“சபரி ரேவதி நட்சத்திரம்” என்று சொல்ல வந்த சபரிக்கு முன்பாக “சௌதாமினி கிருத்திகை நட்சத்திரம்” என்ற பெண்ணின் குரல் தன் அருகே கேட்க,
‘யாருடா இந்த அவசரகுடுக்கை’ என்றபடி தன் இடப்புறம் நின்று இருந்த பெண்ணவள் புறம் திரும்பி பார்த்தவன், அதன் பிறகு பார்வையை அவள் முகத்தை விட்டு எங்குமே நகர்த்தவில்லை..
அவளின் முகத்தோற்றம் அவனை ஈர்த்ததை விட, மனதிற்குள் இறைவனிடம் வைக்க வேண்டிய வேண்டுதலை, இருகரம் கூப்பி கண்களை இறுக மூடியபடி தலையை ஆட்டி ஆட்டி உதடுகளில் முணுமுணுத்தபடி சாமி கும்பிடுவது,
சிறு குழந்தை தன் தாயிடம் எனக்கு அது வேணும் இது வேணும் என்று கேட்பது போல் ரசிக்கும்படியாக இருந்தது… அவள் முகத்திலே ஒரு குழந்தை தனம் இருந்தது… அது தான் அவனை வெகுவாக ஈர்த்தது… அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்… செளதாமினியின் வேண்டுதல் லிஸ்ட் பெரிது போல அவள் கண் திறந்தபாடில்லை… சபரியும் பார்வையை மாற்றியபாடில்லை..
மந்திரங்களை உச்சரித்தபடி ஐயர் இவர்கள் அருகே வர, விழி திறந்தாள் சௌதாமினி. மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான் சபரி அந்த மெரூன் நிற விழி உடையவளிடம்,
சௌதாமினி தீபாராதனை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு, ஐயர் தந்த விபூதியை மோதிர விரலால் எடுத்து அவள் வைத்திருந்த கல் பொட்டுக்கு மேலாக சிறிது கோடு போல் வைத்து கொண்டாள். அது அவள் எழில் முகத்திற்கு எடுப்பாகவே இருந்தது.. அவள் நகர அனிச்சையாக அவன் கால்களும் அவள் புறம் செல்ல பார்க்க முடியவில்லை… அவனை செல்ல விடாமல் கையை இழுத்து பிடித்து நிறுத்தினாள் ஹரிணி..
“சிவபூஜையில் கரடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இன்னைக்கு தான் நேர்ல பார்க்கிறேன்.. கைய விடு கரடியே நான் போகனும்” என் மினி போறா,
உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா சபரி? என்றாள் கடுப்புடன் ஹரிணி
“ஏய் ஒரு போலீஸ்காரனை பார்த்து கேட்கிற கேள்வியா இது” சபரி முறைக்க
“பின்ன என்னடா உன்னை எதுக்காக கோவிலுக்கு வர சொன்னேன்.. நீ என்னடான்னா அதை மறந்தட்டு என்ன என்னமோ பண்ணிட்டு இருக்க” என்று ஹரிணி கேட்ட பின்பு தான் கோவிலுக்கு வந்ததற்கான காரியம் நினைவு வந்தது..
“தியா வந்துட்டாளா எங்க?”
“உனக்கு பின்னாடி இருக்க அந்த மண்டபத்துல தான் உக்கார்ந்து இருக்கா… நாங்க வந்து அரை மணி நேரத்திற்கு மேலாச்சு, எத்தனை டைம் கால் பண்றது நீ சைட் அடிக்கிறதுல பிஸியா இருந்ததால் அதையும் பார்க்கமா விட்டுருக்கா.
வா வந்து அவகிட்ட பேசு அதுக்கப்புறம் மினியோ சனியோ யார் பின்னாடி வேணா போ”..
“ஏய் உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்று ஹரிணி தலையில் கொட்டிய படி தியா இருந்த இடத்தை நோக்கி நடந்தான்..
தியா சூர்யாவை சந்தித்து வந்து ஒரு வாரம் கடந்து இருந்தது.. இந்த ஒரு வாரமும் தியாவின் உலகமே மாறி இருந்தது.. இதுவரை கண்ணீரை கண்டிராத அவள் விழிகள் இந்த ஒரு வார காலமும் அணை உடைத்த அருவியாய் மாறி இருந்தது… வாய் ஓயாமல் பேசுபவள் அமைதியை தத்தெடுத்து இருந்தாள்..
தேவாவை பார்த்த நாளிலிருந்து அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை பேரிடம் கேட்டு இருப்பாள்…
ஆனால் இன்று தேவாவை பற்றி அறிந்த உண்மைகளின் பாரம் அவளால் தாங்க முடியாததாக இருந்தது.. இதுக்கு தெரிந்து கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.. காதல் கொண்ட மனம் அவனுக்காக வருத்தப்பட்டது… ஐந்து வருடங்களுக்கு முன்பு தேவா எவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருப்பான் என்று நினைத்து நினைத்து அதே வேதனையை இன்று அவள் அனுபவித்தாள்..
பட்டாம் பூச்சியாய் சுற்றி திரியும் மகளின் புது வித நடவடிக்கையில் குழம்பி போன யமுனா… என்னடா என்னாச்சு அம்மா கிட்ட சொல்லுடா, ஃப்ரெண்ட்ஸ் கூட சண்டையா, எக்ஸாம் சரியா எழுதலையா, என்ன பிரச்சனைடா என்று விசாரக்க தியா ஒன்னும் இல்லை என்று கூறி விட்டாள்… இனியா கூட வந்து எவ்வளவோ கேட்டு பார்க்க தியா அமைதியையே பதிலாக தந்தாள்..
ஹரிணிக்கு தேவா விஷயம் தான் ஏதோ ஒன்று என்பது தெரிந்தது. ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.. கேட்டாலும் எதுவும் சொல்லவில்லை.. பொறுத்து பார்த்த ஹரிணி இங்கு அழைத்து வந்துள்ளாள் தியாவை. சபரி கண்டிப்பாக தியா விடம் இருந்து உண்மையை வரவழைத்து அவளின் மனநிலையை மாற்றி விடுவான் ஏனெனில் சபரி தியாவின் male version என்பதால்,
தியா அருகே வந்த சபரி அவளின் அழுது வடிந்த முகத்தை பார்த்ததும் “மச்சான் என்னோட ஃபீலிங்கா” என்றபடி பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தான்..
ஹரிணி ‘இது எல்லாம் என்ன டிசைனோ என்ற ரீதியில் தன் தலையில் அடித்து கொண்டாள்..
தியா அவனை முறைக்க,
“மச்சான் சத்தியமா சொல்றேன் இந்த ஃபீலிங் எல்லாம் உனக்கு செட் ஆகவே இல்லை”…
“ஏற்கெனவே நீ சுமாரா தான் இருப்ப. இதுல சோகமா இருக்கேன் அப்புடின்னு மேக்கப் போடாமா ரொம்ப ரொம்ப சுமாரா இருக்க, இப்புடி மேக்கப் போடாம வெளிய வந்து எங்களை மாதிரி பசங்களை பயமுறுத்தலாமா” என்றதும் தியா தன்னருகே கிடந்த தேங்காய் சில்களை எடுத்து அவன் மீது வீச அவன் நகர்ந்து விட்டான்…
“என் மேலே படவே இல்லையே” என்று பழிப்பு காட்ட,
தியா மற்றோரு சில்லை எடுத்து வீச அவன் நகர, இவள் வீச, அவன் நகர என்று அது ஒரு விளையாட்டாக மாறி போனது…
நல்ல நண்பர்கள் இருந்தால் போதும் எவ்வளவு மோசமான மனநிலையில் இருந்தாலும் சிறிது நேரத்தில் அதை மகிழ்வாக மாற்றி விடுவர். ஹரிணி சபரி அதை தான் செய்தனர். தியா முகத்தில் கொஞ்ச நேரத்தில் சிரிப்பை வரவழைத்து விட்டனர்…
“சரி இப்ப சொல்லு மச்சான் உனக்கு என்ன பிரச்சினை?” என்றவனிடம் தேவாவின் கடந்த காலத்தை பற்றி கூறினாள்… கேட்ட சபரி ஹரிணிக்கே பயங்கர அதிர்ச்சி… அந்த இடமே இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தது…
“மச்சான் இது எல்லாம் நடந்து முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆகிருச்சு.. நடந்து இருக்கவே கூடாத விஷயம் தான் ஆனா நடந்திருச்சு, அதற்காக நீ இப்புடி உக்கார்ந்து கவலைப்பட்டே இருந்தே எல்லாம் சரி ஆகிடுமா சொல்லு”,
“கவலைப்பட்ட சரி ஆகாது தான் சபரி. ஆனா பாவா பாவம்டா.. எனக்கு அவர் எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு இருப்பார்ன்னு நினைக்கும் போது அழுகையா வருது எனும் போதே கண் கலங்க,
“ஏய் என்ன இது சீரியல் பார்க்கிற கிழவி மாதிரி கண்ணீர் வடிச்சிட்டு” சபரி அதட்டல் போட,
கண்ணை துடைத்தவள் எல்லாத்தையும் சரி பண்ணணும்டா சபரி என சொல்ல,
எப்புடி சரி பண்ண ஹரிணி கேட்கவும்,
“ஒரு இரண்டு விஷயம் நடக்கனும். அந்த இரண்டு விஷயமும் நான் நினைச்சா மாதிரி நடந்தா எல்லாம் சரி ஆகிடும்”…
“என்ன இரண்டு விஷயம் சொல்லுடா மச்சான். உனக்கு நான் உதவி பண்றேன்” என்றான் சபரி..
“ஒன்னு எந்த ஹாஸ்பிடல் கௌரவத்தை காப்பாத்த என் பாவா வாழ்க்கையை அழிச்சாங்களோ அந்த ஆரோக்கியம் ஹாஸ்பிடல் இழுத்து மூடி சீல் வைக்கனும்” என்ற தியாவின் கண்களில் அவ்வளவு வெறி..
இது கொஞ்சம் கஷ்டம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் பண்ண முடியாது … அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி நடந்தது.. இவ்வளவு கிரிமினல்ல யோசிச்ச அந்த மகேஸ்வரன் எந்த திட்டத்தையும் விட்டு வச்சு இருப்பான்னு தோணலை.. இருந்தாலும் ட்ரை பண்ணுவோம்.. இரண்டாவது விஷயம் என்னன்னு சொல்லு சபரி கேட்க.
எனக்கும் பாவாக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கனும்” என்று அசலாட்டாக கூற, கேட்ட இருவரும் தான் அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து கொண்டனர்…
ஹரிணி அதே அதிர்ச்சியுடன் “தியாமா நீ தேவா சாரை கல்யாணம் பண்ணிக்க போறியா”,
“யா ஃஅப்கோர்ஸ் இதுல உனக்கு என்னடி டவுட்டு, லவ் பண்ணா கல்யாணம் பண்ணி தானே ஆகனும்”..
“இது எப்புடி நடக்கும் தியாமா உன் அம்மா அப்பா தேவா சாரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாங்களா, ஒரு வேளை அவங்க சம்மதிச்சாலும் தேவா சார் ஒத்துக்குவாரா” என்ற ஹரிணியிடம்,
அவர் தானே க்கும் ஒத்துக்கிட்டாலும் என தியா சலிக்க,
“அப்புறம் எப்படி?”
“எல்லாரும் சம்மதிச்சு எனக்கு கல்யாணம் நடக்கிறதுக்குள்ள நான் கிழவி ஆகிடுவேன். அதான் பர்ஸ்ட் கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறமா எல்லார் சம்மதம் வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் தியா கண்ணடித்து,
மறுநாள் காலை உறங்கி கொண்டு இருந்த வெண்ணிலா போன் அடித்தது.. அதில் உறக்கம் கலைய புரண்டு படுத்தாள்… திரும்ப திரும்ப விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க, “சே யாரது காலங்காத்தால ஒரு தடவை போன் எடுக்கலைன்னா விடமா நொய் நொய்னுட்டு” என்று சலித்தபடியே கண்ணை திறக்கமால் கை நீட்டி போனை எடுத்து அட்டன் செய்து ஹலோ என்க, எதிர்முனையில் இருந்தவர்கள் சொன்ன சேதியில் அடித்து பிடித்து எழுந்தாள்…
“ஏய் இப்ப மட்டும் நீ நேர்ல இருந்திருந்தா உன்னை சாவடிச்சிருப்பேன் பைத்தியம் பைத்தியம் நைட்டு ஏதாவது தண்ணிகிண்ணி அடிச்சியா ஏன் இப்புடி ஊளறிட்டு இருக்க” என்று எதிர்முனையில் இருந்த தன் தோழியை திட்டி கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தி சேனலை போட அதில் கூறிய தலைப்பு செய்தியை கேட்டவளின் கையில் இருந்த மொபைல் நழுவி கீழே விழுந்து உடைந்தது…
அந்த பெரிய வராண்டாவில் உள்ள சேரில் கண் மூடி நெற்றியை வலது கரத்தில் தாங்கியபடி அமர்ந்து இருந்தான் தேவா.. அவன் நினைவு முழுவதும் வெண்ணிலாவை சுற்றியே இருந்தது… தேவா தள்ளி விட்டதில் பின்னந்தலையில் பலமாக அடிபட்டதில் அந்த நொடியே ஜீவா உயிர் பிரிந்தது…
செக்யூரிட்டி மூலம் விஷயம் அறிந்ததும் ஜீவாவை தடுக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தான்… இதை தேவா சற்றும் எதிர்பார்க்கவில்லை…
மருத்துவனாய் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய தன்னாலே ஒரு உயிர் போனது அதுவும் தன் நண்பனின் இறப்பு நடந்தது எண்ணி மனம் வேதனை கொண்டது… ஜீவா வேண்டுமானால் அனைவரிடமும் பொய்யாக நட்பு பாராட்டி இருக்கலாம்.
ஆனால் தேவா சூர்யா, கார்த்தி போன்று தானே ஜீவா, திவேஷ் இருவரையும் எண்ணி உண்மையான அன்பு அவர்கள் மேலும் வைத்திருந்தான்… இப்போது மருத்துவனாய், நண்பனாய் தான் தோற்று போனதாக கருதினான்.. ஜீவா இறப்பு தேவா திட்டமிட்டு செய்யவில்லை தான்.. ஆனால் நடந்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க அவன் தயாராக இருந்தான்.. மகேஸ்வரனிடம் காவல் துறைக்கு தகவல் சொல்ல சொல்லி விட்டு அமர்ந்து இருக்கின்றான்..
விடிந்தால் திருமணத்திற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன… எவ்வளவு ஆசையாக எதிர்நோக்கி காத்து இருந்தான். கடைசியில் இப்படி ஆகி விட்டது.. வெண்ணிலாவை அவளின் பிரிவை நினைக்கையிலே மனம் இன்னும் பாரமானது… அவளுக்கு இது எல்லாம் தெரிந்ததும் தன்னை எண்ணி நிறைய அழுவாள். நிறைய கவலை கொள்வாள்… அதை எண்ணும் போது இன்னும் கவலையாக இருந்தது…
ஆனாலும் அவளை சூர்யாவும் தன் குடும்பத்தினரும் நன்றாக பார்த்து கொள்வர். தான் சிறைக்கு செல்வது தந்தைக்கும் தாய்க்கும் கவலையை அளிக்கும் அவர்கள் வேதனைப்படுவர்.. ஆனாலும் இந்த கடினமான சுழலை கடந்து வர தன் குடும்பமும் நட்பும் காதலியும் தனக்கு துணையாக ஆறுதலாக இருப்பார்கள் என்று நம்பினான்…
மகேஸ்வரன் தனது அறையில் இருந்தார்… அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை… இந்த மருத்துவமனை இப்போது இவ்வளவு வளர்ந்திருக்கிறது. மக்களிடையே நல்ல பெயர் எடுத்து இருக்கிறது என்றால் அதற்கு அவரின் தாத்தா அப்பா இரவு பகல் பாராமல் எவ்வளவு கடின உழைப்பை கொடுத்து உருவாக்கினார்கள்.. இதுவரை சிறு தவறு கூட நடக்காமல் நேர்மையாக உண்மையாக நடத்தி வந்து இருக்கிறார்கள்… அப்படி கண்ணும் கருத்துமாய் கோவில் போல நடத்தி வந்த மருத்துவமனையில் ஜீவா இவ்வளவு அந்நியாயம் செய்து இருக்கின்றானே, அதை பற்றி தெரிந்து கொள்ளமால் இருந்த தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டார்.
ஒன்றல்ல இரண்டல்ல நான்கு அப்பாவி உயிர்கள் இதுவரை ஜீவாவால் பறி போய் இருக்கிறது.. இப்போது தன் கண்ணா கண்டுபிடிக்காமால் இருந்திருந்தால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்…தன் கண்ணாவை எப்படி இதிலிருந்து வெளி கொண்டு வர வேண்டும் எப்புடி என குழப்பத்துடன் அமர்ந்து இருக்க..
அப்போது திவேஷ் அவரின் அருகில் வந்தான்… ஜீவா இறந்தது அவனுக்கும் பயங்கர வருத்தம் தான்.. அது ஒரு புறம் இருந்தாலும் வெண்ணிலா தேவா திருமணம் நிற்க போவதை நினைத்து பயங்கர கூத்தாட்டம் போட்டது மனது… இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வெண்ணிலா முழுவதும் தேவாவை வெறுக்கும் அளவு எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணி அதை நடைமுறை படுத்தவே மகேஸ்வரனிடம் பேச வந்து உள்ளான்..
மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு பலவீனம் திவேஷிற்கு வெண்ணிலா என்றால் மகேஸ்வரனுக்கு ஆரோக்கியம் மருத்துவமனை…
தன் அருகே வந்த திவேஷை மகேஸ்வரன் முறைத்தார்…
“சார் எனக்கு எதுவுமே தெரியாது சார்.. நான் எந்த தப்பும் செய்யலை, எனக்கே இப்ப தேவா கால் பண்ணி சொன்ன அப்றம் தான் சார் தெரியும்.. ஜீவாவை தேவா கொன்னது தப்பே இல்ல சார்.. தேவா மட்டும் இந்த நல்ல காரியத்தை செய்யலைன்னா, நானே அந்த ஜீவாவை கொன்னு இருப்பேன் சார்… எவ்வளவு பெரிய பாவத்தை ரொம்ப அசாலாட்டா பண்ணி இருக்கான் படுபாவி”…
“நாலு உயிர் அவனால் போய் இருக்குது… இந்த விஷயம் வெளிய ஜனங்களுக்கு மட்டும் தெரிஞ்சா இத்தனை வருஷமா ஹாஸ்பிடலுக்கு இருந்த நல்ல பேர் மொத்தமும் காணாமா போயிடும்.. இனி ஒருத்தர் நம்ம ஹாஸ்பிடல் பக்கம் வர மாட்டாங்க… அது மட்டும் இல்ல அரசாங்கமே ஹாஸ்பிட்டலை இழுத்து மூடி சீல் வைக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டானே” என்று பொய்யாக கவலை படுவது போல் நடிக்க,
“ஏன் ஏன் எதுக்கு ஹாஸ்பிட்டல்ல க்ளோஸ் பண்ணுவாங்க… ஏன் இப்படி சொல்ற?”
“இல்ல சார் இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் இங்க வருவாங்க… தேவாவை கைது பண்ணுவாங்க… ஜீவா எப்புடி இறந்தான் விசாரிப்பாங்க… அப்ப ஜீவா செஞ்ச தப்பு எல்லாம் வெளிய வரும்… அவன் ஆர்கன் திருடி வித்தது.. அதனால் நாலு உயிர் போனது எல்லாம் வெளிய வரும்… ஆனா இந்த நியூஸ் வெளிய போகும் போது டாக்டர் ஜீவா இதை எல்லாம் செஞ்சான் அப்புடிங்கிறத விட ஆரோக்கியம் மருத்துவமனையில் ஆர்கன் திருட்டு அப்புடின்னு தானே சார் வெளிய வரும்”..
