விடாமல் துரத்துராளே 31

4.9
(28)

பாகம் 31

வொக் வொக் வொக் வொக் என்று தியா ஹாலை ஒட்டிய அறையில் வாந்தி எடுக்க,

ஹால் ஷோபாவில் அமர்ந்து இருந்த தேவாவின் காதிலும் அந்த சத்தம் விழுந்தது… சிரித்து கொண்டு இருந்தான்… நல்லா அனுபவி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுது அந்த வாயி அதற்கு தகுந்த தண்டனை தான்  என்று மறுபடியும் சிரித்தவன் நினைவு சற்று நேரத்திற்கு முன்பு சென்றது…

காய் வண்டிகார்க்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு தியாவை உள் இழுத்து வந்தவன் 100 கேரட்டுக்கும் 100 கிராம் கேரட்டுக்குமான வித்தியாசத்தை கூறி வழக்கம் போல் அவளை திட்டி தீர்க்க,

அச்சோ தியா இப்புடி மொக்கை வாங்கிட்டியே, இருந்தாலும் இந்த சின்ன தவறுக்காக அசிங்கப்பட்டு அல்வா செய்யாமால் விட மாட்டா இந்த தியா, எவ்வளவு இடர் வந்தாலும் கேரட் அல்வா செய்ய முன் வைத்த காலை பின்னெடுக்க மாட்டேன்… தலைகீழாக தான் குதிப்பேன் என்னும் ரீதியில் தேவாவின் திட்டுகளையும் தடுப்பையும் பொருட்படுத்தமால் அல்வா கிண்டும் முயற்சியில் இறங்க,

மனைவி அல்வா கிண்டும் அழகை பார்த்தவனுக்கோ பக்கென்று ஆனது… இன்னும் என்னென்ன கூத்து எல்லாம் பார்க்கனுமோ, நானே வம்பை விலை பேசி தாலி கட்டி வீடு வரை கூட்டி வந்து இருக்கேன்  என்று தன் தலையில் அடித்து கொண்டு மெத்தையில் அமர்ந்தான்…

சற்று நேரத்தில் பாவா என்றவளின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான் தேவா… வேர்க்க விறுவிறுக்க கையில் கேரட் அல்வா நிரம்பிய கிண்ணத்தை நீட்டியபடி நின்று இருந்தாள்…

உங்களுக்கு கேரட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்னு அத்தைம்மா சொன்னாங்க அதான் செஞ்சேன் சாப்டுங்க பாவா என்றாள்… நேற்று வரை அவள் வீட்டில் சிறு துரும்பை கூட நகர்த்தி இருக்க மாட்டாள்..  சமையலில் அ, ஆன்னா கூட தெரியாது. இருந்தாலும் அவனுக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தெரியாத ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டு செய்து இருக்கிறாள்.. காரணம் அவனே, அவனுக்காவே, அவன் மீது அவள் வைத்திருக்கும் காதலுக்காக, அவன் மீதான அவளின் காதலை நினைக்கவே சற்று கர்வமாக தான் இருந்தது… காதலிப்பதை விட இன்னோருவரால் தான் காதலிக்க படுகிறோம் என்பதே ஒரு வகை போதை…  அந்த போதை தேவாவை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது…

தியாவின் கையில் இருந்த அல்வா நிரம்பிய பவுலை தேவா கரங்கள் அனிச்சையாக வாங்கியது. அவனுக்காக அவனுக்காக மட்டுமே மெனக்கெட்டு செய்தது. கண்டிப்பாக சுவை சொல்லும்படியாக இருக்காது. ஆனாலும் அவன் பால் அவள் கொண்ட அன்பிற்காகவாது சாப்பிடலாம் என்று நினைத்த ஸ்பூனில் அல்வாவை எடுத்த தேவாவின் கண் முன் மனைவியின் அல்வா செய்முறை வந்து போனது. ஆத்தி உயிர் ரொம்ப முக்கியம் தேவா போர்ல செத்தா கெத்து அல்வால செத்தா அசிங்கம் வேணாம்டா என்று தடுத்தது… ஸ்பூனை கீழே வைத்தவன்

இவளை இப்புடியே விட கூடாது விட்டோம் தினம் இப்புடி தான் ஏதாவது கிறுக்கு தனம் பண்ணுவா என்ற தேவா தியா செய்த அல்வாவை அவள் வாயில்லே வைத்து அடக்க அதன் விளைவு தான் இந்த வாந்தி.

