
Tag:
family love
2. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 2
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.
அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.
காலம்பர எழுந்து குளித்து விட்டு வந்ததும், நேராக தோட்டத்திற்கு சென்று பச்சை பசேலென இருந்த மருதாணிகளை ஒடித்து வந்து, அதன் இலைகளை மட்டும் பறித்து, அம்மியில் இட்டு அதில் கொஞ்சம் சர்க்கரை, இரண்டு கிராம்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சில துளி எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, சதக் சதக் என்று அரைக்கும் சத்தத்தில்,
வேக வேகமாக குளித்து விட்டு வந்து, “ஈசு… உனக்கு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா… எனக்கு தேவையானதா நானே பண்ணிக்க மாட்டேனா… குடு அத… கொஞ்சம் அப்படி தள்ளி உட்காரு…” என்று சிடுசிடு குரலில் சொல்லி அவரது பக்கத்தில் அமர்ந்த பேத்தியை கண்டு,
“ப்ச், அம்மு நீ ஏண்டி எந்திரிச்சு வந்த, அதுக்குள்ள குளிச்சும் முடிச்சு இருக்க… இன்னைக்கு ஞாயிற்று கிழமை தானே… கொஞ்சம் தூங்க வேண்டியது தானே…” என்று சொல்லவும் அவரை முறைத்து பார்த்தாள் அன்விதா.
அவளது கைகளோ அம்மியில் இருக்கும் மருதாணியை அரைத்த படி இருந்தாலும், “உனக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுதா ஈசு… வயசான காலத்துல இப்படி வந்து ஜங்கு ஜங்கு னு அம்மியில அரைச்சிட்டு இருக்க…” என்று கிண்டலாக கூறவும்,
“யாருக்கு டி வயசு ஆச்சுன்னு சொல்ற, உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சி, நீ பெக்குற பிள்ளைக்கு பிள்ளை பொறக்கும் வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது… ஆமா…” என்று ராஜேஸ்வரி சொல்ல, புன்னகை செய்தாள் பெண்.
“அதுக்கு நீ உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்கணுமாக்கும்…” என்று உதட்டை சுழித்து சொல்லிய அன்வி, அரைத்த மருதாணியை ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்தவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
அன்விதா, பத்தொன்பது வயதில் துள்ளி விளையாடும் பூஞ்சிட்டு இவள். மாறன் மற்றும் ரோஷினி ஜோடியின் ஓரே ஒரு மரிக்கொழுந்து.
அவளுடைய ஐந்தாம் வயதில் ரோஷினிக்கு மஞ்சள் காமாலை வந்து, அது மிகவும் முற்றிப் போய் இறைவடி சேர்ந்து விட்டார், அன்றில் இருந்து மாறனே அவளுக்கு தாயுமானவராகி போனார்.
ரோஷினியின் மறைவுக்கு பின்னர் மாறனின் ஒரே ஒரு பற்றுக்கோல் அன்விதா தான். அன்வி அப்பாவின் செல்ல பெண், அவர் சொன்னது தான் வேதம் என்பவள், மாறனும் மகளை எதற்கும் ஏங்க விட்டதே இல்லை.
மாறனின் தாய் தான் ராஜேஸ்வரி. மாறன் பார்த்துக் கொண்டாலுமே அன்விதாவை அன்னையாக இருந்து வளர்ப்பவர், அன்வி தந்தையின் இளவரசியாக இருந்தாலும், பாட்டியின் தேவதையும் அவள் தான். தாய்க்கும் மேலாக இருந்து, அவளின் சிரிப்பில் மகிழ்பவர் அவர்.
அன்விதா டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை விட பாட்டிஸ் லிட்டில் பிரின்சஸ் என்றே சொல்லலாம்.
ராஜேஸ்வரியின் கணவர் முத்துவேல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்தார். அவருக்கும் பேத்தி என்றால் உயிர். சில விஷயங்களில் மாறனும் ராஜேஸ்வரியும் கண்டிப்பு காட்டினால் கூட, தாத்தா எதற்கும் கண்டிப்பு காட்டியதில்லை. அவருக்கு பேத்தி சொல்லே வேதவாக்கு.
அவருடைய இழப்பு சிறு பெண்ணை மிகவும் பாதித்து இருந்தாலும், பாட்டிக்காக தன்னை தேற்றி அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினாள்.
அன்விதாவின் வட்டம் என்பது சிறிது தான், அதில் இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் உடன் இருந்தனர், அவர்கள் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் மற்றும் ஷிவாஷினி.
இவர்கள் மூவரும் தான் அவளுடைய அறுந்த வாலு கூட்டத்தின் உறுப்பினர்கள், அந்த கூட்டத்தின் அமைதியான தலைவி இவளே!
அன்விதாவிற்கு கொஞ்சம் குறும்பு தனம் இருந்தாலும், பொறுப்பான அமைதியான பெண்ணே! வீட்டில் மட்டுமே அவள் கலகலப்பான பெண், வெளியே அவள் எல்லோரிடமும் அளந்து அளந்தே பேசுபவள். அவளுக்கு உரியோரிடமே அவள் குழந்தை தனம் வெளிப்படும்.
அன்விதா இப்பொழுது B.sc. Nutrition and dietetics பிரிவில் கல்லூரி முதலாம் ஆண்டை முடித்து விட்டு இரண்டாம் ஆண்டில் பயின்று கொண்டு இருக்கிறாள்.
அவளுடன் ஷிவாஷினியும் படித்து வருகிறாள். உயிர் தோழி, இருவருக்கும் ஒரே வயது, பக்கத்து பக்கத்து வீடு என்பதால், சிறு வயதிலிருந்தே ஒன்றாக தான் உள்ளனர். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருந்து, தற்பொழுது ஒரே துறையில் ஒன்றாக கல்லூரியும் சென்று வருகின்றனர்.
“என்னடி அம்மு மருதாணி வாசம் மூக்கை தொலைக்குது…” என்று முகர்ந்த படி வீட்டில் நுழைந்தாள் ஷிவாஷினி.
ராஜியோ, “என் பேத்தி இன்னும் அடுப்பை கூட பத்த வைக்கல டி… நீ என்னனா மருதாணி வாசத்துக்கே மோப்பம் புடிச்சிட்டு வந்துட்ட…” என்க,
அவளோ, “என்ன ஈசு…” என்று பேச ஆரம்பிப்பதற்கு முன்பே,
“ஈசு பீஸுன்னு சொன்ன, இடுப்பு எலும்பை உடைச்சு அடுப்பில போட்டுடுவேன் பார்த்துக்க…” என்று கோபத்தில் கத்த,
‘நமக்கு எதுக்கு வம்பு…’ என்று எண்ணியவள் ஈஈஈ என பல்லைக் காட்டினாள்.
அன்வியோ, “ஈசு… அவ கிட்ட சண்டைக்கு போகாம சும்மா இருங்களேன்…” எனவும்,
“நீ என்னையே சொல்லு, அவளை ஒன்னும் கேட்டுடாத…” என்று முறுக்கிக் கொள்ளவும்,
“ஷிவு… எதுக்கு டி அவங்களை கத்த வைக்குற… கொஞ்சம் சும்மா தான் இரேன்… வா நம்ம உள்ள போகலாம்… நேத்து நான் புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்கேன்…” என்று இருவருக்கும் சமாதான கொடியை பறக்க விட,
ஷிவாவும் அவரை முறைத்து கொண்டே சென்றவள், “உங்க ஆயா எப்ப பார்த்தாலும் என்னைய திட்டிக்கிட்டே இருக்கு டி…” என்று சலித்துக் கொள்ள,
“மொதல்ல நீ அவங்களை வம்பு இழுக்காம இருக்கீயா…”
“அப்படி இருந்தா தான் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதே டி…”
“ம்ம்… அதே போல என் ஈசுக்கும்…” என்று சொல்லி சிரித்தாள் அன்விதா.
ராஜியும் ஷிவாவும் இப்படி தான் வம்பு சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும், அவளை சொந்த பேத்தி போல தான் பார்த்துக் கொள்வார். இவளுக்குமே பாட்டி இல்லை, அந்த குறையை தீர்த்து வைப்பவராக இருந்தாலும், அவரிடம் ஏதாவது சண்டை போட்டு திட்டு வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். இவர்களின் பாவமான தூது புறா என்னவோ அன்விதா தான்.
சமையல் அறையில் இருந்தே தேங்காயை கடித்து கொண்டே, “என்ன வானரமும் கருங்குரங்கும் இன்னும் இங்க ஆஜர் ஆகாம இருக்காங்க… அதிசயமா இருக்கே அம்மு…” என்று கேட்கவும்,
“ஷிவு… ஈசு போய் இப்ப அவங்க ரெண்டு பேருமா… எல்லார் கிட்டயும் சண்டைக்கு போகாம உன் வாய் சும்மாவே இருக்காதா டி… இப்ப நீ கம்முனு இல்ல நானே உன் லொடலொட வாய்க்கு டேப் போட்டு ஒட்டி விட்ருவேன்…” என்ற நண்பியை கண்டு திருதிருவென விழிக்க,
“இனி நீ திங்க மட்டும் தான் வாயை திறக்கணும்… சரியா…” என்றதற்கு தலையை மட்டும் ஆட்டினாள் ஷிவா.
அன்வியோ நேரத்தை பார்க்க ஏழரை ஆகி இருந்தது.
“அண்ணாவும் ஆதியும் இன்னும் காணும்… இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஏழு மணிக்கெல்லாம் வாங்கன்னு நேத்தே சொல்லி தான் அனுப்பனேன்… ஆனா, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இன்னும் வராம இருக்காணுங்க பாரு ஷிவு…” என்று புலம்ப,
“அம்மு நான் வேணா கால் பண்ணட்டா?”
“ஒன்னும் வேணா தாயே… நானே பண்ணிக்கறேன்…” என்று விட்டு அவளே அவளது அண்ணனான வந்தியத்தேவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை அழைத்தும் ஏற்காமல் இருக்க, நண்பனான ஆதித்ய கரிகாலனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவனுமே எடுக்காமல் இருந்தான்.
“பாரு ஷிவு… ரெண்டும் ஃபோன் எடுக்கல… லேட் ஆகும்னு அட்டென்ட் பண்ணியாச்சு சொல்லணும் தானே… அது கூட சொல்லாம உன் ஃபோனையே எடுக்காம இருக்கானுங்க பாரேன் டி…” என்று தோழியிடம் புகார் செய்தாள் அன்விதா.
“ஹ்ம்ம்…”
“ஹிஹி… அம்மு… நீ வேணுன்னா பாரு அவனுங்க ரெண்டு பேரும் இப்போ ஒன்னா தான் இருப்பானுங்க… அதான் நீ ஃபோன் அடிச்சும் எடுக்கவே இல்ல…” எனக் கூறி நண்பியின் கோபத்தில் மண்ணெண்ணெய்யை தாராளப் பிரபுவாக ஊற்றிக் கொண்டிருந்தாள் ஷிவாஷினி.
1. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 1
சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.
வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.
அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.
பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும் என்று எண்ணி பலர் காத்துக் கொண்டிருக்க,
சவாரியை அவசரமாக ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்களையும், வெகு வேகத்தில் இருசக்கர வாகனங்களை செலுத்தும் பயணிகளையும் தடுக்கும் விதமாக போக்குவரத்து சிக்கல் இருப்பதால், வேகமெடுத்து செல்ல இயலாமல் மெதுவாக ஊர்ந்தபடி நகர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் பல்வேறு சத்தங்கள் – வண்டிகளின் ஹார்ன், போன் அழைப்புகள், வண்டிகளின் கார் கிளச்சின் சப்தம், ரேடியோ எஃப்எம் பேச்சுகள், சிக்னலின் ஓரத்தில் இருக்கும் நாயின் கத்தல், கடைத்தெருவில் இருக்கும் சிறு வியாபாரிகளின் குரல் என்று பற்பல!
அந்த சுறுசுறுப்பான மக்கள் கூட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை! ஒவ்வொரு ஓட்டம்! வெவ்வேறு சூழ்நிலை! பல்வேறு கவலைகள் மற்றும் வலிகள்!
ஆனால், அந்த பரபரப்புக்கு நடுவில், பலரும் யூடியூபில் ஒரு வீடியோவையே பார்த்தபடி இருந்தனர்.
அது ஏதோ ஒரு உண்மையான சம்பவம் பற்றிய செய்தியை விளக்கமாக கூறும் காணொளி.
