
Tag:
anti hero novels
காளையனை இழுக்கும் காந்தமலரே : 53
written by Thivya Sathurshi
காந்தம் : 53
“இங்க பாருங்க அம்மணி, என்னோட பொண்டாட்டி எப்பவும் யார் காலிலையும் விழக்கூடாது. அது நானாக இருந்தாலும். இனிமேல் இப்படி பண்ணி என்னை சங்கடப்படுத்தாதீங்க அம்மணி” என்றான்.
அவளும் சரி என்று சொல்லிவிட்டு, “ஏன் காளையா என்னை உனக்கு எதுக்காக ரொம்ப பிடிக்குது?” என்று கேட்டாள். அதற்கு அவள் நெற்றியில் முட்டியவன்,” இந்த காளையனை காந்தம் மாதிரி இழுத்துட்டா இந்த மலர் பிள்ளை “என்றான். அவளும்,” அப்போ காளையனை இழுக்கும் காந்தமலரா நான்” என்று கேட்க, “ஆமாடி” என்று அவளை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான்.
இருவரும் திகட்ட திகட்ட வாழ்ந்தனர். ஒருநாள் கம்பனியில் மலர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு லேசாக தலை சுற்றுவது போல இருந்து. இருந்தாலும் அன்றைக்கு முடிக்க வேண்டிய ஃபைல். அதனால் தலை சுற்றலையும் பொருட்படுத்தாமல் வேலை செய்து கொண்டிருந்தாள். சைன் வாங்க அவள் அறைக்கு வந்தான் கதிர். அவனிடம் ஃபைலை வாங்க கையை நீட்டியவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.
கதிர் பதறிப்போய் மலர்னிகாவை தூக்கி, அருகில் இருந்த சோபாவில் படுக்க வைத்து விட்டு, டாக்டருக்கு கால் பண்ணிவிட்டு, காளையனுக்கு போன் போட்டு மலர்னிகா மயங்கி விழுந்ததை சொல்லி வரச்சொன்னான். டாக்டர் வந்ததும் கதிர் வெளியே நின்றிருந்தான். வேகமாக வந்திருந்த காளையன் அறைக்குள் செல்ல முயன்றான். ஆனால் கதிர், “அண்ணே டாக்டர் உள்ளே செக் பண்ணிட்டு இருக்கிறாங்க” என்றான்.
அதற்கு காளையன், “அவ என்னோட பொண்டாட்டிடா தள்ளு,” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். அங்கே டாக்டர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் முழித்துக் கொண்டு இருந்தவள் காளையன் வந்ததும்,” காளையா சீக்கிரம் வா” என்றாள் கைகளை நீட்டியவாறு.
வேகமாக வந்து அவளது கைகளை பிடித்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்து நெற்றியில் முத்தம் வைத்தவன், “என்னாச்சிடா? காலையில சாப்பிட்டதானே” என்றான். அவளும் ஆமாம் என்று தலையசைக்க, டாக்டரிடம், “டாக்டர் என்னாச்சி டாக்டர்? “என்றான்.
அவரும், “என்ன என்னை செய்ய சொல்றீங்க மிஸ்டர். நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தா, நான் என்னனு நினைக்கிறது?” என்றார். அதற்கு அவன்,” நீங்க எங்கிட்ட கேளுங்க டாக்டர் நான் சொல்றன்.” என்றான். சஅவர், “அவங்களோட பெர்சனல் அவங்களுக்கே தெரியாது. உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றார்.
காளையன்,” ஐயோ டாக்டர் என்னனு நீங்க முதல்ல கேளுங்க “என்றான். அவரும் அவளது மாதவிலக்கு டேட்டை கேட்க, அவனும் அதை சொன்னான். கடைசியா எப்போ மாதவிலக்கு வந்திச்சு? என்ற கேள்விக்கு அவன்,” இந்த மாதம் இன்னும் வரலை டாக்டர்.. சரியாக சொல்லணும்னா நாற்பத்தைந்து நாட்கள் இருக்கும்” என்றான். இதைக் கேட்ட டாக்டர்,” ஹஸ்பண்ட்னா உன்னோட ஹஸ்பண்ட் மாதிரி இருக்கணும். என்றவர், சார் நீங்க அப்பாவாகப் போறீங்க. வாழ்த்துகள்” என்றார்.
இருவருக்கும் பேச்சு வரவில்லை. டாக்டரிடம் நன்றி சொல்லி, கதிரை அழைத்து விசயத்தை சொல்லி மகிழ்ந்தான். கதிரை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, மலர்னிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
அறையில் கொண்டு அவளை விட்டு விட்டு, கீழே வந்து ஜூஸ் போட்டு எடுத்துக் கொண்டு அவளின் அருகில் இருந்து குடிக்க குடுத்தான். அவளும் அதைக் குடித்து விட்டு கிளாஸை நீட்ட, அதை மேசையில் வைத்தவன், எதுவும் பேசாமல் அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டான். அவள் தலையை கோதிக் குடுத்தாள். காளையனின் கண்ணீர் அவள் நெஞ்சை நனைத்து. சட்டென்று அவன் முகத்தை நிமிர்த்தினாள்.
கண்கள் கலங்க இருந்தவனின் கண்ணீரை துடைத்து நெற்றியில் முத்தமிட்டவள், கன்னங்களை பிடித்து இதழோடு இதழ் கலந்தான். அவளும் அவனுக்கு இசைந்து குடுத்தாள். நீண்ட நேரத்தின் பின்னர் பிரிந்தவன், “இது பாப்பா தானே, என்னை சின்ன வயசில தொலைச்ச அம்மாதானே” என்றான். அவளும் ஆமாம் என்றவாறு அவனிடம் சாய்ந்து கொண்டாள்.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமாக மலர்னிகா அவளைப் போன்ற அழகிய பெண் குழந்தை ஒன்றைப் பெற்று காளையன் கைகளில் குடுத்து விட்டாள். அவளது கர்ப்ப காலத்தில் காளையன் மிகவும் கவனமாக மலர்னிகாவை பார்த்துக் கொண்டான். அவள் அவனிடம் எரிந்து விழுந்தாலும் சிரித்துக் கொண்டு அதை கடந்து விடுவான்.
ஊரில் காளையன் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. மலர்னிகா என்ன பெயர் குழந்தைக்கு வைக்கப்போகிறாள் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவள் குமுதா என்று காளையனின் தாயின் பெயரை வைத்தாள். அனைவருக்கும் அது சந்தோசமாக இருந்தது.
அதே நேரம் காமாட்சியும் நிஷாவும் மயங்கி விழ, அங்கிருந்த பாட்டி ஒருவர் இருவரின் கைகளையும் பிடித்து பார்த்து, “ரெண்டு பொண்ணுங்களும் உண்டாயிருக்கிறாங்க. வம்சம் மேலும் விருத்தியாகப் போகுது” என்று சொல்ல, வீடே சந்தோசத்தில் மிதந்தது.
அனைவரும் சந்தோசமாக இருக்க, நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்….
*****காந்தமலர் நிறைவுற்றது*****
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 52
written by Thivya Sathurshi
காந்தம் : 52
காலையில் எல்லோரும் சேர்ந்து காப்பி குடித்துக் கொண்டு இருக்கும் போது, கதிர், “ஆமா எங்க அண்ணனையும், கேசவன் அப்பாவையும் காணோம்” என்று கேட்டான். அங்கு தேவச்சந்திரன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வர, அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். குணவதி இருவருக்கும் காப்பி போட்டு எடுத்து வந்து குடுக்க, அதைக் குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தனர். அதிலிருந்து காளையனும் கேசவனும் உள்ளே வந்தனர். எங்க போயிருந்தீங்க என்ற மோனிஷாவின் கேள்வி பதில் சொல்லாமல் இருவரும் சிரித்தனர்.
காளையன் “பொறுமை, பொறுமை. மலர் என்கூட வா” என்றான். “எங்க? எதுக்கு? ” என்று கேள்வி கேட்டாள். அதற்கு அவன் சிரித்துக் கொண்டு கையை பிடித்து வெளியே கார் அருகில் அழைத்து வந்தான், மற்றவர்களும் என்னவென்று பார்க்க வெளியே வந்தனர். காளையன் மலர்னிகாவிடம், “அம்மணி நீங்க எங்கிட்ட இதுவரைக்கும் எந்த பொருளோ, எதுவுமே கேட்டதில்லை. எங்கிட்ட நீங்க கேட்ட முதல் விசயம், அதை நான் உங்களுக்கு குடுக்க முடியாதுனு எவ்வளவு தவிச்சேன்னு எனக்குத்தான் தெரியும்.
