இசை என்னாச்சு டா உனக்கு சாப்பாடு பிடிக்கலையா என்ற ரகுராமனிடம் இல்லைப்பா பிடிச்சிருக்கு என்றாள் யாழிசை. அப்புறம் ஏன்டா சரியா சாப்பிடாம கோரிச்சுகிட்டு இருக்கேன் என்றால் ரகுராமன் இல்லப்பா ஒன்னும் இல்லை என்ற யாழிசை அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் மனம் எங்கும் ரணமாக வலித்தது ஏனோ வித்யுத், திவிஷியா இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டு வெளியே வந்ததை பார்த்தவளுக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது. என்கிட்ட ஒரு நாள் கூட சிரிச்சு பேசியதில்லை ஏன் நான் பேசினால் முகம் கொடுத்தே பேசினதில்லை அந்த பொம்பளைகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறாரு என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க. யாழி தப்பா யோசிக்காதே லவ் பண்ணும் போது லவ் பண்ணும் பர்சன் மேல ஃபர்ஸ்ட் நம்பிக்கை வேணும் நம்பிக்கை இல்லாமல் சந்தேகப்படக்கூடாது என்று மனசாட்சி கூறிட சந்தேகப்படக் கூடாதுதான் ஆனால் அவர் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரிய மாட்டேங்குது எனக்கு தெரிஞ்சுக்கணுமே என்று அவள் பலவாறு யோசித்துக்கொண்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தாள்.
சரி வீட்டுக்கு போகலாமா இல்லை வேற எங்கேயும் போகணுமா? என்ற ரகுராமனிடம் யஸ்வந்த் ஏதோ சொல்ல வர வீட்டுக்கு போலாமே அப்பா என்றாள் யாழிசை. என்னாச்சுக்கா அதுக்குள்ள வீட்டுக்கு போகலாம்னு சொல்ற ஷாப்பிங் போகலாம்ல என்றான் யஸ்வந்த். நாளைக்கு போய்க்கலாம் டா ப்ளீஸ் எனக்கு தலை வலிக்குது வீட்டுக்கு போகலாமே என்றாள் யாழிசை. சரி சரி அதான் அக்கா சொல்லிட்டாளே யஸ்வந்த் நம்ம நாளைக்கு ஷாப்பிங் போலாம் என்று ரகுராமன் கூறிட ஓகே அப்பா என்றான் யஸ்வந்த்.
தலை வலிக்குதுனா அப்பா தைலம் தேய்ச்சு விடுவா இசை என்றார் ரகுராமன். இல்லைப்பா அதான் வீட்டுக்கு வந்துட்டோம்ல நான் கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் போய் நின்று காத்து வாங்கிட்டு வரட்டுமா ப்ளீஸ் என்று அவள் கேட்டிட, என்ன இசை இதுக்கெல்லாம் போய் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு இருக்கே உன் இஷ்டம் டா நீ போய் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்து வாங்கிட்டு வா என்ற ரகுராமன் ரோகிணி என்று அழைத்திட ரோகிணி வந்தார்.
உனக்கும், யாமினிக்கும் சாப்பாடு இருக்கு என்று ஒரு கவரை நீட்டினார் ரகுராமன். அதை வாங்கிக் கொண்டார் ரோகினி . யாமினி சாப்பிட வா என்று ரோகிணி அழைத்திட அமைதியாக வந்தாள் யாமினி. ரகுராமன் தன் அறைக்கு சென்று விட்டார் மகன் யஸ்வந்த் உடன்.
எதுக்குமா இப்போ இந்த சாப்பாட்டை எனக்கு பரிமாறுறீங்க என்ற யாமினியிடம் ஏன்டி உனக்கு பிடிச்சது தானே அப்பா வாங்கிட்டு வந்து இருக்காரு என்றார் ரோகினி. இந்த சாப்பாடு அவள் ஜெயிச்சதுக்கான கொண்டாட்டத்துக்கு வாங்கினது அதை நம்ம சாப்பிடனுமா என்று யாமினி கேட்டாள். இதோ பாரு யாமினி உன் அப்பா இருக்கிற வரைக்கும் அவளை நான் எதுவும் சொல்ல மாட்டேன் அது உனக்கே தெரியும் அப்படி நான் அவளை ஏதாச்சும் கொடுமை படுத்துறது உன் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்னை அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டுருவாரு என்னை மட்டும் இல்லை உன் மாமாவையும் சேர்த்து தான் விரட்டி விடுவாரு உனக்கு என் கூட வர விருப்பமானாலும் அனுப்பி விட்டுருவாரு. இந்த வீட்டுக்கு நான் தான் மகாராணி உன் அப்பா இருக்கும் போது மட்டும்தான் அவள். அதனால ஒரு மூன்று மாசத்துக்கு அடக்கி வாசி என்ற ரோகிணி கூறிட அமைதியாக பல்லைக் கடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் யாமினி.