தற்பொழுது வலையொளியில், அதாவது யூடியூப்பில் உண்மை சம்பவங்களை பற்றிய செய்தியை, சாமானிய மக்களுக்கு விளக்கும் படி சொல்லும் மற்றும் பிறருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் மக்களை ஊக்குவிக்கும் போன்ற காணொளிகளை பதிவேற்றும் சேனல் அது.
“ஹெலோ எல்வி க்ரூஸ் (ELVI CREWS), இது உங்க எல்விபீடியா.
இப்ப நான் எதை பத்தி பேச போறேங்கிறது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கும்…
எஸ் அஷ்வினி மர்டர் பத்தி தான்,
யாரும் ஷாக் ஆகிட வேணாம்… என்னடா இவன் மர்டர் அப்படின்னு சொல்றானே, அந்த பொண்ணு சூசைட் தானே பண்ணிக்கிச்சு, இவன் எந்த விஷயமும் தெரியாம உளறுறானோ ன்னு யோசிக்கலாம்,
ஆனா, ஒருத்தரை தற்கொலைக்கு தூண்டுகிற செயல் கூட கொலைக்கு தான் சமம் னு சொல்வேன், அப்போ அதுல இருந்த எல்லாருக்குமே இந்த கொலைக்கு சம்பந்தம் இருக்கு… இல்லையா?
என்றவன் அவள் ஏன்? எதனால் இறந்தால்? என்றெல்லாம் விவரித்து கூறியவன்,
மேலும்,
இந்த அஷ்வினியோட இறப்பு ஒன்னும் முதலாவது கிடையாது… இங்க பல பொண்ணுங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உடலளவிலும் மனதளவிலும் சிதைஞ்சி போய்ட்டு தான் இருக்காங்க… அதுல இந்த மாதிரியான நியூஸ் 0.1 சதவீதம் நம்மளோட கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு… தெரியாம எத்தனையோ இறப்புகள், எத்தனையோ கொடுமைகள் ன்னு எக்கச்சக்கமா நடக்க தானே செய்யுது…
ஏன் நாலு வருஷம் முன்னாடி கூட, கேரளாவில் ஒரு பொண்ணு செத்து போச்சு, அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும், நியாயம் கிடைக்கணும்னு சோஷியல் மீடியாவில் கொந்தளிச்சோம், அதுக்கு அந்த பொண்ணோட புருஷன ஜெயிலில் போட்டாங்க, ஆனா, அவங்களே இப்ப ஜாமீனும் கொடுத்து வெளியே விட்டு இருக்காங்க… பலருக்கும் இந்த விஷயம் தெரியாது,
நாமளும் அந்த பொண்ணோட இறப்பை மறந்துட்டு இந்த பொண்ணோட இழப்பை பத்தி பேச ஆரம்பிச்சிட்டோம்,
இப்ப எல்லாம் யாரோட கண்ணீருக்கும், வலிக்கும், அவங்களோட இழப்புக்கும் நியாயம்னு கிடைக்கிறதே அரிதாகி போகுது…
நாம ஒரு விஷயத்தை பரபரப்பாக பேச ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதோட ஆயுட்காலம் குறைஞ்சது ஒரு வாரம் தான், அதுக்கு பிறகு வேற ஒரு ஃப்ளாஷ் நியூ வரும், நாமளும் அதுக்கு ஜம்ப் ஆகி வேறொரு புது நியூஸ பேசிட்டு போய்ட்டே இருப்போம்,
இதுல கன்கிளுஷன் சொல்லவெல்லலாம் என் கிட்டயோ உங்க கிட்டயோ எதுமே இல்லங்க… உங்களோட பிரச்சினைக்கு உங்க கிட்ட மட்டும் தான் தீர்வு இருக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும் கிவ் அப் மட்டும் பண்ணி தப்பான முடிவை எடுக்காதீங்க, அந்த முடிவினால் பாதிக்கப்பட போறது உங்களை சார்ந்தவங்க மட்டும் தான்.
சோ, ப்ளீஸ் யாருமே தப்பான முடிவை நோக்கி போகாதீங்க, ஏதோ ஒரு நிமிஷ தேவையில்லாத முடிவால் வாழ்க்கையை முடிக்கும் நிலைக்கு போய்டாதீங்க,
தற்கொலை எந்த விதத்திலும் சரியான முடிவா ஆகிடாது, சோ பீ ஸ்ட்ராங், கீப் தின்க் பாஸிட்டிவ்.”
என்பதுடன் அவனுடைய உரையை முடித்துக் கொண்டான் வலையொளியில் (Youtube) பிரபலமான எல்விபீடியாவின் எல்வின் ஆரோன்.
அந்த கானொளி மூலம் அவன் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் கேட்கும் பொழுது… அந்த காலை பொழுதின் பரபரப்பையே ஒரு கணம் நிறுத்தி மௌனமாக்கத் தான் செய்தது.
மேலும், அந்த காணொளியின் கீழே அவனுடைய சந்தாதாரர்களும் (subscribers) அவர்களுடைய கருத்துக்களை நேர்மறை எதிர்மறை கருத்துகளை பகிர்ந்தபடி இருந்தனர்.
அங்கு அவனது பேச்சால் அனைவராலும் பேசப்பட்டவனோ, தாயின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
“என்னடா கண்ணா இன்னைக்கு வந்த வீடியோவில் ரொம்ப எமோஷனலா பேசிட்டு இருக்க?” என்று மகனின் தலையை கோதியபடி கேட்டார் ஆரோனின் தாயார் பார்வதி.
“ம்மா… நான் ஒன்னும் அப்படி எல்லா எமோஷனலா பேசல…”
“என் புள்ளைய பத்தி எனக்கு தெரியாதா… எல்லா வீடியோவிலும் என்ன நடந்துச்சோ அத மட்டும் தான் பேசுவ… அதுக்கு மீற எதையும் பேசிட மாட்டீயே… ஆனா, இந்த பொண்ணோட சூசைட் கேஸ்ல நீ நிறைய அட்வைஸ் பண்ற போல தான் பேசிட்டு இருந்த.. என்னவாம் என் செல்லத்துக்கு?” என்று அன்னை கேட்கவும்,
“இப்படியான நியூஸ் எல்லாம் கேட்டு கேட்டு ரொம்ப சலிப்பா இருக்குமா… வேதனையாவும் இருக்கு… இந்த பொண்ணு செத்துப் போச்சு வெளியே தெரியுது… பட், ஃபேக்ட் என்னனா இதைவிடவும் பல கொடுமைகளை அனுபவிச்சிட்டு வெளியே சொல்லாம கஷ்டப்படும் பொண்ணுங்க எவ்வளவு பேர் இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க…
இதையெல்லாம் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ம்மா… அதான் கொஞ்சம் நிறையவே பேசிட்டேன் ம்மா.. நான் இப்படி பேசுனதுல எந்த தப்பும் இருக்கல தானே ம்மா?” என்று அவரிடமே கேட்க,
“இல்லப்பா… எதுவும் இல்ல… நீ பேசினது நூத்துக்கு நூறு சதவீதம் சரி தான்… என்ன பண்றது பெண்களோட பிறப்பே இப்படி தான்… அதுல எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கணும் ன்னு எழுதி இருக்கு போல..” என்று கவலையாக பேச ஆரம்பிக்கவும்,
“அம்மா… தலையெழுத்து அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க… இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க எந்த பொண்ணுக்கும் அவசியம் இல்ல… அதுல இருந்து வெளியே வந்து, அவங்க சுயமா சிந்திச்சு, சுதந்திரமா, சந்தோஷமா அவங்க வாழ்கையை வாழ எல்லாருக்குமே எல்லா உரிமையும் இருக்கு… இருக்கணும்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,
“ப்ச்… ம்மா… போதுமே… ஸ்கிப் த டாபிக்… எனக்கு ஒரு சுக்கு டீ வேணும்… கொஞ்சம் தலை வலிக்குது…” எனக் கூறி அமைதியாகி விட்டான் எல்வின்.
அவனை புரிந்துக் கொண்டு, “சரிடா போறேன்…” என சென்று விட்டார் பார்வதி.
எல்வினுக்கு இவற்றை எல்லாம் நினைத்து நினைத்து உண்மையாகவே தலைவலி வந்தது தான் மிச்சம்.
அதனை அகற்றும் விதமாக, பார்வதி போட்ட சுக்கு டீயை குடித்து விட்டு, அவனுடைய கணினியை உயிர்ப்பித்து வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
எல்வின் ஆரோன், வயது 29 தொடங்கி பத்து நாட்கள் தான் சென்றிருந்தது. B.E. in Software Engineering படித்து முடித்து, தற்பொழுது ஒரு ஐடி கம்பெனியில் திட்ட மேலாளராக (Project manager) பணியாற்றிக் கொண்டிருக்கின்றான்.
அவனுடைய வேலை ஒருபுறம் இருந்தாலும் ஒரு யூடியூபர் ஆகவும் திறம்பட செயல்பட்டு வருகிறான். அவனுக்கென்று தற்பொழுது நான்கு மில்லியன் சந்தாதாரர்கள் (Subscribers) இருக்கிறார்கள். இது அவனுடைய 7 ஆண்டு உழைப்பிற்கான பலன் தான்.
அவனுடைய இருபத்து மூன்றாம் வயதில் எல்விபீடியாவை தொடங்கி, படிப்படியாக உயர்ந்தோங்கி வேரூன்றி நின்றிருக்கிறான். ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும், இப்பொழுது அனைவராலும் பாராட்டக்கூடிய இடத்தில் வந்திருக்கிறான்.
என்னதான் அவனுக்கு இதில் பெயர் புகழ் பணம் என்று கொட்டி கிடந்தாலும், அவன் வேலையை என்றுமே விட நினைத்தது இல்லை.
ஆரோனுக்கு அவனது வேலையும் முக்கியம், அதேசமயம் அவனுடைய பேஷனும் முக்கியம், எதற்காகவும் எதையும் விட அவன் நினைக்கவில்லை. இரண்டையும் ஒரே தராசில் வைத்து தான் பார்ப்பான். ஆகையால், அவ்விரண்டினலும் எந்த ஒரு தவறும் இன்றி சரியாகவே செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய யூடியூப் சேனலை எவ்வாறு வளர்த்து விட்டானோ, அதேபோல அவனுடைய வேலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருந்தான்.
அவனுடைய புகழையும் பாராட்டையும் தலைக்கு ஏற்றால் இருப்பதும், அவனுக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை கடந்து வருவதும் தான் அவனுடைய வெற்றிக்கு முதன்மையான காரணம் எனலாம்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதியரின் தலைப்பு புதல்வன் தான் எல்வின் ஆரோன், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள் பெயர் சஷ்விகா.
சாமுவேலும் பார்வதியும் காதலித்து, இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி, ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து, அவர்களின் காதல் வாழ்க்கையை ஆரம்பித்துக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களுக்கு உறவென்று யாரும் இல்லை.
அதை எண்ணி பிள்ளைகளை பெரிதாக வருந்த விட்டதும் இல்லை, எந்தவித பாதிப்பும் இன்றி நன்முறையில் நல்ல பிள்ளையாக தான் வளர்த்தனர் பெற்றவர்கள்.
இளையவள் சஷ்விகா இப்பொழுது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை எழுத போகிறாள். எல்விக்கும் இவளுக்குமே பன்னிரெண்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கும். அந்த வீட்டின் செல்லக்குட்டி இவள். அண்ணனின் முதல் குழந்தை என்றே சொல்லலாம். அவனுக்கு இவள் மீது அவ்வளவு பிரியம்.
சாமுவேல் ஒரு நவீன பல்பொருள் அங்காடியை வைத்து நடத்திக் கொண்டிருக்க, பார்வதியோ அரசுக் கல்லுரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
அவர்களை பொறுத்தவரை வசதிக்கும் குறைவில்லை! மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! தெளிந்த நீரோடை போலவே ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது.
14. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 14
எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.
கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான். இரவெல்லாம் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி தாலி கட்டியவள் புறம் மனம் சாய நினைத்தாலும், அவள் கொடுக்கும் வார்த்தையின் வீரியம் அதைத் தடுக்கிறது. பெரிதாக நேசம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மனையாள் என்ற உணர்வு லேசாக மனத்தின் ஓரம் ஒட்டி இருக்கிறது.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவள், திரும்பிப் படுக்க முயல வலி பின்னி எடுத்தது. நேற்று விழும் பொழுது கூட இவ்வளவு வலிக்கவில்லை ரிதுவிற்கு. அந்த அசட்டுத் தைரியத்தில் அதைக் கவனிக்காமல் உறங்கி விட்டாள். இப்போது அது வேலையைக் காட்டுகிறது.
