Tag:
Love
1. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 1
சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.
வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.
அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.
பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும் என்று எண்ணி பலர் காத்துக் கொண்டிருக்க,
சவாரியை அவசரமாக ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்களையும், வெகு வேகத்தில் இருசக்கர வாகனங்களை செலுத்தும் பயணிகளையும் தடுக்கும் விதமாக போக்குவரத்து சிக்கல் இருப்பதால், வேகமெடுத்து செல்ல இயலாமல் மெதுவாக ஊர்ந்தபடி நகர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் பல்வேறு சத்தங்கள் – வண்டிகளின் ஹார்ன், போன் அழைப்புகள், வண்டிகளின் கார் கிளச்சின் சப்தம், ரேடியோ எஃப்எம் பேச்சுகள், சிக்னலின் ஓரத்தில் இருக்கும் நாயின் கத்தல், கடைத்தெருவில் இருக்கும் சிறு வியாபாரிகளின் குரல் என்று பற்பல!
அந்த சுறுசுறுப்பான மக்கள் கூட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை! ஒவ்வொரு ஓட்டம்! வெவ்வேறு சூழ்நிலை! பல்வேறு கவலைகள் மற்றும் வலிகள்!
ஆனால், அந்த பரபரப்புக்கு நடுவில், பலரும் யூடியூபில் ஒரு வீடியோவையே பார்த்தபடி இருந்தனர்.
அது ஏதோ ஒரு உண்மையான சம்பவம் பற்றிய செய்தியை விளக்கமாக கூறும் காணொளி.
தற்பொழுது வலையொளியில், அதாவது யூடியூப்பில் உண்மை சம்பவங்களை பற்றிய செய்தியை, சாமானிய மக்களுக்கு விளக்கும் படி சொல்லும் மற்றும் பிறருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் மக்களை ஊக்குவிக்கும் போன்ற காணொளிகளை பதிவேற்றும் சேனல் அது.
“ஹெலோ எல்வி க்ரூஸ் (ELVI CREWS), இது உங்க எல்விபீடியா.
இப்ப நான் எதை பத்தி பேச போறேங்கிறது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கும்…
எஸ் அஷ்வினி மர்டர் பத்தி தான்,
யாரும் ஷாக் ஆகிட வேணாம்… என்னடா இவன் மர்டர் அப்படின்னு சொல்றானே, அந்த பொண்ணு சூசைட் தானே பண்ணிக்கிச்சு, இவன் எந்த விஷயமும் தெரியாம உளறுறானோ ன்னு யோசிக்கலாம்,
ஆனா, ஒருத்தரை தற்கொலைக்கு தூண்டுகிற செயல் கூட கொலைக்கு தான் சமம் னு சொல்வேன், அப்போ அதுல இருந்த எல்லாருக்குமே இந்த கொலைக்கு சம்பந்தம் இருக்கு… இல்லையா?
என்றவன் அவள் ஏன்? எதனால் இறந்தால்? என்றெல்லாம் விவரித்து கூறியவன்,
மேலும்,
இந்த அஷ்வினியோட இறப்பு ஒன்னும் முதலாவது கிடையாது… இங்க பல பொண்ணுங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உடலளவிலும் மனதளவிலும் சிதைஞ்சி போய்ட்டு தான் இருக்காங்க… அதுல இந்த மாதிரியான நியூஸ் 0.1 சதவீதம் நம்மளோட கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு… தெரியாம எத்தனையோ இறப்புகள், எத்தனையோ கொடுமைகள் ன்னு எக்கச்சக்கமா நடக்க தானே செய்யுது…
ஏன் நாலு வருஷம் முன்னாடி கூட, கேரளாவில் ஒரு பொண்ணு செத்து போச்சு, அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும், நியாயம் கிடைக்கணும்னு சோஷியல் மீடியாவில் கொந்தளிச்சோம், அதுக்கு அந்த பொண்ணோட புருஷன ஜெயிலில் போட்டாங்க, ஆனா, அவங்களே இப்ப ஜாமீனும் கொடுத்து வெளியே விட்டு இருக்காங்க… பலருக்கும் இந்த விஷயம் தெரியாது,
நாமளும் அந்த பொண்ணோட இறப்பை மறந்துட்டு இந்த பொண்ணோட இழப்பை பத்தி பேச ஆரம்பிச்சிட்டோம்,
இப்ப எல்லாம் யாரோட கண்ணீருக்கும், வலிக்கும், அவங்களோட இழப்புக்கும் நியாயம்னு கிடைக்கிறதே அரிதாகி போகுது…
நாம ஒரு விஷயத்தை பரபரப்பாக பேச ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதோட ஆயுட்காலம் குறைஞ்சது ஒரு வாரம் தான், அதுக்கு பிறகு வேற ஒரு ஃப்ளாஷ் நியூ வரும், நாமளும் அதுக்கு ஜம்ப் ஆகி வேறொரு புது நியூஸ பேசிட்டு போய்ட்டே இருப்போம்,
இதுல கன்கிளுஷன் சொல்லவெல்லலாம் என் கிட்டயோ உங்க கிட்டயோ எதுமே இல்லங்க… உங்களோட பிரச்சினைக்கு உங்க கிட்ட மட்டும் தான் தீர்வு இருக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும் கிவ் அப் மட்டும் பண்ணி தப்பான முடிவை எடுக்காதீங்க, அந்த முடிவினால் பாதிக்கப்பட போறது உங்களை சார்ந்தவங்க மட்டும் தான்.
சோ, ப்ளீஸ் யாருமே தப்பான முடிவை நோக்கி போகாதீங்க, ஏதோ ஒரு நிமிஷ தேவையில்லாத முடிவால் வாழ்க்கையை முடிக்கும் நிலைக்கு போய்டாதீங்க,
தற்கொலை எந்த விதத்திலும் சரியான முடிவா ஆகிடாது, சோ பீ ஸ்ட்ராங், கீப் தின்க் பாஸிட்டிவ்.”
என்பதுடன் அவனுடைய உரையை முடித்துக் கொண்டான் வலையொளியில் (Youtube) பிரபலமான எல்விபீடியாவின் எல்வின் ஆரோன்.
அந்த கானொளி மூலம் அவன் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் கேட்கும் பொழுது… அந்த காலை பொழுதின் பரபரப்பையே ஒரு கணம் நிறுத்தி மௌனமாக்கத் தான் செய்தது.
