50
காலைப்பொழுது விடிய ஆதவன் அவன் வேலையை செவ்வன செய்து கொண்டிருக்க, வழமை போல் காலை நேர ஓட்ட பயிற்சியினை முடித்துவிட்டு தனது அலைபேசியை காற்றலையில் இணைத்து அதனுடன் செவி மடலில் காதொலிப்பானுடன் இணைத்து இருந்தான் இன்னுழவன்.
உடையவள் குரல் இன்று அவன் செவிகளில் எட்டப் போவதில்லை என்று ஏற்கனவே யூகித்தவன், இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் காற்றலையில் சிந்தையை செலுத்தினான்.
கவனம் செவிமடலில் ஒலிக்க இருக்கும் சப்த குரலில் இருந்தாலும், விழிகளோ தொடுதிரையில் முன்தினம் உடையவள் பற்றி ஆராய சொல்லியிருந்த தகவல் பெட்டியை திறக்கும் வேலையில் இருந்தது மும்பரமாய்.
இதேநேரம் மறுபுறமோ பட்டுப் புடவையில் கண்ணாடி முன் மேக விருஷ்டியும் அலைபேசியில் காற்றலையை இணைத்து வீற்றிருந்தாள்.
இத்துணை நாட்கள் தன் குரலை மட்டுமே வியாப்பித்து கேட்டுக் கொண்டிருந்தவன் இன்று வேறொரு குரலைக் கேட்டு அதற்கு பதில் வழி செவிசாய்ப்பானா!
இல்லை தான் குரல் கேட்காது வேறொரு குரலில் அவன் குரலும் மனமும் மௌனமாகி போய்விடுமா? என உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தாள் சிறிது நேரத்தில் மணமேடை ஏறபோறவள் மனம் முழுவதும் செவி வழியில் மனம் கவர்ந்தவனை நினைத்து.
இங்கு இன்னுழவன் செவி கூர் பெற்றது என்றால் விழிகளோ கனல் கன்றது செவ்வரி ஏற.
“வணக்கம் செல்ல குட்டிஸ்…” என்ற வேறொரு குரலில் ரேடியோ காற்றலையில் சரியாக நிகழ்ச்சி ஆரம்பமாக…
தன்னவள் பற்றிய பின்புல செய்தியை சேகரித்து வந்த பெட்டியும் திறக்கப்பட்டது அவனது அலைபேசியில் ஒரே நேரத்தில்.
தாடை இறுக வேகமாக அலைபேசியை துண்டித்திருந்தான் இன்னுழவன்.
ஆம். இன்னுழவன் அலைபேசியில் மேக விருஷ்டி பற்றிய தகவல்கள் அவள் புகைப்படத்துடன் அவன் கண்முன் பிரதிபலித்தது.
“ரெயினி ஏஞ்சல்…” இதழ்கள் மௌனமாய் உச்சரிக்க, முன்தினம் என்னைக் காப்பாற்றி என் அருகில் நின்று எனக்கு சமமாய் வாதாடியவள் அப்பொழுது என்னவளா!
என் உள்ளம் உருகியது அவளிடமா! என் மாமன் மகள் தான் என்னவளா?
மூச்சுக்காற்று விடும் தூரத்தில் அருகில் இருந்து கண்டபோதும், என் மனம் இவள் தான் உன் தேவதை என எனக்கு வற்புறுத்திய போதும், என் மூளை மரத்துப் போனது ஏனோ…!
நெஞ்சுக்குள் சொல்ல முடியாத வலி ஊடுருவ.. விழிகளை மூடி தாடை இறுகியவன் பற்கள் நறு நறவென அரைப்பட.. கை நரம்பு புடைக்க கரம் கொடுத்து அழுத்தத்தில் கையில் இருந்த விலை உயர்ந்த அலைபேசியில் சில்லு சில்லாய் உடைந்து நிலம் தழுவியிருந்தது.
இங்கே இவன் நிலைமை இப்படி இருக்க…
அங்கோ தன் உள்ளம் எதிர்பார்த்தது போல் மனம் விரும்பியவனின் குரல் தன் குரலை எடுத்து வேறொரு குரலுக்கு செவி சாய்க்காது போனதை நினைத்து இன்பமுறவும் முடியாமல் துன்பமுறவு முடியாமல் நடுக்கடலில் கரைக்கும் கடலுக்குமாய் தத்தளித்து கொண்டிருந்தாள் மேக விருஷ்டி.