“ஆரோக்கியம் ஆஸ்பத்திரியில் ஆர்கன் திருடறாங்களாமா, இனி அங்க போனா நம்ம கிட்டினியும் திருடிறுவாங்க அப்புடி தானே சார் ஜனங்க பேசுவாங்க… அப்புறம் இவ்வளோ பெரிய தப்பு ஹாஸாபிட்டலுக்குள்ள நடந்து இருக்கு இத்தனை வருஷமா இதில்ல நிர்வாகத்திற்காக எந்த ஒரு சம்பந்தமும் இல்லன்னு சொன்னா சின்ன புள்ளை கூட நம்பாது சார்… உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை சார் ஆர்கன் திருட்டு எவ்வளவு பெரிய குற்றம்.. ஸ்டேட் மட்டும் இல்லை சார், சென்ட்ரல் கவர்மென்ட் வரைக்கும் இந்த கேஸை கவனிப்பாங்க.. சி.பி.ஐ விசாரணை வரை போகும் கடைசி ஹாஸ்பிடலை இழுத்து மூடி சீல் வைப்பாங்க” என்று மூச்சு கூட விடாமல் மகேஸ்வரனை குழப்ப அது சரியாக வேலை செய்தது…
இதுவரை மகேஸ்வரன் இதுபற்றி சிந்திக்கவில்லை… இப்போது யோசிக்க ஆரம்பித்தார்… திவேஷ் கூறுவது தான் நடக்க நிறைய வாய்ப்பு இருப்பது போல் தோன்றியது… நடந்த எந்த தவறுக்கும் தனக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை… ஆனால் வெளியே இதை யார் நம்புவார்கள்…
ஹாஸ்பிட்டல் பெயருக்கு களங்கம் வருமோ, அரசாங்கம் மருத்துவமனையை மூடி விடுவார்களோ தன் கையை விட்டு மருத்துவமனை போய் விடுமோ என்று ஏதேதோ யோசனை எழுந்தது.. இது எல்லாம் நடக்க கூடாது… இந்த மருத்துவமனை தான் அவரின் உயிர்….இதை எவ்வாறு காப்பாற்றுவது என்று அவருக்கு எவ்வளவு சிந்தித்தும் புரியவில்லை..
அதையும் திவேஷிடமே கேட்டார்…
இந்த சந்தர்பத்திற்காகவே இவ்வளவு நாள் காத்திருந்த திவேஷ் தேவா மீது காரணமே இல்லாமல் வளர்த்து வைத்திருந்த வன்மத்தை பழிதீர்க்க திவேஷ் தன் மொத்த விஷத்தையும் தேவா மீது கக்கினான்…
“இல்ல இல்ல இல்ல இந்த ஐடியா வேண்டாம் நீ சொல்றது மாதிரி செஞ்சா தேவாவிற்கு தான் கெட்ட பேர் வரும்.. அவன் வாழ்க்கை என்னாகிறது நான் ஒத்துக்க மாட்டேன்” என்று மகேஸ்வரன் மறுக்க,
“அப்ப சரி எனக்கு என்ன வந்தது… எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல சார்… இந்த ஹாஸ்பிட்டல்ல இல்லன்னா நான் வேற ஹாஸ்பிட்டல்ல வேலை செஞ்சிட்டு போறேன்… நஷ்டம் உங்களுக்கு தான் எனக்கு இல்ல” என்று கூறி கிளம்ப போக,
மகேஸ்வரன் மருத்துவமனையா அல்ல சிறு வயதில் இருந்து தான் தூக்கி வளர்த்த தேவாவா இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டானா சூழ்நிலைக்கு தள்ளப்பட, இறுதியில் அவர் மருத்துவமனையையே தேர்வு செய்தார்…
அடுத்த நொடி தியாவை மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி வேறு இடத்தில் வைக்கப்பட்டாள்…
போலீஸ் வந்ததும் தேவா இரவு பணியில் இருந்த பெண் டாக்டரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அதை தடுக்க ஜீவா வந்த போது தள்ளி விட்டதில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாகவும் கதையவே மாற்றினர்… அதற்கு சாட்சி ஜீவாவிற்கு உதவியாக இருந்த இரண்டு நர்ஸ்கள் டாக்டர் வர்ஷா, செக்யூரிட்டி… அவனுக்கு இது பயங்கர அதிர்ச்சி…
“மாமா என்ன நடக்குது” என்று அவரிடம் கோவமாக வினவ அவரால் தேவாவை நேராக பார்க்க முடியவில்லை… அவர் தான் உயிரற்ற கட்டிடத்தின் பெயரை காப்பாற்ற கெட்டவனான ஜீவாவை நல்லவனாகவும், நல்லவனான தேவாவை கெட்டவனாகவும் மற்றவர்களுக்கு காட்ட துணிந்து விட்டாரே,
காவல் அதிகாரியிடம் தேவா நடந்த உண்மை அனைத்தையும் கூற அதை அவர்கள் ஏற்கவில்லை.. ஏனெனில் மகேஸ்வரனும் திவேஷிம் ஜீவா செய்த தவறுக்கான ஆதாரங்கள் எதையும் விட்டு வைக்காமால் அதை மாற்றி விட்டனர்… போலீஸாரால் தேவா கைது செய்யப்பட்டான்… செய்தி காட்டு தீயாய் பரவியது…
ஆரோக்கியம் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் தேவேந்திரன் கைது.. உடன் பணியாற்றிய பெண் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை.. தடுக்க வந்த மற்றொரு டாக்டர் ஜீவாவை தள்ளி விட்டு கொலை என்று செய்தி காட்டு தீயாய் பரவியது…
அன்றைய தலைப்பு செய்தியே முழுவதும் தேவா தான்… சமூக வலைதளங்கள் முழுவதும் தேவாவை இவன் எல்லாம் ஒரு டாக்டரா, இவனை எல்லாம் கொல்லனும் அப்புடி இப்புடி என்று கமெண்ட் டில் வறுத்து எடுத்தனர்…
அந்த செய்தியை பார்த்த வெண்ணிலா, சூர்யா, தேவா குடும்பத்தினர் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி… யாராலும் எதையும் நம்ப முடியவில்லை… தேவா தந்தையால் ஒரு துளிக்கூட இதை நம்ப முடியவில்லை… ஆனால் தேவா மீது தான் தவறு என்று ஆதாரத்தை காட்டியது மகேஸ்வரனே,
அவருக்கும் தேவாவுக்குமான உறவு அனைவரும் அறிந்ததே அதனால் நம்பாமல் இருக்க முடியவில்லை… தொடர்ந்து மகேஸ்வரனும் திவேஷிம் பொய்யான ஆதாரத்தை காட்டி, முன்ன இருந்த தேவா தப்பு பண்ணிட்டு தான் இருந்தான் வேதா, நிறைய கம்பளைண்ட் காலேஜ் டைம்ல கூட, உன்கிட்ட விஷயம் வராம நான் தான் பார்த்துக்கிட்டேன்.. வயசு கோளாறு தப்பு பண்றான்னு கல்யாணம் பண்ணூ வச்சா திருந்துவான்னு நினைச்சேன்டா, ஆனா கண்ணா அப்புடி செய்வான்னு நினைக்கவே இல்லடா என நம்பும்படி மகேஸ்வரன் கதையை திரிக்க அனைவரும் தேவா தப்பு அசிங்கம் என்றே முடிவே செய்து விட்டனர் அவனின் குடும்பத்தினர் தேவாவின் தாயை தவிர,
தேவா நம்பிய குடும்பம் காதலி அவனை கை விட்டாலும், அவனின் உண்மையான நட்பு சூர்யா அவனை ஏமாற்றவில்லை… தன் நண்பனை பற்றி இந்த மகேஸ்வரன் என்ன மேல் இருக்கும் பரமேஸ்வரனே கீழிறிங்கி வந்து சொன்னாலும் நம்ப மாட்டேன் என்று தேவாவை முழுதாக நம்பினான்… இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தேவா மீது முழு நம்பிக்கை வைத்து எந்த தவறும் இல்லை என்று நிருபித்து வெளி எடுக்க நிறைய பாடுபட்டான்…
ஆனால் பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையை ஊமையாக்கி விட்டனர் மகேஸ்வரனும் திவேஷிம்… தேவாவிற்கு எதிராக சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட அவனுக்கு திட்டமிடப்பட்ட கொலை அல்ல விபத்து என்பதால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது…
வெண்ணிலாவும் பயங்கர குழப்பமான நிலையில் இருந்தாள்.. தேவா சிறைக்கு சென்றது அவனை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுவது, அவனை சமூக ஊடகங்களில் திட்டுவது, வெளியே சென்றால் இந்த மாதிரி ஒருத்தனையா நீ காதலிச்ச என்று அவளையும் கேவலமாக பார்ப்பது இந்த காரணங்கள் அவள் மனதில் வரிசை கட்டி முன் நிற்க, தேவாவும் அவன் காட்டிய காதல் அன்பு அனைத்தும் மெல்ல மெல்ல பின்னோக்கி சென்றது… திவேஷ் இந்த நிலையில் இருக்கும் வெண்ணிலாவுக்கு ஆறுதல் கூறுகின்றேன் என்று தன் வசமாக்கி விட்டான்…
அதை அறிந்த சூர்யா வெண்ணிலாவிடம் “நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு… தேவா எந்த தப்பும் செய்யலை ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கான்… தயவு செஞ்சு வெண்ணிலா நீயும் அவன் முதுகில் குத்தாத அவன் உடைஞ்சு போயிடுவான்… அவனுக்கு ஆறுதலா நீ தான் இருக்கும் ப்ளீஸ்டி உன்னை கெஞ்சி கேட்கிறேன்” என தங்கையிடம் கெஞ்ச,
“மாமா தப்பு செஞ்சாரோ இல்லையோ ஆனா இப்ப இந்த ஊர் உலகத்திற்கு முன்னாடி அவர் ஒரு கொலைகாரன் பொம்… பொம்பளை பொறுக்கி… இந்த பேர் அவருக்கு எப்பவும் மாற போறது கிடையாது… அவரை நான் எப்புடி கல்யாணம் பண்ணிக்க முடியும்… அப்புடி கல்யாணம் பண்ண கொலைக்காரனோட பொண்டாட்டின்னு என்னை சொல்வாங்க.. எல்லாரும் என்னை கேவலமா பார்ப்பாங்க… எனக்கு அவர் வேண்டாம்… என்னால அப்புடி அசிங்கப்பட்டு எல்லாம் காலத்திற்கும் வாழ முடியாது.. இது என்னோட வாழ்க்கை அதை எப்புடி வாழனும் நான் தான் முடிவு பண்ணணும்… நான் திவேஷை கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்று உறுதியாக வெண்ணிலா கூறினாள்…
மூன்று ஆண்டை சிறையில் கடினப் பட்டு தள்ளிய தேவா வெளியே வந்தான்… ஆனால் அதன் பிறகே தோன்றியது… சிறையிலே இருந்திருக்காலாமோ என்று, இந்த ஊர் உலகம் அவனை பற்றி என்ன நினைத்தாலும் கவலை இல்லை… ஆனால் அவன் தந்தை உடன் பிறந்தவர்கள் அவனை நம்பவில்லையே, அனைவரும் அவனை வெறுத்தனர்… அவன் கூறுவதை கேட்க தயாராக இல்லை… தேவாவும் தன்னை நம்பாத யாருக்கும் தன்னை நல்லவனாக நிருபிக்க தயாராக இல்லை… ஆமா நான் தப்பு தான்… தப்பானவான் தான் என்று கூறி அனைவரையும் ஒதுக்கினான்…
தனியாக வீடு எடுத்து தங்கினான்… துரோகம், ஏமாற்றம்,வலி, அவமானம் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் அனைத்தும் வாழ்க்கையின் மீது வெறுப்பை உண்டாக்கியது… மனம் மிகவும் வலித்தது… அனைத்தையும் விட அவனை வாட்டி வதைத்தது வெண்ணிலாவின் நினைவு… காதலிக்கும் காலத்தில் பொக்கிஷமாய் மனதில் சேமித்த நினைவுகள் மொத்தமும் இப்போது அவனன கொல்லாமல் கொன்றது… அவளை எத்தனை நாள் தன் மனைவியாக எண்ணி கனவு கண்டு இருப்பான்… இப்பொழுது அந்த கனவு கலைந்து அவள் வேறு ஒருவன் மனைவியாக பார்க்கும் பொழுது இதயத்தை துண்டு துண்டாக கீறியது போன்று அப்படி ஒரு வலி… இந்த வலியை தாங்க முடியவில்லை அவனால், இதிலிருந்து எல்லாம் தப்பிக்க மருத்துவனாய் எத்தனையோ பேரை மதுப்பழக்கத்திலிருந்து மீட்டு எடுத்தவன் மதுவை துணையாக நாடினான்… அதுவும் அவனுக்கு ஆறுதல் தராமல் போக மாதுவை நாடினான்…
தேவா கைது ஆன இரண்டு நாட்களுக்கு பிறகு இரவு நேரத்தில் தியாவை ஊருக்கு ஒத்துக்குபுறமான இப்போது புழக்கத்தில் இல்லாத ஆள் அரவமற்ற இரயில்வே நிலைய ஃப்ளாட் பாரத்தில் போட்டு விட்டனர்…
மறுநாள் அந்த வழியாக சென்ற ஒன்னு இரண்டு பேர் பார்த்து போலீஸ்க்கு தகவல் கொடுக்க, இரயில்வே போலீஸ் வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு விசாரிக்க. யார் கொண்டு வந்து இங்கு போட்டனர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை…
அது புழக்கத்தில் இல்லாத சிறிய அளவிலான இரெயில் நிலையம் தண்டவாளத்தில் கூட முட்கள் புல்லுகள் தான் முளைத்து இருக்கும்.. அதனால் கேமரா எதுவும் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை…
ஏற்கெனவே தியா காணமால் போன கேஸை விசாரித்து வந்த போலீஸ்க்கு தகவல் சொல்ல அவர்கள் தியா பெற்றோருக்கு தகவல் கூற அவர்கள் அடித்து பிடித்து வந்து தன் மகளை பார்த்தனர்… இப்புடி கிடக்கும் தன் மகளை பார்த்து கண்ணீர் சிந்த நான்கு நாட்கள் தொடர்ந்து கடத்தியவர்கள் மயக்கத்திலேயே வைத்து உள்ளனர்… உடம்புக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்ல நல்லபடியா இருக்காங்க என்று சொல்லிய பிறகு தான் பெற்றோருக்கு உயிரே வந்தது…
எதுக்கு கடத்தினாங்க யார் கடத்துனாங்க என்று அவர்களுக்கு தெரியவில்லை… தன் மகள் உயிருக்கும் மானத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்ப கிடைத்ததே போதும் என்று அவர்கள் நினைத்தனர்… சிறு நேரத்தில் தியா கண் விழிக்க அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்… தொடர் மயக்கத்திலே இருந்ததால் அவளுக்கு நடந்த எதுவுமே தெரியாது..
முதன் முதலாக தேவேந்திரன் என்ற பெயரை கேட்டதும் அவனை பார்க்க வேண்டும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தியாவிற்கு ஏற்பட்ட உள்ளுணர்வு, அடி ஆழத்தில் அவன் பெயர் பதிந்து இருந்ததலா, அல்லது தன்னுடைய உயிரை காப்பாற்ற அவன் தன் வாழ்க்கையையே தொலைத்து உள்ளான் என்பதாலாயா,
நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்… 12 மணி வரை வெண்ணிலாவுடன் தான் பேசி கொண்டு இருந்தான்.. போனை வைத்து ஒரு மணி நேரமாகியும் உறக்கம் வருவேன்னா என்றது… திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உறக்கம் வராது தான்.
தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கின்றது…ஏதேதோ மண்டைக்குள் வந்து குழப்புக்கின்றது.. அவனின் உள்ளுணர்வு ஏதோ ஒன்றை அவனுக்கு சொல்கிறது… ஆனால் அது என்ன என்பது தான் அவனுக்கு புரியவில்லை…
நமக்கு ஏதாவது கெட்டது நிகழ போகின்றது என்றால் சில சமயம் இப்புடி தான் நமது மனம் அதை நமக்கு காட்டி கொடுக்கும். தேவாவிற்கும் அதே தான் ஆனால் அவன் அதை உணரவில்லை.
சிறிது நேரம் பாட்டு கேட்கலாம் அப்போது மனது அமைதியாகும் என்று நினைத்தவன். அங்கு இருந்த டீபாயில் வைத்திருந்த தனது மொபைலை எடுக்க தனது இடது கரத்தை நீட்டினான்…
அப்போது தான் ஒன்றை கவனித்தான். அவனின் இடது கரத்தின் மோதிர விரலில் அணிந்திருந்த அவனின் நிச்சய மோதிரம் காணவில்லை.. அந்த மோதிரம் வெண்ணிலாவின் தேர்வு. அவளே தேவாவிற்காக ஆசை ஆசையாக நகைப்பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்தது…
அச்சோ தேவா மோதிரத்தை ‘எங்கடா போட்ட’ என்று தலையில் அடித்து கொண்டு அறை முழுக்க தலை கீழாய் புரட்டி போட்டு தேடி பார்த்தான்.. பாத்ரூமில் கூட போய் பார்த்தான்.. மோதிரம் கிடைக்கவில்லை…
அய்யோ நிச்சயதார்த்த மோதிரம் காணலைன்னு சொன்னா நிலா அபசகுணம் அது இது சொல்லி வருத்தப்படுவாளே, நல்லா யோசி தேவா நல்லா யோசி என்று தலையில் இரண்டு கை வைத்து கண்களை மூடி யோசித்து பார்த்தான்… இரண்டு நொடிகளில் நியாபகம் வர கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பினான் மருத்துவமனைக்கு..
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன் மோதிரத்தை கழட்டி வைத்ததை எடுக்கவில்லை…
மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கினான் தேவா… அப்போது செக்யூரிட்டி ஓடி வந்து “என்னாச்சு டாக்டர் நீங்க கல்யாணத்திற்கு லீவ் தானேபோட்டு இருக்கீங்க… இந்த நேரத்தில் இங்க வந்துருகீங்க ஏதாவது பிரச்சினையா டாக்டர் என்று பதறியபடி கேட்டார்…
தேவா மோதிர நினைவில் இருந்ததால் அந்த செக்யூரிட்டியின் பதற்றம் அவன் கருத்தில் பதியவில்லை..
“ஒன்னும் இல்லை அண்ணா என்னோட திங்க்ஸ் ஒன்னா மறந்து என் கேபின்லேயே விட்டுடேன். அதை எடுக்க தான் வந்தேன் அண்ணா” என்று செக்யூரிட்டியிடம் பதில் கூறிய படியே தனது அறைக்கு சென்று பார்த்தான். அவன் டேபிளின் மீது மோதிரம் இருக்க. அப்பாடா என்றபடி மோதிரத்தை எடுத்து விரலில் மாட்டி கொண்டான். அந்த செக்யூரிட்டியும் தேவா அருகிலே நின்றான்…
அவனை பார்த்து சிரித்த தேவா அந்த செக்யூரிட்டியிடம் பேசியபடியே நடந்தான்… இன்னைக்கு நைட்டு டியூட்டி யாருண்ணா…
“டாக்டர் ஜீவா இல்ல வர்ஷா மேடம் சார் இல்ல இல்ல சாரதா மேடம் என்று உளறினார் செக்யூரிட்டி… எங்க அண்ணா அவங்களை காணோம் என்று கேட்டான் தேவா பார்வையை தனது விரலில் இருந்த மோதிரத்தில் பதித்த படியே, அவர் முகத்தை பார்த்து இருந்தால் தேவாவிற்கு தெரிந்திருக்கும் அவர் முகத்தில் இருந்த பயம்…
“ஒரு ஆப்ரேஷன் சா…” என்று கூற வந்தவன் தனது நாக்கை கடித்து கொண்டு “காபி சாப்பிட கேண்டின் போயி இருக்காங்க சார்” என்றார்…
தனது கார் அருகே வந்த தேவா “அண்ணா என்னோட கல்யாணத்திற்கு மறக்காமா வந்திருங்க என்று செக்யூரிட்டியிடம் கூறி விட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினான்… கார் மருத்துவமனை வளாகத்தை தாண்டிய பின்பு தான் செக்யூரிட்டிக்கு மூச்சே வந்தது…
இந்த செக்யூரிட்டி ஜீவாவின் ஆள்… இன்று நடக்கும் அவலம் அறிந்தவர்… அவர் மட்டுமல்ல இன்று பணியில் இருக்கும் சில டாக்டர்ஸ் நர்ஸ் கூட ஜீவாவிற்கு உதவி செய்பவர்கள் தான் அதனால் தீடிரென தேவா வந்ததும் செக்யூரிட்டி மிகவும் பயந்து விட்டார்…
தியாவை இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மயக்கத்திலேயே வைத்து இருந்தனர்… அவளுக்கு விழி திறக்க முடியவில்லை என்றாலும் தன்னை சுற்றி ஏதோ தவறாக நடக்கின்றது என்பது மட்டும் ஆழ்மனதிற்கு தெரிந்தது… அதிலிருந்து மீள வழி தான் தெரியவில்லை… இன்று தான் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்… அறுவை சிகிச்சை அறையில் திவேஷ், ஜீவா, லேடி டாக்டர் வர்ஷா மற்றும் இரண்டு நர்ஸ்கள் இருந்தனர்..
திவா ஃபுல்லா செக் பண்ணிட்ட தானே தியாவுக்கு எல்லாம் நார்மல் தானே எந்த ப்ராப்ளமும் இல்லையே ஸ்டார்ட் பண்ணலாமா?
