Dhanakya karthik
இசை என்னாச்சு டா உனக்கு சாப்பாடு பிடிக்கலையா என்ற ரகுராமனிடம் இல்லைப்பா பிடிச்சிருக்கு என்றாள் யாழிசை. அப்புறம் ஏன்டா சரியா சாப்பிடாம கோரிச்சுகிட்டு இருக்கேன் என்றால் ரகுராமன் இல்லப்பா ஒன்னும் இல்லை என்ற யாழிசை அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் மனம் எங்கும் ரணமாக வலித்தது ஏனோ வித்யுத், திவிஷியா இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டு வெளியே வந்ததை பார்த்தவளுக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது. என்கிட்ட ஒரு நாள் கூட சிரிச்சு பேசியதில்லை ஏன் நான் பேசினால் முகம் கொடுத்தே பேசினதில்லை அந்த பொம்பளைகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறாரு என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க. யாழி தப்பா யோசிக்காதே லவ் பண்ணும் போது லவ் பண்ணும் பர்சன் மேல ஃபர்ஸ்ட் நம்பிக்கை வேணும் நம்பிக்கை இல்லாமல் சந்தேகப்படக்கூடாது என்று மனசாட்சி கூறிட சந்தேகப்படக் கூடாதுதான் ஆனால் அவர் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரிய மாட்டேங்குது எனக்கு தெரிஞ்சுக்கணுமே என்று அவள் பலவாறு யோசித்துக்கொண்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தாள்.
சரி வீட்டுக்கு போகலாமா இல்லை வேற எங்கேயும் போகணுமா? என்ற ரகுராமனிடம் யஸ்வந்த் ஏதோ சொல்ல வர வீட்டுக்கு போலாமே அப்பா என்றாள் யாழிசை. என்னாச்சுக்கா அதுக்குள்ள வீட்டுக்கு போகலாம்னு சொல்ற ஷாப்பிங் போகலாம்ல என்றான் யஸ்வந்த். நாளைக்கு போய்க்கலாம் டா ப்ளீஸ் எனக்கு தலை வலிக்குது வீட்டுக்கு போகலாமே என்றாள் யாழிசை. சரி சரி அதான் அக்கா சொல்லிட்டாளே யஸ்வந்த் நம்ம நாளைக்கு ஷாப்பிங் போலாம் என்று ரகுராமன் கூறிட ஓகே அப்பா என்றான் யஸ்வந்த்.
தலை வலிக்குதுனா அப்பா தைலம் தேய்ச்சு விடுவா இசை என்றார் ரகுராமன். இல்லைப்பா அதான் வீட்டுக்கு வந்துட்டோம்ல நான் கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் போய் நின்று காத்து வாங்கிட்டு வரட்டுமா ப்ளீஸ் என்று அவள் கேட்டிட, என்ன இசை இதுக்கெல்லாம் போய் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு இருக்கே உன் இஷ்டம் டா நீ போய் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்து வாங்கிட்டு வா என்ற ரகுராமன் ரோகிணி என்று அழைத்திட ரோகிணி வந்தார்.
உனக்கும், யாமினிக்கும் சாப்பாடு இருக்கு என்று ஒரு கவரை நீட்டினார் ரகுராமன். அதை வாங்கிக் கொண்டார் ரோகினி . யாமினி சாப்பிட வா என்று ரோகிணி அழைத்திட அமைதியாக வந்தாள் யாமினி. ரகுராமன் தன் அறைக்கு சென்று விட்டார் மகன் யஸ்வந்த் உடன்.
எதுக்குமா இப்போ இந்த சாப்பாட்டை எனக்கு பரிமாறுறீங்க என்ற யாமினியிடம் ஏன்டி உனக்கு பிடிச்சது தானே அப்பா வாங்கிட்டு வந்து இருக்காரு என்றார் ரோகினி. இந்த சாப்பாடு அவள் ஜெயிச்சதுக்கான கொண்டாட்டத்துக்கு வாங்கினது அதை நம்ம சாப்பிடனுமா என்று யாமினி கேட்டாள். இதோ பாரு யாமினி உன் அப்பா இருக்கிற வரைக்கும் அவளை நான் எதுவும் சொல்ல மாட்டேன் அது உனக்கே தெரியும் அப்படி நான் அவளை ஏதாச்சும் கொடுமை படுத்துறது உன் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்னை அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டுருவாரு என்னை மட்டும் இல்லை உன் மாமாவையும் சேர்த்து தான் விரட்டி விடுவாரு உனக்கு என் கூட வர விருப்பமானாலும் அனுப்பி விட்டுருவாரு. இந்த வீட்டுக்கு நான் தான் மகாராணி உன் அப்பா இருக்கும் போது மட்டும்தான் அவள். அதனால ஒரு மூன்று மாசத்துக்கு அடக்கி வாசி என்ற ரோகிணி கூறிட அமைதியாக பல்லைக் கடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் யாமினி.
மொட்டை மாடியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள் யாழிசை. அவள் மனதில் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது. மூன்று மணி நேரமா என்ன பேசி இருப்பாங்க. மூன்று மணி நேரமா இரண்டு பேரும் பேசிட்டு இருந்திருப்பாஙகளா? நாம சினிமா பார்க்க போகும் போதே அவர் வெளியே கிளம்பினாரே. இப்படி பலவாறு யோசித்து கொண்டு இருந்தாள் யாழிசை.
அந்த நேரம் ஏதோ போன் கால் வர பேசிக் கொண்டே மாடிக்கு வந்தான் வித்யுத் அபிமன்யு. அவனைக் கண்டவளுக்கு கோபம் தான் வந்தது. போன்ல யார் யார்கிட்டயோ சிரிச்சு பேசுறாரு ஒரு வேளை திவிஷியாவா இருக்குமோ என்று நினைத்தவள் அவன் முன் நின்றாள். அவன் அவளை கடந்து செல்ல பார்க்க அவனது கையை எட்டிப் பிடித்தாள் யாழிசை.
அவனோ புருவம் உருவம் உயர்த்தி அவளை கோபமாக முறைத்துக் கொண்டிருக்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் யாழிசை. போனில் பேசிக் கொண்டிருந்தவரிடம் பிறகு பேசுகிறேன் என்று போனை கட் செய்து விட்டு அறிவில்லை இசை உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் ஃபோன் பேசிட்டு இருக்கேன் , கையை பிடிச்சு உங்க கிட்ட பேசணும்னு சொல்ற பொண்ணு தானே நீ என்றான் கோபமாக . பொண்ணு தான் நான் ஒன்னும் பையன் டிரஸ் போட்டுட்டு நிற்க வில்லை பாருங்க என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் என்ன வேணும் உனக்கு என்றான்.
எனக்கு நீங்க தான் வேணும் இதை நான் பல தடவை சொல்லிட்டேன் என்று அவள் கூறிட ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் கன்னம் பழுக்க அறையப் போறேன் பாரு எத்தனை தடவை சொல்றது இந்த மாதிரி என்கிட்ட பேசாத எனக்கு உன்னை பிடிக்கலைன்னு என்று அவன் கூறிட நிஜமாகவே உங்களுக்கு என்னை பிடிக்கலையா? என்றாள் யாழிசை குரல் உடைந்து .
நிஜமா தான் சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை என்றான் வித்யுத் அபிமன்யு. ஏன் பிடிக்கலை திவிஷியா மேடத்தை பிடிச்சிருக்கோ. அதனாலதான் அவங்க கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தீங்களா? என்று அவள் கேட்டிட அவளை கோபமாக பார்த்தான் வித்யுத்.
நான் எங்கே போறேன்? யார்கிட்ட பேசுறேன் இதெல்லாம் வேவு பார்க்கிறது தான் உனக்கு வேலையா? வேற வேலையே இல்லையா? என்னை வேவு பார்க்க தான் உங்க வீட்ல உன்னை பெத்து போட்டு விட்டு இருக்காங்களா? என்றான் வித்யுத் கோபமாக .
நான் உங்களை வேவு பார்க்கலை எதார்த்தமா தான் பார்த்தேன். சொல்லுங்க உங்களுக்கு அவங்களை பிடிச்சதுனால தான் எனக்கு பிடிக்கலையா என்று அவள் கேட்டிட ஆமாடி எனக்கு அவங்களை தான் புடிச்சிருக்கு . உன்னை சுத்தமா பிடிக்கலை உனக்கு என்ன தகுதி இருக்கு என்னை லவ் பண்ணுற. நீ இப்போ தான் படிச்சிட்டு இருக்க .லவ் வெறும் ஸ்டூடண்ட் ஆனால் அவங்க என்னை விட அதிகமா படிச்சு ஹெச்ஓடி. உன்னோட கம்பேர் பண்ணும்போது எனக்கு அவங்க தான் பெஸ்ட் அதனாலதான் சொல்றேன் எனக்க உன்னை கொஞ்சம் கூட பிடிக்கலை நான் திவிஷியாவை மட்டும் தான் லவ் பண்றேன் இன்னும் கொஞ்சம் நாளில் கல்யாணம் கூட பண்ணிக்க போறோம் என்ன இப்போ என்றான் வித்யுத் கோபமாக.
சார் விளையாடாதீங்க நான் சீரியஸா கேட்டுட்டு இருக்கேன் என்ற யாழிசையிடம் நானும் சீரியஸா தான் சொல்லிட்டு இருக்கேன் இசை உனக்கு தான் புரிய மாட்டேங்குது. ஒவ்வொரு தடவையும் கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி படிச்சு படிச்சு சொல்லிட்டு இருக்கேன் எனக்கு உன்னை பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை. இப்போ அதுக்கான ரீசனும் சொல்லிட்டேன் எனக்கு வேற ஒருத்தவங்கள புடிச்சிருக்கு அதனாலதான் உன்னை பிடிக்கலை. இன்னொரு முறை என்கிட்ட நெருங்காதே என்றான் வித்யுத் அபிமன்யு.
இல்லை நான் நம்ப மாட்டேன் என்று அவள் கூறினாள். நீ நம்புனா நம்பு, நம்பாட்டி போ அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. இன்னொரு முறை என் பின்னாடி நீ சுத்துனனு வச்சுக்கோ மரியாதை கெட்டுடும். இதுவரைக்கும் நான் எத்தனையோ முறை படிச்சு படிச்சு உன்னிடம் சொல்லி பார்த்துட்டேன் வெக்கமே இல்லாம நான் போகிற இடத்திற்கு எல்லாம் வர . லிஃப்ட்ல ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி ஆன்னு பாத்துட்டு இருக்க. உனக்கு வெட்கம் ,மானம்: சூடு :சொரணை எதுவுமே கிடையாதா? நீ ஒரு பொண்ணு தானே உனக்கு வெட்கம்: மானம் ஏதாச்சும் கொஞ்சம் நஞ்சம் இருந்தால் இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதே. நான் இருக்கிற திசை பக்கம் கூட திரும்பாதே.ஜ இன்னொரு முறை என் பின்னாடி சுத்துன அப்படின்னா அடுத்து ஹெச்ஓடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். உன்னை காலேஜ் விட்டு சஸ்பெண்ட் பண்ண வைக்காமல் விட மாட்டேன். இதுவரைக்கும் போனால் போகுது சின்ன பொண்ணு விட்டுட்டு இருந்தேன் இனிமேலும் நீ அதே மாதிரி பண்ணிட்டு இருந்தீன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்றான் வித்யுத்.
என்ன சஸ்பெண்ட் பண்ண வைக்க போறீங்களா? என்று அவள் கேட்டிட ஆமாம் இப்போ என்ன அதுக்கு என்றான். ஹெச்ஓடி உங்க ஆளு கண்டிப்பா சஸ்பென்ட் தான் இல்லை என்றாள் யாழிசை. அவனோ பதிலுக்கு கோபமாக ஆமாம் ஹெச்ஓடி என் ஆளு தான் இப்போ என்ன உனக்கு என்று அவன் சொன்னதுமே அவள் உடைந்து விட்டாள். ஆனால் அதற்கு மேலும் அவன் விடாமல் பேச ஆரம்பித்தான்.
உனக்கு அறிவில்லையா உனக்கு உண்மையிலேயே கல்யாண ஆசை வந்துருச்சு அப்படின்னா உன் வீட்ல அப்பா: அம்மா எல்லாரும் இருக்காங்களே அவங்க கிட்ட சொல்லு என்னை விட நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அதை விட்டுட்டு படிக்கப் போன இடத்தில கல்யாணம் பண்ணிக்க புருஷனை தேடாத என்று அவன் கூறிட அவளுக்கு அவமானமாகிவிட்டது.
என்ன சொன்னீங்க என்று அவள் கேட்டிட உனக்கு என்ன காது செவிடா திரும்பத் திரும்ப சொல்ல முடியாது . கல்யாண ஆசை வந்துட்டா வீட்ல சொல்லி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போ என் பின்னாடி வராதே என்று கூறிவிட்டு அவன் சென்று விட்டான்.
