
Category:
E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)
மின்சார பாவை-20
written by Competition writers
மின்சார பாவை-20
தீரனின் கேலி பார்வையில் குழப்பமாக யுகித் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க
வெண்ணிலாவோ கையில் இருந்தக் குழந்தையை அவனிடம் கொடுக்காமல், வெடுக்கென்று அவனைத் தள்ளி விட்டாள்.
இருவரையும் மாறி மாறி பார்க்க. அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. ‘ இவன் ஏன் இப்படி பார்க்குறான்.’என்று குழம்பிய யுகித், அவனது கேலிப் பார்வையை ஒதுக்கி விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பினான்.
“நிலா!” என்றழைக்க.
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என்னால உன்னை மன்னிக்க முடியாது யுகி. அப்புறம் எனக்கு பட்டு குட்டி ரொம்ப முக்கியம். இந்த குழந்தை என்னோட குழந்தை இல்லன்னு உனக்கு தெரியும். ஆனால் இது என் கூட பிறந்த அக்காவோட குழந்தை. நான் தான் இந்த குழந்தையை பார்த்துக்கணும். என்னை நம்பி தான் விட்டுட்டு போயிருக்கா. பட்டுக்கு எல்லாமே நான் தான்.
அவளுக்கு நான் அவளோட அம்மா இல்லைங்குற விஷயம் தெரிய வந்துச்சுன்னா அவ தாங்க மாட்ட. அவளுக்கு சின்ன கஷ்டத்தை கூட தர மாட்டேன்.” என்று வெண்ணிலா கூற.
“என் மேல நம்பிக்கை இல்லையா நிலா! நான் நல்லா பார்த்துப்பேன் நிலா!” என்று கெஞ்சினான் யுகித்.
“எப்படி பார்த்துப்பீங்க? நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறந்ததால் இரண்டு பிள்ளைகளையும் ஓரே மாதிரி பார்ப்பீர்களா? ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு பிறந்த குழந்தையை அடிச்சா, இல்ல இந்த குழந்தைக்கு நான் அதிகமா சப்போர்ட்டுக்கு வந்தா, ஏன் என்று கேள்வி கேட்க மாட்டீங்க? பெத்தா அம்மாவா இருந்துட்டு உன் பிள்ளையை விட அடுத்த பிள்ளை மேல மட்டும் உனக்கு எப்படி இவ்வளவு பாசம் வருதுன்னு எங்க அத்தையை கேட்ட மாதிரி என்னை கேட்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அவங்களை மாதிரி அதைத் தாங்கிக்கிற சக்தி எனக்கு கிடையாது. என் பட்டுவை, தீரன் மாமா மாதிரி கஷ்டப்படவும் நான் விடமாட்டேன்.” என்றாள் வெண்ணிலா.
யுகித் அதிர்ந்து பார்க்க.
“என்ன ஒன்னும் புரியலையா சரித்திரம் திரும்புது.”என்று தீரன் சிரித்தான்.
அங்கு மௌனமாக மித்ரா கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க. அவர் தோளில் கை போட்ட தீரனும் மறுபுறம் அணைத்தவாறு வெண்ணிலாவும் நிற்க.
அவரை ஏக்கமாகப் பார்த்தான் யுகித்.
தீரனோ,” பிரசவத்தில் அக்கா இறந்துட்டாங்கன்னா, அவங்க பிள்ளையை பார்த்துக்கணும் என்பதற்காகவே கல்யாணம் பண்ணி வைப்பதெல்லாம் இருபது, முப்பது வருஷத்துக்கு முன்பு சர்வசாதாரண விசயம்டா.அப்படி பண்ணிக்கிட்டவங்க அந்த குழந்தை மேல உயிரை வைக்க மாட்டாங்களா? இல்ல அவங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா சுயநலமா இருக்கணுமா? அந்த மாதிரி சூழ்நிலையில் அம்மா என்னை வளர்க்கணும்னு விதி போல.
அதனால என் மேல அம்மா பிரியமாக இருந்தாங்க. ஏன் நீயும் தானே என் மேல பிரியமா இருந்த. ஆனா என் அம்மா இவங்க இல்லன்னு தெரிஞ்சதிலிருந்து உனக்கு ஏன் என் மேல அவ்வளவு கோபம் வருது? ஏன் பெத்தா தான் அம்மாவா? வளர்த்தா பாசம் இருக்கக் கூடாதா? அன்றைய சம்பவம் நடக்கிற வரைக்கும் அம்மா நம்ம இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தானே பாசத்தையும். கண்டிப்பையும் காட்டி வளர்த்தாங்க. நானும், நீயும் ஒன்னா விளையாடி, ஒன்னா சாப்பிட்டு,ஒன்னாவே சுத்துவோமே. ஞாபகம் இருக்கா. அதுல எப்பவாவது வேறுபாடு பார்த்திருக்கியா?”என்று தீரனின் கேள்வி ஒவ்வொன்றும் அவனை சாட்டையடியாக அடித்தது
கண்ணை மூடியவனுக்கு முன் தன் தாய், தந்தையையும் அண்ணனையும் வருத்திய காட்சியெல்லாம் கண் முன்னே வந்தது.
டீனேஜ் வரைக்கும் எல்லோர் வீட்டிலும் நடப்பது போல் தான் தீரனுடன் சண்டை நடக்கும். ஆனால் அந்த வீட்டில் எல்லோரும் எப்பொழுதும் தீரனுக்கே சப்போர்ட் பண்ண,”எல்லாரும் எப்பவும் அண்ணனுக்கே சப்போர்ட் பண்ணுங்க” என்று அடிக்கடி வருத்தப்படுவான் யுகித்.
அவன் செய்கின்ற தவறை, பிடிவாதத்தை உணரவே இல்லை. சிறு பிள்ளை என்று தீரன் விட்டுக்கொடுப்பதை பெற்றவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் தீரனுக்கு துணையாக நின்றார்கள்.
எப்போதாவது ஊரிலிருந்து வரும் அவர்களடைய பாட்டியும்,” என் ராசா! வாடா தங்கம்!” என்று தீரனை கொஞ்சுவதை கண்டிருக்கான் யுகி.
அவனுக்கு அதுவும் ஏக்கமாக தான் இருக்கும். ‘எல்லோர் வீட்டிலும் இளைய பிள்ளையை தான் எல்லோரும் கொஞ்சுவாங்க. நம்ம வீட்டில் மட்டும் நம்மள கண்டுக்க மாட்டாங்குறாங்களே.என்ற எண்ணம் எப்போதும் யுகி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.
அன்றைக்கு ஸ்போர்ட்ஸ் விளையாடும் போது , யுகித் வீசிய பால் தவறுதலாக, தீரனின் மண்டையை பதம் பார்த்திருக்க.
“ என்ன? எது?” என்று எதுவும் விசாரிக்காமல்,யுகித்தை திட்ட ஆரம்பித்தனர்.
“அண்ணன் மேல உள்ள கோபத்துல வேணும்னு அடிச்சியா?” என்று மித்ரா அவனது முதுகில் ஒன்று போட.
அவனுக்கோ அழுகை வந்தது. “இல்லமா நான் வேணும்னே அடிக்கலை. தெரியாமல் பட்டுடுச்சு…” என்று யுகி சொல்ல.
அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இவர்களது பாட்டியோ, “இவன் எப்பவுமே இப்படித்தான் உன்னை பார்த்தாலே இவனுக்கு ஆகாது. உங்க அம்மா உயிரோட இருந்திருந்தால் இப்படி ஒரு அநியாயம் இந்த வீட்டில் நடந்திருக்குமா”.என்று அழ.
அந்த வார்த்தைகளை கேட்ட யுகித்தும், தீரனும் அதிர்ந்தனர்.
நிரஞ்சன் எவ்வளவோ தடுக்க பார்த்தும் முடியவில்லை. அவரது மாமியார் வார்த்தைகளை விட்டிருந்தார்.
“அம்மா! என்னம்மா பண்ற?” என்று மித்ராவும் கத்த.
“ நீயும் உன் மகனுக்குதான் சப்போர்ட் பண்ற. என்ன இருந்தாலும் அவன் உன் அக்கா பையன் தானே. பாரு இன்னும் கொஞ்சம் பலமாக தலையில் அடிப்பட்டு இருந்தால் அவன் உசுருக்கே ஆபத்தாயிருக்கும். இல்ல இனி தீரன் இங்கிருந்த நீங்க எல்லாரும் சேர்ந்து கொன்னாலும் கொன்னுடுவீங்க. நான் எம் பேரன என்னோட கூட்டிகிட்டு போறேன்.” என்று அவர் கூச்சலிட.
அந்த இடமே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.
மித்ராவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ‘பெத்த தாயே என்ன நம்பலையே. இனி பசங்க என்ன நினைப்பாங்க…”என்று எண்ணியாவாறே கண்களில் கண்ணீரோடு பிள்ளைகளை பார்க்க,
‘இவன் நம்ம அண்ணா இல்லையா?’ என்று தீரனை பார்த்து யுகித் இறுகிப் போயிருந்தான்.
“நீங்க! என் அம்மா இல்லையாமா?” என்று ஏக்கத்தில் அழுதவாறு வினவினான் தீரன்.
“ஐயோ! அப்படி எல்லாம் இல்லை. நீ என் பிள்ளை தான். அப்படித்தானே தீரனப்பா… சொல்லுங்க… ஏன் எதுவும் பேசாமல் இருக்கீங்க.” நிரஞ்சனை ஆதரவுக்கு அழைத்தார் மித்ரா.
யுகித்தோ,”அம்மா! உண்மையை சொல்லுங்க. இவன் உங்க வயித்துல பொறக்கலை தானே. என்கூட பிறந்த அண்ணன் இல்லை. அப்படித் தானே.” என்று கூற.
“அப்படி எல்லாம் சொல்லாதேடா” என்று மித்ரா பதற.
“அப்ப இவன் உன் வயித்துல பிறந்தானா சொல்லுமா… சொல்லுமா…” என்று ஹிஸ்டரியா வந்தவன் போல் யுகித் கத்த.
தீரனோ, “அம்மா நான் உங்க பையன் தானே! இல்லன்னு சொல்லாதீங்கம்மா…” என்று கண் கலங்க கூற.
அவளுக்கு அப்படியே உயிரை விட்டுவிடலாமா என்று இருந்தது.
தன் தாயை கோபமாகப் பார்த்தவர், “வந்த காரியம் முடிஞ்சதுல. இத்தன வருஷமா நான் கட்டிக்காத்த உண்மைய சொல்லி என் குடும்பத்தையே அழிச்சிட்டிங்களே! இப்போ சந்தோஷமா?” என்று அவரிடம் கோபமாக பேசினாள் மித்ரா.
அவர் சொன்னதே உண்மையை உணர்த்தி விட, யுகித் ,”அப்ப அவனைப் பாட்டியோட போக சொல்லு மா” என்றான்.
உடனே மித்ரா, “என்னடா விளையாடுறியா நீ ? தீரன் தான் இந்த வீட்டுக்கு மூத்த பையன்.” என்று படபடத்தார்.
“அப்ப நான் போறேன். இனிமே இங்க நான் இருக்க மாட்டேன். நான் எங்கேயாவது ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்.”என்றவன் அதற்குப் பிறகு அவர்களிடம் பேசுவதையே குறைத்து கொண்டான்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் வாங்கி இருக்க. கொடைக்கானல் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படிப்பதற்கு வந்தவன், அதற்குப் பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை.’அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு, அம்மாவின் மனநிலை புரிய செய்தது. அறியா வயதில் தான் கொடுத்த தண்டனை எண்ணி குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்தான்.
“என்ன மன்னிச்சிடுங்கமா” என்று தன் தாயை கட்டிப்பிடித்து அழுதான்.
அவருக்கும் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“யுகித் எங்ககிட்ட மன்னிப்பு கேட்டா மட்டும் பத்தாது. உன் அண்ணன் கிட்ட மன்னிப்பு கேளு” என்று மித்ரா கூற,
“ என்னை மன்னிச்சுடு!” என்று எங்கோ பார்த்து கூறினான் யுகித்.
“இதெல்லாம் ஏத்துக்க முடியாது. என் கண்ண பாத்து சொல்லு. அப்புறம், அண்ணா மன்னிச்சிடுங்க அண்ணான்னு சொல்லு. அப்ப தான் உன்னோட மன்னிப்பை கன்ஸிடர் பண்ண முடியும்.” என்று தீரன் அவனை கேலி பண்ண.
யுகித் கோபத்துடன் அவனை முறைக்க.
”பாருங்க மா! யுகி என்னைப் பார்த்து முறைக்கிறான்.” என்று தன் தாயிடம் குறை சொல்ல,
“ ஏன்டா ! “என்று மித்ரா யுகியை பார்த்தார்.”
“நா முறைக்கவே இல்ல! நீங்க அவனுக்கே சப்போர்ட் பண்ணுங்க.” என்று சிறுவயதில் செய்தது போல சண்டையிட.
அதை ரசித்துக் கொண்டிருந்தார் மித்ரா.
நிலாவையும் பேச்சோடு பேச்சாக இழுக்க.
“அத்தை! உங்க அளவுக்கு எனக்கு பரந்த மனப்பான்மை இல்ல.
என்னால பழசு எதையும் மறக்க முடியாது அத்தை. கல்யாணத்தன்னைக்கு, மணக்கோலத்துல என்ன தவிக்க விட்டுட்டு எங்கோ போனது என் மனசுல ரணமா இருக்கு. என்ன சமாதானம் சொன்னாலும் அது அவ்வளவு ஈஸியா ஆறாது.
அன்னைக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு ஒரு நிமிஷம் கூட கேட்க அவருக்கு மனசு இல்லை. என் மனதுப்பட்டபாடு, உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். இவர் திரும்பி வருவார், இல்லை போனாவது பண்ணுவார்னு காத்திருந்தேனே. என் கனவெல்லாம் கானல் நீராகவல்லவா போயிடுச்சு.” என்று கதறி அழுதாள்.
அவளை ஏதோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றார் மித்ரா .
அவரை அமைதியாக இருக்குமாறு தீரன் தடுத்து விட்டு,
“இங்க பாரு நிலா! அன்னைக்கு உன்னை பேச விடாம அவன் தப்பு பண்ணான். இன்னைக்கு நீ அதையே தான் செய்யுற. மன்னிக்கிறது தான் மனித இயல்பு. என் தம்பிக்காக சப்போர்ட் செய்கிறேன் நினைக்காதே நான் கமலி அத்தைக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். பாவம் நிலா அத்தை. நீ அவங்க செஞ்ச தப்பையும் மன்னிக்க மாட்டேன் இருக்க. அவங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா? காசு பணம் இருந்தாலும்,வயசான காலத்துல தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா? அவங்க செஞ்ச தப்ப மனதார உணர்ந்தாலே போதும். அவங்களை நீ மன்னிச்சுடு நிலா. நீ இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும்.
நிலா நாங்க அத்தையை பார்த்துட்டு தான் வர்றோம்.
பட்டுவைப் பார்த்து அவ்வளவு வேதனைப்படுறாங்க .என் மேல உனக்கு மரியாதை இருந்துச்சுன்னா நாளைக்கு பங்க்ஷன் முடிச்சிட்டு அம்மா வீட்டுக்கு போய் அவங்களை சமாதானப்படுத்து. அப்புறம் என் தம்பிக்கும் முடிஞ்சா ஒரு சான்ஸ் கொடுக்கலாம் நிலா. அவன் என்ன சொல்ல வராங்குறதையும் கேளு” என்று கூறி விட்டு,
“டேய் தம்பி! அண்ணன் உனக்காக சிபாரிசு பண்ணி இருக்கேன். நிலாவும் எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவா. “ என்று கண்சிமிட்ட கோபப்படுவதற்கு பதிலா யுகித்திற்கு புன்னகை தான் வந்தது.
அண்ணனை இறுக அணைத்துக் கொண்டான்.
இவர்கள் பாச மழை பொழிய
வெண்ணிலாவோ கடந்த காலத்திற்கு சென்றாள்.
எல்லாம் பொன் வசந்தம்…(26)
written by Competition writers
அத்தியாயம் 26
காதல் எப்பேர்பட்ட பிரிவுகளையும் சேர்த்து வைக்கும் பாலம். பாலத்திலே பிளவு ஏற்பட்டால் அந்த காதல் சேர்வது தாமதமாகும்
ஒரு வருடத்திற்கு பின்:
முன்பெல்லாம் தினம் தினம் வைஷியா வைஷியா என்று உளறிக் கொண்டிருக்கும் திலீப் குமார் தான் இப்பொழுதெல்லாம் என்ன மன்னிச்சிடு சில்வியா என்ன மன்னிச்சிடு சில்வியா என்று உலறிக் கொண்டுள்ளான்.
அழகாக ஹேர் மற்றும் தாடியை ட்ரிம் செய்து வைத்திருக்கும் அவன் இப்பொழுதெல்லாம் தாடி கொண்டுள்ளான். முடியும் ஒரு வருடமாக வெட்டாமல் காடு போல வளர்ந்து இருந்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த கணமே மோகன் மற்றும் செல்வி அவர்களின் வீட்டிற்கு சென்றான்.
அவர்களின் வீடோ பூட்டு போட்டு இருக்க தன் வீட்டிற்கு புறப்பட்டான்.
லோகேஷிற்க்கு அழைத்துப் பார்க்க அவனது மொபைலோ தவறான எண் என்று வந்தது. மதிக்கு அழைத்தான் அவள் மதிக்கவில்லை. தருணுக்கு அழைத்த போது தான் அவன் அழைப்பு ஏற்கப்பட்டது.
தருண் நான் திலீப் பேசுறேன்.
சொல்லுங்க திலீப்,
மதி கிட்ட கொஞ்சம் ஃபோன் கொடுக்க முடியுமா?
மதி இங்கே இல்லை திலீப்,
எங்க போனாங்க அவங்களை எப்படி காண்டாக்ட் பண்றது,
மதி அமெரிக்கா போயிருக்கா…
அவ்வளவு தூரம்…
அவங்க அக்கா சில்வியாவை பார்க்க போய் இருக்கா,
இத்தனை நாள் தன் மனைவி எங்கு உள்ளாள் என்பதை தெரியாமல் பரிதவித்தவனுக்கு அமெரிக்காவில் உள்ளால் என்பது தெரியவும் சந்தோஷப் பட்டான்.
தருண் ப்ளீஸ் அவளோட அட்ரஸ் தற்ரியா நானும் போய் பாக்குறேன்.
சாரி மிஸ்டர் திலீப். உங்களுக்கும் சில்வியாக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்களுக்கு டிவோர்ஸ் ஆகி ஆறு மாசம் ஆயிடுச்சு. இதுல எந்த சம்பந்தத்துல அவங்க அட்ரஸ் நீங்க கேக்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
எனக்குத் தெரியாமல் எப்படி இதெல்லாம் நடந்தது.
உங்ககிட்ட வக்கீல் போன் பண்ணி கேட்டு இருப்பாரே நீங்க சொன்னதை ஃபாலோ பண்ணிடலாமான்னு,
ஆமாம் பண்ணாரு. பட் அவர்கிட்ட என்னை சீக்கிரம் வெளியே எடுக்க சொல்லி தானே பேசினேன்.
ஆனால் அந்த வக்கீல் இப்படி குதர்க்கமா பேசினது கூட உன்னால கண்டு பிடிக்க முடியலையா? அதுவே நான்தான்டா. அந்த பொண்ணை எத்தனை சித்ரவதை பண்ணின ? இப்ப எதுக்கு அவளோட நம்பர் அட்ரஸ் உனக்கு வேணும். நீ உன் வேலைய போய் பாரு அவங்க அவங்களோட வேலைய பார்க்கட்டும்.
இப்போது திலீப்பிற்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அவன் மட்டும்தான். அவனையும் விட்டு விட்டால் சில்வியா எங்கு உள்ளாள் என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக கண்டறிய முடியாது.
ப்ளீஸ் தருண் அது நான் சில்வியா தப்பு பண்ணிட்டாள்னு அவ மேல கோபமா இருந்தேன். அந்த சமயத்துல அவள் மேல எனக்கு வெறுப்பு அதிகபட்சமா இருந்தது. நான் உண்மை தெரிஞ்ச அப்புறம் அவள் இல்லாமல் நான் வாழ முடியாது என்கிற அளவுக்கு வந்துருச்சு.
இவ்வாறு இவன் பேசவும் இதெல்லாம் போலி மாதிரி எனக்கு தெரியுது.
இல்லை தருண் சில்வியா மேல சத்தியமா சொல்றேன் இனிமே அவள் கூட நான் சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன் என்று சொல்லவும் தான் அவளது முகவரியை அவனுக்கு அனுப்பி வைத்தான்.
எதற்கெடுத்தாலும் லோகேஷ் லோகேஷ் என்று அவனுக்கு இப்போது அவன் இல்லாமல் வேறு போய்விட கை, கால் இழந்ததை போன்றானது. தன் தந்தை கிருஷ்ணரிடம் சொல்லி அமெரிக்காவிற்கு ஒரு விசா போட சொல்ல அதை தயார் செய்தார் பதினைந்து நாட்களில்.
ஏன்பா நீ கண்டிப்பா போய் தான் ஆகணுமா கிருஷ்ணர் கூட அந்த சமயத்தில் கரிசனமாக கேட்க,
கண்டிப்பா அவன் போய் என்னோட மருமகள கூட்டிட்டு தாங்க வரணும் என்றார் கிருஷ்ணரின் மனைவி.
அவர் திலீபிடம் கை கூப்பி வணங்கி அன்னைக்கு அந்த பொண்ண நான் தான் பா ரொம்ப ஓவரா பேசிட்டேன். உன்னை விட்டு போ அப்படின்னு நான் தான் அந்த பொண்ண சொன்னேன். என் பையன் நிம்மதியா இருக்கணும்னா நீ இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொன்னேன். அதுக்காகவோ என்னமோ அந்த பொண்ணு இந்த வீட்ல மட்டும் இல்ல ஊர்ல மட்டும் இல்லாமல் போகும்னு கனவுல கூட நினைச்சு பாக்கலப்பா.
அம்மா அவள் நீங்க பேசுனதுக்காக எல்லாம் போயிருக்க மாட்டாங்க. உங்களை விட நான் அவளை ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணிட்டேன். அவளால தான் எனக்குன்னு இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சுன்னு அன்னைக்கு நான் கை கட் பண்ணிக்கிட்டதனால அவள் என்னை விட்டு போயிருப்பாமா என்று அவரை சமாதானப்படுத்தினான்.
தாயும் மகனும் உரையாடி ஃப்லைட்ட மிஸ் பண்ணிடாதீங்க என்று நினைவு படுத்திய கிருஷ்ணரை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்பினான்.
அனைத்து செக்கப் களை முடித்துவிட்டு பிளைட் ஏறியவனுக்கு இப்போது தனது மனைவியை காணப் போகிறோம் என்று ஆர்வமாக இருந்தது.
ஒரு நான்கு மணி நேர டிராவல் அரை நாள் தேடல் என்று அன்றைய நாள் அவனுக்கு கழிந்தது. அமெரிக்காவில் அவளை கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்ல.
அட்ரஸ் மட்டும் வைத்துக்கொண்டு அவன் தேடுவது கண்மூடி கொண்டு நட்சத்திரத்தை எண்ணுவதற்கு கணக்கு.
முகவரியை தெரிவிக்கும் ஒரு ஆபீஸில் சென்று அதை காட்டிய பின்பு தான் ஒரு ஆட்களை அவனுக்கு அந்த வீட்டினை காட்டும் படி சொல்லி அனுப்பியிருந்தான் அந்த ஆபீஸர்.
