
Tag:
best tamil novel
24. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 24
சத்யராஜ் வழியாக அவ்விஷயத்தைக் கேட்டு அனைவரும் அதிர, அறைக்குள் படுத்திருந்தவன் அலறியடித்து வெளியே ஓடி வந்தான். மகன் கன்னத்தில் அறைந்த சரளா, “கேட்டியாடா… எல்லாம் உன்னால தான்.” மீண்டும் போட்டு அடிக்க, “ரி… ரி…” என்றதற்கு மேல் அவன் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.
அடித்து ஓய்ந்த சரளா மருமகளைக் காண அழுது கொண்டே ஓட, அவரைத் தாண்டி ஓடினான். அதிவேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வந்தடைந்தவனை வாசலில் தடுத்துப் பிடித்த பொன்வண்ணன், “எதுக்குடா இங்க வந்த? என் பொண்ணு இருக்காளா, செத்துட்டாளான்னு பார்க்க வந்தியா…” அவ சாவுக்கு நீ தான்டா காரணம்! உன்னையும், உன் குடும்பத்தையும் என்ன பண்றேன்னு பாரு.” கத்திக் கொண்டிருந்தார்.
“ஐயோ மாமா, அவள் அங்க என்ன நிலைமைல இருக்கா… லூசு மாதிரிப் பேசிட்டு இருக்கீங்க. ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணும், தள்ளுங்க!” என்றவனை உள்ளே அனுமதிக்காதவர் கதவை மூட முயன்றார்.
அதற்கு இடம் தராது, திடமான தேக்குக் கதவை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் மனைவியைப் பார்க்க ஓடினான். பின்னால் வந்த பொன்வண்ணன் அவன் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளிவிட, அவன் வீட்டு ஆள்கள் அனைவரும் வந்துவிட்டனர்.
“முதல்ல அவளைக் காப்பாத்தணும் மாமா…”
“டேய்! என் பொண்ணைக் காப்பாத்த நீ யாருடா? இவ்ளோ பெரிய வசதியை விட்டுட்டு, உனக்காக வந்தவளை மனசாட்சியே இல்லாம துரத்தி விட்டுட்டு இப்ப என்னடா நடிக்கிற? ரிது அப்பவே உன்னைப் பத்திச் சொன்னா… நான் தான் முட்டாள் மாதிரி உன்னை நம்பி இப்படி ஒரு நிலைக்குத் தள்ளிட்டேன். என் பொண்ணு சொன்ன மாதிரி, குடும்பத்தோட சேர்ந்து என் சொத்தை அபகரிக்கத்தான இப்படி ஒரு நாடகத்தைப் போட்டிருக்கீங்க.”
“என்ன பேசுறதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கோங்க மாமா. முதல்ல அவளை நான் பார்க்கணும், போக விடுங்க.”
“மரியாதையா வெளிய போடா. இனிப் பார்க்கக் கூடாத எந்த வேலையும் பார்க்க நான் தயாரா இல்லை.” என்றதும் கையெடுத்துக் கும்பிட்டவன், “நான் பேசுனதெல்லாம் தப்புதான் மாமா… தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. வேணாம்னு சொன்னது அவளோட நல்லதுக்காகத்தான்! அவ நல்லா இருக்கணும்னு தான் அப்படி ஒரு வேலையைச் செஞ்சேன். என்ன ஏதுன்னு தெரியாம வார்த்தையை விடாதீங்க. அவளைக் காப்பாத்தணும்… ப்ளீஸ்!”
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்ளோதான்! என் பெண்ணை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்குத் தெரியும். முதல்ல உன் வீட்டு ஆளுங்களைக் கூப்பிட்டுகிட்டுக் கிளம்புடா.” என மருமகனைப் பிடித்துத் தள்ளி விட்டார்.
விழுந்த வேகத்தில் எழுந்து நின்றவன், “யோவ்! அறிவில்ல உனக்கு. பொண்ணு சாகுற நிலைமைல இருக்கா, புத்தி கெட்ட தனமாப் பேசிட்டு இருக்க. நான்தான் சொல்றேன்ல, உன் பொண்ணு நல்லதுக்காகத்தான் அப்படிப் பண்ணேன்னு.” கத்தினான்.
அதைவிட அதிகக் கூச்சலோடு, “அப்படி என்னடா, என் பொண்ணு நல்லதுக்காகப் பண்ண… உன்ன மாதிரி ஒரு தரம் கெட்டவன் வார்த்தையை இன்னும் நம்புவேன்னு நினைச்சியா?” கேட்டார்.
“ஆமாய்யா! நான் தரம் கெட்டவன் தான்… தரமே இல்லாதவன் தான்! இந்தத் தரம் இல்லாதவனுக்கு, உன் பொண்ணு கூட வாழத் தகுதி இல்லன்னு தான்யா மனசக் கல்லாக்கிட்டு, அவ மனச உடைச்சு அனுப்பினேன். இப்படி ஒரு வசதிய என்னால கொடுக்க முடியுமா? காத்து படாம, கஷ்டம் தெரியாம வளர்த்த உன்ன மாதிரி என்னால வச்சிருக்க முடியுமா?
உன் பொண்ணு, அந்தக் குப்பை வீட்டுல வந்து சந்தோஷமா வாழ்வாளா? இந்த ஆட்டோக்காரனைப் புருஷன்னு சொல்லிக்க முடியுமா? தப்பே பண்ணாதவளை, எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்ளோ அசிங்கப்படுத்திட்டேன். அந்தக் குற்ற உணர்ச்சியைத் தொடச்சிப் போட்டுட்டு, சந்தோசமா இருக்க முடியுமா? உண்மை தெரிஞ்ச நாள்ல இருந்து உள்ளம் குத்துதுய்யா! அவளுக்குச் செஞ்ச பாவத்துக்கு எப்படிப் பிராயச்சித்தம் தேடுறதுன்னு தெரியல.” ஆக்ரோஷமாகத் தன் மனத்தை உடைத்துக் காட்டியவன் அவரை நெருங்கி நின்று,
“உங்க பொண்ண நான் எவ்ளோ லவ் பண்றன்னு தெரியுமா? அவள் என்னை விரும்புறதை விட ஆயிரம் மடங்கு அதிகமா விரும்புறேன். ஏன் எப்படின்னு காரணம் தெரியல. ஆனா, அந்தப் பணப்பிசாசை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் மறந்துட்டு, அவளுக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு முடிவெடுத்துத் தான் என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அவ முகத்துல வேர்வை சிந்திச்சு… ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் தவிச்சா… பாத்ரூம் போக சங்கடப்பட்டா…
அதையெல்லாம் ஒரு புருஷனா என்னால பார்க்க முடியல. நீங்க சொல்லலாம், அவளை வசதியா வச்சிக்கலாமேன்னு. எத்தனை வசதியை என்னால தர முடியும்? ஏணி வச்சாலும், எட்ட முடியாத உசரம் உன் பொண்ணு! அந்த உசரத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத் தகுதி இல்லாதவன் நான்… எந்த ரெண்டு சேரக் கூடாதோ, அந்த ரெண்டைக் கடவுள் சேர்த்துட்டான். சேர்த்ததுக்காக, உன் பொண்ணைக் கஷ்டப்படுத்தி வாழச் சொல்றியா? இல்ல, என் குடும்பம் மொத்தத்தையும் விட்டுட்டு வந்து இந்த வீட்ல என்னை வாழச் சொல்றியா? இந்த ரெண்டுத்துல எது நடந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல சலிப்பு வந்துடும். உன்னால தான் நான் இப்படி இருக்கேன்னு வெறுப்பு வரும். ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த காதல் அர்த்தமில்லாமல் போகும்.” என்றவன் கண்ணில் இருந்து கண்ணீர் படை எடுத்தது.
பொன்வண்ணன் உட்படக் கேட்ட அனைவருக்கும் கருடன் எண்ணம் புரிந்தது. மாமனாரின் கருணைப் பார்வையை உணர்ந்து, “இது எல்லாத்தையும் தாண்டி, என் பொண்டாட்டிய என்னால கஷ்டப்படுத்த முடியாது. அவளோட கம்பீரத்தையும், மிடுக்கையும் பார்த்தவன் நான். அவ பார்க்குற பார்வைல இருந்து, கால் மேல கால் போட்டு ஆணவமா உட்காருற வரைக்கும் அணு அணுவா ரசிச்சு இருக்கேன். அது எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு, எனக்குப் பொண்டாட்டியா கட்டுப்பட்டு வாழுன்னு சொல்ல என்னால முடியாது. அவளுக்கு நான் செஞ்ச எல்லாமே போதும். நான் வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ, அப்படியே இருக்கணும்னு தான்…”
அதற்கு மேல் பேச அவனிடம் வார்த்தைகள் இல்லை. மாமனார் முன்பு தலை குனிந்து கண்ணீர் சிந்தினான். அவனது கண்ணீர், அனைவரையும் அழ வைத்தது.
கருடன் செய்தது, ‘சரி தவறு’ என்ற நிலையைத் தாண்டி அவன் நிலையை எண்ணிக் கவலை கொண்டனர். எதிர்த்து நின்ற பொன்வண்ணனுக்குக் கூட மனம் இரங்கி விட்டது. மெதுவாக அவனது தோள் தட்ட, தலை நிமிர்ந்து பார்த்தான் மாமனாரை.
“போ…” என அவர் விலகிக் கொள்ள, ஓட்டம் பிடித்தான் தன்னவளைப் பார்க்க.
“ரிது… ஏய் கதவத் திறடி! ஏன்டி இப்படிப் பண்ண? ஏய் திறம்மா…”
எத்தனை முறை தட்டியும் அந்தக் கதவு திறக்கப்படவில்லை. அவசரத்தின் நிலை உணர்ந்து, வேகமாக நான்கு இடி இடித்து அந்தக் கதவைத் திறந்தவன் உள்ளே ஓடி வர, கால்கள் தட்டுப்பட்டது. தடுத்த இடத்தில் அப்படியே நின்றவனுக்கு இதயம் எக்குத்தப்பாக எகிறியது. கண்கள் விரிந்து, வாய் அகண்ட நிலையில் நின்று கொண்டிருந்தவன் முன்பு, கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் ரிதுசதிகா.
“அடடடா…” கை தட்டினாள்.
பின், “வெல்கம், மிஸ்டர் கருடேந்திரன்! உங்களுக்காகத் தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” எனக் காலைத் தோரணையாக ஆட்டினாள்.
“நல்லா இருக்கீங்களா?” கேட்க, பதட்டம் குறைந்து முறைப்பு அதிகரித்தது அவனுக்கு.
“அச்சச்சோ… கண்ணெல்லாம் கலங்கி இருக்கற மாதிரி இருக்கு. உடம்புக்கு எதுவும் முடியலையா? காசு வாங்க வந்தியா… ப்ச்! முன்ன மாதிரி எல்லாம் நீ என் ரூம் வரைக்கும் வரக்கூடாது. அந்த டீலிங் அன்னையோட முடிஞ்சு போச்சு. பிச்சை கேட்கிற மாதிரி இருந்தா, வாசல்ல நின்னு அம்மா, தாயே! உடம்பு முடியல. பிச்சை போடுங்கமான்னு சொல்லணும். ஓகே!”
“அறிவு இருக்காடி உனக்கு!” என அடிக்கப் பாயும் அவனைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்தவள், “அப்புறம்… பர்பாமன்ஸ் எல்லாம் பயங்கரமா இருந்துச்சு. நீதான் ஸ்கிரிப்ட் எழுதுனியா?” கேலி செய்ய, அடிக்க வந்தவன் கைகள் அப்படியே நின்றது.
“ரிது, செத்த பாம்பா இருந்தாலும், விஷம் உள்ள பாம்பு! சாதாரண மனுஷன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது.”
“அசிங்கமா இல்லயாடி உனக்கு?”
“ப்ச்! இருந்துச்சு. அன்னைக்கு நீ எல்லாரு முன்னாடியும் என்னை அப்படிப் பேசும்போது.”
“அதுக்குத்தான் இப்படிப் பழி வாங்குறியா?”
“ச்ச! ச்ச!” என இதழ் வளைத்தவள், “நான் ஏமாந்துட்டனா, இல்லையான்னு தெரிஞ்சுக்கப் பண்ணேன்.” என இரு கண்களையும் சிமிட்டினாள்.
கருடேந்திரன் முறைத்தபடி நின்றிருக்க, “உன் கண்ணுல எனக்கான காதலைப் பார்த்திருக்கேன்.” எழுந்து வந்து அவன் முன்பு நின்று ஏளனத்தோடு கூறியவள், “என்ன சொன்னடா கருடா? தொட்டாலே அருவருப்பா இருக்கற உன்ன ரசிச்சுத் தொட்டேன்னா…” என்று அவனைச் சுற்றி வந்தாள்.
“இங்கதான் நீ தோத்துப் போன… நீ பொய் சொல்லலாம், உன் உணர்வு பொய் சொல்லுமா? எந்த நோக்கத்துக்காக என்னைத் தொடுறேன்னு தெரியாம கூடவா இருந்திருப்பேன். எந்தக் காரணத்துக்காக நீ அப்படிப் பேசி இருந்தாலும் தப்பு தப்புதான்! அந்தத் தப்புக்கான தண்டனையை நான்தான உனக்குக் கொடுக்கணும். அதனாலதான் இப்படி ஒரு டிராமா… ரொம்பப் பழைய டிராமாவா இருந்தாலும் செம்மையா ஒர்க் அவுட் ஆச்சுல்ல…” என்றவள் முன்பு, அவள் நின்றது போல் நிராயுதபாணியாக நின்றான் கருடேந்திரன்.
“நீதான் தாலி கட்டுன… நீதான் அன்பு காட்டுன… நீதான் நெருங்கி வந்த… நீதான் வேணாம்னு சொன்ன…” என அவனுக்கு நேராக நின்று கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டவள்,
“இவ்ளோ பண்ண உனக்கு நான் ஏதாச்சும் பண்ணனும்ல.” என்றுவிட்டு அமைதியாகினாள்.
நிசப்தமான அமைதி அங்கு நிலவியது. போதும் என்ற வரை அந்த அமைதியை அவனுக்குக் கொடுத்தவள், “உன்ன மாதிரிக் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுனாதான் போவியா?” என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் அவளின் மனத்தைப் படித்தவன் கால்கள் அமைதியாக வெளியேறத் திரும்பியது.
அவன் செல்லும் வரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவள் சட்டென்று திரும்பிட, ஒளித்து வைத்த கண்ணீர் உருண்டு திரண்டு விழியின் ஓரம் நின்றது.
***
பலம் பொருந்திய இருவரும் இருவரையும் தாக்கிக் கொண்டார்கள். இதில், இருவரின் காதலும் சேதப்படும் என்பதை உணர்ந்தும். ரிது, அந்தச் சம்பவத்தை நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. சுனாமிக்குப் பின்னான சேதாரங்களைச் சரி செய்ய இந்த ஒரு மாதம் போதவில்லை மூத்தவர்களுக்கு.
ஒரு வாரம் அமைதியாக இருந்தவள், பழையபடி தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். முன்னர் இருந்ததை விட, இன்னும் கடுமை கூடியிருந்தது அவளிடம். பெற்ற மகளைச் சமாதானம் செய்ய முடியாது தினமும் தோற்றுப் போனவர் இன்றைக்கும் பேசுவதற்காக வந்தார். அவர் வரும் வரை ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள் உடனே மடிக்கணியைக் கையில் எடுத்துக் கொள்ள,
“இன்னும் எவ்ளோ நாள் இப்படி இருக்கப் போற?” பேச்சை ஆரம்பித்தார்.
வார்த்தைகளை வெளியிடத் தயாராக இல்லை அவரின் மகள். அவரது நினைவு, அன்றைய சம்பவத்திற்குத் திரும்பியது.
மனம் நோக உள்ளே வந்தவர் மருமகனைக் கண்டபடி திட்ட, “அவன் நடிக்கிறான் அப்பா…” என்றாள்.
குழப்பத்தோடு நிற்கும் தந்தையை ஏறெடுத்துப் பார்க்காது, “அவன் பண்ணதும், பேசினதும் உண்மை இல்ல. எதுக்காக இப்படிப் பண்றான்னு தெரியல. ஆனா, உண்மை இல்லன்னு மட்டும் தெரியும். அவன் மனசுல நான் இருக்கேன்.” என்றது வரை அமைதியாகப் பேசியவள்,
“இந்த அடங்காப் பிடாரியோட, கடைசி வரை வாழ முடியாதுன்னு இப்படிப் பண்ணிட்டான் போல.” எனக் கண் கலங்கினாள்.
பொன்வண்ணனுக்கு மருமகன் மீது நம்பிக்கை இருந்தாலும், நேரடியாகப் பேசிய பின் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மகளுக்கும், மருமகனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவரிடம், “நான் சொல்லற மாதிரிப் பண்ணுங்கப்பா.” எனத் தன் திட்டத்தைக் கூறினாள்.
அவர் வேண்டாம் என்று மறுக்க, “அவன் காதலுக்கு, நான் தகுதியானவள் இல்லயோன்னு வலிச்சுக்கிட்டே இருக்குப்பா. எனக்கு அதுக்கான விடை கிடைக்கும்! அதுக்கப்புறம் அவன நான் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றாள்.
“ரெண்டு பேரும் சண்டை போடும்போது ஒன்னா இருந்துட்டு, லவ் பண்ணும் போது இப்படிப் பிரிஞ்சு இருக்கீங்களே. மனச விட்டுப் பேசுனா எல்லாம் சரியாகிடும்னு தோணுது. ஒரே ஒரு தடவை கருடன்கிட்ட பேசிப் பாரு ரிது.”
“அவன் சொன்ன மாதிரி இந்த வாழ்க்கை ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. இது இப்படி இருக்குறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்று விட்டாள் முடிவாக.
***
அவன் வாழ்க்கையில், தாலி என்ற ஒன்று நுழைவதற்கு முன் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுத்தவள் தான் இல்லை. ஆசையோடு வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவள் படும் அவஸ்தையில் மனம் நொந்து போனான். இப்படியான கஷ்டங்களை, மனதார நேசித்தவளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஒரு முடிவை எடுக்க, அந்த முடிவே இவன் வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்கிவிட்டது.
வெறுமையாக இருந்தது வாழ்வு. மூன்று இரவுகள் என்றாலும், ஒன்றாகப் படுத்திருந்தவள் ஓயாது இம்சை செய்தாள். அவளின் தொந்தரவு தாங்காது, அதிக நேரம் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். பெற்றவர்களுக்குப் பிள்ளையின் வலி புரிந்தது. அவனாகச் சரியாகட்டும் என்று காத்திருந்து இரு மாதத்தைக் கடந்து விட்டார்கள்.
சோர்வாக வந்தமர்ந்த மகனை மடிமீது சாய்த்துக் கொண்ட சரளா, தலைகோதி விட்டார். அன்னையின் அரவணைப்பில் சுகமாகக் கண் மூடியவன் எண்ணத்தில் அவள். இந்த இரு மாதத்தில், எந்தத் தொடர்பும் இல்லை இவர்களிடம். அவன் ஆசை கொண்டது போல், அனைத்தும் முடிந்து விட்டாலும் வலி மட்டும் குறையவில்லை. நடுத்தர வர்க்கத்தில் பிறந்த தனக்கு, மேல்தட்டு வர்க்கத்திலிருந்து மனைவியைக் கொடுத்த கடவுளை வெறுத்தான்.
“கருடா…” என்றழைத்தார் சத்யராஜ்.
அமைதியாக எழுந்தமர்ந்த மகன் பக்கத்தில் அமர்ந்தவர், “ஏன்டா இப்படி இருக்க, நீதான இந்த முடிவை எடுத்த… அப்புறம் எதுக்காக உன்னை நீயே கஷ்டப்படுத்திட்டு இருக்க?” பேச்சைத் தொடங்க தலை குனிந்து அமர்ந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுக்கு, வசதி தான் பிரச்சினைனு தப்பா நினைச்சிட்டு இருக்க… ஆக்சுவலா மனசுதான் பிரச்சினை!” என்றதும் அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.
“உன் பொண்டாட்டி சந்தோஷத்துக்கு என்ன தேவையோ, அதை நீ தான் பண்ணனும். கட்டுனவளுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தப்பு இல்ல. திமிரா பார்த்த பொண்ணு உனக்காக இந்த வீட்ல வந்து வாழ்ந்தாளே, அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிற? நீ அவளுக்கு வேணும்! உன் கூட வாழுற வாழ்க்கை வேணும். ஏணி வச்சாலும் எட்ட முடியாத தூரம்னு சொல்றியே, அப்படிப்பட்டவள் கடைசிப் படிக்கட்டு வரைக்கும் இறங்கி வந்துட்டா… அவளுக்காக, நீ ஒரு பத்துப் படி ஏன் ஏறக்கூடாது? உன் பக்கம் வந்தா கஷ்டப்படுவான்னு நினைச்சா அவ பக்கம் நீ போயிடு.” என்றதும் கருடேந்திரன் எதிர்த்துப் பேச வர,
“பொண்ணுங்க மட்டும் தான் குடும்பத்தை விட்டுட்டு வாழ வரணுமா?” கேட்டு அவன் வாயை அடைத்தார்.
“நீ அவளை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கறியோ, அதைவிட அதிகமா அவ இந்தக் குடும்பத்தைப் பார்த்துப்பா… அவ மட்டும் இல்ல, எல்லாப் பொண்ணுங்களும் பார்த்துப்பாங்க. உனக்குள்ள ஆம்பளைன்ற எண்ணம் ஒளிஞ்சிருக்கு. அதுதான், அவள் கூடப் போய் அடிமையா வாழ மாட்டேன்னு தப்பா யோசிக்க வச்சிருக்கு… பொண்டாட்டிக்காக இறங்கிப் போனவன் தோற்க மாட்டான்.
அவளுக்காக அஞ்சு நாள் இரு. அவ உனக்காக ரெண்டு நாள் இந்த வீட்ல இருக்கட்டும். உங்களுக்குன்னு குழந்தை குட்டி வந்ததுக்கு அப்புறம் எங்க எல்லாரையும் மறந்திடுவீங்க. உங்க குடும்பத்துக்கு என்ன வேணும், உங்க குழந்தைங்களுக்கு என்ன வேணும்னு மட்டும் தான் யோசிப்பீங்க. அப்படி ஒரு தருணம் வர வரைக்கும் ரெண்டு பேரும் ஒத்துமையா ஒரு சேர முடிவு பண்ணி வாழ ஆரம்பிங்க.”
இரவெல்லாம் தூங்காமல், மொட்டை மாடியில் நடையாக நடந்து கொண்டிருந்தான் கருடேந்திரன். பெற்றவர்கள் பேசிய அனைத்தும் மனத்தைப் போட்டுக் குடைந்தது. ரிதுவைப் பிரிந்திருந்த இந்த இரு மாதமே, அவள் மீதான பிரியத்தைப் புரிய வைத்துவிட்டது. இனியும், இந்தப் பிரிவை வளர்க்க விரும்பவில்லை கருடேந்திரன். கடைசியாக ஒரு முடிவெடுத்து, மணியைப் பார்த்தவன் விடியற்காலை என்றும் நினைக்காது மாமனாரை அழைத்தான்.
***
“ரிது…” உற்சாகமாக அழைத்தார் மகளை.
தயாராகிக் கொண்டிருந்தவள், தந்தையின் குரலில் இருக்கும் குதூகலத்தை உணர்ந்து தலை உயர்த்த, “இன்ஸ்டிடியூட்டுக்குத் திரும்ப வரதா போன் பண்ணான்.” என்றார்.
“யாரு?” எனத் தெரியாதது போல் கேட்கும் மகளைக் கண்டு சிரித்தவர், “உன் புருஷன்!” என முறைப்பை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
அவனால் உருவாக்கப்பட்ட புது நிர்வாகத்தை, நேற்று வரை கட்டியவள் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். இன்று காதில் விழுந்த செய்தியால், அந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க விரும்பாது வேறு பக்கம் சென்று விட்டாள். விடிந்ததும், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்தவன் உற்சாகத்தோடு கிளம்பினான்.
அந்த உற்சாகம் சிறிதும் குறையாது பயிலகம் வந்தவனை வரவேற்றார் பொன்வண்ணன். மாமனாரைக் கண்டு புன்னகைத்தவன் மனதார நலம் விசாரிக்க, தோள் மீது கை போட்டு அரவணைத்தவர், “ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” ஒரே வார்த்தையில் தன் மனத்தைத் தெரிவித்தார்.
தன்னறைக்கு வந்தவனுக்கு யோசனை எல்லாம் ரிதுவே. இந்நேரம் விஷயம் தெரிந்திருக்கும். இன்னும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதில் சோர்ந்து போனவன், விடாது முயற்சிக்க முடிவெடுத்தான். அதன்படி நாளும் பொழுதுகளும் ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஆட்டோ ஓட்டி முடித்த கையோடு பயிலகம் வந்து விடுவான்.
