
Tag:
Love story
காதலே- 20
அடுத்த நாளும் புலற நிதிஸுன் அனைப்பில் இருந்து கண் விழித்த கனி எழ அவள் அசைவில் நிதிஸும் கண் விழித்தான். அவளை மீண்டும் அணைக்க அவன் மார்பில் மீண்டும் விழுந்தவள் “ஐயோ குளிச்சிட்டு வாரேன்” என்றாள் “பேபி வாட்டர் வேஸ்ட் பண்ண கூடாது இரு வாரேன்” என்றவனைத் தள்ளிவிட்டபடி குளியலறை நுழைந்து கொண்டாள்.
தனது டீமை அழைத்த நிதிஸ் ரிகர்கலில் ஈடுபட்டான். ஹோட்டலிலேயே காலை, மதிய உணவை உண்டனர் விமான பயணம் புதிதாக இருக்க கனி அறையிலேயே ரெஸ்ட் எடுத்துக் கொண்டாள்.
ஓகே காய்ஸ் ஈவினிங் 5:00 மணிக்கு ரெடியாருங்க வாகனம் வரும் என்றவன் தனது அறையில் நுழைந்து கொண்டான். ஆகாய நீல நிற,சேர்ட், கருப்பு நிற ஜின்சும் தாடி மீசையை ரிம் பண்ணி தலை முடியை ஜெல் வைத்து வாரும் போது, கையை முதுகில் வைத்தபடி கனிவர கண்ணாடியூடு அவளைப் பார்த்தவன்” வாவ் யூ லுக் சோ பிரிட்டி பேபி” என அவளை அணைக்க வர அவனை மார்பில் கை வைத்து தள்ளியவர் ஜிப் போட முடியல” என்றாள் சினங்களாக, அவளை பின்னால் திரும்பியவன் முதுகில் கோலம் போட்டபடியே ஜிப்பை பூட்டி விட்டான் அவளும் அவனது உடைக்கு பொருத்தமாக அதே நிறத்திலேயே வெள்ளை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட பிராக் அணிந்து, அழகாக இருந்தாள்.
இருவரும் கதவை பூட்டிக் கொண்டு வெளியே வர அனைத்து கலைஞர்களும் வந்திருந்தனர்.
வித்யாவுக்கு கனி மேல் அப்படி ஒரு கோபமும், பொறாமையும் வந்தது. அனைவரும் வாகனத்தில் ஏறியதும் வாகனம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பியது. நிதிஸும் கனியும் தங்களுக்கான காரில் அவர்களை பின்தொடர்ந்து புறப்பட்டனர். பதினைந்து நிமிட பயணத்தில் மிகப்பெரிய ஸ்டேடியமினுள் வாகனங்கள் நுழைய அப்போதே ரசிகர்கள் வானகனத்தை சுற்றிக் கொண்டனர் பவுன்சர்கள் வரவே வாகனம் சென்றது.
ஸ்டேடியம் எல் ஈ டீ மின் விளக்குகளால் ஜெகஜோதியாக ஒளி வெள்ளத்தில் தயாராகி இருந்தது வாத்திய கலைஞர்கள் தங்களுக்குரிய இசைக்கருவியை அமர்ந்து அனைத்தையும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹனியை மேடைக்கு பக்கவாட்டாக இருந்த விஐபிகளுக்கான இருக்கையில் அமர வைத்தவன் தானும் அமர்ந்து கொண்டான் கனிக்கு அடுத்ததாக பலர் அமர்ந்து கொண்டனர்.அவ்வரிசையில் வித்யாவும், கௌசல்யாவும் மற்றைய பாடகர்களும் அமர்ந்திருந்தனர். ரசிகர்கள் ஒருபுறம் ஆரவாரம் செய்ய தொடங்கினர்.
அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் “ஹாய் குட் ஈவினிங் எவ்ரி ஒன்”, என நிகழ்ச்சியை ஆரம்பித்தவர் “எக்ஸைட்டா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்” நானும் அப்படித்தான் இதோ உங்களுக்குக்கான முதலாவது பாடலை பாட வருகிறார் இசை வேந்தன் சஞ்சய்” என அறிவிக்க கரையோசத்துக்கு மத்தியில் மைக்கை பிடித்த சஞ்சய் தனது இனிய குரலில் “ரோஜா ரோஜா” பாடலை பாட அரங்கமோ கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக எமது மனம் கவர்ந்த பின்னணி இசை பாடகி வித்யஸ்ரீ என அறிவிக்க அவளும் ஒய்யாரமாக நடந்து வந்து மேடையேறி மைக்கைப் பிடித்தவள், தனது இனிய குரலில் “உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு” என்னும் பாடலை ஸ்ருதி, லயம் மாறாது மென் குரலில் பாட அரங்கமோ அவள் இசையில் நனைந்தது. அவளும் பாடலை பாடி முடிக்க அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர் அவளும் நன்றியை தெரிவித்து விடை பெற்றாள்.
அதனைத் தொடர்ந்து ரப் இசைப் பாடகர் சிம்ஹா துள்ளழிசை பாடலை பாடி அரங்கத்தையே ஆட வைத்துக் கொண்டிருந்தார்
மேலும் அதனை தொடர்ந்து “இதோ அனைவரும் மிகவும் பிடித்த இசைவேந்தன், இசைச்சமர் நிதிஸ் சரன்” என அறிவிப்பாளர் அழைக்க நிதிஸும் கம்பீரமாக மேடை ஏறினான் அவன் மேடையேறியது தான் தாமதம் பலத்த கரகோஷம் மேடையே இருளில் மூழ்கி பின் நிதிஸ் நிற்கும் இடம் மட்டும் ஒளிவெள்ளம் பாச்சப்பட்டது.
நிதிஸுன் புகைப்படத்தை தாங்கி இருந்தோர் அதில் ஐ லவ், யூ நிதிஸ், ஐ லைக் யூ என பல வார்த்தைகள் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
“ஹாய் பட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க” என அவன் குரலை தாண்டி ஆரவார சத்தம் கேட்டது “அப்போ டிரைக்டா சாங்குகே போய்டலாம்” என்றவன்
“என்னோடு நீ இருந்தால். உயிரோடு நான் இருப்பேன், என்னோடு நீ இருந்தால். உயிரோடு நான் இருப்பேன்”. பாடலை பாட அரங்கமே நிசத்தமானது அவன் குரல் மட்டும் ஒலித்தது “கமான் ஹாய்ஸ் என அவனும் கைதட்ட ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்கள் போன் டார்ச்சை ஆன் செய்து வைப் செய்தனர் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்க அறிவிப்பாளரிடம் வந்து நிதிஸ் அவரிடம் ஏதோ சொன்னவன் பாடலை பாடி முடித்தான்.
அதன் பின் இந்த மூவ்மெண்ட்ட இன்னும் ஸ்பெஷலாக்க ஸ்பெஷல் பெர்ஸன் ஒருத்தங்கள உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறேன் என்றவன் அறிவிப்பாளரைப் பார்க்க,
அனைவரின் பார்வையும் மேடையிலேயே இருக்க அறிவிப்பாளரும் “வாங்க மேடம்” எனக் கனியை அழைத்து மேடைக்கு வந்தவள் அவளை மேடையில் விட்டகல அவளோ பயத்துடன் மேடையில் நிற்க அவள் கையைப் பிடித்து தான் நிற்கும் ஒளியில் அழைத்து வந்த நிதிஸ் அவளை தோளோடு அனைத்து மீட் மை லவ்வபிள் வைப்” என்றான். அவன் திருமணம் செய்தது தெரிந்தாலும் பலருக்கு தெரியவில்லை அனைவரும் கைதட்டி ஆர்பரித்தனர்.
“கனிமலர்” …”ஹனி வாய்ஸ்” என உல்லாசமாக சொன்னவன் இதோ உங்களுக்காக மைக்கை அவள் கையில் வைக்க அவளும் அவன் செயலில் பயத்துடன் மைக்கை மறு கையால் மூடியபடி “என்ன இது” என்றாள் படபடப்புடன் “ரிலாக்ஸ்மா நான் இருக்கேன் பாடு” என்றான் அவளோ மேலும் பயத்துடன் ஜனத்திரளையே பார்த்தவள், அவன் முகத்தை பார்க்க “இங்க நீயும் நானும் மட்டும் இருக்கம்னு நினைச்சு கண்ண மூடிட்டு பாடு” என்றான்.
நாலு சுவருக்குள் பாடியவளை இப்படி திடிரென மேடையேற்றி கையில் மைக்கைக் கொடுத்தால் என்ன செய்வாள்.
அவளுக்கோ பயம் மட்டுமே,அவன் பேச்சைக் காப்பாற்ற வேண்டிய தேவை அவன் பேச்சில் தைரியம் வரப் பெற்றவள் ஆழ்ந்த மூச்சை விட்டுக்கொண்டு கண்களை மூடி மைக்கை உயர்த்தினாள். வித்யாவோ ” வாய் பேச முடியாதவ பே பேனு பாடப் போறா” என்றாள் கௌசல்யாவிடம் சிரித்தபடி விட கௌசல்யாவோ “எனக்கு என்வோ அப்படி தோணல” என்றாள் மறு நொடியே ஹனி வாய்ஸில் “பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே… அன்பே நீ வா… இருளில் கண்ணீரும் எதற்கு… மடியில் கண்மூட வா… அழகே இந்த சோகம் எதற்கு… நான் உன் தாயும் அல்லவா… ” என அவள் குரலோ ஊனிலும் உருக்கும் அப்படி வாய்ஸ் அவள் குரலில் அனைவரும் கட்டுண்டிருக்க வித்யாவிற்கோ அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.
அப்போது தான் அவளுக்கு அனைத்தும் புரிவதாய் இருந்த”து. முழுவதுமாக பாடலை பாடிய கனி கண்களை திறக்க அந்த அரங்கமே அவள் பாடலுக்கு மயங்கி கைதட்டி ஆர்ப்பரித்தனர் அவளும் “தேங்க்ஸ்” என்றவள் புன்னகைத்துக் கொண்டாள். அங்கு வந்து அறிவிப்பாளர்களோ “மேடம் சூப்பரா இருக்கு, சார் இப்படி ஒரு சர்ப்ரைஸ் நாங்க யாருமே எதிர்பார்க்கல” என்றாள்.
ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சாங்” என்றாள் அறிவிப்பாளர் நிதிஸோ “அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ… ஐ அஸ்த் அஸ்த் லிபே… ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா… இஷ்க் இஷ்க் மீலே…லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…ஒரு காதல் உந்தன் மேலே…” எனும் பாடலை ஆரம்பிக்க பெண் குரலுக்கோ கனி அழகாக பாடினாள் அன்றும் அடுத்த நாளும் நிதிஸும், கனியும் தான் சோசியல் மீடியாவில் வலம் வந்தனர்.
நிகழ்வு முடிந்து மிட் நைடிலேயே அறைக்கு வந்தவர்கள் களைப்பில் உடையை மாற்றி விட்டு தூங்கிப் னோயினர்.
நிதிஸுன் அனைப்பில் தூங்கிய கனியை அழைத்தது அவளது தொல்லை பேசி, அலைபேசியை எடுத்துப் பார்க்க தாய் தான் அழைதத் இருந்தார். அழைப்பை ஏற்றவள் ” ம்மா எனறாள் அவரோ சாங் பார்த்தோம் நல்லாருந்தது எப்போ வாரிங்க வெள்ளிக் கிழமை தான்மா” என்றவள் அவரோடு பேசி அழைப்பை துண்டித்தாள்.
அவளும் தாய் ,தந்தை, தம்பி , பாட்டி, ராம் , பிரதாப் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆயிரம் வாழ்த்துக்கள் அவளுக்கு குவிந்திருந்தது.
இசை மீதான அவள் பிரியதற்கு நிதிஸ் அங்கீகாரம் வாங்கி கொடுத்திருந்தான்
அடுத்த நாள் தங்களது டீமுடன் கனடாவை சுற்றி திரிந்தவர்கள் அவர்களை அன்று இரவு விமானம் ஏற்றிவிட்டு தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறை நுழைந்தவர்களை வரவேற்றதென்னவோ அலங்கரித்த அறை தான்.