அறையில் இருந்து வெளியே வந்தவளை பார்க்க தேவாவுக்கும் கொஞ்சம் பாவமாக தான் இருந்தது…

ஷோபாவில் தொப்பென சோர்ந்து அமர்ந்தவளை பார்த்த தேவா , அம்மா சமைச்சு கொடுத்ததை சாப்பிட்டமா, காலேஜ் போய்டு வந்தமா, ப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஜாலியா சுத்துன்னாம்மான்னு இல்லமா, இந்த காதல், கல்யாணம், கேரட் அல்வா இது எல்லாம் தேவையா சொல்லு, கஷ்டமா இருக்கில்ல, இப்ப புரியுதா காதலும் கல்யாணமும் எவ்ளோ கஷ்டமின்னு,

ரொம்ப கஷ்டமா தான்  இருக்கு அந்த அல்வாவை  விட இந்த அட்வைஸ் கேட்கிறது. என்ன பண்றது பாவா? என்று பொய் சோகத்துடன் கேட்டவளை முறைத்தவன்

அப்புடியா? இந்த அல்வாவை சாப்டறது உனக்கு அவ்வளவு ஆனந்தமா இருக்குன்னா, இந்தா இதையும் சாப்பிடு என்று பவுலை தியா முகத்தருகே தேவா கொண்டு வர, தியா வொக் என்றபடி மறுபடியும் வாந்தி எடுக்க ஓடி போக,

எத்தனை தடவை வாந்தி எடுத்தாலும்  இந்த பவுல் காலியாகாமா உன்னை விடறதா இல்லைடி உன் கொழுப்பை குறைக்கிறேன் பாரு என்று கூறியவன் தனது மொபைலை எடுத்து சூர்யாவுக்கு அழைத்தான்..

சூர்யா அழைப்பை எடுக்கவில்லை… ச்சே காலையிலிருந்து கால் பண்ணிட்டே இருக்கேன் எடுக்க மாட்டேங்கிறான்… இந்த நாய்க்கு தீடிர்னு எப்புடி இவ்வளோ ரோஷம் வந்துச்சு. உப்பு ப்ரெண்டை மாத்திட்டானா  என்று தனக்குள் தேவா எண்ணிக் கொண்டு இருக்கையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க,

யாரா இருக்கும் என்ற யோசனை எல்லாம் தேவாவுக்கு கிடையாது… கண்டிப்பாக சூர்யாவாக தான் இருக்கும் என்று நம்பிக்கையுடன் கதவை திறக்க, சாட்சாத் சூர்யாவே தான்…

தேவா, எருமை எருமை உனக்கு என்ன கேடு வந்தது எத்தனை டைம் கால் பண்றது எடுத்து பேசமா சார் அப்புடி என்ன கழட்டிட்டு இருந்த என்று தேவா கேட்ட எதுக்கும் பதில் பேசாமல் சூர்யா வீட்டுக்குள் வர,

டேய் லூசு நான் கேட்கிறதுக்கு 

பதில் சொல்லமா இருக்க, காது இரண்டும் செவிடா போயிருச்சா?  மறுபடியும் தேவா கேட்க அமைதியாகவே நடந்து கொண்டு இருந்த சூர்யாவை பார்த்த தேவாவுக்கு கடுப்பாய் இருந்தது…

சூர்யாவின் கைப்பிடித்து தடுத்த தேவா “மகனே இப்ப நீ மட்டும் வாயை திறக்கலை அவ்ளோ தான” என்று மிரட்ட,

“முன்பு ஒரு காலத்தில் எனக்கு நண்பனாய் இருந்த நீங்க கால் பண்ணினா நான் எதுக்காக எடுக்கனும்” என கேட்டான் சூர்யா..