மேலும், அந்த காணொளியின் கீழே அவனுடைய சந்தாதாரர்களும் (subscribers) அவர்களுடைய கருத்துக்களை நேர்மறை எதிர்மறை கருத்துகளை பகிர்ந்தபடி இருந்தனர்.
அங்கு அவனது பேச்சால் அனைவராலும் பேசப்பட்டவனோ, தாயின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
“என்னடா கண்ணா இன்னைக்கு வந்த வீடியோவில் ரொம்ப எமோஷனலா பேசிட்டு இருக்க?” என்று மகனின் தலையை கோதியபடி கேட்டார் ஆரோனின் தாயார் பார்வதி.
“ம்மா… நான் ஒன்னும் அப்படி எல்லா எமோஷனலா பேசல…”
“என் புள்ளைய பத்தி எனக்கு தெரியாதா… எல்லா வீடியோவிலும் என்ன நடந்துச்சோ அத மட்டும் தான் பேசுவ… அதுக்கு மீற எதையும் பேசிட மாட்டீயே… ஆனா, இந்த பொண்ணோட சூசைட் கேஸ்ல நீ நிறைய அட்வைஸ் பண்ற போல தான் பேசிட்டு இருந்த.. என்னவாம் என் செல்லத்துக்கு?” என்று அன்னை கேட்கவும்,
“இப்படியான நியூஸ் எல்லாம் கேட்டு கேட்டு ரொம்ப சலிப்பா இருக்குமா… வேதனையாவும் இருக்கு… இந்த பொண்ணு செத்துப் போச்சு வெளியே தெரியுது… பட், ஃபேக்ட் என்னனா இதைவிடவும் பல கொடுமைகளை அனுபவிச்சிட்டு வெளியே சொல்லாம கஷ்டப்படும் பொண்ணுங்க எவ்வளவு பேர் இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க…
இதையெல்லாம் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ம்மா… அதான் கொஞ்சம் நிறையவே பேசிட்டேன் ம்மா.. நான் இப்படி பேசுனதுல எந்த தப்பும் இருக்கல தானே ம்மா?” என்று அவரிடமே கேட்க,
“இல்லப்பா… எதுவும் இல்ல… நீ பேசினது நூத்துக்கு நூறு சதவீதம் சரி தான்… என்ன பண்றது பெண்களோட பிறப்பே இப்படி தான்… அதுல எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கணும் ன்னு எழுதி இருக்கு போல..” என்று கவலையாக பேச ஆரம்பிக்கவும்,
“அம்மா… தலையெழுத்து அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க… இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க எந்த பொண்ணுக்கும் அவசியம் இல்ல… அதுல இருந்து வெளியே வந்து, அவங்க சுயமா சிந்திச்சு, சுதந்திரமா, சந்தோஷமா அவங்க வாழ்கையை வாழ எல்லாருக்குமே எல்லா உரிமையும் இருக்கு… இருக்கணும்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,
“ப்ச்… ம்மா… போதுமே… ஸ்கிப் த டாபிக்… எனக்கு ஒரு சுக்கு டீ வேணும்… கொஞ்சம் தலை வலிக்குது…” எனக் கூறி அமைதியாகி விட்டான் எல்வின்.
அவனை புரிந்துக் கொண்டு, “சரிடா போறேன்…” என சென்று விட்டார் பார்வதி.
எல்வினுக்கு இவற்றை எல்லாம் நினைத்து நினைத்து உண்மையாகவே தலைவலி வந்தது தான் மிச்சம்.
அதனை அகற்றும் விதமாக, பார்வதி போட்ட சுக்கு டீயை குடித்து விட்டு, அவனுடைய கணினியை உயிர்ப்பித்து வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
எல்வின் ஆரோன், வயது 29 தொடங்கி பத்து நாட்கள் தான் சென்றிருந்தது. B.E. in Software Engineering படித்து முடித்து, தற்பொழுது ஒரு ஐடி கம்பெனியில் திட்ட மேலாளராக (Project manager) பணியாற்றிக் கொண்டிருக்கின்றான்.
அவனுடைய வேலை ஒருபுறம் இருந்தாலும் ஒரு யூடியூபர் ஆகவும் திறம்பட செயல்பட்டு வருகிறான். அவனுக்கென்று தற்பொழுது நான்கு மில்லியன் சந்தாதாரர்கள் (Subscribers) இருக்கிறார்கள். இது அவனுடைய 7 ஆண்டு உழைப்பிற்கான பலன் தான்.
அவனுடைய இருபத்து மூன்றாம் வயதில் எல்விபீடியாவை தொடங்கி, படிப்படியாக உயர்ந்தோங்கி வேரூன்றி நின்றிருக்கிறான். ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும், இப்பொழுது அனைவராலும் பாராட்டக்கூடிய இடத்தில் வந்திருக்கிறான்.
என்னதான் அவனுக்கு இதில் பெயர் புகழ் பணம் என்று கொட்டி கிடந்தாலும், அவன் வேலையை என்றுமே விட நினைத்தது இல்லை.
ஆரோனுக்கு அவனது வேலையும் முக்கியம், அதேசமயம் அவனுடைய பேஷனும் முக்கியம், எதற்காகவும் எதையும் விட அவன் நினைக்கவில்லை. இரண்டையும் ஒரே தராசில் வைத்து தான் பார்ப்பான். ஆகையால், அவ்விரண்டினலும் எந்த ஒரு தவறும் இன்றி சரியாகவே செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய யூடியூப் சேனலை எவ்வாறு வளர்த்து விட்டானோ, அதேபோல அவனுடைய வேலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருந்தான்.
அவனுடைய புகழையும் பாராட்டையும் தலைக்கு ஏற்றால் இருப்பதும், அவனுக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை கடந்து வருவதும் தான் அவனுடைய வெற்றிக்கு முதன்மையான காரணம் எனலாம்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதியரின் தலைப்பு புதல்வன் தான் எல்வின் ஆரோன், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள் பெயர் சஷ்விகா.
சாமுவேலும் பார்வதியும் காதலித்து, இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி, ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து, அவர்களின் காதல் வாழ்க்கையை ஆரம்பித்துக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களுக்கு உறவென்று யாரும் இல்லை.
அதை எண்ணி பிள்ளைகளை பெரிதாக வருந்த விட்டதும் இல்லை, எந்தவித பாதிப்பும் இன்றி நன்முறையில் நல்ல பிள்ளையாக தான் வளர்த்தனர் பெற்றவர்கள்.
