Author
Ruthra Lakshmi
விடாமல் துரத்துராளே 32,33
தேவா, சூர்யா இருவரும் கிச்சனில் சமைத்து கொண்டு இருந்தார்கள்.. தியா ஷோபாவில் படுத்து மொபைல் நோண்டி கொண்டு இருந்தாள்…
“தியாமா” என்று சந்தோஷமாக கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்து அவளை அணைத்து கொண்டாள் ஹரிணி..
“காலையில்ல நான் எழுந்த போது தான் தெரிஞ்சது நீ நைட்டு வீட்டுக்கு வரவே இல்லைன்னு, உன் நம்பருக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு, என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்டா, அதுக்கு அப்புறம் சபரி மூலமா தான் தெரிஞ்சது நைட்டு நடந்தது எல்லாம் ஹாப்பி மேரிட் லைஃப் தியாமா, சொன்ன மாதிரியே உன் பாவாவையே கல்யாணம் பண்ணிட்டியே, உனக்கு மேரேஜ் ஆனதில் உன்னை விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் தெரியுமா?
“தெரியும் ஹனிமா ஏன்னா நீ தான் என் நண்பேன்டா ஆச்சே, எனக்கு ஒரு நல்லது நடந்தா என்னை விட நீ தான் அதுக்கு சந்தோஷப்படுவேன்னு தெரியும்டா”,
அது எல்லாம் ஒன்னுமில்லை, பாவா எங்க இருப்பார்? ஹனிமா,பாவா சாப்பிடுருப்பாரா? பாவா தூங்கி இருப்பாரே? பாவா ஏன் வீட்டில் இருக்க மாட்டேங்கிறார்?பாவாக்கு என்ன பிரச்சினை எதற்காக இப்புடி இருக்கிறார்? பாவா, பாவா, பாவான்னு மொக்கை போட்டு என் உயிரை எடுக்க மாட்டால்ல அதான் ஹாப்பின்னு சொன்னேன்” என்று கூறி சிரித்த ஹரிணியை தியா முறைத்தாள்…
“கூல் கூல் சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னேன் டா, நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என்று ஹரிணி உள்ளார்ந்த மகிழ்வுடன் கூற தியா அவளை அணைத்து கொண்டாள்…
மற்ற அனைவரையும் விட ஹரிணிக்கு தானே தெரியும். தியா தேவா மீது எவ்வளவு காதல் வைத்து இருந்ததால், அவனை பார்க்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாள், கடந்த காலத்தில் அவன் பட்ட கஷ்டங்களை நினைத்து எவ்வளவு அழுது வருத்தப்பட்டாள் என்பது, தியாவின் காதல் ஒரு வகை பைத்தியக்கார தனமாக ஹரிணிக்கு தோன்றினாலும், அவளின் அன்பை பார்த்து அவள் காதல் கைக்கூட வேண்டும்.. தேவாவோ தியா பெற்றோரோ அவளின் காதலை ஏற்காமல் அவள் மனதை கஷ்டப்படுத்தி விடுவார்களோ, அதனால் தன் தோழி வருத்தப்படுவாளோ என்று எல்லாம் நினைத்த ஹரிணிக்கு, இப்போது தியா தேவா திருமணம் மகிழ்ச்சியையே கொடுத்தது.
அதன் பிறகு தியா இரவு என்னவெல்லாம் நடந்தது தன் திருமணம் நடந்த விதம் அனைத்தையும் கதை போல ஹரிணியிடம் கூறி முடித்தாள்..
அனைத்தையும் கேட்ட ஹரிணி அமைதியாக எதையோ யோசித்து கொண்டு அமர்ந்து இருக்க,
என்னாச்சு ஹனி அமைதியா இருக்க?
“ஒன்னும் இல்லடா நான் உன் க்ளோஸ் ப்ரெண்ட்டு தானே”
“ஆமா அதில்ல என்னடா உனக்கு சந்தேகம்”
“அப்ப என்கிட்ட மட்டும் உண்மையை சொல்லு போலீஸ் அவங்களாவே வந்தாங்களா? இல்ல இந்த போலீஸ் மேரேஜ் எல்லாம் உன்னோட செட்டப்பா?” என்று ஹரிணி மெதுவாக கேட்டாலும் சமையலை முடித்து விட்டு வெளியே வந்த தேவா காதிலும் அது விழுந்தது..
அட மலகுரங்கே உனக்கு ஏண்டி இப்புடி ஒரு டவுட்டு என்று ஹரிணியை திட்டிய தியா அப்போது தான் அங்கு கையை கட்டிக் கொண்டு தன்னை முறைத்து கொண்டு இருக்கும் தேவாவை பார்த்தாள்..
“அப்ப இது எல்லாம் உன் ப்ளானிங் தானா” கோவமாக தேவா கேட்டான்.
“அய்யோ பாவா என தன் தலை மீது கை வைத்தவள் ப்ராமிஸ்ஸா நான் எதுவுமே பண்ணலை, இந்த குரங்கு பேச்சை எல்லாம் கேட்காதீங்க..
நீ எல்லாம் ஒரு ப்ரெண்டா எருமை? இப்புடி கோர்த்து விட்டுறீயே என ஹரிணியை திட்ட
“தியாமா நீ எதுவுமே பண்ணல ஓகே, ஆனா எப்படி போலீஸ் கரெக்டா அந்த டைம்க்கு அந்த இடத்துக்கு வந்துருக்கும் ” என்று மறுபடியும் தனது சந்தேகத்தை கேட்க.
“போலீஸ் தானா வரலை, அவங்களை பணம் கொடுத்து வர வச்சு இருக்காங்க” என்றபடியே வீட்டுக்குள் வந்தான் சபரி..
“யாரு?” தியா, ஹரிணி, சூர்யா மூவரும் ஒரு சேர கேட்க.
ஹர்ஷா என்றான் சபரி. அந்த பெயரை கேட்டதும் தேவா புருவத்தை சுருக்கி யோசிக்க ஆரம்பிக்க…
“யாரு அது?”என கேட்டனர் தியா ஹரிணி இருவரும்…
தியா அன்று அவனை சூப்பர் மார்க்கெட்டில் வைத்து பார்த்து இருந்தாலுமே அவன் பெயர் அவளுக்கு தெரியாது… ஹரிணியை பொறுத்தவரை அவன் பெயர் பிச்சாண்டி என்பதே, அதனால் ஹர்ஷா என்றதும் இருவருக்கும் தெரியவில்லை..
“ஆரோக்கியம் ஹாஸ்பிடல் டீன் மகேஸ்வரனோட ரிலேட்டிவ்”என்று கூறினான் சபரி..
ஹர்ஷாவா அது எப்புடி உனக்கு தெரியும்.. நீ எப்புடி கண்டுபிடிச்ச சூர்யா சபரியை பார்த்து கேட்க,
“அதுவா நேத்து நைட்டு போலீஸ் எப்படி வந்தாங்கனு உங்களுக்கு எல்லாம் இப்ப டவுட்டு வந்ததுல்ல, ஆனா தேவா சார்க்கு நைட்டே வந்துட்டு, இன்ஸ்பெக்டர் சரவணன் தானா அதை பண்ணலை யாரோ சொல்லி தான் பண்ணி இருக்கார்.. அது யாரு என்னனு கண்டுபிடின்னு சொன்னாங்க..அதனால் நானும் அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட பலவிதமா நைசா பேசி விஷயத்தை கறந்துட்டேன். ஹர்ஷா தான் இப்புடி எல்லாம் பண்ண சொல்லி பணத்தையும் கொடுத்து இருக்கான்” என்றதும் சூர்யாவுக்கு பயங்கர கோவம் வந்தது..
“இந்த பரதேசி எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுனான். பாப்பு உனக்கும் ஹர்ஷாவுக்கும் என்ன பிரச்சினை?”
“ஹர்ஷா யாருன்னே எனக்கு தெரியலையே” என்று தியா கூறியதும் சூர்யா தனதே மொபைலை எடுத்து அதில் இருந்த ஹர்ஷா புகைப்படத்தை காண்பித்தான்…
“இவனா” என்ற தியா அதிர்ச்சியாக, அவளை விட அதிர்ந்தது ஹரிணி..
“அப்ப இவனை உனக்கு முன்னவே தெரியுமா?” தேவா கேட்க
தெரியும் என்ற தியா அன்று சூப்பர் மார்க்கெட்டில் ஹர்ஷா ஹரிணியிடம் வம்பு இழுத்தது அதன் பிறகு தியா அவனை அடித்தது என் அனைத்தையும் கூறி முடித்தாள்…
தேவாவுக்கு ஹர்ஷா மீது பயங்கர கோவம் வந்தது. எப்புடி அவன் தியாவை அசிங்கப்படுத்த நினைப்பான் என்று,
“இவ்வளவு நடந்து இருக்கு ஏன் நீங்க இரண்டு பேரும் எங்க கிட்ட சொல்லவே இல்லை. ஹரிணி உன்கிட்ட அவன் ஹாஸ்பிடல் வச்சு பர்ஸ்ட் டைம் பிரச்சினை பண்ண அப்பவே என்கிட்ட சொல்லி இருந்தா நான் அவனை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பேனே சபரி ஹரிணியை திட்டிய கொண்டு இருந்தான்…
ஹரிணி காதில் சபரி திட்டியது எதுவுமே விழவில்லை.. ஹர்ஷா தான் இதை செய்திருக்கின்றான் என்றதுமே உள்ளுக்குள்ளே உடைந்து போனாள். அழுகை வரும் போல இருந்தது. பல்லை கடித்து நின்றாள். கடந்த ஒரு வார காலமாகவே பொறுக்கி பொறுக்கி எப்புடி எனக்கே அவன் முத்தம் கொடுப்பான் பொறுக்கி என்று ஹர்ஷாவை பல முறை திட்டினாலும், அவனை பற்றியே நினைக்க கூடாது என்று தனக்கு தானே கோடி முறை கூறினாலும். அவனின் நினைவும் அவன் முத்தமிட்ட காட்சியும் நினைவடுக்கில் இருந்து மறைய மறுத்தது.. அவன் முத்தமிட்ட உதடு இன்னுமே குறுகுறுப்பை உணர்ந்தது. உடலிலும் உள்ளத்திலும் இதுவரை அவள் அறியாத உணர்வுகளை உணர்ந்தாள்.. ஹர்ஷா மீது அவளுக்கே தெரியாமல் மனதில் சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது. அதனாலேயே இப்போது அவன் தோழிக்கு அநீதி இழைத்து உள்ளான் என்பதை அறிந்ததும் அந்த உள்ளம் கலங்கியது… அவனே ஒரு பொறுக்கி, பார்த்த முதல் தடவையே ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுத்து அநாகரீகமான நடந்துக்கிட்ட பொறுக்கி. அவன் இப்புடி தான் நடந்திருப்பான். அதுக்காக நீ ஏன் வருத்தப்படுற தனக்குள்ளே இந்த கேள்வியை கேட்டு தன்னை தானே சமன்படுத்தி கொண்டு இருந்தான்…
அந்த ஹர்ஷாவை சும்மா விடவே கூடாது மச்சான்.. எவ்ளோ தைரியம் இருந்தா பாப்புவை அசிங்கப்படுத்த நினைச்சு இருப்பான்.. அவனை என்று சூர்யா பேசி கொண்டு இருக்கும் போதே, தேவா அங்கிருந்து வெளியேறி இருந்தான் தியாவை இழுத்து கொண்டு,
“ஏன் திவா அண்ணா இப்புடி பண்ணுன? “திவேஷ் சண்டையை பிடித்து கோவமாக கேட்டான் ஹர்ஷா..
அவனின் கையை சட்டையிலிருந்து தட்டி விட்ட திவேஷ் “டேய் நீ சொல்லி தானே டா நான் பண்ணுனேன்.. இப்ப வந்து என்ன கேள்வி கேட்கிற”?
பொய் சொல்லாத நான் எப்ப சொன்னேன்.
“நீதானடா அந்த தியா புள்ளை உன்னை அடிச்சிட்டான்னு அவளை சும்மா விடக்கூடாது ஏதாவது பண்ணனும்னு சொல்லி இரண்டு நாளா புலம்பிட்டு இருந்த, அதனால் தான் உன்னை பொது இடத்தில்ல வச்சு அடிச்சி அசிங்கப்படுத்தி வருத்தப்பட வச்ச தியா வை பழி வாங்க தான் இப்புடி பண்ணுனேன்”..
அவ என்னை அடிச்சது கோவம் தான். கோவத்தில் அவளை ஏதாவது பண்ணனும் சொன்னேன் தான். ஆனா இவ்வளோ கீழ்தரமான காரியத்தை பண்ண சொல்லவே இல்லை. அதும் உன்கிட்ட நான் எதுவுமே பண்ண சொல்லல. அப்புறம் எதுக்காக நீ இப்புடி பண்ணுன? அதும் என் பேரை பயன்படுத்தி,
“ஆமாடா நீ எதுவும் சொல்லல தான். நானா தான் பண்ணுனேன். ஏன்னா நான் உன்னை என் சொந்த தம்பியா தான் பார்க்கிறேன். உன்னை ஒரு சின்ன பொண்ணு அசிங்கப்படுத்தினதை என்னால் தாங்கிக்க முடியலை அதனால் தான் அவளை அசிங்கப்படுத்தனும் நினைச்சு பண்ணுனேன்”..
திவேஷ் கூறியதை கேட்ட ஹர்ஷா அவனை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு “இந்த மாதிரி நெஞ்சை நக்குற வசனத்தை எல்லாம் வேற யார்கிட்டயாவது பேசு திவா அண்ணா. என்கிட்ட வச்சிக்காதா. எனக்காக நீ பண்ணுனயா? விரல் சப்பிக்கிட்ட இருக்கிற பாப்பா கூட நீ சொல்றதை எல்லாம் நம்பாது.. உனக்கு தேவா மேல்ல காண்டு, அவன் கிட்ட நேரடியா மோத பயம், அதான் கோழை மாதிரி எனக்கும் அந்த பொண்ணு தியாவுக்கும் இருந்த சின்ன பிரச்சினையை வச்சு இடையில்ல உன் இஷ்டத்துக்கு விளையாடிட்ட”,
“அப்புடி எல்லாம் இல்லடா என்று பேச வந்த திவேஷை கை நீட்டி தடுத்த ஹர்ஷா, நீ தேவாவுக்கு எதிராக என்ன வேணா பண்ணு ஆனா அதை நேரடியா பண்ணு, என் பேரை பயன்படுத்தி இனிமே எதுவும் பண்ணாத, அப்புடி மறுபடியும் ஏதாவது என் பெயரை மிஸ்யூஸ் பண்ணினன்னு வை அவ்ளோ தான் வேற மாதிரி ஒரு ஹர்ஷா வை நீ பார்ப்ப, பர்ஸ்ட் இங்கிருந்து வெளிய போ கெட் அவுட்” என்றதும் திவேஷ் கோவமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான்…
ஹர்ஷா தொப்பென சேரில் அமர்ந்தான்.. திவேஷ் மீது பயங்கர கோவமாக வந்தது.. வாட்டர் கேனை ஓபன் பண்ணி தண்ணிரை மளமளவென குடித்தான். கோவம் கொஞ்சமாக மட்டுபட்டது. தியாவை போலீஸ் அழைத்து சென்றதற்கு காரணம் திவேஷ் தான். அவன் தான் ஹர்ஷா பெயரை பயன்படுத்தி போலீஸ்க்கு பணம் கொடுத்து அவ்வாறு செய்ய வைத்தது.. அதை தெரிந்ததும் ஹர்ஷா அதிர்ந்தான்.. ஏனெனில் ஹர்ஷா அந்த அளவுக்கு கெட்டவன் இல்லையே. அவனுக்கு முன் கோவம் பயங்கரமாக வரும். கோவத்தில் வார்த்தைகளை விடுவான் இல்லை முட்டாள் தனமாக எதையாவது செய்வான் அவ்வளவு தான்.. கல்லூரியில் கூட எவ்வளவோ பிரச்சினைகளை செய்து உள்ளான் தான்.. ஆனால் பெண்களிடம் எந்த வம்பும் பிரச்சினையும் வைத்து கொள்ள மாட்டான்.
அன்று ஹரிணியிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். அதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான். சூப்பர் மார்கெட்டில் ஹரிணியை பார்த்து மன்னிப்பு கேட்க போன இடத்தில் தான் அவனுக்கும் தியாவிற்குமான பிரச்சினையே நடந்தது. தியா அடித்ததும் இவனுக்கு கோவம் வந்தது தான். பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான் தான். இப்போது கூட அவளை பிடிக்கவில்லை தான். அதற்காக தியா வை இப்புடி அசிங்கப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்ததில்லை..
அதிலும் திவேஷ் இதில் தன் பெயரை பயன்படுத்தியது தான் பயங்கர கோவமாக வந்தது.. இது வெளிய தெரிந்தால் மகேஸ்வரன் கோவப்படுவார்.. மற்றவர்கள் தன்னை தவறாக எண்ணுவார்கள் என்பது எல்லாம் விட, அவள் என்ன நினைப்பாள்.. தன்னை தவறாக எண்ணி விடுவாளோ அந்த கவலை தான் அதிகம் இருந்தது.. யார் தன்னை பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன என்று எண்ணுபவன் தான். ஆனால் அவள் ஒருத்தி மட்டும் ஹரிணி மட்டும் தன்னை தவறாக நினைக்க கூடாது என்று மனம் ஏங்கியது. ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த அவள் தன்னை தவறாக நினைக்க கூடாது என்று ஏன் தோன்றுகிறது? என்று சிந்தித்து கொண்டு இருக்கும் போதே கதவு படாரென என்ற சத்தத்துடன் திறந்தது. தேவா எதிரே நின்று இருந்தான்.
தொடரும்…
விடாமல் துரத்துராளே 33
தேவா எங்கு திரும்பி வரவே கூடாது என்று முடிவு எடுத்து இருந்தானோ இன்று அந்த ஆரோக்கியம் மருத்துவமனையில் கால் எடுத்து வைத்திருக்கின்றான் தியாவுக்காக, நேற்று அவன் திருமணம் முடிந்ததிலிருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்.. எதர்சையாக அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வந்து இருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இதில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்ட சபரியை விசாரிக்க சொன்னான். சபரி ஹர்ஷா தான் என்று கூறியதுமே தேவாவுக்கு முதலில் அதிர்ச்சி தான். ஹர்ஷா இவ்வளவு கீழிறங்க மாட்டான் என்று தோன்றியது. ஆனால் சில நொடிகளிலே யாரையுமே நம்ப கூடாது என்று அவனின் இந்த 5 வருட வாழ்க்கை இடித்துரைத்தது.. அது போக இப்போது ஹர்ஷா திவேஷ் நெருக்கத்தில் உள்ளான். அதனால் ஹர்ஷா இதை செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் நம்பினான். நேற்று தியா போலீஸ் ஸ்டேஷனில் அழுத முகமாக நின்று இருந்த காட்சியே திரும்ப திரும்ப கண்முன் வந்தது. அதனால் தியாவையும் இழுத்து கொண்டு இங்கு வந்து விட்டான்…
தேவாவும் தியாவும் ஹர்ஷா எதிரே நின்று இருந்தார்கள்..
தியா விஷயம் அறிந்து தான் தேவா வந்து இருக்கின்றான் என்பது புரிந்தது ஹர்ஷாவுக்கு, தன்னிச்சையாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றான். 5 வருடங்களுக்கு முன்பு வரை எப்போது இங்கு வந்தாலும் தேவா அண்ணா தேவா அண்ணா என்று தேவா பின்பே சுற்றியது நினைவுக்கு வந்தது ஹர்ஷாவுக்கு, தன் தலையை உலுக்கி நினைவை எல்லாம் ஓரம் தள்ளி வைத்தான். அதன் பின்பு தேவாவை பற்றி அவனிடம் கூறப்பட்ட வதந்திகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினான். தேவா மீது கோவம் ஏற்பட்டது நிமிர்ந்து நேராக நின்றான்…
தேவாவும் அவனை கூர்மையாக பார்த்தபடி அந்த அறைக்குள் வந்தான். இருவரும் எதிரெதிரே நின்று இருந்தனர். இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பார்வையால் ஒருவரை ஒருவர் எரித்துக் கொண்டு நின்று இருந்தனர்..
அதே நேரம் தேவா வந்த விஷயம் கேள்விப்பட்டு மகேஸ்வரனும் திவேஷும் கூட அங்கு வந்தனர்.
“நீ எதுக்கு இப்ப இங்க வந்த? உன்னை யாரு ஹாஸ்பிடல்லக்குள்ள விட்டது” திவேஷ் முந்தி கொண்டு வர.
திவா வாயை மூடு என்று சத்தம் போட்ட மகேஸ்வரன் தேவாவை பார்த்தார்.
கண்ணா என்று அழைத்தபடி அருகில் வந்த மகேஸ்வரனையும் திவேஷையும் தேவா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அலட்சியமாக அவர்களை ஒரு பார்வை பார்த்தவன்,
ஹர்ஷா விடம் திரும்பி, “சின்ன பொண்ணு அவளே உன்னை நேருக்கு நேரா அறைஞ்சு இருக்கா, அவளை பழி வாங்குறேன்னு நீ கேவலமா கோழை மாதிரியான வேலையை பார்த்து வச்சு இருக்க அசிங்கமா இல்ல” என்று பேசியபடியே அருகே வந்த தேவா ஐந்து விரல்களை மடிக்கி ஓங்கி குத்த போக,
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹர்ஷா தனது கை இரண்டையும் எக்ஸ் வடிவத்தில் முகத்துக்கு நேராக வைத்து தடுத்தான். ஆனால் தேவா குத்தவில்லை…
“பொண்ணுங்க கிட்ட மட்டும் வீரத்தை காட்டுற உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம். நீ பண்ணுன காரியத்திற்கு ஒழுங்கா என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேளு” ஹர்ஷா வை பார்த்தபடி அழுத்தமாக கூறினான்.
“ஏய் யாரை மன்னிப்பு கேட்க சொல்ற என்னால்ல எல்லாம் முடியாது” என்று ஹர்ஷா எகிறி கொண்டு வர, அவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினார் மகேஸ்வரன்.
“ஹர்ஷா என்ன நடந்தது? தியா கிட்ட நீ மன்னிப்பு கேட்கனும் கண்ணா சொல்ற அளவுக்கு நீ என்ன பண்ணுன?” என்று கேட்டார்..
“உன் மருமகன் தானே அதான் உன்னை மாதிரியே பொறுக்கி தனம் எல்லாம் பண்றான்” என்றபடியே உள்ளே வந்தான் சூர்யா கூடவே சபரியும் வந்து இருந்தான்…
“ஏய் என் மாமாவை மரியாதை இல்லாமா பேசாதா?”
ஆமா இந்தாளுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல் சூர்யா அலட்சியமாக மகேஸ்வரனை பார்க்க
ஏய் என்று சூர்யாவிடமும் ஹர்ஷா சண்டைக்கு போக “ஹர்ஷா”என அவனை அடக்கிய மகேஸ்வரன் “அப்புடி என்ன தான் பண்ணுனான்” என்று சூர்யாவிடம் கேட்க.
சபரி நேற்று இரவு நடந்ததை சொல்லி முடித்தான்.
அதை கேட்ட மகேஸ்வரன் “என்ன ஹர்ஷா இது எல்லாம். உன்கிட்ட இருந்து இதை நான் எதகர்பார்க்கவே இல்லை என அதிருப்தியை அவனிடம் காட்டியவர் “தியா கிட்ட முதல்ல மன்னிப்பு கேளு” என்றார்..
ஹர்ஷா முடியாது எனும் விதமாக அமைதியாக நின்றான்.
“சார் ஹர்ஷா எதுக்காக மன்னிப்பு கேட்கனும்? அவன் என்ன பண்ணுனான். நடுராத்திரி எந்த நல்ல குடும்பத்து நல்ல பொண்ணாவது வெளிய போகுமா? இந்த பொண்ணு அர்த்த ராத்திரியில்ல எவனையோ எங்கையோ தேடி போய் போலிஸ்கிட்ட பிராத்தல் கே…” அதுக்கு மேல் திவேஷால் எந்த ஒரு வார்த்தையையும் பேச முடியவில்லை. அந்த அளவு தேவா அவன் கழுத்தை அழுத்தி பிடித்து இருந்தான்.. கழுத்தை பிடித்தபடியே திவேஷை பின்னால் இருந்த சுவரோடு சேர்த்தபடி இரண்டடி மேலே தூக்கினான்.
இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தியா அதிர்ந்தாள்..
திவேஷ் கால்கள் தொங்கியபடி தேவாவிடமிருந்து விடுபட முயற்சித்தான்… அவன் தன் இரு கைகளாலும் தேவா கையை எடுக்க முயற்சி செய்தான். சுற்றி இருந்த மகேஸ்வரன் ஹர்ஷா ஒரு புறமும், சூர்யா சபரி ஒரு புறமும் தேவா கையை பற்றி இழுத்தார்கள் ஆனால் அவர்கள் முயற்சி வீணானது. தேவா கையை அசைக்க கூட முடியவில்லை. திவேஷ்க்கு கண் முழி பிதுங்க தொடங்கியது.
மகேஸ்வரன்,”கண்ணா அவனை விட்டுரு ப்ளீஸ் கண்ணா”
சபரி,”சார் விட்டுருங்க ஏதாவது ஆகிட போகுது”.
“டேய் தேவா இந்த நாயை விட்டு தொலை செத்து கித்து தொலைச்சிட போறான். தேவா வேண்டாம்டா கையை எடு”.
“பாவா விடுங்க வேணாம் பாவா விட்டுருங்க.. ப்ளீஸ் பாவா சண்டை எதுவும் வேணாம்”..
தேவா கண்கள் சிவக்க திவேஷை பார்த்தவன் “இன்னோரு முறை என் பொண்டாட்டி பத்தி ஒரு வார்த்தை பேசுனா அவ்ளோ தான்* என்றவன் இன்னும் அழுத்தமாக கழுத்தை ஒரு முறை அழுத்தி விட்டு கையை எடுத்தான். திவேஷ் பொத்தென தரையில் விழுந்தான். கழுத்தை பிடித்து கொண்டு இரும ஆரம்பித்தான்.
“எங்க ஹாஸ்ப்பிடலுக்கு வந்து எங்க கிட்டயே பிரச்சனை பண்றாயா உன்னை” என்று தேவா மேல் பாய போன ஹர்ஷா கன்னத்தில் அறைந்தார் மகேஸ்வரன்.