எதேய் முன்பு ஒரு காலத்திலா அப்ப இப்ப நான் உன் ப்ரெண்ட் இல்லையா? 

“இல்லை, நேத்து இதே இடத்தில்ல நம்ம இரண்டு பேருக்கும் நடுவுல இனி எதுவும் இல்லைன்னு நான் தான் சொன்னே, நம்ம நட்பு முறிஞ்சு நாலு மணி நேரத்திற்கு மேலாச்சு மிஸ்டர் தேவா”,

“டேய் நேத்து நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன்டா, சாரிடா என்றபடி தேவா சூர்யா தோள் மீது கைப்போட வர,

தட்டி விட்ட சூர்யா “உங்க சாரியும் வேண்டாம், பூரியும் வேண்டாம்…  நான் உங்களை டைவர்ஸ் பண்ணினது பண்ணினது தான்.. என் முடிவை மாத்த முடியாது”..

“அப்ப அவ்ளோ தானாடா”

“ஆமா அவ்ளோ தான் கதம் கதம்” என்றான் சூர்யா..

“அவ்ளோ ரோஷக்காரனுக்கு இங்க என்னடா வேலை தேவா நக்கலாக கேட்க,

“நான் ஒன்னும் உங்களை பார்க்க வரலை முன்னாள் நண்பரே, இது என் தங்கச்சி வாக்கப்பட்ட வீடு, அதான் வாக்கப்பட்ட இடத்தில்ல தங்கச்சி சந்தோஷமா இருக்கா, இல்லை ஏதாவது குறை இருக்கான்னு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்”.

பாப்பு பாப்பு எங்கமா இருக்க என்ற சூர்யா உள்ளே போக,

பெரிய பாசமலர் சிவாஜி சாவித்ரி ஓவரா சீன் போடுதுங்க தேவா கடுப்பில் முனுமுனுக்க,

பொறாமையில் பொசுங்காதீங்க முன்னாள் நண்பரே என சூர்யா தேவாவிடம் பேசி கொண்டு இருக்கும் போதே அறையில் இருந்து வெளி வந்த தியா, “டேய் அண்ணா வந்துட்டியா”?

“ஏன் பாப்பு கோவப்பட்டு போன அண்ணன் வர மாட்டேன் நினைச்சியா”?

ச்சே அது எல்லாம் நினைக்கலை! நீ வருவேன்னு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரமா வருவேன்னு தான் எதிர்பார்க்கல” என்று தியா கூறியதும் தேவா சிரிக்க,

அதை பார்த்த சூர்யா இங்க ஒரே துஷ்டசக்தியா இருக்கு பாப்பு நாமா உள்ளே போய் பேசிக்கலாம் என தியா அருகே வந்தவன்,

வாந்தி எடுத்து சோர்ந்து இருத்தலின் முகத்தை பார்தது “உனக்கு என்னாச்சுமா ஏன் இப்புடி இருக்க, முகமெல்லாம் டல்லா இருக்கு என்ன ஆச்சுமா” என்று பாசமாக தலையை வருடி கேட்க,

“என்கிட்ட எதுவும் கேட்கதா எல்லாம் உன் ப்ரெண்ட் கிட்டயே கேளு, அவரால தான் நான் வாந்தி எடுத்து வாந்தி எடுத்து சோர்ந்து போயிட்டேன் என்று தியா முற்பாதியை விடுத்து பிற்பாதி கதை மட்டுமே கூற, கேட்ட சூர்யாவோ தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு அதிர்ச்சியாகி,

தேவா தியா முகத்தை மாறி மாறி பார்க்க,

“இதுக்கு எதுக்கு இவன் இவ்ளோ ஷாக் ஆகுறான்” என்று தேவா நினைக்க,

தேவா முகத்தை பார்த்த சூர்யாவோ “கல்யாணத்தை பிடிக்கலை, இவளை பிடிக்கலைன்னு எல்லார் முன்னாடியும் சீன் போட வேண்டியது, அப்புறம் சான்ஸ் கிடைச்சா போதும் காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி ஊட்டி ரோஜா பூ மாதிரி இருந்த புள்ளையை கசக்கி காகித பூவா ஆக்கி வச்சி இருக்கான்” என்று சூர்யா தேவா கேட்கும்படி முணுமுணுக்க,