மாமனாரிடம், மனைவியைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தெரியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவன் இனியும் வேலைக்கு ஆகாது என்று, “என்ன மாமா, உங்க பொண்ணு மசியவே மாட்டேங்குறா…” என முகத்தைப் பாவமாக வைத்தான்.
“தன் வினை தன்னைச் சுடும் மாப்பிள்ளை.”
சட்டென்று முறைத்தவன், “நேரம் பார்த்துக் குத்திக் காட்டுறீங்களா?” கேட்டான்.
“முன்ன விட, இப்ப டபுள் ஸ்ட்ராங்கா இருக்கா… எனக்குத் தெரிஞ்சு ரொம்பக் கஷ்டம்! யானை தன் தலையில மண் அள்ளிப் போட்ட மாதிரி, நல்லா அள்ளிப் போட்டுக்கிட்டு இப்பப் புலம்பி என்ன ஆகுறது?”
“என்னை ஒரே ஒரு தடவை பார்த்தா அவ மனசு மாறிடும் மாமா.”
“அப்போ வீட்டுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை…”
“மரியாதை ரொம்பப் பலமா இருக்கே மாமா…”
“எல்லாம் அன்னைக்கு, யோவ்! அப்படின்னு பேசின மாயம்தான் மாப்பிள்ளை!”
“சாரி மாமா…”
“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மாப்பிள்ளை… வீட்டுக்கு வந்து அவகிட்டப் பேசிப் பாருங்க.”
“அது சரி வராது மாமா, முதல்ல அவ என்னை மன்னிக்கணும்!”
“என்னதான் இதுக்கு முடிவு?”
பதில் சொல்லாமல், உதட்டைப் பிதுக்கிய கருடேந்திரன் தீவிரமாக யோசித்தான். அதன் பலனாக, மூன்று சக்கர வாகனம் ஃபேக்டரியை நோக்கி நகர்ந்தது. தினம் அவள் வரும் நேரம், போகும் நேரம் எல்லாம் வாசலில் நிற்க ஆரம்பித்தான். கட்டியவளின் தரிசனம் சிறிதும் கிடைக்கவில்லை. அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாளையும் கடத்தினாள்.
நாளுக்கு நாள் நொந்து போனான் கருடேந்திரன். என்ன செய்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அவன் நிலை கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கட்டியளோடு கைகோர்த்த பின்பு தான், இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டான். அவன் வைராக்கியத்தை உடைக்க வந்தாள் நதியா.
“என்னண்ணா, செலபரேஷன பத்தி யோசிச்சிட்டு இருக்க போல…”
“செலபரேஷனா?”
“என்ன அண்ணா இப்படிக் கேக்குற? வீட்ல இருக்கற எல்லாரும் நீ எப்படிக் கொண்டாடப் போறன்னு பார்க்க ஆர்வமா இருக்காங்க.”
“என்னன்னு சொல்லு?” என எரிந்து விழுந்தான்.
“ரொம்ப நல்ல மூட்ல இருக்க போல!”
“வெறுப்பேத்தாத நதியா. நானே உங்க அண்ணி திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குறான்னு கடுப்புல இருக்கேன்.”
“அப்போ லவ்வர்ஸ் டேக்கு ஒன்னும் இல்லையா?”
“மண்டைய ஒடச்சிடுவேன், மரியாதையாப் போயிடு.”
“கூல் பிரதர்!” என அவனது தோள் தட்டிய நதியா, “வாழ்க்கை, உன்ன வச்சு விளையாடுதா? இல்லை நீ வாழ்க்கையோட விளையாடுறியான்னே புரியல!” தீவிரமாக விட்டத்தைப் பார்த்துப் பேசினாள்.
“இதுவரைக்கும் என்கிட்டக் கேவலமா திட்டு வாங்கினது இல்லையே.”
“இனித் திட்டி என்ன ஆகப்போகுது? போன வருஷம் லவ்வர்ஸ் டேக்கு என்ன பேச்சுப் பேசின, ஞாபகம் இருக்கா…” என்றவளோடு அந்த நாளிற்குச் சென்றான் கருடேந்திரன்.
சென்ற ஆண்டு காதலர் தினத்திற்கு, மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்தார் சத்யராஜ். அதைப் பார்த்தவன் செய்த கேலியில் வாங்கிக் கொடுத்த பூவைத் தலையில் கூட வைக்கவில்லை சரளா. பெற்ற மகனுக்கு, “உன் வாழ்க்கைல லவ்வர்ஸ் டேவே வராதுடா.” சாபம் கொடுத்தார் சத்யராஜ்.
தந்தை முன் நெஞ்சை நிமிர்த்து நின்றவன், “வருஷத்தில் ஒருமுறை தான் காதலர் தினம் வருது. அட, உங்க மருமகளுக்கும் எனக்கும் தான் வருஷம் முழுக்க வருது.” எதிர்காலம் தெரியாமல் ஆடிப்பாடி வெறுப்பேற்றியவன்,
“அடுத்த வருஷம் லவ்வர்ஸ் டேக்குப் பாருங்க நைனா, என் பொண்டாட்டியும் நானும் சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு செலப்ரேட் பண்ணப் போறதை…” என்றிருந்தான்.
அதை ஞாபகப்படுத்திய நதியா, “போன வருஷம் ஆள் இல்லாம சபதம் போட்ட, இந்த வருஷம் ஆள் இருந்தும்… ம்ஹூம்!” என்ற விட்டுச் செல்ல ரத்த நாளங்கள் கொதித்தது இவனுக்கு.
23. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 23
இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியலை வரவேற்றவளைக் காபியோடு வரவேற்றார் சரளா. கனிந்த அவர் முகத்தைக் கண்டபின் அனைத்தும் காணாமல் சென்றது. மருமகள் வந்த நாளைக் கொண்டாட நினைத்தவர், உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினார். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டு அவர் முன்பு நிற்க, அதை இதை வாங்கி வரச் சொல்லிக் கட்டளையிட்டார்.
அங்கிருக்கும் நால்வருக்கும், அரசியைக் கவனிக்கும் சேவகியாகத் தான் தெரிந்தார் சரளா. அவள் அமர்ந்தால் இருக்கையைத் துடைத்து விடுவது, வேர்த்தால் விசிறியை எடுத்து வீசுவது, ஓயாது சாப்பிட எதையாவது கொடுப்பது என்று அமர்க்களம் செய்து விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல், அங்கிருந்தவர்கள் வயிற்றெரிச்சலை உணர்ந்தவள் அவரைச் சமாளித்துவிட்டு,
“நான் உங்களுக்கு குக் பண்ணித் தரேன் அத்தை.” என்றாள்.
“அய்யய்யோ! அதெல்லாம் வேண்டாம்மா. நீ அவனோட டிவி பார்த்துட்டு இரு. சாப்பாட்டு வேலைய நான் பார்த்துக்கிறேன்.”
“உங்க பர்த்டேக்கு என்னோட ட்ரீட்.”
மொத்தமாக மாமியார் வாயை அடைத்தவள், பிரியாணி செய்வதற்காக அனைத்தையும் வாங்கி வரக் கட்டியவனோடு கிளம்ப, “அவன் மட்டும் போகட்டும் மா.” தடுத்தார்.
ஏன் என்று மூத்த மகன் காரணம் கேட்க, “ஊருக் கண்ணு பொல்லாத கண்ணுடா. என் வீட்டு மருமகள் இப்படிச் செவசெவன்னு இருக்கிறதைப் பார்த்தா வயித்தெரிச்சல்ல புலம்புவாங்க… யாரு கண்ணும் என் மருமகள் மேல படக்கூடாது.” என்றதைக் கேட்டதும் மாமியாரைக் கட்டிக் கொண்டு ரிது சிரிக்க,
“எங்க போய் முடியப் போகுதோ…” கருடேந்திரனின் உடன்பிறப்புகள் புலம்பினார்கள்.
அவர்கள் புலம்பலுக்கு நடுவில், சமைக்க அடுப்பங்கரைக்குச் சென்றவளுக்கு எது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு இருவர் மட்டுமே நிற்கும் இடம் என்பதால், விசாலமாக நடந்தவளுக்கு எதுவும் ஒத்துப்பட்டு வரவில்லை. அவள் நிலையறிந்து உதவிக்கு வந்தான் கட்டியவன். அவனோடு சேர்ந்து நதியாவும், மூர்த்தியும் வந்து உதவி செய்தார்கள்.
ஜன்னல் வழியாக வரும் காற்றுப் போதவில்லை அவளுக்கு. சமையலின் வெப்பம் வேறு பாடாய் படுத்தியது. அங்கு வளர்ந்தவர்களுக்கு அது சகஜமாக இருக்க, கழிவறையில் கூட குளிரூட்டியை வைத்திருந்தவளுக்கு இது நரகமாக இருந்தது. அதிலும், அந்தக் குளிரூட்டியை அதிகபட்சக் குளிர்ச்சியில் வைத்து வளர்ந்த உடம்பு அது. குபுகுபுவென்று வேர்த்ததில் மயக்கம் வருவது போல் இருந்தது. வேகமாக நடுக்கூடத்திற்கு ஓடி வந்தவள் மின்விசிறியின் முன்பு நின்று கொள்ள,
“இதுக்குத் தான்மா நான் சொன்னேன்.” குறைப்பட்டுக் கொண்டார் சரளா.
“நீ உட்கார்ந்து டிவி பாருமா, அத்தையே சமைப்பா…”
“இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்.”
“பரவால்லம்மா, எல்லாத்தையும் அவ பார்த்துப்பா. உனக்கு என்ன படம் பிடிக்கும்னு சொல்லு, போட்டு விடச் சொல்றேன்.”
மாமனாரின் வார்த்தையை மீற முடியாது அவரோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். இருவரும் கதை பேசிக்கொண்டே நேரத்தைக் கடந்தனர். மதிய உணவை வெற்றிகரமாகச் சமைத்து முடித்த சரளா, அதைச் சிறு கிண்ணத்தில் போட்டுவந்து மருமகளிடம் கொடுத்து ருசி பார்க்கச் சொன்னார்.
அள்ளிப் பருகியவளுக்கு தேவாமிர்தமாக இருந்தது. கண்களை விரித்துத் தலையாட்டும் அவள் அழகில், திருஷ்டி கழித்துப் போட்டவர் சாப்பிட அனைவரையும் அழைத்தார். தனியாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவள் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டாள். எல்லாம் புது அனுபவமாக இருந்தது. சிரித்துப் பேசி மதிய உணவை முடித்த அனைவரும் மாலை எங்காவது சென்று வரத் திட்டமிட்டனர். அவர்கள் பேசுவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மனதாக முடிவு செய்து மெரினா கடற்கரையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இவை அவளுக்குச் சாதாரண ஒன்று. அறையில் இருந்து பார்த்தாலே கடல் அலை துள்ளிக் குதிக்கும். அப்படியான ஒன்றிற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் திட்டமிடும் அவர்களை மனமகிழ்வாகப் பார்த்தவள், அதிசயித்துப் போனாள். எப்படிச் செல்வது என்று தனியாகத் திட்டமிடுவதில். கடைசியாக ஒரு முடிவை எடுக்க, நெஞ்சில் கை வைத்தாள் கருடனின் மனைவி.
முன்னிருக்கையில் கருடனோடு சத்யராஜ் அமர்ந்து வர, பெண்கள் மூவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர். மூர்த்தி நின்றிருப்பதைக் கண்டு, “நீங்க எப்படி வருவீங்க?” கேட்க, “கம்பில உட்கார்ந்துட்டு வருவேன் அண்ணி.” என ஓடி வந்து அமர்ந்தான்.
அமளி துமளியாக, மெரினாவைச் சென்றடைந்தவர்கள் ஆசை தீரப் பொழுதைக் கழித்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் கைகாட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான் கருடேந்திரன். இவையும், ரிதுவின் வாழ்வில் மிகவும் புதிது. இதுபோன்ற அனுபவத்தை ஒரு நாள் கூட இதற்கு முன் சந்தித்தது இல்லை. எல்லாம் அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். இவளாகத் தேடிச்செல்லும் பொருளும், இவளைப் போன்று மினுமினுப்பாக உயர்ந்த இடத்தில் தான் இருக்கும். அங்கெல்லாம் பணம் மட்டுமே அனைத்துமாகத் தெரிந்திருக்கிறது. அவை அனைத்தையும் ஓரம் கட்டியது இந்தக் குடும்பம்.
“உனக்கு ஏதாச்சும் வேணுமா?”
“ம்ஹூம்!”
“சும்மா எதையாவது கேளு.”
பார்வையைச் சுழற்றியவள், “அது!” ஒன்றைக் கை காட்ட, “ஹா ஹா… வா.” அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தான்.
நெருப்பு மூட்டிச் சுட்டுத் தரும் சோளத்தைத் தான் கேட்டாள். ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொடுத்தான். ஆசைப்பட்டுக் கேட்டவளுக்கு நான்கு வாய் கூட உண்ண முடியவில்லை.
“ஊ… ஆ…” ஓசை கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
குடும்பத்தோடு அமர்ந்திருந்தவன் பார்வையில் அவை விழுந்தது. படபடக்கும் கண்களும், உப்பு மிளகாய்த்தூள் சுவையில் நிறம் மாறிப்போன அந்த அதரங்களும் ரசிக்கத் தூண்டியது. அடிக்கடி வலது கையால் உதட்டைத் துடைத்து, அதை ஆடையில் துடைத்துக் கொள்பவள் அவஸ்தை அழகாகத் தெரிந்தது. சுற்றி இருக்கும் குடும்பத்தாரை மறந்தவன் அவள் பின்னே அலைய ஆரம்பித்தான்.
பேசிக் கொண்டிருந்ததால், இவன் நிலையை யாரும் அறியவில்லை. தீவிரமாகச் சோளத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தவளும் இவனைக் கவனிக்கவில்லை. தலைமுடி முதல், மணலில் புதைந்திருந்த பாதம் வரை எல்லாம் அவனுக்காக என்ற எண்ணம் மெய்சிலிர்க்க வைத்தது. முதல்முறையாக இவளைப் பார்க்கும் பொழுது, இப்படியான தருணத்தில் இருப்போம் என்பதை எதிர்பார்த்திடாதவனுக்கு, இந்தத் தருணம் பொக்கிஷமாக அமைந்தது.
“ஊஃப்!” என்றவள் நுனி நாக்கால் இதழை எச்சில் செய்து, “வேண்டாப்பா!” அவனை நோக்கி நீட்ட, அவள் செய்த செயலோடு அவன் இதயம் தொப்பென்று கடற்கரை மணலில் விழுந்தது.
நீட்டிய கையோடு அவனையே ரிது பார்த்திருக்க, அவனது பார்வை அந்த அதரத்தை மொய்த்தது. குடும்ப ஆள்களை எண்ணிக் கண்ணால் கண்டிக்கும் மனைவியைக் கண்ணடித்துக் கவர்ந்தவன், யாரும் அறியா வண்ணம் பறக்கும் முத்தத்தைத் தூதுவிட, அந்தி மறையும் சூரியன் இவள் வெட்கத்தைப் பார்த்து விட்டது.
***
சரளாவின் பிறந்தநாள் அன்றைய இரவை எட்டியது. நேற்று இரவு சரியாக உறங்காதவள், இன்றைய இரவையும் உறங்கா இரவாகக் கழித்தாள். காலை கண் விழித்ததும், கடவுளைத் தேடி ஓடாமல் மருமகளைத் தேடி வந்த சரளாவோடு, சகஜமாகப் பழக ஆரம்பித்தவள் அன்றைய வேலைகள் அனைத்தையும் அவளே செய்ய ஆரம்பித்தாள். அவர் வேண்டாம் என்றதையும் ஏற்காமல் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்.
கருடன் எழுவதற்கு முன்னால், காலை உணவை முடித்துவிட்டுத் தயாராகி வந்தவள் அழகை அங்கிருந்த அனைவரும் ரசித்தார்கள். நீல நிறப் பட்டுடுத்தி, மிதமான அலங்காரத்தில் நின்றவளுக்குச் சிகை மட்டுமே குறையாகத் தெரிந்தது. அதை வாய் விட்டுச் சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வாளோ என அங்கிருந்த அனைவரும் மனதிற்குள் வைத்துக் கொள்ள, கண்ணாடியைப் பார்த்தவளுக்கு அந்த எண்ணம் சிறிதாக எட்டிப் பார்த்தது.
அதற்குக் காரணம் அன்று அவன் சொன்னதுதான். எப்படியான பெண் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக நிற்கிறாள் ரிது. அன்று பூ வாங்கித் தர ஆசையாக இருக்கிறது என்றவனுக்காக, முடியின் மீது ஆசை பிறந்தது. எப்படியாவது அதையும் வளர்த்து அவனுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தவள் மெல்லத் தட்டி எழுப்பி இன்பத்தில் ஆழ்த்தினாள்.
கதவு திறந்து இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால். அவன் அவஸ்தை கண்டு ஏளனம் செய்தவள், காலை உணவைப் படையல் இட்டு பாராட்டையும் வாங்கினாள். அத்தோடு நிற்காமல், அந்தக் குடும்பத்தோடு சேர என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தையும் அவளாக ஓடிச் சென்று செய்ய,
“எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“உனக்கு இப்படி இருந்தால் புடிக்கும்ல.”
“உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்துறன்னு தோணுது.”
“ப்ச்!” என அவன் சட்டை பட்டனைத் திருகியவள், “நீ என் கூட இருக்கிறது தான் எனக்குச் சந்தோஷம்! அது இந்த வீட்ல கிடைக்கும்னா இப்படி எல்லாம் இருக்க நான் ரெடி!” என்றவளை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டான். அனைத்தும் சுகம் என்ற மகிழ்வில் சிரித்தபடி அவள் இருக்க, முத்தமிட்டவன் முகம் தான் நிறம் மாறியது.
அடுத்த நாளும் அழகாகப் பிறக்க அவளின் வாழ்வு இனிதே தொடங்கியது. இரவானால், தூக்கம் தான் வசப்படவில்லை. காலை எழுந்ததிலிருந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பவள் மீது தான் அவன் பார்வை இருந்தது. அதை அறிந்தவள் காதலோடு கண்ணடிக்க, இதழ் அசைத்துச் சிரித்தான் குரோதத்தோடு.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வந்தவளிடம், “இந்த டிரஸ்ஸை மட்டும் கொஞ்சம் வாஷ் பண்ணித் தரியா.” கொடுக்க, மொட்டை மாடிக்குச் சென்றாள். சமையல் தெரியும் என்பதால் அதில் கடினப்படாதவள், துணி துவைத்து முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள். பின் இடுப்பு வலியில் நகர மறுத்தது. அதை முடித்த கையோடு,
“காஃபி போடுறியா?” கெஞ்சலோடு கேட்டான்.
“இந்தாப்பா.” என்றதை வாங்கிக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.
“என்கிட்டக் கேட்டு இருந்தா நான் போட்டுக் கொடுத்திருப்பேன்ல டா.”
“அவ எதுக்கு இருக்கா?” என்று விட்டான் வெடுக்கென்று.
ஒரு நொடி அங்கிருந்த அனைவருக்கும் முகம் வாட, “இப்படி எல்லாம் இருப்பன்னு எதிர்பார்க்கவே இல்லம்மா… சரளா சொன்ன மாதிரி நீ ரொம்ப நல்ல பொண்ணு. நாங்கதான் உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டோம்.” என்றார் சத்யராஜ்.
“ஆமா அண்ணி. நாங்களும் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அண்ணனை நீங்க கவனிக்கிற விதத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு.” நதியா.
“உங்களை மரியாதை இல்லாமல் பேசிட்டேன் அண்ணி. மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.” மூர்த்தி.
“ஹா ஹா… ஹி ஹி…”
கருடேந்திரன் போட்ட கூச்சலில் அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்ப, “யாரு! இவ நல்லவளா?” என்று விட்டு அண்ணாந்து சிரித்தான்.
தன்னவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், சிரிப்பை நிறுத்தி முறைப்பை வீசினான். வானிலை மாற்றம் போல் மாறும் அவன் முக பாவனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புருவம் சுருக்கினாள். அதில் ஏளனத்தைக் கொட்டியவன்,
“இப்படி எல்லாம் பண்ற ஆளா இவ… உங்க பாராட்டெல்லாம் எனக்கு வர வேண்டியது. இந்தப் பணக்காரிக்கு மருமகள் வேஷம் போட்டு மூணு நாளா கூத்தாட வச்சது நான்தான்.” என்றதும் இடியே இடித்தது அவள் இதயத்தில்.
மெல்ல எழுந்து அவள் முன்பு நின்றான். தந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டவள் காதலித்தவனை இன்னும் நம்பிக் கொண்டிருக்க, நின்றவனுக்கோ மலையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற மகிழ்வு. தோல்வியின் பக்கமே செல்லாதவளைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போட்ட மகிழ்வில் மிதப்பாகச் சிரித்தவன்,
“பரவாயில்லையே…” என மேலும் கீழும் பார்த்தான்.
“நான் கூட உன்னை ஜெயிக்கவே முடியாதுன்னு நம்பிட்டேன். அட மடையா, நீ ஜெயிப்படான்னு நம்பிக்கை கொடுத்து அதை நிறைவேத்தி வெச்சிட்டியே!”
“கருடா…”
“எஸ்! கருடனே தான். எப்படி இருக்கு நம்ம ஆட்டம்? பெரிய பணக்காரி! சொடக்குப் போட்டா நாலு பேர் கும்பிடு போட்டு ரெடியா நிப்பாங்க. நடை, உடை, பாவனை எல்லாத்துலயும் பணத்தோட வாசம் தூக்கலா இருக்கும். மரியாதை எல்லாம் என்னன்னே தெரியாது. குடிச்ச டம்ளரை எடுத்து வைக்கக் கூட காலிங் பெல் அடிச்சு ஆளக் கூப்பிடுவ… இந்தப் பட்டுக் கால் மண்ல பட்டதே இல்ல. அப்படி இருந்த உன்னை எப்படி நிக்க வெச்சிருக்கேன் பார்த்தியா?
உன்கிட்ட இப்பவும் காசு இருக்கு. ஆனா, நீ ஒரு செல்லாக்காசு! மரியாதை இல்லாமள் பேசுன என் பெத்தவங்ககிட்ட உன்னை நிக்க வச்சுருக்கேன். என் வீட்ல ஒரு வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் செய்ய வச்சிருக்கேன். என்னைத் தூங்க விடாம டார்ச்சர் பண்ண உன்னை, மூணு நாளா இம்சை குடுக்காமலே தூங்க விடாமல் செஞ்சிருக்கேன். ரோட்டுல நடக்க வச்சிருக்கேன். என் வீட்டுச் சாப்பாட்டுக்கு, மூணு வேளையும் உட்கார வச்சிருக்கேன்.” என்ற வார்த்தைகள் அனைத்தும் சாட்டை அடியாக அவள் உடலை வதைத்தது.
அவன் குடும்பத்தார்கள் அனைவரும் நம்ப முடியாத திகைப்பில் நின்றிருக்க, “அது எல்லாத்தையும் விட, நாயி, நாயின்னு சொன்ன ஒருத்தனுக்காக உன்ன நாயா அலைய வச்சிருக்கேன் பார்த்தியா…” என்றதும் அவள் விழிகள் அழுத்தமாகப் பார்த்தது அவனை.
“எப்படி எப்படி? உனக்காகத் தான் எல்லாம் பண்ணேன். உண்மை தெரிஞ்சா உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போயிடும், நீ எனக்கு வேணும்! ஹா ஹா…”
அழுத்தமான விழிகளுக்குள் தோல்வி ஊடுருவியது. மெல்ல அவள் மனத்திற்கும், புத்திக்கும் அவன் நடத்திய நாடகம் புரிந்தது. தன்னை நேரில் நின்று அடிக்க முடியாததால், அன்பெனும் ஆயுதத்தை நேராக இதயத்தில் குத்தி ரத்தத்தைப் பார்த்திருக்கிறான் என்பதைத் தாமதமாக உணர்ந்தவளால், ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் முன்பு நிராயுதபாணியாக நின்றாள். அதை முழுதாக ரசித்தவன் தாவி அவள் கழுத்தைப் பிடித்து, “என் அம்மாவை வச்சு அடக்கப் பார்த்த உன்னை, உன் அம்மாவ வச்சு அடக்கிட்டேன் பார்த்தியா…” என்று பின்னால் தள்ளி விட்டான்.
