
Tag:
best tamil novel
மான்ஸ்டர்-4
written by Competition writers
அத்தியாயம்-4
அந்த இருட்டு அறையின் ஒருபக்கத்தில் மர நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்க.. அந்த மர நாற்காலியிலோ ஒருவன் முகத்தில் ரத்தம் வழிய முணகியவாறே படுத்திருந்தான். அவனின் மூடப்பட்ட விழிகளோ அங்கும் இங்கு உருட்டியவாறே இருக்க.. அவன் வாயோ ஏதோ முணுமுணுத்தவாறே இருந்தது. அவன் கைகள் உடைக்கப்பட்டு, கால்களில் கீறப்பட்டு ரத்தம் கொஞ்ச கொஞ்சமாக அவன் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது.
அந்த இருட்டு அறையில் அவனை தவிற வேறு யாருமில்லை. அந்த இருட்டு அறையில் இருக்கும் ஒவ்வொரு நேரமும் அவன் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது அவனுக்கே நன்றாக தெரியும்.
“தண்ணீ தண்ணீ..”அவன் அணத்திக்கொண்டிருக்க ஆனால் பாவம் அதனை கேட்க தான் அங்கு யாருமே இல்லை. “அய்யோ தண்ணி குடுங்கலேன்..”கெஞ்சலாக கேட்டவனின் குரலுக்கு மதிப்பு கொடுத்தோ இல்லை வர வேண்டியவன் வந்ததாலோ அந்த இருட்டு அறை திறக்கப்பட.. அதன் வழியே செந்நிற விழிகளுடன், முகம் கற்பாறையாக இறுகிப்போய், ராட்ஸஸன் நடை நடந்து வந்தான் மார்ட்டின் லுதாஸ்.
மார்ட்டினின் விழிகளிலோ அப்படி ஒரு பழிவெறி. அதற்கு மாறாக அவன் முரட்டு உதடுகளோ அழகாக, கவர்ச்சியாக விரிந்திருக்க அதனை இந்நேரம் ஏதேனும் பெண்ணழகு பார்த்தால் அதில் மயங்கியே போயிருப்பாள். ஆனால் அந்த சிரிப்பிற்கு பின்னால் ஒரு கொடூரம் இருக்கின்றது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்..
மார்ட்டின் அந்த அடிப்பட்டவனுக்கு முன்னால் வந்து ஸ்டைலாக நின்றவனோ.. தனக்கு பின்னால் நிற்கும் அவனின் பிஏ கபீரை பார்க்க.. அவனும் தலையாட்டியவாறே ஒரு சேரினை தூக்கி வந்து அவன் முன்னால் போட்டான்.. அதில் ராஜ தோரணையில் இல்லை இல்லை அப்படியே அரிமாவை போல கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தவனோ..
“ஹவ் ஆர் யூ மேத்யூ.. ஆர் யூ எஞ்சாயிங் தி டே..”குரலில் மொத்த நக்கலையும் திரட்டி மார்ட்டின் பேச.. அதில் எதிரில் உள்ளவனோ கண்கள் திறக்க முடியாமல் மெல்ல திறந்தவனுக்கோ பயம் அல்லுவிட்டது.
அதுவும் தன்னை இறை தேடும் கழுகு பார்வை பார்த்தவனை கண்ட மேத்யூவிற்கு தான் சாக போவது உறுதி என்று நன்றாக புரிந்தது. மார்ட்டினை கெஞ்சலாக பார்த்த மேத்யூவோ.. “பாஸ் ப்ளீஸ் ஹெல்ப் மீ..”என்று சன்னக்குரலில் கூறியவனோ.. “எனக்கு தண்ணீ வேணும் பாஸ்.. அத மட்டும் தர சொல்லுங்க.. ப்ளீஸ்..”என்று கெஞ்சியவனை கண்டு அந்த கல் மனம் படைத்தவனுக்கு கொஞ்சமும் பரிதாபம் வரவில்லை.
பின்னே ஏன் பரிதாபம் வர வேண்டும். மார்ட்டினை பொருத்தவரை அவனுக்கு பொய் கூறினாலோ, ஏமாற்றினாலோ, அவனிடம் திருடினாலோ சுத்தமாக பிடிக்காது. அதற்கு அவன் டிஸ்னரியில் ஒரே தண்டனை மரணம் மட்டும் தான். அதனை நாலு வருடமாக அவனுடன் இருந்த மேத்யூ மீறினால் சும்மா விடுவானா..
ஒரு மிகப்பெரிய டீல் ஒன்று லண்டனிலிருந்து மார்ட்டினுக்கு வந்தது. சுமார் நாலு கோடி மதிப்பிலான உலகத்திலையே அரிய வகை வைரமான பச்சை நிற வைரம் வேண்டுமென்று. அதற்காக மார்ட்டின் டீல் எல்லாம் பேசி முடித்தவனுக்கு அந்த பச்சை நிற வைரம் எங்கே இருக்கின்றது அதனை எப்படி திட்டம் போட்டு தூக்க வேண்டும் என்று அனைத்தும் அத்துப்படி.
அதற்கு திட்டத்தை வகுத்து கொடுத்த மார்ட்டினோ அந்த பொருப்பை இதோ இப்போது அடி வாங்கி கட்டப்பட்டு இருக்கும் மேத்யூவிடம் தான் கொடுத்தான். அனைத்தும் மார்ட்டினின் திட்டப்படி போக.. ஆனால் கடைசியாக மேத்யூ மார்ட்டினுக்கு துரோகம் செய்ய முயன்றவாறே அந்த பச்சை நிற வைரத்தை மார்ட்டினின் எதிரி கேங்கான ஈகில் கேங்கிடம் கொண்டு போய் கொடுக்க.. மார்ட்டினுக்கோ கொலைவெறி அதிகமாகியது.
கிட்டதட்ட நான்கு நாட்களாக மார்ட்டின் மேத்யூவை தூக்க முயன்றவன் இன்று காலையில் தான் அவனை தூக்கிக்கொண்டு வந்திருந்தான். மார்ட்டினை பொருத்தவரை அவனிடம் நேரடியாக மோதுபவர்களை கூட அவன் விட்டுவிடுவான்.. ஆனால் அவனின் பின்னாலையே இருந்து முதுகை குத்த பார்ப்பவனுக்கு அவ்வளவு தான். மார்ட்டினின் நீதி அவர்களுக்கு மரணம் தான்.
அதனை தான் இப்போது மேத்யூவிற்கு கொடுக்க தயாராக உட்கார்ந்திருக்கின்றான்.
“பாஸ்.. பாஸ்.. அந்த ஈகில் கரான் என்ன பயமுறுத்திட்டான் பாஸ்.. என் என்..”திணறிக்கொண்டிருந்தவனை நக்கலாக பார்த்த மார்ட்டினோ.. “என்ன உன் பேமிலிய தூக்கிட்டானா.. அதான சொல்ல வர..”என்றவனின் முகத்தில் கொஞ்சமும் இரக்கமே இல்லை.
அதிலையே மேத்யூவிற்கு மார்ட்டினுக்கு தான் பொய்தான் சொல்கிறோம் என்பது புரிந்து போனது. “ம்ம்ம் வெல் வெல் வெல்.. உன் ஃபேமிலி இப்போ மும்பையிலையே இல்ல ஏதோ ஆந்திரா பக்கம் அனுப்பிட்ட அதுவும் எனக்கு தெரியும்.. இந்த டீலுக்காக அந்த கரான் உனக்கு நாற்பது லட்சம் பேரம் பேசிருக்கான்.. அதுக்காக ஆசப்பட்டு தான் இத நீ செஞ்ச…”என்று அனைத்தையும் புட்டு புட்டு வைத்தவனை கண்டவனுக்கு எச்சில் விழுங்க முடியாத அளவிற்கு தொண்டை வலிக்கண்டது.
ஆம் அவன் சொல்வது உண்மைதான் நாற்பது லட்சத்திற்கு ஆசைப்பட்டு இப்போது மார்ட்டினின் கையால் உயிர் விடப்போவது உறுதியாகிவிட்டதே என்று நினைக்க மேத்யூவிற்கு பயம் நெஞ்சை கவ்வியது.
மார்ட்டினை பொருத்தவரை எவ்வளவு கேட்டாலும் அள்ளிக்கொடுப்பான்.. ஆனால் ஏமாற்றினால் சாவடிதான். இப்போது மேத்யூவிற்கும் சாவடிதான். மார்ட்டின் ஹாயாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்தவனோ.. “வெல்.. ஐ ஹேவ் டூ கோ.. சீக்கரமா உன்ன முடிச்சிட்டு நான் மீட்டிங் போனும்,”ஏதோ சிஸ்டம் வேலை போல கூறியவனோ அடுத்த நிமிடம் யோசிக்காமல் தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த கன்னை எடுத்தவன் கண நேரத்தில் மேத்யூவின் தலையில் சுட்டு மூளையை வெளியேடுத்தான்.
“ஷட்.. ஏமாத்திட்டு கத சொல்றான்..”ஆக்ரோஷமாக அதே நேரம் ராட்ஸஸனாக கத்திய மார்ட்டினோ.. கபீரை பார்த்து.. “ஐ வான்ட் தட் க்ரீன் டைமன்ட் வித் தின் ஒன் ஹவர்.. அரெஞ்ச் பண்ணு..”என்றவனோ இறந்தவனை கூட திரும்பி பார்க்காமல் அரிமா கணக்காக நடந்து சென்றான். இதுதான் மார்ட்டின் தேவை இல்லாமல் யார் வாழ்க்கையிலும் தலையிட மாட்டான். தலையிட்டால் அடியோடு அலசி ஆராயாமல் விடமாட்டான். சில நேரம் இப்படி கொலை கூட சாத்தியம் தான்.
மைத்ரேயி தன்னுடைய வீட்டில் அதுவும் தன் அறையில் உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழுதவாறு இருந்தாள். அவளது கண்ணும், முகமுமே அழுது அழுது சிவந்து போயிருந்தது.. இப்போது மட்டுமல்ல கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவளது நிலை இப்படித்தான் இருக்கிறது.. அப்படிப்பட்ட சம்பவம் தான் அவள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது.. மைத்ரேயியின் மனமும் உலைக்கலனாக கொதித்துக் கொண்டிருந்தது.. ஆனால் அதனை விட அதிகமாக பயம் தான் மனதில் பற்றி கொண்டிருந்தது.
அதற்கும் காரணம் இருந்தது அல்லவா.. இந்த ஒரு வாரம் அவள் வீட்டில் அரங்கேறிய விடயங்கள் எல்லாம் அவளை அடியோடு சாய்த்து விட்டிருந்தது.. கண்கள் மூடினாலே அந்த கொடூர முகம் தான் முன்னாள் வந்து வந்து இம்சை செய்து கொண்டிருந்தது..
“நல்லா கேட்டுக்க இந்த வீட்டை விட்டு மட்டும் எங்கயாச்சும் வெளியில போன அவ்வளவுதான் உன்னை இப்படியே கொன்னுட்டு எவனோடவோ ஓடி போயிட்டான்னு கதை கட்டி விடுறதுக்கு எனக்கு ரொம்ப நேரம் ஆயிடாது..”காஞ்சனா தன்னுடைய கொடூர முகத்தை காட்டி மிரட்டிக் கொண்டிருக்க.. அதனை இப்போது நினைத்தாலும் மைத்ரேயிற்கு படபடவென்று நெஞ்சம் அடித்துக் கொண்டது.
என்னதான் அவள் கல்லூரிக்கு சென்று படித்தாலும் அவளுடைய சுபாவமே இப்படி பயப்படும் சுபாவம் தான்.. அப்படித்தான் அவளுடைய வாழ்க்கை அவளை அடித்துப் போட்டிருந்தது.. ஒருவேளை அவளது தந்தையாச்சும் அவள் பக்கம் நின்று இருந்தால் இன்று தைரியமாக இருந்திருப்பாளோ என்னவோ.. ஆனால் அவளின் தந்தை மாணிக்கவாசகத்திற்கு தான் இப்போது பணப்பேய் பிடித்து இருந்தது அல்லவா.. பணத்திற்காக சொந்த மகளையே விற்க தயாராக இருக்கும் தனது தந்தையை நினைக்க நினைக்க பெண்ணவளுக்கு பயத்தை விட வெறுப்பு அதிகமாகியது..
ஒரு வாரத்திற்கு முன்பு மாணிக்கவாசகம் படபடத்துப்போன முகத்துடனே வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார். மைத்ரேயி என்னதான் அதனை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தாலும் அதனை பற்றி கேட்க குரல் வரவில்லை அவளுக்கு.
அவளுக்கும் காஞ்சனா வேலையாக கொடுத்து பெண்டை நிமிர்த்து கொண்டிருந்தாள். “ஒரு வேலையும் செய்றது இல்ல நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்க வேண்டியது..” என்று வாசிப்பாடி கொண்டே தான் இருந்தாள் அந்த ராட்ஸஸியும். பாவம் மைத்ரேயி உண்ணும் இரண்டு இட்லியும், ஒரு பிடி சோறும் காஞ்சனாவிற்கு ஒரு குண்டான் உண்பது போல தான் தெரிந்தது.
இப்போது மாணிக்கவாசகம் நெஞ்சம் படபடக்க அங்கு வீட்டின் முற்றத்திலேயே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தவரை காஞ்சனா புருவம் சுருக்கி பார்த்தவர் “என்னங்க என்னாச்சு ஏன் இப்படி படபடன்னு சுத்திகிட்டு இருக்கீங்க..” என்று கேட்டவரை நிமிர்ந்து எரித்த பார்வை பார்த்த மாணிக்கவாசகமோ..
“என்ன ஏன் கேட்குற… எல்லாம் உன்னாலயும் உன் புள்ளையாளையும் தாண்டி நான் இந்த நிலைமையில இருக்கேன்..”எடுத்ததும் எரிந்து விழ.. அதனைப் பார்த்து காஞ்சனாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.. “ம்ச் அட நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலையே…”அலங்கலாய்த்து கூறியவளை கண்டு அவ்வளவு வெறுப்பு மண்டியது மாணிக்கத்திற்கு..
“ஓ புரியாது புரியாது உனக்கு எதுவுமே புரியாதுடி.. எல்லாமே உன் பையன தலையில தூக்கி வச்சுக்கிட்டு அவனுக்கு பணம் பணம்னு வாரி வாரி இறைச்சிக்கிட்டு இருந்தியே அந்த பணத்தினால் வந்து வினைடி இது..” என்று எகிறிக்கொண்டிருந்தவர் சட்டென்று முகம் கலக்கத்துடன் “ம்ச் நான் என்னத்தடி சொல்றது நம்மளோட ரெண்டு மில்லையும் அரசாங்கம் இழுத்து மூடிட்டு.. அது உனக்கு தெரியுமா.. சும்மா வீட்ல திண்ணுட்டு சுத்துனா என்னத்த தெரிய போது உனக்கு..”கடைசி வரியை வெறுப்பாக கூறிய மாணிகவாசகம் காட்டுக் கத்தலாக…
“அந்த எடுப்பட்டவன் எங்க போய் தொலைஞ்சான்…”என்றவரை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத காஞ்சனாவின் செவிகள் அந்த மில் மூடப்பட்டதிலையே நிலைத்தது… தான் கேள்விப்பட்ட விடயத்தில் ஐயோ என்று நெஞ்சில் கையை வைத்துவிட்டாள்..
இது மைத்ரேயிக்கும் புதிய விடயம் தான்.. அவளும் அதிர்ச்சியாக தன்னுடைய தந்தையையே பார்த்துக் கொண்டிருக்க.. இதனை எல்லாம் ரமணி தன்னுடைய அறையில் படுத்தவாரு கேட்டுக் கொண்டிருந்தார்..
“அட என்னங்க சொல்றீங்க எதுக்காக கவர்மெண்ட் புடுங்கிச்சு..”அதிர்ச்சியை இன்னும் குறைக்காமல் கத்திய காஞ்சனாவினை பார்த்து அலுத்து போனது அந்த சுயநலத்திற்கு..
“ம்ம் புடுங்காம என்னடி பண்ணும் நீயும், உன் புள்ளையும் சேர்ந்துக்கிட்டு ஒரு காரியம் பண்ணிங்களே அதான் அந்த கவர்மெண்ட் ஓட ரேஷன் கடை அரிசி மூட்டைகளை தூக்கிட்டு வந்து நம்மளோட மில்லு ரெண்டுத்துலையும் போட்டு வச்சிருந்தீங்களே..அதுவும் அந்த மண்ணா போன ரேஷன் கடைக்காரனை நம்பி அதனால வந்து வென தாண்டி இது..” என்று தலையில் அடித்துக் கொண்டார் மாணிக்கவாசகம்.
ஆம் காஞ்சனாவிற்கு அதிக பணத்தாசை. அதன் விளைவு தான் இப்போது மாணிக்கவாசகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். காஞ்சனா அந்த ஊர் நியாய விலைக் கடையிலிருந்து ஒரு நாற்பது மூட்டை அரிசியை அந்த ரேஷன்கடைகாரனிடம் ஒரு டீலை பேசிய காஞ்சனா தன்னுடைய மில்லிலையே தனது மகன் மூலமாக மூட்டையை கொண்டு வந்து அடுக்க.. அது எப்படியோ போலீசுக்கு தெரிந்து போனது.. அதன் விளைவு இப்போது மாணிக்கவாசகத்தின் இரு மில்களும் சீல் வைத்து பூட்டப்பட்டிருந்தது.
நல்லவேளையாக மாணிக்கவாசகத்தையோ அல்லது ராகவையோ போலீஸ் கைது செய்யவில்லை.. அதற்கு காரணம் மாணிக்கவாசகம் தன்னுடைய மகனையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள தன்னிடம் வேலை செய்யும் ஒரு ஆளை பணத்தை கொடுத்து தான் தான் திருடிக் கொண்டு வந்து இங்கு வைத்ததாக ஒத்துக்கொள்ள வைத்து அவனை உள்ளே தள்ளி இருந்தார்.. அதனால் மாணிக்கவாசகமும், காஞ்சனாவும்.ராகவும் இப்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்..
ஆனால் மில்லை மட்டும் காப்பாற்ற எந்த வழியும் இல்லை.. ஏனென்றால் அரசாங்கத்தின் முத்திரை பதித்த ஒரு மூட்டை திருடினாலும் குற்றம் குற்றம் தானே.. அந்த பொருளை பதுக்கி வைக்க மாணிக்கவாசகத்தின் மில் உபயோகப்படுத்தியதால் அந்த மில்லை இப்போது சீல் வைத்து மூடப்பட்டிருந்தார்கள்.. எப்படியும் அந்த கேஸை உடைத்து மில்லை காப்பாற்ற இப்போதைக்கு எந்த வழியும் இல்லை..
மாணிக்கவாசகம் தேடி போன ஆட்கள் எல்லாருமே “கொஞ்ச நாள் அமைதியா இருங்க அப்பதான் அந்த மில்ல காப்பாத்த முடியும்.. சும்மா அவசரப்பட்டு மில்லு காப்பாத்தறோம் காப்பாத்துறோம்னு சுத்திட்டு இருந்தீங்கன்னா உங்களையும் சேர்த்து உள்ளதா போடுவாங்க..” என்று எச்சரிக்கை செய்து கொண்டு இருக்க அதனால் மாணிக்கவாசகம் அப்படியே அமைதியாக இருந்து விட்டார்.