முதலில் அவன் சொல்வது புரியமால் முழித்த தேவாக்கு சில விநாடிகள் கழித்து அர்த்தம் புரிய “டேய்” என்றபடி பல்லை கடிக்க,

எப்புடியோ நல்லா சந்தோஷமா இருந்தா சரி தான் என்றவன் “எல்லாம் ஓகே அதெப்புடி ஒரே நாள்ல வாந்தி இது எப்புடி சாத்தியம்? சைன்ஸ் ப்ராகராம் வாய்ப்பில்லையே! அப்புறம் எப்படி? என்று தனது நாடியில் கை வைத்து யோசித்தவன், 

ஏதும் நைட்டோட நைட்டா ஏதாவது சித்த வைத்தியர்கிட்ட சிட்டுக்குருவி லேகியம் வாங்கி சாப்டியா என்று கேட்க,

தியா இவன் என்ன பேசுறான் என்ற ரீதியில் புரியாமல் நின்று இருக்க,

டேய் உன்னை என்ற தேவாவோ சூர்யாவை அடிக்க பக்கத்தில் ஏதாவது பலமான பொருளை தேடியவன் கண்ணில் அது சிக்கியது… செத்தடா மகனே என்று எண்ணிய தேவா சிரித்தபடியே உனக்கு வேணுமா மச்சான் என்று சூர்யாவை பார்த்து கேட்டான்..

இன்னும் வச்சு இருக்கியா, 

ம்… நிறையா இருக்கு அந்த அல்வா கிண்ணத்தை பார்த்தபடி தேவா சொல்ல,

எனக்கு கொடுடா என்று ஆர்வமாக தேவா அருகில் வர,

ஆ… நீ தான் என் ஃப்ரெண்ட் ஷிப் வேணாம் என்னை டீவோர்ஸ் பண்ணிட்டாத சொன்ன, உனக்கு எதுக்கு தரனும், தர மாட்டேன் போ,

அச்சோ தேவா நான் சும்மா லொலொய்க்கு சொன்னேன்டா.. நீ தான்டா என் நண்பன்.. நீ தான்டா என் உயிரு.. நீ தான்டா என் உலகம்

போதும் போதும் கண்ணை மூடி ஆ…. சொல்லு என்று தேவா கூறியபடி சூர்யா நிற்க, தியா செய்த அல்வாவை அப்புடியே சூர்யா வாயிலும் தேவா வைத்து அடைத்தான்….

தூ தூ தூ வொக் என்ன கருமம்டா இது ரொம்ப கேவலமா இருக்கு… இதை எப்புடிடா சாப்ட என்று சூர்யா கூறியதும் தேவா சிரிக்க ஆரம்பித்தான்…

சூர்யாவை முறைத்த தியாவோ நான் செஞ்ச அல்வாவை கருமம்னா சொல்ற என்று தலையில் கொட்ட,

என்னது இது அல்வா வா, அப்ப லேகியம் இல்லையா,

இல்லை நான் செஞ்சது என்றவள் காலையில் கேரட் வாங்கிய கதையில் இருந்து அனைத்தையும் கூறி முடித்தாள்…

அதை கேட்ட சூர்யா அமைதியாக இருக்க, என்னடா அண்ணா தங்கச்சி பல்பு வாங்கினது நினைச்சு பீல் பண்றியா, 

இல்ல பாப்பு இப்புடி 100 கேரட்டுக்கும் 100 கிராம் கேரட்டுக்கும் வித்தியாசம் தெரியாத உன்னை புடிச்சு கட்டி வச்சு என் நண்பன் வாழ்க்கையை கெடுத்துட்டேங்கிற குற்ற உணர்ச்சிமா என்றவனை தியா அடிக்க விரட்ட சூர்யாவோ அவள் கையில் சிக்காமல் ஓட …

இவர்களை பார்த்த தேவாவோ சில வருடங்களுக்கு பிறகு விழுந்து விழுந்து  வாய் விட்டு மனதார சிரிக்க ஆரம்பித்தான்…

தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!