பிடிக்க வந்த சரளாவையும், தன்னிடம் பேச வந்த குடும்பத்து ஆள்களையும் ஒரே பார்வையில் அடக்கியவன், “இப்படி ஒரு நாளுக்காகத் தான்டி கனவுலயும் பிடிக்காத உன்னைப் பிடிச்ச மாதிரி நடிச்சேன். என் வீட்ல வந்து இப்படி நீ உட்காரனும்னு தான்டி ஒவ்வொன்னத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சேன்… கருடா கருடான்னு பைத்தியம் பிடிச்சு அலையத் தான்டி தொட்டாலே அருவருப்பா இருக்க உன்ன, ரசிச்சுத் தொடுற மாதிரி நடிச்சேன்.” என்றதும் அவளது கண்கள் இறுக்கமாக மூடிக்கொண்டது.
“சும்மா சொல்லக் கூடாது. என்ன அருமையா என்னை லவ் பண்ற… அப்படியே உருகி ஊத்திடுச்சு உன் அன்பு. உனக்குள்ள இப்படி ஒரு காதலா!” என்றவன் கைகள் இரண்டையும் நீட்டி, “சொல்லும்போதே எப்படிச் சிலிர்க்குது பாரு!” சிரித்தான்.
அவளோ கண்களைத் திறக்காமல் அதே நிலையில் இருக்க, அழுத்தமாகக் கன்னத்தைப் பிடித்து, “கண்ணத் திறடி! நீ தோத்துப் போய் நிற்கிறதை நான் பார்க்கணும். ஆணவத்துல எவ்ளோ ஆட்டம் போட்ட… எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சு, என் காலுக்குக் கீழே நிக்க வச்சுட்டேன் பார்த்தியா?” என்றவனை அந்நிலையிலும் பார்க்கத் தயாராக இல்லை ரிதுசதிகா.
“ம்ம்… நீ செத்துப்போன பாம்பு! இனி உன்ன அடிச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. இந்த அசிங்கத்தைத் தாங்கிக்க முடியாம ஏதாச்சும் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, சீக்கிரம் பண்ணிக்க… கோர்ட், டைவர்ஸ்னு அலையுற வேலை மிச்சம்!” என்றவன் சிறிதும் இரக்கம் பார்க்காமல் அவள் பின்னங்கழுத்தில் கை வைத்து, “வெளிய போடி!” தள்ளி விட்டான்.
“என்னடா பண்ற?” என அவசரமாக ஓடிவரும் அன்னையைத் தடுத்துக் கதவைச் சாற்றியவன், “நீங்க என்ன கேட்டீங்களோ, அதை நான் செஞ்சிட்டேன். இதுக்கு மேலயும் இந்த விஷயத்துக்குள்ள வராதீங்க. அவளுக்கும், எனக்குமான உறவு இந்த நிமிஷத்தோட முடிஞ்சு போச்சு.” என்றதையும் மீறி அவர் கதவைத் திறக்கப் போக,
“அந்தக் கதவு திறந்துச்சுன்னா, உங்க புள்ள செத்துடுவான்.” என்றான் அழுத்தமாக.
பிள்ளையின் வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர் அழுகையோடு நிற்க, மற்ற மூவருக்கும் அங்கிருப்பது கருடனாகத் தெரியவில்லை. இதுபோன்று பேசிக் கூடக் கேட்டதில்லை. அப்படிப்பட்டவனா, இப்படி அரக்கனாக நடந்து கொண்டது என்ற பெரும் அதிர்வில் அப்படியே இருந்தார்கள். குடும்பத்தார்கள் பார்வையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
***
எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதைக் கூட அறியாதவள், பிரம்மை பிடித்தவள் போல் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்தாள். மகளைக் கவனித்தவர், “என்னடா, அதுக்குள்ள வந்துட்ட. கருடன் வரல…” சிரித்த முகமாக விசாரித்தார்.
புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற மகளை அன்போடு விசாரிக்க, பதில் சொல்லும் நிலையில் இல்லாதவள் தாயின் அறை முன்பு நின்றாள். அதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் விழிகளில் இல்லை. அவ்வளவு அழுத்தமாக வீடு வந்து சேர்ந்தவள், அன்னையைப் பார்த்ததும் உடைந்து விட்டாள்.
ஓடிச்சென்று ராதாவின் மீது சரிந்தவள் சத்தமிட்டு அழுதாள். அங்கிருந்த பொன்வண்ணனுக்கு உடல் நடுங்கியது. ராதாவிற்காகவும், மூத்த மகனுக்காகவும் அவள் இப்படி அழுது பார்த்திருக்கிறார். அதன்பின் இப்போது தான் பார்க்கிறார். நன்றாகப் புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற பெண், இப்படி அழுவதைப் பார்க்க எந்தத் தந்தைக்குத் தான் துணிவிருக்கும்.
பாய்ந்தோடி மகளை அரவணைத்தவர் பயத்தோடு என்னவென்று கேட்க, அப்போதும் எதுவும் சொல்லாமல் அழ மட்டுமே செய்தாள். நேரம் கடந்தும் அவள் அழுகைக்கான காரணம் தெரியவில்லை. எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் ரிதுவைச் சரிப்படுத்த முடியவில்லை.
பயத்தில், மருமகனைத் தொடர்பு கொண்டவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சத்யராஜைத் தொடர்பு கொண்டு மகளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். சங்கடத்தோடு நடந்த அனைத்தையும் தெரிவிக்க, இதயம் துடிப்பதை நிறுத்தியது. நம்ப மறுத்தவர் இரண்டு மூன்று தடவை, “நிஜமாவா?” கேட்டார்.
இவ்விருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று முதலில் ஆசை கொண்டது இவர் தான். இவரின் அந்த ஆசைதான் பெற்ற மகளின் நிலைக்குக் காரணம். பிள்ளையின் அழுகையைச் சகித்துக் கொள்ள முடியாத தந்தை ஆதரவாக அரவணைத்து, “நான் பேசிப் பார்க்கிறேன்டா” என்றவரைப் பார்த்தாள்.
அப்பார்வையில் இருக்கும் குற்றத்தை உணர்ந்து, தலை குனிந்தவரை முடிந்த வரை முறைத்து விட்டு அறைக்குச் சென்று விட்டாள். பெரிய சுனாமியே இரு வீட்டையும் சுற்றி அடித்தது போல் இருந்தது நிலவரம். இரு வீடும் பலத்த சேதாரங்களைச் சந்தித்து, எப்படித் தலையெடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இரண்டு நாள்கள் அமைதியாக இருந்த பெரியவர்கள் பேசிக் கொண்டனர். அதன்படி மகனைச் சமாதானம் செய்ய சரளாவும், சத்யராஜும் போராடிக் கொண்டிருக்க, அந்த வாய்ப்பையே தந்தைக்குக் கொடுக்கவில்லை ரிது. தன் முடிவில் மாற்றம் இல்லை என்று விட்டான் கருடன். நடந்ததைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை ரிது. இவர்களின் இந்த முடிவோடு இரண்டு வாரங்கள் கடந்தது.
மிடுக்காகச் சுற்றித் திரியும், மகள் முகத்தில் தெரியும் வேதனையைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானவர், சொல்லிக் கொள்ளாமல் மருமகனைப் பார்க்கச் சென்றார். வழக்கம்போல் ஆட்டோ ஓட்டிவிட்டுக் காலை உணவிற்கு வந்தவன் இவரைச் சிறிதும் மதிக்காது டீவி பார்த்துக் கொண்டிருக்க, “உன் மேல நிறையக் கோபம் இருந்தாலும், அதைக் காட்ட முடியல. காரணம் என் பொண்ணு…
ஒரு பொண்ணப் பெத்தவனா மட்டும்தான் உன்கிட்டப் பேச வந்திருக்கேன். ரிது அன்புக்கு அடங்கற குழந்தை! எதை அவகிட்டக் காட்டக் கூடாதோ அதைக் காட்டித் தோற்கடிச்சிருக்க. என் பொண்ணு ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா, ஏற்கெனவே அவள் நிறைய இழப்பைப் பார்த்திருக்கா… உன்னோடதை நிச்சயம் தாங்க மாட்டா. தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு…” என அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கருடனின் குரல் ஒலித்தது.
“மரியாதையா வெளிய போயிடுங்க.” என்று.
“என்னடா ஆச்சு உனக்கு? அந்தப் பொண்ணு தான் எந்தத் தப்பும் பண்ணலன்னு தெரிஞ்சிருச்சே. அப்புறம் எதுக்காகடா இப்படி நடந்துக்கிற? எங்களைத் தான அவ தப்பா பேசினா. அதை நாங்களே மறந்துட்டோம். உனக்கு என்னடா? தப்பே பண்ணாதவளுக்குத் தாலி கட்டி நீ தான் பெரிய தப்புப் பண்ணிருக்க. இதுல பேச வந்தவரை மரியாதை இல்லாமல் பேசுற. நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல கருடா…”
திட்டிக் கொண்டிருக்கும் தந்தையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது, “பொண்ண ஒழுக்கமா வளர்க்கத் துப்பில்லை. இதுல நியாயம் பேச வந்துட்டீங்க. நான் அவ கழுத்துல கட்டினது தாலியே இல்ல. உங்க பொண்ணும் அதை ஒருநாளும் மதிச்சதும் இல்ல. இந்நேரம் கழற்றித் தூக்கிப் போட்டு இருப்பா. வேற எந்த இளிச்சவாயனாவது கிடைச்சா கட்டி வையுங்க.” என்றவனை நம்ப முடியாது பார்த்தார் பொன்வண்ணன்.
சொல்லியும் நகராமல் அமர்ந்திருப்பவரைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன், “எந்த வேலையப் பார்க்கக் கூடாதோ, அந்த வேலையைப் பார்க்குறீங்க.” எனத் தன்னால் எழுந்து செல்ல வைத்தான்.
***
மனம் நொந்து தனியாக அழுது புலம்பியவர் மகளைப் பார்க்க வந்தார். மெத்தையில் கவிழ்ந்து படுத்திருந்தவள் அருகில் வந்தவர், “ரிது…” என அந்த ஏழு அடுக்கு மாடி இடிந்து விடும் அளவிற்குக் கத்தினார். மெத்தை முழுவதும் மாத்திரைகள் சிதறி இருந்தது. அரை மயக்கத்தில் தந்தையின் குரலைக் கேட்டபடி படுத்திருந்தாள். அலறித் துடித்த பொன்வண்ணன், மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயல, திறக்க முடியாத கண்களைக் கடினப்பட்டுத் திறந்து,
“என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் முதல் காரணம்!” என அவரைத் தள்ளி விட்டாள்.
தலையில் அடித்துக் கொண்டு, செய்த தவறைச் சொல்லிப் புலம்பியவர் கெஞ்சி மருத்துவமனைக்கு அழைக்க, அவரை விரட்டி அடித்துக் கதவைச் சாற்றிக் கொண்டாள்.
கதவைத் தட்டித் தோற்றுப் போனவர் ஆத்திரமடங்காது சத்யராஜை அழைத்து, “என் பொண்ணுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு, அவனை நான் சும்மா விடமாட்டேன். பாவிப் பையன, நம்பிக் கட்டிக் கொடுத்ததுக்கு என் பொண்ணை இப்படிப் பண்ணிட்டானே!” பேரிடியை இறக்கினார்.
16. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 16
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!”
“அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள்.
“அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க,
“உன் அண்ணன், சாமியா உன் கூட தான் இருப்பாரு.” என்றான்.
நம்பாது அவனை விட்டு விலகி நின்றாள். அவ்வளவு எளிதாகத் தன்னவள் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட முடியாது என்பதை உணர்ந்து அலுத்துக் கொள்ளாமல்,
“நீ ஏன் இப்படித் தனிமையில இருக்கணும்னு ஆசைப்படுற?” கேட்டான்.
வாயிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்க, கை உயர்த்தி நிலவைக் காட்டினாள். ஒன்றும் புரியவில்லை கருடேந்திரனுக்கு. ஆள்காட்டி விரல் நிலவை நோக்கி இருக்க, அவள் முகமும் அதை நோக்கியே இருந்தது. கை இரண்டையும் கட்டிக்கொண்டு அவள் பேசப் போகும் வார்த்தையைக் கேட்கத் தயாராகினான்.
“அந்த நிலா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். பூமியில இருக்கற எல்லாருக்கும் அதைப் பிடிக்கும். அந்த மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா, அதோட மறுபக்கம் யாருக்கும் தெரியாது. கரடு முரடான தோற்றத்தை வெளிக்காட்டிக்காம சாமர்த்தியமா தான் அழகுன்னு காட்டிகிட்டு இருக்கு. பல கோடி மக்கள் அதைப் பார்த்தாலும், அது பார்க்க யாரும் இல்லை. பரந்த இந்த ஆகாசத்துல தனி ஆளாய் தேஞ்சி, தன்னைத் தானே தேத்தி வாழ்ந்துட்டு இருக்கு. உண்மை என்னன்னா, அது ஒரு அனாதை! அதோட அசிங்கத்தைப் பார்த்தா யாரும் அதை ரசிக்க மாட்டாங்க. தேயும் போது அதுக்கு இருக்குற வலியும், வளரும்போது அதுக்கு இருக்குற துடிப்பும் தெரிஞ்சா கேலி செய்வாங்க. தெரியாத வரை அதிசயம்! தெரிஞ்சிடுச்சுன்னா அனாதை!”
இன்னும் விரலைச் சுருக்காமல், பார்வையை மாற்றாமல் அந்த நிலவின் மீது தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை, இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். இந்த ரிது, புதிதாகத் தெரிந்தாள் அவனுக்கு. இப்படியான ஒரு பிம்பத்தை அவளிடம் இருந்து எதிர்பார்க்காதவன், விழியோரம் விண்மீன் போல் மின்னிக் கொண்டிருக்கும் கண்ணீரைக் கண்டான்.
தாலி கட்டியவளின் பாரத்தை, அந்த ஒரு சொட்டு நீர் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தது. அழுத்தத்தின் பாரம் தாங்காது, இமையை விட்டுக் கீழ் இறங்கிய கண்ணீர், அவளின் வைரக் கம்மலோடு அடங்கிப் போக, பார்வையைக் கீழ் இறக்கிக் கொண்டாள்.
“வா…”
“எங்க?”
“சொல்றேன், வா…”
“நான் எங்கயும் வரல.” என்றதும் அவளைத் தன்னைப் பார்க்குமாறு திருப்பியவன், “இனி உன்னைத் தனிமையில விடமாட்டேன். நீயா வந்தா கூட்டிட்டுப் போவேன், இல்லன்னா தூக்கிட்டுப் போவேன். என் முதலாளிக்கு எது வசதின்னு சொன்னா நல்லா இருக்கும்.” என்றதும் சிரித்து விட்டாள்.
“தூக்கிக்கவா?”
“அடி வாங்குவ!”
“அப்பத் தூக்கியே ஆகணுமே…”
“ஏய்!”
“சும்மா இருங்க முதலாளி. இந்தப் பட்டுக் காலு படிக்கட்டு இறங்குனா, இந்தப் பாவி மனசு தாங்காது.”
“என்ன பயங்கரமா பேசுற?”
“பயங்கரமா தூக்கக் கூடச் செய்வேன்.” என அவளைத் தூக்கிக் கொண்டவன்,
“பரவால்ல, பீல் பண்ணாலும் வெயிட் குறையல.” எனக் கண் சிமிட்டினான்.
“என்ன, எப்பப் பாரு இதையே சொல்ற… நான் என்ன அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்.”
“எலும்பு உடையுற சத்தம் கேட்குது முதலாளி.”
“ச்சீ! ப்பே…”
“அசையாதீங்க முதலாளி. கை உடைஞ்சு நீங்க விழுந்திடப் போறீங்க.”
“ஹாஹா…”
“ப்ச்! நீங்க பீல் பண்றதைப் பார்த்து எனக்கும் பீலிங்ஸ் வந்துடுச்சு முதலாளி.”
“ஆஹான்! கதை அப்படிப் போகுதோ?”
“அப்படி எங்கயும் பாதை மாறிப் போயிடக் கூடாதுன்னு தான் தூக்கிட்டேன். என் முதலாளியைத் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு, பழைய ஃபார்ம்க்கு கூட்டிட்டு வரப்போறேன்.”
“டேய்!”
“பரவால்லையே, சொன்னதுக்கே எஃபெக்ட் தெரியுது.”
“உன் கூடச் சண்டை போட சுத்தமா என்கிட்ட எனர்ஜி இல்லை. ஒழுங்கா கீழ இறக்கி விடு.”
“இந்த மாதிரி நேரத்துலதான், சண்டை போடப் பரபரன்னு மனசு துடிக்குது முதலாளி.”
அவனிடம் வம்பு வளர்க்க விரும்பாதவள் இறங்க முயற்சிக்க, சற்று மேல் தூக்கியவன் அவள் காதில் மீசை உரச, “இன்னைக்குச் சண்டை போடாமல் தூங்குறதா இல்ல.” ரகசியம் பேசினான்.
தாடி கன்னத்தில் உறவாட, மீசை காதுக்குள் கவி பாடியது. இரண்டும் இரண்டு விதமாக அவளைச் சோதிக்க, விலகியவன் முகம் பார்த்தவள் மெல்லக் கைகளைத் தோளுக்கு மாலையாக்கினாள். ரிதுவின் செயலில் கருடன் புருவம் உயர்த்த, தலையை லேசாக அசைத்துச் சிரித்தாள்.
வீட்டை விட்டு வெளியில் வந்தவன் நீச்சல் குளம் அருகில் நின்றான். ‘சொன்னது போல் போட்டு விடுவானோ?’ எனச் சிந்தித்தவள் எண்ணத்தை முகம் பார்த்துப் புரிந்து கொண்டவன் மீண்டும் அவள் காதுக்குள், “தள்ளி விடவா?” ரகசியம் பேசிக் கூச்சத்தை உண்டு செய்தான்.
“இந்த முறை உன்னையும் இழுத்துட்டுத் தான் விழுவேன்.”
“இந்த அழுக்கானவன், தண்ணிக்குள்ள விழுந்தா உங்க உடம்பும் அழுக்காகிடும் முதலாளி”
“பரவால்லடா ஆட்டோக்காரா… நாயக் குளிக்க வைக்கிற சோப்பு என்கிட்ட நிறைய இருக்கு. தண்ணியோட தண்ணியா உன்னை முக்கிச் சோப்பு போட்டு, எல்லாத்தையும் கரைச்சு எடுத்துடறேன்.”
அவள் வார்த்தைக்கு மூக்கைச் சுருக்கியவன், “லொள்! லொள்!” என ஓசை கொடுக்க, வானம் பார்க்கத் தலை உயர்த்தியவள் வாய் வலிக்கச் சிரித்தாள்.
இவ்வளவு சத்தமாக இவள் சிரிப்பதை முதல்முறையாகப் பார்க்கிறான் கருடேந்திரன். சின்ன அதரங்களுக்குள் மாதுளைப் பற்கள் பளபளத்தது. லேசாகப் பூசப்பட்டிருக்கும் அந்த உதட்டுச் சாயத்தை எப்படியாவது துடைத்துவிட்டு, ஒளிந்து கொண்டிருக்கும் அழகை ரசிக்க ஆர்வம் பிறந்தது. தன்னால் புன்னகை நிற்கும் வரை விடாமல் சிரித்துக் கொண்டிருந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் பார்வையில், முதல் முறையாகக் கூச்சம் எனும் உணர்வைச் சந்தித்தாள்.
இருவரின் விழிகளும் அவர்களைப் போல் மோதிக் கொண்டது. எப்போதும் சண்டையிட்டு எரித்துக் கொள்ளும் அந்தப் பார்வைக்குள் மிதமான தென்றல் வீசியது. அவள் மீதான பார்வையைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாதவன், நீச்சல் குளத்தின் விளிம்பில் அமர வைத்துக் கால்களைத் தண்ணீருக்குள் விட்டான். ரிது அமைதியாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கப் பக்கத்தில் அமர்ந்தவன், அவள் காலோடு தன் கால்களை உரசிக்கொண்டு நீரில் நுழைத்தான்.
“நிலா அனாதைனு யார் சொன்னது?”
கட்டியவளின் கவனத்தைத் திருப்பியவன், அவளுக்குப் பின்னால் சென்று அமர்ந்து கண்களை மூடினான். அவன் கூறியதன் பொருளை உணர்வதற்கு முன் விழிகள் மூடப்பட்டதால், கருடன் கைகளுக்கு மேல் கை வைத்து எடுக்க முயற்சித்தாள்.
“தலை குனிஞ்சு இருக்கிற வரைக்கும் தான் தனியா இருக்கோம்னு தோணும். கொஞ்சம் தலைய மேல உயர்த்திப் பாரு. உன்னச் சுத்தி எத்தனைப் பேர் இருக்காங்கன்னு தெரியும்.” என அவள் விழிகளைச் சிறைப் பிடித்திருந்த கைகளை எடுத்துத் தலையை உயர்த்தினான்.
“உன்னோட கரடு முரடான முகம் தெரிஞ்சும், வானம் உனக்குப் பின்னாடி இருக்கு. உன்ன மாதிரி எவ்ளோ கஷ்டப்பட்டாலும், வெளியவே தெரியாத பல நட்சத்திரங்கள் உனக்குத் துணையா இருக்கு. சுட்டெரிக்கிற சூரியன், உன் மேல இருக்குற பொறாமைல ஒளிஞ்சி இருக்கு. கண்ணுக்கே தெரியலனாலும், உன் கூட தான் இருப்பேன்னு அடம் பிடிச்சுக் காத்து சுத்திட்டு இருக்கு. நீ இருந்தா மட்டும்தான் நான் அழகா இருப்பேன்னு அந்த இருட்டு ஆசையாய் கொஞ்சிட்டு இருக்கு.
உன்னால மட்டும்தான் நிம்மதியான தூக்கத்தைத் தர முடியும்னு ஐந்தறிவுல இருந்து ஆறறிவு ஜீவன் வரைக்கும் பெருமை பேசிட்டு இருக்கு. அப்பப்போ எட்டிப் பார்க்குற மழையும், திடீர்னு அடிக்கிற இடியும், நீ இருக்கும் போது அழகா தெரியும். குழந்தைகளுக்குத் தாயால ஊட்ட முடியாத சோறைக் கூட நீ ஊட்டிடுவ. பல பேரோட காதலே நிலவை நம்பித்தான் இருக்கு. கவிதை தெரியாதவன் கூட உன்னைப் பார்த்தால் கவிதை எழுதுவான். இவ்ளோ சொந்தத்தையும், பாசத்தையும் சுத்தி வச்சுக்கிட்டு அனாதைன்னு சொல்றது முட்டாள்தனம் இல்லையா?”
நீண்ட வார்த்தையைப் பேசி முடித்தவன், அவள் முகத்தை அணுவணுவாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கருடன் பேசிய வார்த்தைகள் நங்கூரமாக அவள் இதயத்தில் சென்று தங்கியது. துயரத்தில் மட்டுமே நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள், முதல்முறையாக வேறு பக்கத்தைப் பார்க்கிறாள். அவன் சொன்னது போல் அனைத்தும் அவளுக்காக இயங்குவது போல் தெரிந்தது. உலகமே அவளுக்காக என்ற எண்ணம் பிறந்தது. கட்டிப் போட்டு வைத்திருந்த குற்ற உணர்வு, மாட்டிக் கொண்ட பயத்தில் அவளை விட்டு விலகியது.
கண் மூடியவள் முகத்தைக் காற்று உறவாடி விட்டுச் செல்ல, அவளை அவளே புதிதாகப் பார்த்தாள். மனைவியின் செய்கைகளைக் கண்ட பின் உள்ளம் மகிழ்ந்தவன், “உன் வார்த்தையைக் கேக்குறதுக்காகத் தவம் இருக்கிற அம்மா, என் பொண்ணுக்காகவாவது உயிர் வாழனும்னு நினைக்கிற அப்பா, காத்தா கரைஞ்சாலும் நீ நல்லா இருக்கணும்னு துடிக்கிற அண்ணன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை?” என்றவன் முகம் பார்த்தவள்,
“நீ…” எனக் கேட்க, அதுவரை சரளமாகப் பேசிக் கொண்டிருந்தவன், வார்த்தைகள் இன்றி ஊமை ஆகினான்.
“உனக்கு ஒன்னு தெரியுமா? நீ வந்ததுக்கப்புறம் தான் நான் நிறையப் பேச ஆரம்பிச்சேன். அது எனக்கு ரொம்பப் புடிச்சுது. அதனாலதான், உன்னை விடாமல் சீண்டிட்டு இருந்தேன். உன்ன மாதிரி இதுவரைக்கும் யாரும் என்கிட்டப் பேசுனது இல்லை. தனிமையில போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சந்திக்காத ஆண்களே இல்லை. ஒவ்வொருத்தனும், ஒவ்வொரு விதமா என் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கானுங்க. காலடியில இருக்கத் துடிக்கிறவனையும் பார்த்திருக்கேன், என்னைக் கட்டி ஆளணும்னு நினைக்கிற வெறியையும் பார்த்திருக்கேன். முதல் முறையா இது எதுவுமே இல்லாமல் ஒருத்தன், என்னை அடங்காப்பிடாரி, பிசாசு, பணப்பேய்னு திட்டுறதைப் பார்த்தேன்.”