என்ன இசை இன்னும் கிளம்பாமல் என்ன பண்ணீட்டு இருக்க என்ற ரகுராமனிடம் ஃபைவ் மினிட்ஸ் அப்பா என்றாள் யாழிசை. டாடி அக்கா மேக்அப் போட்டு வருவதற்குள் சினிமா முடிஞ்சு போயிரும் அதனால நம்ம மட்டும் போகலாம் என்றான் யஷ்வந்த். கடன்காரா நீயெல்லாம் ஒரு தம்பியா டா ஐந்து நிமிசம் லேட் ஆனதும் என்னை விட்டுட்டு போக நினைக்கிற என்று வந்தாள் யாழிசை.
நாங்க விட்டுட்டு போயிருவோம்னு சொன்னதும் தானே வேகமா கிளம்பி வந்த என்ற யஷ்வந்த் போகலாமா என்றான்.
யாமினி, சித்தி, ராகவ் மூன்று பேரும் வரவில்லையா என்ற யாழிசையிடம் அக்கா யாமினி அக்கா ப்ரைஸ் வின் பண்ணவில்லை. நீ வின் பண்ணினதால செலிபரேசன் அதுக்கு எப்படி அவங்க வருவாங்க என்றான் யஷ்வந்த்.
அப்பா இருக்கும் போது எப்படி வராமல் இருப்பாங்க என்று யாழிசை கேட்டிட அதெல்லாம் அம்மா உடம்பு சரியில்லைனு சாக்கு போக்கு சொல்லி அப்பாவை சமாளிச்சுட்டாங்க நீ வா அப்பா கீழே நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்று தன் சகோதரியை அழைத்துக் கொண்டு சென்றான் யஷ்வந்த்.
அவர்கள் லிஃப்ட்டிற்குள் நுழைய அங்கே ஏற்கனவே வித்யுத் இருந்தான். உடன் தன் தம்பி இருக்கிறான் என்பதையும் மறந்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பதைப் போல அவனை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் யாழிசை.
அவளை தீயென முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் வித்யுத் அபிமன்யு. எருமை மாடு கொஞ்சம் கூட அறிவே இல்லை இவள் பார்க்கிறதால் எனக்கு தான் வெக்கமா இருக்கு என்று நினைத்துக் கொண்டு அவன் நின்றிருக்க யஷ்வந்த் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன் திரும்பி தன் சகோதரியை பார்க்க அவளோ தன்னவனை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அக்கா அக்கா என்று அவன் இரு முறை அழைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் யாழிசை. என்னக்கா பார்த்துட்டு இருக்க என்ற யஷ்வந்திடம் ஒன்னும் இல்லைடா என்று சமாளித்தாலும் அவளது பார்வை வித்யுத்தை விட்டு அகலவில்லை. அவனோ அவளை முறைத்துக் கொண்டிருக்க அவள் எப்பொழுதும் போல இளித்துக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த சமயம் அவளது மொபைல் போன் மெசேஜ் டோனை விட அவள் அப்பொழுது தான் தன் போனை எடுத்துப் பார்த்தாள்.
விகாஷின் எண்ணில் இருந்து ஹாய் என்று மெசேஜ் வந்திருக்கவும், இவன் எப்போ மெசேஜ் பண்ணினான் என்று பார்த்திட காலையிலேயே அவனது மெசேஜ் வந்து இருந்தது. காலையிலே பயபுள்ள மெசேஜ் பண்ணி இருக்கான் போல சரி ஓகே பதிலுக்கு ஒரு ஹாய் தட்டி விடு என்று அவளும் ஹாய் என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மீண்டும் வித்யுத்தை வெரித்து பார்க்க ஆரம்பித்தாள்.
கிரவுண்ட் ஃப்ளோர் வந்தவுடன் அவன் வேக வேகமாக வெளியே சென்று விட்டான் .
அக்கா எதுக்கு அந்த ஆளை வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்க என்ற யஸ்வந்திடம் என்னது அந்த ஆளா டேய் அவரு உன் மாமா டா அந்த ஆள் எல்லாம் சொல்லக்கூடாது மரியாதையா மாமான்னு சொல்லணும் என்றாள் யாழிசை. என்னது மாமாவா என்ற யஸ்வந்திடம் உங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற ஆளு உனக்கு மாமா தானே என்றாள் யாழிசை.
இவர் உன்னோட ப்ரொபசர் தானே என்ற யஸ்வந்திடம் என் ப்ரோபசர்னா அவரை நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன அவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அவள் கூறிட சரி சரி நடத்து நடத்து நான் அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் என்றான் யஷ்வந்த் .
நீ சொன்னா கூட எனக்கு கவலை இல்லை நானே அப்பா கிட்ட சொல்லத்தான் போகிறேன் என்ன இப்போ சொன்னால் அப்பா கோவப்படுவாரு படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு இந்த மாதிரி ஒருத்தரை புடிச்சிருக்கு டாடி கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னால் அப்பா என் சம்மதத்தை மீறியா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாரு என்று சிரித்தாள் யாழிசை.
சீக்கிரம் வா அப்பா ரொம்ப நேரமா நம்மளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு என்று தன் சகோதரியை இழுத்து சென்றான் யஷ்வந்த் . என்னப்பா கிளம்பலாமா என்ற ரகுராமனிடம் கிளம்பலாம் என்று வந்தனர் யஷ்வந்த் , யாழிசை இருவரும்.
எங்கே போகலாம் என்ற ரகுராமனிடம் அப்போ அதான் சொன்னேனே சினிமாவுக்குன்னு என்றான் யஷ்வந்த்.
இசை நீ சொல்லுடா என்ற ரகுராமனிடம் தம்பி ஆசைப்படறானேப்பா ஃபர்ஸ்ட் சினிமா போயிட்டு அப்புறமா டின்னர் சாப்பிட போகலாம் என்று யாழிசை கூறிட உன் இஷ்டம் என்று ரகுராமன் காரை இயக்கினார்.
சொல்லுங்க மேடம் என்ன விஷயம் என்றான் வித்யுத் அபிமன்யு . என்ன விஷயம்னு கேட்டால் என்ன சொல்றது நான் பல தடவை சொல்லிட்டேன் நீங்க தான் உங்க பதிலை சொல்ல மாட்டேங்கறீங்க என்றாள் திவிஷியா.
மேடம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்னோட பதிலை எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை என்றான் வித்யுத் . அதான் ஏன்னு நான் கேட்கிறேன். எனக்கு செகண்ட் மேரேஜ் தான் ஆனால் ஸ்டில் ஐ அம் வெர்ஜின் என்று அவள் கூறிட மேடம் ப்ளீஸ் நான் அந்த மாதிரி யோசிக்கவே இல்லை உங்க மேல எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு ஃபீலிங்ஸ்மே வர வில்லை உங்களோட பாஸ்ட் லைஃப் பத்தின எந்த ஒரு அபிப்ராயத்தையும் நான் சொல்ல விரும்பலை எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை புரிஞ்சுக்கோங்க என்றான் வித்யுத் அபிமன்யு .
ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லை நான் அழகா இல்லையா? நல்லா படிச்சிருக்கேன், நல்ல வேலையில் இருக்கேன் எதனால் உங்களுக்கு என்னை பிடிக்கலை என்று திவிஷியா கேட்டிட மேடம் எனக்கு வேற ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு என்றான் வித்யுத் அபிமன்யு.
யாரு அந்த பொண்ணு யாழிசையா என்றாள் திவிஷியா கோபமாக.
என்ன சொல்றீங்க மேடம் இசை என்னோட ஸ்டூடண்ட் என்ற வித்யுத்திடம் தெரியும் சார் நல்லாவே தெரியும் அந்த பொண்ணு உங்களை சைட் அடிச்சிட்டு இருக்கிறதும், காலேஜ் ஃபுல்லா உங்களை அவளோட ஆளுன்னு சொல்லிட்டு தெரியுறதும் எல்லாமே எனக்கும் தெரியும். அரசல், புரசலாக காதுல விழுந்துச்சு இப்போ நல்லாவே புரிஞ்சிருச்சு. அவள் மட்டும் உங்களை விரும்பலை நீங்களும் அவளைத் தான் விரும்புறீங்க. நான் கல்யாணம் ஆகி டிவோர்ஸ் ஆனவள். அவள் சின்ன பொண்ணு இல்லையா அதனால தான் உங்களுக்கு அவள் மேல ஃபீலிங்ஸ் என்றாள் திவிஷியா.
மேடம் இந்த மாதிரி பேசாதீங்க இசை என்னோட ஸ்டூடண்ட் . அந்த பொண்ணுக்கும், எனக்கும் எந்த ஒரு காண்டாக்ட்ம் கிடையாது . உண்மை தெரியாமல் ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசாதீங்க என்றான் வித்யுத்.
எனக்கு புரியலை நீங்க அந்த பொண்ணை ஏன் காப்பாத்த நினைக்கிறீங்க. கவலைப்படாதீங்க நான் உங்க இசையை எதுவும் பண்ணிட மாட்டேன். யாழிசைங்கிற பெயர் உங்க வாயில் முழுசா வந்ததே இல்லையே இசை என்று கூறிய திவிஷியா கசந்த புன்னகையுடன் எழுந்து கொண்டாள்.
மேடம் என்று அவன் எதோ சொல்ல வர ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் மிஸ்டர் வித்யுத் அபிமன்யு. எனிவே ஆல் தி பெஸ்ட் என்று அவனுடன் கைகுலுக்கி விட்டு அவள் சென்றிட அவனும் அவளுடனே சென்றான் .
அவர்கள் இருவரும் ஒன்றாக அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வருவதை பார்த்தாள் யாழிசை.
…. தொடரும்…
சார் இந்தாங்க என்று அவள் பணத்தை நீட்டிட, அதை வாங்கிக் கொண்டான் வித்யுத் அபிமன்யு. என்ன கொடுத்த உடனே வாங்கிட்டீங்க என்ற யாழிசையிடம் ஆட்டோவில் ஏறும்போது அமௌன்ட் ஷேர் பண்ணிக்கொள்ளலாம் என்று தானே சொன்ன. அப்போ ஷேரிங் அமௌன்ட் கொடுத்தா வாங்காமல் வேண்டாம் நீயே வச்சுக்கோனா நான் சொல்லுவேன் என்றான் வித்யுத்.
என்ன சார் நீங்க மத்தவங்க கிட்ட வாங்குவது சரி என்கிட்டயும் வாங்கிட்டீங்க என்ற யாழிசையிடம் நீ மட்டும் என்ன ஸ்பெஷலா நீயும் மத்தவங்க மாதிரிதான் என்று அவன் கூறினான் .
அவளோ சிரித்துக் கொண்டு அது எப்படி மத்தவங்களும் நானும் ஒன்னு. நான் உங்களை லவ் பண்றேன் மத்தவங்களாம் என்ன உங்களை லவ் பண்றாங்களா என்றாள் யாழிசை.
எப்போ நீ என்கிட்ட அடி வாங்க போறேன்னு தெரியல இன்னொரு தடவை லவ் பண்றேன்னு சொன்ன உன் வாயை உடைத்து விட போறேன் பாரு என்றான் வித்யுத் .
உங்களுக்கு தான் கஷ்டம் பியூச்சர்ல என்னை கல்யாணம் பண்ணி வெளியில கூட்டிட்டு போகும் போது வாய் உடைஞ்ச பொண்ணை போயி கல்யாணம் பண்ணி இருக்கீங்களானு எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க என்றாள் யாழிசை.
நீ சரியான பைத்தியம் இல்லை சரியாகாத பைத்தியம் ஆளை விடு என்று அவன் வேகமாக லிப்ட்டிற்குள் செல்ல அவனை பின்தொடர்ந்து வந்தவள் தானும் லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள்.
என்ன கிட்ட இருந்து தப்பிக்க பார்க்கிறீர்களா அதெல்லாம் உங்களால முடியாது என்று அவள் கூறிக் கொண்டிருக்க நேராக உன் வீட்டுக்கு வந்து உன் அப்பா கிட்ட உன்னை பத்தி சொல்ல போறேன் என்றான் வித்யுத் அபிமன்யு .
சொல்லுங்க நானும் சொல்றேன் எனக்கு சாரை ரொம்ப புடிச்சிருக்கு அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு என் அப்பாகிட்ட நானே சொல்றேன் என்று அவள் சிரித்திட உன்கிட்ட பேசுறது சுத்த டைம் வேஸ்ட். நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேன்ல எனக்கு உன்னை பிடிக்கலைன்னு அப்புறமும் ஏன் என் பின்னாடி சுத்திட்டே இருக்க என்றான் வித்யுத்.
எனக்கு உங்களை பிடிச்சிருக்கே, அப்பறம் உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு நீங்க சொல்றது பொய். அது எனக்கு தெரியும் அதனால தான் நான் உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன் என்றாள் யாழிசை.