“எல்லாம் உன்னால்ல தான்டா முதல்ல தியா கிட்ட மன்னிப்பு கேளு” என கோவப்பட்,
“முடியாது… அவ என்னை அடிச்சா பதிலுக்கு நான் இப்புடி பண்ண பண்ணுனேன்.. அவ்ளோ தான் அது முடிஞ்சது.. இவன் வேணும்னே வந்து இப்ப சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கான்,நீங்க தள்ளிக்கோங்க அவனா நானான்னு பார்த்துக்கிறேன்” என்றவன் கன்னத்தில் மறுபடியும் அறைந்த மகேஸ்வரன் “மன்னிப்பு கேளு ஹர்ஷா” முடிவாக கூறினார்.
ஹர்ஷா அமைதியாக நின்றான்.
“ஹர்ஷா சாரி கேட்க சொன்னேன்..
இப்ப சாரி கேட்க முடியுமா முடியாதா” என்ற மகேஸ்வரனிம் முடியாது என தலை அசைத்தான் ஹர்ஷா.
“ம்ம். அப்ப சரி உனக்கு பதிலா நான் கேட்கிறேன் என்றவர் தேவா புறம் திரும்பி “கண்ணா பிரச்சினை எதுவும் வேணாம் அவனுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன். அவனை மன்னிச்சிரு. இனிமே அவன் உன் விஷயத்திலோ தியா விஷயத்தில்லோ தலையிட மாட்டான்.. தியாம்மா நீயும் அவனை மன்னிச்சிடும்மா” என்று உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்…
“நீங்க இரண்டு பேரும் இன்னோரு தடவை என் பொண்டாட்டி விஷயத்தில் ஏதாவது பண்ணீங்கனா, இப்புடி பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்.. உங்களை எல்லாம் மொத்தமா வச்சு கொளுத்தி விட்டுருவேன்” என்று திவேஷ் சபரியை எச்சரித்து விட்டு வெளியேறினான்..
“பாப்பு வா போலாம்” சூர்யா அழைக்க,
“இருடா அண்ணா என்றவள், ஹர்ஷா அருகே வந்து, ஹர்ஷா ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் என்றாள்…
“அவனுக்கு எதுக்கு தாங்க்ஸ் சொல்ற? “சபரி சூர்யா இருவரும் ஒரு சேர கேட்டார்கள்..
“ஏன்னா எனக்கும் பாவாக்கும் கல்யாணம் நடந்ததே இவனால்ல இல்ல இல்ல இவரால் தானே அதுக்கு தான் தாங்க்ஸ்”. இவர் இந்த மாதிரி பண்ணதால்ல தானே பாவா என்னை கல்யாணம் பண்ணுனார்… நீங்க இரண்டு பேரும் வேஸ்ட்டுடா எத்தனை ப்ளான் சொன்னீங்க அத்தனையும் மொக்கை. ஆனா பாரேன் இவன் ஒரே ஒரு ப்ளான் பண்ணி எங்களை ஒன்னு சேர்த்து வச்சிட்டான், ஹர்ஷா உன்மேல்ல எனக்கு இருந்த கோவம் கூட ஓடியே போயிருச்சு.. நாளைக்கு நீ யாரையாவது லவ் பண்ணி அதுல்ல ஏதாவது பிரச்சினை வந்தா, நான் உன் லவ்க்கு ஹெல்ப் பண்ணி இந்த நன்றிக்கடனை அடைக்கிறேன்.. இப்ப ரொம்ப தாங்க்ஸ்” என்றவள் தேவா பின்னே ஓட, ஹர்ஷா அவளை முறைத்தான்..
சூர்யாவும் சபரியும் தலையில் அடித்து கொண்டார்கள்..
“ஏய் தியா கிட்ட மட்டும் இல்ல ஹரிணிக்கிட்டயும் எந்த பிரச்சனையும் நீ பண்ண கூடாது. இனிமே ஏதாவது பண்ணுனா ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள போட்டுருவேன் ஜாக்கிரதை” என ஹர்ஷாவை விரல் நீட்டி எச்சரித்தான் சபரி..
இவன் யாரு? என்ன மிரட்ட, எவ்வளவு தைரியம் இருந்தா என்ன மிரட்டுவான்.. மாமா மட்டும் இல்லைன்னா இவனை உள்ளுக்குள் கொதித்தவன், ஓ.. அவகிட்ட பிரச்சினை பண்ண கூடாதாமே அப்புடி தான்டா பண்ணுவேன்.. நீ என்ன கிழிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன் என்றபடி சபரியை சென்ற வழியை வெறித்தான்..
தேவா திருமணமான செய்தியை பற்றி திவேஷிடம் பேசுவதற்கென வந்த ஜீவா தந்தை செந்திலும் அந்த அறையில் இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தவர் இப்போது தேவா தியா பின்னே அவரும் சென்றார்…
அந்த அறையை விட்டு வெளியே வந்த தேவா மருத்துவமனை வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவர்கள் இருந்தது இரண்டாம் தளம். கீழே செல்வதற்கான லிஃப்ட் அந்த பெரிய வராண்டாவின் இறுதியில் இருந்தது… தேவா அந்த லிஃப்ட்டை நோக்கி நடந்தான். அவனின் அருகே எப்போதும் போல அவனின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாத தியா ஓட்டமும் நடையுமாக அவனுடன் நடந்தாள் தியா. வராண்டா ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருந்தது… இவர்கள் நடக்கும் சத்தம் மட்டுமே கேட்டது… இந்த வழி ஆரோக்கியம் மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்துவது..
“எனக்காகவா”?
“எது”?
“இந்த ஃபைட் சண்டை எல்லாம்”.
“இல்லையே. அவனுங்க மேல்ல எல்லாம் ஏற்கெனவே செம காண்டு.. இன்னைக்கு தான் சான்ஸ் கிடைச்சது அதான் நாலு காட்டு காட்டினேன்”..
“சும்மா பொய் சொல்லாதீங்க பாவா எனக்காக தான் எல்லாம் எனக்கு தெரியும்”..
” உண்மையாவே உனக்காகலாம் இல்லை. ஆமா உனக்காக நான் ஏன் ஃபைட் பண்ண போறேன்”…
“ஏன்னா நான் உங்க வொய்ஃப்”
அதை கேட்டு நடந்து கொண்டு இருந்த தேவா நின்று தியா பார்த்து கேலியாக சிரித்து வொய்ஃப் லவ்வர் இதை எல்லாம் நீயாவே சொல்லிட்டு இருக்க.. நான் இதை இரண்டையும் இன்னும் அக்சபட் பண்ணவே இல்லையே பாப்பா என்றவனை முறைத்தாள்,
“இப்ப அவங்க கிட்ட வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொன்னீங்களே அது எல்லாம் பொய்யா கோபால்”
இல்லை என தலை அசைத்தேன் “இந்த ஊருக்கும் உலகத்துக்கும் முன்னாடி நீ என் பொண்டாட்டி தானே அதான் சொன்னேன்”.. அவன் கூறியதை கேட்டு தியா முகம் மலர்ந்தது.. ஆனா என் மனசு அதை இன்னும் ஏத்துக்கவே இல்லையே பாப்பா என்றதும் முகம் சுருங்கியது..
“ஏன் ஏன் ஏன் ஏதுக்கல”?
“இதுக்கு பதில் நான் ஏற்கெனவே நிறைய தடவை சொல்லிட்டேன் பாப்பா”..
“பாப்பா வா? சும்மா சும்மா பாப்பா பாப்பா சொல்லாதீங்க… நான் என்ன குட்டி புள்ளையா பாப்பா சொல்றதுக்கு என்னையை பாப்பான்னு கூப்படாதீங்க பாவா”..
“ஏன் சொல்ல கூடாது? என் கண்ணுக்கு நீ குட்டி பாப்பாவா தான் தெரியுற”
“அதனால்ல தான் கூப்டாதீங்க சொல்றேன். நான் உங்க கண்ணுக்கு பொண்டாட்டியா தெரிஞ்சா போதும். பாப்பாவா ஒன்னும் தெரிய வேணாம். என் பேர் சொல்லி கூப்டுங்க. பாப்பான்னு கூப்டாதீங்க என்றாள் கோவமாக”…
முடியாது உன் இஷ்டத்திற்கு எல்லாம் க திரவியா வெள்ளையா பச்சையான்னு எல்லாம் கூப்பிட முடியாது.. பாப்பான்னு தான் கூப்பிடுவேன் என்றான் தேவா..
பேசி கொண்டே நடந்தவர்கள் லிஃப்ட் அருகே வந்து இருந்தார்கள்.. லிஃப்ட் பட்டனை தட்டி விட்டு திரும்பி தியாவை பார்த்தான். அவள் முகத்தை தூக்கி வைத்து இருந்தாள்… தேவாவிற்கு அவள் முகத்தை பார்க்கும் போது சிரிப்பு வந்தது.. மேலும் அவளிடம் வம்பு இழுக்க ஏதோ ஒன்று தூண்டியது. தாங்கள் இருக்கும் இடத்தை மறந்தான்..
அவளின் அருகே வந்தவன் முகத்திற்கு நேராக குனிந்து “பாப்பான்னு கூப்டா உனக்கு பிடிக்கலையா”? என் கேட்க
இல்லை என தலை அசைத்தாள்.
“அப்புடி கூப்ட்டா உனக்கு கோவம் கோவமா வருதா”? என கேட்க
ஆம் என தலை அசைத்தாள்..
“செமையா கடுப்பா ஒரு மாதிரி இரிடடேட்டிங்கா இருக்கா”?
“ஆம்” என்றாள்..
“அப்ப ஓகே சரி இனி நான் உன்னை”
“பாப்பான்னு கூப்பிட மாட்டிங்க தானே”
ம்ஹும் பாப்பான்னு மட்டும் தான் கூப்டுவேன் பாப்பா,. உன் பேரை விட பாப்பா, இந்த பாப்பாங்கிற பேர் உனக்கு நல்லா பொருத்தமா இருக்குல்ல பாப்பா” என்று வரிக்கு வரி பாப்பா போட்டு அவளை வெறுப்பேத்தினான்…
தியா கோவத்தில் பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டவள் “யோவ் உன்ன” என்றவள் தேவா சட்டையை இரு கைகளால் பற்றி தன் அருகே இழுத்தாள்.. இருவரின் முகமும் மிக நெருக்கமாக இருந்தது.. இருவரின் மூக்கும் மூக்கும் உரசி இருவரின் மூச்சு காற்றும் ஒன்றோடு ஒன்று சண்டையிடும் அளவு அவ்வளவு நெருக்கம்…
“அப்புடி கூப்டாதீங்க சொல்றேன்ல”,
அப்புடின்னு தான் கூப்பிடுவேன் பாப்பா, நீ பாவா பாவான்னு கூப்டும் போதும் எனக்கும் கூட அப்புடி தான் இருக்கும் கடுப்பா இருக்கு நீ கேட்டியா கேட்கலை இல்ல நானும் கேட்க மாட்டேன் பாப்பா”..
“யோவ் பாப்பா சொல்தா சொல்றேன்ல”
“அப்புடி தான் பாப்பா கூப்டுவேன் பாப்பா என்ன பண்ணுவ பாப்”…. அதற்கு மேல் தேவாவை பேச விடாமல் அவன் இதழில் தன் இதழை ஒற்றி இருந்தாள் தியா, இருக்கும் இடத்தை மறந்து,
பாகம் 31
வொக் வொக் வொக் வொக் என்று தியா ஹாலை ஒட்டிய அறையில் வாந்தி எடுக்க,
ஹால் ஷோபாவில் அமர்ந்து இருந்த தேவாவின் காதிலும் அந்த சத்தம் விழுந்தது… சிரித்து கொண்டு இருந்தான்… நல்லா அனுபவி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுது அந்த வாயி அதற்கு தகுந்த தண்டனை தான் என்று மறுபடியும் சிரித்தவன் நினைவு சற்று நேரத்திற்கு முன்பு சென்றது…
காய் வண்டிகார்க்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு தியாவை உள் இழுத்து வந்தவன் 100 கேரட்டுக்கும் 100 கிராம் கேரட்டுக்குமான வித்தியாசத்தை கூறி வழக்கம் போல் அவளை திட்டி தீர்க்க,
அச்சோ தியா இப்புடி மொக்கை வாங்கிட்டியே, இருந்தாலும் இந்த சின்ன தவறுக்காக அசிங்கப்பட்டு அல்வா செய்யாமால் விட மாட்டா இந்த தியா, எவ்வளவு இடர் வந்தாலும் கேரட் அல்வா செய்ய முன் வைத்த காலை பின்னெடுக்க மாட்டேன்… தலைகீழாக தான் குதிப்பேன் என்னும் ரீதியில் தேவாவின் திட்டுகளையும் தடுப்பையும் பொருட்படுத்தமால் அல்வா கிண்டும் முயற்சியில் இறங்க,
மனைவி அல்வா கிண்டும் அழகை பார்த்தவனுக்கோ பக்கென்று ஆனது… இன்னும் என்னென்ன கூத்து எல்லாம் பார்க்கனுமோ, நானே வம்பை விலை பேசி தாலி கட்டி வீடு வரை கூட்டி வந்து இருக்கேன் என்று தன் தலையில் அடித்து கொண்டு மெத்தையில் அமர்ந்தான்…
சற்று நேரத்தில் பாவா என்றவளின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான் தேவா… வேர்க்க விறுவிறுக்க கையில் கேரட் அல்வா நிரம்பிய கிண்ணத்தை நீட்டியபடி நின்று இருந்தாள்…
உங்களுக்கு கேரட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்னு அத்தைம்மா சொன்னாங்க அதான் செஞ்சேன் சாப்டுங்க பாவா என்றாள்… நேற்று வரை அவள் வீட்டில் சிறு துரும்பை கூட நகர்த்தி இருக்க மாட்டாள்.. சமையலில் அ, ஆன்னா கூட தெரியாது. இருந்தாலும் அவனுக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தெரியாத ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டு செய்து இருக்கிறாள்.. காரணம் அவனே, அவனுக்காவே, அவன் மீது அவள் வைத்திருக்கும் காதலுக்காக, அவன் மீதான அவளின் காதலை நினைக்கவே சற்று கர்வமாக தான் இருந்தது… காதலிப்பதை விட இன்னோருவரால் தான் காதலிக்க படுகிறோம் என்பதே ஒரு வகை போதை… அந்த போதை தேவாவை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது…
தியாவின் கையில் இருந்த அல்வா நிரம்பிய பவுலை தேவா கரங்கள் அனிச்சையாக வாங்கியது. அவனுக்காக அவனுக்காக மட்டுமே மெனக்கெட்டு செய்தது. கண்டிப்பாக சுவை சொல்லும்படியாக இருக்காது. ஆனாலும் அவன் பால் அவள் கொண்ட அன்பிற்காகவாது சாப்பிடலாம் என்று நினைத்த ஸ்பூனில் அல்வாவை எடுத்த தேவாவின் கண் முன் மனைவியின் அல்வா செய்முறை வந்து போனது. ஆத்தி உயிர் ரொம்ப முக்கியம் தேவா போர்ல செத்தா கெத்து அல்வால செத்தா அசிங்கம் வேணாம்டா என்று தடுத்தது… ஸ்பூனை கீழே வைத்தவன்
இவளை இப்புடியே விட கூடாது விட்டோம் தினம் இப்புடி தான் ஏதாவது கிறுக்கு தனம் பண்ணுவா என்ற தேவா தியா செய்த அல்வாவை அவள் வாயில்லே வைத்து அடக்க அதன் விளைவு தான் இந்த வாந்தி.
அறையில் இருந்து வெளியே வந்தவளை பார்க்க தேவாவுக்கும் கொஞ்சம் பாவமாக தான் இருந்தது…
ஷோபாவில் தொப்பென சோர்ந்து அமர்ந்தவளை பார்த்த தேவா , அம்மா சமைச்சு கொடுத்ததை சாப்பிட்டமா, காலேஜ் போய்டு வந்தமா, ப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஜாலியா சுத்துன்னாம்மான்னு இல்லமா, இந்த காதல், கல்யாணம், கேரட் அல்வா இது எல்லாம் தேவையா சொல்லு, கஷ்டமா இருக்கில்ல, இப்ப புரியுதா காதலும் கல்யாணமும் எவ்ளோ கஷ்டமின்னு,
ரொம்ப கஷ்டமா தான் இருக்கு அந்த அல்வாவை விட இந்த அட்வைஸ் கேட்கிறது. என்ன பண்றது பாவா? என்று பொய் சோகத்துடன் கேட்டவளை முறைத்தவன்
அப்புடியா? இந்த அல்வாவை சாப்டறது உனக்கு அவ்வளவு ஆனந்தமா இருக்குன்னா, இந்தா இதையும் சாப்பிடு என்று பவுலை தியா முகத்தருகே தேவா கொண்டு வர, தியா வொக் என்றபடி மறுபடியும் வாந்தி எடுக்க ஓடி போக,
எத்தனை தடவை வாந்தி எடுத்தாலும் இந்த பவுல் காலியாகாமா உன்னை விடறதா இல்லைடி உன் கொழுப்பை குறைக்கிறேன் பாரு என்று கூறியவன் தனது மொபைலை எடுத்து சூர்யாவுக்கு அழைத்தான்..
சூர்யா அழைப்பை எடுக்கவில்லை… ச்சே காலையிலிருந்து கால் பண்ணிட்டே இருக்கேன் எடுக்க மாட்டேங்கிறான்… இந்த நாய்க்கு தீடிர்னு எப்புடி இவ்வளோ ரோஷம் வந்துச்சு. உப்பு ப்ரெண்டை மாத்திட்டானா என்று தனக்குள் தேவா எண்ணிக் கொண்டு இருக்கையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க,
யாரா இருக்கும் என்ற யோசனை எல்லாம் தேவாவுக்கு கிடையாது… கண்டிப்பாக சூர்யாவாக தான் இருக்கும் என்று நம்பிக்கையுடன் கதவை திறக்க, சாட்சாத் சூர்யாவே தான்…
தேவா, எருமை எருமை உனக்கு என்ன கேடு வந்தது எத்தனை டைம் கால் பண்றது எடுத்து பேசமா சார் அப்புடி என்ன கழட்டிட்டு இருந்த என்று தேவா கேட்ட எதுக்கும் பதில் பேசாமல் சூர்யா வீட்டுக்குள் வர,
டேய் லூசு நான் கேட்கிறதுக்கு
பதில் சொல்லமா இருக்க, காது இரண்டும் செவிடா போயிருச்சா? மறுபடியும் தேவா கேட்க அமைதியாகவே நடந்து கொண்டு இருந்த சூர்யாவை பார்த்த தேவாவுக்கு கடுப்பாய் இருந்தது…
சூர்யாவின் கைப்பிடித்து தடுத்த தேவா “மகனே இப்ப நீ மட்டும் வாயை திறக்கலை அவ்ளோ தான” என்று மிரட்ட,
“முன்பு ஒரு காலத்தில் எனக்கு நண்பனாய் இருந்த நீங்க கால் பண்ணினா நான் எதுக்காக எடுக்கனும்” என கேட்டான் சூர்யா..
எதேய் முன்பு ஒரு காலத்திலா அப்ப இப்ப நான் உன் ப்ரெண்ட் இல்லையா?
“இல்லை, நேத்து இதே இடத்தில்ல நம்ம இரண்டு பேருக்கும் நடுவுல இனி எதுவும் இல்லைன்னு நான் தான் சொன்னே, நம்ம நட்பு முறிஞ்சு நாலு மணி நேரத்திற்கு மேலாச்சு மிஸ்டர் தேவா”,
“டேய் நேத்து நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன்டா, சாரிடா என்றபடி தேவா சூர்யா தோள் மீது கைப்போட வர,
தட்டி விட்ட சூர்யா “உங்க சாரியும் வேண்டாம், பூரியும் வேண்டாம்… நான் உங்களை டைவர்ஸ் பண்ணினது பண்ணினது தான்.. என் முடிவை மாத்த முடியாது”..
“அப்ப அவ்ளோ தானாடா”
“ஆமா அவ்ளோ தான் கதம் கதம்” என்றான் சூர்யா..
“அவ்ளோ ரோஷக்காரனுக்கு இங்க என்னடா வேலை தேவா நக்கலாக கேட்க,
“நான் ஒன்னும் உங்களை பார்க்க வரலை முன்னாள் நண்பரே, இது என் தங்கச்சி வாக்கப்பட்ட வீடு, அதான் வாக்கப்பட்ட இடத்தில்ல தங்கச்சி சந்தோஷமா இருக்கா, இல்லை ஏதாவது குறை இருக்கான்னு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்”.
பாப்பு பாப்பு எங்கமா இருக்க என்ற சூர்யா உள்ளே போக,
பெரிய பாசமலர் சிவாஜி சாவித்ரி ஓவரா சீன் போடுதுங்க தேவா கடுப்பில் முனுமுனுக்க,
பொறாமையில் பொசுங்காதீங்க முன்னாள் நண்பரே என சூர்யா தேவாவிடம் பேசி கொண்டு இருக்கும் போதே அறையில் இருந்து வெளி வந்த தியா, “டேய் அண்ணா வந்துட்டியா”?
“ஏன் பாப்பு கோவப்பட்டு போன அண்ணன் வர மாட்டேன் நினைச்சியா”?
ச்சே அது எல்லாம் நினைக்கலை! நீ வருவேன்னு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரமா வருவேன்னு தான் எதிர்பார்க்கல” என்று தியா கூறியதும் தேவா சிரிக்க,
அதை பார்த்த சூர்யா இங்க ஒரே துஷ்டசக்தியா இருக்கு பாப்பு நாமா உள்ளே போய் பேசிக்கலாம் என தியா அருகே வந்தவன்,
வாந்தி எடுத்து சோர்ந்து இருத்தலின் முகத்தை பார்தது “உனக்கு என்னாச்சுமா ஏன் இப்புடி இருக்க, முகமெல்லாம் டல்லா இருக்கு என்ன ஆச்சுமா” என்று பாசமாக தலையை வருடி கேட்க,
“என்கிட்ட எதுவும் கேட்கதா எல்லாம் உன் ப்ரெண்ட் கிட்டயே கேளு, அவரால தான் நான் வாந்தி எடுத்து வாந்தி எடுத்து சோர்ந்து போயிட்டேன் என்று தியா முற்பாதியை விடுத்து பிற்பாதி கதை மட்டுமே கூற, கேட்ட சூர்யாவோ தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு அதிர்ச்சியாகி,
தேவா தியா முகத்தை மாறி மாறி பார்க்க,
“இதுக்கு எதுக்கு இவன் இவ்ளோ ஷாக் ஆகுறான்” என்று தேவா நினைக்க,
தேவா முகத்தை பார்த்த சூர்யாவோ “கல்யாணத்தை பிடிக்கலை, இவளை பிடிக்கலைன்னு எல்லார் முன்னாடியும் சீன் போட வேண்டியது, அப்புறம் சான்ஸ் கிடைச்சா போதும் காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி ஊட்டி ரோஜா பூ மாதிரி இருந்த புள்ளையை கசக்கி காகித பூவா ஆக்கி வச்சி இருக்கான்” என்று சூர்யா தேவா கேட்கும்படி முணுமுணுக்க,
முதலில் அவன் சொல்வது புரியமால் முழித்த தேவாக்கு சில விநாடிகள் கழித்து அர்த்தம் புரிய “டேய்” என்றபடி பல்லை கடிக்க,
எப்புடியோ நல்லா சந்தோஷமா இருந்தா சரி தான் என்றவன் “எல்லாம் ஓகே அதெப்புடி ஒரே நாள்ல வாந்தி இது எப்புடி சாத்தியம்? சைன்ஸ் ப்ராகராம் வாய்ப்பில்லையே! அப்புறம் எப்படி? என்று தனது நாடியில் கை வைத்து யோசித்தவன்,
ஏதும் நைட்டோட நைட்டா ஏதாவது சித்த வைத்தியர்கிட்ட சிட்டுக்குருவி லேகியம் வாங்கி சாப்டியா என்று கேட்க,
தியா இவன் என்ன பேசுறான் என்ற ரீதியில் புரியாமல் நின்று இருக்க,
டேய் உன்னை என்ற தேவாவோ சூர்யாவை அடிக்க பக்கத்தில் ஏதாவது பலமான பொருளை தேடியவன் கண்ணில் அது சிக்கியது… செத்தடா மகனே என்று எண்ணிய தேவா சிரித்தபடியே உனக்கு வேணுமா மச்சான் என்று சூர்யாவை பார்த்து கேட்டான்..
இன்னும் வச்சு இருக்கியா,
ம்… நிறையா இருக்கு அந்த அல்வா கிண்ணத்தை பார்த்தபடி தேவா சொல்ல,
எனக்கு கொடுடா என்று ஆர்வமாக தேவா அருகில் வர,
ஆ… நீ தான் என் ஃப்ரெண்ட் ஷிப் வேணாம் என்னை டீவோர்ஸ் பண்ணிட்டாத சொன்ன, உனக்கு எதுக்கு தரனும், தர மாட்டேன் போ,
அச்சோ தேவா நான் சும்மா லொலொய்க்கு சொன்னேன்டா.. நீ தான்டா என் நண்பன்.. நீ தான்டா என் உயிரு.. நீ தான்டா என் உலகம்
போதும் போதும் கண்ணை மூடி ஆ…. சொல்லு என்று தேவா கூறியபடி சூர்யா நிற்க, தியா செய்த அல்வாவை அப்புடியே சூர்யா வாயிலும் தேவா வைத்து அடைத்தான்….
தூ தூ தூ வொக் என்ன கருமம்டா இது ரொம்ப கேவலமா இருக்கு… இதை எப்புடிடா சாப்ட என்று சூர்யா கூறியதும் தேவா சிரிக்க ஆரம்பித்தான்…
சூர்யாவை முறைத்த தியாவோ நான் செஞ்ச அல்வாவை கருமம்னா சொல்ற என்று தலையில் கொட்ட,
என்னது இது அல்வா வா, அப்ப லேகியம் இல்லையா,
இல்லை நான் செஞ்சது என்றவள் காலையில் கேரட் வாங்கிய கதையில் இருந்து அனைத்தையும் கூறி முடித்தாள்…
அதை கேட்ட சூர்யா அமைதியாக இருக்க, என்னடா அண்ணா தங்கச்சி பல்பு வாங்கினது நினைச்சு பீல் பண்றியா,
இல்ல பாப்பு இப்புடி 100 கேரட்டுக்கும் 100 கிராம் கேரட்டுக்கும் வித்தியாசம் தெரியாத உன்னை புடிச்சு கட்டி வச்சு என் நண்பன் வாழ்க்கையை கெடுத்துட்டேங்கிற குற்ற உணர்ச்சிமா என்றவனை தியா அடிக்க விரட்ட சூர்யாவோ அவள் கையில் சிக்காமல் ஓட …
இவர்களை பார்த்த தேவாவோ சில வருடங்களுக்கு பிறகு விழுந்து விழுந்து வாய் விட்டு மனதார சிரிக்க ஆரம்பித்தான்…
தொடரும்….