ஆனால் அதை இப்போ உங்களுக்கு தரமுடியும்னு நினைக்கிறப்போ, நெஞ்சே வெடிக்கிறளவு சந்தோசமா இருக்கு. ” என்றான். மலர்னிகாவிற்கு எதுவோ புரிவது போல இருக்க கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவனும் கண்களில் கண்ணீருடன் தலையசைத்தான். காரின் கதவை திறந்தான். மலர்னிகா நடுக்கத்துடன் காளையன் கைகளை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
காரில் இருந்து இறங்கினார் இத்தனை நாள் காளையனிடம் மலர்னிகா கேட்டுக் கொண்டு இருந்த இனியரூபன். அவரை பார்த்ததும் அனைவரும் வாயடைத்து நின்றனர். துர்க்கா மெல்ல நடந்து அவர் அருகில் வந்தார். தன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு நின்றவளிடம் குனிந்து, “அம்மணி கண்ணை திறந்து பாருங்க யாருனு” என்று சொல்ல, மெல்ல கண்களை திறந்து பார்க்க அவளின் தந்தை சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
துர்க்கா அவரை அணைத்துக் கொண்டு அழுதார். மலர்னிகாவும் அவரை அணைத்துக் கொண்டு அழுதாள். இதைப் பார்த்த அனைவர் கண்களும் நிறைந்தன. பின்னர் இனியரூபனுக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். கேசவன் என்னதான் இருந்தாலும் தன்னோட உயிர் நண்பனான இனியரூபனை கொலை செய்ய விரும்பவில்லை. அதனால் அவரை வீட்டின் கீழே உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தார். நேரத்துக்கு சாப்பாடு என்று அவருக்கு குறையில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
காலையில் காளையனுடன் சென்று அவரை இங்கே அழைத்து வந்தார். அப்படியே மலர்னிகாவின் சொத்துக்களை மீண்டும் அவள் பேரில் மாற்றி எழுதி அதை அவளிடம் குடுக்க, அவள் அதை வாங்கவில்லை. அவள் ஊருக்கு செல்ல விரும்புவதாக கூற, காளையன் அதை மறுத்து அவள் பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்று கூறினான், அதன் பின்னரே அவள் சம்மதித்தாள்.
இனியரூபன் உயிருடன் வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு நாட்கள் சென்னையில் இருந்து விட்டு அனைவரும் தேன்சோலையூர் சென்றனர். அங்கிருந்த மாரியம்மன் கோயிலில் ஊர் மக்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் படி, காமாட்சி முகேஷ், ஹர்ஷா நிஷா, திருமணத்தை நடத்தி வைத்தனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
அன்றிரவு காளையன் அணைப்பில் இருந்த மலர்னிகா காளையனிடம், “நீங்க எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கிறீங்க, நான் உங்களுக்கு எதுவும் பண்ணலையே, உங்களுக்கு ஏதாவது குடுக்கணும் நினைக்கிறன். ஆனால் என்ன தர்றதுனு தெரியலை. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் தர்றேன்” என்றாள்.
காளையன் அவளிடம், “நான் உங்கிட்ட எதிர்பார்த்து எதுவும் பண்ணலை. ஆனால் எனக்கு உங்கிட்ட இருந்து ஒண்ணே ஒண்ணு மட்டும் வேணும் ” என்றான். அவளும் என்னவென்று கேட்க,” எனக்கு உன்னை மாதிரியே அப்பாமேல பாசம் வைக்கும் குட்டி மலர்னிகாவை பெத்துக் குடு “என்றான். அவளும் சரி என்றாள். அவன் அவளைப் பார்த்து சிரிக்க, அதன் பின்னரே அவன் கேட்டது புரிய அவனிடம் அடைக்கலமானாள். அவள் காதோரம் குனிந்து கேட்டதற்கு அவள் வெட்கத்துடன் தலையசைத்து பதிலளித்தாள். இருவரும் இணைய இல்லறம் நடந்தேறியது.
அடுத்த நாள் ஹர்ஷாவுடன் நிஷாவும் ஊட்டிக்கு செல்ல, நீலகண்டன் ஊரிலேயே இருந்து விட்டார். முகேஷ் காமாட்சி சென்னை சென்றனர். கேசவனும் மோனிஷா சபாபதியும் ஊரில் இருந்தனர். சபாபதி இங்கேயே ஒரு பிஸ்னஸை ஆரம்பிக்கப் போவதாக கூறிவிட்டான். காளையன் மலர்னிகா மும்பை சென்றனர்.
பழையபடி மலர்னிகா கம்பனியை பொறுப்பேற்றாள். காளையனை பிரியாத கதிர் அவர்களுடன் சென்று, மலர்னிகாவிற்கு பிஏ ஆனான். காளையன் இவர்களை காலையில் கம்பனியில் விட்டு மதியம் சாப்பாடு சமைத்துக் கொண்டு உணவை உண்ண வைத்து விட்டு, பின்னர் மாலையில் மீண்டும் வந்து அவர்களை அழைத்துச் சென்றான். ஹர்ஷாவும் மலர்னிகாவும் அவனை பிஸ்னஸில் பார்ட்னராக சொல்ல மறுத்து விட்டான்.
மனைவியின் வளர்ச்சியை பார்த்து பெருமை அடைந்தான். கணவன் வீட்டு வேலைகள் மட்டுமே செய்கிறான் என்று அவனை மலர்னிகா எப்போதும் தாழ்த்தி பார்த்ததே இல்லை. இருவரிடமும் எந்த தாழ்வுணர்சியும் வரவில்லை. காளையனும் மலர்னிகாவும் அழகிய மனமொத்த வாழ்க்கை ஒன்றை வாழ்ந்தனர்.
மலர்னிகாவின் திறமைக்கு சான்றாக அந்த வருடத்தின் சிறந்த பிஸ்னஸ்வுமன் விருது மலர்னிகாவிற்கு வழங்கப்பட்டது. மேடையில் மனைவி வாங்கும் விருதை கீழே இருந்து கண்களில் பெருமையுடன் கைதட்டியவாறு பார்த்துக் கொண்டு இருந்தான் காளையன். அவள் காளையனைப் பற்றி பேசிவிட்டு கீழே வந்து, விருதை அவனிடம் குடுத்து விட்டு, அவன் காலில் விழுந்தாள். பதறியபடி அவளை குனிந்து தூக்கிவிட்டவன் எதுவும் பேசவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அறைக்குச் சென்றவன், குளித்துவிட்டு கோபத்துடன் வந்து பால்கனியில் நின்றான். மலர்னிகா வந்து என்னவென்று கேட்க, “எதுக்கு அம்மணி அத்தனை பேரு முன்னிலையில என்னோட கால்ல விழுந்தீங்க? உங்களை எல்லோரும் புகழ்ந்து பேசும்போது என்னோட கால்ல நீங்க விழலாமா?” என்றான்.
அவளும் சிரித்துக் கொண்டு, “நான் என்னோட புருஷன் கால்லதான் விழுந்தேன். நான் இப்படி உயர்ந்த இடத்தில இருக்க, என்னோட புருஷன்தானே காரணம். அதுதான். எத்தனை பேருக்கு உன்னை மாதிரி புருஷன் கிடைப்பாங்க. எனக்கு கிடைச்சிருக்கு. அதுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?” என்று கண்கலங்கியவளை இழுத்து அணைத்து முத்தம் வைத்தான். அவளும் அவன் முத்தத்தில் உருகி நின்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 51
written by Thivya Sathurshi
காந்தம் : 51
வெளியே வந்த டாக்டர்,” அவருக்கு இப்போ ஓகே. இனிமேல் கவலைப்பட தேவையில்லை. அவருக்கு அதிர்ச்சி அளிக்கிற எதுவும் சொல்ல வேண்டாம். அது அவரோட உயிருக்கே ஆபத்து. நீங்க நாளைக்கே வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம்” என்றனர். எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ராமச்சந்திரன் கண்விழித்ததும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர்.
அத்தனை நேரமும் அங்கே நின்றிருந்த நீலகண்டன்,” வாங்க எல்லோரும், இங்க இருக்கிற என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல போய் ரெஸ்ட் எடுத்திட்டு காலையில வரலாம் “என்றார். காளையனிடம் இவர் யார் என்று கேட்க அவன், “அதை வீட்டிற்கு போய் சொல்றன். வாங்க” என்றான். தேவச்சந்திரன் ராமச்சந்திரனுடன் இருக்க, அவரை விட்டு மற்றவர்கள் நீலகண்டன் கெஸ்ட் ஹவுஸ்க்குச் சென்றனர். கேசவன் குடும்பமும் அங்கு சென்றது.
அங்கு சென்றதும் மலர்னிகாவிடமும் துர்க்காவிடமும் விசாகம், குணவதி, நேசமதி எல்லோரும் மன்னிப்பு கேட்க, அவர்களும் அவர்களை அணைத்துக் கொண்டனர். காளையன் நீலகண்டன், ஹர்ஷா பற்றிய உண்மையை கூறினான். அதைக் கேட்டவர்கள், ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சியா என்று சோர்ந்து விட்டனர். பின்னர் எல்லோரும் ஒன்றாகவே இருக்கலாம் என்ற நல்ல முடிவை எடுத்தனர். அப்போது ஹர்ஷா காளையனை அருகில் இழுத்து அவன் காதில் எதையோ சொல்ல, அவனைப் பார்த்தவன், “அடப்பாவி நீயடா இது” என்ற லுக்கை விட்டான். அவன் வெட்கப்பட்டு சிரிக்க, என்ன வெட்கமா என்றான் காளையன். அதற்கு ஹர்ஷாவும் தலையசைக்க, கேவலமா இருக்கு என்ற காளையன் பெரியவர்களிடம், “இன்னும் ஒரே ஒரு விசயம் இருக்கு” என்றான்.
அதை கேட்ட கதிர், “ஐயோ அண்ணே இன்னும் ஒண்ணா, நம்மளால தாங்க முடியாது” என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். காளையனும் சிரித்து விட்டு, “நல்ல விசயம்தான் கதிர், நம்ம ஹர்ஷாக்கு நிஷாவை பிடிச்சிருக்காம், கல்யாணம் பண்ணி வைக்கட்டுமாம் “என்றான்.