“அப்பா!” என்ற ஓசைக்கு அவன் திரும்ப, இடுப்பைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி துடித்துக் கொண்டிருந்தாள்.
என்னவென்று கேட்க விருப்பமில்லாததால் அவன் அப்படியே இருக்க, “ஓ காட்!” எழ முயற்சித்து முடியாது படுத்து விட்டாள்.
“என்னாச்சு?”
“ரொம்ப வலிக்குது!”
“எங்க?”
“இங்கப்பா…”
முதல்முறையாக, மரியாதையாக அழைக்கும் அவள் அழைப்பில் ஒரு நொடி கவனம் சிதறினாலும், “நேத்து விழுந்ததா?” விசாரித்தான்.
“அப்படித்தான்பா நினைக்கிறேன். வலில ஒன்னும் முடியல. எந்திரிக்கவே கஷ்டமா இருக்கு.”
“அப்படியே படுத்துரு.”
அறையை விட்டு வெளியேறியவன் சிறிது நல்லெண்ணையோடு உள்ளே வர, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது தனக்கு வேண்டாம் என்பது போல், சிறிதும் அவள் முகத்தைப் பார்க்காதவன் திரும்பிப் படுக்கக் கூறினான். கருடன் காட்டும் பாராமுகம் புரிந்தாலும் கணக்கில் கொள்ளாது திரும்பிப் படுத்தாள்.
மேல் சட்டையை நடு முதுகுக்கு மேல் வரை உயர்த்தி விட, “டேய்! என்னடா பண்ற?” பதறிச் சட்டையை இறக்கி விட முயன்றாள்.
“ப்ச்! கைய எடு.” எனத் தட்டி விட்டுச் சட்டையை மேல் உயர்த்தி, “எனக்கு என்னமோ உன் முதுகைப் பார்த்தும் கூட ஃபீலிங்ஸ் வரமாட்டேங்குது. இந்த லட்சணத்துல பயம் வேற வருது.” எனச் சிடுசிடுத்துவிட்டு எண்ணெயை இடுப்பில் ஊற்றினான்.
“அப்போ உன்கிட்டத் தான்டா ஏதோ கோளாறு இருக்கு.”
எண்ணெயில் தளதளத்துக் கொண்டிருக்கும் இடுப்பில், தப்பென்று ஒரு அடி வைக்கக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது ரிது சதிகாவிற்கு. அதில் அவளின் திருவாய் தன்னால் மூடிக்கொள்ள நீவி விட்டுச் சுளுக்கை எடுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும், அவன் இரு கட்டை விரலால் அழுத்தும் பொழுது படக்கூடாத வேதனையைப் பட்டுக் கதறினாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, சரியாகிடும்.”
தன் கடமை முடிந்ததென்று எழுந்தவன் கையைப் பிடித்தவள், “தேங்க்ஸ் பா!” என்க, “ம்ம்!” என்றான்.
“காலைலயே சூடா இருக்க போல.”
“இல்ல.”
“என்னைப் பார்த்துச் சொல்லு.”
“வேலை இருக்கு, விடு.” கையை உதறி விட்டு வெளியேறினான்.
சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கம் அவளை ஆட்கொண்டது. வந்து பார்த்தவன், நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவளை அப்படியே நின்று கவனிக்க ஆரம்பித்தான். மனத்திற்குள் சலசலப்பு எழுந்த வண்ணம் இருக்க, அவள் மீது கரிசனமோ, காதலோ தெரியவில்லை. உறக்கம் கலையக்கூடாது என்பதற்காகச் சூரியன் கொடுத்த அனைத்து வெளிச்சத்தையும் மறைத்தான்.
அவள் பக்கத்தில், கணவன் போல் உறவாடிக் கொண்டிருந்த போனை சைலண்ட் மோடில் போட்டு ஓரம் ஒதுக்கி வைத்தான். அறையின் குளிரை அதிகம் கூட்டி வைத்துப் போர்வையைப் போர்த்தி விட்டு வெளியேற, அதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவள் விழிகளைத் திறந்தாள். அவன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டிருந்த ரிதுவின் இதழ்கள் மட்டுமல்ல, கண்களும் சிரித்தது.
***
ஓயாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். ஏதாவது அதிசயம் நடந்து தன் பெற்றோர்கள் இங்கு வரக்கூடாது என்ற வேண்டுதலோடு அவன் இருக்க, எண்ணத்தைத் தோற்கடித்து ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். இருவரும் வாய் பிளந்து மருமகளின் வீட்டைக் காண, இப்படிப் பார்ப்பதைப் பார்த்தால் கடுஞ்சொற்களால் நோகடிப்பாளே எனக் கவலை கொண்டான்.
“இவ்ளோ பெரிய வீட்டுலயா என் மருமகள் இருக்கா?”
“அதான் பாரு சரளா.”
“இவ்ளோ பெரிய வீட்ல வாழுற பொண்ணு, நம்ம வீட்ல எப்படிங்க வந்து வாழும்.”
“இந்த வீட்டப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கும் அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.”
பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு மனம் நொந்தவன், மௌனமாக அவர்கள் முன் நிற்க, “வாங்க…” என வரவேற்றார் பொன்வண்ணன்.
மகனைப் பார்க்காத சரளா உள்ளே செல்ல, “எல்லாம் சரியாகிடும்டா.” என்றார் தந்தை.
வார்த்தைகள் இன்றித் தலையசைக்கும் பிள்ளையின் கவலையைப் புரிந்து கொண்ட சத்யராஜ், ஆதரவாகத் தோள் மீது கை போட்டுத் தட்டிக் கொடுக்க, வாசல்வரை அழைத்துச் சென்றவன்,
“உள்ள போங்கப்பா…” என்றான்.
“நீ வரலையா?”
“நீங்க போங்கப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.”
தன் சம்பந்திகளை மகிழ்வாக வரவேற்றவர், மரியாதையாக உபசரிக்க ஆரம்பித்தார். வெளியில் நின்று வாய் பிளந்தவர்கள் உள்ளே வந்ததும் திகைத்தனர். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திகைப்பைக் கொடுத்தது. ஏதோ பெரிய பணக்கார விழாவிற்குச் சென்றது போல் அவ்வளவு தோரணையாக இருந்தது அந்த வீடு.
“காபி எடுத்துக்கோங்க.”
“என்ன சார், நீங்க போய் எடுத்துட்டு வந்துட்டு.”
“இதுல என்ன இருக்கு? என் மருமகனோட பெத்தவங்களுக்கு நான் போட்டுத் தராம வேற யார் போட்டுத் தருவா?”
“இருந்தாலும் சங்கடமா இருக்கு சார்.”
“இன்னும் என்ன சார்னு…”
வெள்ளந்தியாகச் சரளாவும், சத்யராஜும் புன்னகைக்க, “சம்பந்தின்னு கூப்பிடலாமே. எனக்குன்னு இருக்கற ஒரே சம்பந்தி நீங்க மட்டும் தான்.” என்றவர் முகத்தில் இந்த உறவிற்காக ஏங்கும் ஏக்கம் தென்பட்டது.
அதை எதிரில் இருக்கும் இருவரும் உணர்ந்தாலும், பணம் என்னும் கௌரவம் உரிமையை வெளிக்காட்ட விடாமல் தடுத்தது. இந்த நொடி வரை மருமகளும் சரி, அவளின் பெற்றவரும் சரி, எட்ட முடியாத ஏணியாகத்தான் தெரிகிறார்கள்.
“உங்க தயக்கம் புரியுது. இருந்தாலும்…”
“விடுங்க சார், இனி நாங்க அப்படியே கூப்பிடுறோம். நீங்க சங்கடப்படாதீங்க.”
மனநிறைவாகப் புன்னகைத்தவர், மகளை அழைத்து வரச் சென்றார். அவர் சென்ற பின், தங்குத்தடை இன்றி அந்த வீட்டை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். மனம் முழுவதும் சங்கடம் எனும் பேய் ஆட்டிப் படைத்தது அவனை.
மகளைத் தட்டி எழுப்பியவர் வந்திருப்பவர்களின் விவரத்தைக் கூற, “நீங்களே பேசி அனுப்புங்க.” என்றாள்.
“அது மரியாதையா இருக்காது ரிது.”
“எனக்குப் பிடிக்கல.”
“நீ ரொம்பத் தப்புப் பண்ற.”
“டார்ச்சர் பண்ணாதீங்கப்பா, பிடிக்கலைன்னு சொன்னா விட்டிடுங்க. எனக்கு அவங்ககிட்டச் சகஜமாப் பேச முடியல.”
“பேசவே முயற்சி பண்ணாம, சகஜமாப் பேச முடியலன்னு சொன்னா எப்படி? ஒழுங்கா ரெடி ஆகிட்டு வந்து எப்ப வந்தீங்கன்னு கேளு.”
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு குளியலறை சென்று வந்தவள் கடுகடுவென்று கீழ் இறங்க, “வாம்மா…” அன்பாக அழைத்தார் சரளா.
வழக்கம்போல் அவரைப் புறக்கணித்தவள் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொள்ள, “எப்படிம்மா இருக்க?” மாமனார் நலம் விசாரித்தார்.
“ம்ம்!” என்றதோடு நிறுத்திக் கொண்டு இருவரையும் சங்கடத்திற்குத் தள்ளினாள்.
மருமகளின் உதாசீனத்தை வழக்கம்போல் ஒதுக்கி வைத்தவர்கள், பணத்தை மேஜை மீது வைத்து, “நீங்க கொடுத்த பணம் இதுல இருக்கு. சரியா இருக்கான்னு எண்ணிப் பார்த்துக்கோங்க.” என்றனர்.
மகளை ஒரு பார்வை பார்த்தவர் அந்தப் பணம் வேண்டாம் என்று மறுக்க, அவர்களோ உறுதியாக இருந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் பொன்வண்ணன் அமைதியாக, “கல்யாணம் ஆகி ஒரு மாசம் முடியப் போகுது. ரெட்டைல தாலிக்கயிறு மாத்தக் கூடாது. அதனால, முடியுறதுக்குள்ள தாலி பிரிச்சிச் கோர்த்துடலாமா?” என்பதற்குப் பொன்வண்ணன் தலையசைப்பதற்கு முன்,
“அதெல்லாம் தேவையில்லை.” என்றாள் சத்தமாக.
“ரிது!”
“நீங்க சும்மா இருங்கப்பா. என்னால இதுக்கு ஒரு காலமும் சம்மதிக்க முடியாது. இவன் கட்டின தாலியவே எப்போ தூக்கிப் போடப் போறோம்னு இருக்கேன். இதுல தங்கத்துல போடுறது தான் கேடு.”
“அப்படி இல்லம்மா, மஞ்சள் கழுத்தோட எத்தனை நாளைக்கு இருப்ப. நாலு இடம் போயிட்டு வர பொண்ணு. நீ இருக்க வசதிக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணல.”
“அது என்னோட பிரச்சினை. இது என் கழுத்துல இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகுதுன்னு தெரியல. இதுக்கெல்லாம் இவ்ளோ இம்பார்டன்ட் கொடுக்க முடியாது.”
“கொஞ்சம் பொறுமையாப் பேசு ரிது. அவங்க உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்லிட்டு இருக்காங்க.”
“என்னோட நல்லதை முடிவு பண்ண இவங்க யாரு? வந்த வேலைய மட்டும் பார்த்துட்டுப் போகச் சொல்லுங்க.”
“இன்னும் மனசால நீ இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கலன்னு நல்லாப் புரியுது. இருந்தாலும் செய்ய வேண்டிய கடமை இருக்கு. உன் அம்மா நல்லபடியா இருந்திருந்தா, என்ன பண்ணி இருப்பாங்களோ அதைத்தான் நாங்க பண்ண ஆசைப்படுறோம். ஒரு நல்ல நாளாப் பார்த்து இந்த வீட்டுக்குள்ளயே கூட பண்ணிக்கலாம். நம்ம எல்லாரும் சேர்ந்து இருந்தாலே உன் மனசு கொஞ்சம் மாறும்.”
