5
(2)

*°•°○ விஷ்வ மித்ரன் ○°•°*

 

~~~~~~~~~~~~~~~~~~~~

 

 அத்தியாயம் 13

 

தன்னவளின் ஃபோட்டோவை மார்போடு அணைத்துக் கொண்ட மித்ரன் எதிரில் நிற்பவளைக் கண்டு “அம்முலு” என்று இன்பமாய் அதிர்ந்து போனான்.

 

கதவில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரனின் இதய நிலவானவள்! அம்முலுவாய் அவனுள் பதிந்து விட்ட அக்ஷரா!

 

வெகு நிதானமாக அவள் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வர இவனுக்கோ இதயம் நொடிக்கு பல தரம் துடிக்கத் துவங்கியது. பல மாதங்களுக்குப் பின் அவளைக் காண்கின்றான்.

 

எல்லையில்லா இன்பம் கரை புரண்டாலும் அவள் கண்களில் தெரிந்த வலி மித்ரனை குத்தி கிழித்தது.

 

“ஹலோ! ரூமுக்கு வந்தவங்கள வான்னு கூப்பிடுற பழக்கம் கூட கிடையாதா? மிஸ்டர் அருள் மித்ரன்” என்று கேட்ட அக்ஷராவின் ஒட்டுதல் இல்லா அழைப்பில் இனம் புரியாத வலி அவனுள் ஊடுறுவியது. 

 

சட்டென தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “இ..இல்ல அக்ஷு! சட்டுனு வந்து நிற்கவும் எதுவுமே புரியல. அதான் திகைச்சுப் போயிட்டேன். வாடா” என புன்னகை முகத்துடன் அழைத்தான் மித்து.

 

“இஸ் இட்?” என ஒற்றைப் பருவம் தூக்கி கேட்டு விட்டு “சார் உங்க ஆளு கூட இல்லை இல்ல.. உங்க அம்முலு கூட டூயட் பாடிட்டு இருந்தீங்களோ? நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றவள் குரல் நக்கலாய் ஒலித்தது.

 

சற்றே தடுமாறிப் போனவனின் கைகளோ போட்டோவை இறுகப்பற்றிக் கொள்ள “ஏன் அக்ஷு இப்படி யார் கூடவோ பேசற மாதிரி மரியாதை எல்லாம் கொடுத்து பேசுறே?” மெல்லிய குரலில் தான் வினவினான்.

 

“கல்யாணத்துல விருப்பமில்லாம நிப்பாட்ட சொன்ன நீங்க எனக்கு யாரோ தானே? அன்ட் எனக்கு ஹஸ்பண்டா வரப்போறவர் கூட தான் நீ வானு செல்லமா பேசுவேன், கொஞ்சுவேன்” நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை காதோரம் சொருகி விட்டபடி பேசினாள் பெண்ணவள்.

 

கண்களை இறுக மூடிக்கொண்டான் மித்ரன். அவளுக்கு என்னவென்று பதில் சொல்வது? ‘பூர்ணிக்காக உன்னை வேண்டாம் என்று சொன்னேன். இப்போது அவளது வாழ்வு சரியாக விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இப்போது நீ வேண்டும் அக்ஷு’ என்று கூறுவதா?

 

வேண்டாம் எனும் போது தூக்கி எறிவதற்கும், வேண்டும் எனும் போது தூக்கிக் கொஞ்சுவதற்கும் நான் என்ன பொம்மையா இன்று அவள் கேட்டால் என்னவென்று பதிலளிப்பான் அவன்?

 

மித்ரனை புருவம் நெறித்துப் பார்த்துக் கொண்டு “மித்ரன் என்னாச்சு?” அக்ஷரா புரியாமல் பார்க்க, படக்கென விழி திறந்து அவளை நோக்கி “ப்ளீஸ் அக்ஷு! என்ன ஹேர்ட் பண்ணாத. முன்ன மாதிரி என் கூட பேசலாமே. மூனாவது மனுஷன் கூட பேசுற மாதிரி நீ பேசுறது எனக்கு என்னமோ போல இருக்கு” என்று முகம் சுருங்கக் கூறினான் அவன்.

 

அக்ஷரா “ஓகே அத விடுங்க. என்ன வேணாம்னு சொல்லிட்டீங்க… யாரோ அம்முலுவ லவ் பண்றேன்னு சொன்னீங்களே அவங்கள நா பாக்கணும் என்னை விட உலக அழகியான்னு” என்று கேட்டவாறே அவனை நெருங்கி கையில் இருந்த போட்டோவை பறிக்க எத்தனிக்க,

 

 அவனோ பதறியபடி கைகளை மேலே உயர்த்திப் பிடிக்க, “காட்டு மித்து. டேய் காட்டுடா” என துள்ளிக் குதித்து எவ்வளவு தான் முயன்றாலும் அவளால் அதை பிடிக்க முடியவில்லை.