எப்படி தெரியும் எனக்கு உன்னை புடிக்கலைன்னு சொன்னது பொய்யின்னு நான் ஏன் பொய் சொல்ல போறேன் என்று அவன் கூறிட அதெல்லாம் அப்படித்தான் தெரியும் என்றவள் சரி ஓகே சார் என்னோட ஃப்ளாட் வரப்போகுது பாய் என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட அவனுக்கு தான் தலைவலியே வந்துவிட்டது. இவள் கிட்ட பேசி மாளாது சரியான பைத்தியம் என்று தலையில் அடித்துக் கொண்டவன் தனது வீட்டிற்குள் சென்றான்.
என்ன யாமினி இவ்வளவு லேட்டா வர அவள் வந்து அரை மணி நேரம் ஆச்சு என்ற ரோகிணியிடம் நான் என் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு கொஞ்சம் லேட்டா வந்தேன் இதுல என்னம்மா இருக்கு என்ற யாமினி தன்னைக்கு சென்றாள்.
ஆமாம் என்ன யாமினி ப்ரைஸ் எதுவும் இல்லையா என்ற ரோகினியிடம் ஒரு பிரைஸ்சும் வாங்கலை தோத்து போயிட்டேன் போதுமா. உன் பெரிய மகள் ப்ரைஸா அள்ளி கொண்டு வந்திருக்காள். போய் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு கோபமாக தன்னறைக்குள் அடைந்து கொண்டாள் யாமினி.
இசை என்ற ரகுராமனிடம் தனது மெடல்களை காட்டினாள் யாழிசை. அப்பா நான் கலந்துக் கிட்ட எல்லா போட்டியிலுமே வின் தான், அது மட்டும் இல்லை ஓவரால் சாம்பியன்சாப் ட்ராஃபி கூட எங்க காலேஜ் தான் வின் பண்ணுச்சு என்று அவள் கூறிட ரொம்ப சந்தோஷம் இசை என்ற ரகுராமன் சரி எங்கயாச்சும் வெளியே போகலாமா என்றார்.
இல்லை அப்பா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டுமா என்று யாழிசை கேட்டிட சரி அம்மு நீ தூங்கு ஈவினிங் நம்ப வெளியே போகலாம் என்றார் ரகுராமன். சரிங்கப்பா என்று கூறிவிட்டு தன்னறைக்குள் சென்று படுத்து உறங்க ஆரம்பித்தாள் யாழிசை.
என்ன விகாஷ் ரொம்ப சந்தோஷமா இருக்க போல எல்லா போட்டியிலும் ஜெயிச்சிட்டீங்களா என்ற சிவரஞ்சனியிடம் எல்லாத்துலையும் ஜெயிக்கலம்மா ஆனால் மேக்ஸிமம் நாங்கள் ஜெயிச்சிருக்கோம் என்றான் விகாஷ்.
சரி சரி ரொம்ப டயர்டா இருப்ப ரெஸ்ட் எடு என்று கூறி மகனை அனுப்பி வைத்தார் சிவரஞ்சனி .
அவனது மனமெங்கும் நிறைந்து இருந்தால் யாழிசை. உன்னை பார்க்க எத்தனை நாள் காத்துட்டு இருந்தேன் தெரியுமா என்று நினைத்தவன் அவளோட போன் நம்பர் கொடுத்தாளே ஒரு மெசேஜ் போடலாம் என்ற விகாஷ் ஹாய் என்று வாட்ஸ் அப்பில் அவளுக்கு ஒரு மெசேஜை தட்டி விட்டான் .
அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவனது மெசேஜை அவள் பார்க்கவே இல்லை . மெசேஜ் கூட பார்க்காமல் என்ன பண்ணிட்டு இருக்காள் என்று நினைத்தவன் சரி ஓகே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம் என்று படுத்துக் கொண்டான். அந்த நேரம் அவனது அண்ணனின் எண்ணில் இருந்து போன் வரவும் அதை அட்டென்ட் செய்த விகாஷ் சந்தோஷமாக தன் சகோதரனிடம் பேச ஆரம்பித்தான்.
தன் வீட்டிற்குள் வந்த வித்யுத் ஏதோ தீவிர யோசனையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு யாழிசையின் நடவடிக்கைகளை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல தடவை சொல்லிப் பார்த்தாச்சு இந்த பொண்ணு கேட்கவே மாட்டாள் போலையே. இனி அவள் கிட்ட கொஞ்சம் ஹார்சா தான் சொல்லணும் அப்போ தான் புரிஞ்சிப்பாள் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க அவனது மொபைல் போன் ஒலித்தது.
ஹெச்ஓடி திவிஷியா அழைத்திட இவங்களுக்கு வேற வேலையே கிடையாது என்று நினைத்து ஃபோனை அட்டென்ட் செய்து சொல்லுங்க மேடம் என்றான் வித்யுத்.
வித்யுத் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என் வீட்டுக்கு வர முடியுமா? என்று திவிஷியா கூறிட, சாரி மேடம் இப்போ தான் நான் வீட்டுக்கு வந்தேன். ரொம்ப டயர்டா இருக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா என்றான் வித்யுத்.
சரி ஓகே ஈவ்னிங் மீட் பண்ணலாம் டின்னருக்கு என் வீட்டுக்கு வர்றீங்களா என்று திவிஷியா கேட்டிட இல்லை மேடம் உங்க வீட்டுக்கு நான் வரவில்லை வேண்டாம். நாம ஏதாச்சும் பார்க் இல்லைனா ஹோட்டல் அப்படி மீட் பண்ணலாம் என்று கூறிவிட்டு போனை வைத்தான் வித்யுத் அபிமன்யு.
எப்படித்தான் எல்லாருடனும் நட்பாக பழகுகிறாளோ பார்த்த பத்தாவது நிமிஷத்துல எல்லாரையும் பிரெண்ட் பிடித்து விடுகிறாள் என்று நினைத்த வித்யுத் கண்களை மூடிக்கொள்ள யாழிசையும் விகாஷிடம் பேசிக்கொண்டே கண்ணுறங்க ஆரம்பித்தாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உறங்குவதை கண்ட விகாஷின் முகத்தில் புன்னகை தான் அரும்பியது. சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போல பேசிட்டு இருக்கும் போதே தூங்கிட்டாள் என்று நினைத்தவன் தன் நண்பனுடன் பேசிக்கொண்டே அவனும் தூங்கிவிட்டான்.
அதிகாலை அந்த பேருந்து சென்னை வந்து சேர்ந்தது. அவர்கள் இறங்கிய பிறகு பை விகாஸ் என்று புதிதாக கிடைத்த நண்பனுக்கு பாய் சொல்லிவிட்டு யாழிசை திரும்பிட வித்யுத் லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தான். சார் நம்ம இப்போ நேரம் காலேஜ் போக போறோமா இல்லை அவங்க அவங்க வீட்டுக்கு போக போறோமா என்ற யாழிசையிடம் காலேஜுக்கு நாளைக்கு வந்தால் போதும் இன்னைக்கு லீவு தானே வீட்டுக்கு போகலாம் என்று கூறியவன் கேர்ள்ஸ் எல்லாரும் பத்திரமா போயிடுவிங்க தானே என்றிட போயிருவோம் சார் என்று கோரசாக கூறினார்.
போயிட்டு எல்லாரும் குரூப்ல மெசேஜ் போடுங்க என்று கூறியவன் ஒரு ஆட்டோ பிடித்தான் . நான் உங்களோட வரட்டுமா சார் என்றாள் யாழிசை.
நீ எதுக்கு என் கூட வர என்ற வித்யுத்திடம் இரண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட் தானே போகிற வழியில அப்படியே டிராப் பண்ணா தான் என்ன. நான் ஒரு ஆட்டோ நீங்க ஒரு ஆட்டோ தண்டச் செலவு சார் ஒரே ஆட்டோவில் போனோம்னா அமௌன்ட் ஷேர் பண்ணிக்கலாமே என்று அவள் கூறிட சரி வா என்றான் வித்யூத் அபிமன்யு .
அவளுக்கு குஷியாகிவிட்டது. தன்னவனுடன் செல்லும் இந்த பயணத்தை ரசித்துக்கொண்டு ஆட்டோவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் . வேண்டும் என்றே அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள் அவனுக்கு கடுப்பாக இருந்தாலும் அவளது நெருக்கம் பிடித்திருந்தது.
என்ன யாமினி கிளம்பாமல் இருக்கீங்க என்ற விகாஷிடம் என்னை நீங்க டிராப் பண்ண முடியுமா சீனியர் என்றாள் யாமினி. சாரி யாமினி ஆட்டோ இல்லை கேப் பிடிச்சு போய்க்கொங்க என்னால உங்களை டிராப் பண்ண முடியாது என்று விகாஷ் கூறிட ஏன் சீனியர் இப்படி சொல்றீங்க என்று கேட்டாள் யாமினி.
என்னோட பைக்ல என்னோட வொய்ஃப் தவிர வேற எந்த பொண்ணையும் நான் அழைச்சிட்டு போக மாட்டேன் அதனால ப்ளீஸ் என்று அவன் கூறிட யாமினிக்கு தான் கடுப்பாகிவிட்டது .
மேடம் ப்ளீஸ் அவனை அடிக்காதீங்க” என்ற மயூரியிடம், “இல்லை டீச்சர் அவன் பாருங்க எவ்வளவு பெரிய காரியம் பண்ணி வச்சுருக்கான்னு இவனை எப்படி சும்மா விடச் சொல்லுறீங்க” என்று அழுதாள் கௌரி.
“நீ சொல்லுறது உண்மையா” என்ற மயூரியிடம் , “சத்தியமா டீச்சர் நான் எதையும் மறைக்கவில்லை” என்று அவன் கூறிட, “வியாபாரம் பண்ணுறவன் நாலு பாக்கெட் வச்சா பண்ணுவான்” என்ற மயூரியிடம், “இல்லை டீச்சர் இரண்டு, மூன்று பார்சல் என் பேக்ல வச்சு கொண்டு வருவேன்” என்று கூறினான் கிஷோர்.
“அப்பறம் இன்னைக்கு மட்டும் என்ன நாலு பாக்கெட்” என்று கேட்டாள் மயூரி. “நேற்று நைட்டு தான் டீச்சர் ஃபர்ஸ்ட் டைம் கஞ்சா இழுத்து பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னேன் அவங்க வேணும்னு கேட்டாங்க அதான் காஜா அண்ணாவோட ஆளுங்க கொடுத்த பார்சலில் நாலு பாக்கெட் சிகரெட்டை எடுத்து வச்சுக்கிட்டேன்” என்றான் கிஷோர்.
“பாருங்க மேடம் உங்க பையன் பண்ணி இருக்கிற காரியத்தை இவனை போலீஸ்ல பிடிச்சு கொடுக்காமல் வேற என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” என்றாள் மயூரி.
“டீச்சர் இந்த ஒரு முறை மட்டும் அவனை மன்னிச்சி விட்டுருங்க டீச்சர் இனிமேல் அவன் இந்த மாதிரி தப்பு பண்ணாமல் நான் பார்த்துக்கிறேன்” என்றாள் கௌரி.
“எப்படிங்க மன்னிச்சி விடவா அவன் பண்ணி இருக்கிறது அஃபென்ஸ் இந்த வயசுல கஞ்சாவை கை மாத்தி விடுற அளவுக்கு அவன் வளர்ந்திருக்கிறான். போதாக்குறைக்கு இன்னும் நாலு பசங்களை கெடுக்க முயற்சி பண்ணி இருக்கிறான் இவனை என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” என்றாள் மயூரி.
“டீச்சர்” என்று அந்த கௌரி அழுது கொண்டு இருந்தாள். “பாரு கிஷோர் உன் அம்மா அழுதுட்டு இருக்காங்க உன் அம்மாவோட கஷ்டத்தை போக்க தப்பான வழியில் நீ பண்ணின காரியம் தான் அவங்களை இன்னைக்கு அழ வச்சுருக்கு. இப்போ நீயே சொல்லு உன்னை என்ன பண்ணலாம்” என்றாள் மயூரி.
“ஏற்கனவே உன் அப்பா ஜெயிலில் கிடக்கிறார் இப்போ நீயும் அவங்களை கஷ்டப் படுத்திட்டு இருக்க” என்ற மயூரியிடம், “நான் ஜெயிலுக்கு போறேன் டீச்சர்” என்றான் கிஷோர். “நான் பண்ணின தப்புக்கு நான் ஜெயிலுக்கு போறேன் டீச்சர் அம்மாவை அழ வேண்டாம்னு சொல்லுங்க” என்றான்.
“ஜெயிலுக்கு போனால் திரும்ப இந்த தப்பை செய்யக் கூடாது என்று தான் அர்த்தம். ஜெயிலுக்கு போயி அங்கே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு அங்கே கிடைக்கும் சில தவறான நட்புக்களை வைத்து வெளியே வந்து இன்னும் தப்பு பண்ணக் கூடாது” என்று மயூரி கூறிட , “கண்டிப்பா இனிமேல் எந்த தப்பும் செய்ய மாட்டேன் டீச்சர்” என்றான் கிஷோர்.
“உன்னை நம்பலாமா கிஷோர்” என்ற மயூரியிடம், “அம்மா மேல சத்தியம் டீச்சர் இனிமேல் எந்த தப்பும் பண்ணவே மாட்டேன்” என்றான் கிஷோர்.