உடனே கதிர் நிஷாவின் கைகளை பிடித்துக் கொண்டு, “நான் தரமாட்டேன். என்னோட தங்கச்சியை நான் தரமாட்டேன். உயிரே போனாலும் இவனுக்கு நான் தரமாட்டேன்” என்று சினிமா டயலாக் பேசினான். அவனது விளையாட்டை புரிந்து கொண்ட ஹர்ஷா,” நான் வேணும்னா ஆயிரம் ரூபாய் தர்றேன்” என்றான்.
அதற்கு மீண்டும் கதிர், “என்னோட நிஷாக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தானா, நான் தரவே மாட்டேன். என்னோட உயிரை வேணும்னா கேளு நான் தர்றேன்
ஆனால் என்னோட தங்கச்சியை நான் தரமாட்டேன்” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட ஹர்ஷா,” சரி ஐயாயிரம் ரூபாய் தர்றேன் “என்றான். உடனே நிஷாவை அவன் பக்கம் தள்ளி விட்டு,” இந்தா எடுத்துக்க, பணத்தை மட்டும் எனக்கு அனுப்பிடு “என்றான்.
இதைப் பார்த்தவர்கள் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தை விட்டு, வாய்விட்டு சிரித்தனர். எல்லோரும் சந்தோசமாக சிரித்தாலும் மலர்னிகா முகத்தில் மட்டும் ஒரு கவலை இழையோடிக் கொண்டிருந்ததை காளையன் கவனித்தான்.
எல்லோருக்கும் ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் பண்ண, சாப்பாடு வந்ததும் அதை சாப்பிட்டு விட்டு, தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்றனர். காளையனும் மலர்னிகாவும் அவர்கள் அறைக்கு வந்தனர். முதலில் குளித்து விட்டு வந்தவள் பால்கனியில் சென்று நின்று கொண்டாள். காளையனும் குளித்து விட்டு வந்து அவளருகில் சென்று நின்றான்.
இருவரும் எதுவும் பேசவில்லை. மௌனமே அங்கு ஆட்சியானது. அமைதியை கலைத்தான் காளையன், “என்னடா இன்னும் எவ்வளவு நேரம் அழுகை அடக்கிக் கொண்டு இருக்க போறீங்க? நான் உள்ளே போகும் வரையிலா? நான் உங்களோட புருஷன் தானே மலர் எதுக்காக எங்கிட்ட மறைக்கிறீங்க? என்னாச்சு அம்மணி?” என்ற ஒரு வார்த்தையில் உடைந்தாள்.
அங்கேயே முட்டி போட்டு அழுதாள். இத்தனை நேரம் மறைந்து வைத்திருந்த கண்ணீர் கரை கடந்தது. முட்டிக்காலில் நின்று அழுதவள் காளையன் இடுப்பைக் கட்டிக் கொண்டாள். அவனும் அவளது தலையை வருடியவன், மேலே கையை பிடித்து எழுப்பியவன், அங்கிருந்த பால்கனி சுவற்றில் சாய்ந்து இருந்து கொண்டு, அவளை தன் மடி மீது இருத்திக் கொண்டான்.
தன்புறம் அவளை திருப்பினான். மலர்னிகா அவனது இடுப்பில் கைபோட்டு அணைத்துக் கொண்டு, வழமை போல நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டு லேசாக ஆடிக் கொண்டிருந்தான். “காளையா, அப்பா…” என்றாள் மெதுவாக. அவனுக்கு அவள் சொன்னது விளங்கவில்லை. “என்னடா சொன்ன?” என்றான்.
நெஞ்சில் இருந்த தலையை உயர்த்தி, அவனைப் பார்த்து, விம்மிக் கொண்டு, “அப்பா… எனக்கு…. அப்பா….வேணும் …அப்பா வேணும்” என்று அவன் நெஞ்சில் தன் கைகளால் அடித்துக் கொண்டாள். அவளது அடிகளை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தான். “அப்பா வேணும்… அப்பா வேணும் ” என்று அழுது கொண்டிருந்தாள். அவனால் முடியும் என்றால் அதை எப்போதோ நடத்தியிருப்பானல்லவா. தனது இயலாமையை நினைத்து கோபம் வந்தது. நிலத்தில் கைகளை குத்திக் கொண்டான்.
பின்னர் அவளிடம், “உனக்கு அப்பாதான் வேணுமா? நான் வேண்டாமா?” என்று அவளை பார்த்து கேட்க, அவனது முகத்தைப் பார்த்தவள், “நீயும் வேணும், அப்பாவும் வேணும்” என்றாள். அதற்கு அவன், “மாமா தான் என் பொண்ணை பத்திரமா பார்த்துக்க காளையானு எங்கிட்ட சொன்னாரு.” என்றான். அவன் சொல்வது பொய் என்று தெரிந்தாலும் தந்தையை தேடும் மனதிற்கு ஆறுதல் அளிக்க “நெஜமா அப்பாதான் உங்களை அனுப்பி வைச்சாரா?” என்று சிறுபிள்ளை போல கேட்கும் மனைவியை அணைத்துக் கொண்டு அழுதான் காளையன்.
” ஐயோ நான் என்னடி செய்வேன். இந்த உலகத்தில இல்லாத உன்னோட அப்பாவை எங்கிட்ட கேட்டா நான் என்னடி பண்ணுவன்? மலர் என்னோட உயிரை குடுத்தா உன்னோட அப்பா கிடைப்பாருனா, நான் இப்பவே செத்திடுறன்.. என்னால நீ கேக்கிற உன்னோட அப்பாவை குடுக்க முடியலையே” என்று அழுதவனை பார்த்துக் கொண்டு இருந்தவள். அவன் கண்களை துடைத்து விட்டாள்.
” காளையா, நீயும் அப்பாவை மாதிரி என்னை விட்டு போயிடமாட்டல்ல, நீ போறன்னா என்னையும் கூட்டிட்டு போயிடு, தனிய விட்டுட்டு போயிடாத. என்னால தாங்க முடியாது”என்றாள். அவனும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, “உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன் அம்மணி” என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி தூங்கினர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 50
written by Thivya Sathurshi
காந்தம் : 50
கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவன், தொடர்ந்து பேச ஆரம்பித்தான். கடைசியில அவரு பார்த்தது ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தாயைத்தான். அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புரண்டார். தாயை கீழே கொண்டு வந்து மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுதார். யாரும் அவர்கள் அருகில் வரவில்லை. தங்கையோ சற்று தள்ளி மயங்கிக் கிடந்தாள்.
தாயை விட்டு விட்டு தங்கையை தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு வந்து, தாயின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று, தீவைத்து விட்டு தங்கையிடம் ஓடிவந்தார். மீனாட்சி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். தங்கையை பார்க்க உள்ளே சென்றார்.
மீனாட்சியின் உயிர் உடலை விட்டுச் செல்ல முயன்று கொண்டிருந்தது. மெல்ல தங்கை அருகில் சென்று அவளது கையை பிடித்துக் கொண்டார். கண் விழித்துப் பார்த்த மீனாட்சி, “அண்ணா,” என்றவர் தான் ராமச்சந்திரனை ஏமாற்றியது ஊரில் உள்ளவர்கள் பேசியது.
பின்னர் அவரைப் பார்க்க வரலாம் என்று எண்ணி வரும் போது வழியில் வந்த ராமச்சந்திரன் மீனாட்சியிடம், “என்ன மனுசங்க நீங்க? கோயில் நகையை திருடின உன் அப்பன் ஜெயிலுக்கு போறவழியிலே செத்திட்டான். நீங்க இன்னும் சாகாமல் உயிரோட இருக்கிறீங்க, கொஞ்சமாவது மானரோசம் இருந்தா தானே. உன்னை காதலிச்சது பெரிய பாவம், நல்லவேளை உன்னை கல்யாணம் பண்ணலை. யாரு கண்டா, அப்பன் திருடன், மகள் எப்படியோனு கேவலமாக பேசினார். அவர் பேச ராமச்சந்திரனை இழுத்துக் கொண்டு சென்றார் அவரின் நண்பர்.
இதை விட அவமானம் வேண்டுமா? உயிரோட இருக்கவே கூடாது என்று நினைத்தவள், அம்மாவிடம் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு வரும்போது தாய் தூக்கில் தொங்கியவாறு உயிரை விட்டதை பார்த்து நொந்து போனாள். கையில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டாள். நடந்ததை அண்ணனிடம் சொன்னாள். அண்ணா, அண்ணா “என்று அவர் சொல்லியவாறே உயிரை விட்டார்.
மீனாட்சி யாரு தெரியுமா? அவங்களோட அண்ணா யாரு தெரியுமா? வேற யாரும் இல்லை இதோ நிற்கிறாரே கேசவன். இவருதான் மீனாட்சியோட அண்ணன். அவரோட தங்கையை ஏமாத்தின ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க நினைச்சு ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்தாரு. துர்க்கா அத்தைக்கு அவரோட நண்பர் இனியரூபனை கல்யாணம் செய்து வைத்தார்.
இங்கதான் அவரு நினைத்தது வேற, நடந்தது வேற, நண்பன் துர்க்காவிடம் அன்பாக நடக்க மாட்டான்னு நினைக்க, அவரோ அத்தையை நன்றாக பார்த்துக் கொண்டார். நம்மளோட குடும்பத்தை உடைக்கணும் அவங்களை இங்க இருந்து அனுப்பினார். ஆனால் மாமா பிஸ்னஸில் இவரை விட உயர்வது அவருக்கு பிடிக்கவில்லை.
