உடையவள் பார்வையில் அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்து இனிதுழனியை காண்பித்தவனாய், “என்னோட செல்ல தங்கச்சி” என இனிதுழனியை அறிமுகப்படுத்த.. அதை கேட்ட நிவர்த்தனன் வாயை முடியிருந்தான் பட்டென்று.
அவர்களோடு இனிதுழனியை தன்னோடு அணைத்து நின்ற அகரனோ “டேய் இவ என்னோட செல்ல தொங்கச்சியும் தான் உனக்கு மட்டும் இல்ல” என அவர்களோடு வந்து நின்றான். அதை கேட்டு மேலும் அதிர்ந்து நின்றான் நிவர்த்தனன்.
“டேய் பேராண்டி வாசல்ல வைச்சே இன்னர் ரோ கொடுத்தது போதும்டா கூட்டிட்டு வாடா என் பேத்திய உள்ள” என வந்து நின்றார் அம்பிகாமா.
“ஐயோ ஆத்தா அது இன்ரோ…” என அகரம் எப்போதும் போல் திருத்தி தலையில் அடிக்க,
“ஹான்… அந்த ரோ தாண்டா… நீ வாடி தங்கம் இவனுங்க இப்படி தான், என் இங்கிலீபிசு மேல பொறாமைபட்டு பேசுவானுங்க வெஸ்ட் பாலோஸ்” என மேக விருஷ்டி கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார் உள்ளே.
அனைவரும் வீட்டிற்குள் சென்றிருக்க , மைதிலி சோமசுந்தரம் மட்டும் வாசலிலே நின்று கொண்டிருந்தனர் உள்ளே செல்லாது தலை குனிந்து.
உள்ளே வராது நின்றவர்களை கவனித்து திரும்பிப் பார்த்த இன்னுழவனோ “என்ன மாமா தயக்கம்” என்றான் சப்த குரலில் அவர்கள் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு.
சோமசுந்தரமோ சற்று தயக்கத்துடனே அவர்களுக்கு பின்னே அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த சக்திவேலை பார்க்க… அவர் பார்வை செல்லும் திசையைப் பார்த்தான் இன்னுழவன்.
குரலை செரும்பியவனாய் “நீங்க இவ்வளவு நாள் உங்க மச்சான் வீட்டுக்குள்ள வரதுக்கு தயங்கி இருக்கலாம். ஆனா இன்னைல இருந்து இது உங்க மருமகன் வீடு. உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கீங்க.
அதுக்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு உள்ள வாங்க. எந்த தயக்கமும் வேண்டாம் யாருக்கும் இனியும் பயப்பட வேண்டாம். முக்கியமா அத்தை உங்களுக்கு தான்” என சென்று அவர்கள் கையைப் பிடித்து அழைத்து வந்தான் இன்னுழவன்.
அதை கண்டு மேக விருஷ்டி விழிகள் நிம்மதியில் பனிக்க, அவளையே பார்த்து உள்ளே அழைத்து வந்தவன் விழி சிமிட்டி கொண்டான் நான் இருக்கிறேன் என காதல் விழி பாஷையில்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலோ அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்து கொண்டார் முக சுழிப்புடன்.
பின் மேக விருஷ்டி விளக்கு ஏற்றி சாமி கும்பிட வைத்து அமர வைத்தனர் ஹாலில்.
அனைவரும் அமர்ந்திருக்க, பொண்ணு மாப்பிள்ளைக்கு பால் கொடுக்கும் வைபவத்திற்காக அனைத்தையும் கோதாவரி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
நிவர்த்தனன் அருகில் வந்து அமர்ந்த அகரனோ அவனை பார்த்து சிரிக்க “ஹாய்… நான் நிவர்த்த…” இடை நிறுத்தி மேக விருஷ்டியை கண்களால் காண்பித்து “தம்பி… ஆல்ரெடி எனக்கு தெரியும்” என்றான்.
“ஓ… ஆனா நீங்க…”
“நான் இன்னுழவன் கிளோஸ் ஃப்ரெண்ட்” என அவனை அறிமுக படுத்த, “என்னோட ரெண்டாவது பேரண்டா” என அழுத்தமாக கூறி குறிக்கிட்டார் அம்பிகாமா நிவர்த்தனன் மறுபுறம் அமர்ந்தவராய்.
அதை கேட்டு நிவர்த்தனனோ தங்கள் வீட்டில் ஒருத்தன் என சொல்லாமல் கூறுகிறார் உள்ளுக்குள் புரிந்து சிரித்துக் கொண்டவன், “அப்போ நான் உன் பேரன் இல்லையா பாட்டி…?” என உதட்டை பிதுக்க, “நீ நம்போர் த்ரீ டா என் செல்ல பேராண்டி” என அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார்.