சரியாக அந்நேரம் அலைபேசியின் வாயிலாக அழைத்து இருந்தான் நிவர்த்தனன். அவனும் நிகழ்ச்சியை மற்றொரு புறம் கேட்டுக் கொண்டுதான் இருந்தானே!
சகோதரியின் மனநிலை கருதியே அடுத்த நிமிடம் அழைத்து இருந்தான்.
“ஹலோ அக்கா…”
விழிகளில் நீரை வேகத் துடைத்தவள் “ஹ்ம்… சொல்லுடா நிவர்த்தனா வந்துட்டியா…?”
“அ… க்கா நீ ஓகே தான…” அவன் குரல் உள்வாங்கியது.
தமையனவன் எதை கருத்தில் கொண்டு கேட்கின்றான் என்ற அறிந்தும் “ஹிம்… எனக்கு என்னடா நான் ஓகே தான். இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கும் ஷாம்க்கும் கல்யாணம் சந்தோஷமா இருக்க, முதல்ல நீ எங்க இருக்க இன்னும் ஒன் ஹவர்ல கல்யாணம் டா.
நீ இன்னும் ரீச் ஆகவே இல்லையா” என வலியை உள்ளுக்குள் புதைத்து அவன் கேட்ட கேள்விக்கு பதிலை வழமை போல் திசை திருப்பினாள் மேக விருஷ்டி.
அதில் கடுப்பானவன், “அக்கா உன் கல்யாணத்தையும் அந்த ஷாம்பு பாட்டிலையும் கொண்டு தூக்கி குப்பையில் போடு. நான் என்ன கேட்டா நீ என்ன கேக்குற, இன்னைக்கு உன் ஷோ நானும் கேட்டுட்டு தான் வந்துட்டு இருக்கேன். எல்லா நாளும் முதல் ஹாலர் பேசுற இன்னுழவன் இன்னைக்கு பேசல”
“இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, ஏன்னா நீயும் அத கேட்டுட்டு தான் இருக்க. உண்மைய சொல்லு உன் கண்ணுல இருந்து இப்ப அவர நினைச்சி தண்ணி வடியல” என்றவன் கேட்கும் போதே அவள் விழி நீர் அவள் கன்னம் நனைத்திருந்தது.
குரலை செருமி கொண்டவள், “நிவர்த்தனா அவர் ஒரு ஷோவோட ஹாலர் அவ்ளோதான். அவருக்கு லைன் கிடைக்காம போயிருக்கும்.
அவர் மட்டும் கால் பண்ண மாட்டாரே நிறைய பேர் அட்ட டைம் கால் பண்ணுவாங்க தான. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். சரி அப்படியே நான் அவர லவ் பண்றேன்னே வச்சுக்கோயேன்…”
“ஐயோ என் மண்டு அக்கா நீ அவர லவ் பண்ணிட்டு தான் இருக்க…” அவன் பொறுமை இழந்து கத்த…
“முதல்ல நான் சொல்றத கேட்டு தொலைடா…” என அவனுக்கு இணையாக கத்தியவள்,
“இவ்வளவு பேசுற அவர் யார் எங்க இருக்காருன்னு கூட தெரியாது. தினமும் வயல்ல நின்னு பேசுறேன் வரப்புல நின்னு பேசின்னு சொல்லுவாரே தவிர இந்த ஊரில இருந்து பேசுறேன்னு சொன்னதும் இல்ல, நமக்கு தெரியவும் செய்யாது.
இப்படி இருக்கும்போது எப்படி நான் அப்பா, அம்மாகிட்ட போய் அவர லவ் பண்றேன் அவர தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல முடியும்.
உனக்கே தெரியும் அம்மாவை பத்தி, ஒராயிரம் கொஸ்டீன் அடுக்குவாங்க. வெறும் குரலை மட்டும் தான் கேட்டு இருக்கேன் யாரு என்னன்னே தெரியாதுன்னு சொன்னா அவ்வளவு தான்.” என்றாள் பெருமூச்சுடன்.
“ஒரு வேலை அவரு இருக்க இடம் தெரிஞ்சா நீ இந்த கல்யாணத்த நிறுத்திடுவியா சிசி…” அழுத்தமாய் ஆர்வமாய் கேட்டான் நிவர்த்தனன்.