“ஓஹோ!” எனக் கால் மீது கால் போட்டவள், “இப்பத்தான் உங்க திட்டம் புரியுது. புள்ளைய முன்னாடி அனுப்பி வச்சிட்டுப் பின்னாடியே நீங்க வந்து செட்டில் ஆகலாம்னு பார்க்குறீங்க. இதுக்கு இந்தத் தாலி ஒரு சாக்கு. கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உங்களுக்கு? என்னடா ரோஷம் வந்து பணத்தைக் கொடுக்குறாங்களேன்னு யோசிச்சேன். பத்து லட்சத்தைக் கொடுத்துட்டு, பத்துக் கோடியைச் சுருட்டப் பிளான் பண்றீங்க. இப்படி ஒரு பொழப்புக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாம்.” என்றிட, வெளியில் நின்றிருந்தவனின் ரத்த நாளங்கள் சூடானது. பாறை போல் விறைத்த மனத்தில், பொங்கி எழுந்தது ஆத்திரம். பற்களைக் கடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் ‘பளார்!’ என ஓங்கி அறைந்தான்.
அடித்தவன் ஆங்கார மூர்த்தியாக நின்றிருக்க, அங்கிருந்த மற்ற மூவரும் எழுந்து விட்டனர். அடி வாங்கியவள் மட்டும் அழுத்தமாக அதே இருக்கையில் அமர்ந்து இருந்தாள். கருடேந்திரன் என்ன செய்தான் என்பது புரியச் சில நொடிகள் தேவைப்பட்டது அந்தப் பெரியவர்களுக்கு.
“பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா? உலகத்துலயே உன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கா? இந்த வீட்டுக்கு நெருப்பு வச்சேன்னு வச்சிக்க, இருக்கற அத்தனையும் பொசுங்கிப் போயிடும். எதையும் உன்னால மீட்டு எடுக்க முடியாது. அப்படி அழிஞ்சு போற ஒன்னுக்கு ஏன்டி இவ்ளோ ஆணவத்தோடு ஆடுற. இவ்ளோ பாவத்தையும் பண்ணிட்டு, நீயே உயிரோட இருக்கும்போது என் பெத்தவங்க எதுக்காகச் சாகனும்?”
“கருடா!”
“சும்மா இருங்கம்மா. இவளை இவ்ளோ நாள் விட்டு வச்சதே தப்பு. எப்படி நாக்குல நரம்பு இல்லாமல் பேசுறா பாருங்க. இவ அம்மா இவளை ரத்தமும், சதையுமாத் தான் பெத்தாங்களா? இல்ல கருங்கல்லா பெத்தாங்களான்னு தெரியல. இவளை மாதிரி ஈனப்பிறவிங்களை அனுசரிச்சுட்டுப் போறத விட ஒரு தப்பு இந்த உலகத்துல இருக்காது.”
“கொஞ்சம் பொறுமையா இருப்பா, அவ பேசுனது சரின்னு நான் சொல்லல.” எனப் பொன்வண்ணன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
“தயவு செஞ்சு நீங்க பேசாதீங்க. பெண்ணை எப்படி வளர்க்கக் கூடாதோ, அப்படி வளர்த்து வச்சிருக்கீங்க. இந்த அடியை நியாயமா நீங்க அடிச்சு இருக்கணும். அப்படி அடிச்சிருந்தா, இந்த மாதிரிப் பார்க்குற எல்லாரையும் அவமானப்படுத்திட்டு இருக்க மாட்டா…” என்றிட, அவமானத்தில் தலை குனிந்தார்.
“போதும்டா, அவ கூடச் சண்டை போட உன்னை இங்க அனுப்பி வைக்கல. எப்படியாவது மனசு மாறி நல்லபடியா வாழணும்னு தான் அனுப்பி வச்சேன்.”
“வாழுறதா?” எனத் தாடைகளைத் தடதடக்கக் கடித்தவன், அவள் அமர்ந்திருந்த சோபாவை எட்டி உதைக்க அது நான்கடி பறந்து போனது.
“எப்படி அழுத்தமா உட்கார்ந்து இருக்கான்னு பாருங்க. இப்படி ஒருத்தி கூட எவனாவது வாழ முடியுமா? தாலியைக் கழற்றி வீசின அப்பவே இவளுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போச்சு. நல்லது பண்றேன்னு என் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இவ கழுத்துல தாலி கட்டின நாள்ல இருந்து நான் நானா இல்ல. நிம்மதியா மூச்சுவிட்டு எத்தனை நாள் ஆகுது தெரியுமா?
இந்த வீடு நரகமாய் தெரியுது. இங்க இருக்க சாப்பாடு விஷமா இருக்கு. உங்களுக்காகத் தான் பல்லக் கடிச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். எப்போ உங்களையே அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்டாளோ, இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன். இவளுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் கட்டின தாலிய நானே கழற்றிட்டுப் போறேன்.”
விருப்பமில்லாது அணிவித்த மாங்கல்யத்தை உருவச் சென்றான் கருடேந்திரன். அப்போதும் கூடச் சிறு சலனம் இல்லாமல் அழுத்தமாக, இருக்கையில் பசை போட்டு அமர்ந்திருந்தாள் ரிது சதிகா. அவன் பெற்றோர்கள் ஓடிச் சென்று தடுத்தார்கள். தலை குனிந்திருந்த பொன்வண்ணன் கூடத் தடுத்தார்.
தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும் மூவரையும் தாண்டி அவளை நெருங்கியவன், ஆடைக்குள் மறைந்து நெஞ்சுக்குள் உறவாடிக் கொண்டிருந்த அந்த மாங்கல்யத்தை உள்ளங்கையில் பற்றினான். தடுத்துக் கொண்டிருந்தவர்கள் பலத்தை அதிகரித்து அவன் செயலை நிறுத்தப் பார்க்க, அலுங்காது குலுங்காது விழி உயர்த்தினாள்.
“விடுங்கம்மா!” என அந்த மாங்கல்யத்தை இழுக்க, இரு முறை உண்டான பந்தம் அவ்வளவு எளிதாக அவிழுமா! அவள்தான் அவன் இழுப்பிற்கு அசைந்தாள். தன்னோடு வர மறுத்த மாங்கல்யத்தின் மீது கோபம் கொண்டவன், சக்தியை ஒன்று திரட்டி மீண்டும் இழுக்க, ரிது அவனோடு மோதி விலகினாள். அதுவரை ஆத்திரத்தில் இருந்தவன் விழிகள் அவளிடம் தாவியது.
இப்படியான தருணத்தில் கூட ஒரு பெண் அசராமல் நிற்க முடியுமா? என்ற கேள்வி தான் அவளை ஆராய்ந்தபின் தோன்றியது. சிறுதுளிப் பதட்டம் இல்லை. பொதுவாகவே, கட்டியவனை விட அவன் கட்டிய தாலிக்குத் தான் பெண்கள் அதிகம் மரியாதை கொடுப்பார்கள். அப்படியான அதி தீவிர பயம் தென்படுவதாகத் தெரியவில்லை.
வெறுமையாக இருந்தது அவள் விழிகள். அந்த விழிகளை அவளவனாக ஆராய்ந்தான். இன்று வரை இந்த மாங்கல்யத்தை, அவள் மாங்கல்யமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக அவனுக்கு உணர்த்தினாள். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன் கைகள் தளர்ந்தது. கட்டியவள் மீது எண்ண முடியாத அளவிற்குக் கோபம் இருந்தாலும், மாங்கல்ய பந்தமும், கணவன் என்ற உரிமையும், இத்தனை உதாசீனங்களை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை.
ஆண் என்ற கர்வத்திற்குள், அவன் கட்டிய மாங்கல்யத்தை ஒளித்து வைத்தவனால் இதை வெறும் மஞ்சள் கயிறாக நினைக்க முடியவில்லை. பெற்றோர்கள் சம்மதத்தோடு, நல்ல நாள் பார்த்துக் கோவில் சன்னிதானத்தில் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டு நாள்கள் பல ஆகிவிட்டது. வேண்டாம், வேண்டும் என்ற இரு வேறு மன நிலையில் அவன் இருக்க, என்ன மனநிலையில் இருக்கிறாளோ ரிது.
“விடுடா!” எனப் பெரும் சத்தம் போட்ட சரளா, மகன் கையில் குடி கொண்டிருந்த மாங்கல்யத்தை விடுவித்து மருமகள் மார்போடு சேர்த்தார்.
“கல்யாணம்னா, உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா இருக்கா? காலங்காலமா இதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அதை அசிங்கப்படுத்தாதீங்க. உங்க கல்யாணம் உங்க விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு. ஆனா, இது கல்யாணம் தான். நீங்களே இல்லைன்னு சொன்னாலும், உங்க வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடந்து முடிஞ்சிருச்சு. இனி நீங்க எத்தனைக் கல்யாணம் பண்ணினாலும் இதான் தொடக்கம்.”
மூச்சு விடாது பேசிய சரளா சற்று மூச்சு வாங்கி, “உனக்கு எதுக்குடா இவ்ளோ கோவம் வருது? இந்தக் கோபத்தால தான் நீயும் நாங்களும் இங்க வந்து நிற்கிறோம். இப்பக் கூட அதை மாத்திக்க மாட்டேன்னு சொல்றியே. உன்ன நினைச்சா ரொம்பக் கவலையா இருக்கு கருடா.” என்றார் தன்மையாக.
கருடேந்திரன், அன்னையின் முகம் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொள்ள, சூறாவளியே சுழற்றி அடித்தாலும், கடலை பொரி சாப்பிட்டுக் கொண்டிருப்பது போல் சாதாரணமாக இருந்தாள் அவனின் வீட்டுக்காரி. அவளைக் கண்டவன் கண்கள் கலங்கியது. அதுவரை கல்லாக இருந்தவள் உயிர் பெற, தொடத் துடித்தான்.
“அவ பேசுன எதுவும் அவ மனசுல இருந்து வரல. அதனாலதான், அதோட பாதிப்பு இப்ப வரைக்கும் அவ கண்ணுல தெரியல. வலுக்கட்டாயமா தாலி கட்டுன உன்னை எப்படி எல்லாம் பழி தீர்க்க முடியுமோ, அப்படி எல்லாம் பழி தீர்த்துட்டு இருக்கா. நீ தாலியப் புடிச்ச அப்பக்கூட அவ தடுக்காம இருந்ததுக்குக் காரணம் இதுதான்.” என்றிட அப்போதுதான் பொம்மை போல் இருந்தவள் உடலில் உணர்வுகள் உருவானது.
அசையாத சிலையாக இருந்தவள் கண்களில் உண்டான உணர்வைப் புரிந்து கொண்டவர், தன் பக்கம் பார்வை வருவதை அறிந்து அவள் அருகே சென்றார். மாமியாரைப் பார்வையால் சுட்டுப் பொசுக்கினாள். எண்ணற்ற கேள்விகளை நொடிப்பொழுதில் தன்னிடம் இடமாற்றும் மருமகள் கன்னத்தைப் பிடித்தவர்,
“உன் மனசு எனக்குப் புரியாம இல்ல. உன்னை மருமகளா பார்க்குறதை விட மகளாப் பார்க்கிறேன். அதனாலதான், இவனை என்ன வேணா பண்ணிக்கன்னு இப்ப வரை அமைதியா இருக்கேன். இனியும் அமைதியாக தான் இருப்பேன். ஏன்னா, இந்த வயித்துல நானும் ஒரு பொண்ணைப் பெத்திருக்கேன். உன் இடத்துல என் பொண்ணு இருந்திருந்தா, இந்நேரம் என் வீட்டு ஆம்பளைங்க மீசைய முறுக்கிக்கிட்டுத் தாலி கட்டுனவன் கையக் கால உடைச்சிருப்பாங்க. தன் வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம், அடுத்த வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம்னு நானும் சராசரியா யோசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுட்டேன்.” என்றவரை இது நாள் வரை பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தாள்.
“உன்ன நான் ஒரு அயோக்கியனுக்குக் கட்டிக் கொடுக்கல. அந்த ஒரு தைரியத்துல தான் பிடிக்காத ரெண்டு பேரைச் சேர்த்து வச்சிருக்கேன். உன் மனசுல எவ்ளோ கோவம் இருக்கோ, அவ்ளோ கோபத்தையும் கொட்டு. ஆனா, கடவுள் கொடுத்த இந்த உறவை வெட்டி விடணும்னு மட்டும் நினைக்காத. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இந்த வாழ்க்கை உனக்குப் பிடிக்கும். இந்தத் தாலி உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். காரணம் இல்லாம, ஏணி வச்சா கூட எட்ட முடியாத ஒருத்தனை, உன் வாழ்க்கைக்குள்ள அந்தக் கடவுள் நுழைச்சு இருக்க மாட்டான்.”