 

அத்தனை நெருக்கத்தில் பேரழகுப் பெட்டகமாக நிற்கும் தன்னவளை விழியெடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் மித்ரன்

 

ஒரு கட்டத்தில் முடியாது சோர்ந்து போனவளுக்கு யோசனை உதிக்க, அவன் மார்பில் பச்சக்கென முத்தமிட்டாள். தன்னவள் தரும் முதல் முத்தம்! அதுவும் இதயத்தில் மின்சாரமாய் பாய அவன் கைகளில் இருந்து போட்டோ நழுவ, அதை தனது கைகளில் வாங்கிக் கொண்டு அவனுக்கு விளங்குமாறு வைத்தவள் அதனைப் பார்க்கவே இல்லை.

 

“ஏன் அக்ஷு இதை பார்க்கலையா?” தன்னை மீட்டுக் கொண்டவன் இமை இடுங்கத் தான் கேட்கலானான்.

 

தலையை இடம் வலமாக ஆட்டி “நோ! எதுக்கு நான் பார்க்கணும்? இதுல இருக்கிற உன் ஆளு யாருன்னு எனக்கு தெரியும். உன்னோட அம்முலு வேற யாருமில்லை மித்ரன்! யார் கிட்ட கல்யாணத்தை நிறுத்திடுனு சொல்லி மனச உடைச்சியோ அதே அக்ஷரா தான். யாஹ்ஹ் இட்ஸ் மீ” என்று கூறியவளின் முகம் இளகி, பின் இறுகியது.

 

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. தனது அம்முலு அவளே தான் என்பதை அவள் எப்படி அறிந்தாள்?

 

“அக்ஷு! உ…உனக்கு எப்படி தெரியும்?” தடுமாற்றத்தில் வார்த்தைகள் வராது சூழ்ச்சி செய்தன.

 

“சொல்லவே வேணுமா?” என்று புருவம் உயர்த்திட, “ம்ம்ம்” என்று சொன்னான் மித்ரன்.

 

இதழ்களில் விரக்திப் புன்னகை நெளிய “சொல்லுவேன். நீ உள்ளுக்குள்ள காதல வச்சுட்டு அதை சொல்லாமலே கொன்னுட்ட. அது மாதிரி நான் கண்டிப்பா இருக்க மாட்டேன். மூணு மாசத்துக்கு முன்னாடி உன் வாயால நான் அம்முலுங்கற அழைப்பை கேட்டிருக்கேன்” என்று உணர்வற்ற குரலில் கூற,

 

“வாட்ட்ட்? மூணு மாசத்துக்கு முன்னாடி நான் யூ.கேல தானே இருந்தேன். இண்டியா வரலையே” குழப்பத்துடன் அவளை ஏறிட்டான் ஆடவன்.

 

அக்ஷரா “நீ இங்க வரல. பட் நான் யூ.கே வந்தேன். அது உனக்கும் தெரியும் தானே? இதையும் இல்லன்னு சொல்லிடாத” என்று கூற மித்ரனுக்கோ அதை கேட்கும் போதே உடல் நடுங்கியது.

அன்று நடந்ததை மறக்க முடியுமா என்ன? அவன் மனக்கண்ணில் அக்காட்சியின் நிழலாட அக்ஷராவும் சொல்லத் தொடங்கினாள்.

 

பிஃபோர் த்ரீ மந்த்ஸ் இன் யூ.கே

 

தலைவலி பாடாய்ப்படுத்தியதில் சற்றே தாமதமாய் எழுந்து கொண்டான் மித்ரன். சட்டென்று ஃபோன் ஒலிக்க ஹரிஷின் எண்ணைப் பார்த்து “ஹலோ டாடி” என தூக்க கலக்கத்தில் பேச,

 

“மித்து தூங்கிட்டு இருக்கியா? நெனச்சேன் அதனால தான் கால் பண்ணேன். இன்னிக்கு இம்பார்டன்ட் டெண்டர் ஒன்னு இருக்கிறது ஞாபகம் இருக்குல்ல? இது எஸ்.கே கம்பெனியோடது. போய் எழுந்து சீக்கிரம் ரெடியாகி போ” என்று பதற்றமாக சொல்ல,

 

“ஓஹ்! சாரிப்பா அசந்து தூங்கினதால மறந்தே போயிட்டேன். இதோ இப்பவே கிளம்புறேன்” என அழைப்பை துண்டித்தவன், குளியலை போட்டுக்கொண்டு அரக்கப் பறக்க கிளம்பினான்.

 

அசுர வேகத்தில் அவன் கைகளில் கார் சீறிப் பாய அவனது எண்ணங்களும் படுவேகமாக சுழன்று கொண்டிருந்தன. நேற்று இரவு முதல் தன்னவளின் நினைவுகள் அதிகமாகவே அவனை தாக்கலாயின. ஏன் என்று தெரியவில்லை இப்பொழுதும் கூட அவள் முகமே மனதினுள் மின்னி மறைந்தது.

 

“அம்முலு! உன்ன பார்க்கனும் போல இருக்கு டி. மிஸ் யூ செல்லம்” என்று அதன் போக்கில் அசைந்தன அவன் இதழ்கள்.

 

ஏதோ உந்துதலில் சைட் கண்ணாடி வழியே பார்த்தவன் ஒரு பெண் ஆக்சிடென்ட் ஆகி வீசப்படுவதைப் பார்த்து அதிர்ந்து விட்டான். சட்டுனு காரை ஓரமாக நிறுத்தியவனுக்குள் ஏதோ பதற்றம்.