அவள் பாடிய நெஞ்சினிலே பாடலை ஒலிக்க விட் டான் அவளோ அதிர்ச்சியுடன் நிதிஸைப் பார்க்க கண்சிமிட்டியவன் அவளோடு மஞ்சத்தில் சரிந்தான் “குங்குமம் ஏன்சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல்பொழுதில் கசங்கத்தான் எனும் வரிகளில் அவளோ வெட்கத்தில் அவனில் புதைய” மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்” என மீதிப் பாடலைப் பாடியவன் அவளை கலைத்து, களைந்து அவளில் மூழ்கி முத்து எடுத்தவன் அவளை விட்டு விலகி படுக்க அவன் இதழ்களிலோ புன்னகை அவள் இதழ்களிலோ வெட்கம் அவளைத் திரும்பிப் பார்க்க அவன் பார்வையில் மேலும் சிவந்து போனவளோ போர்வையால் தன்னுடலை மூடியவளை தன் நெஞ்சில் தூக்கி வைத்தவன் கண்மூடி தூங்கினான்.
சில மணி நேரம் சென்று கண்விழித்தவன் வயிறு வேறு பசிக்க “பேபி எழுந்திரு குளிச்சிட்டு சாப்பிடலாம்” என்றான். அவளும் போர்வையுடனே குளியலறை நுழைய அவளோடு குளியலறை நுழைந்தவன் பேபி வாட்டர் வேஸ்ட் ஆயிடும்ல என்றான் குளியலறை விட்டு வெளியே வந்த அவன் இதழிலும் புன்னகை அவள் இதழிலும் புன்னகை இரவு உணவு ஹோட்டலிலேயே உண்டவர்கள் மீண்டும் தஞ்சம் அடைந்ததென்னவோ மஞ்சத்தை தான்.
கைகோர்த்து கனடாவை இருவரும் சுத்தி வந்தனர் கொஞ்சலும் சீண்டலுமாக இருவரும் தங்களது நாட்களைக் கடத்தினர்.
இதோ இன்றுடன் கனடா இருந்து வந்து ஒரு வாரம் சென்றிருக்கும் அவரவர் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க கனியும் நிதிஸும் காதல் வானில் சிறைகில்லாது பறந்தனர்.கனியை ஸ்டூடியோவில் பாட அழைக்க அவலோ மறுத்து விட்டாள் அவனுக்காக மட்டுமே அவள் பாடுவாள்.தனிமையில் அதைக் கேட்பதோ அவனுக்கு பரம சுகம்.
அவள் பாட மறுத்ததில் நிதிஸுககோ மனத்தாங்கல் இருந்தாலும் அவள் உணர்விக்கும் பேச்சுக்கும் மதிப்பளித்திருந்தான்.
நாட்களும் செல்ல விடிந்தால் ராமின் திருமணம் எனும் நிலையில் வீடு முழுவதும் உறவினர்கள் நிதிசஸுன் கண்கள் காதல் மனைவியை தேடியும் கிடைக்கவில்லை அவள் தனியாக சிரிக்கும் போதெல்லாம் முத்தமிட்டே ஒரு வழியாக்கி விடுகிறான்.
மறுநாள் அனைவரும் ஆயத்தமாகி திருமண மண்டபத்திற்கு சென்றனர் மண்டபமும் உறவினர்களால் நியம்பி இருந்தது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. ராமும் ஐயர் ஓதும் மந்திரங்களை உச்சரித்தவன் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஐயரிடமிருந்து தாலியை வாங்கி தரங்கிணியின் கழுத்தில் கட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.
அனைவரும் அவர்களை அட்சதை தூவி வாழ்த்தினர் விருந்தினர்களும்ன் விருந்தினை உண்டு வாழ்த்தி விடைபெற்றுச் சென்றனர்.
திருமணமும் நல்லபடியாக முடிந்தது. தரங்கினியும் அக்குடும்பத்துடன் இணைந்து கொண்டாள்.
வித்தியாவும் அதன் பின் பிராமின் பக்கம் செல்லவில்லை அவளோ தான் கூறிய பொய் புரிந்ததால் என்னவோ அவளும் அதன் பின் ஸ்டூடியோவில் வேறு ஒரு காதல் கிடைக்க அதில் தன் கவனத்தை செலுத்தினாள். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல அன்று ராமின் அலுவலகத்திற்கு வந்த நிதிஸ் ” என்னடா திடீர்னு வந்திருக்க என்றான் ராம்.அவன் ரெண்டு டிக்கெடை வைத்தான். ராமோ ” வாவ் தேங்க்ஸ் டா” என்றான் அதுவோ சுவிட்சர்லாந்து செல்வதற்கான டிக்கெட்ஸ்.
ராமும் தரங்கிணியும் சுவிட்சர்லாந்து செல்லும் நாளும் வந்தது.தரங்கினியும் இருவாரம் விடுப்பெடுத்திருந்திருந்தாள். முதல் நாள் இரவுணவின் போது நிதிஸ் கனியை பார்த்தபடி “அப்பா கொஞ்சம் அவுட்டிங் போய் வரலாம்னு இருக்கேன்” என்றான். பிரதாபோ “ஓகே டா ராமும் நாளைக்கு போறான் தானே,அதற்கு நிதிஸோ “எங்க கூட தான் அவன் வாரன்” என்றான். சாப்பிட்ட ராமிற்கோ புறையேற தலையில் தட்டியவன் “ஹனிமூனா?” “இல்ல அவுட்டிங்” என்றார் கல்யாணி சிரித்தபடி கனிக்கோ வெட்கத்தில் நிலத்தில் புதைந்து விடலாம் போல் இருந்தது.பாட்டியோ “ஏன்டா இன்னுமாட உங்க ஹனிமூன் முடியல” என்றார்.அவர்கள் வாழ்வில் காதல் காதல் காதல் மட்டுமே ராமும் தரங்கிணியும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.
மறுநாள் இரு ஜோடிகளையும் விமான நிலையத்தில் வழியனுப்ப முழு குடும்பமே வந்தது மேகநாதன் ,வாணி , சுதர்சன் என அனைவருமே வந்திருநத்னர். மகளின் வாழ்க்கை சந்தோசமாக அமைந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி அனைவரும் கையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தனர்.
மௌனம் தாண்டிய அவர்கள் காதல் தேனிலும் இனிதாக தித்திப்புடன் இருந்தது. “தேனிலும் இனிது காதலே”
அவங்க ஹனிமூன் செல்லட்டும் வாங்க நாம் விடை பெறுவோம்.
நன்றி
தேனிலும் இனியது காதலே – 19
written by Competition writers
காதலே- 19
நாட்களும் அதன் போக்கில் செல்ல, ஸ்டூடியோ, ஆஃபிஸ் என நிதிஸுன் நாட்களைக் கடத்த கனியும் ஆன்லைனில் வேலை செய்வதால் வீட்டில் தான் அவள் பெரும் பாலும், தன் காதலின்ல் கனியை திக்குமுக்காடச் செய்தான் நிதிஸ். அன்று இரவுணவின் போது என்ன ப்ரோ நாங்க எல்லாம் இப்போ கண்லயே தெரியிரமில்லப் போல,என்றான் நக்கலாக நிதிஸோ ராமைப் பார்த்து முறைக்க,நீ முறைச்சாலும் அதான் உண்மை.
“பாட்டி,”
“என்னடா”
“கொஞ்ச நாள் முன்னாடி நிதிஸ்ட சாங். ஒன்னு ஃபீமேல் வாய்ஸ்ல ரெண்டுங்கானது நீங்க கூட நிதிஸ் பாடினத விட இந்த வாய்ஸ்ல கேட்க நல்லா இருக்குன்னு சொன்னீங்க” “ஆமாண்டா, என்னா வாய்ஸ் அப்படியே புல்லரிச்சுப் போயிடும் யார்டா அந்த சிங்கர்” என தேவிப் பாட்டி கேட்டக,
கனியோ படபடப்புடன் அமர்நிருந்தாள் அவளுக்கு எதிரி இருந்த நிதிஸோ மேசைக்கு கீழால் அவள் காலை வருட ,வாய்க்குள் வைத்த உணவை மெல்லவும், முடியாது முழுங்கவும் முடியாது அவள் திருதிருவென முழிக்க கல்யாணியோ மேலும் இரண்டு இடியாப்பத்தை வைத்தவர் “சாப்பிடுமா” என்றார். அவர் வைத்த இடியாப்பத்தையும் நிதிஸையும் மாறி மாறி பார்க்க அவளின் பார்வையில் சிரிப்பு வரவே காலை எடுத்துக் கொண்டான்.
அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு அவனை முறைத்தபடியே உணவை உண்ணத் தொடங்கினாள்.
மறுபுறம் பாட்டி கேட்டதிற்கோ “அத உங்க மூத்த பேரனுகிட்ட தான் கேட்கணும் “என்றான் ராம் பாட்டியும் நிதிஸைப் பார்க்க “உங்க பேத்தி தான் பாட்டி அந்த ஹனி வாய்ஸ்” அட சொல்லவே இல்ல கனிமா, இந்த பாட்டிக்கு ஒரு சாங் பாடி காட்டணும்” அவளோ நிதிஸைப் பார்த்தவாறு” பாட்டிமா வாய்ஸ் இன்னும் ஃபுல்லா சரியாகல” என்றாள் தயங்கி தயங்கி “ஓகே டா எல்லாம் சரியானதும் கட்டாயம் பாடணும்”…” சோர் பாட்டிமா”.
“ராம் நான் கேட்கலை டா அந்த சாங்க” என்றார் கல்யாணி ராமும், உணவு உண்டு முடித்ததும் அவளது யூடியூப் தளத்திலிருந்து முதல் “கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்” என்னும் சாங்கை ஒழிக்கச் செய்ய அவ்விடமே நிசப்தம், பாடல் முடிவடைந்ததும் பாட்டியோ “நல்ல பியூச்சர் இருக்குமா” என அவளை பாராட்ட அவளும் வெட்கத்துடன் “தேங்க்ஸ் பாட்டி “என்றாள் கல்யாணியோ அவளை அனைத்தவர் “ரொம்ப நல்லா இருக்குடா” ரியல் சாங்க விர உன்னோட இந்த வெர்ஸன் சூப்பர்” என்றார். பிரதாப்போ “சரியான ஜோடி தான் மை சன்” “காட் பிளஸ் யூ மா” என்றார்.
“தரங்கிணி வீட்ட பேசியாச்சு வாரமாதம் இருபத்தெட்டாம் தேதி பிக்ஸ் பண்ணி இருக்கு, வேலையில நிறையவே இருக்கு எல்லாம் பாக்கணும் என்றார் பிரதாப். இவன்ட் மேனேஜ்மென்ட் எல்லாம் பார்த்துப்பாங்க நம்ம தீம் மட்டும் செலக்ட் பண்ணினம்னா ஓகே என்றான் ராம் ” அவர்கள் பேச்சு ராம தரங்கிணி திருமணம் பற்றி திசை திரும்பியது.
அப்படியே இரவுணவை முடித்துக் கொண்டு அவரவர் தமதறைக்கு திரும்பினர். கனியை தன் மடியில் அமர்த்தியவன் “ரெண்டு நாள்ல கன்சென்டோனுக்கு போகணும்” என்றான். அவளோ “போயிட்டு வாங்க” என்றாள். கனடால அதும் ஒன் வீக் என்றான். “அவளோ நாளா” என்றாள் சோர்வான குரலில், தனியா போறனு யார் சொன்னது நீயும் நானும் போறோம் என்றான்.
அவளோ மகிழ்ச்சியில் அவனை அனைத்துக் கொண்டாள். “ஒரு நாள் கூட உன்னப் பிரிச்சி என்னால இருக்க முடியாது பேபி” என்றான் நெகிழ்வாக, அவன் காதலையும் ரசிக்கத் தொடங்கினாள் கனி.