பாகம் 29
மறுநாள் காலை தேவா தியாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது… தேவா போலீஸ் ஸ்டேஷனில் பேசிய வீடியோ சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்தது…
அதை அறிந்த மகேஸ்வரனுக்கு அதீத மகிழ்ச்சி உண்டானது… தேவாவின் வாழ்வு இப்புடி மாறியதில் அதுவும் தன்னால் தடம் மாறியதில் இன்று வரை குற்ற உணர்வில் உழன்றவருக்கு இப்போது அது கொஞ்சம் குறைந்தது போன்று இருந்தது… இனி தேவா வாழ்க்கையும் இயல்பாக அனைவரை போன்றும் குடும்பம் குழந்தை என்று அவன் வாழ்வு சிறப்பாக அமையும்… தேவா மகிழ்ச்சியாக இருப்பான் என்பதை எண்ணி அவர் மகிழ்ந்தார்…
அதற்கு நேர் எதிராக அதீத கோவத்தில் இருந்தார் ஜீவாவின் தந்தை செந்தில்… தேவா தியா திருமணம் விஷயம் அறிந்ததும் எப்போதும் போல் ஜீவாவின் அன்னை கௌரி ” என் பையனும் உயிரோட இருந்திருந்தா அவனும் இந்நேரம் இப்புடி கல்யாணம் பண்ணி சந்தோஷமான வாழ்ந்து இருப்பான்ல, எல்லாத்தையும் ஒன்னுமில்லாமா பண்ண அவனுக்கு மட்டும் எல்லாமே நல்லதா நடக்குதே, கடவுளே உனக்கு கண் இல்லையா, இப்புடி அவனை உயிரோட விட்டு வச்சு இருக்கியே” என்று தேவாவிற்கு வழக்கம் போல சாபங்களை அள்ளி தெளித்து விட்டு எப்போதும் போல் ஜீவா படத்தின் முன்பு அமர்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்…
மகனின் இழப்பு, மனைவியின் கண்ணீர் இரண்டையும் பார்க்கையில் செந்திலுக்கு தேவா மீது தான் இன்னும் இன்னும் கொலைவெறி உண்டானது… தாங்கள் மகனை இழந்து ஒவ்வொரு நாளையும் நகர்த்த முடியாமல் துன்பத்தில் வாடும் போது அவன் மட்டும் காதல், கல்யாணம் என்று சந்தோஷமாக இருப்பதா, தானே நேரிடையாக தேவாவை ஏதாவது செய்து விடலாம் என்று கூட யோசனை தோன்றியது…
ஆனால் சற்று நேரத்திலே திவேஷ் அன்று கூறியது நினைவு வந்தது.. தேவா மறுபடியும் சந்தோஷமா இருக்கனும்… அப்புடி அவன் மகிழ்வின் உச்சியில் இருக்கும் போது அவனை கீழே தள்ளி விட வேண்டும்… அதன் பிறகு தேவாவே தன்னை அழித்துக் கொள்வான்… அதுவரை அமைதியாக இருங்க என்று கூறியது நினைவு வந்தது.. மறுபடியும் தன் மொபைலை எடுத்து தேவா தியா திருமண வீடியோவை ப்ளே செய்து பார்த்தார்… அதில் இருக்கும் தியாவை பார்த்து ஓ…. தேவாவோட சந்தோஷம்ன்னு திவேஷ் சொன்னது இந்த பொண்ணை தானா, பார்த்துக்கலாம் இந்த சந்தோஷத்தை கொஞ்ச நாள் கழிச்சு அந்த தேவா வாழ்க்கையில் இருந்து அழிச்சு காட்டுறேன்… பிடிச்சவங்களோட இழப்பு எப்புடி இருக்கும்னு அந்த தேவாவிற்கு காட்டுறேன் என்று தியாவை பார்த்தபடி வன்மத்துடன் மனதில் நினைத்துக் கொண்டார்…
மஞ்சுவின் மூலமாக வெண்ணிலாவுக்கும் தேவா திருமணச் செய்தி போய் சேர்ந்தது… ” இப்ப அதுக்கு என்ன? யாரோ யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறாங்க அதை எதுக்கு என்கிட்ட சொல்ற போனை வை மஞ்சு எனக்கு வேலை இருக்கு” என்று சாதரணமாக கூறி விட்டு மொபைலை வைத்து விட்டாள்… நான் சாதரணமாக தான் இருக்கின்றேன் என்று வெகு இயல்பாக நடக்க தான் முயற்சித்தாள்..ஏனோ அன்றைய காலை பொழுது அவளுக்கு வழமையான மற்ற நாளை போல் அமையவில்லை.. தொட்ட அனைத்து வேலையும் தடுமாற்றதுடன் முடிந்தது… என்ன ஏது என்று தெரியாமல் மெலிதான ஒரு வலியை உணர முடிந்தது… தனியே இருப்பதால் தான் வேண்டாத சிந்தனைக்கு வழிவகுக்கின்றது என்று எண்ணி அவசர அவசரமாக குளித்து மருத்துவமனை கிளம்பி சென்றாள்… நல்ல வேளை திவேஷ் இரவு சென்றது அவன் மட்டும் இருந்திருந்தால் அவளின் இந்த முகத்தை பார்த்தே அவள் மனதை படித்து இருப்பான்… பின்பு வீண் சண்டை எழுந்திருக்கும் என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி ஆட்டோவில் கிளம்பினாள்…
சூர்யா அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழிறங்கி சமையல் அறை நோக்கி சென்றான்… அங்கும் யாரும் இல்லாததால் கீழ் இருந்த மற்ற அறைகள் வீட்டின் பின்புறம் தோட்டம் வாசல் என்று ஒரு வித பதட்டதுடன் தேட எங்கும் அவன் மனைவியும் குழந்தையும் இல்லை… ச்சே என்றபடி தலையில் கை வைத்தபடி போர்டிகோவிலே அமர்ந்தான்… காலையில் கண் விழித்த போதே நேற்று இரவு ஷோபனாவை அறைந்தது நியாயபகம் வர அவளை சமாதானம் சொய்யலாம் என்று தேடி வர எங்குமே அவள் இல்லை…
சூர்யா எப்புடி நூறு சதவீதம் சிறந்த நண்பனோ அதை விட இருநூறு சதவீதம் சிறந்த கணவனும் கூட, மனைவி ஷோபனா மீது கொள்ளை காதல்… இவர்கள் செட்டிலே முதலில் திருமணம் செய்தது சூர்யா தான்… அதுவும் ஷோபனா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது அதையும் மீறி அவர்கள் சம்மதமின்றி நடந்த திருமணம்…
நேற்று இரவு ஷோபனா பேசியது போன்று தான் தேவா பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து இந்த ஐந்தாண்டுகளாக பேசுவாள்… தேவா நட்பை விடும்படி சண்டை இடுவாள்.. ஆனால் சூர்யா மனைவியை ஏதேதோ பேசி கொஞ்சி சமாளிப்பானே ஒழிய மாறி சண்டையிட மாட்டான்… அவனுக்கு தெரியும் அவன் மனைவியை தூண்டி விடுவதே அவனின் உடன்பிறப்பு மஞ்சு தான் என்று, அதனால் அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டான்… நேற்று இரவு அவன் இருந்த மனநிலையில் தேவா மீது இருந்த கோவத்தையும் சேர்த்து மனைவியின் கன்னத்தில் இறக்கி விட்டான்…
அச்சோ உண்மையாவே கோவிச்சுக்கிட்டு அவங்க அப்பன் வீட்டுக்கு போய்ட்டா போலயே, என் பொண்டாட்டி கோவிச்சிட்டு போய்ட்டாளே, இப்ப நான் என்ன பண்ணுவேன்… ஏற்கெனவே என் மாமானார் அந்த ஆளுக்கு என்னை கண்டாலே ஆகாது… இப்ப அடிச்சேன் வேற தெரிஞ்ச்சு அவ்ளோ தான்.. கண்டிப்பா டீவோர்ஸ் வாங்கி கொடுத்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான்.. டேய் தேவா நாயே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு சம்சாரி ஆக்கிட்டு நான் சன்னியாசம் வாங்க வேண்டிய நிலை வந்துரும் போலயே, என்று தலையில் கை வைத்து புலம்பி கொண்டு இருந்தவன் நெற்றியில் தீடிரென குளிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்… ஷோபனா தான் அவன் நெற்றியில் தீருநீறு பூசி விட்டு அவனை முறைத்துக் கொண்டே வீட்டிற்கு உள்ளே சென்றாள்…
ச்சே வெள்ளிக்கிழமையா கோவிலுக்கு போயிட்டு வந்துருப்பா போல, ஒரு செகண்ட் பயந்துட்டேன்.. பொண்டாடிங்கூட வாழறதும் கஷ்டம் பொண்டாட்டி இல்லாமா வாழறதும் கஷ்டம், அடடா என்ன ஒரு தத்துவம் வர வர நாமளும் பாப்பு கூட சேர்ந்து ரொம்ப அறிவாளி ஆகிட்டோம் போலே என்றபடி உள்ளே செல்ல, அங்கு அவன் மனைவி சமையல் அறையில் பாத்திரங்களை உருட்டும் ஸ்டைலிலே சூர்யா புரிந்து கொண்டான்… அவன் மனைவி தன் மீது எவ்வளவு கோவத்தில் உள்ளாள் என்பதை,
சமையலறை வாயிலில் நின்றபடி மனைவியை பார்த்தான் எப்படி சமாதானம் செய்வது என்றபடி, தக்காளி பழ நிறத்தில் சேலை அணிந்து முடியை இருபுறம் சிறிது எடுத்து சின்ன பின்னல் இட்டு, மீதி முடியை இடை வரை தளர விட்டு முல்லை பூ சூடி இருந்தாள்… நெற்றியில் சின்ன கல்பொட்டு வைத்து அதன் மேல் சிறு கோடு போல் திருநீறு கீற்று நெற்றி வகுட்டில் குங்குமம் என மங்களரமாக நின்று இருந்த மனைவியை ரசித்தப்படியே உள்ளே நுழைந்தவன் பின்னிருந்து அவளை அணைத்து தோளில் தாடையை பதித்து,
ஷோபி சாரிடி ஏதோ டென்சன்ல அடிச்சுட்டேன்… சாரிடி என்று நேற்று அறைந்த கன்னத்தில் முத்தமிட,
டேய் பர்ஸ்ட் என்னை விட்டு தள்ளி போடா உன் சாரி பூரி ஒன்னும் வேண்டாம்… உனக்கு அவன் தானே முக்கியம்.. நான் இரண்டாம் பட்சம் தான அவனுக்காக அடிக்கிற அளவுக்கு வந்துட்டல, போ போ அவன் கிட்டையே போ, என்கிட்ட பேசாத என்றாள், அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றபடி,
நீ எனக்கு இரண்டாம்பட்சமா, யார் சொன்னதுடி அப்புடி, நீ என் உயிர், உலகம்டி, காத்து கூட இல்லாமா நான் உயிர் வாழ்ந்துருவேன்.. ஆனா என் காதல் மனைவி என் ஷோபி குட்டி பக்கத்தில்ல இல்லைன்னா ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாது.. ஐ லவ் யூ சோ சோ சோ மச் டி உனக்கு தெரியாதா என்றபடி கழுத்தில் முத்தமிட்டான்..
டேய் டேய் ரொமாண்டிக்கா பேசுறதா மனசில்ல நினைப்பா, ரொம்ப க்ரின்ஞ்சா இருக்குடா.. கை எடு இல்ல அடுப்புல வச்சு சூடு வச்சிருவேன்..
என்னது பேசுனது ரொமாண்டிக்கா இல்லையா, அப்ப ரொமாண்டிக்கா ஏதாவது பண்ணட்டுமா என்றவன் அவளை கைகளில் அள்ள, விடுடா விடுடா என்று அவளின் திமிறலை பொருட்படுத்தமால் அறைக்குள் வந்தவன், மனைவியை மெத்தையில் இறக்கி விட்டு அவள் மேல் படர்ந்து இதழை சிறைப்பிடித்து, நேற்று இரவு சண்டை நடந்த மெத்தையில்லே சமாதானத்தில் இறங்க, முதலில் கோவத்தில் முரண்டு பிடித்த ஷோபனா மெல்ல மெல்ல கணவனின் தொடுகையில் கரைந்தவள் அவனின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைக்க துவங்கினாள்…
பாகம் 30
காலை மணி பதின்னோன்றை தாண்டி இருந்தது… சூரிய வெளிச்சம் மூடி இருந்த திரைசிலையையும் மீறி உறங்கி கொண்டு இருந்தவள் மீது சுளீரென பட, அதனால் இதற்கு மேல் எவ்வளவு இழுத்து போர்த்தி படுத்தாலும் தூங்க முடியாது என்பதால், மெல்ல மெல்ல உறக்கத்தை விடுத்து கண் விழித்தாள் தியா…
நேற்று நடந்த களேபரத்தில் அதிகாலை தொடக்கத்தில் தான் உறங்கினாள் என்பதால், தூங்கி வழிந்து கொண்டே எழுந்து அமர்ந்தவளுக்கு என்ன இது நம்ம ரூம் மாதிரி இல்லையே என்று கண்ணை நன்றாக கசக்கி விட்டு பார்த்தாள்.. நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவு வந்தது… அதும் தேவா அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்த நொடியை நினைக்கையில் உள்ளத்தினில் பூரிப்பும் எல்லை இல்லா இன்பமும் அதோடு இதுவரை அவள் அறியா வெட்கமும் அவளை ஆட்கொண்டது..
அதே வெட்கத்துடன் மெத்தையின் மறுபுறம் பார்க்க தேவா இல்லை… எங்க போனாரு என்று மெத்தையில் இருந்து எழுந்து வீடு முழுக்க தேட தேவா இல்லை.. கால் பண்ணி பார்க்கலாம் என்று மொபைலை எடுக்க அறைக்கு வர, அவளின் மொபைலுக்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது… அது தேவா எழுதி வைத்து இருந்த பேப்பர் பிரித்து படித்தாள் அதில்,
“ஏய் கீழே கிச்சன்ல டிபன் வாங்கி வச்சு இருக்கேன்… பக்கத்தில் இருக்க கவர்ல உனக்கு தேவையான ஒரு செட் டிரெஸ் இருக்கு.. இப்ப அதை குளிச்சிட்டு போட்டுக்கோ.. அப்புறம் உனக்கு என்ன வேணுமோ போய் வாங்கிக்கலாம், இந்த குளிக்கிறது ப்ரெஸ் பண்றது எல்லாம் உனக்கு நான் கொடுத்த ரூம்ல போய் பண்ணு, என் ரூமை யூஸ் பண்ண கூடாது சொல்லிட்டேன்.. நான் வரதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். பார்த்து பத்திரமா இரு” என்று தேவா எழுதி வைத்து விட்டு சென்று இருந்தான்…
அருகில் இருந்த கவரை பிரித்து பார்த்தாள்… அதில் ஒரு நீல நிற முட்டி தாண்டிய டாப்பும் அதே நிறத்தில் பலசோ பேண்ட்டும் இருந்தது.. தேவா தியாவை பெரும்பாலும் இந்த உடையில் தான் பார்த்து இருக்கான்.. அதான் அதே போல் வாங்கி வைத்திருக்கிறான் என்பது தியாவுக்கு புரிந்தது…
“ம்க்கும் இந்த பாவா ரொம்ப ஸ்டீரிட்டு தான்ப்பா” என்று உதட்டை சுழித்தாலும், தனக்கு வேண்டியதை கேட்கும் முன் வாங்கி வைத்திருப்பவனை நினைக்கையில் கணவனின் மேல் காதல் பெருகியது.. சிரிப்புடனே மொபைலை பார்க்க டிஸ்ப்ளேயில் இருந்த தியா அம்மா அப்பா போட்டோவை பார்த்த
அடுத்த நொடி முகம் வாடியது பெற்றோரை எண்ணி, உடனே தனது மொபைலை கையில் எடுத்து தனது அம்மா யமுனாவிற்கு அழைத்தாள்.. முழு ரிங் போயி கட்டானது மறுமுனை எடுக்கவில்லை… அடுத்து பல முறை அழைத்தும் பயனில்லை யமுனா எடுக்கவே இல்லை..
தியாவுக்கு கஷ்டமாக இருந்தது… இந்த திருமணம் அவர்களுக்கு பெரிய ஏமாற்றம், அதனால் அவர்கள் கோவம் நியாயமானது என்பது புரிந்தாலும், அவர்களின் கோவத்தையும் ஒதுக்கலையும் தாங்க முடியவில்லை.. கஷ்டமாக இருந்தது… இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கையிலே இனியா போன் செய்து இருந்தாள்…
அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ “என்றாள் சுரத்தே இல்லாத குரலில்,
“தியாகுட்டி எப்புடி இருக்கடா என்ன ஆச்சு ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு, ஏதாவது பிரச்சனையா மாமா உன்னை சத்தம் போட்டாங்களா” என்று பதறி போய் இனியா விசாரிக்க..
“அது எல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை”..
“வேற என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பேசுற”,
“யமுனாக்கு ஒரு பத்து பதினைஞ்சு டைம் கால் பண்ணுனேன் தெரியுமா எடுக்கவே இல்லை… அதான் கஷ்டமா இருக்குடி. இனியா எனக்காக மம்மி டாடி கிட்ட கொஞ்சம் ரெக்மெண்டேஷன் பண்ணுடி” என்று தியா கெஞ்ச,
“அட ஏன்டி நீ வேறா, இப்ப இருக்க நிலைமைக்கு எனக்கே யாராவது மம்மி டாடிகிட்ட ரெக்மெண்டேஷன் பண்ணணும் போல இருக்கு”..
ஏன் ஏன் என்னாச்சு? தியா கேட்த
“எல்லாம் உன்னால தான் எருமை, அவ தேவாவ காதலிக்கிற விசயம் உனக்கு முன்னவே தெரியும்ல, ஏன் எங்க கிட்ட பர்ஸ்டே சொல்லலை, அவ கூட சேர்ந்து நீயும் எங்களை முட்டாள் ஆகிட்டல்ல, இனிமே எங்க கூட பேசதா வீட்டுக்கு வராத, எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க இரண்டுமே எங்களுக்கு வேண்டாம்னு மம்மி சொல்லிட்டாங்கடா, நானும் தான் கால் பண்ணுனேன் எடுக்கவே இல்லை” என்று வருத்தமாக இனியா கூற,
தியா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
“எருமை எருமை எதுக்கு இப்ப சிரிக்கிற எருமை” என்று இனியா எரிச்சல் பட
“ஒண்ணும் இல்லடி வோய் ப்ளட் சேம் ப்ளட் அதுக்கு தான் சிரிச்சேன்… என்னை மட்டும் இல்லாம உன்னை சேர்த்து மம்மி துரத்தி விட்டுட்டாங்களே அதை நினைக்கும் போது” என்று மறுபடியும் தியா சிரிக்க ஆரம்பிக்க, இனியா மறுபடியும் பேயே பிசாசே திட்ட ஆரம்பித்தாள்..
“ஓகே ஓகே கூல் இனியா மம்மி டாடி தானே ஒரு ஒன் வீக் இல்லைன்னா பத்து நாள் அதுக்குள்ள அவங்களா பேசுவாங்க. இல்லைன்னா நான் எதுக்கு இருக்கிறேன் பேச வச்சு காட்டுறேன் பாரு, அப்படியெல்லாம் கோவமா இருக்கட்டும்னு யமுனாவையும் பாலகிருஷ்ணனையும் விட முடியாது அவங்க நம்ம கிட்ட பேசி தான் ஆகணும்.. சரி நான் இப்ப போனை வைக்கிறேன்” என்று தியா கூற,
“இருடி ஒரே ஒரு நிமிஷம் அத்தை உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அதுக்கு தான் நான் கால் பண்ணது.. இரு அவங்க கிட்ட தரேன் பேசு” என்ற இனியா தேவா அன்னை மீனாட்சியிடம் கொடுத்தாள்…
,”ஹலோ தியாம்மா என்ற மீனாட்சி என்ன பண்றீங்கடா, தேவா என்ன பண்றான், என் மேல்ல கோவம் நான் கால் பண்ணுனா எடுக்க மாட்டேங்கிறான், அங்க எந்த பிரச்சினையும் இல்லையே, ” என்று விசாரிக்க,
“பாவா வெளிய எங்கயோ போய் இருக்காங்க அத்தைம்மா.. நாங்க நல்லா இருக்கோம் எந்த பிரச்சினையும் இல்லை அத்தைம்மா” என்று தியா கூற,
மேலும் மீனாட்சி “என் தேவாவுக்கு கல்யாணம் ஆகிட்டு, பண்ணவே மாட்டேன் சொல்லி அடம் பிடிச்சவன் உன்னை கல்யாணம் பண்ணுனதில் நான் இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமாடா, எல்லாத்துக்கும் நீ தான் நீ மட்டும் தான் காரணம் ரொம்ப தாங்க்ஸ்டா அப்புறம் தியா” என்று ஏதோ கேட்க வந்து மீனாட்சி தயங்க,
“என்ன அத்தைம்மா எதுவா இருந்தாலும் தயங்கமா கேளுங்க”..
“இல்லடா அது வந்து தேவாவை உனக்கு உண்மையா பிடிக்குமா” என்று மீனாட்சி கேட்க,
அதை கேட்டு சிரித்த தியா “இந்த கேள்வியை நேத்து இது தான் சமயம்னு தாலி எடுத்து உங்க பையன் கையில்ல கொடுக்கறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும்” என்ற தியா பதிலில் மீனாட்சி முகம் அந்த புறம் சுருங்கி விட்டது…
“அப்புடினா உனக்கு தேவாவ,
“பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் நைட்டு 12 மணிக்கு எதை பத்தியும் கவலை படமா அவரை பார்க்க போற அளவுக்கு பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ஆனா உங்க பையனுக்கு தான் என்னை சுத்தமா பிடிக்காது” என்றாள்..
அதை கேட்ட மீனாட்சி அந்த புறம் சிரித்து, “பிடிக்காமலா உன் கழுத்தில் தாலி கட்டுனான்.. அவனுக்கும் நீ னா இஷ்டம் தான் போல உனக்காக நேத்து எவ்ளோ சண்டை போட்டான் பார்த்தல்ல” என்று கூற,
“அட ஏன் நீங்க வேற, அவருக்கு என்ன பிடிக்காது… நான் தான் பின்னாடியே துரத்தி பிடிவாதமா அவர் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு இருக்கேன்” என்றாள் தியா..
“போடி லூசு உன் பிடிவாதம் அவனுக்கு பிடிச்சதால்ல தான் இப்ப நீ அவனுக்கு பொண்டாட்டி ஆகி இருக்க.. அவனுக்கு விருப்பம் இல்லைன்னா நீ எவ்ளோ பிடிவாதமா அடம் பண்ணுனாலும் குண்டு ஊசி நுழையற அளவுக்கு கூட அவன் வாழ்க்கையில்ல இடம் தந்து இருக்க மாட்டான்” என்ற மீனாட்சியிடம்,
“அத்தைம்மா இது எல்லாம் உண்மையோ பொய்யோ ஆனா கேட்கிறதுக்கு நல்லா இருக்கு” என்று கூற இருவரும் சிரித்தனர்…
“இன்னைக்கு தேவாவோட பிறந்த நாள்… அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தேவா பிறந்த நாள்னா வீடே ஜே ஜேன்னு இருக்கும்… அப்புடியே திருவிழா மாதிரி கொண்டாடுவாங்க… அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு அவனுக்கு என் கையாலயே செஞ்ச”,
“பால்பாயசம் செஞ்சு தருவீங்களா”
“இல்ல”
“கேசரியா”
“இல்லடி கேரட் அல்வா செஞ்சு கொடுப்பேன்.. தேவாவுக்கு கேரட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்.. அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேட்பான்.. அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு கேரட் அல்வா சாப்டு தான் கேக் சாப்பாடுகூட சாப்டுவான்… ஆனா இப்ப எல்லாம் மாறி போயிட்டு” என்று மீனாட்சி வருத்தப்பட,
“அத்தைம்மா இப்ப என்ன கேரட் அல்வா தானே, நான் செஞ்சு பாவாக்கு கொடுக்கிறேன்.. இதுக்கு போய் வருத்தப்படுலாமா”,
“உனக்கு சமைக்க தெரியுமா”?
“தெரியாது தான் ஆனா உங்க மருமகளுக்கு கற்பூர புத்தி சொல்லி கொடுத்தா உடனே கத்துப்பேன்.. அத்தோடு என் பாவாக்கு பிடிக்கும்னு சொல்லிட்டீங்க.. அதனால்ல நான் எவ்ளோ கஷ்டப்பட்டுனாலும் செஞ்சு கொடுப்பேன்.. கேரட் அல்வா ரெசிபி மட்டும் சொல்லிங்க” அசத்திரேன் என்று தியா வீரமாக கூற,
மருமகளை பற்றி ஒன்றும் தெரியாத மீனாட்சி அப்பாவியாக கேரட் அல்வா செய்முறையை எந்தெந்த பொருள் எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து விட்டு போனை வைத்தார்… அவருக்கு தெரியவில்லை அவரின் மருமகள் இதை வைத்து செய்ய போகும் கூத்தை,
தியாவும் சென்று அவசர அவசரமாக குளித்து ரெடியாகி கிச்சன் சென்று கேரட் அல்வா செய்வதற்கு மீனாட்சி சொன்ன பொருட்கள் ஒன்று ஒன்றாக தேடி எடுத்தாள்… பால், சர்க்கரை, பாதாம், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, நெய் எல்லாம் இருந்தது… கேரட்டை தவிர, “அய்யோ கேரட் இல்லையே என்ன பண்ணலாம்” என்று தியா யோசிக்கும் போதே, வெளியே கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் என்று காய் வண்டி சத்தம் கேட்க,
“ஆஹான் இவங்ககிட்ட கேரட் இருக்கும் வாங்கிட்டு வந்து கேரட் அல்வா செஞ்சு கொடுத்து பாவா கவுத்துரனும்ப்பா, ஆனா என்கிட்ட கையில்ல காசு இல்லையே என்ன பண்ணலாம்.. அதான் போன் இருக்கே இப்ப தான் ஜிபே பண்ணிக்கலாம்” என்று போனையும் அங்கிருந்து ஒரு பேக்கையும் எடுத்து கொண்டு வெளியே வந்தாள்…
தேவா காரில் வீட்டை நெருங்கும் போது அவன் வீட்டின் முன்பே ஏதோ சலசலப்பு சற்று கூட்டமாகவும் இருந்தது… அதை பார்த்தவன் தியாவுக்கு தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணி காரில் இருந்து அவசரமாக இறங்கி அங்கு நின்று இருத்தவர்களை விலக்கி விட்டு பார்த்தான்…
அங்கு தியாவுடன் ஒருவன் வாக்குவாதம் செய்வது தெரிந்தது.. உடனே கோவமாக அவர்கள் அருகில் நெருங்கிய தேவா, “ஏய் யார் நீ எதுக்கு என் வொய்ஃப் கிட்ட பிரச்சினை பண்ற” என்று கோவமாக கேட்க,
சார் “நான் இந்த ஏரியாவுல காய்கறி வியாபாரம் பண்றவன் சார், நான் எந்த பிரச்சினையும் பண்ணல, இந்த பொண்ணு தான் என்கிட்ட பிரச்சினை பண்ணுது” என்று சொல்ல,
“ஏதே நான் பிரச்சினை பண்றானா, பாவா இவரை நம்பாதீங்க, இவர் தான் என்னை ஏமாத்த பார்க்கிறார்”..