அதில் இதழ் பிரிய சிரித்தவன் அவர் கன்னம் கிள்ளி முத்த கொடுக்க, “டேய்… டேய்… என்னடா பண்ற என் மேக்கப்பு பாயில் ஆகிரும் டா… என்றவர் என்ற கன்னம் எப்போதும் உன் தாத்தனுக்கு மட்டும் தான் டா” என வயதிலும் வெக்கத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டார் புன்னகையுடன்.
“ஓ… தாத்தா… பட்டா போட்டாறா…” கள்ளி என அவரை தோளோடு இடித்து கொண்டான் நிவர்த்தனன்.
அனைவரும் தங்களுக்குள் பேசி கொண்டிருக்க…
இப்பொழுது அகரனோ நிவர்த்தனன் புறம் திரும்பியவனாய், “ஏன் டா உனக்கு இந்த தயக்கம் எல்லாம் இல்லையா?” கேட்டான் நக்கலாய்.
அவனோ பார்வையின் அச்சாரத்தை இனிதுழனி என் மேல் போட்டவன் “ச்ச… ச்ச… நான் என் மாமனார் வீட்டுக்குள்ள வர்றதுக்கு எதுக்கு தயங்கணும்” என்றான் சற்று சத்தமாய் அகரன் தொடை தட்டி.
அவன் கூறியதில் அனைவரும் அமைதியாகி விட, “ஏதேய் மாமனாரா…!” என அகரம் புருவம் தூக்க, இன்னுழவனோ புருவம் வளைத்து அவனைப் பார்த்தான் கூர் விழிகளுடன்.
“போச்சு டா…! இப்பதான் அமைதி ஆகணுமா எல்லாரும்” அவன் மனதுக்குள் புலம்ப…
“புலம்புனது போதும் சமாளிச்சு தொலை டா… ரெண்டு பேரும் உன்னத்தான் வெட்டவா குத்தவா ரெஞ்சுல பாக்குறானுங்க” என அவன் தொடையை கிள்ளியிருந்தார் அம்பிகாமா.
அதில் தெளிந்தவன், “மா… மா… மாமா… அது… மேக விருஷ்டியை அவன் பரிதவிப்புடன் பார்க்க, சாமாளிச்சி தொலை டா என அவள் கண்ணால் செய்கை மொழி பேச…
அவன் பார்வையையும் மேக விருஷ்டி பார்வையையும் ஓரக் கண்ணால் இன்னுழவன் குறித்து வைத்தாலும் பார்வையை நிவர்த்தனன் மேல் இருந்து அகற்றவில்லை.
“அது… மாமா… என் மாமா வீடு தானே இது! என் அக்காவ கல்யாணம் முடிச்சு கொடுத்திருக்க மாமா வீடு. அது மட்டும் இல்லாம மாமாவோட சாரி அக்காவோட மாமா எனக்கு மாமனாரு தான.. அப்படி சொன்னேன். மற்றப்படி ஒன்னும் இல்ல” என்றவன் திக்கி திணறி சமாளித்து பெருமூச்சு விட்டான்.
அதைக் கேட்டு ஆமோதிப்பாய் தலை அசைத்து மௌனமாய் அனைவரும் சிரித்துக்கொள்ள, மேக விருஷ்டியும் தமையனின் திண்டாட்டத்துடன் கூடிய சமாளிப்பை கண்டு பெருமுச்சி விட்டுக்கொண்டாள் ஒருபுறம் உள்ளுக்குள்.
அவனை ஏற இறங்க பார்த்தவரோ, “அக்கா நல்ல வாழனும்னு வேண்டிகிட்டியா…? இல்ல அக்கா நாத்தனார் கூட நீயும் நல்லா வாழனும்னு வேண்டிக்கிட்டியா டா…?” கேட்டார் குதற்க்கமாய்.
“பாட்டி… ” அவன் அதிர
விழிகளை சிமிட்டியவர் “அடேய் உன் மைண்ட் வாய்ஸ் ஏன் காது சவ்வு கிழியூது டா…” என்றார் ஜூசை குடித்தவராய்.
பாலையும் பழத்தையும் கலந்து கொண்டு வந்த கோதாவரி இனிதுழனி கையில் கொடுத்தார்.
இன்முகத்துடன் இனிதுழனி முதலில் ஒரு தேக்கரண்டி எடுத்து மேக விருஷ்டிக்கு ஊட்ட போக சட்டென அவள் கையை பிடித்து தடுத்திருந்தான் நிவர்த்தனன்.
அவனின் இச்செயலை யாரும் எதிர்பாராது அதிர்ந்தவனை பார்க்க… இனிதுழனி தன் கரம் பிடித்திருக்கும் அவன் விழிகளை புருவம் உயர்த்திப் பார்த்தாள் முகமது சிவக்க.