இளையவள் சஷ்விகா இப்பொழுது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை எழுத போகிறாள். எல்விக்கும் இவளுக்குமே பன்னிரெண்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கும். அந்த வீட்டின் செல்லக்குட்டி இவள். அண்ணனின் முதல் குழந்தை என்றே சொல்லலாம். அவனுக்கு இவள் மீது அவ்வளவு பிரியம்.
சாமுவேல் ஒரு நவீன பல்பொருள் அங்காடியை வைத்து நடத்திக் கொண்டிருக்க, பார்வதியோ அரசுக் கல்லுரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
அவர்களை பொறுத்தவரை வசதிக்கும் குறைவில்லை! மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! தெளிந்த நீரோடை போலவே ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது.
1. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 1
உலக அதிசயங்கள் எத்தனை இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் அதிசயம் என்றும் வசதி படைத்தவர்கள் தான். அவர்களின் உடையில் ஆரம்பித்து பிரம்மாண்டக் கட்டிடம் வரை வாய் பிளந்து பார்ப்பதே அவர்களுக்கு வாடிக்கை. என்றாவது ஒருநாள் தங்களின் வாழ்வும் இந்த உயரத்திற்கு எட்டும் என்ற அதீதக் கற்பனையில், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் எண்ணத்தில் இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லை.
பறக்கும் கருடன் போல் இரண்டு நாள்களாக அந்த ஏழு மாடி பங்களாவை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். இரவும் பகலும், யார் இந்த உளவாளி என்ற சந்தேகத்தோடு வந்து மறைந்து கொண்டிருக்க, இவன் எதிர்பார்க்கும் நபர் மட்டும் இன்னும் வரவில்லை. சிக்க வேண்டிய ஆள் சிக்கி இருந்தால், இந்நேரம் இவன் கையில் சிறைப்பட்டுச் சிதைந்து இருப்பார்கள்.
அந்த ஆளின் நல்ல நேரம் இன்னும் பார்வையில் விழவில்லை. உணவு உறக்கமின்றித் தனக்கான இரையைக் கவ்விக் கொள்ளும் கருடனாய் நின்றிருக்க, அந்தப் பெரிய பங்களாவின் கதவு திறந்தது. பதுங்கி இருந்தவனின் கண்கள் சுறுசுறுப்பானது. பட்டினி கிடந்தவனுக்குப் பழைய சோறே அமிர்தம்! அதிலும் பிரியாணி காட்டினால் எப்படி இருக்கும்?
அப்படியான மனநிலையில் இருக்கிறான் கருடேந்திரன். கார் எண்ணைப் பார்த்ததும், வந்ததற்கான பலனாய் தன் ஆட்டோவில் பின் தொடர்ந்தான். இரண்டு கால் கருடன் தேடி வருவதை அறியாத அந்த நான்கு சக்கரக்கார் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. மூன்று சக்கர ஆட்டோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் அதே பாய்ச்சலோடு சென்று, “சர்ர்ர்” எனச் சுற்றி வளைத்தது.
இதை எதிர்பார்க்காத ஓட்டுநர், பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து முன் விழுந்தது போல் அதிர்ந்து, “க்ரீச்ச்!” என வண்டியைச் சேதாரப்படுத்தி நிறுத்தினார். கம்பீரமாக ஆட்டோவில் இருந்து இறங்கியவன் சொடக்கிட்டான். எமனை ஒரு நிமிடம் சந்தித்து வந்த உள்ளே இருந்த அந்த ஆள், இவனைக் கண்டதும் மூக்கு விடைக்கக் காரை விட்டு இறங்க, ஏளனச் சிரிப்பு அவன் முகத்தில்.
கூர்மையான நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுப் பளபளக்கும் உயர்ரக குதிஉயர் காலணியில் பாதுகாப்பாக இருந்தது அந்தக் கால். அதை மறைக்கும் அளவிற்கு மஞ்சள் நிறப் பட்டுப்புடைவை. புடைவைக்குப் பொருத்தமாக அனைத்து அணிகலன்களும் பொருந்தி இருந்தது. எல்லாம் சரியாக இருக்க அவனுக்கு ஏன் இந்த ஏளனச் சிரிப்பு என்றால் அந்தச் சிகை அலங்காரம் தான்.
எம்மாதிரியான அலங்காரங்களும் செய்ய முடியாத அளவிற்கு ஒட்ட வெட்டி இருந்தது. ஆணுக்கு உண்டான சிகை அலங்காரத்தில், பெண் ரூபத்தில் ஒரு பிசாசு நிற்பதைக் கண்டதால் தான் அந்தச் சிரிப்பு கருடேந்திரனுக்கு. கடும் ஆத்திரத்தில் வண்டியை விட்டு இறங்கியவளுக்கு அந்தச் சிரிப்பு உச்சக்கட்டக் கொதிப்பைக் கொடுத்தது.
ஹீல்ஸ் தரையைக் குத்த நான்கு அடி முன்னே நடந்தவள், “என்னடா வேணும் உனக்கு?” எனக் கம்பீரமாகக் குரல் கொடுத்தாள்.
அவளுக்குச் சற்றும் குறைவில்லாத குரலில், “உன்னோட உசுரு!” என்றான்.
அவன் கொடுத்த ஏளனச் சிரிப்பை இப்போது அவள் கொடுத்து, “இந்த வீர வசனத்தைப் பேசத்தான் இவ்ளோ தூரம் வந்தியா? நான் தான் அன்னைக்கே உன்னைத் துரத்தி அடிச்சிட்டேனே. அப்புறமும் ஏன்டா அடி வாங்க வந்து நிக்கிற.” என்றவள் இன்னும் இரண்டு அடி முன்னே சென்று நின்று,
“ஹீரோயிசம் காட்டுறியா? நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல! என் ஃப்ரெண்டோட மேரேஜ்க்குப் போயிட்டு இருக்கேன். தயவு செஞ்சு மூட ஸ்பாயில் பண்ணாத. உனக்கு இன்னைக்கு நல்லநேரம் போல, இப்ப வந்து நின்னுருக்க. நீ சொன்ன உசுர நான் எடுக்குறதுக்குள்ள…” எனப் பேசியவள் கிளம்புமாறு ஒற்றை விரலை அசைத்துக் காட்டினாள்.