பேசிக் கொண்டிருந்தவள் இடைவெளி விட்டுக் குளத்துக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நிலவைக் கவனித்தாள். பேச்சு நிற்கும் நொடிவரை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளைப் போல் நீரின் மீது பார்வையைப் பதிக்க,
“இந்தத் தண்ணி மாதிரி நீ என்னைச் சலசலன்னு திட்டிட்டு இருந்தாலும், அதுல தெரியிற நிலா மாதிரி மெல்ல உனக்குள்ள நான் ஒட்டிக்கிட்டேன்.” என நீரில் நிழலாகத் தெரியும் நிலவைக் கை காட்டினாள்.
கருடேந்திரனின் பார்வை அதன் மேல் பதிய, புதிதாகத் தெரிந்தாள் ரிது சதிகா. இது நானா என்ற ஆச்சரியம் அவளுக்கு. அதே ஆச்சரியம் தான் அவனுக்கும். ஆச்சரியத்தில் அடுத்த வார்த்தைகளை இருவரும் பேச மறந்தார்கள்.
நேரம் கடக்க, ரிது அவன் கைப்பற்றினாள். சில நொடி யோசனைகளுக்குப் பிறகு அவளோடு தன் விரல்களை இணைத்துக் கொண்டான் கருடன்.
14. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 14
எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.
கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான். இரவெல்லாம் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி தாலி கட்டியவள் புறம் மனம் சாய நினைத்தாலும், அவள் கொடுக்கும் வார்த்தையின் வீரியம் அதைத் தடுக்கிறது. பெரிதாக நேசம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மனையாள் என்ற உணர்வு லேசாக மனத்தின் ஓரம் ஒட்டி இருக்கிறது.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவள், திரும்பிப் படுக்க முயல வலி பின்னி எடுத்தது. நேற்று விழும் பொழுது கூட இவ்வளவு வலிக்கவில்லை ரிதுவிற்கு. அந்த அசட்டுத் தைரியத்தில் அதைக் கவனிக்காமல் உறங்கி விட்டாள். இப்போது அது வேலையைக் காட்டுகிறது.
“அப்பா!” என்ற ஓசைக்கு அவன் திரும்ப, இடுப்பைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி துடித்துக் கொண்டிருந்தாள்.
என்னவென்று கேட்க விருப்பமில்லாததால் அவன் அப்படியே இருக்க, “ஓ காட்!” எழ முயற்சித்து முடியாது படுத்து விட்டாள்.
“என்னாச்சு?”
“ரொம்ப வலிக்குது!”
“எங்க?”
“இங்கப்பா…”
முதல்முறையாக, மரியாதையாக அழைக்கும் அவள் அழைப்பில் ஒரு நொடி கவனம் சிதறினாலும், “நேத்து விழுந்ததா?” விசாரித்தான்.
“அப்படித்தான்பா நினைக்கிறேன். வலில ஒன்னும் முடியல. எந்திரிக்கவே கஷ்டமா இருக்கு.”
“அப்படியே படுத்துரு.”
அறையை விட்டு வெளியேறியவன் சிறிது நல்லெண்ணையோடு உள்ளே வர, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது தனக்கு வேண்டாம் என்பது போல், சிறிதும் அவள் முகத்தைப் பார்க்காதவன் திரும்பிப் படுக்கக் கூறினான். கருடன் காட்டும் பாராமுகம் புரிந்தாலும் கணக்கில் கொள்ளாது திரும்பிப் படுத்தாள்.
மேல் சட்டையை நடு முதுகுக்கு மேல் வரை உயர்த்தி விட, “டேய்! என்னடா பண்ற?” பதறிச் சட்டையை இறக்கி விட முயன்றாள்.
“ப்ச்! கைய எடு.” எனத் தட்டி விட்டுச் சட்டையை மேல் உயர்த்தி, “எனக்கு என்னமோ உன் முதுகைப் பார்த்தும் கூட ஃபீலிங்ஸ் வரமாட்டேங்குது. இந்த லட்சணத்துல பயம் வேற வருது.” எனச் சிடுசிடுத்துவிட்டு எண்ணெயை இடுப்பில் ஊற்றினான்.
“அப்போ உன்கிட்டத் தான்டா ஏதோ கோளாறு இருக்கு.”
எண்ணெயில் தளதளத்துக் கொண்டிருக்கும் இடுப்பில், தப்பென்று ஒரு அடி வைக்கக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது ரிது சதிகாவிற்கு. அதில் அவளின் திருவாய் தன்னால் மூடிக்கொள்ள நீவி விட்டுச் சுளுக்கை எடுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும், அவன் இரு கட்டை விரலால் அழுத்தும் பொழுது படக்கூடாத வேதனையைப் பட்டுக் கதறினாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, சரியாகிடும்.”
தன் கடமை முடிந்ததென்று எழுந்தவன் கையைப் பிடித்தவள், “தேங்க்ஸ் பா!” என்க, “ம்ம்!” என்றான்.
“காலைலயே சூடா இருக்க போல.”
“இல்ல.”
“என்னைப் பார்த்துச் சொல்லு.”
“வேலை இருக்கு, விடு.” கையை உதறி விட்டு வெளியேறினான்.
சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கம் அவளை ஆட்கொண்டது. வந்து பார்த்தவன், நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவளை அப்படியே நின்று கவனிக்க ஆரம்பித்தான். மனத்திற்குள் சலசலப்பு எழுந்த வண்ணம் இருக்க, அவள் மீது கரிசனமோ, காதலோ தெரியவில்லை. உறக்கம் கலையக்கூடாது என்பதற்காகச் சூரியன் கொடுத்த அனைத்து வெளிச்சத்தையும் மறைத்தான்.
அவள் பக்கத்தில், கணவன் போல் உறவாடிக் கொண்டிருந்த போனை சைலண்ட் மோடில் போட்டு ஓரம் ஒதுக்கி வைத்தான். அறையின் குளிரை அதிகம் கூட்டி வைத்துப் போர்வையைப் போர்த்தி விட்டு வெளியேற, அதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவள் விழிகளைத் திறந்தாள். அவன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டிருந்த ரிதுவின் இதழ்கள் மட்டுமல்ல, கண்களும் சிரித்தது.
***
ஓயாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். ஏதாவது அதிசயம் நடந்து தன் பெற்றோர்கள் இங்கு வரக்கூடாது என்ற வேண்டுதலோடு அவன் இருக்க, எண்ணத்தைத் தோற்கடித்து ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். இருவரும் வாய் பிளந்து மருமகளின் வீட்டைக் காண, இப்படிப் பார்ப்பதைப் பார்த்தால் கடுஞ்சொற்களால் நோகடிப்பாளே எனக் கவலை கொண்டான்.
“இவ்ளோ பெரிய வீட்டுலயா என் மருமகள் இருக்கா?”
“அதான் பாரு சரளா.”
“இவ்ளோ பெரிய வீட்ல வாழுற பொண்ணு, நம்ம வீட்ல எப்படிங்க வந்து வாழும்.”
“இந்த வீட்டப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கும் அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.”
பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு மனம் நொந்தவன், மௌனமாக அவர்கள் முன் நிற்க, “வாங்க…” என வரவேற்றார் பொன்வண்ணன்.
மகனைப் பார்க்காத சரளா உள்ளே செல்ல, “எல்லாம் சரியாகிடும்டா.” என்றார் தந்தை.
வார்த்தைகள் இன்றித் தலையசைக்கும் பிள்ளையின் கவலையைப் புரிந்து கொண்ட சத்யராஜ், ஆதரவாகத் தோள் மீது கை போட்டுத் தட்டிக் கொடுக்க, வாசல்வரை அழைத்துச் சென்றவன்,
“உள்ள போங்கப்பா…” என்றான்.
“நீ வரலையா?”
“நீங்க போங்கப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.”
தன் சம்பந்திகளை மகிழ்வாக வரவேற்றவர், மரியாதையாக உபசரிக்க ஆரம்பித்தார். வெளியில் நின்று வாய் பிளந்தவர்கள் உள்ளே வந்ததும் திகைத்தனர். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திகைப்பைக் கொடுத்தது. ஏதோ பெரிய பணக்கார விழாவிற்குச் சென்றது போல் அவ்வளவு தோரணையாக இருந்தது அந்த வீடு.
“காபி எடுத்துக்கோங்க.”
“என்ன சார், நீங்க போய் எடுத்துட்டு வந்துட்டு.”
“இதுல என்ன இருக்கு? என் மருமகனோட பெத்தவங்களுக்கு நான் போட்டுத் தராம வேற யார் போட்டுத் தருவா?”
“இருந்தாலும் சங்கடமா இருக்கு சார்.”
“இன்னும் என்ன சார்னு…”
வெள்ளந்தியாகச் சரளாவும், சத்யராஜும் புன்னகைக்க, “சம்பந்தின்னு கூப்பிடலாமே. எனக்குன்னு இருக்கற ஒரே சம்பந்தி நீங்க மட்டும் தான்.” என்றவர் முகத்தில் இந்த உறவிற்காக ஏங்கும் ஏக்கம் தென்பட்டது.
அதை எதிரில் இருக்கும் இருவரும் உணர்ந்தாலும், பணம் என்னும் கௌரவம் உரிமையை வெளிக்காட்ட விடாமல் தடுத்தது. இந்த நொடி வரை மருமகளும் சரி, அவளின் பெற்றவரும் சரி, எட்ட முடியாத ஏணியாகத்தான் தெரிகிறார்கள்.
“உங்க தயக்கம் புரியுது. இருந்தாலும்…”
“விடுங்க சார், இனி நாங்க அப்படியே கூப்பிடுறோம். நீங்க சங்கடப்படாதீங்க.”
மனநிறைவாகப் புன்னகைத்தவர், மகளை அழைத்து வரச் சென்றார். அவர் சென்ற பின், தங்குத்தடை இன்றி அந்த வீட்டை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். மனம் முழுவதும் சங்கடம் எனும் பேய் ஆட்டிப் படைத்தது அவனை.
மகளைத் தட்டி எழுப்பியவர் வந்திருப்பவர்களின் விவரத்தைக் கூற, “நீங்களே பேசி அனுப்புங்க.” என்றாள்.
“அது மரியாதையா இருக்காது ரிது.”
“எனக்குப் பிடிக்கல.”
“நீ ரொம்பத் தப்புப் பண்ற.”
“டார்ச்சர் பண்ணாதீங்கப்பா, பிடிக்கலைன்னு சொன்னா விட்டிடுங்க. எனக்கு அவங்ககிட்டச் சகஜமாப் பேச முடியல.”
“பேசவே முயற்சி பண்ணாம, சகஜமாப் பேச முடியலன்னு சொன்னா எப்படி? ஒழுங்கா ரெடி ஆகிட்டு வந்து எப்ப வந்தீங்கன்னு கேளு.”
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு குளியலறை சென்று வந்தவள் கடுகடுவென்று கீழ் இறங்க, “வாம்மா…” அன்பாக அழைத்தார் சரளா.
வழக்கம்போல் அவரைப் புறக்கணித்தவள் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொள்ள, “எப்படிம்மா இருக்க?” மாமனார் நலம் விசாரித்தார்.
“ம்ம்!” என்றதோடு நிறுத்திக் கொண்டு இருவரையும் சங்கடத்திற்குத் தள்ளினாள்.
மருமகளின் உதாசீனத்தை வழக்கம்போல் ஒதுக்கி வைத்தவர்கள், பணத்தை மேஜை மீது வைத்து, “நீங்க கொடுத்த பணம் இதுல இருக்கு. சரியா இருக்கான்னு எண்ணிப் பார்த்துக்கோங்க.” என்றனர்.
மகளை ஒரு பார்வை பார்த்தவர் அந்தப் பணம் வேண்டாம் என்று மறுக்க, அவர்களோ உறுதியாக இருந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் பொன்வண்ணன் அமைதியாக, “கல்யாணம் ஆகி ஒரு மாசம் முடியப் போகுது. ரெட்டைல தாலிக்கயிறு மாத்தக் கூடாது. அதனால, முடியுறதுக்குள்ள தாலி பிரிச்சிச் கோர்த்துடலாமா?” என்பதற்குப் பொன்வண்ணன் தலையசைப்பதற்கு முன்,
“அதெல்லாம் தேவையில்லை.” என்றாள் சத்தமாக.
“ரிது!”
“நீங்க சும்மா இருங்கப்பா. என்னால இதுக்கு ஒரு காலமும் சம்மதிக்க முடியாது. இவன் கட்டின தாலியவே எப்போ தூக்கிப் போடப் போறோம்னு இருக்கேன். இதுல தங்கத்துல போடுறது தான் கேடு.”
“அப்படி இல்லம்மா, மஞ்சள் கழுத்தோட எத்தனை நாளைக்கு இருப்ப. நாலு இடம் போயிட்டு வர பொண்ணு. நீ இருக்க வசதிக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணல.”
“அது என்னோட பிரச்சினை. இது என் கழுத்துல இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகுதுன்னு தெரியல. இதுக்கெல்லாம் இவ்ளோ இம்பார்டன்ட் கொடுக்க முடியாது.”
“கொஞ்சம் பொறுமையாப் பேசு ரிது. அவங்க உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்லிட்டு இருக்காங்க.”
“என்னோட நல்லதை முடிவு பண்ண இவங்க யாரு? வந்த வேலைய மட்டும் பார்த்துட்டுப் போகச் சொல்லுங்க.”
“இன்னும் மனசால நீ இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கலன்னு நல்லாப் புரியுது. இருந்தாலும் செய்ய வேண்டிய கடமை இருக்கு. உன் அம்மா நல்லபடியா இருந்திருந்தா, என்ன பண்ணி இருப்பாங்களோ அதைத்தான் நாங்க பண்ண ஆசைப்படுறோம். ஒரு நல்ல நாளாப் பார்த்து இந்த வீட்டுக்குள்ளயே கூட பண்ணிக்கலாம். நம்ம எல்லாரும் சேர்ந்து இருந்தாலே உன் மனசு கொஞ்சம் மாறும்.”
“ஓஹோ!” எனக் கால் மீது கால் போட்டவள், “இப்பத்தான் உங்க திட்டம் புரியுது. புள்ளைய முன்னாடி அனுப்பி வச்சிட்டுப் பின்னாடியே நீங்க வந்து செட்டில் ஆகலாம்னு பார்க்குறீங்க. இதுக்கு இந்தத் தாலி ஒரு சாக்கு. கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உங்களுக்கு? என்னடா ரோஷம் வந்து பணத்தைக் கொடுக்குறாங்களேன்னு யோசிச்சேன். பத்து லட்சத்தைக் கொடுத்துட்டு, பத்துக் கோடியைச் சுருட்டப் பிளான் பண்றீங்க. இப்படி ஒரு பொழப்புக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாம்.” என்றிட, வெளியில் நின்றிருந்தவனின் ரத்த நாளங்கள் சூடானது. பாறை போல் விறைத்த மனத்தில், பொங்கி எழுந்தது ஆத்திரம். பற்களைக் கடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் ‘பளார்!’ என ஓங்கி அறைந்தான்.
அடித்தவன் ஆங்கார மூர்த்தியாக நின்றிருக்க, அங்கிருந்த மற்ற மூவரும் எழுந்து விட்டனர். அடி வாங்கியவள் மட்டும் அழுத்தமாக அதே இருக்கையில் அமர்ந்து இருந்தாள். கருடேந்திரன் என்ன செய்தான் என்பது புரியச் சில நொடிகள் தேவைப்பட்டது அந்தப் பெரியவர்களுக்கு.
“பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா? உலகத்துலயே உன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கா? இந்த வீட்டுக்கு நெருப்பு வச்சேன்னு வச்சிக்க, இருக்கற அத்தனையும் பொசுங்கிப் போயிடும். எதையும் உன்னால மீட்டு எடுக்க முடியாது. அப்படி அழிஞ்சு போற ஒன்னுக்கு ஏன்டி இவ்ளோ ஆணவத்தோடு ஆடுற. இவ்ளோ பாவத்தையும் பண்ணிட்டு, நீயே உயிரோட இருக்கும்போது என் பெத்தவங்க எதுக்காகச் சாகனும்?”
“கருடா!”
“சும்மா இருங்கம்மா. இவளை இவ்ளோ நாள் விட்டு வச்சதே தப்பு. எப்படி நாக்குல நரம்பு இல்லாமல் பேசுறா பாருங்க. இவ அம்மா இவளை ரத்தமும், சதையுமாத் தான் பெத்தாங்களா? இல்ல கருங்கல்லா பெத்தாங்களான்னு தெரியல. இவளை மாதிரி ஈனப்பிறவிங்களை அனுசரிச்சுட்டுப் போறத விட ஒரு தப்பு இந்த உலகத்துல இருக்காது.”
“கொஞ்சம் பொறுமையா இருப்பா, அவ பேசுனது சரின்னு நான் சொல்லல.” எனப் பொன்வண்ணன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
“தயவு செஞ்சு நீங்க பேசாதீங்க. பெண்ணை எப்படி வளர்க்கக் கூடாதோ, அப்படி வளர்த்து வச்சிருக்கீங்க. இந்த அடியை நியாயமா நீங்க அடிச்சு இருக்கணும். அப்படி அடிச்சிருந்தா, இந்த மாதிரிப் பார்க்குற எல்லாரையும் அவமானப்படுத்திட்டு இருக்க மாட்டா…” என்றிட, அவமானத்தில் தலை குனிந்தார்.
“போதும்டா, அவ கூடச் சண்டை போட உன்னை இங்க அனுப்பி வைக்கல. எப்படியாவது மனசு மாறி நல்லபடியா வாழணும்னு தான் அனுப்பி வச்சேன்.”
“வாழுறதா?” எனத் தாடைகளைத் தடதடக்கக் கடித்தவன், அவள் அமர்ந்திருந்த சோபாவை எட்டி உதைக்க அது நான்கடி பறந்து போனது.
“எப்படி அழுத்தமா உட்கார்ந்து இருக்கான்னு பாருங்க. இப்படி ஒருத்தி கூட எவனாவது வாழ முடியுமா? தாலியைக் கழற்றி வீசின அப்பவே இவளுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போச்சு. நல்லது பண்றேன்னு என் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இவ கழுத்துல தாலி கட்டின நாள்ல இருந்து நான் நானா இல்ல. நிம்மதியா மூச்சுவிட்டு எத்தனை நாள் ஆகுது தெரியுமா?
இந்த வீடு நரகமாய் தெரியுது. இங்க இருக்க சாப்பாடு விஷமா இருக்கு. உங்களுக்காகத் தான் பல்லக் கடிச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். எப்போ உங்களையே அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்டாளோ, இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன். இவளுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் கட்டின தாலிய நானே கழற்றிட்டுப் போறேன்.”
விருப்பமில்லாது அணிவித்த மாங்கல்யத்தை உருவச் சென்றான் கருடேந்திரன். அப்போதும் கூடச் சிறு சலனம் இல்லாமல் அழுத்தமாக, இருக்கையில் பசை போட்டு அமர்ந்திருந்தாள் ரிது சதிகா. அவன் பெற்றோர்கள் ஓடிச் சென்று தடுத்தார்கள். தலை குனிந்திருந்த பொன்வண்ணன் கூடத் தடுத்தார்.
தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும் மூவரையும் தாண்டி அவளை நெருங்கியவன், ஆடைக்குள் மறைந்து நெஞ்சுக்குள் உறவாடிக் கொண்டிருந்த அந்த மாங்கல்யத்தை உள்ளங்கையில் பற்றினான். தடுத்துக் கொண்டிருந்தவர்கள் பலத்தை அதிகரித்து அவன் செயலை நிறுத்தப் பார்க்க, அலுங்காது குலுங்காது விழி உயர்த்தினாள்.
“விடுங்கம்மா!” என அந்த மாங்கல்யத்தை இழுக்க, இரு முறை உண்டான பந்தம் அவ்வளவு எளிதாக அவிழுமா! அவள்தான் அவன் இழுப்பிற்கு அசைந்தாள். தன்னோடு வர மறுத்த மாங்கல்யத்தின் மீது கோபம் கொண்டவன், சக்தியை ஒன்று திரட்டி மீண்டும் இழுக்க, ரிது அவனோடு மோதி விலகினாள். அதுவரை ஆத்திரத்தில் இருந்தவன் விழிகள் அவளிடம் தாவியது.
இப்படியான தருணத்தில் கூட ஒரு பெண் அசராமல் நிற்க முடியுமா? என்ற கேள்வி தான் அவளை ஆராய்ந்தபின் தோன்றியது. சிறுதுளிப் பதட்டம் இல்லை. பொதுவாகவே, கட்டியவனை விட அவன் கட்டிய தாலிக்குத் தான் பெண்கள் அதிகம் மரியாதை கொடுப்பார்கள். அப்படியான அதி தீவிர பயம் தென்படுவதாகத் தெரியவில்லை.
வெறுமையாக இருந்தது அவள் விழிகள். அந்த விழிகளை அவளவனாக ஆராய்ந்தான். இன்று வரை இந்த மாங்கல்யத்தை, அவள் மாங்கல்யமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக அவனுக்கு உணர்த்தினாள். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன் கைகள் தளர்ந்தது. கட்டியவள் மீது எண்ண முடியாத அளவிற்குக் கோபம் இருந்தாலும், மாங்கல்ய பந்தமும், கணவன் என்ற உரிமையும், இத்தனை உதாசீனங்களை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை.
ஆண் என்ற கர்வத்திற்குள், அவன் கட்டிய மாங்கல்யத்தை ஒளித்து வைத்தவனால் இதை வெறும் மஞ்சள் கயிறாக நினைக்க முடியவில்லை. பெற்றோர்கள் சம்மதத்தோடு, நல்ல நாள் பார்த்துக் கோவில் சன்னிதானத்தில் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டு நாள்கள் பல ஆகிவிட்டது. வேண்டாம், வேண்டும் என்ற இரு வேறு மன நிலையில் அவன் இருக்க, என்ன மனநிலையில் இருக்கிறாளோ ரிது.
“விடுடா!” எனப் பெரும் சத்தம் போட்ட சரளா, மகன் கையில் குடி கொண்டிருந்த மாங்கல்யத்தை விடுவித்து மருமகள் மார்போடு சேர்த்தார்.
“கல்யாணம்னா, உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா இருக்கா? காலங்காலமா இதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அதை அசிங்கப்படுத்தாதீங்க. உங்க கல்யாணம் உங்க விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு. ஆனா, இது கல்யாணம் தான். நீங்களே இல்லைன்னு சொன்னாலும், உங்க வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடந்து முடிஞ்சிருச்சு. இனி நீங்க எத்தனைக் கல்யாணம் பண்ணினாலும் இதான் தொடக்கம்.”
மூச்சு விடாது பேசிய சரளா சற்று மூச்சு வாங்கி, “உனக்கு எதுக்குடா இவ்ளோ கோவம் வருது? இந்தக் கோபத்தால தான் நீயும் நாங்களும் இங்க வந்து நிற்கிறோம். இப்பக் கூட அதை மாத்திக்க மாட்டேன்னு சொல்றியே. உன்ன நினைச்சா ரொம்பக் கவலையா இருக்கு கருடா.” என்றார் தன்மையாக.
கருடேந்திரன், அன்னையின் முகம் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொள்ள, சூறாவளியே சுழற்றி அடித்தாலும், கடலை பொரி சாப்பிட்டுக் கொண்டிருப்பது போல் சாதாரணமாக இருந்தாள் அவனின் வீட்டுக்காரி. அவளைக் கண்டவன் கண்கள் கலங்கியது. அதுவரை கல்லாக இருந்தவள் உயிர் பெற, தொடத் துடித்தான்.
“அவ பேசுன எதுவும் அவ மனசுல இருந்து வரல. அதனாலதான், அதோட பாதிப்பு இப்ப வரைக்கும் அவ கண்ணுல தெரியல. வலுக்கட்டாயமா தாலி கட்டுன உன்னை எப்படி எல்லாம் பழி தீர்க்க முடியுமோ, அப்படி எல்லாம் பழி தீர்த்துட்டு இருக்கா. நீ தாலியப் புடிச்ச அப்பக்கூட அவ தடுக்காம இருந்ததுக்குக் காரணம் இதுதான்.” என்றிட அப்போதுதான் பொம்மை போல் இருந்தவள் உடலில் உணர்வுகள் உருவானது.