இதோ இன்னும் இருபது நிமிடத்தில் தனது மனைவியை காணப் போகிறான். காதல் மனைவியை காணப் போகிறான். முதல் காதலை அல்ல இரண்டாம் காதல் மனைவியை. இப்பொழுதெல்லாம் முதல் காதலை விட இரண்டாவதாக வரும் காதலுக்கு தான் பாசமும் அன்பும் அதைக் காட்டிலும் ஆயிலும் அதிகம் என்கிறார்கள்.
இதுதான் சார் அவங்க வீடு என்று காட்டிவிட்டு அவன் புறப்பட்டு விட கேட்டினை திறந்து கொண்டு பேக்கோடு உள் நுழைந்தான்.
குட்டை பேண்ட் மற்றும் குட்டை ஷர்ட்டோடு கழுத்து வளைவிற்கு மட்டும் முடியை விட்டு கட் செய்து இருந்த அந்தப் பெண்மணியிடம் ஹலோ மேடம் என்று அழைத்தான்.
இதோ ஒரு வருடத்திற்கு முன்பாக கேட்ட குரல் இது என்ற யோசனையில் திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண்ணும்.
சாட்சாத் அது சில்வியாவே தான்.
சில்லு…
என்ற அவன் அவளை கட்டி அணைக்க செல்ல அவளோ
நில்
என்ற ஒற்றைச் சொல்லால் நிறுத்தினாள் அவனை.
ஸ்டுப்பிட் ஹூ ஆர் யு? ஒய் ஆர் யூ கம் டு மை க்ளோஸ்னஸ் என்ற அவள் நுனி நாக்கில் பேசவும் இவள் சில்வியா தானா என்று சந்தேகித்தான்.
நான் திலீப் குமார் என்ற அவன் சொல்லவும் அதை அறியாதவளா என்ன அவள்.
அப்படின்னு எனக்கு யாரும் தெரியாது என்று தமிழிலும் சற்று ஆங்கிலம் வார்த்தை பேச அறிந்த பெண் போல பேசினாள்.
அட்ரஸ் இதுதானே என்று ஒரு முறை செக் செய்து கொண்டவன் அவளின் உருவம் மாற்றத்தை அப்போதுதான் கவனித்தான்.
நான் இந்த ஊருக்கு புதுசு. சில்வியான்ற ஒருத்தவங்கள தேடி வந்தேன். உங்கள மாதிரி இருப்பாங்க பட் நீங்க இந்த மாதிரி மாடலா இருக்கீங்க பட் அவங்க ட்ரடிஷனலா இருப்பாங்க. ஹய் ப்ரோ இந்த மஸ்காரா ஹேர் கலரிங் அதெல்லாம் அவங்களுக்கு சுத்தமா புடிக்காது.
தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை இப்பொழுதாவது இவன் அறிந்து கொண்டான் என்று தனது மனதில் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் அந்த அப்பாவி ஜீவன்.
சாரி இந்த வீட்ல இப்ப நான் தான் இருக்கேன் யூ டோன்ட் கம் அகைன் லிவ் மி என்றாள்.
மதியும் அச்சமயம் பார்த்து சில்லு என்று அழைத்துக் கொண்டு வெளியே வர சரியாக இருவரும் திலீப்பிடம் மாட்டிக் கொண்டார்கள்.
மதியை பார்த்த பின்பு கன்ஃபார்மாக இது சில்வியா தான் என்று கன்ஃபார்ம் செய்து கொண்டான் அவன்.
இவள் பேசிக் கொண்டிருந்த உரையாடலை கேட்காமல் மதி வந்து காரியத்தினை கெடுத்துவிட்டாள்.
ஷ்ஷ் என்று விரல் நீட்டி அவள் மிரட்டவும் சரியாக இருந்தது.
அப்போது அவள் நடிக்கிறாள் என்று தெரிந்து கொண்டான் திலீப்குமார்.
படபடவென்று வீட்டினுள் நுழைந்தான்.
அவன் பின்னே இரு பெண்களும் ஓடினார்கள்.
சென்று அங்க இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவன் கால்களை நீட்டி கழுத்தை சோபாவினோடு சாய்த்து படுத்தான்.
எழுந்திரு திலீப். வெளியே போ. உனக்கு இங்க என்ன வேலை – சில்வியா
என்னடி உன் புருஷன் திலீப் அவன் பொண்டாட்டிய தேடி வந்து இருக்கேன்.
அவன் பொண்டாட்டியா? ஆல்ரெடி உனக்கும் எனக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சுன்னு உனக்கு தெரியும் தானே. இந்த அட்ரஸ் கொடுத்த தருண் அந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லலையா?
அவனுக்கு எப்படி முகவரி தெரிந்திருக்கும் என்பதை அறிந்ததனால் அவள் சரியாக யோசித்தாள்.
சொன்னான் சொன்னான் பட் எனக்கு அதுல சம்பந்தமில்லையே. என்ன மறுபடியும் இந்த டிவோர்ஸ் எனக்கு வேண்டாம் வழக்கு போட்டால் என்ன பண்ணுவ.
நீ தேவை இல்லாத வேலை பண்ணிட்டு இருக்க. இப்ப என்ன உனக்கு வேணும்.
நீ தாண்டி செல்லம் வேணும்..
இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லை..
இல்லை. என்னோட பொண்டாட்டி கிட்ட நான் அவளை வேணும்னு கேக்குறேன் இதுல என்ன தப்பு.
வாய் கூசாமா இப்படி நீ பேசின உன்னை நான் அறைஞ்சிடுவேன்.
எப்படி பார்த்தாலும் நீ தான் சில்வியா என்னோட வைஃப் அண்ட் லைஃப். இது வைஷியாவிற்காக மட்டுமே நான் சொல்ற வார்த்தை என்று எத்தனை முறை சொல்லி இருப்பான் இப்போது சில்வியாவிற்காகவும் சொல்லிவிட்டான்.
நான்தான் உன்னை பிடிக்கலைன்னு அங்கே இருந்து இங்கே வந்துட்டேன்ல ஏன் என் பின்னாடியே வர.
ஒரு காலத்தில் நீ எனக்குன்னு மட்டுமே வாழ்ந்தவடி. என் தவறை நான் புரிஞ்சுகிட்டேன். தயவு செஞ்சு என்னை ஏத்துக்கோ என்று அவளது காலில் விழுந்து கெஞ்சினான். தவறு செய்துவிட்டு நான் தவறே செய்யவில்லை என்று ஏமாற்றும் ரகம் அவன் இல்லை.
எவ்ளோ பெரிய ஆக்டரா இருந்துகிட்டு இந்த மாதிரி சீப்பா பிகேவ் பண்ற…
ஆக்டரா இருந்தா காதல் வராதா? கல்யாணம் பண்ண கூடாதா? இல்ல அவன் பொண்டாட்டிக்கு காலில் அவன் விழுக கூடாதா?
காதல் வரலாம் கல்யாணம் பண்ணலாம் ஏன் அவன் பொண்டாட்டி காலில் கூய விழலாம். இந்த சில்வியா காலில் இல்லை.
என்னை மன்னிச்சிடு சில்லு இனிமே நான் அந்த மாதிரி பேச மாட்டேன்.
எப்படி ஒரே வருஷத்துல இப்படி மாறிட்ட திலீப். நீ எப்பேர்ப்பட்ட நாடகக்காரனா இருப்பன்னு எனக்கு தெரியாதா என்ன. நீங்க என்னை முதல்ல போ உன் மூஞ்சிலேயே நான் முழிக்க கூடாது.
மதி உன் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி எதுக்கு இவனுக்கு அட்ரஸ் கொடுத்தாங்கன்னு கேக்கணும் என்று அவள் பேசவும் தருணிற்கு தேவையே இல்லாத அட்ரஸை கொடுத்ததே இவள்தான் என்பது நினைவு வந்தது.
சரி திலீப்பிற்கு ஏதோ பாடம் புகட்டி இருக்கிறாள் என்று அமைதி காத்து நின்று கொண்டிருந்தாள் மதியும் .
கண்ணு உன் குழந்தை ரொம்ப அழுவுது வந்து என்னன்னு பாரு சாமி என்றபடி குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தால் செல்வி.
மாப்பிள்ளை நீங்க எப்படி இங்க என்று அவரை கண்டதும் மரியாதையா பேச ஆரம்பித்தார். அச்சச்சோ, இது என்ன அவ காலில் நீங்க விழுந்துட்டு இருக்கீங்க.
இல்லம்மா நான் பண்ண தப்புக்கு அவ காலில் கண்டிப்பா விழுந்து தான் ஆகணும். அவளை ஒரு ஒரு நாளும் ஏன் ஒரு ஒரு நொடியும் கூட கஷ்டப்படுத்தி அவ முகம் மாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவன் நான் .இந்த கஷ்டம் கூட படவில்லை என்றால் எப்படிம்மா.
நான் அத்தனை பேசியும் கூட எனக்கு உடம்பு சரியில்லைன்னு ஒரு நாள் என்னை எப்படி கவனிச்சுக்கிட்டா தெரியுமா அம்மா. அப்படிப்பட்ட அவளை என் மரமண்டை ஏன் தான் புரிஞ்சுக்கலியோ தெரியல.
உன்னோட நிலைமை அப்படிப்பா அதையே போட்டு குழப்பிட்டு இருக்காத.
உன் குழந்தைய பாரு என்று அவன் நீட்டவும் எங்களுக்கென்று குழந்தை பிறந்துள்ளதா என்று சந்தோசம் தான் அந்த சமயம் பட்டான்.
திலீப்பைப் போன்று அக்குழந்தைக்கும் வலது கையில் மச்சம் இருந்தது.
தங்கம் அப்பா மாதிரியே உனக்கும் வலது கையில் மச்சம் இருக்கா சாமி என்று அவன் குழந்தையை வாங்கும் போதே குழந்தையின் கையை கவனித்து விட்டான் அவன்.
வந்ததும் என்கிட்ட வாய் அடிச்சான். இப்ப பிள்ளைய உடனே வாங்கிக்கிறான். இத்தனை நாள் நான் எவ்ளோ கஷ்டப்பட்டு பெத்தேன். என்னை கண்டுக்குறானா பாரு…
என மனதில் பொறுமிக் கொண்டிருந்தாள் சில்வியா.
அவளுக்கு நன்றாக தெரியும் தருண் இந்த முகவரியை மறக்காமல் திலீப் குமாரிடம் கொடுத்து விடுவான் என்று.
திலிப் என்னதான் தவறு செய்து இருந்தாலும் காதல் மனது அவனை விட்டுப் பிரிய முடியாமல் தவித்தது. அன்றோடு அவள் இந்தியாவிற்கு மீண்டும் வரக்கூடாது என்று முடிவெடுத்திருந்த போதும் கூட மீண்டும் அவளை வர வைப்பதற்கான அறிகுறி அன்றே அவளுக்கு தொடங்கியது. பிளைட்டில் ஏறி அமர்ந்தவளுக்கு ஏனோ மயக்கம் தாளவில்லை.
கண்களை மூடி படுத்தவளை அவ்வப்போது பயணிகளை கவனிப்பவர்கள் செக் செய்து பார்த்தார்கள்.
பின்பு விமான நிலையத்திலேயே உள்ள மருத்துவ ஆலோசனை கூடத்தில் செக் செய்து பார்த்த போது தான் தெரிந்தது அவளுக்கு குழந்தை ஒன்று உருவாகி பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது என்று.
கருத்தரித்த அடுத்த நொடி இதை கணவனிடம் அல்லவா கூற வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு இது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டாள் சில்வியா.
சில்வியாவின் படப்பிடிப்பு குழுவில் இருந்த சியாலினி என்ற தோழி தான் அமெரிக்காவில் உள்ளாள். அவளின் உதவியால் தான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தாள் இவள். யூ பி டி பாசிடிவ் ஆனதை சொல்லி சந்தோஷப்பட்டதோடு எனக்கு ஏதாவது வேலை ரெடி பண்ணி கொடு என்று சொன்னதும் ஐடியில் பணிபுரிய அவளுக்கு உதவியாக இருந்தவளும் அவள்தான்.
இப்போது கூட இவர்கள் சேர்ந்து விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதில் தவறுவதில்லை அவள்.
மனக்கசப்பு ஏற்பட்டவர்களை நாடு கடத்தி பிரித்து விட்டோமா என்று அவளுக்கும் எத்தனையோ முறை தோன்றுவிட்டது. அவ்வப்போது வந்து அவளிடம் பேசி செல்லும் அவளுக்கு ஏழாம் மாதத்தின் போது பெற்றோர்கள் நினைவு வர அழைத்திப் பேசி இருக்கும் இடத்தினை தெரிவித்தார்கள்.
அவளை வந்த பார்த்தபோது மற்றவர்களுக்கும் இதே போன்று தான் அதிர்ச்சி.
இப்போது திலீப் குமாரும் அதை அனபவித்தான்.
குழந்தையை செல்வியிடம் ஒப்படைத்தவன் சில்வியாவின் அருகில் சென்று அனைவரும் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவளது உதட்டோடு உதட்டாக வைத்து முத்தத்தை பரிசளித்தான்.
நான் ஒரு உயிரை தேடி இங்கு வந்தேன் டி. எனக்காக ரெட்டை உசுரா காத்திருப்பேனு நான் நினைச்சு கூட பார்க்கல. கன்சீவ் ஆனதை முதலில் கணவன் கிட்ட சொல்லி தானடி சந்தோஷப்படுவாங்க. அப்போ நீ என்னடி பண்ண? அழுதியா? கஷ்டப்பட்டியா? வலிச்சதா? என்று அவன் அவளது கன்னத்தினை பிடித்து கேட்கவும் மொத்தமாக கரைந்து விட்டாள் . கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு இருந்த சில்வியா.
அவனை கட்டியணைத்து தழுவியவள் அமெரிக்க வந்து இறங்கின உடனே மறுபடி உன்னை வந்து பாக்கணும்னு தோணுச்சுடா. இந்த சந்தோஷமான செய்தியை உன்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுக்கணும்னு தோணுச்சுடா. ஆனால் நீ தான் என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருந்தியே என்று மீண்டும் அவள் ஆரம்பிக்க மீண்டும் அவனது உதட்டில் முத்தமிட்டு அதனை மறக்க செய்தான்.
செல்வி மற்றும் மதி வெட்கத்தில் வேறு அறைக்கு
சென்று விட, அவர்களின் வாழ்வும் இனிமேல் வசந்தத்தில் செழிக்க வேண்டும் என்ற கடவுளிடம் வேண்டிக் கொண்டதோடு நாமும் விடை பெறுவோம்.
…. முற்றும்….
மூன்று வருடங்களுக்கு பிறகு….
தென்றல் காற்று இதமாக வருட மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கிராமத்திற்கு வந்தாள் செம்பா.
“செம்பா நம்ம ஊர் ரொம்ப மாறிடுச்சில்ல” என்றாள் அவள் பக்கத்தில் இருந்த கோகி.
“ம்ம்ம்” என்றவளின் கண்கள் அந்த ஊரின் அழகை ரசித்தபடி வந்தது.
காரின் கண்ணாடி வழியாக தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கவனித்த படி வந்த சமர், செம்பாவின் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.
ராசாத்தி கையில் செம்பா சமரின் புதல்வன் சிவநேத்ரன் இருந்தான். ஒரு வயது ஆகிறது. செம்பாவின் கையில் அவள் செல்ல மகள் சந்தனாஷ்வி இருந்தாள். இரட்டை செல்வங்கள். இருவருக்கும் தன் பெற்றொரின் பெயரை இணைத்து பெயரிட்டிருந்தனர்.
செம்பா இறங்கியதும், சமர் அவளிடம் இருந்த தன் மகளை வாங்கி கொண்டான்.
ராசாத்தி வீட்டை பார்த்ததும் கண்கலங்கி நிற்க “ ஏன் அத்தை அழறிங்க, அவங்கதான் இப்போ நம்ம கூட தானே இருக்காங்க” என தன் இரட்டை குழந்தைகளை கண்காட்டிட.
“ஆமா” என கலங்கிய கண்களை துடைத்தபடி அவர்கள் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தார் ராசாத்தி.
“வா கோகி உள்ளே போலாம்” என செம்பா அழைக்க…
“உன் பக்கத்துல அண்ணா இருக்காங்க, என் புருஷனை இன்னும் காணும்” என பின்னால் பார்க்க, இன்னொரு கார் வந்தது.
“அதோ கோகுல் அண்ணா வந்துட்டாங்க” என்றாள் செம்பா.
கோகுல், கோகிலா இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகிறது. வீட்டில் இருக்க போரடிக்க சமரின் மருத்துவமனையிலே வேலைக்கு சேர்ந்தாள் கோகி. அங்கேயே கோகுலும் வேலை செய்ய, இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இருவர் இருக்கும் இடமும் எப்போதும் சண்டையில் முடிந்தது. மோதல் காதலில் முடியும் என்பது போல் இருவருக்குள்ளும் காதல் மலர ஒருவரை ஒருவர் மனதார நேசித்தனர். முதலில் செம்பாவிடம் கோகி சொல்ல அவள் நம்பவேயில்லை. பின் கோகுல் சமரிடம் பேசிவிட்டு தன் குடும்பத்தினருடன் வந்து ராசாத்தியிடம் கோகிலாவை பெண் கேட்டதும்தான் செம்பா நம்பினாள். சமரிடம்தான் “என்ன சொல்லலாம் தம்பி” என கேட்டார் ராசாத்தி.
“கோகுல் ரொம்ப நல்ல பையன்ம்மா. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமா கோகியை கல்யாணம் செய்து கொடுக்கலாம்” என்றதும், ராசாத்தி சம்மதித்தார். ஆனால் கோகுலின் அப்பா. கோகுலிற்கு ஒரு தங்கை இருப்பதால் அவளுக்கு திருமணம் முடித்ததும், இவர்களின் திருமணத்தை வைத்துகொள்ளலாம் என பேச எல்லாரும் அதற்கு சம்மததித்தனர்.
எதற்கும் இருக்கட்டும் என கோகியின் அண்ணண் என்ற முறையில் ஏழுமலையிடம் திருமணத்தை பற்றி சொன்னார் ராசாத்தி. அவனுக்கும் சந்தோஷம்தான் ஆனால் தன் மனைவியை மீறி அவனால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் திருமணத்திற்கு வருகிறேன் என்றதோடு நிறுத்தினான். இரண்டு வருடத்திற்கு பிறகுதான் கோகுல் தங்கை திருமணம் முடிந்தது. அதன்பின் ஆறு மாதம் கழித்து கோகி, கோகுல் திருமணம் நல்லபடியாக கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது.
இப்போது எல்லாரும் குகன், ஆத்வியின் திருமணத்திற்காக கிராமத்திற்கு வந்திருக்கின்றனர்.
ஆத்வி குகனிற்கு தன் காதலை புரியவைத்து அவனின் காதலையும் வென்றுவிட்டாள்.
அவனுக்காக தன் சொந்த ஊரைவிட்டு அவன் கிராமத்திற்கு வந்தாள். ஆத்வி செம்பாவின் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். அவள் அம்மா, அப்பா வாழ்ந்த வீட்டை இடிக்காமல் அதையொட்டி இன்னொரு வீடு கட்டினான். ஏதாவது விஷேசத்திற்கு வந்தால் தங்கலாம் என்று. அந்த வீட்டில்தான் ஆத்வியை தங்க வைத்தான். அவனின் மருத்துவமனையை பாலாவும் ஆத்வியும் சேர்ந்து நடத்தி கொண்டிருக்கின்றனர்.
முதலில் ஆத்வி இங்கே இருக்க முடியாமல் சென்றுவிடுவாள் என ஏளனமாக நினைத்த குகன் அவளின் காதலில் ஆடித்தான் போனான். தினமும் அவன் அம்மாவை சோதனை செய்து இப்போது நன்றாக நடக்க வைத்து அவனுடன் விவசாயம் செய்யும் அளவிற்கு மாற்றி இருக்கிறாள். ஆத்வியின் மனதை அறிந்த குகனின் அன்னை, அதன்பிறகு அவனுக்கு பெண்பார்க்க எங்கும் செல்லவில்லை. தன் மகன் கண்டிப்பாக மனம் மாறி ஆத்வியை ஏற்றுகொள்வான் என ஆத்வியோடு அவரும் காத்திருந்தார்.
அதன் பின்தான் ஆத்வியின் மீது குகனின் பார்வை விழுந்தது. அவனை அறியாமல் அவளை ரசிக்க ஆரம்பித்தான். முதலில் கவனிக்காத ஆத்வி அவனின் கள்ளபார்வையை கண்டுகொண்டாள். ஆனாலும் குகன் மனதில் இருப்பதை சொல்ல தெரியாமல் தவிக்க அதற்கான நாளும் வந்தது.
குகனை பார்த்து பேசுவதற்காக ஆத்வியின் அப்பா கிராமத்திற்கு வந்திருந்தார்.
அவர் முன் ஆத்வி, குகன், அவனின் அம்மா முவரும் நின்றிருந்தனர்.
“தம்பி நான் எதுக்காக வந்திருக்கேன் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் மெதுவா பண்ணலாம்னு என்னால் வைக்க முடியாது. அவள் வயது என்னன்னு உங்களுக்கு தெரியும். சமரோட வயது அவளுக்கு. அவங்களுக்கே கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்தாச்சி. இன்னும் என் பொண்ணு இப்படியே இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. அவள் உங்களை நினைச்சிட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றாள். நீங்களும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிற மாதிரி தெரியலை. எல்லாரையும் மாதிரி எனக்கும் என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து அதை கண்குளிர பார்க்கனும்னு ஆசை இருக்கும்ல. ஒன்னு நீங்க அவளை கல்யாணம் பண்ணுங்க, இல்லை அவளை வேண்டாம்னு சொல்லி என்கூட அனுப்புங்க. இந்த தடவை நீங்க சொன்னால் இந்த ஊரைவிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டாள். இப்போ முடிவு உங்க கையில்தான். நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம்” என்றார் அந்த பெரிய மனிதர்.
குகனின் அம்மா, ‘அவன் பதில் நல்லபடியா இருக்கனும்’ என கடவுளை வேண்டி கொண்டிருந்தார்.
ஆத்வியின் பார்வை அவன் மீது அழுத்தமாக பட கண்களை முடி திறந்து பெரூமூச்சொன்றை விட்டவன் “கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.
“புரியலை” என முவரும் ஒன்றாக கேட்க…
“எனக்கும் ஆத்விக்கும்தான் கல்யாணம் நடக்கும் போதுமா”
“உண்மையாவா” என ஆத்வி கேட்க…
“ஆமா” என்றதும் ஓடிப்போய் அவனை இறுக்கமாக அணைத்துகொண்டாள் ஆத்வி. அவளின் காதல் வென்ற சந்தோஷத்தில் கண்ணிர் கரைபுரண்டது. அவளை மெதுவாக அவனிடம் இருந்து விலக்கியவன் கண்ணிரை துடைத்தபடி “சாரிம்மா உன்னை ரொம்ப நாள் காக்க வச்சதுக்கு, என்னை மன்னிச்சிடு” என்றான்.
“பரவாயில்லை உங்க காதல் கிடைக்க எத்தனை வருஷம் ஆனாலும் காத்திருப்பேன்” என்றாள் ஆத்வி.
“ஆமா மாப்ள. இப்படி வந்து பேசுங்கன்னு சொன்னதே சமரும் இவளும் தான். அப்போதான் உங்க மனசுல என்ன இருக்கும்னு தெரியும்னு என்னை அனுப்பி வச்சாங்க” என்றதும் போலியாக ஆத்வியை முறைக்க, அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள்.
“ஆனால், மாமா கல்யாணம் உடனே வேண்டாம். நான் வீடு கட்டி முடித்ததும் கல்யாணம் வைக்கலாம்” என்றான்.