இதனை கேட்ட காஞ்சனாவோ நெஞ்சில் கையை வைத்து திருத்திருவென விழித்துக் கொண்டிருக்க.. “உன்னோட பேராசை தாண்டி இப்படி ஒரு இக்கட்டுல கொண்டு வந்து மாட்டிவிட்டுருக்கு.. அந்த மூட்டையை கொண்டு வந்து ரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு வித்து நீ என்னத்த தான் சம்பாதிக்க போற.. இப்ப பாரு நமக்கு சோறு போடுற அந்த மில்லையே இனி திறக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்துட்ட..” என்று கத்திக் கொண்டிருந்தார்.
காஞ்சனா தலையில் கையை வைத்து அப்படியே உட்கார்ந்து விட.. மாணிக்கவாசகத்துக்கோ அப்படியே காஞ்சனாவை அடித்துக்கொல்ல தோன்றியது.. “எங்கடி உன் புள்ள அரும புள்ள காலையில பொறுக்க போயிட்டானா..” என்று கத்தியவரோ “எல்லாம் இந்த தருதலையால வந்தது..”என்று தலையில் ஓங்கி அடித்துக் கொண்டவருக்கு இன்னொரு பக்கம் மிகப்பெரிய பிரச்சினையாக அவர் செய்த செயல் ஒன்று அவரை அழிக்க ஓங்கி நின்றது.
அதுதான் அவரின் நண்பர் ஒருவருக்கு ஜாமின் கையெழுத்து போடுவதாக மிகப்பெரிய தொகை ஒன்றிருக்கு ஜாமீன் கையெழுத்து போட.. அந்த பெரிய தொகையை வாங்கிய மாணிக்கவாசகத்தின் நண்பரோ அந்த மிகப்பெரிய தொகையை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டார்.. ஆனால் ஜாமீன் கையெழுத்து போட்ட மாணிக்கவாசகமும் இப்போது மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார்..
“எல்லாம் என் தலையெழுத்து எல்லாம் ஒரே இடத்துல வந்து மோதுற மாதிரி நான் ஒருத்தனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அது இப்ப எனக்கே வந்து வினையா நிக்குது..” என்று அதையும் வாய்விட்டே புலம்பியவரை கண்ட காஞ்சனாவோ முகம் அதிர.. “என்ன சொன்னீங்க..” என்று வெகுண்டு எழுந்துவிட்டாள்.
உடனே மாணிக்கவாசகம் தயங்கியவரே நின்றவர் அதன் பிறகு தான் செய்த செயலையும் கூற “உங்களுக்கு அறிவு இருக்கா… யாருக்காவது போய் ஜாமீன் கையெழுத்து போடுவாங்களா..”என்று எகிறிக்கொண்டிருக்க..
“ம்ம் உனக்கும் உன் பிள்ளைக்கு இருந்த அறிவை விட எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி தாண்டி இருந்தது.. அவன் என்னோட உயிர் நண்பன் தான் இப்படி கையெழுத்து போட்டேன்.. ஆனா இப்படி ஒரேடியா கால வாரிவிட்டு ஓடுவானு நான் நெனச்சியா பார்த்தேன்..” என்று புலம்பியவரோ தலையில் கையை வைத்து நின்றுவிட..
இப்போது காஞ்சனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.. “எவ்வளவு தாங்க வாங்கினீங்க..”ஆக்ரோஷமாக கேட்டவளிடம் தயங்கியவாறே… “ஒரு நாலு கோடி இருக்கும்..” என்று ஆசால்டாக கூறினார்.
“என்னது 4 கோடியா..” என்று நெஞ்சில் கையை வைத்த காஞ்சனா “இப்ப அவ்ளோ காசுக்கு எங்கங்க போறது…” என்று கதறலாக கேட்டார் காஞ்சனா.
“ம்ச் அது தெரிஞ்சா நான் ஏண்டி உன் கிட்ட வந்து பொலம்பிட்டு இருக்க போறேன்..” என்றவாறே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். “ஐயோ ஐயோ என் குடும்பமே இப்படி நாசமா போதே..” என்று காஞ்சனா தன்னுடைய புலம்பலை ஆரம்பிக்க..
மாணிக்கவாசகம் கடுப்பானவர்… “அட கொஞ்சம் வாயை மூடுறியா..” என்று அதட்டலாக கத்தியவாறே அப்படியே சேரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். அவருக்கும் அவ்வளவு கலக்கம் தான். அந்த ஜாமீன் கையெழுத்து போடப்பட்டவனோ சாதாரணமான ஆள் எல்லாம் இல்லை.. அந்த மதுரையிலேயே மிகவும் மோசமான கட்டப்பஞ்சாயத்து செய்பவன்.. அவனிடம் எப்படி தான் சமாளிக்க போகிறேன் என்று நினைக்கவே அவருக்கு நெஞ்சமே வலித்தது.
அந்நேரம் பார்த்து ராகவ் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தவன் “அப்பா அப்பா உங்கள தேடி சில ஆளுங்க வந்திருக்காங்க..” என்று கூற மாணிக்கவாசகமும் இருந்த கடுப்பில் வெகுண்டு எழுந்தவர் ராகவை நோக்கி சென்று ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்துவிட்டார்.
அதில் ராகவ் அதிர்ச்சியாக நிற்க.. “ஏங்க..” என்று கத்தினாள் காஞ்சனா.
“ம்ச் வாய மூடுடி கொன்னுடுவேன் உன்ன…” என்று அதட்டியவறோ… தன் மகன் பக்கம் திரும்பியவறோ… “யாரை கேட்டுடா நீ இப்படி அரசாங்கத்தோட முத்திரை பதிச்ச மூட்டையை கொண்டு வந்து நம்ம மில்லுல ஒளிச்சு வைச்ச..” என்று கத்த.
அவனோ சாதாரணமாக “ம்ச் ப்பா.. இப்ப அதனால என்னப்பா..”சாவகாசமாக கேட்டவனை கொலைவெறியில் முறைத்தவர்.. “எவ்ளோ சாதாரணமா கேக்குற டா நீ..” இன்னும் வெறிகொண்டு அவனை நாலு அறை அறைந்தவரோ மில் பூட்டியதையும் தான் ஜாமீன் கையெழுத்து போட்டதையும் வேதனையுடன் கூறிக் கொண்டிருந்தவருக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அதனை எல்லாம் கேட்டு ராகவ் முகத்தை சுளித்தவாரே நின்றவன்.. “ம்ச் பா சரிப்பா விடுங்க இப்ப வந்திருப்பது ரொம்ப பெரிய ஆஃபர்..” என்று கூற அதில் மாணிக்கவாசகம் அவனை முறைத்தவாறு நின்று இருந்தார்.
“அட முறைக்கிறத முதல்ல நிறுத்துங்கப்பா… நான் எவ்வளவு பெரிய வேலையை பார்த்துட்டு வந்து இருக்கேன் தெரியுமா உங்களுக்கு..” என்று தன்னையே பெருமையாக கூறியவன்//தன்னுடைய அக்காவின் வாழ்க்கையை அடியோடு சீரழிக்க வழி செய்துவிட்டு வந்திருப்பது பாவம் அவனுக்கே தெரியாது.
(கேப்பச்சினோ..)
என் கண்ணாடி-4
written by Competition writers
அத்தியாயம்-4
விக்ரமன் தனக்கு முன்னாள் ஸ்டைலாக கண்ணில் கண்ணாடியுடனும் முகத்தில் திமிர் வழிய தனது கலரிங் செய்யப்பட்ட சிகையை கோதியவாறே நிற்கும் தனது அருமை மகன் ரகோத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். பின்னே முறைக்க மாட்டாரா என்ன கிட்டத்தட்ட அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது..
இந்த ஒரு வாரமும் அவரை ஒரு வேலையையுமே செய்ய விடாமல் எரிச்சல் படுத்திக்கொண்டு அல்லவா இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் அவர் பின்னாலையே பாடிகாடுக்கு டஃப் கொடுப்பது போல வந்துக் கொண்டிருந்தவனை முறைக்காமல் கொஞ்சவா செய்வார்கள்.
ஆம் விக்ரமனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்து விட்டான் வினையன். ஆனால் வந்தவனோ அவரை ஒரு வேலையும் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டும், அவரை எப்போதும் உறக்கத்திலேயே வைத்திருப்பதில்லையே முதன்மையாக சுற்றிக் கொண்டிருந்தான்.
முதலில் அமைதியாக அவனுக்கு கட்டுப்பட்டுக்கொண்டிருந்த விக்ரமோ இறுதியாக அவனிடம் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.”கண்ணா கட்சி வேலை ஜாஸ்தியா இருக்குப்பா.. ஏகப்பட்ட நலத்திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்து அப்படியே பெண்டிங்ல போட்டாச்சு.. ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல ரெஸ்ட் எடுத்தாச்சு வீட்ல வந்து அந்த ரெஸ்டையே எடுக்க சொல்றியேப்பா..”என்று கெஞ்சியவறோ.. “சரி போன போகுதுன்னு ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தாச்சுல்ல.. இப்பயாச்சும் என்னை வேலை பார்க்க விடேன்..”பாவமாக கெஞ்சலாக கேட்ட தனது தந்தையை இரக்கமில்லாமல் பார்த்துவானோ..
“ம்ச் அதெல்லாம் முடியாது டேட் நீங்க கண்டிப்பா ரெஸ்ட் எடுத்தே ஆகணும்.. உங்க கை இன்னும் சரியாகல ஞாபகம் இருக்கு இல்ல.. உங்களால எந்த வேலையும் தனியா செய்ய முடியாது.. ஃபல்ஸ் தானே அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..” என்றவனோ அவருடைய பிஏவை கூட இப்போதெல்லாம் அவரது அருகிலேயே விடுவதாக இல்லை.
தன் முன்னால் வந்து நின்ற விக்ரமனின் பிஏவை கண்களில் அனல் கூட்டி முறைத்தவனோ.. “அட அதுக்குள்ள வந்துட்டீங்களா கொஞ்ச நாளாவது அவர நிம்மதியா விடுவீங்களா மாட்டீங்களா… இன்னும் அப்பாவுக்கு சரி ஆகல.. சரியானதுக்கப்புறம் வாங்க..”கடுமையாக பிஏவை அடித்து துரத்தாத குறையாக விரட்டி கொண்டிருந்தான்.
ரஞ்சித்திற்கு இதை எல்லாம் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது.. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கு எப்படிப்பட்ட வேலை எல்லாம் இருக்கும் என்று நன்றாக அறிந்தவன் தான் வினையன்.. ஆனாலும் அவனுக்கு தன்னுடைய தந்தையின் உடல்நிலைக்கு தான் இப்போது அதிக முக்கியத்துவமாக தெரிந்தது..
ஆனால் ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பதற்கிணங்க.. இவ்வளவு நாள் கட்சி கட்சி என்று ஓடிக்கொண்டிருந்தவறால் இப்போது அமைதியாக இருக்க முடியவில்லை.. “கண்ணா நீ சொன்னன்னு ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுத்தாச்சுப்பா இன்னும் ரெஸ்ட் எடு, ரெஸ்ட் எடுனா வேலையெல்லாம் யாருப்பா பார்க்கிறது.. இன்னும் ரெண்டு மாசத்துல மிகப்பெரிய எலக்சன் வருது உனக்கு தெரியும்ல.. அந்த எலக்சனுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கு தெரியுமா? எல்லாத்தையும் நான் தான பாத்துக்கணும்..” கெஞ்சலாக கெஞ்சு கொண்டிருந்தவரை பார்த்து மறுப்பாக தலையசைத்தவனோ..
“எல்லாத்தையும் நீயே பாக்குறனா… அப்புறம் ஏன் உனக்கு தொண்டனுங்க இருக்கானுங்க.. ஏன் உங்களோட தொண்டர்கள் எல்லாம் எங்க போயிட்டாங்க..”ஆத்திரமாக கத்தியவனோ… “டேட்.. சும்மா தொண்டன் தொண்டனு ஊரு முழுதும் சொல்லிட்டு சுத்துறதுக்கா நீங்க கூட வச்சிட்டு இருக்கீங்க.. இது எல்லாத்தையும் அவங்கள பண்ண சொல்லுங்க.. எல்லா இடத்திலும் நீங்களே போய் நிக்கணும்னா அப்புறம் எதுக்கு நீங்க முதலமைச்சரா இருக்கனும்…”அதிகார தோணியில் கத்தியவன்…
“சீ டேட்.. நீங்க சொல்றதையே தான் நானும் சொல்றேன் உங்களுக்கு பொறுப்புகள் அதிகமா இருந்தாலும் தொண்டர்கள் அதிகமில்லையா.. அப்போ வேலைகளை கம்மி பண்ற அளவுக்கு தொண்டர்கள் தான் எல்லாத்தையும் செய்யணும் டேட்.. உங்க தொண்டர்களை எல்லாத்தையும் செய்ய சொல்லுங்க நீங்க வேணும்னா இந்த ரூம்லயே உட்கார்ந்து அதுக்கு என்ன என்ன பண்ணனும்னு பிளான் மட்டும் போட்டு கொடுங்க..”உறுதியாக கூறியவனோ தனக்கு தந்தையை கூர்மையாக பார்த்தவன்… “பட் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க டாட்.. உங்களுக்கு நடந்த இந்த ஆக்சிடென்ட் ஒரு திட்டம் போட்ட சதியா இருக்குமோன்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கு.. நீங்க சொல்றதுதான் எலக்சன் வர்றதுக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு அதுக்குள்ள உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஆக்சிடென்ட் ஆகுதுன்னா இது என்னமோ நார்மலா எனக்கு தெரியல.. இட்ஸ் சம்திங் ஃபிஷி டேட்.. அதுக்காக தான் சொல்றேன்.. கொஞ்சம் வெளியில போறதெல்லாம் கம்மி பண்ணிட்டு வீட்ல இருந்தே உங்களுக்கு என்ன வேலை செய்யணுமோ அதை செய்யுங்க.”கூறியவனை கடுப்பாக பார்த்த விக்ரமன்…
“அது எப்டி கண்ணா முடியும்.. எலக்ஷனுக்கு நிறைய பிரச்சாரம் செய்யனுமே… அத விட சொல்றியா…”என்றார்
“ம்ச் ஐ டோன்ட் கேர் டேட்… ஒழுங்கா வீட்ல இருங்க,, அத விட்டுட்டு வெளியில வெளியில ஓட நிக்காதீங்க டேட்.. நீங்க என்னதான் இந்த ஸ்டேட்டோட முதலமைச்சரா இருந்தாலும் நீங்க எனக்கு எப்போதுமே என்னோட அப்பா தான் எனக்கு என் அப்பா ரொம்ப முக்கியம்,, புரிஞ்சுகிட்டு வேலைய பாருங்க..” என்று முகத்தை கடுமையாக வைத்து ஏசிக் கொண்டிருந்தான்.
ரஞ்சித் இதனை எல்லாம் கையை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவனுக்கு நன்றாக தெரியும் வினையனுக்கு அவனது தந்தையின் விஷயத்தில் மட்டும் எப்போதும் கறாராக தான் இருப்பான் என்று. அதில் ரஞ்சித்தை கூட அவன் சாதாரணமாக விட்டு விட மாட்டான்..
விக்ரமன் பாவமாக ரஞ்சித்தை பார்க்க அவனும் உதட்டை பிதுக்கியவன்.. “என்னால முடியாதுப்பா உங்களோட பையன் கிட்ட என்னால மாரடிக்க முடியாது.. எதுனாலும் நீங்களே பேசிக்கோங்க..” என்று கையை விரித்தவனை பார்த்து ரகோத்தோ முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்..
நண்பனின் முறைப்பை கண்டு “ஏண்டா ஏன் என்னை தொட்டதுக்கும் முறைக்கிற..” என்றவனோ அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் விடாமல் செக்யூரிட்டி டைட் செய்து வைத்திருந்தான்.. அதுவும் ரகோத்தின் வேலைதான்..
“ம்ச் என்னமோ பண்ணுங்க டா நீங்க.. சொல் பேச்ச கேட்கிறதில்ல.. இவன் அம்மாவ விட ரொம்ப மோசமா இருக்கான்..”வாயிற்குள் ரகோத்தை திட்டியவாறு விக்ரமன் தனது அறைக்குள் சென்று விட்டார்.. போகிறவரை பார்த்து ரகோத்திற்கு பெரும்மூச்சினை தான் விட முடிந்தது.
“ஏண்டா இப்படி..”அலுத்தவாறே ரஞ்சித் கேட்டவனுக்கு… “ரஞ்சித் நீ சும்மா இருடா அவர் இப்படித்தான் பொலம்பிட்டு போவாரு.. அடிபட்டுட்டு வந்து நின்னா அப்ப தெரியும்.. ம்ச் அவருக்கு என்ன வந்துது சும்மா அடிப்பட்டுட்டு போவாரு ஆனா நம்மதான் அனுபவிக்கனும்.. அவருக்கு அடிப்பட்டுட்டோனே நான் எப்படி தெரியுமா துடிச்சு போயிட்டேன்.. இப்ப வரைக்கும் இங்க படக் படக்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு தெரியுமா..”தன்னுடைய இதயத்தை காட்டியவனை கண்டு பெரிதாக சிரித்து கொண்டான் ரஞ்சித்.
ரகோத்தின் இந்த பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது.. அதுதான் அவனது அன்னை அபிராமியின் இறப்பு. கிட்டத்தட்ட சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருக்கும் அப்போது ரகோத்திற்கு எட்டு வயது இருக்கும்.. அப்போதும் விக்ரமன் முதலமைச்சர் ஆக இருந்தவர் தான். விக்ரமன் தன்னுடைய சிறுவயதில் இருந்து கட்சி கட்சி தொண்டன் தொண்டன் என்று தான் சுற்றிக் கொண்டிருப்பார். அப்படிப்பட்டவருக்கு அந்த இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி கிடைத்தது ஒன்றும் அவ்வளவு பெரிய விடயம் இல்லை தான்.. அவரின் வாழ்க்கை அந்த அரசியலை சுற்றி தான் எப்போதும் இருக்கும்.
அரசியம் முதல் என்றால் இன்னொரு விஷயம் என்னவென்றால் அவரது மனைவி அபிராமி. விக்ரமன் அபிராமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் அபிராமியின் மீது ஏகப்பட்ட காதலை வைத்திருந்தார் விக்ரமன். அவர் அபிராமி மூலம் ரகோத் பிறந்ததற்கு பிறகு தான் அவருக்கு முதலமைச்சர் பதவியே கிடைத்தது. ஒரு பக்கம் கட்சியையும், இன்னொரு பக்கம் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு சந்தோசமாக ஓடிக்கொண்டிருந்த விக்ரமனின் வாழ்க்கையில் இடியாக வந்து விழுந்தது தான் அபிராமியின் இறப்பு.
விக்ரமனின் வளர்ச்சி பிடிக்காத சில எதிரிகளின் தாக்குதலில் அபிராமி ஒரு நாள் மடிந்து போனார். ஆம் அபிராமி ஒரு நாள் மாலை தன்னுடைய மகன் ரகோத்தை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றிருந்தார்.. எப்போதும் அபிராமி தான் காரினை ஒட்டிக்கொண்டு செல்வார்.. அப்படி அவர் செல்லும் போது தான் ரகோத்தினை அழைக்க சரியாக காரினை சென்று பள்ளியின் வாசலில் நிறுத்த ரகோத்தும் சந்தோசமாக சிட்டுக்குருவியாக தனது அன்னையைப் பார்த்து ஓடி வந்த வேகத்தில் தான் அபிராமி ஓட்டி வந்த காரின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரை அடித்து தூக்கியது.. அதில் காருடன் நிலைகுலைந்து போன அபிராமியும் தனது மகனை கண்ணுக்குள் நிரப்பி கொண்டு அப்படியே உயிர் நீத்து போனார்.