“ஏன் அவரு எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமா..?” அடுத்த கேள்வியை அதே அழுத்ததுடன் கேட்டு வைத்தாள் மேக விருஷ்டி.
“ஹிம்… தெரியும் சிசி. இன்பாக்ட் அவர் உனக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்காரு…” என வார்த்தையில் பொடி போட்டான்.
அதை கேட்டதும் அவள் இதயம் நின்று துடிக்க, “என்னடா சொல்ற…!” விழிகள் அகல விரிந்தது.
“ஹிம்… ஆமா சிசி நேத்து இன்னுழவனே எனக்கு கால் பண்ணி இருந்தாரு. என் நம்பர் அவருக்கு எப்படி கிடைச்சதுன்னு எனக்கு தெரியல”
“என்ன நிவர்த்தனா சொல்ற உனக்கு அவர் கால் பண்ணி இருந்தாரா? சும்மா எதாவது சொல்லாத நிவர்த்து.. நான் போன வைக்கிறேன் நீ ஒழுங்கு மரியாதையா சீக்கிரமா வந்து சேரு” என இணைப்பை துண்டிக்க முற்பட்டாள்.
அவன் பேசினான் தன்னருகில் தான் எங்கோ இருக்கிறான் என்ற செய்தி அவள் உள்ளம் தன்னை குளிர செய்தாலும், இப்பொழுது நடக்கவிருக்கும் சூழ்நிலையை தாண்டி அவனிடம் தான் சேர்வது சாத்தியம் அல்ல என்ற எண்ணம் உள்ளுக்குள் வலுபெற மனதிற்குள் போட்டு புதைத்தவனை மீட்டெடுக்க முயற்சிக்காது மனம் கவர்ந்தவன் பற்றிய பேச்சினை இத்தோடு கத்தரிக்க முற்பட்டாள்.
“சிசி… சிசி… கட் பண்ணிடாத அக்கா…
உண்மையா தான் சொல்றேன் அவர் எனக்கு கால் பண்ணாரு. கிருஷ்ணகிரியில இருந்து இன்னுழவன் பேசுறேன் நேற்று எனக்கு கூப்பிட்டாரு.
அந்த நேரம் தான் நான் ஃப்ளைட்டுக்கு போடிங் பாயின்ட்ல இருந்தேன். என்னால தொடர்ந்து பேச முடியல அவர் கூட.
பட் அவர் பேசுனது எனக்கு கேட்டுச்சு. அதுக்கப்புறம் அவர என்னால காண்டாக்ட் பண்ண முடியல.
இப்போ உனக்கு கால் பண்றதுக்கு பைவ் மினிட்ஸ்க்கு முன்னாடி நான் அவருக்கு கூப்பிட்டு தான் உனக்கு கால் பண்ணேன். ஆனா அவருக்கு கால் ரீச் ஆகல.
இதெல்லாம் உன் மேல ப்ராமிஸ்கா. நான் பொய் சொல்லல அவரு உன் பக்கத்துல தான் இருக்காரு கிருஷ்ணகிரியில தான் இருக்காரு அக்கா” என அவள் போனை துண்டிப்பதற்குள் மூச்சு விடாது ஒப்பித்து விட்டான்.
ஆம் நேற்று இரவே சோமசுந்திரத்திடம் நிவர்த்தனனின் அலைபேசி எண்ணை வாங்கி இருந்தான் இன்னுழவன்.
அனைத்தையும் கேட்டவள் மனமோ நேற்று அவள் சந்தித்தவனிடம் சென்று திரும்பியது.
(அதான் உங்க இன்னு ஃப்ரெண்ட்ஸ்)
“அக்கா… லைன்ல இருக்கியா…?” எதிர்புறம் நிவர்த்தனன் குரல் எழுப்ப
அதில் தெளிந்தவள், “சரி… அவரு இங்க இந்த ஊர்ல தான் இருக்காரு. அதுக்கு நான் என்ன பண்ணனும் டா” என்றாள் சாதாரணமாக.
“சிசி… என்ன சிசி இப்பிடி கேட்குற. இப்ப கூட நீ இந்த கல்யாணத்த நிறுத்தலாம். நீ தான சொன்ன அவரு எங்க இருக்கார்னு கூட நமக்கு தெரியாது தெரிஞ்சாதான் ஏதாவது பண்ணலாம்னு”
“அப்படியே நம்ம பண்ணாலும் அவர் என்னைத்தான் விரும்புறார்ன்னு என்ன உத்தரவாதம் டா…” குரலை உயர்தினாள்.
