Novels

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥

பரீட்சை – 47 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை பார்ப்பதற்கு  ஏதோ ஒரு  காரணம் சொல்லி  தினம் தினம்  கண் முன் வந்து  நின்றாள் காரிகை அவள்..   கண்களில் காதலோடு  நிற்கும்  உள்ளம் களவாடிய கள்ளி அவளை அருகில் கண்ட பிறகு  தள்ளி வைக்க காளை மனம்  துணியவில்லை..   ஆனாலும் வேறு  வழி இல்லை ஆடவன் இவனுக்கு..  ஆசையோடு வருபவளை  அடுக்கடுக்காய்  வன்மொழிகள் பேசி  வசை பாடி வெளியேற்ற முயன்றேன்  […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19

Episode – 19   மறு நாள் பொழுது விடிந்ததும், வழக்கம் போல அவள் ரெடியாகி வெளியே வர,   அங்கு அவளுக்கு முன்பாக ரெடியாகி வந்து,   அவள் அமர்ந்து இருக்கும் கல்லில் அமர்ந்தபடி, அவளின் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான் தீரன்.   தமயந்தியோ, அவனைப் பார்த்து விட்டு,வீட்டில் இருந்த கடிகாரத்தை ஒரு முறை திரும்பி சந்தேகமாக பார்க்க,   “ம்க்கும்….” என குரலை செருமியவன்,    “நீ சரியான நேரத்துக்கு தான்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18

Episode – 18   அன்று முழுவதும் அவனின் நினைவுகள் அவளை சுற்றியே அலைபாய,   ஒரு கட்டத்தில் மனதைக் கட்டுப் படுத்த விரும்பாது, அதன் போக்கிலேயே விட்டவன்,   அடிக்கடி பி.ஏவை அழைத்து, அனைத்தும் சரியாக நடக்கிறதா என கேட்டு அறிந்து கொண்டான்.   அவரோ, ஒரு கட்டத்தில், “சார், நீங்க ஒரு நாளும் எந்த விஷயத்திற்கும் இவ்வளவு பதட்டப்பட்டது இல்லையே. ஒரு விஷயத்த  ஒரு தடவை சொல்லிட்டு விட்டுடுவீங்களே. ஆனா இன்னைக்கு ஏன் சார்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18 Read More »

நாணலே நாணமேனடி – 21

அன்று, ஸ்டோருக்குள் நுழைந்த சற்று நேரத்துக்கெல்லாம் சேமிக்கப்படாத ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, சம்யுக்தாவுக்கு. பொதுவாக அவள் வேலை நேரத்தில் அலைபேசியுடன் சரசம் புரியும் ரகத்தை சேர்ந்தவள் அல்ல. திருமணத்துக்கு முன்பு என்றால், பெரும்பாலும் துணிக்கடைக்குள் நுழையும் போதே அவளின் அலைபேசி சைலன்ட் மோடில் உறங்கிக் கொண்டிருக்கும். தான் அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை என்றால், அடுத்த கணம் வீட்டிலிருந்து வித்யாவுக்கு அழைப்பு செல்லும் என்றபடியால் பயம், பதற்றம் எதுவுமில்லை. ஆனால் இப்போது அவ்வாறு அலட்சியமாக இருக்க

நாணலே நாணமேனடி – 21 Read More »

நாணலே நாணமேனடி – 20

காலச் சக்கரம் முன்னும் பின்னுமாக சுழன்று, யுக்தா-நந்தன் வாழ்வில் மூன்று மாதங்களை தன் சுழற்சிக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது. இடையில் ஒருநாள், முதல் மாத சம்பளத்தை மொத்தமாக கொண்டு வந்து யுக்தாவுக்கு நீட்டி, அவளின் மனம் குளிர்வித்த சாந்தனா, மறுநாள் விடியலில் அவினாஷின் குடும்பத்தினரை எந்தவொரு முன் அறிவித்தல், ஏற்பாடும் இன்றி வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாள். முன்னாளில், அவள் சம்பளத்தைக் கையில் பொத்தியதும் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா! கண்களுக்குச் சொந்தமில்லை.’ என ஐயத்தில் மயங்கிய