தனது அன்னையின் இறப்பை கண்ணோடு கண்ட ரகோத்திற்கு உலகமே தட்டாமலை சுற்றியது.. “அம்மா…” என்று கதறியவாறே அப்படியே மயங்கி விழுந்தவனோ ஒரு வாரத்திற்கு காய்ச்சலில் தான் கிடந்தான். அபிராமியின் இறப்பு இயற்கையாக நடந்தது இல்லை என்று விக்ரமனுக்கு நன்றாகவே தெரியும்.. அவரது அரசியல் எதிரிகள் தான் அவரை மனதளவில் உடைய வைப்பதற்காக அபிராமியை கொலை செய்ய திட்டம் போட்டது,அதனை அரங்கேற்றம் செய்தது.. அனைத்தையும் கண்டுபிடித்த விக்ரமனும் தனது மனைவியை கொன்றவர்களை அடுத்த நாளே பழி வாங்கியது வேறு விடயம்.
அதன் பிறகு அன்னைக்கு அன்னையாக தந்தைக்கு தந்தையாக இருந்தது விக்ரமன் தான். அதனால்தான் ரகோத் தனது தந்தைக்கு இந்த அளவிற்கு கட்டுப்பாடு விதித்து கொண்டிருந்தான் என்று நன்றாகவே ரஞ்சித்திற்கும் தெரியும்.
“அப்புறம் டா மாப்ள.. என்ன யோசிச்சுக்கிட்டே இருக்க..”கூலாக ரஞ்சித்தின் தோளில் கை போட்ட ரகோத்தை திருப்பி பார்த்தவனோ…
“ம்ம் சொல்லுடா உனக்கு ஷூட் இல்லையா இன்னிக்கி..”ரஞ்சித் கேட்டான்..
“ம்ம் அதெல்லாம் இருக்கு இருக்கு.. இல்லாம எங்க போக போது.. முடி நரைக்கிற வர இந்த நடிப்புக்கு பங்கமில்ல தான்…“என்றவனோ.. “நான்தான் அப்பாக்கு இப்படி அடிப்பட்டுன்னு ஷூட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க சொல்லிட்டேன்.. அதுவும் என்னோட ஹாலிடே வேற செலபரேட் பண்ண முடியாமல் போயிடுச்சா அதனால கொஞ்சம் ஸ்ட்ரெஸ்சா வேற இருக்கு.. அதனாலதான் இந்த ஒரு வாரம் இப்படியே அப்பா கூட இருந்துட்டு அதுக்கப்புறம் மறுபடியும் சூட்டுக்கு போலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்…”உடலை வளைத்து நெட்டி முறித்தவாறே பேசியவன் ரஞ்சித்தை பார்த்து “அப்புறம் கேட்க மறந்துட்டேன் எப்படிடா இருக்காங்க அம்மாவும், அப்பாவும்.. அப்புறம் உன்னோட ஒய்ஃப் அப்புறம் இப்போ லேட்டஸ்ட்டா நீ டெலிவரி பண்ண உன்னோட ட்வீன்ஸ் எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்..” என்று அக்கறையாக ரஞ்சித்தை விசாரித்தான்.
ரஞ்சித்தோ அவனை அனல் பார்வை பார்த்தவனோ “நீ பேசாதடா எரும..” என்று எரிந்து விழுந்தான்.
அதனை கேட்ட ரகோத்திற்கு சிரிப்புதான் வந்தது.. “ஏன்டா என்னை பார்த்து பொசுக்குன்னு எருமன்ட்ட.. நான் அமேசிங் ஸ்டார்ட்டா.. இப்டி சொன்னது மட்டும் என் ஃபேன்ஸுக்கு தெரிஞ்சிது உன்ன வச்சி செஞ்சிடுவாங்க..” என்று கிண்டலாக கூறியவனுக்கு தனது நண்பனின் கோபம் எதனால் என்று தெரியாமல் எல்லாம் இல்லை..
அவனை மேலும் கீழும் பார்த்த ரஞ்சித்தோ.. “ம்ம் நான் எதுக்கு கோபப்படுறேன்னு உனக்கு தெரியாது அப்படித்தானே..” இடுப்பில் கை வைத்து கேட்டவனை கண்டு இதழ் விரிய சிரித்தவனோ “ஏன் தெரியாம அதெல்லாம் நல்லாவே தெரியும்…” என்றவன் “உனக்கே தெரியும் இல்லடா எனக்கு ஷூட் இருந்ததுனால தான்டா பார்க்க வர முடியல..” என்று கூற அதில் இன்னும் கடுமையாக முறைத்த ரஞ்சிதோ..
“ம்ச் லூசு பயலே ஏன்டா கிட்டத்தட்ட நீ நம்ம வீட்டுக்கு வந்து பத்து வருஷம் ஓடிப்போச்சுடா.. அப்பாவும், அம்மாவும் எப்ப பார்த்தாலும் உன்னை கேட்டுக்கிட்டே இருக்காங்க.. என்னப்பா இது இந்த புள்ள வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆகுது எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்னு கேட்டுகிட்டே இருக்காங்க.. அவங்க கேக்குறது மட்டும் இல்லாம இப்போ இந்த எட்டு வருஷமா இன்னொருத்தி கேட்டுகிட்டே இருக்கா..” என்றவனுக்கு கடைசியாக கூறியவளை நினைக்க அவன் முகம் பளபளப்பாக சிலாகித்து போனது.
அதனைப் பார்த்து ரகோத்திற்கு மெல்ல இதழ் விரிய சிரித்தவன் “என்னடா உன்னோட ஒய்ஃப் கனவுல வந்து டார்ச்சர் பண்றாங்களா..” என்றவனுக்கோ நன்றாக தெரியும் ரஞ்சித்திற்கு இருபது வயதில் திருமணம் முடிந்தது என்று.. ஆம் ரஞ்சித்திற்கு திருமணம் முடிந்து எட்டு வருடம் ஆகிப் போனது.. அப்போது ரஞ்சித்திற்கு இருபது வயது தான்..
ரஞ்சித் ஊட்டியை சேர்ந்த படுகர் இனத்தை சேர்ந்தவன். அவர்களின் சட்டதிட்டபடி அவர்களுக்கு மிகவும் குறைந்த வயதிலேயே திருமணம் முடிந்து விடும்.. அப்படிதான் ரஞ்சித்திற்கும் திருமணம் முடிந்தது. “சும்மா என்ன வெறுப்பு ஏத்தாதடா என்னோட கல்யாணத்துக்கும் வரல.. இப்போ எனக்கு குழந்தைங்க பிறந்து ஆறு மாசம் ஆகுது இப்பயும் அவங்கள பார்க்க வரல..” என்று ஆங்கிரி பேடாக கத்திக் கொண்டிருந்தவனை பார்த்த ரகோத்தோ அவன் தோளில் சமாதானமாக தட்டியவன்
“நீயே யோசிச்சு பாருடா உனக்கு கல்யாணம் ஆகும்போது நான் அமெரிக்காவில படிச்சுக்கிட்டு இருந்தேன் டா.. அப்ப என்னோட பைனல்ஸ் வேற.. நிறைய ப்ராஜெக்ட்ஸ் அது இதுன்னு ஓடிக்கிட்டு இருந்தது.. அதனாலதான் உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியல.. அதுக்கப்புறம் ஆக்டிங்னு பிஸியா ஆயிட்டேன்.. நீ கேட்கலாம் அதுக்காக ஒரு தடவை கூட வீட்டுக்கு வராம இருப்பியான்னு இந்த இண்டஸ்ட்ரில ஏதாவது ஒரு வகையில பெரிய ஆளா ஆகணும்னு அமைதியா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்டா.. அதனாலதான் உங்க வீட்டுக்கு வர முடியல.. அதுக்காக என்ன அதான் இப்போ உனக்கு குழந்தையே பிறந்துருச்சு கண்டிப்பா இந்த தடவை குழந்தைகளை பாக்குறதுக்கு வரனும்ல… அப்போ அப்படியே உன்னோட வைஃபையும் பார்த்துடலாம்…” என்று கூறியவனுக்கு தெரியவில்லை இந்த தடவை ரஞ்சித்தின் மனையாளை பார்க்கும் போது ரகோத்தின் வாழ்க்கையே திசை மாறி சென்று கொண்டிருக்கும் என்று.
(நீதான்டி…)
வான்முகிலாய் வந்த தேவதையே-2
written by Competition writers
அத்தியாயம்-2
“ஐ லவ் யூ சஷ்டிமா.. உன்னை உயிரா காதலிக்கிறேன்டா.. நீ இல்லனா நான் உயிர் இல்லாத உடல் மாதிரிடா.. நூறு வருஷம் நாம இதே காதலோட வாழனும்னு ஆசையா இருக்கு.. என் காதல ஒத்துக்கிறியா சஷ்டிமா..”மென்மையான குரலில் அதே நேரம் அழகான புன்னகையுடன் சஷ்டியின் கையினை பிடித்து அதில் அழகான வைர மோதிரத்தை போட்டவாறே கேட்டான் துஷ்யந்த்.
அதில் சஷ்டியின் முகத்திலோ சந்தோஷத்தையும் தாண்டி ஒருவித குழப்பம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு துஷ்யந்தை பிடிக்குமா என்று கேட்டாள் பிடிக்கும் தான்.. ஆனால் காதலா என்று கேட்டால் அதற்கு அவளுக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“துஷ்..”தயக்கமாக அவனை அழைத்தாள் பெண்ணவள்.
துஷ்யந்த் அழகான புன்னகையுடன் “ம்ம் பேபி சொல்லு..”மென்னகையுடன் கேட்டவன் அவளின் கையை இதமாக வருடியவாறே மோதிரத்தையும் ஆசையாக தொட்டவாறே கேட்டவனை கண்டு பெண்ணவள் தான் திருத்திருத்தாள். துஷ்யந்தை கிட்டதட்ட நான்கு வருடங்களாக தான் சஷ்டிக்கு தெரியும்..
மாதவனோ சரி குழந்தை பிறந்ததும் திரும்பவும் சஷ்டியை இங்கையே அழைத்து வந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் தான் இந்து ஆசிரமத்துடன் சேர்ந்த பள்ளியில் சேர்த்துவிட்டவருக்கு அதற்கு மேல் சஷ்டியை தன்னுடன் வைத்து வளர்க்க முடியாமலே போனது.
அதற்கு மேல் கனகாவும் விடவில்லை.. “எனக்கு ஆபத்து உண்டு பண்ணுனா போல உங்க பையனுக்கும் செஞ்சான என்ன செய்றது. பேசாம அவள அங்கையே விடுங்க ஆசிரமத்துலையே வளரட்டும்..”கனகா அதட்டலாக கூற. மாதவனோ அன்றிலிருந்து கனகாவை சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
“இல்ல அவ என் மருமக அவ இங்க தான் இருக்கனும்..”பலவாறாக அவர் எடுத்துக்கூற ஆனால் கனகாவோ அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.. குழந்தை பிறந்த அன்று ஆசையாக ஹாஸ்டலில் இருந்து வந்து பார்த்தாள் சஷ்டி. அப்போதும் கனகா அவளை தொடவே விடவில்லை.
“கைக்கால வச்சிட்டு சும்மா இல்லாம புள்ளைய தொடாத.. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உன்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன்..”என்று அதட்டலை போட்ட தன் அத்தையை பாவமாக பார்த்தாள் அந்த மழலை.
இப்படி எல்லாம் அவ்வளவு அவமானத்தை கடந்து ஓடியவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் இதமாக இருந்ததோ துஷ்யந்த் தான்.. ஆனால் அதுவும் நிலைக்காமல் போய் தான் அவள் இந்நிலையில் இருக்கின்றாள்.
“யூ ஆர் வெரி ஓல்ட் டைப் சஷ்டி.. நீ இன்னும் அந்த அறந்த பழைய காலத்திலேயே இருக்கேனு நினைக்கிறேன்.. கமான் நியூ வேர்ல்டுக்கு வந்து சேரு.. இந்த காலத்துல ஃப்ரெண்ட்ஷிப்னு ஒன்னு வருதுனா.. அந்த பிரண்ட்ஷிப் அடுத்த நிமிஷம் காதலா மாறுறதும், அந்த காதல் அடுத்த நிமிஷமே பிரேக் அப் ஆகுறதும் எவ்ளோ வழக்கமாகி இருக்குன்னு உனக்கு தெரியுமா.. ம்ச் இன்னும் அப்டேட் ஆகாம இருக்குறது உன் தப்பு.. அத விட்டுட்டு நீ என்னன்னா இன்னும் அதே லவ்வ பிடிச்சிக்கிட்டு..”சாதாரணமாக தோளை குலுக்கியவனோ.. “ம்ச் என்ன அதுக்குள்ள என்னை பிரேக்கப் பண்ணிட்டியா அது இதுன்னு கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டு நிக்கிற இதெல்லாம் பாக்க அப்புறம் உன்ன பாக்க அப்படியே பாட்டி காலத்து பொண்ணு மாதிரியே இருக்கு தெரியுமா.. இத்தனைக்கும் நீ ஒரு ஃபேமஸ் மாடல் வேற..” என்று நக்கலாக சிரித்தவாறு பேசிக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சஷ்டிக்கு அப்படியே பூமியில் புதைய வேண்டும் என்பது போல இருந்தது.. கிட்டத்தட்ட ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு இதே துஷ்யந்த் இந்த வார்த்தையை கூறி இருப்பானா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவாள்.. அப்போது அவனின் நிலைமையே வேறு.. பாதி வெளுத்து போன ஒரு கட்டம் போட்ட சட்டையும், அதற்கேற்ற வெளுத்து போன கருப்பு பேன்டையும் போட்டுக்கொண்டு தன் ஆபீஸிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த துஷ்யந்த் தான் இப்போது சஷ்டியின் கண் முன் வந்து தெரிந்தான்.
சஷ்டி கிட்டத்தட்ட நான்கு வயதிலிருந்து ஹாஸ்டலில் தான் வளர்ந்து கொண்டிருந்தாள்.. அதற்கு காரணம் என்னதான் கனகவாக இருந்தாலும் மாதவனின் நிலையை நினைத்து தான் சஷ்டியும் ஹாஸ்டலிலேயே தங்கி விட்டாள்.. மாதவன் எவ்வளவோ சஷ்டியை தன் உடன் வருமாறு அழைத்துக் கொண்டிருக்க ஆனால் சஷ்டியோ அதனை அடியுடன் மறுத்துவிட்டாள்.. “ஏன் சஷ்டிம்மா நான் கூப்பிட்டா வர மாட்ற ஏன் இப்படி அடம் பிடிக்கிற.. உனக்கு மாமா மேல கோவமா..” என்று சிறுவயதிலும் தன்னை பார்க்கில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்கும் மாதவனை இப்போதும் அவள் நினைப்பதுண்டு.
“நோ மாமா.. இல்ல மாமா நான் உங்க மேல எல்லாம் கோபப்படவே இல்ல எனக்கு ஹாஸ்டல் ரொம்ப புடிச்சிருக்கு தெரியுமா.. இங்க எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. இங்கயே நான் ஹாப்பியா தான் இருக்கேன்.. எனக்கு உங்க வீட்டுக்கு எல்லாம் வர வேண்டாம் மாமா..”சஷ்டி கூறியபோது அவளின் குரலில் அத்தனை வேதனையையும், கலக்கமும் இருந்தது. இச்சிறு வயதிலேயே அவள் முகத்தில் இவ்வளவு கலக்கமா என்று மாதவனே அச்சமயம் ஆச்சரியமாகவும், வேதனையாகவும் தான் அவளை பார்த்தார்.
“சஷ்டிமா உனக்கு மாமா மேல கோவமா..”மாதவன் குற்றவுணர்வில் தவிப்புடன் கேட்க.
“நோ மாமா எனக்கு எந்த கோவமும் உங்க மேல இல்ல.. நான் இங்க ரொம்ப நல்லாவே இருக்கேன்..” என்று அழகான புன்னகை சிந்தியவாறு கூறியவளுக்கும் மனதில் கஷ்டமாகத்தான் இருந்தது.. பின்ன வார விடுமுறை,அரையாண்டு தேர்வு ,முழு ஆண்டு தேர்வு என்று அனைத்து விடுமுறையின் போதும் தன்னுடைய மாமா தன்னை கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி அவருடைய வீட்டிற்கு கூப்பிட்டு போவதுண்டு.. அப்போதெல்லாம் கனகாவுடன் சில பிரச்சனைகள் தான் வரக்கூடும்.
“பாருங்க இவள புள்ளைக்கு வச்சிருந்த சாப்பாட எடுத்து சாப்பிட்டுட்டா, ஐயோ இவளுக்கு சரியான சளி நம்ம பையனுக்கும் நல்ல சளிய ஒட்டி விட்டுட்டாங்க, இவளை ஏங்க ஹாஸ்டல்ல இருந்து கூட்டிட்டு வந்தீங்க இவளால எப்போதும் எனக்கு சங்கடம்தான், ஐயோ எதுத்த வீட்டு மாமியோட பொண்ண இவ கீழ புடிச்சு தள்ளி விட்டுட்டா.. அந்த மாமி என்னை எப்படி எல்லாம் பேசினாங்க தெரியுமா.. இவளால எனக்கு எப்ப பாத்தாலும் அசிங்கம் தான்..”எப்போது பார்த்தாலும் கனகா புகார் புகார் புகார் என்று தான் மாதவனிடம் கூறிக் கொண்டே இருந்தாள்.
மாதவனுக்கும் ஆரம்பத்தில் ஒன்றுமே புரியாமல் இருந்தவருக்கு போகப் போக கனகாவின் நடவடிக்கையில் சிறிது சிறிதாக சந்தேகம் வந்து முளைத்து விட்டது.. அதனை சோதிக்க பார்க்க எல்லாம் மாதவன் தயாராக இல்லை.. “உனக்கு என்ன பிரச்சனை கனகா எதுக்காக சஷ்டியை இப்படி நம்ம வீட்டுக்கே வர விடாம பண்ணிக்கிட்டு இருக்க..”ஒருநாள் அவளை உட்கார வைத்து கேட்டவரை கடுப்பாக பார்த்த கனகாவோ திருத்திருத்தவள் “எனக்கு என்னங்க பிரச்சனை அவதான் சும்மா இருக்க மாட்றா.. எப்ப பாத்தாலும் யார்கிட்டயாவது வம்பு பண்ணிக்கிட்டே இருக்காங்க.. என்ன என்ன பண்ண சொல்றீங்க.. நானும் எவ்வளவோ அவளுக்கு சொல்லித்தான் பார்க்கிறேன் ஆனாலும் அவ திருந்த போற மாதிரி தெரியலையே.. பேசாம அவளை ஹாஸ்டல்லையே போட்டு வைங்க வீட்டுக்கு கூட விட வேணாம்னு சொல்லிடுங்க ஹாஸ்டல்ல..” என்று அடியோடு அவளை வரவே விடாத அளவிற்கு கனகா ஏகப்பட்ட திட்டத்தை போட்டு வைத்திருந்தாள்..