அசையாத சிலையாக இருந்தவள் கண்களில் உண்டான உணர்வைப் புரிந்து கொண்டவர், தன் பக்கம் பார்வை வருவதை அறிந்து அவள் அருகே சென்றார். மாமியாரைப் பார்வையால் சுட்டுப் பொசுக்கினாள். எண்ணற்ற கேள்விகளை நொடிப்பொழுதில் தன்னிடம் இடமாற்றும் மருமகள் கன்னத்தைப் பிடித்தவர்,
“உன் மனசு எனக்குப் புரியாம இல்ல. உன்னை மருமகளா பார்க்குறதை விட மகளாப் பார்க்கிறேன். அதனாலதான், இவனை என்ன வேணா பண்ணிக்கன்னு இப்ப வரை அமைதியா இருக்கேன். இனியும் அமைதியாக தான் இருப்பேன். ஏன்னா, இந்த வயித்துல நானும் ஒரு பொண்ணைப் பெத்திருக்கேன். உன் இடத்துல என் பொண்ணு இருந்திருந்தா, இந்நேரம் என் வீட்டு ஆம்பளைங்க மீசைய முறுக்கிக்கிட்டுத் தாலி கட்டுனவன் கையக் கால உடைச்சிருப்பாங்க. தன் வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம், அடுத்த வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம்னு நானும் சராசரியா யோசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுட்டேன்.” என்றவரை இது நாள் வரை பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தாள்.
“உன்ன நான் ஒரு அயோக்கியனுக்குக் கட்டிக் கொடுக்கல. அந்த ஒரு தைரியத்துல தான் பிடிக்காத ரெண்டு பேரைச் சேர்த்து வச்சிருக்கேன். உன் மனசுல எவ்ளோ கோவம் இருக்கோ, அவ்ளோ கோபத்தையும் கொட்டு. ஆனா, கடவுள் கொடுத்த இந்த உறவை வெட்டி விடணும்னு மட்டும் நினைக்காத. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இந்த வாழ்க்கை உனக்குப் பிடிக்கும். இந்தத் தாலி உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். காரணம் இல்லாம, ஏணி வச்சா கூட எட்ட முடியாத ஒருத்தனை, உன் வாழ்க்கைக்குள்ள அந்தக் கடவுள் நுழைச்சு இருக்க மாட்டான்.”
“என் பொண்ணுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்.”
“நியாயமா நாங்கதான் சார் மன்னிப்புக் கேட்கணும். இவ மனசைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, விருப்பம் இல்லாத தாலிய இன்னும் அழகுபடுத்த நினைச்சது எங்க தப்பு.”
“இதுக்கு மேலயும் சேர்த்து வைக்க யோசிக்காதீங்கம்மா. இவளுக்கும், எனக்கும் ஒத்து வராது. தெரியாமல் தப்புப் பண்ணிட்டேன். இவளுக்கு நான் பண்ணது துரோகம் தான். அதுக்கு ஜெயில்ல கூடப் போடச் சொல்லுங்க. இந்தக் கல்யாணம் மட்டும் வேணாம்.”
“இதுக்கு மேல எதுவும் பேசாத கருடா. அம்மா இவ்ளோ சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. அம்மா கூட இருக்க உன்னாலயே புரிஞ்சிக்க முடியாத அப்போ, எடுத்துச் சொல்ல ஆள் இல்லாத இவ எப்படிப் புரிஞ்சிப்பா? சரியோ தப்போ, நான் என் மருமகளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன். இன்னொரு தடவை அவளை அடிக்காத. அப்புறம் மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்.” என்ற பெற்ற தாயின் பேச்சைச் சகித்துக் கொள்ள முடியாது, யாரும் அமராமல் காலியாக இருந்த இருக்கையை எட்டி உதைத்து விட்டு வெளியேறினான்.
கோபமாகச் செல்லும் மகனை சத்யராஜ் பாவமாகப் பார்க்க, பிள்ளையின் மனம் புரிந்தாலும் பெண்ணாக யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மீண்டும் ஆளாக்கப்பட்ட சரளா, “நாங்க போனதுக்கப்புறம் இவளை எதுவும் சொல்லாதீங்க சார். எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருச்சுன்னா, அதைப் பேசிக் கிளறாம கொஞ்சம் ஆறப் போட்டாலே போதும், தன்னால சரியாகிடும்.” என்று விட்டுத் தந்தை, மகள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார் சரளா.
கிளம்புவதற்கு முன் மருமகளிடம் சென்றவர், “என் புள்ள அடிச்சதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்.” என்று விட்டு இரு நொடி அமைதியாக அவள் முகத்தை ஆராய்ந்து,
“நீயே நினைச்சாலும், என் குடும்பத்துக்கும் உனக்குமான பந்தம் அறுந்து போகாது. இந்த ஜென்மத்துல நான்தான் உனக்கு மாமியார்! என்னைக்கா இருந்தாலும் மாமியார் கொடுமையைக் காட்டாமல் விடமாட்டேன்.” என்றதைக் கேட்டதும் சிட்டிக்கு உயிர் வந்தது போல் முகத்தில் லேசான சிரிப்பு உதயமானது.
அதை அங்கிருந்த ஆண்கள் இருவரும் அறியாது போக, “நீயும் கொஞ்சம் மருமகள் கொடுமையைக் காட்டலாம். ரெண்டு பேரும், வேலைய முடிச்சுட்டு வர என் பிள்ளைகிட்டப் பஞ்சாயத்து வச்சு அவனுக்கு யாரு முக்கியம்னு தெரிஞ்சுக்கலாம்.” என்று விட்டு அவளைப் போல் வெளிவராத புன்னகையை அவளுக்கு மட்டும் காட்டிவிட்டு வெளியேறினார்.
7. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 7
குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள்.
கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக் கண்டு முறைத்தவள் கையில் இருந்த சீப்பைத் தூக்கி அடித்தாள்.
இவளால் ஒன்றும் செய்ய முடியாத அவனை, அந்தச் சீப்பு மட்டும் என்ன செய்யும்? பாவமாகக் கண்ணாடியில் பட்டுக் கீழே விழ, “பைத்தியக்காரி!” எனப் பல்லைக் காட்டிச் சிரித்தான் கருடேந்திரன்.
“ராஸ்கல்!” என்று சிங்கப்பல்லை மேலும் கீழும் நசுக்கிக் கோபம் கொண்ட ரிது, “உன்னை அழிக்கிறது மட்டும்தான்டா என் வாழ்நாள் லட்சியம்..” கர்வத்தோடு கூறும் நேரம் கதவு திறக்கப்பட்டது.
தலை திருப்ப, அவளுக்குத் தரிசனம் கொடுத்தவன் தாவி மெத்தையில் விழுந்தான். உடம்பு நோகாமல் சுகமாகத் தூங்குவதற்காகப் பார்த்துப் பார்த்துத் தனக்கென்று வரவழைத்த மெத்தையில், இப்படி யாரோ ஒரு குப்பையானவன் விழுவதைச் சகித்துக் கொள்ள முடியாது, “உவாய்க்!” எனக் குமட்டினாள்.
சற்றுத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தவன், “ராத்திரி ஒன்னுமே நடக்கலையே, இதுக்கேவா வாந்தி வருது?” என்றதும் சிவக்கும் அவள் முகம் கண்டு மனம் மகிழ்ந்து,
“அப்போ களத்துல குதிச்சா உடனே புள்ள பொறந்திடும் போலயே.” என்றான்.
“கருமம்… கருமம்… ச்சீ! உன்ன மாதிரி ஒருத்தன் கூட வாழுறதே அசிங்கம். இதுல குழந்தை வேறயா? அதுவும் உன்ன மாதிரி லோ கிளாஸா தான் இருக்கும்.”
“நீ ஒன்னும் கவலைப்படாத செல்லம். நம்ம புள்ளைய நானே ஆட்டோல கூட்டிட்டுப் போய் ஸ்கூல்ல விடுறேன்.”
“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது வாலாட்டிக்கிட்டு எங்கயோ போகுமாம். அந்த மாதிரித் தான்டா, எவ்ளோ வசதியான வீட்ல இருந்தாலும் உன் புத்தி குப்பைக்கே போகுது.”
“தேங்க்யூ!” எனச் சுகமாகப் படுத்துக் கொண்டான்.
பார்த்துப் பார்த்துத் தன்னை அலங்கரித்தவள், கோபம் என்னும் சிவப்பில் அத்தனை அழகையும் கெடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவளைப்போல், போகும் வரை அமைதியாக நின்றிருந்தவன், “அய்யய்யோ!” என அவசரமாகக் குரல் கொடுக்க, அலறியடித்துத் திரும்பியவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு படியேறினான்.
பல நிமிடங்கள் கழித்தும், என்ன நடந்தது என்று புரியாமலே அவன் கைக்குள் குழந்தையாகச் சுருங்கி இருந்தவளைத் தன் அறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்றவன்,
“கன்னியப்பன் என் கைக்கு வர வரைக்கும் நீ இங்கதான் இருக்கணும்.” ஒவ்வொரு வார்த்தையாக இழுத்துப் பேசியவன், என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை சிறிதும் இல்லை ரிதுவிற்கு.
அவன் கத்திய வேகத்தோடு தன் சிந்தனையை இழந்தவள், இந்தப் பால்கனியில் என்ன செய்து விட முடியும் என அசாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிறிதும் அஞ்சாமல் பால்கனியிலிருந்து தூக்கி வீசினான். கீழ்த்தளத்தில் நின்று கொண்டு எமன் தன்னைக் கயிறு கட்டி இழுப்பது போல் அஞ்சியவள், இன்றோடு ரிதுவின் சரித்திரம் முடிந்தது என்று கண்களை மூடிக் கொள்ள, கஷ்டத்தையே பார்க்காமல் சொகுசாக வளர்ந்த அவளின் பூமேனி தண்ணீரில் விழுந்தது.
நீச்சல் குளத்தில்தான் தூக்கி வீசி இருந்தான் கருடேந்திரன். நல்ல வேளையாக இவன் மனைவி, முதல் தளத்திலேயே தன் அறையை வைத்திருந்தாள். அதற்கும் நீச்சல் குளத்திற்கும் பெரிதாக உயரம் இல்லாததால், எந்தச் சேதாரமும் இல்லாமல் நீருக்குள் வீணாக விழுந்தவள் தத்தளித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்வண்ணன் அலறித் துடித்துக் காப்பாற்ற ஓட,
“சேத்துப் பன்னி மாதிரி இங்கயே இருடி. செத்துடுவன்னு தோணுனா மட்டும் குரல் குடு, என் கன்னியப்பன் இருக்கான்… ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக.”
பால்கனிச் சுவரில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு நின்றான். ஓடிவந்த தந்தை மகளின் நிலை எண்ணிக் காப்பாற்றக் கை கொடுத்தார். அவருக்காகத் தன் பயத்தைக் குறைத்துக் கொண்டவள் திடமாக, அவர் உதவியை நாடாமல் நீச்சல் குளத்தின் விளிம்பில் ஏறி அமர்ந்தாள்.
“உனக்கு ஒன்னும் இல்லைலடா ரிது…”
“ஒன்னும் இல்லப்பா”
“என்னடா ஆச்சு, எப்படி இதுல விழுந்த?”
“நான்தான் உங்க பொண்ணைத் தூக்கிப் போட்டேன்.”
“ஏம்பா இப்படிப் பண்ண? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன ஆகுறது. உன் கோபத்துக்கு ஒரு அளவே இல்லையா? இவ எனக்கு ஒரே பொண்ணு. எனக்குன்னு வாழ்க்கையில இருக்கிறது இவ மட்டும் தான். இப்படி என் பொண்ண என் கண்ணு முன்னாடியே சித்திரவதை பண்றியே.”
மாமனாரின் குரலுக்குச் சீறியவன், “அப்படித்தான் பண்ணுவேன். அவளுக்கு இந்த மாதிரிப் பண்ணா தான் புத்தி வரும். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப் போகல. என் ஆட்டோவைத் திருப்பிக் கொடுத்தா இத்தோட எல்லாத்தையும் முடிச்சுப்பேன். இல்லனா, ஒவ்வொரு நாளும் உங்க பொண்ணுக்கு உயிர் பயத்தைக் காட்டிக்கிட்டே இருப்பேன்.” என்றவனைப் பார்க்கப் பயமாக இருந்தது அவருக்கு.
“டேய்!”
மாமனாரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவி புறம் பார்வையைத் திருப்ப, “இதுக்கெல்லாம் நடுங்குற ரகம் நான் இல்ல. இதுக்கான சேதாரத்தைப் பார்க்கறியா?” எனப் பொறுமையாக நீச்சல் குளத்திலிருந்து எழுந்தவள்,
“இவன் தங்கச்சி இந்நேரம் காலேஜுக்குக் கிளம்பி இருப்பா. சரியா பத்து நிமிஷத்துல எம் கே மெயின் ரோடுக்கு வருவா. கொஞ்சம் கூட யோசிக்காம வண்டியை ஏத்தி ஆறு மாசத்துக்கு நடக்க முடியாம பண்ணிடுங்க.” எனத் தன்னைக் காட்சிப் பொருளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தன் வேலை ஆள்களுக்குக் கட்டளையிட்டாள்.
“ஏய்ய்ய்…”
“உன்ன விட என் குரல் ரொம்பச் சத்தமா ஒலிக்கும். அதோட சத்தத்தை உன்னாலயும், உன் குடும்பத்தாலயும் தாங்கிக்க முடியாது. நீ என்னடா எனக்கு உயிர் பயத்தக் காட்டுறது? நான் நெனச்சா நிமிஷத்துக்கு நிமிஷம் உன் குடும்பத்துக்கே அந்தப் பயத்தைக் காட்ட முடியும். வேணும்னா சாம்பிள் பார்க்கறியா?” என்றவள் அங்கு நின்றவர்களைச் சீற்றம் பொங்க நோக்கி,
“சொல்லிப் பத்து நிமிஷம் ஆகுது. இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? அவ கால் ரெண்டும் உடைஞ்சிடுச்சுன்னு நியூஸ் வரணும்.” எனக் கர்ஜிக்க அரக்கப் பறக்க ஓடினார்கள்.
தந்தை கத்துவதையும், அவன் கத்துவதையும் சிறிதளவும் காதில் வாங்கிக் கொள்ளாதவள், நனைந்த உடலோடு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். மொத்த நீரும் அந்த விலை உயர்ந்த இருக்கையில் சிந்திக் கொண்டிருக்க,
“ம்ஹூம்!” என அவனைக் கண்டு ஓசை கொடுத்தாள்.
“வேணாம்டி. என் தங்கச்சிக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சு, உன்னைச் சும்மா விடமாட்டேன். போனவங்களைத் தடுத்து நிறுத்து.”
“இல்லனா…”
“சார், உங்க பொண்ணுகிட்டச் சொல்லுங்க. இதுக்கான பலன் ரொம்ப மோசமா இருக்கும்.”
“அதையும் தான் பார்த்திடுவோம்.”
“ஏய்!” எனத் தாவிச் சென்று அவள் கழுத்தைப் பிடித்தவன், அவள் பார்க்கும் பார்வையில் இருக்கும் நகைப்பை உணர்ந்து,
“ரொம்ப விஷமுள்ள மனசுடி உனக்கு. குடும்பம்னா என்னன்னே தெரியாம வளர்ந்த உன்ன மாதிரிப் பிசாசுக்கெல்லாம் ஒரு உயிரோட மதிப்புத் தெரியாது. நீ செத்தா பணம் மட்டும் தான்டி உன்னைச் சுத்தி இருக்கும். எங்களை மாதிரி ஆளுங்களுக்குப் பாசமும், அன்பும்தான் நிக்கும். உங்க அப்பா இல்லனா நீ ஒரு அனாதைடி! அனாதையா இருக்கும்போதே உனக்குள்ள இவ்ளோ கொழுப்பு இருக்கே, இன்னும் அப்பா அம்மா சேர்ந்து இருந்து, கூடப் பொறந்த பொறப்பெல்லாம் இருந்தா எவ்ளோ ஆடி இருப்ப…” என்றிடப் பக்கத்தில் நின்றிருந்த பொன்வண்ணனின் மனம் நொறுங்கியது.
ரிதுசதிகா பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, “போனவங்களைத் திரும்பி வரச் சொல்லுடி.” எனக் கழுத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.
“விடு அவளை…”
“உங்களுக்கு உங்க பொண்ணு எப்படியோ, அப்படித்தான் என் தங்கச்சி எனக்கு. அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லுங்க, உங்க பொண்ண விடுறேன்.”
“உன் தங்கச்சிக்கு எதுவும் ஆகாது. என் பொண்ண விடு.”
“அதை இவளைச் சொல்லச் சொல்லுங்க.”
“நான்தான் சொல்றேன்ல. முதல்ல என் பொண்ணு மேல இருந்து கையை எடு.” என்றதும் மெல்லக் கைகளை விலக்க, அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்து உடனே மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
வேலையாள்களைத் தொடர்பு கொண்ட பொன்வண்ணன் கிளம்பி வர உத்தரவிட, எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். மாமனாரின் வார்த்தைக்குப் பின் கோபத்தை விட்டவன், “மோதுறதா இருந்தா என்கிட்ட மோது… என் குடும்பத்துப் பக்கம் போகாத. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என அங்கிருந்து சென்று விட்டான்.
“எதுக்கு ரிது இப்படிப் பண்ற? உன்னப் பார்க்க ரொம்பப் புதுசாத் தெரியுது. ஒரு சின்னப் பொண்ணு கால உடைக்கச் சொல்ற. நடந்த பிரச்சினைக்கே இன்னும் ஒரு தீர்வு கிடைக்கல. அதுக்குள்ள புதுப் பிரச்சினையைக் கிளறாத.”
தந்தைக்கு எந்தப் பதிலையும் உரைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தனிமை கொடுக்க எண்ணி நகர்ந்தார். பல மணி நேரங்களுக்குப் பின், தன்னை மீட்டெடுத்துக் கொண்டவள் எதுவும் நடக்காதது போல் மீண்டும் குளித்துவிட்டுக் கிளம்பினாள்.
“கன்னியப்பன் எப்ப வருவான்?”
“உன்கிட்டப் பேச எனக்கு நேரமில்லை.”
“சொல்லிட்டுப் போடி!”
“உனக்கு எதுக்குடா நான் பதில் சொல்லணும்? நீ யாருடா எனக்கு.”
“அப்புறம் எதுக்காக நான் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு நினைக்கிற. யாருன்னு தெரியாதவன் மேல உனக்கு எதுக்கு அக்கறை?”
“அக்கறையா?” என அவன் முகம் நோக்கியவள், “விஷமுள்ள மனசுக்காரிக்கு அக்கறை எங்க இருக்கும்?” என்று விட்டுத் தன் பையைக் கையில் எடுத்தவள் குதிகாலணியை அணிந்துகொண்டு அவன் செவி அலற நடந்தாள்.
அவள் பேசிய வார்த்தையை விட, விழிகளில் தெரிந்த விரக்தி பெரும் யோசனைக்கு ஆளாக்கியது. அத்தோடு நின்றிருந்தவன் காதில், “பணம் இருந்தால் தான் பாசமுள்ளவங்களை எடுத்துப் போடக் கூட முடியும். பணம் இருந்தால் தான் உன் தம்பி, தங்கச்சிங்க மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கன்னு காட்ட முடியும். பணம் இருந்தால் தான் நீ நீயா இருப்ப, உன்னச் சுத்தி இருக்கவங்க சொந்தக்காரங்களா இருப்பாங்க.” என்றவள் தன்னையே ஆராய்ந்து கொண்டிருக்கும் அந்த விழிகளுக்குள் தொலைய விரும்பாது,
“பணத்துக்காகத் தான்டா, உனக்கும் எனக்குமான இந்தத் திருமணமே நடந்திருக்கு. பணமில்லாத வாழ்க்கை உனக்கும் நரகம் தான், எனக்கும் நரகம் தான். பணத்த வச்சுப் பாசத்தை வாங்கிட முடியும். பாசத்தை வச்சுப் பணத்தை வாங்க முடியுமா?” என்ற கேள்வியோடு அங்கிருந்து விடை பெற்றாள்.
***
சிங்கத்திற்கும், புலிக்கும் திருமணம் ஆகி ஆறு நாள்கள் நிறைவடைந்து விட்டது. இந்த ஆறு நாள்களில், பொன்வண்ணன் தான் நொந்து நூலாகி விட்டார். இருவரும் சரிக்குச் சமமாக அடித்துக் கொள்வதைப் பார்த்தவர் சமாதானம் செய்ய நடுவில் செல்வதை நிறுத்தி விட்டார். அதிலும் நேற்று இரவு நடந்த சம்பவம் மொத்தமாகக் கொண்ட நம்பிக்கையை சரித்து விட்டது.
ஆட்டோவைச் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டவள், ஓயாமல் வீட்டோடு மாப்பிள்ளை என்று கருடனை வம்பு இழுத்துக் கொண்டிருக்க, பொறுக்க முடியாதவன் நேராக மாமனார் முன்பு நின்றான். அவர் என்னவென்று விசாரிப்பதற்குள்,
“இனி இந்த வீட்ல எந்த வேலைக்காரங்களும், டிரைவர்ஸும் இருக்கக் கூடாது. என் ஆட்டோவைத் திருப்பித் தர வரைக்கும் அவளேதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்.” கடகடவென்று கட்டளையிட்டான்.
“அவ ட்ரைவ் பண்ண மாட்டாப்பா…”
“இவ்ளோ வாய் பேசுற உங்க பொண்ணுக்கு வண்டி ஓட்டத் தெரியாதா?”
மருமகன் முகத்தில் தெரியும் ஏளனத்தைக் கண்டு சிறிதும் வருந்தாதவர், “என் பொண்ணு ரேசர்! அவளை மாதிரி நுணுக்கமா வண்டி ஓட்டுற ஆளைப் பார்க்கவே முடியாது.” என்றதைக் கேட்டவன் தன் முகத்தைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல்,
“அப்புறம் என்ன கேடு?” என்றான்.
“அவ கார் ஓட்டிட்டுப் போகும்போது தான், ஆக்சிடென்ட் ஆகி அவ கண்ணு முன்னாடியே என் மூத்த பையன் இறந்தான். அதுல இருந்து அவ கார் ஓட்டுறது இல்லை. அவளுக்கு அந்த சீட்டைப் பார்த்தாலே பயம் வரும்.”
“ஓஹோ!”
“அவளைப் பத்தி உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன்,
“உங்க பொண்ணு மாதிரி ஒரு ஆளு வண்டி ஓட்டாம இருக்குறதே நல்லது. கூடப் பிறந்தவனையே கொன்னவ, எத்தனைப் பேரைக் கொல்லுவாளோ? நான் சொன்ன மாதிரி எல்லா டிரைவரையும் அனுப்பிடுங்க.” என்று நகர்ந்து விட்டான்.
மருமகன் வார்த்தைக்காகப் பணி அமர்த்திய ஆறு ஓட்டுநர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். அதில் ஒருவர் ரிதுவை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றிருந்தார். பாதியிலேயே மகளுக்குத் தெரியாமல் கிளம்பச் சொல்லி விட்டார். பணி முடித்து வந்தவள் ஓட்டுநரைக் காணாது அழைப்பு விடுக்க, நடந்த அனைத்தையும் கேட்டுக் குதித்தாள்.
“யாரைக் கேட்டு என் டிரைவரை நிறுத்துனீங்க?”
“என்னைக் கேட்டுத்தான்…”
சத்தம் தனக்குப் பின்னால் வருவதால் திரும்பியவள் நிற்பவனைக் கண்டு, “எல்லாம் உன்னோட வேலை தானாடா ராஸ்கல்.” பல்லைக் கடித்தாள்.
“புத்திசாலி தான்!”
“ச்சீ! உன் பாராட்டு ஒன்னும் எனக்குத் தேவையில்லை. எதுக்குடா இந்த வேலையைப் பார்த்த.”
“என் ஆட்டோவைக் கொடுக்கலன்னா, உன்னோட சலுகை ஒவ்வொன்னும் குறைஞ்சுகிட்டே போகும்.”
“என்னமோ உன் சம்பாத்தியத்துல சொகுசா வாழுற மாதிரி, சலுகையைக் குறைப்பேன்னு சொல்ற. நீயே ஓசில என் சலுகையை அனுபவிக்க வந்தவன் தானடா.”
“இந்த வாய் தான்டி உனக்குப் பெரிய எதிரி. இதைக் குறைக்காம உன் வாழ்க்கை விளங்கவே விளங்காது.”
“அதை நான் பார்த்துக்குறேன். என் விஷயத்துல இருந்து ஒதுங்கி இருக்குற வேலையை மட்டும் நீ பாரு.”