“என் பொண்ணுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்.”
“நியாயமா நாங்கதான் சார் மன்னிப்புக் கேட்கணும். இவ மனசைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, விருப்பம் இல்லாத தாலிய இன்னும் அழகுபடுத்த நினைச்சது எங்க தப்பு.”
“இதுக்கு மேலயும் சேர்த்து வைக்க யோசிக்காதீங்கம்மா. இவளுக்கும், எனக்கும் ஒத்து வராது. தெரியாமல் தப்புப் பண்ணிட்டேன். இவளுக்கு நான் பண்ணது துரோகம் தான். அதுக்கு ஜெயில்ல கூடப் போடச் சொல்லுங்க. இந்தக் கல்யாணம் மட்டும் வேணாம்.”
“இதுக்கு மேல எதுவும் பேசாத கருடா. அம்மா இவ்ளோ சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. அம்மா கூட இருக்க உன்னாலயே புரிஞ்சிக்க முடியாத அப்போ, எடுத்துச் சொல்ல ஆள் இல்லாத இவ எப்படிப் புரிஞ்சிப்பா? சரியோ தப்போ, நான் என் மருமகளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன். இன்னொரு தடவை அவளை அடிக்காத. அப்புறம் மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்.” என்ற பெற்ற தாயின் பேச்சைச் சகித்துக் கொள்ள முடியாது, யாரும் அமராமல் காலியாக இருந்த இருக்கையை எட்டி உதைத்து விட்டு வெளியேறினான்.
கோபமாகச் செல்லும் மகனை சத்யராஜ் பாவமாகப் பார்க்க, பிள்ளையின் மனம் புரிந்தாலும் பெண்ணாக யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மீண்டும் ஆளாக்கப்பட்ட சரளா, “நாங்க போனதுக்கப்புறம் இவளை எதுவும் சொல்லாதீங்க சார். எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருச்சுன்னா, அதைப் பேசிக் கிளறாம கொஞ்சம் ஆறப் போட்டாலே போதும், தன்னால சரியாகிடும்.” என்று விட்டுத் தந்தை, மகள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார் சரளா.
கிளம்புவதற்கு முன் மருமகளிடம் சென்றவர், “என் புள்ள அடிச்சதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்.” என்று விட்டு இரு நொடி அமைதியாக அவள் முகத்தை ஆராய்ந்து,
“நீயே நினைச்சாலும், என் குடும்பத்துக்கும் உனக்குமான பந்தம் அறுந்து போகாது. இந்த ஜென்மத்துல நான்தான் உனக்கு மாமியார்! என்னைக்கா இருந்தாலும் மாமியார் கொடுமையைக் காட்டாமல் விடமாட்டேன்.” என்றதைக் கேட்டதும் சிட்டிக்கு உயிர் வந்தது போல் முகத்தில் லேசான சிரிப்பு உதயமானது.
அதை அங்கிருந்த ஆண்கள் இருவரும் அறியாது போக, “நீயும் கொஞ்சம் மருமகள் கொடுமையைக் காட்டலாம். ரெண்டு பேரும், வேலைய முடிச்சுட்டு வர என் பிள்ளைகிட்டப் பஞ்சாயத்து வச்சு அவனுக்கு யாரு முக்கியம்னு தெரிஞ்சுக்கலாம்.” என்று விட்டு அவளைப் போல் வெளிவராத புன்னகையை அவளுக்கு மட்டும் காட்டிவிட்டு வெளியேறினார்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10
written by Competition writers
அத்தியாயம் 10
கவியின் கல்யாணம் முடிந்த பிறகு கீதாவும் ராமும் கிளம்பி விட்டனர். கீதா கவியை அவளின் சொந்தத்துடன் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். அவரின் ஊருக்கு செல்லவே நள்ளிரவு 12 ஐ நெருங்கிவிட்டது. சென்றதும் அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கி விட்டார். ராமும் பக்கத்து வீட்டில் தான் அவரின் மகள் வீடு இருப்பதால் அங்கே சென்று தங்கினார்.
காலையிலேயே 5 மணி போல் ராம் பிரசாத் சென்னை கிளம்புவதால் கீதாவிடம் சொல்லி விட்டு போகலாம்னு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினார். ஆனால் கதவு திறந்து தான் இருந்தது. கதவு கூட பூட்டாமல் தூங்கிட்டாங்களா என்று உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரூமும் பூட்டாமல் தான் இருந்தது. உடனே உள்ளே சென்று அவரை அழைத்துப் பார்த்தால் கீதா எழவில்லை.
பின்னர் தன் மகளை அழைத்து வந்து அவரை எழுப்பினர். ஆனால் அவர் எழவே இல்லை. பக்கத்தில் இருக்கும் மருத்துவரை அழைத்துப் பார்த்தனர். அவரும் கீதா இறந்ததாகவும் இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறினார். ஆக அவர் படுத்த கொஞ்ச நேரத்திலே இறந்து விட்டார். உடனே ராம் ராஜனுக்கு ஃபோன் பண்ணி கூறிவிட்டார். ராஜனுக்கு தெரியும் கீதா இறந்தது ஆனால் அவர் சோழனிடம் கூட சொல்லவில்லை.
இப்போது கவி கீதாவைக் கட்டிக்கொண்டு அழுவதை அங்கே இருந்த யாராலும் பார்க்க முடியவில்லை. அம்மா அம்மா என்று கத்திகொண்டே இருந்தாள். வெளியே நின்ற சோழனுக்கும் அவள் கதறுவதைக் கேட்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் கத்திக் கத்தி கவி மயங்கி விழுந்தாள். சோழனுக்கு கவியின் சத்தம் வராமல் போனதும் வேகமாக உள்ளே வந்து பார்த்தான்.
அங்கே கவி மயங்கி இருந்ததைக் கண்டதும் அவளை டக்குன்னு தன் கையில் தூக்கிக் கொண்டு உள்ளிருக்கும் அறைக்கு சென்று படுக்க வைத்தான். பின்னர் ஒரு பெண் வந்து தண்ணீர் தெளித்து எழுப்பப் பார்த்தார். சோழன் அவரைத் தடுத்து நிறுத்தி வேண்டாம் எழுந்தால் மறுபடியும் கத்திக்கொண்டு தான் இருப்பாள். அதனால் கொஞ்சம் நேரம் இப்படியே மயக்கத்தில் இருக்கட்டும் என்று கூறினான்.
சரி என்று அந்த பெண் சென்று விட்டார். இவனும் அவளின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்தான். அப்போது ராஜன் ஃபோன் செய்தார். ஃபோன் எடுத்ததுமே என்னப்பா கவி எப்படி இருக்கா என்று கேட்டார். அழுது அழுது மயங்கிட்டாள் ஐயா என்று சொன்னான். சரிய்யா ரொம்ப கவலையாக இருக்கும் கொஞ்சம் பாத்துக்கோயா என்று கூறிவிட்டு வைத்தார்.
ஒரு ரெண்டு மூணு மணி நேரம் கழித்து கவி எழுந்தாள். எழுந்ததும் அனைத்தும் நியாபகம் வந்தது உடனே வெளியே ஓடினாள். அங்கு கீதாவை அனுப்புவதற்கு எல்லாம் ரெடியாக வைத்து இருந்தனர். கவி வந்ததுமே பொண்ணு வந்து விட்டது தூக்கலாம் தானே என்று கேட்டார்கள். கவி ஓன்னு கதறினாள். சோழனும் பின்னாடியே வந்து விட்டான். அவளைப் பிடித்துக் கொண்டான்.
என்ன பண்ணாலும் இறந்தவரைத் திரும்ப கொண்டு வர முடியுமா. கீதாவும் அப்படித்தான் அவரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு மகிழ்ச்சியோடு கண் மூடி விட்டார். அவரின் உடலை எடுத்துக் கொண்டு மின் தகனத்திற்கு சென்றனர். பின்னாடியே சோழன், கவி, ராம் பிரசாத் அவரின் மகள் குடும்பம் மட்டுமே அங்கே சென்றனர்.
அங்கு போயும் கவி அம்மா அம்மா என்று கதறிக் கொண்டு தான் இருந்தாள். கீதாவின் உடலை அந்த மின் தகனத்தில் வைத்து அனுப்பினர். அவரின் உடலை நெருப்பு விழுங்கி சாம்பலாக்கியது. பின்பு திரும்பி பார்க்காமல் கவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்த விட்டனர். அப்புறம் கீதாவின் அஸ்தியை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்க கவியின் கைகள் அப்படி நடுங்கியது.
சோழன் தான் கவியின் கைகளை தன் கைகளால் பிடித்துக் கொண்டு இருவரும் சேர்ந்து வாங்கினர். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டனர். குளித்து விட்டு ஹாலில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள் கவி. சோழன் அப்போது தான் குளித்து விட்டு வந்தான். ராம் பிரசாத்தும் சாப்பாட்டுடன் உள்ளே வந்தார். இருவரையும் சாப்பிட அழைத்தார். ஆனால் கவி அதை கவனிக்காமல் இருந்தாள்.
சோழன் தான் கவியை அழைத்து வந்து சாப்பிட வைத்தான். ஏதோ இரண்டு வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு சென்று படுத்துக் கொண்டாள். சோழன் சாப்பிட்டு விட்டு சோஃபாவில் வந்து அமர்ந்தான். ராம் பிரசாத் அவனிடம் வந்து தம்பி கீதா ரொம்ப சந்தோஷமா இருந்து நான் பார்த்தது நேற்று தான் அதுவும் உங்கள் கல்யாணத்தால் தான்.
கவி ரொம்ப நல்ல பொண்ணு அம்மாவைத் தவிர அவளுக்கு எதுவுமே தெரியாது. நீங்க நல்லா பார்த்துக்குவிஙகன்னு தெரியும் இருந்தாலும் சொல்றேன். கவியை சந்தோஷமாக பார்த்துக்க்கோங்க தம்பி அப்படின்னு சொல்லிட்டு போய்டுறார். இவனும் கதவை சாற்றி விட்டு வந்து கவியைப் பார்த்தான்.
அழுது அழுது முகமே வீங்கியதோடு தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து இனிமே எதுக்கும் நீ அழுகக் கூடாது என்று நினைத்துக் கொண்டு அவனும் சென்று படுத்துக் கொண்டான்.
இனி என்ன ஆகும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9
written by Competition writers
அத்தியாயம் 9
கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்.
அதிகாலையிலேயே ஒரு ஐந்து மணி போல் ஃபோன் வந்தது ராஜனுக்கு. அதில் கூறிய செய்தியில் அதிர்ந்து போய் நின்று இருந்தார் ராஜன். பின்னர் நான் உடனே அவங்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். சோழனின் அறைக்கு வேகமாக சென்று கதவைத் தட்டினார்.
சோழனும் இந்த நேரத்தில் என்ன என்று வந்து கதவைத் திறந்தான். அங்கே அவனின் ஐயா பதட்டத்துடன் நிற்கவும் என்னங்க ஐயா இந்த நேரத்தில் என்று கேட்டான். அதற்கு அவர் கவி என்று கேட்டார். அவனும் அவள் தூங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று கூறினான். சரிப்பா நீங்கள் ரெண்டு பேரும் உடனே மும்பை போகனும்னு சொல்றார்.
இப்போ எதுக்கு ஐயா மும்பை போகனும் அப்படின்னு கேட்கிறான். அதற்கு அவர் கவி அம்மாவை சீரியஸாக இருக்கிறாராம். அதனால் நீங்கள் உடனே கிளம்புங்க. அப்புறம் கவிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் அங்கே போய் தெரிஞ்சுக்கிட்டும் என்று கூறினார். அவனும் சரிங்க ஐயா நாங்கள் கிளம்புறோம் என்று கிளம்பினான்.
முதலில் அவன் சென்று குளித்துக் கிளம்பி வந்து கவியை எழுப்பினான். அவளின் அருகில் அவனுடைய ஃபோனில் ஒரு பாட்டை சத்தமாக வைத்து விட்டு பெட்டில் சென்று அமர்ந்து இருந்தான். அவளும் என்ன இது இந்த நேரத்தில் இவ்வளவு சத்தமாக பாட்டு கேட்கிறாங்க என்று எழுந்து பார்த்தாள்.