அதனை எல்லாம் மாதவன் கண்டு கொண்டவன் ஒரு நாள் வெகுண்டு எழுந்து விட்டான்.. “என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல என் தங்கச்சியோட பொண்ணு டி அவ.. பாவம் அப்பா அம்மா இல்லாதவ அவள இந்த வீட்டுக்குள்ள விடக்கூட மாட்டேன்னு சொல்ற உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்..” என்று கனகாவின் கன்னத்தில் ஓங்கி அறைய.. அது கனகாவிற்கு பயங்கர அதிர்வாகி போனது..
அப்படியே இமைக்காமல் மாதவனை பார்த்து நின்றவள் தன் முகத்தை சட்டென்று மாற்றிக்கொண்டு. “நான் எப்பங்க அப்படி சொன்னேன் அவளை எப்ப நான் வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு சொன்னேன்..” என்று நீலிக்கண்ணீர் வடிக்க..
“பின்ன நீ நடந்துக்கிறத பாத்தா உன் மேல எனக்கு சந்தேகம் தான் வருது.. சின்ன பிஞ்சு குழந்தைடி அவ அவளுக்கு இருக்கிற ஒரே உறவு நான் மட்டும் தான்.. எனக்கு அப்புறம் நீ.. ஆனா நீ என்ன பண்ற அவளை வீட்டுக்குள்ள கூட விட மாட்டேங்குற.. குழந்தையோட சட்டை எடுத்துட்டா, குழந்தையோட சாப்பாடு சாப்பிட்டுட்டா.. இப்டி எவ்வளவு புகாரடி வாசிப்ப.” என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கர்ஜித்தவனோ…
“இங்க பாரு கனகா உன் மனசுல நல்லா ஒன்னு பதிய வச்சுக்கோ இன்னிக்கு என்ன தான் நீ என் மருமகளை என்கிட்ட நெருங்க விடலைனாலும் இந்த வீட்டுக்கு வர விடலனாலும் எங்களோட உறவு என்னிக்கும் மாறாது.. நான் அவளுக்கு தாய் மாமா தான்.. அவ வளர்ந்து பெரிய மனுசி ஆனதும் அவளுக்கு செய்யப்போற முதல் முற உறவு நான் மட்டும்தான்.. அவ வளர்ந்து நாளைக்கு கல்யாணமே பண்ணிக்க போறதா இருந்தாலும் அவளுக்கு மொத சீர் செய்ய போறது இந்த தாய் மாமா தான்.. அதுல எந்த மாற்றமும் இல்லை.. ஏன் அதை நீ தடுக்கவே முடியாது..”மாதவன் உறுதியாக கூறியவனோ கனகாவை எரித்த பார்வையுடன் அங்கிருந்து சென்று விட்டான்.
கனகாவிற்கும் தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டது என்பதை நினைத்து கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.. ஆனாலும் எப்படி இதெல்லாம் தன்னுடைய கணவனை செய்யவிடாமல் தடுப்பது என்பதனை பற்றி அவள் யோசிக்க ஆரம்பிக்க.. ஆனால் அதனை எல்லாம் அவளால் தடுக்கவே முடியவில்லை.. ஏனென்றால் மாதவன் அத்தனை ஆக்ரோஷமாக இருந்தான்.
அதேபோல சஷ்டிக்கு பத்து வயது இருக்கும்போது ஹாஸ்டலில் இருந்து அவள் பெரிய மனுஷியாகிவிட்டால் என்ற செய்தி வர அதனைக் கேட்ட மாதவன் ஆனந்தத்துடன் தன்னுடைய மருமகளை பார்க்க ஓடினார். ஆனால் கனகாவிற்கோ அங்கு செல்ல சுத்தமாக விருப்பமே இல்லை.. ஏனோ தானோ என்று கிளம்பி சென்றவளுக்கு மாமனும், மருமகளும் கட்டிபிடித்து கொஞ்சிக்கொண்டு இருப்பதை பார்க்க எரிமலை தனலாக கொதித்துக் கொண்டிருந்தது..
அவளுக்கு இதனைக்கும் ஒரு மகன் வேறு பிறந்திருக்க அவனோ அக்கா போன்ற சஷ்டியின் மீது உயிராகவே இருந்தான்.. ஆம் அவன் பெயர் தீரன். அவனுக்கும் சஷ்டிக்கும் கிட்டத்தட்ட நான்கு வயது தான் வித்தியாசம்.. ஆனால் இருவருக்குள்ளவும் எந்தவித பாகுபாடும் இல்லை பார்த்ததில்லை.. ஒருவருக்கொருவர் தினமும் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதுவும் இப்போதுவரை.
அதன் பிறகு சஷ்டி ஸ்கூலை முடித்தவள் அவளுக்கு மிகவும் பிடித்த மாடலிங் எடுத்து படிக்க ஆரம்பித்தாள். “இதுக்கெல்லாம் காசு எங்கிருந்து வந்துச்சு நீங்க குடுக்க போறீங்களா..”கனகா கணவன் மாதவனை பார்த்து ஆத்திரமாக கத்திக் கொண்டிருக்க..
மாதவனும் அவளை முறைத்துப் பார்த்தவர் “நான் ஏண்டி கொடுக்கிறேன்.. என் தங்கச்சியோட நகையும் என் மச்சானோட இடமுமே அவ்வளவு கிடக்கு.. அதை வச்சு அவளை படிக்க வைக்க போறேன்.. அப்படியே என் காச கொடுத்தாலும் அதைக் கேட்க வேண்டிய அதிகாரமும், உரிமையையும் உனக்கு கிடையாது..”அக்னி பார்வையால் கனகாவை எடுத்தெறிந்து பேச.. அது இன்னும் கனகாவின் கோபத்திற்கு தூபத்தை போட்டது.
தீரனுமே தன்னுடைய அன்னையிடம் பலவாறு கேட்டிருக்கிறான். “ஏம்மா சஷ்டிய உனக்கு பிடிக்கவே இல்லை..”அசராமல் கொண்டிருக்க..
அதற்கு கனகாவும் “டேய் அவள இந்த வீட்ல அண்டவுட்டா நம்ப ரெண்டு பேரையும் அப்பா துரத்தி விட்டுருவாருடா கண்ணா…” என்று இல்லாதது பொல்லாததையும் கூற.. அந்த வயதில் அவனுக்கு என்ன புரிந்ததோ சஷ்டி நல்ல குணங்களை கண்ணார பார்த்தவன் கண்டிப்பாக சஷ்டி அப்படியெல்லாம் செய்யவே மாட்டாள் என்று தான் அவனும் உணர்ந்துக்கொண்டான்.
“ம்ச் அவ என்னோட சஷ்டிமா.. அவ என்னைக்கும் என்ன அப்படி பண்ணவே மாட்டா.. முதல நீ அவகிட்ட இப்டி பேசுறத நிறுத்து.. அவளும் இந்த வீட்டு பொண்ணுதான்..” என்று உறுதியாக கூறியவனை கண்ட கனகாவிற்கு அலுத்து போனது..
முதலில் கணவன் இப்போது மகன் என்று இருவருமே சஷ்டியின் பக்கம் செல்ல கனகாவோ தனிமையாக்கப்பட்டாள். தீரனுக்குப் பின்பு கனகாவிற்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை.. அதனால் கனகாவின் பேச்சு வார்த்தை கொஞ்சம் கொஞ்சம் நாளாக நாளாக மெளனமாக மாறிவிட்டது.
ஆனால் சஷ்டியோ ஒரு தடவை பட்ட அடி திரும்பவும் படாமல் இருப்பதற்கு இப்போது வரை கனகாவிடம் நெருங்குவதே இல்லை.. வீட்டிற்கெல்லாம் செல்லுவாள் மாமாவை பார்ப்பாள், பேசுவாள், தீரனுடன் விளையாடுவாள், அவனுடன் சண்டை பிடிப்பாள் இப்படியே நாட்களை கடத்தி விட்டு அடுத்த நாளே தான் தங்கி இருக்கும் சிறிய அப்பார்ட்மெண்டிற்க்கு ஓடி வந்து விடுவாள்.
சஷ்டி மாடலிங் படித்து முடித்துவிட்டு அதிலேயே கொஞ்சம் பெரிய கோர்ஸ் ஒன்றினை படித்து முடித்தவள்.. மிகப்பெரிய மாடலிங் கம்பெனியில் மாடலாக இருக்கின்றாள். அத்துடன் இப்போது சென்னையில் ஒரு பொட்டிக் வைத்து டிரெஸ்ஸும் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறாள்.. டிசைனிங் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறாள்.
இப்படி அனைத்தையும் நன்றாக செய்தவள் செய்த மிகப்பெரிய தவறு துஷ்யந்த்தை ஆளாக்கிவிட்டது தான்.. ஆம் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து பயந்து கொண்டு இருந்த போட்டோகிராபர் துஷ்யந்தை ஏதோ ஒரு போட்டோவை கிளிக் செய்து அவனை மாடலாக்கிவிட்டது தான் இப்போது அவளுடைய லவ் பெயிலியருக்கு ஒரே காரணம்..
சும்மாவா சொன்னார்கள் காசு வந்தாலோ,தன்னுடைய நிலை மாறினாலோ மனிதனின் நிலையே மாறிவிடும் அல்லவா.. துஷ்யந்த்தும் அப்படிதான் மாறிவிட்டான்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு சஷ்டிக்கு தன்னுடைய காதலை கூறி ப்ரப்போஸ் செய்தவன் இன்று வசதி, வாய்ப்பு, ஃபேம் அனைத்தும் கிடைத்ததும் அவளை தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றிருப்பது தான் இப்போது அவளின் நிலைக்கு காரணம்..
அதனால் எல்லாம் அவள் மடிந்து விட தயாராக இல்லை.. சாகும் எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடமே..“ம்ச் நான் எதுக்கு சாகணும்.. என்ன அவன நம்பியா இந்த உலகத்துல நான் வந்து குதிச்சேன்.. அதெல்லாம் முடியாது நான் சாக முடியாது..” உறுதியாக நினைத்தவாறு அந்த ஆழ்கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களுக்கு சட்டென்று ஒரு காட்சி படர.. அதில் கண்களை ஆழ விரித்தவளோ… “நோ..” என்றவாறே கடலினை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டாள்.
“ஹேய்… நோ அந்த பக்கம் போகாதீங்க.. நோ எந்த தப்பான முடிவு எடுத்துடாதீங்க..”சஷ்டி அந்த நபரின் பின்னாலே ஓட.. அந்த நபரால் தான் அவளது வாழ்க்கையே மாறப்போகிறது என்று அவளுக்கு பாவம் தெரியாமல் போனது தான் விதியோ.
(தேவதை..)
5.யாருக்கு இங்கு யாரோ?
written by Competition writers
அத்தியாயம் 5
“எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”
தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்…
கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு அதிர்ந்து போனால்..
“ஏய்…. அம்மு என்னாச்சுடி? ஏன் இப்படி கொட்டுற மழையில வந்து இருக்க?” என்று கேட்டவாறே அமுதினியை உள்ளே அழைத்துச் சென்ற அகல்யா… அவளை சோபாவில் அமர வைத்து விட்டு ஒரு டவலை எடுத்து வந்து பெண்ணவளின் ஈர கூந்தலை துவட்டி விட்டவள்.
“அடியே… நான் உன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். நீ என்ன எதுவும் பேசாமல் அமைதியா இருக்க? போன விஷயம் என்னாச்சு? தேவ் கிட்ட பேசிட்டியா? தேவ் என்ன சொன்னாரு?” என்று அகல்யா ஒரு வித பதட்டத்தோடு கேட்க… இவ்வளவு நேரம் ஏதோ சிலை போல் அமர்ந்திருந்தவள். தன் தோழியை கண்கள் கலங்க ஒரு பார்வை பார்த்தவள். எதுவும் பேசாமல் நேராக தன் அறையில் இருக்கும் பாத்ரூமிற்குள் சென்று விட்டால்.
“ஏய்…. அம்மு.. என்னாச்சு டி?” என்று கேட்டவாறே அகல்யாவும் அவள் பின்னோடே சென்றால். இங்கு பாத்ரூமுக்குள் வந்த அமுதினி ஷவரை திறந்து விட்டுவிட்டு அதன் கீழ் ஒரு நொடி அமைதியாக நின்றவள். பின்பு அவன் பேசிய அத்தனை வார்த்தைகளையும் நினைத்து கதறி கதறி அழ ஆரம்பித்தால்..
போயிம் போயிம் இப்படி ஒருவனிடம் ஏமார்ந்து விட்டோமே, அதிலும் இத்தனை வருடங்களாக இவனையா தான் நான் உருகி உருகி காதலித்தேன்? என்று நினைத்தவள் மேலும் கதறி அழுதாள்.
இந்த நிமிடம் வரை தேவ் தன்னை ஏமாற்றி விட்டான் என்பதை அவளால் சிறிது கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
“ எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு? இத்தனை வருஷத்துல என்னுடைய லவ் உனக்கு ஒரு தடவை கூட புரியவே இல்லையா? அதுவும் என்னை பார்த்து நீங்க அந்த வார்த்தை சொல்விங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல தேவ்” என்று இவள் இங்கு அழுவதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவுக்கு என்ன நடந்திருக்கு என்றும் புரிந்தது தன் தோழியின் நிலையை நினைத்து மிகவும் வருந்தினால்.
அப்படி இப்படி என்று ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்த நிலையில் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள். தன் உடையை மாற்றி விட்டு நேராக சென்று படுத்து கொண்டால். அமுதினியின் நிலையை நினைத்து மிகவும் கவலைப்பட்ட அகல்யாவோ அவளின் உடல்நலம் கருதி அவளுக்காக உணவை எடுத்து வந்து சாப்பிட அழைக்க,
“இல்ல எனக்கு வேண்டாம் அகல் நீ சாப்பிட்டு” என்று அமுதினி மறுக்க
“ இப்ப மட்டும் நீ சாப்பிடல நான் உடனே ஆதிக்கு போன் பண்ணி இங்க நடந்த எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடுவேன்” என்று அகல்யா அமுதினியை மிரட்ட, அவளும் எங்கு இது தன் அக்காவுக்கு தெரிந்து விடுமோ என்று நினைத்து பயந்தவள். வேறு வழியில்லாமல் ஏதோ பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள்.
அமுதினியின் மனநிலையை புரிந்து கொண்ட அகல்யா இப்போதைக்கு அவளிடம் எதையும் கேட்டு கஷ்ட்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள். அதே சமயம் அவளை இந்நிலையில் தனியாக விடுவதும் சரியாக வராது என்று உணர்ந்து என்றும் இல்லாத அதிசயமாக இன்று அமுதினியுடனே ஒரே அறையில் தாங்கினாள்.
இரவு முழுக்க அவன் பேசிய அந்த வார்த்தைகளை நினைத்து கண்ணீர் வடித்தவள். ஒரு கட்டத்தில் கண்ணீர் கூட வற்றிப் போக, அப்போதும் கண்களை கூட மூடாமல் எதையோ வெறித்துப் பார்த்தபடி அப்படியே படுத்து இருந்தவள் எப்படி உறங்கினால் என்று தெரியாமலேயே உறங்கிப் போனால்..
அடுத்த நாள் காலை எழுந்த அகல்யா ரெஸ்ப்ரெஸ் ஆகிவிட்டு இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்தவள்.
“ஏய் … அம்மு…. அம்மு… காபி கொண்டு வந்து இருக்கேன் பாரு எழுந்திரு டி..” என்று அவளை எழுப்ப அவளோ அசையாமல் அப்படியே படுத்து இருந்தால்…
“ஏய்… அம்மு… எழுந்திரு டி” என்றவாறே அவளை தட்டி எழுப்பிய அகல்யா ஒரு நொடி அதிர்ந்து தான் போனால்..
“ஏய்…. அம்மு என்னாச்சு டி? எழுந்திரு டி…” என்று அகல்யா அவள் கன்னம் தட்டி எழுப்ப, அவளோ கண்களை கூட திறக்க முடியாமல் படுத்து இருந்தால்…
“ஏய்… கண்ணை திறந்து என்னை பாரு…” என்று அகல்யா சற்று பலமாக அவள் கன்னத்தை தட்ட அப்போதே லேசாக கண் விழித்து பார்த்தால் அமுதினி…
“என்ன அம்மு இது? உடம்பு நெருப்பா கொதிக்குது, எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம்…” என்று அகல்யா அவளை எழுப்பி அமர வைக்க, அமுதினியும் கஷ்ட்டப்பட்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“ஹாஸ்பிடல் எல்லாம் ஒன்னும் வேண்டாம் டி… அங்க ட்ரால டேப்லெட் இருக்கும் பாரு அதை எடு..” என்று அமுதினி கூற
“அடி வாங்க போற பாரு… ஒழுங்கு மரியாதையா எழுந்து வா ஹாஸ்பிடல் போகலாம்.. நீ இப்படி இருக்கறது மட்டும் ஆதிக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான் அவ என்னை கொன்றுவா” என்று அகல்யா கூற
“ஏய்… அக்கா கிட்ட எல்லாம் நீ இதை பற்றி எதுவும் சொல்லாத” என்று அமுதினி கூற
“சரி… நான் சொல்லல ஆனா, அதுக்குன்னு உன்னை இப்படியே எல்லாம் ஒன்னும் விட முடியாது. ஒழுங்கா எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம்.” என்று அகல்யா கூற அமுதினியும் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொள்ள, அகல்யா உடனே தன் ஆஃபீஸிற்கு போன் செய்து லீவு சொல்ல…
“என்ன அகல்யா நீயும் இப்படி பண்ண எப்படி? ஏற்கனவே நம்ப டீம்ல 2 பேர் லீவ்… இப்போ அமுதினியும் வரமாட்டான்னு வேற சொல்ற அப்போ நீயாவது ஆஃபீஸ் வரனும்ல ம்மா” என்று மேனேஜர் கூற
“நான் என்ன சார் பண்றது? இங்க இவளுக்கு ரொம்ப முடியல ஹை பீவர் கூட வேற யாருமே இல்ல, நான் தான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்” என்று அகல்யா கூற
“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது அகல்யா… என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ அது எனக்கு தெரியாது, கரெக்ட் டைம்க்கு ஆஃபீஸ் வந்து சேரு, இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குது, வேணும்ன்னா அந்த மீட்டிங்கை முடிச்சிட்டு நீ கிளம்பு” என்று கூறியவர் போனை கட் செய்து விட, அதில் கடுப்பான அகல்யா தன் போனை முறைத்து பார்த்து கொண்டு இருக்க, இதை கண்ட அமுதினி..
“நீ அந்த போனை முறைச்சு பார்த்து என்ன டி ஆக போகுது? போ போய் நீ ஆபிஸ்க்கு கிளம்பு நான் டேப்லெட் போட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று அமுதினி கூற அகல்யாவும் வேறு வழியில்லாமல் அமுதினிக்கு தேவையான உணவுகளை சமைத்து வைத்து விட்டு ஆபிஸ்க்கு கிளம்பி சென்று விட்டாள்.
மீட்டிங் முடிந்த உடனே பர்மிசன் போட்டு விட்டு வந்து விடலாம் என்று அகல்யா நினைத்திருக்க, அவள் நேரமோ என்னவோ மீட்டிங்க கிட்டத்தட்ட மதியம் வரை நடந்து கொண்டிருந்தது. அப்படி இப்படி என்று மீட்டிங்கை முடிந்து மேனேஜரிடம் பேசி பர்மிசன் வாங்கியவள். அவசர அவசரமாக வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருக்க அப்பொழுது ரிசப்ஷனில் இருந்த அகல்யாவிற்கு கால் வந்தது..