ஆத்வி ஏற்கவில்லை. அவளை கஷ்டபட்டு சமாதானம் செய்தான். “நீ ரொம்ப வசதியா வாழ்ந்த பொண்ணு எனக்காக நிறைய விட்டுகொடுத்து இந்த ஊர்ல இருந்திருக்க… உனக்காக நான் இதைக்கூட செய்யமாட்டேனா” என்றவன் அவன் சொன்னதுபோலவே வீடு கட்டிமுடித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.
இரண்டு நாளில் திருமணம். அதற்காகத்தான் எல்லாரும் செல்வபுரத்திற்கு வந்திருக்கின்றனர்.
செம்பா வந்ததை கேள்விபட்டதும் தன் மூன்று வயது மகனோடு அவளை பார்க்க வந்திருந்தாள் ரஞ்சி.
“செம்பா எப்படிடா இருக்க?” என அவள் கையில் இருந்த பெண்குழந்தையை வாங்கிகொண்டாள் ரஞ்சி.
“நல்லா இருக்கேன் அக்கா. என் பையனை மட்டும் கொண்டு வந்திருக்க என் பொண்ணை எங்கே..?”
“அவ ஸ்கூல் போய்ருக்காள். வந்ததும் உங்க மாமா கூப்பிட்டு வருவார்டி”.
“மாமா, பாட்டி எப்படி இருக்காங்க அக்கா”.
“மாமா நல்லா இருக்காங்க. பாட்டிதான் ரொம்ப முடியாமல் இருக்காங்க. முன்ன மாதிரி நடக்க முடியலை வீட்டுக்குள்ளேயே இருந்துக்கறாங்க”.
“அந்த அம்மா எப்படி இருக்கு?”.
“சாவு எப்போ வரும்னு நினைச்சிட்டு இருக்கு. பக்கவாதம் வந்து கை, கால் விழுந்துடுச்சி. எல்லாமே படுக்கையிலன்னு ஆகிடுச்சி. அதுவே நரக வாழக்கைதானே. அதைவிட நரகம் நான் அந்த வீட்ல வாழுறது. மாமாதான் அவங்களை பார்த்ததுட்டு ரொம்ப கஷ்டபடுறாங்க செம்பா”
“மாமா அவங்களை சரிபண்ண முடியும்னு சொன்னாரா?”
“அவங்க உடம்பு ஒத்துழைக்க மாட்டுதுன்னு சொன்னார் பாப்பா. என்ன இருந்தாலும் அவரோட அம்மா இல்லையா. அந்த பாசத்துல மனுஷன் என்னலாமோ பண்றார். அவருக்காகவாவது சரியாகிடனும்னு தோணுது” என இருவரும் பேசியபடி இருக்க…
“அக்கா” என்ற கோகி சத்தத்தில் திரும்பினாள் ரஞ்சி.
‘அட வாங்க புதுபொண்ணு, எங்கேடி உன் வீட்டுக்காரர், ஜோடி கிளி இல்லாமல் தனியா சுத்திட்டு இருக்க.” என கிண்டலாக ரஞ்சி கேட்க…
“அவர், அவங்க ப்ரெண்ட் கூட வெளியே போய்ருக்கார்.” அக்கா என்றாள் கோகி.
“வெளியே போகாமல் என்ன பண்ணுவார் அக்கா. ரெண்டு பேரும் இரண்டு நிமிஷம் சேர்ந்து இருந்தாலே இரண்டாவது உலகப்போர் வந்துடுது. எப்படிதான் காதலிச்சி கல்யாணம் பண்ணாங்களோ தெரியலை” என தலையில் அடித்தாள் செம்பா.
“என்ன சண்டை வந்தாலும் சமாதானம் ஆகுற வித்தை தெரிஞ்சிக்கனும்டி செம்பா” என தன் சுடிதார் காலரை தூக்கிவிட
“ஆஹ்ஹா… அப்படியா” என சிரித்தாள் செம்பா.
“உனக்கும் சமர் அண்ணாவுக்கும் தான் சண்டையே வர்றது இல்லையே. பின்ன எங்கே இருந்து சமாதானம் பண்றது” என கோகி உதட்டை சுழிக்க
“கண்ணுவைக்காதேடி” என்றார் ராசாத்தி.
“இதோ வந்துட்டாங்களே ராஜமாதா. எங்கடா இன்னும் காணலையேன்னு நினைச்சேன்.”
“ரஞ்சியின் கையில் இருந்த குழந்தையை வாங்கியவர், சுடுதண்ணிர் வச்சி பிள்ளைக்கு மேல் கழுவனும். ரொம்ப தூரம் வந்துருக்கோம்ல உடம்பு வலிக்கும். வாங்க தங்கம் குளிக்கலாம் என்றதும் பொக்கை வாயை காட்டியபடி “ங்கேங்கே ஹிஹி” என சிரித்தாள் சமரின் மகள் .
“உங்க பேரனை குளிப்பாட்டினிங்களா அத்தை’ என செம்பா கேட்க
“ஆமாடா, குளிக்க வச்சி உன் மாமியார் கிட்ட கொடுத்துட்டேன்” என்றார் ராசாத்தி.
“ஆத்வி எல்லாரையும் குளித்துவிட்டு சாப்பிட வாங்க” என்றாள்.. எல்லாரும் தயாராகிவிட்டு சாப்பிட அமர ஆத்விதான் பரிமாறினாள்.
“ஹேய்! சாப்பாடு சூப்பர் யார் சமைத்து?” என சமர் கேட்க.
“நான்தான் சமர்” என்றாள் ஆத்வி.
“உண்மையாவா” என ஆச்சரியமாக கேட்டான்.
ஆத்வி சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தாள்.
“உண்மையாவே உங்க சமையல் சூப்பர் அண்ணி” என்றாள் செம்பா.
எல்லாரும் சாப்பிட்டு முடித்து குகனின் குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்க கிளம்பினர். சாமி கும்பிட்டு வர இரவானது. ஏற்கனவே நெடுந்தூர பயணம் அலைச்சலில் உடல் வலியில் எல்லாரும் சீக்கிரம் தூங்கினர்.
விடியலில் இருந்து திருமண வேலை சுறுசுறுப்பாக நடைபெற்றது. ஊரின் அம்மன் கோவிலில் முகூர்த்த புடவை, தாலி, பூ, பழம் எல்லாவற்றையும் வைத்து திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என சிறப்பு பூஜை செய்து ஊருக்கே விருந்து வைத்தனர்.
இரவு மணமக்களுக்கு தனிதனியாக நலங்கு வைத்தனர். விடிந்தால் திருமணம். ஆத்வியின் மனம் படபடத்தது. குகனை பார்க்க வேண்டும் என தவிக்க ராசாத்திதான் “கல்யாணத்துக்கு முன்னாடி பார்க்க கூடாது தங்கம்” என அவளை சமாதானம் செய்தார்.
இரவோடு இரவாக குகன் வந்து ஆத்வியை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு சென்றது தனிக்கதை.
சமர் வேலை செய்த சோர்வில் நன்றாக தூங்கிகொண்டிருக்க அவன் அருகே வந்தாள் செம்பா. இரு குழந்தைகளும் அவன் பக்கத்தில் நன்றாக தூக்கத்தில் இருந்தனர். லேசாக சத்தம் கேட்டால்கூட இரண்டு வாண்டுகளும் முழித்துவிடும் என்பதால் அமைதியாக சமரின் அருகே அமர்ந்தாள். அவனின் தலையை கோதி விட அப்படியே தூக்க கலக்கத்தில் உருண்டு அவள் மடியில் தலை வைத்தான். அவனின் நெற்றியல் படர்ந்திருந்த முடிகளை ஒதுக்கியவள் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவள், அவன் தூக்கம் கலையாத வண்ணம் தலையை தலையணையில் வைத்துவிட்டு, வெளியேற, அவள் சென்றுவிட்டால் என தெரிந்ததும் சமரின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. அவன் முழித்திருந்தால் அந்த நெற்றி முத்தம் கிடைத்திருக்காதே. அதான் தூங்கியது போல நடித்தான்.
மங்களயிசை அந்த வீட்டின் முன் ஒலித்துகொண்டிருந்தது. குகனின் உறவினர்கள், ஆத்வியின் உறவினர்கள் என எல்லாரும் வந்துகொண்டிருந்தனர்.
“செம்பா நேரம் ஆகிடுச்சி இன்னும் நீ கிள்மபலையா” என கோகி தயாராகி அவள் அறைக்குள் வர… குழந்தைகள் இரண்டும் அவளை தயாராக விடாமல் சேட்டை செய்துகொணடிருந்தது.
“ஐயோ என் தங்கங்களா நீங்க இன்னும் கிளம்பலையா? செம்பா அம்மாவை எங்கே?” என கோகி கேட்க
“காலையிலேயே கோவில்ல வேலை இருக்கு, நாங்க குழந்தையை ரெடி பண்ணிட்டு கிளம்பட்டுமான்னு ரெண்டு பேரும் கேட்டாங்க. நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லி, அவங்களை கோவிலுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இவங்களை என்னால் சமாளிக்க முடியலை” என தலையில் கையை வைத்தபடி அமர்ந்தாள் செம்பா.
“சரி நீ ரெடியாகு, வாங்க தங்கங்களா அத்தை உங்களை ரெடி பண்றேன்” என குழந்தைகளையும் உடைகளையும் தூக்கிகொண்டு அவள் அறைக்குள் வந்தவள், அங்கே கிளம்பிருந்த கோகுலிடம் ஒரு குழந்தை கொடுத்து தயாராக்க சொல்ல, இன்னொரு குழந்தையை அவள் ரெடி செய்தாள்.
அப்போதுதான் சமர் செம்பாவை இன்னும் காணாமல் அறைக்குள் வர, புடவையின் மடிப்பு எடுக்க முடியாமல் திணறி கொண்டிருந்தவளை கண்டு , அங்கே வந்த சமர், தன் மனையாளுக்கு அழகாக புடவை கட்டி விட்டு, அந்த புடவைக்கு மேட்சாக ஒரு ஆபரணத்தை அணிவித்து, தலையை அழகாக பின்னி மலரை சூடியவன், அவள் உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து அவளை கண்ணாடி முன் நிறுத்தினான், பெண்களின் பின்னால் நின்று அணைத்தபடி இருவரின் பிம்பமும் கண்ணாடியில் தெரிய, “இப்போ சூப்பர்” என கண்ணடிக்க, அவன் செயலில் செம்பாவின் முகம் செவ்வானமாய் சிவந்தது. “ரொம்ப வெட்கபடாதே பொண்டாட்டி, இன்னைக்கு குகன் அண்ணாக்கும் ஆத்விக்கும் கல்யாணம் போகாமல் வீட்ல இருக்க முடியாது” என மறைமுகமாக எதையோ உணர்த்த அவனை போலியாக முறைத்தவள் கிளம்பாலாம் என்க…
“ஏய்! ஆமா என் புள்ளைங்களை எங்கேடி” என சமர் கேட்க…
“கோகி தூக்கிட்டு போய்ட்டாள்” வாங்க என இருவரும் வெளியே வர…
“ஏன்டா இவ்வளவு நேரம், கல்யாணம் கோவில்லன்னு உனக்கு தெரியாதா, குகன் அண்ணா போன் பண்ணிட்டே இருக்காங்க, உனக்கு ரொமன்ஸ் பண்ண நேரமே கிடைக்கலைய்யா,” என பாலா பேச… அவன் பக்கத்தில் வந்த சமர் சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை தட்டிவிட்டபடி “உன் பொண்ணு ஸ்கூல் போக ஆரம்பித்துவிட்டாள், நீங்களே இன்னும் ரொமன்ஸ் பண்ணும்போது நாங்க பண்ணகூடாதா” என்றான் பாலாவின் காதில்…
“சரி சரி!, விடு நேரம் ஆகிடுச்சி, நீ காரை எடுத்துட்டு குகன் அண்ணாவை அழைச்சிட்டு வா, நாங்க ஆத்வியை அழைச்சிட்டு கோவிலுக்கு வந்துடுறோம்” என்றதும் குகனை அழைத்துகொண்டு வர சமர், கோகுல் கிளம்பினர்.
மணமக்கள் இருவரையும் கோவிலுக்குள் அழைத்து வந்தனர். சிவப்பு நிற பட்டில் அழகாய் ஜொலித்தாள் ஆத்வி. மணமகனாய் கம்பிரமாய் நின்றிருந்தான் குகன். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் வருடி கொண்டிருந்தது.
கோவிலில் பூஜை ஆரம்பித்தது. மாங்கல்யம் அம்பாளின் பாதத்தில் வைத்து பூஜை செய்து தாம்பூலத்தில் வைத்து குகனிடம் நீட்ட, சாமியை கும்பிட்டு தாலியை தன் கைகளில் எடுத்தவன், கெட்டிமேளம் முழங்க, அட்சதை அவர்களின் சிரத்தில் விழ, ஆத்வியின் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு தன் சரிபாதி ஆக்கினான் குகன்.
ஐயர் கொடுத்த குங்குமத்தை, ஆத்வியின் உச்சந்தலையில் வைத்தவன், அவள் கால்விரலில் மெட்டியை அணிவித்தான்.
“மாப்பிள்ளையும் பொண்ணும் சன்னதியை மூனு தடவை சுத்தி வந்து அம்பாளை வணங்குங்க” என ஐயர் சொன்னதும், அதேபோல் மூன்று முறை சுற்றி வந்து அம்பாளை தரிசித்துவிட்டு கோவிலை விட்டு வெளியே போடபட்டிருந்த மேடையில் மணமக்கள் நின்றிருந்தனர். நண்பர்கள், உறவினர் என எல்லாரும் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர். இறுதியில் மொத்த குடும்பமும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தது.
மணமக்களை வீட்டிற்கு அழைத்துவந்து சாமியறையில் விளக்கேற்ற வைத்து பாலும், பழமும் கொடுத்து சில சடங்குகளை செய்தனர். பின் இருவரையும் தனித்தனியாக ஒய்வெடுக்க அனுப்பிவிட்டு, வீட்டிற்கு வருபவர்களை ரஞ்சி, செம்பா, கோகி முவரும் கவனித்து கொண்டனர்.
இரவு சாந்தி முகூர்த்ததிற்கான நேரம் நெருங்க, ஆத்வியை அலங்காரம் செய்து குகனின் அறையில் விட்டனர். குகனும் ஆத்வியும் தங்கள் வாழ்க்கையை இனிதே தெடங்கினர்.
செம்பா தூக்கம் வராமல் தன் வீட்டிற்கு வந்தவள், தன் அப்பா அம்மா இருந்த அறைக்குள் வந்தாள். மனம் முழுவதும் ஒருவித நிம்மதி இருந்தது. அவர்கள் புகைப்படத்தை பார்த்தபடி வெளியே இருந்த திண்ணையில் வந்து அமர்ந்தாள்.
செம்பாவை காணாமல் தேடிய சமர் ‘அவள் இங்கேதான் இருக்கவேண்டும்’ என நினைத்து அந்த வீட்டிற்கு வர, அவன் நினைத்தது போலவே வெளியே அமர்ந்திருந்தாள்
அவள் அருகில் அமர்ந்தவன் “என்னடா இங்கே இருக்க?”
“பசங்களைதானே பார்த்துட்டு இருந்திங்க, நீங்க ஏன் இங்கே வந்திங்க?”
“வைஷூ அம்மாவும், ராசாத்தி அம்மாவும், அவங்க இரண்டு பேரையும் தூங்க வச்சிட்டாங்க பட்டாசு”
இரவு நேர தென்றல் காற்று முகத்தில் மோத காற்றை நன்றாக சுவாசித்து வெளியேற்றினாள்.
“என்ன மேடம் உங்க நடவடிக்கை வித்யாசமாக இருக்கே”
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால் இருக்கலாம் புருஷா”
“உங்க வீட்டுக்கு வந்ததாலா? பட்டாசு”
“இல்லை, நீங்க என் வாழ்க்கையில் வந்ததால், அதனால்தான் திரும்ப என் அம்மாவும் அப்பாவும் எனக்கு கிடைச்சிருக்காங்க, என்னை புரிந்துகொண்டு நடந்துக்குற மாமனார், மாமியார் கிடைச்சாங்க. எப்பவும் என்னை ஒரே மாதிரி நேசிக்கிற என் ஜித்து. என் கூடவே இருக்குற என் சொந்தம். இதெல்லாம் எல்லாருக்கும் அமையாதுங்க. நான் ரொம்ப கொடுத்துவச்சவ, முன்ஜென்மத்துல என்ன புண்ணியம் செய்தேனோ தெரியலை. இந்த சந்தோஷம் எப்பவும் என் வாழ்க்கையில் இருக்கனும்” என சமரின் தோள் சாய, “கண்டிப்பா எல்லாரும் உன் கூடவே இருப்போம் பட்டாசு” என அவளை தன் தோளோடு அணைத்தான் செம்பருத்தியின் சமரஜித்ரன்.
இருவரும் இதேபோல் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்த்துவோம்.
வாழ்க்கை என்றால் சந்தோஷம், துக்கம், துரோகம், ஏமாற்றம் என எல்லாமே இருக்கும். பிறக்கும்போதே எல்லாரும் நல்லவங்களாகவோ, கெட்டவங்களாகவோ பிறக்குறது இல்லை. அவர்கள் வளரும் சூழ்நிலைதான் எல்லாவற்றையும் முடிவு செய்யும். நமக்கு ஒரு விஷயம் பிடித்தால் எப்படியாவது அதை அடைய நினைக்கிற மனம். அதை இன்னொருவருக்கு பிடித்தால் விட்டு கொடுக்குமா. அந்த மனப்பக்குவம் எல்லாருக்கும் இருக்காது. அதுபோல்தான் சிலரின் வாழ்க்கை. தவறு செய்து வாழும்போது தண்டனை கிடைத்தவர்கள் குறைவுதான். எல்லாரும் கஷ்டபடவில்லை, நல்லவர்கள் கஷ்டபடுவதையும் பார்த்ததுட்டு, கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்ததையும் பார்த்ததுண்டு. கடவுள் கொடுத்தது ஒரு வாழ்க்கை. இருக்கும்வரை நம்ம வாழ்க்கையை அடுத்தவர்களுக்காக வாழாமல் நமக்காக வாழ்வோம்.
…..முற்றும்….
என் கதையை படித்துவிட்டு, நிறை குறை எதுவாக இருந்தாலும் மறக்காமல் கருத்துக்களை பதிவிட்டு செல்லுங்கள் தங்கம்ஸ்.
நன்றி🙏
எல்லாம் பொன் வசந்தம்..(25)
written by Competition writers
அத்தியாயம் 25
காதல் என்ற மூன்றெழுத்தின் முத்துக்கள் என்னவென்றால் குழந்தை என்ற நான்கெழுத்து தான்.
மாலினி அவள் நினைத்த காரியத்தை முடிக்காமல் அந்தப் பென்டிரைவை கொடுக்க மாட்டேன் என்று தன் உடையுள் ஒழித்து வைத்து கொண்டாள்.
சரி நீயே ரெக்கார்ட் பண்ணிக்கோ நான் பேசி முடிச்சிடுறேன்.
மாலினியின் கேமரா மேன் வேகமாக வந்து தற்போது திலீப் குமார் பேசுவதை பதிவு செய்து கொண்டிருந்தான்.
நான் யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் என் மேல மாலினி போட்ட வழக்கு அனைத்தும் உண்மை. இப்ப அதை நான் என் வாயாலே ஒத்துக்குறேன் மக்களே என்று சொன்னான்.
அவள படத்துக்கு வர சொல்லி பணம் பிடுங்குனது உண்மை தான் என்றவன் அவளை முறைத்தபடியே இப்போது அந்த பென்டிரைவரை கொடு என்றான்.
அவளும் தராமல் அவனை சீண்ட அவனும் அவளை கன்னத்தில் அறைவதை கூட அந்த கேமரா மேன் பதிவாக்கிக் கொண்டான். எவிடன்ஸோட சிக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தார்கள். திலீப்பும் அவர்கள் நினைத்தபடியே அவளை அறைந்து விட இந்த காட்சியை தான் வழக்கு பதிவு செய்ததற்காக தன்னை அறைந்து விட்டான் என்று மொத்தமாக அவனை மாட்டி விட்டாள்.
அதான் உன்னுடைய இன்ஸ்டாகிராமை youtubeலயும் என்னை பத்தின இந்த வீடியோவை அப்லோட் பண்ணிட்டீங்களா முதல்ல அந்த பென் டிரைவை கொடு மாலினி என்று பொறுமையாக ஆரம்பித்தவன் இப்போ கொடுக்கப் போறியா இல்லை மறுபடியும் நான் அறையட்டுமா என்று கேட்டான்.
இந்த பென் டிரைவில் அப்படி என்ன இருக்கு ரொம்ப ஓவரா பில்டப் போட்டுட்டு இருக்க.
அது என்னோட பர்சனல் விஷயம் மாலினி. யூ டோண்ட் கிராஷ் யுவர் லிமிட் என்றான்.
பின் மாலினி தனது உடையில் மறைத்து வைத்திருந்த பென் டிரைவை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு அடுத்த படத்துக்காக நீங்க என்னை புக் பண்ணுவீங்களா?
இனிமேல் இந்த திலீப் குமார் பட லிஸ்ட்ல ஒன்னுல கூட நீ வர மாட்ட என்று சொன்னவன் திரும்பிப் பாராமல் தனது காரினை எடுத்துச் சென்றுவிட்டான்.
வீட்டினுள் சென்று இந்த பென்டிரைவை அடாப்டரில் செறுகி டிவியில் ஒளிபரப்பாக்கினான்.
அது அன்றைய தினம் ஏற்பட்ட விபத்திலிருந்து ஆரம்பித்து முடிவு வரை அனைத்தும் இருந்தது.
நன்றாக உற்றுப் பார்த்தால் நாய் குட்டியை தூக்கி ஃபர்ஸ்ட் எய்டு செய்து கொண்டிருந்த வைஷியாவை இடித்த காரினை ஒட்டி வந்தது மதி தான்.
இதை பார்த்த பின்பு திலீப்பின் கண்கள் நுங்கு போன்று பெரியதாக விரிந்தது.
மதியா என்ற குரலும் சொல்லும் அவன் வாயில் இருந்து வந்தது .
அப்போ சில்வியா இல்லையா?
ப்ளீஸ் அக்கா, நீ தான் மாமா கிட்ட இருந்து கார் ஓட்ட கத்துக்கிட்ட இந்த டைம் நான் ஓட்டுறேன் நீ எப்படின்னு மட்டும் எனக்கு சொல்லிக் கொடு என்று சில்வியா விடம் கெஞ்சி கூத்தாடி அன்றைய தினம் கார் ஓட்டிக்கொண்டு வந்தாள் மதி.
பிரேக் போட சொன்னபோது பிரேக்க்கு அருகில் உள்ள க்லட்க்சரை அவள் அழுத்தவும் கார் வெகு வேகம் எடுத்து வந்து அங்கிருந்த கூட்டங்களை எல்லாம் இடித்துக் கொண்டு வந்து வைஷியாவினை தூக்கி வாரி இறைத்தது வரை ஒளிப்பறப்பாகிக் கொண்டிருந்தது.
அதே நேரம் கேசவை ரத்த பரிசோதனை செய்த மருத்துவமனையில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.
ஹலோ சார் நாங்க நகுல் ஹாஸ்பிடல்ல இருந்து பேசுறோம்.
போன வருஷம் உங்க தம்பியை வந்து இங்க செக் பண்ணப்ப எச்ஐவி பாசிட்டிவ்னு ரிசல்ட் கொடுத்து இருக்காங்க. நீங்க இன்னுமா அந்த ட்ரீட்மென்ட் கன்டினியூ பண்றீங்க.