இரும்புக் கம்பிக்கு ஈடான ஐவிரல்களுக்குள், அந்தப் பருத்திப் பட்டு விரலைச் சுருட்டியவன் தனக்கு முன்னால் இருந்தவளை இழுக்க, சற்றும் எதிர்பார்க்காமல் சாதாரணமாக நின்றிருந்தவள் அவன் மீது மோதி விலகி நின்றாள். பிடித்த விரலைப் புத்தூர் கட்டு போடும் அளவிற்கு வளைத்தவன்,
“என்னடி! உன் ஒத்த விரலுக்குப் பயந்து ஓடிடுவேன்னு நினைச்சியா? பண்றதெல்லாம் பண்ணிட்டுக் கேவலமாவா பேசுற. இன்னையோட இப்படி ஒருத்தி இருந்தான்ற அடையாளத்தையே அழிக்கிறேன்.” என்ற கருடேந்திரன் தன் உயிர் நாடியைப் பிடித்துக் கொண்டு தொப்பென்று விழுந்தான்.
கற்றுக் கொண்ட கராத்தேவைக் கொண்டு அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், சிறைப்பட்ட விரலைப் பார்த்தாள். உண்மையாகவே இரும்பு கொண்டு சிறைப்பிடித்தது போல் சிவந்திருந்தது. அவன் தொட்ட விரலைக் கண்டு எரிச்சல் உற்றவள், விழுந்தவன் மீது தன் ஒரு காலைத் தூக்கி வைத்தாள். கருடேந்திரன் கைகள் இரண்டையும் தார்ச்சாலையில் ஊன்றிக் கொண்டு, கொலை வெறியில் பார்த்துக் கொண்டிருந்தான். தன் காலணிகளை உயர்த்திக் காட்டியவள்,
“த்தூ! நான் கால்ல போட்டிருக்க செருப்புக்கான விலைக்குக் கூட நீ தேற மாட்ட, இதுல தொடுறியா? உழைச்சுச் சாப்பிட நிறைய வழி இருக்கு. அடுத்தவனை ஏமாத்திக் காசு வாங்கச் சாக்கைத் தேடாம, கிளம்புடா. இதுதான் உனக்கு நான் தர லாஸ்ட் வார்னிங்…” என்றவள் கால்களை வெடுக்கென்று தள்ளி விட்டான்.
“ஹா ஹா… ஒன்னு பண்ணு. நீ கேட்ட காசை நான் தரேன்.” எனத் தன் கால்களை உயர்த்திக் காட்டி, “பங்க்ஷன் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் இந்தச் செருப்பு ரொம்ப அசிங்கமா இருக்கும். மண்டியிட்டுத் தொடைச்சி கிளீன் பண்ணி வை, தூக்கிப் போடுறேன். நீயெல்லாம் எனக்கு இந்த ரேஞ்ச் தான்.”
அவள் செய்த அத்தனைச் சம்பவங்களை விட, இந்த வார்த்தைதான் பெரும் புகைச்சலைக் கொடுத்தது கருடேந்திரனுக்கு. பணம் இருக்கும் ஒரே காரணத்திற்காக, செருப்பை விடக் கேவலமாக நடத்தும் இவளுக்குத் தக்க பாடத்தைப் புகட்ட முடிவெடுத்தான். விடாது கருடன் என்பதை அறியாது காரில் ஏறி அமர்ந்தவள், அவன் முகத்தில் அறைவது போல் கார் கதவைச் சாற்றிக் கொண்டு பறந்தாள்.
***
எண்ணிலடங்காத பணத்தின் வாடை அமோகமாகப் பேசியது. ஒவ்வொரு அலங்காரங்களும், இவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது என்பதைப் பறைசாற்றியது. முழுப் பணக்காரச் சூழலில் மிதந்து கொண்டிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தவள், தனக்கே உண்டான தோரணையோடு காரில் இருந்து இறங்க,
“ஹாய் ரிது” என்ற குரல் கேட்டது.
“ஹாய் ஆண்ட்டி”
“என்னமா இவ்ளோ லேட்டா வர?”
“வர வழியில ஒரு டாக் குறுக்க வந்துடுச்சு.”
“நமக்குன்னு தனியா ரோடு போட்டா தான், இந்த மாதிரி லோ கிளாஸ் தொல்லை இருக்காது.”
“ம்ம்!”
“உள்ள போ ரிது. உனக்காகத் தான் திவ்யா வெயிட் பண்ணிட்டு இருக்கா.” தோழியின் அன்னைக்குச் சிரித்த முகமாகத் தலையசைத்தவள் மிடுக்காக உள்ளே நுழைந்தாள்.
அங்கிருந்த அனைவரின் பார்வையும் இவள் மீது தான் இருந்தது. அலங்காரத்திற்கும், உருவத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டு ஆளாளுக்கு ஒரு எண்ணத்தை மனத்திற்குள் வைத்தார்கள். வெளிப்படையாக வைத்தால் இவளிடம் இருந்து தப்பிப்பது எளிதல்லவே! பெரும்பாலான பணக்கார வர்க்கத்திற்கு இவள் யார் என்று தெரியும்.
தந்தையின் தொழிலை, ஆண் வாரிசு கையில் எடுத்துக் கோலூன்றி நிற்பதையே பார்த்துச் சலித்த இந்தச் சமூகத்திற்கு இவள் ஒரு ஆச்சரியக் குறி! தொழில் உலகத்தின் ராணியாக இருக்கிறாள். ஒரு மடங்கு என்றிருந்த தந்தையின் தொழில்கள் அனைத்தையும் பல மடங்காக மாற்றி இருக்கிறாள். சுற்றி எத்தனை ஆண்கள் இருந்தாலும், ஒற்றைப் பார்வையால் ஒதுக்கி வைக்கும் திகிலுக்குச் சொந்தக்காரி.
கருடேந்திரன் செய்த கலவரத்தில் சற்றுக் கடுப்பாக இருந்தவள், தன் தோழிகள் வட்டாரத்தைப் பார்த்த பின் சகஜமாகி விட்டாள். ஒரே அரட்டையும் கூத்துமாக இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். மணப்பெண்ணை மணமேடையில் அமர வைத்துவிட்டுக் கேலி செய்து கொண்டிருந்தவள் கையில் அட்சதைத் தட்டைக் கொடுத்தார்கள். படியிறங்கி அனைவரிடமும் கொடுத்துவிட்டு, அய்யர் பக்கத்தில் வைக்கக் குனிந்தவள் கழுத்தை மஞ்சள் கயிறு இறுக்கியது.
அவளுக்குப் பக்கத்தில், தேங்காய் மீது இருந்த தாலியை ஒரு கரம் வலிமையாகப் பற்றி இழுத்து, இவள் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறது. நடந்த சம்பவத்தில் மொத்த மண்டபமும் ஸ்தம்பித்து நிற்க, சிவப்பான விழிகளோடு அப்படியே குனிந்து இருந்தவள், முடிச்சுப் போடும் இறுக்கத்தை வைத்து அது யாரென்று தெரிந்து கொண்டாள்.