“ஹலோ அகல், அமுதினி எங்க? அவ இருந்த கொஞ்ச போன் அவகிட்ட கொடு” என்று அந்த பெண் கூற
“இல்ல அவள் இன்னைக்கு ஆஃபீஸ் வரல, ஏன் இப்போ நீ திடிர்னு அவளை கேட்குறே?” என்று அகல்யா கேட்க
“அமுதினிய தேடி ஒரு பொண்ணு வந்திருக்காங்க, அவளை பார்க்கணும்னு சொல்லி கேட்குறாங்க… அனேகமா அவங்க அமுதினியோட சிஸ்டர் நினைக்கிறேன்.” என்று அவள் கூற இங்கோ அகல்யாவிற்கு அந்த வார்த்தையை கேட்டதுமே தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. பயத்தில் கை கால்கள் உதற
“அவங்க யார்? அவங்க பேர் என்ன?” என்று அகல்யா கேட்க
“ஏதோ ஆதி…. ஹான்… ஆதிலட்சுமின்னு சொன்னாங்க” என்றதும் இங்கே அகல்யாவிற்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.
“சரி அவங்களை அங்கையே வெயிட் பண்ண சொல்லு நான் வரேன்” என்று கூறியவள். தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கீழே செல்ல.. அங்கோ ஆதி சற்று கோபத்தோடு அமர்ந்திருந்தால்.
“ஏய்… ஆதி நீ இங்க என்ன பண்ற?” என்று அகல்யா கேட்க
“எங்கடி உன்னோட ஃப்ரண்ட்?” என்று ஆதி கோபமாக கேட்க
“அது அவ இன்னிக்கு ஆபீஸ் வரல, ரூம்ல இருக்கா.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல” என்று அகல்யா கூற
“என்னது உடம்பு சரி இல்லையா? ஏன் என்னாச்சு? நேத்து காலையில் என் கிட்ட பேசும் போது கூட நல்ல தானே இருந்தா, அதுக்குள்ள என்னாச்சு?” என்று ஆதி கேட்க
“அது…. அது வந்து… நேத்து மழையில ஃபுல்லா நெனைஞ்சுட்டா, அதுல அவளுக்கு காய்ச்சல் வந்துடுச்சு போல” என்று அகல்யா கூற
“சரி…. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க” என்று ஆதி தன் தங்கையின் மீது உள்ள அக்கரையில் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க..
“ஐயோ கடவுளே…. வெறும் காய்ச்சலுக்கே இவ நம்ப கிட்ட இத்தனை கேள்வி கேட்குற, நடந்த விஷயம் எல்லாம் மட்டும் இவளுக்கு முழுசா தெரிஞ்ச என்னை என்ன பண்ண போறாளோ.. தெரியலையே” என்று அகல்யா தனக்குள் புலம்பிக் கொண்டு இருக்க..
“ஏய்… அகல் என்னடி நான் பாட்டுக்கு இங்க பேசிகிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கண்ணை முழிச்சு கிட்டே கனவு கண்டுக்கிட்டு இருக்க?” என்று ஆதினி கேட்க
“அது வந்து ஆதி… இனி தான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்… இன்னைக்கு ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்க அதான் இந்த மேனஜர் கண்டிப்பா வந்தே ஆகணும்னு சொல்லிட்டான். எனக்கும் வேற வழி இல்ல அதான்… ஆபிஸ்க்கு வந்து மீட்டிங் மட்டும் அட்டன் பண்ணிட்டு இதோ வீட்டுக்கு கிளம்பிட்டேன்” என்று அகல்யா கூற, அவளை முறைத்த ஆதினி.
“சரி… வா வந்து கார்ல ஏறு, போகலாம்…” என்ற ஆதினி அகல்யாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டே அவர்கள் தாங்கி இருக்கும் வீட்டிற்க்கு வந்தால்..
“அம்மு…. அம்மு…” என்று அகல்யா கதவை தட்ட அதுவோ திறக்கபடவில்லை…
“டேப்லெட் போட்டு தூங்கிற போல அகல்… நீ உன்கிட்ட இருக்க கீயை வெச்சு டோரை ஓபன் பண்ணு…” என்று ஆதினி கூற அகல்யாவும் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்தால்..
உள்ளே சென்ற ஆதினி சுற்றும் முற்றும் பார்க்க அங்கு எங்குமே அவளது தங்கை அமுதினி இல்லை,
“ஆதி அவ அவளோட ரூம்ல தான் இருப்பா, இரு நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்” என்று கூறிய அகல்யா அமுதினியின் அறைக்கு செல்ல போக
“இல்ல வேண்டாம் விடு.. அவளை டிஸ்டப் பண்ணாத அவ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும், நீ போ நானே போய் அவளை பாத்துக்கிறேன்.” என்று கூறிய ஆதினி தன் தங்கையின் அறைக்குள் நுழைய, அகல்யாவோ ஆதினிக்காக காபி போட கிச்சன் அறைக்கு சென்று விட்டால்.
மெல்ல சத்தம் வராதவாறு உள்ளே சென்ற ஆதினி… தன் தங்கையின் அருகில் அமர்ந்தவள். சிறு புன்னகையோடு பெண்ணவளின் தலைக்கோதியவள். கண்கள் சுருங்க அமுதினியின் உடலை தொட்டு பார்க்க அதுவோ ஜில்லென்று இருந்தது.
“என்ன இது? அகல்யா காய்ச்சலுன்னு சொன்ன இப்போ என்ன உடம்பு இவ்வளவு ஜில்லுனு இருக்குது?” என்று நினைத்தவள். அமுதினியை அவள் பக்கமாக திருப்பியவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய…
“அம்மு….” என்று அந்த அறையே அதிரும் படி ஆதினி கத்த, இங்கு அவளுக்காக காபி போட்டு கொண்டு இருந்த அகல்யாவும் ஆதியின் அலறலில் ஒரு நொடி பயந்தவள். வேகமாக அமுதினியின் அறைக்கு செல்ல அங்கு அவள் இருக்கும் நிலை கண்டு அகல்யாவுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அப்படி அமுதினிக்கு என்னாச்சு? ஆதினியின் தங்கை தான் அமுதினியா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
யாருக்கு இங்கு யாரோ?
மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெயில்
வேலைதான் ஆசை
பூக்கும் நேரம் புல்லின்
மீது வாடைதான் பனியை
மெல்ல தூவும்
போதும் போதும்
தீர்ந்தது வேதனை
என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள்.
அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க,
சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின் பொன் மேனியை பட்டும் படாமல் தொட்டு உறவாட ஆரம்பித்தன. மழையில் தன் உடைகள் நனைய ஆரம்பித்ததும், மழையின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்தவள், அவளின் கைப்பேசியை எடுத்து நனையாதவாறு தாவணி முந்தியில் வைத்து இடையில் சொருகியவள். இவ்வளவு நேரம் அவள் அறுத்த புல்லுக்கட்டையும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு சலசலவென நீரோடும் வாய்க்காலின் வழியாக அந்த தோட்டத்தில் இருந்த ஓலை குடிசைக்கு அருகில் வந்து மழைக்காக ஒதுங்கி நின்றாள். பயங்கரமாக காற்று வீச தென்னை மரம் எல்லாம் ஆடியது. அந்த இடத்தில் நிற்பதில் அவளுக்கு விருப்பம் இல்லைதான் இருந்தாலும் தற்போதைக்கு அவளுக்கு வேறு வழியில்லையே.
“மழை எப்போதான் நிக்குமோ தெரியலையே..! நேரம் வேற ஆயிடுச்சு..! அம்மா தேடுவாங்களே” என மனதிற்குள் நினைத்தபடி பெய்யும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள் செம்பருத்தி. அது ரசனையான பார்வை அல்ல. அவள் விழிகள் ரசிப்பதை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. 23 வயது பருவ மங்கை. மாநிற தேவதை அவள். படிப்பு இடைநிறுத்தம் செய்து மீண்டும் கஷ்டபட்டு படிக்க ஆரம்பித்து இப்போதுதான் செவிலியர் படிப்பை முடித்திருக்கிறாள். முகத்தில் கவலையோ, பயமோ சிறிதும் கிடையாது. ஆண்களுக்கு நிகரான இறுக்கம் அவள் முகத்தில் அதிகமாகவே தெரிந்தது. அது அவளின் கடந்தகால கசப்பான நினைவுகளின் பரிசு. மருந்துக்கும் அவள் இதழ்கள் புன்னகைப்பதை மறந்திருந்தன. மீன் போன்ற விழிகளில் உயிர்ப்பு இல்லை. அவள் அணிந்திருந்த சாயம்போன நீல வண்ண தாவணியே அவள் வீட்டு ஏழ்மையை அழகாக எடுத்துச் சொல்லும். அவளின் இடை நீண்ட கூந்தலை அழகாக பின்னலிட்டு மடித்து ரிப்பனால் கட்டியிருந்தாள். கழுத்தில் கருப்பு நிற கயிறு, காதில் சின்னதாக பொட்டு போன்ற தோடு, கையில் இரண்டு பிளாஸ்டிக் வளையலும் அணிந்திருந்தாள். அடிக்கடி கண்ணாடி வளையல்கள் உடைந்து விடுவதால் அவள் அன்னை பிளாஸ்டிக் வளையல்களை வாங்கிகொடுத்திருந்தார்.
இவ்வளவு நேரம் மழையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு. தீடிரென தன் பின்னால் சூடான மூச்சுக்காற்றப்படுவது போல தோன்ற தன் கையில் வைத்திருந்த அறிவாளை எடுத்து சற்றும் யோசிக்காமல் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தில் வைத்தாள்.
ஒரு நொடி அதிர்ச்சி அவன் முகத்தில் தெரிய… அடுத்த நொடியே சுதாரித்தான் அந்த ஊரில் மைனராய் சுற்றும் மருது.
பல்லை காட்டியபடியே “ என்ன செம்பா ஆள் தெரியாமல் கழுத்துக்கு அறிவாளை வச்சுட்டியோ” என ஒரு மார்க்கமாய் சிரிக்க…
அவனைப் பார்த்து முறைத்தவள் கழுத்தில் வைத்த அறிவாளை எடுக்காமலேயே “ஆளு தெரியாமல் தான் கழுத்தில் வைத்தேன். நீதான்னு தெரிந்திருந்தால் கழுத்தை அறுத்துறுப்பேன்” என்றால் திமிராக….
என்ன செம்பா வரவர ரொம்ப பேசுறியே..!
நீ என் கண்ணு முன்னாடி இருக்க இருக்க இன்னும் பேசுவேன். எப்படி வசதி..! என்றால் ஒற்றை புருவத்தை உயர்த்தி பல்லை கடித்தபடி…
நான் யாருன்னு உனக்கு தெரிந்தே பேசுறியே…!
தெரிந்ததால்தான் பேசுறேன்.
நாலு காசுக்கு வழி இல்லனாலும் திமிருக்கு குறைச்சல் இல்லை உனக்கு.
ஓஹ்…! பணம் இருக்கிற இடத்துல தான் திமிர் இருக்கணுமா என்ன..! அப்படி ஏதும் சட்டம் புதுசா வந்திருக்கா..?
ஆமா..! கஞ்சிக்கே வழி இல்லாத உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு…
கஞ்சிக்கு வழியில்லனுதான் கடவுள் யாருக்கும் தலைகுனியக் கூடாதுன்னு திமிரை அதிகமா கொடுத்திருக்கிறார் போல…
சத்தமாக சிரித்தவன் “நேத்து தான் உன் அப்பன் என்கிட்ட பிச்சை எடுத்து குடிச்சான்.”
ஓஹ்…! பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்ட வள்ளலே அதை ஏன் என்கிட்ட வந்து சொல்றிங்க.
இந்த திமிர் பேச்சு என்கிட்ட வேணாம். என் வீட்ல வேலை செய்யகூட ஒரு தகுதி வேணும். அந்த தகுதிகூட இல்லாத உன்னை நான் கட்டிக்கனும்னு ஆசைப்படுறேன். அதுக்காவே நீ எனக்கு கோவில் கட்டி கும்பிடனும்.
கஞ்சிக்கே வழியில்லாத நான் எப்படி உங்களுக்கு கோவில் கட்டிகும்பிட முடியும் தர்மபிரபுவே.
ஏய் என்னடி நக்கலா…?
இந்த “டி” போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத சங்க அறுத்துடுவேன்.
அறுப்படி அறுப்ப..! நீ இப்படி எல்லாம் என்கிட்ட பேசுறதுக்கு உன் அப்பன் மூலமா உன் கழுத்துல நான் தாலி கட்டலைன்னா பாரு..
பார்க்கலாம் பார்க்கலாம்…! என் அப்பா சும்மா தான் இருக்கார். வேணும்னா நீ அவரை கட்டிக்கோ.
“ஏய் நீ பேசுற வாய்க்கு சீக்கிரம் உன்னை என் கட்டிலுக்கு இரையாக்கலை என் பேரு மருது இல்லடி” என காலரை தூக்கி விட பதிலுக்கு செம்பருத்தி பேச வருவதற்குள் “செம்பா” என அவளை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்து அவள் முன் நின்றாள். அவளின் தோழியும், அத்தை மகளுமான கோகிலா.
“நீ ஏன் இப்படி ஓடி வந்து நிற்கிற…? மாட்டை தானே உன்னை பார்த்துக்க சொன்னேன்” என அவளை பார்த்தபடியே செம்பா கேட்க.
ஒரு எருமை இந்த பக்கம் வர்றதை பார்த்தேன். மழையும் வந்ததா அப்போ நீ கண்டிப்பாக அந்த எருமை இருக்கிற குடிசை பக்கம்தான் ஒதுங்கி ஆகணும். அதான் மாட்டை பக்கத்துல இருந்தவனங்ககிட்ட பார்த்துக்க சொல்லிட்டு உன்ன தேடி ஓடி வந்தேன். நான் நினைத்த மாதிரி அந்த எருமை இங்கே தான் வந்து இருக்கு” என்றால் மருதை பார்த்து முறைத்தபடி.
ஆமாடி..! அந்த எருமை ரொம்ப வாலாட்டுது.
வாலை ஒட்ட நறுக்கிய வேண்டியதுதானே செம்பா.
“என்னங்கடி இரண்டு பேரும் சேர்ந்து என்னையே கிண்டல் பண்றீங்களா, செம்பா நீ என் காலுல வந்து விழுகிற நேரம் சீக்கிரம் வரும்” என்றவன். செம்பருத்தியை முறைத்து விட்டு அந்த இடத்தை காலி செய்தான்.
கோகியும் செம்பாவின் தலையில் புல்லுக்கட்டை தூக்கி விட… மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தனர் இருவரும்.
வரும் வழியிலேயே மாமரத்தில் மாங்காய் பறித்து தின்றபடியே வந்து கொண்டிருந்த கோகிலா “செம்பா நா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள்.
“கேளு”
“நம்ம ஊர் பெரிய வீட்ல எங்க அம்மா வேலை பாக்குறாங்கல்ல”
“ம்ம்ம்”
“அன்னைக்கு கூட நம்ம எல்லாரும் இருக்கும்போது அம்மா தோட்டத்து வீட்டை சுத்தம் பண்ண போறதா சொன்னாங்களே”
“ம்ம்ம்”
அம்மாவுக்கு கால் வலி அதிகமாகிடுச்சி. உனக்கே தெரியும். அதனால என கோகிலா இழுக்க….
அதனால்…?
“நம்ம ரெண்டு பேரும் போய் சுத்தம் பண்ணிட்டு வந்துடுவோமா” என பாவமாக கேட்டாள்.
செம்பா கோகியை முறைக்க…
“செம்பா உன்கிட்ட கேட்டால் உனக்கு கோபம் வரும்னு எனக்கு தெரியும். ஆனால் எனக்கு வேற வழி தெரியலை. அம்மாவால் முன்னாடி மாதிரி வேலை செய்ய முடியலை. அது மட்டும் இல்லாமல் அந்த பெரிய வீட்டு ஆத்தாகிட்ட முன்பணம் வாங்கின காசையும் செலவு பண்ணிட்டாங்க. இன்னும் மூனு நாள்ல திருவிழாவுக்கு வெளியூர்ல இருந்து ஆட்கள் வாறாங்களாம்.
வெளியூர்ல இருந்தா…?
ஆமா செம்பா. பாலா அண்ணாவும் அவங்க ப்ரெண்ட்ஸ் வாறாங்களாம் என கோகி சொல்ல…
அதை கேட்டதும் ஒரு நொடி தன் நடையை நிறுத்தியவள் பின் நடந்தாள்.
அதான் அதுக்குள்ள வீட்டை சுத்தப்படுத்த சொல்றாங்க. வேற யாரையாவது அனுப்பினால் அம்மா கையில இருந்து தான் பணம் கொடுக்கணும். இதே நீயும் நானும் போனால் பிரச்சனை இல்லை. அந்த பணத்தை நமக்கு வச்சுக்கலாம். நம்ம வேலைக்கு சேருறதுக்கு துணி வேற வாங்கனும்ல, அந்த செலவுக்கு ஆகும் செம்பா. அதுமட்டும் இல்லாமல் அங்கே யாரும் உனக்கு பிடிக்காதவங்க வர மாட்டாங்க. அந்த தோட்டத்தை பார்க்கிறவர் மட்டும்தான் இருப்பார் போகலாமா ப்ளீஸ்டி” என கெஞ்சினாள் கோகி.
செம்பாவிடம் பதில் இல்லை. சில கசப்பான சம்பவங்கள் அவள் மனதிற்குள் ஓட மௌனமாகவே நடந்து கொண்டிருந்தாள்.
அவளின் மௌனம் கோகிலாவுக்கு புரிந்தது.
“ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியுது செம்பா” நாளைக்கு யோசிச்சு சொல்லு, இல்லன்னா வேற யாரையாவதுதான் அங்கே அனுப்பனும் அம்மா சொன்னாங்க.
“ம்ம்ம்” என்றாள்
அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசவில்லை வீட்டை நோக்கி நடந்தனர்.
மான்ஸ்டர்-3
written by Competition writers
அத்தியாயம்-3
மதுரையில் இருக்கும் பிரம்மாண்டமான வீடு அது.. பார்க்கவே அப்படியே செட்டிநாடு அரண்மனை போல் மிகப்பெரிய வீடு.. அந்த வீட்டிலேயே நிறைய தூண்களும், ஜன்னல்களும் தான் அதிகம்.. எப்படி பார்த்தாலும் அந்த வீட்டினை சுத்தம் செய்து அதனை புதிது போல பாதுகாக்கவே கிட்டத்தட்ட ஆறு, ஏழு பேருக்கும் மேலான ஆட்கள் தான் தேவைப்படும்.. அப்படிப்பட்ட வீடு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகத்தினால் கட்டப்பட்டது.
இதற்கு முன்னால் மாணிக்கவாசகம் மிகப்பெரிய வீடு வைத்திருந்தார் தான். ஆனால் இப்படிப்பட்ட மிகப்பெரிய வீடு அவர் வைத்திருந்தது இல்லை.. சுமார் எட்டு வருடங்களுக்கு பின் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு தான் சம்பாதித்த அனைத்து காசினையும் கொண்டுவந்து கட்டியதுதான் இல்லை அந்த வீடு.. அத்தனையும் அவரையே நம்பி தன் வாழ்க்கையினை கொடுத்து, தன் சொத்தையும் கொடுத்து இன்று போட்டோவில் கூட அந்த வீட்டினில் இருக்க முடியாமல் போன கோசலாவின் காசு தான் அந்த வீட்டில் முழுதும் கரைந்திருந்தது.