நோ என வெறும் ஒற்றை எழுத்தை பதிலாக கூறியவன் அதற்கு இப்போது என்ன என்று கேட்டான்.
இது எங்களோட தவறு தான் சார். உங்க தம்பி கேசவ்க்கு எச்ஐவி நெகட்டிவ் தான். ஒரே டைம்ல கேசவ்னு ரெண்டு பேரும் வந்ததால கே கேசவ் பாசிட்டிவ் ஆர் கேசவ் நெகட்டிவ்னும் எங்க ஸ்டாப் தப்பா சொல்லிட்டாங்க.
நேத்திக்கு தான் வந்து சில்வியாங்கிற உங்க ரிலேட்டிவ் எங்க கிட்ட இத பத்தி விசாரிச்சிட்டு போனாங்க.
நாங்க மறுபடியும் ரீசெட் பண்ணிட்டு ரிசல்ட் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து அப்பதான் புரிஞ்சது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல் தவறு என்று.
அதான் சார் உங்களுக்கு இன்பார்ம் பண்ணலாம்னு கால் பண்ணேன்.
நேத்து செக் பண்ணி இன்னைக்கு சொல்றீங்க என்று அவன் அழுத்தமாக கேட்க, உங்க ரிலேடிவ் சில்வியா தான் இந்த டைம் கால் பண்ணி என்னனு சொல்லுங்கனு என்று சொன்னாங்க.
சில்வியா அவள் செய்யாத தப்பிற்கு தண்டனையையும் தான் தன் மீது தான் தவறு உள்ளது என்று தப்பாக புரிந்து கொண்டதையும் ஒரு சேர சரி செய்து விட்டாள்.
ஆனால் நான் அவளை எப்படிப்பட்ட வார்த்தைகளால் எல்லாம் காயப்படுத்தி உள்ளேன் என்று நினைத்து பார்த்தான்.
நீ ஒரு கொலைகாரி, நீ ஒரு பேராசைக்காரி, நீ என் முகத்திலேயே முழிக்காத, என்ன பொறுத்த வரைக்கும் நீ இந்த வீட்ல இருக்கிற ஒரு வேலைக்காரி, என் திரைப்படத்தில் நடிகையா நடிக்கிற நடிகை மட்டும்தான் நீ இப்படி எத்தனை வார்த்தைகள் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
வரிசையாக அவனது என்ன அலைகள் அனைத்தும் அவளை பேசியதையே நினைவு கூர்ந்தது.
தான் தவறு செய்து விட்டேன் என்று தந்தை கிருஷ்ணனையும், தாயையும் அழைத்து இந்த வீடியோவினை போட்டு காட்டினான்..
அத்தோடு மட்டும் நிறுத்தி விடாமல் நகுல் என்ற மருத்துவமனையின் மீது வழக்குப்பதிவும் மேற்கொண்டிருந்தான்..
இது அவன் ஏற்கனவே எச்சரித்தது தான் .இதுக்காக நீங்க கண்டிப்பா தண்டனை அனுபவிப்பீங்க என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் மனதில் இப்போது சில்வியாவை தேடச் சொன்னது.
சில்வியா,சில்வியா என்று அவளைத் தேடிக் கொண்டு தங்களது அறைக்கு ஓடினான் மாடிப்படி ஏறி,
தனது ரூமில் புகுந்து பெட் அதற்கு கீழே படுக்கும் அவளது இடம் பாத்ரூம் பால்கனி என்ற அனைத்து இடங்களிலும் துலாவி விட்டான்.
ஒருவேளை தோட்டத்தில் இருக்கலாம் என்று அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தையும் ஓடி சென்று நோட்டமிட்டான்.
அங்கு எங்கும் காணவில்லை.
சில்வியா எங்க போன என்று மீண்டும் அவனது அறையை நோக்க ஓடி சென்றான்.
மகன் இப்படி பரிதவிப்பதை பார்த்து பெற்றோர்கள் அவர்களும் உதவி செய்தார்கள் அவளை கண்டுபிடிக்க.
கிருஷ்ணனின் கையில் கிடைத்த ஒரு பேப்பர் அவள் இந்த ஊரினை விட்டு சென்றுவிட்டால் என்பதை உறுதி செய்தது.
கிருஷ்ணர் சாமியறையின் முன்பு ஒரு பேப்பர் இருப்பதை பார்த்து அதை எடுத்துப் பார்த்தார்.
நான் போறேன் திலீப். இந்த வீட்டை விட்டும், உன்ன விட்டும், உன் வாழ்க்கையை விட்டு நான் போறேன். நீயும் ,உங்க அம்மாவும் என் கிட்ட வேண்டிக்கிட்டது. எனக்கு விருப்பமான நீ இதை கேட்டு நான் செய்யாமல் போவனா? சைன் பண்ண டிவோர்ஸ் பேப்பர் என்னோட வாட்ரோப்ல இருக்கு. தயவு செஞ்சு அதை எடுத்துக்கோங்க.
நன்றி என்று மட்டும் சொன்னவள் யாரும் அறியாத வண்ணம் அதை சாமி அறையில் வைத்து விட்டு எங்கு சென்றாள் என்று கூட அறியாத வண்ணம் தொலைந்து சென்றுவிட்டாள். சொல்லப்போனால் திலீப்பிடம் இருந்து விலகிச் சென்று விட்டாள்.
அவன்தானே இதை அனைத்தையும் கேட்டவன். என் வைஷூ கால் தூசிக்கு நீ வருவியா? வைஷு மாதிரி ஒரு தேவதையை கொன்ற ராட்சசி நீ. நீ என்கூட இருக்கிறதே என்னை பொருத்தவரைக்கும் கேவலமான விஷயம். உன்ன நான் இனிமேல் பார்க்கவே கூடாது. என்னை பொறுத்த வரைக்கும் நீ இந்த வீட்ல இருக்க ஒரு வேலைக்காரி என்று திலீப் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் நினைத்தபடியே ஒரு பேருந்தில் அமர்ந்திருந்தாள் சில்வியா.
முந்தைய தினம் திலீப்பின் தாய் பேசியதன் பின்பு முடிவு எடுத்தவள் தனது தங்கையின் திருமணத்திற்காக காத்திருந்து அவற்றை சிறப்பாக செய்து கொடுத்தாள்.
தனக்கு திருமண ஏற்பாடு வேறு என்று சிரித்தவள் தனது தாலியை குனிந்து பார்த்து காலையில் திருமணம் நடைபெற்று மாலையில் டிவோர்ஸ் வாங்கும் ஒரே தம்பதியினர் நாங்களாக தான் இருப்போம் என்று நினைத்து வலியோடு கூடிய புன்னகை செய்தாள்.
எங்கம்மா போகணும் கன்டக்டர் கேட்கவும், ஏர்போர்ட் போகணும் ஐயா என்று சொல்லி காசினை கொடுத்தாள்.
அவளுக்கென்று ஒரு மொபைல் கூட வாங்கி தராத திலீப் அப்போதுதான் வெட்கப்பட்டுக் கொண்டான். எங்கு சென்று அவளை தேடுவேன். மொபைல் எண் இருந்திருந்தால் கூட அழைத்து பேசலாம் . அதுவும் அவளுக்கு நான் வாங்கி தரவில்லை.
உன் கூட பேசி எனக்கு எந்த யூஸுப் இல்லை சோ உனக்கு மொபைல் எல்லாம் வாங்கி தர முடியாது என்று ஒரு நாள் சில்வியா மொபைல் கேட்டதற்காக இவ்வாறு சொன்னதும் நினைவு வர என்ற தலையில் அடித்துக் கொண்டான்.
நான் உன்னை வைஷூவை விட கேவலமுனு சொன்னேன்டி. நீ அவளை விட மூன்று மடங்கு அதிகமான நல்லவளா இருக்கடி.
பக்கத்திலேயே பொக்கிஷத்தை வச்சுட்டு இப்ப தொலைச்சுட்டு நிற்குறனே படுபாவி. வைஷு சில்வியாவை எப்படியாவது எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்துருடி. நீதான் இந்த உலகத்தில் இருந்து போயிட்டே உன் தங்கச்சி உன்னை விட நல்லவளா இருக்காள்.
பேசிய வார்த்தைகளும் அவளை வதைத்த செயல்களும் அவனை இப்போது ரணமாக கொன்றது. இப்படிப்பட்ட நல்லவளை போயி என்னென்னமோ சொல்லி காயப்படுத்தி அவளை உடல் அளவிலும் மனதளவையும் நோகடிச்சு அவளை கொன்னுட்டனே.
நேத்து கூட டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட மாட்டேன்னு சொன்னாலே. இப்ப ஒரேடியா என்னை விட்டுட்டு போயிட்டா. எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும் என்று காவல் அதிகாரிகளிடம் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சென்ற அவனை மாலினி கொடுத்த வழக்கினால் கைது செய்திருந்தார்கள்.
இந்த வீடியோ நீங்கதானே ஒத்துக்கிட்டீங்க சோ, உங்கள நாங்க அரெஸ்ட் பண்ணி தான் ஆக முடியும் என்று சொன்னவர்கள் திலீப்பை அரஸ்ட் செய்து ஜெயிலில் போட்டார்கள்.
சார் நான் அரஸ்ட் ஆகிக்குறேன் பட் ஒரு ஒன் ஹவர் டைம் கொடுங்க.
எதுக்கு இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுப்பதற்காகவா?
இப்போதும் கூட இதுபோன்ற வார்த்தையால் சில்வியாவை இவன் காயப்படுத்தியது இவனுக்கு நினைவு வந்தது.
எதுக்கு இன்னொரு பையனோட வாழ்க்கையை கெடுக்கிறதுக்கா அந்த படம் ஓகே பண்ணி இருக்க என்று அவன் சொன்ன ஒரே காரணத்திற்காக அந்த படப்பிடிப்பையே தாமதப்படுத்தியவள் அவள்.
தாமதப் படுத்தியதோடு மட்டும் அல்லாமல் அந்தப் படத்தினை இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை என்று அழைத்து பேசி முடித்துவிட்டு தனக்கென்று லோகேஷ் வாங்கி கொடுத்த மொபைலையும் போட்டு உடைத்தவள் இவர்கள் யாரும் அறியாத வண்ணம் ஏறி பறந்து சென்று கொண்டிருந்தாள்.
மோகனுக்கும் செல்விக்கும் அழைத்து திலீப் முன்னமே தகவலை தெரிவித்து இருந்து போது அவர்கள் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஏர்போர்ட் நிலையம் என்று அனைத்திலும் செக் செய்த போது தான் தெரிந்து கொண்டார்கள் சில்வியா எங்கோ சென்று உள்ளாள் என்பது.
மதியின் கணவர் உதவியினால் அவள் சென்ற ஏரியாவினை கண்டுபிடித்தார்கள் இவர்கள்.
ஆனால் இதன் பலன் பூஜ்ஜியமாக இருந்தது.
திலீப்பின் மீது மாலினி கொடுத்திருந்த வழக்கு காரணமாக நீதிமன்றத்தில் அவனுக்கு 10 லட்சம் அபராதமும் ஒரு வருட ஜெயில் தண்டனையும் கொடுத்திருந்தார்கள்.
அத்தோடு மட்டுமல்லாமல் பெண்களை தவறாக எண்ணக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி இருந்தார்கள்
முரடனின் மான்விழி
written by Competition writers
போகும் விகிதாவை பார்த்துக் கொண்டிருந்த விதுரனின் மனது ஏனோ சஞ்சலத்தில் இருந்தது… அவளைப் பார்த்துக் கொண்டே விதுரன் நின்று கொண்டு இருக்க.., விதுரனை பார்த்த ராஜ்குமார்.., “ மன்னிச்சிருங்க தம்பி நீங்க வந்திருக்க நேரத்துல இந்த மாதிரி ஆகிறது .., இதுக்காக நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க .., என்னோட பொண்ணு அந்த பப்பிக்குட்டி மேல உசுரா இருந்துட்டா… திடீர்னு அதுக்கு அப்படி ஆகவும் உங்களை கண்டுக்காம இந்த மாதிரி போயிட்டா…, மன்னிச்சுக்கோங்க தம்பி … என்னோட பொண்ணு பண்ணதுக்கு” என்று விதுரன் ஏதாவது நினைத்துக் கொள்வானோ அவள் யாரையும் கண்டுகொள்ளாமல் அறைக்கு சென்றது என்று நினைத்துக் கொண்ட ராஜ்குமார் விதுரனிடம் மன்னிப்பு கேட்க…
“ அய்யோ மாமா என்னது இது..!! நீங்களே இந்த மாதிரி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கெங்கா .. இந்த நேரத்துல என்கிட்ட போய் சாரி கேக்குறீங்க … உங்க பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தா அவ இந்த மாதிரி உடைந்து போய் இருப்பாள் என நினைத்தவனின் மனது அவன் பேசிய வார்த்தைகள் கண் முன் வந்து போய் அதனால் அவள் உடைந்து அழுதது எல்லாம் நினைவு வர அதை நினைத்துக் கொண்டிருந்தவன் மறுபடியும் ராஜகுமாரை பார்த்து… … எனக்கு புரிஞ்சுக்க முடியுது மாமா தயவு செய்து எனக்கு கிட்ட சாரி கேட்டு இப்படி என்னை அந்நியமா ஆக்காதீங்க” என்று சொல்லியவனின் மனது என்னவோ விகிதாவை தான் நினைத்துக் கொண்டு இருந்தது…
சரிங்க மாப்பிள்ளை என்று சொல்லிய ராஜ்குமார் அமைதியாக இருக்க விதுரன் பேச ஆரம்பித்தான்…
‘ அப்புறம் மாமா இதைப்பற்றி பாட்டிகிட்ட எதுவும் பேசிடாதீங்க…, அப்புறம் பாட்டி அபச குணம் .., அது இதுன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க … அப்புறம் ஜோசியரை கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க , பாட்டியோட மனசு சஞ்சல படும் அதனால நீங்க எதுவும் பாட்டி கிட்ட சொல்லிடாதீங்க … நானும் சொல்ல மாட்டேன்.. இது அப்படியே விட்ருங்க” என்று ராஜ்குமார் பார்த்து விதுரன் தன் பாட்டியைப் பற்றி முழுவதும் அறிந்தவன் ஆக ராஜகுமாரிடம் பேச…
ஆனா தம்பி… என்று ராகினி ஏதோ ஒன்றை பேச வர…
“ அத்தை நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது … ஏற்கனவே பப்பிக்குட்டி உடம்பு சரியில்லாமல் இருந்திருக்கு… அதனாலதான் இறந்திருக்கு… நீங்க இதுக்கும் எங்களோட கல்யாணத்துக்கும் கம்பர் பண்ணாதீங்க…, ஏற்கனவே உங்க பொண்ணு பப்பி குட்டி இறந்ததுல ரொம்பவே கவலையா இருக்கிறாள் .., இப்படி நீங்க பேசி நீங்க கவலைப்பட்டு .., அவளையும் கவலையாகாதீர்கள்… அவளுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது ரெடி பண்ணி அவளை சாப்பிட வைக்க வேண்டியது உங்களோட பொறுப்பு.., என்னதான் நான் கணவனாக இருந்தாலும் இன்னைக்கு தான் அவளோட புருஷன்… இதுக்கு முன்னாடி அவ உங்களோட பொண்ணு.., எனக்கு அவளை பத்தி இன்னும் தெரியல பட் நான் தெரிஞ்சுக்கிறேன் ஆனா அதுக்கு முன்னாடி நீங்க அவளை பாத்துக்கோங்க அவளை சாப்பிடவைக்கிறதை” என்று பக்குவமாக விதுரன் பேச….
சரிங்க தம்பி என்று சொல்லிய ராகினியின் மனமும் சற்று குளிர்ந்து போய் தான் இருந்தது என்னதான் விதுரனை பற்றி பயம் இருந்தாலும் , அவன் இப்பொழுது தன்னிடம் மனம் விட்டு பேசியது .. அதுவும் தன் பொண்ணுக்காக பேசியதை நினைத்து ராகினியின் மனம் குளிர .., சரிங்க தம்பி என்று சந்தோசமாக தலையசைத்தவள் ராஜ்குமாரை பார்த்து நீங்களும் கொஞ்சம் சாப்பிடுங்க .. தம்பி நீங்களும் சாப்பிட வாங்க தம்பி என்று கூப்பிட…
‘ சாரி அத்த தப்பா நினைச்சுக்காதீங்க.., எனக்கு இப்போதைக்கு சாப்பிடற மாதிரி மனநிலை இல்லை… எனக்கு பசித்தது என்றால் கண்டிப்பா நானே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கறேன் அதனால நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க …” அவன் ராகினி இடம் வரவழைத்த புன்னகையுடன் பேச
“ தம்பி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க ஆனா சாப்பிடாம மட்டும் இருக்காதீங்க .., உங்களுக்கு வேணா நான் பால் காய்ச்சி எடுத்துட்டு வரட்டுமா’ என்று ராகினி கேட்க…
“ ஐயோ அத்தை உண்மையாவே எனக்கு இப்போ எதுவுமே சாப்பிட வேண்டாம் அத்தை… அப்புறம் நான் பால், காப்பி, டீ எதுவும் குடிக்க மாட்டேன் … அதனால அதுவும் கூட நானே பார்த்துக்கொள்கிறேன் … நீங்க மாப்பிள்ளை அப்படின்னு பயந்து பயந்து எதுவும் பண்ண வேண்டாம்… உங்களுடைய பையன் நினைச்சு நீங்க சாதாரணமா இருந்தாலே எனக்கு அதுவே போதும் அத்தை… சரிங்க நான் ரூம்ல போய் தூங்குறேன்’ என்று சொல்லிய விதுரனும் அவர்களிடம் சிறு தலையசைப்பு செய்துவிட்டு ரூமிற்குள் வந்தான் படபடப்புடன்…
ரூமிற்க்கு வந்தவன் அறையைப் பார்க்க.., அதுவும் மிகவும் தலை கீழாக இருந்தது… அவன் வந்த புதிதில் பார்ப்பதற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் அப்படியே அந்த அறை தலைகீழாக இருந்தது போல் அவ்வளவு நீட்டாக இருந்தது… அவ்வளவு சுத்தமாக இருக்க கடைசியாக அந்த பெட்டில் இருக்கும் பெட் சீட்டை மடித்து வைத்துக் கொண்டிருந்தவள் … அவன் வந்ததை கூட கண்டுகொள்ளாமல்…, ரூமில் வேலை செய்து கொண்டிருந்தாள்..
அவளைப் பார்த்தவுடன் அவன் பேசியது,, அதற்க்கு அவள் அழுதது எல்லாம் கண் முன் வர .., சற்று மனது சங்கடமாகவே இருந்தது… அவன் அவளை அப்படி பேசியதை உணர்ந்து அவன் மனது சஞ்சலப்பட , அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் “ என்று அவளை நோக்கி சென்றான் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு…,
“ உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று வார்த்தைகள் மிக மெதுவாக அதே நேரம் அவளை நோக்கி பேச..
அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள் … அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை.. அவன் பேசியதை கேட்பது போல் அப்படியே அதே நிமிடத்தில் சட்சு போல் நின்று கொண்டிருந்தாள்..
“ நான் அப்போ பேசியது எல்லாமே தப்புதான்.., நீ எதுக்காக என்கிட்ட வர்ற அப்படின்னு கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம … நான் எதோ ஒன்னு பேசி ,உன் மனச காயப்படுத்தி” என்று அவன் மேலும் பேச வர வேகமாக அவனை நோக்கி திரும்பினால்…
‘ அவள் அவனைப் பார்க்கவில்லை… தலையை குனிந்து கொண்டே இருந்தால் ஆனால் அவனோ அவளை தான் முழுவதுமாக பார்த்தான் , அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய் இருந்தது… அவனின் கைத்தடங்கள் அப்படியே பதிந்து போய் இருக்க.., அதை பார்த்தவனின் மனது ரணமாய் குத்தியது… அவனுக்கு கோபம் வரும் தான்.. அளவுக்கு அதிகமாக வரும் ஆனால் இப்பொழுதுதான் புதிதாக தன்னை நம்பி வந்து இருக்கும் பெண்ணை கண்முடித்தனமாக அடித்தது.., ஏனோ அவனுக்கு அதை நினைத்தும் கோபம் வந்தது… அதுவும் அவளைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அடித்தது இன்னும் அவனின் மனது வலித்தது.., அவள் எப்படி வேணழும் என்றாலும் இருந்திருக்கலாம்… அவள் காமத்தை தன்னிடம் தானே காட்டி இருக்கிறாள் .., வேறு எங்கும் காட்டியது இல்லையே அதை ஏன் அவளை அப்படி நான் தப்பா பேசினேன்’ என்று அவனது மனதுக்குள் அவனைக் கேள்வி கேட்டுக் கொண்டே பெண்ணவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…..