தேவா,” என்னடி ப்ராப்ளம் எதுக்கு நீ வீட்டை விட்டு வெளிய வந்த காய்கறி வியாபாரம் பண்றவர்கிட்ட உனக்கு என்ன வேலை அதை பர்ஸ்ட் என்கிட்ட சொல்லுடி “என்று தேவா கேட்க,
“நான் கேரட் வாங்கலாம்னு வந்தேன்”..
எதுக்குடி?
“கேரட் அல்வா பண்றதுக்கு” என்றவளை ஏறங்க இறங்க பார்த்தவன் அது எதுக்குடி என்று முறைக்க,
“அதை அப்புறம் சொல்றேன் பாவா, இந்த அநியாயத்தை கேளுங்க பாவா”,
“இந்த அண்ணாகிட்ட வந்து நூறு கேரட் எவ்ளோன்னு கேட்டேன்.. 20 ரூபாம்மான்னு சொன்னாங்க… சரின்னு சொல்லி நூறு கேரட் வாங்கினதுக்கு அப்புறம் 500 ரூவா சொல்றாங்க பாவா, இது தப்பு தானே, ஏன்னு நான் கேட்டா என்கிட்டேயே சண்டை போடுறாங்க இந்த அண்ணா” என்று தியா புகார் கூற,
அந்த காய் விற்கும் நபரை பார்த்த தேவா “என்னங்க இது எல்லாம் சின்ன பொண்ணு கிட்ட இப்புடி எல்லாம் ஏமாத்துறது நியாயமா” என்று கோவமாக கேட்க,
அந்த நபரோ சார் “பர்ஸ்ட் உங்க வொய்ஃப் கையில்ல வச்சு இருக்க பேக்கை வாங்கி பார்த்துட்டு அப்புறம் என்கிட்ட கோவப்படுங்க சார்” என்று கூற,
தியா கையில் இருந்த பேக்கை வாங்கி பார்த்த தேவா லேசாக அதிர்ந்து “என்னடி இது” என்று கேட்க,
“நூறு கேரட் பாவா” என்று பதில் அளித்த மனைவியை தேவா முறைக்க,
எதுக்கு இவரு முறைக்கிறாரு “கவுண்ட் பண்ணி பாருங்க பாவா நூறு கரெக்ட்டா
இருக்கும்.. நான் கணக்குல புலி என்றவளின் பதிலில் தேவாவிற்கு தான் எங்காவது முட்டி கொள்ளலாம என்று இருந்தது…
பாகம் 28
தேவா வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய சூர்யா அதே கோவத்துடனே காரை இயக்கி வீடு வந்து சேர்ந்தான்…
இந்நேரத்தில் வீட்டில் இருக்கும் யாரையும் தொந்தரவு செய்ய கூடாது என்று தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு கதவை சத்தமில்லாமல் திறந்து அறைக்கு வந்தவன் அங்கு உறங்கி கொண்டு இருந்த அவனின் மனைவி ஷோபனா மகன் தேவ் தர்ஷன் உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க,
“என்ன சார் மாமா வேலை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா” என்ற மனைவி ஷோபனா நக்கலாக வினவ, “ஷோபா நான் பயங்கர டென்சல இருக்கேன் பேசாமா படுத்திரு அதான் நல்லது”…
ஆனால் ஷோபனா அமைதியாக விடுவதாக இல்லை… “இப்ப தான் அங்க நடந்த கூத்த மஞ்சுக்கா போன் பண்ணி சொன்னாங்க… டாக்டர்ன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ண… ஆனா இப்ப ப்ரோக்கர் வேலை பார்த்துட்டு இருக்க அசிங்கமா இல்ல… அந்த தியா சின்ன பொண்ணு என்னென்ன சொல்லி ஏமாத்தினானோ உன் ப்ரெண்ட், அதுக்கு நீயும் உடந்தையா இருக்காயா, இதே உன் தங்கச்சியா இருந்தா இப்படி” என்று சொல்லி முடிக்கும் முன் அறைந்து இருந்தான் சூர்யா…
சூர்யா,”என்னடி ஆளு ஆளாக்கு உன் கூடப் பொறந்த தங்கச்சியா இருந்த இப்புடி பண்ணுவியான்னு கேட்குறீங்க…தியா வெண்ணிலாவுக்கு மேல்ல தான்டி என் மனசில்ல வச்சு இருக்கேன்… அவளுக்கு இப்ப என்னடி அநியாயம் பண்ணிட்டேன் சொல்றீங்க… அவ ஆசைப்பட்ட வாழ்க்கை ஒரு அண்ணாண அவளுக்கு அமைச்சு கொடுத்து இருக்கேன்… இதுல்ல அசிங்கப்படுறதுக்கு என்னடி இருக்கு… அவ வாழ்க்கை நல்லா இருக்கும்… என் ப்ரெண்ட் தேவா அவளை தங்கமா தாங்க போறான்… அதை பார்த்து உன் நாத்தனாரும் நீயும் வயிறு எரிய தான் போறீங்க”…
“அப்புறம் என்ன சொன்ன மாமா வேலை பாக்குறான்னா, உன்னை லவ் பண்ற காலத்துல உங்க வீட்டுக்கு தெரியாமா நம்ம இரண்டு பேரும் மீட் பண்ணி பேசும் போது, நமக்காக வாசல்ல வெளிய வெயிட் பண்ணிட்டு தேவா உனக்கும் எனக்கும் காவல் காத்துட்டு மணிக்கணக்காக நிற்கலை… அவனுக்காக என் ப்ரெண்ட்க்காக நான் ப்ரோக்கர் வேலை மாமா வேலைன்னு எல்லாமே பார்ப்பேன்டி, இஷ்டம் இருந்தா என் கூட இரு, இல்லைன்னா கிளம்பி உன் அப்பன் வீட்டுக்கு போ” என்று கத்தி விட்டு படுத்து விட்டான்…
தன்னுடைய அறைக்கு வந்து மெத்தையில் படுத்த தேவா மனதில் மறுபடியும் குழப்பமே சூழ்ந்திருந்தது… வேறு என்ன பெரிதான குழப்பம் இன்று நடந்த அவன் திருமணத்தை பற்றியும் தியாவை பற்றியுமே, தன்னை தானே கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்பி கொண்டு இருந்தான்… ஏனெனில் இப்போது தியா அவன் கன்னத்தில் முத்தமிட்ட போது, என்ன தான் அவளை வெளியே முறைத்தாலும் மனது அதை ரசிக்கமால் இல்லை… அதனாலே மறுபடியும் குழப்பம் கூடியது…
நான் ஏன் அவளுக்காக ஓடுனேன்? நான் ஏன் அவளுக்காக துடிச்சேன்? ஆறு மாதம் மட்டுமே தெரிந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டும் வரை எப்புடி போனேன் என நடந்ததை ஏற்க முடியாது மனம் அதிலேயே சுழன்றது..
சற்று நேரத்திற்கு முன்பு தேவாவின் மனசாட்சி கூறிய உன் மனதிற்குள் உனக்கு தெரியாமலே அவள் திருட்டு பூனையாய் உள் நுழைந்து விட்டாள் என்ற பதில் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை… அவளை பார்க்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் தியா என்ற ஒருத்தி இருக்கின்றாள் என்ற நியாபகம் கூட எழுந்தது கிடையாது… அப்புடி இருக்கும் போது இதை எப்புடி ஏற்று கொள்ள முடியும்…. ச்சே என்றபடி விழி மூடியவன் கண்களுக்குள்,
சாரி சாரி தெரியமா உள்ளே வந்துட்டேன் என்றபடி முதன் முறையாக அவன் அறையில் சிக்கிய போது கண்களை மூடியபடி இருந்த தியா முகம்,
நான் இனிமே உங்களை பாவானு தான் கூப்பிடுவேன் பாவா என்று கூறிய குறும்பு முகம்,
பாவா நீங்க டாக்டரா சொல்லவே இல்லையே என்று கண்களில் அவனை கண்ட மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் சேர்த்து வைத்து இமைக்கமால் அவனை பார்த்த விழிகள்,
அவளை கேட்டதுக்கு பதில் என்னை கேட்டு இருந்தீங்கனா டபுள் ஓகே சொல்லி இருப்பேனே என்று தன் காதலை முதன் முறையாக வாய் வார்த்தையாக கூறிய தியாவின் முகம்,
உங்களுக்கு ஒன்னுமில்லைல பாவா, எங்கேயும் அடிபடலைல என்று அவனுக்காக தவித்த முகம்,
உங்களை பத்தி தெரியுறதுக்கு முன்னாடியும் லவ் யூ தான்.. தெரிந்த ஆரம்புறமும் லவ் யூ தான்.. ஏன் சாகற வரை லவ் யூ மட்டும் தான்..
அவள் கழுத்தில் தாலி கட்டும் போது உலகின் ஒட்டுமொத்த காதலையும் விழிகளில் தேக்கி அவனை பார்த்த அவள் முகம்,
இந்த ஆறு மாதத்தில் அவளுடனான அனைத்து சந்திப்புகளும் கண்களுக்குள் காட்சியாய் விரிந்தது… படக்கென்று விழி திறந்து எழுந்து அமர்ந்தான்… அவள் நினைவு தனக்கு எழுந்ததே இல்லை என்று இறுமாப்பாய் அவன் உரைக்க, அவனின் ஆழ்மனமோ அனைத்தையும் ரகசியமாய் படம் பிடித்து வைத்து இருக்கின்றது என்பது புரிந்தது… இதுக்கு என்ன அர்த்தம்..
காதலினால் ஏற்கெனவே காயம் கண்ட இதயம்… அதன் வடு கூட இன்னும் மறையாமல் இருக்கும் போது இது எப்புடி சாத்தியம்? சிறு குழந்தை தெரியமால் நெருப்பில் கையை சுட்டுக் கொண்டால் திரும்ப நெருப்பு இருக்கும் பக்கம் கூட போகாது… அந்த குழந்தையை விட பலவீனமானதா என் மனம்… சிறு பெண் பாசமாக பேசிய இரண்டொரு வார்த்தைகளில் பழைய வடுவை மறந்து அவள் பக்கம் சாய்ந்ததா? இது எப்புடி சாத்தியம்? குழப்பத்திற்கு விடை தேடி யோசித்தவனுக்கு குழப்பம் அதிகரித்தது… ஆனாலும் அவன் மனம் கூறும் எதையும் தேவா ஒத்துக் கொள்ள தயாராக இல்லை…
“இல்லை இல்லை எனக்கு அவளை பிடிக்காது… அவ சரியான இம்சை… அவளே பார்த்தாலே கடுப்பு தான் வரும்… அதுவும் வாய் திறந்து பேச ஆரம்பிச்சிட்டா இன்னும் எரிச்சல் தான் ஆகும்… நான் போய் அவளையா அது எல்லாம் ஒன்னுமில்லை… எல்லாம் அந்த சூர்யாவால தான் அந்த பரதேசியால தான் இப்ப இவ்ளோ பிரச்சனையும், எனக்கு அவளை சுத்தமா பிடிக்காது டாட் அவ்ளோ தான்”…
இப்போதைக்கு அவ வீட்டுல கோவம் குறையற வரை அவ இங்க இருக்கட்டும்…அப்புறம் அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிரலாம்… அவங்க வீட்டுல ஏத்துக்கலைன்னா அவ படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல வாழ்க்கையை நாமளே அமைச்சு கொடுக்கனும் என்று எல்லாம் யோசிக்க… அடுத்து என்ன பண்றதுன்னு நாளைக்கு பார்க்கலாம் இப்ப தூங்கலாம் என்று ஏனோ இந்த வேதாளம் முருங்கை மரத்தில் இருந்து இறங்க மறுத்தது…
தூங்கலாம் என்று எண்ணி தனது வலது புறம் திரும்பி படுத்தவன், மீண்டும் கோவமாகி எழுந்து அமர்ந்தான்…
“ஏய் நீ எப்படி இங்க வந்த”? என்று கோவமாக அருகில் படுத்து இருந்த தியாவை பார்த்து கோவத்தில் கத்த,
அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… நன்றாக உறங்கி இருந்தாள்… அதில் கடுப்பானவன் தூங்குபவர்களை எழுப்ப கூடாது என்ற தனது கொள்கைகளை தூர எறிந்துவிட்டு, ஏய் எழுந்திருடி என்று தியாவை உலுக்க,
“ம்ச் என்ன பாவா? தூங்க விடமா டிஸ்டர்ப் பண்றீங்க.. காலையில்ல பேசிக்கலாம் எனக்கு தூக்கம் வருது”…
“அந்த ரூம்ல போய் படு”…
“அப்ப நீங்களும் வாங்க”…
“ஏய்… போன்னு சொல்றேன்ல”..
“முடியாதுன்னு நானும் சொல்றேன்ல”.
ஒன்னா நீங்களும் அங்க வாங்க… இல்லைன்னா நான் இங்கேயே படுத்துக்கிறேன். எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு பாவா” என்றவளை தேவா முறைக்க,
“அச்சோ இப்புடி முறைக்காதீங்க பாவா, உண்மையாவே எனக்கு தனியா படுக்க பயம்.. எங்க வீட்டுல கூட தனியா படுக்க மாட்டேன் அம்மா பக்கத்தில் தான் படுப்பேன்… அதனால்ல இங்கயே படுத்துக்கிறேன் ப்ளீஸ் பாவா” என்று தேவா தாடை பிடித்து கெஞ்ச,
தியா கையை தட்டி விட்டவன் “அதற்கு எல்லாம் நீ உங்க வீட்டுல இருந்திருக்கனும்.. காதல் பண்றேன் கத்திரிக்காய் பண்றேன்னு இம்சையை கூட்டி இங்க வந்துருக்க கூடாது”…
“ஆ…. ஏதோ நானா உங்க வீட்டுக்கு வந்த மாதிரி பேசுறீங்க… ப்ர்த்டே விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்தவ கழுத்தில்ல தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு இப்புடி கொடுமைப்படுத்துறீங்களே இதெல்லாம் நியாயமா? இந்த அநியாயத்தை தட்டி கேட்கிறதுக்கு யாருமே இல்லையா”? என்று மூக்கை சிந்தி அழுவது போல் பாவ்லா செய்ய,
“ஏய் நான் ஏதோ உன் மேல ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண மாதிரி பேசற”,
“அது எப்புடி பாவா எனக்கு தெரியும்… உங்க மனசில்ல என்ன இருக்குன்னு, நீங்க சொன்னா தானே எனக்கு தெரியும்… இப்ப சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன்” என்று தேவா அருகில் செல்ல,
“ஏய் உன்ன உன்ன” என்று தியா கழுத்தை நெறிப்பது போல் வந்து, பின்பு சே என்றவன் தன் தலையில் அடித்து கொள்ள,
“பாவா நான் இனிமே இங்க தானே இருக்கப்போறேன்… பொறுமையா நாளைக்கு சொல்லுங்க… இப்ப தூங்கலாமா? நான் இங்கயே படுத்துக்கிறேன்… என்னை நம்புங்க பாவா.. உங்க கற்புக்கு நான் க்ராண்டி.. நான் அப்பவே சொன்ன மாதிரி உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன்.. மதர் ப்ராமிஸ் உங்களை ஒன்னுமே பண்ண மாட்டேன்” என கண்சிமிட்டி சொன்னவளை தேவாவால் முறைக்க மட்டும் தான் முடிந்தது..
“குட்நைட்” என்றவள் படுத்து விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்… சிறிது நேரம் அவளையே பார்த்த தேவாவிற்கு ஒன்று புரிந்தது… சற்று முன்பு அவன் யோசித்தது போன்று தியாவை அவன் வாழ்வை விட்டு விலக்குவது அவ்வளவு எளிதல்ல ரொம்ப கடினம் என்பது… அவனும் அவள் அருகிலே படுத்து தூங்க ஆரம்பித்தான்…
சற்று நேரத்திலே அண்டை நாடுகள் எல்லையை மீறி சில இடங்களை ஆக்கிரமிப்பது போல் உறக்கத்தில் தியாவும் தன் எல்லையை தாண்டி தேவா நெஞ்சில் படுக்க, இம்சை இம்சை இவளோட என தள்ளி நகர்த்தி படுக்க வைக்க, மீண்டும் மீண்டும் அதே தொடர, தேவாவும் அப்புடியே விட்டு விட்டான்.. கொஞ்சம் நேரம் கழித்து நல்ல உறக்கத்தில் இருந்த தேவாவின் கரங்களும் அவளை அணைத்து இருந்தது…
அந்த அழகான இரவு கடந்து மறுநாள் பொழுது விடிந்தது… தேவா தியா திருமணம் விஷயம் அனைவருக்கும் தெரிந்தது.. அதை அறிந்து மிகவும் அதிர்ந்தவர்கள் இருவர் ஒன்று ஜீவா தந்தை செந்தில்… இன்னொன்று வெண்ணிலா…
காலை நேரம் வெளியே சென்று விட்டு தன் காரில் வீடு வந்து சேர்ந்தான் தேவா… ஆனால் அவன் வீட்டின் முன்பு ஏதோ கூட்டமாக சத்தமாகவும் இருக்க… தன் மனைவிக்கு தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணிய தேவா… அவசரமாக போய் விசாரிக்க பிரச்சினையை இழுத்து வைத்தே அவன் மனைவி தியா தான்… அதுவும் அந்த பிரச்சினை என்னவென்று விசாரித்தவனுக்கு எங்காவது சென்று முட்டி கொள்ளலாமா என்று இருந்தது… அப்புடி ஒன்றை செய்து வைத்து இருந்தாள் அவன் தர்மபத்தினி…
பாகம் 27
டேய் இப்ப என்னடா உனக்கு பிரச்சினை… அப்புடி எல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கலைடா, பாப்பு மேல்ல ஏன்டா கோவப்படற, எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த போலிஸ்காரன் தான்.. பெருசா எதுவும் தப்பா நடக்கலையே அப்புறம் ஏன்டா இவ்வளோ குதிக்கிற
தேவாவிற்க்கு ஏனோ கோவம் அடங்க மறுத்தது… கோவம் கோவம் பயங்கர கோவம் தியாவை போலிஸ் ஸ்டேஷனில் வைத்த அந்த போலிஸ் மீது, அவளை அவதூறாக பேசியது, அதை விட அவன் எப்போது செய்யவே கூடாது என நினைத்ததை செய்ய வைத்து விட்டார்களே என தியா சூர்யா இருவர் மீதும் பயங்கர கோவம்..
அதே கோவத்துடன் என்ன சொன்ன? தப்பா எதுவும் நடக்கலையா, ஓ… இப்ப இவளுக்கு நடந்த எதுவும் உனக்கு தப்பா படலை அப்புடி தானே,போலீஸ் ஸ்டேஷனில் வச்சு பெத்தவங்களே இவளை தப்பா பார்த்தாங்களே அது தப்பா படலை, இந்த அர்த்த ராத்திரியில் ஆம்பிளையை தேடி போயிருக்கா என்ன பொண்ணோன்னு உன் அக்கா மஞ்சு நம்ம காதுபடவே முணுமுணுத்துட்டு போனது உனக்கு தப்பா படலையா,
எப்புடி உனக்கு அது எல்லாம் தப்பா படும் ஏன்னா அவ ஒன்னும் உன் கூட பொறந்த தங்கச்சி இல்லையே, உன் வீட்டு பொண்ணா இருந்தா இப்புடி நடுராத்திரியில் ஒரு பையனை பார்க்க வெளியே கூட்டிட்டு வருவியா, யாரோ வீட்டு பொண்ணுன்னு தானே, இப்புடி சுயநலமா உன் குற்ற உணர்ச்சியை தீர்த்துக்க இவளை பயன்படுத்திக்கிட்ட என்று தேவா கோவத்தில் வார்த்தையை கொட்டி விட,
பாவா ப்ளீஸ் ஏன் இப்புடி எல்லாம் அண்ணாவை பேசாதீங்க.. அவர் ஒன்னும் பண்ணலை நான் தான் பிடிவாதமா என்றவளை தேவா முறைத்ததில் தியா அமைதியாக,
டேய் என்னடா ,என்ன ஓவரா பேசுற ஏதோ பயன்படுத்திக்கிட்டேன் குற்ற உணர்ச்சி அது இதுன்னு, என்ன பயன்படுத்திக்கிட்டேன் சொல்லு என்று தேவாவின் கோபத்துக்கு நிகரான கோவத்துடன் சூர்யா கேட்க,அது மேலும் தேவாவிற்கு கோவத்தை அதிகரித்தது…
வெண்…. என்று சொல்ல வந்தவன், அதை தவிர்த்து உன் குடும்பத்து ஆளால தான் ஏன் வாழ்க்கை இப்புடி ஆகிருச்சுன்னு உனக்கு ஒரு குற்ற உணர்ச்சி அதான் அந்த குற்ற உணர்ச்சியை போக்கிக்க தான் நான் அவ்ளோ சொல்லியும் கேட்காம சின்ன பொண்ணை தூண்டி விட்டுஎன்று கோவத்தில் வார்த்தையை விட,
சூர்யா தான் அந்த வார்த்தைகளில் துடித்து போனான்… வலித்தது என்ன வார்த்தை சொல்லி விட்டான் குற்ற உணர்ச்சி, சின்ன பிள்ளையை பயன்படுத்திக்கிட்ட, சுயநலம் என்று,
ஆமாடா ஆமா சுயநலம் தான், ஆனா நீ நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை.. என் ப்ரெண்ட் வாழ்க்கை நல்லா அமையனும்ங்கிற சுயநலம், அவனும் சந்தோஷமா வாழனும்ங்கிற சுயநலம்டா, எனக்கு அந்த சுயநலம் தப்பா தெரியலை அதான் அதற்காக மட்டும் தான் தியாக்கு உதவி செய்ய ஒத்தக்கிட்டேன்… அப்புறம் என்ன சொன்ன குற்ற உணர்ச்சியை தீர்த்துக்க சின்ன பொண்ணை பயன்படுத்திக்கிட்டேன்…ஆமா அப்புடியே வச்சுக்கோ என் ப்ரெண்ட் வாழ்க்கை நல்லா இருக்கிறதுக்காக எது வேணாலும், ஏன் ஒரு கொலை வேணாலும் பண்ணுவேன்டா, அப்புறம் என்ன சொன்ன உன் கூட பொறந்த தங்கச்சியா இருந்தா, உண்மையா பாசம் இருந்தா இப்புடி பண்ணுவியான்னு கேட்ட தானே, என் பாப்பு மேல்ல நான் எவ்ளோ பாசம் வச்சு இருக்குன்னு எனக்கும் பாப்புவுக்கும் தெரியும்… அதை உன்னை மாதிரி லூசு பயலுக்கு எல்லாம் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை போடா என்ற சூர்யா கோவமாக பேசி விட்டு செல்ல,
தியாவோ அண்ணா போகாதடா நில்லு, பாவா ஏதோ கோவத்தில் பேசிட்டார்ன்னா.. அதுக்காக ஓவரா பண்ணாதே,
டேய் அண்ணா…
அண்ணா என்றபடியே பின்னால் போக, சூர்யா நிற்காமல் சென்றான்…
தேவாவிற்கே சங்கடமாகி போனது கோவத்தில் சூர்யாவை இப்புடி எல்லாம் பேசியது தவறு என்பது புரிய, அதனால் டேய் சூர்யா நில்லு என்று அழைக்க,
திரும்பாமலே சூர்யா நமக்குள்ள எல்லாமே முடிஞ்சுது குட் பாய் என்று விட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்…
தேவா ச்சே என்று தன்னையே நொந்தபடி ஷோபாவில் அமர்ந்தான்… அவனுக்கு தெரியும் சூர்யாவின் கோபத்துக்கு ஆயுள் குறைவு என்று, ஆனாலும் அவனை திட்டியது சூர்யாவை விட தேவாவிற்கே வருத்தம் அதிகம்…. வெளியே கேட் வரை சூர்யா பின்னாடி போகாதீங்க என்று கெஞ்சியபடி போன தியா அவன் நிற்காமல் சென்றதால் உள்ளே வந்தாள்…
அவளை பார்த்த தேவாவிற்கு எல்லாம் இவளால் தான்… அவனை திட்டி அவன் கோவிச்சிட்டு போய்ட்டான் என்று தேவா தியா வை முறைக்க, அவளோ அதே அளவு அவனை திருப்பி முறைத்தவள்,
இப்ப எதுக்கு நீங்க என் அண்ணா வா கண்டபடி திட்டி வீட்டை விட்டு துரத்தி விட்டிங்க… அவர் என்ன தப்பு பண்ணுனார் என்று கேட்டபடி அவன் அருகில் வந்தாள்…
வாங்குனது பத்தலையா உனக்கு எல்லாமே உன்னால் தான்டி, அப்புடி இருக்கும் போது நீ வந்து என்னை கேள்வி கேட்கிறியா, பேசாம போய்டு என்றான் கோவமாக,
என்னது எல்லாமே என்னாலையா, நான் என்ன பண்ணுனேன், நானா உங்களை போலிஸ் ஸ்டேஷன் வர சொன்னேன்,
நானா உங்களை எனக்காக அங்க வந்து பேச சொன்னேன்,
நானா என் கழுத்தில்ல தாலி கட்டுங்க சொன்னேன்…
எல்லாத்தையும் நீங்க பண்ணிட்டு இப்ப வந்து என் மேல்ல பழி போடுறீங்க இது என்ன நியாயம் என்று தியாவின் கேள்வியில் தேவா அமைதியாக இருந்தான்…
அவன் பேசாமல் அமைதியாக இருக்கவும், தியா மேலும் பதில் சொல்லுங்க பாவா, என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணுனா உங்களுக்கு என்ன? என் மேல்ல கேஸ் போட்டா உங்களுக்கு என்ன? நான் அசிங்கப்பட்டு அவமானப்பட்டா உங்களுக்கு என்ன? நீங்க ஏன் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத எனக்காக என்னை காப்பாத்தறதுக்காக இது எல்லாம் பண்ணுனீங்க, என்று கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டி தியா கேட்க தேவாவே தடுமாறி வாயடைத்து நின்றான்…
அவன் அப்புடி நிற்பதை பார்த்த தியா, அவனை பயங்கரமாக குழப்பி விட்டு இருக்கோம் என்று தனக்குள் நினைத்து சிரித்து கொண்டு, கமான் தியா விடாதா இன்னும் குழப்பு என்றபடி,
தியா,இப்புடி அமைதியா நின்னா என்ன அர்த்தம் பாவா, சொல்லுங்க எனக்காக நீங்க இவ்ளோ பண்ணி இருக்கீங்க அப்புடினா, உங்களுக்கு என் மேல்ல ஒரு இது இருக்குன்னு தான் அர்த்தம் என்னறவளை முறைத்தவன்
மண்ணாங்கட்டி உனக்காக தான் நான் போலிஸ் ஸ்டேஷன் வந்தேன்னு எவன்டி சொன்னான்,
நான் ஏன் உனக்காக பண்ண போறேன்… இப்ப போனானே ஒரு பைத்தியக்காரன் அவனுக்காக மட்டும் தான் வந்தேன்… உனக்கு ஏதாவது தப்பா நடந்தா, அவன் தன்னால் தான் இப்புடி எல்லாம் நடந்துச்சுன்னு கவலைப்படுவான்.. என் சூர்யாவுக்கா மட்டும் தான் வந்தேன்… அவனுக்காக தான் உன்னை வெளியே கொண்டு வர போலிஸஅ ஸ்டேஷனில் அப்புடி பேசுனேன்… மத்தபடி உனக்காக எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது… ஏன்னா நான் வெறுக்கிறவங்க லிஸ்ட்ல நீ தான் இப்ப பர்ஸட்ல இருக்க என்றான்..