நான்கு பேருக்கு முன்னால் அசிங்கப்படுத்தப் பின் தொடர்ந்து வந்தவன் கண்ணில் மாங்கல்யம் விழுந்தது. செருப்பை விடக் கேவலமாக நடத்திய ஒருவன் கையால் தாலியை வாங்கினால், அதைவிடப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்காது என்று கருதி, மூன்று முடிச்சைப் போட்டு விட்டான். முடிச்சுப் போட்டதும் அவளை உயர்த்தி,
“எப்படியும் இந்த ஏசில உன் செருப்பு அழுக்காகாது. ஆட்டோ ஓட்டி உழைக்கிற என் செருப்புத்தான் குப்பையா இருக்கும். இனித் தாலி கட்டுனவன் செருப்பத் தொடைக்க ரெடியா இரு.” என்றவனை நவீன நீலாம்பரியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரிதுசதிகா.
அந்தப் பார்வைக்குச் சிறிதும் அஞ்சாதவன், கர்வமாக அங்கிருந்து கிளம்பினான். எதையோ சாதித்து விட்ட மிதப்பில் நடந்தவனுக்கு முன்னால், அவன் கட்டிய தாலி வந்து விழுந்தது. மீண்டும் அந்த மண்டபம் ஸ்தம்பித்து நிற்க, இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன் உறைந்த முகத்தோடு திரும்பினான்.
“தாலி கட்டிட்டா நீ பெரிய மன்மதனா? அய்யய்யோ! என் கழுத்துல ஒருத்தன் தாலி கட்டிட்டான், என் வாழ்க்கையே போச்சுன்னு உட்கார்ந்து அழற பொண்ணு நான் இல்ல. தாலிக்குக் கட்டுப்பட்டு உன் பின்னாடியே நடக்க நான் பைத்தியக்காரியும் இல்லை.
காலங்காலமா, பழிவாங்கத் தாலி கட்டுறதை முதல்ல நிறுத்துங்கடா. நாங்க நினைச்சா மட்டும் தான் அது தாலி.” என்றவள் படியிறங்கி வந்தாள்.
“நீ கட்டுனதை நீயே எடுத்துட்டுப் போடா.” எனக் கேவலமாகப் பார்த்தவள், “செய்யக்கூடாத வேலையைச் செஞ்சுட்ட. ஏன்டா செஞ்சோம்னு நிமிசத்துக்கு ஒரு தடவை உன்னைத் துடிக்க வைக்கல, நான் ரிதுசதிகா இல்லடா.” என விரல் நீட்டிச் சொடக்கிட்டவள் அவனுக்கு முன்பாக ராஜ நடை நடந்தாள்.
சிகை அலங்காரத்தில் மட்டும் ஆண் அல்ல, தோரணை மொத்தமும் ஆண் தான் என வியக்க வைத்தது அங்கிருந்தவர்களை. ஊரே அவளைப் பிரமிப்பில் பார்த்துக் கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் கட்டிய தாலியை மிதித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கருடேந்திரன்.
எந்த ஆணுக்கும் அஞ்சாதவள் கழுத்தில் தாலி கட்டிய இவன் யாரென்ற அடுத்த வியப்பு அங்கிருந்து அனைவருக்கும். அதை இன்னும் அதிகரித்தான் ஆட்டோவில் ஏறியமர்ந்து. ஒரு ஆட்டோக்காரன் தான் இந்தப் பணக்காரிக்குத் தாலி கட்டினானா என்ற எண்ணத்தில் பலரின் இதயம் வெடித்தது.
இன்னும் வெடிக்கவும், வெடிக்க வைக்கவும் பல சம்பவங்கள் இருக்கிறது என்பது தெரியாமல், இரு துருவங்களும் இருவேறு திசையில் பயணித்தது.
“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி..
அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா…
“போன தடவையே சொல்லிட்டோம்… மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்…
“அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர் கொடுக்க மிராவின் முறைப்பில் ஈஈ என்று இளித்து வைத்தான்…
“நீ இரு மிரா… நான் புரிய வைக்குறேன்….” ஈஈ என்ற இளிப்புடன் முன்னால் வந்து நின்றவன் தரணியை கொஞ்சம் கடுப்போடுதான் பார்த்து வைத்தான்…
“எங்க நாலு பேருல ஒருத்தனுக்கு கல்யாணம் ஆயிருச்சு.. ஒருத்திக்கு ஆள் இருக்கு…நானும் மிராவும் சுத்த சிங்கிள்.. சரி அவள விடுங்க… என் பிரச்சினைக்கு வருவோம்… இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூட செட் ஆக மாட்டேங்குறா…. அந்த கடுப்புல இருக்கும் போது உங்க ப்ரெண்டு ஆறு மாசத்துக்க ஒரு தடவ ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிட்டு வந்து நின்னா ரொம்ப எரியுது சார்…ப்ளீஸ் அன்டார்ஸ்டான்ட் மை பீலிங்….” ஆதங்கமாய் சொல்லி நிற்க மீதி மூன்று பேரும் தலையில் அடித்துக் கொண்டனர்…
“ஏய்..ஏய்… என்ன சொல்ல சொன்னா என்ன சொல்லுற…” வடிவேல் சொல்வது போல்தான் விளக்கம் கொடுத்தான் அவன்…
“மூடிட்டு இருடா…” ஒற்றை அதட்டல்தான் வந்தது மிராவிடமிருந்து… அதன் பின் பேசவில்லை… வேண்டாம் விட்டுடு ப்ளீஸ் என்பது போல் பாவமாய் பார்த்து வைத்தான் தரணியை…
“இனிமே முடியாது மிஸ்டர் தரணி… போனவாட்டியே உங்களுக்கு லாஸ்ட்னு சொல்லியாச்சு…. இதுதான் முடிவு…” உறுதியாய் அவள் சொல்ல…
“கொஞ்சம் யோசிச்சு சொல்லலாமே….” தயக்கமாய் கேட்டான் அவன்…
“நோ வே…. இனிமே சரிப்பட்டு வராது…. ப்ளீஸ்…” கதவை நோக்கி அவள் கையை காட்ட பெருமூச்சுடன் எழுந்து கொண்டான்..