மொட்டை மாடியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள் யாழிசை. அவள் மனதில் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது. மூன்று மணி நேரமா என்ன பேசி இருப்பாங்க. மூன்று மணி நேரமா இரண்டு பேரும் பேசிட்டு இருந்திருப்பாஙகளா? நாம சினிமா பார்க்க போகும் போதே அவர் வெளியே கிளம்பினாரே. இப்படி பலவாறு யோசித்து கொண்டு இருந்தாள் யாழிசை.
அந்த நேரம் ஏதோ போன் கால் வர பேசிக் கொண்டே மாடிக்கு வந்தான் வித்யுத் அபிமன்யு. அவனைக் கண்டவளுக்கு கோபம் தான் வந்தது. போன்ல யார் யார்கிட்டயோ சிரிச்சு பேசுறாரு ஒரு வேளை திவிஷியாவா இருக்குமோ என்று நினைத்தவள் அவன் முன் நின்றாள். அவன் அவளை கடந்து செல்ல பார்க்க அவனது கையை எட்டிப் பிடித்தாள் யாழிசை.
அவனோ புருவம் உருவம் உயர்த்தி அவளை கோபமாக முறைத்துக் கொண்டிருக்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் யாழிசை. போனில் பேசிக் கொண்டிருந்தவரிடம் பிறகு பேசுகிறேன் என்று போனை கட் செய்து விட்டு அறிவில்லை இசை உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் ஃபோன் பேசிட்டு இருக்கேன் , கையை பிடிச்சு உங்க கிட்ட பேசணும்னு சொல்ற பொண்ணு தானே நீ என்றான் கோபமாக . பொண்ணு தான் நான் ஒன்னும் பையன் டிரஸ் போட்டுட்டு நிற்க வில்லை பாருங்க என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் என்ன வேணும் உனக்கு என்றான்.
எனக்கு நீங்க தான் வேணும் இதை நான் பல தடவை சொல்லிட்டேன் என்று அவள் கூறிட ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் கன்னம் பழுக்க அறையப் போறேன் பாரு எத்தனை தடவை சொல்றது இந்த மாதிரி என்கிட்ட பேசாத எனக்கு உன்னை பிடிக்கலைன்னு என்று அவன் கூறிட நிஜமாகவே உங்களுக்கு என்னை பிடிக்கலையா? என்றாள் யாழிசை குரல் உடைந்து .
நிஜமா தான் சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை என்றான் வித்யுத் அபிமன்யு. ஏன் பிடிக்கலை திவிஷியா மேடத்தை பிடிச்சிருக்கோ. அதனாலதான் அவங்க கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தீங்களா? என்று அவள் கேட்டிட அவளை கோபமாக பார்த்தான் வித்யுத்.
நான் எங்கே போறேன்? யார்கிட்ட பேசுறேன் இதெல்லாம் வேவு பார்க்கிறது தான் உனக்கு வேலையா? வேற வேலையே இல்லையா? என்னை வேவு பார்க்க தான் உங்க வீட்ல உன்னை பெத்து போட்டு விட்டு இருக்காங்களா? என்றான் வித்யுத் கோபமாக .
நான் உங்களை வேவு பார்க்கலை எதார்த்தமா தான் பார்த்தேன். சொல்லுங்க உங்களுக்கு அவங்களை பிடிச்சதுனால தான் எனக்கு பிடிக்கலையா என்று அவள் கேட்டிட ஆமாடி எனக்கு அவங்களை தான் புடிச்சிருக்கு . உன்னை சுத்தமா பிடிக்கலை உனக்கு என்ன தகுதி இருக்கு என்னை லவ் பண்ணுற. நீ இப்போ தான் படிச்சிட்டு இருக்க .லவ் வெறும் ஸ்டூடண்ட் ஆனால் அவங்க என்னை விட அதிகமா படிச்சு ஹெச்ஓடி. உன்னோட கம்பேர் பண்ணும்போது எனக்கு அவங்க தான் பெஸ்ட் அதனாலதான் சொல்றேன் எனக்க உன்னை கொஞ்சம் கூட பிடிக்கலை நான் திவிஷியாவை மட்டும் தான் லவ் பண்றேன் இன்னும் கொஞ்சம் நாளில் கல்யாணம் கூட பண்ணிக்க போறோம் என்ன இப்போ என்றான் வித்யுத் கோபமாக.