சோழனைப் பார்த்ததும் என்ன இவரு இந்த நேரத்தில் கிளம்பி இருக்கார் என்று பார்த்தாள். அவனும் அவளிடம் வந்து நம்ம மும்பை போகனும் போய் சீக்கிரமா கிளம்பி வா என்று கூறிவிட்டு கீழே சென்று விட்டான். அவளும் ஒரு வேளை அம்மாவை பார்க்கப் போகிறோம் என்று 15நிமிடத்தில் ரெடியாகி ஒரு சுடிதாரில் கிளம்பி வந்தாள்.
ராஜனும் சோழனும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அவள் வந்ததும் சரிப்பா இரண்டு பேரும் பார்த்துப் போய்ட்டு வாங்க என்று கவியை எதுவும் பேச விடாமல் அனுப்பி வைத்தார். அவர்களும் தலையை மட்டும் ஆட்டி விட்டு கிளம்பினர். வீட்டில் இருந்து காரில் சென்று ஏர்போர்ட் போய் ஃபிளைட்டில் செல்வதாக இருந்தது.
இருவரும் காரில் செல்லும் போதும் பேசிக் கொள்ளவில்லை. ஃபிளைட்டில் செல்லும் போதும் வேறு வேறு சீட்டில் கொஞ்சம் தள்ளி இருந்ததால் பேசிக் கொள்ளவில்லை. கவி தான் என்ன இவர் பேசவே மாட்டுறார் என்று மட்டும் ஒரு தடவை பார்த்தாள். பின்னர் அம்மா எப்படி இருக்காங்கன்னு தெரியலையே என்று ஃபோன் பண்ணினாள். ஆனால் ஃபோன் எடுக்கவில்லை.
அப்புறம் அம்மாவைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தாள் இனி எப்படி அம்மா தனியா இருப்பாங்க கூட யாரையும் வேலைக்கு வச்சிட்டு தான் வரனும் அப்படின்னு நிறைய யோசித்துக் கொண்டு சென்றாள். ஏனென்றே தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதையும் துடைத்துவிட்டுக் கொண்டு இருந்தாள்.
மும்பையும் வந்து விட்டனர். ராஜன் ஃபோன் செய்து பேசினார். இப்போது தான் ஏர்போர்ட் வந்ததாக கூறினான்.
அதற்கு அவர் கவி அம்மா கொஞ்சம் நேரத்திற்கு முன் தான் இறந்ததாக ஃபோன் வந்தது என்று சொன்னார். அதைக் கேட்ட சோழனுக்குமே கவலையாக தான் இருந்தது. அவரே கவியை பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட வைத்து கூட்டிட்டுப் போக சொன்னார். சரிங்க ஐயா என்று ஃபோனை வைத்தான்.
ஒரு டாக்சியை அழைத்து அவன் முன் சீட்டில் ஏறினான் கவியும் பின்னால் ஏறி அமர்ந்தாள். பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு போகச் சொல்லி ஹிந்தியில் சொன்னான். இவருக்கு ஹிந்தி தெரியுமா என்று கவி தான் ஆச்சரியமாக பார்த்தாள். ஹோட்டல் சென்று இருவரும் பேருக்காக கொஞ்சம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள்.
கவியின் வீட்டு அட்ரஸை டாக்சி டிரைவரிடம் காட்டி அங்கே போய் இருவரும் இறங்கினர். வீட்டின் வெளியவே மிகவும் கூட்டமாக இருந்தது. அதைப் பார்த்தவுடன் கவிக்கு பயமாக இருந்தது. உடனே பக்கத்தில் நின்று இருந்த சோழனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைப் பார்த்து ஒன்னும் இல்லை வா உள்ளே போகலாம் என்று கூட்டிச் சென்றான்.
உள்ளே சென்றதும் அவளின் அம்மா கீதாவை நடு ஹாலில் படுக்க வைத்து இருந்தனர். அதைப் பார்த்தவுடன் அம்மா என்று கத்திகொண்டே கீதாவின் அருகில் ஓடினாள். அவள் கத்தியது அங்கே இருந்த அனைவரையும் கலங்க வைத்தது. அப்படி கத்தி கதறினாள். சோழனுக்கும் அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. அவனால் அவளை அப்படி கதறுவதையும் பார்க்க முடியவில்லைய வெளியே சென்று விட்டான்.
ஆனால் அவளின் கதறல் சத்தம் வெளியேயும் கேட்டது.
கீதா எப்படி திடீரென இறந்தார். கவியின் நிலை என்ன ஆகும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8
written by Competition writers
அத்தியாயம் 8
ராஜனும் கீதாவும் இருவருக்கும் கல்யாணம் நடந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மாலை ஆனதும் கீதா தான் கிளம்புவதாகக் கூறினார். ஆனால் ராஜன் இங்கேயே இருக்க சொல்லினார். அதற்கு அவர் இல்லை நான் டிரீட்மண்ட்காக மும்பை போகனும்னு சொல்றாங்க. உடனே அவரும் இங்கேயே இருந்துப் பார்க்க முடியாதா என்று கேட்கிறார்.
இங்கேயே இருந்தால் கவி உங்கள் கூட எல்லாம் சரியாக பேசிக் கொள்ள மாட்டாள். அதனால் நான் போறேன் என்று சொன்னார். சரிம்மா உன் விருப்பம் கவிக்கிட்ட போய் பேசு என்று அனுப்பி வைக்கிறார். கீதாவும் கவி இருக்கும் அறைக்குச் சென்று பார்க்கிறார். அங்கே கவி ஏதோ யோசனையிலே அமர்ந்து இருந்தாள்.
கீதாவும் அவளிடம் சென்று கவி நான் போறேன் இனிமே நீதான் இங்கே இவர்களைப் பார்த்துக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது சரியா என்று கூறினார். அவள் ஏன் அம்மா அதற்குள் போறீங்க இங்கே எனக்கு யாரையுமே தெரியாது நீங்களும் போறேன் சொல்றிங்க அப்படின்னு சொல்றா.
கவி நீ எவ்வளவு தைரியமான பொண்ணு இங்கே இருக்கவங்க எல்லாரும் உன் சொந்தம் தான் அதனால் நீதான் அவங்களோட பேசிப் பழகணும் அப்புறம் நான் டிரீட்மண்ட் போணும் ல அதனால நான் போறேன் அப்படின்னு கீதா சொல்லிட்டு இரண்டு பேரும் வெளியே வராங்க. அப்புறம் சேரனிடமும் அவ டக்குன்னு பழக மாட்டாப்பா கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்றார்.
சேரனும் சரி என்று சொன்னான். சோழன் எங்கே நான் சொல்லிட்டு கிளம்பறேன் என்று கேட்டார். உடனே ராஜனும் சேரனை அனுப்பி அவசர வர சொன்னார். சேரனும் சென்று தன் அண்ணனை அழைத்து வந்தான். சோழன் தான் இப்போ எதுக்கு என்ன கூப்பிடுறாங்க அதான் அவங்க நினைச்ச மாதிரி எல்லாமே நடந்துருச்சே அப்படின்னு கோவத்தில் வந்தான்.
சோழன் வந்ததும் கீதா அவனிடம் சென்று கவி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. அவளுக்கு என்ன வேண்டும் என்று சொல்லக் கூட மாட்டாள். சிட்டில வளர்ந்த பொண்ணு இப்படிலாம் வில்லேஜ் பக்கம் வந்தது இல்லை இது எல்லாம் அவளுக்கு புதுசு. அங்கேயும் அவளுக்கு ஃபிரண்ட்ஸ்னு யாரும் இல்லை. யாருடையும் டக்குன்னு பழக மாட்டாள் தம்பி நீங்க அவளை நல்லா பார்த்துப்பிங்க என்று தான் அவளை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு கிளம்புறார்.
அவர் பேசியதற்கு சோழன் எந்த பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான். ராஜன் தான் நாங்க கவியை நல்ல படியாக பார்த்துப்போம் நீங்க கவலைப் படாமல் போய்ட்டு வாங்க என்று சொன்னார். அப்புறம் அனைவரும் சென்று கீதாவையும் ராமையும் அனுப்பி வைக்க வீட்டிற்கு வெளியே சென்றனர். கவி தான் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டிப் போவதைக் கூட கண்டுக் கொள்ளாமல் கீதாவை கட்டி அணைத்து அழுதாள்.
கீதாவும் நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கணும் கவி அப்படின்னு சொல்லிட்டு அவளோட கையை சோழனின் கையில் சேர்த்து வைத்து விட்டு சென்றார். பின்னர் இருவரும் காரில் ஏறிக் கொண்டு கிளம்பினர். கீதா இருவரின் கைகளையும் பார்த்து விட்டு மகிழ்ச்சியாகச் சென்றார். கார் சாலையை விட்டு மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள் கவி.
ராஜன் தான் உள்ளே போலாம் மா என்று அழைத்தார். பின்னர் தான் இருவரும் கையைப் பிரித்தனர். சோழன் முதலில் உள்ளே சென்று விட்டான். கவியும் மற்றவர்களும் பின்னர் சென்றனர். கவியிடம் ராஜன் இது உன் வீடும்மா நீ இங்கே உன் விருப்பப்படி இருக்கலாம். அம்மாவ பாக்கணும்னா எபபோனாலும் சொல்லு நான் அவனை கூட்டிட்டுப் போக சொல்றேன் சொல்றார். அவளும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
இரவு 8 ஆனதும் சாப்பிட எல்லாரும் வந்தனர். அமைதியாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். சோழன் மட்டும் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று விட்டான். கவிக்கு சாப்பாடு தொண்டையைத் தாண்டி இறங்கவில்லை. அவளும் ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்து முன் இருந்த அறைக்கு சென்று விட்டாள்.
கொஞ்சம் நேரம் ஆனதும் உறவுக்கார பெண் ஒருவர் வந்து கவியைக் குளித்து விட்டு ஒரு புடவையை கட்டிக்கொண்டு வர சொன்னார். அவளும் குளித்து ரெடியாகி வெளியே வந்தாள். வெளியே அனைவரும் உறங்க சென்று விட்டனர். அவளிடம் ஒரு சொம்பு நிறைய பால் கொடுத்து மேலே இருக்கும் முதல் அறைக்கு சென்று விட்டுட்டு சென்று விட்டார்.
அங்கே கதவின் அருகே நின்று கதவைத் தட்டினாள் கவி. சோழன் வந்து கதவைத் திறந்து விட்டான். இவளும் உள்ளே சென்றாள். அங்கு முதலிரவிற்கான எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் அறையே சுத்தமாக இருந்தது. ஏனெனில் அனைத்துமே இவன் தான் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டிருந்தான். அவன் இவளைப் பார்த்து விட்டு ஒரு போர்வையும் தலையணையும் கொண்டு வந்து சோஃபாவில் வைத்து விட்டு சென்று முதுகைக் காட்டிக் கொண்டு படுத்து விட்டான்.
கவியும் அவனையும் சோஃபாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சொம்பைக் கொண்டு போய் டேபிளில் வைத்து விட்டு வந்து அமர்ந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் திரும்பியும் பார்க்கவில்லை. அவளும் விளக்கை எல்லாம் அணைத்து விட்டு வந்து படுத்து விட்டாள். டிராவல் செய்து வந்த அசதியில் படுத்ததும் தூங்கி விட்டாள்.
ஆனால் சோழனுக்கு தான் தன் அறையில் ஒரு பெண் இருக்கிறாள் என்றதும் தூக்கமே வரவில்லை. அப்புறம் அவனும் சிறிது நேரத்தில் அப்படியே தூங்கி விட்டான்.
அதிகாலையிலேயே ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் கூறிய செய்தியில் அதிர்ந்து நின்றார் ராஜன்.
அப்படி என்ன செய்தியாக இருக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
2.சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 2
தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
“என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?”
தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக.
“சின்னவன் ஹாஸ்பிடல்ல இருக்கான். பெரியவன் ஆட்டோ ஓட்டப் போயிருக்கான்.”
“ஏய்! பொய் சொல்லாம உண்மையச் சொல்லு. உன் பெரிய பையன் இப்ப எங்க?”
“சத்தியமா என் பையன் ஆட்டோ ஓட்டத்தான் சார் போயிருக்கான். அவனை எதுக்காகத் தேடுறீங்க?”
“எதுக்காகவா? கஞ்சா கேஸை அவன் மேல போட்டு ஆயுசுக்கும் உள்ள தள்ள…”
“ஐயோ! என்ன சார் சொல்றீங்க? அவன் அந்த மாதிரிப் பையன் இல்ல சார். இப்பத்தான், என் சின்னப்புள்ள உயிர் பிழைச்சு ஹாஸ்பிடல்ல படுத்திருக்கான். அதுக்குள்ள இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்களே.”