இனி என்ன பேசுவது என அவனுக்கும் புரியவில்லை… வைஷாவை நினைக்கத்தான் மனம் அடித்துக் கொண்டது…
அவனிடம் எப்படி சொல்வது என அப்போதிலிருந்தே யோசிக்க தொடங்கி விட்டான்…
“தேங்க்ஸ்…” மாறாத புன்னகையுடன் நகர்ந்து விட மிராயாவுக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது… செய்து கொடுத்திருக்கலாமோ என்று தோன்ற இல்லை வேண்டாம்… இந்த முறை மனம் இறங்கினால் மீண்டும் வந்து கொண்டே இருப்பான் என அடுத்த பைலை புரட்டத் தொடங்கினாள்…
“பொண்ணு போட்டாவ காட்டாமையே போயிட்டாரே….” வருத்தப்பட்டான் ஆவன்யன்… ஆனால் அந்த ஆவல் மற்ற மூவருக்குமே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை…
அந்த இடத்தை விட்டு வெளியேறியவன் நேரில் பார்த்து சொல்லலாம் என நினைத்திருக்க சரியாய் அழைத்து விட்டான்…
“ஐயோ…இப்ப என்ன சொல்லுவேன்….” வாய்விட்டே புலம்பியவன் எடுக்கலாமா வேண்டாமா என ஆயிரம் பட்டிமன்றம் நடத்த அலைபேசி அடித்து ஓய்ந்தே விட்டது…
அடுத்த அழைப்பும் வர எடுக்காவிட்டாலும் பதறி போவான் என உயிர்ப்பித்து காதில் வைத்தான்…
“வைஷா… சொல்றேன்… கோபப்படாம கேளு….” எடுத்ததும் சொன்னவனுக்கு மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டது…
எங்கிருக்கிறானோ… கோபம் கொள்வானோ…. கத்துவானோ… ஐயோ வேறு என்னவெல்லாம் செய்வானோ என இவனுக்கே வியர்த்து விட…
“ஏய்.. ஏன்டா… கோபப்பட… ” கூலாய் வந்தது மறுமுனையில் குரல்….
ஆனால் இவனால்தான் நிம்மதி கொள்ள முடியவில்லை…
“அது வந்துடா… அவங்க முடியாதுன்னு சொல்லிட்டா..ங்க…” வார்த்தை தட்டுபட்டு வெளிவர திக்கி திணறி கூறி முடித்தவன் கைகள் அவசரமாய் முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக் கொண்டது…
“நீ எதுவும் யோசிக்காதே…. நாம வேற இடம் பாக்கலாம்… எங்க இருக்க இப்ப… நான் வாறேன்…”வெகு அவசரமாய் பதற்றத்துடன் பேச அடுத்த முனையில் அமைதி…
“வை..ஷா..இருக்கியா…” படபடப்பாக கேட்டவன் அப்போதே பைக்கில் ஏறி விட்டான்… அவன் இருக்கும் இடத்தை அடைந்தால் மனது நிம்மதியாக இருக்கும் என தோன்றியது…
“ப்சு.. வேற இடம் சரி வராதுடா….” நிதானமான அவன் குரலை கேட்ட பின்தான் இவனுக்கு பெருமூச்சே வந்தது… அப்பாடா என்று மூச்சை இழுத்து விட்டிருக்கவில்லை…
.”நான் அவங்ககிட்ட பேசுறேன்….” அடுத்த இடியை இறக்கி வைத்தான்…
“இல்ல… இல்ல…வேணாம்… அவங்க சரிப்பட்டு வர மாட்டாங்க…. நீ பேச வேணாம்…” அவனின் பேச்சில் அவ்வளவு வேகம்…
“நான் பேசுறேன்டா… லொகேஷன் அனுப்பு நான் வாறேன்….” அத்தோடு அழைப்பையும் துண்டித்துவிட தரணிதான் விழி பிதுங்கி நின்றான்..
என்ன செய்வது என புத்தியில் உறைக்கவேயில்லை…
ஐயோ என்றிருந்தது….
வருகிறேன் என்று விட்டான்… இனி வராதே என்றாலும் கேட்க மாட்டான்…
“கடவுளே…” தலையில் அடித்துக் கொண்டவன் லொகேஷனை அனுப்பி வைத்துவிட்டு என்ன செய்வது என புரியாமல் யோசனையில் ஆழ்ந்தான்..
சில நிமிடங்கள் அவனிடம் அசைவே இல்லை…
பலத்த யோசனை…
வேறு வழியே இல்லை… மீண்டும் இவர்களிடம் போய் பேசி பார்க்கத்தான் வேண்டும்… ஆனால் தயக்கமாகவும் இருந்தது… மாட்டேன் என்று சொல்பவர்களிடம் திரும்பி போய் எப்படி கெஞ்சிக் கொண்டிருப்பது….
தலையை சிலுப்பிக் கொண்டு யோசனையிலிருந்து மீண்டவன் பைக்கிலிருந்து இறங்கி மீண்டும் உள்ளே சென்றான்….
“அதுக்கிடையில அடுத்ததா…” அவனைக் கண்டு யுகன் வாய்விட்டே சிரித்து விட கொஞ்சமாய் கறுத்து போனது தரணியின் முகம்….
“யுக..ன்…” வழமை போல் மிராவின் அதட்டல்தான் வேலை செய்தது…
“எனக்கு வேற வழி தெரில… என் ப்ரெண்ட் இங்க வாறான்…ப்ளீஸ் அவன்கிட்ட வேற எதுவும் பேசாம சரின்னு மட்டும் சொல்லுங்க.. நீங்க எதுவும் செய்ய வேணாம்… சும்மா சொல்லுங்க… பிறகு நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்..ப்ளீஸ்…” அவன் கெஞ்சலாய் கேட்க அதற்குள் வாசலில் கேட்டது பைக் சத்தம்…
“ப்ளீஸ்ங்க…” மீண்டும் ஒரு முறை ப்ளீஸை வைத்தவன் வெளியே ஓட்டம் பிடிக்க நால்வரும் எதுவும் புரியாமல் முழித்தனர்…
இதுவரை தரணிதான் வந்திருக்கிறான்… அவன் வந்ததே இல்லை…
இதுதான் முதல்முறை…
மிராவிற்கு தரணியின் கெஞ்சல் சரியாகவே படவில்லை….