 

அவ்விடத்தில் கூட்டமும் கூடிவிடவே வேக எட்டுக்களுடன் நடை போட்டு கூட்டத்தை விலக்கிய மித்ரன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

 

இரத்த வெள்ளத்தில் மூழ்கி இருந்தவள் அவனது ஆருயிர் காதலி அக்ஷராவே!

 

“வாட்? அக்ஷுவா? இல்..இல்ல. ஏதோ பிரம்மை” என்று நினைத்தவனின் கண்களில் அவள் கழுத்தில் தொங்கிய செயின் பட்டுவிட, உலகமே நின்று விட்டது போல் இருந்தது அவனுக்கு.

 

கீழே மண்டியிட்டு அவள் கன்னத்தை நடுங்கும் கரங்களால் தொட்டு “அம்முலூஊஊ” எனக் கதறியவனின் குரலும் நடுங்கித் தான் வெளிவந்தது.

 

அரை மயக்கத்தில் இருந்த அக்ஷராவிற்கு அவ்வழைப்பு போல் உயிர் வரை தீண்டிச் சென்றது. ஆயினும் அது யார் என்பதை அவள் அறியவில்லை.

 

வேதனை பெருக தன்னையே மறந்து நின்றவன், சுய உணர்வுக்கு வரவும் நிலமையை உணர்ந்து அவளை கைகளில் ஏந்திக்கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான் மித்ரன்.

 

 அவசரப்பிரிவில் அவளுக்கு சிகிச்சை நடக்க வெளியே நின்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“என் அம்முலுக்கு எதுவும் ஆகக்கூடாது” என்று வாய் ஓயாது வேண்டியவனின் மனமோ “இவள தனியா விட்டுட்டு விஷு எங்க போயிட்டான் இடியட்?” என விஷ்வாவை முதன்முறையாக அர்ச்சித்தது.

 

டாக்டர் வெளியில் வர அவர் அருகில் ஓடிச் சென்றான் மித்ரன் “டாக்டர் அவளுக்கு என்னாச்சு? ஒன்னும் ப்ராப்ளம் இல்லல்ல. அம்முலு நல்லா தானே இருக்கா?” என படபடத்தவனின் இதயமும் படபடவென துடிக்கலானது.

 

“கூல் மேன்” என அவனைக் கையமர்த்தி விட்டு “ஷீ இஸ் ஆல்ரைட். கை கால்ல தான் கொஞ்சம் காயம் இன்னும். த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிடுவாங்க” என அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

 

பெரும் பாரம் இறங்கியது போன்று “உப்ப்ப்” என பெருமூச்சு விட்டவன் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

கண்களை மூடி கையில் ட்ரிட்ஸ் ஏற, வாடிய மலராக படுத்திருந்த அக்ஷராவைக் காண தாங்க முடியாது தான் போயிற்று. அவளை அள்ளி அணைத்து தனக்குள்ளே பொத்திப் பாதுகாக்க மனம் துடியாய் துடித்தது.

 

அவள் கைகளை தன் முரட்டுக் கைகளுக்குள் பொத்திக்கொண்டு பேசவாரம்பித்தான்.

 

“அம்முலு! இத்தனை நாள் கழிச்சு உன்ன பார்த்தேன் டி. ஆனா இப்படி ஒரு நிலைமையில் உன்னை பார்க்க வேண்டியதா போச்சே. முடியல டி. மனசெல்லாம் வலிக்குது. நேத்தேலயிருந்து உன் ஞாபகங்கள் அடிக்கடி வந்துட்டு இருந்தது எதுக்குன்னு இப்ப புரியுது. உனக்கு ஒன்னும் இல்லடி. நீ நல்லா இருக்க” கேவலுடன் பேசியவன் அவன் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்தான் காதலுடன்.

 

“இப்போ இல்லனாலும் எப்போவாவது நான் உனக்காக வருவேன். உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன். ஐ லவ் யூ அம்முலு” என்று கூறிவிட்டு கைகளை விடுவித்துக் கொண்டு வெளியேறி சென்றான் அக்ஷராவின் அருள்!

 

விஷ்வா வீட்டுக்கு வேறு நபர் மூலம் தகவல் தெரிவித்த மித்ரன் அவர்கள் வருவதை அறிந்து வேறு வாயிலால் ஹாஸ்பிடலை விட்டும் வெளியேறி சென்றான்.

 

இதைக் கூறி முடிக்கையில் மித்ரனின் கண்கள் கலங்கியிருக்க அதை அவள் அறியாமல் துடைத்துக் கொள்ளவும் தான் செய்தான்.

 

அக்ஷரா “அரை மயக்கத்தில் இருந்த எனக்கு அம்முலுங்குற நேம் நல்லாவே கேட்டுச்சு. அது உன் குரல் தான்னு எனக்கு தெரியல. அது எனக்காக ஒருத்தன் காதலோடு சொன்னதென்று மட்டும் புரிஞ்சுகிட்டேன். ஒவ்வொரு நாளும் எனக்கு யாரோ அம்முலுனு கூப்பிடுற மாதிரி இருக்கும். இதை மறக்கணும் எனக்கு அருள் தான் வேணும்னு அதை மறக்க ரொம்பவே ட்ரை பண்ணிட்டு இருந்தேன்.