அவனும் அவளிடையே அழுத்த அது ஒரு சுகமான இம்சையாக இருந்தது அப்படியே அவளை திருப்பி அவள் இதழ்களைக் கௌவாக் கொண்டான் அவளும் அவன் முத்தத்தில் மூழ்கியவளுக்கோ அவன் தொடுகை,அனை முத்தம் உடல் சில்லிட்டுப் போனது. ,அவளை தன்னில் இருந்து பிரித்தவன் மென் சிரிப்புடன் அவன் முத்தமிட்டு இதழ்களை வருட, “என்னடி ஒரு முத்தத்துக்கே மொத்தமா சிவந்துட்டு இவ்வளவு சாஃப்ட்டா இருக்க,” அப்ப மத்ததுக்கு எல்லாம் என்றவனின் இதழை வெட்கத்தால் தன் கையினால் மூட அவளது உள்ளங்கையிலேயே மீண்டும் முத்தமிட்டான் அவளோ அவன் மடியில் இருந்து எழுந்தவள் வெட்கத்தால சிவந்த முகத்தைக் காட்டாது திரும்பிக் கொண்டாள்.
“ரெடியாகு பேபி “என்றான்” எங்க போக என”அவள் கேட்க அவனோ எதுவும் சொல்லாது அலைபேசியுடன் பால்கனிக்கு சென்று விட்டான்.” எங்க போகனு சொன்னாதான் என்னவாம் ” சிணுங்கி கொண்டே அவளும் தயாராகினாள். இருவரும் வந்து சேர்ந்ததென்னவோ அந்த உயர்தர ஹோட்டலுக்கு தான் அவள் கையைப் பிடித்த படி தான் அவளை அழைத்துச் சென்றான்.
கடற்கரையையண்டியதான அக்ஹோட்டலில் இருவரையும் கைகாட்டி அழைத்தான் ராம். அவர்களும் வந்தமர்ந்தனர் நால்வரும் கதைத்து பேசிய படியே உணவை உண்டு முடித்தனர்.”என்ன கனிமா வேற வீடியோஸ் அப்லோட் பண்ணலையா?’ என தரங்கிணி கேட்க “இல்ல “என்றாள்.” ஆமா” ஆமா அதுக்கு எங்க அவங்களுக்கு நேரம் என்றான் ராம் நக்கலாக
நால்வரும் தங்களது காரிலேயே அங்கிருந்து புறப்பட்டனர் நிதிஸோ கனியை அவளது வீட்டிற்கு அழைத்து வர அதில் இன்பமாய் அதிந்தவள் அவன் கன்னத்தில் எட்டி முத்தமிட்டாள் காரில் இருந்து இறங்கி கொண்ட இருவரும் புன்னகையுடன் வீட்டுக்குள நுழைந்தனர்.
மகிழ்ச்சியுடன் வரும் மகளை மருமகனையும் இந்த நேரத்தில் எதிர்பாராத வேணியும் மேகநாதனும் வரவேற்பறு உபசரித்தனர்.வேணி உணவு தயார் செய்ய ” இல்ல இப்ப தான் சாப்பிட்டு வந்தம் என்றான். நிதிஸோ கை மறைவில் கொட்டாவியை வெளியிட “மலர் மாப்பிள்ளை ரூமுக்கு அழைச்சிட்டு போ” என வாணி சொல்ல நிதிஸும் காருக்கு சென்றவன் ஒரு பையுடன் அவளது அறைக்குள் நுழைய அவளோ கட்டிலிற்கு புதிய விரிப்பினை மாற்றிக் கொண்டிருந்தாள் அறையை சுழல விட்டவனுக்கோ அவனது அறையில் பாதி கூட அவ் அறை இருக்காது ஆனாலும் அவ்வறை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.
சுவர்களுக்கு மெல்லிய ப்ர்பிள் வர்ணம் பூச்சுகள் பூசப்பட்டு அதே நேரத்தில் கேர்ட்டுன்கள் போடப்பட்டிருந்தது சுவரோடு இணைந்த அலுமாரி ,ந ஜன்னலோடு ஒரு ஸ்டடி டேபிளும் அதில் சில பல பொம்மைகள் ஒருபுறம் வரிசையாக அடுக்கப்பட்டு பர்பிள் நிற ஆர்டிபிசியல் லாவண்டர் மலர்கள் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது. “ஓ செம்மையா இருக்கு என்றவன் தான் கொண்டு வந்த பையை அலமாரியை திறந்து வைக்க அதைத் திறந்தவனுக்கோ அதிர்ச்சி அலமாரி உட்சுவர் முழுக்க அவனது படங்கள் ஒட்டப்பட்டு இருந்தது அவனும் சிரிப்புடன் அவளை நோக்க, அவளோ சிந்தனை இல்லாத தலையணைகளுக்கு மாற்று உறைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
” கனி என்ன இது?’ என அவன் கேட்க அவன் புறம் திரும்பியவளோ ” அச்சச்சோ இதை மறந்துட்டேனே” “அது வந்து என அவளுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை “என்ன அவ்வளவு பிடிக்குமாடி” அவளும் தலை குனிந்த படி “ஆம் “என தலையாட்ட அவளை பேச விடாது இழுத்து அனைத்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
ஏன் வீட்டவாரனு சொல்லல” எனற்வளின் மூகக்ல தன் மூக்கால் உரசியவன் ” எல்லாம் சப்ரைஸ் தான்” என்றான். மறுநாள் தாய் தந்தை மற்றும் தம்பியிடன் நாளைக்கு கனடா செல்வதாக சொல்லிக் கிளம்பினர்.
அலுவலகத்திற்கு வந்த கனி விடுமுறைக்கு விண்ணப்பிக்க ராமிடமிருந்து காரணம் கேட்டு பதில் வந்ததை பார்த்தவள் ” “ஐயோ”இவர… ” பர்சனல் ரீசன் சார் “என பதில் அனுப்ப அவனும் லீவு அக்செப்ட் செய்திருந்தான்.
தனது வேலைகளை முடித்துக் கொண்டு மோனிகாவுடன் வெளியேறினாள் கனி மோனிகா அவளது கணவன் வரவும் கனியிடமிருந்து விடை பெற்றாள். நிதிஸுக்கு அழைக்க “பேபி கொஞ்சம் லேட் ஆகும் தர்ஷன் கூட போறியா?” என்றான் ‘அன்று தர்ஷன் நிதிஸுடம் சொல்லியதற்கு திட்டியவனா இவன்’ என எண்ணியவள் “சரி” என்றாள்.
“தர்ஷா எங்க இருக்க, “ஹாஸ்டலுக்கு போகத்தான்கா”, “ஓகே ஆபீஸ்ல இருக்கேன் பிக்கப் பண்ணிக்கிறியா?” என கேட்க “ஓகே” என்ற தர்ஷன் சிறிது நேரத்தில் அவளை ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டான்
” தர்ஷா உள்ள வா” என அழைக்க நேரமாச்சுடி வார்டன் ப்ராப்ளம் பண்ணுவார் நான் பிறகு வாரேன்” என கிளம்பினான்.
அறையினுள் நுழைந்து குளித்து கீழே வர கல்யாணியும் தேவிப்பாட்டியும் சீரியலில் மூழ்கியிருந்தனர். பிரதாபோ “அந்த நியூஸ்ஸ கொஞ்சம் போடுங்களேன் அம்மா”..” சும்மா இருடா அடுத்து என்னன்னு பக்கு பக்குன்னு இருக்கு” என்றார் தேவியம்மா.கனியும் அவ்விடம் வர கனியை பார்த்த பிரதாப் “இவங்களோட சேராதமா உன்னையும் சீரியல் பார்க்க வச்சு பழுதாக்கிடுவாங்க” என்றார்.
கல்யாணியோ “அதான் அறையில அவ்ளோ பெரிய டிவி இதுக்கு தானே அங்க போய் பாருங்க” என்றார். கனிக்கு அவர்களின் உரையாடல் சுவாரசியமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் சீரியல் முடிய அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மாமியின், மருமகளும் திட்டியபடி இரவு உணவை ஆயத்தம் செய்தனர்.
இது வழமையாக நடப்பது தான் அவர்களின் சீரியல் பற்றிய விமர்சனம் கேட்பதற்கு சுவாரசியமாகவே இருக்கும்.
“நிதிஸ் எங்கமா,? வர லேட் ஆகுமாம் அத்த “சரி சரி” வா நேரத்திக்கு சாப்பிடு” என்றவர் ஏங்க சாப்பிட வாங்க” என குரல் கொடுக்க, பிரதாப்பும் அங்கு வந்தார்.
“எத்தனை மணிக்குமா ப்பிளைட்”… “காலையில ஏழு மணிக்கு மாமா” “ஓகே மா” என்றார் ஸ்ரூடியோவில் வேலை அதிகமானதால் லேட்டாகவே வந்தான் நிதிஸ்.
கல்யாணி ,பிரதாப் தேவி பாட்டி தூங்க சென்றிருக்க ராம் வெளியில் சென்றூருந்தான்.
கனி லேப்டாப்பில் புது ஆப்பிக்கான கோடிங்கை செய்து கொண்டிருந்தாள் அறையினுள் வந்த நிதிஸ் “தூங்கலையா பேபி “எனக் கேட்டவன் டவலுன் குளியலறை நுழைந்து கொண்டான்.
குளித்து வெளியே வர கனி பாலுடன் நின்று இருந்தாள் நிதிஸ் தான் வர லேட்டாகும் என்பதால் தனக்காக காத்திருக்காமல் உணவு உண்ணும் படி மெசேஜ் அனுப்பி இருந்தான்.
பாலை அருந்திய படி” பேக்கிங் எல்லாம் ரெடியா பேபி” அவளும் “ஆம் “என சொல்ல “ரொம்ப டயர்டா இருக்கு வா தூங்கலாம் என்றவன் அவளை அணைத்தபடியே தூக்கிப் போனான்.
இதோ இருவரும் விமானத்தில் பிசினஸ் கிளாஸில் இருந்தனர் நிதிஸோடு இன்னும் சில பாடகர்களும் கலைஞர்களும் பயணித்தனர் கனடாவின் விமான நிலையத்தில் தரையிறங்கியவர்கள், டோராண்டோவின் ரிச்சர்ட் ஹோட்டலில் தான் அனைவரும் தங்கிக் கொண்டனர். நாளை கன்சென்ட் என்பதால் அனைவரையும் ஓய்வெடுக்கும்படி கூறிய நிதிஸ்
கனியை அழைத்துக் கொண்டு தாங்கள் புக் செய்த அறையினுள அநுழைந்தான். அனைத்தையும் பார்வையிட்டபடி வந்தால் கனியும் அனைத்தையும் பார்வையிட்டபடி வ்ந்தாள். நிதிஸும் அவள் கேட்பதற்கு பொறுமையாகவே பதிலளித்து வந்தான்.
கன்சன்டிற்கு வித்தியாவும் வந்திருந்தாள் அவள் பார்வை விமானநிலையத்தில் இருந்து அடிக்கடி நிதிஸ் மேல படிந்தது மீண்டது ,அதே வேளை கனியை நக்கலாகவே அவள் பார்த்திருந்தாள். நிதிஸூம் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவரவர்க்கு புக் செய்திருந்த அறைக்குள் செல்ல நிதிஸும் உணவை அறைக்கு வரலழைத்தவன் தன்னை முற்றிலும் ஓய்வுக்கு உட்படுத்திக் கொண்டான்.
வித்தியாவோடு மற்றொரு பாடகாகியான கௌசல்யாவும் தங்கி இருந்தாள் “நிதிஸ் சாரோட வைஃப் ரொம்ப அழகு இல்ல” என்னை கனியைப் பற்றி கௌசல்யா வித்யாவிடம் பேசஃ “அழகா இருந்து என்ன பிரயோஜனம் குரல்வேனுமே அவளால பேசவே முடியாது என்றாள். கௌசல்யா “உண்மையாவா?’..” ஆமா” அவர்தான் கல்யாணத்துக்கு ஓகேன்னா இவளுக்கு எங்க போச்சு புத்தி எனக் கனிக்கு திட்டியபடி இருந்தாள்.
எபிலாக் -42
written by Competition writers
உயிர் 42:
எபிலாக்:
நேஹா கூறியதைக் போலவே கள்ளிக்குடி கிராமத்தில் மகளிர் கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம் அமைத்து அதில் பெண்கள் தயாரிக்கும் கைவினை பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை செயல்படுத்த ஆரம்பித்தாள்.
கள்ளிக்குடி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பல பெண்கள் ஆர்வமுடன் முன்வந்து கற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கென்று நிரந்தர வருமானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தாள்.