தேவா கூறியதை கேட்டு உதட்டை இரண்டு புறமும் சுளித்த தியா, என்ன பண்றது பாவா உங்க தலை எழுத்து நீங்க யாரை வெறுக்கிறீங்களோ அவளையே கல்யாணம் பண்ணி வாழ்க்கை ஃபுல்லா குப்பை கொட்டனம்னு, ஆனா எனக்கு பாருங்க நான் யாரை லவ் பண்ணணோ அவரையே கல்யாணம் பண்ணி ஹாப்பியா வாழனும்ங்கிறது என் தலை எழுத்து என்று கண் சிமிட்டி கூறினாள் தியா…
நீ ஹாப்பி யா தான் இருப்பே, ஆனா உன் அப்பா அம்மாவை பத்தி நினைக்கவே இல்லைல, நீ இன்னைக்கு பண்ணுன காரியத்தால்ல அவங்க எவ்ளோ வருத்தப்படுவாங்க… அவங்களை மத்தவங்க முன்னாடி அவமானப்படுத்திட்டோங்கிற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமா இருக்க என்ற தேவா ஹாலில் இருந்து வெளியே சென்று விட்டான்… அதை கேட்ட தியா முகம் வாடி விட்டது அப்புடியே ஷோபாவில் அமர்ந்து விட்டாள்…
இப்போது அப்பா அம்மாவும் வருத்தப்பட்டு தானே இருப்பாங்க… அச்சோ மம்மி டாடி சாரி என்னை மன்னிச்சிடுங்க… நான் நினைச்சது வேற நடந்தது வேற, உங்களை அசிங்கம்படுத்தனும்னு நா நினைக்கலை… நீங்க என்னை வெறுக்க மாட்டிங்க கோவமா தான் இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனாலும் ப்ளீஸ் மம்மி ப்ளீஸ் டாடி சீக்கிரம் சமாதானமாகிடுங்க.. பாவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவர் ரொம்ப நல்லவர்… நீங்க அதை சீக்கிரம் புரிஞ்சிக்குவீங்க… அப்புறம் என் மேல்ல இருக்க கோவம் காணாமா போய்டும்… என்று யோசித்து கொண்டே அமர்ந்த வாக்கில் அந்த ஷோபாவில் உறங்கியும் போனாள்…
வெளியே தோட்டத்தில் நின்று சீக்ரெட் ஒன்றை புகைத்தபடியே தியா சற்று நேரத்திற்கு முன்பு கேட்ட எனக்காக ஏன் நீங்க இது எல்லாம் பண்ணுனீங்க என்று தாலியை எடுத்து காட்டிய அதே கேள்வியை தான் தனக்கு தானே கேட்டு கொண்டு இருந்தான் தேவா…
அவளை இந்த ஆறு மாசத்தில், ஆறு ஏழு தடவை பார்த்து இருப்பேன்னா, அந்த நேரத்தில் கூட அவ பேசுவதை கேட்டா எரிச்சலும் கடுப்பும் தான் வரும்… திட்டா தான் செஞ்சு இருக்கோம்… அதுக்கு அப்புறம் அவ நியாபகம் கூட வராது… அப்புடி இருக்கும் போது, எப்புடி அவளுக்காக சூர்யாவை திட்டி சண்டை போட்டேன்… எப்புடி எமோஷல் ஆகி தாலி கட்டுற வரை போனேன்…
ஏன்?
ஏன்? ன்று கேட்டபடியே கண்மூட, ஏன்னா உன்னை மனதை சுற்றி நீ போட்டு இருந்த இரும்பு திரையை உடைத்து உள்ளே வந்துட்டாளோ, என்னவோ அவன் மனசாட்சி கூறும் அதே நேரம்,
உங்களை நான் இல்லை வேற எந்த பொண்ணு கல்யாணம் பண்ணினாலும் நீ வாங்குன கொலைக்காரன், பொம்பளை பொறுக்கிங்கிற பட்டம் வாழ்நாள் முழுவதும் தூரத்தும் என்ற வெண்ணிலா பேச்சும், உனக்கு பொண்டாட்டி குடும்பம் குட்டி எதுவும் நிலைக்காது எல்லாம் அற்ப ஆயுளில் போயிரும் ஜீவாவின் அம்மா கௌரியின் சாபமும் நினைவு வர,
நோ என்று கத்தியபடி கண்விழித்தவன் கையில் இருந்த சீக்ரெட்டை வீசிவிட்டு, நானாவது அவளை காதலிக்கிறதாவது, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த முட்டாள் தேவாவிற்கு தான் அன்பு, பாசம், காதல், கத்ரிக்காய், கண்றாவி எல்லாம் வரும்… எனக்கு வராது… அவ சின்ன பொண்ணு எனக்கா ஏதோதோ பண்ணி பிரச்சினையில் மாட்டிக்கிட்டா, அதான் அதற்காக மட்டும் தான் நான் இது எல்லாம் பண்ணுனேன், மத்தபடி ஒன்னும் இல்லை என்று தான் கேட்ட கேள்விக்கு தனக்கு தகுந்த பதிலை கூறி அவனை அவனே சமாதானப்படுத்தி கொள்ள,
அதை பார்த்து தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்ற உன்னை எல்லாம் திருத்தவே முடியாது என்று தலையில் அடித்து கொண்ட மனசாட்சி, சரி இனிமே தியா விஷயத்தில் அடுத்து என்ன பண்ண போற என்று கேட்க…
அதை தான் அவனும் யோசித்து கொண்டு இருந்தான்.. அடுத்து என்ன என்ற கேள்வி தான் பூதாகரமாக மனதில் வந்து நின்றது.. தாலி கட்டி விட்டு அப்புடியே விட்டு வர மனதில்லை.. அதனாலே அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.. அதே நேரம் அவளோடு சேர்ந்து வாழும் எண்ணம் எல்லாம் இல்லை.. இப்ப என்ன செய்வது என தீவிரமாக யோசித்தவன்,
சின்ன பொண்ணு விவரம் இல்லாமல் காதல் கீதல் என்று பிதற்றுக்கிறாள்.. கொஞ்ச நாள் அவனோடு இருந்தாளே இந்த ஊரும் உலகமும் அவனை பார்க்கும் பார்வையில் தெளிந்து அவளாகவே விலகி விடுவாள்..
அப்புடி இல்லையென்றாலும் கொஞ்சம் கொஞ்சமா புரியும்படி புத்தி சொல்லி அவளுடைய அப்பா அம்மா கோவம் குறைந்த பின் அவர்களிடம் பேசி வீட்டுக்கு அனுப்பி வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தான்..
சுத்தம் இவன் எல்லாம் தேற மாட்டான் என்ற மனசாட்சி அப்புடியே மறைந்து விட, தேவாவும் வீட்டுக்குள் சென்றான்…
அங்கு ஷோபாவில் அமர்ந்த படியே தூங்கி கொண்டு இருந்தாள் தியா… அவளின் அருகே வந்து அவளை பார்த்தான் தேவா.. அவன் அடித்ததில் இரண்டு கன்னங்கள் சிவந்து லேசாக வீங்கி இருந்ததை பார்க்க பாவமாக இருந்தது.. இவளுக்கு இது எல்லாம் தேவையா என அவளுக்காக வருத்தப்பட்டவன் அவளின் கையில் தட்டி ஏய் எழுந்திரு மேலே ரூம்ல போய் படு என்று கூற, தியாவோ நல்ல உறக்கத்தில் இருந்ததால் எழவில்லை…
மறுபடியும் எழுப்ப மனம் வரவில்லை தேவாவிற்கு, உறக்கத்தில் இருப்பவர்களை எழுப்ப கூடாது என்பதாலும்,மேலும் அவன் அடித்து சிவந்து இருந்த கன்னங்களை பார்த்ததும் பாவமாகி போனதாலும், அதற்காக ஷோபாவிலே உறங்கட்டும் என்று விட்டு செல்லவும் மனம் இல்லாததால், அவளை அப்புடியே கைகளில் அவளின் உறக்கம் கலையாதவாறு அள்ளிக் கொண்டு மாடியில் இருந்த அறையில் படுக்க வைத்து போர்வையை எடுத்து போர்த்தி விட்டவன், அங்கு மேஜை டிராயிரில் இருந்த ஆயுல்மெண்ட் எடுத்து தியாவின் இரண்டு கன்னங்களில் தடவினான் லேசாக அவளின் முகத்தருகே குனிந்தபடி,
ஹாப்பி பர்த்டே பாவா என்றபடி கண் விழித்த தியா, தீடிரென அவன் எதிர்பாராத சமயம் அவன் சட்டை காலரை பற்றி தன்னருகே இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு மறுபடியும் ஹாப்பி பர்த்டே பாவா என்று கூற,
தேவாவோ கன்னத்தை தடவியபடி தியாவை முறைத்தான்..
அது ப்ர்த்டே கிஃப்ட், உங்களுக்காக வேற கிஃப்ட் கடை கடையா அலைஞ்சு பார்த்து பார்த்து வாங்கி வச்சு இருந்தேன்… நடந்த கலவரத்துல அதை அந்த வீட்டுலயே மிஸ் பண்ணிட்டேன்… அதான் விஷ் பண்ணிட்டு கிஃப்ட் கொடுக்கமா இருந்தா நல்லா இருக்காதுல்ல அதான் என் விளக்கம் கொடுக்க இன்னும் தேவா முறைக்க,
கன்னத்தில் கொடுத்தது தான் பிடிக்கலையோ என்றவள், மேலும் இப்புடி முகத்தை தூக்கி வச்சுட்டு நான் கொடுத்த கிஃப்ட் வச்சுக்க வேணாம் உங்களுக்கு பிடிக்கலைனா திருப்பி கொடுத்துருங்க பாவா என்க… தேவாவால் முறைக்க மட்டும் தான் முடிந்தது… அவளின் சிவந்த கன்னத்தை பார்த்து அடிக்க மனம் வரவில்லை…
எதுவும் பேசாமல் அறையில் இருந்து வெளியேற போக,
பாவா என்று தியா அழைக்க, திரும்பி என்ன என்னும் விதமாக பார்க்க,
நீங்க தூங்கலயா என்று தியா கேட்க,
அதற்கு தான் என் ரூம்க்கு போறேன், உனக்கு என்ன வேணும் என்றான் கடுப்புடன்,
ஏன்? இந்த ரூம்லையே படுக்கலாமே, அதான் பெட் பெரிசா தானே இருக்கு என்று கூறியவளுக்கு பதில் அளிக்கமால் திரும்பி நடக்க,
நான் உங்களை எதுவும் பண்ண மாட்டேன் பாவா, என்னை நம்பலாம்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு உங்க கற்புக்கு நான் கிராண்டி என்றவளை,
அடிங்கககககககக அடங்கவே மாட்டியாடி நீ உன்னை என தேவா நெருங்க….
அய்யோ என்றபடி போர்வைக்குள் ஒழிந்து கொண்டாள்….
பாகம் 26
இரவு 12:30 தேவா தனது வீட்டில் படுத்து இருந்தான்… கண்கள் மூடி இருந்தது.. ஆனால் உறக்கம் தான் வருவேன்னா என போக்கு காட்டி கொண்டு இருந்தது.. மனம் தேவையில்லாத சிந்தனைகளில் உழன்றது… அவனை வெறுமை சூழ்ந்து இருந்தது.. தனிமையை விரும்பி ஏற்றவன் தான், ஆனால் ஏனோ சமீப காலமாக இந்த தனிமை அவனுக்கு பிடிக்கவில்லை…
இவ்வளவு நாள் இந்த தனிமையில் இருந்து தப்பிக்க அவனுக்கு கைக்கொடுத்த மது மாது இரண்டையுமே சமீப காலமாக அவன் நாட வில்லை… அதுவும் அவனுக்கு பிடிக்காமல் போனது… அவனின் மனம் எதையோ எதிர்பார்க்கின்றது அது என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக அதை தெரிந்து கொள்ள அவன் விரும்பவில்லை..
அப்போது அவனின் மொபைல் சிணுங்கியது.. பார்க்காமலே ஆன் சொத்து காலில் வைத்தவன் “தினம் பத்து மணிக்கு கத்துற எருமை என்ன இன்னைக்கு லேட்டா கத்துது” என எதிர்முனையிலிருந்த சூர்யாவை நக்கலாக கேட்டான்..
“தேவா தேவா” சூர்யா குரல் பதட்டமாக ஒலிக்க
“என்னடா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் குரல்”
“டேய் தேவா பாப்பு பாப்புக்கு”
“அவளுக்கு என்னாச்சுடா” படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து அமர்ந்தபடி கேட்டான்…
“அது வந்து தேவா ஒரு சின்ன தப்பு பாப்புக்கு”
“என்னாச்சு டா டேய் சூர்யா சொல்லி தொலைடா, சூர்யா சூர்யா” என்றபடி போனை காதிலிருந்து எடுத்து பார்க்க சார்ஜர் இல்லாமல் அது உயிரை விட்டு இருந்தது..
அவசரமாக அதை சார்ஜரில் போட்டவனுக்கு என்னவோ ஏதோ என மனம் வேகமாக அடித்து கொண்டது…
“தேவா நான் இரண்டு நாள் வீட்டில் இருக்க மாட்டேன் டா..
நான் மட்டுமில்ல வீட்டிலிருக்க எல்லாரும் சேர்ந்து நம்ம ராகவ் மாமனாரோட சொந்த ஊரில் கோவில் திருவிழா இருக்காம்..
“அந்த திருவிழா இரண்டு மூணு நாள் இருக்குமாம்.. இனியா வீட்டிலிருந்து தான் அம்மனுக்கு பட்டு நகை தாலி எல்லாம் கொடுப்பாங்கள்ம்.. சக்தி வாய்ந்த அம்மனாம்.. கண்டிப்பா குடும்பத்தோட எல்லாரும் வரனும் இனியா அப்பா கூப்பிட்டு இருக்காங்க…
நம்ம வீட்டில் எல்லாரும்.. இனியா வீட்டில் அவ தங்கச்சி மட்டும் வரலை ஏதோ எக்சாம் இருக்காம்.. இன்னைக்கு நைட்டு இரண்டு குடும்பமும் ஒன்றன் உடுமலை பேட்டை கிளம்புறோம்”.. இன்று மாலை தேவாவுக்கு அழைத்த அவனின் அம்மா மீனாட்சி இவன் கேட்காமலே அனைத்தையும் சொல்ல, ஆர்வமே இல்லாமல் கேட்டவனுக்கு, தியாவை பற்றி அவர் கூறியதும்,
‘ஆமா இவ அப்படியே எக்சாம் எழுதி கிழிச்சிட்டு தான் மத்த வேலையை பார்ப்பா, அவங்க கூடவே போக வேண்டியது தானே, தனியா இங்க இருந்து என்னத்த கழட்ட போறா, தீடிர்ன்னு என்ன படிப்பு மேல்ல அவ்ளோ அக்கறை’ என அப்போதே எரிச்சல் உண்டானது.
தியாவை தேவா பார்த்தே இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும்.. என் பின்னாடி வராத என எத்தனை முறை திட்டியும் அவள் கேட்பதாக இல்லை..
அதனால் கடந்த முறை ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தான்.. அத்தோடு இனியாவுக்கும் அழைத்து விஷயத்தை சொல்லி உன் தங்கச்சிக்கு கொஞ்சமாச்சும் புத்தி சொல்லிவை என கத்தியவன், இன்னோரு தடவை என் பின்னாடி வந்த உங்கப்பன் கிட்ட தான் சொல்லுவேன் என மிரட்டியும் அனுப்பி இருந்தான்..
அதிலிருந்து தியா அவனை சந்திக்க முயற்சிப்பது இல்லை.. அப்பாடா தொல்லை விட்டுச்சு என்ற நிம்மதியும் எழுந்தது.. அப்பா மேல்ல இவ்வளோ பயம் வச்சு இருக்கவளுக்கு லவ் ஒன்னு தான் கேடு என்ற கோவமும் எழுந்தது..
இப்போதும் அவள் மீது கோவம் வந்தது அவங்க கூடவே போய் இருக்க வேண்டியது தானே, தனியே இருந்து என்ன பிரச்சினை இழுத்து வைத்து கொண்டாளோ என, உடம்புக்கு ஏதும் முடியலையோ அதான் சூர்யாவுக்கு கூப்பிட்டு இருப்பாளோ என பலப்பல யோசனையோடும் பதட்டத்தோடும்
சார்ஜரிலிருந்த போனை அப்புடியே ஆன் செய்து சூர்யாவுக்கு அழைக்க,
“தேவா அது வந்து அது வந்து பாப்பு நான் பாப்பு” பதற்றத்தில் வார்த்தை வரவில்லை சூர்யாவிற்கு,
“என்னடா நீ சொல்றகொஞ்சம் புரியுற மாதிரி சொல்லி தொலை” என்ற தேவா தனது கார் சாவியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்… அவனுக்கு புரிந்தது ஏதோ பெரிய பிரச்சினை என்று,
“தேவா சாரிடா அது வந்து நாளைக்கு உன் ப்ர்த்டே வருதுல, அதனால பாப்பு உனக்கு சர்ப்ரைஸா இன்னைக்கு நைட்டு 12 மணிக்கு கொண்டலாம் சொல்லி ப்ளான் பண்ணாடா. நான் எவ்வளேவோ வேண்டாம் சொன்னேன்டா. ஆனா பாப்பு தான் அப்பா, அம்மா நைட்டு 10 மணிக்கு ஊர்க்கு போறாங்க. அவங்க சொந்த ஊர்ல கோவில் விசேஷம் அதற்காக உங்க வீட்டு ஆளுங்க. அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் ஊருக்கு போறாங்க. வரதுக்கு இரண்டு நாள் ஆகும் ப்ராப்ளம் வராது சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டதால சரின்னு ஒத்துக்கிட்டேன்டா.
அதுக்காக காரமடை தாண்டி ஒரு பண்ணை வீட்டுல எல்லா ஏற்பாடும் பண்ணோம் டா. கடைசியாக பாப்புவ அந்த வீட்டுல விட்டுட்டு ஆர்டர் பண்ண கேக் வாங்க நான் வெளியே வந்துட்டு திரும்ப போய் பார்க்கும் போது, தியாவை போலிஸ் ஜீப்ல ஏத்திட்டு போயிட்டாங்கடா, நானும் இங்க ஸ்டேஷன் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சா ரொம்ப தப்பு தப்பா சொல்றானுங்கடா, பாப்பு மேல்ல ட்ரக்ஸ் அண்ட் ப்ரா”…
அதற்கு மேல் சூர்யா கூறிய எதையுமே தேவா கேட்கவில்லை… போனை காருக்குள் விசறியடித்து இருந்தான்… அவ்வளவு கோவம். தியா மீது அவள் தன் மீது வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதல் மீது, சூர்யா மீது, அதையும் தாண்டி அவளை ஸ்டேஷன் அழைத்து சென்ற போலிஸ் மீது அவர்களை கொல்லும் அளவு கோவம் வந்தது… அவனின் கோவம் அதிகரித்தது போன்று இதய துடிப்பும் அதிகரித்தது காரின் வேகமும் கூடியது ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய போலிஸ் ஸ்டேஷனுக்கு 15 நிமிடத்தில் வந்து சேர்ந்தான்…
காரில் இருந்து இறங்கிய வேகத்திலே தன்னருகே வந்த சூர்யாவை அறைந்து இருந்தான்… “பரதேசி நாயே வயசு பொண்ணை இந்நேரத்திற்கு வெளிய கூட்டிட்டு வருவியா” என்று மேலும் அவனை அடிக்க பாய்ந்த தேவாவை தடுத்த சபரி…
“சார் ப்ளீஸ் இது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சார்… பர்ஸ்ட் தியா வை வெளிய கொண்டு வரலாம் சார். அந்த இன்ஸ்பெக்டர் வேணும்னே தியாவை அசிங்கப்படுத்தம்னு மோட்டிவோட தான் சார் பண்றான்… ஏன்னா தியா அப்பாவுக்கும் இந்த ஆளுக்கும் ஆல்ரெடி ப்ராப்ளம் இருக்கு சார்… அதான் சான்ஸ் கிடைச்சதும் பழிவாங்க ட்ரை பண்றான்… நான் எவ்வளவோ தியாவை பத்தி சொல்லி பார்த்துட்டேன் சார் கேட்கவே மாட்டேங்கிறான் … பத்தாக்குறைக்கு ப்ரஸ் லோக்கல் மீடியா எல்லாம் சொல்லிட்டான் சார்” சபரி சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டே ஸ்டேஷன் நோக்கி நடந்து கொண்டு இருந்தான் தேவா…
“லாயர்” தேவா கேட்க,
“கால் பண்ணிட்டேன் வந்துட்டு இருக்கார் என்று சொன்ன சூர்யா நல்ல வேளை இரண்டு ஃபேமிலியும் இப்ப வெளியூர் போயி இருக்காங்க தேவா அவங்க மட்டும் இருந்திருந்தா பிரச்சினை பெரிசா ஆகிருக்கும்ல” என்று சொல்லி முடிப்பதற்குள்,
இரண்டு மூன்று கார் வந்து ஸ்டேஷன் முன்பு நின்றது.. அதிலிருந்து தியா மற்றும் தேவா குடும்பத்தினர் இறங்கி அவசர அவசரமாக உள்ளே சென்றனர்…
“தேவா இவங்க எல்லாம் எப்புடி டா வந்தாங்க இப்ப என்ன பண்றது” என்ற சூர்யாவை முறைத்து விட்டு தேவாவும் உள்ளே சென்றான்..