“அது எப்படி ஒதுங்கி இருக்க முடியும்? முறைப்படி இரண்டு தடவை தாலி கட்டி லைசென்ஸ் வாங்கி இருக்கேன்.”
“ஏய்!”
“என் குடும்பத்தை என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட. எனக்குன்னு இருந்த கன்னியப்பனையும் பறிச்சிட்ட. உன் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வச்சிருக்க. இத்தனையும் பண்ண உன்னைச் சும்மா விட, நான் என்ன புள்ளப் பூச்சியாடி. இனி என் ஆட்டத்தை மட்டும் தான் நீ பார்ப்ப. என் தொல்லை தாங்க முடியாம, இந்தாடா உன் ஆட்டோன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு எல்லாத்தையும் நான்தான் பண்ணன்னு போலீஸ்ல போய் சரணடைஞ்சிடுவ.”
“ஹா ஹா! அடப் பகல்கனவு காணுற பைத்தியமே! ஏன்டா உன் மண்டையில கொஞ்சம் கூட மசாலா இல்லையா? என் முன்னாடி செல்லாக் காசா இருக்க நீ…” என்றவள் அவனை நெருங்கி, “நல்லாக் கேட்டுக்கடா, செல்லாக்காசு.” என அசிங்கப்படுத்தினாள்.
“செல்லாக் காசா இருக்கற நீ தான் ஆட்டத்தைக் காட்டப் போறியா? உண்மை என்னன்னு தெரியுற வரைக்கும் தான் இந்த லைசென்ஸ்ல உன் பேரு இருக்கும். அதுவரைக்கும் ஓசில தின்னுட்டுப் போடா.”
“ஆமா, நீதான் கார் ஓட்டிட்டுப் போய் உன் அண்ணனைக் கொன்னுட்டன்னு கேள்விப்பட்டேன், உண்மை தானா? இந்தச் சொத்து மொத்தத்தையும் அனுபவிக்கத் தான அவனைக் கொன்ன? கூடப் பிறந்தவனையே கொன்னுருக்கியே நீயெல்லாம்…”
கட்டியவன் வார்த்தையைக் கேட்டவள், அவன் கைப்பேசியைப் புடுங்கித் தூக்கிப் போட, பல வருடமாகப் பாதி உசுரில் உலாவிக் கொண்டிருந்த அந்தக் கைப்பேசி தன் உயிரை மாய்த்தது. அதுவரை விளையாட்டாக இருந்தவன் உடனே மாறும் வானிலை மாற்றம் போல் முகம் சிவந்து பிடுங்கியவள் கையைப் பிடிக்க, அடுத்த நொடி அவன் முகம் போல் கன்னமும் ஐவிரல் மருதாணியில் சிவந்தது.
ரிதுசதிகாவின் உள்ளங்கையில் எத்தனை ரேகைகள் இருக்கிறது என்று அவன் கன்னத்தை எண்ணியிருந்தால் தெரிந்து கொள்ளலாம். வாங்கிய அடியில் உடல் மொத்தமும் விரைத்து நின்றது. ஆத்திரத்தில் தாடையைக் கடித்துக் கொண்டு, தன்னைப் பார்வையால் தொலைக்கும் அவன் பார்வைக்குச் சிறிதும் அஞ்சாதவள்,
“உன் லிமிட்ல இருந்துக்க.” என விரல் நீட்டினாள்.
அந்த விரலோடு அவளையும் சேர்த்துப் பிடித்து அங்கிருந்த காரில் சாய்த்து நிற்க வைத்தவன், மூக்கு நுனி அனல் காற்றால் பொசுங்கும் அளவிற்கு முறைத்து, “நீதான உன் அண்ணனைக் கொன்ன? உன்ன மாதிரி ஒரு பணப் பிசாசுக்குக் கூடப்பிறந்தவன் கூடத் தொல்லையா தான் தெரிவான். உன் அப்பாவை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கன்னு தெரியல. அவரையும் சீக்கிரம் ஏதாச்சும் பண்ணிட்டு இந்த மொத்தப் பணத்தையும் அள்ளி வாயில போட்டுக்க. உன்கிட்ட வந்தாலே பண நாத்தம் தான்டி வீசுது. உன்ன மாதிரி இரக்கமில்லாத பிசாசுக்குப் பயம் எதுக்கு? கொலை பண்ணது தெரியக் கூடாதுன்னு வண்டி ஓட்ட மாட்டேன்னு ஊர நம்ப வச்சுட்டு இருக்க. இன்னைக்கு உன் முகத்திரையைக் கிழிக்கிறேன்.” என அவள் வலது கை தோள்பட்டையில் மாட்டியிருந்த ஸ்லிம் பேகைப் பிடுங்கினான்.
அவன் வார்த்தை ஒவ்வொன்றும், முழுவது நீரை நிரப்பி வைத்து, அதில் தன் தலையை இறுக்கமாக அமுக்கி மூச்சு முட்ட வைத்தது போல் இருந்தது. நன்றாகப் பழுக்க வைத்த இரும்புக் கம்பியை ஈவு இரக்கம் பார்க்காமல் அங்கங்கே தொட்டு எடுத்தது போல் எரிச்சல். கரடு முரடான கற்கள் படிந்த பாதையில் படுக்க வைத்துத் தரதரவென்று இழுத்து வந்த உணர்வில் சிக்கிக் கொண்டவள் அப்படியே உறைந்து நின்றாள்.
தன்னவளின் மனத்தைப் படிக்கத் தவறியவன், “இப்ப எப்படி எதுவுமே இல்லாம நிக்கறியோ, அதே மாதிரிக் கூடிய சீக்கிரம் மொத்தமா நிர்கதியா நிக்க வைப்பேன்.” என்றவன் இருசக்கர வாகனத்தில் மறைந்து விட்டான்.
எப்படியும் அவளிடம் இருந்து ஆட்டோவை வாங்க முடியாது என நன்குணர்ந்து கொண்டவன், வீட்டிலிருந்த பழைய இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விட்டான். ஆறு நாள்கள் எதுவுமே இல்லாமல் நடையாக நடக்க வைத்தவளை, அதேபோல் நடக்க வைக்கத்தான் இத்தனை நாடகம். மாமனாரிடம் பேசி ஓட்டுநரை நிறுத்தியவன், அவள் தேவைகளை நிரப்பி வைத்திருக்கும் அந்தப் பையையும் வாங்கிக் கொண்டான். கைப்பேசி உட்பட அனைத்தும் அதில் தான் இருக்கிறது.
அவளுக்குச் சொந்தமான அந்த வெள்ளை நிறக் காரும், அவளும் மட்டும் தான் அங்கு நின்றிருந்தார்கள். இரவு ஏழு மணி ஆகிவிட்டதால், அவள் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் அனைவரும் கிளம்பினார்கள். வரும் அனைவரின் முன்பும், கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அழகு பொம்மை போல் தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டாள் ரிதுசதிகா.
என்றும் தங்கள் முதலாளியின் முகத்தில் தெரியும் கர்வம், இன்றுக் காணாமல் போய் இருப்பதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே அனைவரும் கிளம்ப, இன்னும் அவன் கொடுத்த திகைப்பிலிருந்து மீளவில்லை. தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளுக்குச் சென்றது அவள் நினைவு. அங்கிருந்த காவலாளி, ஒரு மணி நேரமாகத் தங்கள் முதலாளி அங்கே நிற்பதைக் கண்டு,
“மேடம்!” என நிகழ்வுக்குக் கொண்டு வந்தார்.
“ரொம்ப நேரமா இங்கயே நின்னுட்டு இருக்கீங்க, ஏதாச்சும் பிரச்சினையா?”
“ரொம்ப நேரமா…” என நேரத்தைப் பார்த்த பின்பு தான் நிகழ்வை உணர்ந்தாள்.
தனக்குக் கீழ் பணி புரிபவரிடம், தன் நிலையைக் கூற விரும்பாதவள் யாரிடமும் உதவி கேட்கவும் விரும்பவில்லை. இங்கிருந்து நடையாக நடந்தால் கூட ஏழு மணி நேரமாகும் அவள் வீட்டிற்குச் செல்ல. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காவலாளியைப் பார்வையால் விலகிச் செல்ல வைத்தவள், அங்கு நிற்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
அவள் தகுதியும், சுய கௌரவமும் அங்கு நிற்கத் தடை விதித்தது. அவன் விட்டுச் சென்ற கார் மட்டுமே வீட்டிற்குச் செல்ல ஒரே வழி. ஆனால், உடல் நடுங்கியது, அதில் ஏறி அமர. அவள் உடன்பிறந்தவன் மறைந்து பல மாதங்கள் ஆன பின்புதான் காரைப் பார்க்கவே தைரியம் வந்தது. பொன்வண்ணனின் ஆதரவால் மெல்ல இயல்புக்கு மீண்டவள், தங்கள் வாழ்க்கைக்காக அதில் பயணிக்கும் அளவிற்கு மாறினாளே தவிர, ஓட்டுநர் இருக்கையில் அமரும் அளவிற்குத் தேறவில்லை.
இரும்பு மனிதியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டவள் மனத்திற்குள் சின்னப் பூ ஒன்று இருக்கிறது. அதைக் கருடேந்திரன் எனும் காற்று மொத்தமாக அடித்து வீழ்த்தியது. தோல்வியை ஒத்துக்கொள்ள விரும்பாது, கார்க்கதவைத் திறந்தவளுக்குப் பயம் எனும் அரக்கன் கண் முன் தெரிந்தான். வேகமாக அதைச் சாற்றி விட்டுத் திரும்பியவள் பார்வையில் அந்தக் காவலாளி. அவர் பார்வையும், தன்னை எடை போடும் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் மூச்சை இழுத்து விட்டுக் காரில் ஏறி அமர்ந்தாள்.
எடுத்ததுமே அசுர வேகத்தில் அதை இயக்கியவள், கண்மண் தெரியாமல் ஓட்ட ஆரம்பித்தாள். உடன் பிறந்தவனின் அலறல் சத்தம் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலைக்கு வரும் வரை பின் தொடர்ந்த அந்தச் சத்தம், இதயத்திற்குள் நுழைந்து இதயத்திற்குக் கை கால்களாக இருக்கும் ரத்தக்குழாய்களைப் பிடுங்கிப் போட்டது. அன்று அவன் அண்ணன் தேகத்திலிருந்து பீய்ச்சி அடித்த ரத்தம் போல், இவள் இதயத்தில் இருந்த ரத்தம் பிய்த்துக் கொண்டு சிதறியது.
அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாதவள் மெல்லக் கண் சோர ஆரம்பித்தாள். தன் மன நிலையை உணர்ந்து கொண்டவள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை போராடிக் கொண்டிருக்க, உணர்வுகள் ஒத்துழைக்க மறுத்தது. தன் கதை இத்துடன் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தவள், எதிரில் வரும் எந்த உயிருக்கும் எந்தச் சேதாரமும் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலோடு கண் மூடினாள்.
அத்தியாயம்-4
நளன் தன் மீது மோதிய பெண்மையில் சித்தம் களங்கியவன் நல்ல கொழுக் மொழுக் இடையை கைகளால் பிசைந்து எடுத்தவனோ கண்களை திறக்காமல் மூடியே இருக்க… அவனின் உடல் முழுவதும் சில்லென்ற மின்சாரம் பாய்ச்சியது… இந்த உணர்வுகள் அவனுக்கு புதிது.. இது போன்றதொரு சித்தம் களக்கிய உணர்வுகளை அவன் இதுவரை அனுபவித்ததே இல்லை… சொல்ல போனால் அவனுக்கு வயது 30 ஆக உள்ளது என்பது முக்கியமானது…
தன் இறும்பான மார்பில் மோதிய தென்றலை விட மென்மையான பெண்ணவளின் உடல் அவனை பித்துக்கொள்ள செய்ய…. ஆனால் அவனுக்கு ஏனோ கண்களை திறக்கவோ, அந்த குழைந்த இடையில் இருந்து கையை எடுக்கவோ தோன்றவே இல்லை…
“ஆஆஆ…”என்ற கத்தலிலையே நளன் தன் மூடிய கருவிழிகளை திறக்க… அங்கோ தன் முகத்திற்கு மிக அருகில் அவளை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவே இல்லை… சட்டென்று அவனின் மோகன உணர்வுகள் அறுபட…. வெந்நீர் தெளித்தது போல முகம் சுருக்கியவன்… அவளை தன்னிடம் இருந்து விலக்க முயல… ஆனால் அதற்கு அவள் விடவேண்டுமே..
அவள் கைகளோ அவன் கழுத்தை மாலையாக்கி இருக்க… அவனின் மார்பு வரை மட்டுமே இருக்கும் அந்த பெண்ணவளுக்கு அவன் கழுத்தினை பிடித்துக்கொள்வது கொஞ்சம் கடினமாக இருந்தது போல அதனால் வேகமாக அவன் கழுத்தை விட்டவளோ அவனின் இடையை தன்னுடன் இறுக்கிக்கொள்ள… அவனோ அவளை உணர்வுகள் தொலைத்த பார்வையை பார்த்தான் என்றால் அவளோ அவனை மயக்கும் பார்வை பார்த்தாள்..
“ஹாய் மாமாஜி… லாங் டைம் நோ சீ…”என்றாள் தனது பிள்ளைமொழி குரலில் தன் அழகான பால்பற்களை காட்டி…
அவனோ அவளின் மாமாஜியை கேட்டு உடல் சிலிர்க்க நின்றவனோ அவள் தன்னை அடையாளம் கண்டுக்கொண்டதை நினைத்து ஆச்சரியப்பட்டு போனான்.. பின்னே இருக்காதா அவன் தான் அவளை பார்த்தே பல வருடங்கள் ஆகின்றதே… கிட்டதட்ட நான்கு வருடங்கள் இருக்கும்.. அப்போது அவனை மாமாஜி என்று அழைத்த அவனின் அத்தை மகளான தமையா பதினொறாம் வகுப்பு படிக்கும் சிறுபிள்ளையாக இருந்தாளே…
நீண்ட நெடிய வருடங்களான ஆறு வருடங்கள் கழித்து தான் அந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் இளம் சிட்டையே பார்த்தான்.. அதும் அன்று நடந்த களேபரத்தில் அவளை ஒழுங்காக கூட பார்க்கவில்லை.. ஏன் அவள் தன்னை பார்த்தாளா என்று கூட அவனுக்கு நினைவில் இல்லை… அப்படிப்பட்டவள் தன்னை இத்தனை வருடங்கள் கழித்து பார்த்தும் சரியாக அடையாளம் கண்டுக்கொள்வது அவனுக்கு ஆச்சரியமாக தானே இருக்கும்… அந்த ஆறு வருடங்கள் இப்போது ஒரு நான்கு வருடங்கள் முழுதாக பத்து வருடங்கள் கழித்து ஒருத்தி தன்னை சிறுபிள்ளையில் அழைப்பது போல அதே மாமாஜி என்ற வார்த்தையை வைத்தே அழைத்தது அவனுக்கு சிலிர்ப்பை கொடுக்கதானே செய்யும்…
அவன் அதே சிந்தனையில் இருக்க… அவளோ அவள் மாமாஜியின் இடையை இறுக்க கட்டிக்கொண்டவள் அவன் முகத்தையும், அவன் தோற்றத்தையும் வெகு ரசனையாக அல்லவா ரசித்துக்கொண்டிருந்தாள்.
சிறுபிள்ளையில் நல்ல வெளீர் நிறத்தில் கொழுமொழுக்கென்று இருந்தவன் இப்போது கொஞ்சம் நிறம் மங்கி போய் உடல் இறுகிப்போய், சிறுபிள்ளையில் கன்னத்தில் தொப்பை வைத்திருந்தவனின் கன்னங்கள் இன்று வற்றி போய் இருப்பதை பார்த்தவளுக்கு அவனின் இந்த தோற்றம் அவளுக்கு அவ்வளவு அழகாக அல்லவா தோன்றியது.
பத்தாதற்கு அவனின் நிறத்திற்கு எடுத்துக்காட்டுவது போல கறுப்பு நிற சட்டையும், வெள்ளை நிற ஜீனும் அணிந்துக்கொண்டு, கறுப்பு நிற ஸ்கெட்சர்ஸ் ஷூ போட்டுக்கொண்டு, அந்த கறுப்பு நிற சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை அவிழ்த்துவிட்டு அவனின் உரம் ஏறிய நெஞ்சை காட்டிக்கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு மனம் மயங்கி போனது.. அவனையே விழுங்குவது போல பார்த்தவளுக்கு அவனின் லேசர் பார்வை வேறு எச்சில் விழுங்க வைத்தது..
“என்னடி பார்வை எல்லாம் ஒருமாதிரி இருக்கு…”என்று அவனும் மயங்கிய மனத்தை இறுக்கிய கட்டியவாறே கேட்க
அவளுக்கா அவள் மாமாஜியின் குரல் தெரியாது… அவனை இன்னும் மயக்குவது போல கீழே தொங்கிய அவன் கைகளை எடுத்து தன் இடையில் வைத்துக்கொண்டவளின் செயலில் இவ்வளவு நேரம் இல்லாத உணர்வுகள் எல்லாம் அவனிடம் வழிந்து ஓடியது.. அவன் இறும்பு கைகள் அவளை தன்னுடன் இறுக்கிக்கொள்ள… அவளோ அவனின் உரம் ஏறிய நெஞ்சை பார்த்தவாறே…
“உன் ஆளுக்கு கீழ விவாகம் நடந்துன்டு இருக்கு மாமாஜி… அப்டியே மேல நாமளும் விவாகம் பண்ணின்டா என்ன…”என்று குழைவான குரலில் கேட்க…
அவளின் உன் ஆளு என்ற வார்த்தையை கேட்டவனுக்கு அப்போது தான் சுயமே வந்தது.. பட்டென்று தான் செய்யும் செயல் புரிய அவன் முகம் கற்பாறையாக இறுக… அவன் கைகளோ அவள் இடையில் இருந்து விலகியவாறே அவளை தன்னிடம் இருந்து விலக்கி தள்ளினான்…
அதனை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத தமையாவோ அவனை திருட்டு விழி பார்வை பார்க்க… அவனோ அவளை கொஞ்சமும் குனிந்து பார்க்காதவனோ தன் தலையை அழுத்தமாக கோதிக்கொண்டவன்… “இன்னொரு தடவ கண்டவளையும் என் ஆளுன்னு சொன்னா நேக்கு கெட்ட கோவம் வரும்…”என்றவனின் பார்வையோ அவள் பக்கம் திரும்பவே இல்லை…
“என்ன நோக்கு கோவம் வருதோ…”என்ற தமையாவோ அவனின் பக்கம் நெருங்க முயல… அவனோ அவள் செயலை அறிந்தவனாக…
“அப்டியே நின்னுன்டு கூட பேசலாம்…”என்றான் இறும்பு குரலில்
“ஓஓஓ… பேசலாமே…”என்றவளோ… “ஆனா என் மாமாஜி மேல சாஞ்சின்டு பேசுவது போல ஆகுமா என்ன..”என்றவளோ அவனை கன்னத்தில் கை வைத்து ரசிக்க….
அவனோ அவளை காணாமல் கண்டவனின் நினைவுகளோ அவளின் சிறுவயது பிள்ளை முகமே நியாபகத்திற்கு வந்து நின்றது…
“காட் அத்துனோன்டு இருந்தவளா… இப்போ இப்டி வளந்துருக்கா…”என்றவனின் பார்வை அவளின் மென்மையான உடல் தன் மீது மோதிக்கொண்டு இருந்ததை நினைத்தவனின் உடல் மோகத்தில் விறைத்தது…
“நோ நோ இது தப்பு… சின்ன பிள்ள இவ…”என்று அவன் மனம் கட்டுப்பாடு விதிக்க… அவன் கண்கள் எங்கே அவன் பேச்சை கேட்டது…
“மாமாஜீ… நோக்கு அக்காவ மிஸ் பண்றத நெனச்சின்டு வருத்தமா இல்லையா…”என்று கேட்க…
அவனோ தலையை அழுத்த கோதியவன் அவளை எரிக்கும் பார்வை பார்த்தான்… அவனின் எரிக்கும் பார்வை கூட அவளுக்கு ரசனையாக அல்லவா தெரிந்தது…
“வொய் மாமாஜி என்ன எதுக்கு இவ்ளோ ரசிச்சி பாத்துன்டு இருக்கேள்…”என்றவளின் சிறிய பற்களோ அவளின் கீழ் உதட்டை பற்றிக்கொள்ள… அந்த உதடு படும் பாட்டை கண்டவனுக்கு மனம் படாத பாடு பட்டது…
“காட் இங்க வந்தா வேற மாதிரி பிரச்சனை வரும்னு நெனைச்சின்டு இருந்தா… இப்டி அஞ்சி அடில இந்த மாதிரியான பிரச்சனைய பத்தி நினைக்கவே இல்லையே…”என்றவனுக்கோ இன்னும் அங்கே இருப்பது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை..
“ம்ச் நான் வரேன்…”என்றவன் அவளை பார்க்காமல் நடக்க முற்பட… ஆனால் அவனின் செயலை முன்னாலே உணர்ந்திருப்பாள் போல… அவனின் உரமேறிய ஒற்றை கையை தன் இரு பிஞ்சிக்கைகளால் பிடித்துக்கொண்டவள்…
“மாமாஜீ…”என்று இழுக்க
“ம்ச் விடு தமை… உங்க வீட்ல யாராவது இப்டி என் கைய பிடிச்சிட்டு இருக்குறத பாத்தாள்ன்னு வை அப்புறம் உனக்கு தான் ப்ராப்ளம்…”என்றான் அவள் கையை விலக்க முயன்றவாறே…
“அவா பாத்தா என்ன ஆகிட போது… ம்ச் முதல ஏன் உங்க வீடுன்னு சொல்றேள் மாமாஜி… நம்ம வீடுன்னு சொல்லுங்கோளேன்… நீங்களும் இந்த ஆத்தோட ஒரு பேரன் தானே மாமாஜி…”என்றாள் சுருங்கிய முகத்துடன்…
அதுவரை சாதாரணமாக நின்றானோ அவளின் வார்த்தையில் லாவா குளம்பை அள்ளி பருகியது போல முகத்தை மாற்றியவனின் மனமோ எரித்தனலாக எரிந்தது… “என்னிக்கும் இந்த ஆத்துக்கோ இந்த ஆத்து மனுஷாலுக்கோ எனக்கோ சம்பந்தமே இல்ல தமை… எக்காலத்துலையும் இது நடக்க வாய்ப்பே இல்ல…”என்றவனோ அவள் கையை வேகமாக தட்டிவிட்டவாறே நடக்க…
அவனின் வேக நடையை பார்த்தே தமையாவிற்கு அவன் கோவம் நன்றாக தெரிந்தது… அவனின் மனம் படும்பாட்டை அறிந்தவளாக… “மாமாஜீ.. இந்த ஆத்துக்கும் உங்களுக்கும் வேணா சம்பந்தம் இல்லாம இருக்கலாம்… ஆனா இந்த தமையாவுக்கும், உங்களுக்கும் எப்போவோ சம்பந்தம் வந்துட்டு மாமாஜி.. அத யார் மத்த முயற்சி பண்ணாலும் முடியாது… அந்த கடவுளே வந்தாலும்…”என்று அவள் கத்த…
அதனை காதில் கேட்டவாறே நடந்தவனின் உடலோ அவளின் வார்த்தையில் இன்னும் இறுகியதே தவிற குறையவில்லை… அவன் சரியாக மாடிபடியில் இருந்து இறங்க… அங்கோ வர்ஷியை குணாவின் மடியில் உட்கார வைத்து தாலிக்கட்டி இருந்தான் வம்சி…
நளனோ அதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை… நேராக அவன் பாட்டிற்கு மண்டபத்தின் வாசலை நோக்கி செல்ல… அவனின் உருவம் நன்றாக தெரிந்தது மகேந்திரனுக்கும், கோசலைக்கும்…
மகேந்திரனும் முகம் கோவத்திலும், அருவருப்பிலும் சுருங்க… கோசலையோ தன் மூத்த பேரனை பார்த்த சந்தோஷத்தில் மலர்ந்தது…
“ஏன்னா… நம்ம நளான்னா…”என்று கோசலை ஆரம்பிக்க…
அவரை திரும்பி தீப்பார்வை பார்த்தார் மகேஸ்வரன்… “அந்த ராசிகெட்டவனோட பார்வை கூட இந்த குடும்பத்து மேல படக்கூடாதுன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்… அப்டி இருக்கறச்ச எப்டி அவன் இந்த அமிர்தம் ஆத்து விவாகத்துக்கு வந்தான்…”என்று அவர் உறும…
அதில் கோசலை கண்கள் கலங்கி போனது… என்ன இருந்தாலும் அவரது பேரன் ஆயிற்றே… கலங்க தான் செய்தது…
நளனோ விறுவிறுவென அந்த திருமண மண்டபத்தில் இருந்து வெளியில் வர… அவனின் கற்பாறை முகமோ மேலும் மேலும் இறுகியவாறே இருந்தது… “இந்த ஆத்துக்காரனா நானு… அந்த நெனைப்பு இங்க யாருக்காச்சும், எப்போவாச்சும் இருந்துதா… இல்லையே… யாருக்கும் அந்த நெனப்பு இல்லையே… ஏனோ தானோன்னு வளத்தா என்னைய… ஏனோ தானோன்னு அந்த வீட்ல கெடந்தேன் நானு… அப்புறம் அப்டியே விட்டுட்டா என்னை.. ம்ச் காட்… இப்போ ஏன் இதை எல்லாம் நானு ஒலறின்டு இருக்கேனே நேக்கு புரில… எல்லாம் இந்த ரேபிட்டால வந்துது…”என்றவனின் கண்களுக்கோ அழகாக வந்து காட்சி தந்தாள் தமையா…
தன்னுடைய காரின் அருகில் வந்தவன் தன்னுடைய போனை எடுத்து தன் மாமனான நாகராஜிற்கு தான் கிளம்புவதாக ஒரு மெசேஜை போட்டுவிட்டவன் தன் காரினை வேகமாக ஸ்டார்ட் செய்துக்கொண்டு கிளம்ப… அதனை மண்டபத்தின் வாசலில் நின்றவாறே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் ரேபிட் தமையா…
காரில் பயணித்துக்கொண்டிருந்தவனின் மனமோ இன்று ஏனோ புதிதாக நுழைந்துவிட்ட தமையா தான் குடிக்கொண்டிருந்தாள்… ஆனால் கலங்கிய மனதை கண்டு மனம் இறுகியவனோ… “இன்னும் உனக்கு உணர்வுகள் இருக்கா நளா… அவ்ளோ வீக்கானவனாடா நீ… க்ராதகி.. ஒரே செகன்ட் ஒரே ஹக், ஒரே டைட்ல என்னை டோட்டலா மாத்திட்டா…“என்றவனோ… இனி இப்போதும் அந்த ரேபிட்டை மட்டும் காணவே கூடாது என்று திட்டம் போட… அங்கோ அவனின் ரேபிட் எப்போதும் அவனுடனே இருப்பதற்கான காரியத்தை சிறப்பாக செய்துக்கொண்டிருந்தாள்.