தன்னோட மகள் மோனிஷா இந்த வீட்டு பையனை விரும்புறானு தெரிஞ்சும், மகளோட விருப்பத்திற்கு தடைபோடக் கூடாது என்று நினைத்தார். அதே சமயம் தங்கையை போல மகளும் ஏமாறக் கூடாது என்று மறுநாளே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்தார். சபாபதியை மோனிஷாவின் அன்பினால் குடும்பத்தை விட்டே பிரிக்க நினைத்தார்.
அப்புறம் முகேஷ். அவனுக்கு மலர்னிகா மீது வஞ்சத்தை விதைத்து அவள் கம்பனியை தன்வசப்படுத்தி இவங்களை நடுத் தெருவில் நிற்க வைக்க விரும்பினார். ஆனால் அந்த வீடியோ நிஜமானது கிடையாது. அது எடிட் செய்த வீடியோ. இதுதான் நடந்திச்சு. அப்பா செய்த தப்புக்கு மீனாட்சி என்ன பண்ணாங்க? அவங்களை தப்பாக பேசி தற்கொலை செய்ய வச்சிருக்கிறாரு ராமச்சந்திரன்.
எனக்கு நடந்தது எல்லாவற்றையும் கேட்ட பிறகு சத்தியமா கேசவன் மேல கோபம் வரலை. எனக்கும் தங்கச்சி இருக்கு. அவளுக்கு ஒண்ணுணா, அவளை யாராவது ஏமாத்தினா நான் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போவேன். அப்படித்தான் இவங்களும் பண்ணினாங்க. என்றான்.
இதைக் கேட்டவர்களுக்கு தாங்கள் செய்த தவறு புரிந்தது. காலம் கடந்த புரிதல். கேசவனுக்கும் முகேஷ்க்கும் காளையன் மீது நல்ல மதிப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் காமாட்சி அறையில் இருந்து வெளியே வந்தவள் தனது காளையன் அண்ணாவை பார்த்ததும், ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள். “அண்ணே, என்னை விட்டு போயிடாத, எனக்கு பயமா இருக்கு” என்றாள். அவளை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினான் காளையன்.
அங்கே நின்றிருந்தவர்களை ஒருமுறை பார்த்தான். “தாத்தா, பாட்டி, குணா அம்மா, மதி அம்மா, தேவா அப்பா நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறன் அதை நீங்க மனசார ஏத்துக்கணும். சந்திரன் அப்பா பண்ண பாவத்துக்கு நான் பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறன். இதை இப்போ இங்க சொல்லலாமானு தெரியாது. ஆனால் நான் சொல்லியே ஆகணும்” என்றான். அதற்கு அவர்களும் அவனிடம் சொல்லுமாறு சொல்ல, காமாட்சியை அழைத்துக் கொண்டு போய் கேசவன் முகேஷ் அருகில் வந்தான்.
“எங்களோட அப்பா பண்ணது பெரிய பாவம். உங்களோட தங்கச்சி மீனாட்சியோட உயிரை என்னால தர முடியாது. ஆனால் என்னோட உயிரான என் தங்கச்சி காமாட்சியை உங்க வீட்டுக்கு, மருமகளா அனுப்பி வைக்கிறன். முகேஷ் நீ நல்லவன்தான். ஆனால் உன்னோட அப்பா சொன்னாருனு வீணா மலர்னிகா மேல நீ வன்மத்தை வளர்த்துக்கிட்ட. அது வேண்டாம் முகேஷ். அந்த வன்மம் ஒருநாள் உன்னையே அழிச்சிடும்.
உன்னை நம்பி, என்னோட தங்கச்சியை நீ நல்லா பார்த்துப்ப என்ற நம்பிக்கையில உனக்கு மனைவியாக குடுக்கிறன். அவளை கஷ்டப்படுத்திடாத, காமாட்சி அண்ணா உனக்கு நல்லதுதான் செய்வேன்னு நம்பிக்கை இருக்குல்ல, முகேஷ் ரொம்ப நல்லவன் சில காரணங்களால அவன் தப்பாக நடந்துக்கிட்டான். அவனும் தாயில்லாத பிள்ளை. அவனை பத்திரமாக பாசமாக பார்த்துகிறது உன்னோட பொறுப்பு” என்றான்.
அவளும்,”நீ எது பண்ணாலும் எனக்கு சம்மதம் அண்ணா, உன்னை தவிர வேறு யாராலையும் எனக்கு நல்லது பண்ண முடியாது. நீ அமைச்சிக் குடுக்கிற வாழ்க்கை, நிச்சயமா நான் ரொம்ப நல்லா இருப்பேன் “என்றாள்.
இவர்கள் பேசியதைக் கேட்ட முகேஷ் சட்டென்று காளையன் காலில் விழுந்தான். காளையன் அவனை எழுப்ப, அவனோ” சத்தியமா காளையா, உங்களைப் போல யாருமே இருக்க முடியாது. நான் பண்ணின தப்பை எல்லாம் மன்னிச்சிடுங்க. உங்களோட நம்பிக்கை வீண்போகாது. கண்டிப்பாக உங்க தங்கச்சியை நான் கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துக்கிறன்” என்றவனை பிடித்து எழுப்பினான். மலர்னிகாவிடமும் மன்னிப்பு கேட்டான் முகேஷ். காளையன் அவளைப் பார்த்து கண்களால் கெஞ்ச, அவளும் மன்னித்ததாக கூறினாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 49
written by Thivya Sathurshi
காந்தம் : 49
காளையனும் மலர்னிகாவும் சென்ற பின்னர் பெருந்தேவனார் வீட்டில் வேலை பார்க்கும் லட்சுமி துர்க்காவிற்கு போன் பண்ணினார். நீலகண்டனுடன் பேசிக் கொண்டு இருந்த துர்க்காவின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க லட்சுமியிடம் இருந்து வர உடனே எடுத்தார். அந்தப் பக்கம் இருந்த லட்சுமி, “துர்க்கா அம்மா, ஐயாக்கு…ஐயாக்கு” என்றார். துர்க்காவிற்கு பயமாக இருந்தது. “என்ன சொல்ற லட்சுமி அப்பாவுக்கு என்ன?” என்று கேட்டார்.
லட்சுமியே, “அம்மா பெரியையாவுக்கு ஒண்ணுமில்லை. நம்மளோட ராமச்சந்திரன் ஐயாவுக்கு நெஞ்சுவலினு சொல்லி டவுன் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோனோம். ஆனால் அங்க மருந்து இல்லைனு சொல்லி சென்னை ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸ்ல கொண்டு போறாங்க அம்மா. நாங்க பின்னாடியே வண்டியில போயிட்டு இருக்கிறம். எல்லோரும் உடைஞ்சி போய் இருக்கிறாங்க.
ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. சபாபதி ஐயாவும் போயிட்டாரு. காளையன் தம்பி கூட இருந்தா நல்லா இருக்கும். அம்மா நீங்க எங்க இருக்கிறீங்கனு தெரியலை. ஆனால் சீக்கிரமா காளையன் தம்பியையும் கூட்டிட்டு வாங்க அம்மா”என்று சொல்லி போனை வைத்தார்.
அவர் சொன்னதில் இருந்து பயந்து அழுது கொண்டு இருக்கிறார் துர்க்கா. விசயத்தை அறிந்ததும் காளையனுக்கும் பதறியது. இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் மறைத்தவன்,” சரி வாங்க போகலாம். “என்றான். அதற்கு ஹர்ஷா, “அண்ணா நான் வண்டி ஓட்டுறன். ” என்றான். கதிர் ஹர்ஷா அருகில் இருக்க மற்றவர்கள் பின்னால் இருந்தனர். கார் சென்னை நோக்கி செல்லும் வீதியில் சீறிப் பாய்ந்தது.
போகும் வழியில் காளையன் சபாபதிக்கு போன் செய்து நடந்ததைக் கூறினான். சபாபதிக்கு தந்தைக்கு நெஞ்சுவலி என்று சொன்னதைக் கேட்டதும் பயமாக இருந்தது. தந்தைக்கு தவறாக ஒன்றும் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். விசயத்தை மோனிஷாவிடம் சொல்ல, அவளும் வாங்க ஹாஸ்பிடல் போகலாம். என்றாள். இருவரும் ஹாஸ்பிடல் வரவும், அவர்களது ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.
அங்கே சபாபதியை பார்த்ததும் அங்கிருந்தவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. விசாகம், “சபா உன்னோட அப்பாவை பாருடா, எனக்கு பயமாக இருக்கு. காளையனையும் வரச் சொல்லுடா.” என்றார். அவனும் அவர்களை தேற்றி, “காளையா தான் எனக்கு போன் பண்ணான் பாட்டி, அவன் வந்திட்டு இருக்கிறான்.” என்றான். அதே நேரத்தில் அங்கே வந்த டாக்டரிடம் அவரை எப்படியாவது காப்பாற்றுமாறும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொன்னாள்.
ராமச்சந்திரன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உள்ளே அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. வெளியே எல்லோரும் அழுது கொண்டு நின்றுருந்தனர். காமாட்சியும் அழுதழுது சோர்ந்து உட்கார்ந்தாள். விசயம் அறிந்து கேசவனும் முகேஷூம் வந்திருந்தனர். இவர்களது கஷ்டத்தை பார்த்து சந்தோசப்பட வந்த இருவருக்கும், அவர்களது குடும்ப ஒற்றுமையை பார்த்து வியப்பாக இருந்தது. ஒருவருக்கு ஒன்றென்றால் எப்படி இத்தனை பேர் துடிக்கின்றார்கள் என்று அவர்கள் பாசத்தை பார்த்து வியந்து நின்றனர்.