திவேஷ் தன் வீட்டில் அமர்ந்து சிரித்து கொண்டு இருந்தான்.. தான் திட்டமிட்டது அனைத்தும் அப்புடியே நடக்கின்றது என்றெண்ணி, தேவாவை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது… தன் மனைவியின் முன்னாள் காதலன் அந்த நினைப்பே தேவா மீது எப்போதும் ஒரு வெறுப்பை உண்டாக்கி வைத்திருந்தது…
தியா அவள் மீது தனிபட்ட முறையில் எந்த கோபமோ வெறுப்போ இல்லை தான்.. ஆனால் என்று தேவாவை விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்டானோ அன்றிலிருந்தே அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை… அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று காத்திருந்தான்… ஆனால் நேரிடையாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள விரும்பவில்லை… சமயம் பார்த்து காத்திருந்தவனுக்கு ஹர்ஷா தியா சண்டை சரியாக வந்து சேர்ந்தது… அதே போல் தியா சூர்யா பேசியதை ஒட்டு கேட்டவன் தியா தந்தைக்கும் அந்த போலிஸிக்கும் இருந்த பிரச்சினையும் பயன்படுத்தி காய் நகர்த்த அது சரியாக வேலை செய்தது…
“தியாமா நீ நல்லா இருக்க தானே, உனக்கு ஏதோ பிரச்சினைன்னு போன் வந்துச்சுடா, ஆமா நீ இங்க என்ன பண்ற ஹரிணி வீட்டுல விட்டுட்டு தானே நாங்க கிளம்புனோம்”;பதட்டத்துடனும் அழுகையுடனும் கேட்டார் யமுனா, தியாவால் பதில் பேச முடியவில்லை தலை குனிந்து அழுது கொண்டு இருந்தாள்…
“ஹலோ சார் எதுக்காக என் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்து வச்சு இருக்கீங்க” கோவமாக கேட்டார் பாலகிருஷ்ணன் எதிரே இருந்த ஏ.சி.பியை பார்த்து,
“உங்க பொண்ணை அரெஸ்ட் பண்ணி இருக்கோம் அதுவும் ட்ரிக்ஸ் அண்ட் பிராத்தல் கேஸ்” என்று அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறியதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆனது…
“ஏய் யாரை பார்த்து என்ன சொன்ன? என் மேல்ல இருக்க பகையில்ல என் பொண்ணு மேல்ல வீண் பழி போட்டனா சும்மா இருக்க மாட்டேன்” பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டரிடம் எகிற,
“ஹலோ மரியாதையா பேசுங்க, நான் என்னமோ உன் வீட்டுல இருந்த பொண்ணை அரெஸ்ட் பண்ண மாதிரி சொல்றீங்க. ஆர்.எஸ்.புரத்தில்ல தானே உன் வீடு, காரமடைல்ல இந்த அர்த்த ராத்திரியில்ல உன் பொண்ணுக்கு அங்க என்ன வேலை” என கேட்க,
“காரமடையா” என அதிர்ந்தனர் மொத்த குடும்பமும்,
“இப்ப இருக்க வசதியான பொண்ணுங்களுக்கே இது தான் வேலை நட்ட நடு ராத்திரியில் போதையை போட்டுட்டு கண்ட கண்டவன் கூட எல்லாம் ஆட்டம் போட வேண்டியது”
“ஏய்”… பாலகிருஷ்ணன் சரவணை அடிக்க போக,
“யோவ் என்ன என்னை அடிக்க வர சொல்லு உன் பொண்ணுக்கு அங்க என்ன வேலை
அதுவும் இவ்வளோ அலங்காரம் பண்ணிட்டு யாருக்காக காத்து இருந்தா”,
“எனக்காக காத்துட்டு இருந்தா” என்றபடி உள்ளே வந்தான் தேவா.. அவனை பார்த்து மொத்த குடும்பமும் குழம்பி போனது… ஏற்கெனவே நடப்பது எதுவுமே புரியாமல் நின்று இருந்தவர்களுக்கு இது மேலும் குழப்பத்தை தான் தந்தது…
தேவாவோ அவர்களை யாரையும் பார்க்கவும் இல்லை… அவனின் பார்வை மொத்தமும் தியா மீது தான்… அவனின் குரல் கேட்கும் வரை தலை குனிந்து அழுது கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அவனை தான் பார்த்தாள்…
கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது… எப்போதுமே அந்த விழிகளில் அவனுக்கான காதலையும் சிரிப்பையும் மட்டுமே பார்த்து இருக்கிறான்… முதன் முறையாக அவள் அழுது பார்க்கின்றான்… ஏதோ ஒன்று அவன் மனதை அழுத்தியது… அவள் அழுக்கைக்கு காரணமானவர்களை கொல்லும் வெறி உண்டானது…
அவளின் அருகே வந்து கண்ணீரை துடைத்து விட்டவன், தன் தோளோடு அவளை அணைத்தவாறே, “இவ என்னை லவ் பண்றா நான் அவளை லவ் பண்றேன் கல்யாணமும் பண்ணிக்க போறேன். எனக்காக தான் அவ அங்க காத்துட்டு இருந்தா,
நாளைக்கு என் பிறந்த நாள் அதுக்காக சின்னதா ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி ரெடி பண்ணி இருந்தா, ஆனா நான் போறதுக்கு முன்னாடி இந்த போலிஸ்கார் அங்க போய்ட்டார்.. ஏற்கெனவே இவங்க அப்பா மேல்ல இருந்த கோவத்துல வேணும்னே இப்புடி பொய் கேஸ் போட்டு இருக்கிறார்” என்றான் தேவா அங்கு இருந்த பத்திரிகைக்கார்களிடம்,
மறுபடியும் அனைவருக்கும் அதிர்ச்சி இனியாவை தவிர, அவளுக்கு தான் முன்னரே இந்த காதல் விவகாரம் தெரியுமே,
“இது என்ன புது கதை சொல்லிட்டு இருக்க” என்றார் ஏ.சி.பி சரவணன்…
“இது கதை எல்லாம் இல்ல. எங்க மாமா சொல்றது தான் நிஜம்… எங்க இரண்டு வீட்லையுமே இவங்க கல்யாணத்தை பேசி முடிச்சிட்டோம். இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணம்… என் தங்கச்சி மாமாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும் நினைச்சி தான் அங்க போனா… நாங்களும் அங்க தான் போக ரெடியா இருந்தோம்… இந்த ஏ.சி.பி சார் தான் எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டார்” இனியாவும் தன் தங்கையை காப்பாற்ற அடித்து விட்டாள் பொய்யை,
“இனியா என்ன இது” என கோபப்பட்ட தந்தையிடம் “டாடி ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க. எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் விட்டு வெளிய போனதுக்கு அப்புறம் பேசிக்கலாம். சுத்தியும் பிரஸ் போலிஸ் ப்ளீஸ் டாடி என்று மெதுவாக கூறினாள்…
பாலகிருஷ்ணனுக்கு பற்றி கொண்டு வந்தது. தியாவை பார்க்கும் போது மொத்த குடும்ப மானத்தையும் இவனுக்கா வாங்கி விட்டாளே என்று, யமுனாவுக்கோ தன் மகள் தப்பான ஒருவனை தேர்ந்தெடுத்து விட்டாளே என்று மனது அடித்து கொண்டது…
அங்கு இருந்தவர்களிலே தேவா கூறியதை கேட்டு மகிழ்ந்தது இரண்டு ஜீவன். ஒன்று தியா மற்றொன்று தேவாவின் தாய் மீனாட்சி… மகனுக்கு திருமணம் நடக்காதா என்று ஏங்கி தவித்தவர் அல்லவா, இப்போது தியாவிற்காக அவன் வரிந்து கொண்டு சண்டைக்கு நிற்கின்றான் என்றால் அவள் மீது ப்ரியம் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார்..
இன்ஸ்பெக்டர் சரவணவனின் பாடு தான் திண்டாட்டம் ஆனது… திவேஷ் பேச்சை கேட்டு இந்த விஷயத்தில் இறங்கி இருக்க கூடாதோ என்று தோன்றியது… இருந்தாலும் “உங்க வீட்டு பொண்ணு தப்பு பண்ணுனதை மறைக்க ஆளு ஆளுக்கு பொய் சொல்றீங்களா, நீங்க சொல்றது உண்மைன்னு நான் எப்புடி நம்புறது” என கேட்க,
இங்கு மீனாட்சிக்கோ சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, “இப்ப என்ன சார் நாங்க சொன்னது உண்மை தான்னு நிருபிக்கனும் அவ்ளோ தானே” என்ற மீனாட்சி தன்னருகே நின்று இருந்த இனியா கையிலிருந்து கைப்பையை வெடுக்கென பிடிங்கி அதற்குள் இருந்து ஒரு பாக்ஸை எடுத்தார்…
திருவிழாவில் அம்மனுக்கு சாற்ற வைத்திருந்த மஞ்சள் கயிற்றோடு கோர்த்து இருந்த தாலி அதில் இருக்க, அதை எடுத்தவர் தேவா கையில் கொடுத்து “தேவா தியா கழுத்தில் கட்டு. அப்புறம் நம்ம பெரிசா ரிஷப்சன் வச்சிக்கலாம்… இப்போதைக்கு நம்ம திவ்யாவும் நம்ம குடும்ப மானம் தான் முக்கியம் அதனால் கட்டு” என்றார் இந்த சந்தர்பத்தை விட்டால் மகன் திருமணம் நடப்பது ரொம்ப கஷ்டம் என்பதால்,
சந்தர்ப்பதை பயன்படுத்தி கொள்ள நினைத்த மீனாட்சியை தேவா குடும்பத்தினர் முறைத்தனர்.. எதுவும் வாய் திறந்து பேச முடியாதே சுற்றியும் மீடியா கண்கள் இவர்களை பார்த்து கொண்டு இருக்கிறதே, பாலகிருஷ்ணனும் யமுனாவும் பார்வையால் பொசுக்கினார்கள் மீனாட்சியை அவர்களை விட உக்கிரமாக முறைத்தான் அவரின் மகன் தேவா…
“இவர் நம்புறதுக்காகலாம் இப்புடி அர்த்த ராத்திரியில் கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்லைம்மா.. த்ரி மந்த்க்கு அப்புறம் நம்ம பிக்ஸ் பண்ணுன டேட்லயே மேரேஜ் வச்சுக்கலாம்” என அன்னையை முறைத்தப்படி தேவா சொல்ல,
“சும்மா நாடகம் போடாம எல்லாரும் வெளியே போங்க. காசு இருந்தா எல்லா தப்பையும் மறைச்சிடலாம் நினைக்காதீங்க நாளைக்கு கோர்ட்ல வந்து பார்த்துகோங்க.. யோவ் ஏட்டு இந்த பொண்ணு மேல்ல ட்ரக் அண்ட் ப்ராத்தல் கேஸ் போடு என சரவணன் தியா தந்தை மீது இருக்கும் பகையை தீர்த்து கொள்ள சொல்லி முடிப்பதற்குள்
மீனாட்சி கையிலிருந்த தாலியை வாங்கி வேகமாக தியா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கி இருந்தான் தேவா..
பளிச் பளிச் என்று அதை சுற்றி இருந்த பத்திரிக்கைகார்கள் படமாக்கி கொண்டனர்.. சபரியும் சூர்யாவும் கூட தங்கள் மொபைலில் படம் பிடித்து கொண்டனர்… கெட்டத்திலையும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்வாங்க அது இது தான் போல என்று சூர்யா நினைத்து கொண்டான்…
இன்றைக்கு இந்த சூழ்நிலையில் இந்த திருமணம் நடக்கவில்லை என்றால், எப்போதும் நடந்து இருக்காது.. தியாவும் அவனும் தலைகீழாக நின்றாலும் தேவா மனதை மாற்றி இருக்க முடியாது.. யப்பா சரவணா ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்குப்பா என அந்த இன்ஸ்பெக்டர்க்கு நன்றி சொல்லி கொண்டு இருந்தான்..
இப்புடி ஒரு சூழ்நிலையை உருவாக்கிய மகளை பாலகிருஷ்ணன் வெறுப்புடன் பார்த்தார்.. யமுனா இவ வாழ்க்கையை இவளே அழிச்சுக்கிட்டாளே என்ற கவலையோடு பார்த்தார்..
“இப்ப சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சரவணன் நீங்க தீடிர்னு காரமடைல்ல இருக்க குறிப்பா அந்த வீட்டுக்கு மட்டும் ஏன் வந்தீங்க.. அதுவும் ஒரு பொண்ணு தனியா இருந்தா உடனே அரெஸ்ட் பண்ணுவீங்களா, அப்புடி ஏதும் புது சட்டம் இருக்கா என்ன, எனக்கு ஏதும் தெரியாது அப்புடி ஏதும் சட்டம் இருக்கா உங்களுக்கு தெரியுமா என சுற்றி இருந்த பத்திரிக்கையாளர்களையும் கேட்டவன் எதுக்காக இது எல்லாம் பண்ணுனீங்க இன்ஸ்பெக்டர் சரவணன்” என்று சரியான கேள்வியை கேட்டான் தேவா…
“அந்த வீட்டில் தப்பு நடக்கிறதா அங்க பக்கமிருந்து கம்பளைண்ட் வந்து இருந்துச்சு” மென்று முழுங்கியபடி சரவணன் சொல்ல
“எங்க அதை காட்டுங்க”? தேவா கேட்க
அது வந்து அது வந்து இன்ஸ்பெக்டர் சரவணன் திணறினார்…
“சார் மீதியை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க கிளம்புங்க சார்” என்றார் லாயர்…
“இவரை என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க… அப்ப தான் நாங்க கிளம்புவோம்”என்றான் தேவா… பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்டதுமே தியாவிற்கு குளு குளு என்று இருந்தாலும்,
சரவணனும் வேறு வழியின்றி தியாவிடம் மன்னிப்பு கேட்க அனைவரும் வெளியே வந்தனர்…
எங்க முகத்திலேயே இனிமே முழிக்காத எங்களை பொறுத்தவரை எங்க இரண்டாவது பொண்ணு செத்துட்டா என்ற பார்வையை மட்டும் மீடியா இன்னும் இருப்பதால் பார்த்து விட்டு பாலகிருஷ்ணனும் யமுனாவும் காரில் ஏறி செல்ல,
தியாவிற்கு கவலையாகி போனது..
அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று, ஆனாலும் சமாதானப்படுத்திக்கலாம் தியா.. உன் மம்மி டாடி புரிஞ்ச்சுப்பாங்க என தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டாள்..
இனியாவோ தியாவிடம் “உன் மேல்ல எனக்கு கோவம் தான்.. ஆனாலும் எப்பவும் உனக்கு நான் இருப்பேன்.. மம்மி டாடி கிட்ட நான் பேசுறேன் நீ ஹாப்பியா இரு” என்றவள் தேவாவிடம் “நல்லா பார்த்துக்கோங்க” என கூற,
அவளையும் முறைக்கத் தான் செய்தான் தேவா..
“அவ பண்ணினதுக்கு இவர் என்ன நம்மளை முறைக்கிறாரு” என்றபடி அவளேடைய காரில் ஏறியவளுக்கு தியா தேவா கல்யாணம் பற்றி பெரிய கவலை எல்லாம் இல்லை.. என்று தேவா இனியாவிற்கு அழைத்து உன் தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணு என்று கூறினான் அப்போதே தேவா பற்றி மற்றவர்கள் கூறி இருந்த பெண் பித்தன் என்ற பிம்பம் இனியாவிற்கு மாறி இருந்தது..
அனைவரும் சென்ற பிறகு சபரி, சூர்யா, தேவா, தியா மட்டுமே அங்கு இருந்தனர்.. தேவாவை நினைத்து கொஞ்சம் கலவரமாக இருந்தாள் தியா… “மச்சான் விடு எல்லாம் சரியாகிடும் என்று தியாவை பார்த்து கூறிய சபரி, அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறவனை கூட பார்த்து இருக்கேன்.. ஆனா அர்த்த ராத்திரியில் முத ஆளா நீதான் கல்யாணம் பண்ணி இருக்க காங்கிரஸ் நாளைக்கு மறக்கமா டீரிட்டு கொடுத்து இரு” என்றவன் தேவா முறைத்த முறைப்பில் எனக்கு ஸ்டேஷன்க்குள்ள வேலை இருக்கு என்று நைசாக நழுவி கொண்டான்…
பாகம் 25
தேவா அடித்ததில் ஷோபாவில் விழுந்தவள்,
கன்னத்தை பிடித்து கொண்டு ஆ……. என்று வலியில் முனக,
அவள் பக்கத்தில் ஏற்கெனவே அடி வாங்கி விழுந்திருந்த சூர்யாவுக்கு தியாவின் முகத்தில் வலியின் சாயல் தெரிய தேவா மீது பயங்கர கோவம் எழுந்தது அந்த பாசக்கார அண்ணனுக்கு..
சூர்யாவிற்கும் தியாவிற்கும் தேவாவை வைத்து தான் பழக்கம் ஆனது. ஆனால் இந்த குறுகிய காலத்திலே இருவரும் பாசமலரில் ஆரம்பித்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் அண்ணன் தங்கச்சியை மிஞ்சும் அளவுக்கு அப்படியோரு பாசம் இருவருக்குள்ளும், சூர்யா தியாவை பாப்பு என்றும் தியா சூர்யாவை டேய் அண்ணா என்று அழைக்கும் அளவு ஒரு பாசம்..
கோவமாக ஷோபாவில் இருந்து எழுந்த சூர்யா “டேய் இப்ப எதுக்குடா பாப்புவ அடிக்கிற, இன்னோரு தடவை என் பாப்பு மேல்ல கையை வச்சா அவ்ளோ தான்” என்று எச்சரிக்க… இப்போது சூர்யாவை தேவாவை விட தியாவே அதிகம் முறைத்தாள்…
‘அய்யோ இவன் வேற தங்கச்சி பாசத்துல டி.ஆர் மிஞ்சிருவா போலேயே, இந்த டயலாக் கை திரும்ப திரும்ப சொல்லி எக்ஸ்ட்ரா அடி வாங்கி கொடுக்குறானே.. இவனை அண்ணாண தத்தெடுத்தது ரொம்ப ரொம்ப தப்பு போலேயே’ என தியா மனதிற்குள் சூர்யாவை திட்டி கொண்டு இருக்க,
சூர்யா கன்னத்தில் தேவா மறுபடியும் அறையை வைத்து இருந்தான்… அதை பார்த்த தியா மறுபடியும் சிரிக்க, தேவா மறுபடியும் அவளை அடிக்க, சூர்யா மறுபடியும் எழுந்து அதே டயலாக் பேசி மறுபடியும் அடி வாங்க, தியா மறுபடியும் சிரிக்க அவளை தேவா அடிக்க ரீப்பீட்டு,
( இவங்க இப்புடி அடிச்சு அடிச்சு விளையாடிட்டு இருக்கட்டும்.. நாம அப்புடியே காலச்சக்கரத்தை இரண்டு மாசம் முன்னோக்கி நகர்த்தி, இவங்க வாழ்க்கையில் என்ன நடந்தது. எப்புடி கல்யாணம் ஆச்சு.. எதுக்கு இப்புடி அண்ணனும் தங்கச்சியும் போட்டி போட்டு அடி வாங்குறாங்க அப்புடிங்கிற கதையை பார்த்ததுட்டு வரலாம்..)
இரண்டு மாதங்களுக்கு முன்பு
அந்த பெரிய சூப்பர் மார்க்கெடில் பெண்களுக்கான காஸ்மெட்டிக் பிரிவில் தனக்கு தேவையான பொருட்களை பார்த்து கொண்டு இருந்தாள் ஹரிணி…
அப்போது யாரோ தன்னை உற்று பார்த்து கொண்டு இருப்பது போல் தோன்ற சட்டென நிமிர்ந்து பார்த்தாள்…
எதிரே நின்று இருந்தவனை பார்த்ததும் அதிர்ச்சியும் ஒரு சின்ன பயமும் அதை விட அதிகமான கோவமும் வந்தது.. அவனை கண்களால் முறைத்து கொண்டே பொறுக்கி “செக்ஸ் டாக்டர்” என்று முனுமுனுத்து கொண்டாள்..
அவள் உதடுகளின் அசைவை வைத்தே என்ன சொன்னாள் என்பது புரிந்தது எதிரே இருந்த ஹர்ஷாவிற்கு,
நேற்றைய தினம் இருவருக்கும் நினைவிற்கு வந்தது…
( போன யுடி தியா ஹரிணி ஹாஸ்பிடல் சீன் நியாபகம் இருக்குல்லப்பா தியாகம் இல்லாதவங்க ஒரு எட்டு அங்கன போய் படிச்சிட்டு வந்துருங்க தங்கங்களே)
இங்க யாருங்க ஹரிணி அடுத்து நீங்க தான் உள்ளே போகனும் என்று அந்த ரிஷப்ஸனிஷ்ட் சொல்ல ஹரிணி தியாவை வெளியே இருக்கும் படி கூறி விட்டு சென்றாள்..
டாக்டர்.. பிச்சாண்டி என கதவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒட்டி இருந்ததை வாசித்தபடி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..
அங்கு அமர்ந்து இருந்தது ஹர்ஷா.. அவனை பார்த்த ஹரிணி பார்க்க நல்லா ஹிந்தி பட ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காரு இவருக்கு போய் பிச்சாண்டின்னு போர் வைச்சே இருக்காங்களே அய்யோ பாவம் என மனதில் நினைத்து கொண்டவள்… நன்றாக சைட் அடிக்கவும் ஆரம்பித்தாள்…
ஹரிணி உள்ளே வந்ததும் “என்ன பிரச்சினை” என கேட்டவன் அவளின் கையில் இருந்த காயத்தை ஆராய்ந்து பார்த்தான். காலிலும் கூட சில காயங்கள் இருந்தது அனைத்தையும் பார்த்தவன் ஹரிணியின் காயத்தை நன்கு துடைத்து மருந்திட்டு ஒரு டிடி இன்ஞ்சக்சன் போட்டு விட்டான்..
இறுதியாக மருந்து மாத்திரைகள் எழுதிய டிஸ்கிரிப்ஷனை அவள் கையில் கொடுத்தான். அதுவரை ஹரிணி அவனை ரசித்து கொண்டு தான் இருந்தாள்… அதை வாங்கி கொண்டவள் தாங்க்ஸ் டாக்டர் என்று கூறி விட்டு எழுந்து போக முடியவில்லை. அவளின் அடிபடாத மற்றோரு கையை பிடித்து இருந்தான் ஹர்ஷா…
“என்ன டாக்டர்” என்று சாதரணமாகவே கேட்டாள்.. அவன் கை பிடித்ததை தவறாக நினைக்கவில்லை.. காயத்தை பற்றி தான் ஏதோ சொல்வதற்காக தடுக்கின்றான் என்று நினைத்தாள்.
“சாரி சொல்லிட்டு போ” என்று மெதுவாக கூறினாலும் குரலில் கோவம் இருக்கத்தான் செய்தது..
“ஹர்ஷா கூறியதில் முதலில் ஙே என்று முழித்தவள், எதுக்கு சாரி கேட்கனும்? ஏன் கேட்கனும்? பொதுவாக ஹாஸ்பிடல் டீரிட்மெண்ட் பார்த்தா பணம் தான் கட்ட சொல்வாங்க. இது என்ன உங்க ஹாஸ்பிட்டல்ல பணம் கூட சேர்த்து சாரியும் சொல்லனுமா”, என்று ஹரிணியும் சற்று கடுப்புடன் கேட்டாள்…
“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா வெளியில்ல உன் ப்ரெண்ட் கிட்ட எங்க ஹாஸ்பிட்டல பத்தி தப்பு தப்பா பேசுவ, உனக்கு என்ன தெரியும் எங்க ஹாஸ்ப்பிடல் பத்தி எத்தனை பேரோட உழைப்பு தெரியாமா இது, எத்தனை பேருக்கு எங்க ஹாஸ்பிடல் உதவி பண்ணுதுனு தெரியுமா? ஒரு மண்ணும் தெரியாமலா உன் இஷ்டத்திற்கு வாய்க்கு வந்த மாதிரி பேசுவியா நீ, ஒழுங்கா தெரியாம பேசிட்டேன் சாரின்னு சொல்லிட்டு போ என்றான் கோவமாக,
கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஹரிணி தியாவிடம் ஹாஸ்பிடல் பற்றி கிண்டல் செய்து பேசியது அப்போது உள்ளே வந்த ஹர்ஷா காதில் விழுந்தது.. கேட்டவன் கொதி நிலைக்கே சென்று விட்டான்.. மருத்துவமனையின் வெளியே வைத்து கூறி இருந்தால் அவளின் கன்னம் பழுத்து இருக்கும்.. இங்கு வைத்து அவளை எதுவும் சொல்ல முடியாதல்லவா.. ஆனால் பேசியதற்கு அவளை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பதற்காக, இன்று ஓ.பி பேஷன்ட்டை பார்க்க இருந்த டாக்டர் பிச்சாண்டியை வார்டுக்கு ரவுண்ட்ஸ் போங்க டாக்டர் நான் பார்த்துக்கிறேன் என அனுப்பி விட்டு அவன் இருந்தான்...
ஹர்ஷா கூறியதை கேட்டு கோவமான “சாரியா?? நான் உங்களை பத்தி ஏதாவது பேசினான இல்லைல அப்புறம் எதுக்கு உங்களை பத்தி பேசுன மாதிரி இவ்வளோ சீன் போடுறீங்க… சாரியாவது பூரியாவது அது எல்லாம் சொல்ல முடியாது.. ஒழுங்கு மரியாதையா என் கையை விடுங்க… இல்லனா அவ்ளோ தான்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்…
“ஏய் இங்க பாரு உன் கையை பிடிக்கும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. அதே போல் என்னை பத்தி நீ ஏதாவது கமெண்ட் பண்ணி இருந்திருந்தா கூட ஒன்னும் சொல்லி இருக்க மாட்டேன்… ஆனா இந்த ஹாஸ்பிடல் எனக்கு உயிர் மாதிரி அதை பத்தி பேசி இருக்க, சாரி சொல்லி தான் ஆகனும். இல்லைனா கையையும் விட முடியாது. இந்த இடத்தில் இருந்து போகவும் முடியாது”..
“யோவ் டாக்டர் நீ என்ன லூசா? சாரி சொல்ல முடியாதுன்னு தான் ஏற்கேனவே சொல்லிட்டனே, நான் எல்லாம் தப்பு பண்ணுனாலே சாரி கேட்க மாட்டேன்.. இதுல இந்த பிஸ்கோத் ஹாஸ்பிடல் பத்தி பேசுனதுக்கு சாரி கேட்கனுமா? ஆசை தான் போய்யா” என்றவளுக்கு அன்று நேரம் சரியில்லை தான் போல்,
“ஏய் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ற, இன்னோரு தடவை ஹாஸ்பிடல் பத்தி பேசுனா நடக்குறத வேற” என்று எச்சரித்தவன். கையை இன்னும் இறுக பற்றினான்…
“ஓ….. நடக்கறதே வேறயா இருக்குமா? அப்புடி என்ன நடக்கும் நானும் தெரிஞ்சிக்குறேன்.. ஒரு தடவை என்ன, ஓராயிரம் தடவை சொல்லுவேன், ஏன் ஒரு லட்சம் கோடி தடவை கூட சொல்லுவேன்.. இந்த ரூம்ல மட்டுமில்ல, வெளிய போய் சொல்லுவேன்.. ஹாஸ்பிடல் முன்னாடி நடுரோட்டில் போய் நின்று கத்தி சொல்லுவேன்… பிஸ்கோத் ஹாஸ்பிடல்,பிஸ்கோத் ஹாஸ்பிடல், பிஸ்கோத் ஹாஸ்பிடல், அப்புடின்னு கத்துவேன். என் வாய் என் இஷ்டம் என்ன வேணா பேசுவேன் என்று அவனின் கோவத்தை தூண்டி விட்டு அவளும் எகிறினாள்…
கையை விட்டான். ஹரிணி ஒரு வெற்றி சிரிப்பு லேசாக சிரிக்க அடுத்த நொடி அவளின் பின்மண்டையை அழுந்த பற்றி தன்னருகே இழுத்து அவளின் இதழை சிறைப்பிடித்தான் வன்மையாக, அவளின் இதழ் இவ்வளவு நேரம் அவனிடம் வாயாடி எழுந்த கோவத்தை எல்லாம் அந்த இதழ் மீதே காட்டி கொண்டு இருந்தான்…
ஹர்ஷா வின் செயலில் ஹரிணிக்கு பயங்கர அதிர்ச்சி.. நடப்பது எதுவும் அவளுக்கு புரியவில்லை… சில நொடி தான் பின்பு அவனின் பிடியிலிருந்து விடுபட திமிறினாள், இரு கை கொண்டு முடிந்த மட்டும் அவனை அடித்தாள்… ஆனால் உடும்பு போல் இருந்த அவனின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.. அவனை நகர்த்தவும் முடியவில்லை..