“ம்ம்’… என்றான் திவேஷ் சுரத்தே இல்லாத குரலில், அவனுக்கு இந்த பாவத்தை செய்ய சுத்தமாக பிடிக்க வில்லை.. வேண்டாம் என்னை விட்டுரு, நீ என்ன வேணா பண்ணிக்கோ என்று எப்போதும் போல் நடக்கும் அவலத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் எர்ரமே திவேஷ்ற்கு… ஆனால் ஜீவா உபயோகிக்கும் வெண்ணிலா என்னும் மந்திரம் அவனையும் இந்த பாவத்தில் பங்கெடுத்து கொள்ள வைத்து இருக்கின்றது…
பாவச்செயல் செய்தால் மட்டுமல்ல கண் முன் நடக்கும் அநியாயத்தை நமக்கு என்ன வந்தது என்பது போல் தட்டி கேட்காமல், தடுக்கமால் வேடிக்கை பார்ப்பது அந்த பாவச்செயல் செய்வதை விட மிகப் பெரிய பாவம் என்பது திவேஷ்க்கு புரியவில்லை..
சர்ஜிக்கல் ப்ளேடை கையில் எடுத்த ஜீவா தியா அருகே சென்று வெட்ட போகும் போது அதி வேகமாக அந்த அறை கதவு உடைப்பட்டு திறந்தது…
அனைவரும் அதிர்ச்சியுடன் கதவின் புறம் திரும்பி பார்க்க
அங்கு கண்களே இரத்த சிவப்பாய் மாறும் அளவு அதீத கோவத்தில் ரூத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் தேவா…
தேவேந்திரன் அனைவர் இதழும் முனுமுனுக்க மயக்கத்தில் இருந்த தியாவின் காதின் வழி நுழைந்து ஆழ்மனதில் ஆழ பதிந்தது அந்த பெயர்..
தேவாவை அங்கு கண்டதும் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி ஜீவா உட்பட… அவனுக்கு அனைத்து விஷயமும் தெரிந்து தான் இங்கு வந்து இருக்கின்றான் என்பது அருகில் உதடு கிழிந்து கன்னங்கள் இரண்டும் வீங்கி கன்றி போய் நிற்கும் செக்யூரிட்டியை பார்த்தே புரிந்து கொண்டான் ஜீவா…
ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பிய தேவாவிற்கு சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை… அதற்கு மேல் காரை நகர்த்த அவனின் கை கால்கள் ஒத்துழைக்க மறுத்தது…அவனின் இருதயம் பந்தய குதிரை போல் வேகமாக துடித்தது… உள்ளுர்ணவோ ஏதோ தவறு நடக்கின்றது என்று திரும்ப திரும்ப கூறியது… காரை நிறுத்தி விட்டு சீட்டில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்தான்…
அப்போது தான் செக்யூரிட்டி அவன் மருத்துவமனை சென்றதிலிருந்து காரில் ஏறும் வரை பின்னாடியே வந்தது. அவர் முகத்தில் வழக்கத்திற்கு மாறான பதற்றம் பயம் இருந்தது. கேள்வி கேட்ட போது தடுமாறியது அனைத்துமே நினைவு வந்தது…ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்ற அடுத்த நொடி காரை திருப்பி மருத்துவமனைக்கு செலுத்தினான்…
காரை மருத்துவமனைக்கு பின்புறம் நிறுத்தி விட்டு பின் கேட் வழியாக சத்தம் இல்லாமல் தேவா வரவும், செக்யூரிட்டி தேவா வந்த விஷயத்தை யாரிடமோ போனில் சொல்லி கொண்டு சீக்கிரமா வேலையை முடிக்க சொல்லு பயமா இருக்கு என்றது காதில் விழ, செக்யூரிட்டியை தேவா சிறப்பாக கவனித்ததில் அனைத்தையும் அவனிடம் சொல்லி விட்டான்..
“என்னடா இது எல்லாம்” என்றபடி ஜீவாவை நோக்கி முன்னேறினான் தேவா… தேவாவின் பார்வை முழுவதும் ஜீவா திவேஷ் மேல் தான் இருந்தது. மெத்தையில் இருந்த தியாவை அவன் பார்க்கவில்லை…
ஏழு வருடங்கள் நண்பனாய் பழகியவர்களின் உண்மை முகம் கண்டு தேவாவிற்கு கோவத்தை விட அதிர்ச்சியும் வருத்தமுமே அதிகமாக இருந்தது…
“தேவா வேண்டாம் என் விஷயத்தில் தலையிடாத அது உனக்கு நல்லதுக்கில்ல பேசாமா எதையும் கண்டுக்காமா ஒதுங்கி போயிரு.. உனக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம் வேண்டாம் தேவா போயிரு” என்று பயத்தை வெளி காட்டாமல் பின்னோக்கி நகர்ந்தபடி கையில் வைத்திருந்த சர்ஜிக்கல் ப்ளேடை காட்டி ஜீவா மிரட்ட,
“நானும் அதை தான் சொல்றேன் ஜீவா வேணாம் எல்லாத்தையும் விட்டுரு, ஒரு டாக்டரா இருந்திட்டு இப்புடி எல்லாம் செய்ய உனக்கு அசிங்கமா இல்ல… நம்ம வேலை உயிரா காப்பாத்துறதுடா, உயிரை எடுக்கிறது இல்லை” என்றபடி தேவா முன்னேற,
ஜீவா அவனை நோக்கி கத்தியுடன் பாய்ந்தான்… தன் மேல் கத்தி படாதவாறு அவனின் வலது கையை இறுக்கமாக பிடித்து தடுத்தபடியே “வேணாம் சொன்னா கேளுடா” என்க.
ஜீவாவோ கத்தி இருந்த வலது கையை தளர்த்த முடியாமல் தேவாவின் கண்ணை குத்த முயல, தேவா அவனின் கழுத்தை பிடித்து பின்புறம் தள்ளினான்.. அதில் நிலை தடுமாறிய ஜீவா கீழே விழ தியாவை படுக்க வைத்து இருந்த இரும்பு கட்டிலின் முனை பின்னந்தலையில் பட்டு கீழே சரிந்தான் ஜீவா…
அந்த இடத்தில் இருந்த அனைவருமே சில விநாடி செயலற்று அனைவருமே அதிர்ச்சியில் நிற்க, அதே நேரம் மகேஸ்வரனும் அங்கு வந்தார்…
நேற்று பள்ளி சென்ற மகளை காணாமல் அழுது அழுது மயக்கத்திற்கே சென்று விட்டார் யமுனா. இனியாவும் தங்கையை காணாது அழுதபடியே தாய் அருகில் இருந்தாள்… பாலகிருஷ்ணன் மகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பணத்திற்காக தியா கடத்தப்படவில்லை என்பது காவல் துறைக்கு நன்றாக தெரிந்தது. பணத்திற்காக கடத்தி இருந்தால் பாலகிருஷ்ணனனை தொடர்பு கொண்டு இருப்பார்கள். வேறு தப்பான தொழிலில் செய்ய ஏதாவது கும்பல் கடத்தி இருக்குமா, இல்லை தொழில் முறை போட்டியில் யாராவதே கடத்தி இருப்பார்களா என்று காவல் துறை விசாரிக்க அதுவும் இல்லை…காவல் துறை கண்டு பிடிக்க முடியாதபடி எந்த ஒரு தடயமும் இல்லாமல் கனகச்சிதமாக தியாவை கடத்தி இருந்தனர்…
“டேய் என்னடா இவ்வளோ கூல்லா உக்கார்ந்து சாப்பிட்டு இருக்க. உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா” என்றான் திவேஷ் ஜீவாவை பார்த்து
“எதுக்குடா பயப்படனும்”,
“என்னது எதுக்கு பயப்படனுமா? இப்ப நாமா பண்ணிறக்கறதும். இனிமே பண்ண போறதும் எவ்வளவு பெரிய விஷயம். மாட்டுனா காலம் முழுக்க ஜெயில்ல உக்கார்ந்து களி திங்கனும், எனக்கு பக்கு பக்குன்னு இருக்குடா,
“அது எல்லாம் மாட்ட மாட்டோம்டா. எனக்கு இது என்ன புதுசா நான் ஏற்கனவே இந்த மாதிரி இரண்டு மூணு தடவை பண்ணி இருக்கேன்.. மாட்டாவா செஞ்சேன்.. யாருக்கும் சந்தேகம் வராமா எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணி இருக்கேன்” என்றான் ஜீவா சாப்பிடப்படியே,
“நீ இவ்வளோ நாளா மாட்டாததற்கு காரணம் கார்த்திக் மகேஸ்வரன் சார் உன் மேல்ல வச்சு இருக்க நம்பிக்கை. அப்புறம் இன்னோரு விஷயம் நீ இவ்வளோ நாள் கை வைச்சு இடம் எல்லாம் படிக்காதவங்களும் ஆதரவுக்கு யாரும் இல்லாத ஜனங்க மேல்ல. ஆனா இந்த பொண்ணு அப்புடி இல்ல பெரிய இடம். இந்நேரத்திற்கு இந்த பொண்ணை காணோம்னு போலிஸ்ல கம்பளைண்ட் பண்ணி இருப்பாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜீவா. எதுவும் வேண்டாம்டா இந்த பொண்ணை விட்டுருலாம்” என்றான் திவேஷ். அங்கு மயக்கத்தில் இருந்த தியா வை கை நீட்டி காண்பித்தபடி,
“அடச்சீ தொடை நடுங்கியான உன்னை போய் கூட்டு சேர்த்தேன் பாரு.என்ன சொல்லனும்”என்று தன் தலையில் அடித்து கொண்ட ஜீவா.
மேலும் கோவமாக “இப்ப எதுக்குடா நொய் நொய்னு புலம்பிகிட்டே இருக்கே. இந்த பொண்ணை விட்டுரனுமா, ஓ…. விட்ரலாமே எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. நீ வெண்ணிலா கல்யாணத்தில்ல எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடி அட்சதை தூவ ரெடியா இருக்கானா சொல்லு, வாங்குன அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டு இந்த பொண்ணை கொண்டு போய் அவ விட்டுல விட்டுட்டு வரலாம்” என்றான் ஜீவா கோவமாக.
அதற்கு பின் திவேஷ் வாயை திறக்கவில்லை.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழி நான் அனைவரும் கேள்வி பட்டு இருப்போம். அதன் அர்த்தம் நாம் கடவுள் முன்பு எப்படி உண்மையாக பயபக்தியுடன் நிற்போமோ அதே போல் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ அதை நாம் பொய் புரட்டு ஏதும் இல்லாமல் நேர்மையுடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும். சுப்ரிம் கோர்ட் ஜட்ஜிலிருந்து சாதாரணமான பெட்டி கடை நடத்துபவர் வரை இது தான் பொருந்தும்..
மேலே சொன்ன பழமொழிக்கே ஏற்ப வருமானம் குறைவாக இருந்தாலும் தன் வேலையை நேசித்து அதில் நேர்மையாக நடப்பவர்கள். இரண்டாவது வகையினரோ ஏதாவது ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்து அதன் மூலம் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
தேவா சூர்யா எல்லாம் முதல் வகையை சேர்ந்தவர்கள்… அவன் மருத்துவத்துறையை சேவை மனப்பான்மையுடேனே தேர்ந்து எடுத்தான். மகேஸ்வரனும் கூட தன்னுடைய மருத்துவமனையின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை மட்டுமே செய்து வந்துள்ளார்.. அதில் ஒன்று தான் ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருத்துவத்தை இலவசமாக செய்தது… ஆனால் ஜீவாவோ இரண்டாவது வகையினரை சேர்ந்த ஒரு ஆள்… தான் படித்த மருத்துவத்தை தவறான முறையில் பயன்படுத்தி வந்தான்.
ஆரோக்கியம் மருத்துவமனைக்கு வரும் படிப்பறிவு இல்லாத ஆதரவு இல்லாத ஜனங்களின் உடல் உறுப்பை திருடி அது தேவைப்படுபவர்களுக்கு விற்பது. யாரிடம் இருந்து உடல் உறுப்புகளை எடுக்கின்றனரோ அந்த அப்பாவிகளின் இறப்பையும் வெளியே தெரியாத மாதிரி பார்த்து கொண்டனர்…
இந்த படுபாதக செயலை தான் ஜீவா செய்து வந்தான். அதற்கு அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் சில டாக்டர்ஸ் நர்ஸ் வார்டு பாய்களும் அவனுக்கு உதவி புரிந்து வந்ததனர். அதனாலே இந்த விஷயம் மருத்துவமனை நிர்வாகத்திற்ககோ மகேஸ்வரனுக்கோ தெரியவில்லை..தெரியாத மாதிரியும் நடந்து கொண்டனர்…
திவேஷ்ற்கு ஜீவா செய்யும் இந்த தவறு தெரியும். ஆனால் இதுவரை அவன் இதை செய்தது இல்லை. அதே போல் தவறு செய்யும் ஜீவாவை நல்ல நண்பனாய் கண்டித்தும் இல்லை… அவனை கூட்டு சேர்க்க ஜீவா எத்தனை தடவை முயன்றும் திவேஷ் ஒத்து கொள்ளவில்லை.. அது எல்லிஸ் பாவம் நான் செய்ய மாட்டேன் என ஒதுங்கி இருந்தவனை வெண்ணிலாவை வைத்து இந்த தடவை ஒத்து கொள்ள வைத்தது விட்டான் ஜீவா..
இதுவரை ஜீவா மாட்டி கொள்ளாதற்க்கு இன்னோரு காரணம் திவேஷ் கூறியது போன்று அவன் இதுவரை தேர்ந்தெடுத்தது எல்லாம் ஆதரவுக்கு யாரும் இல்லாத அப்பாவிகள் தான்…
இம்முறை வெளிநாட்டில் வாழும் மிகப்பெரிய பணக்காரன் ஒருவன் தன் இஷ்டத்திற்கு இளமை காலத்தில் புகை, மது, மாது, போதை மருந்து என்று ஆட்டம் போட, இப்போது நடுத்தர வயதில் அவனின் உடல் உறுப்புகள் பழுதடைந்து விட்டது. உடனடியாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…
அதற்கு தான் இந்தியாவில் இருக்கும் ஜீவாவை போன்ற மருத்துவர்கள் சிலரை நாடி முன்பணமாக பெரிய பணக்கட்டு ஒன்றை கொடுத்து அதே இரத்த வகையை சேர்ந்த உடல் உறுப்பு வேண்டும் கிடைக்குமா என்று கேட்க ஜீவாவும் ஒத்து கொண்டான்.
ஆனால் அந்த பணக்காரனின் இரத்த வகையோ AB Negative..
அந்த இரத்த வகை இந்தியாவில் அரிதான வகை..
இந்திய மக்கள் தொகையில் சுமார் 0.5% மட்டுமே உள்ளது..
இதன் அரிதான தன்மை காரணமாக, அவசியமான சமயங்களில் இந்த ரத்தத்தை பெறுவது கூட சிக்கலாக உள்ள நிலையில், அதே இரத்த வகையை சேர்ந்த உடல் ஆரோக்கியமான நபர்கள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தேடியும் ஜீவாவிற்கு கிடைக்கவில்லை..
அப்போதும் தான் தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்… அவளுக்கும் AB Negative இரத்த வகை தான். ஆனால் தியாவை மற்றவர்கள் போல் எளிதாக அவள் மேல் கை வைக்க முடியாது. ஏனெனில் அவளுக்கு தாய் தந்தை உள்ளனர். அதிலும் படித்தவர்கள் நல்ல வசதியானவர்களும் கூட, ஆதலால் சரியாக எந்த வகையிலும் போலீஸ் கண்டு பிடிக்காத மாதிரி திட்டமிட்டு தியாவை கடத்தி உள்ளான்…
“திவா போ தியாவிற்கு மயக்கம் தெளியற நேரம் ஆக போகுது. போய் மயக்க ஊசி போடு” என்றான் ஜீவா.
திவேஷ் அமைதியாக நிற்க, “திவா பயப்படாதா எந்த பிரச்சினையும் வராது நான் இருக்கேன். நான் சொல்ற மாதிரி மட்டும் செய். தியாவை எப்பவும் மயக்கத்திலையே வச்சிரு. இன்னைக்கு நைட் ஆப்ரேஷன், அது முடிஞ்சதும் தியா உயிரோட இருக்க மாட்டா. அவ உடம்பு கூட இந்த ஹாஸ்பிட்டல் தாண்டி வெளியே போகாது என்றான்…
“இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இப்ப அவங்களுக்கு கம்ளிட்லி ஆல் ரைட். அவங்க டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தா ஃசீப் டாக்டர் கூட இன்னைக்கு கிளம்ப சொல்லிட்டாங்க” என்று தியாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டே யமுனாவிடம் கூறினான் ஜீவா…
அப்போது தியாவிற்கு 15 வயது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்… ஒரு வாரம் முன்பு பயங்கர காய்ச்சல் தியாவிற்கு. எழுந்திருக்கவே முடியாத அளவு சோர்ந்து போனவளை பார்த்து பதறி பயந்து போன பாலகிருஷ்ணன் யமுனா இருவரும் உடனடியாக ஆரோக்கியம் மருத்துவமனை அழைத்து வந்தனர். அங்கு அவளை பரிசோதித்தது டாக்டர் ஜீவா…
அவன் தான் ஆரோக்கியம் மருத்துவமனையில் புற நோயாளிகளை கவனிப்பான்… 105 டிகிரி காய்ச்சல் தியாவிற்கு இருந்தது. அதனால் அவளுக்கு இரத்த பரிசோதனை சிறுநீரக பரிசோதனை எல்லாம் பார்க்கப்பட்டது. பரிசோதனை முடிவை பார்த்த ஜீவா அவளுக்கு டெங்கு ஃபீவர் உள்ளதை அறிந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கூறினான்…
பயந்து போன தியா பெற்றோர்கள் அவளை மருத்துவமனையில் அனுமதிக்க இதோ ஒரு வாரம் கடந்து தியாவிற்கு காய்ச்சல் குறைந்து பரிபூரணமாக குணமடைந்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல கூறுகிறான் ஜீவா…
“இனி எந்த தொந்தரவும் இருக்காது இல்ல டாக்டர்… சாப்பிடுறதுக்கு எல்லாமே கொடுக்கலாமா?” என்று ஒரு தாயாக மகள் உடல்நிலை பற்றி மீண்டும் ஒரு முறை கேட்டார் யமுனா..
“எந்த ப்ராப்ளமும் இல்ல. நார்மலா நீங்க எப்பவும் கொடுக்கிற எல்லா ஃபுட்டையும் கொடுக்க” என்று ஜீவா கூறியதும் “சரி” என்ற யமுனா தியா வை ரெடியாக இருக்கும்படி கூறி விட்டு பில்லை கட்டி டிஸ்சார்ஜ் பார்மாலிட்டி முடிக்க ரிசப்ஷன் சென்றார்…
யமுனா சென்றதும் அங்கிருந்த தியா ஜீவாவை பார்த்து முறைத்தாள்..
ஜீவா தியாவின் செயலை பார்த்து சிரித்தான்… இந்த ஒரு வாரத்தில் தியா தன்னை கவனித்து கொண்ட டாக்டர் நர்ஸ் அனைவரையும் தன் பேச்சால் நண்பர்களாக்கி இருந்தாள்… அதில் ஜீவாவும் ஒருவனே. தேவா இதய சம்மந்தப்பட்ட நோயாளிகளை மட்டுமே பார்ப்பதால் தியா தேவாவையோ தேவா தியாவையோ இந்த ஒரு வார காலத்தில் பார்த்தது இல்லை...
“சிரிக்காதீங்க டாக்டர் நான் உங்க மேல்ல செம கோவத்தில் இருக்கேன்” என்று தியா மேலும் முறைக்க…
“ஓய் குட்டி பொண்ணே என் மேல்ல என்ன கோவம் உனக்கு” என்று அதன் காரணம் தெரிந்து கொண்டே தெரியாதது போன்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க,
“நான் ஒன்னும் குட்டி பொண்ணு இல்ல… என்னது என்ன கோவமா நான் உங்க கூட டூ… டாக்டரே, உங்க கிட்ட நான் நேத்து என்ன சொன்னேன்” கண்ணை உருட்டி முறைத்த வண்ணம் கேட்டாள்…
“என்ன சொன்ன?” என யோசித்த போல பாவனை செய்தவனை மேலும் மேலும் முறைத்த தியா,
“எனக்கு இன்னும் டூ டேஸ்ல எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடும் அதனால் என்னோட மம்மி கிட்ட இன்னும் 10 டேஸ்க்கு ஹாஸ்பிட்டல்லயே இருக்கும்னு சொல்ல சொன்னா, நீங்க மம்மி கிட்ட இன்னைக்கே கூட்டிட்டு போக சொல்றீங்க. நான் உங்களை எவ்ளோ நம்புனேன்… நீங்க என்னை ஏமாத்தீட்டிங்க.. போங்க டாக்டர் நான் உங்க கிட்ட பேச மாட்டேன்” என முகத்தை தூக்கினாள் தியா..