ஆனால் அவள் மனசாட்சியோ காரி துப்பியது அவன் உன்னை தவிர வேற யாரையும் விரும்பவில்லை என்பதற்கு இன்று காலை நிகழ்ச்சியே சிறந்த சான்று என்று.
மேலும் பேச்சை தொடர்ந்தவள், “சரி இங்கதான் இருக்காரு அவரு எப்படி கண்டுபிடிக்க முடியும். இன்னுழவன் கிருஷ்ணகிரி அவ்வளவு தான்.” என்றாள் அவள்.
“ஐயோ அக்கா நம்ம மாமா அதான் அப்பாவோட மருமகன் அவர் அந்த ஊர் அதாவது சுத்துப்பட்டு ஊருக்கும் தலைவருக்கா.
அவர் கிட்ட நீ இன்னுழவன் பேர சொன்னாலே கண்டிப்பா கண்டுபிடிச்சு சொல்லுவாருக்கா.
அவர பத்தி அப்பா கூட நல்ல விதமா தான் என்கிட்ட பேசினார். எனக்கே அவர பார்க்கணும்னு ஆசையா இருக்கு. எப்படியும் நான் வரதுக்கு இன்னும் ஒன் ஹவர் ஆகும் அக்கா.
அதுக்குள்ள உனக்கு அந்த ஷாம்பு தாலி கட்டிடா… ப்ளீஸ் அக்கா எதாவது ஸ்டெப் எடுக்கா…” என மன்றடினான் நிவர்த்தனன்.
சகோதரி மண வாழ்க்கையை எப்படியாவது அவள் விரும்பியபடி அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற விடா முயற்சியில்.
“நிவர்த்தனா நீ என்ன நெனச்சிட்டு இருக்க. இவ்வளவு நேரம் இன்னுழவனுக்கு குட் சர்டிபிகேட் கொடுத்த. இப்ப அப்பாவுடைய மருமகனுக்கு குட் சர்டிபிகேட் கொடுக்கிற. நான் உன்கிட்ட இதெல்லாம் கேட்டேனா…” கடிந்து கொண்டவள்,
“சீக்கிரமா கல்யாணத்துக்கு வந்து சேரு தேவையில்லாம எதைப்பத்தியும் யோசிக்காதே. நீ சொல்றது மாதிரி அவர் உனக்கு கால் பண்ணி இருந்தாரு அப்படின்னா…
என் பக்கத்துல தான் அவரு இருக்காரு, உனக்கு போன் போட்டு விசாரிக்கிற அளவுக்கு அவர் வந்துட்டாரு அப்படின்னா, அவரே வந்து இந்த கல்யாணத்தை நிப்பாட்டட்டும் அப்போ பாத்துக்கலாம்.
எல்லாத்துக்கும் மேல இன்னொன்னு நான் சொல்லட்டுமா…
இன்னுழவன் கிருஷ்ணகிரி. அப்படிங்கற ஒரு காரணம் போதும், அவர் நல்லவராக இருந்தாலும் அம்மா இந்த ஊருக்கு என்ன கொடுக்க ஒத்துக்க மாட்டாங்க. நான் வைக்கிறேன் டா. என் காதல் கானல் நீராவே போகட்டும்” என அழைப்பை துண்டித்திருந்தாள் மேக விருஷ்டி மௌனமாய் தேகம் குலுங்க விழிகளில் நீர் சுரக்க.
“ஐயோ… அக்கா… ” என காருக்குள் இருந்து கத்தியவன் குரல் காற்றில் கரைய.. மீண்டும் இன்னுழவனுக்கு அழைப்பை தொடுத்தான். ஆனால் இப்பொழுதும் அவன் அழைப்பு கிடைக்க பெறவில்லை.
எப்படி கிடைக்கும் அதான் போன உடைஞ்சிட்டோம்ல…
இல்ல… இல்ல… நான் உடைக்கல உங்க இன்னு தான் உடைச்சான் ஃப்ரெண்ட்ஸ்.
எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல ஓகேய்.
Next ud conform marriage தான் friends wait an see 🙂.