முக்கியமான வேலை இருந்ததால் நேரமே எழுந்து கொண்ட அர்ஜுன், முதலில் தேடியது தன் மனைவியை தான்.
மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அவள். தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் அருகில் வந்த அர்ஜுன், வேகமாக அவளது நெற்றியை தொட்டு பார்த்து,
“இன்னும் காய்ச்சல் இருக்கே” என்று வருத்தத்துடன் கூறியவன், விலகி இருந்த போர்வையை நன்கு அவள் மேல் போர்த்தி விட்டு, தனது காக்கி சீருடையில் ஆயத்தமாகி கீழே வந்தான்.
வேகமாக நடந்து வரும் தன் மகனை கண்டதும் ப்ரீத்தா,
“வா பா” என்று புன்னகை முகமாக அவனை உணவு உண்ண அழைக்க, உடனே மறுத்த அர்ஜுன்,
” சாரிமா முக்கியமான வேலை இருக்கு நான் இப்போ கிளம்புறேன். அப்புறம் ம்மா நேத்து நைட்டு ஜுவாலாக்கு ரொம்ப காய்ச்சல்” என்று சொன்னதுமே பதறிய ப்ரீத்தா, “அச்சோ என்னை எழுப்பி இருக்கலாமே ” என்க,
” அம்மா ரிலாக்ஸ்” என்று தன் தாயை சமாதானம் படுத்திய அர்ஜுன்,
” நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்ல, நானே டேப்லெட் கொடுத்து தூங்க வச்சிட்டேன். இப்போ காய்ச்சல் லைட்டா இருக்கு, நல்லா தூங்கிட்டு இருக்கா அதான் நான் எழுப்பல அவளா எந்திரிக்கும் போது எழும்பட்டும், அப்போ அப்போ மட்டும் போய் பார்த்துக்கோங்க, அவ எழுந்ததும் எப்படி இருக்கான்னு என்கிட்ட சொல்லுங்க. பீவர் கன்டின்யு ஆனா நானே வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் ” என்று சொல்லவும் மகனை புன்னகையுடன் பார்த்த ப்ரீத்தா,
” இதத்தான்டா நான் எதிர்பார்த்தேன். ஒரு பொண்ணு முதல்ல தன் ஹஸ்பண்ட் கிட்ட எதிர்பார்க்கிறதே கேர் அண்ட் ரெஸ்பெக்ட் தான். எப்பவும் இதே அக்கறையோட அவள பாத்துக்கோ. அது போதும் மத்ததெல்லாம் சீக்கிரமா சரியாகிடும். ” என்றார்.
அதற்கு , ” அக்கறையும் மரியாதையும் எனக்கு எப்போதுமே ஜூவாலா மேல உண்டுமா.” என்ற தன் மகனை புன்னகையுடன் அனுப்பி வைத்த ப்ரீத்தா நேராக பூஜை அறை நோக்கி வந்தவர்,
” சீக்கிரம் அர்ஜூன் மனசு மாறி ஜூவாலாவோட சந்தோஷமா, வாழனும் . எல்லாமே சீக்கிரம் சரியாகனும், அப்போ தான் மதுவை மறுபடியும் வீட்டுக்கு அழைச்சிட்டு வர முடியும்.
இங்கிருந்து போனதுல இருந்து மது என்கிட்ட பேசவே இல்ல. எனக்கும் அவ கிட்ட பேசவே குற்ற உணர்ச்சியா இருக்கு, சந்தியா அவள நல்லா பாத்துக்குவா தான், ஆனாலும் வேறொருத்தர் வீட்ல அவள தங்க வைக்கிறதுல எனக்கு விருப்பமே இல்லை.
சீக்கிரம் எல்லா பிரச்சினையும் சரி பண்ணி குடுங்க. மதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் ” என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டார்.
@@@@@@@@@
கார் மருத்துவமனை வளாகத்தை அடைந்ததும் தன் இருக்கையில் இருந்து இறங்கி வந்த வீரா மதிக்கு கதவை திறந்து விட ,
“அதுக்குள்ள வந்துட்டோமா?!” என வீராவிடம் கேட்டபடி கீழே இறங்கினாள் மதுமதி .