 

நேற்று நீ ஐ லவ் அம்முலுன்னு சொல்லவும் எனக்கு கவலையில எதுவுமே விளங்கல. அப்புறமா அதை யோசிச்சு பார்க்கும்போது தான் பொறி தட்டுச்சு. அம்முலுன்னு அன்னைக்கு சொன்னது, நீ தான்னு உள் மனசு சொல்லுச்சு. அதான் உன்னைத் தேடி ஓடி வந்தேன்” என்று விளக்கம் கொடுத்தாள் அவள்.

 

அவளை பார்த்து “சாரிடி! நான் உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்ல? பூரி அவ ஹஸ்பண்ட்ட விட்டு பிரிஞ்சு வந்தது என்னால தான்னு கிலிட்டியா பீல் பண்ணேன். அதுல எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறது என்னவோ போல இருந்துச்சு இப்போ எல்லாம் ஓகே” என்றான் காளை.

 

“இப்போ எல்லாம் ஓகேனா….?” கேள்வியாய் அவனை ஏறிட்டாள் பெண்.

 

“பூரி ரோஹன் கூட போக சம்மதிச்சுட்டா. இனிமேல் அவள் லைஃப் நல்லா இருக்கும். சோ நம்ம கல்யாணத்துக்கு ஓகேன்னு சொல்லுறேன்” என மெல்லிய குரலில் தான் சொன்னான் மித்ரன்.

 

“ஹோ அப்படியா?” கேலி விரவிய குரலில் கேட்டுவிட்டு, “கல்யாணம் வேணாம்னு சொன்னா நிப்பாட்டனும். ஓகே சொன்னா அதையும் தலையாட்டிட்டு கேட்க என்னைத் தலையாட்டி பொம்மைன்னு நினைச்சியா மித்ரன்?” என்றவளின் வார்த்தைகள் வலியில் நிறைந்திருந்தன.

 

 ஏதோ பேச வாய் திறந்தவனைக் கை உயர்த்தி தடுத்து “நீ ரொம்ப ஈசியா கல்யாணத்தை நிறுத்துனு சொல்லிட்ட. அதனால என் மனசு எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்னு நீ நினைக்கவே இல்லையா? உனக்கு நான் முக்கியம் இல்ல தானே?” ஏக்கமும் தவிப்பும் போட்டி போட வினவினாள் அக்ஷு.

 

மித்து “இ..ல்ல அப்படி எல்லாம் இல்லடி” பதறியபடி அவள் கையைப் பிடிக்க, “ம்ப்ச்” என கையைத் தட்டி விட்டாள். 

 

“ஒரு தடவை நான் சொல்லுறத கேளுமா” கெஞ்சலுடன் மொழிந்தான் அவன்.

 

“என்ன சொல்ல போறே? எதையும் கேட்க எனக்கு பிடிக்கல. போய் அந்த பூரி கூடவே கொஞ்சிட்டு இரு. பூரியும் சப்பாத்தியும்” என முறுக்கிக் கொண்டாள் அக்ஷரா.

 

“அய்யய்யோ இந்த பொண்ணுங்கள மலையிறக்க வைக்கிறது ரொம்பவே கஷ்டம் போல இருக்கே” நாக்கு தள்ளியது அவனுக்கு.

 

மெதுவாக தலை திருப்பி “அப்போ பூர்ணி அவ ஹபி கூட சேர்ந்து வாழலனு சொன்னா கல்யாணம் நின்னு தானே இருக்கும்? விஷு உடைஞ்சு போய் இருப்பான். நானும் விருப்பமில்லாத ஒருத்தன் கூட நரகத்தில் வாழ்ந்து இருக்கணும் இல்லையா?” என்று அவள் கேட்க, அவன் செய்யப் போனதின் வீரியம் இப்போது புரியலானது. தலையை குனித்துக் கொண்டு நின்றான் மித்ரன்.

 

“நீ சொல்றது எல்லாமே உண்மைதான் டா. நான் தப்பு பண்ணிட்டேன்ல?” நொடி நேர மௌனத்தை கிழித்துக் கொண்டு புறப்பட்டது அவன் குரல்.

 

அவன் கெஞ்சுவது மென்மையான மனம் கொண்ட பெண்ணவளுக்கு பிடிக்குமா என்ன? “இட்ஸ் ஓகே அருள் விடு விடு. உடனே அழுமூஞ்சி மாதிரி ஆய்டாத” சற்றே மனம் தளர்ந்தது அவளுக்கு.

 

விழி விரித்தவன் “அய்ய் அப்படின்னா என்ன மன்னிச்சிட்டியா டார்லிங்?” என்று கேட்டவாறு அவள் தோளில் கை போடப் போக, “பொறு ராசா பொறு” என்று வடிவேலு பாணியில் தான் சொன்னாள் அக்ஷரா.