ப்ளீஸ் எதுவா இருந்தாலும் அழுதுரு .. இப்படி நீ அமைதியாய் இருக்காத ..? என்று அவன் சொல்ல வர…
அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் மறு நிமிடமே அவன் முகத்தை பார்க்காமல் தலையை கீழே குனிந்து கொண்டு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் … என்று மிக மெல்லியதாக அவளின் குரல் வந்தது…
ஹ்ம்ம் பேசு .. என்று அவன் சொல்ல…
‘ உங்ககிட்ட சும்மா விளையாடலாம்னு தான் காலையில இருந்து நான் உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டேன் … ஆனா சத்தியமா தப்பான எந்த ஒரு எண்ணத்திலும் கிடையாது… ஏன் எதுக்கு அப்படி எல்லாம் தெரியாது.. உங்க கிட்ட அப்படி பேசணும் அப்படின்னு தோணுச்சு அதனால தான் நீங்க பேசுறதுக்கு நான் எதிர்த்து எதிர்த்து உங்கள் கிட்ட பேசினேன்… ஆனால் நான் பேசுனது உங்களோட மனசு இந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும் அப்படின்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. அதனால என்ன மன்னிச்சிடுங்க” என்று அவள் அமைதியாக பேச அவனுக்கு அதைக் கேட்டு அவனுக்கு தான் என்னவோ போல் இருந்தது…
“ எனக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி அது எங்க அம்மாவே அடிக்கடி திட்டுவாங்க… உன்னோட விளையாட்டுனால யாருக்காவது விபரீதமா ஆகிற போகுது அப்படின்னு நிறைய திட்டுவாங்க … ஆனா அப்போல்லாம் நான் கண்டுக்கல அத நெனச்சு… இப்போ நான் வெட்கப்படுகிறேன்…, எங்க அம்மா சொன்னது போல நான் அமைதியாக இருந்திருந்து உங்ககிட்ட விளையாடாம இருந்திருந்தா.., அந்த மாதிரி நீங்க பேசுறத நான் கேட்டிருக்க தேவையில்ல அப்புறம் நான் ஒன்னும் ப்ராஸ்டியூட் பொண்ணு கிடையாது … நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது போல தான் சைட் அடிச்சிருக்கேன் …,அது கூட என்னோட வரைமுறை என்ன அப்படிங்கறது எனக்கு நல்லாவே தெரியும்.., அப்புறம் இந்த காலத்துல சைட் அடிக்கல அப்படின்னா தான் தப்பு சைட் அடிக்கிறது இல்ல தப்பே கிடையாது …,உங்களுக்கே நல்லா தெரியும் நான் ஒன்னும் யாரையும் பாக்காம சைட் அடிக்காம இருக்குறதுக்கு சாமியார் வேஷம் போட்டு இருக்கலாமே.., எனக்கு அந்த மாதிரி தோணல நான் ஃப்ரீயா உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.. அதனாலதான் அப்ப கூட அப்படி சொன்னேன்…ஆயிரம் தான் இருந்தாலும் என்னோட கல்யாணம் ஒரு அரேஞ்ச் மேரேஜா தான் இருக்கணும்.., அப்படின்னு இதுவரைக்கும் நான் யாரையும் காதலிக்கல …வந்த ப்ரொபோசல் கூட அக்சப்ட் பண்ணிக்கல…, எங்க அம்மாவுக்கு எல்லாமே தெரியும்… எங்க அம்மாவ கிட்ட சொல்லாம நான் எதுவும் செஞ்சதும் கிடையாது… எவ்வளவுதான் விளையாட்டுத்தனம் இருந்தாலும் சீரியஸ்னஸ் என்ன அப்படிங்கறது தெரியும் ..,ஏனோ உங்க கூட விளையாடனும்னு தோணுச்சு அதனாலதான் அந்த மாதிரி நடந்து கொண்டேன் …ஆனால் அப்படி நடந்துக்கிட்டது உங்களோட மனசை எந்த அளவுக்கு பாதிச்சி இருக்கும் அப்படின்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல, அதனால என்னை தயவு செய்து மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்த மாதிரி உங்ககிட்ட நடந்துக்க மாட்டேன்… யாரையோ லவ் பண்ணுறீங்க அப்படின்னு தானே சொன்னீங்க உங்களுக்கு நான் டிவோர்ஸ் தந்துவிடுகிறேன்…, இனிமே உங்க வாழ்க்கையில நான் குறுக்க வரமாட்டேன் …நீங்க என்னோட கணவரா இருக்க போய் தான் உங்ககிட்ட விளையாடுற , வேற யார்கிட்டயும் நான் அப்படி பேசுறதுக்கு கூட போக மாட்டேன் ..,அதனால என்னோட கேரக்டர் இதுதான் அப்படின்னு தயவுசெய்து இண்ணமே இந்த மாதிரி தப்பா ஜட்ஜ் பண்ணாதீங்க’ … என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அவளுக்கு அழுகை வர இருந்தும் அந்த அழுகையை அடக்கிக் கொண்டவள் மறுபடியும் பேச ஆரம்பித்தாள்…
இது ஒண்ணும் ப்ரஸ்டியூட் குடும்பம் கிடையாது.., நாங்க கௌரமா தான் வாழ்ந்துகிட்டு இருக்கும் ..,அப்புறம் கல்யாணத்துக்கு என்னமோ சொன்னீங்க இல்ல ..,அந்த கல்யாணம் எதிர்பாராமல் ஏதோ ஒரு விதத்தில் நடந்தது… இன்னும் சொல்ல போனால் எனக்கு ஒண்ணுமே தெரியாது ..,நான் எங்க அம்மா அப்பா கூட ஜாலியா அந்த கல்யாணத்துக்கு வரணும்னு வந்து தான், உங்களுக்கு இப்போ மனைவியா வந்திருக்கு ..,தயவுசெய்து என்னை அந்த மாதிரி பேசாதீங்க …இப்ப கூட உங்ககிட்ட சண்ட போடணும் அப்படிங்கற மைண்ட் செட் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது…, ஏதோ ஒரு விதத்தில் தான் உங்களோட தோல்ல சாய்ந்துகொண்டு உங்களை கட்டிப்பிடித்து தவிர தப்பான எந்த ஒரு எண்ணத்திலும் கிடையாது.., நான் உங்களோட அனுமதி இல்லாம உங்கள ஹக் பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.., சாரி இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன் ..,அதுக்காக என்னோட அம்மா அப்பாவோட வளர்ப்பை மட்டும் தப்பா பேசாதீங்க.., நீங்க அதை இப்படி பேசுறது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா மறு நிமிசமே உயிரை விட்டுருவங்க ” என்று சொல்லி கதறி அழுது கொண்டிருக்க…
அது வந்து என்று அவன் அவளை சமாதானப்படுத்த அவளின் பக்கமாக வர வேகமாக வர வேண்டாம் என்று இடைநிறுத்தினால் விகிதா…
“நீங்க என் பக்கத்துல வராதீங்க.., சப்போஸ் என் பக்கத்துல வந்து என்னை சமாதானப்படுத்துகிற பேர்ல என்னோட கைய தொட்டால் கூட நான் ஒரு பிராசிடியூட் அப்படிங்கற மாதிரி தான் எனக்கு ஞாபகம் வரும் ..,அதனால தயவு செய்து’ என்று பேசாமல் அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் .தன் கண்களில் விடாமல் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டே அந்த பெட்ஷீட்டை முழுவதுமாக மடித்து வைத்தவள் இங்க நீங்க படுத்துக்கோங்க… என்று அந்த கட்டிலை காண்பித்தவள் அடுத்த நிமிடம் அந்த ரூமை விட்டு வெளியேறினால் வேகமாக…
“அவள் பேசியது எல்லாம் நினைத்தவனுக்கு மனது கலங்க ஆரம்பித்தது …,அவனுக்கு கோபம் அதிக அளவு வரும்… அப்படி கோபம் வந்தால் அவன் என்ன பேசுகிறான் “என்று அவனுக்கே தெரியாது… பல சமயம் காதம்பரி பாட்டி அவனிடம் இப்படி இருக்காதே… என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அவன் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அப்படியே அவன் இருக்க… இப்பொழுது அது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டவனுக்கு தன் மனைவியான விகிதாவை எப்படி சமாதானம் செய்வது… என்று புரியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்தான் …
“ என்னதான் அவள் செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றாலும்.., அவளிடம் அந்த மாதிரி பேசியது மிகவும் தவறு… அதுவும் தனக்காக அவள் மணமேடையில் தான் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக அவள் அம்மா அப்பா உட்கார வைத்திருக்க அவர்களையும் ..,தன் கொச்சைப்படுத்தியது மிகவும் தவறு தன்னை நம்பி … தன்னை நோக்கி வந்தவளை கரம் பிடித்து அவளை பாதுகாக்காமல் தானே அவளை அவதூறாக பேசியது எவ்வளவு பெரிய மகா தவறு …” என்று உணர்ந்து கொண்டவனோ அவளை சமாதானப்படுத்த செய்யலாம் என்று அந்த அறையை விட்டு வெளியேற அதே நேரம் ராஜ்குமார் அவனின் முன்னாள் வந்து நின்றார்… …
திடீரென்று தனக்கு முன்னால் வந்து நிற்கவும் பயந்துவிட்டான் விதுரன்…, அவள் அழுது கொண்டே பேசியது எங்கு வெளியில் கேட்டு இருக்குமோ..!!! அதனால் தான் அவளுடைய தந்தை ராஜ்குமார் தனக்கு முன்னாள் ஏதாவது அதை பற்றி பேசுவதற்காக நிற்கிறாரோ…, என்று மனம் படபடக்க எந்த ஒரு பெற்றோருக்கும் தன் பெண் கலங்கினால் ஆகாது … ஆனால் தான் அவளை பேசக்கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசி அவளை கலங்க வைத்தது மற்றும் தெரிந்தால் அவர் நொந்து விடுவார்கள்… என்று பயந்து கொண்டே என்ன அங்கிள்..? என்று அமைதியாக அவன் கேட்க….
“ அது அது வந்து எப்படி சொல்லணும்னு தெரியலப்பா… அந்த நாய்க்குட்டி இறந்ததுல இருந்து என்னோட பொண்ணு ரொம்பவே அழுதுகிட்டு இருக்கிறான் இப்ப கூட பாருங்க, ரூம்ல இருக்க கூச்சப்பட்டுக்கிட்டு உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்குமே அப்படின்னு அழுதுகிட்டே மேல மொட்டமாடிக்கு போறப்ப… நான் என் பொண்ணு பக்கத்துல போனா கண்டிப்பா அவ கூட சேர்ந்து நானும் அழுதுடுவேன் ..,என் பொண்ணு மனசு உடைஞ்சு சத்தியமா என்னால தாங்க முடியாதுப்பா.., அதனால நீ கொஞ்சம் என்னோட பொண்ண பாத்துக்கிறியாப்பா கூட இருந்து’ என்று ஒரு தந்தையாக தன் மருமகன் இடம் கேட்க…
‘ ஹியோ மாமா ஏன் இந்த மாதிரி எல்லாம் பேசுறீங்க..? அவளை பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு.., அப்புறம் தப்பா நினைச்சுக்காதீங்க இங்க மெடிக்கல் எங்க இருக்கு ..? என்று அவன் கேட்க…
‘ ஏன் பா என்னாச்சு..? எதுக்கு இப்ப மெடிக்கல் போகணும்..?” என்று அவர் கதறி கொண்டு கேட்க…
“ அது இல்ல அங்கிள் … எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்குது… அதனாலதான் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க… நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் எதுவும் கிடையாது” என்று அவன் சொல்ல…
“ பக்கத்துல தான் பா இருக்குது … என்ன வேணும்னு சொல்லுப்பா நானே போய் வாங்கிட்டு வரேன்..” என்று ராஜ்குமார் சொல்ல அதற்கு முற்றிலுமாக மறுத்துவிட்டான் விதுரன்…
“எப்படி சொல்லுவான் உங்களுடைய பொண்ணுக்கு தான் கன்னத்தில் நான் அடித்ததால், காயம் ஏற்பட்டு அதற்கு தான் நான் மருந்து வாங்க போகிறேன்’ என்று எப்படி சொல்லுவான் சொன்னால் தந்தையின் நிலை என்னவோ அதை அறிந்து தான் அவன் எதுவும் பேசாமல் தனக்கு ஏதோ ஒன்று வேண்டும் என்று அவன் சொல்லி கேட்க…
அவர் மெடிக்கல் எங்க இருக்கிறது… என்று சொல்ல …,சரி என்று கேட்டுக் கொண்டவன் போக ….போகும் அவனை கூப்பிட்ட ராஜ்குமார் தன்னுடைய மகள் ஸ்கூட்டியின் சாவியை , விதுரனின் கை கையில் கொடுக்க ..,அதை வாங்கிக் கொண்டவனோ சரிங்க அங்கிள் என்று சொல்லிவிட்டு மெடிக்கல் கடைக்கு சென்று விகிதாவிற்கு தேவையான ஆயின்மென்ட்டை வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தவன் .., நேராக விகிதா இருக்கும் மொட்டை மாடிக்கு சென்றான்…
(உடல் அளவில் காயப்படுத்தியதற்கு மருந்து வாங்கியவன் மனதளவில் காயப்படுத்தியதற்கு எப்படி மருந்து கொடுப்பானோ..!!!!)
மான்விழியாள் வருவாள் …
காதலே- 20
அடுத்த நாளும் புலற நிதிஸுன் அனைப்பில் இருந்து கண் விழித்த கனி எழ அவள் அசைவில் நிதிஸும் கண் விழித்தான். அவளை மீண்டும் அணைக்க அவன் மார்பில் மீண்டும் விழுந்தவள் “ஐயோ குளிச்சிட்டு வாரேன்” என்றாள் “பேபி வாட்டர் வேஸ்ட் பண்ண கூடாது இரு வாரேன்” என்றவனைத் தள்ளிவிட்டபடி குளியலறை நுழைந்து கொண்டாள்.
தனது டீமை அழைத்த நிதிஸ் ரிகர்கலில் ஈடுபட்டான். ஹோட்டலிலேயே காலை, மதிய உணவை உண்டனர் விமான பயணம் புதிதாக இருக்க கனி அறையிலேயே ரெஸ்ட் எடுத்துக் கொண்டாள்.
ஓகே காய்ஸ் ஈவினிங் 5:00 மணிக்கு ரெடியாருங்க வாகனம் வரும் என்றவன் தனது அறையில் நுழைந்து கொண்டான். ஆகாய நீல நிற,சேர்ட், கருப்பு நிற ஜின்சும் தாடி மீசையை ரிம் பண்ணி தலை முடியை ஜெல் வைத்து வாரும் போது, கையை முதுகில் வைத்தபடி கனிவர கண்ணாடியூடு அவளைப் பார்த்தவன்” வாவ் யூ லுக் சோ பிரிட்டி பேபி” என அவளை அணைக்க வர அவனை மார்பில் கை வைத்து தள்ளியவர் ஜிப் போட முடியல” என்றாள் சினங்களாக, அவளை பின்னால் திரும்பியவன் முதுகில் கோலம் போட்டபடியே ஜிப்பை பூட்டி விட்டான் அவளும் அவனது உடைக்கு பொருத்தமாக அதே நிறத்திலேயே வெள்ளை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட பிராக் அணிந்து, அழகாக இருந்தாள்.
இருவரும் கதவை பூட்டிக் கொண்டு வெளியே வர அனைத்து கலைஞர்களும் வந்திருந்தனர்.
வித்யாவுக்கு கனி மேல் அப்படி ஒரு கோபமும், பொறாமையும் வந்தது. அனைவரும் வாகனத்தில் ஏறியதும் வாகனம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பியது. நிதிஸும் கனியும் தங்களுக்கான காரில் அவர்களை பின்தொடர்ந்து புறப்பட்டனர். பதினைந்து நிமிட பயணத்தில் மிகப்பெரிய ஸ்டேடியமினுள் வாகனங்கள் நுழைய அப்போதே ரசிகர்கள் வானகனத்தை சுற்றிக் கொண்டனர் பவுன்சர்கள் வரவே வாகனம் சென்றது.
ஸ்டேடியம் எல் ஈ டீ மின் விளக்குகளால் ஜெகஜோதியாக ஒளி வெள்ளத்தில் தயாராகி இருந்தது வாத்திய கலைஞர்கள் தங்களுக்குரிய இசைக்கருவியை அமர்ந்து அனைத்தையும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹனியை மேடைக்கு பக்கவாட்டாக இருந்த விஐபிகளுக்கான இருக்கையில் அமர வைத்தவன் தானும் அமர்ந்து கொண்டான் கனிக்கு அடுத்ததாக பலர் அமர்ந்து கொண்டனர்.அவ்வரிசையில் வித்யாவும், கௌசல்யாவும் மற்றைய பாடகர்களும் அமர்ந்திருந்தனர். ரசிகர்கள் ஒருபுறம் ஆரவாரம் செய்ய தொடங்கினர்.
அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் “ஹாய் குட் ஈவினிங் எவ்ரி ஒன்”, என நிகழ்ச்சியை ஆரம்பித்தவர் “எக்ஸைட்டா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்” நானும் அப்படித்தான் இதோ உங்களுக்குக்கான முதலாவது பாடலை பாட வருகிறார் இசை வேந்தன் சஞ்சய்” என அறிவிக்க கரையோசத்துக்கு மத்தியில் மைக்கை பிடித்த சஞ்சய் தனது இனிய குரலில் “ரோஜா ரோஜா” பாடலை பாட அரங்கமோ கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக எமது மனம் கவர்ந்த பின்னணி இசை பாடகி வித்யஸ்ரீ என அறிவிக்க அவளும் ஒய்யாரமாக நடந்து வந்து மேடையேறி மைக்கைப் பிடித்தவள், தனது இனிய குரலில் “உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு” என்னும் பாடலை ஸ்ருதி, லயம் மாறாது மென் குரலில் பாட அரங்கமோ அவள் இசையில் நனைந்தது. அவளும் பாடலை பாடி முடிக்க அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர் அவளும் நன்றியை தெரிவித்து விடை பெற்றாள்.
அதனைத் தொடர்ந்து ரப் இசைப் பாடகர் சிம்ஹா துள்ளழிசை பாடலை பாடி அரங்கத்தையே ஆட வைத்துக் கொண்டிருந்தார்
மேலும் அதனை தொடர்ந்து “இதோ அனைவரும் மிகவும் பிடித்த இசைவேந்தன், இசைச்சமர் நிதிஸ் சரன்” என அறிவிப்பாளர் அழைக்க நிதிஸும் கம்பீரமாக மேடை ஏறினான் அவன் மேடையேறியது தான் தாமதம் பலத்த கரகோஷம் மேடையே இருளில் மூழ்கி பின் நிதிஸ் நிற்கும் இடம் மட்டும் ஒளிவெள்ளம் பாச்சப்பட்டது.
நிதிஸுன் புகைப்படத்தை தாங்கி இருந்தோர் அதில் ஐ லவ், யூ நிதிஸ், ஐ லைக் யூ என பல வார்த்தைகள் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
“ஹாய் பட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க” என அவன் குரலை தாண்டி ஆரவார சத்தம் கேட்டது “அப்போ டிரைக்டா சாங்குகே போய்டலாம்” என்றவன்
“என்னோடு நீ இருந்தால். உயிரோடு நான் இருப்பேன், என்னோடு நீ இருந்தால். உயிரோடு நான் இருப்பேன்”. பாடலை பாட அரங்கமே நிசத்தமானது அவன் குரல் மட்டும் ஒலித்தது “கமான் ஹாய்ஸ் என அவனும் கைதட்ட ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்கள் போன் டார்ச்சை ஆன் செய்து வைப் செய்தனர் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்க அறிவிப்பாளரிடம் வந்து நிதிஸ் அவரிடம் ஏதோ சொன்னவன் பாடலை பாடி முடித்தான்.
அதன் பின் இந்த மூவ்மெண்ட்ட இன்னும் ஸ்பெஷலாக்க ஸ்பெஷல் பெர்ஸன் ஒருத்தங்கள உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறேன் என்றவன் அறிவிப்பாளரைப் பார்க்க,
அனைவரின் பார்வையும் மேடையிலேயே இருக்க அறிவிப்பாளரும் “வாங்க மேடம்” எனக் கனியை அழைத்து மேடைக்கு வந்தவள் அவளை மேடையில் விட்டகல அவளோ பயத்துடன் மேடையில் நிற்க அவள் கையைப் பிடித்து தான் நிற்கும் ஒளியில் அழைத்து வந்த நிதிஸ் அவளை தோளோடு அனைத்து மீட் மை லவ்வபிள் வைப்” என்றான். அவன் திருமணம் செய்தது தெரிந்தாலும் பலருக்கு தெரியவில்லை அனைவரும் கைதட்டி ஆர்பரித்தனர்.
“கனிமலர்” …”ஹனி வாய்ஸ்” என உல்லாசமாக சொன்னவன் இதோ உங்களுக்காக மைக்கை அவள் கையில் வைக்க அவளும் அவன் செயலில் பயத்துடன் மைக்கை மறு கையால் மூடியபடி “என்ன இது” என்றாள் படபடப்புடன் “ரிலாக்ஸ்மா நான் இருக்கேன் பாடு” என்றான் அவளோ மேலும் பயத்துடன் ஜனத்திரளையே பார்த்தவள், அவன் முகத்தை பார்க்க “இங்க நீயும் நானும் மட்டும் இருக்கம்னு நினைச்சு கண்ண மூடிட்டு பாடு” என்றான்.
நாலு சுவருக்குள் பாடியவளை இப்படி திடிரென மேடையேற்றி கையில் மைக்கைக் கொடுத்தால் என்ன செய்வாள்.
அவளுக்கோ பயம் மட்டுமே,அவன் பேச்சைக் காப்பாற்ற வேண்டிய தேவை அவன் பேச்சில் தைரியம் வரப் பெற்றவள் ஆழ்ந்த மூச்சை விட்டுக்கொண்டு கண்களை மூடி மைக்கை உயர்த்தினாள். வித்யாவோ ” வாய் பேச முடியாதவ பே பேனு பாடப் போறா” என்றாள் கௌசல்யாவிடம் சிரித்தபடி விட கௌசல்யாவோ “எனக்கு என்வோ அப்படி தோணல” என்றாள் மறு நொடியே ஹனி வாய்ஸில் “பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே… அன்பே நீ வா… இருளில் கண்ணீரும் எதற்கு… மடியில் கண்மூட வா… அழகே இந்த சோகம் எதற்கு… நான் உன் தாயும் அல்லவா… ” என அவள் குரலோ ஊனிலும் உருக்கும் அப்படி வாய்ஸ் அவள் குரலில் அனைவரும் கட்டுண்டிருக்க வித்யாவிற்கோ அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.
அப்போது தான் அவளுக்கு அனைத்தும் புரிவதாய் இருந்த”து. முழுவதுமாக பாடலை பாடிய கனி கண்களை திறக்க அந்த அரங்கமே அவள் பாடலுக்கு மயங்கி கைதட்டி ஆர்ப்பரித்தனர் அவளும் “தேங்க்ஸ்” என்றவள் புன்னகைத்துக் கொண்டாள். அங்கு வந்து அறிவிப்பாளர்களோ “மேடம் சூப்பரா இருக்கு, சார் இப்படி ஒரு சர்ப்ரைஸ் நாங்க யாருமே எதிர்பார்க்கல” என்றாள்.
ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சாங்” என்றாள் அறிவிப்பாளர் நிதிஸோ “அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ… ஐ அஸ்த் அஸ்த் லிபே… ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா… இஷ்க் இஷ்க் மீலே…லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…ஒரு காதல் உந்தன் மேலே…” எனும் பாடலை ஆரம்பிக்க பெண் குரலுக்கோ கனி அழகாக பாடினாள் அன்றும் அடுத்த நாளும் நிதிஸும், கனியும் தான் சோசியல் மீடியாவில் வலம் வந்தனர்.
நிகழ்வு முடிந்து மிட் நைடிலேயே அறைக்கு வந்தவர்கள் களைப்பில் உடையை மாற்றி விட்டு தூங்கிப் னோயினர்.
நிதிஸுன் அனைப்பில் தூங்கிய கனியை அழைத்தது அவளது தொல்லை பேசி, அலைபேசியை எடுத்துப் பார்க்க தாய் தான் அழைதத் இருந்தார். அழைப்பை ஏற்றவள் ” ம்மா எனறாள் அவரோ சாங் பார்த்தோம் நல்லாருந்தது எப்போ வாரிங்க வெள்ளிக் கிழமை தான்மா” என்றவள் அவரோடு பேசி அழைப்பை துண்டித்தாள்.
அவளும் தாய் ,தந்தை, தம்பி , பாட்டி, ராம் , பிரதாப் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆயிரம் வாழ்த்துக்கள் அவளுக்கு குவிந்திருந்தது.
இசை மீதான அவள் பிரியதற்கு நிதிஸ் அங்கீகாரம் வாங்கி கொடுத்திருந்தான்
அடுத்த நாள் தங்களது டீமுடன் கனடாவை சுற்றி திரிந்தவர்கள் அவர்களை அன்று இரவு விமானம் ஏற்றிவிட்டு தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறை நுழைந்தவர்களை வரவேற்றதென்னவோ அலங்கரித்த அறை தான்.
அவள் பாடிய நெஞ்சினிலே பாடலை ஒலிக்க விட் டான் அவளோ அதிர்ச்சியுடன் நிதிஸைப் பார்க்க கண்சிமிட்டியவன் அவளோடு மஞ்சத்தில் சரிந்தான் “குங்குமம் ஏன்சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல்பொழுதில் கசங்கத்தான் எனும் வரிகளில் அவளோ வெட்கத்தில் அவனில் புதைய” மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்” என மீதிப் பாடலைப் பாடியவன் அவளை கலைத்து, களைந்து அவளில் மூழ்கி முத்து எடுத்தவன் அவளை விட்டு விலகி படுக்க அவன் இதழ்களிலோ புன்னகை அவள் இதழ்களிலோ வெட்கம் அவளைத் திரும்பிப் பார்க்க அவன் பார்வையில் மேலும் சிவந்து போனவளோ போர்வையால் தன்னுடலை மூடியவளை தன் நெஞ்சில் தூக்கி வைத்தவன் கண்மூடி தூங்கினான்.