“குணமான அப்புறமும் உன்னை பத்து நாள் ஹாஸ்பிட்டலில் வச்சு இருக்கிறது ரொம்ப தப்பு. அதை நான் செய்ய மாட்டேன்.. அப்புறம் பத்தாவது பொது தேர்வு தான் ரொம்ப முக்கியமானது. உன் ப்யூச்சர்ல நீ என்ன படிக்க போற அப்படிங்கிறதை தீர்மானிக்கிறது. அதனால் உன்னை இங்க வச்சிருக்க முடியாது” என்று தொடர்ந்து பேசி கொண்டு இருந்தவனை கை நீட்டி தடுத்தாள் தியா…
“டாக்டர் இன்னும் நாலு ஊசி வேணா குத்திக்கோங்க. ஆனா இந்த கருத்து ஊசி மட்டும் வேணாமே,இவ்வளோ பேசுறீங்களை வந்து மேக்ஸ் எக்ஸாம் எழுதி பாருங்க. அப்ப தெரியும் எங்களை மாதிரி ஸ்டூடண்ஸ் நிலைமை, அதற்கு அப்புறம் நீங்க இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேச மாட்டீங்க” என்றவளை தலையில் செல்லமாக தட்டி விட்டு வாசலை நோக்கி மெல்ல நகர்ந்தான்...
வாசல் வரை வந்தவன் திரும்பி தியாவை பார்த்தான். அவள் தனது மொபைலை நோண்டி கொண்டு இருக்க. அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக சிரித்து விட்டு சென்றான். அந்த பார்வைக்கும் சிரிப்பிற்குமான காரணம் அவன் மட்டுமே அறிவான்..
தேவா வெண்ணிலா திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு:
“வெண்ணிலா தேவா அண்ணாக்கு கால் பண்ணி பாரு, எவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் காணோம் ஒரு வேளை அண்ணா மறந்து போயிட்டிங்களோ என்னவோ” என்றாள் சாரூ வெண்ணிலாவுடன் படித்தவள்.
“ஆமா ஆமா தேவா அண்ணா மறந்து தான் போயிட்டாங்க போல இல்லைனா நாமா வந்து ஒன்றை மணி நேராமாகியும் வரமா இருப்பாங்களா, வெண்ணிலா நீ அண்ணாவுக்கு கால் பண்ணி ஞாபகப்படுத்து” என்றனர் அங்கு இருந்த மற்ற தோழிகளும்,
_ஏய் எல்லாரும் என் மாமாவ என்னை நினைச்சிட்டு இருக்கீங்க. அவங்க ஒரு தடவை சொன்னா சொன்னது தான். எதையும் மறக்க மாட்டாங்க ரொம்ப பர்பெக்ட்… அதுவும் நான் அவரோட உயிர்… அப்புடி இருக்கும் போது நான் ஒரு விஷயத்தை அவங்க கிட்ட சொல்லி அதை மறந்துருவாங்களா? கண்டிப்பா மாமா வருவாங்க. உங்க எல்லாத்துக்கும் எங்க மேரேஜ்க்கானா டீரிட் கொடுப்பாங்க, அமைதியா இருங்க” என்று கூறி கொண்டே இருக்கும் போதே வந்தான் தேவா…
“ஹாய் சாரி சாரி ஒரு எமர்ஜென்சி கேஸ்ப்பா அதான் வர லேட்டா ஆகிருச்சு. நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சா சாரி கேர்ள்ஸ்” என்றான்.
“அச்சோ அண்ணா நாங்க வெட்டி தான் அதான் சீக்கிரமா வந்துட்டோம். எங்களுக்கு வெயிட் பண்ணுனதுல எந்த பிரச்சினையும் இல்லை. வெண்ணிலாவுக்கு தான் நீங்க லேட்டா வந்ததுல உங்க மேல்ல கோவம்” என்றாள் சாரூ…
“என்ன நிலா என் மேல்ல கோவமா” என்று கேட்டவனிடம்,
“அய்யோ மாமா அப்புடி எல்லாம் எதுவும் இல்லை. நான் எப்பவாவது உங்க மேல்ல கோபப்பட்டு இருக்கானா, இவ பொய் சொல்றா நம்பாதீங்க” என பதறினாள் வெண்ணிலா…
“அண்ணா இவ தான் இப்ப பொய் சொல்றா இவ்வளவு நேரம் உங்களை நல்லா திட்டிட்டு இப்ப மாத்தி பேசுறா” என்று சாரூ சொல்ல மற்றவர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணடித்து கொண்டு ஆமாம் போட்டனர்..
அதை கேட்டு வெண்ணிலா பதற தேவாவோ சிரித்து கொண்டே என் நிலா என்னை திட்டாமா வேற யார் திட்ட போறா. அவளுக்கு தான் என்னை திட்ட முழு உரிமையும் இருக்கு. திட்டுறதுக்கு என்ன அடிக்க கூட செய்யலாம் என் நிலாவுக்கு இல்லாத உரிமையா” என சிரித்து கொண்டே கூற.
பார்த்தீங்களா என் மாமாவா என்றபடி வெண்ணிலா கர்வமாக இல்லாத காலரை உயர்த்தி காட்ட, அவளின் தோழிகளும் “நீ கொடுத்து வச்சவ தான்” என்றபடி அதன்பின் அமைதி ஆகினர்.
அதன்பிறகு அனைவருக்கும் பிடித்ததை ஆர்டர் செய்து, சிரித்து பேசியபடியே உண்டனர். மற்றவர்களை எல்லாம் அனுப்பி விட்டு வெண்ணிலாவை தன்னுடன் அழைத்து வந்தான்.
கார் பார்க் செய்த இடதுக்கு வந்த போது வெண்ணிலா முகம் ஒரு மாறி இருக்க என்னவென்று தேவா கேட்டான்…
“மாமா நான் உங்க மேல்ல கோவம் படவே இல்ல. அவளுக சும்மா தான் சொன்னாளுங்க.. உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே மாமா” என்று சற்று தயக்கத்துடன் கேட்டாள்..
“ரொம்ப வருத்தம்” என்று தேவா கூறியதில் வெண்ணிலா முகம் சுருங்க. அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளின் நெற்றி முட்டி “நீ ஏன் என் மேல்ல கோவம் படல அதான் என் வருத்தம்” என்றதும்
அவனை விழி விரித்து பார்த்தவளிடம் “ஆமாடா நிலா நீ என்கிட்ட கோபப்படனும், சின்ன சின்னதா சண்டை போடனும், அப்ப நான் உன்னை கெஞ்சி கொஞ்சி சமாதானம் பண்ணணும். இந்த மாதிரி எல்லாம் நிறைய ஆசை இருக்கு. இப்புடி சின்ன சின்ன ஊடல் அப்ப அப்ப நடந்தா தான் நம்ம வாழ்க்கை போர் அடிக்கமா இண்டஸ்டீரிங்க போகும்”
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ நிறையா என்கிட்ட சண்டை போடுற, மாமா விதவிதமான முறையில் உன்னை சமாதானம் பண்றேன் என்றான் அவளின் இடையை அழுத்தி கண் அடித்தபடி, அதில் வெக்கம் எழ “போங்க மாமா” என்று சிணுங்கிய படியே அவன் மார்பில் தஞ்சம் அடைந்தவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
இதை எல்லாம் சீனீ மிட்டாயை மொய்க்கும் ‘ஈ’ போல எந்நேரமும் வெண்ணிலா வை பின் தொடரும் திவேஷ் தூரத்தில் இருந்து பார்த்து உள்ளுக்குள் கொதித்து கொண்டு இருந்தான்….
அடுத்த நாள்:
“உங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாத?”
“ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்க போற பொண்ணுங்கிட்ட அடிக்கடி வந்து லவ் பண்றேன் லவ் பண்றேன் சொல்லி ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?”
“நான் தேவா மாமாவை தான் லவ் பண்றேன் உங்களுக்கு தெரியும் தானே. அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க.. இங்க இருந்து போங்க” தன் எதிரே இருக்கும் திவேஷை பார்த்து கோபமாக சத்தம் போட்டாள் வெண்ணிலா…
“வெண்ணிலா ப்ளீஸ் என்னை புரிஞ்ச்சுக்கோ. நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். என்னைக்கு உன்னை பார்த்தேனோ அப்ப இருந்து. உன் மேல்ல பைத்தியமா சுத்துறேன். என் அளவுக்கு யாரும் உன்னை லவ் பண்ண முடியாது. அந்த தேவாவால கூட, நான் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பேன். எந்த விதத்திலும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்…இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டு, ப்ளீஸ் வெண்ணிலா நீ இல்லைனா நான் செத்துருவேன் என்னை என் காதலை புரிஞ்ச்சிக்கோ” என்று அவள் இருகைகளையும் பற்றி கொண்டு அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தான் திவேஷ்..
அவனிடம் இருந்து தன் கைகளை கடினப் பட்டு உருவியவள் அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்து இருந்தாள்… “இன்னோரு தடவை என்கிட்ட இப்புடி நடந்துக்கிட்டீங்க அவ்ளோ தான்” என்றாள் தன் கைகளை ஒரு முறை காட்டி,
“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நீங்க என்கிட்ட வந்து இப்புடி பைத்தியக்கார தனமா உளறுனா முதல் நாளே மாமா கிட்டயோ இல்ல சூர்யாக்கிட்டயோ சொல்லி இருக்கனும்… என்னால ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள எந்த சண்டையும் வரக்கூடாதுன்னு நினைச்சு சொல்லமா விட்டது என் தப்பு தான். இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இனிமே என்னை ஏதாவது தொந்தரவு பண்ணுனீங்க அவ்ளோ தான்” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றாள் வெண்ணிலா…
வெண்ணிலா தன் காதலை உதறி தள்ளியதற்கும், இப்போது நடந்து கொண்டதற்கும் தேவா மீதே வெறுப்பை வளர்த்து கொண்டான்…
“டேய் ஜீவா ஏன்டா ஏன்டா வெண்ணிலாவுக்கு என் காதல் புரிய மாட்டேங்குது… நான் அவளை அவ்ளோ லவ் பண்றேன்டா புரிஞ்ச்சிக்க மாட்டேங்கிறாடா, இன்னைக்கு என்னை அடிச்சிட்டாடா, அடிச்சது கூட பரவாயில்லைடா, ஆனா வார்த்தைக்கு வார்த்தை மாமாவ லவ் பண்றேன். மாமாவை லவ் பண்றேன் சொல்றதை கேட்கும் போது அந்த தேவாவை கொல்லும் அளவுக்கு செம கோவம் வருதுடா”, என்று எப்போதும் போல் திவேஷ் குடித்து விட்டு ஜீவா விடம் புலம்பி கொண்டு இருக்க..
ஜீவாவோ அவன் புலம்பலை எல்லாம் காதில் வாங்காமல் செல் போனில் இருக்கும் தியா புகைப்படத்தை பார்த்தபடி எதையோ பலமாக சிந்தித்து கொண்டு இருந்தான்…
“என்னடா நான் பேசிட்டு இருக்கேன். நீ எந்த பதிலும் சொல்லாமா போனையே பார்த்ததுட்டு இருக்க” என்றபடி ஜீவா கையில் இருந்த மொபைலை திவேஷ் பிடுங்க போக ஜீவாவின் யோசனை தடை பட அது அவனுக்கு எரிச்சலை கொடுத்தது.
திவேஷ் மேல் கோவம் எழ “என்னடா உன் பிரச்சினை எப்ப பார்த்தாலும் வெண்ணிலா வெண்ணிலான்னு பைத்தியம் மாதிரி உளறிட்டு சுத்துற”,
“என்னடா காதல் மயிர் மண்ணாங்கட்டிட்டு இன்னோருத்தன் பின்னாடி சுத்துற பொண்ணு தான் உனக்கு வேணுமா? வேற யாருமே கிடைக்கலையா உனக்கு?”
“அந்த வெண்ணிலாவும் தேவாவும் எல்லார் முன்னாடியுமே ஃபேப்பிகால்(Fevicol) போட்டு ஒட்டுனா மாதிரி, ஓட்டிட்டு சுத்துங்க. ஆள் இருக்கும் போதே இப்புடினா, தனியே இருக்கும் போது என்ன நிலையில் இருக்குங்க. இந்நேரத்துக்கு அந்த தேவா விருந்தே சாப்ட்டு முடிச்சு இருப்பான்.. இன்னோருத்தன் சாப்பிட்ட எச்ச இலை தான் உனக்கு வேணுமா?
எல்லாத்தையும் விட்டு தொலை, இந்த ஒரு வெண்ணிலா இல்லன்னா என்ன, ஆயிரம் வெண்ணிலா வாழ்க்கையில் உருப்படற வழியை பாருடா” என கோவப்பட்டான் ஜுவா…
“என் காதல் உனக்கு அவ்ளோ கேவலமா போயிருச்சாடா, எனக்கு ஆயிரம் வெண்ணிலா வேண்டாம். இந்த ஒரு வெண்ணிலா போதும்… அவளை தான் நான் காதலிக்கிறேன். அவ மேல்ல என் உயிரையே வச்சு இருக்கேன்டா… நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ ஜீவா… வெண்ணிலா மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நான் செத்துருவேன்டா” என்று பைத்தியக்கார தனமாக பேசியவன் மேல் பயங்கர கோவம் எழுந்தாலும், இந்த பைத்தியக்காரத்தனமான காதலை வைத்தே, தான் இப்போது யோசித்த திட்டத்தை செயல்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணமும் உண்டானது…
ஜீவா எழுந்து திவேஷ் அருகில் அமர்ந்து அவனின் தலையை வருடி விட்டு, “உன் நிலைமை என்னனு எனக்கு புரியுது திவா.. நீ என் ப்ரெண்டுடா உனக்கு ஒரு கஷ்டம்னா நான் பார்த்துட்டு இருப்பேனா, இவ்வளோ நேரம் நான் என்ன யோசிட்டு இருந்தேன் தெரியுமா? தேவா கல்யாணத்தை எப்புடி நிறுத்துறதுன்னு தான்” என்று பொய்யான கரிசனத்துடன் திவேஷ் தலை வருடி கூற,
அதை உண்மை என்று நம்பிய திவேஷ் ஜீவா கையை பிடித்து கொண்டு “உண்மையாவே இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா?” ஜீவா… எப்புடின்னு சொல்லுடா” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டான்…
“முடியும் என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு அதை சரியா எக்ஸ்க்யூட் பண்ணுனோம்னு வை தேவா வெண்ணிலாவா பிரிச்சரலாம்” என்று ஜீவா கூற…
“என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு ஜீவா என் வெண்ணிலா கிடைக்கிறதுகாக நான் என்ன வேணா பண்ணுவேன்” என்று தீவிரமாக கூறிய திவேஷை பார்த்த ஜீவா, வாடா மவனே இது தான்டா எனக்கு வேணும் என்று மனதிற்குள் நினைத்தவன்,
தன் மொபைலில் இருந்த தியா புகைப்படத்தையும் அவளின் மெடிக்கல் ரிப்போர்டையும் காட்ட, திவேஷிற்கு ஜீவா சொல்லாமலே புரிந்தது தன்னை என்ன செய்ய சொல்கிறான் என்று,
“டேய் உனக்கு ஏற்கெனவே நிறைய தடவை சொல்லி இருக்கேன்.. இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டேன் சொல்லி, இது ரொம்ப தப்பு பெரிய பாவம்.. மாட்டுனா அவ்ளோ தான் ஜென்மத்துக்கும் ஜெயில்ல உக்கார்ந்து களி தின்னனும்… ஆளை விடு நான்லாம் இதை செய்ய மாட்டேன்” என்று கோவமாக கூறினான் திவேஷ்…
“செய்யலனா போடா எனக்கு எந்த நஷ்டமும் இல்லை…நஷ்டம் உனக்கு தான்”…
“இது எல்லாம் நான் உனக்காக தான் செய்றேன்…தேவா கல்யாணத்தை நிறுத்துறதுன்னா ரொம்ப சாதரணமா, அதற்கு பணத்தை தண்ணியா செலவு செய்யனும்… சொல்லு அந்த அளவு பணம் உன்கிட்ட இருக்கா, இல்லைல”.
“இது எல்லாம் உனக்காக திவா. உன் காதலுக்காக. உன் வெண்ணிலா உனக்கு கிடைக்கனும்கிறதுக்காக” என்று திவேஷை தன் திட்டத்தில் விழ வைக்க வெண்ணிலா என்னும் அம்பை சரியாக ஜீவா திவேஷ் மேல் எய்தினான். அது சரியாக வேலை செய்தது. அடுத்த நாளே பள்ளி சென்ற தியா கடத்தப்பட்டாள்….
வேதாசலத்தின் நெருங்கிய நண்பர் தான் மகேஸ்வரன்.இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒன்றாக முடிக்க மகேஸ்வரன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்..
வேதாசலம் தங்கள் குடும்ப தொழிலை நிர்வகிக்க நிர்வாக பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரி வேற வேற மாறினாலும் அவர்களின் நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இருவரும் கல்லூரி முடித்ததுமே வேதாசலத்திற்கு வீட்டினரால் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததது. மகேஸ்வரன் உடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் நட்பை இவர்களின் மனைவிகளும் புரிந்து கொண்டதால் எந்த பிரச்சினையும் இன்றி இன்று வரை தொடர்கிறது. குடும்ப நண்பர்கள் ஆகினர்.
அதன் பின்பு வேதாசலம் மில் நிர்வாகத்தை கையில் எடுக்க, மகேஸ்வரன் ஆரோக்கியம் மருத்துவமனை பொறுப்பை கையில் எடுத்தார். ஆரோக்கியம் மருத்துவமனை மகேஸ்வரனின் தாத்தா சிறியதாக ஆரம்பிக்க அதை மகேஸ்வரன் தந்தை ஓரளவு பெரிதாக்கினார். மகேஸ்வரன் பொறுப்பேற்ற பின்பு தான் மருத்துவமனை மிகவும் பிரபலமானது.. மக்களிடம் நிறைய நன்மதிப்பைப் பெற்றது. மகேஸ்வரன் மருத்துவமனையை விரிவுப்படுத்தியது மட்டுமில்லாமல் நிறைய ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாத மலை வாழ் மக்களுக்கும் கூட இலவசமாக மருத்துவ உதவி நிறைய செய்தார். அதனால் மகேஸ்வரனுக்கும் மருத்துவமனைக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அந்த காலத்தில் எல்லாம் ராஜாக்களின் உயிர் ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு கிளிக்குள்ள இருக்கும் சொல்லுவாங்க. அதே போல் தான் மகேஸ்வரனின் உயிர் இந்த மருத்துவமனை என்றாகி போனது.
வேதாசலத்திற்கு ராஜேந்திரன், தேவேந்திரன், ராகேவந்திரன், இந்துமதி என்று நான்கு பிள்ளைகள். மகேஸ்வரனுக்கு கார்த்திக் என்று ஒரே ஒரு பையனே. வேதாசலத்திற்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் அவரின் செல்ல பிள்ளை தேவா தான். இன்று அவனை கண்டாலே வெறுப்பவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிரையே வைத்திருந்தார்.. அவனின் அண்ணன் தம்பி தங்கை கூட அவன் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்.
தேவாவும் தன் தாய் தந்தை மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை அனைத்தும் வைத்திருந்தான். தன் சகோதரர்கள் மீது அவர்களை விட அதிகமான பாசம் கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிக்காரன் ஒழுக்கத்திலும் சிறந்தவன்… இன்று சிரிக்கவே தெரியாது என்பது போல் இறுக்கமான முகத்துடன் இருக்கும் தேவா. அப்பொழுது எல்லாம் சிரித்த முகத்துடனே வலம் வருவான். தம்பி, தங்கையரை கேலி செய்து சிரித்து அவர்களுடன் விளையாடி எப்பொழுதும் மகிழ்ச்சியாக தான் இருப்பான்.
தன் தந்தை மீது எவ்வளவு மரியாதை அன்பு எல்லாம் இருந்ததோ, அதே போன்ற அன்பு மரியாதையை ஒரு துளி கூட குறையில்லாது மகேஸ்வரன் மீதும் வைத்து இருந்தான். எப்போதும் மாமா மாமா என்று சிறு வயதில் இருந்தே அவர் பின்பே சுற்றுவான். அவரை பார்த்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்ததது.மகேஸ்வரனை தன் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவரை போன்றே மருத்துவராகி நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்று எண்ணத்துடனே படித்தான்.
மகேஸ்வரனுக்கும் தேவா என்றால் மிகுந்த ப்ரியம். தன் மகன் கார்த்தியை போன்றே ஏன் ஒரு படி மேலேயே அவன் மேல் அன்பாக இருந்தார். தனக்கு ஒரு மகள் பிறந்தால் அதை கண்டிப்பாக தேவாவிற்கு தான் திருமணம் செய்து வைத்திருப்பேன் என்று மகேஸ்வரன் வேதாசலத்திடம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அவருக்கு ஒரே மகன் தான் கார்த்திக்…
கார்த்திக்கும் தேவாவிற்கும் ஒரே வயது இவர்களும் தங்கள் தந்தையை போன்றே நண்பர்கள். ஒன்றாக பள்ளி படிப்பை முடித்து மருத்துவ கல்லூரி அடியேடுத்து வைத்தனர்.ஒரே கல்லூரி என்றாலும் வேற வேற டிபார்ட்மெண்ட் வேற வேற வகுப்பு. கல்லூரியில் கார்த்திக்கு அறிமுகம் ஆகி நண்பர்கள் ஆனவர்கள் தான் ஜீவா, திவேஷ்.