அதே நேரம் காமாட்சி மயக்கம் வந்து கீழே விழப் போக, அவளை தாங்கிப் பிடித்தான் முகேஷ். “ஹேய்.. எழுந்திரு” என்று அவள் முகத்தில் தட்டினான். அதைப் பார்த்து அருகில் வந்த சபாபதி, “காமாட்சி என்னாச்சிமா?” என்று சத்தம் போட்டும் அவள் விழிக்கவில்லை. உடனே அவளை பக்கத்து அறையில் சேர்த்தனர், அவளை பரிசோதித்த டாக்டர், “ஒண்ணுமில்லை, சாப்பிடாமல் இருந்திருக்கிறாங்க. டென்ஷன் மயங்கிட்டாங்க. ட்ரிப்ஸ் போட்டிருக்கு, கொஞ்ச நேரத்தில கண்முழிச்சிடுவாங்க” என்றார்.
ராமச்சந்திரனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. உயிர் பிழைப்பாரா என்றே தெரியவில்லை. நர்ஸ் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தார். எல்லோரும் எல்லாத் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு நின்றிருந்தனர். அப்போது விசாகம்,” ஐயோ கடவுளே என்னோட பையன் ஈ எறும்புக்கு கூட பாவம் செய்யாதவன், அவனுக்கு ஏனு இந்த ஒரு நிலமை? அப்படி என்ன பாவம் பண்ணினான்?” என்று அழுதார்.
அப்போது அங்கே வந்த காளையன், “உங்க பையன் பண்ண பாவத்துக்கு அவரு மட்டுமல்ல, எல்லோருமே அனுபவிச்சுட்டு இருக்கிறம் பாட்டி” என்றவாறு வந்தான். காளையனை அங்கு பார்த்ததும் எல்லோருக்கும் ஒரு தென்பு வந்துது உண்மை. ஆனால் இவன் சொல்வது அவர்களுக்கு புரியவில்லை. தேவச்சந்திரனிடம் வந்தவன், “டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? “என்றான். அவரும்,” எதுவும் சொல்றாங்க இல்லை காளையா” என்றார் அழுது கொண்டு, அவரை தேற்றினான்.
பெருந்தேவனார், “என்ன சொன்ன காளையா என் பையன் தப்பு செய்தானா? என்ன செய்தான்? அவனுக்கு முடியாது என்ற காரணத்துக்காக வீணா பழி போடாத” என்றார். சிரித்த காளையன்,” உங்க பையன் தப்பு பண்ணலை தாத்தா, பாவம் பண்ணியிருக்கிறாரு, ஒரு உயிரை கொலை பண்ணியிருக்கிறாரு.” என்றான். இதைக் கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் கேசவன், முகேஷ், மோனிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
காளையன் சத்தம் போட, அவனருகில் வந்த மலர்னிகா,” இது ஹாஸ்பிடல். அமைதியாக பேசுங்க, இல்லைனா வீட்ல போய் பேசிக்கலாம். “என்றாள். அப்போதுதான் அங்கிருந்த மலர்னிகாவைப் பார்த்தான் முகேஷ். அவளது பழைய தோற்றத்தில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான். அவனை நக்கலாக பார்த்து வைத்தாள்.
“இல்லை மலர் இதை இங்கேயே இப்பவே சொல்லணும். அப்போதான் அவரு பண்ணது எல்லோருக்கும் தெரியும். அவர் பண்ணின ஒரு தப்பால யாரு யாரு பாதிக்கப்பட்டிருக்கிறாங்கனும் தெரியும்.” என்றான். அதற்க்கு பின்னர் அவனை மலர்னிகா தடுக்கவில்லை.
“தாத்தா நான் சொல்லப்போறது ஒண்ணும் கட்டுக் கதை இல்லை. உண்மை அதுக்கான சாட்சியும் இங்க இருக்கு “என்றவன் கேசவனை பார்த்துவிட்டு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லச் சொல்ல அனைவர் முகமும் மாறியது.
“பாட்டி, அப்பா பக்கத்து ஊர் காலேஜ்க்கு போகும் போது, அவர் கூட படிக்கிற பொண்ணான மீனாட்சிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் காலப் போக்கில், காதலர்களானார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். அப்போதுதான் ஒரு பெரிய பிரச்சனை வந்தது. மீனாட்சியோட அப்பா கோயில் நகையை திருடினதாக போலிஸ் அரஸ்ட் பண்ணினாங்க.
இதைக் கேள்விப்பட்ட இவங்க மீனாட்சியிடம் அது பற்றிக் கேட்க, அவர் அப்பா அப்படி செய்யவில்லைனு சொல்லியிருக்கிறாரு. அதை நம்ப மறுத்த ராமச்சந்திரன், மீனாட்சியை திட்டி, ஒரு கொள்ளைக்காரனோட பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க எங்க வீட்டில சம்மதிக்க மாட்டாங்க. அதனால இனிமேல் என் கண்ணு முன்னாடி வராத. உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்லிவிட்டு வந்துட்டாங்க.
இவங்க இப்படி சொன்னதை மீனாட்சியால தாங்கிக்க முடியலை. அழுது கொண்டு வீட்டிற்கு போயிருக்கிறாங்க. அங்க அவங்களோட அப்பாவை திருட்டு கேஸ்ல போலிஸ் அரஸ்ட் பண்ணினதால ஊர்ல உள்ளவங்க அவங்களை ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க, மீனாட்சியும் அவங்களோட அம்மாவும், நம்ம ஊருக்கு வர, தாத்தா நீங்களும் கோயில் நகையை திருடினவனோட குடும்பத்துக்கு இந்த ஊர்ல இடமில்லைனு பேசி அனுப்பிட்டீங்க.
வெளியூர்ல படிச்சிட்டு இருந்த மீனாட்சியோட அண்ணன் ஊருக்கு வர, அவருக்கு எல்லாம் தெரிய வந்தது, உடனே அவரும் அம்மாவையும் தங்கையையும் தேடி அலைந்தார். ” என்று சொல்லிவிட்டு தலையை குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டான் காளையன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 48
written by Thivya Sathurshi
காந்தம் : 48
தன்பக்கம் சபாபதியை திருப்பியவள், அவன் இதழில் தன் இதழை வைத்து பொருத்தினாள். அவளது எதிர்பாராத இதழ் முத்தத்தில் சபாவதியின் கண்கள் விரிந்தன. சட்டென்று அவளை விட்டு விலகினான் சபாபதி. மோனிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவளும் அவன் அருகில் எழுந்து அமர்ந்தாள். சபாபதியிடம், “நான் உன்னோட பொண்டாட்டிதானே. நான் முத்தம் கொடுத்தேன், இதுக்காக ஏன் இப்படி விலகின சபா?” என்று கேட்டாள்.
அதற்கு சபாபதி, “இங்க பாரு மோனிஷா, உன்கிட்ட நான் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும். உன்னை எனக்கு பிடிக்கும். முதல்ல எனக்கு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு ஆசை. அதுக்கு என்ன பண்றதுனு தெரியாமல் நான் இருந்தப்போதான் உன்னோட அப்பா வந்து பேசினாரு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டால் உன்னோட அப்பா எனக்கு உதவி பண்றதா சொன்னாங்க. சோ அதனாலதான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
ஆனால் எதிர்பார்ப்பில்லாத உன்னோட அன்பு எனக்கு பிடிச்சி இருந்துச்சு மோனி. எங்கே நான் உன் கையை விட்டு போயிடுவனோனு நீ என் வீட்டில வந்து நின்ன, ஆனால் நான் அதை ஒரு காரணமா வச்சி வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். வரும்போதுதான் எனக்கு எல்லாமே புரிஞ்சது. உன்னை இப்போ இந்த நிமிடத்தில இருந்து நான் நேசிக்கிறேன் மோனி. நீ விரும்பியது பிஸ்னஸ் மேன் சபாபதியை இல்லை. உன்னோட கம்பனியில வேலை பார்த்த சாதாரண தொழிலாளியைத் தானே..
அதனால நான் இப்போ ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உன்னோட காதலுக்காக எல்லாத்தையும் விட்டுடுறன். கம்பனியில மாச சம்பளத்திற்கு வேலை பார்க்கிறவனாவே இருந்திட்டு போறன். உன்னோட புருஷனா உன்னை நல்லா பார்த்துக்கிட்டா போதும்டா. “என்று சபாபதி சொன்னதைக் கேட்ட மோனிஷாவுக்கு கண்ணீர் பெருகியது. தனக்காக அவன் கனவை விட நினைத்த சபாபதியை நினைத்து பூரித்தாள் மோனிஷா. மோனிஷாவிற்கு தேவையான உடைகளை குடுக்க வந்த கேசவன் அவர்கள் பேசியதை கேட்டு விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
அதே நேரம் அவளுக்காக அவனது இத்தனை நாள் கனவை விடுவது அவளுக்கு பிடிக்கவில்லை. அவனது கனவை விடக் கூடாது என்று அவள் எவ்வளவு சொல்லியும் சபாபதி கேட்கவில்லை. மறுத்து விட்டான். மாலையில் அவன் பிளாட்டிற்கு அருகில் இருந்த கோயிலுக்கு அவளை அழைத்துச் சென்று அவள் கழுத்தில் தனது இத்தனை நாள் சேமிப்பைக் குடுத்து வாங்கிய தாலியை அவள் கழுத்தில் கட்டினான்.