சில மணி நேரம் சென்று கண்விழித்தவன் வயிறு வேறு பசிக்க “பேபி எழுந்திரு குளிச்சிட்டு சாப்பிடலாம்” என்றான். அவளும் போர்வையுடனே குளியலறை நுழைய அவளோடு குளியலறை நுழைந்தவன் பேபி வாட்டர் வேஸ்ட் ஆயிடும்ல என்றான் குளியலறை விட்டு வெளியே வந்த அவன் இதழிலும் புன்னகை அவள் இதழிலும் புன்னகை இரவு உணவு ஹோட்டலிலேயே உண்டவர்கள் மீண்டும் தஞ்சம் அடைந்ததென்னவோ மஞ்சத்தை தான்.
கைகோர்த்து கனடாவை இருவரும் சுத்தி வந்தனர் கொஞ்சலும் சீண்டலுமாக இருவரும் தங்களது நாட்களைக் கடத்தினர்.
இதோ இன்றுடன் கனடா இருந்து வந்து ஒரு வாரம் சென்றிருக்கும் அவரவர் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க கனியும் நிதிஸும் காதல் வானில் சிறைகில்லாது பறந்தனர்.கனியை ஸ்டூடியோவில் பாட அழைக்க அவலோ மறுத்து விட்டாள் அவனுக்காக மட்டுமே அவள் பாடுவாள்.தனிமையில் அதைக் கேட்பதோ அவனுக்கு பரம சுகம்.
அவள் பாட மறுத்ததில் நிதிஸுககோ மனத்தாங்கல் இருந்தாலும் அவள் உணர்விக்கும் பேச்சுக்கும் மதிப்பளித்திருந்தான்.
நாட்களும் செல்ல விடிந்தால் ராமின் திருமணம் எனும் நிலையில் வீடு முழுவதும் உறவினர்கள் நிதிசஸுன் கண்கள் காதல் மனைவியை தேடியும் கிடைக்கவில்லை அவள் தனியாக சிரிக்கும் போதெல்லாம் முத்தமிட்டே ஒரு வழியாக்கி விடுகிறான்.
மறுநாள் அனைவரும் ஆயத்தமாகி திருமண மண்டபத்திற்கு சென்றனர் மண்டபமும் உறவினர்களால் நியம்பி இருந்தது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. ராமும் ஐயர் ஓதும் மந்திரங்களை உச்சரித்தவன் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஐயரிடமிருந்து தாலியை வாங்கி தரங்கிணியின் கழுத்தில் கட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.
அனைவரும் அவர்களை அட்சதை தூவி வாழ்த்தினர் விருந்தினர்களும்ன் விருந்தினை உண்டு வாழ்த்தி விடைபெற்றுச் சென்றனர்.
திருமணமும் நல்லபடியாக முடிந்தது. தரங்கினியும் அக்குடும்பத்துடன் இணைந்து கொண்டாள்.
வித்தியாவும் அதன் பின் பிராமின் பக்கம் செல்லவில்லை அவளோ தான் கூறிய பொய் புரிந்ததால் என்னவோ அவளும் அதன் பின் ஸ்டூடியோவில் வேறு ஒரு காதல் கிடைக்க அதில் தன் கவனத்தை செலுத்தினாள். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல அன்று ராமின் அலுவலகத்திற்கு வந்த நிதிஸ் ” என்னடா திடீர்னு வந்திருக்க என்றான் ராம்.அவன் ரெண்டு டிக்கெடை வைத்தான். ராமோ ” வாவ் தேங்க்ஸ் டா” என்றான் அதுவோ சுவிட்சர்லாந்து செல்வதற்கான டிக்கெட்ஸ்.
ராமும் தரங்கிணியும் சுவிட்சர்லாந்து செல்லும் நாளும் வந்தது.தரங்கினியும் இருவாரம் விடுப்பெடுத்திருந்திருந்தாள். முதல் நாள் இரவுணவின் போது நிதிஸ் கனியை பார்த்தபடி “அப்பா கொஞ்சம் அவுட்டிங் போய் வரலாம்னு இருக்கேன்” என்றான். பிரதாபோ “ஓகே டா ராமும் நாளைக்கு போறான் தானே,அதற்கு நிதிஸோ “எங்க கூட தான் அவன் வாரன்” என்றான். சாப்பிட்ட ராமிற்கோ புறையேற தலையில் தட்டியவன் “ஹனிமூனா?” “இல்ல அவுட்டிங்” என்றார் கல்யாணி சிரித்தபடி கனிக்கோ வெட்கத்தில் நிலத்தில் புதைந்து விடலாம் போல் இருந்தது.பாட்டியோ “ஏன்டா இன்னுமாட உங்க ஹனிமூன் முடியல” என்றார்.அவர்கள் வாழ்வில் காதல் காதல் காதல் மட்டுமே ராமும் தரங்கிணியும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.
மறுநாள் இரு ஜோடிகளையும் விமான நிலையத்தில் வழியனுப்ப முழு குடும்பமே வந்தது மேகநாதன் ,வாணி , சுதர்சன் என அனைவருமே வந்திருநத்னர். மகளின் வாழ்க்கை சந்தோசமாக அமைந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி அனைவரும் கையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தனர்.
மௌனம் தாண்டிய அவர்கள் காதல் தேனிலும் இனிதாக தித்திப்புடன் இருந்தது. “தேனிலும் இனிது காதலே”
அவங்க ஹனிமூன் செல்லட்டும் வாங்க நாம் விடை பெறுவோம்.
நன்றி
அம்பு – ௨௰௯ (29)
அடுத்த நாள் வித்யாவின் வழக்கு விசாரணைக்கு வர மறுபடியும் விஷ்வாவையும் அவன் நண்பர்களையும் கைது செய்து ரிமாண்டில் வைக்க ஆணை பிறப்பித்தது கோர்ட்..
அதன்படியே விஷ்வாவை கைது செய்யப் போன நேரம் அவன் பிசினஸ் விஷயமாக யூ எஸ் போய் இருப்பதாகவும் அடுத்த வாரம் தான் திரும்பி வருவான் என்றும் அவர்கள் வீட்டில் கூறினார்கள்.. அவனுடைய நண்பர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்க விஷ்வா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார் அந்த இன்ஸ்பெக்டர்…
மூன்று வாரங்களில் சகுந்தலாவும் தன் தோழிக்கு ஜூனியராக நீதிமன்றத்துக்கு சென்று வந்தாள்…
அப்போதைக்கு மான்விழி ப்ருத்வி சமையல் வேலை எல்லாம் முடித்த பிறகு அவனோடு கம்பெனிக்கு சென்று அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டாள்.. அவனிடம் அந்த வேலைகளைப் பற்றி கற்றுக் கொண்டாள்…
அந்நேரம் தொழிற்சாலையின் ஒரு வாடிக்கையாளர் அவர்களை குறிப்பிட்ட வடிவத்தில் அம்புகள் செய்ய சொல்லி வார்த்தைகளில் அதன் வடிவமைப்பையும் தன்மையையும் அது செல்ல வேண்டிய வேகம் அதன் உறுதி.. எடை.. என்று எல்லாவற்றையும் விளக்கி கேட்டிருக்க அந்த அம்பினுடைய வடிவத்தையும் அதை செய்ய பயன்படுத்த வேண்டிய பொருட்களையும் அவர்கள் கேட்ட விதத்தில் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் விதவிதமாக வடிவமைத்து வரைந்து கொடுத்தும் ஏனோ அது திருப்தியாக வரவில்லை…
அதை கண்ட மான்விழி “நான் ஒருவாட்டி ட்ரை பண்ணவா? இந்த ஏரோவை என்னால டிசைன் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.. நீங்க எனக்கு எந்தெந்த மெட்டீரியல்ல எப்படி பண்ணா அவுட்புட் எப்படி இருக்கும்னு சொல்லி இருக்கீங்க இல்ல ப்ருத்வி.. நான் அதை டிசைன் பண்ணி அதுக்கு என்னென்ன மெட்டீரியல் யூஸ் பண்ணலாம்னு மென்ஷன் பண்றேன்.. அது சரியா இருக்குமான்னு மட்டும் நீங்க பாருங்க..” என்றாள் பிருத்வியிடம்..
அந்த வடிவமைப்பாளரோ “மேடம் இத்தனை வருஷமா நான் இங்க டிசைனரா இருக்கேன்.. என்னாலேயே இந்த ஏரோவை டிசைன் பண்ண முடியல.. நீங்க ரெண்டு நாளா தான் ப்ருத்வி சார் கிட்ட இதை பத்தி கத்துக்க ஆரம்பிச்சு இருக்கீங்க.. உங்களால எப்படி முடியும்?” என்று கேட்க
“மிஸ்டர். ஷாஹித்.. நீங்க ரொம்ப எக்ஸ்பர்ட் டிசைனர் தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா ஒருவேளை நீங்க மிஸ் பண்ற ஏதோ ஒன்னை மான்விழி யோசிக்கலாம் இல்லையா..? ட்ரை பண்றதுல ஒன்னும் நஷ்டம் இல்லையே.. அவ ட்ரை பண்ணட்டும்.. அவ டிசைன் முடிச்சதும் நான் உங்ககிட்ட கொண்டு வந்து காட்ட சொல்றேன்.. நீங்க இப்போ உங்க ஒர்க் ப்ளேஸ்க்கு போய் இந்த டிசைனை வேற எப்படி எல்லாம் பண்ணலாம்னு கொஞ்சம் ட்ரை பண்ணுங்க..” என்றான்..
அவனும் சென்றுவிட “ஓகே மானு.. அந்த டிசைனர் ஒரே மாதிரி மோனோடனஸ்ஸா டிசைன் பண்றாரோ என்னவோ டிஃபரண்டா நீ ஏதாவது இன்னவெட்டிவா பண்றேனா பண்ணி பாரு..” என்றான்..
அவளும் அந்த அம்புத் தண்டு அம்பின் முனை அன்பின் கீழ் பகுதி அதில் இணைக்கப்பட்ட இறக்கைகள் என்று எல்லாவற்றையும் ஒரு வடிவமாக வரைந்தவள் அதற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தாள்…
அதைப் பார்த்த அந்த வடிவமைப்பாளரும் பிருத்வியும் வியப்பில் ஆழ்ந்து போனார்கள்..
“ஹே மானு.. எப்படிடி.. நான் உனக்கு ரெண்டு நாள் தான்டி சொல்லி கொடுத்தேன்.. அந்த கிளையன்ட்டோட ரெக்விஸிட்ஸ் எல்லாமே ஃபுல் ஃபில் ஆகுற மாதிரி எவ்ளோ அழகா டிசைன் பண்ணி இருக்கே.. இதுல யூஸ் பண்ணி இருக்கற மெட்டீரியல்ஸ் எல்லாமே அவங்க ரெக்வஸ்ட் பண்ணதுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு.. சூப்பர் டி..” என்று அவளை பாராட்டியவன் அவள் செய்து கொடுத்த வடிவமைப்பில் மாதிரி அம்பை தயாரிக்க சொன்னான்..
அந்த அம்பும் தயாரிக்கப்பட்டது.. அந்த வாடிக்கையாளரின் பிரதிநிதி ஒருவர் அவர்கள் தொழிற்சாலைக்கே நேரில் வந்து அந்த மாதிரியை பார்த்துவிட்டு பிரமித்து போனார்..
“வாவ்.. எக்ஸாக்ட்டா நாங்க என்ன எக்ஸ்பெக்ட் பண்ணோமோ அப்படியே பண்ணி இருக்கீங்க.. பெர்ஃபெக்ட் ஜாப்.. ப்ருத்வி உங்க கம்பெனியில இவ்ளோ நல்ல டிசைனர்ஸ் இருக்காங்கன்னு எனக்கு தெரியாது.. முன்னாடியே தெரிஞ்சி இருந்துதுன்னா அவங்களை எங்க கம்பெனிக்கு இழுத்துட்டு இருப்போம்..”
அவன் சொன்னதை கேட்ட பிருத்வி சத்தமாக சிரித்தான் “அது உங்க கனவிலே கூட நடக்காது.. ஏன்னா இந்த ஏரோவை டிசைன் பண்ண டிசைனர் என்னோட வைஃப் மான்விழி..” சொன்னவன் மான்விழியை அழைக்க அவளும் அங்கு வந்தாள்..
“நான் ஏரோ மட்டும்தான் அழகா பண்றாங்கன்னு நெனச்சேன்.. அவங்களும் ரொம்ப அழகா தான் இருக்காங்க..” மான்விழி அதை கேட்டு வெக்கப்பட்டு சிரிக்க பிருத்விக்கோ காதில் எரிமலை குழம்பாய் புகை வந்து கொண்டிருந்தது..
“மிஸ்டர் சாகர்.. அவங்க என் வைஃப்ன்னு சொன்னேன்..” என்றான் மான்விழியையும் சாகரையும் மாறி மாறி முறைத்தபடி..
“அதுலயும் நீங்க முந்திக்கிட்டீங்க..” என்று அவன் சொல்ல அவன் மண்டையில் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டால் என்ன என்று தோன்றியது பிருத்விக்கு..
மான்விழியோ இதழுக்குள் சிரித்துக் கொண்டவள் சாகரிடம் “அந்த விஷயத்துல நான் தான் ரொம்ப லக்கி.. நல்லவேளை.. உங்களுக்கு முன்னாடி நான் இவரை பார்த்துட்டேன்.. இல்லனா ப்ருத்வி மாதிரி ஒரு கோல்டன் மேனை மிஸ் பண்ணி இருப்பேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு இப்போது சாகரை பார்வையில் ஒரு கர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ப்ருத்வி..
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த வடிவமைப்பாளரோ “நல்ல ஜோடி.. யார் கண்ணும் படாம இருக்கணும்.. இவங்க இப்படியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும்..” என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டான்..
சாகரும் ஷாஹித்தும் சென்ற பிறகு மான்விழியை தன் அணைப்புக்குள் கொண்டு வந்த பிருத்வி “ஓய் பொண்டாட்டி.. அவன் உன்னை அழகா இருக்கன்னு சொன்னா வெட்கப்பட்டு சிரிக்கிற.. உன்னோட வெட்கம் எனக்கு மட்டும் தான் டி சொந்தம்.. வேற யார் முன்னாடியாவது வெட்கப்பட்ட அப்புறம் அதுக்கு தண்டனை ரொம்ப ஹெவியா இருக்கும்..” என்க
“ஆஹான் .. அப்படி என்ன தண்டனை கொடுப்பீங்க மை டியர் ஹஸ்பன்ட்..” என்று அவள் அவனை சீண்ட “அடியே இது ஆஃபீஸ் டி.. வீட்டுக்கு வா.. வெச்சு செய்யறேன் உன்னை..” என்க
“பார்க்கலாம் பார்க்கலாம்..” என்றவள் அவனை விட்டு விலகி “நான் ஃபேக்டரிக்கு போய் பாத்துட்டு வரேன்.. நீங்க இங்க சமத்துப் பிள்ளையா உட்கார்ந்து உங்க வேலையை பாருங்க..” என்று அந்த அறையை விட்டு சென்றாள்..
போகும் அவளை ஒரு அழகிய புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
மான்விழி அந்த நிறுவனத்தில் இப்படி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க சகுந்தலாவோ தன் முதல் வழக்கை எதிர்கொள்ள தயாரானாள்..
ஆம்.. விஷ்வா ஊருக்கு வந்திருந்தான்.. அதே சமயம் மார்க்கண்டேயன் வீட்டில் ஊர்மிளா படிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்திருந்தாள்..
ஏனோ அவள் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது.. முன்னே இருந்த அந்த உற்சாகம் அவள் முகத்தில் இப்போது இல்லை.. வில்விழி பலமுறை அவளோடு பேசி அவள் மனதில் என்ன கவலை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயன்றும் அவளால் எதையுமே அறிய முடியவில்லை…
ஒரு நாள் வில்விழி வித்யாவோடு அந்த வழக்கு விஷயமாக வெளியே சென்று இருக்க அப்போது ஒரு உணவகத்தில் லக்ஷ்மணும் ஊர்மிளாவும் உணவு உண்டு கொண்டே பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்..
வித்யா அவளிடம் அவர்களிடம் போய் பேசலாம் என்று சொன்னபோது அவளை பிடித்து நிறுத்தி வைத்தவள் “ஊர்மி எதுக்கு லக்ஷ்மணை தனியா பாக்கணும்? அவங்களுக்குள்ள..” என்று யோசித்தவள் “வித்யா நம்ம வேற ஹோட்டலுக்கு போலாமா?” என்றாள்..
“ஏன் கா.. நம்ப லக்ஷ்மணும் ஊர்மியும்தானே.. வாங்க.. அவங்க கிட்ட பேசிட்டு வரலாம்..” என்று வித்யா சொல்ல “அவங்களுக்கு நம்ப கூட சேர்ந்து பேசணும்னா இந்த ஹோட்டலுக்கு அவங்க நம்மளையும் கூட்டிட்டு வந்து இருப்பாங்க.. அவங்க தனியா பேசணும்ங்கறதுக்காக தான் இங்க வந்து இருக்காங்க.. அதை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. வா.. நம்ம வேற ஹோட்டலுக்கு போலாம்..” என்று அவள் சொல்ல
வித்யாவுக்கும் அவள் சொன்னது சரி என்று தோன்றியது..
வீட்டிற்கு வந்தவுடன் ஊர்மிளாவிடம் அதைப்பற்றி பேசினாள் வில்விழி.. “ஊர்மி இன்னைக்கு ஹோட்டல்ல நீ லக்ஷ்மனோட பேசிட்டு இருக்கிறதை நான் பார்த்தேன்.. எனக்கு கேட்கலாமான்னு தெரியல.. உன் பிரைவசில தலையிடணும்னு நான் நினைக்கல.. ஆனா உனக்கும் சக்கரவர்த்தி அங்கிள் பையனுக்கும் கல்யாணம் பேசி வச்சிருக்காங்க இல்ல..?அதுக்காக மட்டும் தான் கேட்கிறேன்.. நீ லக்ஷ்மணை..”
“ஆமா அண்ணி.. நானும் லக்ஷ்மணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்.. ஏற்கனவே இங்க காலேஜ் படிக்கிற டைம்லருந்து நான் அவனை லவ் பண்ணிட்டு இருக்கேன்.. ரொம்ப வெயிட் பண்ணிட்டேன் அண்ணி… எனக்கு இதுக்கு மேல அவனை விட்டு இருக்க முடியல.. எப்படியாவது எங்க கல்யாணத்தை ஒரு மூணு மாசத்துக்குள்ள நடத்தி வச்சிருங்க அண்ணி.. நீங்க போட்டு இருக்க கண்டிஷன் பத்தி எல்லாம் அம்மா என்கிட்ட சொன்னாங்க.. இந்த அஞ்சு மாசத்துக்குள்ள லக்ஷ்மணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்கன்னா எனக்கும் அதுக்கப்புறம் பிரச்சினை இல்லாம இருக்கும் அண்ணி..” என்றாள் அவள்..
“ஓகே.. அப்புறம் எதுக்கு லேட் பண்ணிக்கிட்டு.. வா உடனே பேசிடலாம்..” என்றவள் அந்த வீட்டிலிருந்த எல்லோரையும் வரவேற்பறைக்கு அழைத்தாள்..
“ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் உங்க எல்லாரையும் கூப்பிட்டு இருக்கேன்.. நான் ஊர்மி கல்யாணத்தை பத்தி பேச தான் உங்க எல்லாரையும் இங்க வரவழைச்சேன்.. ஊர்மி ஒருத்தரை விரும்புறா.. அவரை உடனே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறா.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அவ விரும்பறவருக்கும் அவளுக்குஅ நிச்சயதார்த்தம் பண்ணி மூணு மாசத்துல கல்யாணத்தை முடிச்சுடலாம்ன்னு நினைக்கிறேன்.. நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க?”
மார்க்கண்டேயன் சட்டென தன் இடத்தை விட்டு எழுந்தார்..
“என்ன நெனச்சிட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு ஆடுவியா? ஏன் அவளுக்கு அம்மா அப்பான்னு நாங்க இல்ல.. நாங்க எல்லாம் என்ன செத்தா போய்ட்டோம்..? அவளுக்கு எப்போ யாரை எப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்களுக்கு தெரியும்.. நீ இதுல தலையிடாதே.. அவ எங்க பொண்ணு..”
“ஓகே.. கரெக்ட்.. அவ உங்க பொண்ணு.. நான் தலையிடல.. ஆனா அவ உங்களுக்கு மட்டும் பொண்ணு இல்ல இல்ல..? அத்தைக்கும் பொண்ணு தானே..? இந்த விஷயத்துல அத்தை முடிவு எடுக்கலாம் இல்ல..? அவங்க முடிவு என்னன்னு கேளுங்க.. அவங்க முடிவும் அதே தான்னா அப்புறம் ஊர்மியோட விருப்பத்தை பத்தி நாம பேசலாம்.. முதல்ல அவங்க முடிவை கேட்கலாம்..”
சொன்னவள் தாமதிக்காமல் சகுந்தலாவின் பக்கம் திரும்ப சகுந்தலா “ஊர்மி.. யாரடி லவ் பண்ற..?” என்று நேரடியாக தன் மகளிடம் கேட்டார்..
“அம்மா.. அது வந்து.. நான் நம்ப அகாடமியில வேலை செய்றாரு இல்ல லட்சுமண்..”
அவள் சொல்லி முடிக்கவில்லை “அந்த அனாதை பயலை தான் காதலிக்கிறியா நீ.. ஒன்னும் இல்லாத அந்த பயலுக்கு உன்னை கட்டி வைக்கணுமா? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்..”
“எதுக்கு நீங்க ஒத்துக்கணும்..? அவ மேஜர்.. அவ யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவ தான் முடிவு பண்ணனும்.. சரி.. நீங்க சொன்ன பாயிண்ட்டுக்கே வரேன்.. அத்தையை கேட்கலாம்.. நீங்க ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்க.. இப்போ ஊர்மி ஒரு மாப்பிள்ளையை பார்த்து வச்சிருக்கா.. இந்த ரெண்டு பேர்ல யாருக்கு ஊர்மியை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அத்தை சொல்லட்டும்.. ஏன்னா ஒரு அம்மாவா ஒரு பொண்ணா அத்தையை விட இந்த விஷயத்துல பர்ஃபெக்ட்டா வேற யாராலயும் முடிவு எடுக்க முடியாது.. சொல்லுங்க அத்தை.. சக்கரவர்த்தி அங்கிள் பையனை உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்களா? இல்ல லட்சுமணை உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்களா..?”
“அவ லக்ஷ்மணை விரும்புறானா அவரையே கல்யாணம் பண்ணிக்கட்டும்.. என் பொண்ணு நல்லா படிச்சிருக்கா.. அவ பெரிய வேலைக்கு போய் பெரிய ஆளா வரணும்.. சக்கரவர்த்தி குடும்பத்துக்குள்ள போனா அவளை என்னை மாதிரியே வீட்டில அடைச்சு வச்சுடுவாங்க.. வேண்டாம்.. அவ லட்சுமணையே கல்யாணம் பண்ணிக்கட்டும்..”
சகுந்தலா சொல்லி முடித்ததும் மார்க்கண்டேயரோ “சக்கு.. என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? உனக்கு அவ்வளவு ஏத்தமாயிருச்சா?” என்று கர்ஜித்தபடி அந்த வயதிலும் பாய்ந்து சகுந்தலாவை அடிக்கவே வந்திருந்தார் அவர்..