“ரொம்ப சந்தோஷம் நீ ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டாம் உன்னோட கிளாஸ் ரூம்க்கு போ அப்பறம் இனிமேல் நீயும், உன் அம்மாவும் அந்த ஏரியாவில் குடி இருக்க வேண்டாம்” என்றாள் மயூரி.
“டீச்சர்” என்ற கௌரியிடம், “அங்கே இருந்தால் இவன் திருந்தனும்னு நினைச்சாலும் அந்த கிரிமினல் திருந்த விட மாட்டான் அதனால் தான் சொல்கிறேன்” என்றாள் மயூரி.
“இல்லை டீச்சர்” என்று தயங்கிய கௌரியிடம், “உங்களுக்கான உதவிகள் எல்லாம் கிடைக்கும். என்னை நம்புங்க என் அம்மா உங்களை மாதிரி ஆதரவற்ற பெண்களுக்காக வெல்ஃபேர் ஆர்கேனிசேசன் நடத்துறாங்க உங்களுக்கு வேலை , தங்க இடம் எல்லாம் அவங்க ஏற்பாடு பண்ணி தருவாங்க” என்றவள் , “இந்த அட்ரஸ்க்கு போங்க அங்கே ரேவதினு ஒரு மேடம் இருப்பாங்க அவங்க கிட்ட அபிராமி மேடம் அனுப்பினாங்கனு மட்டும் சொல்லுங்க” என்றாள் மயூரி.
“ரொம்ப தேங்க்ஸ் டீச்சர்” என்ற கௌரியிடம் , “நீங்க பெத்தவங்க நாங்க டீச்சர் அவ்வளவு தான் வித்யாசம் அவன் எனக்கும் பையன் தான் அவனோட எதிர்காலம் நல்லா இருக்கனும்னு எனக்கும் அக்கரை இருக்கு” என்ற மயூரி கௌரியை அனுப்பி வைத்தாள்.
“டீச்சர் பிரின்சிபால் கிட்ட சொல்லிட்டேன்னு சொன்னீங்க” என்ற கிஷோரிடம், “அப்படி சொன்னதால் தானே நீ உண்மையை சொல்லியிருக்க” என்ற மயூரி , “உன் அம்மா மேல சத்தியம் பண்ணியிருக்க அதை காப்பாத்து” என்று கூறி விட்டு அவனை அனுப்பி வைத்தாள்.
“என்ன விஷயம் வரச் சொன்ன” என்ற அரவிந்தனிடம், “என்னோட ஸ்டூடண்ட் கொடுத்த ஸ்டேட்மெண்ட்” என்ற மயூரி கிஷோரிடம் பேசியதை வீடியோ எடுத்து வைத்திருந்தாள். அதை அரவிந்தனிடம் காட்டினாள்.
“அந்த பொறுக்கி ஜனாவை” என்று பற்களைக் கடித்தவனிடம் , “எனக்கு ஒரே ஒரு ஃபேவர் நீங்க பண்ணனும்” என்றாள் மயூரி.
“உன் ஸ்டூடண்ட் பெயர் வெளியே வரக் கூடாது அது தானே” என்று அவன் கேட்டிட , “ஆமாம்” என்றாள் மயூரி. “கண்டிப்பா” என்ற அரவிந்தன், “அப்பறம் ரொம்ப தேங்க்ஸ் இந்த கேஸ்ல ஹெல்ப் பண்ணினதுக்கு” என்றான்.
என்ன போலீஸ்கார் எனக்கு போயி தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு நாம இரண்டு பேரும் லவ்வர்ஸ். லவ்வருக்கு யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் கிளம்பி விட அவளோ புன்னகைத்து விட்டு தானும் சென்று விட்டாள்.
என்ன சொல்லுறடா என்ற கஜாவிடம் ஆமாம் தல நம்மளை போலீஸ் ரவுண்ட் அப் பண்ணிருச்சு என்றான் அவனது இன்ஃபார்மர். எப்படி என்ற கஜாவிடம் எல்லாம் அந்த இஸ்கூல் பையன் கிஷோரால தான் நம்ம வஜ்ரத்தோட சேர்ந்து நைட்டு பீச்ல டோப்பு அடிச்சுருக்கான் அதை அவனோட டீச்சர் பார்த்துட்டாளாம். பள்ளிகோடத்தில போட்டு அவனை மிரட்டி நம்ம விஷயத்தை கறந்து போலீஸ் கிட்ட போட்டுக் கொடுத்துட்டாள் தல என்றான் அவன்.
இன்னும் ஐந்து நிமிசத்தில போலீஸ் உன் வூட்டுக்கு வந்துரும் தல தப்பிச்சுரு என்று கூறி விட்டு ஃபோனை வைத்தான் அந்த இன்ஃபார்மர்.
பொடியனை நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்துட்டான் என்று புலம்பிய கஜா தப்பிச் செல்ல நினைத்து பின் வாசல் வழியாக வெளியே செல்ல முயல ஓங்கி அவன் நெஞ்சில் மிதித்தான் அரவிந்தன்.
அவன் மிதித்த மிதியில் பறந்து சென்று விழுந்தான் கஜா. அவன் எழுவதற்குள் சரமாரியாக அரவிந்தன் அடித்திட நிலைகுலைந்து போனான் கஜா.
அடித்ததோடு மட்டும் இல்லாமல் நடுத்தெருவில் வெறும் ஜட்டியோடு கையில் கைவிலங்கு மாட்டி அவனை காவல் நிலையம் வரை இழுத்துக் கொண்டு சென்றான்.
அவனை காவல் நிலையத்திலும் அடித்து நொறுக்கி விட்டான்.
மயூ என்று வந்த அபிராமியிடம் அப்பா எப்படி இருக்கிறாரு என்றாள். ரொம்ப தான் அக்கறை இந்த அக்கறை இருக்கிறவள் நேரில் வந்து பார்த்து அப்பா எப்படி இருக்கிறாருனு தெரிஞ்சுக்கணும் என்று அபிராமி கூறிட மௌனமாகினாள் மயூரி.
எனக்கு அக்கறை இல்லைன்னு நினைக்கிறியா அபி என்றாள் மயூரி. அவளது கண்கள் கலங்கி இருப்பதைக் கண்ட அபிராமியோ ச்சே அம்மா உன் கிட்ட விளையாடினேன் செல்லம் அப்பா நல்லா இருக்காரு அவரைப் பற்றி நீ கவலைப்படாதே என்று கூறி மகளை அணைத்துக் கொண்டார் அபிராமி.
ரொம்ப தேங்க்ஸ் என்ற அரவிந்தனிடம் தேங்க்ஸ் சொல்ல தான் வரச் சொன்னீங்களா நான் கூட என் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வரச் சொன்னீங்கனு நினைச்சுட்டேன் என்றவளை அவன் முறைத்திட இல்லை போலீஸ்கார் தேங்க்ஸ் நீங்க ஃபோன்லையே சொல்லி இருக்கலாமே அதை தான் சொன்னேன் என்றாள் மயூரி.
உன் உதவியால தான் அந்த கஜாவை அரஸ்ட் பண்ணினேன் அதற்கு நன்றி சொல்லிட்டு அந்த ஸ்டூடண்ட் எங்கே இருக்கிறான், அவன் நமக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுப்பானா என்று கேட்க தான் வரச் சொன்னேன் என்றான் அரவிந்தன்.
அவன் ஸேஃபா இருக்கான். அவன் கண்டிப்பா வாக்குமூலம் கொடுப்பான் ஆனால் அவனோட ஃபேஸ் மீடியாக்கு தெரியக் கூடாது அப்பறம் அவன் மேல் கேஸ் என்று தயங்கினாள் மயூரி.
பொய்மையும் வாய்மை யிடத்த
புரை தீர்ந்த நன்மை…
திருக்குறள் நீ படிச்சதில்லையா நல்லது நடக்கனும்னா பொய் பேசலாம். உன் ஸ்டூடண்ட் அம்மாவோட கஷ்டத்தை போக்க கஞ்சா விக்கலை அம்மாவோட உயிரை காப்பாற்ற தான் கஜா சொன்ன வேலையை செய்தான்னு தான் ஜட்ஜ் கிட்ட சொல்லப் போறேன். அதுவும் இல்லாமல் அவன் சின்ன பையன் அவனோட எதிர்காலம் பற்றி அவங்களும் யோசிப்பாங்க அதனால அவனோட படிப்புக்கு எந்த பாதிப்பும் வராது. அவன் மைனர் ஜெயிலுக்கும் போக மாட்டான் என்று அரவிந்தன் கூறிட ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் போலீஸ்கார் என்றாள் மயூரி.
சரி கிளம்பு என்று அவன் கூறிட ஹலோ என்ன ஒரு கூல் ட்ரிங்க்ஸ் கூட வாங்கி தராமல் கிளம்புனு சொல்லுறீங்க நான் பாவம் இல்லையா என்றாள் மயூரி.
ஜூஸா நான் ஏன் உனக்கு வாங்கி கொடுக்கனும் என்றவனிடம் காம்ப்ளிமென்ட் உங்க கேஸ்க்கு நான் ஹெல்ப் பண்ணினேனே என்று அவள் கூறிட நீ பண்ணினது சின்ன ஹெல்ப் தான். இந்த கேஸ்ல இன்னும் பெரிய புள்ளிகள் எல்லாம் இருக்காங்க. இந்த கஜா ஒரு டீலர் தான். இவனைப் போல சிட்டியில் இன்னும் நூறு பேர் சுத்துறாங்க எல்லோரையும் பிடிக்கனும் அதனால் எனக்கு நிறைய வேலை இருக்கு என்னை ஆளை விடு என்று அவன் கிளம்பி விட கஞ்சப் பிசுனாறி ஒரு ஜூஸ் தானே கேட்டேன் அது கூட வாங்கித் தராமல் ஓடிட்டாரு என்று நினைத்த மயூரி நாம ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பலாம் என்று ஜூஸை ஆர்டர் செய்தாள்.
என்ன அபி எப்போ வந்தீங்க என்று கன்னிகா கேட்டிட காலையில் தான் வந்தேங்க என்றார் அபிராமி.
மயூ அப்பா எப்போ வராரு என்று கன்னிகா கேட்டிட இன்னும் ஆறு மாதத்தில் ரிலீஸ் ஆகிருவாரு என்றார் அபிராமி. அவர் வந்ததும் மயூரிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் என்றார் அபிராமி.
“ஹேய் கேப் எல்லாம் புக் பண்ண வேண்டாம் வந்து உட்காரு” என்று அரவிந்தன் அழைத்திட, “நான் காண்பது கனவா” என்று தன் கையை கிள்ளிப் பார்த்தாள் மயூரி.
“ஆஆ வலிக்குது, கனவு இல்லை தான்” என்று நினைத்தவள் “அவரையும் கிள்ளிப் பார்ப்போம்” என்று அவனது கையை கிள்ளினாள்.
“ஏய் பைத்தியம் எதுக்கு டீ கிள்ளின” என்று அவன் கையை தேய்த்துக் கொண்டே கூறிட , “இல்லை போலீஸ்கார் நீங்க என்னை உங்க கூட பைக்ல வரச் சொன்னிங்களே இது கனவா இல்லை நிஜமா என்ற சந்தேகம் அதான் கிள்ளிப் பார்த்தேன்” என்று சிரித்தாள் மயூரி.
“அதுக்கு உன் கையை கிள்ள வேண்டியது தானே” என்றான் அரவிந்தன். “என் கையை தான் ஃபர்ஸ்ட் கிள்ளினேன் அப்புறமும் ஒரு சந்தேகம் அதான் உங்க கையையும் கிள்ளிப் பார்த்தேன்” என்று அவள் கூறிட, “சரியான பைத்தியம் ஒழுங்கா பைக்ல உட்காரு டீ” என்று பற்களைக் கடித்தான் அரவிந்தன்.
அவளும் பைக்கில் அமர்ந்து அவனது தோளில் கை வைத்திட, “ஏய் கையை எடு” என்றான் அரவிந்தன். “என்ன போலீஸ்கார் கையை எடுக்க சொல்லுறீங்க நான் விழுந்துட மாட்டேனா?” என்று மயூரி கேட்டிட, “ரொம்ப நடிக்காதே கைப்பிடியை பிடிச்சு உட்காரு” என்றான்.
“நீங்க ரொம்ப மோசம் போலீஸ்கார்” என்ற மயூரியை முறைத்தவன் “டோன்ட் கால் மீ போலீஸ்கார். கால் மீ அரவிந்தன்” என்று அவன் கூறிட, “நீங்க போலீஸ் தானே அப்போ போலீஸ்கார்னு கூப்பிடலாம் தப்பில்லை தப்பில்லை” என்று அவள் கூறிட கடுப்பானவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“ஹலோ போலீஸ்கார் கோபத்தில் எங்கேயாவது கொண்டு போய் தள்ளி விட்டுறாதீங்க என் அபிக்கு நான் ஒரே ஒரு பொண்ணு தான்” என்றாள் மயூரி. “உன்னை பெறாமலே இருந்திருக்கலாம்” என்று அவன் நினைத்திட, “உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சு போலீஸ்கார் நானும் பிறக்கலைனா என் மம்மியை எல்லோரும் குறை சொல்லுவாங்க” என்று அவள் பேசிக் கொண்டே போக , “வாயை மூடிட்டு வாடீ” என்று அதட்டினான் அரவிந்தன்.