காளையனோ மலர்னிகாவை அழைத்துக் கொண்டு நீலகண்டன் சொன்ன இடத்துக்கு வந்திருந்தான். டிரைவர் காரிலேயே இருக்க, இவன் மலர்னிகாவை கூட்டிக்கொண்டு அங்கிருந்த அழகிய இடத்திற்குச் சென்றான். தூரத்தில் அருவிகளின் சலசலப்பு, பறவைகளின் கீச்சொலிகள், இதமான தென்றல் காற்றென, அந்த இடம் மிகவும் ரம்யமாக இருந்தது.
யாருமற்ற அந்த அமைதி, அந்த அமைதியை கலைக்கும் இயற்கையின் சத்தங்கள். அவனின் மனதை இதமாக்கியது. தான் மலர்னிகாவுடன் பேசுவதற்கு சரியான இடம்தான் இது என்று நினைத்தவன், மலர்னிக்காவின் கைகளை பற்றிக் கொண்டான். மலர்னிகா அவன் பிடித்திருந்த கைகளை பார்த்தாள். காளையனும் அவளைப் பார்த்து என்னவென்று கண்களால் கேட்க, அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.
சரி வா போகலாம் என்று சொல்லி காரை விட்டு சிறிது தூரம் அழைத்துச் சென்றான். அங்கிருந்த அருவிகளில் அருகில் இருந்த பாறை ஒன்றில் இருவரும் அமர்ந்தனர். மெல்ல காளையன் அவளின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். காளையன், “இங்க பாரு மலர் இதுதான் கடைசியும் முதலும் நான் இதைப் பத்தி பேசுறது. இதுக்கு அப்புறம் எப்பவுமே இதை பத்தி பேசவும் கூடாது. நீ நினைக்கவும் கூடாது. அதுக்கு நான் உன்னை அனுமதிக்கவே மாட்டேன்.
உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் எதைப் பத்தி பேச போறேன்னு சொல்லி, இங்க பாரு அப்பா இல்லாமல் போனதுக்கு அப்புறம் அம்மாவையும் பார்த்துக்கிட்டு அப்பாவோட கனவான பிசினஸையும் தைரியமா நின்னு பார்த்துகிட்டவ நீ.
அப்போ உன்கிட்ட இருந்த தைரியம் இப்போ எங்க போயிட்டு? அந்த முகேஷ் உன்னை நேரடியாக எதிர்த்து நிற்க முடியாமல் கோழை மாதிரி பொண்ணுங்களோட வீக்னெஸ்ஸை பயன்படுத்துறாங்க. உனக்கு எங்க போச்சு அறிவு? நீயும் எல்லா பொண்ணுங்க மாதிரியே பயந்திட்டியா? நீ என்ன மத்த பொண்ணுங்க மாதிரியா? இல்லைன்னு உனக்கு தெரியாதா? நீ இந்த தைரியமும் தன்னம்பிக்கை நிறைந்த பொண்ணு.
இதை எல்லாம் தூசு மாதிரி ஊதி தள்ளிட்டு போயிட்டே இருக்கணும். அத்தையை கடத்தி வச்சிட்டு உன்னோட சொத்து எல்லாத்தையும் வாங்கி எழுதினான். அவனை நீ என்ன பண்ணி இருக்கணும் அவனோட மோதி இருக்கணும். அத்தைய பணையம் வச்சதால நீ பதுங்கி இருக்கலாம்.
ஆனால் உன்னோட மனதைரியத்தை உடைக்க, உன்னோட வீட்டிற்கு வந்து உன்னை அவமானப்படுத்த வந்தான்ல, அந்த டைம் எங்க போச்சு உன்னோட தைரியம்? உன்னால அவனை சமாளிக்க முடியும். நீ என்ன பண்ணி இருக்கணும் அவனை அங்கேயே கொன்று போட்டிருந்தா கூட என்னோட மனசு ஆறி இருக்கும். அப்போ நீ தைரியமான பொண்ணுனு நான் நம்பி இருப்பேன். ஆனால் உன்னை கேவலமா ஒரு வீடியோ எடுத்துட்டு அதை வச்சு மிரட்டிட்டு இருக்கான்னு சொல்லி, நீயும் பயந்த மாதிரி உன்னோட சுயத்தை இழந்துட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு? சொல்லு.
இங்க பாரு உன்னோட அனுமதி இல்லாம நடந்திருக்கு அதுவும் வீடியோ தான் எடுத்திருக்குறான்னு நான் சாதாரணமா சொல்லலை. ஆனால் உனக்கு அது எவ்வளவு வேதனை கொடுக்கும்னு எனக்கு தெரியும். சரியா, இனிமே இதை பத்தி யோசிக்காத. நானும் அதை பெருசா எடுத்துக்கல. உன்னோட மனசு உண்மையானது. நீ தூய்மையானவைனு என்று எனக்கு தெரியும் சரியா,
இதுக்கு மேல நீ இப்படி இருக்காத, உன்னை நினைத்து அத்தை ரொம்பவே கவலைப்படுறாங்க. எனக்குமே என்னோட பொண்டாட்டி எப்படி இருப்பான்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கும். நிஷா உன்ன பத்தி அப்படி இப்படின்னு சொல்லி இருக்குறா, அதை பார்க்க நான் ஆசைப்படுறன். நீ இப்போ என்ன பண்ணப் போற? ” என்று அவளிடமே முடிவு எடுக்கும் முடிவை விட்டுவிட்டான் காளையன்.
சற்று நேரம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தலையை குனிந்து கொண்டிருந்தவள், ஓ என்று அழத் தொடங்கினாள். அமைதியாக இருந்தவள் திடீரென்று சத்தமிட்டு அழவும் காளையன் பதறி விட்டான். இருந்தாலும் அவள் சற்று நேரம் அழுட்டும், இத்தனை நாள் அவள் தேக்கி வைத்திருந்த அத்தனையையும் கொட்டட்டும் என்று அமைதியாக அவளது முதுகை வருடி கொடுத்தபடி இருந்தான்.
நீண்ட நேரம் வாய் விட்டு கதறினால் மலர்னிகா. இத்தனை நாள் அவள் நெஞ்சுக்குள் இருந்த கவலைகள் எல்லாம் கண்ணீராக கன்னங்களில் வழிந்தது. அழுது அழுது கண்கள் இரண்டும் சிவந்து கண்ணீரும் வற்றி விட்டது. ஆனால் அழுகை மட்டும் நிற்கவே இல்லை. அழுது கொண்டு இருந்தாள்.
கொஞ்ச நேரம் அவளை அழவிட்டவன், போதும்டா என்று சொல்ல, அவன் பக்கம் திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு விம்மினாள். காளையன் மெதுவாக எதுவும் பேசாமல் அவளை அணைத்துக் கொண்டு தலையையும் முதுகையும் வருடி கொடுக்க, அவளது அழுகை சற்று நேரத்தில் அடங்கிப் போனது இருந்தாலும் அவனை விட்டுப் பிரியாமல் அணைத்துக் கொண்டு இருந்தாள் மலர்னிக்கா.
அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை தன்னிடம் இருந்து பிரித்தான். “சொல்லுங்க மேடம் என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?” என்றான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து, “என் புருஷன் ஆசைப்பட்ட மாதிரியே மாறிடலாம்னு இருக்கிறன்.” என்று சொல்லிவிட்டு வெட்கத்தில் மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தாள். காளையனுக்கு இப்போதான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.” அம்மணி அப்போ இனிமேல் யாருக்கும் பயப்படமாட்டீங்க?” என்றான். அதற்கு இல்லை என்று தலையசைத்தாள்.
நீங்க பழையபடி தைரியமான பொண்ணா மாறிட்டீங்க, இதைப் பார்த்தா அத்தை ரொம்பவே சந்தோசப்படுவாங்க. என்ன நடந்தாலும் நான் உன்கூடவே இருப்பேன். உன்னை பழைய மாதிரி, மாமாவோட கம்பனியில உட்கார வைப்பேன். சரி வந்து ரொம்ப நேரமாச்சு, முக்கியமான வேலை இருக்கு போலாமா?” என்றான். அவளும், “போகலாம்” என்றாள். இருவரும் சேர்ந்து வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் வந்தபோது துர்க்கா பதற்றத்துடன், கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் வந்த காளையன்,” என்னாச்சி அத்தை? “என்று கேட்க, அவரோ ஒப்பாரி வைத்தார். அப்போது மலர்னிகா,” அம்மா முதல்ல அழுகையை நிறுத்து, நிஷா போய் தண்ணீர் எடுத்துட்டு வா” என்றாள். அவளின் குரலில் இருந்த பழைய கம்பீரம் திரும்பி வந்திருந்தது. ஆனால் அதை உணரும் நிலையில் துர்க்கா இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு அவளது மாற்றம் மகிழ்ச்சி அளித்தது. நிஷா கொண்டு வந்த தண்ணீரை வாங்கி துர்க்காவிடம் குடிக்கக் குடுத்தாள். நிஷாவிடம் நடந்ததைக் கேட்க, அவள் சொன்னதைக் கேட்ட காளையனும் அதிர்ச்சி அடைந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 47
written by Thivya Sathurshi
காந்தம் : 47
கம்பனி மீட்டிங்கை முடித்துவிட்டு, அண்ணனுடன் இருக்க விரும்பிய ஹர்ஷவர்த்தனன் வேகமாக வீட்டிற்கு வந்தான். வீட்டுக்கு வந்ததும் வாசலிலே தடைபட்டு நின்றான், ஹாலில் நடந்த விசயத்தை பார்த்து. அப்படி என்னதான்பா நடந்துச்சு? வாங்க பார்க்கலாம்…
சற்று நேரம் தூங்கி எழுந்ததனால் துர்க்காவிற்கு மனது இலகுவாக இருந்தது. விருந்தினராய் வந்த வீட்டில் அதிக நேரம் தூங்கிவிட்டோமோ என்ற பதட்டத்துடன் கீழே வந்தார். அந்த நேரம் நிஷாவும் அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள், துர்க்காவை பார்த்து அவருடன் இணைந்து கொண்டாள். இருவருமாக கீழே வந்தனர். அங்கே நீலகண்டன் பொன்னியிடம் மதியத்திற்கு விருந்து சமைக்குமாறு சொல்லிக் கொண்டிருந்தார். இவர்கள் வந்ததைப் பார்த்ததும், “என்னம்மா நல்லா தூங்கினீங்களா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே” என்றார்.