தேவாவிற்கும் கல்லூரி முதல் நாளே கிடைத்த நட்பு தான் சூர்யா. தன் அருகே அமர்ந்த சூர்யாவிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட தேவா அவன் பெயர் கேட்க சூர்யா என்று சொன்னதும் இருவருக்கும் தளபதி பட தேவா சூர்யா நியாயபகம் வர அடுத்த நொடி கை குலுக்கி நண்பர்கள் ஆகினர். அந்த நொடி தேவா கையை பிடித்த சூர்யா இன்று வரை விடவில்லை. அவன் சோதனை காலங்களில் தோள் கொடுத்து அவனுக்கு உறுதுணையாக நிற்கின்றான்.
என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்ற நாடோடிகள் சசிகுமார் கொள்கையின் படி ஐவரும் நண்பர்கள் ஆகினர். சூர்யாவிற்கும் திவேஷ்ற்கும் ஏனோ அப்போது இருந்தே ஒத்து வராது. இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட அதை தேவா தான் தீர்த்து வைப்பான். ஒரு நாள் இருவரின் சண்டை முற்றி கைகலப்பு வரை சென்றது. அதை தடுத்து கார்த்திக் தேவா இருவரும் விசாரித்தனர்…
“டேய் நேத்து ஜுனியர் பையன் ஒருத்தனை ரேக்கிங்கிற பேர்ல் ரொம்ப போட்டு கஷ்டப்படுத்திட்டு இருந்தான் தேவா, ஏன்டா இப்படி செய்ற விடு அந்த பையனை சொன்னதுக்கு சண்டைக்கு வரான்டா” என்றான் சூர்யா.
அந்த ஜுனியர் பையனிடமும் திவேஷுடமும் விசாரிக்க சூர்யா சொன்னது தான் உண்மை திவேஷ் மேல் தான் தவறு. இப்போதும் திவேஷ் தவறை ஒப்பு கொள்ளலாமல் சூர்யாவிடமே மறுபடியும் சண்டைக்கு வர தேவா திவேஷை அடித்து கண்டித்தான்… சூர்யாவையும் தான் கண்டித்தான்… இருவரும் இனி எப்போதும் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினான். ஆனால் திவேஷ்ற்கு அந்நிகழ்வில் இருந்தே தேவா மீது சிறிய கோவமும் எரிச்சலும் உண்டானது…
ஒரு நாள் சூர்யா நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்து இருந்தான். தன் தங்கையின் பிறந்த நாள் விழாவிற்காக, அனைவரும் சூர்யா அழைப்பை ஏற்று அங்கு சென்று இருந்தனர். அன்று தான் முதன் முதலாக தேவா வெண்ணிலாவை பார்த்தான்… பாவாடை தாவணியில் பதின் பருவ குமாரியாக இருந்தவளை பார்த்த மாத்திரத்தில் பிடித்து போனது தேவாவிற்கு.
வெண்ணிலா பேருக்கு ஏற்ப அந்த நிலவை போன்ற மாசு மருவற்ற பொலிவான முகம். பால் வண்ணம், வில் போன்று வளைந்த புருவம், காண்போரை ஈர்க்கும் மீன் விழி, ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத அளவான உடல் வாகு, ஆரஞ்சு சுளை ஒட்டி வைத்தது போன்ற அதரம்… வெண்ணிலா அப்படி தேவலோக ரம்பை போன்று பேரழகி தான். அழகில் மட்டும் இல்லாமல் குணத்திலும் ஒரு குறையும் சொல்ல முடியாது… தேவலோக இந்திரனே மயங்குவான் எனும் போதுப் மண்ணுலக தேவேந்திரன் மயங்க மாட்டானா? பார்த்த உடனே வெண்ணிலா மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அந்த ஈர்ப்பு நாளைடைவில் காதலாக மாறியது.
ஆனால் அதை வெண்ணிலாவிடம் சொல்ல முடிய வில்லை.
வெண்ணிலாவை பார்ப்பதற்கு என்றே தினம் சூர்யா வீட்டுக்கு செல்லுவான். அங்கு சென்று அவள் அன்னையிடமும் அக்கா மஞ்சுவிடமும் கதை அடிப்பான். மஞ்சு வாய் ஓயாமல் பேசும் ரகம் என்றால் வெண்ணிலா எதிர்மறை அமைதியான குணம். தன் வீட்டில் உள்ளவர்களிடமே தேவைக்கு மீறி ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள்.
ஜீவா, கார்த்திக், திவேஷிடமாவது ஏதாவது பேசுபவள் தேவாவிடம் மட்டும் பேச மாட்டாள். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் தேவா குழம்பினான்.. தினமும் இரவில் வரும் நிலவை பார்த்து அதை வெண்ணிலாவாக எண்ணி அதனிடம் காதலை சொல்லி நிலா நிலா என்று கொஞ்சி கொண்டு இருப்பான்.. ஆனால் உரியவளிடம் காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து தவித்து கொண்டு இருந்தான் தேவா…
வெண்ணிலாவிடம் தன் மனதை தெரிவிக்கமால் இருந்ததற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று அவள் அப்போது தான் ப்ளஸ் டூ படித்து கொண்டு இருந்தாள். இன்னோரு காரணம் சூர்யா தன்னை தவறாக எண்ணி கொள்வானோ என்பது தான். ஏனெனில் ஜீவாவும் கார்த்திக்கும் வெண்ணிலாவை தன் உடன் பிறவா சகோதரியாக எண்ணி தங்கச்சி என்றே அழைப்பர். அது தேவாவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. நண்பனின் தங்கையை காதலிப்பது தவறோ என்ற எண்ணம் தோன்ற எப்போதும் தனக்கு குழப்பம் வந்தால் எங்கு போய் நிற்பானோ அதே மகேஸ்வரன் முன்பு போய் நின்றான்….
ஜீவா, கார்த்திக் வெண்ணிலாவை தங்கை என்று அழைப்பதை கவனித்த தேவா, அவளை திவேஷ் அவ்வாறு அழைக்க வில்லை என்பதையும், அவள் மீது படரும் அவன் பார்வையையும் கவனிக்க தவறி விட்டான்….
பாகம் 17
“என்ன கண்ணா என்ன குழப்பம்” தன் எதிரே அமர்ந்து இருந்த தேவாவை பார்த்து கேட்டார் மகேஸ்வரன்.
தன் முகத்தை பார்த்தை தன் மனநிலையை சொல்லும் மாமாவை பார்க்கையில் தேவாவிற்கு ஆச்சரியமும் பெருமையும் ஒரு சேர உண்டானது. நண்பனின் தங்கை மீது தனக்கு உண்டான காதல் சரியா தவறா என்ற தன் குழப்பத்தை அவரிடம் கூற,
“இதுல என்ன கண்ணா இருக்கு இது தப்பே கிடையாது… இது ஊர் உலகத்தில் நடக்காமையா இருக்கு.. என் தங்கச்சிக்கு உங்கப்பாவுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இல்லைன்னா லாவண்யா வை உன் அப்பாக்கு தான் கட்டி வச்சு இருப்பேன்.. உன் அப்பாவுக்கு தங்கச்சிமே இல்ல நான் கட்டுறதுக்கு, அதனால் தான் இப்ப கார்த்திக் இந்துமதிக்கு கல்யாணம் பண்ணி சம்பந்தியாவது ஆகனும் நினைக்கிறோம். நீ உன்னை குழப்பிக்கிற அளவு எல்லாம் இது அவ்ளோ பெரிய பிரச்சினை இல்லை கண்ணா” என்று மகேஸ்வரன் கூறினார்.
“நம்ம வீட்டு கதை வேற மாமா. ஒரு வேளை சூர்யாவுக்கு நாளைக்கு நான் வெண்ணிலாவை லவ் பண்றது தெரிஞ்சா இதை எப்படி எடுத்துப்பானோன்னு யோசனையா இருக்கு… உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பே வேண்டாம் சொல்லி போய்ருவான்னோன்னு பயமா இருக்கு” என்று மேலும் குழம்ப,
“சூர்யா உனக்காக உயிரையே கொடுப்பான். தங்கச்சியை கொடுக்க மாட்டானா? என்ன இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷம் தான் படுவான். அவன் தங்கச்சிக்கு இப்படி ஒரு அச்சு வெல்லகட்டி மாப்பிள்ளை வேற எங்க தேடினாலும் கிடைக்காது” என்று மகேஸ்வரன் கூற வெட்கப்பட்டு சிரித்து சரி என்று விட்டு தேவா அங்கிருந்து கிளம்பினாலும் அவன் குழப்பம் இன்னும் முழுவதும் தீரவில்லை என்பது மகேஸ்வரனுக்கு நன்றாக புரிந்தது.
அப்போது தான் தேவா அண்ணா ஜெயேந்திரனுக்கு வரன் தேடி கொண்டு இருந்தனர். மகேஸ்வரன் நேரடியாக வேதாசலத்திடம் சென்று ஜெயேந்திரனுக்கு நம்ம சூர்யாவோட அக்கா மஞ்சுளாவை பேசி முடிக்கலாம் என்று யோசனையை கூற தேவா தந்தைக்கும் சூர்யாவை பற்றியும் அவன் குடும்பத்தில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்பதால் மகேஸ்வரனின் இந்த யோசனை பிடித்து போக அன்று மாலையே மஞ்சுவை பெண் கேட்டு சூர்யா வீட்டிற்கு சென்றனர்.
சூர்யாவின் தந்தை இப்போது இல்லை தாய் மட்டுமே. அவர் முதலில் தயங்கினாலும் பிறகு ஒப்பு கொண்டார். மஞ்சுளா, ஜெயேந்திரனிடம் சம்பந்தம் கேட்க, அவர்களும் தங்களுக்கு முழு சம்மதம் என தெரிவிக்க. அடுத்த முகூர்த்தத்திலே அவர்கள் திருமணம் நடந்தேறியது.
“இப்ப வெண்ணிலா உனக்கு ப்ரெண்டோட தங்கச்சி மட்டும் இல்ல உன் அண்ணியோட தங்கச்சியும் கூட உனக்கு கட்டிக்கிற முறை கூட இருக்கு. நீ தாராளமா வெண்ணிலா வை லவ் பண்ணலாம். இப்பவாவது அந்த பிள்ளை கிட்ட போய் உன் மனசில் இருக்கிறதை சொல்லு கண்ணா” என்று கூறிய மகேஸ்வரனை இறுக அணைத்து கொண்டான் தேவா. தன் மீது மகேஸ்வரன் வைத்திருக்கும் அன்பை எண்ணி பூரித்து போனான்..
“என்னது இது புதுசா தாங்க்ஸ் எல்லாம் சொல்ற கண்ணா… உனக்கு நான் செய்யமா வேற யார் செய்வாங்க. எனக்கு நீ கார்த்தி ஹார்ஷா மாதிரி இல்ல இல்ல கார்த்தி ஹார்ஷாவை விட ஒரு படி மேல் தான் என்றவரின் அன்பில் தேவா கரைந்து தான் போனான்.
ஆனால் இந்த அன்பு மாமா தான் நாளை தன் மானத்தை காப்பாத்த இவனை இரையாக்க போகிறார் என்பதை அவன் அறியவில்லை. மகேஸ்வரனுமே தன் மகனுக்கு மேலாக நினைத்த தேவா வாழ்க்கையை தானே அழிக்க போகிறோம் என்பதை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
என்ன தான் மகேஸ்வரன் வெண்ணிலா விடம் காதலை தெரிவிக்க கூறினாலும் இப்போது வேண்டாம் அவள் படிப்பு முடியட்டும் என்று தேவா அமைதி காத்தான்…
நாட்கள் அதன் போக்கில் ஓடின… தேவா, சூர்யா, கார்த்திக், ஜீவா, திவேஷ் ஐவரும் ஆரோக்கியம் மருத்துவமனையிலே வேலைக்கு சேர்ந்தனர்… தேவா சிறிது காலத்திலே கை தேர்ந்த மருத்துவர் என்ற பெயர் வாங்கினான்… அவன் செய்த அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றி தான். மகேஸ்வரன் செய்து வந்த உதவிகள் போன்று தேவாவும் மலையை ஒட்டியுள்ள ஏழை எளிய மக்கள் ஆதிவாசி ஜனங்களுக்கு மருத்துவ உதவி நிறையவே செய்தான். அவனுக்கு இதன் மூலம் நிறைய நல்ல பெயரையும் புகழையும் கொடுத்தது… அவனுக்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியம் மருத்துவமனைக்கும் புகழ் கிடைத்தது. வெளி மாநிலம் வெளி நாட்டில் இருந்து கூட வைத்தியத்திற்கு ஆரோக்கியம் மருத்துவமனை வந்தனர்… திவேஷிற்கு ஏனோ தேவாவை மற்றவர்கள் புகழ்வது பிடிக்க வில்லை…
வெண்ணிலா பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தாள். அவளும் மருத்துவதுறையை தேர்ந்தெடுத்து நான்காண்டுகள் கடந்து இறுதி ஆண்டுக்குள் வந்து விட்டாள்…
அன்று ஒரு நாள் சூர்யாவை பார்ப்பதற்காக தேவா அவன் வீட்டிற்கு செல்ல, அங்கு சூர்யா அவன் அம்மா இருவரும் இல்லை. வெண்ணிலா மட்டும் தனியாக இருந்தால், தேவா சூர்யாவிற்கு கால் செய்ய ஒரு டேன் மினிட்ஸ் டா வந்திரேன். வீட்டிற்குள்ள உக்கார் என்று சொல்லி காலை துண்டித்தான்.
தேவாவிற்கு வீட்டிற்குள் செல்ல தயக்கம் எப்படியும் அவள் தன்னிடம் பேச மாட்டாள். அதோடு யாரும் இல்லாத வயது பெண் மட்டும் இருக்கும் வீட்டிற்குள் அமர்வது தவறு என்று வாசலில் தனது பைக்கில் அமர்ந்து மொபைலை நோண்டி கொண்டு இருந்தான்…
அப்போது அவன் அருகே கொலுசு சத்தம் கேட்டது. சத்தத்தை வைத்தே அது யார் என்று தெரிந்தவன் நிமிர்ந்து பார்க்க. வெண்ணிலா கையில் ஒரு கோப்பையை ஏந்தியபடி புன்னகை முகமாக அவன் முன்னே நின்றாள். தேவா தான் நம்ம முடியாத அதிர்ச்சியில் நின்றான். ஏனெனில் தேவா சத்தம் கேட்டாலே அவள் ரூமை விட்டு வெளியே வர மாட்டாள். அப்படி இருக்கையில் இன்று அவளாகவே வந்து அவன் முன்பு நிற்கிறாள்…
வெண்ணிலா அதே சிரித்த முகத்துடன் “டீ எடுத்துக்கோங்க மாமா” என்று கூற, முதன் முறை அவளின் மாமா என்று அழைப்பில் தேவா மனதில் சாரல் அடித்தது போன்று அவ்வளவு குளுமையாக இருந்தது. இறக்கை இல்லாமல் விண்ணில் பறப்பது போன்ற உணர்வு… இமைக்காமல் அவளையே அவன் பார்த்து கொண்டு இருக்க. “ஏன் மாமா இப்படி வெயில்ல வெளியே நிற்கிறீங்க உள்ள வாங்க” என்று அவள் அசராமல் அடுத்த அதிர்ச்சியை கொடுக்க.. அதில் சுய உணர்வு பெற்றவன்…
என்ன இன்னைக்கு ஷாக் மேல ஷாக்கா கொடுத்து சாக அடிச்சிருவா போல என்று மனதில் எண்ணி கொண்டு வானத்தை பார்க்க, வெண்ணிலா புரியாமல் தேவாவை பார்த்தாள்.
“இல்ல எப்பவும் என்னை பார்த்தா அடிச்சு புடிச்சு உள்ளே போயிடுவா. ஒரு வார்த்தை பேச மாட்ட, இன்னைக்கு நீயே வந்து பேசுறீயே அதான் அடைமழை ஏதும் வர போகுதான்னு பார்த்தேன்”…
“நான் உங்க கிட்ட பேசாமா இருந்ததுக்கு காரணம் பயம் தான்”.
“என்ன பயம் நான் என்ன பேயா” என்று தேவா கேட்க,
“இல்ல இல்ல என்று வேகமாக ஆட்டியவள்,அந்த பயம் வேற”,
“வேற என்ன” தேவா அழுத்தி கேட்க,
“நான் உங்க கிட்ட பேசுனா கார்த்தி அண்ணா ஜீவா அண்ணா மாதிரி நீங்களும் என்னை தங்கச்சி அப்படின்னு சொல்லிடுவீங்களோ அப்படிங்கிற பயம் தான்” என்று கூறி விட்டு தலை குனிய,
முதலில் அவள் கூறியதன் அர்த்தம் விளங்காமல் தேவா முழிக்க, திரும்ப அவள் என்ன கூறினாள் என்று ஓட்டி பார்த்தவனுக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. அதே மகிழ்வுடன் “நிலா இப்ப நீ என்ன சொல்ல வர” என்று உறுதி படுத்தி கொள்ள மீண்டும் கேட்க.
“நீங்க டாக்டர் உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் டாக்டரா இருந்தா தான் உங்களுக்கு மரியாதையாவும் உதவியாகவும் இருக்கும்னு தான் நான் டாக்டருக்கே படிக்கிறேன்” என்று தன் மனதில் உள்ள காதலை மறை முகமாக தெரிவித்து விட்டு வெட்கத்துடன் உள்ளே ஓடினாள்….
தேவா தான் அவள் கூறியதில் திக்கு முக்காடி போனான். சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தையே வரவில்லை… வெண்ணிலா மனதிலும் தான் இருப்பதை நினைக்கையில் உலகையே வென்ற கர்வம் அவனுக்கு வந்தது. கை இரண்டையும் விரித்து வானத்தை நோக்கி கத்தி தன் மகிழ்வை வெளிப்படுத்தினான்…
“டேய் டேய் ஏன்டா ஏன் இவ்வளோ குடிக்கிற, உனக்கு இது பழக்கம் இல்லாத விஷயம்” என்று மதுப்பொத்தலை திவேஷிடம் இருந்து ஜீவா பறிக்க.
அதை தன்னோடு அணைத்து கொண்டு “இல்ல இல்ல நான் தர மாட்டேன் நான் குடிக்கனும்.. குடிச்சு என் கவலையை மறக்கனும்” என்று குமட்டிக் கொண்டே திவேஷ் கூறினான்…
“கவலையா குடிக்கிற அளவுக்கு அப்புடி என்ன கவலை” என்று அவனை தாங்கியபடியே ஜீவா வினவ,
“லவ் பெயிலியர் நான் வெண்ணிலா கிட்ட இன்னைக்கு ப்ரெபோஸ் பண்ணுனேன். ஆனா அவ என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா”,
“என்னது நீ வெண்ணிலா வை லவ் பண்றயா, அவளை தான் தேவா பார்த்த முதல் நாள்ல இருந்தே லவ் பண்றானே, நம்ம கிட்ட கூட வந்து சொன்னேனே, அப்புறம் ஏன்டா நீ அவளை லவ் பண்ண”,
“ஏன் தேவாவ விரும்புன்னா, நான் லவ் பண்ண கூடாதா, எனக்கும் அவளை பார்த்த உடனே பிடிச்சிருச்சு. ஆனா அவ அந்த தேவாவை லவ் பண்றேன்னு என் கிட்ட சொல்றா” என்று அவன் அழுது கொண்டே கூற, ஜீவா தான் அவனை தேற்றி கொண்டு இருந்தான்…
இதோ இன்று மூன்று ஜோடிகளுக்கு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்று மகேஸ்வரன் மகன் கார்த்திக் தேவா தங்கை இந்துமதிக்கும். அடுத்த ஜோடி சூர்யா- ஷோபனா. மூன்றாவது ஜோடி தேவா- வெண்ணிலா…
வெண்ணிலா காதலை சொன்ன பிறகும் தேவா அமைதியாக இருப்பானா. அடுத்த நாளிலிருந்தே கோவையில் இனி இடமே இல்லை என்னும் அளவிற்கு ஜோடியாக ஊர் சுற்றி, மொபைலையே என்னை விட்டுருங்க என்று கூறும் அளவுக்கு விடிய விடிய சேட்டிங், காலிங் எல்லாம் செய்து காதலை வளர்த்தனர். இவர்களின் காதல் விரல் தீண்டா காதல் என்று எல்லாம் கூறி விட முடியாது கட்டுப்பாட்டோடு கூடிய இறுகிய அணைப்பு இதழ் முத்தம் இது எல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் பகிர பட்டு உள்ளது. அதற்கு மீறி தேவா எதிர்பார்த்ததும் இல்லை வெண்ணிலா அனுமதிக்கும் இல்லை.
