ஸ்ரீ வினிதா

23. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 23 அஞ்சலி சமைத்த மதிய உணவை கதிரும் மதுராவும் இரசித்து உண்டனர். “மாமா… மது அக்கா நம்ம வீட்லயே தங்கிக்கட்டுமே… எதுக்கு வெளியே ரூம்ல தங்கி கஷ்டப்படணும்…” எனக் கேட்டாள் அஞ்சலி. ஒரு நொடி அசைவற்று அஞ்சலியை நிமிர்ந்து பார்த்தவன் பின் எதுவும் கூறாமல் கைகளை கழுவிவிட்டு அஞ்சலியின் அருகே வந்தான். அவளும் உண்டு முடித்திருந்தாள். “ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா அம்மு… பேசலாம்…” என்றான் அவன். “சரி மாமா…” என்றவள் கைகளைக் கழுவச் […]

23. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

22. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 22 விழா முடிந்து மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இருக்கையில் இருந்து எழுந்த கதிர் அஞ்சலியின் கரங்களைப் பற்றிக்கொண்டான். அந்தக் கல்லூரியில் படிப்பிக்கும் ஆசிரியர்களும் ஏனைய ஊழியர்களும் வந்து கதிருக்கும் அஞ்சலிக்கும் வாழ்த்து கூற, நேரமோ இனிமையாகக் கழியத் தொடங்கியது. அஞ்சலியின் பார்வையோ தன்னுடைய சகோதரி எங்கேயாவது தென்படுகிறாளா என வேகமாகத் தேடியது. “என்ன அம்மு… மதுராவைத் தேடுறியா?” எனக் கேட்டான் கதிர். “ஆமாங்க… அக்கா உங்க காலேஜ்லதானே படிக்கிறதா சொன்னீங்க…” “ம்ம்… இங்கதான்

22. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

21. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 21 மிதமான காலை வெயிலோ சாளரங்களினூடாக உள்ளே நுழைந்து அஞ்சலியின் முகத்தில் மென்மையான பொன் ஒளியைப் பரப்பியது. கதிரின் பிரம்மாண்டமான படுக்கை அறையில் தயாராகி நின்றவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள். இளஞ் சிவப்பு நிறத்தில் மின்னும் நவீன லாங் ஃப்ராக் அவளுக்கு தேவதையின் தோற்றத்தை அளித்தது. கதிர் அவளுக்காக வாங்கிக் கொடுத்த மெல்லிய வைர நகைகளும் அவிழ்ந்து புரளும் கூந்தலும் அவளை இன்னும் அழகாக்கின. தன் கணவனுடைய தேர்வை அவளால் மெச்சாமல்

21. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

20. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 20 அஞ்சலியோ அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் திகைத்துப் போயிருந்தாள். பின்னே இன்று காலையில் கிளம்பலாம் என்றதும் புடவை கட்டி தயாராகி இருவருடைய ஆடைகளையும் மடித்து வைத்துவிட்டு தயாராக நின்றவள் புன்னகைத்துக் கொண்டே தன் முன்னே வந்து நின்ற தன் கணவனைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து போனாள். ப்ளாக் நிற டி-ஷர்ட் அணிந்து டெனிம் ஜீன் மற்றும் கண்களில் கூலிங் கிளாஸ் உடன் சில்வர் நிற வாட்ச் அணிந்து பக்கா மாடலாக வந்து

20. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

19. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 19 விடியற்காலை எழுந்தவுடன் கதிரும் அஞ்சலியும் குலதெய்வ கோயிலுக்குக் கிளம்பத் தயாரானார்கள். சுதாலட்சுமியோ அவர்களுடைய சடங்குகளுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தார். “அஞ்சலி நான் கொடுத்த பட்டுப் புடவைய கட்டிக்கோம்மா…” “சரிங்க அத்த..” என்றவள் புடவையை நேர்த்தியாகக் கட்டி அழகாகத் தயாராகி வந்தாள். சுதாலட்சுமிக்குத் தெரியாமல் நேற்று கதிருடன் ஒரே அறையில் ஒன்றாக இருந்ததால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அஞ்சலிக்கு சங்கடம் உண்டானது. சங்கடத்துடன் தன்னவனின் செயலில் வெட்கமும் பிறந்தது. “அஞ்சலிம்மா… இங்க

19. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

18. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 18 அஞ்சலியோ தன்னுடைய இரவு ஆடையை எடுத்து வந்தவள் சுதாலட்சுமி கூறிய அறையில் படுத்துக் கொண்டாள். கதிரோடு உறங்கும் போது இப்படியான ஆடைகளை தவிர்த்து விடுவாள் அவள். இன்று தனியாக படுப்பதனால் தயக்கமின்றி அந்த மெல்லிய சீத்ரு நைட்டியை அணிந்து படுத்துக் கொண்டவளுக்கு உறங்க முடியவில்லை. அவளுடைய மனம் வித்தியாசமான உணர்வுகளின் பிடியில் அகப்பட்டிருந்தது. கதிரின் அன்பு வார்த்தைகளும் அவனுடைய மென்மையான முத்தமும் அவளுடைய மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தன. ‘என்னோட

18. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

17. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 17 கதிரின் நெற்றி முத்தத்தில் சிவந்து போனாள் அஞ்சலி. அவளுடைய மனதில் இருந்த குற்ற உணர்ச்சி சுமையெல்லாம் அக்கணமே மடிந்து போனது. “மாமா…?” “என்னடி..?” “நாளைக்கு எல்லா உண்மையும் பெரியவங்ககிட்ட சொல்லிடுவீங்களா?” என அவள் கேட்க மறுப்பாக தலையை அசைத்தவன் “நாளைக்கு இல்ல… இப்போவே சொல்லப் போறேன்…” என்றான். “என்னது இப்போவா..? இந்த நேரத்துலையா..?” என அவள் அதிர்ச்சியாகக் கேட்க, “சில உண்மைகளை தள்ளிப் போடவே கூடாது அம்மு…” என்றவன் அவளுடைய அச்சம் கவிழ்ந்த

17. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

16. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 16 கதிரின் குரலைக் கேட்டதும் மதுராவின் முகம் இருண்டது. “ஹேய் யாரு மது..?” என அவள் அருகே நின்ற அர்ஜுன் கேட்டான். “வெயிட்.. பேசிட்டு வந்துடுறேன்…” என்றவள் கிளப்பின் சத்தத்திலிருந்து விலகி வெளியே நடந்தாள். கடற்கரையின் குளிர்ந்த காற்று அவளைத் தழுவியது. ஆனால் கதிரின் குரல் அவளுடைய உற்சாகத்தை உடைத்து விட்டிருந்தது. அதுவும் அவன் மதுரா என அழைத்ததிலேயே அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள் அவள். ‘இந்த அஞ்சலி லூசு

16. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

15. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 15 மதுராவுடன் பேசிவிட்டு முடிவு பண்ணலாம் எனக் கூறிய கதிர் அறையை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னரே மீண்டும் அறைக்குள் திரும்பினான். நேரமோ இரவு 11 ஐத் தொட்டிருந்தது. அஞ்சலியால் தூங்கவே முடியவில்லை. கதிர் மதுராவுடன் பேசி இருப்பானா? இருவரும் பேசி என்ன முடிவு எடுப்பார்கள்? நான் இனி இந்த வீட்டை விட்டுச் செல்ல வேண்டுமா? இனி மாமாவுக்கு எனக்கும் எந்த உறவும் இல்லையா என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு நெஞ்சில் சுருக்கென

15. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

14. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 14 கதிர் தன்னை அடிப்பான் என்பதை சிறிதும் எதிர்பாராதவள் அவனுடைய அடியின் வேகத்தை தாங்க முடியாமல் தடுமாறி கீழே விழப் போய் தன் காலை அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றாள். அவன் அறைந்த ஒரு பக்கக் கன்னம் தீப் பற்றி எரிவது போல இருந்தது. வலி தாங்க முடியாமல் விழிகளை மூடி தன்னை சமப்படுத்திக்கொள்ளப் போராடியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக மௌனமாக நின்றாள் அவள். இதே போல இன்னும் எத்தனை அடிகளை அவன்

14. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

error: Content is protected !!