோணுது டா எனக்கு” என்றானே பார்க்கலாம்.
அவன் பதிலில் இப்பொழுது அதிர்ந்தது என்னவோ அகரன் தான்.
“டேய் என்னடா சொல்ற…?” அகரன் அதிர
அனைத்தையும் ஒன்று விடாது சொல்லி இருந்தான் கோர்வையாக நண்பனிடம் இன்னுழவன்.
அனைத்தையும் கேட்ட அகரனோ, “என்னடா சொல்ற அப்போ பொண்ணுக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் நடக்குதா…?”
இன்னுழவனும் மீண்டும் இடவலமாய் தலையசைத்தவன், “பொண்ணுக்கு மட்டும் இல்ல பொண்ணோட அப்பா, தம்பி அம்மாவ அதான்… என் அத்தைய தவிர யாருக்குமே விருப்பமில்ல இந்த கல்யாணத்துல அப்படிங்கறது பட்டவட்டமா தெரியுது டா” என்றான் தீர்க்கமாக.
“ஒருவேளை அவங்க ரொம்ப பயப்படுறாங்கன்னா அப்பாவுக்காக இருக்குமோ. ஏன்னா அவங்க காலத்துல பார்த்த சக்திவேல நெனச்சி இப்பவும் பயந்துட்டு இருக்கலாம்.
ஆனா அதுக்கும் இப்படி அவசர அவசரமா விருப்பமே இல்லாத கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” எனக் கேள்விகளுடன் குழம்பினான் அகரன்.
“இல்ல இதுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. நமக்கு டைம் வேற ரொம்ப கம்மியா இருக்கு அகரா. விடிஞ்சா கல்யாணம் அதுக்குள்ள என்ன பிரச்சனைனு கண்டு பிடிக்கணும்.
நீ மாப்ள சைடுல இருந்து கொஞ்சம் டீடெயில்டா விசாரி. மாப்பிள வீட்டுக்கும் எங்க அத்தைக்கும் என்ன சம்பந்தம் அவங்களோட உறவு வட்டாரம் எப்படி என்று கொஞ்சம் விசாரி” என்றான் தீவிரமாக.
“சரிடா ஆனா இவ்வளவு யோசிக்கும் போது உன் மாமாக்கே கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா நீ உன் மாமாகிட்டயே கேட்கலாமே. இல்ல உன் மாமா பொண்ணுகிட்ட கூட கேட்கலாம்” அகரன் கேட்க,
“கேட்டாலும் ரெண்டு பேருமே சொல்ல மாட்டாங்க. என் மாமா ரொம்ப அழுத்தக்காரர் டா அவர் பொண்ணு அவர மாதிரி தானே இருப்பா” என்றவனோ,
“ஆனா இத பத்தி ஒருத்தன் கிட்ட கேட்கலாம், அவன் சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு” என்றான் இன்னுழவன் உறுதியாக நாடி தடவி.
“யாருடா அது?” கேட்டான் அகரன் ஆர்வமாய்.
“நிவர்த்தனன், என் மாமா பையன்” என்றான் இன்னுழவன்.
“ஏத வச்சி சொல்ற அவன் நம்மகிட்ட எல்லாத்தையும் சொல்லுவான்னு?” சந்தேகமாய் அகரன் வினவ
அன்று நடந்த உரையாடலை பற்றி கூறினான் இன்னுழவன் ஒன்று விடாமல்.
“ஓ… அப்போ வாய்ப்பு இருக்கு டா…”
“அவன் கல்யாணத்துக்கு வந்துட்டானா, நேர்ல போய் பேசுற வேண்டியது தான…”
“இல்ல டா அகரா அவன் நாளைக்கு தான் இங்கயே வரான். வொர்க்கா அவுட் ஆப் கண்ட்ரி”
“அப்போ அவன் போன் நம்பர் இருக்கா?”
ஹீம்… ஹிம்… உதட்டை பிதுகினான் இன்னுழவன் வெறுமையாய்.
“போன் நம்பரும் இல்ல… அவனும் இங்க இல்ல… அப்போ இப்ப என்னடா பண்றது?”
“என் மாமாகிட்ட இருந்து நான் அவன் நம்பர் வாங்குறேன் டா” என்றான் இன்னுழவன் சிந்தனையில்.
“அப்போ சரி டிலே பண்ணாம வாங்கி கேளு டைம் இல்ல. அப்புறம் நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன்” என்றான் அகரன்.
“என்ன?”
“உன்னோட ஆள் டீடைல் கேட்டிருந்தியே…” அகரன் கூறும் போது சடுதியில் தென்றல் வீசினாள் நண்பகளில் தன்னுடன் உரையாடிய தன் மாமன் மகள். அவன் அறியா அவன் காதலி ரெயினி ஏஞ்சலான மேக விருஷ்டி.