“உன் ஒப்பாரியக் கேட்க எங்களுக்கு நேரமில்லை. ஒழுங்கு மரியாதையா உன் பையன் எங்கன்னு சொல்லிடு.” என அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுதே சரளாவின் கணவர் சத்யராஜ் உள்ளே நுழைந்தார்.
“என்னங்க! இவங்க என்னென்னமோ சொல்றாங்க, என்னன்னு கேளுங்க. நம்ம மகனைக் கஞ்சா கேஸ்ல பிடிச்சிட்டுப் போக வந்திருக்காங்களாம். அவன் அந்த மாதிரிப் பையன் இல்லைன்னு நீங்களாவது சொல்லுங்க.”
உள்ளே நுழைந்த சத்யராஜுக்கும் பெரும் பதற்றம் தான் என்றாலும், பொறுமையாக அவர்களிடம் காரணத்தைக் கேட்க, “உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உன் மகன் எங்க இருக்கான்னு சொல்லிட்டா நல்லது.” என்றார்கள்.
“ஒரு நிமிஷம் இருங்க சார். நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வரேன்.”
“நாங்க வந்த விஷயத்தைச் சொல்லித் தப்பிக்க வைக்கலாம்னு பார்க்கறியா. அவனை எப்படி ஸ்டேஷனுக்கு வர வைக்கனும்னு எங்களுக்குத் தெரியும்.” என்றவர்கள் சத்யராஜைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
கணவனை விட்டுவிடச் சொல்லிக் கதறியப்படி, சரளா பின்னால் கெஞ்சிக் கொண்டு செல்ல, சிறிதும் மனம் இறங்காமல் அங்கிருந்து புறப்பட்டார்கள் அதிகாரிகள். அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரும், தங்களை வேடிக்கை பார்ப்பதில் கூனிக்குறுகிப் போனவர் உடனே தன் மகனுக்கு அழைப்பு விடுத்தார். பத்து முறைக்கு மேல் அழைத்தும் எடுக்காத மகனை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தவர் கணவனைத் தேடி காவல் நிலையத்திற்குச் சென்றார்.
பொறுமையாக வீட்டிற்கு வந்தவன் காதில் நடந்த சம்பவங்கள் விழ, அவனும் அடித்துப் பிடித்து ஓடினான். அவர்கள் ஏரியா காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரளா விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு இப்படியான யாரும் வரவில்லை என்ற செய்தி இடியாக விழ,
“போலீஸ்காரங்க வந்துதான் சார், என் புருஷனைக் கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்சம் என்ன ஏதுன்னு விசாரிங்க சார். என் மகனை வேற, யாரோ அடிச்சுப் போட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான். இவரையும் யாருன்னே தெரியாதவங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க. எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுங்க சார்.” என அங்கிருந்த அனைவரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கும் நேரம் சரியாக வந்து சேர்ந்தான் கருடேந்திரன்.
“கருடா…” என ஓடிவரும் தாயைச் சேர்த்தணைத்துக் கொண்டவன் நடந்ததைக் கேட்டறிந்தான். உடனே தந்தை சத்யராஜைத் தொடர்பு கொள்ள, “கமிஷனர் ஆபீஸ்க்கு வாடா” என்றதோடு அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
எதனால்? என்பதைக் கண்டு கொண்டவன், தன்னுடன் வருகிறேன் என்ற அன்னையைச் சமாதானம் செய்து வீட்டில் விட்டுவிட்டுப் புறப்பட்டான். மகன் அழைப்பைப் பார்த்ததும்,
“என் பையன் ரொம்ப நல்லவன் சார். அவனை எதுவும் பண்ணிடாதீங்க.” எனக் கோரிக்கை வைத்தார்.
“நல்லவனா? நல்லவன் தான் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டுப் போவானா?” என்ற கரகரத்த குரலில் சத்யராஜ் திரும்ப, இறுகிப்போன முகத்தோடு நின்றிருந்தார் பொன்வண்ணன்.
“என்ன சார் சொல்றீங்க?”
“என் பொண்ணு கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டுப் போயிருக்கான். உன் பையனைச் சும்மா விட மாட்டேன். வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருக்கப் போறான். இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்காக நீயும் இந்தத் தண்டனையை அனுபவி.”
“நீங்க சொல்ற மாதிரி என் பையன் ஒரு நாளும் பண்ணி இருக்க மாட்டான் சார். அவன் ரொம்ப நேர்மையானவன். அவனுக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா. அதனால நிச்சயம் பண்ணிருக்க மாட்டான்.”
“கூடப்பிறந்தவள் இருக்கும்போதே இப்படி ஒரு காரியத்தைப் பண்றான்னா, அவன் எப்படிப்பட்ட கேடுகெட்டவனா இருப்பான்.” என்ற பொன்வண்ணன் அங்கிருந்த அதிகாரிகளிடம்,
“அவன் வந்ததும் என்ன, ஏதுன்னு கேட்காம அடிச்சு நொறுக்குங்க சார். பல பேர் பார்க்க என் பொண்ணு கழுத்துல தாலி கட்டி அசிங்கப்படுத்தி இருக்கான். எங்களுக்கு இருக்க ஸ்டேட்டஸ்க்கு எப்படி வெளிய தலை காட்ட முடியும். இப்பவே ஆளாளுக்கு போன் பண்ணி, என்ன பொன்வண்ணன் இப்படி ஆயிடுச்சான்னு குத்தலா கேக்குறாங்க. இதுக்கெல்லாம் காரணமான அவன் நல்லாவே இருக்கக் கூடாது.” எனக் கட்டளையிட்டார்.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார். இனி அவனை ஆண்டவனால கூடக் காப்பாத்த முடியாது.”
“வந்துட்டானா?” என்ற அதிகாரக் குரலுக்கு சத்யராஜ் திரும்ப, விரைப்பான முகத்தோடு உள்ளே நுழைந்தாள் ரிதுசதிகா.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் மேடம்.”
“கையோட இழுத்துட்டு வர்றதை விட்டுட்டு விளையாடிட்டு இருக்கீங்களா? இந்த விஷயத்துல நான்தான் ஜெயிக்கணும். தெரியாமல் தாலி கட்டிட்டேன், என்னை விட்டுடுன்னு என் கால்ல விழுந்து கதறனும். அப்படி நடக்கல… அவனோட சேர்த்து உங்களையும் கொன்னுடுவேன்.”
“ரிது…”
“பின்ன என்னப்பா? அவனைக் கூட்டிட்டு வராம அவன் அப்பாவக் கூட்டிட்டு வந்திருக்காங்க.”
“போலீஸ்காரங்களுக்கு மரியாதை கொடு. அவங்க டூட்டியை அவங்க கரெக்டா பார்ப்பாங்க.”
“என்னத்தப் பார்ப்பாங்க?”
“இந்த விஷயத்தை இவ்ளோ தூரம் எதுக்குப் போக விட்ட? ஒருத்தன் என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்னு சொல்ல வேண்டியது தான.”
“எனக்கு என்ன தெரியும், அந்தப் பரதேசி இப்படிப் பண்ணுவான்னு. என்னென்னமோ வந்து உளறிட்டு இருந்தான். அது என்னன்னு கூட எனக்கு சரியாப் புரியல. அதுக்குள்ள இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டான்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த கருடேந்திரன் பார்வையில் முதலில் விழுந்தது இவள்தான். பார்வையால் அவன் சுட்டெரிக்க, இவள் வெட்டிக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வையும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருக்க,
‘இவனா!’ எனத் திகைத்தார் பொன்வண்ணன்.
“வாடா வா…” என அன்பாக அழைத்த காவல் அதிகாரிகள், “இப்படி வந்து நில்லுடா” என்றிட, அவர்களைச் சிறிதும் கண்டு கொள்ளாது தந்தையிடம் சென்றவன்,
“உங்களை ஏதாச்சும் பண்ணாங்களாப்பா?” என அவர் நலத்தை விசாரித்தான்.
“அதெல்லாம் இல்லப்பா. நீதான் இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டன்னு பேசிக்கிறாங்க. என் புள்ள அப்படி எதுவும் பண்ணிருக்க மாட்டான்னு எவ்ளோ சொல்லியும் நம்பல.”
“இவங்கெல்லாம் பணத்துக்கு வேலை பார்க்குறவங்க. இவங்ககிட்ட நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாதுப்பா.”
“என்னடா, போலீஸ்காரங்களையே நக்கல் பண்றியா?”
“ஆமா சார். நீங்க பணத்துக்காகத் தான இவ்ளோ விசுவாசமா வேலை பார்க்குறிங்க. நேர்மைக்கு வேலை பார்க்குறவங்களா இருந்தா, ஒரு மாசமா போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்துட்டு இருக்க என் கேஸை எடுத்து இவளை உள்ள தள்ளி இருப்பீங்க.” என ரிதுவைக் கை காட்டினான்.
“யூ ராஸ்கல்! இன்னும் உன் கொழுப்பு அடங்கலையா? இப்பப் பாருடா, உன்னை என்ன பண்றன்னு.”
“தப்புப் பண்ணாதவன் கொழுப்பு அடங்காது. உன்னால இந்தப் போலீஸ்காரங்களைத் தான் விலை பேச முடியும், உண்மையை இல்லை.”
“என்ன சார், இவனப் பேச விட்டு வேடிக்கை பார்க்குறீங்க. நாய அடிக்கிற மாதிரி அடிச்சு உள்ள தள்ளுங்க.”
ரிதுசதிகா கட்டளையை ஏற்ற அதிகாரிகள், அவன் சட்டைக் காலரைப் பிடித்துச் சுவரில் தள்ளி விட்டு விசாரிக்க, “ஆமாம். நான்தான் தாலி கட்டினேன்.” என சத்யராஜை அதிரவிட்டான்.
“எவ்ளோ திமிரா சொல்றான் பாரு.” எனப் பல்லைக் கடித்தவள், “என்னை ஃபாலோ பண்ணி வந்து என் பேக்ல இருந்த இருபது லட்சத்தையும் திருடிட்டுப் போயிட்டான் சார். அதையும் என்ன ஏதுன்னு விசாரிங்க.” என ஏற்றி விட்டாள்.
“உன் வாயில உண்மையே வராதாடி களவாணி. இந்த மாதிரிப் பாவத்துக்கு மேலப் பாவம் பண்ணிக்கிட்டே போனா புழு பூத்து தான் சாவ…”
பேசிக் கொண்டிருந்த கருடேந்திரன் கன்னத்தில் ஓங்கி அடித்த அங்கிருந்த அதிகாரி, “எங்க முன்னாடியே இவ்ளோ திமிராப் பேசுற. வாய மூடிட்டுக் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும். இல்லன்னா உன்ன மட்டும் இல்ல, உன் அப்பாவையும் சேர்த்து உள்ள தள்ளிடுவேன்.” என்ற பின்னும் அவள் மீதான பார்வையை மாற்றவில்லை கருடேந்திரன்.
“எங்கடா அந்த இருபது லட்சம்?”
“நான் எடுக்கல சார்…” என்றவனை நம்ப மறுத்த அதிகாரிகள் அவர்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
அடி வாங்கும் மகனைக் கண்ட சத்யராஜ் கதற, ஆனந்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரிது. வாயிலிருந்து வழியும் ரத்தத்தைத் துடைக்க கூட நேரம் கொடுக்காதவர்கள், திருடிய பணத்தைக் கொடுக்கும்படி எச்சரிக்க, “முதல்ல இவ என்ன பண்ணான்னு கேளுங்க சார்” என்றான் வலிகளுக்கு நடுவில்.
“அவ இவன்னு பேசுவியா?” என நான்கு சுவர் அதிரும்படி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிகாரி, “நீங்க கம்ப்ளைன்ட எழுதிக் கொடுங்க மேடம். ரெண்டு கேஸ் இல்லாம, ஆள் கிடைக்காம இருக்க மொத்தக் கேஸையும் இவன் மேல போட்டு உள்ள தள்ளுறேன்.” என்றார்.
புன்னகை முகமாகச் சரி என்று தலையசைத்தவளிடம் சத்யராஜ் கெஞ்சிக் கொண்டிருக்க, “அவகிட்டக் கெஞ்சாதிங்கப்பா. அவ அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நம்மளை மாதிரி ஆளுங்ககிட்ட பணத்தை வாங்கி வசதியா வாழற பிச்சைக்காரி.” என்றதும் வெகுண்டெழுந்தவள் அவனை அடிக்கப் பாய்ந்தாள்.