(நீயடி….)
அந்தியில் பூத்த சந்திரனே – 1
written by Competition writers
“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா அம்ருதா? நானும் இவ்வளவு நாளா பொறுமையா இருந்துட்டேன். ஆனா இனிமேலும் முடியாது.” என்றதும்,
தன் காதுகளில் எதுவும் விழவே இல்லை என்பது போல் புத்தகத்தை புரட்டியவாரு அமர்ந்திருந்தாள் அவள்.
“உன்கிட்டதான் பேசிகிட்ருக்கேன் அம்ரு.. உன் காதுல விழுதா இல்லையா?” என்றவர் அவள் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்கிக்கொள்ள, அப்போதும் சலிப்பான ஒரு பெருமூச்சு வந்ததே தவிர, எந்த ஒரு பதிலும் அவள் பேசிட வில்லை.
“நீ சொன்னா கேட்க மாட்டேன்னு, நானே மேட்ரிமோனி சைட்ல உன்னோட டீடெயில்ஸ் கொடுத்து அப்ளை பண்ணிட்டேன். நிறைய ப்ரொஃபைல்ஸ்ல இருந்து ரெக்வஸ்ட் வந்திருக்கு. ஒருமுறை பாரும்மா..” என்று தன் மகள் கன்னம் ஏந்தி கெஞ்சுவது போல நோக்கினார் அவள் தாய் காவேரி.
“என்னமா பேசுறீங்க? எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவளை படிக்க வச்சு நல்லபடியா வளர்த்தாலே எனக்கு போதும். இனிமேல் கல்யாணம் அது இதுன்னு பேசி தயவு செஞ்சு என்னை நோகடிக்காதீங்க.” என்றவள் எழுந்து தன் அறைக்கு செல்ல முற்பட, அவளது கரத்தைப்பற்றி தடுத்து நிறுத்திய அவளின் அன்னையோ,
“ஏற்கனவே நீ சொன்னதை கேட்காம நல்ல பையன், நல்ல குடும்பம்னு நம்பி நாங்களா பார்த்து அந்த ராஜேஷ்க்கு உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சதுனாலதான இன்னைக்கு உனக்கு இந்த நிலமை? என்மேலயே எனக்கு கோபமா வருது அம்ரு.
அவன் உன்கிட்ட பேசும் விதம் சரி இல்ல, இவன் வேண்டாம்மான்னு நீ சொல்லும்போதே நான் கேட்டிருக்கணும். நானே அந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும். அப்படி பண்ணாம எல்லார்கிட்டயும் இவர்தான் மாப்பிள்ளைன்னு சொல்லியாச்சு. இனிமேல் என்ன செய்யறது?
கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே சரி ஆகிடும்னு நெனச்சது என் தப்பு. எல்லாமே என்னோட தப்புதான்.” என்று கண்கலங்க கூறியவர்,
“இந்த முறை உன்னோட வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற முடிவுல நான் தலையிடவே மாட்டேன். எந்த முடிவையும் நான் எடுக்குறதா இல்ல. உனக்கான லைஃப் பார்ட்னரை நீயே ச்சூஸ் பண்ணிக்கோடி” என்றதும் அன்னையின் வார்த்தையில் கூசி போய் நின்றாள் அம்ருதா.
“என்னம்மா பேசுறீங்க? ஒரு பொண்ணுக்கு ஒருமுறைதான் கல்யாணம். நல்லதோ கெட்டதோ என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இந்த கல்யாணம்ன்ற நரகத்துக்குள்ள போய் நான் நிறைய அனுபவிச்சுட்டேன். இனியாவது என்னை நிம்மதியா வாழ விடுங்க. எனக்கு என் பொண்ணு ஆத்யா இருக்கா. அவள் மட்டும் என் வாழ்க்கைக்கு போதும்.” என்றதும்,
“சொன்னா புரிஞ்சுக்கோடி. சும்மா கிழவி மாதிரி பேசாத. உனக்கு அப்படி ஒன்னும் வயசாகிடல. இருபத்தி ஆறு வயசுலயே எல்லாம் முடிஞ்சுச்சுன்னு சொன்னா என்ன அர்த்தம்?
சரி, உனக்கு புருஷன் வேண்டாம்னா பரவால்ல. உன்னோட குழந்தைக்கு அப்பா வேணும்ல. அதுக்காகவாவது கொஞ்சம் யோசி.” என்றதும் விரக்தியாக சிரித்தவள்,
“பெத்த அப்பாவே என் பிள்ளையை பார்க்க ஒரு முறை கூட வரல. இதுல நான் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா? யாரோ ஒருத்தன் பெத்த பிள்ளைக்கு இன்னொருத்தன் அப்பாவா இருந்து, அவன் என் பிள்ளையை நல்லா பார்த்துப்பானா?” என்று அருவருப்பாக முகம் சுழித்தவள்,
“இதுதான் உங்களுக்கு கடைசி. இனி கல்யாணம் அது இதுன்னு என்கிட்ட நீங்க பேசவே கூடாது. என் பிள்ளைக்கு நான் மட்டும் போதும்.” என்றவள் அந்த இடத்தை விட்டு விலகி விருவிருவென தன் அறையை நோக்கி செல்ல,
“நீ இப்படியே இருந்திடலாம்னு நினைக்கிறியா அம்ருதா? அம்மா உன் நல்லதுக்காகத்தான் சொல்வேன் கேளுடி…” என்ற அவள் தாய் காவேரியின் குரல் காற்றோடு கரைந்து காணாமல் போனது.
அறைக்குள் வந்ததும் கதவை தாளிட்டவள் மெத்தையில் உறங்கும் தன் ஒன்றரை வயதே நிறைவடைந்த பிஞ்சு குழந்தையை கண்டதும் அனைத்தும் மறந்து அவள் முகத்தில் சிறு கீற்றாய் மலர்ந்தது புன்னகை. அருகில் நெருங்கி தன் பெண் குழந்தையின் கன்னத்தில் அவள் தூக்கம் கலையாதவாறு மென்மையாக முத்தமிட்டுவிட்டு விலகியவள்,
“எனக்கு நீ மட்டும் போதும் ஆத்யா. உனக்கு நான் இருக்கேன். நமக்கு நடுவுல யாரும் வேண்டாம்.” என்று உறங்கும் குழந்தையிடம் தானாக பேசியவள் பின் சற்றே தள்ளி இருந்த சோபாவில் கால்களை மடக்கி சாளரத்தின் வழியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்து விட்டாள்.
அவள் பார்வையில் எந்த ரசனையும் தெரியவில்லை. அது ஒரு வெற்று பார்வை. வெறுமையான ஒரு உலகத்திற்குள் தன்னை புகுத்தி கொண்டாள். நிமிடங்கள் நகர்ந்து கொண்டே போக அவள் பார்வையை எந்த பக்கமும் திருப்பவே இல்லை.
குயில்கள் கூவும் இன்னிசையும், மலர்களின் மணமும், அதன் அழகும் என இதுவரை தன் வாழ்வில் தான் ரசித்த எந்த விடயத்தாலும் தற்போது ஈர்க்க படாமல் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் முனிவர்களை போல, எதன் மீதும் நாட்டம் இல்லாது அமந்திருந்தாள் அவள்.
“அம்மா….” என்ற தன் குழந்தையின் ஒற்றை அழைப்பில் தன் வெறுமையை கலைத்து நிஜ உலகிற்கு தன்னை இழுத்து கொண்டவள், குரல் வந்த திசை பக்கம் திரும்பி பார்க்க,
திராட்சைபோன்ற கருவிழியும், பந்து போன்ற கன்னமும், சற்றே பூசினார் போன்ற உடல் வாகுடன் தத்தி தத்தி நடக்கும் அந்த ரோஜாப்பூ குவியலின் அழகில் தன்னை மறந்து ரசிக்கலாயினாள்.
குழந்தையை அள்ளி அணைத்து தூக்கி தன் மடியில் அமர வைத்தவள்,
“அம்மு…. சொல்லு டா… என்ன வேணும் என் செல்ல பாப்பாவுக்கு? பசிக்குதா? சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?” என்று கொஞ்சலாக கேட்டவளிடம்,
வேண்டாம்.. என்று மறுப்பாக தலை அசைத்து, “அம்மா.. எனக்கு ஐஸ் கீம் ஏனும்…” என்று தன் மழலை குரலில் ஆத்யா கேட்க,
“ஓ… பாப்பாவுக்கு ஐஸ் க்ரீம் வேணுமா?” என்றதும்
‘ஆம்..’ என்பதுபோல் மேலும் கீழுமாக தலையத்தது அந்த பிஞ்சு.
“அம்மாவுக்கும் வெளில போகணும், உன்னையும் கூட்டிட்டு போறேன். வாங்க ரெடி ஆகலாம்.” என்றவள் குழந்தையை குளிக்க வைத்து, உணவூட்டி, அழகாக உடை அணிவித்து தானும் தயாராகி வெளியே சென்றாள்.
அதே தருணம், தனது உணவகத்திற்கு வர வேண்டிய காய் கறிகள் சரியான நேரத்திற்கு வராமல் போனதால் மேனேஜரை கடுமையாக திட்டி கொண்டிருந்தான் ஹர்ஷ மித்ரன்.
தனது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவில் சுத்தம் மிகவும் அவசியம், உணவின் தரத்தில் எந்த குறையும் இருக்க கூடாது, தனது உணவகத்திற்கு வருபவர்களின் மனமும், வயிறும் ஒருசேர நிறைய வேண்டும் என்று எண்ணுபவன்.
அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள், வயது வித்யாசம் என்ற எந்த பாகுபாடும் இன்றி வேலை விடயத்தில் மட்டும் தவறு ஏதும் ஏற்பட்டால் கடுமையாக பேசி விடுவான்.
இப்போது ரெஸ்டாரண்ட்டாக இருக்கும் தனது உணவகத்தை பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பாடு பட்டு உழைப்பவன். முழு கவனமும் தன் தொழில் மீது மட்டுமே செலுத்தி முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்ட, வளர்ந்து வரும் தொழில் அதிபர்.
காய்கறிகள் குறித்த நேரத்துக்குள் வரவில்லை என்று மேனேஜரிடம் குரல் உயர்த்தி பேசி கொண்டிருக்குபோது இடையில் அவன் தாய் கீர்த்தனா அழைப்பு விடுத்தார். ஒரு நிமிடம் தனது பேச்சை நிறுத்தி அன்னையின் அழைப்பை ஏற்று காதில் வைக்க,
“ஹலோ… ஹர்ஷா நான் மேட்ரிமோனில ஒரு பொண்ணோட ஃபோட்டோ பார்த்தேன்டா ரொம்ப அழகா இருக்கா. நீ ஒருமுறை…” என்று கூறி கொண்டிருக்கும்போதே அழைப்பை துண்டித்து விட்டான் ஹர்ஷா.
மேனேஜரிடம் தனது பேச்சை தொடர்ந்தவன் “இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இனிமேல் எல்லாமே சரியான நேரத்துக்கு நடக்கணும்.” என்று கூறிவிட்டு அவன் தன் அலுவலக அறைக்குள் புகுந்து கொள்ள,
இவனிடம் திட்டு வாங்கியதும் தன்னுடைய இடத்திற்கு போனவர் தன் அறையில் மைக் மற்றும் கேமரா இருப்பதை அந்த கோபத்தில் மறந்தே போனார்.
“ஒரு மேனேஜர் என்னையவே ஒரு சின்ன தவறுக்காக இப்படி திட்டுறானே. இவன் பொண்டாட்டிய என்ன பாடு படுத்தினானோ யாருக்கு தெரியும்? இவன்கூடல்லாம் எப்படி ஒரு பொண்ணால வாழ முடியும். அதான் விவாகரத்து வாங்கிட்டு போய்ட்டா.”
என்று கூற இவர் பேசிய அனைத்தும் அறையில் மடி கணினியை பார்த்து கொண்டிருந்த ஹர்ஷாவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.
விழிகளில் ஓடும் நரம்புகள் இரத்த சிவப்பாக மாற, முகம் இறுகி தனது கரங்களை இறுக மூடி தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்று முடியாமல் தோற்று போனவன், தனது பி.ஏ வை அழைத்து,
“அந்த மேனேஜர் சீனிவாசன் இதுக்கு மேல இங்க ஒரு நிமிஷம் இருக்க கூடாது. உடனே அவரை வேலையவிட்டு அனுப்பு. அவர் அத சொன்னாரு இத சொன்னாருன்னு திரும்ப என்கிட்ட வந்து நின்னா, உனக்கு இங்க வேலை கிடையாது” என்றதும் மறுப்பேதும் கூறாமல் “ஓகே சார்” என்று விட்டு கிளம்பிவிட்டான்.
சில வருடங்கள் முன்பு அனைவரிடமும் அன்பாக, நட்போடு பழகி வந்தவன் தன் கடந்த காலத்தில் அவன் முன்னாள் மனைவி தாரிக்கா அவனுக்கு கற்று கொடுத்த பாடத்தினால் மனம் இறுகி, முகமும் இறுகி புன்னகையிக்க மறந்தவனாய் மாறி போனான்.
‘உன்னாலதான்டி எனக்கு இப்படி ஒரு நிலமை. நீ என்னைக்குமே என் கண்ணுல படவே கூடாது. அப்படி ஏதும் நடந்துட கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கோ தாரிகா.. இல்லன்னா நடக்க போற எதுக்கும் நான் பொறுப்பில்ல.’ என்றான் அடக்க மாட்டாத கோபத்தோடு.
மான்ஸ்டர்-7
written by Competition writers
அத்தியாயம்-7
அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது…
“வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர் யாருனு பாத்தியா.. அவங்க கிட்ட பேசிட்டியா…”என்று அவரின் மேனேஜரிடம் கேட்க..
அவரின் மேனேஜரோ “எஸ் சார்.. இதோட ஓனர் இங்கதான் பக்கத்துல இருக்காரு… அவரு வீட்டுக்கு போலாமா சார்..” என்று கேட்க..
“யா யா கோ அஹெட்..”என்றவறோ மறுபடியும் ஸ்டைலாக காரில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு போக…அவனிடம் வசமாக மாட்டிக்கொண்டது என்னவோ மைத்ரேயி தான். கார் நேராக மாணிக்கவாசகத்தின் வீட்டின் முன்னால் நின்றது.
அந்த அம்பது வயது மதிக்கத்தக்க நிவாஸ் சேட்டின் பார்வையோ மாணிக்கவாசகத்தின் வீட்டையே அளந்து கொண்டிருந்தது.. தன்னுடைய கூர்மையான கண்களால் அந்த வீட்டையே பார்வையால் அங்குள அங்குளமாக ஆராய்ந்து கொண்டிருந்தவருக்கு கண்டிப்பாக இந்த ஊரில் குளிர்பான ஃபேக்டரி ஆரம்பித்தே ஆகவேண்டும் என்றுதான் தோன்றியது.
அதற்காகத்தான் மாணிக்கவாசகத்தின் இல்லை இல்லை மைத்ரேயின் பேரில் இருக்கும் அந்த நாற்பது ஏக்கர் இடத்தை வாங்குவதற்காக இப்போது மாணிக்கவாசகத்தின் வீட்டில் உட்கார்ந்து இருந்தார்.. மாணிக்கவாசகமோ கையை கட்டிக்கொண்டு பம்மிக் கொண்டு தான் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவரின் மனதில் எப்படியெனும் இந்த இடத்தினை இந்த நிவாஸிடம் விற்று விட வேண்டும் அதனால் வரும் பல கோடியே எப்படி சுருட்ட வேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதற்கு பெரும் தடையாக இருப்பது தன்னுடைய மகளாயிற்றே மைத்ரேயியின் அழுத்தத்தை நினைக்க நினைக்க மாணிக்கவாசகத்திற்கு கோவம் பல மடங்காக ஆகியது.
பின்னே கிட்டதட்ட இந்த ஒரு வார காலமாக அவளை எவ்வளவோ கொடுமை செய்து இடத்தை வாங்க முயன்று கொண்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் காஞ்சனா கொடுமை செய்தாலும் இன்னொரு பக்கம் மாணிக்கவாசகம் அவளை பாசமாக இல்லை இல்லை நயமாக பேசி அதனை வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சி கொண்டிருந்தார்.. ஆனால் அவளோ ஒரே பிடியாக இடத்தை கொடுக்க முடியாது அது என் தாயின் கோவில் என்று அதே பாட்டினை பாட்டி கொண்டிருக்க.. வீணாக அவள் உடல் தான் புண்ணாகிக் கொண்டு இருந்தது..
ஒரு நேரம் அதிகமாக அடி வாங்கியவள் அப்படியே மயங்கி சரிந்து போயிருக்க பாவம் அவளை தூக்க கூட அங்கு நாதியே இல்லை.. சிறுவயதில் இருந்தே மைத்ரேயிக்கு இருட்டு என்றால் பயங்கர பயம்.. பல நாள் காஞ்சனா அவளுடைய அறையில் இருக்கும் பல்பினை கழட்டி கொண்டு வந்து வைத்துவிடுவார்.. எப்படியெனும் பெண்ணவளை சிறு வயதிலிருந்து இருட்டிற்கு பயமுறுத்தி வளர்க்க வேண்டும் என்று நினைத்துதான் இதை செய்தார்.
அந்த சின்னஞ்சிறு வயதில் தன் அறையில் இருக்கும் லைட்டினை கழட்டிக்கொண்டு சென்ற பிறகு அவளுக்கு பயம் பத்திக் கொண்டு வரும்.. “சித்தி என் ரூம்ல லைட் இல்ல சித்தி…” என்று சிறுவயதில் காஞ்சனாவிற்கு முன்னாள் பாவமாக வந்து நிற்பவளை பார்க்க பார்க்க காஞ்சனாவிற்கு குஷியாக இருக்கும்.
“சரி அதுக்கு என்னென்ன பண்ண சொல்ற வந்து லைட் மாட்ட சொல்றியா…” என்று திட்டியவள் “போடி போய் இருட்டுல போய் படு…” என்று அதட்ட பாவம் அச்சிறு பெண்ணே பார்க்க பயத்தினால் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அல்லது தன்னுடைய அறையின் கதவை திறந்து விட்டு படுத்துக் கொள்வாள் அல்லது தன்னுடைய சித்தி வைத்திருக்கும் மெழுகுவத்தியில் ஒற்றை தெரியாமல் எடுத்து வந்து பத்த வைத்துக்கொண்டு அந்த ஒரு நாள் முழுவதும் மெழுகுவர்த்தியிலேயே தன்னுடைய இருட்டினை கழிப்பாள்.
இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவளை இப்போது ஒரு பொட்டு வெளிச்சம் கூட வராத அந்த இருட்டு அறையில் போட்டு வைத்திருக்க.. அந்த இருட்டு வேறு இத்தனை நாள் தன்னுடைய சித்தியிடம் வாங்கிய அடி மயக்கம் வேறு ஒன்றாக சேர மொத்தமாக வதங்கியே போயிருந்தாள் அந்த சிறுப்பெண்.
ராகவ்வோ என்ன அறையிலிருந்து எந்த சத்தமுமே வரவில்லையே என்று எட்டிப் பார்க்க அவள் மயங்கி இருப்பது தெரிந்தது..
“அய்யோ அம்மா…”என்று ராகவ் பதற…
“ம்ச் ஏன்டா எதுக்காக இப்படி பதறுற…”என்று சத்தம் போட்டார் காஞ்சனா..
“அம்மா அவ மயங்கிட்டாம்மா…”என்று பதற்றமாக கூறியவனை கண்டு இளக்காரமாக உதட்டை வளைத்தவறோ… “ஓஓஓ.. அதுக்கா பதறுற… ஆனா எதுக்காக நீ பதறனும்… ஒரு வேலை அக்கான்ற பாசமோ…” என்று நக்கலாக கூறி சிரித்தவரை கண்டு…
“அட அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல.. அக்காவும் கிடையாது ஒன்னும் கிடையாது அவ செத்துப்போயிட்டானா எப்படி இடத்தை எழுதி வாங்குறது.. அதுனால தான் பதறுறேன்..” என்று கூறிய ராகவுக்கும் கேலி சிரிப்பு சிரித்தான்… இத்தனைக்கும் இவனுக்கும் மைத்ரேயிக்கும் ஒன்று பெரிதாக வித்தியாசம் எல்லாம் இல்லை கிட்டத்தட்ட இருவருக்கும் மூன்று மாதம் மட்டுமே வித்தியாசமாக இருந்தது. மூன்றே மூன்று மாதம் மட்டுமே பெரியவளாக இருந்தாள் அவள். இவன் எப்படி அவளை பார்க்கின்றானோ ஆனால் அவளோ ராகவை தன் சொந்த தம்பியாக தான் பார்த்தாள்.. அவனிடம் பாசமாக பேச முயன்றாலும் அவனோ இவளை எதிரியாக அல்லவா பார்த்துவிட்டு செல்கின்றான்.
அப்படிப்பட்ட அவளுக்கு ராகவ் கொஞ்சமும் கருணை பார்க்கவே இல்லை..
“அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா நம்ம இடத்தை எப்படி மா வாங்குறது.. அதனாலதான் சொல்றேன் உடனே ஏதாவது டாக்டர் வர வச்சி அவளை பார்க்க சொல்லுங்க..” என்று கூற..
மாணிக்கவாசகமும் அதேதான் காஞ்சனாவிடம் கூறினார். எனவே அவர்கள் குடும்ப மருத்துவர் ஒருவரை வரவைத்து பார்க்க “ஏதோ அதிர்ச்சியில் தான் மயக்கம் போட்டு விழுந்துட்டா…” என்று கூறி ஒரு ஊசியை போட்டுவிட்டு செல்ல..
அதன் பிறகு மைத்ரேயிக்கோ இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் வாட்டி வதைத்தது.. அதனாலயே காஞ்சனாவின் அடியிலிருந்து அந்த இரண்டு நாளும் தப்பித்தவளால் அடுத்த மூன்றாவது நாளில் இருந்து மறுபடியும் அடி பின்னி எடுத்தார்கள்..
“அட இவ்ளோ அடி வாங்கி மாடு மாதிரி நிக்கிறியேடி அந்த இடத்தை எழுதி கொடுத்தா என்ன செத்தா போயிடுவ..” என்று காஞ்சனா வெறுப்பாக கூற… மைத்ரேயி அப்போதும் தன்னுடைய அண்ணே இருக்கும் இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை..