அதற்கு துர்க்கா, “இல்லை அண்ணா, இதுவே ரொம்ப நேரம் தூங்கிட்டேன்.” என்றார். “அதுக்கு என்னம்மா? இது உன்னோட வீடு நீ எப்போ வேணாலும் ரெஸ்ட் எடுக்கலாம். இங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்” என்றார். நிஷாவின் புறம் திரும்பியவர்,” உனக்கு அறை எல்லாம் ஓகேவா நிஷா?” என்றார்.
நிஷாவும்,” ஆமா சார். எல்லாமே ஓகே “என்று சொல்ல, நீலகண்டன் “நிஷா நீ என்னோட மருமகளோட தங்கச்சி, அப்போ நீ என்னை எப்படி கூப்பிடும்? மாமானு அழகாக சொல்லாமல், வேற யாரையோ கூப்பிடுறத மாதிரி சார்னு சொல்லிட்டு இருக்க?” என்று கேட்டார். நிஷாவும் சிரித்து விட்டு, “ஓகே மாமா.. இனிமேல் மாமானே கூப்பிடறேன் ” என்றாள்.
“ரொம்ப சந்தோசம் நிஷா, சரி பொன்னி எங்க மூணு பேருக்கும் சாப்பாடு எடுத்து வை. சாப்பிடலாம். காளையனும், மலரும், கதிரும் ரெஸ்ட் எடுக்கட்டும், ஹர்ஷா வந்ததும் மதிய உணவை சேர்ந்து சாப்பிடலாம்.” என்றார். அவரும் சாப்பாடு எடுத்து வைக்க, மூவரும் சென்று சாப்பிட்டனர். நிஷா பொன்னியின் சமையலை புகழ்ந்து கொண்டு சாப்பிட்டு முடித்தாள்.
அப்போது அங்கே வந்த கதிர்,” என்னை விட்டுட்டு சாப்பிடுறீங்களே.. இது உங்களுக்கு நியாயமா? ஏன்மா அண்ணா, அண்ணானு பாசமா கூப்பிடுவியே, அதெல்லாம் நடிப்பா” என்று கேட்டுக் கொண்டு நிஷாவின் அருகில் வந்து நின்று, அவளின் தலையில் வலிக்காமல் கொட்டினான். நிஷாவுக்கு வலிக்கவில்லை என்றாலும் வலித்தது போல் நடித்தாள்.” அண்ணணாணு பாசமா சொல்ற என்னை கொட்டுவியாடா? ” என்றவள் மேசையில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து அவன் மீது ஊற்ற வர, அதில் இருந்து தப்பிக்க ஒடினான். “எங்க போனாலும் உன்னை விடமாட்டேன் அண்ணே” என்று பாசமாக அழைத்துக் கொண்டு அவனை துரத்திக் கொண்டு இருந்தாள்.
இவர்கள் விளையாட்டை பார்த்து துர்க்காவும் நீலகண்டனும் வாய்விட்டு, கண்களில் நீர் வர சிரித்தனர். இதைத்தான் கம்பனியில் இருந்து வந்த ஹர்ஷா பார்த்தான். அப்போது நிஷாவிடம் இருந்து தப்பிக்க வாசலுக்கு வந்த கதிர் மீது தண்ணீரை உற்ற, அவன் சற்று விலக, இங்கு நடந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டு இருந்த ஹர்ஷா மீது தண்ணீரை ஊற்றி விட்டாள் நிஷா.
கதிர் கைகளைத் தட்டிச் சிரிக்க, நிஷாவோ திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்றாள். ஹர்ஷா, “உன் அண்ணனுக்கு ஊற்றணும்மா, சும்மா வேடிக்கை பார்த்தவன் மேல ஊற்றக் கூடாது கண்ணு.. வா இப்போ இந்த கதிரு பையனை குளிப்பாட்டலாம்.” என்று நிஷாவைப் பார்த்து கண்ணடிக்க அவளும், “வாவ் சூப்பர்” என்று தண்ணீரை எடுக்கச் செல்ல, கதிர் தோட்டத்து பக்கம் ஓட அவனை பிடிக்க, சட்டையின் கைகளை மடித்து விட்டபடி ஓடினான் ஹர்ஷா.
உள்ளே சென்று பெரிய மக்கில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் நிஷா. ஹர்ஷாவிடம் பிடிபடாமல் போக்குக் காட்டிக் கொண்டு ஓடினான் கதிர். தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிவந்தவள் கண்களில் பட்டது, தோட்டத்தில் இருந்த பைப், மெல்ல குழாயை திறந்தவள், பைப்பை கதிரின் பின்பக்கமாக வந்து பிடித்தாள். தண்ணீர் சீறி அடித்தது. கதிர் தொப்பலாக நனைந்தான். இதைப் பார்த்து சிரித்தான் ஹர்ஷா. நிஷாவிற்கு குறும்புத்தனம் தலைதூக்க கதிரின் பக்கம் இருந்த பைப்பை சட்டென்று ஹர்ஷா பக்கம் பிடித்து விட்டாள். இப்போது முழுதாக நனைவது ஹர்ஷாவின் முறையாயிற்று.
பின்னர் மூவரும் சேர்ந்து தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்க, துர்க்கா வந்து ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது என்று அவர்களை உடை மாற்ற அனுப்பி வைத்தார். உள்ளே வந்தவர் நீலகண்டனிடம், “அண்ணா மலரை மாத்தவே முடியாதா? என் பொண்ணை நினைச்சா பயமா இருக்கு அண்ணா, அதே நேரத்தில காளையனோட வாழ்க்கையும் என்னவாகுமோனு தவிப்பா இருக்கு” என்றார்.
இதற்கு நீலகண்டன் பதில் சொல்ல முதல், “என் பொண்டாட்டியை பழையபடி மாற்ற வேண்டியது என்னோட பொறுப்பு அத்தை.” என்றவாறு வந்தான் காளையன்.” அப்பா நான் மலரை கூட்டிட்டு வெளியே போயிட்டு வரலாம்னு நினைக்கிறன். இங்க அமைதியான ஒரு இடத்தை சொல்லுங்க “என்றான்.
அவரும், “இங்க கொஞ்சம் தூரத்தில ஒரு இடம் இருக்கு காளையா, அங்க கூட்டிட்டு போயிட்டு வா. நான் டிரைவரை உங்ககூட அனுப்பி வைக்கிறன். தனியா மனசு விட்டு பேசிட்டு வாங்க. “என்றார்.அவனும் சரி என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று மலரை அழைத்துக் கொண்டு கீழே வந்தான். துர்க்காவும் நீலகண்டனும் இருக்க இருவரிடமும் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
தனக்கும் சபாபதிக்கும் சாப்பாட்டை ஓடர் பண்ணி விட்டு சபாபதியுடன் பேசிக் கொண்டு இருந்தாள். “சபா, இன்னைக்கு ஈவ்னிங் போய், உன்னோட கம்பனிக்கான இடத்தை பார்த்திட்டு வந்திடலாம். சீக்கிரமா கம்பனி ஆரம்பிக்கிறம், முன்னுக்கு வர்றோம். ஓகேவா” என்றாள். அவனும் ஆர்வமாக தலையாட்டினான்.
சாப்பாடு வந்ததும் இருவரும் சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுக்கச் சென்றனர். சபாபதியும் மோனிஷாவும் அருகருகே படுத்திருந்தனர். சபாபதி கண்களை மூடிக் கொண்டு தூங்க, மோனிஷாவோ அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சபாபதி மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை உணர்ந்தாள். ஆனால் சபாபதியோ அவளிடம் பெரிதாக ஈடுபாடின்றி இருப்பதாக அவளுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணம், இப்போதும் அவளுக்கு வந்தது.
மெல்ல தனது கைகளை எடுத்து சபாபதி மீது போட்டாள். அவனோ இவளது கையை தட்டி விட்டான். பின்னர் மீண்டும் இவள் கைகளை போட, அதையும் தட்டி விட்டான். இவளுக்கு கோபம் வர மீண்டும் கையை அவன் மீது போட்டு அவனை அணைத்தாள். ஆனால் அவனோ இவளை விலக்கி விட்டு மறுபுறம் திரும்பி படுத்தான். மோனிஷாவிற்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. அவனை தன்புறம் திருப்பினாள். “என்ன மோனி உனக்கு பிரச்சனை? என்னை விடு டயர்டா இருக்கு தூங்கணும்” என்றவனுக்கு மோனிஷாவின் செயல் அதிர்ச்சி அளித்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 46
written by Thivya Sathurshi
காந்தம் : 46
ஊட்டியில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த துர்க்காவிற்கு வாழ்க்கையை வெறுத்தது போல் இருந்தது. எத்தனை துன்பங்கள், எத்தனை கவலைகள், இவற்றை எல்லாம் பார்த்துட்டு இன்னும் உயிரோடு இருக்கணுமா? ஏங்க என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனீங்க? என்று சொல்லிக் கொண்டு கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். எத்தனை நேரம் தான் அழுது கொண்டிருப்பதை, அழுதழுது அப்படியே தூங்கிவிட்டார் துர்க்கா.