தரணி வெளியே ஓடி விர பைக்கிலிருந்து இறங்கி கண்ணை சிமிட்டினான் வைஷாகன் ரமணா…. அழகான கண் சிமிட்டலும் புன்னகை முகமும்தான்…. ஆனால் அது அப்படியே இருக்க வேண்டுமே… இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்…
“இப்ப நீ பேச வேண்டிய அவசியம் என்ன… நானே பேசிக்குறேன்டா…. ” அவன் உள்ளே செல்வதைத் தடுக்கவே முனைந்தான் அவன்…
“கூல்டா… ஏன் இவ்வளவு பதட்டம்… நான் பாத்துக்குறேன்….” சமாதனமாய் சொன்னவனைப் பார்க்க இன்னும் பீதியாகியது இவனுக்கு…
“வா போலாம்...”கையில் பைக் கீயை சுழற்றிக் கொண்டு உள்ளே நடந்தவனின் பின்னாலேயே சென்றான்…
எதுவும் விபரீதமாக நடந்து விடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே சென்றான்….
உள்ளே வந்தவனை பொறாமையுடன் பார்த்தன ஆவன்யனின் விழிகள்… தீப்தியோ ரசனையாக பார்த்துக் கொண்டே..
“இவ்வளவு அழகா இருந்தா எந்த பொண்ணுதான் விழ மாட்டா….” தீப்தி முணுமுணுக்க நண்பனின் பார்வையில் அசடு வழிந்தாள்…
“சைட் அடிக்குறது தப்பா….” தோளைக் குலுக்கி அவள் கேட்க கேவலமாய் பார்த்து வைத்தான் அவளை…
“இங்க யாரு பாஸ்….” உள்ளே நுழைந்தவன் அதிரடியாய் கேட்க மூவரின் பார்வையும் மிராவின் மேல் படிந்தது…
அவர்களின் பார்வையோடு அவன் பார்வையும் பயணிக்க அங்கே அமர்ந்திருந்தவள் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…
இதுவரை தூரத்தில்தான் கண்டிருக்கிறாள்… இப்போதுதான் மிக அருகில் அவன் முகம் காண்கிறாள்… போன தடவை பார்க்கும் போது வித்தியாசமாக இருந்தான்…. கலைத்து விடப்பட்ட கேசம்… காதில் கடுக்கண்… முன் பட்டன்கள் திறந்துவிடப்பட்ட ஷர்ட் என தூர பார்க்கவே கொஞ்சமாய் பொறுக்கி தனம் தெரிந்தது..
இப்போது அழகாய் அயர்ன் செய்யப்பட்ட ஷர்டை அபிசீயலாய் டக்கின் செய்திருந்தான்…. வாரிவிடப்பட்டு அடக்கமாய் இருந்தது கேசம்.. காதில் கடுக்கன் எல்லாம் காணவே இல்லை… பக்கா ஜென்டில் மேனாக தெரிந்தான்…
ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் அவனில் வித்தியாசம் தெரிந்து கொண்டே இருக்கும்…
ஏதோ ஒரு விதத்தில் நடை உடை பாவனை மாறியது போல் இருக்கும்..
இப்போது அந்த மாற்றத்தை அருகிலேயே கண்டு கொண்டாள்…
எப்போதும் மாறாதது போல் இருப்பது அவனின் கள்ளமில்லா அவன் முகமும் கொஞ்சமாய் சதை போட்ட கன்னங்களில் லிழும் கன்னக் குழியும்தான்… அவள் காணும் போதெல்லாம் அவன் முகத்தில் பளிச்சென இருந்தது அது மட்டும்தான்…
“ஹலோ..பாஸ்…” அவனின் குரலில் முகத்திலிருந்து பார்வையை அகற்றியவள் இப்போது தரணியை பார்த்தாள் அழுத்தமாய்…
ப்ளீஸ் என்று பார்வையாலேயே கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்….
“இங்க பாருங்க பாஸ்…. நீங்க ஏற்பாடு பண்ணி ப்ரபோஸ் பண்ணதுல்ல யாருமே எனக்கு நோ சொன்னதில்ல… இப்ப திடீர்னு மாட்டேன்னா என்ன அர்த்தம்… எப்பவும் தாரத விட டபுள் மடங்கா பேமன்ட் கொடுக்குறேன்….” புன்னகையுடன் பேசியவனை அளவிட்டது அவளின் விழிகள்…
சிரிக்கும் போது கன்னக்குழியும் சிரித்தது… கூடவே கண்களும் சிரிக்க இப்போதுதான் கண்டாள் அவனின் நீல நிற கருவிழிகளை… வெகு அரிதாக சில பேருக்கு மட்டுமே இருக்கும் என்று படித்தது ஞாபகம் வந்தது…
அது மட்டுமா… சிரிக்கும் போது மேல் இடதுபக்க வேட்டப் பல் மட்டும் கொஞ்சம் முன்னால் தள்ளியிருக்க அந்த தெத்துப்பல் கூட வித்தியாசமாய் இருந்தது அவனுக்கு…

“என்ன எல்லாம் வித்தியாசம் போல் இருக்கிறது….” என்று தோன்ற அவனையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தாள்…
“என்ன பாஸ் நீங்க… இவ்வளவு பேசுறேன்…. பேசாம இருக்கீங்க….. பாலம்ல நான்… வாய் வலிக்குது….” அவனின் துருதுரு பேச்சில் கவனம் கலைந்தவள் மீண்டும் தரணியையே பார்த்தாள்..
அவனோ அவஸ்தையாய் கையைப் பிசைந்து கொண்டு விழித்துக் கொண்டு நின்றிருந்தான்….
ஏதோ சரியில்லையே என்று மனம் கணக்கு போட…
“சரி மிஸ்டர்.வைஷாகன்… இத பண்ணி கொடுக்குறோம்… ஆனா இத்தோட உங்க லிஸ்ட்ட நிறுத்துறீங்கன்னா எங்களுக்கு ஓகே….” இதுதான் இறுதி என்பது போல சொன்னவளைக் கண்டு வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டான் தரணி….
“வைஷா வா போலாம்…. இங்க பேச வேணாம்…” அவனை இழுத்து போவதில் குறியாய் இருக்க இன்னும் இன்னும் சந்தேகம் எழுந்தது அவளுக்கு…
“இருடா… பேசிட்டு இருக்கேன்ல…” அப்போதும் புன்னகை முகமாகவே இருந்தவனைக் கண்டு கொஞ்சமாய் ஆசுவாசம் அடைந்தான்…
“நான் என்ன பண்ணட்டும் பாஸ்… நானா வேணாங்குறேன்… அவங்கதான் வேணாம்னு போயிறாங்க பாஸ்…. பட் நீங்க சொன்னதாலே லாஸ்ட் வர கன்டினியூ பண்ண ட்ரை பண்றேன்…. ஆனா இந்த பொண்ணும் போயிட்டா நீங்கதான் திரும்பவும் பண்ணி தரணும் பாஸ்…” வார்த்தைக்கு வார்த்தை பாஸ் போட்டவனை கடுப்பாக பார்த்தவள்…
“இது சரிப்பட்டு வராது சார்…. இடத்த காலி பண்ணுங்க….” எரிச்சலாய் சொல்லி வைக்க இன்னும் படபடத்து போனது என்னவோ தரணிதான்….