 

“என்னடி உன் பிரச்சனை? கொஞ்சம் கூட ரொமான்ஸ் பண்ண விடுறியா? சரியான ரசனை கெட்டவள் நீ” என்று அங்கலாய்த்தவனை முறைத்துப் பார்த்து,

 

“சார் உடனே ரொமான்ஸ் மோடுக்கு போய்டாதீங்க. எல்லாமே முடியல இங்க. நடந்தது நடந்து போச்சுன்னு அப்படியே ஏத்துக்கிட்டு டூயட் பாடுற ஆள் நான் இல்லை” என்று சொல்ல,

 

“பின்ன ?” கேள்வியாக அவள் முகம் நோக்கினான் மித்ரன்.

 

“கல்யாணத்த நிறுத்த சொன்னதுல எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அருள். சத்தியமா என்னால அதை இப்போவே மறக்க முடியுமானு தெரியல்லை” என்று தன் உள்ளத்தை எடுத்துச் சொன்னாள்.

 

“மறக்க முடியாதுன்னு சொல்லலியே. மறக்க ட்ரை பண்ணுறேனு தானே சொல்றாய். அது போதும் அம்முலு! இனி என்ன ஆனாலும் உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஐ லவ் யூ சோ மச் டி” என்றான் காதல் பொங்க.

 

 “ஹ்ம்ம்” என மெதுவாக தலை அசைத்தவளுக்குள் சந்தோசம் பெருகியது.

 

“என்னடி நான் ஐ லவ் யூ என்று சொல்கிறேன். நீ உம் கொட்டுறே” என்று பாவமாக கேட்க, “அதுல தான் உனக்கு டாஸ்கே இருக்கு. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியாவது என் வாயால ஐ லவ் யூன்னு சொல்ல வைக்கணும். இது தான் நான் உனக்கு தர தண்டனை” என்று தோளைக் குலுக்கினாள்.

 

“என்ன?” என்று நெஞ்சில் கை வைத்தவன் பின், “இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் டி. இப்படிப்பட்ட ஒரு ஸ்வீட்டான தண்டனை எனக்கு கிடைக்கும்னு நினைக்கவே இல்ல” கண் சிமிட்டி சிரித்தான் அருள் மித்திரன்.

 

“ஸ்வீட்டான தண்டனையா டா? என்னை எவ்வளவு தவிக்க விட்ட? அவ்வளவு சீக்கிரமாக நான் ஐ லவ் யூ சொல்ல மாட்டேன். போடா போ” செல்லமாக அவனைக் கடிந்து கொண்டாள் பாவை.

 

ஆனால் விதியோ அவள் ஐ லவ் யூ சொல்லப் போகும் தருணம் மித்ரனின் நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து எள்ளலாக நகைத்தது.

 

………………..

 

ரெஸ்டாரண்டில் ஓரமாக இருந்த மேசையில் அமர்ந்திருந்தாள் பூர்ணி. ரோஹனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கலானாள் அவள்.

 

 அவனை சந்திக்க வருவதாக சொல்லிய போது ஆயிரம் பத்திரம் சொல்லி அரை மனதாகத்தான் அனுப்பி வைத்தான் அவள் மீது பாசம் கொண்ட மித்ரன்.

 

சுற்றிச் சுழன்ற பார்வை வட்டத்தினுள் சிக்கினான் அவளவன். வசீகர புன்னகையுடன் முடியை கோதி விட்ட படி நடந்துவரும் அவனின் கம்பீரத்தில் ஒரு நொடி விழுந்தும் தான் போகலானாள் காரிகையவளும்.

 

சட்டென தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நிற்க., அவனோ “ஹாய் பேபி” சிரிப்புடன் நாற்காலியை இழுத்து அமர்ந்து கொள்ள, “ஹாய்” என மெலிதாக இதழ் பிரித்தாள் அவள்.

 

“எதுக்காக என்னை வர சொன்ன? தூங்கிட்டு இருந்தேன் டி. நீ கூப்பிடவும் என்னவோ ஏதோன்னு பதறி ஓடிட்டு வந்தேன். எனி ப்ராப்ளம்?” கேள்வியாய் பார்த்தவனை நோக்கி, “என் ப்ராப்ளமே நீ தானே டா. நீயே இப்படி கேட்கிறதுதான் ஆச்சரிய குறி” என்று பூர்ணி கூற.

 

“அது எனக்கு தெரியும். நீ என்னைக் கடிச்சு குதற தான் கூப்பிடுவியே தவிர மடியில வச்சு கொஞ்சவா போற?” என்றவன் குரலில் நக்கலுடன், ஏக்கமும் வெளிப்பட்டது.

 

அவனது ஏக்கம் இவள் மனதைத் தாக்கத்தான் செய்தது. ஆனாலும் இதில் தனது பிழை எதுவும் இல்லையே!? எல்லாமே அவனாக தேடிக்கொண்டது தான் என தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள் பூர்ணி.

 

ரோஹன் “சரி விடு! நான் சும்மா தான் சொன்னேன். எதுவும் ஃபீல் பண்ணாத” என்று சொல்ல, “நான் எப்போ ஃபீல் பண்ணேன்? உனக்காக நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்” என முறுக்கிக் கொள்ள,

 

“அய்யய்யோ நீ எதுவுமே பண்ணல தாயே போதுமா” என்றான் பொறுமை பறக்க.