அவள் பார்வையில் அவள் எண்ணம் புரிந்தவன் சட்டென்று அவள் கையை விடுவித்து சுற்றி அனைவரையும் பார்த்தான்.
அவர்களும் அவனை தான் விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தனர்.
எச்சிலை கூட்டி விழுங்கி அனைவரையும் பார்த்தவன், “தப்பா நினைச்சுக்காதீங்க என் சிசிக்கு வாழைப்பழம் அலர்ஜி. ஒரு சின்ன பீஸ் சாப்பிட்டாலும் அவளுக்கு ரெண்டு நாள் பேச முடியாது த்ரோட் இன்ஃபெக்ஷன் ஆயிரும்.
அதனால தான் தடுத்தேன், யாரும் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. இனிதுழனி பார்த்தவன் சாரி நான் இதுக்காக தான் உங்க கையை பிடிச்சேன் ரியலி சாரி” என்றவன் தடுமாற…
தன் தம்பியின் தடுமாற்றத்தை பார்த்து சகோதரியவள் அமைதியா இருப்பாளா!
சட்டென்று எழுந்தவள், “அவன் மேல இது தப்பு இல்ல உண்மையிலேயே எனக்கு இது சாப்பிட்டா ஒத்துக்காது” என்ற தளர்ந்த குரலுடன் மேக விருஷ்டி.
இப்பொழுது அதிர்ந்து பார்த்த அனைவரின் விழிகளும் பிரமித்தது.
ஒருத்தரை ஒருத்தரை விட்டுக் கொடுக்காது மேலும் ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்ட புரிதலையும் அவர்களின் சகோதரத்துவத்தை கண்டு.
இன்னுழவன் மேக விருஷ்டி கையை பிடித்து அமர வைக்க,
அம்பிகாமாவோ, “இதுல என்ன இருக்கு டா… ஒத்துக்காதத சாப்பிட வேண்டாம். ஒன்னும் பிரச்சனை இல்ல. பழம் சாப்பிடலன்னா என்ன பால குடிச்சி பழமா நினைச்சி பக்கத்துல இருக்க பேரன கடிச்சுக்கோ” என்றவர்…
“நீ எதுக்குடா இப்படி தொண்டைல கொழுக்கட்டைய முழுங்குன மாதிரி குரல் விக்கி போய் நிக்கிறவன் வந்து உட்காரு” என நிவர்த்தனனை இழுத்து உட்கார வைத்து மென்மையாகச் அச்சூழலை கொண்டு சென்றார் அம்பிகாமா.
அவர் பேச்சில் அனைவரும் சிரித்து விட அதன் அர்த்தம் புரிந்து மேக விருஷ்டிக்கோ நாணத்தில் பூமிக்கும் செல்லாத குறைதான்.
“நான் இருக்கேன் டி கடிச்சுக்கோ… எவ்வளவு வேணாலும், எங்க வேணாலும்” அவள் காதுக்குள் கவி பாடினான் இன்னுழவன் மோக துளியாய்.
அவன் பேச்சில் கன்னம் சிவக்க வெக்கி தவித்தவள், “உழவா…” என அவன் தொடையில் மெல்ல தட்ட,
“நான் ரெடி உழுது பாரு டி…” என்றவனோ, யாரும் காணாது அவள் இடை சேலையோடு கரம் பதித்து விரல்கள் விரக தாபமாய் உலாவ… அவளோ அவன் கரம் பற்றி அடி முதல் நுனி வரை சிலிர்க்க கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள்.
மறுபுறமோ “எப்படியே எல்லாரும் முன்னாடி என் பேத்தி கைய புடிச்சுட்ட. அதுவும் என் பேரங்க முன்னாடி பிடிச்சிட்ட…” கேட்டார் அம்பிகாமா மௌனமாய் நிவர்த்தனனிடம்.
“ஐயோ பாட்டி… நான்…” என சத்தம் இல்லாதவன் அதிர,
“விடுடா… விடுடா… என்னைக்கா இருந்தாலும் பிடிக்க போறவன் தான…” என அவனை வாரி அவனே சொல்லாத அவன் காதலுக்கு சூசகமாக பச்சை கொடியை காண்பித்தார் கண்ணடித்து.
உடையவன் விரல்களின் விளையாட்டால் கூச்சத்தில் நெளித்து கொண்டிருந்தவள் முன் மீண்டும் பாலை நீட்டியிருந்தாள் இனிதுழனி.
மேக விருஷ்டி தலை நிமிராதிருக்க, அவளை எப்பிடி நிமிர சொல்வது என இனிதுழனிக்கோ சற்று சங்கடமாகி போனது.
மனமானது அண்ணி என அழைத்தாலும்.. முடியாது போனது வாய் மொழியால் .