இரு வருடங்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்று மீனாட்சி திறம்பட நடத்தும் தனது நிறுவனத்தை பார்வையிட்டு வந்தாள். டிரஸ்ட்டிற்கு பணம் சரியாக செல்கின்றதா..? எங்கெங்கு எவ்வளவு தொகை எதற்காக செலவிடப்பட்டிருக்கின்றது. யார் கைகளுக்கு பெற்றிருக்கின்றது…? போன்ற கணக்கு வழக்குகளை மீனாட்சி சரிபார்த்து நேஹா விடம் கொடுத்தாள். சிரித்தபடி, ” உன்னை நம்பி மாட்டேனா மீனாட்சி…?” என்றதற்கு ,” உறவு வேற…வியாபாரம் வேற… இரண்டும் தனித்தனியாதேன் இருக்கனும். சும்மாயில்ல எத்தனை கோடி ரூபாய்… எல்லாத்துக்கும் கணக்கு சரியா இருக்கனும்..நேஹா. செய்ற வேலைக்கு உண்மையா இருக்கனும்..நான் சரியா பண்ணிருக்கேனான்னு நீதான் சொல்லனும்…” என்றாள்.
” பெர்ஃபெக்ட் மீனாட்சி…” என்று அவளை தட்டிகீ கொடுத்தாள்.
ஈஸ்வரன் தனது புது வீட்டில் பெற்றோருடனும் , நேஹாவுடனும் குடியேறினான்.
அவனது கடின உழைப்பினை மட்டுமே நம்பினான்.
இரண்டு வாழைத் தோப்பினை வாங்கினான். மேலும் சில பயிர்களை பயிரிட்டு அதிக லாபத்தை ஈட்டினான்.
அவனது செல்லப் பிள்ளைகளான நெற்கதிர்கள் பச்சை பசேலென செழிப்புடன் வளர்ந்து நின்றது.
எப்போதும் போல கயிற்றுக் கட்டிலில் படுத்து நெற்கதிர்களை ரசித்திருந்தான் ஈஸ்வரன்.
தனது தேவையறிந்து செயல்படும் நேஹாவின் மீது நாளுக்கு நாள் அன்பும் காதலும் கூடித்தான் போனது அவனுக்கு.
அக்மார்க் குடும்பத்தலைவியாக மாறிப் போனாள் நேஹா.
லண்டனிலோ வளர்ந்து வரும் பெண் தொழிலதிபராக சிறிது சிறிதாக முன்னேறிச் கொண்டிருந்தாள் மீனாட்சி .
இரு பெண்களின் வாழ்க்கை மாறித்தான் போனது. ஆனால் மனம் நிறைந்த சந்தோஷத்துடன்.
நான்கு வருடங்கள் கழித்து..
மகனுடன் போராடிக் கொண்டிருந்தாள் நேஹா…
“ டேய்…விதார்த்…மரியாதையா ஜட்டியை போடுடா…இல்லன்னா எல்லாரும் ஷேம் ஷேம் சொல்லுவாங்க…” என்றாள்.
“ போ…மம்மி…அதெல்லாம் போட மாட்டேன்…” என்று ஓடிக் கொண்டிருந்தான் ஈஸ்வரன் நேஹாவின் புதல்வனான விதார்த்.
புகழினி மற்றும் பாண்டியனின் புதல்வன் அஷோக் விதார்த்தை கேலி செய்து கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொள்ள ஈஸ்வரனும் பாண்டியனும் வந்து இருவரையும் விலக்கினர்.
“ அடேய்…! அடேய்…!ஏன்டா எப்ப பாத்தாலும் இப்படி சண்டை போட்டுட்டே இருக்கீங்க..? நேரமாச்சு…நாங்களெல்லாம் ஆத்தங்கரையில போய் நிலாச்சோறு சாப்பிட போறோம்…நீங்க ரெண்டு பேரும் வரலன்னா இங்கயே இருங்க…யமுனா பாப்பாவும் வர்றா…நாங்க போறோம்…”என்றான் பாண்டியன்.
இரண்டு வாலுகளும் அடித்துப் பிடித்து கொண்டு எழுந்து, “என்ன யமுனா பாப்பா வர்றாளா…? சரி நாங்க போய் ரெடி ஆகுறோம்…அம்மா ஜட்டி போட்டு விடுங்க….” என்று கத்தியபடி உள்ளே ஓடினான் விதார்த் .
“ அம்மா…! பவுடர் போட்டு விடுங்க…”என்றபடி உள்ளே ஓடினான் அஷோக்.
கிட்டத்தட்ட இருவருக்கும் மாதங்களில் தான் வயது வித்தியாசம்.
ஆதி மற்றும் மீனாட்சியின் புதல்வி யமுனா.. இருவரையும் விட ஒரு வருடம் சிறியவள்.
முதல் சில மாதங்களுக்கு நேஹாவின நிறுவனத்தை ஆதி தான் நடத்திக் கொண்டு இருந்தான்
மீனாட்சியை மேலும் சில பாடப்பிரிவுகளை படிக்க வைத்து அவளுடனே இருந்து நிறுவனத்தின் மேலாண்மை, திட்டமிடல் ,விற்பனை ஆகியவைப் பற்றி புரிய வைத்தான்.
அவளுக்கு பக்கபலமாக இருந்து மெல்ல மெல்ல தொழிலை கற்றுக் கொடுத்து..அவளை தனியாகவே நிறுவனத்தை கையாள வைத்தான்.
முதலில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள், தோல்விகள் நேர்ந்தாலும் அதிலிருந்து தொழிலை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தான்.
இப்போது நன்றாகவே
நிறுவனத்தை கையாள ஆரம்பித்து விட்டாள் மீனாட்சி.
அனைவரும் வித விதமான உணவுகளை தயாரித்து எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர்.
மீனாட்சி தேனியில் இருந்து வந்திருக்க.
யமுனாவுடன் அஷோக்கும் விதாரத்தும் விளையாடினர்.
அவர்களை போலவே வேறு சிலரும் உணவினை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரையில் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர்.
பௌர்ணமி முழு நிலவு பாலொளியை எங்கும் வீசி இரவினை இதமாக்கிக் கொண்டிருந்தது.
பெரியவர்கள் குழந்தைகளுடன்
அமர்ந்திருக்க…மற்ற மூன்று ஜோடிகளும் தத்தமது இணையுடன் ஆற்றுத் தண்ணீரில் வெவ்வேறு திசைகளில் கால்களை நனைத்தபடி நடந்து கொண்டிருந்தனர்.
எங்கிருந்தோ அலைப்பேசியிலிருந்து மிதந்து வந்த பாடல் வரிகள் செவியில் விழுந்தது
“ எல்லாருக்கும் எழுதி வச்சான்…
எங்களை தான் கட்டி வச்சான்…
பொண்ஜாதியோ பூந்தோரணம்.,.
நானோ ரொம்ப சாதாரணம்…
வெண்ணிலவ மேகம் போல
என்னை அவ மூடி வைப்பா…
மத்தவங்க கண்டு பட்டா …
தத்தளிப்பா….தான் தவிப்பா..
ஊருக்கவ ராணி போல…
எனக்கு அவ அம்மன் போல…
சொல்லப்போனா என்னைப் போல…
பாக்கியவான் யாருமில்லை…
தாயையை கூட தாரம் போல..
ஈடு செய்ய யாரும் இல்ல…
எல்லாம் என் யோகம்…
ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேல பட்டு மோகம் ஆச்சு…”
இவர்களின் மகிழ்ச்சிக்கு சாட்சியாக நிலவின் பிம்பம் அழகாக தண்ணீரில் மிதந்தது.
உயிர் தொடும் உறவே -41
written by Competition writers
உயிர் 41:
பாண்டியன் மற்றும் புகழனியின் திருமண நாளும் வந்தது.
புகழினியிடம் பேசவே இல்லை பாண்டியன். இரண்டு முறை புகழினியும் பேச முயற்சித்தாள் ஆனால் பாண்டியனோ முகம் கொடுத்து பேசவில்லை.
அவளுக்கும் அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் விட்டுவிட்டாள்.
பாண்டியனின் திருமணத்திற்கு வந்திருந்தனர் ஆதி மற்றும் மீனாட்சி.
ஈஸ்வரன் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தான்.
தங்கைக்கென்று அனைத்து வகையான சீர் வரிசைகளும் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்திருந்தான்.
புது வீட்டிற்கு கிரகப்பிரவேசத்தை மட்டும் முடித்திருந்தான்.
இருப்பினும் சில வேலைகள் முடியாததால் அங்கு குடிபோக முடியாத நிலை .
ஈஸ்வரனின் மனம் முழுவதும் நேஹாவைப் பற்றிய சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது.
புகழினி தனது திருமணத்திற்கு அவளை அழைத்திருந்தாள்.
நேஹா மும்பைக்கு வந்ததை ஈஸ்வரனிடமும் புகழினியிடமும் தெரிவிக்க வில்லை.
ஆதியும் மீனாட்சியும் கூட அதனைப் பற்றி பேசாததால் ஈஸ்வரனுக்கு எந்த விபரமும் தெரியாமல் போயிற்று.
தாம்பூல பைகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில், “ ஹாய்…ஈஸ்வரன்..! எப்படியிருக்கீங்க..?”என்ற குரல் கேட்டவுடன் குற்றாலச் சாரல் வீசியது அவனது மனதில்.
வேகமாக திரும்பியவன் முதலில் ஆராய்ந்தது அவளது கால்களை தான்.
அந்த மக்கிற்கு அது புரியாமல் ,” என்ன பேச மாட்டீங்களா…? கீழ என்னத்தை தேடுறீங்கன்னு சொன்னா…நானும் தேடுவேன்ல….” என்றது.
வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டவன் , “ஒண்ணுமில்ல….நீ உள்ளாற போ…வலது பக்க ரூம்ல புகழு இருக்கா…” என்றான்.
“ அய்யோடா…! ரொம்ப தான் பண்ணுறீங்க…எப்படியிருக்கீங்கன்னு கேட்டேன்…அதுக்கும் பதிலில்லை…அட்லீஸ்ட் நான் எப்படி இருக்கேன்னாவது கேக்கலாம் ல…” என்றவள் ஒரு பெருமூச்சுடன் , “அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் போல…”எனப் புலம்பிக் கொண்டே சற்று சாய்ந்து சாய்ந்து நடந்தாள்.
அவள் செல்வதையே விழியகற்றாமல் பார்த்திருந்தவன், “பைத்தியகாரி…அதுக்குதேன் கால்ல பாத்தேன்….அது கூட புரியலை இவளுக்கு…”என முணுமுணுத்தான்.
சங்கர பாண்டியன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
மீனாட்சியும் கோமதியுமே அனைத்து வேலைகளையும் செய்தனர்.
வடிவாம்பாள் கழுத்து நிறைய நகைகளையும் , ஒரு சாண் அளவிற்கு கெட்டி ஜரிகையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு அங்குமிங்கும் வம்பு பேசிக் கொண்டிருந்தாரே ஒழிய சிறு துரும்பையும் கிள்ளி இங்கிருந்து அங்கு போடவில்லை.
வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த பாண்டியனை ரசனையோடு பார்த்த வண்ணம் அவனருகே வந்து அமர்ந்தாள் புகழினி.
அரக்கு நிற தங்க இழையோடும் புடவையில் தேவதையென தன்னருகே அமரந்தவளை ஒரு கணம் பார்த்துவிட்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான் பாண்டியன்.
அவன் புறமாக லேசாக சரிந்து மெல்லிய குரலில்,
“ ரொம்பத்தேன் பண்ணுதீக….நைட்டுக்கு பாத்துகிடுதேன்…” என்றாள்.
அவனோ அவளை முறைத்து விட்டு, “சீ..போடி…”என முகத்தை திருப்பிக் கொண்டான்.
“ என்னது சீ…போடியா…? இருக்கட்டும் “ என நினைத்தவள் அவனது தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ ஆஆஆஆ…”என்று அலறினான் பாண்டியன்.
“ என்னாச்சு மாப்பிள்ளை…? ஏன் கத்துறேள்…?” என்றார் அய்யர்.
“எறும்பு அய்யரே…!கடிச்சிருச்சு…” என்றான்
“ அதை நசுக்கி அந்த பக்கம் போட்டுடுங்கோ…இல்லன்னா திரும்ப கடிக்கப் போறது…” என்றார் அய்யர் விவரம் புரியாமல்.