 

தலை தூக்கி அவனை ஏறிட்டு “நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசுறதுக்கு வர சொன்னேன். சொல்லப் போறத முழுசா கேளு. அதுக்குள்ள நந்தி மாதிரி இடைல புகுந்து வாய கிளறக் கூடாது” என எச்சரிக்கை செய்ய,

 

“சரிங்க மேடம்” என்று வாயில் விரல் வைத்து பயந்துவன் போல் அவன் பாவனை செய்ய, வெளிவரத் துடித்த சிரிப்பை இதழுக்குள் அடக்கி கண்களால் பொய்யாக முறைத்தாள்.

 

“நான் உன் கூட திரும்பவும் வரலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என சொல்ல, “பூ…?” எனும் அழைப்புடன் வியப்பாக அவளைப் பார்த்தான் ரோஹன்.

 

அவன் தன்னோடு வருவதாக சொல்வது ஒரு வேளை கனவா என்று கூட நினைத்தான்.

 

“என்ன சொன்ன பூ? நிஜமாத்தான் சொன்னியா. என்னை மன்னிச்சிட்டியா நீ?” என்று ஆர்வமும் ஆனந்தமுமாக கேள்விகளை அடுக்கினான்.

 

அவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் தான் நோக்கினாள் பூர்ணி.

 

“சொல்லு பூர்ணி மா. நீ விளையாடல இல்ல?” காதலும் பொங்கி வழியும் குரல் அவனிடம்.

 

“நான் எதுக்கு விளையாடனும்? உனக்கு கேட்டது உண்மைதான்” என்றதும், ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்துடன் முகம் விகசிக்க அவன் நிற்க,

 

“பட் ஒரு கண்டிஷன்” என்றதும் புருவம் சுருக்கி, “சொல்லு. நீ இவ்வளவு தூரம் எனக்காக இறங்கி வந்ததே பெருசு தான். எந்த கண்டிஷன்னாலும் டபுள் ஓகே” என்றான் ரோஹன்.

 

கைகளைக் கட்டிக் கொண்டு “அதுக்கு முன்னால ஒரு திருத்தம்! நான் வரப் போறது உனக்காக இல்ல, மித்துக்காக” என்று சொன்னாள் தீர்க்கமாக.

 

சட்டென்று முகம் வாடியவனை பார்த்து “என்ன மிஸ்டர்? மித்து பேரை கேட்டதுமே முகம் மாறுது. திரும்பவும் அவன் கூட சேர்த்து வச்சு சந்தேகப்பட போறியா? அப்படியே சந்தேகப்பட்டாலும் நோ ப்ராப்ளம். அந்த வலி எனக்கு பழகிப் போச்சு” என்று பேசியவளின் பேச்சில் வலியும், ஏமாற்றமும் தெரிய குற்றவுணர்வு முள்ளாய்க் குத்தியது அவன் மனதை.

 

“அப்போ சந்தேகப்பட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சுகிட்டேன். அதுக்கான தண்டனைய அனுபவிச்ச எனக்குள்ள இனி எப்பவுமே சந்தேகப் பிசாசு புகுந்து கொள்ளாது” என்று கூறினான் ஆடவன்.

 

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தவள் “இங்க பாருங்க ரோஹன்! மித்து ஒரு பொண்ண லவ் பண்றான். அவன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க தடையாக இருக்கிறது நான். நான் லைஃப்ப தொலைச்சிட்டு இருக்கிறது அவனால தான்னு மருகிட்டு இருக்கான். அவன் எந்த கில்டி ஃபீலிங்கும் இல்லாம இருக்கணும்னா நான் உன் கூட வாழறது தவிர வேற வழி இல்ல. அதனால தான் நான் இந்த முடிவைப் பண்ணினேன்” என்று விட்டு கண்களை மூடித் திறந்தாள் அவள்.

 

அவள் வருவது தனக்காக இல்லையே என்ற ஏமாற்றமும் ஒரு புறம் மனதை தாக்கியது. இருந்தும் இதெல்லாம் தனக்குத் தேவை தான் என நினைத்து “ம்ம்.. நீ சொல்லுறதுல உள்ள நியாயம் புரியுது டி. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதற்கு துணையா இருப்பேன்” என சிறு புன்னகையை வழங்கினான்.

 

தலையசைத்து விட்டு “அப்புறம் இன்னொரு விஷயம்! அது என்னன்னா நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன் ரோஹன். என்னைத் தப்பா பேசின அவங்க முகத்தைப் பார்க்கக் கூட எனக்கு விருப்பம் இல்லை” கசந்த முறுவல் ஒன்று அவளிடம் வெளிப்பட்டது.

 

சிறிது திடுக்கிட்டாலும் அவள் சொல்வதும் அவனுக்கு சரியென புலப்பட, தன்னை சமாதானம் செய்து கொண்டான். அவனது தாயும், சகோதரிகளும் கொஞ்சம் நஞ்சம் வார்த்தைகளா பேசினார்கள்? தீக்கங்குகளாய் அவளை சொற்கள் கொண்டே சுட்டுப் பொசுக்கினர். அவர்களைக் காண்கையில் தினம் தினம் பூர்ணிக்கு அன்றைய நாள் ஞாபகங்கள் வந்து உறுத்தும். அவ்வாறு நடந்தால் அவளால் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?