அவனோ, “ஆமா மது வந்துட்டோம் வா ” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் .
காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து விடுதலை பெற்ற உணர்வோடு நடந்த மதுவால் , அந்த அசுர வனத்தில் இருந்து தாம் தப்பித்து வந்துவிட்டோம் என்பதை இன்னுமும் நம்ப முடியவில்லை. சுகந்திர காற்றை மகிழ்ச்சியோடு சுவாசித்தவள்,
‘இது எந்த ஏரியா. ?சிட்டி மாதிரி தெரியலையே இங்க இருந்து எப்படி ஊருக்குள்ள போறது.? வீராகிட்ட இருந்து தப்பிக்க முடியுமா ? ஒருவேளை மாட்டிக்கிட்டா அந்த அரக்கன் என்ன பண்ணுவான்னு தெரியலையே?’ என ஆதித்யாவை விட துரியனை எண்ணி இன்னுமே மனதில் பயம் கொண்டவள் மறுநொடியே,
‘இதே மாதிரி வாய்ப்பு அடிக்கடி வராது மதி ஏதாவது பண்ணி தப்பிச்சிரு .’ என தன்னை தானே தேற்றியவள்,
‘ஒரு ஃபோன் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று சிந்தித்தபடி வீராவுடன் நடக்காமல் நின்ற இடத்திலே தேங்கி நிற்க ,
வீரா தான் “வா மது” என்று அவளது சிந்தனையை கலைத்தபடி அவளது கையை பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்து சென்றான் .
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்த ரிசெப்ஷனிஸ்ட் அவர்களை மரியாதையுடன் அழைத்து சென்று விஐபி அறையில் அமரச்செய்து குடிப்பதற்கு சூடான காஃபியை பரிமாறியவள் ,
“சார் இன்னும் அஞ்சு நிமிஷத்துல டாக்டர் வந்துருவாங்க. வேற எதுவும் வேணுமா சார்” என்று பணிவுடன் கேட்டாள்.
“நோ தேங்க்ஸ், டாக்டரை சீக்கிரமா வர சொல்லுங்க” என்றான் வீரா
“ஓகே சார்” என்றபடி அந்த அறையில் இருந்து அந்த பெண் வெளியேறிய மறுநொடி மது வீராவிடம் ,
“உன்னை இவங்களுக்கு தெரியுமா!”ஆச்சரியத்துடன் கேட்டாள் .
“ம்ம் தெரியாம எப்படி? இது எங்களோட ஹாஸ்ப்பிட்டல்.அதாவது ஆதித்யாவோட ஹாஸ்ப்பிட்டல். நம்ம ஆளுங்களுக்கு ஏதாவது அடிபட்டா இங்க தான் வருவாங்க. இங்க இருக்கிறவங்க எல்லாருமே நம்ம ஆளுங்க தான். ஸோ வெயிட் பண்ணவே தேவையே இல்லை சீக்கிரமா பார்த்துட்டு வீட்டுக்கு போய்டலாம் சரியா” என்றான் வீரா.
‘அச்சோ இது தெரியாம போயிட்டே மறுபடியும் அங்கேயா !?’ மதுமதியின் மனம் மலர்வதற்குள் வாடியது .
“ஏன் ஒருமாதிரி இருக்க ரொம்ப வலிக்குதா?” என்று வீரா கேட்கவும்,
“ஹெலோ வீரா” என்றபடி அங்கே வந்த ஆண் மருத்துவர்.வீராவின் கைகளை குலுக்கியபடி ஒரு சில வார்த்தைகள் பேசியவர், வீராவை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு மதுமதிக்கு வைத்தியம் பார்க்க தொடங்கினார்.
மதுமதியை பரிசோதித்த மருத்துவர் வீராவை உள்ளே அழைத்தார் .
“என்னாச்சு டாக்டர் சாதாரண தலைவலி தானே ?” அக்கறையோடு கேட்டான் .
“கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க இந்த மருந்து சாப்பிட்டா.ப்ளட்க்கும் நல்லது. தலைவலியும் சரியாகிரும் ” என்றவர் மருந்து சீட்டை பணிப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வீராவிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் மதுவோ வீராவிடம்,
” மருந்து வாங்கனுமே அவங்களே சீட்ட எடுத்துட்டு போறாங்க” என்றதும், அவளைப் பார்த்து புன்னகைத்த வீரா,
” பிரச்சனை இல்ல மது அவங்களே எல்லாம் வாங்கிட்டு வந்துருவாங்க” என்க, மதுவோ தலையில் இடி விழுந்த நிலையில் அமர்ந்திருந்தாள்.
வீரா மருந்து வாங்க செல்லும் இடைவெளியில் அவனை திசை திருப்பி விட்டு தப்பித்து செல்லலாம் என்று இருந்தவளுக்கு, இந்த விடயம் அதிர்ச்சியை கொடுக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினாள்.
தான் எண்ணியது நடக்கவில்லை என்றதுமே பதறிய மதுவால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சட்டென்று யோசிக்க முடியாமல் போக, வீராவோ பணிப்பெண் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு மதுவையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
“ரொம்ப வலிக்குதா மது சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம், டேப்லெட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு சரியா ” என்ற வீராவிடம் சரி என்பதாய் தலையாட்டிய மதுவுக்கு, மீண்டும் அதே குகைக்குள் மாட்டிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணமே கோபத்தை கொடுக்க, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் திடீரென்று தோன்றிய சிந்தனையில் முகம் மலர,
“வீரா யலைட் பிளாசாக்கு மட்டும் போகணும் கொஞ்சம் முக்கியமான திங்க்ஸ் வாங்கணும், போய்ட்டு வீட்டுக்கு போலாமே ” என்றாள். அதைக் கேட்டு வண்டியை ஓரமாக நிப்பாட்டிய வீராவோ,
” அங்கையா? அது சிட்டிக்குள்ள போகணும் மது, அவ்ளோ முக்கியமான திங்க்ஸா என்ன? இங்க எல்லாம் வாங்க முடியாதா” என்று கேட்டான்.
” அது லேடிஸ் விஷயம் ரொம்ப முக்கியம் அந்த ப்ராண்ட் வேற எங்கேயும் கிடைக்காது ப்ளீஸ், முக்கியம் வீரா ” கெஞ்சி கேட்டாள்.
“ஓ” வீராவோ யோசனையுடன் மதுவை பார்த்தவன், சில நொடிகள் கழித்து,
“சரி மது இவ்வளவு சொல்ற வாங்கிட்டே போய்டலாம் ” என்க மதுவோ மகிழ்ச்சியுடன் தலையசைத்துக் கொண்டாள்.
மருத்துவமனையைப் போல இந்த மால் ஒன்றும் அவர்களுடையது அல்லவே, போதாக்குறைக்கு விடுமுறை நாள் வேறு, நிச்சயம் கூட்டம் அலைமோதும், எளிதில் தப்பித்து விடலாம், என்று தன் மனதிற்குள் திட்டம் தீட்டியவள், தன் திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தாள்.
@@@@@@@@
“என்னாச்சு இங்க வந்திருக்கோம்” என்ற ஜூவாலாவிடம்,
” எப்படியும் இந்த டிராஃபிக்ல வீட்டுக்கு போறதுக்கு ஒன் ஹவர் ஆயிடும், சாப்ட்டு முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம், உனக்கு டயர்டா எல்லாம் எதுவும் இல்லையே ” என்று வினவினான் அர்ஜுன், சோர்வா அதுவும் அவளுக்கா? அவனோடு நேரம் செலவிடுவது என்றால் ஜூவாலாவுக்கு சோர்வு கூட பறந்து போகுமே, உற்சாகமாக அவள் இல்லை என்பதாய் தலையசைக்க,
“அப்புறம் என்ன உனக்கும் இங்க உள்ள புட் கோட் ரொம்ப புடிக்கும்ல வா” என்றான் அர்ஜுன்.
@@@@@