ஹர்ஷாவின் நிலையோ வன்மையாக ஆரம்பித்தான் தான் ஆனால் ஹரிணியின் நெருக்கம், அவளின் வாசனை இதழ் தந்த சுவை அனைத்தும் வன்மையான முத்தத்தை மென்மையாக்கியது.. அவனை அறியாமலே தன் சுயத்தை ஹரிணியிடம் அவளின் இதழில் இழந்து கொண்டு இருந்தான்…
அவன் மூளையே அவன் செய்யும் தவறை எடுத்துரைக்க அவளின் இதழ் தந்த போதையிலிருந்து வெளியேறி சட்டென்று அவளை விடுவித்தான்… ஹரிணியின் கண்கள் கலங்கியது… பார்த்தவனுக்கு செய்தது தவறு முட்டாள் தனம் என புரிந்தாலும் அவ பேசினா அதனால் அப்புடி நடந்துக்கிட்டேன் என அலட்சியமாக எண்ணியவன்,
“உன் வாய் உன் இஷ்டத்திற்கு பேசுனா, இப்புடி தான் என் வாயும் என் இஷ்டத்திற்கு நடந்துக்கும்” என்றான்..,
“யூ பொறுக்கி ராஸ்கல் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட இப்புடி நடந்திருப்ப உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்றபடி ஆத்திரத்தில் அவன் டேபிள் மீதிருந்த பொருட்களை ஒன்று ஒன்றாக எடுத்து அவன் மீது வீசினாள்… ஒன்று கூட அவன் மேல் படவில்லை அதில் இன்னும் ஆத்திரம் எழ, அவனை அடிக்க அருகே சென்றவள்,
ஹர்ஷா அசையாது அப்புடியே நிற்க, சற்று நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் நினைவு வர அவன் அருகே செல்லாது பின்னாடி இரண்டு அடி எடுத்து வைத்தவள்,”டேய் பிச்சை என் மாமா போலீஸ் அவர்கிட்ட சொல்லி உன்னை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன் பாருடா” என்று ஆவேசமாக கத்தி விட்டு வெளியேற கதவு வரை வந்தாள்..
“போ போ போய் எவனை வேணா கூட்டிட்டு வாடி நான் இங்கே தான் இருப்பேன்” என்று ஹர்ஷாவின் திமிரான பதிலில் மேலும் கடுப்பானவள் “போடா செக்ஸ் டாக்டர் பிச்சை” என்றதும்,
“என்னடி சொன்ன உன்னை” என அவன் அருகே வர பார்க்க வேகமாக வெளியே ஓடி வந்து இருந்தாள்..
நேற்று நடந்தை எல்லாம் நினைத்து பார்த்தவள் ஹர்ஷாவை முறைத்தாள்..
ஹர்ஷா ஹரிணியை முதலில் இங்கு பார்த்ததும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி தான் அருகில் வந்தான்.. நேற்று அவள் சென்ற பிறகு கொஞ்ச நேரம் கழித்து தான் அவன் செய்தத தவறு அவன் புத்திக்கு ஏறியது..
ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தவறு என்று புரிந்தது.. அந்த பெண் இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் இப்படி தான் முத்தம் இட்டுருப்பாயா என்று அவன் மனசாட்சியே அவனை காரி துப்பியது.. அடுத்து அவளை எங்கு பார்த்தாலும் மன்னிப்பு கட்டாயம் கேட்க வேண்டும் என்று எண்ணி கொண்டான்…
இங்கு அவளை கண்டதும் மன்னிப்பு கேட்கவே அருகில் வந்தான்.. ஹரிணி தான் இவனை கண்டதும் பொறுக்கி என்று திட்டியதும் மறுபடியும் கோவம் வந்து விட்டது.. ஹர்ஷா நீ அன்னைக்கு பண்ண வேலைக்கு இந்த பொண்ணு இந்த அளவு கூட கோவம் படலைனா எப்புடி? நீ வந்த வேலையை பார்த்ததுட்டு கிளம்பு என்றது மனசாட்சி.
ஆனால் அவன் விழி தான் வந்த வேலையை விட்டுவிட்டு அவன் பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் அவளை உச்சி முதல் பாதம் வரை கட்டுப்பாடு ஏதுமின்றி ரசித்தது.. அதிலும் அவள் உதட்டின் மீது படரும் அவன் பார்வையை அவனாலே தடுக்க முடியவில்லை..
அவனின் இந்த பார்வையில் ஹரிணிக்கு எரிச்சல் தான் வந்தது.. ஆனால் அவனிடம் அன்று போல் சண்டையிட வேண்டாம் என்று நினைத்தவள் அங்கிருந்து நகர போனாள்..
அதில் தன்னை மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தவன் தலையை உலுக்கி சுய நினைவுக்கு வந்தான்… “ஹலோ ஒரு நிமிஷம் நில்லு உன்கிட்ட” என்று ஹர்ஷா ஆரம்பிக்கும்போதே ஹரிணி அதை கவனிக்க விருப்பம் இல்லாமல் நகர்ந்தாள்…
தான் பேசி கொண்டு இருக்கும் போது அதை கேட்கமால் தன்னை உதாசீன படுத்தி ஒருவள் செல்வதா எவ்வளவு திமிர் என்று மறுபடியும் கோவம் வர ஹரிணி கைப்பிடித்து தடுத்தான்…
“நான் பேசிட்டு இருக்கும் போது அதை கேட்காம போன என்ன அர்த்தம்”…
“உன்னை மாதிரி பொறுக்கி பேசுறதை எல்லாம் கேட்க விருப்பம் இல்லைன்னு அர்த்தம் கை விட்டுறா பொறுக்கி” என்றாள் ஹரிணி கோவமாக, ஆனால் சத்தமின்றி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கையை உறுவ முயன்று கொண்டே,
“இந்த வாயால தானடி நேத்து அப்புடி எல்லாம் நடந்தது.. இன்னும் நீ அடங்கமா அதே திமிரோட வாய் பேசுற, இது உனக்கு நல்லதுக்கு இல்ல, மறுபடியும் ஏதாவது சேதாரம் ஆனா நான் பொறுப்பு கிடையாது” ..
ஹரிணி மேலே பேச வாயெடுக்கும் முன்பு அங்கு வந்து சேர்ந்தாள் தியா… ஹனிமா என்றபடி அருகில் வந்த தியா அப்போது தான் கவனித்தாள் ஹர்ஷா ஹரிணியின் கை பிடித்து இருப்பதையும் அவள் அவனிடம் இருந்து கையை உருவ முயற்சித்து கொண்டு இருப்பதையும்,
தன் தோழியை முன்பின் தெரியாத ஒருத்தன் பொது இடத்தில் கையை பிடித்து இழுப்பதா கோவம் எழுந்தது தியாவிற்கு, அதே கோவத்துடன் “ஏய் யாருடா நீ? அவ மேல் இருந்து கையை எடுடா?” என்றாள் கோவமாக,
ஹரிணிக்கும் அவனுக்கும் இடையில் இவள் யார்? அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஒரு சின்ன பெண் தன்னை டா என்று அழைப்பதா, ஏற்கெனவே ஹரிணியின் செயலில் கோவத்தின் உச்சியில் இருந்தவன் தியாவின் பேச்சிலும் மேலும் கோவம் வர,
“முதல்ல நீ யாரு? அவ கையை தான பிடிச்சு இருக்கேன், ஏதோ உன் கையை பிடிச்சு இழுத்த மாதிரி இந்த குதி குதிக்கிற” என்று வார்த்தையை விட்ட அடுத்த நொடி ஹரிணியை விட்டவன் அவன் கன்னத்தில் கை வைத்து கொண்டான்..
சப்….. என்று அவனை அறைந்து இருந்தாள் தியா.. அவனுக்கு வலித்தாத என்று தெரியாது ஆனால் தியா தன் மொத்த பலத்தையும் கோபத்தையும் அந்த அடியில் காட்டி இருந்தாள்.. ஹர்ஷாவின் கன்னத்தில் மூன்று விரல் பதியும் வரை, “என் கையை பிடிச்சு இழுப்பானா சொல்ற, தைரியம் இருந்தா செஞ்சு பாருடா அதற்கு அப்புறம் நீ உயிரோடையே இருக்க மாட்ட” என்று மற்றோரு கன்னத்திலும் அறைந்து இருந்தாள், என் ஹனிமா கையை பிடிச்சு இழுத்தற்கு என்றபடி,
அதே நேரம் ஹர்ஷா வை தேடி வந்த அவனின் நண்பர்களும், திவேஷும் கூட தியா அறைந்தை பார்த்தனர்…
“ஏய் உன்னை” என்று தியாவை அடிக்க வந்த ஹர்ஷாவை இடையில் புகுந்து தடுத்தான் திவேஷ்..
“அடிடா பார்க்கலாம் உனக்கு தைரியம் இருந்தா பார்க்கலாம்” தியாவும் மறுபுறம் எகிற ஹரிணி அவளை தடுத்தாள்..
“தியாமா வா போலாம் எந்த பிரச்சினையும் வேணாம். ப்ளீஸ் வாடா” என்று ஹரிணி அவளை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.. போகும் போது ஹர்ஷவை அருவருப்பாக பார்த்து விட்டு தான் சென்றாள்… அவன் நேற்றிலிருந்து தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை விட இப்போது தியாவிடம் பேசிய வார்த்தை தான் அவளுக்கு வெறுப்பாக இருந்தது…
“ஹர்ஷா பப்ளிக்ல ஒரு பொண்ணு மேல்ல கையை வச்சா பெரிய இஷ்யூ ஆகிரும்டா, வாடா வா” என்று அவனை இழுத்து கொண்டு சென்றான் திவேஷ்..
போகும் வழியிலேயே தியா ஹரிணியிடம் ஹர்ஷா யார் என்ன பிரச்சினை என்று கேட்டாள்… நேற்று தியா ஹர்ஷாவை பார்க்கவில்லை… ஹர்ஷாவும் தியாவை பார்க்கவில்லை.. ஹரிணி அவன் முத்தமிட்டதை மட்டும் மறைத்து விட்டு அனைத்தையும் கூறினாள்… அதை கேட்ட தியா “உன்கிட்ட அவன் சண்டை போட்டானா, இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல, அவனை நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்” என்றாள் தியா ஹர்ஷா மீது ஆத்திரம் அடங்காமல்,
“அய்யோ தியாமா ப்ளீஸ் இந்த பிரச்சினையை இதோட விட்டுரேன் ப்ளீஸ் என்று ஹரிணி கேட்டாலும், தியா விடுவதாய் இல்லை” ஹர்ஷாவை திட்டி தீர்த்து கொண்டே சென்றாள்…
ஹர்ஷா பயங்கர கோவமாக இல்லை இல்லை தியா மீது கொலை வெறியில் இருந்தான்… அதை ஏற்றி விட்டது ஒரு சின்ன பொண்ணுக்கிட்ட அடி வாங்கிட்டு வந்து நிற்கிறியே என்ற நண்பர்களின் கேலி…
ஆ……. என்று கோவத்தில் கத்தியவன் “என்னை ஏன் தடுத்த திவா அவளை சும்மா விட்டு இருக்க கூடாது அவளை” என்று கிளம்பிய ஹர்ஷாவை “பிரச்சினை வேணாம் சொன்னா கேளுடா” என தடுத்தான் திவேஷ்..
ராகவ் மச்சினிச்சுன்னா பெரிய இவளா அவ, ராகவ், வேதாசலம் அவளுக்கு யாரு வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்னை விடுடா என திமிறினான் ஹர்ஷா..
ஹர்ஷா வேணாம் தியாக்கு ஒன்னுனா ராகவ் வேதசாலத்திற்கு முன்ன தேவா வருவான் அவன் உன்னை சும்மா விட மாட்டான் சொன்னா கேளுடா
தேவா வா என ஹர்ஷா புருவம் சுருக்கி யோசனையாக திவேஷை பார்க்க,
ம்.. என்ற திவேஷ் தியா தேவாவை காதலிப்பதை பற்றி சொல்ல,
ச்சீ அவனையா என முகம் சுளித்தான் ஹர்ஷாவிற்கு தியா மீது நல்ல அபிப்ராயம் இல்லை.. இந்த மாதிரி பொண்ணு கூட ஏன் இவ பழகுறா ஹரிணியையும் மனதிற்குள் திட்டி கொண்டான் அந்த உத்தமன்…
“அதான் ஹர்ஷா உன்னை அமைதியா இருக்க சொல்றேன்” திவேஷ் சொல்ல,
“என்ன அவன் வருவான் இவன் வருவான்னு பூச்சாண்டி காட்றியா, அதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. என்னை அடிச்சு அவமானப்படுத்தன அவளை சும்மா விடுறதா?” ஹர்ஷா கோவம் கொள்ள,
வாடா வாடா இதுக்கு தான்டா நான் காத்துட்டு இருந்தேன் மனதிற்குள் நினைத்த திவேஷ் தேவா ஹர்ஷா இருவரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்க போகும் குஷியில் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டு கொண்டான்..
“நான் அவளை சும்மா விட சொல்லைல ஹர்ஷா.. உன்னை அவமானப்படுத்தன அவளை நீ திருப்பி அடிச்சு தான் அவமானப்படுத்தனும் இல்லை.. அவளை அவமானப்படுத்தறதிற்கு நிறைய வழி இருக்கு. பொறுமையா இரு ஹர்ஷா நேரம் வரும் போது நான் சொல்றேன்.. 4 பேர் முன்னாடி தானே நீ அசிங்கப்பட்ட, இந்த ஊர் முன்னாடி அவ அசிங்கப்பட்டு நிற்பா என்று ஹர்ஷாக்குள்ளும் தன் விஷ எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தினான் திவேஷ்..
திவேஷிம் ஹர்ஷாவும் தியாவை பழி வாங்க சந்தர்ப்மம் எதிர் பார்த்து காத்து இருந்தனர்.. தியாவே அந்த சந்தர்ப்பத்தை அவர்களுக்கு உருவாக்கி தந்தால்.
பாகம் 24
‘அச்சோ டைமாச்சு’ என்றபடி தனது பையை தோளில் மாட்டி கொண்டு அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சௌதாமினி…
“அம்மா அப்பா நான் காலேஜ் கிளம்புறேன் பாய்” என்று கூறவும்.
“ஏய் என்னடி இவ்வளோ அவசரம் சாப்பிடமா? ஒழுங்கா இரண்டு இட்லியாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பு”என்று தாய் கௌரியும்,
“நீ சாப்பிட்டு வாம்மா நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்று தந்தை செந்திலும் சொல்வார்கள் என்ற சௌதாமினியின் ஆசையும் எதிர்பார்ப்பும் எப்போதும் போல் இன்றும் நடக்கவில்லை…
அவள் கிளம்புகிறேன் என்று சொன்னதும் சரி என தலை அசைக்க கூட இல்லை… தந்தை செந்திலோ எப்போதும் போல ஏதோ யோசனையில் இருக்க, தாயோ அண்ணண் ஜீவாவின் படத்திற்கு முன்பு அமர்ந்து இருந்தவர் அவள் கூறியதை கூட சரியாக கவனிக்க வில்லை…
இல்லாத ஜீவா மேல் வைத்திருக்கும் அன்பில் கால்வாசி கூட அவர்கள் முன்னே இருக்கும் மகள் மேல் இல்லையே என்று நினைக்கும் போதே சௌதாமினியின் மனம் கலங்கி கண்ணில் நீர் தேங்கியது..
தன்னுடைய அம்மா அப்பாவுக்கு எப்போதும் ஜீவா தான் செல்லப்பிள்ளை. நான் என்றுமே வேண்டாத பிள்ளை என்ற எண்ணம் விவரம் தெரிந்த நாளிலிருந்தே சௌமிக்கு உண்டு… ஜீவாவோ படிப்பில் கெட்டிக்காரன் புத்தி கூர்மை அமைதியான குணம் அவனின் பெற்றோரை பொறுத்தவரை ஜீவா அச்சு வெல்லம் கட்டி தங்கம் தான்..
சௌமி படிப்பில் கொஞ்சம் மந்தம் பத்தாக்குறைக்கு சிறு வயதில் சேட்டையும் அதிகம். அதனாலேயே சௌமி பள்ளி படிக்கும் காலத்தில் நிறைய முறை செந்திலும் கௌரியும் ஆசிரியர் முன்பு போய் நிற்கும் நிலை வரும்… அப்பொழுது வீடு வந்தும் அவர்கள் சௌமியிடம் கூறுவது உன் அண்ணா ஜீவாவால் எங்களுக்கு எப்பவும் பெருமை கௌரவம் தான். அதே உன்னால் எல்லா இடத்திலையும் அசிங்கம் அவமானம் தான்.. ஜீவாவை பார்த்து எப்புடி நல்லா பிள்ளையா இருக்கறதுன்னு கத்துக்க. ஜீவா போல் படி, ஜீவா போல் நட, ஜீவா போல் அதை செய் இதை செய் என்று சௌமியை அவளாக இருக்க விடாமல் அனைத்திலும் ஜீவாவை முன்னிறுத்தி
அவளின் மனதில் இருந்த தன் மேல் பெற்றோர்களுக்கு அன்பு இல்லையோ என்ற எண்ணத்தை வளர்த்தனர்…
அதுவும் ஜீவாவின் இறப்புக்கு பின் துக்கத்தில் அவர்கள் மொத்தமாக முடங்கி, அவளை சரியாக கவனிக்காமல் விட அந்த எண்ணமே அவள் மனதில் வேரூன்றி போனது…
சௌதாமினியின் மனதை பெற்றோரும் அவர்களின் இன்றைய மனநிலையை சௌமியும் புரிந்து கொள்ளமாலே இருக்கின்றனர்..
சில விநாடிகள் அவர்களையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள்.. அப்பொழுது அவளின் செல்போனில் மெசேஜ் டோன் அடித்தது.. அதை எடுத்து பார்த்ததும் இவ்வளவு நேரம் வாடி இருத்தவளின் முகம் பிரகாசமானது.. தனக்காக யாரும் இல்லை தன் மீது யாருக்குமே பாசம் அக்கறை இல்லை என்னடா வாழ்க்கை இது என்று போய் கொண்டு இருந்தவளின் வாழ்வில், உனக்காக நான் இருக்கிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு வந்தவன் தான் வினோத்…
வினோத் சௌமிக்கு முகநூல் மூலம் அறிமுகமானவன். முதலில் நட்பாக பழகினார்கள். சௌமியும் அவனிடம் அவள் கஷ்டத்தை அனைத்தும் கூறினாள்.. இதற்காகவே காத்து இருந்தவன் அவளுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்னும் பெயரில். நான் உனக்காக இருக்கேன் உன்னை நல்லா பார்த்துப்பேன் என்று எல்லாம் அவனின் தேன் தடவை வார்த்தைகளில் கூற… ஏற்கெனவே பாசத்திற்காக ஏங்கி இருந்தவள் அவனின் போலி அன்பில் விழுந்து விட்டாள்… அதுவே நாளடைவில் காதலாகி வந்து நிற்கின்றது…
‘சௌமி சாப்டியாடா’ என்ற அந்த ஒற்றை வரி மெசேஜ் இருந்தது… அதை பார்த்ததும் அவன் தன் மீது வைத்து இருக்கும் அந்த அன்பை நினைத்து பூரித்து போனாள்.. தன் மீது வினோத்திற்கு எவ்ளோ அன்பு, அக்கறை, பாசம் என்று எல்லாம் எண்ணி எண்ணி மனமகிழ்ந்து போனாள்… அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு அவன் மீது காதல் வைத்து உள்ளாள்… கடவுள் தனக்காக படைத்தவன் தனக்கானவன் அவன் என்று ஆணித்தரமாக நம்புகிறாள்..
சாப்பிட போறேன் என்று இவள் புன்னகை முகமாகவே பதில் அளிக்க அடுத்து அவன்..
இவ்வளோ நேரம் சாப்பிடமா என்ன பண்ற ஹான் என்று கோவமான இமோஜி போட்டு அவன் லேசாக கடிந்து கொள்ள.
மறுபடியும் சௌமி வானில் பறக்க ஆரம்பித்தாள்.. இந்த சாதாரணமான பேச்சில் கூட அவன் தன்மீது நிறைய அக்கறை வைத்து உள்ளான் என்று, செந்திலும் கௌரியின் அலட்சியப்போக்கே இப்புடி பசை தடவிய வார்த்தைகளுக்கு சௌமி மயங்கி கிடக்கிறாள்.. இந்த மாதிரி முகநூல் காதலினால் எத்தனை பேர் நிம்மதி சந்தோஷம் மானம் இழந்து தவிக்கின்றார்கள்.. இது அனைத்துமே போலி என்பதை அவள் எப்போது உணர்வாளா?
எருமை, குரங்கு, பேயே, பிசாசே ஊர் உலகத்தில்ல பத்து பதினைஞ்சு ப்ரெண்ட் வச்சு இருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.. ஒரே ஒரு ஃப்ரெண்டை வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே இந்த டயலாக் உலகத்திலே எனக்கு தான்டி ரொம்ப பொருத்தமா இருக்கும்… உன்கூட சேர்ந்ததற்கு பதில் நாலு நாய் குட்டி வாங்கி மேய்ச்சு இருந்தாலும் நான் உருப்பட்டு இருப்பேன் என்று ஹரிணி தியா வை பார்த்து கூற
அது நாய்க்குட்டி இல்ல பேயே பன்னிக்குட்டி ஒரு பழமொழி கூட ஒழுங்கா சொல்ல தெரியலை இந்த லட்சணத்துல உருப்பட்டு ஊட்டி கலெக்டரா ஆக போறது மாதிரி டயலாக் வேற,
கையில்ல அடிபட்டு காயமா இருக்காளே நம்ப ப்ரெண்ட்ன்னு உன் மேல்ல இருக்கற அக்கறையில்லை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன் இது ஒரு தப்பா, அதுக்கு போய் எண்ணெயில் போட்டு கடுக்காட்டா இப்புடி பொறியறயே லூசு..
என் கையில் எப்புடி அடிபட்டுச்சே பேயே, உன் பாவா பத்தி பகல் கனவு கண்டுட்டே வண்டிய ஓட்டி போஸ்ட் கம்பத்துல்ல இடிச்சு கீழ விழ வச்சதே நீ தான் என்று ஹரிணி தியா வை குற்றம் சாட்ட,
ஈஈஈஈஈ வாழ்க்கையில் விபத்துங்கிறது ரொம்ப சாதரணமான விஷயம் ஹனிமா, அப்படி ஒன்னும் பெரிசா உனக்கு அடிப்படலையே, கையில் சின்னதா சிராய்ப்பு காயம் அவ்ளோ தானே,
அதே தான்டி நானும் சொல்றேன் சின்னதா கையில்ல ஒரு சீராய்ப்பு.ஒரு பத்து ரூபாய்க்கு தேங்காய் எண்ணெய் வாங்கி போட்டா சரியா போயிடும். இதுக்கு என்னவோ என் கையே இரண்டு துண்டா போன மாதிரி வம்பு பண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து இருக்கியே, இப்ப பாரு இந்த சின்ன காயத்துக்கு எக்ஸ்ரே எடுங்க, ஸ்கேன் எடுங்க, இசிஜி எடுங்கன்னு சொல்லி ஒரு பத்து பதினைஞ்சு ஆயிரத்துக்கு பில்ல தீட்ட போறானுங்க…
சரி கூட்டிட்டு வந்தது தான் வந்த ஒரு நல்ல ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு வந்து இருக்க கூடாது. போயும் போயும் இந்த ஹாஸ்பிடலுக்கு போய் கூட்டிட்டு வந்து இருக்கியே,
ஹனிமா என்ன இப்புடி சொல்லிட்ட ஆரோக்கியம் ஹாஸ்பிடல் கோவையிலேயே பெஸ்ட் ஹாஸ்பிடல் இதை போய் இப்புடி சொல்லலாமா!
சொல்லலாம் சொல்லாம் இது ஒரு மொக்கை ஹாஸ்பிடல்டி.. இதை பார்த்தாலே சந்திரமுகி படத்துல பேய் பங்களா நியாயபகம் தா வருது… பாரு நம்ம வந்து அரை மணி நேரத்திற்கு மேலாச்சு இன்னும் டாக்டரை காணோம் என்று ஹாஸ்பிட்டலை ஹரிணி வறுத்தெடுக்க, தியா சிரித்து கொண்டு இருந்தாள்… இதை எல்லாம் இவர்கள் அருகே ஒருவன் கேட்டு கொண்டு இருந்ததை இவர்கள் இருவருமே கவனிக்கவில்லை…
ஹனிமா டூடே உனக்கு என்னாச்சு ஏன் இப்புடி எல்லாம் பேசுற.. பொதுவா நான் தானே எப்பவும் இந்த மாதிரி எல்லாம் பேசுவேன்…
அதானே எனக்கு என்னாச்சு ஏன் இப்புடி பேசுறேன்?
உன் ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் ஹனிமா வாயை வச்சுக்கிட்டு அமைதியா இரு இல்லைன்னா ஏதாவது வம்பு வந்து சேர்ந்திர போகுது…
வம்பு புதுசா வேற வரனுமா, அதான் என் கூடவே சுத்திட்டு இருக்கே என்று ஹரிணி பேசி கொண்டு இருக்கும் போதே,
ஹரிணி யாருங்க நீங்க தான் நெக்ஸ்ட் உள்ள போகனும் என்ற ரிஷப்னிஸ்ட் கூறியதும் ஹரிணி எழுந்து டாக்டர் இருந்த அறைக்குள் சென்றாள்…
ஹரிணி சென்றதும் தியா எழுந்து அந்த வராண்டாவில் நடக்க ஆரம்பித்தாள்.. ஆரோக்கியம் மருத்துவமனைக்குள் வந்ததும் அவளின் நினைவு முழுவதும் ஜீவா தான் வந்தான்.. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக இங்கு வந்த போது ஜீவா எவ்வளவு நல்லவன் போல் பேசினான். அவனா இப்புடி ஒரு அநியாயத்தை செய்தது. இப்போது கூட தியா வால் நம்ப முடியவில்லை.. ஆனால் அது தானே நிஜம்.. அவனால் நான்கைந்து உயிர் போயிருக்கிறது. அவன் செய்த தவறுகளை மறைப்பதற்கும் இந்த உயிரில்லாத கட்டிடத்தை காப்பதற்கும் தன்னுடைய பாவா வாழ்க்கையை அல்லவா இந்த மகேஸ்வரன் நரகமாக்கி இருக்கிறார்கள்.. அவர்கள் தவறுகள் அனைத்தையும் வெளி கொண்டு வந்து தண்டனை வாங்கி தர வேண்டும். இந்த மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும். தன் பாவாவிற்கு நியாயம் வாங்கி தர வேண்டும் என்று எல்லாம் தோன்றுகிறது. ஆனால் இது அனைத்தையும் எப்புடி செய்து முடிப்பது அதற்கான வழி தான் அவளுக்கு தெரியவில்லை..
ஹரிணி மருத்துவர் அறையில் இருந்து வெளி வந்தாள்.. அவளை பார்த்த தியா ஹனிமா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்க.. ஹான் உன் ப்ரெண்ட்ஷிப்ப பர்ஸ்ட் கட் பண்ண சொன்னான் என்று கோவமாக கூறி விட்டு ஹரிணி விறுவிறு வென நடந்தாள்..