இதோ நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது முதலில் கார்த்திக் இந்துமதி திருமணம். அடுத்த முகூர்த்தத்தில் சூர்யா ஷோபானா திருமணம். இந்த இரண்டு திருமணம் முடித்து ஒரு மாதம் கழித்து தேவா வெண்ணிலா திருமணம் என்று பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது…
திவேஷ் தான் தினமும் குடித்து விட்டு வெண்ணிலா இல்லைன்னா செத்துருவேன்டா என்று ஜீவா விடம் புலம்பி அழுது கொண்டு இருப்பான். இதை ஜீவாவும் யாரிடமும் சொல்லத்தால் தேவாவிற்கு தெரியாமலே போனது…
இரண்டு திருமணமும் நல்ல முறையில் நடந்தேறியது. இவர்களின் திருமணமே மிக ஆடம்பரமாக விமர்சையாக நடை பெற வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். வேதாசலம், மகேஸ்வரன், சூர்யா மூவரும் திருமண ஏற்பாட்டை கவனித்து கொண்டனர்.. தேவா வெண்ணிலா தங்கள் திருமண நாளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். ஏனோ நகரும் நொடிகள் இவர்களுக்கு மட்டும் யுகங்களாக தெரிந்தது. தேவா ஹனிமூன் செல்வதற்காக வெளி நாட்டிற்கு டிக்கெட் கூட புக் செய்து வைத்திருந்தான்.ஃப்ரீ வெட்டிங் சூட் எல்லாம் முடித்து திருமணத்திற்கு தயாராகி இருந்தனர்.
இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்தது.. தங்கள் திருமணம் எவ்வாறு எல்லாம் நடை பெற வேண்டும். அதன் பின்பு தங்கள் வாழ்வு எப்புடி இருக்க வேண்டும் என்று இருவரும் பல கற்பனை கோட்டையை கட்டிவைத்து இருந்தனர்.
ஆனால் அந்த கற்பனை கோட்டை எல்லாம் சிதறி மண்ணோடு மண்ணாக போனது. மகேஸ்வரன், ஜீவா, திவேஷ் மற்றும் தெரிந்தோ தெரியாமாலோ 15 வயதான தியா இந்த நால்வரால்,
திவேஷ் கோவமாக அந்த வீட்டிற்குள் வந்தான். அங்கு நடு ஹாலில் அமர்ந்து இருந்த செந்திலை பார்த்தவனின் கோவம் இன்னும் அதிகமானது.. (இந்த செந்தில் யாருன்னா மாலில் ஒரு நாள் தியா தேவா இருக்கும் போது ஒருத்தவங்க வந்து தேவாகிட்ட சண்டை போடுவாங்களே அவங்க தான்)
திவேஷை பார்த்த அவரோ “வாப்பா திவா” என்று இன்முகத்துடன் வரவேற்றவர், “கௌரி நம்ம திவா வந்து இருக்கான் பாரு, காபியை எடுத்துட்டு வாம்மா” என்று தன் மனைவியிடம் கூறி விட்டு திவேஷை அமரும் படி கூற, அவர் அருகில் வந்த திவேஷ் கோவமாக பேச ஆரம்பிக்கும் போது,
“திவா எப்புடி இருக்கப்பா இந்த காபி எடுத்துக்கோ, எங்களை எல்லாம் மறந்துட்ட போல, இப்ப எல்லாம் இந்த பக்கம் வரதே இல்ல” என்றபடி கையில் ட்ரேயுடன் அவ்விடம் வந்தார் கௌரி..
“நல்லா இருக்கேன் அம்மா .கொஞ்சம் வேலை அதான் வர முடியலை” என சொல்லி கொண்டே இருக்கும் போதே அவர்களின் மகள் சௌதாமினியும் அவ்விடம் வந்தாள்..
“எங்க வெளிய போறிங்களா” என்று கேட்டான் திவேஷ் கௌரி சௌதாமினி உடையை பார்த்து,
“ஆமா திவா” நான் கோவிலுக்கு போறேன்…
“இவ ஏதோ ப்ரெண்ட் வீட்டுக்கு படிக்க போறாளாம்” சௌதாமினியை கை காட்டி சொன்னவர்.. “சரி நீங்க பேசிட்டு இருங்க நாங்க போய்ட்டு வந்துடறோம்” என்று திவேஷிடமும் செந்திலிடமும் கூறி விட்டு சென்றனர்..
சௌதாமினியும் கௌரியும் வாசலை கடக்கும் வரை பொறுமையாக இருந்த திவேஷ். அதன் பின்பு கோவமாக செந்திலின் புறம் திரும்பி,
“அப்பா உங்களுக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஒரு வேலை பண்ணுனீங்க?”என்று கேட்டான்
திவேஷ் அவ்வாறு கேட்டதும் அதிர்ந்து போன செந்தில் இவனுக்கு எப்படி தெரிஞ்சுது என்று மனதுக்குள் அதிர்ந்தாலும்,
தன்னை வெகு சிரமப்பட்டு இயல்பாக காட்டி கொண்டு “நான் என்னப்பா பண்ணுனேன். நீ எதை பத்தி என்கிட்ட கேட்கிற ஒன்னும் புரியலையேப்பா” என்றார் செந்தில்.
“ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்காதீங்கப்பா, உங்க முகமே சொல்லுது நீங்க செஞ்ச வேலை என்னனு. நீங்க யார் கிட்ட சொல்லி இந்த ரவுடிகளை ஏற்பாடு பண்ணீனுங்களோ, அவனே என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்”.
“உங்களுக்கு என்ன பைத்தியமா. தேவாவை கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கீங்க. ஏதோ சப்பையா நாலு ரவுடிகளை ஏற்பாடு பண்ணுனா தேவாவை கொன்னுடலாம் அப்படிங்கிற நினைப்போ, தேவாவிற்கு அந்த ரவுடிங்க எல்லாம் தூசு மாதிரி தட்டி விட்டு போயிட்டே இருப்பான்” என திவேஷ் சத்தம் போட,
ம்பச் என அலட்சியம் செய்த செந்தில் “இன்னைக்கு அந்த பொண்ணு அந்த சின்ன பொண்ணு மட்டும் இடையில் வரலைன்னா இப்ப அந்த தேவா உயிரோட இருந்திருக்க மாட்டான்… எத்தனை நாள் எவ்ளோ அழகா போட்ட ப்ளான்…மொத்த ப்ளானையும் அந்த பொண்ணு தான் கெடுத்து விட்டு தேவாவை காப்பாத்திருச்சு” என்றவரின் கோவம் இப்போது தியா மேல் இருந்தது.
“அந்த பொண்ணு காப்பாத்துனது தேவாவை இல்லை உங்களை, அவனுக்கு மட்டும் ஏதாவது தப்பா நடந்திருந்தா, அடுத்த நிமிஷம் போலீஸ் உங்களை தேடி தான் வரும். அதில் பாதிக்கப்பட போறது நீங்களும் உங்க குடும்பமும் தான், அது உங்களுக்கு அது புரியலையா?
செந்தில் “அது எப்படி” என்று திவேஷை பார்த்து கேட்க.
“என்ன அப்படி பார்க்கிறீங்க? நீங்க இப்ப இவ்ளோ பெரிய வீட்டில் இருக்கிறதுக்கம், சௌமி நல்லபடியா படிக்கிறதிற்கும் உதவி பண்றது தேவா அப்பா வேதாசலமும் மகேஸ்வரன் சாரும் தான். அவங்க எதுக்கு உங்களுக்கு உதவி பண்றாங்க. தேவா செஞ்ச தப்பால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய தான். தேவா மேல் அவருக்கு கோவம் இருக்கலாம் வெறுக்க கூட செய்யலாம். ஆயிரம் இருந்தாலும் தேவா அவர் மகன் அவனுக்கு ஏதாவது ஆனா உங்களை சும்மா விடுவாரா?”
“தேவா அப்பா சும்மா இருந்தாலும் மகேஸ்வரன் சார் சூர்யா இரண்டு பேரும் உங்களை என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது” என திவேஷ் சத்தம் போட …
“என்ன சொன்ன திவா, தேவாவுக்கு ஏதாவன்னுனா வேதாசலம் அமைதியா இருக்க மாட்டார்ன்னு தானே, பையன் பொறுக்கியா இருந்தாலும் அவனுக்காக அவர் அப்பா வரும் போது, நான் மட்டும் என் பையன் சாவுக்கு காரணமானவன ஒன்னும் செய்ய கூடாதா…
“பணம் இருக்கிறவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாயமா? முடியல திவா சத்தியமா முடியல எங்க பையன் ஜீவா இழப்பை தாங்கிக்க முடியல. கௌரி தினம் தினம் அதை நினைச்சு கண்ணீர் விட்டுட்டு இருக்கிறதை என்னால் பார்க்க முடியலைப்பா…
“என் பையன் ஜீவா அப்படி என்னடா தப்பு பண்ணுனான். நல்லவன்னா இருந்ததை தவிர, எங்க பையைனை கொன்ன அவன் மட்டும் ஜாலியா ஊரை சுத்திட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை. உடம்பில் மட்டும் வலு இருந்துச்சுன்னா நானே அவனை
நானே அவனை அன்னைக்கே கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் இருப்பேன் முடியலையே” என்று கூறி அழுதபடி அப்படியே அவர் ஷோபாவில் விழ,
அவரின் அருகே சென்று ஷோபாவிற்கு கீழ் அமர்ந்து அவரின் கை பிடித்த திவேஷ். “புரியுதுப்பா உங்க கஷ்டமும் வேதனையும் என்னனு.. ஜீவா இடத்தில் இருந்து இப்ப உங்களை நான் தான் பொறுப்பா பார்த்துக்கணும் அதனால் தான் கொஞ்சம் கோவப்பட்டுட்டேன் சாரிப்பா… தேவா மேல் உங்களை விட அதிகமான கோவமும் வெறியும் எனக்கும் இருக்கு. ஏன்னா ஜீவா என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.. அவனை கொன்னவனா சும்மா விட மாட்டேன் என அவரிடம் சொன்னவன் மனதிற்குள்,
என் பொண்டாட்டி ஒரு காலத்தில் உருகி உருகி காதலிச்சவனை எப்புடி சும்மா விடுவேன் என நினைத்துப் கொண்டான்..
“உங்களுக்கு என்ன தேவா உயிரோட இருக்க கூடாது அவ்ளோ தானே. அது கண்டிப்பா நடக்கும். அதுக்கு ஏன் இவ்வளோ ரிஸ்க் எடுக்குறீங்க. அந்த தேவாவே அய்யோ இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியலையே அப்படின்னு தன்னை தானே அழிச்சுக்கனும் அப்புடி பண்ணனும்” என பழிவெறி முகத்தில் மின்ன கூறியவனை புரியாமல் பார்த்தார் செந்தில்.
“உங்களுக்கு புரியலையா என்று திவேஷ் கேட்க. அவரும் இல்லை என தலையாட்ட,
“பார்வை இல்லாதவனுக்கு தீடிர்னு கண்பார்வை கிடைச்சா அவன் எவ்ளோ-சந்தோஷமா இருப்பான். உலகத்திலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் அழகையும் அந்த கண் கொண்டு பார்த்து ரசிச்சு ரசிச்சு வாழ ஆரம்பிப்பான்.
“அப்புடி அவன் வாழ்க்கையை ரசிச்சு சந்தோஷமா வாழுற அந்த நேரம் மறுபடியும் அவன் பார்வையை பிடிக்கிட்டா, அதை அவனால் தாங்க முடியாது.. பார்வை இல்லாமா வாழ முடியாது. அந்த மாதிரி தான் இப்ப இருக்க தேவா வாழ்க்கை சந்தோஷமா மாறனும். அவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது அதை அவன் கிட்ட இருந்து பறிச்சரனும், அதற்கு மேல் அவனால் உயிரோட இருக்க முடியாது, அவனை அவனே அழிச்சுப்பான்” என்று குரூரமாக கூறினான்.
இதை எல்லாம் கேட்ட செந்திலின் முகத்திலும் இவ்வளவு நேரம் இருந்த சோகம் மறைந்து ஒரு மகிழ்ச்சி உண்டாக்கியது. “கண்டிப்பா நீ சொன்னது எல்லாம் நடக்குமா திவா.. அதற்கு நாமா இப்ப என்ன பண்ணணும்” என்று ஆர்வமாக கேட்க.
“தேவாவுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணணும் என்று கூறியவன் மனக்கண் முன் வந்தது தியா முகம்… அன்று தேவா அமைச்சருக்கு ஆப்ரேஷன் செய்த நலம் மருத்துவமனையில் திவேஷிம் தான் இருந்தான்.. தேவாவை பார்த்து தியா அடித்த கூத்தை கவனிக்கவே செய்தான்.. தியா ஹரிணி இருவரும் பேசியதை ஒட்டு கேட்க வேறு செய்தான்.. அப்போதே தியாவிற்கு தேவா மேல் பிடித்தம் என்பதை அறிந்து கொண்டான்..
இன்று அவனிடம் இந்த விஷயத்தை பற்றி கூறியவர்கள் ஒரு சின்ன பொண்ணு இடையில் வந்து காரியத்தை கெடுத்துருச்சு என சொல்லும் போதே அது தியாவாக தான் இருக்குமோ என திவேஷிற்கு சந்தேகம் எழ, அவனிடம் அன்று ராகவ் இனியா திருமணத்தில் யாருக்கும் தெரியாமல் எடுத்த தியா போட்டோவை காண்பித்து கேட்க, அவர்களும் ஆமா இந்த பொண்ணு தான் என்று உறுதிபடுத்த, அப்போதே முடிவு செய்து விட்டான்..
தேவா வாழ்க்கைக்குள் தியாவை சிக்க வைக்க வேண்டுமென,
சூர்யாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை… தியா மயக்கம் அடைந்ததும் வெகு நேரமாகியும் அவள் இன்னும் கண் திறக்கவில்லை. அவளை படுக்க வைத்து டீரிப்ஸ் போட்டு விட்டு இருந்தான்.
மனமோ தேவை இல்லாமல் தியாவிடம் இதை காட்டி விட்டோமோ தவறு செய்து விட்டோமோ என்று அடித்து கொண்டது. தியா மயங்கும் முன்பு தவற விட்ட பேப்பரை கையில் எடுத்தான்…
ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் நண்பனின் வாழ்க்கையை புரட்டி போட்ட மிக மோசமான நடந்திருக்கவே கூடாது என்று இன்று வரை நினைக்கும் மோசமான நிகழ்வுகளை சுமந்து ‘இருந்த தினசரி நாளிதழ் அது. ‘அதில் கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டு இருந்தது அந்த செய்தியை பார்த்தான்
கோவையின் மிக பிரபலமான ஆரோக்கியம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தேவேந்திரன் கைது. உடன் பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததற்காகவும், அதை தட்டி கேட்ட மற்றோரு மருத்துவர் ஜீவாவை கீழே தள்ளி கொலை செய்த குற்றத்திற்காகவும் என போட்டு இருந்தது..
சூர்யாவின் நினைவு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்றது..
“டேய் குரங்கு எருமை உண்மையிலே படிச்சு தான் பாஸ் பண்ணுனயா இல்ல பீட் அடிச்சு எழுதுனியா, உன்னை எல்லாம் எவன்டா போலீஸ் வேலைக்கு எடுத்தது. ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்டேங்குறே” என்று தியா சபரியை போனில் திட்ட, எதிர்முனையில் இருந்த சபரியோ “ஏய் சைனா பொம்மை இப்ப எதுக்கு கதவு சந்துல மாட்டுன எலி மாதிரி கீச்சு கீச்சுங்கிற”,
“பின்ன என்னடா பாவா நம்பர் கொடுத்து எங்க இருக்காங்க ட்ரேஸ் பண்ணி தர சொன்னா, மூணு மணி நேரமா அங்க போ இங்க போன்னு அழைய வைச்சிட்டு இருக்கியே தவிர கரெக்ட்டா பாவா இருக்க இடத்தை சொல்ல மாட்டேங்கிறேயே” என்று அவனிடம் குறைபட்டு கொண்டாள்.
“இதுக்கு நீ கோவபட வேண்டியது உன் பாவா கிட்ட தான். என்னமா ஆளு பிடிச்சு வைச்சு இருக்க. ஊருக்குள்ள வேற நல்ல ஆளே உனக்கு கிடைக்கலையா. கொஞ்சம் நேரம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்கிறார். அங்க இங்கன்னு சுத்திட்டே இருக்கார். ட்ரேஸ் பண்ணற எனக்கே மண்டை காயுது. உன்னை சுத்தல விடுறது உன் பாவா தான். ஆனா நீ என்கிட்ட கோவபடுறீயா. தேவை தான் எனக்கு, இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு உனக்கு ஹெல்ப் பண்றேன்ல. என்னை நானே அடிச்சுக்கனும். இனிமே நா உனக்கு உதவி பண்ணறதா இல்ல. என்னமோ பண்ணிக்கோ” என்று போனை வைக்க போக.
‘அய்யோ கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டமோ பயபுள்ள டென்சன் ஆகுதே’ என்று எண்ணிய தியா “சபரி சபரி என் தங்கம்ல செல்லம்ல போனை வைக்காதாடா நான் சும்மா உன்கிட்ட ஒரு லொலாய்க்கு பேசுனேன். கோவம் எல்லாம் ஒன்னும் இல்ல. அதை எல்லாம் ரப்பர் வைச்சு அழிச்சுடுடா. இந்த ஒருவாட்டி மட்டும் எந்த இடத்தில் இருக்குறார்னு சொல்லுடா” என்று கெஞ்சலில் இறங்க. போய் தொலை என்ற சபரியும் “நீ இருக்கிற இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தான் போ” என்றான்…
ஆள் அரவமற்ற அந்த சாலையில் தேவா தன் வீட்டிற்கு காரில் சென்று கொண்டு இருந்தான். மெயின் ரோட்டில் சென்றால் சிக்னல் ட்ராஃபிக் என அரை மணி நேரத்தில் போக வேண்டிய வீட்டிற்கு இரண்டு மணி நேரமாவது ஆகி விடும். அதனால் எப்போதுமே அவன் தன் வீட்டிற்கு செல்ல இந்த பாதையை தான் தேர்ந்தெடுப்பான். தேவா சென்று கொண்டு இருக்கும் போது சாலையின் நடுவே இருசக்கரம் இரண்டு மோதிய படி கீழே கிடந்தது.. என்ன இது இந்த ரோட்ல ஆக்ஸிடெண்ட் எல்லாம் ஆகாதே அப்புறம் எப்படி என்ற எண்ணம் எழுந்தாலும் யாருக்காவது அடி பட்டு இருக்க போகுது என்று காரை விட்டு இறங்கி வண்டி அருகே சென்று பார்த்தான்.
அங்கு யாரும் இல்லை வெறும் வண்டி மட்டுமே இருந்தது. என்ன ஆளே இல்ல என்று எண்ணியபடி திரும்ப அவன் கண்ணில் பயங்கர எரிச்சல் உண்டானது. அவன் கண்களில் யாரோ பெப்பர் ஸ்பேர அடித்து இருந்தனர்.. “ஸ்…. ஆ”…. என்று கண்ணில் கை வைக்க அவன் இரண்டு கைகளையும் இருபுறமும் இறுக்கி பிடித்தனர் இருவர். பின்புறமும் தேவா திமிரதாபடி இறுக்கமாக ஒருவன் பிடித்து கொண்டு இருந்தான். தேவாவின் எதிர்ப்புறம் ஒருவன் அவனை நோக்கி கத்தியுடன் அருகில் வந்து கொண்டு இருந்தான்.
கண்கள் எரிச்சலில் திறக்க முடியவில்லை தான். ஆனால் என்ன நடக்க போகின்றது என்று தேவாவிற்கு தெரிந்தது.. “ஏய் யாருடா நீங்க எல்லாம் தைரியம் இருந்தா நேரா வர வேண்டியது தானே இது என்னடா பொ**** மாதிரி *****” என்று திட்டிய படி திமிறி கொண்டு இருந்தான்.
தியா சபரி சொன்ன வழியிலே வர தூரத்தில் தேவா காரை கண்டு விட்டாள். அப்படியே அவனை தொடர்ந்து வரும் போது தான் பார்த்தாள். முன்று பேர் அவனை பிடித்து கொண்டு இருப்பதையும், தேவா முன்பு ஒருவன் கத்தியோடு வருவதையும் அதை முதலில் பார்த்தவளுக்கு அதிர்ந்து போனாள்..