புகழினியை முறைத்துக் கொண்டே, “ இன்னிக்கு அந்த எறும்பை நசுக்காம விடப் போறதில்லை…” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
புகழினியோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.
மீனாட்சியுடன் வளவளத்துக்கு கொண்டிருந்தாள். லட்சுமியோ அவளது காதில் ,” கொஞ்சம் உன் வாயை மூடிட்டு சபையை பாத்து நேரா உக்காரு…எப்பப்பாரு வாயடிக்கறது…” என கடிந்து கொண்டார்.
அவரை முறைத்துக் கொண்டே முன்னால் திரும்பி அமர்ந்தாள் புகழினி.
“கெட்டி மேளம்…கெட்டி மேளம்….”என அய்யர் கூற மங்கல வாத்தியங்கள் முழங்க புகழினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மனைவியாக்கிக் கொண்டான் பாண்டியன்.
அனைத்து சம்பிரதாயங்களை புகழினியுடன் வம்பு செய்யாமல் செய்தான்.
அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்றனர் மணமக்கள்.
நேஹாவும் பச்சை நிற பட்டுடுத்தி எளிமையான தோற்றத்தில் ஈஸ்வரனது மனதை கொள்ளைக் கொண்டிருந்தாள்.
வெள்ளை வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசையை நீவியபடி பேசிக் கொண்டிருந்தவனை ரசனையோடு தழுவியது நேஹாவின் அகன்ற விழிகள்.
ஒருவரையொருவர் மற்றவர் பார்க்காத போது ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனையெல்லாம் ஆதியும் மீனாட்சியும் பாரத்துக் கொண்டிருந்தனர்.
சங்கர பாண்டியனுக்கும் கோமதிக்கும் மனது நிறைந்து போனது.
முத்துக்காளையும் லட்சுமியும் கண் கலங்கிய படி நின்றனர்.
வம்பிழுத்துக் கொண்டும் படபடவென்று பேசி வாயடித்துக் கொண்டு இருக்கும் ஆசை மகள் ..இனி புகுந்த வீட்டில் குலம் தழைக்க வாழப்போகின்றாள் என ஒருபுறம் மனம் நிறைவாகவும் , தங்களை பிரிந்து செல்கின்றாள் என மறுபுறம் ஏக்கமும் உண்டானது.
ஈஸ்வரனுக்கு தங்கை புகுந்த வீட்டிற்கு செல்கின்றாள் என்ற ஏக்கம் இருந்தது தான்.
வருத்தத்தை காட்டினால் புகழினியும் வருந்துவாள் என அமைதியாக நின்றான் அந்த பாசமிகு அண்ணன்.
இன்னுமின்னும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் கூட சளைக்காமல் செய்வான் ஈஸ்வரன்.
கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தவன் அருகில் வந்து நின்றாள் நேஹா.
“ வாழ்த்துக்கள் ஈஸ்வரன்…தங்கைக்கு கல்யணாம் பண்ணியாச்சு…வீடும் கட்டியாச்சு…. சூப்பர்…உங்க மேல லவ் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது…என்ன பண்ண..?”என்றாள்.
அவனோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, “ நீ…ஒண்ணும் பண்ண வேண்டாம்…” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.
அவளோ சலிப்புடன், “இவரை கரெக்ட் பண்ணவே முடியாதா..?”என் முணுமுணுத்து விட்டு வெளியே வந்தாள்.
அனைவரும் திருமணம் முடிந்து கிளம்பி கொண்டிருந்தனர்.
அனைவரையும் வழியனுப்பி வைத்து விட்டு வந்தான் ஈஸ்வரன்.
நேஹாவும் கிளம்ப வேண்டும் .
ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து தனது பையுடன் வெளியே வந்தாள்.
கோமதியிடமும் சங்கர பாண்டியனிடமும் கிளம்புவதாக கூறினாள்.
“இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போகலாமே…அதுக்குள்ளாற கிளம்புதறேன்னு சொல்லுற?…” என உரிமையாக கோபித்துக் கொண்டார்.
சிரித்தபடி,” இல்லங்க கொஞ்சம் வேலை இருக்கு…அதான் கிளம்புறேன்…” என்று விடைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.
எதிரே ஈஸ்வரன் வரவும் அவனிடம், “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…”என்றாள்.
அவனது மனம் ஏற்கனவே நிறைகுடமாக எழுப்பிக் கொண்டிருந்தது.
இதில் அவள் வேறு பேச வேண்டும் என்று கூறியவுடன் வேண்டுமென்றே கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, “என்னத்த பேசணும்…?” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
அவளுக்கு ஏனோ மனம் நத்தையாய் சுருண்டது.
இருப்பினும் சமாளித்துக் கொண்டு, “ நான் ஊருக்கு கிளம்புறேன்…ஈஸ்வரன்…” என்றாள்.
அவளை ஒரு கணம் பார்த்தவன் அவளிடம் மீண்டும் மீண்டும் தாவிய தனது பார்வையை தவிர்த்து கொண்டு இறுகிய குரலில்,” ம்ம்…போயிட்டு வா…” என்றான் பின்னந்தலையை கோதியபடி.
அவளுக்கோ வருத்தமாக இருந்தது.
“ இந்த ரெண்டு வருஷத்தல ஒரு நாள்…ஒரு நிமிஷம் கூட நான் உங்களை பாததிச்சது இல்லையா…? என் மேல துளி அன்பு கூட வரலையா…? சொல்லுங்க…இன்னும் எவ்வளவு நாள் நான் காத்திருக்கனும்…?மனசுல எவ்வளவோ ஆசை இருக்கு…ஈஸ்வரன்..”
என்றாள்.
ஈஸ்வரன் ஏதோ கூற வரும் முன்பே , “ ரொம்ப நாளெல்லாம் நீ காத்திருக்க தேவையில்லை நேஹா…”என்ற குரல் கேட்டது.
நேஹாவும் ஈஸ்வரனும் வேகமாக திரும்பிப் பார்க்க ஆதி தான் வந்து கொண்டிருந்தான்.
“ சார்…உன்னை விரும்ப ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு…உனக்காக தான் அவரு லண்டனுக்கே வந்தாரு. அதை ஏன் மறைக்குறாருன்னும் தெரியும்…” என்றவன் ஈஸ்வரன் புறம் திரும்பி, “நீ அவளை விருப்ப ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு… அதை ஏன் மறைக்குறன்னு சொல்லவா…?” என்றான்.
ஈஸ்வரன் பதிலேதும் பேசாமல் அழுத்தமாக நிற்கவே , ஆதியே தொடர்ந்தான்.
“அவளோட ஸ்டேட்ஸ்…அவளோட புகழ்…பணம்…அந்தஸ்து…அதானே…வசதியா வாழ்ந்த அவளால இந்த எளிமையான லைஃபை வாழ முடியாது…அதுக்கு பதிலா அவ வேற யாராவது வசதியானவரா கல்யாணம் பண்ணிகிட்டா வசதியா வாழ்வான்னு தப்பு கணக்கு போட்டுட்ட ஈஸ்வரா.. எத்தனை கோடீஸ்வரங்க வந்தாலும் அவ திரும்பிக் கூட பார்க்க மாட்டா.. அவளுக்கு நீ வேணும்…உன்னோட சொந்தங்கள் வேணும்… ஆயுசு முழுசும் உன் கூடவே இருக்கனும். அதுக்கு அவ என்ன பண்ணிருக்கா தெரியுமா…? “என்ற கேள்வியுடன் நிறுத்தினான்.
ஈஸ்வரனோ என்னவென்பதை போல ஆதியின் முகத்தை பார்த்தான்.
“ அவ தன்னோட எல்லா சொத்தையும் ட்ரஸ்ட்டுக்கும்…ஆதவரற்றவங்க அசிரமத்துக்கும் எழுதி வச்சிட்டா. கம்பெனியையும் மீனாட்சி பேர்ல எழுதி வச்சிட்டா…அவங்க அப்பா அம்மாவோட ஆரம்ப கால கம்பெனியை மட்டும் தான் அவ வச்சிருக்கா. அதையும் மும்பைக்கு மாத்திட்டு வந்துட்டா…இப்ப அவ பெரிய தொழிலதிபர் நேஹா கிடையாது. சாதாரண ஆள் தான். கம்பெனில வர்ற லாபத்தை எல்லாம் மத்த நல்ல காரியங்களுக்காக முறைப்படியும் சட்டப்படியும் எழுதி வச்சிட்டு உன்னை…உன்னோட அன்பை மட்டும் தான் தேடி வந்துருக்கா…ப்ளீஸ்…அவ…” என்று ஆதி கூறும் முன்பே கையமர்த்தியவன் அவனைப் போ என்பதைப் போல சைகை செய்ய அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
சுற்றும்முற்றும் பார்த்தவன் யாருமில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு அவளருகே வந்தவன், “ஏன் இப்படி பண்ணுன…? “என்றான் அழுத்தமாக.
அவளோ அதற்கு பதிலளிக்காமல் ஆனந்த கண்ணீருடன், “நிஜமாவே என்னை விரும்புறீங்களா…? எனக்காக தான் லண்டனுக்கு வந்தீங்களா…? உங்களுக்கு என்னைய அவ்வளவு பிடிக்குமா…?என அடுக்கடுக்காக கேள்விகளை கண்ணில் நீர் மல்கக் கேட்டாள்.
எதிர்பார்த்த அவனது அன்பு எதிர்பாராத விதமாக கிடைத்த பரவசத்தில் முகம் விகசிக்க பேசினாள்.
அவளது முகத்தையே சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை வேகமாக அவளது முகத்தை தன் புறமாக இழுத்து அவளது இதழ்களை அழுத்தமாக சிறைப்பிடித்தான்.
அத்தனை அழுத்தம் அவனது வன்மையான முத்தத்தில்.
அவளது கண்ணீரும் கூட அவனது உதட்டுக்கள் சென்றது.
தழும்பிய மனதுடன் இருந்தவன் அவளது அளவில்லா காதலில் கட்டுண்டு தான் போனான்.
இவ்வாறு அவள் செய்தது அவனுக்கு கோபத்தையும் வரவழைக்க அதற்கும் பலிகடாவானது அவளது மெல்லிய உதடுகள்.
உதடுகளை மெல்லப் அவளலிருந்து பிரித்து எடுத்தவன் அவளது முகத்தை தனது கரங்களால் ஏந்தி , “ என்ன டி…இப்படியெல்லாம் பண்ணி என்னை மயக்கலாம்ன்னு பாக்கிறியோ…? பைத்தியகாரியா நீயு…அந்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க எத்தனை பாடுபட்டுருப்பாக…? இப்படி சுளுவா தாரை வார்த்து கொடுத்துட்டு வந்துருக்க…” என்றான் நெற்றியோடு நெற்றி முட்டியவாறே.
அவளோ உணர்வுகளின் பிடியில் இருந்தாள். அவனாக கொடுத்த முதல் முத்தம்.
உதடுகளில் இருந்து இரத்தம் கசிந்தது. அவளது தேசத்தின் அளவு புரிந்ததினால் அத்தனை வன்மை அவனிடம்..
காமத்தை தாண்டி அவளின் அதீத காதலின் பாரத்தை தாங்க முடியாமல் இடம் பொருள் பாராமல் முத்தமிட்டு விட்டான்.
“ ஏன் டி…. இப்படி…?”என்றவனின் குரல் கம்மி ஒலித்தது.
“ நீங்க வேணும்…உங்க உறவு வேணும்…நீங்க எல்லாரும் வேணும்…? கிடைக்குமா..?” என்றாள் .
தாங்க முடியாமல் மீண்டும் அவளது இதழ்களை முற்றுகையிட்டான் அந்த முறுக்கு மீசைக்காரன்.
“ஈஸ்வரன் மச்சான்…அந்த தாம்பூல…பை..”என்று அழைத்துக் கொண்டே வந்தவன் அங்கு கண்ட காட்சியில் உறைந்தே போனான்.
வார்த்தைகளை முழுங்கியபடி வந்த சுவடு தெரியாமல் திரும்பி நடந்தான்.