“ஹிம் ஆமா கிடைச்சுதா…?” விழிகள் மின்னியது மனம் மாமன் மகள் தான் அவளோ எதிர்பார்த்தது காலையில் அவள் அருக்காமையில் உள்ளுக்குள் ஏற்பட்ட ஈர்ப்பில்.
“அவங்களுக்கு இன்னைக்கு தான் லாஸ்ட் ஷோவாம் டா. அதுமட்டும் இல்லாம அவங்க இன்னையோட வேலைய ரிசைன் பண்ணிட்டாங்களாம்” அகரன் சோகமாய் கூற…
“எனக்கு தெரியும்.” என்றான் இன்னுழவன் இறுக்கத்துடன்.
“எப்பிடி டா?”
“அவ என்கிட்ட பேசுனதுல வச்சே நான் புரிஞ்சிகிட்டேன், நீ மேல சொல்லு…”
கையை விரித்து, “மேல சொல்ல ஒன்னும் இல்ல… அதுக்கு மேல உள்ள டீடைல் எல்லாம் சேனல் மேனேஜர் தான் சொல்லணுமாம். சோ அவங்க உனக்கு மெயில் பண்றேன்னு சொல்லி இருக்காங்க. நாளைக்குள்ள மெயில் வந்துரும்.
எப்படியோ நம்ம ப்ரண்ட் ஆட் கொடுக்கிறேன் சொன்னதால டீடைல் உடனே தரேன் சொல்லிட்டாங்க” என்றான் அகரன் சிறு நகைப்புடன்.
மேலுமவன், “டேய் இன்னுழவா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே…?”
“என்ன?” இன்னுழவன் புருவம் உயர்த்தன…
எச்சிலை கூட்டி விழுங்கியவன், “இல்ல நீ அவங்கள காதலிக்கிற ஓகே, அவங்க உன் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணது கூட இல்ல, நீயுமே ஷோ வழியா பாட்டு மூலமா தான் அவங்ககிட்ட பேசி இருக்க.
அவங்க டீடைல் எடுத்து தேடி போற அளவுக்கு ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டு இருக்கியே, உன்ன லவ் பண்ணுவாங்களா அவன் முறைக்க, இல்ல லவ் பன்றாங்களான்னு…
ஒரு வேளை வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருக்கலாம், கமிட் ஆயிருக்கலாம். அப்படி இருந்தா என்ன பண்ணுவ டா” கேட்டான் அகரன் குரல் தளர.
நண்பன் காதல் கை கூட வேண்டும் என மனம் விருப்பினாலும், அதுவே அவன் கை சேராது போய் விட்டால் அவன் தாங்குவானா என மனம் பரிதவிக்கவும் செய்தது ஒருபக்கம்.
“அவ என்ன தவிர வேற யாரையும் லவ் பண்ணல, பண்ணவும் மாட்டா. அவ மனசுக்கு சொந்தக்காரன் எப்போதும் நான் ஒருத்தன் மட்டும் தான். இந்த இன்னுழவன் தான்.” என்றான் மிக உறுதியாக இன்னுழவன்.
“ஓ அவ்வளவு லவ்வு…” அகரன் நகைக்க…
இன்னுழவன் போன் ரீங்கானது.
“என்ன அப்பத்தா கூப்பிடுது…”
“பீட்ஸா வாங்கிட்டு வர சொல்லிச்சு டா மறந்துட்டேன்” என அட்டென்ட் செய்து காதில் வைத்தான் இன்னுழவன்.
“டேய் பேராண்டி…”
“அப்பத்தா பீட்ஸா மறந்துட்டேன். இரு வாங்கிட்டு வரேன்.”
“சரி டா… சரி டா… சிக்கன் பிஸா அதுவும் பைசியா (பீட்சா ஸ்பைசி) வாங்கிட்டு வா…”
இதழுக்குள் நகைத்தவன், “சரி அப்புறம்…”
“அப்புறம் என்ன நான் பெத்து வச்சிருக்க ரெண்டு வெஸ்ட் பாலவ்ஸும் ஏழரைய கூட்டிக்கிட்டு இருக்குதுங்க. சோ எங்க இருந்தாலும் சீட்டா பறந்து வா டா கோமுக்கு” என்றார் அம்பிகாமா.
“ப்ச்… இப்ப என்ன பஞ்சாயத்து? சரி வரேன் வை” இன்னுழவன் எரிச்சலாக…
“அடேய் பிஸாவ மறந்துறாத ஓகேய்…” என அழைப்பை தூண்டித்திருந்தார் அம்பிகாமா.
செங்கோதை மணம் வீசும்…