அய்யோ பாவா என்றவள் கை தானாக ஆக்சிலேட்டரை முறுக்க வேகமாக வந்தவள் கத்தியுடன் தேவாவை நெருங்கியவனை இடிக்க அவன் கீழே விழுந்தான். தியாவும் வேகமாக வந்ததால் அவளும் வண்டியோடு சேர்த்து கீழே விழுந்தாள்… அங்கு இருந்த கூர்மையான ஒரு கல் தியா உள்ளுங்கையை கொஞ்சம் பலமாக குத்த ஆ…. அம்மா என்று சத்தம் போட்டாள்…
அந்த குரல் தேவா காதை அடைந்ததும் கண்டு கொண்டான் அது தியா தான் என்று, இதே நேரம் இந்த நிகழ்வதால் தேவாலவை பிடித்து இருந்தவர்களின் பிடி கொஞ்சம் தளர, மறுநொடி தன்னை பிடித்து இருந்தவனின் வலது புறம் இருந்தவரிடம் காலை தன் கால் கொண்டு மடக்க அவனும் வலி எடுக்க தேவாவின் வலது கையை விட்டு இருந்தான். பின்புறம் பிடித்து இருந்தவனின் வயிற்றிலே குத்த அவனும் தேவாவை விட இடது புறம் இருந்தவனின் முகத்திலும் ஓங்கி குத்தினான். கண்ணில் இருந்த எரிச்சலையும் பொருட்படுத்தாமல் கண்ணை திறந்து பார்க்க அங்கு தியா கீழே கிடக்க வண்டி அவள் மேல் இருந்தது. அவள் கிட்ட போவதற்குள்,
தியா இடித்ததில் கீழே விழுந்தவன் கையில் இருந்த கத்தி எங்கோயோ விழுந்து இருந்தது. இருந்தாலும் அவன் எழுந்து தேவாவிடம் சண்டைக்கு வர தேவா அவனையும் மற்ற மூவரையும் அடித்து நொறுக்கினான்…
தேவா அடித்த அடியில் சமாளிக்க முடியாத நால்வரும் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தெறித்து ஓடினர். அதன் பிறகு தியா அருகில் வந்தவன் அவள் மேல் விழுந்து கிடந்த வண்டியை எடுத்துவிட்டு அவளையும் கை கொடுத்து தூக்கி விட்டவன் அவளை திட்ட வாயெடுக்க அதற்குள்,
“பாவா பாவா உங்களுக்கு எதுவும் இல்லையே எங்காவது அடிபட்டு இருக்கா என்று அவனின் முகம் கை என்று ஆராய்ந்தாள் எங்காவது அடிபட்டு இருக்குமோ என்ற பயத்தில்,
தேவா தியா முகத்தை தான் பார்த்தான். அதுவும் அவள் கண்களில் எத்தனை தவிப்பு எஅதை பார்த்தவனின் தலை தானாக ஆடியது இல்லை என்று அவள் கேட்ட கேள்விக்கு,
அடுத்த விநாடி தியா தேவாவை அணைத்து இருந்தாள். “நான் ரொம்ப பயந்து போயிட்டேன் பாவா என்றவள் அழ ஆரம்பித்து விட்டாள். தேவா அவளை விலக்க வில்லை.. அவனுக்கே அதிர்ச்சி தான் தியாவின் செய்கைகளில், எதற்காக அவள் தன் மேல் இவ்வளவு அன்பை பொழிகிறாள் என்று எண்ணியவனுக்கு சற்று முன்பு நடந்த சண்டை நினைவு வர அவளை தன்னிடமிருந்து விலக்கினான்.
“ஏய் அறிவில்லையா டி உனக்கு எத்தனை தடவை திட்டினாலும் உனக்கு ரோசமே வராதா, சோத்துல உப்பு தானே போட்டு திங்கிற, இனிமே என் முன்னாடி வந்து டார்ச்சர் பண்ண அவ்ளோ தான் என்று திட்டி விட்டு காரை எடுத்து கொண்டு ஆள் அரவமற்ற சாலையில் தனியாக விட்டுட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்…
சிறிது தூரம் கூட அவனால் செல்ல முடியவில்லை.. அவனுக்குள் இருக்கும் மருத்துவனும் மனசாட்சியும் அவளை அப்புடியே அம்மோவென விட்டு செல்ல விடவில்லை..
சூர்யாவிற்கு கால் செய்து அங்கு நடந்ததை பற்றியும் தியா கையில் அடிபட்டு இருப்பதையும் கூறி உடனே சென்று பார்க்குமாறு கூறினான்…
தான் இவ்வளவு கடுமையாக தியாவிடம் நடந்து கொள்ளும் போதே அவள் இவ்வளவு அன்பாக நடந்து கொள்கிறாள்… அவளிடம் கொஞ்சம் இளகினாள் கூட
அது அவளுக்கு தான் பிரச்சனை. இன்று கூட அவள் கையில் அடிபட்டதற்கு அந்த அன்பு காதல் தானே காரணம்… தான் என்றுமே தியா காதலை ஏற்க போவது இல்லை. அப்படி இருக்கையில் இன்று அக்கறையாக நடந்து கொண்டால் தியா எண்ணத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றி திரியை தூண்டி விடுவது போலாகி விடும்.
இதோ இப்போது தனக்கு அடிபட்டு இருக்கும் போது கூட தன்னை கண்டுக்காம போறனே என்று தன் மீது கோவம் வரும் என்று தேவா நினைக்க,
ஆனால் அங்கு தியாவோ சூர்யா கிளினிக்கில் சூர்யா தியா கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டு கொண்டு இருக்க… அவனை போட்டு படுத்தி எடுத்து கொண்டு இருந்தாள். அதெப்படி சூர்யா அண்ணா கரெக்டா நான் இருந்த இடத்திற்கு நீங்க வந்தீங்க என்று,
தேவா சொல்ல கூடாது என்று சொன்னதால் சூர்யாவும் ஏதோதோ கூற தியா நம்பவில்லை… அது எப்புடி தேவா சென்ற பத்து நிமிடத்திற்குள் எதேச்சையாக ஒருவர் அதுவும் டாக்டரே வருவார்..
“பொய் சொல்றீங்க என் பாவா தானே உங்கிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு வர சொன்னது” என்று தியா கேட்க
சூர்யா இல்லை என்று தலை ஆட்டினான்..
நீங்க சொல்றது பொய். எனக்கு தெரியும் பாவாவை பத்தி என்றாள். சூர்யாவிற்கே தியாவை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது…
சிரித்த சூர்யா பாவா பாவா சொல்றியே யாரும்மா அந்த பாவா என தெரியாது போல் கேட்க,
உங்களை அனுப்புன தேவா தான் என் பாவா என்றாள்..
தேவாவா அது யார் என யோசிப்பது போல் சூர்யா பாவனை செய்ய,
“சும்மா நடிக்காதீங்க சூர்யா அண்ணா” ஆமா என் பாவா உங்ககிட்ட என்னை பத்தி என்னை சொல்லி அனுப்பி வச்சார் என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்..
அவளை கண்டு கொள்ளாமல் சென்றவன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே என மீண்டும் ஆச்சர்யம் தான் வந்தது..
ஆனால் இது எல்லாம் அவனை பற்றி முழுமையாக தெரியாத வரை தான். தெரிந்தால் தியாவிற்கு தேவா என்று ஒருவன் உள்ளான் என்பதே மறந்து விடும் என்று எண்ணம் வர, சூர்யாவிற்கு தியா காதலை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது… ஏனெனில் தன் நண்பன் மறுபடியும் எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற கூடாது என்று எண்ணி,
தியா, நீங்க மஞ்சு அக்கா வெண்ணிலா அக்கா பிரதர் தானே… பர்ஸ்ட் அடையாளம் தெரியலை.. இப்ப தான் வெண்ணிலா அக்கா ஜாடை தெரியுது என கேட்க,
ஆமா என தலை அசைத்து சூர்யா தியாவை பார்த்து “உனக்கு உண்மையாவே இன்னைக்கு தேவா நடந்துகிட்டதுக்கு கோவம் வரலையா” என்று கேட்டான்..
‘இல்லை’ என்று தியா புன்னகையுடன் தலை அசைக்க.
“ஏன் அப்படி” என்று சூர்யா கேட்க.
“நான் அவரை அவ்ளோ லவ் பண்றேன்” என்று தியா கூறியதும் சூர்யா பலமாக சிரித்தான்.
“லவ்வா உனக்கு தேவாவை பத்தி என்ன தெரியும். அவனை பத்தி ஒன்னுமே தெரியாம லவ்வா. அவனை பத்தி முழுசா தெரிஞ்சா அதுக்கு அப்புறம் நீ அவன் இருக்க பக்கம் கூட வர மாட்டா தலை தெறிக்க ஓடிருவ” என்று மறுபடியும் சிரிக்க.
தியாவிற்கு புசுபுசுவென கோவம் எகிறியது தேவா மீது வைத்திருக்கும் காதலை கேலி செய்கிறானே என்று சூர்யா மீது. கோவமாக ஏதோ சொல்ல வாயெடுத்தவள் முன்பு கை நீட்டி தடுத்த சூர்யா அங்கு இருந்த டேபிளை திறந்து ஏதோ இரண்டு பொருட்களை எடுத்து தியா கையில் கொடுத்தான்…
என்ன இது தியா கேட்க, பிரிச்சு பாரு என சைகை செய்தான்..
அதில் ஒன்று என்னவென்று பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி. தியா கண்களில் அவளை அறியாமல் கலங்கியது.. அது ஒரு திருமண பத்திரிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமண தேதி இருந்தது… தேவேந்திரன் வெட்ஸ் வெண்ணிலா என்று இருந்தது…
அந்த வெண்ணிலா யார் என்று அவளுக்கே தெரியுமே. அந்த பத்திரிகையின் முகப்பில் தேவா வெண்ணிலாவை பின்புறம் லேசாக அணைத்து நிற்பது போன்று இருந்தது.. இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே கூறியது அது காதல் திருமணம் தான் என்று. ஆனால் இப்போது வெண்ணிலா திவேஷ் மனைவியாக அல்லவா இருக்கிறாள். அப்படி என்றால் திருமணம் நடக்கவில்லையா ஏன் என்ற கேள்வியோடு சூர்யாவை பார்க்க.
அவனோ அவளின் இன்னோரு கையில் இருந்த மற்றோரு பேப்ரை பார்க்க சொன்னான். அதை பார்த்தவளுக்கு இதயமே நின்று விடும் அளவுக்கு அப்படியோரு அதிர்ச்சி. “இல்லை என் பாவா அப்படி கிடையாது. பாவா அப்படி கிடையாது. இது எல்லாமே பொய் பொய் பொய்” என்று கத்தியபடி மயங்கி சரிந்தாள்…
தேவா வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. அவன் தான் அப்படி எல்லாத்தையும் போட்டு உடைத்து வீட்டையே தலைகீழாய் மாற்றி இருந்தான்…
பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறியது என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதே நிலை தான் இப்போது தேவாவின் நிலைமை. அவன் தியாவை விலக்க வேண்டும் என்று நினைத்து இங்கே வரவழைத்தால் நடந்தததோ வேறு. அவன் தியாவிற்கு எதிராக வீசிய அனைத்தை பாலையும் அவள் சிக்சராய் அடித்து நொறுக்கினாள்.
“கடுகு சைஸ்ல இருந்துட்டு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டேவே லவ் பண்றேன் சொல்லுவா லூசு பைத்தியம் மெண்டல்” என்று திட்டி விட்டு கோவத்தில் அருகில் இருந்த பொருளை கீழே தள்ளி விட்டான்.
நான் இனி காற்றில் பறக்க
போகின்றேன் 🎶
கூடவே உன் கைகள் பிடித்து கொள்வேன்🎶
இந்த பிரபஞ்சம் தாண்டியே
ஒரு பயணம் போகலாம்🎶
அதில் மூச்சு கூட தேவையில்லை
முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்🎶
மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்🎶
அசந்து அசந்து நின்றேன்
அய்யோ அளந்து அளந்து கொன்றாய்🎶
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவற்றில் தூசி போல படிகின்றேன் மடிகின்றேன் 🎶
யுவனின் இசையில் வந்த காதல் கீதம் பின்னணியில் தியாவின் மனநிலைக்கு ஏற்ப ஓட
அவளோ கண்மூடி கன்னத்தில் கை வைத்தபடி ஏன் இப்படி சொன்னேன் என்ற பயங்கர யோசனையில் இருந்தாள்…
தேவாவிடம் சொல்லும் அந்த நொடி வரை அப்படிபட்ட யோசனை அவளிடம் இல்லவே இல்லை… எப்போது வந்தது, எப்படி வந்தது இந்த காதல் அதை அதை தான் யோசித்து யோசித்து பார்க்கின்றாள் பிடிபடவே இல்லை..
ஆனால் இப்போது முழுமையாக உணர்ந்து இருந்தாள்.. தேவா மீது அவளுக்கு இருக்கும் காதலை,
தேவா மறுப்பான், தன் வீட்டில் ஒத்து கொள்ளவே மாட்டார்கள் என்பது எல்லாம் தெரியும்.. இருந்தாலும் பார்த்துக்கலாம் சமாளிச்சுக்கலாம் என்ற அசட்டு தைரியம் வந்தது..
தேவாவை பற்றி இப்போதும் ஒன்றுமே தெரியாது.. ஆனால் காதலிக்கின்றாள்..
அவனின் கடந்த கால வாழ்க்கையில் ஏதோ ஒன்று இருக்கின்றது.. அதில் தேவா பக்கம் தவறு இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.. ஆனாலும் தேவா நிச்சயம் தப்பானவாக இருக்க மாட்டான்.. மனம் அடித்து கூறியது.. என்ன நடந்தாலும் தேவாவை கடைசி வரை விட கூடாது என்ற உறுதியும் எடுத்து கொண்டாள்..
அவனின் கடந்த காலம் அவளின் நினைப்பிற்கு அப்பாற்பட்ட பயங்கரமானதாக இருந்தால் அப்போதும் இதே உறுதியோடு இருப்பாளா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
அவளுக்கு எதிரே தேவா வீட்டில் இருந்த அந்த பெண் அமர்ந்து இருந்தாள். சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தனர்.அந்த பெண்ணின் பார்வை முழுவதும் தியா கன்னத்திலே இருந்தது. ராமர் அணிலுக்கு மூன்று கோடு போட்டது போல் தேவாவும் தியாவிற்கு அவள் காதலை சொல்லியதற்கு கன்னத்தில் பரிசு கொடுத்து தான் அனுப்பி இருந்தான். அவன் அடித்த அடியில் கன்னம் சிவந்து கன்றி இருந்தது.
தியா தன் காதலை வெளிப்படுத்தியதும் தேவா ஓங்கி ஒரு அறை கொடுத்து அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி இருந்தான். கூடவே இந்த பெண்ணையும் தான்.
அங்கு இருந்து கிளம்பும் போது “வா நான் உன்னை டிராப் பண்றேன் என்று தியா சொல்லி அழைக்க, அந்த பெண் தயங்கி நின்றாள்.. அட வாம்மா நல்லா ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள்ள வீட்டை கட்டி வச்சு இருக்கார்.. நீ எப்புடி போவ மெயின் ரோட்ல ட்ராப் பண்றேன் வா என தியா மறுபடியும் அழைக்க, அந்த பெண் தியா வண்டியில் ஏறினாள்..
பாதி வழியில் “எனக்கு ரொம்ப பசிக்குது வா ஏதாவது ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டு போலாம்” தியா அழைக்க,
அந்த பெண் “இல்லை எனக்கு பசிக்கலை நீங்க போங்க என்று தயங்க அட வா மகேஸூ எனக்கு தனியா உக்கார்ந்து சாப்பிட பிடிக்காது” என்று இழுத்து வந்தாள்.
அந்த பெண்ணின் பெயர் மகேஷ்வரி.
மகேஸ்வரிக்கு தான் ஆச்சர்யமாக இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் குடும்ப நிதி நிலைமை இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டாள் மகேஸ்வரி. அவளை பற்றி தெரியாத பெண்கள் தான் அவளிடம் நன்றாக பழகுவார்கள். அதுவும் அவள் செய்யும் வேலை தெரிந்ததால் அதன் பிறகு முகத்தை திருப்பி கொண்டும் அருவருப்புடனும் பார்த்து செல்வார்கள். ஆனால் தியாவிற்கு அவளை பற்றி தெரிந்தும் இப்படி இயல்பாகவே நடந்து கொள்கிறாளே என்று,
அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட தியா சாப்பிட ஆரம்பித்தாள். அந்த பெண் இப்போதும் சாப்பிட்டாமல் தன்னையே பார்த்து கொண்டு இருக்க ‘என்ன’ என்று கேட்டாள் தியா.
“இது எல்லாம் தேவையா?” என்று தியா கன்னத்தை பார்த்து மகேஸ்வரி கேட்க,
“காதலில் இதெல்லாம் சாதரணம்ப்பா” என்றாள் தியா..
“என்ன காதலா அவரையா” என்று மகேஸ்வரி ஒரு மாதிரி இழுக்க.
“ஏன் அவருக்கு என்ன குறைச்சல் மகேஸூ நல்ல வாட்டசாட்டமா தானே இருக்கிறார்” என்ற தியா.
“இங்க பாரு மகேஸ் நான் இப்படி தான் அப்படின்னு உண்மையை சொல்றதுக்கு எல்லாருக்கும் தைரியம் வராது. ஊருக்குள்ள நிறைய பேரு நான் நல்லவன் அப்படின்னு வேஷம் போடுவானுங்க ஆனா பண்றது எல்லாமே கேவலமான விஷயமா தான் இருக்கும். என் பாவா கெட்டவர் மாதிரி தெரியலாம் ஆனா ரொம்ப ரொம்ப நல்லவர் மகேஸ். சரி சரி சாப்பிடு கிளம்பலாம் என்று தியா கூற இருவரும் அதன் பிறகு இருவரும் அமைதியாக சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் மகேஸ்வரி சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்ட தியா,
“மகேஸ் நான் பொதுவா யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டேன். யார் எப்படி இருக்காங்களோ அவங்களை அப்படியே ஏத்துக்கிறது தான் உண்மையான அன்பு. அதனால் சொல்றேன் நீ மாறனும் அப்படின்னு நான் சொல்லல. ஆனா மாறனும்னு உனக்கு தோணுனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லு உனக்கு என்ன உதவினாலும் செய்றேன். இது என் நம்பர் வச்சுக்கோ உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடலாம். உதவிக்காக மட்டும் இல்லை சும்மா மொக்க போடலாம்னு தோணுனாலும் கூப்பிடு, இனிமே நாமா ஃப்ரெண்ட்ஸ்” என்று அவளை மெலிதாக அணைத்து விட்டு அங்கிருந்து சென்றால் தியா. செல்லும் அவளையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள் மகேஸ்வரி.
அன்று தியா கல்லூரியில் க்ளாஸ் ரூமில் தனக்கு சற்றும் பொருந்தாத சோகத்தை தத்தெடுத்து முகத்தில் அப்பி கொண்டு அமர்ந்து இருந்தாள். எதிரே ப்ரொப்சர் பாடம் நடத்தி கொண்டு இருந்தார். ஹரிணிக்கு அவளை பார்க்கும் போது கோவமாக வந்தது…
தியா சோகமாக இருப்பதற்கு காரணம் இதோ இன்றோடு அவள் அவளின் பாவாவை பார்த்து மூன்று மாதங்கள் ஆகின்றதாம். அன்று தேவா வீட்டில் இருந்து வந்த பின்பு அவனை பார்க்க முடியவில்லை. அவனை பார்க்க வீட்டுக்கு சென்றால் வீடு எப்போதும் பூட்டியே இருந்தது. அவன் எண்ணிற்கு அழைத்தால் அவன் தியா எண்ணை ப்ளாக் செய்தது மட்டும் இல்லை போனையே அணைத்து வைத்து இருந்தான். தன் பாவாவை எப்படி பார்ப்பது பேசுவது என்பது தெரியாமல் சுத்தி கொண்டு இருக்கிறாள்..
ஹரிணியும் தியா வை திட்டி விட்டாள் அன்பாக பேசி புத்தியும் சொல்லி பார்த்து விட்டாள் தியா கேட்பதாக இல்லை. எப்போதும் தேவாவை பற்றியே பேச்சு அவனை பற்றியே நினைத்து கொண்டு சுத்தி கொண்டு இருக்கின்றாள்.
அப்போது எதிரே இருந்த வகுப்பாசிரியர் இவர்கள் ஜெர்னலிசம் படிப்பதால் ஒரு கேஸை எப்படி புத்திசாலி தனமாக ஒரு பத்திரிகையாளர் கண்டுபிடித்தார்… அதில் அவர் பங்கு எப்படி இருந்தது என்று ஒரு கதை சொல்லி கொண்டு இருக்க. இங்கு தியாவிற்கு மண்டையில் பல்பு எரிந்தது. உடனே ஹரிணியிடம் “ஹே ஹனிமா சபரி புது நம்பர் உன்கிட்ட இருக்கா” என்று கேட்டாள் சத்தமாக, அதில் இருவரையும் ப்ரொபசர் வெளியே துரத்தி விட்டு இருந்தார்.
சபரி ஹரிணியின் மாமா பையன்… ஹரிணியின் வீட்டில் தான் அவனும் இருக்கின்றான்.. ப்ளே ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே தியா ஹரிணி நட்பு என்பதால்.. அவர்களை விட மூன்று வயது பெரியவனான சபரியுடனும் நல்ல நட்பு..