“என்ன சரிப்பட்டு வராது….. என்ன விளையாடுறீங்களா….” அதுவரை புன்னகையுடன் இருந்தவன் கத்திக் கொண்டு எழுந்து மேசையில் பலமாய் ஒரு தட்டு தட்ட தூக்கி வாரிப்போட்டது மிராவின் உடல்…
“டேய்… வா போலாம்….” தரணி அவசரமாய் அவனை பிடிக்க வர ஒரே தள்ளலில் அவனை தள்ளி விட்டவன்…
“பண்ணி தரணும்னா பண்ணி தரணும்…. தேவ இல்லாதத பேசாதீங்க…..” அந்த இடமே அதிர கத்த…
“என்ன சார் மிரட்டுறீங்களா…. ” யுகன் எகிறிக் கொண்டு வர…
“ப்ளீஸ்… பெருசாக்காதீங்க…. அவன் புரியாம பேசுறான்.. வைஷா..” தரணி கலக்கமாய் அவனைப் பிடித்து இழுக்க மீண்டும் தள்ளிவிட்டான்..
பலமாய் அவன் தள்ளியதில் கீழே விழுந்து விட்டான் தரணி…
“முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க….” தீப்தியும் கோபமாய் கேட்க அவனின் முகமோ கோபத்தில் மொத்தமாய் புடைத்து போக…
பல்லைக் கடித்தவன் மிராவின் மேசையிலிருந்த கணிணியை தள்ளியே விட்டான் கீழே…
அவன் தள்ளிய வேகத்தில் அது கீழே விழுந்து உடைந்து போக…
“வட் த ரபிஷ்….” மிரா கத்த அடுத்தடுத்து நடந்ததை ஒருவரும் எதிர்பார்க்கவேயில்லை….
மொத்த பேரும் சுதாரிக்கும் முன் தள்ளி உடைத்திருந்தான் அங்கிருந்த பொருட்கள் மொத்தத்தையும்…
அவனின் ஆவேசமும் கண்களில் கனன்ற தீயையும் கண்டு ஸ்தம்பித்து நின்றார்கள் மொத்த பேரும்…
என்ன செய்வது என புரியவே இல்லை….
“வைஷா… வைஷா…” தரணிதான் அவன் தள்ளிவிட தள்ளிவிட மீண்டும் மீண்டும் அவனை பிடிக்க முயன்று கொண்டிருந்தான்…
ஆனால் ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியவில்லை…
“என்ன பண்ற….”
“பைத்தி..யமா…”மற்றவர்கள் சுதாரித்து தடுக்க வரும் முன் மொத்த இடமுமே உடைந்து சிதறி அலங்கோலமாய் கிடந்தது…
பார்த்து பார்த்து உருவாக்கிய இடம் சில நிமிடங்களில் சிதைந்து போக நண்பர்கள் நால்வருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை…
“ஆஆஆஆஆஆஆஆ….” தலையைப் பிடித்து ஆங்கரமாய் கத்தியவனின் கத்தல் வேறு காதைப் பிளக்க அவனைக் காணவே பயமாக இருந்தது..
ஒரு நொடியில் இப்படி மாறி விட்டான் என விழி பிதுங்கி அவர்கள் நிற்க…
“டென்ஷன் ஆகாதே…” அவன் தள்ளிவிட்டதில் ஆங்காங்கே அடிபட்டும் இரத்தம் வடிந்தும் மீண்டும் நண்பன் அருகில் அவன் செல்ல மீண்டும் தள்ளி விட்டான்….
“ஆஆஆ…” இப்போது விழுந்ததில் சிதறிய கண்ணாடித் துண்டு கையைக் கிழித்து விட சத்தம் போட்டு கத்தியதில் அப்போதுதான் திரும்பி பார்த்தான் தரணியை…
“தரணி…” பதறிக் கொண்டு அவன் அருகில் சென்று கலங்கிய கண்களோடு ஆராய்ந்தான் நண்பனை…
“இரத்தம் வருது….ஐயோ… நான் ஒரு பைத்தியம்….” நண்பனை ஆராய்ந்தவன் அழவே ஆரம்பித்து விட்டான்…
“எனக்கு ஒன்னும் இல்ல… அழாதே…இங்க பாரு…ஒன்னும் இல்லடா…” வலியை மறைத்துக் கொண்டு இயல்பாய் இருக்க முயல எங்கே அதெல்லாம் அவன் கேட்க…
நிலத்தில் சரிந்து அமர்ந்தவன் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்…
“இதுதான்… இதுதான்… யாரும் என் கூட இருக்க மாட்டாங்க…. நீயும் இப்ப விட்டு போயிருவ…. நீயும் வெறுத்துருவ… உன்னையும் அடிச்சுட்டேன்…” சிறு பிள்ளை போல் தேம்பி தேம்பி அழுதவனை மலங்க மலங்க நால்வரும் பார்த்துக் கொண்டிருக்க தரணிக்கு சங்கடமாக இருந்தது…
ஆனால் அதை விட முக்கியம் வைஷா என நினைத்தவன் அவன் வலியை மறந்து அப்படியே அவனை தோளோடு கட்டிக் கொண்டான்…
“எதுவும் இல்லடா… நான் போக மாட்டேன்…. அழாதே… நான் எப்பவும் உன்னோடதான் இருப்பேன்….” ஆறுதலாய் அவன் சொல்ல அந்த வார்த்தைகளில் என்ன கண்டானோ முகத்திலிருந்து கைகளை விலக்கி கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்….
“நீ சொன்னதுதான் சரி… நாம வேற இடம் பாத்திருக்கனும்… இங்க வந்துருக்க கூடாது நான்…” மொத்தமாய் பாழாய் கிடந்த அந்த கட்டிடத்தை பார்த்து கவலையாய் அவன் சொல்ல நால்வருக்கும் இதயம் அதி வேகத்தில் ஓடியது…
கொஞ்ச நேரத்தில் என்னவெல்லாம் செய்துவிட்டான்….
❤️❤️❤️தொடரும்❤️❤️❤️