 

“ஓகே நீ சொன்ன கண்டிஷன நான் ஏத்துக்கிறேன். நம்ம தனிக்குடித்தனம் போகலாம் சரியா?” என்றான் அவன்.

 

தனக்கென யோசித்து இப்படிப் பேசும் ரோஹன் அவளுக்கு இதமாய் தான் தெரிந்தான்.

 

“சரி அதுக்காக நான் ஒன்னும் உன்னை உன் வீட்டில் இருந்து பிரிக்கப் போறேன்னு நினைக்காத. என்னால அவங்களை பார்த்து பேச முடியுமானு தெரியல. பழையது தான் எனக்கு ஞாபகம் வரும். அதனால எனக்கும் பிரச்சினை அவங்களுக்கும் சங்கடம். அதனாலதான் அப்படி சொன்னேன்.‌ எப்படி முன்னெல்லாம் உன் வீட்டுல இருந்தியோ அதே மாதிரி உன் அம்மா தங்கச்சிங்க கூட இரு” என பேசி முடித்தாள் மாது.

 

சிறு பிரச்சனைக்குக் கூட அம்மாவையும் மகனையும் பிரிக்க காத்திருக்கும் மனைவிகளுக்கு முன், தனக்கு கெட்டது நினைத்தும் கூட அவர்களையும் மதித்து நட என்ற தனக்கு கூறும் பூர்ணி தேவதையாகத்தான் அவனுக்குத் தெரிந்தாள்.

 

தலை சரித்து “இந்த குணம் தான் எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சது. யூ ஆர் சோ ஸ்வீட் பூ” என்று சொல்ல, “ஐஸ் வைக்க வேணாம் கிளம்பு” என முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

“உன்னையும் கூட்டிப் போக சொல்லி மனசு சொல்லுதுடி. தனியா போக மனசே வரல” பாவமாக உதடு பிதுக்க, தலையில் அடித்துக் கொண்டு “இத்தனை நாள் தனியாக இருந்தவருக்கு இன்னைக்கு ஒரு நாள் இருக்க முடியாதா? நாளைக்கே வந்து கூட்டிப் போ” என்று சொல்ல,

 

“நாளைக்கு என்ன? இன்னைக்கு நைட்க்கே வரேன்” கண்ணடித்து கத்த,

 

“ஷ்ஷ்” என வாயைப் பொத்தி அவனுக்கு ஒரு அடியை பரிசாக கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாள்.

 

……………….

 

கார்டனில் அமர்ந்து நியூஸ் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகுமார். அவர் அருகில் வந்து அமர்ந்த மகனை தலை தூக்கிப் பார்க்காமலே உணர்ந்து “என்ன விஷயம் டா சொல்லு” என்றார் தந்தை.

 

வியப்புடன் அவரைப் பார்த்துவிட்டு “டாட் நம்ம அக்ஷு கல்யாண விஷயமா தான் பேசணும்” என்றிட, இதழ் கடையோரம் சிரிப்பு தவழ “அக்ஷு கல்யாண விஷயமா மட்டுமா? இல்லன்னா உன்னோடதும் சேர்த்தா?” என்று கேட்டார்.

 

“ரொம்ப ஃபாஸ்டா தான் இருக்கீங்க டாட். யாரு அப்பா சொன்னாங்களா?” என்றான் கேள்வியாக.

 

‘ஆம்’ என்பதாக தலையசைத்தவர் “நீயும் கூடத்தான் ரொம்ப பாஸ்ட்டா இருக்கே. போற ஸ்பீட்ல எங்கயாவது போய் மோதாம இருந்தா சரி! என் மருமகளுக்கு சேதாரம் எதுவும் வரக்கூடாது” என அவன் தோளில் தட்டி கிண்டலடித்தார்.

 

“டாட்! ப்ளீஸ் போதும்” என்று சிணுங்க, “ஏன்டா ஷையா ஃபீல் பண்றியா?” தனது நக்கலில் இருந்து அவனை விடுவிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை போலும்.

 

 “நான் ஃபீல் பண்ணுறது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைக் கேட்டா உங்க அருமை மனைவி வானத்துக்கும் பூமிக்கும் தாம் தூம்னு குதிப்பாங்களே அதுக்கு என்ன பண்ணுறது?” என நகைப்புடன் கேட்டாலும் தாய் மித்ரன் மேல் கொண்டிருக்கும் வெறுப்பில் மனம் நொந்து தான் போனான்.

 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் டா. நீ எதுவும் டென்ஷன் ஆகாத” என்று மகனை அமைதிப் படுத்தினார்.

 

இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்த நீலவேணி சிவக்குமாருக்கு அருகில் அமர்ந்து கொண்டார். விஷ்வா சொல்லுமாறு சிவகுமாருக்கு கண்களால் செய்கை காட்ட “நீலா” என்று அழைத்தார் மெதுவாக.

 

“என்னங்க சொல்லுங்க” என அவர் புறம் திரும்பினார் நீவலேணி.