அவளும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டு வந்தாள். “வீடு வந்திருச்சு இறங்கு” என்று அவன் கூறிட, “அச்சச்சோ அதுக்குள்ள வந்துடுச்சா” என்று கூறிய மயூரி, “போலீஸ்கார் போலீஸ்கார் அப்படியே பீச் வரை இன்னொரு ரவுண்டு பைக்ல போயிட்டு வருவோமா?” என்றாள் மயூரி.
அவளை முறைத்த அரவிந்தன், “மரியாதையா இறங்கு” என்று கூறிட வேறு வழி இல்லாமல் அவளும் இறங்கி சோகமாக சென்றாள்.
அவன் பைக்கை பார்க் செய்து விட்டு வரும் வரை அவள் லிஃப்ட் அருகே நின்றிருக்க, “என்ன இங்கே நின்னுட்டு இருக்க” என்றான் அரவிந்தன்.
“எல்லாம் நீங்க வரட்டும்னு தான்” என்றாள் மயூரி. அவளை முறைத்த அரவிந்தன் “நான் படிக்கட்டில் வந்துக்கிறேன்” என்றிட, “அப்போ நானும் படிக்கட்டிலேயே வரேன்” என்று அவள் கூறினாள்.
“அறிவே இல்லையா உனக்கு” என்ற அரவிந்தனிடம், “இல்லை நிறையவே இருக்கு” என்று புன்னகைத்தாள் மயூரி. அவளைப் பார்த்து பற்களைக் கடித்தவன் லிஃப்ட்டிற்குள் நுழைய அவளும் பின்னாலையே வந்து விட்டாள்.
“நீ என்ன நாய்க்குட்டியா என் பின்னாலையே வர” என்ற அரவிந்தனிடம், “ஆமாம் பொம்மேரியன் நாய்க்குட்டி தூக்கி வச்சு கொஞ்சுறீங்களா” என்றாள் மயூரி.
“உனக்கு ஒரு கன்னம் பழுத்தது பத்தலைனு நினைக்கிறேன்” என்றான் அரவிந்தன்.
“ஆத்தி இந்த போலீஸ்கார் கடுப்பில் இன்னொரு அறை கொடுத்தாலும் கொடுத்துருவாரு” என்று நினைத்த மயூரி மௌனமாகினாள்.
லிஃப்ட் நின்றதும் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். அவனுடன் பயணித்த நிமிடங்களை நினைத்து நினைத்து மெத்தையில் சரிந்தவள் அவனைப் பற்றிய கற்பனைகளிலே உறங்க ஆரம்பித்தாள்.
“என்ன அரவிந்த் மயூரி உன் கூட தான் வந்தாள் போல” என்ற கன்னிகாவிடம், “ஆமாம்” என்று கூறினான் அரவிந்தன். “இரண்டு பேரும் தனியா வரணும் என்று சொல்லி இருந்தால் நாங்க என்ன வேண்டாம்னா சொல்லப் போறோம் உனக்கு வேலை இருக்குனு நீயும், அவளுக்கு வேலை இருக்குனு அவளும் எதுக்கு இந்த டிராமா அடுத்த முகூர்த்தத்திலேயே உங்க கல்யாண தேதியை குறிச்சுடுறேன்” என்றார் கன்னிகா.
“அம்மா போதும் உங்க கற்பனையை கொஞ்சம் கட்டுப் படுத்துங்க நான் வேற வேலையா போனேன். அவளும் வேற வேலையா போனாள். எதார்த்தமாக தான் அவளை பார்த்தேன். வயசுப் பொண்ணை நேரங் கெட்ட நேரத்தில் தனியா விட்டுட்டு வரக் கூடாதுனு தான் என் கூட அழைச்சிட்டு வந்தேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை” என்று கூறி விட்டு வேக வேகமாக தன் அறைக்கு சென்று விட்டான் அரவிந்தன்.
“பைக்ல கூட்டிட்டு வரும் அளவுக்கு வந்துருச்சு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துருவான் அந்த நம்பிக்கை இருக்கு” என்று நினைத்த கன்னிகா, “கடவுளே முருகா நீ தான் துணை இருக்கனும்” என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.
“என்ன அபி இப்போதும் மயூ என்னை பார்க்க வர மாட்டேனுட்டாளா?” என்றார் பைரவன். “இல்லைங்க அவள்” என்று ஏதோ சொல்ல வந்த அபிராமியிடம், “என் மகளைப் பற்றி எனக்கு தெரியும் அபி என்றவர் நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கீங்க தானே” என்றார்.
“நல்லா இருக்கோமுங்க நீங்க கூட இல்லாத குறை தான்” என்றார் அபிராமி. “இன்னும் நான்கு மாதம் தான் அபி நான் வந்துடுவேன்” என்று மனைவிக்கு ஆறுதல் கூறினார் பைரவன்.
“நீங்க வந்த பிறகு தான் நம்ம மயூரியோட கல்யாணம்” என்ற அபிராமியிடம், “மாப்பிள்ளை பார்த்துட்டியா அபி” என்றார் பைரவன்.
“இல்லைங்க பார்த்துட்டு தான் இருக்கேன் நல்ல வரன் அமையும்” என்று அபிராமி கூறிட, “கண்டிப்பா அபி” என்ற பைரவன் மனைவிக்கு ஆறுதல் கூறி அவரை அனுப்பி வைத்து விட்டு சிறைக்குள் சென்றார். அன்பு மகளை பத்து, பதினொரு வயதில் பார்த்தது ஒரு முறை கூட அவள் சிறைக்கு வந்து அவரை பார்க்கவில்லை. அந்த வருத்தம் அவர் மனதில் இருந்தாலும் மகளை அவர் ஒருநாளும் வெறுத்ததில்லை.
“டேய் இங்கே வாடா” என்று மயூரி அழைத்திட, பதுங்கி பதுங்கி வந்தான் அந்த மாணவன் கிஷோர். “நேற்று நைட்டு எங்கே டா இருந்த” என்று அவள் கேட்டிட, “வீட்டில் தான் டீச்சர் இருந்தேன்” என்றான் கிஷோர். “பொய் சொல்லாதே” என்ற மயூரி, “இந்த வயசுலையே பொறுக்கி பசங்களோட சேர்ந்து கஞ்சா இழுத்துட்டு இருக்கியா நீ உன் பேரன்ட்ஸ் வராமல் உன்னை கிளாஸ் ரூம்க்கு போகவே விட மாட்டேன். பிரின்சிபால் கிட்டையும் ஆல்ரெடி கம்ப்ளையன்ட் கொடுத்துட்டேன். உன் பேரன்ட்ஸ் வந்துட்டு இருக்காங்க” என்றாள் மயூரி.
“சத்தியமா டீச்சர் நான் எந்த தப்பும் பண்ணவே இல்லை” என்ற அந்த மாணவனை முறைத்தவள், “நீடம் போடுறா” என்றாள். அவனும் மண்டியிட்டு அமர்ந்தான்.
அவனது ஸ்கூல் பேக்கை செக் செய்து பார்க்க அதிலும் கஞ்சா சிகரெட்டை ஒழித்து வைத்திருந்தான். “என்னடா இது ரொம்ப நல்லவன் மாதிரி பேசின இதெல்லாம் என்ன” என்ற மயூரி கோபமாக அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“மேடம்” என்று ஒரு பெண்மணி வர , “யார் நீங்க?” என்றாள் மயூரி. “நான் கௌரி கிஷோரோட அம்மா” என்று அந்த பெண்மணி கூறிட, “என்ன பிள்ளைம்மா வளர்க்கிறீங்க ஸ்கூல் படிக்கிற பையன் பண்ணுற வேலையா இவன் பார்க்கிறான். கஞ்சா இழுத்துட்டு இருக்கான் அதுவும் ராத்திரி பத்து மணிக்கு பீச்ல நாலு பொறுக்கி பசங்க கூட” என்று பற்களைக் கடித்தாள் மயூரி.
“உங்க பையன் என்ன பண்ணுறான், ஏது பண்ணுறான் எதுவுமே கண்டுக்க மாட்டீங்களா? நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க உங்க ஹஸ்பண்ட் வரலையா?” என்றாள் மயூரி.
“தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து கெடுக்குமாம் அந்த மாதிரி இவன் மட்டும் கஞ்சா இழுத்துட்டு இருக்கிறது பத்தாதுன்னு இவனோட கிளாஸ்மெட் இரண்டு பேருக்கு சப்ளை பண்ண பேக்ல நாலு பாக்கெட் எடுத்துட்டு வந்திருக்கிறான். போலீஸ் கம்ப்ளையன்ட் கொடுத்து இவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்து விடவா?” என்றாள் மயூரி.
“ஐயோ டீச்சர் அப்படி எதுவும் பண்ணீறாதீங்க” என்றாள் கௌரி. “வேற என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” என்றாள் மயூரி.
கௌரி மௌனமாக மகனை முறைத்துக் கொண்டு இருந்தாள். “உங்க ஹஸ்பண்ட் வரலையா மேடம்” என்ற மயூரியிடம் , “அவர் ஜெயிலில் இருக்காரு டீச்சர்” என்றாள் கௌரி.
“என்ன சொல்லுறீங்க ஏன்” என்ற மயூரியிடம், “அந்த ஆளு லோக்கல் தாதா கிட்ட அடியாளா இருந்தாரு டீச்சர். செய்யாத கொலைக்கு பழி ஏத்துக்கிட்டு இப்போ ஜெயிலில் கிடக்கிறார். நான் நாலு வீட்டில் பத்து, பாத்திரம் தேய்ச்சு இவனுக்கு கஞ்சி ஊத்திட்டு இருக்கேன் என் கஷ்டத்தை புரியாமல் இப்படி பண்ணிட்டு இருக்கிறான்” என்று அழுதாள் கௌரி.
“மேடம் ப்ளீஸ் அழாதீங்க” என்ற மயூரி கிஷோரிடம் திரும்பி “பாரு நல்லா பாரு உன் அம்மா அழறதை பாரு. அவங்க படுற கஷ்டம் உனக்கு தெரியும் தானே” என்றாள் மயூரி.
“தெரியும் டீச்சர்” என்று அவன் கூறிட , “அப்புறமும் ஏன் டா பொறுக்கி பசங்களோட சேர்ந்து கஞ்சா இழுத்துட்டு இருக்க” என்றாள் மயூரி.
“அம்மாவோட கஷ்டத்தை தீர்க்க தான்” என்று அவன் கூறிட, அவனது கன்னத்தில் “பளார்” என்று அறைந்தாள் மயூரி. “உன் அம்மாவோட கஷ்டத்தை தீர்க்க உன் கூட படிக்கிற பசங்களுக்கு கஞ்சாவை சப்ளை பண்ணுறீயா” என்றாள் மயூரி.
“ஐயோ டீச்சர் சத்தியமா இது என் ஃப்ரெண்ட்ஸ்க்கு கொண்டு வரவில்லை. எங்க ஏரியாவில் இருக்கிற கஜா அண்ணா தான் இதை கை மாத்தி விடுறவரு என் பேக்ல வச்சு கொண்டு வருவேன். ஸ்கூல் வாசலில் கஜா அண்ணாவோட ஆளுங்க என் கிட்ட இருந்து வாங்கிட்டு போவாங்க. போலீஸ் ஸ்கூல் பேக் எல்லாம் செக் பண்ண மாட்டாங்க தானே அதனால் தான் அவங்க என்னை வச்சு கஞ்சாவை மாத்திப்பாங்க. அதுக்கு காசு கொடுப்பாங்க. ஸ்கூல் விட்டு மெக்கானிக் செட்ல வேலை பார்க்கிறேன்னு அம்மா கிட்ட பொய் சொல்லி அந்த பணத்தில் கொஞ்சம் சம்பளம்னு அம்மாகிட்ட கொடுத்துருவேன்” என்று கிஷோர் கூறிட கௌரி அவனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.
“இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. இவளைப் போயி என் பக்கத்தில் உட்கார வச்சுட்டு” என்று கடுப்புடன் காரை இயக்கினான் அரவிந்தன்.
மயூரியோ அவனை ரசித்தபடியே , “ஏசிபி ஸார் பாட்டு எல்லாம் போட மாட்டீங்களா?” என்றாள். அவளை முறைத்த அரவிந்தன் “எனக்கு பாட்டு எல்லாம் பிடிக்காது” என்று கூறி விட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான்.
எதார்த்தமாக அவள் புறம் திரும்பியவன் காரை நிறுத்தி விட்டு கோபமாக அவளை முறைத்தான்.
“அறிவு இல்லையா உனக்கு?” என்ற அரவிந்தனை கேள்வியாக பார்த்தாள் மயூரி.