தன் மகனை அடிக்கப் போகும் அதிர்ச்சியில், சத்யராஜ் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிற்க, காவலர்கள் கையைப் பிடித்திருப்பதால் விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தான். எல்லாம் அவள் வசம் இருப்பதால், ஓங்கிய கையைக் கன்னத்தோடு “பளார்!” என்று சேர்க்கும் நேரம் யாரோ தடுத்தார்கள். ரிதுசதிகா யார் என்று பார்க்க, அவள் தந்தை பொன்வண்ணன்.
“அப்பா…” என்ற மகளின் கைகளை விட்டவர், “அவனை விடுங்க சார்.” என அனைவரையும் திகைக்க வைத்தார்.
“அப்பா…”
“ஒரு நிமிஷம் இரு.” என முன்னே நகர்ந்து கருடேந்திரன் முன்னால் நின்றார்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5
written by Competition writers
அத்தியாயம் 5
சோழபுரம்,
கீதாவும் கவியும் சோழபுரம் உங்களை வரவேற்கிறது என்னும் பெயர் பலகையை பார்த்துக் கொண்டே அவ்வூரில் நுழைந்தனர். சுற்றி எங்கும் பச்சை பசேல் என்று அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்வூரைப் பார்த்து வியந்தனர்.
கவி தன் அம்மாவிடம் இங்கே பாருங்க அம்மா இந்த ஊர் எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது. மும்பை எப்போதும் டிராஃபிக் சிக்னல் இரைச்சல் சத்தம்னு எப்படி இருக்கும் இங்கே எவ்வளவு அமைதியாக இருக்கிறது.
அப்படியே இதுலாம் சுற்றி பார்த்தால் இங்கேயே இருந்துடலாம் னு தோணுது அம்மா அப்படின்னு சொல்றா. ஆனால் அவளுக்கு அப்போது தெரியவில்லை அதுதான் நடக்க போகிறது என்று. அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டார் கீதா ஆனால் எதுவும் பதிலளிக்கவில்லை ஏதோ ஒரு யோசனையிலேயே இருந்தார்.
அப்போது கார் ஒரு இடத்தில் நின்றது. அங்கு ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரிடம் தான் கீதாவும் முன்பு ஃபோன் பேசி இங்கு இருக்கும் நிலையைத் தெரிந்து கொண்டார். அவர் தான் ராம்பிரசாத் அவருடைய நண்பர் அவரும் வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டார். அவர் கீதாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் அங்கு என்ன நிலவரம்னு கூறினார். காரும் பெரிய வீட்டை நோக்கி நகர்ந்தது.
ராஜன் இல்லம் (பெரிய வீடு),
மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் மாப்பிள்ளை கோலத்தில் கம்பீரமாக சோழனும் வந்து விட்டான். அவனை அமர வைத்து சடங்குகளை செய்தார் ஐயர். அதை பார்த்ததும் ராஜன் மிகவும் சந்தோஷமாக இருந்தார். ஆனால் அந்த சந்தோஷம் இன்னும் கொஞ்சம் நேரத்தில் காணாமல் போகும் என்று அவருக்குத் தெரியவில்லை.
கொஞ்சம் நேரத்தில் பொண்ணை அழைச்சிட்டு வாங்கன்னு ஐயர் சொன்னதும் பொண்ணை அழைக்க சென்றார்கள். ஆனால் பத்து நிமிடம் ஆகியும் யாரும் வரவில்லை. அதனால் ஐயர் நாழி ஆகுது சீக்கிரமா பொண்ணை வர சொல்லுங்க ன்னு சொல்றார். அப்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு பெண் சென்று அழைக்கப் போனார்.
இங்கே மணமேடையில் அமர்ந்து இருந்த சோழனுக்கும் பெண் இன்னும் வரவில்லை என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் அதே சமயத்தில் ஐயாவிற்கு கவலையாகி விடுமே கல்யாணம் நின்று போனால் என்று யோசனையோடு அமர்ந்து இருந்தான். ஆனால் அவனுக்கும் தெரியவில்லை சற்று நேரத்தில் கல்யாணம் நடக்கப் போகிறது என்று.
என்னாச்சு பெண்ணை அழைத்து வர சொல்லி இவ்வளவு நேரம் ஆகிறது இன்னும் யாரும் வரவில்லை என்று ராஜன் ஐயா தற்போது சேரனை அனுப்பி பார்த்து விட்டு வர சொன்னார். சேரனும் சென்று பார்த்தால் அங்கே பெண் வீட்டார் சோகத்தில் அமர்ந்து இருந்தனர். அதைப் பார்த்தவுடன் சேரனுக்கு ஏதோ தவறு நடந்து விட்டது என்று தெரிந்து கொண்டான். அதனால் சென்று தன் அப்பாவிடம் கூறி நீங்களே வந்து பாருங்கள் ஐயா என்று அழைத்துப் போனான்.
கல்யாணப் பெண்ணிற்கு என்னானது, சோழன் ஏன் சந்தோஷமாக இருந்தான், கவியின் வருகை சோழனின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றப் போகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2
written by Competition writers
அத்தியாயம் 2
மும்பை,
காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான் நம்ம ஹீரோயின் கவிநிலா.
அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா பார்க்கவும் சின்னதா இருக்கா செய்வதும் சின்ன பிள்ளைத்தனமா இருக்கா இவள கட்டிக்கொண்டு யாரு தான் பாடுபட போறாங்களோ பாவம் அந்த பையன்னு பொலம்பிட்டு இருக்காங்க.
சரியாக 9 மணி ஆனதும் அவளது அறைக் கதவு திறந்தது. அங்கிருந்து ஜீன்ஸ் பேண்ட் குர்த்தான்னு மாடர்ன் மங்கையாக இறங்கி வந்தாள் கவி. அவளோட அம்மாவும் ஏன் கவி இப்படி பண்ற ஒரு நாளைக்காச்சும் சீக்கிரமா எந்திரிச்சு வரியா எப்போவும் இப்படி கிளம்பி லேட்டா போனா எப்படி இன்டர்வியூ கரெக்ட் டைம்க்கு அட்டென்ட் பண்ணுவ அப்புறம் வந்து வேலை கிடைக்கல ன்னு மட்டும் பொலம்புறது அப்படின்னு சொல்றாங்க.
அதற்கு அவள் அதனால் தான்மா இன்னைக்கு 12 மணிக்கு தான் இன்டர்வியூ நான் 9 மணிக்கே கிளம்பிட்டேன் இன்னைக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு உறுதியா சொல்றாள். சரி சரி அதை நம்ம ஈவ்னிங் பார்ப்போம் இப்போ சாப்பிட்டுட்டு கிளம்புன்னு கீதா சொல்றாங்க. அவரும் ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை செய்ராங்க அதுவும் வீட்டில் இருந்து ஒரு ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கும்.
கவியும் சாப்பிட்டு விட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் இன்டர்வியூக்கு சென்று விட்டாள். கீதாவும் வீட்டை பூட்டி விட்டு ஸ்கூலிற்கு சென்றார். டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு நின்று நின்று எப்படியோ 11.40க்கு ஆஃபிஸ் வந்துவிட்டாள். அது ஒரு ஐந்து மாடி கட்டிடம் அதில் ஐந்தாவது மாடியில் எஸ்.கே டிசைனிங் ஹவுஸ் அப்படின்ற கம்பெனியில் தான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்டர்வியூ இருந்தது.
நம்ம ஹீரோயின் ஃபேஷன் டிசைனிங் படிச்சி முடிச்சிட்டு ரெண்டு மூணு கம்பெனில கொஞ்ச நாள் வேலை செஞ்சிட்டு பிடிக்காமல் மாறி மாறி இப்போ இங்கே வந்திருக்கா. இவ்வளவு நாட்கள் அட்டென்ட் பண்ணுன இடம் எல்லாமே அவள் லேட்டா போனதுனால தான் கிடைக்காம போச்சு. ஏன்னா அவளோட டிசைன்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கும் அதே மாதிரி அவ படிப்புலையும் 91% வச்சிருந்தாள். அதனால் ஈஸியாக எங்கே வேணும்னாலும் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
இப்போதும் அதே மாதிரி இன்டர்வியூ நல்லா அட்டென்ட் பண்ணிட்டு வேலையும் முடிவு செய்துவிட்டனர். அடுத்த மாதத்தில் இருந்து வந்து சேர்ந்துக் கொள்ள சொன்னார்கள். அவளும் சந்தோஷமாக ஸ்வீட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள். அங்கே சென்றால் ஆறு ஆகியும் அவளுடைய அம்மா வரவில்லை. அம்மா இன்னும் ஏன் வரவில்லைன்னு ஃபோன் பண்ணி பார்க்கிறாள்.
ஃபோன் போகவே இல்லை சரின்னு ஸ்கூலில் பார்க்கலாம்னு கிளம்பினாள் அப்போது ஒரு தெரியாத நம்பரில் இருந்து ஃபோன் வந்தது யாருன்னு எடுத்து பேசினாள். அதை எடுத்து பேசியதும் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டி ஓடியது. இப்போ எங்கே வரனும்னு கேட்டுட்டே வேகமாக போறாள்.
அந்த ஏரியாவில் உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடலிற்கு சென்று ஸ்கூட்டியை சரியாக கூட நிறுத்தாமல் வேகமாக உள்ளே ஓடினாள். அங்கு ரிசப்ஷன் சென்று கீதான்னு அழுதுட்டே பேர் சொல்றா. அவங்களும் ரெண்டாவது மாடியில் ஐ.சி.யூவில் இருக்காங்கன்னு சொல்லி முடிப்பதற்குள் லிஃப்ட் கூட பார்க்காமல் படியில் ஓடினாள்.
அங்கே அவளோட அம்மா கூட வேலை செய்யும் டீச்சர் ஒருவர் இருந்தார். அவரிடம் அம்மாக்கு என்னாச்சு ன்னு கேட்கிறாள். அவரும் நல்லாத்தான் பேசிக்கொண்டு இருந்தார் தீடீர்னு மயங்கிட்டாங்கன்னு சொல்றாங்க. அப்போது டாக்டர் வெளியே வந்தார். அம்மா எப்படி இருக்காங்க இப்போ ஓ.கே தான டாக்டர் ன்னு கேட்கிறாள். நீங்க அவங்களோட பொண்ணா வாங்க உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க.
அவளும் டாக்டர் ரூம்க்கு போனாள். அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிறார். இல்லை டாக்டர் அம்மா ஏதோ லோ பிரசரால தான மயங்கிட்டாங்க சரியாகிடும்ல னு சொல்றா. அதற்கு அவர் அவங்களுக்கு பிளட் கேன்சர் கடைசி ஸ்டேஜ் இன்னும் எத்தனை நாள் இருப்பாங்கன்னு சொல்ல முடியல இது உங்களுக்கு முன்னாலே தெரியும்னு நினைச்சேன். இனிமே நம்ம எதுவும் பண்ண முடியாது மா அப்படின்னு சொல்லிடுறார். (எல்லாம் ஹிந்தி தான் நமக்கு தமிழில்)
அவ அப்படியே ஷாக் ஆகி இருக்காள். அப்படியே அழுதுகொண்டே இதுலாம் அம்மாக்கு தெரியுமா னு கேட்கிறாள். அவங்களுக்கு இரண்டு வருடங்கள் முன்பே தெரியும் ஆனால் உங்களுக்கு தான் சொல்லல. அப்போது இருந்தே மருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாங்க னு சொல்றார்.
இன்னும் கொஞ்சம் நாள் இங்கே தான் இருக்கணும் அவங்களோட ஆசைகள் னு எதுவும் இருந்தால் கேட்டு நிறைவேற்ற பாருங்கள்னு சொல்லி விட்டு போய்டுறார். அவளும் அமைதியாக எழுந்து போய் ஐ.சி.யு. கண்ணாடி வழியாக அம்மாவ பாத்துட்டு வந்து அங்க போட்டு இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தாள்.
சோழபுரம்,
நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறமா எப்போதும் போல சோழன் தன்னுடைய வேலையை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கான். அவனுடைய அப்பாவும் தம்பியும் கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். பொண்ணோட நம்பர் கிடைக்குமா னு சோழன் தான் தேடிக் கொண்டு இருந்தான். ஆனால் அதை கிடைக்க விடவில்லை அவனோட அப்பா.
சோழனுக்கு ஃபோன் நம்பர் கிடைக்குமா கவியோட அம்மா கடைசி ஆசை என்னவா இருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.
Newer Posts