சபரி ஒரு போலிஸ் அதிகாரி… இவ்வளவு நாள் வேறு ஊரில் பணியில் இருந்தவன்.. இரண்டு நாள் முன்பு தான் மாற்றலாகி கோவைக்கு வந்து இருக்கின்றான் என ஹரிணி சொல்லி இருக்க.. சபரி எண்ணை கேட்டாள்..
எருமை எருமை என்னை உருப்படவே விட மாட்டியா வகுப்பை விட்டு வெளியே ப்ரொப்சர் அனுப்பிய கடுப்பில் ஹரிணி திட்ட,
ஆமா ஆமா உருப்பட்டு உலக வங்கிக்கு அதிபரா ஆக போற, ஏதோ இன்னைக்கு தான் உலக அதிசயமாக உள்ள போய் உட்கார்ந்தோம்.. அது அந்த சொட்ட மண்டைக்கு பொறுக்கலை.. விடுடா நாமா அவுட் சைட் இருந்தே கோல்ட் மெடல் வாங்குவோம்.. நீ நம்பர் கொடுடா என்ற தியாவை, மறுபடியும் திட்டி கொண்டே நம்பர் கொடுத்தாள்..
சபரி எண்ணை வாங்கி அவனுக்கு அழைத்தாள்.. கால்லை அட்டன் செய்த சபரி எடுத்ததுமே “என்ன அதிசயமா இருக்கு எனக்கு கால் பண்ணி இருக்கயே மச்சான்… நம்பரை மாத்தி கித்தி கூப்டயா” என்றான் நக்கலாக,
“ஏண்டா சொல்லமாட்டா எரும நீயூ நம்பர் வாங்கிட்டு எனக்கு சொல்லமா உன் அத்தை பொண்ணுக்கு மட்டும் சொல்லி இருக்க இதில் நான் கால் பண்ணலைன்னு நக்கல் வேற. நேரில் வந்தன்னு வை மண்டையை பிளந்துருவேன்” என்றாள் தியா.
அதில் சிரித்தவன் “சொல்லு மச்சான் எப்படி இருக்க நல்லா இருக்கியா என்று பொதுவாக சில விஷயம் பேசி விட்டு தியா தனக்கு வேண்டியதை கேட்டாள். தேவா எண்ணை கொடுத்து அதை ட்ரேஸ் செய்து எங்கு இருக்கிறது என்ற தகவல் தர வேண்டும் என்று,
“டேய் மச்சான் இது யாரோட நம்பர்” என்று சபரி கேட்க. அவனிடம் தேவாவை தான் விரும்புவதையும் அவன் அதன் பிறகு இவள் எண்ணை ப்ளாக் செய்ததையும் கூற அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
அவன் சிரிப்பில் கடுப்பான தியா “எதுக்குடா சிரிக்குற” என்று கேட்க. “இல்லை உன் தொல்லை தாங்க முடியாம தானே அந்த மனுஷன் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு வீட்டுக்கு கூட வரமா எஸ்கேப் ஆகி இருக்கார். அவரை ஏன்மா மறுபடியும் தொல்லை பண்ற பாவம் இல்ல விட்டுரு” என்று கேலி பேசினான்.
“செருப்பால் அடிப்பேன் நாயே எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா”.
“மாட்டேன் ஒரு ஆணோட மனசு இன்னோரு ஆணுக்கு தான் தெரியும். அந்த மனுஷனை உன் டார்ச்சரில் இருந்து காப்பத்த வேண்டியது என் கடமை” என்று சொன்ன சபரியை தியா நல்ல வார்த்தைகள் நாலு கொண்டு அர்ச்சிக்க அவன் ஒத்து கொண்டான்.
சிறிது நேரம் கழித்து தியாவிற்கு தேவா இருக்கும் இடத்தை சபரி சொல்ல தியாஅங்கு சென்றாள். அதே நேரம் வேறு நான்கு பேரும் தேவாவை கொலை பண்ண ஆயுதங்களுடன் தேவாவை பின் தொடர்ந்தனர்…
தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால்,
தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள செய்கிறது. அந்த ஈர்பை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். திட்டி பயனில்லை என்று டைப் செய்தை மெசேஜை டெலிட் செய்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.
“என்னடா என்ன நடக்குது இங்க” சூர்யா கேட்க
தேவா அவனிடம் தியாவை அன்று தன் வீட்டில் பார்த்ததில் இருந்து நேற்று மாலில் நடந்த வரை கூறியவன் தியாவை தன்னிடம் இருந்து விலக்கி வைக்க என்ன செய்யலாம் என்றும் கேட்டான்.
தேவா சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட சூர்யா “வாவ் எவ்ளோ சூப்பரான இண்டர்ஸ்டிங்கான கேரெக்டர் இந்த பொண்ணையாட இரிட்டேங் கேரெக்டனு சொன்ன லூசு பயலே. அய்யோ பொண்ணு பொண்ணு எவ்ளோ நேரம் சொல்றது பேர் என்னனு சொல்டா” என்று கேட்க,
“எனக்கு பேர் எல்லாம் தெரியாது ஏதோ சொன்னுச்சு நியாபகம் இல்ல” என்றான் தனது நெற்றியை நீவியபடி,
“போன் நம்பர் கொடுக்கிற அளவுக்கு க்ளோஸ்ஸா பழகி இருக்க ஆனா பேர் மட்டும் தெரியாத என்ன பாவா நீ “என்று சூர்யா நக்கலடிக்க.
தேவா தன் அருகே இருந்த பொருளை அவன் மேல் தூக்கி எறிந்தான்.
அதிலிருந்து லாவகமாக தப்பிய சூர்யா “நம்ம ரெண்டு பேரும் அப்புறம் கொஞ்சிக்கலாம் பர்ஸ்ட் போன் அட்டன் பண்ணி பேசுடா அந்த பொண்ணுக்கு உன் மேல் எவ்ளோ அக்கறை இருந்தா நம்பர் கண்டுபிடிச்சு இத்தனை தடவை கால் பண்ணி மெசேஜ் பண்ணும் அதற்கு கொஞ்சுமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணு தேவா” என்று கூறினான்.
“நான் யார்கிட்டேயும் அன்பு, பாசம், அக்கறை எல்லாம் எதிர்பார்க்கல. இது வெறும் ஈர்ப்பு இந்த வயசுக்கே உண்டான இன்ஃபேக்ச்சுவேஷன் அவ்ளோ தான். இன்னும் கொஞ்சம் நேரத்தில் அதுக்கும் முடிவு கட்டுறேன்” என்றவன் விடாமல் தொடர்ந்து கால் செய்து கொண்டு இருந்த தியா ஃபோன் காலை அட்டன் செய்வதன் பக்கத்தில் வைத்து விட்டான். தியா மறுபுறம் “பாவா பாவா” என்று கத்தி கொண்டு இருக்க.
“சரியான இம்சை ஒரே தொல்லை” ஒரு கால் பண்ணணும் உன் ஃபோன் தா டா என்று சூர்யா மொபைலை எடுத்து ஒரு கால் செய்து “ஹலோ மெக்கானிக் ஷாப்பா கார் சர்வீஸ் பண்ணணும் அட்ரஸ் சொல்றேன் வந்து எடுத்துட்டு போங்க” என்று தனது முகவரியை கூறினான் வேண்டுமென்றே,
அவனுக்கு தெரியும் தியா அனைத்தையும் கேட்டு கொண்டு இருக்கிறாள். இப்போது கண்டிப்பாக தியா இங்கு வருவாள் என்று வேண்டுமென்றே தான் அவன் வீட்டு முகவரி கூறினான். இன்று இங்கு வரும் தியாவிற்கு தான் அளிக்க போகும் ஷாக் டீரிட்மெண்டில் இனி எப்போதும் தன்னை கனவில் கூட தான் இருக்கும் திசையை கூட நினைக்க மாட்டாள் என்று எண்ணினான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை இன்று அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போவது அவன் இல்லை தியா என்றும், இதற்கு பின்பு தான் தியா அவனை விடமால் விரட்டி அவனின் தீராத தலைவலியாய் மாற போகிறாள் என்று,
அடுத்து அமர் எண்ணிற்கு அழைத்து ஒரு பொண்ணை தன் வீட்டுக்கு அனுப்புமாறு கூறினான். அமர்ற்கே ஆச்சர்யமாக இருந்தது. தேவா தினம் ஒரு பெண் இல்லாமல் தூங்க மாட்டான் என்னும் அளவுக்கு எல்லாம் பெண் பித்தன் கிடையாது. எப்போதாவது கடந்த கால கசப்பான நினைவுகள் வந்து அவனை முழ்கடிக்கும் போதும். முப்பது வயது ஆண்மகனாக அவனுக்கு அந்த வயதில் ஏற்பட உணர்ச்சிகளால் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பெண்களை நாடுவான். அதன் பிறகு இவன் என்ன பண்றான் எதுக்கு பண்றான் என்னும் ரீதியில் பார்த்து கொண்டு இருந்த சூர்யாவை வம்படியாக வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.
தியாவும் தேவா எண்ணியது போல் அவன் முகவரியை மனதிற்குள் குறித்து கொண்டு அவனை காண புறப்பட்டாள். மகள் இரவு சரியாக உண்ணததால், இப்பொழுது அவளுக்கு பிடித்ததை சமைத்த யமுனா வந்து சாப்பிட சொல்ல,
“காலேஜ்க்கு லேட்டாகுதுமா நான் கிளம்புறேன்” என்றவளை யமுனா இழுத்து சாப்பாட்டை ஊட்டி விட்டு அதன் பிறகு தான் அனுப்பினார். ஆனாலும் இந்த இரண்டு நாள் மகளின் நடவடிக்கை சரியில்லை என்பதை மனதிற்குள் குறித்து கொண்டார்.
இங்கு தேவா வீட்டில் தேவா ஹாலின் நடுவே இருந்த ஒரு ஷோபாவில் அமர்ந்து இருக்க. எதிரே ஒற்றை ஷோபா ஒன்றில் அமரினால் அனுப்பட்ட பெண் அமர்ந்து இருந்தாள். அவள் வந்து அரைமணி நேரத்திற்கு மேல் இருக்கும் வந்ததில் இருந்து தேவாவையே தான் அந்த பெண் பார்த்து கொண்டு இருக்கிறாள். அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை. அந்த பெண் தனது மனதிற்குள் ‘இப்படி சும்மாவே உக்கார்ந்துட்டு இருக்காவா வர சொன்னாங்க’ என்று நினைத்தாள்.
அப்போது கேட் திறக்கும் சத்தம் கேட்க. தேவா எழுந்து ஜன்னல் அருகே சென்று திரைசீலையை விலக்கி பார்க்க அவன் நினைத்தது போலவே தியா தான் வந்து இருந்தாள். உடனே தேவா அங்கு இருந்த அந்த பெண்ணின் கை பிடித்து மேலே அறைக்கு அழைத்து சென்றான்…
தியா கேட்டை திறந்து உள்ளே வந்தவள் கதவு அருகே வந்து காலிங் பெல் அடிக்க யாரும் இல்லை திறக்கவில்லை. சரி என்று கதவை தட்டலாம் என்று கதவில் கை வைக்க அது தாழிலிடாமல் சும்மா சாத்திருப்பது தெரிய கதவை திறந்து உள்ளே வந்தாள். கீழே யாரும் இருப்பது போல் தெரியவில்லை மேலே தான் ஏதோ அறையில் சத்தம் கேட்கிறது அங்கு தான் தேவா இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே படிகளில் எறியவள் அங்கு இருந்த ஒரு கதவை திறந்து பார்த்தால் அங்கு தேவாவும் அந்த பெண்ணும் முத்தமிட்டு கொண்டு இருப்பது போன்று இருந்தது. அது மட்டுமின்றி தேவா மேல் சட்டையும் அந்த பெண்ணின் துப்பட்டாவும் கதவு அருகே கிடந்தது. தியாவிற்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. கூடவே வருத்தமும் வந்து இலவச இணைப்பாக ஒட்டி கொண்டது.
கதவை திறக்கும் சத்தத்தில் தொடர்ந்த முத்தம் கலைந்து போலவும் அங்கு இருக்கும் தியாவை பார்த்து அதிர்ந்தது போலவும் தேவா காட்டி கொண்டு,
“ஏய் நீ இங்க என்ன பண்ற” என்று கேட்டான் எதுவுமா தெரியாதது போல,
“அது வந்து நான் உங்களை நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்த்ததுட்டு போலாம்ன்னு வந்தேன் பாவா” என்று மெதுவான குரலில் கூறினாள் பார்வை மொத்தத்தையும் அந்த பெண்ணின் மீது வைத்து கொண்டு,
“எனக்கு என்ன வியாதி வந்து படுக்கையிலையா கிடக்குறேன். பழம் வாங்கிட்டு வந்து பார்த்துட்டு போக, நேத்து தானே என்னை தொந்தரவு பண்ண கூடாது அவ்ளோ எடுத்து சொல்லிட்டு வந்தேன். ஆனா நீ என் நம்பரை எப்படியோ தெரிஞ்சிங்கிட்டு போன்ல கொடுத்த தொந்தரவு பத்தாதுனு இப்ப நேர்லயும் வந்து தொல்லை கொடுக்கிற. நீ பர்ஸ்ட் கிளம்பு” என்று சத்தம் போட்டான்.
தியா அதை எல்லாம் கவனியாது போல” இவங்க யார்னு சொல்லவே இல்லையே பாவா, உங்க லவ்வரா” என்று கேட்டாள்.
“இல்லை கேர்ள் ஃப்ரெண்ட் இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும். எங்களுக்கு வேலை இருக்கு நீ கிளம்பு” என்றான் தேவா. தேவா நினைத்தது இதை சொன்னதும் நிற்காமல் தியா ஓடி விடுவாள் என்று,
ஆனால் அங்கு நிலையோ வேறு, அந்த பெண் தன் காதலி இல்லை என்று சொன்ன பிறகு தான் தியாவிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது…
வந்ததே உங்களை பார்க்க தான் உங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசாமா எப்படி போறது பாவா, நீங்க இரண்டு பேரும் உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க. நான் இன்னைக்கு ஃபுல்லா ஃப்ரீ தான் காலேஜ்க்கு லீவ் போட்டுடேன். நான் கீழ போய் சாப்பிட்டே ஹாலில் டிவி பார்த்துட்டு இருக்கேன்” என்று அலட்சியமாக கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
தேவாவிற்கு தான் என்னடா இது என்பது போல் இருந்தது. மேலும் கோவமும் எரிச்சலும் வர அவனும் கீழே இறங்கி வந்து “உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி இம்சை பண்ற” என்று வினவ, தியாவோ நேத்து பாடிய அதே பல்லவியை பாடினாள்.
“இப்ப உனக்கு என்ன தெரியனும் நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கமா இருக்கேன் அதானே” என்று கேட்டான் தேவேந்திரன் எதிரே நின்று இருந்த திரவியாவை பார்த்து கோவமாக,
ஆம் என்பது போல் தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டினாள் திரவியா…
கண்களை இறுக மூடி நீண்ட பெருமூச்சு விட்டவன், “சரி சொல்றேன் ஆனா அதுக்கு அப்புறம் நீ எந்த விதத்திலும் என்னை தொந்தரவு பண்ண கூடாது… ஏன் என் கண்ணு முன்னாடி கூட வரக்கூடாது ஓகே”,
“ம்… ம்….” என்று அதற்கும் வேகமாக தலை அசைத்து அவன் என்ன பதில் கூற போகிறான் என்று கண்களில் ஆர்வம் பொங்க அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்…
தேவேந்திரனோ சற்று நகர்ந்து சென்று ஹாலில் இருந்த அலமாரியின் கதவை திறந்து அதில் இருந்து ஒரு மதுப்பொத்தலை எடுத்து அப்படியே வாயிக்குள் சரித்தவன், மீண்டும் அவள் எதிரே இருந்த ஷோபாவில் அமர்ந்து பேச ஆரம்பிக்கும் போது,
“சார் நீங்க இரண்டு பேரும் தானே பேச போறீங்க? நான் வேணா கிளம்பட்டுமா? ஏற்கெனவே நான் வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு, சும்மா தான் இருக்கேன்… எனக்கு இன்னும் ஒன் ஹவர்ஸ்ல வேற ஒரு கஸ்டமரோட மீட்டிங் இருக்கு” என்றாள் தேவேந்திரனால் அன்று அழைத்து வரப்பட்ட பெண்…
“அட ஏம்மா நீ வேற கொஞ்சம் நேரம் சும்மா இரேன், நானே ரொம்ப நாளா இவர் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சு கேட்ட கேள்விக்கு, இன்னைக்கு தான் அவரே மனசு வந்து பதில் சொல்றேன்னு சொல்லிருக்கிறார்… இதுல நீ வேற இடையில் இப்படி நொய் நொய்னுட்டு, கோபப்பட்டு சொல்ல போயிட போறார்… போ போய் அப்படி அமைதியா உக்காரு” என்று எரிச்சல்பட்ட திரவியா பின்பு தேவேந்திரன் புறம் திரும்பி “நீங்க சொல்லுங்க பாவா” என்றாள்…
“சரி இப்ப நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு, அதுக்கு அப்புறம் நான் சொல்றேன்” என்றவன், “ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க”? என்று கேட்டான் திரவியாவை பார்த்து,
“எதுக்குனா, நாமா வாழ்றத்துக்கு நமக்கு ஒரு துணை தேவை… கடைசிவரை நம்ம பெத்தவங்க நம்ம கூட வர முடியாது இல்லையா அதுக்காக தான்” என்றாள் தனக்கு தெரிந்த அளவு,
“அதுக்கு மட்டும் தானா வேற எதுவும் இல்லையா? ப்ராக்டிகலானா பதில் சொல்லு” என்றான் அவளின் முகத்தை கூர்ந்து நோக்கியபடி,
அவன் என்ன கேட்க வருகிறான் என்பது புரியாமல் முழித்து கொண்டு திரவியா இருக்க,
“நானே சொல்றேன் ஒரு ஆணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிறது முக்கியமான காரணம் அவங்க உடல் தேவைகளை தீர்ந்துக்கிறதுக்காகவும் தான், கல்யாணத்தோட பிரதானமான விஷயம் செக்ஸ் தான்”, என்று கேவலமான பதிலை கூற, அதற்கு ஏதோ சொல்ல வந்த திரவியாவை கை நீட்டி தடுத்த தேவேந்திரன் “இது என்னோட கருத்து, என் தேவைகளை நான் வேற வழியில் தீர்த்துக்கிறேன்”..
“என்ன பொறுத்தவரை காபி குடிக்கனும்னு தோணுனா நேரா போய் காபி ஷாப்பில் குடிச்சிரனும்… ஒரு காபிக்காக மொத்த தேயிலை தோட்டத்தையே விலைக்கு வாங்கிறது முட்டாள் தனம்… இப்ப என்ன பாரு தினம் ஒவ்வொரு காபி ஷாப் விதவிதமான டேஸ்ல, அதனால் எனக்கு கல்யாணம் தேவையில்லாத ஒன்னு நான் என் லைஃப்பா என்ஜாய் பண்ணி வாழுறேன்” என்று கேவலமாக பேச அங்கு நின்று இருந்த விலைமாது பெண்ணோ என்ன இவன் ரொம்ப மட்டமான கேரெக்ட்டரா இருப்பான் போல என்று முகம் சுளிக்க,
திரவியாவோ அதற்கு நேர்மாறாக வித்தியாசமான ஆளு தான்ப்பா இந்த பாவா என்று நினைத்தபடி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
மேலும் தொடர்ந்த தேவா “நான் இப்படி தான் ஜாலியா கடைசிவரை இருப்பேன் என் வாழ்க்கை எப்பவும் மாறாது. எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்குற ஆசை இல்லை. என்னை எந்த பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க விரும்ப மாட்டா” என்று கூறினான் தேவா.
“அது எப்புடி நீங்களா சொல்வீங்க” என்று தியா கேட்க…
“இரு உனக்கு நான் டெமோ காட்றேன்” என்ற தேவா அங்கு அப்பாவியாக நின்று முழித்து கொண்டு இருந்த அந்த பெண்ணை அருகே அழைத்தான்… அவளும் கிட்ட வந்து என்ன என்பது போல் அமைதியாக நிற்க…
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் வை. நீ என்னை கல்யாணம் பண்ணிக்குவயா” என்று கேட்டு முடிப்பதற்குள் ‘இல்ல இல்ல மாட்டேன்’என்பது போல் தலை அசைக்க,
பார்த்தியா என்பது போல் தேவா பார்க்க,
“அதை அவகிட்ட கேட்டதுக்கு பதிலாக என்கிட்ட கேட்டு இருந்தீங்கனா நான் டபுள் ஓகே சொல்லி இருப்பேன்” என்று தியா கண்களில் ஒளி மின்ன கூறியதில் தேவாவை விட அதிர்ச்சி ஆனது அங்கு நின்று இருந்த அந்த பெண் தான்.
பிழைகள் என்று தெரிந்த போதும் பிடித்து போனது புதையல் ஆனது.