ஆனால் தற்போது அந்த வீட்டின் வாயில் பக்கமோ காஞ்சனா என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.. அது ஒன்று மாணிக்கவாசகத்தினால் பாசமாக வைக்கப்பட்ட பெயர் அல்ல காஞ்சனாவினால் “என் பேர் வைக்கல அப்புறம் நானும் என் பையனும் கிணத்துல வுழுந்து செத்துடுவோம்..”என்று பயமுறுத்தப்பட்டு வைக்கப்பட்ட பெயர் தான் அது.
மாணிக்கவாசகத்தை பற்றி தான் முதலிலேயே கூறி இருக்கின்றேனே தேவதையாக, அப்பாவியாக அவரை திருமணம் செய்த கோசலாவை விட்டுவிட்டு திருமணத்திற்கு முன்னாலே தன்னுடன் பழகிய காஞ்சனாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுவும் கோசலா உயிருடன் இருக்கும்போதே. மாணிக்கவாசகம் கோசலாவினை சொத்துக்காக திருமணம் செய்துக்கொண்டவரால் காஞ்சனாவை மறக்க முடியாமல் போனது. அதுவும் காஞ்சனா மறக்கவிடவில்லை.
அடிக்கடி மணிவாசகத்தின் கடைக்கு வந்து அவனை இம்சை செய்து அவனுடன் வெளிநாட்டிற்கு மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள். இங்கு கோசலையோ அவனையே கணவனாக தினம் தினம் உருகி கரைய பாவம் அவரின் வாழ்க்கை எப்போதோ சின்னாபின்னாமாகிவிட்டது என்பது தெரியாமலையே எட்டு வருடத்தை ஓட்டினாள் கோசலா.
மாணிக்கவாசகம் காஞ்சனாவுடன் ஜோடியாக வந்து இறங்குவதை பார்த்த கோசலாவிற்கு உலகமே தட்டாமலை சுற்றியது. அப்போதும் கூட ஏதோ தான் கனவு காண்கிறோமோ அல்லது தன் கணவனுடன் வந்து இறங்கும் பெண் அவருக்கு ஏதோ வகையில் சொந்தமாக இருக்குமோ என்று தான் அந்த பூப்போன்ற மனம் நம்பியது. ஆனால் அதனை ஒரடியாக ஆட்டம் காணுவது போல.. காஞ்சனாவின்.. “ஏங்க நம்ம குழந்தைய தூக்காம எங்க போறீங்க..”அதட்டலான பேச்சை கேட்டவுடன் கோசலாவிற்கு அப்படியே உலகம் ஸ்தம்பித்து போன்ற உணர்வு.
அதற்கு அடுத்ததாக காஞ்சனா அதிர்ந்து நின்ற கோசலாவின் முன்னால் வந்து நின்றவளோ.. “என்ன பாக்குற.. அவரு உனக்கும் மட்டும் தாலி கட்டல எனக்கும் தான் தாலி கட்டிருக்காரு..”தன் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து வெளியில் காட்டியவள்.. “அதே மாதிரி உனக்கு மட்டும் புள்ளைய குடுக்கல எனக்கும் தான்..”தன் கணவனின் கையில் உறங்கிக்கொண்டிருக்கும் தன் மகனை கைக்காட்ட.. அவ்வளவே கோசலாவோ அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
இதனை எல்லாம் கேட்ட ரமணிக்குமே ஆத்திரமும், அதிர்ச்சியும் ஒருங்கே தோன்ற.. “டேய் பாதகா என்னடா செஞ்ச..”மணிவாசகத்தின் சட்டை காலரை பிடித்து உலுக்க.. அவனோ அப்படியே சிலை போல நின்றான்..
“அட கைய எடுங்க அத்த..”காஞ்சனா உரிமையுடன் ரமணியின் கையை பிடிக்க.. ரமணியோ தீப்பட்டது போல தன் கையை உதறிக்கொண்டார். “நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.. ஏற்கனவே கல்யாணமானவன போய் இப்டி மயக்கி கட்டிக்கிட்டு, புள்ள பெத்துட்டு வந்துருக்க..”ஆத்திரமாக கத்திய ரமணிக்கோ நெஞ்சையே வலித்தது. அவரின் கண்கள் கண்ணீர் மறைக்க தன் அப்பாவி மருமகளை பார்க்க.. கோசலாவோ நெஞ்சில் கை வைத்தவாறே அசையாமல் மாணிக்கவாசகத்தை வெறித்தவாறே உட்கார்ந்தவள் தான் அசையவே இல்லை.
மையு வேகமாக அழுதவாறே தன் அன்னையின் அருகில் உட்கார்ந்தவளுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியாமல் தான் போனது. அவளின் கண்கள் அதிர்ச்சியுடன் நிலைக்குத்திய பார்வையுடன் உட்கார்ந்திருக்கும் தன் அன்னையிடமும், தன்னை போல ஒருவனை உரிமையுடன் தூக்கிக்கொண்டிருக்கும் தன் தந்தையையும் மாற்றி மாற்றி பார்த்தவளுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது.
“ம்மா..”அழுதவாறே தன் அன்னையின் மேலே சாய்ந்துக்கொண்டாள் மைத்ரேயி.
“அட அவர விடுங்க அத்த.. உங்களுக்கு எங்க போச்சி புத்தி. அதான் நாங்க காதலிக்கிறோம்னு தெரியும்ல. பேசாம எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம போயும் போயும் இவள கட்டிவச்சா புடிச்சா வாழமாட்டாறா..”என்றவளோ.. மையுவையே கேலி பார்வை பார்த்தவாறே.. “எனக்கு தெரிஞ்சி இவளையே அவரு உங்க தொல்லைக்காக தான் பெத்துருப்பாறாட்டுக்கு..”அதிகமாக பேசிவிட.. அதில் பாவம் கோசலாவின் உயிர் உடலிலிருந்து பிரிந்தே போனது. நிலைக்குத்திய பார்வையுடன் சரிந்தவளோ மண்ணில் புதைந்தே போனாள்.
ஆம் கோசலா காஞ்சனாவின் பேச்சிலும், தன் கணவனின் செயலிலும் மரிந்தே போனாள்.அன்றிலிருந்து யார் தலையெழுத்து மாறியதோ இல்லையோ கோசலாவின் வயிற்றில் பிறந்த மைத்துவின் வாழ்க்கை அடியோடு மாற்றப்பட்டு இருந்தது..
அந்த வீட்டின் உள்ளே சென்றாலே முதல் அறை மாணிக்கவாசகத்தின் அன்னை ரமணி உடையது தான். ரமணிக்கு கிட்டத்தட்ட இப்போது 80 வயது இருக்கும்.. அவர் வயதின் மூப்பும் வாழ்வில் அடிபட்ட சில அடிகளாலும் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.. அதில் அவருக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது என்னவோ கோசலாவின் இறப்பு தான்.. கோசலாவின் இறப்பு இன்று வரை அவரை பாடாய்படுத்தியது..
அருந்தினமும் புலம்பலாக ஜெபிப்பது “ஒன்னும் தெரியாத அம்மாஞ்சி பொண்ணா இருந்தவள கொண்டு வந்து இந்த பையக்கிட்ட ஒப்படைச்சு அவ வாழ்க்கையே நாசம் பண்ணிட்டேனே.. பாவி கொன்னேபுட்டேனே என் ராஜாத்திய.. இந்த பாவம் என்ன சும்மா விடுமா.. இந்த ஒன்னும் தெரியாத புள்ளைய எங்கிட்ட ஒப்படச்சிபோட்டு இப்படி போய் சேர்ந்துட்டியேடி கோசலா..”அன்று கதறிய ரமணியோ அந்த வேதனையே அவரை படுத்த படுக்கையில் கிடத்திவிட்டது.
ஆனால் ஒன்று மாணிக்கவாசகம் யாரை எப்படி நடத்தினாரோ இல்லையோ தனது அன்னையை இன்று வரை ஒழுங்காக பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அதிலேயே கொஞ்சம் மனம் சமாதானப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.. ஆனால் யாரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமோ அவளை அல்லவா நிற்கதியாக நிறுத்திவிட்டார்.. ஆம் அவரது மகள் மைத்ரேயியை தான் கூறுகின்றேன்..
ரமணி தனக்கு முன்னாள் உட்கார்ந்து இராமாயணத்தை படித்துக் காட்டிக் கொண்டிருக்கும் மைத்ரேயியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.. அவர் கண்கள் கலங்கி போய் அழகு பதுமையாக தன் முன்னால் உட்கார்ந்திருக்கும் மைத்துவை மறைக்க அதில் சட்டென்று தனது கண்களை துடைத்துக்கொண்டவரோ திரும்பவும் அவளை தான் அசராமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
தினமும் அந்த வயதான பெண்மணிக்கு இதுதான் வேலை இராமாயணத்தை படித்துக் கூற சொல்லும் சாக்கில் தன்னுடைய பேத்தியை அங்கம் அங்கமாக பார்த்து வருந்திக் கொள்வார். அப்படியே அழகில் கோசலாவை கொண்டே வளர்ந்து இருந்தாள் மைத்ரேயி. அப்படியே கோசலா போன்றே அப்பாவித்தனமும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டி தான் இருந்தது. அவருக்கு எங்கே அதனை வைத்து அவளுடைய சித்தி காஞ்சனா அவளை ஏதேனும் செய்து விடுவாளோ என்று நொடிக்கு ஒரு முறை அந்த வயதானவர் பயந்து கொண்டே தான் இருக்கிறார்.
காஞ்சனா அதற்கும் துணிந்தவள் தான். பின்னே இந்த வீட்டிற்குள் நுழைந்த வேகத்திற்கு மைத்துவின் அன்னை கோசலாவை பேசிய கொன்றவளாயிற்றே.. மைத்துவை மட்டும் விட்டு வைப்பாளா என்ன..
இதோ காலையிலையே மைத்துவை பார்த்து துதி பாட ஆரம்பித்துவிட்டாள் காஞ்சனா.. “ம்ம் போய் உட்கார்ந்துட்டியா அப்படியே உங்க பாட்டி கிட்டையே போய் உக்காந்துட்டியா.. காலையில எழுந்ததும் உனக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு அந்த கிழவிக்கு முன்னாடி உட்கார்ந்து அந்த ராமாயணத்தை படிக்கிறது தான் உனக்கு பெரிய வேலையா இருக்கு இல்ல.. வேற ஒன்னும் பண்றதுக்கு துப்பில்ல..” என்று காஞ்சனா அடுப்படியில் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவளின் ஏச்சினை கேட்ட மைத்துவோ கண்களில் கலக்கமும்,நெஞ்சில் படப்படப்புமாக காஞ்சனா பேசுவதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் தலையை மட்டும் நிமிர்த்துவதாக இல்லை..
காஞ்சனா முகத்தில் அக்னியில் பொறிந்த பாப்கானாக “காதுல வாங்காத மாதிரியே அப்படியே உட்கார்ந்துக்கோ.. உன்னை என்னைக்கு நான் எவனுக்காவது கட்டி கொடுத்து தலை முழுகுறானோ அன்னைக்கு தான் எனக்கும் நல்லது இந்த வீட்டுக்கும் நல்லது.. சனியன் சனியன் எனக்குனு வந்து வாய்க்கிது பாரு.. தெண்டம்..” காஞ்சனா படபடவென்று பாத்திரங்களை போட்டு உருட்டிக் கொண்டிருந்தாள். சொல்லபோனால் அங்கு அவளுக்கு எந்த வேலையும் இல்லை தான். அதான் அனைத்திற்கு ஆள் வைத்திருக்கின்றாளே.. சொல்லபோனால் மைத்துவுக்கும் கூட அங்கு எந்த வேலையுமில்லை. ஆனால் அவளை நிம்மதியாக உட்கார விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள் காஞ்சனா.
மைத்ரேயின் மீது காஞ்சனாவிற்கு எப்போதும் வெறுப்பு தான். அந்த ஊரிலையே மைத்ரேயி மட்டும் தான் மாணிக்கவாசகத்திற்கு முறையாக பிறந்தாள் என்ற வார்த்தையே காஞ்சனாவை பத்திரகாளி ஆக்கும். அதானே உண்மை. ஆனால் காஞ்சனாவோ அதனை பற்றி பேசிக்கொண்டு யார் அந்த வீட்டின் பக்கம் வந்தாலும் லேசாக விடுவதில்லை.. சட்டை கிழிய, சிண்டு அவிழ சண்டை முடித்து தான் காஞ்சனா அமைதியாவாள்.
ரமணி நன்றாக இருந்த காலகட்டத்தில் பேத்தியை மகாராணியாக பார்த்துக்கொண்டவரால் படுக்கையில் விழுந்ததற்கு பின்பு பார்த்துக்கொள்ள முடியவில்லை. வெளிவேலைக்கு ஆட்கள் இருந்தாலும் மைத்துவின் தலையில் தான் பண்ணையை சுத்தம் செய்வது, வீட்டினை சுத்தம் செய்வது, வாசலை கூட்டுவது தொடங்கி அனைத்து வெளிவேலையும் திணிக்கப்பட்டது.
ரமணி ஆரம்பத்தில் அதனை தட்டிக்கேட்டவருக்கு அதன் பின்பு உடல்நிலை காரணமாக முக்கால் வாசி நேரம் மயக்கத்திலையே கிடக்க வேண்டியதாகி போக அது காஞ்சனாவிற்கு வசதியாக போனது.
இப்போது காஞ்சனா திட்டுவதை கேட்ட ரமணிக்கோ மனம் வலித்து திக்திக்கென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது.. “பாவி மக இப்படி வாழ வேண்டிய பொண்ண என்னெல்லாம் பேச்சு பேசுறா பாரு..” என்று அந்த வயதானவரால் மனதில் நினைத்து வெப்பத்தான் முடிந்தது.. வயதின் காரணமாக அவருக்கு பேச்சுமே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தான் வருகிறது..
மைத்ரேயியும் நிமிர்ந்து தன்னுடைய பாட்டியை பார்த்தவள் கலக்கமான முகத்தை சட்டென்று மாற்றிக்கொண்டு “ஒன்னுமில்ல அப்பத்தா..”என்று மறுப்பாக தலையசைக்க.. அதில் வேதனை கொண்டவரின் கண்களில் இருந்தோ தாரைதாரையாக கண்ணீர் வடிந்தது..
“வேணாம் அப்பத்தா.. இதுக்கெல்லாம் எதுக்கு அழுகுற.. இதெல்லாம் சாதாரண விஷயம் தானே.. நான் தினமும் இதைக் கேட்டுட்டு தான இருக்கேன்… புதுசில்லையே..”கூறியவளுக்கோ மனம் கேட்டு கேட்டு புளித்த வார்த்தைகளாகி போனது.
அவள் தனது அப்பத்தாவின் கையைப் பிடித்து ஆறுதலாக வருடிக் கொண்டு இருக்க அவரோ பேச வராமல் திக்கி திணறிக் கொண்டிருந்தார்.. சுத்தமாக பேச்சே வராது என்றெல்லாம் இல்லை.. என்றாவது ஒன்று இரண்டு வார்த்தை பேசுவார் அவ்வளவுதான்..
“இவ்வளவு சொல்றேனே எங்கயாச்சும் அந்த இடத்தை விட்டு நகராலா பாத்தியா அவ..” என்று காஞ்சனா மறுபடியும் கத்திக்கொண்டே இருந்தார்..
“அட இப்ப என்ன காஞ்சனா உனக்கு…”அதட்டல் என்று கூற முடியாது அலுத்தவாறே கேட்டுக்கொண்டு அங்கு வந்தார் மாணிக்கவாசகம்.
“என்ன உனக்கா.. ஏங்க இவளுக்கு வயசு என்ன ஆகுது? வயசு 21 ஆகுது ஒரு டிகிரியே படிச்சு முடிச்சிட்டா.. அப்ப இன்னும் இவள வீட்ல வச்சிட்டு என்ன பண்ண போறோம்.. சீக்கிரமா ஒரு ஏதோ ஒரு “குடிகாரனோ, இல்ல சீர்கெட்டவனோ..”என்ற வார்த்தையை மனதில் பாடிக்கொண்டவள்.. “மாப்ள பார்த்து இவள தள்ளி விடுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா..”காஞ்சனா தன்னுடைய கணவரிடம் வசைப்பாடிக்கொண்டே இருந்தார்.
மாணிக்கவாசகம் சட்டென்று தனது தலையில் கை வைத்துக் கொண்டவர்.. “கொஞ்சம் அமைதியா இரு..எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது இப்பதான் அவளுக்கு 21 வயசு ஆகுது இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்..” என்று பொறுப்பான தந்தையாக அவர் கேள்வி கேட்டார்.. இதை பார்த்து யாரும் பொறுப்பான தந்தை என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.. அவருக்கு எங்கே தன்னுடைய பணம் எல்லாம் மகளின் திருமணத்திற்கு செலவாகி விடுமோ என்ற ஒரு பயம்..
ம்ம்.. இருக்கத்தான் செய்தது எப்போதும் மாணிக்கவாசகம் என்றால் சுயநலவாதி என்று தான் அர்த்தம்..ரமணி இதையெல்லாம் கேட்டுக்கொண்டு படுக்கையில் படித்திருந்தவருக்கு தன்னுடைய மகன் எதை நினைத்து இப்படி கூறுகிறான் என்று தெரியாதா என்ன.. ஆனால் அந்த வயது மூத்தவருக்கோ எப்படியாவது தன்னுடைய பேத்தியை ஒரு நல்லவன் கையிலோ நல்ல குடும்பத்திலோ ஒப்படைத்துவிட வேண்டும்.. அதுவும் தான் இறப்பதற்கு முன்னால் அவளுக்கு நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று தினமும் அதுவரை தன்னை கூப்பிட்டுக்கொள்ள வேண்டாம் என்று தினம் தன்னுடைய கடவுளிடம் வேண்டிக் கொண்டே தான் இருக்கிறார் அந்த வயதானவர்.
“ஆமா நீங்க இப்படியே சொல்லுங்க அவ என்னடானா முத டிகிரிய படிக்கிறேன்னு காசு செலவு பண்ண வச்சா… இப்போ இரண்டாவது டிகிரி படிக்கப் போறேன்னு வந்து நிக்கிறா.. அடுத்தது மூன்றாவது, நாலாவது படிச்சுக்கிட்டே இருப்பாளா.. இவளுக்கே எல்லாமே பண்ணிட்டா அப்புறம் நமக்குன்னு ஒரு பையன் இருக்கானே அவனுக்கு என்ன பண்ணுவீங்க..”அலுத்தவாறே காஞ்சனா கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள்..
காஞ்சனாவின் மகன் ராகவ் அவன் ஒரு சோம்பேறி.. படிப்பு அறவே அவன் மண்டையில் ஏறவே இல்லை.. எவ்வளவுதான் காஞ்சனா கடினப்பட்டு அவனை கல்லூரி வரை அழைத்து சென்றாலும் அனைத்திலும் அரியர், ஃபெயில் ஆகிக்கொண்டே தான் வந்து கொண்டிருந்தான்.இந்நிலையில் ஒழுங்காக படிக்காத அவனுக்கு நிறைய காசினை கொட்டிக்கொடுத்து இன்ஜினியரிங் சீட்டு வாங்கி கொடுத்து படிக்க வைத்தாள் அவனது அன்னை..