புகழினியும் , “அண்ணே…! அந்த தாம்பூல பை…” என்றவாறே ஈஸ்வரன் இருந்த இடத்தை நோக்கி சென்றவளின் கையை பிடித்து இழுத்தான் பாண்டியன்.
“ இந்தா கையை பிடிச்சி இழுக்குற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க…அவ்வளவு தான்…சீ…போடியா…?இருங்க பாத்துக்கிறேன்…” என்றவள் திரும்பவும் நகரப் போக அவளது கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அப்படியே அவளை சுவற்றில் சாய்த்தான்.
“ அங்கன கொஞ்ச நேரத்துக்கு போவாத…” என்றான் அவளின் முகத்தை பார்த்து கொண்டே.
“ஏன்…? நா அப்படித்தேன் போவேன்…எங்கண்ணனை கூப்பிடனும்…” என்றவாறே நகர முயற்சித்தாள்.
“ உங்கண்ணன் அங்கன கொடுத்தல் வாங்கல் பிரச்சனையில இருக்கான். அப்பறமா போ…” என்றான்.
“ நீங்க சொல்லி நான் என்ன கேக்கறது…ஒரு மாசமா என் கூட பேசம தானே இருந்தீக தானே… உங்க கூட பேசவே கூடாது. ஃபர்ஸ்ட் நைட்டும் கிடையாது…” என முறைத்துக் கொண்டு நின்றாள்.
பாண்டியனோ அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாமல் அந்தர் பல்டி அடித்து அவளிடம் சரணடைந்தான்.
ஆயிரம் சமாதானங்கள் கூறி அவளிடம் முதலிரவுக்கு கெஞ்சிக்
கொண்டிருந்தான்.
ஈஸ்வரனோ அவளுக்கும் அவளது இதழுக்கும் மெல்ல விடுதலையளித்து , “கல்யாணம் பண்ணிட்டு இங்கன வந்து என்ன பண்ணுவ..? உன்னோட வேலை..?” என்றான்.
அவளோ அவனது மீசையை முறுக்கி விட்டபடியே, “ ஏற்கனவே சொன்னேனே இங்க இருக்குற லேடீஸ்காக கைத்தொழில் அப்பறம் கைவினை பொருட்கள் செய்றதுக்கான டிரஸ்ட் ஆரம்பிக்க போறேன்னு…அதை பாத்துக்குறேன். அப்பறம் மாசத்துக்கு ஒரு வாரம் மும்பையில் இருந்து அம்மா அப்பாவோட கம்பெனியை மேற்பார்வை பார்த்துட்டு இங்க வந்துடுவேன்.. எல்லாத்தையும் கரெக்டா அரேன்ஜ் பண்ணிட்டு தான் வந்துருக்கேன்.. மீனாட்சி அங்க இருக்குற கம்பெனியை பாத்துப்பா.. வருஷத்துக்கு ஒருதடவை நம்ம அங்க போயிட்டு பாத்துட்டு வரலாம்..”என்றாள்.
“இவ்வளவு பண்ணனுமா…?”என்றான்.
அவளோ தலையை சிரித்தபடி, “உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்.. அதுக்கு மேலையும் ஒண்ணு பண்ணனும்…” என்றபடி அவனது மீசையோடு விளையாடினாள்.
” இன்னும் என்ன பண்ணனும்…?”
” நிறைய குழந்தைகளை பெத்துக்கனும்…”என்றபடி அவனை காதலுடன் பார்த்தாள்.
சிரித்தபடி அவளுடன் இணைந்து நடந்தான் ஈஸ்வரன்.
தனது பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினான் ஈஸ்வரன்.
அடுத்த பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.
அடிதடியும் கெஞ்சலும் கொஞ்சலுமாக இனிதே முடிந்தது பாண்டியன் புகழினியின் முதலிரவு.
பெண் வீட்டின் சார்பாக ஆதியும் மீனாட்சியும் நேஹாவிற்கு திருமணத்திற்கு தேவையான அனைத்தும் முன்னிருந்து செய்தனர்.
ஈஸ்வரனுடனான திருமண வைபவத்திற்கு ஒவ்வொரு நொடியையும் ரசித்து மகிழ்ந்தாள் நேஹா .
கையில் மருதாணி, அழகிய புடவைகள் கேலி கிண்டல்கள்..என அனைத்தையும் அவளது மனப்பெட்டகத்தில் சேகரித்து வைத்தாள்.
திருமண நாளும் வந்தது.
அழகிய இளஞ்சிவப்பு பட்டுடுத்தி ஈஸ்வரன் அவளுக்கென்று வாங்கிய நகைகளை மட்டுமே அணிந்து அழகிய பதுமையென அவனருகே மணமேடையில் அமர்ந்தாள்.
மங்கல வாத்தியங்கள் முழங்க நேஹாவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.
நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு பொன் தாலியிலும் குங்குமமிட்டு நிமிர்ந்தான்.
நேஹாவிற்கு வானத்தில் பறப்பதைப் போலிருந்தது.
முத்துக்காளைக்கும் லட்சுமிக்குமே மனம் நிறைவாக இருந்தது.
வாழ்க்கையில் இரண்டாம் முறையாக வரும் காதலும் கூட புரிதலுடன் கூடிய இன்பத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்தான் ஈஸ்வரன்.
இழந்ததை எண்ணி அங்கேயே தேங்கி விடாமல் அடுத்தடுத்து கடமையை செய்தவனுக்கு சுவர்க்கமே வரமாய் அமைந்தது.
உயிர் தொடும் உறவே -40
written by Competition writers
உயிர் 40:
நேஹாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் ஆதியும் மீனாட்சியும்.
அவர்களுக்கென்று பிரத்தியேகமாக சமைத்திருந்தாள் நேஹா.
“ஏன் …இப்படி பண்ற நேஹா…? கால் இருக்குற நிலையில இது தேவையா…?”என கடிந்து கொண்டான் ஆதி.
“ ஒண்ணும் இல்லை டா…ஸ்டிக் வச்சி நடக்க ஆரம்பிச்சாச்சு…இப்படியே எவ்வளவு நாள் தான் இருக்குறது..சாப்பிடு…ரொம்ப சலிச்சிக்காத…”என்றபடி பரிமாறினாள்.
முதன்முறையாக நேஹா வின் வீட்டிற்கு வந்த மீனாட்சி அவளது வீட்டைக் கண்டு பிரம்மித்து தான் போனாள்.
அவளது செல்வநிலை சொல்லாமல் சொல்லியது அவளது உயரத்தை.
இருப்பினும் எளிமையாக கள்ளிக்குடியிலிருந்த நேஹாவை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை மீனாட்சியால்.
இவ்வளவு உயரத்தில் இருப்பவளால் அவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து விட முடியுமா…? என்ற குழப்பம் அவளுள்.
மூவரும் பேசிக்கொண்டே உணவருந்தி முடித்தனர்.
இருவரையும் தனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றாள் நேஹா.
மீனாட்சியின் முன்பே ஒரு கோப்பினை கொடுத்தாள் நேஹா.
“என்ன இது…? “ என்றாள்.
“ பிரிச்சு பாரு…” என்றாள்.
அதனைப் பிரித்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“ என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா உனக்கு…? இப்ப எதுக்கு உன்னோட கம்பெனியை என் பேர்ல மாத்தி வச்சிருக்க…? இதெல்லாம் உங்க அப்பா அம்மா உனக்காக சேர்த்து வச்சது…அப்படியே அல்வா மாதிரி தூக்கி கொடுக்கிற…? அப்படி நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்…” என் படபடவென எண்ணெயிலிட்ட கடுகாய் பொரிந்தாள்.
நேஹாவோ பாவமாக ஆதியை பார்த்தாள்.
அவனோ நீயே பேசிக்கொள் என்பதை போல் பார்த்து வைத்தான்.
மீனாட்சியே பேசிக்கொண்டே போனாள்.
“ மீனாட்சி…ப்ளீஸ்…! நான் சொல்றதை கொஞ்சம் கேளு…” என்றாள் அழுத்தமாக.
அவளது குரலில் இருந்த அழுத்தத்தினால் சிறிது நிதானத்திற்கு வந்தாள் மீனாட்சி.
“ இங்க பாரு மீனாட்சி…இந்த கம்பெனி எங்க அப்பா அம்மா ஆரம்பிச்சது இல்லை ..நான் பிரத்தியேகமாக குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூ, வெட் டிஷ்யூஸ்,பேபி ஆயில், டிரெஸஸ்ன்னு ஆரம்பிச்சது. நல்லா தான் போயிட்டு இருக்கு. நான் உன்கிட்ட விட்டுட்டு போறதுக்கு காரணம்…சீக்கிரமா புரிஞ்சிக்குவ..ஆதி உன் கூடவே இருப்பான் எப்பவும்..நீ கொஞ்ச நாள்லயோ… இல்ல கொஞ்ச வருஷம் கழிச்சோ தனியவே ரன் பண்ண ஆரம்பி..இதுல வர்ற லாபத்தை வொர்க்கர்ஸ்க்கும் ஆதரவில்லாதவர்களுக்கும் பிரிச்சு கொடுத்துடுங்க. டிரெஸ்ட் , ஆசிரமம் , படிப்பு, மெடிக்கல் சப்போர்ட்…இதுக்கெல்லாம் எப்படி எங்க கொடுக்கனும்ங்கற டீடெயில்ஸ் வேற ஃபைல்ல இருக்கு…அதையும் ஆதிக்கிட்ட கொடுத்துருக்கேன்..செக் பண்ணிக்க…என்னோட ஹெட் ஆபிஸ்ஸ நான் மும்பைக்கு மாத்த போறேன்…இனி அங்கேயே செட்டில் ஆகலாம்ன்னு நினைக்கிறேன்..உனக்கு இதெல்லாம் பிடிபட கொஞ்ச நாள் இல்ல வருஷம் ஆகலாம்…எனக்கும் ஒரு சேன்ஜ் தேவைப்படுது…அதனால தான் இந்த முடிவு…உன்னால முடியும் மீனாட்சி…நிறைய கோர்ஸ் படி…ப்ராக்டிகல்லா ஆதி உனக்கு நிறைய சொல்லித் தருவான். ஹீ இஸ் குட் டியூட்டர், மென்ட்டார், மேனேஜர், குட் சீ.இ.ஓ…எக்சட்ரா…எக்சட்ரா…ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லிடாத…” என்றாள்.
மீனாட்சிக்கோ மிகவும் பயமாக இருந்தது.
கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வரைக்கும் சரி…ஆனால் எந்த ஒரு பின்புலமும் இன்றி ஒரு தொழிலை நடத்துவதென்றால் உதறல் எடுத்தது.
“ பயமா இருக்கு நேஹா…சரி வருமா இது…? நல்லா யோசிச்சிகிட்டியா…?” என்றாள் தயக்கமாக.
அவளருகே வந்தவள் , “ யூ கேன் மீனாட்சி…ஆல் தி பெஸ்ட்…” என்று அவளை அணைத்து விடுவித்தாள் .
பின்னர் மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தானர்.
ஆதியும் மீனாட்சியும் தங்களுடைய வீட்டிற்கு கிளம்பினார்கள்.
இரவு உணவை தயார் செய்து முடித்திருந்தாள் மீனாட்சி.
இருவரும் உண்டுவிட்டு தங்களுடைய அறைக்குள் நுழைந்தனர்.
ஆதியின் அறையை தாண்டி தான் அவளது அறைக்குச் செல்ல வேண்டும்.
ஆதியோ கட்டிலில் அமர்ந்திருக்க அவனைத் தாண்டிச் செல்வதற்குள் கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டது.
வழக்கமாக எவ்வித தயக்கமும் இன்றி நேரே தன்னறைக்குள் செய்பவள் இன்று தயங்கியபடி சென்றாள்.
அவள் செல்வதையே விழியகற்றாமல் பார்த்திருந்தவன் அவள் தனது அறையின் கதவினை மூடும் நேரத்தில் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
மீனாட்சி சட்டென்று விலகிச் செல்ல அவளது கைப்பிடித்து தன்னருகே இழுத்தான்.
அவனது நெஞ்சில் வந்து
மோதிக் கொண்டாள் பெண்ணவள்.
“ மீனாட்சி…” என்றவனது குரல் கரகரத்து ஒலித்தது.