நாணலே நாணமேனடி – 20 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 12

அருவி : 12 அதைக் கேட்ட ஜேபி, “மற்றைய போலிஸ்காரனுங்க போல இவனை நினைச்சிடாதீங்கடா…. இவன் ரொம்ப மோசமானவன். சரக்கு பத்திரமா நான் சொன்ன இடத்துக்கு போகணும்… ஏதாச்சும் தப்பு நடந்திச்சி உங்களை உயிரோட விடமாட்டன்….” என்றார்.  “இல்லை சார், விவரம் தெரிஞ்சதில இருந்து இந்த தொழில் பண்ணிட்டு இருக்கிறம்… எங்களுக்கு தெரியாது. நீங்க கவலையே படாதீங்க… நீங்க சொன்ன வேலையை கச்சிதமாக முடிச்சிடுறம்….” என்றவர்கள் லாரியை எடுத்துக் கொண்டு சென்றனர்.  செக் போஸ்டில் அமுதனுடன் நின்று

அருவி போல் அன்பை பொழிவானே : 12 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 11

அருவி : 11 அறையைப் பார்த்தவனுக்கு தனது அறைதானா என்று இருந்தது. அவளது வேலைதான் என்று நினைத்தவன் சிரித்துக் கொண்டு, குளித்துவிட்டு வெளியே வந்து, சமையலறைக்குச் சென்று, காப்பி போட்டு இருவருக்கும் எடுத்து வந்து, மேசையில் வைத்துவிட்டு கார்த்தியாயினியை எழுப்பினான்.  அவன் எழுப்பியதும் கண்களைக் கூட அவள் திறக்காது, “அத்தை மன்னிச்சுடுங்க.. உடம்பெல்லாம் களைப்பா இருந்திச்சி அதுதான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டன் அத்தை…” என்று பயந்து கத்திக் கொண்டு எழுந்தாள். அவளைப் பார்த்த யுவராஜ்க்கு மிகவும் பாவமாக

அருவி போல் அன்பை பொழிவானே : 11 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39

பேராசை – 39 போகும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளது விழிகளோ உயிர்ப்பைத் தொலைத்து இருந்தன.   போவதற்கு வழியும் தெரியாது இதில் தனியாக வழி தவறிச் சென்று காட்டு விலங்குகளிடம் சிக்கி உயிர் போவதை விட தானே உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? என்று நினைத்தவள் மனதில் விக்ரம் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற நினைவு கூட வர வில்லை.   அதே விரக்தி மனநிலையில் விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த ஒரு பெரு

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 8 பகலவன் தன் ஆட்சியை கதிர்கள் மூலம் ஆட்கொண்டு வரும் அவ்வேளையில் இளஞ்செழியன் மெது மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். கண்களில் சூரிய ஒளி பட்டதும் கூஷத் தொடங்கின. தலை லேசாக வலிக்க தொடங்கியது. எழுந்து மெதுவாக இருந்து, தலையை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்த வண்ணம் சிறிது நேரம் அப்படியே இருந்தான். அப்போது தான் அவனுக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. ‘நான் மெத்தையில் உறங்காமல் ஏன் கீழே வெறும் தரையில் படுத்து இருக்கின்றேன்…’

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 10

அருவி : 10 அன்னைக்கு அந்த மீனாட்சி ஹாஸ்டலுக்கு முன்னாடி இருந்து எனக்கு ஒரு மோதிரம் கிடைச்சிது. அந்த மோதிரத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறன். எங்கனு ஞாபகம் இல்லை. நான் நேற்று செழுப்பூர் போகும் போது சிட்டிக்கு வெளியே *****இந்த நம்பர் உடைய கார்ல இருந்து ஒருத்தன் மூட்டையை எடுத்து அந்த குப்பைக்கு பக்கத்தில போட்டான். நீ சொல்றதை பார்த்தா, இந்த பொண்ணோட டெட்பாடியைத்தான் அவன் அங்க போட்டிருக்கிறனான் போல…. முதல்ல அவனை பிடிக்கணும்.. அப்புறம்தான் நமக்கு

அருவி போல் அன்பை பொழிவானே : 10 Read More »

error: Content is protected !!