ஓங்கிய அவர் கையை அழுத்தமாக பிடித்தார் சகுந்தலா.. அவர் கையை உதறி தள்ளியவர் “போதுங்க.. என்னை அடக்கி அடக்கி என் வாழ்க்கையை கெடுத்தது போதும்.. என் பொண்ணாவது அவ விருப்பப்படி வாழட்டும்ங்க.. அவளுக்கு என்ன விருப்பமோ அந்த வேலையை செய்யட்டும்.. அவள வீட்டுக்குள்ள ஒரு கூண்டுக்குள்ள என்னை மாதிரி அடைச்சு வைக்க வேண்டாம்.. இந்த முறை நீங்க என்ன செஞ்சாலும் சரி.. நீங்க என்னை வீட்டை விட்டே போக சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.. உங்களை விட்டு பிரிஞ்சு போக கூட நான் தயாரா இருக்கேன்.. ஆனா என் பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போக விட மாட்டேன்.. அவ நிச்சயமா அவ விரும்பற லக்ஷ்மணை தான் கல்யாணம் பண்ணுவா..”
தைரியமாக பேசினார் சகுந்தலா.. அவ்வளவுதான் அப்படியே ஒடுங்கி அமர்ந்து விட்டார் மார்க்கண்டேயன்.. அதுவரை தன் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாத சகுந்தலாவா இது.. எப்படி அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று அப்படியே பிரமித்து போய் உறைந்து அமர்ந்து விட்டார் அவர்..
இப்போது சகுந்தலா அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் கையைப் பிடித்த படி “ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க.. நீங்க இதுவரைக்கும் என்னை எப்படி வச்சிருந்தீங்க? இந்த ஒரு மாசம் நான் எப்படி இருந்திருக்கேன்? இந்த ஒரு மாசமா நீங்க சகுந்தலாவா மாறி இருக்கீங்க.. ஆனா நான் மார்க்கண்டேயனா முழுசா மாறலைங்க.. இப்பவும் உங்ககிட்ட அனுசரணையா தான் பேசிகிட்டு இருக்கேன்.. நான் உங்களை மாதிரி மாறினா என்ன நடக்கும்னு யோசிச்சு பாருங்க.. எதுக்கெடுத்தாலும் கோபம்.. கையில கிடைச்ச பொருளை தூக்கி எறியறது.. வீட்டில் ரூல்ஸ் போடுறது.. மத்தவங்க எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தான் எல்லாத்தையும் செய்யணும்.. அவங்க எப்படி எப்படி இருக்கணும்னு நீங்க முடிவு பண்றீங்க.. பிள்ளைங்களை கூட ஒரு வயசுக்கு மேல இப்படித்தான் இருக்கணும்னு சொல்ல முடியாதுங்க.. அப்படி இருக்கும்போது நீங்க உங்க பொண்டாட்டி மருமக மக எல்லாரையும் ஆட்டி வைக்கிறீங்க.. உங்களை மாதிரி நான் மாறினா உங்களால ஒரு நாள் கூட என்னோட வாழ முடியாது.. ஆனா 50 வருஷமா உங்களோட நான் வாழ்ந்து கிட்டு இருக்கேன்.. என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா அது முழுக்க நீங்க மட்டும் தாங்க நெறைஞ்சி இருக்கீங்க.. என்னை என்னால பாக்கவே முடியல.. இப்படி ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு நான் வாழாமலே இருந்திருக்கலாம்ன்னு தோணுதுங்க.. ஆனா இந்த ஒரு மாசமா நான் சகுந்தலாவா வாழ்ந்து இருக்கேன்.. மார்க்கண்டேயனோட சகுந்தலாவா இல்ல.. வெறும் சகுந்தலாவா சந்தோஷமா சிறகடிச்சு பறக்கிற பறவை போல வாழ்ந்து இருக்கேன்.. இந்த வாழ்க்கை தாங்க சந்தோஷம்.. உங்க பொண்ணு.. என்ன இருந்தாலும் அவ உங்க இளவரசி இல்லையா? அவ சுதந்திரமான பறவை மாதிரி வாழணும் இல்லையா? அவ ஒரு கூண்டுக்குள்ள அடைஞ்சு வாழணும்னு நினைக்கிறீங்களா? இப்ப நீங்க சொல்லுங்க.. அவளுக்கு ஏத்த மாப்பிளை யாரு?”
அந்தக் கேள்விக்கு அவரால் லக்ஷ்மன் என்பதை தவிர வேறு பதிலை சொல்ல முடியவில்லை.. முற்றிலுமாக அந்த நிமிடம் வேறு மனிதராக மாறிப் போயிருந்தார் மார்க்கண்டேயன்.. அவருக்கு எல்லாமே புரிந்தது.. தான் செய்த தவறுகள் கொடுமைகள் அடக்குமுறைகள் எல்லாமே அந்த வீட்டில் அளவுக்கு மிஞ்சியதாக இருந்தது என்று புரிந்து போனது..
“ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க.. இந்தர் ப்ருத்வி ஊர்மி மூணு பேருமே உங்களுக்கு மரியாதை கொடுக்குறாங்க.. மதிப்பு கொடுக்கிறாங்க.. உங்களை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்கறதில்லை.. உங்களை அவமானப்பட விடறதில்லை.. ஆனா இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு நெனைக்கறீங்க.. அவங்க உங்க மேல வச்சிருக்கற பாசமும் அன்பும் தான் காரணம்னா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்.. ஆனா அப்படி இல்லைங்க… நீங்க அப்பா.. அந்த ஸ்தானத்துக்கு குடுக்குற பயம் கலந்த மரியாதை மதிப்பு மட்டும் தான் அது… ஆனா உங்களுக்கு அந்த மரியாதையை உங்க மேல அவங்க வச்சிருக்கற அன்புனாலயும் பாசத்துனாலயும் குடுக்கணும்னு நான் நெனைக்கிறேன்.. நீங்க அவங்களை கொடுக்க வைக்கணும்.. அதுல தான் அப்பாவா உங்களோட வெற்றி இருக்கு.. உங்களுக்கு புரியுதா?”
சகுந்தலா முதல் முறையாக இவ்வளவு நீளமாக தன் வீட்டில் அதுவும் மார்க்கண்டேயரிடம் பேசி இருக்கிறார்..
இப்போது மார்க்கண்டேயருக்கு பேச வார்த்தைகளே இல்லை.. சகுந்தலா இவ்வளவு நாள் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே அமைதி இப்போது மார்க்கண்டேயரிடம் குடி கொண்டது..
“என்னங்க எதுவுமே பேச மாட்டேங்கறீங்க..?”
சகுந்தலா கேட்க மார்க்கண்டேயன் அவள் கைபிடித்து அதில் முகத்தை புதைத்துக் கொண்டவர் உடல் அழுகையில் குலுங்கியது.. பதறி போனார் சகுந்தலா.. அவர் தலையை வருடி முகத்தை நிமிர்த்த “என்ன பேசட்டும் சக்கு.. என்னை மன்னிச்சுடு.. உன் வாழ்க்கையை இத்தனை நாளா நரகமாக்கிட்டு இருந்து இருக்கேன்.. அன்னைக்கு என் கையில் அந்த சூடு பட்டப்போ உன் கையில இருந்த தழும்பை பார்த்ததும் நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்றது அந்த நிமிஷமே எனக்கு புரிஞ்சிருச்சு.. உன் வார்த்தையால என் மண்டைல அடிச்சு ஒரே நிமிஷத்துல என்னை எனக்கு புரிய வெச்சுட்ட.. நான் முழுசா மாறிட்டேன்னு உனக்கு தெரிய வைக்க இதை தவிர எனக்கு வேற வழி தெரியல.. லக்ஷ்மண் வீட்டுக்கு சம்மந்தம் பேச எப்ப போகலாம்னு.. சொல்லுங்க மேடம்.. நீங்க ஆர்டர் பண்ணுங்க.. நான் அதை செய்யறேன்.. அடுத்த மாசம் லக்ஷ்மனுக்கும் ஊர்மிக்கும் நிச்சயதார்த்தம் நடத்திடலாமா..?”
அவர் சொன்னதைக் கேட்ட அனைவருமே மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார்கள்.. ஆனால் அப்போதும் ஊர்மியின் முகத்தில் அதீத உற்சாகம் இல்லை.. சாதாரணமாகத்தான் இருந்தாள்.. இந்தப் பெண்ணுக்கு இன்னும் என்னதான் வேண்டும் என்று யோசித்தாள் வில்விழி..
ஏதோ இன்னும் சரியில்லை என்று தோன்ற அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று நேராகச் சென்று அவளை தனியாக அழைத்துக் கொண்டு போய் “ஊர்மி.. உனக்கு என்னதான் பிரச்சனை? ப்ளீஸ்.. என்கிட்ட உண்மையை சொல்லு.. லட்சுமணை நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன பிறகும் உன் முகத்தில சந்தோஷமே இல்லை.. என்ன தான்மா ப்ராப்ளம்..? என்னை உன் ஃப்ரெண்டா நினைச்சுக்கோ.. நிச்சயமா என்னை தாண்டி விஷயம் வெளியில போகாது.. ஏதாவது சீரியஸ் விஷயமா? சொன்னா தானே அதுக்கு ஏதாவது சொல்யூஷன் இருக்கான்னு பார்க்கலாம்..”
வில்விழி கேட்க “அண்ணி நீங்க இல்லனா இந்த கல்யாண பேச்சே நடந்திருக்காது.. அதனால உங்க கிட்ட சொல்றேன்.. நான் யுஎஸ் ல இருந்தப்போ சக்கரவர்த்தி அங்கிளோட பையன் என்னை மீட் பண்ணான்.. அவன்கிட்ட எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு நான் சொன்னேன்.. ஆனா அவன் எங்க வீட்ல எங்க அப்பா டிசைட் பண்ணறது தான் நடக்கும்..உங்க அப்பாவும் எங்க அப்பாவும் சேர்ந்து முடிவு பண்ணியாச்சு.. இனிமே நம்ம என்ன நினைச்சாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டின்னு சொல்லிட்டு போறான்.. அது மட்டும் இல்லாம அங்க அவன் லைஃப்பே வேற மாதிரி இருக்கு அண்ணி.. அவனுக்கு நிறைய பொண்ணுங்களோட..”
“என்ன..? என்ன சொல்ற” விழி கேட்க..
“ஆமா அண்ணி.. அவன் என்னை கூப்பிட்டு பேசினது ஒரு கிளப்ல தான்.. அந்த கிளப்லயே நிறைய பொண்ணுங்க அவனோட ஒரசிக்கிட்டு அவன் கூட ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு அவனுக்கு முத்தம் கொடுத்துக்கிட்டு பார்க்கவே அருவருப்பா இருந்தது.. போதா குறைக்கு அங்க ஒரு பொண்ணோட சேர்ந்து அவன் ஒரு ரூமுக்குள்ள வேற போயிட்டான்..”
அதிர்ந்து போனாள் வில்விழி..
“இந்த பையனுக்கா உன்னை கட்டி வைக்கணும்னு நினைச்சாரு உங்கப்பா.. அது சரி.. அவருக்கு என்ன தெரியும்.. அந்த பையன் எப்படின்னு.. அவன் யூஸ்ல இருந்து இல்ல இந்த அக்கிரமம் பண்ணிக்கிட்டு இருக்கான்..” என்றவள்..
“சரி.. அதான் அந்த பிராப்ளம் இப்ப சால்வ் ஆயிடுச்சு இல்ல..? நீ இப்ப லக்ஷ்மணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு உங்க அப்பாவே சொல்லிட்டாரே.. இன்னும் எதுக்கு மூஞ்சை உம்முன்னு வச்சிருக்கே.. இனிமே அந்த பையன் எப்படி இருந்தா நமக்கு என்ன..?”
அவள் கேட்க “இல்ல அண்ணி.. அது மட்டும் காரணம் இல்லை.. அன்னைக்கு கிளப்ல யாரோ எனக்கு மயக்க மருந்து கொடுத்து தப்பா எதோ நடந்திருக்கு அண்ணி..”
அதைக் கேட்டு சிலையாய் ஸ்தம்பித்து போனாள் வில்விழி..
“என்ன சொல்ற ஊர்மி..?” என்று அதிர்ந்து போய் கேட்டவளிடம் “ஆமா அண்ணி.. என் வயத்தில ஒரு குழந்தை வளருது.. இங்க வரதுக்கு முதல் நாள் ஒரே மயக்கமாவும் வாமிட்டிங்காவும் இருந்துச்சு.. ஊருக்கு வரணுமேன்னு ஹாஸ்பிடல் போனேன்.. அங்க செக் பண்ணப்போ நான் பிரக்னண்டா இருக்கேன்னு தெரிஞ்சுது அண்ணி..”
வாயில் கையை வைத்து அப்படியே உறை பனியாய் உறைந்து போனாள் வில்விழி..
“என்னம்மா சொல்ற? உன் வயத்தில குழந்தை வளருதா..?”
“அதுக்கு அப்பா யாருன்னு தெரிஞ்சாலாவது சட்டையை பிடிச்சு அவனை நியாயம் கேட்கலாம்.. அப்பா யாருனே தெரியாத குழந்தையை அபார்ட் பண்ணிடலாம்னு தான் நினைச்சுட்டு நான் இங்க வந்தேன்.. லக்ஷ்மண் கிட்டயும் அதை பத்தி தான் பேசினேன்.. லக்ஷ்மண் தான் இந்த குழந்தையை நான் அபார்ட் பண்ண வேணாம்னு சொன்னாரு.. அவரு இந்த குழந்தைக்கு அப்பாவா இருக்கேன்னு சொன்னாரு.. அவருக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை.. நான் எப்படி இருந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார்.. என் வயிறு வெளிய தெரியறதுக்கு முன்னாடி இந்த கல்யாணம் நடக்கணும்னு தான் மூணு மாசத்துக்குள்ள சீக்கிரம் இந்த கல்யாணத்தை பண்ண சொன்னேன் அண்ணி..”
“சரி நீ சொன்னபடியே இது யாருக்கும் வெளியே தெரிய வேண்டாம்.. யாருன்னே தெரியாத எவனோ ஒருத்தனை தேடி வாழ்க்கையை தொலைக்கறதை விட நீ எப்படி இருந்தாலும் உன்னை ஏத்துக்குறேன்னு சொல்ற லக்ஷ்மணை கல்யாணம் பண்றது தான் சரி.. அன்னைக்கு நடந்ததை ஒரு கனவா நினைச்சு மறந்திரு.. மூணு மாசம் கூட தள்ளி போட வேண்டாம்.. அடுத்த மாசமே நிச்சயம் பண்ணி அதுக்கு அடுத்து ஒரு வாரத்திலேயே கல்யாணத்தையும் வச்சுக்கலாம்.. நான் மாமா கிட்ட பேசுறேன்” என்றாள் வில்விழி..
சொன்னபடியே எல்லோரிடமும் பேசி அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தாள்..
இதனிடையே விஷ்வாவையும் அவன் நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள்.. கைதுக்கு பிறகு அவர்கள் சொன்னபடி எந்த காணொளியையும் சோசியல் மீடியாவில் போடவில்லை.. வித்யாவுக்கு அப்படி என்றாவது போட்டு விடுவார்களோ என்று பயம் இருந்தாலும் இன்று போடாதவர்கள் இனிமேலா போடப் போகிறார்கள் என்று அந்த பயத்தை கைவிட்டாள்..
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது.. சகுந்தலா மிகவும் திறமையாக வாதாடி அந்த வழக்கை வித்யாவுக்கு சாதகமாக மாற்றி இருந்தார்.. ஊர்மிளாவின் நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து வரும் நாளை அந்த வழக்கில் தீர்ப்பு நாளாக அறிவித்தார் நீதிபதி..
நிச்சயதார்த்த வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன..
அம்பு பாயும்..
எல்லாம் பொன் வசந்தம்…(24)
written by Competition writers
அத்தியாயம் 24
காதலில் ஒருவருக்கு ஒருவரை பிரிய காரணம் ஒருவர் மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டும் தான்
திலீப்பின் தாய் சொல்வது போல அவனை விட்டு நான் விலகி இருந்தாலாவது அவன் சந்தோஷமாக வாழ்வானா என்று அப்போது அவளுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.
திலீப்பினை மருத்துவமனையில் அட்மிட் செய்தவர்கள் நீ இங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட அவள் மருத்துவமனைக்கு செல்லவில்லை .
ராஜு பாய் கொடுத்த பென்டிரைவை பார்த்திருந்தால் இருவருக்குள்ளும் இப்படிப்பட்ட நிலை வந்து இருக்காது என்பது தான் நிதர்சனம்.
அதனால் ஒரு முடிவு எடுத்தவள் யாரிடமும் பேசாமல் அமைதியாக மதியின் திருமணத்தை காண சென்றிருந்தாள்..
மதி – என்ன அக்கா நீ மட்டும் வந்திருக்க. எங்க மாமா என்று குசலம் விசாரிக்க நடந்த அனைத்தையும் அவளிடம் ஒன்று விடாமல் கூறினாள்.
மதி இதை பெற்றோரிடம் தெரிவிக்க உடனே அவர்கள் மருத்துவமனைக்கு புறப்பட்டு மாப்பிள்ளை எப்படி உள்ளார் என்பதை கவனித்தார்கள்.
இப்போது கொஞ்சம் அவனது நிலை பரவாயில்லை என்றனர் மருத்துவர்கள். பின் மோகனும் செல்வியும் அரும்பாடு பட்டு தனது மாப்பிள்ளையான திலீப்பை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் திருமணத்தை காண வேண்டும் என்று.
திலீப்பும் தன் தந்தை தாயிடம் சரி என்று ஒப்பு கொண்டதனால் அவனை அங்கே அழைத்து வந்தார்கள்.
அவனுக்கு தேவைப்பட்ட உணவு தேவைப்பட்ட தண்ணீர் என்று அனைத்தையும் அவன் முகத்தைப் பார்க்காமல் சில்வியா தான் அவனுக்கு உதவினாள்.
அவளின் இந்த ஒதுக்கம் அவனது மனதிற்குள் ஏதோ சுணுக்கு என்று வலியை கொடுத்தது.
என்னடி என் மூஞ்ச பார்த்து பேச முடியலையா.
அவனும் அவளிடம் சீண்டிப் பார்த்தான்.
அவளிடம் இருந்து அதற்கும் எந்த பதிலும் இல்லை.
ஏய் ஏய் என்று அவன் அழைத்தும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
என்னடி உன் வீட்டுக்கு வந்து இருக்கனு உனக்கு ஏகத்தாலமா போச்சா என்றதற்கு மட்டும் இல்லை என்று பதில் அளித்தாள்.
பொத்தாம் பொதுவாக அவள் பதில் அளிக்கவும் அவனுக்கு வருத்தமாக இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறான் பின்பு எதற்காக இந்த வருத்தம். அவள் தன்னிடம் பேசாமல் இருப்பதால் ஏன் இந்த முக வாடல் சில்வியாவின் மனசாட்சி அவளிடம் பேசியது.
அவனின் காதல் இப்போது சில்வியாவின் புறம் திரும்பி உள்ளது என்பதை கூட அறியாத பேதை அவன்.
தயவு செஞ்சு சாப்பிட்டு அமைதியா படுங்க என்று மட்டும் கூறியவளை ஏன் இவ்வளவு அமைதியா பேசுற என்று அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
என்ன தான் அவன் கேள்வி எழுப்பினாலும் அதெல்லாம் அவளது செவிக்கு எட்டவில்லை. அவளுடைய செவியில் அவனது தாய் பேசிய வார்த்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒழித்துக் கொண்டிருந்தது.
அவள் அமைதியாக இருக்கவும் இதற்கு மேல் அவளிடம் கேட்கக் கூடாது என்று அவனும் உணவை மட்டும் உண்டு விட்டு அமைதியாகி விட்டான்.
மறுநாள் விடியல் கோலாகலமாக ஆரம்பித்தது. மணப்பெண் பட்டுப்புடவையில் அலங்கரிக்கப்பட்ட பூமாலைகளோடு சேர்த்து பூ போல் வந்து கொண்டிருந்தாள்.
மணமகனும் பெண் அவளின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தான்.
இவ்விருவரும் இந்நேரத்திலும் கூட திலீப்பையும் சில்வியாவில் சேர்த்து வைக்க போட்டிருந்த திட்டத்தை நிறைவேற்ற போகிறார்கள்.
எல்லோருக்கும் வணக்கம் என்று வணக்கம் செய்தவள் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும் நடிகர் திலீப் தான் எங்க அக்காவோட வீட்டுக்காரர்னு. தொலைக்காட்சி மூலமா மட்டுமே ஒரு செய்தியா கேள்விப்பட்ட உங்க எல்லோருக்கும் இது ஒரு நிகழ்வா செய்யனும்றது தான் எங்களுடைய ஆசை.
அதனால எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்காங்க என்று அவள் ஆரம்பித்தாள்.
அப்பொழுது என்ன நடக்கிறது என்று புரியாமல் திலீப் வியந்து நின்றான்.
திலீப் மாமா அவர்கள் வெறும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ஸில் மட்டுமே தனது அக்காவை திருமணம் செய்து உள்ளார். வேள்வி போட்டு குண்டங்களை தாண்டி எல்லாம் இதுவரை அவர் செய்ததில்லை என்பதனால் எங்கள் திருமணத்தோடு இன்று அவளுக்கும் திருமணம் நடக்கும் என்றாள் மதி.
இது சில்வியா மற்றும் திலீப் கூட அறியாத உண்மை.
மோகனும் செல்வியும் தனது மாப்பிள்ளையிடம் மன்றாடி கேட்டுக்கொள்ள அவனும் சரி என்று வேறு வழி இல்லாமல் ஒப்பு கொண்டான்.
சில்வியாவும் சரி என்று ஒப்புக் கொண்டாள் தனது கல் மனதோடு.
அனைவரின் முன்பும் இவ்வாறு கேட்டால் அவர்களால் தடுத்துவிட இயலாது என்று தருண் சொன்ன ஐடியா தான் இது. அவன் சொன்னது போலவே அன்று இருவரும் ஒரு சேர தங்களது துணையை தன்னவளாக்கி கொண்டார்கள்.
இதோ திலீப் அவளின் வாடிய முகத்தை கண்டதோடு அவன் முகம் சுருக்கத்தோடும் அந்த தாலியினை அவள் கழுத்தறுகில் கொண்டு சென்று மூன்று முடிச்சை கட்டி முடித்தான் .
மறுபுறம் தருணும் தனது காதலியை இப்போது மனைவியாக்கி கொண்டிருந்தான். அவளின் இந்த இன்முகத்தோடு இனிமே வாழ்க்கையில நமக்கு சந்தோஷம் மட்டும்தான் டா என்று அவனது செவியில் கூறினாள்.
ஆமா ஆமா என்று தலையாட்டி அவன் மூன்று முடிச்சையும் போட்டு முடித்தான்.
மற்ற சடங்குகளும் எந்த தங்கு தடையும் இன்றி முடிந்து விட அந்த இரு திருமணமும் சந்தோஷமாக முடிந்தது.
செல்வியும் மோகனும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மோகன் தான் மருமகனின் அருகில் வந்து நீங்க இதுவரைக்கும் தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்து இப்பயாவது சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்ன மாமா சொல்றீங்க?
உங்க பட தயாரிப்பாளர் ராஜு பாய் கொடுத்த பென் டிரைவை நீங்க பார்தீங்களா? இல்லையா? மாப்பிள்ளை என்று அவர் நினைவு கூறும்போது தான் ராஜு பாய் கொடுத்த பென் டிரைவை அதே இடத்தில் போட்டு வந்த நினைவு வந்தது திலிப் குமாருக்கு.
திலீப்பின் முன் வந்த மதியும், கண்டிப்பா நீங்க என் மேல கோவமா இருக்கீங்கன்னு தெரியும் மாமா. ஏன்னா உங்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையவே சீரழிச்சது நான் தான்.