தனது அறைக்கு வந்த நிஷாவும் இந்த ஊரில் என்ன நமக்காக இருக்கிறதோ என்று நினைத்து பெருமூச்சு விட்டவள், உடல் கசகசவென்று இருக்க, குளித்துவிட்டு வந்து பயணக் களைப்பு தீர படுத்து விட்டாள். அடுத்த நம்மளோட ஜோடி நம்மளோட காளையன் மலர்னிகா ஜோடி என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம் வாங்க..
காளையன் மலர்னிக்காவைக் கூட்டிக் கொண்டு வந்து கட்டில் இருப்பாட்டினான். அவளுக்கும் களைப்பாக இருக்க மெதுவாக கட்டிலில் சாய்ந்து கொண்டாள். மலரை படுக்க வைத்து விட்டு, இவன் சென்று குளித்துவிட்டு வந்தான். ஒரு பக்கெட்டில் மெல்லிய சூட்டில் சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தவன். பக்கெட்டை அவள் அருகில் வைத்து விட்டு, மெல்ல மலர்னிகாவின் முகம் கை கால்களை துடைத்துவிட முயன்றான். ஆனால் அவனது கையை பிடித்து தடுத்தாள் மலர்னிகா.
அவளது நிலமை அவனுக்கு புரிந்தது. “என்ன டா, பயமா இருக்கா? இங்க பாரு என்னை ஒரு ஆம்பளையா நினைக்காத, உன்னோட அப்பாவா பாருடா, இங்க நீ பயப்படும்படி எதுவும் நடக்காது. உன்னோட அப்பா உனக்கு சின்ன வயசில முகம் கழுவி விட்டிருப்பாங்கல. அப்படி நினைச்சுக்கோ என்றான். அவன் அப்படி சொன்னதும், தந்தையின் நினைவில் கண்கள் குளமாகின.
மலர்னிகாவின் கண்ணீரை மெல்ல துடைத்து விட்டான். இந்த கண்ணீரை நிறுத்த உன்னோட அப்பாவை என்னால கொண்டுவருவதற்கு முடியும்னா, நிச்சயமா என்னோட உயிரை குடுத்தாவது மாமாவை நான் கூட்டிட்டு வருவன் அம்மணி, ஆனால் அதுதான் முடியாதே. அழாதீங்க அம்மணி. என்றான். மலர்னிகா பிடித்திருந்த அவனது கைகளை விட்டாள்.
காளையனும் அவளை தன் மனைவியாக பார்க்காமல், குழந்தை போல நினைத்து முகம் கை கால்களை ஈரத்துணியால் நன்றாக துடைத்து விட்டான். மலர்மிக்காவிற்கு அவன் செய்வது கூச்சத்தை ஏற்படுத்த அசைந்து கொண்டிருந்தாள். ஆனால் காளையன், “கொஞ்சம் சும்மா இரு மலர் பிள்ளை.” என்று சொல்லிக் கொண்டே அவன் வேலையை முடித்துவிட்டார்.
பின்னர் பெட்டியில் இருந்த ஒரு உடையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்,மாற்றிக் கொள்ளும்படி. மலர்னிகா அதை வாங்கிக்கொண்டு தயக்கமாக காளையனைப் பார்த்தாள். காளையன் அவனைப் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்த பால்கனி பக்கம் சென்றான். பின்னர் மலர்னிகா தனது உடைய மாற்றிவிட்டு லேசாக இருமினாள்.
அவள் இருமும் சத்தத்தில் திரும்பி பார்த்த காளையன், மீண்டும் அவளிடம் வந்து, தண்ணீர் இருந்த பக்கெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் ஊற்றிவிட்டு வந்தான். “மலர் ஏதாவது சாப்பிடுறியா?” என்று கேட்டான். அதற்கு, “இல்லை எனக்கு பசியிலை கொஞ்சம் களைப்பா இருக்கு. நான் தூங்கட்டுமா?” என்று கேட்டாள்.
அதற்கு காளையனும், “சரி கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க அம்மணி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றான். ஆனால் அவளோ, “என் கூட கொஞ்சம் இருக்க முடியுமா, நான் தூங்கும் வரைக்கும்” என்றாள். அதற்கு காளையன்,” இங்க பாரு மலர் பிள்ளை, உனக்கு இங்க எந்த ஆபத்துமே இல்லை. அப்படியே உனக்கு ஆபத்து இத வரணும்னா அது என்ன தாண்டித் தான் வரணும். நீ எதுக்கும் பயப்படப் கூடாது” என்றவன் அவளின் திருப்திக்காக அவள் பக்கத்தில் இருந்து கொண்டான்.
கீழே வந்த ஹர்ஷா நீலகண்டனிடம், “அப்பா கம்பெனியில ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இல்லைனா நான் அண்ணா கூட இருந்துருவேன். போயிட்டு ஒரு டூ ஹவர்ஸ்ல வந்துடுறன். அண்ணா கேட்டால் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு சென்றான். அவரும் “சீக்கிரமா வந்துரு ஹர்ஷா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஊட்டியில் இருந்த அந்த பெரிய எஸ்டேட் ஒன்றில் வந்து நின்றது அவனுடைய கார். அதிலிருந்து இறங்கிய ஹர்ஷா கம்பீரமாக நடந்து சென்றான், அவனது மீட்டிங் நடக்கும் இடத்திற்கு. அங்கே அவனுக்கான அனைத்தையும் தயாராக வைத்திருந்தான், அவனது பி ஏ ரகு. “என்ன ரகு எல்லாம் தயாரா?” என்று கேட்டவாறு நடந்தான்.
அதற்கு அவனும், “எல்லாம் தயாராக இருக்கு சார், நீங்க வந்தா மீட்டிங் ஆரம்பிச்சிடலாம்” என்று சொன்னான். அவனும் சரி என்று தலையசைத்து விட்டு மீட்டிங் நடக்கும் ஹாலிற்கு சென்றான். அங்கிருந்த அவனது கம்பெனியுடன் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் அவன் வந்ததும் எழுந்து நின்றனர்.
அவனும் எல்லாரையும் பார்த்து ஒரு புன் சிரிப்பை பதிலளித்துவிட்டு இருக்குமாறு கையை அசைத்து சைகை செய்ய அனைவரும் தங்களது நாற்காலிகளில் அமர்ந்தனர். மீட்டிங் ஆரம்பமானது. கம்பெனியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்கள் பற்றியும் லாப நஷ்டங்கள் பற்றியும் பேசிக்கொண்டு, இறுதியாக இதன் ஒரு பிரான்சை மும்பையில் அமைப்பதற்கு விரும்புவதாக அவர்களிடம் கூறினான். அவர்களும் அவனுக்கு ஆதரவளிப்பதாக கூறினர். மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியே வந்தான் ஹர்ஷா.
ஒருவழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தனர் கேசவன் குழுவினர். முதலில் தனது பிளாட்டிற்கு செல்வதாக சபாபதி சொல்ல, அவர்களும் அவனை அங்கே விடச் சென்றனர். அப்போது மோனிஷா தான் சபாபதியுடன் இருப்பதாக சொல்லி கேசவனையும் முகேஷையும் அனுப்பி வைத்தாள். அவர்களும் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று நன்றாக உணவு உண்டு விட்டு, வீட்டிற்குச் சென்றனர்.
இங்கே தனது பிளாட்டிற்கு வந்ததும் சபாபதி கோபத்தில் மேசையில் இருந்த பத்திரிகை எல்லாவற்றையும் தூக்கி எறிந்தான். அழகுக்காக ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சிலைகளை தூக்கி எறிய சென்றவனை தடுத்தாள் மோனிஷா.
“என்ன பண்றன்னு புரிஞ்சிதான் பண்றியா சபா?, எதுக்காக இப்படி நடந்துக்கிற?” என்றாள். அவனும், “என்னை வேற எப்படி நடந்துக்க சொல்ற மோனி? எனக்கு வர்ற கோபத்துக்கு அளவே இல்லை தெரியுமா? அவங்க எப்படி எனக்கு அந்த வீட்டில இனிமேல் சம்பந்தம் இல்லை. சொத்து தரமுடியாதுனு சொல்லலாம்? நல்ல வேளை மோனி நீ வந்த இல்லைனா என்னை அவங்க வீட்டை விட்டு போக அனுமதிச்சிருக்க மாட்டாங்க. ” என்றான்.
அவன் பேசியதைக் கேட்டவள், “எதுக்காக நான் போன் பண்ணப்போ நீ கட் பண்ண? அப்புறம் போனை ஆஃப் பண்ணி வைச்சே? ” என்று கேட்டாள். அதற்கு சபாபதி,” வீட்டில பிரச்சினை மோனி, நான் வீட்டில பிஸ்னஸ் பண்ணப் போறதா சொன்னேன். ஆனால் அவங்க அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அந்த கோபத்தில இருந்ததால உன்னோட போனை ஆஃப் பண்ணிட்டேன் “என்றான். அதற்கு அவளும்,” சரி இனிமேல் இப்படி பண்ணக் கூடாது.” என்றாள்.
மீட்டிங்கை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஹர்ஷா அங்கே நடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 45
written by Thivya Sathurshi