“ இனி தனித்தனியான ரூம் தேவைதானா…?”என்றான் கிறக்கமாக.
அவளோ தலையை குனிந்தபடி இருக்க.
மெல்ல நிமிர்த்தினான் அவளது முகத்தை.
மெல்லிய வெளிச்சம் அவளது முகத்தில் பட்டு கூடுதல் அழகை தந்தது.
அதனை ரசித்துக்கொண்டே அவளது காதில், “சொல்லு டி…தனி ரூம் தேவைதானா…?” என்றான் மெல்லிய குரலில்.
நாணத்தில் முகம் சிவந்து போய் “ ஆம்” என்று முதலில் தலையை ஆட்டி பிறகு இல்லையென்றாள்.
“ பேச வேண்டியதெல்லாம் நிறையவே பேசியாச்சு…உனக்கு சம்மதமா…? நாம அடுத்த கட்டத்துக்கு போகலாமா…?” என்றான்.
அவன் நேரடியாக இவ்வாறு கேட்டதால் அவளுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.
அவன் முகம் காண முடியாது சம்மதமாக தலையாட்டினாள்.
“ இந்த பெட் சின்னதா இருக்கு…நாம அந்த ரூமுக்கு போயிடலாம்…” என்றவாறே அவளை கையில் ஏந்தியபடி அவளது இதழ்களுக்கு வேலையை கொடுத்துக் கொண்டே அடுத்த அறையினுள் நுழைந்தான்.
தீராத வேட்கையினால் மஞ்சத்தில் அவளுடன் தஞ்சமடைந்து முத்தங்களால் குளிப்பாட்டினான்.
அவள் கழுத்தடியில் மையம் கொண்டவன்,
“ இரண்டு செயின் உறுத்துதுடி… பழசை கழட்டிடலாம்…” என்றபடி பழைய திருமாங்கல்யத்தை கழட்டியிருந்தான்.
காலையில் அவன் அணிவித்த பொன் தாலி மட்டுமே அவளுக்கு அணிகலனாக இருந்தது.
மோகத்தில் பெண்ணை திணற வைத்தவன். நேசம் கூடிய உள்ளத்தோடு அவளுடன் சங்கமித்தான்.
இரவு முழுவதும் அவனது தேடல்கள் நீண்டு கொண்டே போனது.
திருமண பந்தத்தை கசப்போடு ஏற்றிருந்தாலும் , அவளது காயத்தை ஆற்றும் மருத்துவனாகிப் போனான்.
இனிய இல்லறத்தில் மனமொத்து அடியெடுத்து வைத்தனர் இருவரும்.
நாட்கள் உருண்டேடியது.
நேஹா மும்பைக்கு தனது தலைமை அலுவலகத்தை மாற்றிக் கொண்டு சென்றிருந்தாள்.
உயிர் தொடும் உறவே -39
written by Competition writers
உயிர் -39
மீனாட்சி மற்றும் ஆதியினால் பாண்டியன் மற்றும் புகழனியின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
லண்டனுக்கு திரும்பி விட்டனர் இருவரும்.
அன்றாட வாழ்க்கை வழக்கம் போல நடந்து கொண்டிருந்து.
“ மீனாட்சி…உன் கிட்ட ஒண்ணு… ம்ம்கூம்..இல்லை ரெண்டு சொல்லனும்…” என்றான் ஆதி.
அவள் ஏதோ எழுதிக் கொண்டே, “சொல்லுங்க…”என்றாள்.
“ஈஸ்வரனுக்கு நேஹாவை பிடிச்சிருக்கு போல…” என்றான்.
சட்டென்று எழுதுவதை நிறுத்தி விட்டு, “ நீங்களா எதுவும் கற்பனை பண்ணாதீக… அப்படி நடந்தா நல்லது தான…?”என்றாள்.
அவளது கையில் இருந்த பேனாவையும் நோட்டையும் பிடிங்கி தனியே வைத்தவன், அவளை தன் புறமாக திருப்பி, “உண்மையா தான் சொல்லுறேன். நீ ஈஸ்வரன் கிட்ட பேசிட்டு போனதுக்கப்பறம் நான் போய் அவன் கிட்ட மன்னிப்பு கேட்டேன். முடியாதுன்னாட்டான். ஆனா நேஹாவோட கால் சரியாகும் வரை நம்ம கூட வச்சி பாத்துக்கலாமேன்னு கேட்டான். அதுக்கு நானு நேஹா தான் வர மாட்டேனுட்டான்னு சொன்னேன்…கொஞ்சம் அவளை பாத்துக்கோங்க….தனியா இருக்கான்னு அக்கறையா சொல்றான்…அதை சொல்லும் போது அவன் கண்ணுல ஒரு ஸ்பார்க்க பாத்தேன். அப்ப அவனுக்கு நேஹாவை பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்…”என்றான்.
மீனாட்சியோ ஆச்சர்யத்துடன், ”நெசமா தான் சொல்லுதீகளா…? அப்படி இருந்தா ரொம்ப சந்தோசம் தான்…ஆனா அதோட மனசுல என்ன நினைக்குதுன்னு தெரியலையே…? என்ன பண்றது..? அதுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா நல்லது தானே.?”” என்றாள்.
“ பாண்டியன் கல்யாணத்துக்கு போவோம் தானே…அப்ப பாத்துக்கலாம்…” என்றான்.
“இன்னும் வேற என்னவோ சொல்லனும்னு சொன்னீக…?” என்றாள்.
“ நாளைக்கு நம்ம நேஹா வீட்டுக்கு போறோம். முக்கியமான விஷயம் பேசணும்…” என்றான்.
“ எதைப் பத்தி…?” என்றாள்.
“ அதை நாளைக்கு தெரிஞ்சுக்கோ…” என்றான்.
சலிப்பாக தலையை ஆட்டியபடி எழுத வேண்டியவற்றை கணினியில் இருந்து குறிப்பெடுத்து கொண்டிருந்தாள்.
ஆதியோ அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் மெதுவாக எழுந்தாள் மீனாட்சி.
வழக்கம் போல நாள்காட்டியில் நாளைக் கிழித்த போது தான் கவனித்தாள்.
அன்று அவர்களின் இரண்டாம் வருட திருமண நாள்.
ஏதோ யோசித்தபடியே காலை உணவை தயார் செய்து வைத்தாள்.
ஆதியும் எழுந்து கீழே வந்தான்.
பால்கனியில் நின்று தலைமுடியை காய வைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
“ குட் மார்னிங் மீனாட்சி…” என்றவன் அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
பதிலுக்கு சிரித்தவள் அவனது பார்வையை எதிர் கொள்ள முடியாமல் திரும்பி நின்றாள்.
பின்னோடு அவளை ஒட்டியபடி வந்து நின்றவன் அவளது தோளில் தன் தாடையை வைத்தான்.
ஏதோ சிந்தனைகளில் சிக்குண்டு கிடந்தார்கள் இருவரும்.
ஆதவனின் மெல்லிய வெளிச்சம் கண்ணை கூசச் செய்தது.
“ ஒரு நிமிஷம் உள்ள வாயேன்…” என்றான் ஆதி.
“ எதுக்கு..? எப்ப நேஹாவை பார்க்க போகணும்..?” என்றாள்.
“ மதியம் போகலாம்…நீ உள்ள வா..” என்று கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
அவளிடம் ஒரு பெட்டியை கொடுத்து பிரித்து பார்க்கச் சொன்னான்.
அதைப் பிரித்து பார்த்தாள் மீனாட்சி.
அழகிய வேலைப்பாடமைந்த சந்தன நிறத்தில் அரக்கு பார்டரை உடைய பட்டுப்புடவை அது…மற்றும் அதற்கு தோதாக மெல்லிய தங்க நகைகளும் இருந்தன.
“இது ஏன்…?எதுக்கு…?” என்றாள் தடுமாறியபடியே..
“ இதை வெறும் ஆடம்பரமா பாக்காத…நம்ம கல்யாணம் ஏகப்பட்ட மனக்கசப்புல நடந்தது. அதுல ரொம்பவே ஹேர்ட் ஆனது நீ தான். அதே நினைவுகளால வாழ்க்கையை தொடங்க விரும்பல…ப்ளீஸ் மறுக்காம இதை போட்டுட்டு கிளம்பி வா…ஒரு இடத்துக்கு போகணும்…” என்றான்.
மீனாட்சியுமே சற்று முன்பு அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
எனவே மறுப்பேதும் கூறாமல் அதனை வாங்கி அணிந்து கொண்டு வந்தாள்.
ஆதியுமே சந்தன நிற சட்டையும் ,கருப்பு நிற கால் சட்டையும் அணிந்து கொண்டு வந்தான்.
தேவதையென மிளிர்ந்தவளின் அழகு அவனை கொள்ளை கொண்டது.
அவளது நீண்ட பின்னலில் மனம் சிக்கி கொண்டது. எடுப்பான நாசியும் அதிலிருந்த சிறு கல் மூக்குத்தியும் ,செம்பவள உதடுகளும் அவனை போதை கொள்ளச் செய்தன.
அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
பார்வையிலேயே கொள்ளையிடும் கணவனின் அழகை ரசிக்கவே செய்தாள்.
“போகலாமா…” என்றாள்.
அவளருகே வந்தவன் அவளது முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் அழுத்தமான ஒரு முத்தத்தை வைத்து விட்டு,
“ வா…போகலாம்…” என்று அவளது கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
ஆதியின் கார் நேராக சென்று நின்றது ஒரு கோவில் வாசலில்.
அவளும் சரி கோவிலுக்கு தான் வந்திருக்கின்றான் போலும் என நினைத்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள்.
பூசாரி வரவே அவரது கையில் ஒரு சிறிய பெட்டியை கொடுத்து அர்ச்சனை செய்து கொடுக்கச் சொன்னான்.
அவரும் அர்ச்சனை செய்து அவனிடம் அப்பெட்டியுடன் குங்குமம் மஞ்சளுடன் பூக்களை சேர்த்து கொடுத்தார்.
அதனை வாங்கி பெட்டியை திறந்தான்.
அதில் புதிய திருமாங்கல்யம் இருந்தது.
“மீனாட்சி …நம்ம வாழ்க்கையை தொடங்கறதுக்கு முன்ன எந்த ஒரு கசப்பான விஷயமும் உன் கிட்ட இருக்கக்கூடாது…இந்த தாலியை சந்தோஷமான மனநிலையில தான் உனக்கு கட்டுறேன்…நீயும் சந்தோஷமான மனநிலையில் ஏத்து விரும்புறேன்..உனக்கு சம்மதம் தானே..?” என்று கேட்டு அவளது முகத்தை பார்த்தான்.
சம்மதம் தெரிவித்தவுடன் அவளது கழுத்தில் அணிவித்து நெற்றியில் குங்குமமும் வைத்தான்.
புதியதொரு தொடக்கத்திற்கு அனைத்துமே புதிதாக இருக்க வேண்டும் என நினைத்தான்.
நெடுநாள் அழுத்திய ஏதோ ஒரு பாரம் சட்டென்று நீங்கியது போலிருந்தது மீனாட்சிக்கு.
அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
உயிர் தொடும் உறவே -38
written by Competition writers
உயிர் 38
சங்கரபாண்டியன் குடும்பத்தினர் ஒரு வாகனத்திலும், ஆதியும் மீனாட்சியும் மற்றொரு வாகனத்திலும் கிளம்பத் தயாராகினர்.
கோமதியோ, “ எங்க போகணுங்க..?” என்றார்.
“ முத்துக்காளை வீட்டுக்கு வண்டியை விடு மணி…” என்றார்.
கோமதிக்கோ தனது காதுகளை நம்பவே முடியவில்லை.
திருமணமாகி வந்து இவ்வளவு வருடங்களில் தனது அண்ணன் முத்துக்காளையை சக மனிதனாக கூட மதித்ததில்லை. பிறந்த வீட்டினரிடமும் முகம் கொடுத்து பேசியதில்லை.
அப்படி இருந்தவர் தற்போது ஈஸ்வரனின் வீடு என்று சொல்லாமல் முத்துக்காளையின் வீடு என்றால் ஆச்சரியமாக தானே இருக்கும்.
