அசுரனின் குறிஞ்சி மலரே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 8

குறிஞ்சி மலர்.. 8 வானம் மழை மேகங்களை சுமந்து கொண்டு மப்பும் மந்தாரமுமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. சூரியனை வெகு பிரயதனப்பட்டு மேகங்கள் மூடி கிடக்க, வாயு பகவானும் வெகு பிரயத்தனப் பட்டு மேகங்களைக் கலைத்து சூரியனை வெளிக்கொணர முயன்று கொண்டிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தின் வாசலில் அமர்ந்து கொண்டு, மழை வருமா? வராதா? என்பது போல விரல் நகங்களைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பூங்கோதை. பூங்கோதை ஜீவோதயத்திற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்களாகி […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 8 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 7

குறிஞ்சி மலர்.. 7 மரங்களை ஊடறுத்து வந்த மெல்லிய தென்றல் காற்று, தேகம் வருடிச் செல்ல, காற்று கலைத்து விட்டுச் சென்ற கூந்தலை ஒரு கையால் ஒதுக்கி விட்டபடி திரும்பிப் பார்த்தாள் பூங்கோதை. அவள் வரும்போது இருந்த மாட்டுத் தொழுவத்திற்கும் இப்போது இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. எல்லாம் அவளின் கை வண்ணம் தான். மேலே வேயப்பட்டிருந்த ஓலை தவிரத் திறந்த வெளியாக இருந்த மாட்டுத் தொழுவம், கீழே குப்பை கஞ்சலாகப் பார்ப்பதற்கே அழுக்குப்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 7 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 6

குறிஞ்சி மலர்..6 தென்றல் காற்று பூ மரங்களின் ஊடே புகுந்து அப்பால் நகர்கையில், தன் குளுமையோடு பூக்களின் சுகந்தத்தையும் ஏந்திக் கொண்டே நகர்ந்தது. அத்தனை இதமான சுகந்தத்தை எங்கும் பரப்பும், பூமரங்களைக் கொண்ட தெருவின் முனையில் தான் ஜேம்ஸ்ஸின் ஜீவோதயம் அமைந்திருந்தது. வீடு அமைந்திருந்த தெருவில் மட்டும் தான் வாசனை மரங்கள் ஏராளமாக இருந்தன ஆனால், ஜேம்ஸின் பங்களா அமைந்திருந்த வளாகத்தில், வாசனைப் பூக்களுக்கு மட்டும் பஞ்சம். அங்கே நின்ற பூ மரங்கள் வாசனையுள்ள பூக்களைப் பூக்காமல்,

அசுரனின் குறிஞ்சி மலரே.. 6 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 5

குறிஞ்சி மலர்..5 தெற்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்தில், சாளரக் கதவுகளுக்குப் போடப் பட்டிருந்த திரைச் சீலைகள், தேசியக்கொடி பறப்பது போல பறந்து கொண்டேயிருந்தன. பூ மரங்களில் இருந்த பூக்களும் காற்றோடு சேர்ந்து வந்து அந்தப் பெரிய மொட்டை மாடியில், பூமழை தூவியது போலக் கொட்டிக் கிடக்க, அங்கே போடப் பட்டிருந்த பெரிய இருக்கையில் அமர்ந்து கொண்டு, மேலே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர். அவன் மேல் விழுந்த ஒன்றிரண்டு பூக்களை, எரிச்சலோடும் அலட்சியத்தோடும் தட்டி விட்டவனின் கரம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 5 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 4

குறிஞ்சி மலர்.. 4 காலை நேர இளங்காற்று அவசரம் இல்லாமல், சாமரம் வீசுவது போல வீசிக் கொண்டிருக்க, காலைச் சூரியனும் தன் சேவைக்கு வந்திருந்தான். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பக்கமாகத் தனியாக இருந்த அறையின், சாளரக் கம்பிகளின் ஊடாக உள்ளே நுழைந்த சூரியக் கதிர்கள், கீழே படுத்துக் கிடந்த பூங்கோதை மீது, தம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்ச, அவளோ போர்த்தியிருந்த சேலையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள். அவள் காலை நேரத்தில்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 4 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 3

குறிஞ்சி மலர்.. 3 வெள்ளை நிறத் தாமரை மலர்களும் மொட்டுகளும் என நிரம்பி வழிந்த தாமரைத் தடாகத்தின், கரையோரமாக விரிந்து கிடந்த புல்வெளியில் நின்று பார்க்கையில், வட திசையில் பெரிய அரசமரத்துக்குக் கீழே கருங்கல்லால் செதுக்கப் பட்டிருந்த, அமர்ந்த நிலை புத்த பகவானின் சிலை மனதுக்கு அமைதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தப் புத்த பகவானின் சிலையையே பார்த்தபடி நின்றிருந்தார் வியாகேசு. அவர் நின்றிருந்த இடத்தில் இருந்து, பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்த கோல்ட் ஸ்டார் ரெஸ்ரோரன்டில், ஜேம்ஸ்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 3 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே..2

குறிஞ்சி மலர்..2 காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த வேப்ப மரத்தின் கீழே, வெயில் தீண்டாமல் பாதுகாப்பாக இருப்பது போல, அந்த ஓட்டு வீடு அமைந்திருந்தது. வெளியே மரத்தின் கீழே சாய்மனைக் கட்டில் போட்டு, அதில் சாய்ந்தமர்ந்து கொண்டு, வெத்திலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார், அந்த ஓட்டு வீட்டின் ராணி திரிலோகநாயகி. அவரது ஆனந்தமான அந்த வேலையைக் குழப்புவது போல, வீட்டின் வெளி வாசலில் காரின் கோர்ன் சத்தங் கேட்கவே, நம் வீட்டுக்கு யாருப்பா அது காரில் வருவது

அசுரனின் குறிஞ்சி மலரே..2 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே..1

குறிஞ்சி மலர்.. 1 மெல்லிய ஊதா நிறப் பூக்களை கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த, அந்தப் பெயர் தெரியாத மரத்தில் இருந்து, இரண்டு குருவிகள் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் மரங்களின் இலைகளை ஊடறுத்து தன் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருந்த, காலைக் கதிரவனின் கதிர்கள் பட்டு, ‘ஜீவோதயம்’ எனப் பச்சைக் கல்லில் பொறிக்கப் பட்டிருந்த அந்தப் பலகை பளபளக்க, பலகையைத் தாங்கி நின்ற மதிற்சுவரை அடுத்து, பிரமாண்டமான அந்த பங்களா கன கச்சிதமாக நிமிர்ந்து

அசுரனின் குறிஞ்சி மலரே..1 Read More »

error: Content is protected !!