இவளுக்கு இப்ப என்னாச்சு ஏன் முகம் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு என்று தனக்குள் பேசி கொண்டே ஹனிமா ஹனி செல்லம் என்னாச்சுடா என்றபடி ஹரிணி பின்னால் சென்றாள் தியா…
மூன்று மாதங்களுக்கு தேவா கண்ணில் பட கூடாது என்று நினைத்த சூர்யா மூன்றே நாளுக்குள் தேவா கையில் சிக்கினான்.. அவன் செய்த செயலுக்குரிய வெகுமதியை தேவா சூர்யாவின் உடம்பு எங்கும் பாரபட்சம் பார்க்காமல் அளித்து விட்டு அதற்குரிய வைத்தியத்தையும் அவனே அளித்தான்..
தேவா காரை ஓட்டி கொண்டு வர, சூர்யா அவன் அருகே அமர்ந்து இருந்தான். இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. அந்த கார் அமைதியை தத்தெடுத்து இருந்தது..
அந்த அமைதி சூர்யாவுக்கு பிடிக்கவில்லை போல், தன் மொபைலை எடுத்து பாட்டு ஒன்றை ஓட விட்டான்..
யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் எனது என்ற பாடல் ஓட,
கோவமாக திரும்பி சூர்யாவை பார்த்த தேவா வாங்கனது பத்தலையா பரதேசி இன்னும் வேணுமா? பாட்டை இப்ப நீ ஆஃப் பண்ணுல உன்னோட செல்போனும் நீயும் என்ன ஆகுவீங்கன்னு எனக்கே தெரியாது என்று மிரட்ட,
மொபைலை அணைத்த சூர்யா.. இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு சொல்லி நீ இந்த குதி குதிக்கிற என்று கேட்டான்..
அவ தான் சின்ன பொண்ணு விளையாட்டு தனமா ஏதோதோ செய்றானா, அவளுக்கு புத்தி சொல்றதை விட்டுட்டு, நீயும் அவ கூட சேர்ந்து கூத்தடிச்சு, அவள் மனசுல இருக்க ஆசையை வளர்த்து விடுறியா என்று கோவமாக கேட்க.
என் தங்கச்சி சின்ன பொண்ணா வேணா இருக்கலாம். ஆனா அவ விளையாட்டு தனமாக எதுவும் பண்ணல. ரொம்ப சின்சியரா உண்மையான தான் உன்னை லவ் பண்றா.
ஏய் என்று தேவா பல்லை கடிக்க..
மச்சி புரிஞ்சுக்கோடா தியா ரொம்ப நல்ல பொண்ணுடா. உன்னை ரொம்ப லவ் பண்றாடா..
இதை கேட்டு லேசாக சிரித்த தேவா, அதனால் தான் வேண்டாம் சொல்றேன்.. ஆனாலும் உனக்கு இவ்வளோ சுயநலம் இருக்க கூடாதுடா. உன் ப்ரெண்ட் வாழ்க்கை நல்லா இருக்கனும் அப்புடிங்கிறதுக்கா ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்க நினைக்கிறியே,
ஏன் உனக்கு என்னடா குறைச்சல்,
ஏகபட்ட் குறைச்சல் இருக்கு, டமுன்னாடி வேணா நான் எந்த தப்பும் செய்யாமா இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் வாழ்ற வாழ்க்கையே தப்பானது தான்…
தப்புன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் அதை செய்ற சூர்யா கோவபட,
எனக்கு இப்புடி இருக்க தான் பிடிச்சு இருக்கு.. காதல் கல்யாணம் குடும்பம்ன்னு கமிடிட்மெண்ட்க்குள்ள போக இஷ்டம் இல்லை.. அதை எல்லாம் நினைச்சாலே கடுப்பாக இருக்கு.. இதில் நீ,அந்த பொண்ணு நினைக்கிறது எல்லாம் நடக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை..
தியா பாவம் டா அந்த பொண்ணு என்ற சூர்யாவை முறைத்த தேவா,
இப்ப நீ ஒருத்தன் பாவம்ன்னு சொல்ற, நீயும் அவளும் ஆசை படறது நடந்தா உலகமே அவளை பாவம்ன்னு சொல்லும்,
உனக்கு ஏன் சூர்யா புரிய மாட்டேங்குது.. நான் வாங்கி வைச்சு இருக்க பேர் காலம் பூரா என்னை துரத்தும்.. அந்த பொண்ணை நான் கல்யாணம் பண்ணுனா என்ன நடக்கும் இந்த ஊரும் உலகமும் கொலைக்காரன் பொண்டாட்டி பொம்பளை பொறுக்கி பொண்டாட்டின்னு பேர் வைக்கும்.. அவளை பெத்துவங்களே அவளை வெறுத்துற மாட்டாங்களா,
பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் சொல்ற மாதிரி நான் செஞ்ச தப்புக்கு, எந்த சம்பந்தமும் இல்லாத அவ ஏண்டா தண்டனை அனுபவிக்கனும்…
மச்சி உனக்கு அந்த பாப்பா மேல்ல உண்மையான பாசம் இருந்தா அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும் நினை.. என் கூட கோர்த்து விட முயற்சி பண்ணாத..
நீ சொல்ற மாதிரி ரொம்ப நல்ல பொண்ணு தான், அந்த பாப்பாவோட குழந்தை மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையை அவ வாழனும் என மனதார கூறினான்..
மச்சி அது வந்து தியா என்று மறுபடியும் சூர்யா ஏதோ பேச ஆரம்பிக்க…
சூர்யா என சீறிய தேவா இது தான் என்னோட கடைசி முடிவு. மறுபடியும் மறுபடியும் இந்த விஷயத்தை பத்தி என் கிட்ட பேசதா, அவ கூட சேர்ந்து அன்னைக்கு செஞ்ச மாதிரி இன்னோரு தடவை ஏதாவது கிறுக்கு தனம் பண்ண,
அதற்கு அப்புறம் தேவா வாழ்க்கையில்ல சூர்யா கிடையவே கிடையாது… நான் சாகற வரை உன் முகத்திலே முழிக்க மாட்டேன் என்ற தேவா முகத்திலும் குரலிலும் இருந்த தீவிரமே சூர்யாவை பயமுறுத்தியது…
இரண்டு மாதங்களுக்கு பிறகு…
பளார்……
டேய் துரோகி என்றபடி
அந்த ஹால்லே அதிரும் அளவு ஒரு அடியை சூர்யாவின் கன்னத்தில் வைத்தான் தேவா…
ஆத்தாடி என்னா அடி கன்ஃபார்மா காது ஜவ்வு கிழிச்சுருக்கும்… இதுக்கு நமக்கு விழுந்த அடி எவ்வளவோ பரவாயில்லை என்று தேவா விடம் அடி வாங்கி சிவந்து போயிருந்த தன் இரு கன்னத்தையும் தடவியபடியே மைண்ட் வாய்ஸ் என்று எண்ணி சத்தமாகவே சொல்லி சிரித்தவளின் கன்னத்தில் அடுத்த அடி விழ, சுருண்டு போய் அருகே இருந்த ஷோபாவில் விழுந்தாள் மிசஸ் திரவியா தேவேந்திரன்… அவள் விழும் போது அவள் கழுத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தேவா கட்டிய தாலியும் முகத்தின் மீது விழுந்தது…
பாகம் 23
பரபரப்பான காலை வேளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த கார் பீளமேடு நோக்கி பயணித்தது…
அந்த காரை இயக்கி கொண்டு இருந்தவனோ யார் மேல் இருந்த கோவத்தையோ கார் ஆக்ஸிலேட்டர் மேல் காட்ட அது புழுதி மணல் பறக்கும்படி பயங்கர வேகத்தில் சென்றது…
“ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற, கொஞ்சம் மெதுவா போகலாம்ல” என்று காரை ஓட்டி கொண்டு இருந்த ஹர்ஷவர்தன் பார்த்து சொன்னான் திவேஷ்…
அவன் பதில் கூற வில்லை திரும்பி திவேஷை ஒரு பார்வை பார்த்தான்… அந்த பார்வை “நீ இவ்வளோ பயந்தா கோழியா” என்ற கேலி பார்வை…
திவேஷிற்கு அந்த பார்வையின் அர்த்தம் புரிய “சே சே பயமா எனக்காக, நான் இதை விட பாஸ்ட்டாவே டிரைவ் பண்ணுவேன்… ஆனா இது பீக் ஹவர்ஸ் நிறைய வண்டி வரும்…முன்னாடி பின்னாடி வர ஏதாவது வண்டியில்ல இடிச்சுற போறேன்னு உன் மேல்ல இருக்க ஒரு அக்கறையில்ல சொன்னேன்” என்று தைரியமாக திவேஷ் காட்டி கொள்ள, அருகே இருந்தவனோ இன்னும் கேவலமான பார்வையை பார்த்துவிட்டு முன்பை விட காரின் வேகத்தை கூட்டினான்..
.
திவேஷ் மனதிற்குள்ளே இவனை பத்தி தெரியாமா இந்த கார்ல்ல ஏறிட்டேன் பேய் புடிச்ச மாதிரி கார் ஓட்றானே, இவன் போற வேகத்தை பார்த்தா, ஹாஸ்பிடலுக்கு முழுசா இந்த கார்ல்ல போய் சேர மாட்டோம் போல, ஆம்புலன்ஸ் தான் வந்து அள்ளி போட்டுட்டு போகும் போலேயே, கடவுளே முழுசா என்னை என் பொண்டாட்டி கிட்ட உயிரோட சேர்த்திருப்பா” என்று ஒரு கோரிக்கையை வைத்து கொண்டே வந்தான்…
“ஹர்ஷா காரை ஸ்லோவ் பண்ணு, ஏன் இவ்வளோ பாஸ்ட்டா டிரைவ் பண்ற?உனக்கு என்னாச்சு ஹர்ஷா” என்று மகேஸ்வரன் கேட்க,
“அதே தான் மாமா நானும் கேட்கிறேன். என்னாச்சு ஏன் இப்புடி? இதுவரை கோவையில்ல ஏன் தமிழ்நாட்டுலையே நம்பர் ஒன் இடத்தில் இருந்த நம்ம ஹாஸ்பிடல் ஷேர் ரேட்டிங் இப்ப கொஞ்ச நாள்ல கீழ் இறங்கி இருக்கு… அது மட்டும் இல்ல லாஸ்ட் 25 இயர்ஸா தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் நீங்க தான்… இத்தனை வருஷத்தில்ல சங்க தேர்தல்ன்னு ஒன்னு நடந்ததே இல்லை…. உங்களுக்கு எதிராக நிற்கிறதுக்கு யாருக்குமே தைரியம் இருந்தது இல்லை.. ஆனா லாஸ்ட் வீக் நடந்த தேர்தல்ல அந்த நலம் ஹாஸ்பிடல் டீன் உங்களுக்கு எதிராக நின்னு ஜெய்ச்சு இருக்கான்.. அந்த தேவா சூர்யா சப்போர்ட்டால்.. அவனுங்க வேணும்னே உங்களையும் நம்ம ஹாஸ்பிடல் பேரையும் அசிங்க படுத்துறானுங்க… நீங்க ஏன் மாமா இதை எல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க… எனக்கு அவனுங்க இரண்டு பேர் மேலேயும் கொலை வெறி வருது” என்றான்…
ஹர்ஷவர்தன் மகேஸ்வரனின் தங்கை மாலினியின் ஒரே மகன்… ஹர்ஷாவிற்கு மகேஸ்வரன் தாய்மாமான் மட்டுமல்ல காட்பாதர், ரோல்மாடல்.. ஹர்ஷா தேவா 2.0 என்று தான் சொல்ல வேண்டும்.. அவ்வளவு மகேஸ்வரன் மேல் மதிப்பும் பாசமும் வைத்து இருக்கின்றான்.. எப்படி தேவா மகேஸ்வரனை பார்த்து மருத்துவனாக வர ஆசைப்பட்டானோ, அதே போல தான் ஹர்ஷாவும் மகேஸ்வரனின் சேவைகளை பார்த்து மருத்துவனாக வர ஆசைப்பட்டு லண்டன் சென்று எம்.டி முடித்து விட்டு இப்போது தான் கோவை வருகிறான்…
ஹர்ஷாவிற்கு மகேஸ்வரன் மேல் அதீத பாசம் என்பதை விட பக்தி அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்… மகேஸ்வரன் மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவையை பார்த்து ஹர்ஷா தன் மனதில் கடவுள் ஸ்தானத்தையே மாமனுக்கு அளித்துள்ளான்.. அதனால் தான் மகேஸ்வரனின் சிறு தோல்வியை கூட ஹர்ஷாவால் ஏற்க முடியவில்லை…
சங்க தேர்தலில் தோற்றது மகேஸ்வரனுக்கு வருத்தம் தான்.. இத்தனை வருடம் தன்னிடமிருந்த பதவி பறி போனதில், ஆனால் தேவாவிற்கு தான் செய்த துரோகத்திற்கான சிறு தண்டனையாக அதை ஏற்று கொண்டார்…
“நீங்க எதுக்கும் கவலை படாதீங்க மாமா நான் வந்துட்டேன்ல, அவனுங்களை நான் சும்மா விடவே மாட்டேன்.அந்த தேவாவிற்கும் சூர்யாவிற்கும் இருக்கு என்று அவர்கள் மேல் இருந்த கோவத்தில் தனது காரின் ஸ்டீயரிங்கை குத்தினான்…
ஹர்ஷா எனக்கு என்ன பண்ணணும் ரொம்ப நல்லா தெரியும்… நீ இதுக்கா தான் லண்டன்ல இருந்து இங்க வந்தியா, இது எல்லாம் உனக்கு எப்புடி தெரியும் என கேட்டவருக்கு திருட்டு முழி முழித்து கொண்டு இருந்த திவேஷ் தான் காரணம் என்பது புரிந்தது.. அவனை முறைத்தார்.. அவனை முறைக்க மட்டும் தான் அவரால் முடியும்.. வேறு எதுவும் செய்ய முடியாதே, அவரின் ரகசியம் அறிந்தவனாயிற்றே,
“ஹர்ஷா நீ எதிலும் தலையீடாம நல்ல படியா அமைதியா இருக்க மாதிரி இருந்தா என் கூட இங்க இருக்கலாம். ஆனா நீ இப்ப சொன்ன மாதிரி ஏதாவது வம்பு பண்ற ஐடியா இருந்தா உடனே கிளம்பி லண்டன்ல இருக்க உன் அம்மா கிட்டேயே போயிரு.. உன்னால் சூர்யா, தேவாவுக்கு மட்டுமில்ல யாருக்கும் எந்த தொந்தரவும் வர கூடாது… அப்புடி ஏதாவது நடந்தது அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று ஹர்ஷவர்தனை கடுமையாக எச்சரித்தார் மகேஸ்வரன்…
அவருக்கு தெரியும் திவேஷ் ஹர்ஷாவை வைத்து தேவாவுக்கு தொல்லை கொடுக்க தான் இங்கு அவனை வரவழைத்து இருக்கிறான் என்று, அவன் பேச்சை கேட்டு ஹர்ஷா எதுவும் செய்து விடுவானோ என பயமாக இருந்தது.. தேவாவிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்றல்ல, ஹர்ஷாவிற்கு எதுவும் ஆகி விடுமோ என, அதனாலாயே மீண்டும் மீண்டும் மகேஸ்வரன் எச்சிரிக்க,
ஹர்ஷா காதில் மகேஸ்வரன் கூறிய எதுவுமே விழ வில்லை… நான் வந்துட்டேன் தேவா கோவில் மாதிரி வச்சு இருந்த எங்க ஹாஸ்பிடலை களங்கப்படுத்தும் மட்டுமில்லாம, என் மாமாவையே அசிங்கபடுத்துறியா, இனிமே தான் இருக்கு உனக்கு, உன்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்கிறது தான் என்னோட ஒரே வேலை என்று தன் மனதிற்குள் சூளுரைத்து கொண்டு வந்தான்…
ஆனால் ஹர்ஷா செய்ய போகும் முட்டாள் தனத்தால் போக போவது மகேஸ்வரனின் நிம்மதி தான் என்பது அவன் அறியவில்லை…
“டாக்டர் பேஷண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க, அவங்க ஃபைல்ஸ் டேபிள் மேலே இருக்கு, நீங்க ரெடின்னா உள்ள அனுப்பட்டுமா” என்று நர்ஸ் கேட்க,
ம்… ஓகே ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு அனுப்புங்க என்றான் தேவா… அவன் அமர்ந்திருந்த கேபினில் இருந்த டேபிளின் மீது சூர்யபிரகாஷ் MBBS என்று இருந்தது… இது சூர்யாவின் கேபின் இன்று சூர்யா பார்க்க வேண்டிய op பேஷண்டை சூர்யாவிற்கு பதிலாக தேவா பார்க்க வந்துள்ளான்…
சிறைறிலிருந்து வெளி வந்த பிறகு தேவா எந்த மருத்துவமனைக்கு கீழும் வேலை செய்யவில்லை… எதுவுமே வேண்டாம் என்று இருந்தவனை சூர்யா தான் நீ படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ணாத தேவா என வற்புறுத்த இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சைக்கு மட்டுமே அவனை அழைக்கும் மருத்துவமனைக்கு செல்வான்… அதுவும் நோயாளி அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று அனதீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு சென்று பிறகு தான் செல்வான்… அதனால் இந்த ஐந்து ஆண்டுகளில் அவனுக்கும் நோயாளிக்களுக்குமான நேரடி தொடர்பு கிடையாது…
மாலை சூர்யா கால் செய்து தான் பார்க்க வேண்டிய பேஷண்டை இன்று ஒரு நாள் மட்டும் பார்க்கும்படி கேட்க, முதலில் தேவா “என்னால் எல்லாம் முடியாது போடா” என்று மறுத்தான்… சூர்யா ஏதேதோ சொல்லி போடா என கெஞ்ச, முடியாது முடியாது உங்க ஹாஸ்பிடல்ல வேற டாக்டரை மாத்தி விட சொல்லுடா என மறுத்தான்.. இறுதியாக சூர்யா “நட்புன்னா என்னனு தெரியுமா தேவா, நண்பன்னா என்னனு தெரியுமா தேவா” என்று தளபதி பட டயலாக்கை ஆரம்பிக்க,
“யப்பா சாமி போய் தொலைறேன்டா உடனே ஆரம்ப்பிக்காத” என்று ஒத்துக் கொண்டான்… ஏனெனில் சூர்யா இதுவரை இந்த மாதிரி எந்த ஒரு உதவியையும் தேவாவிடம் கேட்டது இல்லை… அத்தோடு ஒரே மாதிரி போகும் வாழ்க்கையில் தேவாவிற்கு சலிப்பு தட்டியது.. அதனால் சின்ன மாறுதலுக்காகவும் ஒத்து கொண்டான்..
ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவன் பேஷண்டை கவனிக்க தயாரானான்.. உதட்டில் ஒரு மில்லிக்கும் குறைவான சினேக புன்னகையுடன், முதலாவதாக ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர் வர அவருக்கு சர்க்கரை வியாதி தொந்தரவு, அவருக்கு தேவையான மருந்தையும் கூடவே எப்புடி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினான்..
இரண்டாவதாக மூன்று வயது குழந்தை ஒன்று காய்ச்சல் தொந்தரவுடன் வர, அந்த குழந்தையை பரிசோதித்து மருந்து எழுதி கொடுத்து அனுப்பி விட
மூன்றாவதாக வந்தவரை அமர சொல்லி விட்டு “சொல்லுங்க உங்களுக்கு என்ன தொந்தரவு” என்று கேட்டான்… அந்த பேஷண்ட்டின் முகம் பார்க்காமல், முதலாவதாக வந்த சர்க்கரை நோயாளியின் இரத்த பரிசோதனையை பார்த்து கொண்டே,
“ஹார்ட்ல தான் டாக்டர் ப்ராப்ளம்… கொஞ்ச நாளாவே ஹார்ட்க்குள்ள பட்டாம்பூச்சியா பறக்குது என்ன பண்ணா சரியாகும்” என்று சொன்ன பதிலிலும் குரலிலுமே முகம் பாராமல் அது யார் என்று தேவாவிற்கு புரிய, ரிப்போர்ட்டை பார்த்து கொண்டு இருந்தவன் கோவமாக நிமிர்ந்து திட்ட வாயெடுக்க,
எதிரே டேபிளின் மேல் இரு கைகளையும் ஊன்றி தேவா முகத்திற்கு அருகே குனிந்து இருந்தவளோ தேவாவை பார்த்து முதலில் கண்ணை சிமிட்டி பின்பு தனது இரண்டு புருவத்தையும் வில்லாய் வளைத்து மேலேற்றி கீழ் இறக்கி மேலேற்றி கீழ் இறக்க அந்த இரு புருவங்களும் விழிகளும் செய்யும் மாயாஜாலத்தில் ஒரு வினாடிக்கும் குறைவாக தன்னையறியாமல் தியாவை ரசித்த தேவா, அடுத்து அவள் “பாவா” என்று அழைப்பில் நினைவுக்கு வந்தான்…
‘அறிவு கெட்ட தேவா தீடிர்னு உனக்கு என்னாச்சு, ஏன்டா இப்புடி பண்ற’ என்று சற்று நேரத்திற்கு முன்பு தியாவை ரசித்தற்கு தன்னை தானே மனதிற்குள் கடிந்து கொண்டவன்,
“இவ எப்புடி இங்க வந்தா, நான் இங்க இருக்கிறது இவளுக்கு எப்புடி தெரியும் என்று எல்லாம் கஷ்டப்பட்டு யோசிக்கவில்லை அனைத்தும் தன் நண்பனின் கை வண்ணம் என்பது புரிந்தது..
இதற்கு தான் அந்த எருமை அந்த குழை குழைஞ்ச்சானா, டேய் எட்டப்பா உனக்கு இருக்குடா மனதிற்குள் சூர்யாவை அர்ச்சித்து கொண்டு இருக்க,
“ஹாய் எப்புடி இருக்கீங்க பாவா?”
“ஏய் உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரனைங்கிறது கிடையாதா, எத்தனை வாட்டி திட்டினாலும் விரட்னாலும் திரும்ப திரும்ப பின்னாடி வந்து பாவா பாவான்னு இம்சை பண்ற” என்றான் பல்லை கடித்து கொண்டு,
“எனக்கு சூடு சொரனை நிறையவே இருக்கு பாவா. ஆனா என் மனசுக்கு தான் அது எல்லாம் கிடையாது. அதுவும் உங்க கிட்ட மட்டும் தான்”…
“நான் இப்புடி உங்க பின்னாடி வரது உங்களுக்கு பிடிக்கலைன்னா ஒன்னே ஒன்னு பண்ணுங்க… அதுக்கு அப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் என்றாள்..
என்ன என தேவா பார்க்க,
“பேசாமா என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க..
ஆமா பாவா நமக்கு கல்யாணம் ஆகிட்டா அதுக்கு அப்புறம் நான் நீங்க போற பக்கம் எல்லாம் பின்னாடி வந்து இம்சை பண்ண மாட்டேன்ல, சமத்தா நீங்க வேலையை முடிச்சிட்டு வரது வரைக்கும் வீட்டுலேயே இருப்பேன்”
“ஏதேதததத “கல்யாணமா என்று அதிர்ந்த தேவாவிடம்,
“லவ் பண்ணா கல்யாணம் பண்ணி தானே ஆகனும் பாவா”..
“பைத்தியம் பைத்தியம் நான் உன்னை லவ் பண்ணவே இல்லை”…
“அப்புடின்னா பர்ஸ்ட் என்னை லவ் பண்ணுங்க. அப்புறமா கல்யாணம் பண்ணுங்க” என்று தியா கண்ணடித்து கொண்டு கூற,
இதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த தேவாவின் பொறுமை காற்றில் பறக்க தியா கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்தபடி, “சொல்ற எதையுமே புரிஞ்சிக்காமா காதல், கல்யாணம்னு கண்டபடி உளறிட்டு இருக்க,
என்னை பத்தி உனக்கு என்னடி தெரியும்.. ஹான் என்ன தெரியும்… தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ” … என்று கூற வந்தவனின் பேச்சு பாதியில் நின்றது தியா சொன்ன பதிலில்,
“தெரியும் எனக்கு எல்லாமே தெரியும்… அது எல்லாம் தெரியறதுக்கு முன்னாடி இருந்தே லவ் யூ தான். தெரிஞ்சதுக்கு அப்புறமும் லவ் யூ தான். ஏன் நான் சாகற வரைக்கும் லவ் யூ மட்டும் தான்… அது எப்பவும் மாறவே மாறாது” என்று கூறியவளின் கண்களில் தெரிந்த காதலில், உறுதியில் பாறையாய் இறுகி இருந்தவனின் இருதயம் ஒரு நொடி தடுமாற, அதை விரும்பாதவன் மேலும் தன்னை தானே கடிந்து கொண்டு, முன்பை விட பலமாக இறுகியவன்,
ஐ ஹேட் யூ, இப்பவும் எப்பவும் ஏன் சாகற வரைக்கும் ஐ ஹேட் யூ மட்டும் தான்… இதுவும் எப்பவுமே மாறாது. என கோவமாக உறும,
நீங்க என்ன சென்ட் யூஸ் பண்றீங்க.. ம்.. வாசனை செமையா இருக்கு என மூச்சை உள்ளுழுத்து தியா கூற,
தேவாவின் கோவம் இன்னும் கூட தான் செய்தது.. அவளை கையாள முடியாமல் உண்மையில் திணறினான்.. நான் பொறுக்கி என வாய் வார்த்தையாலும் செய்கையில் காண்பித்தும் கூட அவள் விலகாமல் விடாமல் துரத்துக்கிறாளே எரிச்சலாக இருந்தது..
அடிக்கவோ அசிங்க பேசவோ மனம் வரவில்லை.. “இங்க பாரு இது தான் உனக்கு நான் தர லாஸ்ட் வார்னிங் இனிமே ஏன் கண்ணு முன்னாடி வந்தேன்னு வை அவ்ளோ தான். நானே பார்க்காத தேவாவ நீ பார்ப்ப” என்றவன் இதுவரை லேசாக பிடித்திருந்த தியா கழுத்தில் அழுத்தம் கொடுத்தான், இதிலாவது பயப்படாமல் என, அதில் அவளுக்கு லேசாக இருமல் வர, அவள் கழுத்தில் இருந்து கையை விடுவித்தவன் விறு விறு வென அந்த அறையில் இருந்து வெளியேறினான்…
‘சூர்யா பரதேசி மாமா வேலையாடா பார்க்கிற, என் கையில்ல சிக்குடா அப்புறம் இருக்கு உனக்கு’ என்று வசைப்பாடி கொண்டே அந்த வராண்டாவை கடந்தவனை ஒளிந்து இருந்து பார்த்த சூர்யா, ஒரு மூணு மாசத்துக்கு இவன் கண்ணுலயே சிக்க கூடாது… அப்புடி சிக்குனா உயிருக்கு உத்தரவாதம் இல்லை என நெஞ்சில் கை வைத்து சொல்லி கொண்டான்…
Newer Posts