“சீட் பெல்ட் போட தெரியாதா என்ன” என்றான் அரவிந்தன் கோபமாக. “தெரியாதே” என்றாள் மயூரி நக்கல் தொணியுடன்.
அவளை முறைத்த அரவிந்தன், “சீட் பெல்ட் போடு” என்றிட , “அவளுக்கு தான் தெரியாதுன்னு சொல்லுறாளே அரவிந்த் நீ போட்டு விடேன்” என்று கன்னிகா கூறிட அவரை கோபமாக முறைத்தவன், “சீட் பெல்ட் போடு” என்று அவளைப் பார்த்து பற்களைக் கடித்தான்.
ஸ்கூலில் அறைஞ்சது போல திரும்பவும் அறைஞ்சுருவானோ என்று பயந்த மயூரி தானே சீட் பெல்ட்டை அணிந்து கொண்டாள்.
“ஹாய் மயூரி நீ என்ன எங்க மாமா கூட வந்திருக்க அத்தையை காணோம்” என்று ரூபிணி கேட்டிட, “நானும் வந்துட்டேன் டீ” என்று வந்தார் கன்னிகா.
“உன் சித்தி ஊருக்கு போய் இருக்காங்களாம் மயூரி ஹோட்டலுக்கு சாப்பிட போறேன்னு சொன்னாள். நாங்களும் ஹோட்டலுக்கு தான் போகிறோம்னு அழைச்சிட்டு வந்தோம்” என்ற கன்னிகா அர்ஜுனன் அருகில் அமர்ந்து கொள்ள மயூரி அரவிந்தன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
தன் தாயை அவன் முறைக்க ஆரம்பிக்க அவர் அவனை கண்டு கொண்டால் தானே.
“மயூரி உனக்கு என்ன பிடிக்குமோ ஆர்டர் பண்ணுமா” என்று கன்னிகா கூறிட அவள் தனக்கான உணவை ஆர்டர் செய்தாள்.
“சித்தி எங்கே போயிருக்காங்க” என்று ரூபிணி கேட்டிட, “என் அப்பாவை பார்க்க” என்றாள் மயூரி. “உன் அப்பா எங்கே இருக்காரு” மயூரி என்ற ரூபிணியிடம் , “பாளையங்கோட்டையில் இருக்காங்க” என்றாள் மயூரி.
“பாளையங்கோட்டையா உங்க அப்பா என்ன ஜெயிலிலா இருக்காரு” என்று கிண்டலாக கேட்டான் அர்ஜுனன். அவனைப் பார்த்து கசந்த புன்னகையை புரிந்தவள் , “ஆமாம்” என்று கூறிட , “ஐ யம் ஸாரி மயூரி நான் சும்மா கிண்டலாதா கேட்டேன்” என்றான் அர்ஜுனன்.
“இட்ஸ் ஓகேங்க” என்ற மயூரி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். “தப்பா எடுத்துக்காதே மயூரி உன் அப்பா ஏன்” என்று தயங்கினாள் ரூபிணி.
“ரூபிணி இப்போ இந்த கேள்வி அவசியமா பேசாமல் சாப்பிடுங்க நேரமாச்சு” என்று அரவிந்தன் கூறிட அனைவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், “அர்ஜுன் நீ என் காரை எடுத்துட்டு போ எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு நான் பைக்ல வரேன்” என்று கூறினான் அரவிந்தன்.
“ஆண்ட்டி எனக்கு ஒரு வேலை இருக்கு நீங்க வீட்டுக்கு போங்க நான் கேப் புக் பண்ணி வந்துடுறேன் ப்ளீஸ்” என்று மயூரி கூறிட, “இந்த டைம்ல எப்படிம்மா உன்னை தனியா விட்டுட்டு போறது” என்றார் கன்னிகா.
“ப்ளீஸ் ஆண்ட்டி” என்று அவள் கெஞ்சிட கன்னிகாவும் வேறு வழி இல்லாமல் அவளை விட்டுவிட்டு சென்றார்.
“என்னம்மா இப்போவும் அந்த மயூரியை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பமா உங்களுக்கு” என்றான் அர்ஜுனன்.
“ஏன் டா இப்படி ஒரு கேள்வி கேட்கிற” என்ற கன்னிகாவிடம் , “இல்லை அந்த பொண்ணோட அப்பா ஜெயிலில் கிடக்கிறார். ஜெயிலுக்கு போனவரோட பொண்ணை எப்படி நம்ம அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும். அண்ணன் வேற ஐபிஎஸ் ஆஃபீஸர்” என்றான் அர்ஜுனன்.
“மயூரியா ஜெயிலில் இருக்கிறாள் அவளோட அப்பா தானே இருக்காரு அது மட்டும் இல்லை அவர் ஜெயிலில் இருக்கிற விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் அபிராமி என்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டாங்க எனக்கு அது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது” என்றார் கன்னிகா .
“ஏன்டி உன்னோட சித்தி சித்தினு சொல்லுற உங்க சித்தப்பா ஜெயில்ல இருக்காருன்னு உனக்கு தெரியாதா?” என்ற அர்ஜுனனிடம், “சத்தியமா எனக்கு தெரியாது அர்ஜுன் அவங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே எங்க ஊரை காலி பண்ணிட்டு வந்துட்டாங்க அதனால அவங்க வீட்ல என்ன நடக்குது எதுவுமே எங்களுக்கு தெரியாது சொந்த பந்தங்கள் கூடவும் அவ்வளவா காண்டாக்ட்ல கிடையாது .நானே எதார்த்தமா அவங்களை பார்க்கும்போது என்ன இவங்க நம்ம அபிராமி சித்தி மாதிரி இருக்காங்களேன்னு சொல்லிட்டு தான் பேச ஆரம்பிச்சேன். அப்பதான் அவங்க என் சித்திங்கிறது எனக்கே தெரிஞ்சிருச்சு” என்றாள் ரூபிணி .
“சரி இப்ப மயூரி அப்பா ஜெயில்ல இருக்கறதுனால உனக்கு ஏதும் பிரச்சனையா அர்ஜுன்” என்ற கன்னிகாவிடம், “எனக்கு என்னம்மா பிரச்சனை அரவிந்த் அண்ணனுக்கு அந்த பொண்ணை புடிச்சிருந்தால் தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டும்” என்றான் அர்ஜுனன்.
“சரி சரி இப்போதைக்கு இந்த பேச்சு எதுக்கு நீ ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு” என்ற கன்னிகா அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார் .
“என்ன சொல்றீங்க சிவா” என்ற அரவிந்தனிடம் , “ஆமாம் சார் பீச்சுலதான் அந்த கும்பல் வந்து போதை மருந்து சப்ளை பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கிற ஒரு இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு” என்றான் சிவகுமார்.
“ஓகே ஓகே நான் அதை பார்த்துக்கிறேன்” என்ற அரவிந்தன் நேராக அந்த கடற்கரைக்கு சென்றான்
மனது சரியில்லை என்று தான் மயூரி அந்த கடற்கரைக்கு வந்தாள். வந்தவள் கண்களில் அவன் பட்டு விட “ஏய் நில்லுடா” என்று அவள் கத்திட அவளைப் பார்த்து பதறிப் போய் ஓட ஆரம்பித்தான் அவன்.
“ராஸ்கல் எங்கே ஓடப் பார்க்கிற” என்ற மயூரி அவனை விரட்டிக் கொண்டு ஓட , அந்த நேரம் அங்கு வந்த அரவிந்தனின் மீது மோதி விழுந்தாள் மயூரி.
“ஏங்க அறிவில்லையா? பார்த்து வர மாட்டீங்களா?” என்று அவள் எழுந்து கொள்ள அரவிந்தன் நின்றிருந்தான்.
“நீ இப்படி ஓடிப் பிடிச்சு விளையாடனும்னு தான் அம்மா கூட போகாமல் இங்கே வந்தியா” என்றான் அரவிந்தன்.
“ஓடிப் பிடிச்சு விளையாடுறேனா என்ன போலீஸ்கார் நீங்க வேற என் ஸ்டூடண்ட் அவன். முளைச்சு மூனு இலை விடலை அது அந்த கட்டுமரத்துக்கு பின்னாடி உட்கார்ந்து நான்கு பொறுக்கி பசங்களோட சேர்ந்து கஞ்சா இழுத்துட்டு இருக்கான். அதான் அவனை பிடிக்க விரட்டினேன் நீங்க குறுக்கே வந்துட்டீங்க. உங்க மேல மோதி நான் விழுந்துட்டேன் அவன் ஓடிட்டான்” என்றாள் மயூரி.
“எந்த கட்டுமரம் பின்னாடி எத்தனை பேரை பார்த்த” என்று அரவிந்தன் கேட்டிட , “அதோ” என்று அவள் கை நீட்ட அங்கே இருந்து ஒரு நான்கு பேர் பயங்கர போதையில் வந்து கொண்டு இருந்தனர்.
“டேய் குட்டி சோக்கா இருக்குதுடா பொடியன் இவளைப் பார்த்து பயந்து ஓடிட்டான்” என்ற ஒருவன், “இவன் யாருடா கூட” என்று மயூரியை நெருங்கி வர அவளோ அவளருகில் வந்தவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.
அவள் அறைந்ததில் அவன் பொறி கலங்கிப் போய் நிற்க, “ஏய் யாரு மேலடீ கை வச்ச” என்று மற்ற நால்வரும் அவளை நெருங்கிட அரவிந்தன் அவர்களை அடிக்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மயூரியும் அவர்களை அடி வெளுக்க ஆரம்பித்தாள்.
“என்னடா சொன்ன நாயே குட்டி சோக்கா இருக்கா சொல்லுவியா? சொல்லுவியா? சின்ன பையனுக்கு கஞ்சா இழுக்க சொல்லிக் கொடுப்பியா?” என்று அடி வெளுக்க ஆரம்பித்தாள்.
“அக்கா மன்னிச்சுக்கக்கா இனிமேல் அந்த பையனுக்கு கஞ்சா இழுக்க சொல்லிக் கொடுக்க மாட்டேன்” என்று அடி தாங்காமல் அவன் சொன்னாலும் மயூரி விடாமல் அடி வெளுக்க ஆரம்பித்தாள்.
அரவிந்தன் தன் ஆட்களை வர வைத்து இந்த நால்வரையும் அள்ளிக் கொண்டு செல்ல உத்தரவிட அவர்களும் அந்த கயவர்களை அள்ளிக் கொண்டு சென்றனர்.
அவள் கோபமாக எங்கோ கிளம்ப, “ஏய் எங்கே போற” என்றான் அரவிந்தன். “அந்த நாதாரி கிஷோர் வீட்டுக்கு. அவனை நாலு மிதி மிதிச்சா தான் என் ஆத்திரம் அடங்கும். படிக்கிற வயசில் கஞ்சா அவனை மட்டும் இல்லை அவனை கண்டுக்காமல் இருக்கிற அவனோட அம்மா, அப்பாவையும் நாலு வெளு வெளுக்கனும் அப்போ தான் என் ஆத்திரம் அடங்கும்” என்றாள் மயூரி.
“ஹேய் கொஞ்சம் அமைதியா இரு” என்ற அரவிந்தன் , “நாளைக்கு அந்த பையனோட பேரன்ட்ஸை ஸ்கூலுக்கு வரச் சொல்லி வார்ன் பண்ணு இப்போ வீட்டுக்கு கிளம்பு” என்றான் அரவிந்தன்.
“நீங்க போங்க போலீஸ்கார் நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றாள் மயூரி.
“அறிவு இருக்கா உனக்கு மணி பத்தரை இந்த டைம்ல இங்கே தனியா இருப்பியா வா” என்று அவளை அழைத்திட, “அவளோ பனிரெண்டு மணி வரை கூட நான் தனியா இருப்பேன் எனக்கு எந்த பயமும் இல்லை” என்றாள் மயூரி.
“அதான் பார்த்தேனே அந்த ரவுடியை நீ வெளுத்த வெளுவை உனக்கு பயம் இல்லை தான்” என்று சிரித்தவன், “கிளம்பு” என்று அவளை அழைத்திட , “அவளோ நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க போலீஸ்கார்” என்றாள்.
“அவளை முறைத்தவன் பேசாமல் வா” என்றான். “கேப் புக் பண்ணிட்டியா இல்லை இனிமேல் தான் பண்ணனுமா” என்று கேட்டிட , “வா வான்னு பாசமா கூப்பிட்டதும் உங்க கூட பைக்ல அழைச்சிட்டு போவீங்கனு எதிர்பார்த்தேன் நீங்க என்னடான்னா கேப் புக் பண்ணி போக சொல்லுறீங்க” என்றாள் மயூரி.
“என் அம்மா கிட்ட கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்துருவேன்னு தானே சொன்ன இப்போ மட்டும் என்ன” என்ற அரவிந்தனிடம், “கேப் புக் பண்ணி வர அளவுக்கு என் கிட்ட காசு இல்லை” என்று அவள் கைகளை விரித்து காட்ட அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“வீட்டுக்கு தானே போற அங்கே போயி எடுத்து கொடு” என்றான் அரவிந்தன்.