“என்கிட்ட இவ அடிபட்டே சாகப் போறா..” என்று காஞ்சனா கத்தி கொண்டு இருக்க. அதனை எல்லாம் நினைத்தவாறு நின்று கொண்டிருந்தார் மாணிக்கவாசகம்..
எப்படி இந்த கழுதைக்கிட்டு இருந்து அந்த இடத்தை எழுதி வாங்குவது என்று யோசனை செய்து கொண்டே இருந்தார் அவர். ரமணியை வைத்தும் மைத்ரேயியை எவ்வளவோ பிளாக்மெயில் செய்து விட்டனர்.. ஆனால் ரமணியோ தன்னுடைய பேத்தியிடம் உறுதியாக கூறியிருந்தார் அதுவே அவளிடம் பழிக்காமல் போக இப்போது என்ன செய்வது என்றே அவருக்கு தெரியவில்லை..
“வாட் மிஸ்டர் மாணிக்கம்.. பிசினஸ் பத்தி பேசலாமா..”என்று திமிராக கேட்ட நிவாஸோ… “அந்த இடம் எனக்கு வேணும்… நான் அங்க பெரிய பேக்டரி ஆரம்பிக்கணும். உன் இடம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… டீல் பேசுவோமா…” என்று அந்த சேட்டோ ஹிந்தியும், தமிழும் மாற்றி மாற்றி பேச… அது ஓரளவுக்கு புரிந்து கொண்ட மாணிக்கவாசகத்தின் முகம் முழுதும் புன்னகை அப்பிக்கொண்டது.
“அந்த இடத்த தரதுக்கு நாங்க தயாராதான் இருக்கோம்.. ஆனா கொஞ்சம் டைம் வேணும்..” என்று அவர் இழுக்க…
அதனை கேட்டு புருவம் சுருக்கிய நிவாஸோ… “ம்ச் லுக் மேன் எனக்கு டைம் எல்லாம் இல்ல இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல நான் ஃபாரின் போறேன் அதுக்குள்ள அந்த இடத்துல பேஸ்மெண்டாவது போட்டுட்டு போனும்… ஆர் யூ அன்டர்ஸ்டான்ட்..” என்று அவர் ஸ்ட்ரிக்ட்டாக கூற…
மாணிக்கவாசகம் தான் அதில் தலையை சொரிந்து கொண்டிருந்தார். இதை எல்லாம் கேட்டவாறே சேட்டிற்கு ஜூஸை கொடுத்தவாறு வந்து நின்ற காஞ்சனாவிற்கு கேட்க கேட்க வெறியாக வந்தது…
“எல்லாம் இவளால வந்தது..” என்று அவளை திட்டியவாறே வேகமாக மைத்ரேயியை வைத்திருக்கும் அறைக்குள் ஓடியவரோ.. உள்ளே படுத்து அழுதவாறே இருந்த பெண்ணவளை போட்டு வெளுத்து எடுத்தார். “ஆஆஆ சித்தி என்ன விட்டுடுங்க சித்தி ப்ளீஸ் சித்தி…” என்று அவளோ கெஞ்சிக் கொண்டிருந்தாள்…
“பொட்டக் கழுத ஒரு இடத்தை எழுதி கொடுக்கிறதுக்கு உன் கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கணுமாடி..” என்று மறுபடியும் எகிறிக் கொண்டே இருக்க… பாவம் பெண்ணவளின் உடலோ அடிவாங்காத இடமே இல்லை என்பது போல தான் ஆயிற்று..
இதனை ஹாலில் உட்கார்ந்து மாணிக்கவாசகத்திடம் திமிராக பேசிக்கொண்டிருக்கும், கேட்டுக்கொண்டும் இருந்த சேட்டிற்கு ஏதோ ஒன்று தவறாக பட… “உள்ள என்ன நடக்குது.. ஏன் ஒரே நாய்ஸா இருக்கு…” என்று கேட்க மாணிக்கவாசகம் திருத்திருவென விழித்துக் கொண்டிருந்தார்… “அது… அது ஒன்னும் இல்ல சார்… அது…” என்று அவர் இழுக்க.
நிவாஸோ உள்ளே இருந்து வந்த அழுகை சத்தம் கண்டு புருவம் சுருக்கியவறோ…”ம்ச் உள்ளே என்ன நடக்குதுன்னு கேட்டேன்..”என்று கேட்டவாறே வேகமாக எழுந்தவர் அந்த அறைக்குள் நுழைய.. அங்கு பூப்போன்ற முகத்துடன் முகம் எல்லாம் கன்றி சிவந்து போய் கிடக்கும் பெண்ணவளை பார்த்த வேகத்திற்கு அப்படியே அசையாமல் நின்று விட்டார்.
காஞ்சனாவோ திடீரென்று உள்ளே நுழைந்த நிவாஸை அவர் எதிர்பார்க்கவே இல்லை… அப்படியே தன்னுடைய கணவனை பார்த்து முறைக்க அவரோ கையை விரித்தவாறே நின்று இருந்தார்…
“சார் அது ஒன்னும் இல்லை வாங்க நம்ம வெளியில போய் பேசுவோம்..” என்று காஞ்சனா அந்த சேட்டினை அந்த அறையில் இருந்து வெளியேற்ற முயல அவரும் சட்டென்று கையை காட்டி நிறுத்துமாறு கூறியவர் “எதுக்காக இந்த பொண்ண போட்டு இவ்ளோ அடிக்கிறீங்க..” என்ற சேட்டின் பார்வையோ அந்த பெண்ணை விட்டு அங்கும் இங்கும் அசையவே இல்லை.
அப்படியே அவள் உடலை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவரின் மனக்கண்ணிலோ மைத்ரேயியே அப்படியே ஒட்டிக்கொண்டாள். “அது ஒன்னும் இல்லை சார்…”என்று மாணிக்கவாசகம் இழுக்க..
காஞ்சனாவோ “அட நீ சும்மா இருய்யா…” அதட்டலை போட்டவளோ.. “பின்ன என்ன சேட்டு இந்த கழுதையை அடிக்காம என்ன பண்றது… இந்த கழுதை பேர்ல தான் நீங்க பாக்க வந்த இடமே இருக்கு.. அந்த இடத்தை இதோ நிக்கிறாறே இவரு பேர்ல எழுதிக் கொடுனு கேட்டதுக்கு இவ என்னவோ முடியவே முடியாதுனு அடிச்சு பேசிகிட்டு இருக்கா… ஏன்னு கேட்டா அவங்க அம்மாவோட சமாதி அங்க இருக்காம்… அதனால அத தரவே மாட்டேன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கா… ம்ச் நாங்களும் எவ்வளவோ அடிச்சு பாத்தாச்சு சொல்பேச்சே கேட்க மாட்ற…” என்று காஞ்சனா அவள் மீது குற்றத்தை அடிக்கியவாறே கூற.
அதை கேட்ட அந்த சேட்டின் மூளையிலோ ஏதோ ஒரு திட்டம் பளபளத்தது… பெண்ணவளை கண்டு ஒரு வஞ்ச சிரிப்பு சிரித்த அந்த சேட்டோ திரும்பி மாணிக்கவாசகத்தை பார்த்து… “அட நீயெல்லாம் மனுசனா… அதுக்காக ஒரு சின்ன பொண்ண போட்டு இப்படித்தான் அடிப்பீங்களா…” என்று அந்த அறையை அதிர கத்தியவரோ வேகமாக சென்று மைவிழியை தூக்க முயல… மைத்ரேயியோ அவரைக் கண்டு இன்னும் மிரண்டே போனாள்…
ஏன் என்றால் அவர் உள்ளே வந்ததிலிருந்து தன்னை பார்த்த அவரின் பார்வை அனைத்தையும் பார்த்து அவன் நல்லவனாக அவளுக்கு தோன்றவே இல்லை… அதும் தன் உடலில் மேயும் அவனின் பார்வை பாவையவளோ கூனிக்குறுகிப்போனாள்..
தன் கையை தட்டிவிட்ட பெண்ணவளை கண்டு.. “அட என்னமா என்னாச்சு என்ன பார்த்து ஏன் பயப்படுற..”நயமாக பேசிய சேட்டினை அவளோ தன்னை தொடவே விடவில்லை.. அதனை பார்த்த அவருக்கும் நல்ல விவரமான பொண்ணு தான் என்று அவளை மெச்சிக்கொண்டவறோ…
மாணிக்கவாசகத்தை பார்த்து “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வெளியில போய் பேசலாமா..” என்று கேட்க… மாணிக்கவாசகமோ புரியாமல் பார்த்தவர் சரி என்று அந்த சேட்டினை அழைத்துக் கொண்டு வெளியில் வர…
காஞ்சனாவோ மைத்ரேயியை அனல் பார்வை பார்த்தவாறே… “ம்ம் உனக்கு ரொம்ப திமிருடி உடம்பு ஃபுல்லா திமிர் ஆயிடுச்சு இது எல்லாத்தையும் ஒரே அடில குறைக்கிறேன் இரு….” என்று அதட்டியவாறு அந்த அறையை விட்டு வெளியில் சென்று விட்டார்.
இங்கு மைத்ரேயியோ அழுது கொண்டிருக்க.. அடுத்து அவள் தலையில் இடி எல்லாம் என்ன வானமே இடிந்து விழப்போகிறது என்று பாவம் அவளுக்கு தெரியாமலே போனது.
(கேப்பச்சினோ…)
மின்சார பாவை-1
written by Competition writers
மின்சார பாவை-1
“நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா.
அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா.
“ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க.
“தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா.
“பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா.
“ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட.
“அது…” என்று உள் இழுத்தாள் வெண்ணிலா.
“உன் நம்பரை வாங்குறதுக்குள்ள நான் பட்டபாடு.” என்று சபரிகா புலம்ப.
எதற்காக நம்பரை மாற்றினோம் என்பது நினைவு வர, முகம் மாறியவள் தலையை உலுக்கிக் கொண்டாள். “ப்ச்! பழசெல்லாம் எதுக்கு டார்லி. நீ எப்படி இருக்க? உனக்குன்னு அடிமை ஏதாவது சிக்குச்சா? அதான் கல்யாணம் ஆகிடுச்சா.” என்று பேச்சை மாற்றினாள் வெண்ணிலா.
“இவ்வளவு நாள் நீ கோமாவுல இருந்தியா? ஒரு மெசேஜ் கூட போடாத உன்கிட்ட இதை பத்தி சொல்ற ஐடியா இல்ல? நாங்க என்ன தப்பு செய்தோம்?. இல்ல நீ தான் என்ன தப்பு செஞ்ச? இந்த காலத்துல லவ் பண்ணறது அவ்வளவு பெரிய குத்தமா . இதுக்கு போய் உன் படிப்பை பாதில நிறுத்தி பெரிய சீன் கிரியேட் பண்ணினது உன் பேமிலி மெம்பர்ஸ். அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்? காலேஜ் விட்டு போயிட்டா நீ எங்களோட காண்டாக்ட்டையும் கட் பண்ணுவியா? அப்பக் கூட நான் வார்டனுக்குத் தெரியாமல் இரண்டு, மூனு தடவை உங்க வீட்டுக்கு வந்தேன். ஆனால் வீடு பூட்டியிருந்தது. அங்க யாருமே இல்ல
அக்கம், பக்கம் விசாரிச்சா உனக்கு கல்யாணம்னு தகவல் தான் கிடைச்சது. உன்னை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாமல் நாங்க தவிச்ச தவிப்பு எங்களுக்குத் தான் தெரியும்.”
“ப்ச் சரி விடுடி!பழசை எல்லாம் பேசிக்கிட்டு, பாஸ்ட் இஸ் பாஸ்ட். அதை நினைச்சுப் பார்க்கக் கூட டைம் இல்லை.”
“அது எப்படி விடமுடியும்டி. அவ்வளவுதானா நம்ம நட்பு.உனக்கு கொஞ்சம் கூட எங்க நினைப்பு இல்லைல.ஆனால் புது லைஃப்ல அடாப்ட் ஆனதுக்கு அப்புறமாவது எங்கக் கூட பேசிருக்கலாம். கஷ்டம் வரும் போது கூட இருக்கிறது தானே உண்மையான நட்பு.” என்று மனத்தாங்கலா வினவினாள் சபரிகா.
“லூசு! இதை சொல்லத் தான் இப்ப ஃபோன் பண்ணுனீயா? சரி எனக்கு வேலை இருக்கு. நான் வைக்குறேன்.” என்று வெண்ணிலா கூற.
“எருமை! வச்சுடாத. முக்கியமான விஷயம். அதுக்காகத்தான் அலையோ, அலைன்னு அலைஞ்சு திரிஞ்சு உன் நம்பரை வாங்கிருக்கேன்.” என்று படபடத்தாள் சபரிகா.
“அப்போ மேட்டருக்கு வா!” புன்னகைத்தாள் வெண்ணிலா.
அந்தப்பக்கம் வந்த தீரன், அவளது முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.
நீ எப்பவும் போல பேசி, சிரிக்கிறப்ப தான் நிம்மதியா இருக்கு. பழசெல்லாம் நினைச்சு, லைஃபை வீணாக்கிட்டியோன்னு கவலையா இருந்தேன்.”
“அப்படியா?” என்று பொருள் விளங்கா குரலில் வெண்ணிலா வினவ.
“சாரி நிலா! பழசெல்லாம் ஞாபகப்படுத்துறேனா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை பரி டார்லி. சரி நீ எதுக்கு என்னை வலை வீசி தேடுன. அதைச் சொல்லு? உனக்கு கல்யாணமா? அதுக்கு இன்வைட் பண்ண தான் கூப்பிடுறியா?”
“ஏதே! இருபத்தாறு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருக்க நான் என்ன நைண்டீன் கிட்ஸா? அதெல்லாம் இல்லை. ஐயம் டூ கே கிட்ஸ்யா? அதெல்லாம் ஆச்சு.” என்று மூச்சு வாங்க சபரிகா கூற.
“அப்போ எதுக்கு மேடம் என்னை வலை வீசி தேடுன?”
“ நம்ம காலேஜ்ல ரீ யூனியன்.”
“ரீ யூனியனா? ரொம்ப வருஷமான தானே எல்லோரும் மீட் பண்ண ரீயூனியன் வைப்பாங்க. நம்ம காலேஜ் முடிச்சு ஃபைவ் இயர்ஸ் கூட ஆகலையே. அதுக்குள்ள ரீயூனியனா?” என்று குழப்பத்துடன் வெண்ணிலா வினவ.
“இது நம்ம ஈ. ஸி டிபார்ட்மெண்ட் ஹெச் ஓ டி மதன் சாரோடோ ரிடையர்மெண்ட் பார்ட்டி. ஒன்லி ஈ.ஸி டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்ஸோட மீட் அப் மட்டும் தான். ஒன்வீக் ப்ரோக்ராம் .
அந்த ஒரு வாரமும் கொடைக்கானலையே தெறிக்க விடுறோம்.” என்றாள் சபரிகா.
“நான் வரலை.” என்று தயக்கத்துடன் வெண்ணிலா கூற.
“எதுக்கு வரமாட்டேங்குறேன்னு தெரியும். யுகி அண்ணாவை நினைச்சு தானே. அவர் பாரின்ல இருக்கார்.அவர் வர மாட்டார்.” என்று குரலை தழைத்துக் கொண்டு கூறினாள் சபரிகா.
“ இல்ல பரி.இது சரிபட்டு வராது.ஸாரி பரி நான் அங்க வரமாட்டேன்”.என்று நிலா சொல்லி முடிப்பதற்குள், “ அப்ப எங்கல எப்பவுமே மீட் பண்ணமாட்டியா? அவ்வளவுதானா நம்ப நட்பு… ஓகே குட் பை அன்ட் லாஸ்ட் பை பை” என்று பொறிந்தபடி போனை வைக்க போனாள் சபரிகா.
பரி குரலில் அவர்களின் நட்பின் ஆழத்தை உணர்ந்தவள்,‘அப்போ ரீயூனியனுக்கு போனால் என்ன?’ என்று வெண்ணிலா யோசித்தாள்.
ஆனால் ஏன் தான் போனோம் என்று எண்ணி வருந்தப் போவதை அறியவில்லை.
அவளது நிம்மதியைப் பறிக்கவென்று ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் யுகித்.
வெண்ணிலாவின் ஒரு சில நொடி அமைதி தாங்க முடியாத சபரிகா படபடத்து விட்டாள்.” ஹே நிலா! நம்ம பஞ்சபாண்டவர் குரூப் உனக்காக தான் காத்திட்டு இருக்கு.”
“இன்னும் அந்த குரூப்ப கலைக்கலையா?” என்று வெண்ணிலா சிரிக்க.
“ சிரிக்காதடி கோவமா வருது.”
“ஜில்! எதுக்கு இவ்வளவு கோபம்? இரு! நேர்ல பார்க்கும் போது அந்த மூக்குலே ஒரு பஞ்ச் பண்றேன்.” என்று வெண்ணிலா கூறி முடிக்கவில்லை,
“ஹூர்ரே!” என்ற சபரிகாவின் கூச்சலில் ஃபோனை பதறி தள்ளி வைத்தாள் வெண்ணிலா.
“எருமை! மெதுவா கத்து. காதே செவுடா போயிடும் போல. அப்புறம் நான் வர்றேன்னு சொல்லவே இல்லையே.” என்று புன்னகையுடன் வெண்ணிலா கூற.
“ அதான் நேர்ல பார்க்கலாம்னு சொல்லிட்டியே. அப்புறம் என்ன? முதல்ல நம்ம குரூப்ல நீ வர்ற விஷயத்தை சொல்றேன். அப்புறமா உன்னையும் அந்த குரூப்ல ஆட் பண்றேன்.” என்று படபடத்தவள், வேகமாக ஃபோனை வைத்து விட.
சபரிகாவின் ஆர்ப்பாட்டத்தை ரசித்த வெண்ணிலா புன்னகையுடன் டைனிங் டேபிளுக்கு சென்றாள்.
அங்கிருந்த மொத்தக் குடும்பமும் இவளையே பார்த்துக் கொண்டிருக்க.
“என்ன இன்னைக்கு எல்லாரும் சீக்கிரமா சாப்பிட வந்துட்டீங்க?” என்று வினவ.
“அண்ணி! நீங்க தான் .டென் மினிட்ஸ் லேட். பட்டுக்கே பசிக்க ஆரம்பிச்சிருச்சு. உங்களுக்காக தான் வெயிட்டிங்.” என்றாள் மிதுனா.
அப்போதுதான் கையில் இருந்த ஃபோனில் டைம் பார்த்த வெண்ணிலா தலையில் தட்டிக்கொண்டு, “சாரிடா பட்டு.” என்று அங்கிருந்த குட்டி தேவதையிடம் மன்னிப்பு வேண்டினாள்.
அவள் இனியா. அந்த வீட்டின் முதல் பேரக்குழந்தை. எல்லோருக்கும் செல்லம்.
அவளோ,” மா! சூப்பர்” என்று வெண்ணிலாவை நெட்டி முறித்து செல்லம் கொஞ்சினாள்.
“அடேய் பட்டு! உங்க அம்மாவை விட அத்தை தானே ப்யூட்டிஃபுல்லா இருக்கேன். அத்தைக்கு செய்ய மாட்டியா?” என்று போட்டிப் போட்டாள் மிதுனா.
“நோ! நிலாமா சூப்பர்.” என்றாள் மூன்று வயது இனியா.
“அண்ணா! பாருண்ணா… உன் பொண்ணை…” என்று அண்ணனிடம் சிபாரிசுக்கு செல்ல.
“ பட்டுக்குட்டி சொல்றது போல உன் அண்ணி முகத்துல ஏதோ ப்ரைட்னஸ் தெரியுது.” என்று தீரன் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தப்படி கூறினான்.
“என்ன மாமா சொல்றீங்க? நான் எப்பவும் போல தான் இருக்கேன்.” என்றவள் வேகமாக எழுந்து வாஷ்பேஷன் கிட்ட இருந்த கண்ணாடியில் தன் முகத்தை ஆராய,
அவளது காதருகே, “ இவ்வளவு நேரம் தேஞ்சுப் போன நிலா மாதிரியிருந்த, இப்போ என்னைப் பார்த்ததும் தான் உன் முகத்துல ஒளிவட்டம் தெரியுது. பவுர்ணமி நிலா மாதிரி தகதகன்னு மின்னுற. நீ என் மின்சார பாவை! “என்ற குரல் காதருகே ஒலிக்க …
விதிர்விதித்து திரும்பினாள்.
அங்கு யாரும் இல்லை.
தலையை உலுக்கியவள், தனது ஏமாற்றத்தையும் உதறி விட்டு, டேபிளில் அமர்ந்து, “ சாரி!” என்று விட்டு குழந்தைக்கு ஊட்டிக் கொண்டே அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளது ஃபோனில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டுக் கொண்டே இருக்க.
“ யாருமா! மெசேஜ் போட்டுட்டே இருக்காங்க. எதுவும் முக்கியமான விஷயமா” என்று நிரஞ்சன் வினவ.
“ஒன்னுமில்லை மாமா! காலேஜ் ப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்து தான்.ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் என் நம்பர் கண்டுபிடிச்சு பேசுறாங்க ”
“ ஓ! அது தான் உன் முகம் ப்ரைட்டா இருக்கா?” என்று கேலி செய்ய.
“சும்மா இருங்க! நீங்களும் சின்ன புள்ளையாட்டாம் மருமகளை வம்பு இழுக்குறீங்க.” என்று அதட்டினார் யாழினி.
“ டாட்! மாம் இருக்கும் போது வாய் தொறக்கலாமா? அண்ணன் எப்படி அமைதியா இருக்கார். அவரைப் பார்த்துக் கத்துக்கோங்க.” என்று கேலி செய்தாள் மிதுனா.
தங்கையை அழுத்தமாகப் பார்த்து விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பிய தீரன்,”நிலா! என்ன திடீர்னு ஃப்ரெண்டஸ்ங்க கிட்ட இருந்து மெசேஜ்.” என்று புருவத்தை உயர்த்தி வினவ.
“அது வந்து… எங்க காலேஜ்ல ரீயூனியன்.” என்று சபரிகா சொன்ன விஷயத்தை பகிர்ந்துக் கொண்டாள் வெண்ணிலா.
“ஓ!” என்ற தீரன், நீ போறியா என்பது போல் பார்க்க.
“ நான் போகலாம்னு இருக்கேன்.” என்றாள் வெண்ணிலா.
அவளை ஆச்சரியமாக பார்த்தவனோ, “குட்! எப்பப் போற? எத்தனை நாள் ப்ரோக்ராம்?” என்று அவளிடம் விசாரித்தான்.
“ஓன் வீக் ப்ரோக்ராம். ஆனால் எப்போன்னு தெரியலை.”
“எப்பவா இருந்தா என்ன? நம்ம ஆஃபிஸ் தானே. லீவ் பத்தி பிரச்சனை கிடையாது. என்னைக்கு மீட்டிங்கோ அதுக்கு இரண்டு நாள் முன்னாடியே கிளம்பிடு. அப்படியே
அத்தை, மாமாவையும் பாத்துட்டு வா. அங்க போய் ரொம்ப நாளாச்சு.” என்ற தீரனைப் பார்த்து முறைத்தாள் வெண்ணிலா.
“என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான் தீரன்.
“அது நான் அங்க போகலை மாமா.”
“இப்போ தானே போறேன்னு சொன்ன?”
“ உங்களை எல்லாம் விட்டுட்டு போக முடியாது”
“அப்படியா ?” என்று நக்கலாக வினவினான் தீரன்.
“அதானே!” என்றாள் மிதுனா.
“ப்ச்! அங்க ரொம்ப குளிரும். நான் போகலை.”
“ப்ச்! நீ பிறந்து வளர்ந்த ஊரு கொடைக்கானல். அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று பல்லைக் கடித்தான் தீரன்.
“ பாப்பா ஏங்கிடுவா?”
“ நிலா! பாப்பாவை பத்தி கவலைப் படாதே. நான் தான் இருக்கேனே. நான் பார்த்துப்பேன். அம்மா இருக்காங்க. மிது இருக்கா… அப்புறம் என்ன?” என்று அதட்ட.
கண் கலங்க அமைதியாக இருந்தாள் வெண்ணிலா.
“கோபப்படாமல் பொறுமையா சொல்லு. அவ கேட்டுப்பா.” என்று நிரஞ்சன் சப்போர்ட்டுக்கு வர.
“அப்பா! மருமகளுக்காக சப்போர்ட்டுக்கு வர்றாதீங்க.” என்றவன், “ லுக் நிலா! ஒரு முடிவு எடுத்துட்டா அதுல ஸ்டெடியா இருக்கணும். மனசு தடுமாறக் கூடாது. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்று கூற.
அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா.
Newer Posts