 

“நம்ம பொண்ணுக்கு நிச்சயதார்த்த தேதி குறிக்க நாளைக்கு ஹரி வராரு” என்றதும் தான் தாமதம், அமர்ந்திருந்து இருக்கையில் இருந்து படீரென்று எழுந்து நின்றார் அவர்.

 

“ஏங்க உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நான் அவ்வளவு வேணாம்னு சொல்லியும் திரும்ப திரும்ப அவனையே மாப்பிள்ளையாக்க முடிவு பண்ணேன்னு சொல்லுறீங்க”

 

சற்றுமுன் சாந்தமாக இருந்த தாயா இப்படி பத்திரகாளியாக நிற்பது என்று நினைத்தான் விஷ்வா.

 

மனைவியின் கையைப் பற்றி அமர வைத்தவர், “ஏன் இப்படி கோபப்படுற? அவன் நம்ம பையன் மா. உன் மடியில தானே எப்போவும் அம்மா அம்மானு பேசிட்டே இருப்பான்” என்று தன்மையாக சொல்ல,

 

“இன்னொரு வாட்டி நம்ம பையன்னு சொல்லாதீங்க. அப்படி பாசமா பார்த்த காலமெல்லாம் போயிடுச்சு. விஷுவ விட்டுப் போய் அவன் நம்ம மேல காட்டினது பாசம் இல்ல வேஷம்னு நிரூபிச்சுட்டான். அவன் ஒரு நம்பிக்கை துரோகி” என காட்டுக் கத்தல் கத்தினார்.

 

“மாம்” என எழுந்த விஷ்வாவிற்கு கோபம் எல்லை கடக்க, தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காலால் எட்டி உதைத்தான்.

 

“என் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க. இனி ஒரு வார்த்தை அவன பத்தி தப்பா பேசினீங்க, அவ்வளவுதான்” கோபத்தில் செந்தணலாக மாறியது அவன் முகம்.

 

ஆங்காரமாக அவனைப் பார்த்து “அப்படினா உனக்கு என்னை விட அவன் தானே முக்கியம்?” என்றார் நீலவேணி.

 

“ஆமா! எல்லாரையும் விட அவன் தான் முக்கியம். என் உயிரை விட என் மித்து தான் பெரிசு. அவன திட்றது என்ன திட்டுறதுக்கு சமன் மா” என தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி சொன்னவன்,

 

“மாம்! இது நம்ம அக்ஷுவோட வாழ்க்கை. அவளோட சந்தோஷத்துக்காக உங்க மனச மாத்திக்கங்க. நான் உங்க கிட்ட இதுவரைக்கும் எதையுமே கேட்டதில்லை. இப்போ இது ஒன்னே ஒன்ன மட்டும் கேட்கிறேன். மித்துக்கு அக்ஷுவ கட்டிக் கொடுக்க சம்மதம் சொல்லுங்க” என்றவனின் குரல் கெஞ்சலில் கரைந்தது.

 

எதற்கும் கலங்காமல் அஞ்சா நெஞ்சத்தோடு நிற்கும் மகன்! தொழில் என வந்துவிட்டால் வேட்டை புலியாய் உறுமி பாய்பவன் இப்பொழுது தாயிடம் இறைஞ்சுவது கஷ்டமாகத்தான் இருந்தது தந்தைக்கு.

 

அவனை உறுத்து விழித்த நீலா “நோ வே! இதற்கு நான் செத்தாலும் சம்மதிக்க மாட்டேன். அவன் முகத்தைக் கூட எனக்குப் பார்க்க விருப்பமில்லை” என கூறிவிட்டு சென்றுவிட, தலையை அழுந்தக் கோதிக் கொண்டான் விஷ்வஜித்.

 

அவன் தலையை தடவி விட்டு எழுந்து சென்றார் சிவகுமார்.

 

“சாரி மாம்! உங்க விருப்பத்தை மீறி அக்ஷு கல்யாணத்தை நான் நடத்த தான் போறேன். நீங்க காலப்போக்குல மனசு மாறிடுவீங்க. பட் இப்போ நீங்க சொல்றதை கேட்டு மித்து கூட சேர்த்து வைக்கலேனா என் தங்கச்சி லைஃபே முடிஞ்சிடும்” என மானசீகமாக தாயிடம் உரையாடினான்.

 

என்னதான் எதிர்த்துப் பேசினாலும் தாயிடம் பாசம் கொண்டிருந்தவன் அறியவில்லை அவளது செயலால் அந்த பாசத்தை வெறுப்பு வீழ்த்திவிடும் என்று! அந்த நாள்! நீலவேணியை வெறுப்பு மண்ட நோக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைத்து சிரித்துக் கொண்டது விதி! அந்த விதியை யாரால் தான் வெல்ல முடியும்?

 

*_நட்பு தொடரும்………!!_*

 

~~~~~~~~~~~~~~~~~~~~~

💙 விமர்சனம் தெரிவித்த நெஞ்சங்களுக்கு கோடி நன்றிகள்!!! 

அப்புறம் மறக்காமல் இந்த அத்தியாயம் எப்படி இருந்துச்சுனு உங்க கருத்தை தெரிவிச்சுட்டு போங்க… 

 

 

✒️ Shamla Fazly💞

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!