“கேப் புக் பண்ணி பத்தி விடுறதிலேயே குறியா இருக்காரு. ஏன் இவரு கூட
என்னை கூட்டிட்டு போனால்” என்று பற்களைக் கடித்துக் கொண்டு அவள் கேப் புக் செய்ய முயன்றாள்.
அம்மா என்று கோபமாக கத்தினாள் டானியா. என்ன டானி என்று வந்த அனுசியாதேவியிடம் எனக்கு அவனை கொஞ்சம் கூட பிடிக்க வில்லை அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையைவே கை நீட்டி அடித்து இருப்பான் என்று கத்தினாள் டானியா.
என்ன சொல்லுற டானி குகன் உன்னை அடித்தானா என்ற அனுசியாதேவியிடம் ஆமாம் என்று குகன் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை கூறினாள் டானியா.
இரு நான் சித்ராவுக்கு பேசுகிறேன் என்று அனுசியா சித்ராதேவியிடம் மகள் கூறிய விஷயங்களை கூறினார். குகன் கொஞ்சம் கோபக்காரன் நான் அவன் கிட்ட பேசுகிறேன். டானியா அவன் ஆஃபீஸ்ல அவன் கூடவே வொர்க் பண்ணுவாள் நான் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறிவிட்டு சித்ரா தேவி மகனின் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றார்.
கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் தன் மடியில் அவள் இருப்பதை மறந்து எஸ் கம் இன் என்று அவன் கூறிட சித்ரா தேவி உள்ளே நுழைந்தார்.
அவரைக் கண்டு பதறிப் போனாள் சஷ்டிப்ரதா. அவள் அவன் மடியில் இருந்து எழுந்து கொள்ள ஏன் டீ இப்போ எழுந்துக்கிற என்றவன் அவளது பார்வை போன் திசையில் பார்க்க அவனது அம்மா நின்றிருந்தார்.
அம்மா நீங்க ஏன் ஆஃபீஸ் வந்திங்க என்ற குகனை முறைத்தவர் புழுவைப் பார்ப்பது போல சஷ்டிப்ரதாவை பார்க்க அவளோ கூனிக் குறுகிப் போனாள். என்ன கண்றாவி குகன் இது யாரிவள் என்றார் சித்ரா தேவி. சஷ்டிப்ரதா என் ஆஃபீஸ் ரிசப்ஷனிஷ்ட் என்று அவன் கூறிட ரிஷப்சனிஷ்ட்க்கு உன் மடியில் என்ன வேலை என்று பற்களைக் கடித்த சித்ரா தேவி ஏதோ சொல்ல வர அம்மா போதும் என்றவன் ப்ரதா நீ போயி உன் வேலையைப் பாரு என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
சொல்லுங்க அம்மா என்ன பிரச்சினை என்று அவன் கேட்டிட இவளை இப்படி கொஞ்சனும் என்று தான் டானியாவை இன்சல்ட் பண்ணி துரத்தி விட்டியா யாருடா இவள் சாதாரண ரிசப்ஷனிஷ்ட் டானியா இரண்டு கம்பெனியோட எம்.டி என்று சித்ரா தேவி கூறிட ஸோ வாட் அந்த டானியாவை கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீங்க தேவை இல்லாமல் அவளை என் வாழ்க்கைக்குள்ள திணிக்க பார்க்காதீங்க என்றான் குகன்.
அப்போ அந்த ஸ்டெனோவை நீ கல்யாணம் பண்ணிக்க போறியா வயசுப் பையன் மடியில் அதுவும் ஆஃபீஸ்லையே ச்சீ என்ன பொண்ணு அவள் கேவலமான பிறவி உன்னை செடியூஸ் பண்ணி தான் இங்கே வேலைக்கு சேர்ந்தாளா என்று சித்ரா தேவி பேசிக் கொண்டே போக இனஃப் மாம் இனஃப் ப்ரதா பற்றி இன்னொரு வார்த்தை தப்பா பேசுனீங்கனா நல்லா இருக்காது என்றான் குகன்.
ஓ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா அவளைப் பற்றி பேசினால் நல்லா இருக்காதா சரி தான் என்று பற்களைக் கடித்து கொண்டு சித்ரா தேவி அங்கே இருந்து நகர்ந்திட அம்மா ப்ளீஸ் என்று அவன் ஏதோ சொல்ல வர அதை காதில் வாங்காமல் கோபமாக சென்று விட்டார் சித்ரா தேவி.
ரிசப்ஷனில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் சஷ்டிப்ரதா. அவளைத் தீயென முறைத்துக் கொண்டு அவர் அவளருகில் வந்தார். மேடம் அது என்று உதடுகள் தந்தியடிக்க அவள் ஏதோ சொல்ல வர அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார் சித்ரா தேவி.
என்ன டீ நினைச்சுட்டு இருக்க உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் பையனை செடியூஸ் பண்ணி உன் வலையில் விழ வச்சுருப்ப என்று அவர் பேசிக் கொண்டே போக அவளுக்கு குகன் மீது தான் கோபம் வந்தது. அலுவலகத்தில் கூட அவனது இச்சையை தீர்த்துக் கொண்டு என்னை குற்றவாளி ஆக்கி விட்டானே என்று.
மேடம் அது என்று அவள் ஏதோ சொல்ல வர அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சித்ரா தேவி. இதோ பாரு காசுக்காக தானே என் பையனை செடியூஸ் பண்ணிட்டு இருக்க உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ கேளு கொடுக்கிறேன் வாங்கிட்டு என் பையன் வாழ்க்கையை விட்டு நிரந்தரமா ஓடிப் போய் விடு. அவனுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன் என்றார் சித்ரா தேவி.
கண்டிப்பா உங்க பையனோட வாழ்க்கையில் இருந்து விலகிடுவேன் மேடம் என்ற சஷ்டிப்ரதாவிடம் நீ மட்டும் விலகவில்லை என்று சொல்லிப் பாரு அப்போ தெரியும் இந்த சித்ரா யாருன்னு என்று அவளை எச்சரித்து விட்டு அவர் சென்று விட அவளுக்கு தான் அவமானமாக இருந்தது. எங்காவது சென்று தற்கொலை செய்து இறந்து விடலாமா என்று தான் தோன்றியது.
அவள் அழுது கொண்டே இருக்க அவளது தோளில் ஒரு கை படர நிமிர்ந்து பார்த்தாள். குகன் தான் நின்றிருந்தான். ப்ரதா காரில் ஏறு என்று கூறி விட்டு அவளை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அவள் அமைதியாக அழுது கொண்டே இருந்தாள். இப்போ எதுக்கு அழுதுகொண்டே இருக்க கொஞ்சம் அமைதியாக இரு என்று அவன் கூறிட ப்ளீஸ் குகன் என்னை விட்டுருங்க என்னால இதற்கு மேல அசிங்கம் பட முடியாது என்று அவள் அழுதிட என்ன பிரச்சினை ப்ரதா நீ கான்ட்ராக்ட் சைன் பண்ணும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் என்று உனக்கு தெரியாதா. சும்மா அழுது டிராமா பண்ணாதே என்றவன் அவளது கையை பிடித்திட அவனது கையை தட்டி விட்டாள் சஷ்டிப்ரதா.
என்ன கொழுப்பு டீ உனக்கு என் கையை தட்டி விடுற என்றவன் அவளது கையை அழுத்தி பிடித்து அவளது தலை முடியை பற்றி தன் பக்கம் திருப்பி அவளது இதழில் தன் இதழைப் பதித்தான்.
அவனைப் பிரிய அவள் போராடினாலும் அவளால் அது முடியாது அவன் அவள் இதழில் அழுத்தத்தைக் கூட்டிட அவளோ மெல்ல அவனிடம் அடங்கிப் போக அதன் பிறகே அவளை விடுவித்தான் குகநேத்ரன்.
மனுசனா நீங்க என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவே மாட்டிங்களா என்று அவள் கத்திட அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான் குகன். என்ன டீ வாய் ஓவரா போகுது நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா தெரியாதா இடியட் என்று கத்தினான் குகன்.
அவள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அடித்த வேகத்தில் அவளது பற்கள் உதட்டை கிழித்து இரத்தம் வழிய அதைக் கண்டு பதறிப் போனான் குகன்.
ப்ரதா ஏன் என்னை மிருகமா மாத்துற என்று கூறிவிட்டு அவளது இதழில் வழிந்த இரத்தத்தை துடைத்தவன் இதோ பாரு உன்னை காயப் படுத்த நான் நினைக்கவில்லை ஆனால் என்னோட கோபத்தை தூண்டி விட்டு என்னை மிருகமா மாத்தாதே என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவளுக்கு தான் அழுகையாக வந்தது.
அவன் சென்று ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அவளுக்கு மருந்து போட்டு விட்டவன் இதோ பாரு நம்ம காண்ட்ராக்ட் முடியும் வரைக்கும் என்ன அவமானம் வந்தாலும் நீ சகித்துக் கொண்டு தான் ஆகனும். அது மட்டும் இல்லை என் கிட்ட குரலை உயர்த்தி பேசவே கூடாது சொல்லிட்டேன் என்றவன் எழுந்து சென்று விட்டான்.
தன் மொபைல் ஃபோனில் இருந்த புகைப்படத்தை பார்த்தவள் உனக்காக இன்னும் எத்தனை அவமானத்தை தான் நான் தாங்கப் போகிறேனோ தயவு செய்து சீக்கிரம் கண் விழித்து விடுடா என்று அவள் அழுது கொண்டிருக்க அவளது மொபைல் ஃபோனில் வால்பேப்பரில் அவள் தோளில் கை போட்டு கொண்டு அழகாக சிரித்துக் கொண்டு இருந்தான் விஷ்ணு.
என்ன சஷ்டி ஏன் அழுதுட்டு இருக்க என்ற விஷ்ணுவிடம் இல்லைடா அந்த ராஜேஷ் என்று அவள் மேலும் அழ ஆரம்பித்தாள். அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன் இன்னும் இரண்டு வாரம் தான் எனக்கு சேலரி வந்து விடும் நீயும், நானும் தனியா வீடு எடுத்து தங்கிக் கொள்ளலாம் நீ இப்படி பயந்து பயந்து வாழவே வேண்டாம் என்று கூறினான் விஷ்ணு.
நாம சேர்ந்து இருந்தால் கார்த்திகா அம்மா நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைத்து பேசி அசிங்கப் படுத்தி விடுவாங்களே என்ற சஷ்டிப்ரதாவிடம் நீ அவங்களை பற்றி எல்லாம் கவலைப் படாதே அவங்களை எப்படி சரி கட்டணும் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் விஷ்ணு. புது வீட்டுக்கு ஷிப்ட்டாகிறோம் சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிக்கிறோம் என்று விஷ்ணு கூறிட அவளோ ஜெயிலுக்கு போயிட்டு வந்த என்னை யாரு கல்யாணம் பண்ணிக்க போறாங்க அது மட்டும் இல்லை எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று அவள் கூறிட மக்கு அடிச்சுருவேன். நீ என்ன கொலை பண்ணிட்டா ஜெயிலுக்கு போன உன்னை பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி இருக்காங்க அந்த உண்மை தெரிஞ்சு உன்னை ஏத்துக்க ஒருத்தன் வராமலா போய் விடுவான் என்று விஷ்ணு கூறிட அவளும் புன்னகைத்தாள்.
அந்த நினைவுகளில் இருந்து மீண்டவள் கடவுளே என் விஷ்ணு கண் விழித்து எழுந்தாலே போதும் நான் நிம்மதியா கண்ணை மூடிருவேன் என்று நினைத்தாள் சஷ்டிப்ரதா.
என்ன சித்ரா கோபமாக இருக்க என்ற அருள்வேந்தனிடம் எல்லாம் நாம பெத்த மகனால் தான். நான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒரு பொண்ணு பார்த்தால் அவன் ஆஃபீஸ் ஸ்டெனோ கூட ஆஃபீஸ்லையே உட்கார்ந்து கூத்தடிச்சுட்டு இருக்கிறான் என்று ஆதங்கமாக பேசினார் சித்ரா தேவி.
நீ சந்தோசம் தானே பட வேண்டும் இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டு இருந்தவன் ஒரு பொண்ணு கிட்ட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்திருக்கிறான் என்றால் பாறைக்குள்ளும் பூ பூத்திருச்சு நம்ம பையன் மனசுலையும் காதல் பூத்திருச்சு என்று அருள் வேந்தன் கூறிட வாயை மூடுங்க அந்த பொண்ணு மேல அவனுக்கு காதல் இருந்தாலும் அவளை இந்த வீட்டிற்கு மருமகளா அழைத்துக் கொண்டு வர
நான் சம்மதிக்க மாட்டேன் என்றார் சித்ரா தேவி.