இப்போது அவன் மூன்று வருடத்திலேயே கிட்டத்தட்ட 20 அரியருக்கு மேல் வைத்துக் கொண்டுதான் இருந்தான்.. இந்த வருடம் முடிவாக சொல்லிவிட்டான். நான் தான் கல்லூரி செல்லப் போவதே இல்லை என்று காஞ்சனா “எதுக்குடா இப்படி எல்லாம் பண்ற..” என்று அவன் தலையில் கொட்டியவாறு கேட்டதற்கோ.. தன் அன்னையை முறைத்தவாறு “ஐயோ… அம்மா.. இனி நான் காலேஜுக்கு போக மாட்டேன் அவ்வளவுதான்.. என்ன போட்டு இம்சை பண்ணாதீங்க.. எனக்கு சுத்தமா படிப்பு வரல.. நான் அப்பாவோட தொழில பாத்துக்குறேன்.. காலேஜ் போன்னு இம்ச பண்ணுன அப்புறம் எங்கையாச்சும் ஓடிடுவேன்..” என்று மிரட்டலாக கூறியவனோ ஒரு தொழிலை தான் பார்த்துக் கொண்டானா அதுவுமில்லை..
ஏதோ வேண்டியது வேண்டாதது போல ஒரு மில் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டவன் சும்மாக இல்லாமல் ஆன்லைனில் பப்ஜி விளையாடுகிறேன் என்று தன்னுடைய தந்தையின் காசை எல்லாம் கரியாக்கிக் கொண்டுதான் இருக்கிறான்.. கிட்டத்தட்ட அவனால் மட்டுமே அப்பது, அறுபது லட்சத்திற்கு மேல் நட்டமாய் கொண்டே தான் இருந்தது.. முதலில் இதைப்பற்றி தெரியாத மாணிக்கவாசகரோ மகன் கேட்கும் போதெல்லாம் ஐந்து லட்சம் பத்து லட்சம் என்று தூக்கிக் கொண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் காஞ்சனாவை ஒரு நாள் பிடித்துவிட்டார்.
“என்னடி நீ பாட்டுக்கு காச எடுத்து எடுத்து கொடுத்துட்டு இருக்க.. எதுக்காக கொடுக்கிற அதுவும் நூறு, ஐநூறு ரூபாயா இருந்தா பரவால்ல.. நீ பாட்டுக்கு இரண்டு லட்சம். மூன்று லட்சம், நாலு லட்சம்னு எடுத்து கொடுத்துக்கிட்டே இருக்க.. அதுவும் எத்தனை தடவை கொடுத்திருக்க.. பத்து, பதினைஞ்சி தடவை கொடுத்திருக்க.. என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல..”எகிறி கொண்டு வந்தவரை காஞ்சனாவோ..
“அட சும்மா கத்துறது நிறுத்துங்க நமக்கு இருக்கிறது ஒரே புள்ள.. இவனுக்கு அப்புறம் ஒரு புள்ள பொறக்காமலே போயிடுச்சு.. நம்ம சேர்த்து வச்சிருக்கிற சொத்து எல்லாம் அவனுக்கு தானே போய் சேரனும்.. இல்ல உங்க மூத்த தாரத்தோட பொண்ணுக்கு எதுவும் கொடுக்க போறதா மனசுல கோட்டை கட்டிக்கிட்டு இருக்கீங்களா..” என்று எரிச்சலாக பார்த்தவாறு கேட்டாள்.
அதனைக் கேட்ட மாணிக்கத்திற்கு எரிச்சலாக வந்தது.. “அடியேய் உன் மனசுல கைவைத்து சொல்லு அவளுக்கு ஏதாவது நான் செய்றனாடி.. அவ பாட்டுக்கு இந்த வீட்டு மூலையில் தான் கிடக்கா.. உனக்கும் உன் பையனுக்கும் தான எல்லாத்தையும் சம்பாரிச்சு கொண்டு வந்து கொட்டிட்டு இருக்கேன்..”ஆத்திரத்தில் கத்தியவர்.. “ம்ச் இப்படியே அவன் பாட்டுக்கு பொறுப்பில்லாம சம்பாதிக்கிற காசெல்லாம் தூக்கி தூக்கி கொடுத்துட்டு இருந்தா நாளைக்கி நாம நடு ரோட்டுல நிக்க வேண்டியது தான்..” என்று எகிற..
“ம்ச் ஆமா ஆமா அப்படியே நீங்க சம்பாதிச்ச காசு, சொத்து மாதிரி கத்தாதீங்க உங்க மூத்த தாரத்து பொண்டாட்டி கிட்ட இருந்து வந்தது தானே..” காஞ்சனா கோசலாவை ஒரு நாளிற்கு ஒரு முறையாவது இழுக்காமல் இல்லை..
அதில் தலையில் அடித்திக்கொண்டவறோ.. “அவளால கொண்டு வந்த காசுனாலும் அத பல மடங்கு ஆக்குனவன் நான் தான்டி…”ஆத்திரத்தில் கத்தியவரோ “இங்க பாரு இதுதான் முதவும், கடைசியும்.. இனிமே அவன் கேட்கிறான்னு ஏதாவது காசு கொடுத்தன்னு தெரிஞ்சுச்சு வச்சுக்கோ அவ்வளவுதான் சொல்லிட்டேன்..” என்று கத்தியவறை எகத்தாளமாக பார்த்த காஞ்சனா…
“அட இது போனா என்ன அதான் உங்க பொண்ணு பேர்ல பாதி சொத்து இருக்கே..”பாவம் மைத்ரேயின் மீது எழுதி வைத்த சொத்தும் காஞ்சனாவின் கண்களை உறுத்தியது..
அதில் தான் மாணிக்கவாசகத்தின் பல நாள் கண்களும் என்று கூட சொல்லலாம்.. அதற்கு மேலும் காஞ்சனாவை அதட்டல் போடவே முடியவில்லை. ஆரம்பத்தில் காதலிக்கும் போது இனிப்பாக தெரிந்த காஞ்சனா இப்போது புளிப்பாக தெரிகிறாள்.. இதற்கு அவருக்கு கோசலாவே எவ்வளவோ தேவைலாம் என்று தோன்றி விட்டது.. கோசலா இவர் கூறியதற்கு ஒரு பதில் எதிர்த்து கூட பேசிய ஆள் கிடையாது.. அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவளை காஞ்சனாவுடன் இப்போது எல்லாம் அதிகமாக ஒப்பிட்டு பார்க்கிறார்.. ஆனால் ஒப்பிட்டு பார்த்து என்ன பிரயோஜனம் கோசலாக தன் உயிரை எப்போதோ விட்டுவிட்டாளே..
“இங்க பாருங்க நமக்கு இருக்கிறது ஒரே புள்ள தான் அவனும் போய் சேர்ந்துட்டான் வச்சுக்கோங்க அப்புறம் என்ன நீங்க உயிரோடயே பாக்க முடியாது என்னையே அனுப்பி வச்சிட்டு நீங்க தாராளமா சந்தோசமா இருக்கலாம்ன்னு நினைச்சுக்காதீங்க அதுக்கும் நான் விடமாட்டேன்..” என்று காஞ்சனா பொடி வைத்து பேச மாணிக்கவாசத்துக்கு காஞ்சனாவை பற்றி நன்றாக தெரியும்.. அவள் எவ்வளவு தூரம் இறங்குவாள் என்றும் அவர் நன்றாக உணர்ந்து கொண்டவராயிற்றே..
அதனால் அமைதியாக வாயை மூடிக்கொண்டுதான் சுற்ற வேண்டியதாக இருந்தது. இப்போது அதை நினைத்து பார்த்த மாணிக்கவாசகத்திற்கும் ஆறு மாதமாக நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருந்தது.. அதற்கு காரணமும் உண்டு வேறு யாரு அவருடைய மகன் ராகவும், அவரது மனைவி காஞ்சனாவும் தான்.. காசு எல்லாம் மகன் கரியாக்கிக் கொண்டே இருக்க இப்போது இல்லாத பிரச்சனையாக சில இடப் பிரச்சினை, நிலப் பிரச்சனை வேறு அவரை பாடாய்படுத்தியது..
அதெல்லாம் நினைக்க நினைக்க அவருக்கு கொஞ்சம் பயம் வேறு நெஞ்சைக் கவ்வ.. அதற்கெல்லாம் ஒரே தீர்வு தன்னுடைய மகள் தான் என்று தன்னுடைய அன்னையின் அருகில் உட்கார்ந்து இராமாயணத்தை படித்துக் கொண்டிருக்கும் மைத்துவின் மீது யோசனையாக விழுந்தது அவரின் பார்வை..
“ந்தா போதும் நீ உங்க ஆத்தாவுக்கு படிச்சு காட்டுனதெல்லாம்.. வந்து வேலைய பாரு..”காஞ்சனா கத்தியவாறே உள்ளே போக.. மையுவும் ராமாயண புத்தகத்தை அப்படியே மூடி வைத்தவாறு எழுந்தவள் தன்னுடைய அப்பத்தாவிற்கு தேவையான தண்ணீரை கொடுத்துவிட்டு அடுப்படி பக்கம் சென்று விட்டாள்.. என்னதான் அந்த வீட்டில் 10 பேர் சமையல் வேலையும் வீட்டு வேலையும் பார்ப்பதற்கு இருந்தாலும் காஞ்சனாவிற்கு மைத்துவை வேலை வாங்காமல் அந்நாள் ஓடாது.. இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க அதன் பிறகு மைத்துவின் நாட்கள் அவளை கோரமாக தாக்கியது என்பது உண்மை..
(கேப்பச்சினோ..)
என் கண்ணாடி பூவே நீதான்டி-3
written by Competition writers
அத்தியாயம்-3
ரகோத் தன் தோள் மீது கையினை போட்டவாறே நிற்பவனை திரும்பி முறைக்க.. ரஞ்சித்தோ தன் கடுமையான இதழ்களை அழகாக விரித்து சிரித்தவனோ.. “வாட் வினை.. உன் முகம் ஏன் இப்டி அஷ்ட கோணலா இருக்கு..”கேலி பேசியவனை இன்னும் ஏற இறங்க பார்த்தவாறே முறைத்த ரகோத்தோ..
“என் மூஞ்சே இப்டிதான்டா இப்போ அதுக்கு என்ன மேன்..”குரல் கடுமையாகவும் இல்லை அவன் முகத்திலும் உண்மையான கோவமில்லை.
அதில் இன்னும் இதழ் விரிய புன்னகைத்த ரஞ்சித்தோ.. “அப்டியா அப்போ இந்த உலகத்துல இருக்குறவங்க கண்ணெல்லாம் காய்ச்சி போய்ட்டு போலறுக்கே.. பின்ன உன்னை எல்லாம் போய் அமெஸிங் ஸ்டார்னு கதை கட்டிருக்கானுங்க..”என்றவனின் குரலில் அப்பட்டமான நக்கல் வழிந்தது.
ரகோத் வேகமாக தன் தோளில் சாய்ந்திருந்த ரஞ்சித்தை தட்டிவிட்டவனோ.. “அடேய் கோணவாயா என்னை என்ன வேணா சொல்லு ஆனா என் ஃபேன்ஸ ஏதாவது சொன்ன.. அப்புறம் உன் கையில இருக்குற கன்ன புடுங்கி உன் வாயிலையே சொருவிடுவேன்..”துள்ளிக்குதித்தவனை மேலும் நக்கலாகவே பார்த்தான் ரஞ்சித்.
“டேட் இவனுக்கு பாருங்களேன் ஒரு சிஎம்மோட பையன்கிட்ட பேசுறோம்னு பயம் கூட இல்ல.. எப்டி டேட் இவன போய் வேலைக்கு சேர்த்தீங்க.. அதும் நாலு வருஷமா இவன கூட வச்சிட்டு என்ன டார்ச்சர் செய்றீங்க..”குரலில் ஒருவித சிலிர்ப்பு தான் இருந்ததுவோ..
அதுவரை ரகோத்தும், ரஞ்சித்தும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் காலை வாரிக்கொள்வதை ரசனையாக பார்த்துக்கொண்டிருந்த விக்ரமனுக்கோ இன்னும் இருவரையும் அதே பத்து வயதில் பார்ப்பது போல தான் இருந்தது..“ஹாஹா கண்ணா அவன வேலைக்கு சேர்த்ததே நீதான்டா.. அதும் என்ன சொல்லி சேர்த்தனு மறந்து போச்சா..”என்றவர் ரஞ்சித்தை பார்த்து கண்களை காட்ட..
“ஹான் ஹான் மறக்க முடியுமா அத..”என்ற ரஞ்சித்தும்.. “எப்டி எப்டி.. என் டேட்ட உன்ன நம்பிதான்டா தரேன்.. நீதான் அவருக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாம பாத்துக்கனும்.. அவர் என்னோட உயிருனு தெரியும்ல..”கோரஸாக விக்ரமனும், ரஞ்சித்தும் சிரித்தவாறே கூறினார்கள்.
அவர்கள் கேலியை பார்த்த ரகோத்தோ இருவரையும் இடுப்பில் கை வைத்தவாறே முறைத்தவன்.. “என்ன ரெண்டு பேருக்கும் துளிர் விட்டுப்போச்சா..”என்றவனுக்கு ரஞ்சித்துடனான காலங்கள் கண்களில் வந்து விரிந்தது.
ரஞ்சித் வேறு யாருமில்லை ரகோத்துடனான இருபத்தி ஐந்து வருட நண்பன் தான் அவன். ஆம் ரகோத்தினை விக்ரமன் தன்னுடைய அரசியல் வேலைகளுக்காக ஊட்டி கான்வென்டில் கொண்டு போய் சேர்க்க.. அங்கு ரகோத்துக்கு கிடைத்த நண்பன் தான் ரஞ்சித். என்ன ரகோத் விடுதியில் இருப்பான்.. ஆனால் ரஞ்சித் டே ஸ்காலர். ஆனால் விடுமுறையின் போது ரஞ்சித்தும், ரகோத்தும் பெரும்பாலும் ஒன்றாக தான் இருப்பார்கள்.. எப்படி என்றால் விக்ரமன் பெரும்பாலும் ரகோத்தினை பார்க்கவென்று விடுமுறைக்கு ஊட்டி வர போவதெற்கென்று ஒரு வீட்டினை வாங்கி வைத்திருந்தார். அங்கு தான் விடுமுறை நாட்களில் இருவரும் பார்த்துக்கொள்வார்கள்.
ஏன் அவர்கள் பழகியது, விளையாடியது அனைத்தும் அங்கு தான். ரஞ்சித் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரகோத்துடன் படித்தவன் அதன் பிறகு அவனுக்கு மிகவும் பிடித்த வேலையான ராணுவ கல்லூரிக்கு சென்றுவிட்டான். படித்துக்கொண்டே ராணுவத்தில் சேர்ந்துவிட்டான்.. ஆம் ரஞ்சித்திற்கு ராணுவமென்றால் உயிர். கிட்டதட்ட ஏழு வருடம் ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றினான்.
ரகோத்தோ சிறுவயதிலிருந்து அவனுக்கு சினிமா என்றால் கொள்ளை பிரியம் அதனால் அவனோ பள்ளி முடித்து விசுவல் கம்யூனிகேஷன் எடுத்து படித்தவன் மேற்கொண்டு நடிப்பினை பற்றி கற்றிக்கொள்ள அமெரிக்கா சென்றுவிட்டான்.
என்னதான் இருவரும் இருவேறு இடங்களுக்கு பிரிந்தாலும் அவர்களின் நட்பு மட்டும் பிரியவே இல்லை.. எப்போது பார்த்துக்கொள்வார்களோ, பேசிக்கொள்வார்களோ ஆனால் கண்டிப்பாக ஒருவரை ஒருவர் மறக்கமட்டுமில்லை.
கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஓட.. அதன் பிறகு தான் இருவரும் மறுபடி ஒன்றுச்சேர வாய்ப்பு கிடைத்தது அதுவும் விக்ரமனால். ஆம் விக்ரமன் முதலமைச்சராக களமிறங்கிய போது அவர் மீது சில தாக்குதல்கள் நடந்தது. அப்போது அவரின் பாதுகாப்பை பற்றி கவலைக்கொண்ட ரகோத் நேராக போய் நின்றது ரஞ்சித்திடம் தான்.
“ஐ க்நோ ரஞ்சித் உனக்கு நாட்ட பாதுகாக்குறதுல தான் விருப்பம்னு எனக்கு தெரியும்.. ஆனா ஒரு பிள்ளையா என் அப்பாவோட பாதுகாப்ப பத்தி கவலைப்படுறதுலையும், அதுக்கு தேவையான திட்டங்கள போடுறதுலையும் எனக்கும் கடமை இருக்குன்னும் தெரியும்.. ஆனாலும் உன்ன விட என் அப்பாவுக்கு யாராலையும் செக்யூரிட்டி குடுக்க முடியாது. சோ உன்ன அப்பாவோட ப்ளாக் கேட் டீமோட ஹெட்டா போட சொல்லலாம்னு இருக்கேன்..”ஆர்வத்துடன் தன் நண்பனின் முகம் பார்க்க.. ரஞ்சித்தோ ஏதோ யோசனையிலையே இருந்தான்.
“ஹேய் வாட் ரஞ்சித்..”அவனை புரியாமல் பார்த்தான் ரகோத்.
“நத்தீங் வினை.. ஏற்கனவே நான் ஆர்மிக்கு வந்து ஏழு வருஷம் ஓடிட்டு.. இப்போ நான் ரிட்டேர் ஆகிட்டா அது சரி வராதுனு தோணுது..”என்றவனுக்கோ வேறு ஏதோ யோசனையில் முகம் பளப்பளக்க.. “ஹேய் இன்னொரு யோசனை இருக்கு வினை..”என்றவனோ.. “பேசாம அப்பாவுக்கு பாதுகாப்புக்கு ஆர்மில இருந்து ஆள் வேணும்னு மேல் இடத்துல கேளுங்க.. அப்புறம் நானே வந்து ஜாயின் பண்ணிடுறேன்..”என்றவனின் யோசனையில் வினையனுக்கு நிம்மதியுடன் விழிகள் மூடி நீண்ட பெருமூச்சி தான் வந்தது.
“ஸ்யூர் டா..”என்றவனோ அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தன் தந்தைக்கு ரஞ்சித்தை பூனைப்படை ஹெட்டாக மாற்றினான்.
அன்றிலிருந்து இன்றுவரை விக்ரமனுக்கு ரஞ்சித் தான் அனைத்துமாக இருந்து வருகின்றான்.
“எதுக்குடா இப்போ கோவப்படுற..”கேட்டவாறே ரஞ்சித் அவன் தோளில் கை வைத்தான்.
“ம்ச் கோவப்படாம என்னடா செய்றது.. அப்பாவுக்கு பாதுகாப்பு தர தானே உன்ன இங்க கொண்டு வந்து போட்டேன்.. நீ என்னனா அப்பாவுக்கு இப்டி ஆக்ஸிடென்ட் ஆகுற மாதிரி செஞ்சி வச்சிருக்க…”கத்தலாக கத்த.
“ம்ச் கண்ணா இதுல ரஞ்சித் தப்பு எதுவும் இல்லடா..”விக்ரமனும் அவனை சமாதானப்படுத்துவது போல இழுக்க..
