காதல் : 02
தனது குடிசையின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு அதில் ஆடை ஒன்றினை தைத்துக்கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சத்தியா. அவள் பாட்டுப் பாடியவாறு தைத்துக் கொண்டிருந்தாள்
அப்போது அவள் எதேச்சையாக வாசலைப் பார்த்தாள். வாசலில் நிழல் ஒன்று தெரிந்தது. அது என்னவென்று நிமிர்ந்து பார்த்த சத்தியா பயத்தில் கதிரையை விட்டு எழுந்தாள்.
“என்ன சத்தியா உன்னை வீட்டுப்பக்கமே காணவில்லை. என்ன பயந்துட்டியா? ” என கேட்டான் ரகு.
சத்தியாவுக்கு பயத்தில் பேச்சு வரவில்லை. அவனது வீட்டில் நடந்ததை நினைத்துப்பார்த்தாள்.
(அன்று சரஸ்வதிக்கு உடம்பு சரியில்லை என்று சத்தியாதான் பெரிய வீட்டுக்கு வேலைக்கு போனாள். அப்போ வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் போது ரகு வந்தான். வந்தவனுக்கு சமையலறையில் சமைத்துக்கொண்டிருக்கும் சத்தியாவைக் கண்டான்.
வேலை செய்தாலும் அழகாக இருக்கும் அவளைக் கண்டவனுக்கு சத்தியாவை அடைய வேண்டுமென்ற எண்ணம் தோன்ற மெதுவாக அவளருகில் சென்றான். தனதருகில் யாரோ வருவதை உணர்ந்த சத்தியா திரும்பிப் பார்க்க அவளை துகிலுரிக்கும் பார்வை பார்த்தபடி நின்றான் ரகு.
“என்ன சின்னையா?என்ன வேணும்?”
“ம்….. நீதான் வேணும்”என்றபடி அவளருகில்ல வந்து கையைப்பிடித்தான்.
“விடுங்க சின்னையா” என அவனிடமிருந்து கைகளை விடுவிக்க போராடினாள். அவனோ மேலும் மேலும் அவளை நெருங்க பயத்தில் அவனது கையை நன்றாக கடித்தாள். அவள் கடிக்க வலியினால் தனது கையை ரகு தளர்த்தினான். அதை பயன்படுத்திக்கொண்ட சத்தியா வீட்டிலிருந்து வெளியே ஓடிவிட்டாள். )
“என்ன சத்தியா அன்னைக்கு நடந்ததை நினைச்சிப்பாத்தியா? அன்னைக்கு நீ தப்பிச்சிருக்கலாம். ஆனா இன்னைக்கு நீ தப்பிக்க முடியாது” என்றபடி சத்தியாவை நோக்கி வந்தான்.
சத்தியா பயத்தில் கத்த ஆரம்பித்தாள்.
“காப்பாத்துங்க”
அவளை கத்தவிடாது அவளது வாயினை கையினால் மூடினான். அவள் அவனிடமிருந்து விடுபட முயன்றாள். தனது நகத்தினால் அவனது கையினை கிழித்தாள். அதில் அவன் சற்று தனது கையை நகர்த்த மீண்டும் கத்த ஆரம்பித்தாள் சத்தியா.
வயலை பார்த்துவிட்டு தோட்ட வீட்டுக்கு வந்த சக்தியின் காதுகளுக்கு சத்தியாவின் குரல் கேட்டது. உடனே சக்தி சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் கண்டது சத்தியாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டிருக்கும் ரகுவை. கொஞ்சமும் யோசிக்காது ரகுவை எட்டி உதைத்தான். ரகு கீழே விழ சத்தியா சக்தியின் பின்னால் வந்து நின்றாள். பயத்தில் அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவளது உடல் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த சக்தி மெதுவாக அவளது கையைப் பிடித்தான். சத்தியா அவனது முதுகில் சாய்ந்து கொண்டாள். சக்தி “பயப்படாத புள்ள” என்றான்.
ரகுவை திரும்பிப் பார்த்தான். கீழே விழுந்தவன் எழுந்தான்.
“டேய் நீ அவள விட்டுப்போ. அவ எனக்கு வேணும் “
“உனக்கு அவ வேணும்னா கல்யாணம் பண்ணிக்க”
“யாரு இவளையா? நான் கல்யாணம் பண்ணணுமா போடா”
“அப்போ இங்க இருந்து போடா”
“முடியாதுடா” இருவரும் சண்டைபிடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த சத்தியா கத்த ஆரம்பித்தாள். அவளது சத்தத்தை அவ்வழியாக வந்த முத்துபாண்டி கேட்டு உள்ளே வந்தவர் முகம் கோவத்தில் சிவந்தது.
“டேய் என்னடா இது?”
“தந்தையின் சத்தத்தில் இருவரும் பிரிந்தனர்.
“அப்பா இவன் இந்த பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான் . அதுதான் அடிச்சன்” என்றான் ரகு.
“அப்பிடி இல்லை…”என்று சொல்ல வந்த சக்தியிடம்,
“வாயை மூடு உனக்கு புத்திகெட்டுப்போச்சா. உன்ட தம்பி உனக்கு போய் அடிச்சி புத்திசொல்ற அளவுக்கு வந்துத்தியே….”
“ஐயா நடந்தது நான் சொல்றன்” என உண்மைய சொல்லவந்த சத்தியாவையும் முத்து சொல்லவிடவில்லை.
“நீ ஒண்டுமே சொல்லாதம்மா. இவன் நடந்ததுகொண்டதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்றன். ரகு நீ ஹாஸ்பிடல் போ. இவனை என் கண்ணுக்கு முன்னுக்கு வரக்கூடாது என்று சொல்லு என சொல்லும் போதே சக்தி ரகுவையும் முத்துவையும் முறைத்துவிட்டு வெளியேறினான். ரகுவும் அவனுக்கு பின்னால் சென்றான்.
முத்துவும் சத்தியாவை பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.சத்தியாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள்.
தனது தோட்ட வீட்டிற்கு வந்த சக்திக்கு கோபமாக வந்தது. தன்னைப் பற்றி எப்பிடி அவர் இவ்வளவு கேவலமா சொல்லலாம் என்று. ரகுவை நினைக்க கொலைவெறி வந்தது. சின்னபொண்ணிடம் போய் இப்பிடி நடந்துகொண்டானே என்று.
வீட்டிற்கு வந்த முத்துபாண்டி சகுந்தலாவை அழைத்தார்.
“என்னங்க” என்றபடி வந்தார். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்றார். அவர் சொன்னதைக் கேட்ட சகுந்தலா.
“முடியாதுங்க” என சத்தமிட்டார்.
முத்து சகுந்தலாவிடம் என்ன கூறினார்????????