அன்னமே 2
அத்தியாயம் 2 ஒரு கம்பில் எலுமிச்சம் பழத்தை கட்டி முடிஞ்சு வைத்திருந்தது. “தூஊ இவனெல்லாம் பெரிய மனுஷன்னு சுத்திக்கிட்டு இருக்கானே. இப்படியாப்பட்ட வேலையை பண்றதுக்கு குட்டையில விழுந்து சாவலாம்” கம்பை மண்ணிலிருந்து உருவி ஓரமாய் நட்டுவிட்டு நடந்தாள். “இதுக்கெல்லாம் பயந்தா எப்படி பொழைக்கறது?” வரப்பில் நடந்தவள், சும்மா போகாமல் கடலைச் செடியை வேரோடு பிடுங்கி ஒவ்வொன்றாய் சாப்பிட்டவாறே நடந்தாள். “ஏண்டி கருவாச்சி முள்ளு வேலி போட்டு வச்சிருக்கன், மந்திருச்சு கட்டிவச்சிருக்குது. எதுக்குடி உள்ள வந்த?” மண்வெட்டியை தோளில் […]