அதே சங்கடத்துடன் அருகில் அமர்ந்திருந்த இன்னுழவனை பார்த்தாள் விழிகள் குளமாக.
இங்கோ, “என் வாய திறந்து நிமிர்ந்து அண்ணி பாருங்கன்னு சொன்ன குறைஞ்சி போயிடுவாளா…?” என மனதுக்குள் நிவர்த்தன சாடிக் கொள்ள, “ஏஞ்சல் நிமிர்ந்து பாருமா…” என்றான் மென்மையாய் தங்கையின் தயக்கம் புரிந்து இன்னுழவன்.
அதில் மேக விருஷ்டி நிமிர்ந்து பார்த்தாள் இனிதுழனியை.
பார்த்தவள் விழிகள் சந்தேகத்துடன் கூர்மை பெற்றது அவள் வதனம் கண்டு.
ஏனெனில் உதடுகள் சுருங்கி பசை போல் அழுத்த ஓட்டியிருக்க, விழிகள் சற்று கலங்கியிருக்க, தொடை குழி ஏறி இறங்க வாய் திறக்காது தயக்கத்துடனும் சங்கடத்துடனும் நின்றாள் இனிதுழனி.
அதே சந்தேகத்துடன் தான் விழிகளில் தீவிரம் குடியேற பார்த்துக் கொண்டிருந்தான் நிவர்த்தனனும் அவளை.
இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என மேக விருஷ்டிக்கு கேள்வி எழுந்தாலும் அதை கேட்கும் தருணம் இது இல்லை என நினைத்தவள், முதலில் அவள் தயக்கத்தை சமன் செய்ய முனைந்தாள்.
இதழ் விரிய மேக விருஷ்டி புன்னகை உதிர்க்க, இனிதுழனியின் வாடிய முகம் பூவாய் மலர இன்முகத்துடன் பாலை ஊட்டினாள்.
பின் சகோதரனுக்கும் ஊட்டி விட்டு பழத்தை மேக விருஷ்டி தவிர்த்து இன்னுழவன் கொடுக்க அவன் வேண்டாம் என்று மறுத்து விட்டான்.
இதற்கு இடையில் நிவர்த்தனனோ, “ஏன் மச்சான் உங்க தங்கச்சி பேசவே மாட்டேங்குறாங்க? நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன் ஒரு வித்யாசமா பிக்கேவ் பன்றாங்க. இன்னைக்கு ஏதும் மௌன விரதமா அவங்க?” கேட்டான் அகரனிடம் ஆர்வமாக உள்ளுக்குள் காதலி மேல் உள்ள அக்கறையுடனும்.
அவனை பார்த்து முறைத்து வைத்த அகரனோ, “அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற…” என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான் கடுமையாக.
“அக்காக்கு பிடிக்காத ஐட்டம் எல்லாம் இன்னைல இருந்து மாமாக்கும் பிடிக்காது போலயே… அக்கா மேல அவ்வளவு லவ்வு…” என்று நந்தனா கேலி செய்து சிரிக்க, அனைவரும் சிரித்துக் கொண்டனர்.
எனினும் நிவர்த்தனன் விழிகளோ இனிதுழனியை தான் ஆராய்ச்சியாய் மேற்கொண்டன.
“ஐயோ எனக்கு பிடிக்காதுன்னு இல்ல, எனக்கு ஒத்துக்காது நீங்க சாப்பிடுங்க” என்று மேக விருஷ்டி விழிகள் தவிப்பை உதிர்க்க,
இன்னுழவனோ அவள் கை பிடித்தவன் “ஜில் ஏஞ்சல் எதுக்கு இவ்வளவு பத்தட்டப்படுற அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, எனக்கு இப்ப சாப்பிட தோணல” என மென்னகை உதிர்த்தான்.
“நிஜமா…” அவள் விழிகள் மின்ன,
“நிஜமா… என்றவன் பிடரி வருடியவனாய் சரி பழம் வேண்டாம் அதுக்கு பதிலா எப்போ என்ன சாப்பிட போற” கொடுப்புக்குள் நகைக்க…
அவன் புறம் வளைந்து அவன் மார்பில் சாய்ந்தவள் “டேஸ்ட்டா இருப்பிங்களா…” என்றவள் விழிகள் மேலே எழுந்ததும் மோகனம் துளிர.
கீழ் இதழ் கடித்து அவள் இடையோடு இழுத்து தன்னோடு அணைத்தவன், “சாப்பிட்டா தான டி தெரியும் என்னோட டேஸ்ட்டு எப்பிடின்னு” என அவள் இதழில் பார்வையை பதித்தவன் விழிகளோடு அவள் விழிகள் கலந்தன சுற்றம் மறந்து.