சார் விளையாடாதீங்க நான் சீரியஸா கேட்டுட்டு இருக்கேன் என்ற யாழிசையிடம் நானும் சீரியஸா தான் சொல்லிட்டு இருக்கேன் இசை உனக்கு தான் புரிய மாட்டேங்குது. ஒவ்வொரு தடவையும் கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி படிச்சு படிச்சு சொல்லிட்டு இருக்கேன் எனக்கு உன்னை பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை. இப்போ அதுக்கான ரீசனும் சொல்லிட்டேன் எனக்கு வேற ஒருத்தவங்கள புடிச்சிருக்கு அதனாலதான் உன்னை பிடிக்கலை. இன்னொரு முறை என்கிட்ட நெருங்காதே என்றான் வித்யுத் அபிமன்யு.
இல்லை நான் நம்ப மாட்டேன் என்று அவள் கூறினாள். நீ நம்புனா நம்பு, நம்பாட்டி போ அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. இன்னொரு முறை என் பின்னாடி நீ சுத்துனனு வச்சுக்கோ மரியாதை கெட்டுடும். இதுவரைக்கும் நான் எத்தனையோ முறை படிச்சு படிச்சு உன்னிடம் சொல்லி பார்த்துட்டேன் வெக்கமே இல்லாம நான் போகிற இடத்திற்கு எல்லாம் வர . லிஃப்ட்ல ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி ஆன்னு பாத்துட்டு இருக்க. உனக்கு வெட்கம் ,மானம்: சூடு :சொரணை எதுவுமே கிடையாதா? நீ ஒரு பொண்ணு தானே உனக்கு வெட்கம்: மானம் ஏதாச்சும் கொஞ்சம் நஞ்சம் இருந்தால் இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதே. நான் இருக்கிற திசை பக்கம் கூட திரும்பாதே.ஜ இன்னொரு முறை என் பின்னாடி சுத்துன அப்படின்னா அடுத்து ஹெச்ஓடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். உன்னை காலேஜ் விட்டு சஸ்பெண்ட் பண்ண வைக்காமல் விட மாட்டேன். இதுவரைக்கும் போனால் போகுது சின்ன பொண்ணு விட்டுட்டு இருந்தேன் இனிமேலும் நீ அதே மாதிரி பண்ணிட்டு இருந்தீன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்றான் வித்யுத்.
என்ன சஸ்பெண்ட் பண்ண வைக்க போறீங்களா? என்று அவள் கேட்டிட ஆமாம் இப்போ என்ன அதுக்கு என்றான். ஹெச்ஓடி உங்க ஆளு கண்டிப்பா சஸ்பென்ட் தான் இல்லை என்றாள் யாழிசை. அவனோ பதிலுக்கு கோபமாக ஆமாம் ஹெச்ஓடி என் ஆளு தான் இப்போ என்ன உனக்கு என்று அவன் சொன்னதுமே அவள் உடைந்து விட்டாள். ஆனால் அதற்கு மேலும் அவன் விடாமல் பேச ஆரம்பித்தான்.
உனக்கு அறிவில்லையா உனக்கு உண்மையிலேயே கல்யாண ஆசை வந்துருச்சு அப்படின்னா உன் வீட்ல அப்பா: அம்மா எல்லாரும் இருக்காங்களே அவங்க கிட்ட சொல்லு என்னை விட நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அதை விட்டுட்டு படிக்கப் போன இடத்தில கல்யாணம் பண்ணிக்க புருஷனை தேடாத என்று அவன் கூறிட அவளுக்கு அவமானமாகிவிட்டது.
என்ன சொன்னீங்க என்று அவள் கேட்டிட உனக்கு என்ன காது செவிடா திரும்பத் திரும்ப சொல்ல முடியாது . கல்யாண ஆசை வந்துட்டா வீட்ல சொல்லி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போ என் பின்னாடி வராதே என்று கூறிவிட்டு அவன் சென்று விட்டான்.