…. தொடரும்…
அவள் அறைந்ததில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்த சஷ்டிப்ரதா ஸாரி மேடம் என்று கூறிட அவளை முறைத்து விட்டு கோபமாக சென்று விட்டாள் டானியா. அவன் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றானே என்று நினைத்தவள் ஒருவேளை என்னை டெஸ்ட் பண்ணி இருப்பான் போல என்று நினைத்த சஷ்டிப்ரதா என்ன இருந்தாலும் நான் காசுக்காக அவன் கூட என்று நினைத்து நொந்து கொண்டாள்.
எஸ் மிஸ்.டானியா என்ற குகனிடம் உங்களோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் நம்ம ரெண்டு கம்பெனியும் சேர்ந்து தான் பண்ண போகிறோம் என்றாள் டானியா. அப்பா சொன்னாங்க என்றவன் நீங்க உங்க ஆஃபீஸ்லையே வொர்க் பண்ணுங்க எதுவும் தேவைப் பட்டால் ஜூம் மீட்டிங் மூலமாக டிஸ்கஸ் பண்ணலாம் என்று குகன் கூறிட குகன் ஐ வாண்ட் வொர்க் வித் யூ என்று கூறிட இந்த ப்ராஜெக்ட் நாம சேர்ந்து தான் பண்ணுவோம் டானியா பட் என் ஆஃபீஸ்ல ஸ்பேஸ் கொஞ்சம் கம்மியா இருக்கு உங்களுக்கு தனி கேபின் ரெடி பண்ணுவது கொஞ்சம் கஸ்டம் என்று கூறினான் குகன்.
எதுக்கு தனி கேபின் குகன் ஐ வான்ட் வொர்க் வித் யூ அதனால இதே ரூம்லையே ஒரு கேபின் ரெடி பண்ணி கொடுங்க என்றாள் டானியா. ஸாரி மிஸ்.டானியா ஐ டோண்ட் ஷேர் வித் மை கேபின் வித் ஸ்ட்ரேஞ்சர் லைக் யூ என்று கூறிட அவளுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.
ஐ அம் நாட் ஸ்ட்ரேஞ்சர் ஐ அம் யுவர் பிசினஸ் பார்ட்னர் என்று டானியா கூறிட ஸாரி எக்ஸ்கியூஸ் மீ இந்த ப்ராஜெக்ட் மட்டும் தான் நாம டைஅப் வச்சுருக்கோம் அதனால் பார்ட்னர் என்று எல்லாம் சொல்ல வேண்டாம் என்று கூறியவன் ஜூம் மீட்டிங்ல பேசலாம் என்றான்.
என்னை வெளியே போ என்று மறைமுகமாக சொல்லுறீங்களா மிஸ்டர்.குகநேத்ரன் என்ற டானியாவிடம் நேரடியாக தானே சொல்கிறேன் உங்க ஆஃபிஸ்ல இருந்தே வொர்க் பண்ணுங்க என்றான் குகன். குகன் என்று அவள் ஏதோ சொல்ல வர அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான் குகநேத்ரன்.
எக்ஸ்கியூஸ் மீ என்ற டானியாவிடம் என் ஸ்டாஃப் மேல கை வைக்க நீ யாரு என்றான் குகன். ஐ அம் யுவர் பிசினஸ் பார்ட்னர் உங்க ரிசப்ஷனிஷ்ட் என்னை பெயர் சொல்லி கூப்பிடுகிறாள் அதான் அறைஞ்சேன் அதில் என்ன தப்பு இருக்கு என்றாள் டானியா.
கூப்பிட தானே பெயர் என்றான் குகன். கூப்பிட தான் பட் யாரு நம்மளை கூப்பிடுறாங்க என்று ஒரு இது இருக்கே. அவள் நம்ம கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கும் சாதாரண ரிசப்ஷனிஷ்ட் ஐ மீன் வேலைக்காரி அவள் என்னை மரியாதையா மேடம் என்று தான் சொல்லனும் என்றாள் டானியா.
அது உங்க ஆஃபிஸ்ல உங்க ஸ்டாஃப்க்கு நீங்க போட்ட ரூல்ஸ் அதை என் ஆஃபீஸ்ல எக்ஸ்கியூட் பண்ணாதீங்க இது முதல் தடவை என்பதால் ஒரு அறையோட விட்டுட்டேன் நெக்ஸ்ட் டைம் உங்க ப்ராஜெக்ட்டையே கேன்சல் பண்ணிடுவேன் ஜாக்கிரதை என்று எச்சரித்தான் குகன்.
குகன் ஓகே ரிலாக்ஸ் ஐ அம் ரியலி சாரி இதுக்காக கோபப்பட்டு நம்ம ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடாதீங்க என்று டானியா கூறிட சாரி என் கிட்ட கேட்டால் என்ன அர்த்தம் நீங்க அடிச்சது என்னுடைய ஸ்டாஃப் மிஸ்.சஷ்டிப்ரதாவை ஸோ அவங்க கிட்ட தான் சாரி கேட்கும்.
வாட் நான் போயி ஒரு வேலைக்காரி கிட்ட சாரி கேட்கனுமா நெவர் மிஸ்டர்.குகநேத்ரன் இந்த டானியா அவள் தகுதிக்கு குறைச்சலான யார் கிட்டேயும் சாரி கேட்க மாட்டாள். இதற்காக நீங்க அந்த ப்ராஜெக்ட்டை கேன்சல் பண்ணினாலும் ஐ டோண்ட் கேர் என்று திட்டவட்டமாக கூறி விட்டு நகர்ந்தாள் டானியா.
திமிர் பிடித்த பீடை பணம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அடிப்பாளா எல்லாம் இந்த அம்மாவை சொல்லனும் என்று பற்களைக் கடித்தவன் அந்த ப்ராஜெக்ட்டை கேன்சல் செய்வதற்கு உண்டான ஏற்பாட்டினை செய்யும் படி தனது பி.ஏ தினேஷிடம் கூறிட அவனும் அதற்கான வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
இண்டர்காமில் சஷ்டிப்ரதாவை அழைத்தான் குகன். அவளது கன்னத்தில் டானியாவின் கை ரேகை பதிந்து இருக்க அதைக் கண்டவன் கோபமாக அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து விட்டு அவளது கன்னத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தான்.
குகன் என்ன பண்ணுறீங்க இது ஆஃபீஸ் என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் ஏன் டீ அறிவு கெட்டவளே அவள் உன்னை அடித்தால் திருப்பி அடிக்க வேண்டியது தானே உன் கையில் என்ன புண்ணா என்ற குகனிடம் அவங்க உங்க ஃபியான்ஸி அவங்களை நான் எப்படி அடிக்க முடியும் சார் என்று அவள் கூறிட அவளது குரல் சுரத்தே இல்லாமல் இருக்கவும் அவளை வம்பிழுக்க நினைத்த குகன் ஆமாம் என்னோட ஃபியான்ஸி தான் அதற்காக அடி வாங்கிட்டு இருப்பியா உன் மேல தப்பு இல்லாத போது நீ யார்கிட்டேயும் அடி வாங்க கூடாது சொல்லிட்டேன் என்றவன் டானியா எப்படி செம்ம ஸ்டைலா , மார்டனா இருக்கிறாளா என்று அவன் கேட்டிட அவளுக்கு தான் மனம் லேசாக வலித்தது.
தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு நல்லா இருக்காங்க என்று மென்று முழுங்கிட அவளது இதழில் தன் இதழைப் பதித்தான் குகன். அவனை தன்னிடம் இருந்து விலக்கப் போராடினாள் சஷ்டிப்ரதா. அவனோ விடாமல் அவள் இதழில் அழுத்தத்தைக் கூட்டியவன் அவளது முதுகில் கை வைத்து அவள் அணிந்திருந்த உடையின் ஜிப்பைக் கழட்டிட அவளோ அவனைத் தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்.
குகன் என்ன பண்ணுறீங்க இது ஆஃபீஸ் என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் அவளது கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு தன் கேபினுக்குள் இருந்த அவனது மினி பெட்ரூமிற்குள் அவளை அலேக்காக தூக்கிச் சென்று அங்கு இருந்த மினி பெட்டில் அவளைக் கிடத்தினான்.
அவள் எழ முயல அவள் மீது படர்ந்தான் . அவள் இதழில் வஞ்சமே இல்லாமல் தேனை பருக ஆரம்பித்தான். அவள் எவ்வளவோ முயன்றும் அவனிடம் இருந்து திமிர முடியாமல் அவனுள் அடக்கினாள்.
இதழ் முத்தம் முற்று பெற்ற பொழுதிலும் அவன் இதழ்கள் அவளது மேனியில் பதிந்திடாத இடமே இல்லை என்று சொல்லலாம். அவளது உடைக்கு விடுதலை அளித்தவன் அவளது உடலின் அங்க வளைவுகளில் முகம் புதைத்துக் கொண்டு இருக்க குகன் இது ஆஃபீஸ் ப்ளீஸ் என்னை விட்டுருங்க என்று கெஞ்சினாள் சஷ்டிப்ரதா.
என்னோட ஆஃபீஸ் என்னோட பர்சனல் ரூம் இங்கே நான் கூப்பிடாமல் யாரும் வர மாட்டாங்க என்று அவன் கூறிட நான் உள்ளே வந்ததை எல்லோரும் பார்த்தாங்க என்று அவள் கூறிட அதனால என்ன நீ என்னோட ஸ்டாஃப் தானே என்றான் குகன்.
அதே தான் ரிசப்ஷனிஷ்ட் நான் அதிக நேரம் உங்க கேபின்ல இருந்தால் என்னை பற்றி எல்லோரும் என்ன எல்லாம் பேசுவாங்க தெரியுமா என்றாள் சஷ்டிப்ரதா.
லுக் ப்ரதா ஒன் மந்த் நான் எப்போ கூப்பிட்டாலும், எத்தனை டைம் கூப்பிட்டாலும் ஏன் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் நீ என் கூட என் இஷ்டப்படி இருந்து தான் ஆகனும். அதனால சும்மா சீன் கிரியேட் பண்ணாமல் கோஆப்ரேட் பண்ணு என்றான் குகன்.
உங்களை பார்க்க உங்க ஃபியான்ஸி வந்து போயிருக்காங்க அவங்க என்னை விட நல்லா தானே இருக்காங்க அவங்க கூட நீங்க இன்டிமேட்டா இருக்கலாமே என்றவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தவன் என் கூட இப்படி எல்லாம் இருக்க தானே கட்டு கட்டா பணம் கொடுத்தேன் உன் லவ்வரோட ஆபரேஷன் செலவுக்கு என்று அவன் சொல்லவும் அவளுக்கு செருப்பால் அடித்த உணர்வு ஆம் பணம் வாங்கிக் கொண்டு தானே அவனுடன் படுக்கையை பகிர்கிறாள். அதை நினைக்க நினைக்க கண்கள் கண்ணீரை சிந்தியது. அடுத்து அவன் கூறிய வார்த்தையின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டவளோ புழுங்கி புழுங்கி சாக ஆரம்பித்தாள்.
அவனோ அந்த டானியா மீதுள்ள வெறுப்பினால் அவளும், நீயும் ஒன்றா அவள் கூட எல்லாம் பண்ண என்று சாதாரணமாக சொல்லி விட்டு அவளது பெண்மையை தனதாக்கிக் கொண்டான்.
அவளோ ஆம் அவள் அவன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் நான் காசுக்காக என்று நினைத்தவளுக்கு இந்த நிமிடமே செத்துப் போனால் என்ன என்று தான் தோன்றியது.
அவளைப் பிரிந்து எழுந்த குகன் அந்த அறையில் இருந்த குளியலறைக்குள் அவளையும் தூக்கிக் கொண்டு சென்றவன் அவளோடு ஷவரில் நனைந்தான். குகன் என்ன பண்ணுறீங்க இந்த ஒரு மாதம் முடிவதற்குள்ளேயே என் மானத்தை வாங்காமல் விட மாட்டீங்க போலையே என்று நொந்து கொண்டாள் சஷ்டிப்ரதா.
அவள் சொன்ன எதையும் அவன் காதில் வாங்காமல் தன் வேலையில் மட்டும் கவனமாக இருக்க அவளுக்கு தான் மனதோடு உடலும் சேர்த்து வலித்தது.
அவள் அழுது கொண்டே தன் உடையை அணிந்து கொள்ள அவளைப் பிடித்து தன் புறம் இழுத்தவன் ட்ரையர் உதவியுடன் அவளது தலைமுடியை உலர்த்தினான்.
அவள் நேரத்தை பார்க்க அவள் அவன் அறைக்கு வந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது. அவளோ தலையில் அடித்துக் கொள்ள ஏய் முட்டாள் நீ என்ன நார்மல் வழியிலா என் கேபினுக்கு வந்த என்று கேட்ட பிறகு தான் அவன் அவளை வேறு வழியாக வரச் சொன்னது அவளது புத்தியில் உரைத்தது. ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸை பொறுத்த வரை நீ ஆஃபீஸ்லையே இல்லை என்று கூறிவிட்டு அவளை தன் மடியில் அமர வைத்து அவளது கன்னத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுத்தான்.
… தொடரும்…