“பின்ன யார் மேலப்பா தப்பு.. நீங்க எங்க போனாலும் இவன கூடவே வர போக சொன்னேன் வர சொன்னேன்ல அப்புறம் ஏன் இவன் உங்க கூட வரல. இவன் மட்டும் உங்க கூட வந்துருந்தா இப்டி ஏதாவது ஆபத்து வந்துருக்குமா..”எகுறியவனோ.. ரஞ்சித்தை முறைக்க அவனுக்கோ கொஞ்சமும் இவன் மேல் கோவமே வரவில்லை.. முகத்தில் கடுமையையும் மீறி ஒருவித புன்னகைதான் இருந்தது.
“ம்ச் அதான் நான் சொல்றேன்லடா.. அவன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் தான் அம்மாவோட சமாதிக்கு போகனும்னு தனியா போனேன்.. அப்போதான் இப்டி ஆகிட்டுடா கண்ணா.. அதுவும் இது ஜெஸ்ட் ஆக்ஸிடென்ட் தான்.. யாரும் ப்ளான்லாம் செய்யலடா..”விக்ரமன் அமைதியான குரலில் கூறினார். அவருக்கு தான் தன்னுடைய மகனின் கோவம் பற்றி தெரியுமே.. ஏற்கனவே தனக்கு சிறு காயப்பட்டால் கூட அவனால் தாங்க முடியாது என்ற நிலையில் இன்று தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து இருக்கின்றது என்று தெரிந்தால் அவன் அமைதியாக இருப்பானா.
ஆம் அவருக்கு ஏற்பட்டது விபத்தில்லை அது திட்டமிட்ட தாக்குதல் தான். அது ரஞ்சித்திற்கும் நன்றாக தெரியும்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் ரகோத்தின் அன்னை அபிராமியின் இறந்தநாளுக்கு அவரின் சமாதிக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்துவிட்டு தன் மனைவியிடம் ஆசையாக பேசிவிட்டு வருவார். அதுவும் தனியாக தான் செல்வார். ரஞ்சித் என்னதான் அவருடன் வருகிறேன் என்று போராடினாலும் அவரோ அவனை அங்கு மட்டும் அனுமதிப்பதே இல்லை.
“டேய் நான் நிம்மதியா, தனியா, சந்தோஷமா இருக்குறது என் அபி சமாதிக்கு பக்கத்துல தான்டா.. அவகிட்ட அதிகமா மனச விட்டு பேசனும் அந்த ஃபீல்லையே நான் சந்தோஷமா வீட்டுக்கு வரனும்.. அதுக்கு யாரும் என் பக்கத்துல இருக்க கூடாது..”என்றவர் இன்றும் அப்படிதான் சென்றிருந்தார். ஆனால் வரும் வழியிலையே அவரின் கார் ப்ரேக் பிடிக்காமல் போக.. அதில் அதிர்ந்தவரோ காரினை எவ்வளவு வேகத்தை குறைக்க முடியுமோ குறைத்தவர் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் ஒன்றின் மீது நிறுத்தி பெரிய விபத்திலிருந்து தடுத்துவிட்டார்.
இப்போது ஹாஸ்பிட்டலில் இருப்பவரை முறைத்தபடி நின்றான் ரகோத். “ம்ச் டேட் ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ.. நீங்க தனியா அம்மாவ பாக்க போகாதீங்கன்னு.. அம்மா இறந்த நாளுனு எனக்கும் தெரியும் அங்க நீங்க போவீங்கன்னும் தெரியும்.. ஆனா ரஞ்சித் இல்லாம நீங்க எங்கையும் போக கூடாதுனு சொல்லிருக்கறப்போ இப்டி போனா நான் என்ன செய்றது..”என்று அவரை பலமாக முறைத்தவனோ.. “இதுக்கு ஒரே சொல்யூஷன் தான் இருக்கு டேட்.. ஒன்னு உங்க அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வச்சிடு.. இல்லையா இப்டி தனியா போறத நிப்பாட்டு..”மூச்சிறைக்க கத்தியவனை பார்த்து விக்ரமனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
விக்ரமன் தன் பார்வையை திருப்பி ரஞ்சித்தை பாவமாக பார்க்க.. இம்மாதிரியான சூழ்நிலையில் அவன் தான் அவருக்கு உதவி செய்வான்.. அதுவும் மிகவும் டஃப்பான டாஸ்கான ரகோத்தை சமாதானப்படுத்தி.
“ம்ச் சரி விடுடா.. அதான் அப்பாவுக்கு ஒன்னும் ஆகலையே.. இது அப்பா சொல்ற மாதிரி ஜெஸ்ட் ஆக்ஸிடென்ட் தான்..”என்றவனின் பார்வையோ விக்ரமனை நன்றாக குற்றம் சாட்டியது. பின்னே அவர் தானே அவனை இவ்வாறு பொய் கூற சொன்னார்.
“நோ அப்பா.. வினைகிட்ட என்னால பொய் சொல்ல முடியாது. அப்புறம் நான் பொய் சொன்னேனு அவனுக்கு தெரிஞ்சிது என்ன கொலை கூட செய்ய தயங்கமாட்டான்.. என்ன பொய் சொல்ல வைக்காதீங்க..”என்றவனுக்கும் தன் நண்பனின் அப்பா பாசம் மற்றும் அதனால் ஏற்படும் கோவம் ஆபத்தானது என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
“நோ ரஞ்சித் இது என் மேல சத்தியம் எனக்கு இப்டி ஒரு மர்டர் ப்ளான் செஞ்சாங்கனு கண்ணாக்கு தெரிஞ்சா அவன் கொலைக்காரனா மாறிடுவான்.. இல்லனா என்ன அரசியல விட்டு வெளில வர சொல்லுவான் இதுல எது நடந்தாலும் நான் சாகுறது உறுதிடா.. சோ ப்ளீஸ் இந்த உண்மைய அவங்கிட்ட சொல்லாத..”பலவாறு அவனிடம் கெஞ்சி தான் இந்த பொய்யையே அவர் ரஞ்சித்தை கூற வைத்திருந்தார்.
அதனையே இப்போது ரஞ்சித், வினையனிடம் கூற. யார் கூறினாலும் நம்பிருக்காதவன் தன் உயிர் தோழன் கூறுவதை கண்டிப்பாக நம்புவான்.அது தெரிந்து தான் விக்ரமனும் ரஞ்சித்திடம் வினையை சமாளிக்க கூறியிருந்தார். அதுப்போலவே வினையனும் சமாதானம் அடைத்தவன்..
“இனி ஒருமுறை இப்டி ஆச்சினா அப்புறம் நீங்க அரசியலுக்கு முழுக்கு போட வேண்டியது தான்.. புரிஞ்சி நடந்துக்கோங்க..”என்று தன் தந்தைக்கு ஏற்ற மகனாக அதட்டியவன்.. “நான் போய் டாக்டர பாத்துட்டு வரேன்..”என்றவனாக தன் தந்தையின் நலனை பற்றி விசாரிக்க சென்றுவிட.. ரஞ்சித்தோ விக்ரமனை முறைத்தவாறே நின்றான்.
“அவனுக்கு மட்டும் நான் பொய் சொன்னது தெரிஞ்சா அவ்ளோ தான்ப்பா…”புலம்பலாக கூறியவாறே அவருக்கு அருகில் உட்கார்ந்த ரஞ்சித்தை பார்க்க அவருக்கும் பாவமாக தான் இருந்தது.
“எனக்கு புரிதுடா ரஞ்சித்.. ஆனா இந்த அரசியல் வாழ்க்கை என் மகன மாதிரி என் ரெத்தத்துல ஊறிப்போச்சிடா.. அத இனி என்னால விட முடியாது.. இந்த அரசியல்ல சேர்ந்து கோடி கோடியா சேர்த்து வைக்கிறது என்னோட திட்டமில்ல.. மக்களுக்கு ஆயிரம் நல்லது செய்யனும்.. அதுக்கு இந்த பதவி அவசியம்.. அதுக்கு தான் நான் போராடுறேன்..”என்றவரின் கூற்றும் உண்மை தான் என்று ரஞ்சித்திற்கு நன்றாக தெரியும்.. மற்ற அரசியல்வாதிகள் போல ஊர் ஊராக வீடோ, பங்களாவோ கட்டி வைத்தவரில்லை இந்த விக்ரமன்.
விக்ரமன் பிறந்ததே கோடீஸ்வர குடும்பத்தில் தான். அதில் பிறந்துமே அவர் மிகவும் எளிமையானவர் தான். அதனாலே மக்கள் அவரை நம்பி ஓட்டினை போட்டு இப்போது நான்காவது முறையாக முதல்வராக இருக்கின்றார்.
அந்த பொய் தான் வினையன் ரகோத்மனின் வாழ்க்கையை மட்டுமல்ல.. ரஞ்சித்தின் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது என்று யாருக்குமே தெரியாமல் போனது தான் பரிதாபம்.
(நீதான்டி..)
நீ எந்தன் மோக மழையடி
written by Competition writers
பாகம் – 3
மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க..
குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார்.
பிறகு, யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்துச் செல்ல அனைவருக்கும் யாழினியை பிடித்துவிட்டது என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.
கடைசியாக ருத்ரன் அருகில் சென்று காஃபி கோப்பையை நீட்ட, “தேங்க்ஸ்” என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவன் குரலில் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த யாழினிக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.
யாழினி, ‘இவனா…..’ என்று நினைத்து கண்களை அகல விரித்து பார்க்க அதிர்ந்து போய் நின்றாள்.
அவள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்த மயில் சிரித்துக் கொண்டே அவள் அருகில் சென்று யாழினியை பின் அழைத்து வந்து நிற்க வைத்தாள்.
சாந்தி, “பொண்ணுக்கும் என் பையனை ரொம்ப பிடிச்சு போச்சுன்னு தான் நினைக்கிறேன்” என்றார் சிரித்துக் கொண்டே.
அதில் தன்னிலை அடைந்த யாழினி திரு திரு என விழித்துக் கொண்டே நிற்க.
குமுதம், “அது எப்படிங்க மாப்பிள்ளையை பிடிக்காமல் போகும்… அவளோட அண்ணன் எந்த ஒரு விஷயம் பண்ணாலும் அது கட்டாயம் அவளுக்கு பிடித்து விடும் சின்ன வயசுல இருந்தே அவ அப்படித்தான்.. அண்ணன் செல்லம்” என்றார்.
சடுதியில் ருத்ரன் முகம் இருகிப் போனது… கோபத்தில் கண்கள் கோபப் பழம் போல் சிவக்க யாழினியை பார்த்து முறைத்தான்.
அதை அறியாத மயில், “பெரியவங்க நீங்களே பேசிக்கிட்டு இருந்தா எப்படி பொன்னையும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேச அனுப்பி வைக்கலாமே” என்றாள் அனைவர் முன்னிலையிலும்.
குமுதம், “வாய மூடு…. எல்லார் முன்னாடியும் நீ என்ன பேசிக்கிட்டு இருக்க… பெரியவங்க எங்களுக்கு தெரியாதா எப்போ என்ன பண்ணனும் என்று” என்றார்.
சாந்தி, “இதுல என்னங்க இருக்கு அந்த பிள்ளை சொன்னதும் சரிதானே… இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறது சகஜம்தான்”
“நம்மள மாதிரியா…. அந்த காலத்துல நம்ம வீட்டுல பார்த்த மாப்பிள்ளை கருப்பா செவப்பா என்று கூட பார்க்காமலேயே கழுத்தை நீட்டிடுவோம்… ஆனா, இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் நேர்ல பாக்கணும் சொல்றாங்க, பேசணும் சொல்றாங்க, பழகணும் சொல்றாங்க”
என்று அவர் பேசிக்கொண்டே செல்ல மகேஷ் மறுபடியும் தன் தொண்டையை சரி செய்தார். அதில் சட்டென்று வாயை மூடிக்கொண்டார் குமுதம்.
அந்த சமயம் மகேஷ் க்கு ஏதோ ஒரு அழைப்பு வந்துவிட ஃபோனை எடுத்துக் கொண்டு கொள்ளைபுறமாக சென்றுவிட்டார்.
அவர் சென்றதை உறுதி செய்து கொண்ட சாந்தி, “டேய் நீ போய் பொண்ணு கிட்ட பேசிட்டு வா” என்றார்.
சாந்தியின் வார்த்தையில் யாழினி நிமிர்ந்து ருத்ரனை பார்க்க… அவனோ, “சரி” என்று எழுந்து நின்றான்.
மயில், “இங்க பாரு டி உள்ள போனதும் ரொம்ப யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணிடாத டக்குன்னு சொல்லிடு இந்த கல்யாணத்தில் உனக்கு இஷ்டம் இல்லை என்று. உன் அண்ணனை பத்தியும் சொல்லி அவங்களையே எப்படியாச்சும் கல்யாணத்த நிறுத்த சொல்லிட்டு” என்றாள் கிசுகிசுப்பாக….
குமுதம், “என்ன யோசிச்சு நின்டுட்டே இருக்க மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் பேசிட்டு வா…” என்றவர் அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்
“இங்க பாரு போனோமா மாப்பிள்ளை கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு வந்தோமான்னு இருக்கணும் தேவை இல்லாம அவர் கிட்ட வேற ஏதாவது விஷயத்தை பத்தி பேசின தொலைச்சிடுவேன்”
“உன் அண்ணன் எது பண்ணாலும் அது உன்னோட நல்லதுக்கு மட்டும் தான். அதை நல்லா புரிந்துகொண்டு ஒழுங்கா நடந்துக்கனும்” என்று மெல்லிய குரலில் கூறி அனுப்பி வைத்தார்.
ஏதோ ஒரு யோசனையோடு யாழினி வேறு வழியின்றி அவள் அறையை நோக்கி செல்ல ருத்ரன் அவளை பின்தொடர்ந்து நிழலைப் போல் சென்றான்.
பாவம் அவளுக்கு இன்னும் புரியவில்லை காலம் முழுக்க ருத்ரன் அவளின் நிழலைப் போல் தான் இருப்பான் என்று.
யாழினி அறையின் உள்ளே நுழைந்து விட ருத்ரன் அவளை பின்தொடர்ந்து சென்றவன் கதவை சட்டென்று அனைத்து தாழிட்டான்.
அதில் பதறிப்போன யாழினி பதட்ட விழிகளோடு அவனைப் பார்க்க… ருத்ரன் ஒவ்வொரு அடியாக அவளை நெருங்கி முன் வந்தான்.
யாழினி ஒவ்வொரு அடியாக பின் வைத்து சென்றவள் கடைசியாக சுவற்றில் முட்டி நின்று விட்டாள்.
அவளை இரு பக்கமும் தன் கைகளைக் கொண்டு வளைத்து நெருங்கி நின்றவன் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாத யாழினி பயத்தில் வார்த்தைகள் தந்தி அடித்தவாறு, “நீ…. நீ… நீங்க… எதுக்கு…” என்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்துக்கொண்டு இருக்க ருத்ரன் அவள் வாயில் தன் ஒற்றை விரலை வைத்து பேசாதே என்னும் படி தலை அசைத்தான்.
தன் கரங்களை கொண்டு அவள் முகத்தை இரு புறமும் ஆட்டிப் பார்த்தவன் சந்தேக பார்வையுடன், “உன் முகத்தை பார்த்தா கல்யாணத்துக்கான சந்தோஷத்தையே காணோமே” என்றான்.
அவன் கை தீண்டிய சடுதியில் யாழினி யின் கண்ணில் இருந்து மல மல வென கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு நொடியில் அவள் உடம்பே கூசி சென்றது…. சட்டென்று அவள் கையை தட்டிவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு
“பிடிக்காத கல்யாணத்துக்கு சந்தோஷம் எங்க இருந்து வரும்” என்றாள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு.
ருத்ரன் மெல்லிய சிரிப்புடன், “இப்போ மட்டும் வார்த்தைகள் சரளமா வருதே…. மேடம்க்கு” என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவள் கண்களை உற்றுப் பார்த்தபடி.
யாழினி, “உனக்கு எப்படி என்ன கல்யாணம் பண்ணனும்னு தோணுச்சு? உனக்கு மனசாட்சியே இல்லையா….. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு உனக்கு நல்லா தெரியும் ல” என்றாள் விசும்பலுடன்.
ருத்ரன், “உங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறதா கேள்விப்பட்டேன் அதான் சரி நம்ம ஒரு அப்ளிகேஷனை போட்டு வைப்போமேன்னு சும்மா ஒரு அப்ளிகேஷனை போட்டேன் அது இவ்வளவு தூரம் கொண்டு வந்துடுச்சு”
“சரி கடவுள் பண்றது எல்லாம் நல்லதுக்கு தான் அப்படின்னு நானும் நினைச்சுட்டு பழ தட்டோடு உன்னை பொண்ணு கேட்டு வந்துட்டேன்” என்றான் கூலாக.
யாழினி, “தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடு…. எனக்கு இந்த கல்யாணத்துல துளி அளவும் இஷ்டம் இல்ல” என்கவும்.
ருத்ரன், “நிறுத்திட்டா உனக்கு சந்தோஷமா…. நீ சந்தோஷப்படுவியா?” என்றான்.
யாழினி, “நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றாள் ஆவலுடன் அவன் பதிலை எதிர்பார்த்து.
மௌனமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த ருத்ரன், “அப்போ இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும்” என்று விட்டு தன் கேசத்தை கோதி விட்டு கூலாக அங்கிருந்து நகர்ந்தான்.
யாழினி, “உனக்கு அப்படி என் மேல் என்ன தான் கோபம்” என்று கத்தினாள் கண்ணீர் மல்க.
கதவு அருகில் சென்ற ருத்ரன் அவளின் வார்த்தையில் திரும்பி அவளை பார்க்க அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ருத்ரன் இரண்டு நிமிடம் அவளைப் பார்த்து விட்டு பதில் அளிக்காமலே வெளியேறி விட்டான்.
யாழினி, ‘இன்னும் என் வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியலையே… அவன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் போயிட்டான்’ என்று நொந்து போய் நிற்க…
அந்த சமயம் மயில், “என்னடி ஆச்சு? அவர் என்ன சொல்லிட்டு போனாரு…”
“இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி நீ அவர்கிட்ட கேட்டு பார்த்தியா அவர் சரின்னு சொன்னாரா” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்.
யாழினி எதற்குமே பதில் அளிக்காமல் சிலையென நின்றிருந்தாள். மயில் அவள் கையைப் பிடித்து உலுக்கு, “என்னடி பித்து புடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்க… என்னதான் நடந்துச்சு” என்றாள்.
அதற்கும் யாழினி மௌனமாகவே இருந்தாள்… மயில், “சரி டி மணியாச்சு நம்ப இங்கேயே இருந்தால் தப்பா இருக்கும்… வா எல்லாரும் அங்க காத்துக்கிட்டு இருக்காங்க நம்மளும் போகலாம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
சாந்தி, “என்னப்பா பொண்ணு கிட்ட பேசிட்டியா…” என்றார்.
ருத்ரன், “அவளுக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தான்” என்று சிரித்துக்கொண்டே அவள் முகத்தை பார்த்தான். யாழினி அதிர்ச்சி விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
குமுதம், “யாழினியை பொருத்த வரைக்கும் அவளோட அண்ணன் என்ன சொல்றானோ அது தான். பார்த்திபன் யாரை கை காட்டினாலும் எங்க பொண்ணு கண்ண மூடி கொண்டு கழுத்தை நீட்டுவா எப்பயுமே அவ அண்ணனோட செல்லம்
தான்” என்றார் பெருமையாக.
அந்த சமயம் போனை துண்டித்து விட்டு வந்த மகேஷ், “சரி எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா…. கிளம்பலாமா…” என்றார்.
மான்ஸ்டர்-2
written by Competition writers