இந்த பென் டிரைவ்ல இருக்க விஷயம் எல்லாமே உண்மைதான். நீங்க சில்வியா அக்காவை ஒவ்வொரு முறை பேசும்போது அதை என்னால தடுக்க முடியாது. ஏன்னா அவள் என்கிட்ட இதை யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிகிட்டாள்.
இப்ப கூட நான் அந்த விஷயத்தை சொல்லல உங்களுக்கு பென் டிரைவர் மூலமா தான் தெரியப்படுத்துறேன். என்ன மன்னிச்சிடுங்க மாமா. உங்க வாழ்க்கையில எந்த ஒரு பெண்ணை உச்சத்துல வச்சிருந்தீங்களோ அவங்களோட தங்கச்சி இப்படி பண்ணுவாங்கன்னு நீங்க நினைச்சு இருக்க மாட்டீங்கிறது எனக்கு புரியுது. ஆனால் நடக்க வேண்டியது நடந்து போச்சு.
இனிமே நடக்க இருக்கிறது நாமெல்லாம் நடத்திக்கனும் மாமா.
சில்வியா மேல எந்த தப்பும் இல்ல. நீங்க புரிஞ்சிருப்பீங்கன்னு நம்பி உங்க காலில் நான் விழுந்து கெஞ்சி கேக்குறேன் என்னையும் மன்னிச்சிடுங்க மாமா.
அவன் அந்த பென் டிரைவை பார்த்திருந்தால் தானே புரியும்.
அந்தோ பரிதாப சூழ்நிலை அவனுக்கு.
செல்வியும் கூட தனது இளைய மகளுக்காக அவளை மன்னிச்சிடுங்க தம்பி என்றார்.
இவனும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பித் தவித்தான்.
இவர்கள் பேசுவது எல்லாம் எனக்கு புரிய வேண்டும் என்றால் அந்த பென்டிரைவை நான் தேடி கண்டுபிடித்தாக வேண்டும்.
வேகவேகமாக சில்வியாவினை அழைத்துக் கொண்டு திலீப் தனது படப்பிடிப்பு ஏரியாவிற்கு புறப்பட என்ன வீட்டில் விட்டுருப்பா ரொம்ப டயர்டா இருக்கு என்று சொன்னாள்.
சரி என்று ஆமோதித்தவனும் அவளை வீட்டில் விட்டுவிட்டு படப்பிடிப்பு ஏரியாவிற்கு நுழைந்தான்.
அந்நேரம் பார்த்து வேறு ஒரு படத்தில் முக்கிய சீன் எடுக்கப்பட்டு கொண்டிருந்ததனால் ஒரு மணி நேரம் அவனை அமர்ந்திருக்கும் படி சொன்னதனால் படப்பிடிப்பு நிலைமை புரிந்த காரணத்தினால் அவனும் அமைதியாக அமர்ந்தான்.
படப்பிடிப்பு முடிந்ததும் துலாவ ஆரம்பித்தவனுக்கு மூன்று மணி நேரம் தேடிய பின்னரும் அது கிடைக்கவில்லை .
என்ன திலீப் சார் என்னை நியாபகம் இருக்குதா என்று ஒரு பெண் பேசும் குரல் கேட்க அவன் நிமிர்ந்து பார்த்தான் .
அவள் சாட்சாத் மாலினி தான்!
அதுக்குள்ளேயே இப்படி தெருவுல பொருக்குற அளவுக்கு வருவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல.
உன்கிட்ட இந்த மாதிரி பேசி நேரம் கடத்துறதுக்கு எனக்கு டைம் இல்ல.
அப்போ இப்ப எந்த பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கலாம் என்று ஏதோ ஒரு பொருளை தேடிட்டு இருக்கீங்க.
நீ உன் வேலைய பாத்துட்டு கிளம்பு சும்மா என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்காத.
அச்சச்சோ ஒரு நல்ல பட நடிகர் இப்படி கண்ட இடத்துல கைவைத்து துலாவுறாரே. அவருக்கு என் கையில் இருக்கிறதை கொடுத்து உதவி பண்ணலாம்னு நினைச்சு உங்க கிட்ட வந்து நான் நின்னது தப்பா போச்சு போல என்று அவள் சொல்ல அவள் கையில் இருந்த பென் டிரைவை அவன் பார்த்தான்.
ஏய் அது என்னுடையது கொடு என்று சொல்ல,
இந்த பென் டிரைவ் உங்களதுன்னு என்ன பெயரா எழுதி வச்சிருக்கு.
இப்ப நீதானே கொடுக்கணும்னு சொல்லிட்டு இருந்த.
பட் நீங்க அதுக்கு எனக்கு ஒரு ஃபேவர் பண்ணுமே
என்ன என்பதைப் போல அவன் உறுத்து கவனிக்கவும் முதல் படம் உங்களுக்கும் எனக்கும் மோதல்ல் ஆரம்பிச்சிருச்சா, அந்தப் படத்துல நான் சொன்ன அத்தனையும் உண்மைன்னு நீங்க ஒத்துக்கணும் .
முக்கியமா என்கிட்ட நீங்க தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுனீங்கனு நான் சொன்ன விஷயம் உண்மைதான்னு நீங்க ஒத்துக்கிட்டா மட்டும் தான் இந்த பென் டிரைவை உங்ககிட்ட என்னால தர முடியும்.
திஸ் இஸ் ரெடிகுலர்ஸ் என்றான் திலீப்.
வேணாட்டி போங்க என்று பென் டிரைவை தனது உடையுள் ஒளித்துக்கொண்டாள் மாலினி.
இவளை என்னதான் பண்றது நேரம் காலம் புரியாமல் என்று பற்களை நரநரவென்று கடித்தவன் கண்டிப்பா உனக்கு நான் அந்த மாதிரி ஒரு வீடியோ தயார் பண்ணி அனுப்பி விடுறேன் தயவு பண்ணி இப்ப அந்த பென் டிரைவை என்கிட்ட குடு என்றான்.
சாரி சார் நீங்க சொன்னதெல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் சில்வியா என்கிற மடச்சி இல்லை. “மாலினி”. இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சரில் ரொம்ப முக்கியமான இடத்தை பிடிச்சவ. உங்களோட சித்து விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது.
எல்லாம் பொன் வசந்தம்…(23)
written by Competition writers
அத்தியாயம் 23
காதலித்தவன் கண் கலங்கும் போது எந்த பெண்ணாலும் அதன் வலியை ஏற்றுக்கொள்ளவே இயலாது.
திலீப் திலீப் ஏன் இப்படி அழறீங்க. ச்சே அவர் மறந்து இருந்த விஷயத்தை நானே கிளறி விட்டுட்டேனே. திலீப் அழுகாதீங்க ப்ளீஸ். நீங்கள் அழுவது என்னால ஏத்துக்க முடியல.
திலீப்பின் பெற்றோர்களும் அவனை சமாதானம் செய்து அவனது அறைக்கு கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு தங்களின் அறைக்கு சென்று அடைக்கலம் ஆகி கொண்டார்கள்.
அவன் இறந்ததில் இருந்து திலீப் மீண்டும் வருவதற்கு எத்தனை துயரப்பட்டான் என்பதை அறிந்ததினால் மேலும் அவனை எந்த கேள்வியும் கேட்காமல் அனுப்பி வைத்தார்கள்.
நம்ம பையங்கிட்ட இப்படி பேசி இருக்க கூடாதுங்க. அவனுக்கு மறுபடியும் பழசு எல்லாம் ஞாபகம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். அதான் இப்படி அழறான்.
திலீப் ஒன்றும் மற்ற சகோதரர்கள் போல அடம்பிடித்து, அடித்தும், சந்தோசமாகவும் வாழ்ந்த குழந்தைகள் அல்ல.
பெற்றோர் இருவரும் வேலைகள் என்று சென்றபோதில் வீட்டு வேலைகளையும் அவர் பெற்றோர்களுக்கு உதவுவதிலும் மும்முரமாகி தனது சிறு பிள்ளைத்தனங்களை இழந்த குழந்தைகள்.
கேசவ் எப்பொழுதும் அண்ணனுடன் மட்டுமே அத்தனை நேரத்தையும் செலவிடுவான்.
காலை கண் விழிப்பது முதல் இரவு உறங்கும் சமயம் வரை அனைத்திலும் திலீப்பும் கேசவ் மட்டுமே அந்த வீட்டில் நிறைந்து இருப்பார்கள்.
உணவு சமைப்பது பாத்திரம் கழுவுவது வாசல் கூட்டுவது வாசல் துடைப்பது வீட்டினை சுத்தம் செய்வது துணி துவைப்பது தண்ணீர் பிடிப்பது சமையல் வேலைகளில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி அதை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று அனைத்து வேலைகளையும் அந்த சின்ன பிஞ்சுங்களே செய்து கொண்டு பெற்றோர்களுக்கு உதவியாக இருந்ததன் பலன் தான் இப்போது அவர்கள் இத்தனை பெரிய பணக்காரர்களாக நிற்க காரணம்.
அவர்கள் நடுத்தர வர்க்கம் குடும்பத்தினரை விட கீழ் நிலையில் இருந்து இப்பொழுது பணக்கார குடும்பத்தின் செழுமையில் செழித்து இருப்பவர்கள்.
அரும்பாடு பட்டு அனைவரிடமும் அவச்சொல் வாங்கி இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு வருவதற்கு இவர்கள் பட்ட அத்தனை துயருமும் இப்போது திலீப் என்ற நாயகனால் மாற்றப்பட்டது.
குழந்தைகளை அப்போது வளர்ப்பதற்காக அவர்கள் பட்ட பாடுகளை இன்னும் அவன் மறவான்.
இருந்தும் தன் தம்பியை கொன்ற பாவி நான் தான் என்று அவன் நொடிக்கு ஒரு முறை சிந்திப்பதற்கு காரணம் பிளட் டெஸ்ட் எடுப்பதற்கு அழைத்துச் சென்றது அவனே . அதனால் அவனை குற்றம் சாட்டிக் கொள்கிறான்.
அவனின் இந்த நிலையை கண்டு தன்னை காயப்படுத்திக் கொண்டாள் சில்வியா.
என்னை மன்னிச்சிடு என்னை மன்னிச்சிடு இப்படி நீ அழாதே என்னால தாங்க முடியல என்று அவனது கையை எடுத்து தன் முகத்தில் அடித்துக் கொண்டாள்.
உன்னை சொல்லி தப்பில்லை டி. எல்லாம் என்னால நடந்தது தான் இன்று அவளிடம் மட்டும் அன்று நடந்ததை மறக்காமலும் மறைக்காமலும் கூறிவிட்டான்.
இப்படிப்பட்டவனையா தம்பியை கொன்ற பாவி என்றேன் என்று அவளும் நொந்து கொண்டாள்.
என்ன மன்னிச்சிடுங்க நீங்க உண்மையிலேயே ரொம்ப தங்கமான மனுஷன் என்று சொல்லிய அடுத்த கணமே உன்னோட இந்த போலியான ஆறுதல் எனக்கு தேவையில்லை.
நீ சொன்னது போலவே தான் நான் மனசாட்சியே இல்லாத ஆள். ஏன் அப்படி சொல்றன்னு பாக்குறியா இந்த பெட்ல எண்ட்ல ஒரு பேப்பர் இருக்கும் பாரு போய் எடுத்துட்டு வா.
அவளும் அவன் சொன்னதை போலவே வேகமாக அதைச் சென்று எடுத்து வர, இந்த பேப்பர்ல சைன் பண்ணி கொடு என்று காட்டினான்..
என்ன என்பதைப் போல பார்த்த அவளுக்கு அதில் டிவோர்ஸ் என்று இருக்க, தலை சுற்றி விட்டது.
என்ன இது என்று அவள் அழுத்தமாக கேட்க,
ஏன் உனக்கு படிக்க தெரியாதா?
தெரியுது ஆனா இப்ப கூட இதுக்கு நமக்கு என்ன அவசியம்.
என்ன அவசியமா உன்னை எனக்கு இப்போ புடிச்சிருக்குன்னு யார் சொன்னா?
இப்போ மட்டும் இல்லை எப்பவுமே உன்னை எனக்கு சுத்தமா பிடிக்காது. ஒரு ப்ரண்டா என் லவ்வரோட தங்கச்சியா இருந்து நீ எப்ப என்னுடைய காதலியா மனைவியா மாறனும்னு ஆசைப்பட்டாயோ அப்பவே உன் மேல எனக்கு வெறுப்பு வந்துருச்சு.
அதுக்காக நீ செஞ்ச துரோகத்தை மறந்துட்டு உன் மேல காதல் வலையில் சிக்கிற ஹீரோ இல்ல நான்.
நான் சொல்றது எப்ப தான் நீ புரிஞ்சுக்க போற திலீப்.
உன்னை ஏன்டி நான் புரிஞ்சுக்கணும். முட்டாள் மாதிரி பேசுன நஷ்ட ஈடு வழக்கு பதிவு பண்ணிடுவன் உன் மேல என்றவனை வெட்டவா குத்த வா என்று முறைத்தாள்.
அப்போ அன்னைக்கு மத்தவங்க முன்னாடி என்ன சந்தோஷமா வச்சுக்கிட்டது எல்லாம் பொய்யா?
பொய்தான். அன்னைக்கு ஒரு நாள் நீ சந்தோசமா இருந்தியா. அதனால இனிமே வாழ்க்கை முழுக்க நீ கஷ்டப்படனும் இல்ல. அதுக்கு தான் இந்த டிவேர்ஸ் பேப்பர்.
சைன் பண்ணி கொடுடி. ரொம்ப ஓவரா சீன் போடாத இதுக்கு தான நீ காத்திட்டு இருந்த. இப்ப என்னமோ நீ விரும்பாதத நான் பண்ணிட்ட மாதிரி ஆக்ட் பண்ற. நீயும் கூட நடிக்க வந்ததால் இப்போ பயங்கரமா நடிக்கிற என்று அவன் பாட்டிற்கு அவளை பேசிக்கொண்டே இருந்தான்.
நீ என்ன வேணா பேசு திலீப் ஆனா நான் இதில் சைன் பண்ண போறது இல்லை.
ஏன்?
அதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை.
ஓ நான் சந்தோசமா நிம்மதியா வாழ கூடாதுன்னு நீ நினைக்கிற. அதுக்காக தான் இதுல சைன் பண்ண மாட்டேங்குற. எப்படி சில்வியா இப்படி ஒரு கேவலமான புத்தி உனக்கு என்று அப்போதும் அவளை திட்டினான்.
நீ என்னை எப்படியாவது பேசி இதுல சயின் வாங்கலாம்னு நினைக்கிற ஆனா கண்டிப்பா அதை பண்ண மாட்டேன்.
அச்சோ கடவுளே இந்த பொண்ணுக்கு பொறுமையா சொன்னா புரியவே புரியாது போல. இங்க பார் நான் உன்னை இந்த உலகத்திலேயே அதிக அளவு வெறுக்கிறேன். அதிக அளவு வெறுக்குற உயிரும் நீதான். அதிக அளவு கோபப்பட வைக்கிற ஜென்மமும் நீதான். அதிக அளவு என் சந்தோஷம் பாதிக்கிறது உன்னால் தான் என்று அவன் ஒவ்வொரு வார்த்தையும் உன்னால் உன்னால் என்று கூறும் போது முழுவதுமாக உடைந்து போனாள்.
அப்படின்னா உனக்கு என் மேல ஒரு துளி கூடவா அன்பு இல்லை என்று மீண்டும் அவள் கேட்க, யார்ரா இவள் ஓட்டைப்பானையில் தண்ணீர் போன மாதிரி ஒரே கேள்வி கேக்குறா.
இல்லை இல்லை அன்பு இல்லை,அக்கறை இல்லை காதல் இல்லை, கல்யாணம் பண்ணினேங்கிற பெயரில் எந்த பாசமும் இல்லை. முதலில் என்னை விட்டு ஓடிடு. அதான் எனக்கு வேணும். உன் மூஞ்ச இனிமேல் என் வாழ்நாளில் நான் பார்க்க கூடாது.
திலீப்
இப்ப ஷைன் போட போறியா இல்லை நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகட்டுமா?
எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.
எதுக்கு சைன் பண்றதுக்கு ரெண்டு நிமிஷம் ஆகுமா
அதுக்கு இல்ல சைன் பண்ணலாமா வேணாமானு யோசிக்கிறதுக்கு.
ஓ சரி என்னை விட்டு எப்படியும் ஒழிய போற எடுத்துக்கோ எத்தனை நாள் டைம் வேணுமோ அத்தன நாள். நாள் கணக்கு மாதமா மாறுறதுக்குள்ள இதுல நீ சைன் போட்டு என்னை விட்டு ஓடி போயிடு.
நீ கேட்ட அனைத்தும் நடைபெறும் என்று மனதிற்குள் நினைத்தவள் எச்சிலை விழுங்கி கொண்டு அவனைப் படுத்து உறங்கு என்று சொல்லிவிட்டு தனது உடையை மாற்றிக் கொண்டு வந்து அவளும் படுத்து உறங்கினாள் தரையில்.
ஒரே அறையில் தான் இருக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு இடத்தில். காதலில் அவளோ முழுவதும் அவனை மட்டுமே நிரப்பி உள்ளாள். காதல் என்று ஒன்று அவளின் மீது மட்டும் அவனுக்கு இல்லவே இல்லை.
அடுத்த நாள் அந்த படத்தின் இறுதி காட்சி அழகுற முடிந்தது. சாதித்து முடித்த பெண்ணிற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவிப்பது போல கதை முடிக்கப்பட்டது.
இந்த ரோல் உனக்கு பர்ஃபெக்ட்டா இருக்குதும்மா என்று சொன்ன ராஜு பாய் திலீப்பிடம் ஒரு பென்டிரைவ் வினை கொடுத்தார்.
நீ இந்த பென் டிரைவரை முதலில் பார் உன் வைஃப் மேல எந்த தப்பும் இல்லன்ற உண்மைய புரிஞ்சுக்கோ. இதை பார்த்தால் ஆவது புரியும் சில்வியா எந்த தப்பும் பண்ணலனு புரியும்.
எங்கு சென்றாலும் அவளது ஒப்பாரியை போட்டு அவள் பக்கம் அனைவரையும் இழுத்து விடுகிறாள் என்று அந்த பென் டிரைவை எடுத்து அவர் அறியா வண்ணம் தூக்கி எறிந்து விட்டு சென்றான் இதற்காக அவளிடம் கத்த,
அவளோ அனைவரிடமும் பாராட்டு பெற்றுக் கொண்டிருந்தாள். சில்வியா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொன்ன மறு கணமே அனைவரிடமும் விடை பெற்றவள் அவனிடம் வந்து நின்றாள்.
சொல்லு திலீப் மனசு மாறிட்டியா என்று அவள் ஆர்வத்துடன் கேட்க,
மனசு மாற்ற அளவுக்கு நீ அப்படி எதுவும் பண்ணியது இல்லையே.
உன் ராமாயண கதையை எல்லார்கிட்டயும் சொல்லி என்னை இராவணனா மாத்தலாம்னு முடிவு பண்ணி எல்லார்கிட்டயும் எதையாவது சொல்லிட்டு இருக்கியா என்று பத்து நிமிடமாக சத்தம் இட்டான்.
இவன் பேசுவது எதுவும் புரியாமல் அவள் அமைதியாக நின்றாள்.
இவன் என்ன உளறுகிறான் என்று உள்ளுக்குள் நினைத்தாலும் அவனிடம் சொல்லி மேலும் அவன் கோபத்தை அதிகப்படுத்த விரும்பவில்லை ..
அவள் அமைதி காத்துக் கொண்டே இருக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போய் விட உடனே அங்கிருந்து புறப்பட்டவன் தங்களின் வீட்டிலும் வந்து அடைப்பட்டுக் கொண்டான் அவனது அறையில்.
இவளால எப்படி வைஷூ இப்படியெல்லாம் இருக்க முடியுது. இவ்வளவு கேவலமான வேலையை செஞ்சுட்டோம்னு கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் என் கூடவே சேர்ந்து நடிச்சுட்டு எல்லார்கிட்டயும் நாடகம் ஆடிட்டு இருக்கா. தயவு செஞ்சு என்னை உன்கிட்டே கூட்டிட்டு போய்டு. இப்பேற்பட்ட ஜென்மத்து கூட இனிமே ஒரு நொடி கூட என்னால இருக்க முடியாது என்று அவன் வந்த வேகத்தில் சமையலறை இருந்து ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு தான் தனது அறைக்குள் வந்தான்.
அந்த கத்தியினை கொண்டு தனது கைகளில் வருக் வறுக்கு என்று கிழித்துக்கொள்ள ரத்தமும் ரூமினை தாண்டி வெளியே வந்தது.
கதவை சாய்ந்து அமர்ந்து வைஷுவின் போட்டோவை பார்த்து பேசிக்கொண்டு இருந்தவன் மயங்கி விழுந்தான் அதே இடத்தில்.
எதற்காக இப்படி பேசி விட்டு வந்தான் என்று தெரியாத சில்வியா அவன் பின்னரே ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்ந்தால் கொஞ்சம் தாமதமாக.
வேகவேகமாக மாடிப்படி ஏறியவளுக்கு மனதில் ஏதோ பாரமாக தான் இருந்தது. இவன், இப்போது என்ன கத்த போகிறானோ என்ற பயத்தில் தான் அவள் மேலே ஏறி வந்தாள்.
ஆனால் மாடிப்படி ஏறி அறையின் வெளியே ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை பார்த்து அஆ என்று கத்தினாள்.
பதற்றத்தில் அவள் கத்திய சத்தத்தினால் வீட்டிலிருந்த திலீப்பின் பெற்றோரும் ஒரு வேலையாட்களும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
ஏன்மா இப்படி கத்துனே என்று சொல்லிக் கொண்டே வந்த திலீப்பின் தந்தை மாடிப்படி முழுவதும் ஏறி முடித்ததும் ரத்தம் கசிவதை பார்த்து விட்டுப் பதறி தவித்து போய்விட்டார்.
பின்பு அவனது தாய் வந்து அதிர்ச்சியில் நின்று இருக்க, திலீப்பின் தந்தை வேகவேகமாக கதவினை அடித்து உடைத்தார்.
தன் மகனுக்கு இந்த சோதனை எதற்கு. எல்லாம் இவளால் என்று சில்வியாவை பார்த்து முறைத்து கொண்டு இருந்தார் அவனது அம்மா.
அம்மா அவரு ஆக்டிங் முடிஞ்சி என்கிட்ட சத்தம் போட்டுட்டு வந்தாருமா. நானும் ஏன் இப்படி சத்தம் போட்டார் என்று கேட்கலாம்னு வேக வேகமா ஆட்டோ புடிச்சு வரதுக்குள்ள இப்படி ரத்தம் வெளியே வந்துட்டு இருக்கு. பயமா இருக்குமா யாராவது ஏதாவது என் வீட்டுக்காரரை பண்ணிட்டாங்களோனு.
வேற யாருடி பண்ண போறாங்க. உன்னால தான் என் மகனே இந்த முடிவுக்கு வந்திருப்பான். தயவு செஞ்சு அவனை விட்டு போயிடு. அவன் வாழ்க்கையில அவன் சொல்ற மாதிரி அவனுக்கு பிடிச்சு ஏழரை நீ. உன்னால் அவன் இழந்த சந்தோஷம் எத்தனை தெரியுமா? அன்னைக்கே நீ அவனை சத்தம் போட்ட போதே உன்னை அறைந்து இருந்தால் நீ திருந்தி இருப்பியோ என்னவோ!
தயவு செஞ்சு என் மகனோட வாழ்க்கையிலிருந்து ஒட்டு மொத்தமா விட்டுட்டு போயிடு.