ஆம்…முதலில் முத்துக்காளையிடம் தானே மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆதியின் காரில் அமர்ந்திருந்த மீனாட்சி தனது தந்தையின் கார் ஈஸ்வரனின் வீட்டை நோக்கி செல்வதை பார்த்தாள்.
ஆதியும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பெரிதாகவும் இல்லாமல் மிகவும் சிறியதாகவும் இல்லாமல் இருந்தது முத்துக்காளையின் வீடு.
மூன்று அறைகள் கொண்டு சற்று விசாலமான தனி வீடாகத் தான் இருந்தது.
வீட்டைச் சுற்றிலும் தோட்டம் பச்சை பசேலென்று இருந்தது.
கோமதி மற்றும் சங்கர பாண்டியன் திருமணமான புதிதிலும், முத்துக்காளையின் தாயார் இறப்பிற்கும் மட்டுமே வந்தது.
கோமதியுமே தாயார் இறந்த பிறகு அண்ணனது வீட்டிற்கு பெரிதாக வந்ததில்லை. சங்கர பாண்டியன் வரவிட்டதுமில்லை.
அப்போது பார்த்தது போல் சிறு ஓட்டு வீடாக இருக்கும் என்று நினைத்தவருக்கு சற்று ஏமாற்றமே.
ஆனால் கட்டி பல வருடங்கள் ஆகி விட்டதால் சுண்ணம் எல்லாம் உதிரத் தொடங்கியிருந்தது.
ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருந்தது. எனவே தான் ஈஸ்வரன் சற்றே வசதிகள் கொண்ட புதிய வீட்டினை கட்டிக்கொண்டு இருக்கின்றான்.
அவர்களின் வீட்டு வாசல் சங்கர ண்டியனது கார் நிற்கவும் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் நெற்றியை சுருக்கி அவர்களை பார்த்தான்.
சப்தம் கேட்டு ஈஸ்வரனின் தாய் லட்சுமி வெளியே வந்தார்.
அவரும் ஈஸ்வரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களை அழைக்க மறந்து நின்றிருந்தனர்.
மெதுவாக இறங்கிய சங்கர பாண்டியன் அவர்களை பார்த்தார்.
இருவரும் அப்படியே நிற்கவும்,” உள்ள வரலாமா…?”என்றார்.
சுதாரித்த லட்சுமி , “ஹான்….உள்ளாற வாங்கண்ணே…வாங்கண்ணி…வாப்பா…பாண்டியா..” என்றார் .
மூவரும் உள்ளே செல்ல பின்னோடு வந்து நின்றது ஆதியின் வாகனம்.
உள்ளிருந்து இறங்கினான் ஆதி. அவனருகே இருந்து இறங்கினாள் மீனாட்சி.
உள்ளே திரும்ப எண்ணிய ஈஸ்வரனின் விழிகள் வாசலைப் பார்க்க.
இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
மீனாட்சி கடைசியாக லண்டன் செல்வதற்கு முன்னர் பார்த்தது.
இப்பொழுது தான் மீண்டும் அவளைப் பார்க்கின்றான்.
மீனாட்சியும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். பெரிதாக அவனிடம் எந்த ஒரு வித்தியாசமும் தென்படவில்லை.
அவள் இப்போது ஆதியின் மனைவி என்பதை ஆழப்பதிய வைத்துக் கொண்டிருந்தான் தான்.
நிர்சலனமான முகத்துடன்
அவர்களைப் பார்த்தவன் , “உள்ள வாங்க…” என்றழைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
இருவரும் வீட்டினுள்ளே
அடியெடுத்து வைத்தனர். மீனாட்சியின் மனம் லேசாக சுணங்கி பின்னர் இயல்பாகியது.
நொடியில் ஆதி அதனை கண்டுகொண்டான்.
அவனுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. தான் செய்த ஒரு செயலின் பாதிப்பு அவனுக்கு புரிந்தது. அனைவரிடமும் வணக்கத்தை மட்டும் தெரிவித்து விட்டு வெளியே வந்து விட்டான்.
அவனுக்கு ஏனோ சுவாசம் தடைப்பட்டது போன்றதொரு உணர்வு.
வெளித் திண்ணையில் தனது அலைப்பேசியுடன் அமர்ந்துவிட்டான்.
சில்லென்று காற்று வீச தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.
நேஹா அனுப்பிய சில கோப்புக்களை சரி பார்த்து வைத்துக் கொண்டிருந்தான்.
பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சங்கர பாண்டியன்.
“ மன்னிப்புங்கறது சின்ன வார்த்தை..ஆனா என்னப் பண்ணுறது பட்டாதான் புத்தி வருது…உடம்புல வலு இருக்குற வரை அகம்பாவம், திமிரு…மத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காம…பணம், கௌரவம்..நிலம்…இதெல்லாம் தான் முக்கியம்ன்னு இருந்துபுட்டேன். ஆனா அதெல்லாம் ஒன்னும் இல்லை…மனுசனுக்கு மனுசந்தேன் முக்கியம்…நமக்கு ஒண்ணுன்னா நெருக்கமான உறவுதேன் வந்து தெய்வம் மாதிரி உதவி பணணும்ங்கறத நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். முத்துக்காளை…காணி நிலத்துக்கு உங்கிட்ட தேவையில்லாம பகை வளர்த்து…அதை அடுத்த தவைமுறைக்கும் கொண்டாந்து செய்யக் கூடாதது எல்லாம் செஞ்சி ஈனப்பிறவியாகிட்டேன். மன்னிச்சிடு முத்துக்காளை…” என்று அவரது காலில் விழப் போனார்.
முத்துக்காளையோ பதறி விலகி அவரைத் தடுத்தார்.
“ஐய்யோ…! என்னங்க நீங்க…இப்படியெல்லாம் பண்ணிகிட்டு …? என்னைய சங்கடப்படுத்தாதீக…உடம்பு சரியில்லாத மனுசன் இம்புட்டு தூரம் வந்துருக்கீக… செத்த இருங்க ..புகழு…போய் எல்லோருக்கும் காஃபி தண்ணி போட்டு எடுத்துட்டு வா ஆத்தா…”என்றார்.
“ பரவாயில்ல முத்துக்காளை…நீங்க எல்லாரும் என்னைய மன்னிச்சிடனும்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்..” என்றவர் ஈஸ்வரன் அருகில் சென்றார்.
அவனோ கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“அன்னைக்கு நீ கால்ல விழுந்தா தான் எம் பொண்ணை உனக்கு கட்டித் தருவேன்னு உன்னை அவமானப்படுத்தினேன். எப்பவும் வீரபாண்டி தேரை போல நெஞ்சை நிமித்திட்டு திரியும் உன்னையே கண் கலங்க வைச்சு…பாவத்தை சம்பாரிச்சிகிட்டேன். அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடத்தான் வந்துருக்கேன். இது எந்தளவுக்கு உன்னோட வலியை குறைக்கும்னு தெரியாது…ஆனா..இனி இந்த தப்பை பண்ணக்கூடாதுன்னு தான் வந்துருக்கேன்…என்னை மன்னிச்சிடு…”என்றவர் அவன் காலிலும் விழப் போக அதிர்ந்து போனான் ஈஸ்வரன்.
சட்டென்று கோபம் வர, “யோவ்…மாமா…என்ன பண்ணிக்கிட்டு இருக்கீரு…? உம்ம தப்புக்கு பிராயச்சித்தம் பண்ணுன்னு நாங் கேட்டேனா…? நீரு என்ன பண்ணுனாலும்….போனது…போனது தானே…?அவுக அவுக இப்ப நல்லாதானேய்யா இருக்காக…தயவு செஞ்சு இப்படியெல்லாம் பண்ணிட்டு திரியாதீரு…மனுசனுக்கு மனுசன் உதவி பண்ணறத பெருசா பேசாதேன்னு அன்னைக்கே சொன்னது தான்…இதை என்னவோ பெருசா உலக சாதனை பண்ணினது போல தூக்கி வைக்காத…எனக்கு இதெல்லாம் புடிக்காது…நீரு மொத உடம்பை பாரும்…இருக்குற நிலைமைக்கு இப்படியெல்லாம் பண்ணாதீரு.. ரொம்பவே உணரச்சிவசப்படாதீக..” என்று அதட்டினான்.
அவனது அக்கறையில் கண்கள் கலங்கத் தான் போனது அவருக்கு.
புகழினி அனைவருக்கும் தேநீரைக் கொடுத்தாள்.
பிறகு கோமதியை அழைத்தவர் தன்னருகே நிற்கச் சொன்னவர் , “லட்சுமி…உள்ளாற மஞ்ச குங்குமம் ,கொஞ்சம் பூவு இருந்தா எடுத்துட்டு வாங்களேன்…அவசரத்துல எடுத்துட்டு வரல” என்றார்.
அவரும் எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்க.
கோமதி மற்றும் சங்கர பாண்டியன் இருவரும் சேர்ந்து நின்று, “ எங்க பையன் பாண்டியனுக்கு உங்க பொண்ணு புகழினியை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்…உங்களுக்கு சம்மதமா…?” என்றார்.
அனைவரும் அமைதியாக நிற்க, * என்ன எல்லாரும் அமைதியா இருக்கீக…? ஒரு கல்யாணத்துல நடந்த தப்ப இன்னோரு கல்யாணத்தில சரி பண்ணனும் மட்டும் நினைக்கல…ஆசைப்பட்டவகளயே கல்யாணம் பண்ணிடலாம்ன்னு தான் மனப்பூர்வமா கேட்டு வந்துருக்கோம்…” என்றார்.
முத்துக்காளை ஏதோ கூற வரும் முன்பு , திடீரென “முடியாதுங்க…உங்க புள்ளையை கட்டிக்க எனக்கு சம்மதமில்லை…” என குண்டைத் தூக்கி வீசினாள் புகழினி.
அனைவரும் அதிர்நதார்கள் என்றால் அங்கு ஒருவனுக்கு இதயமே படீர் படீரென் வெடித்து சிதறியது
“அடிப்பாவி புகழினி…குண்டைத் தூக்கிப் போடுறாளே…” என முணுமுணுத்தான்.
அதையெல்லாம் அவள் கண்டு கொள்ளாமல்,
“ இப்ப இவ்வளவு வந்து பேசுற நீங்க…ஒருவேளை உடம்பு சரியா இருந்திருந்தா இப்படி இறங்கி வந்து பேசுவீகளா…?பண்ணிருக்க மாட்டீகல்ல..? எங்கண்ணன் ஆத்திர அவசரத்துக்கு உங்களுக்கு உதவி செஞ்சுதுனால வந்த பரிதாபம்…அப்படித்தானே..?” என்றாள் காட்டமாக.
“புகழு….”என்று அதட்டினார் முத்துக்காளை.
“ அப்பா…சித்த சும்மா இருங்க…உங்களுக்கு தெரியாது…. இன்னைக்கு இவரு வந்து கேட்டதும் நாமளும் பல்லைக் காட்டிட்டு சரின்னு சொல்லனும்…நமக்கெல்லாம் சூடு சொரணை இருக்க கூடாது…இவரு சொன்னதும் மன்னிக்க நான் ஒண்ணும் ஈஸ்வரனோ….முத்துக்காளையோ கிடையாது…புகழினியாக்கும்…இவரு நாளைக்கே மாத்திப் பேச மாட்டாருன்னு எப்படி நம்பறது..? இவரு உண்மையிலேயே திருந்தி தான் பொண்ணு கேக்க வந்துருக்காருன்னு எப்படி நம்புறது…?” என ஆத்திரத்துடன் கேட்டாள்.
இவ்வளவு நாள் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த எரிமலை வெடித்தது அவளுள்.
அத்தனை கோபம் அவளுக்கு. பாண்டியன் என்றால் அவளுக்கு உயிர் தான். தன்னையே கொடுக்க தயாராக தான் இருக்கின்றாள். ஆனால் அதற்கும் மேலனா உறவல்லவா ஈஸ்வரன்..? அந்த உறவினை அசிங்கப்படுத்தியவரை சும்மா விடக்கூடாது என்பதில் உறுதியாக நின்றாள் பெண்ணவள்.
சங்கர பாண்டியனோ அமைதியாக நின்றிருந்தார்.
பிறகு மெதுவாக, “ என்ன செய்யனும் சொல்லுமா…? செய்யறேன்…எனக்கு இப்பதான் திருப்தியா இருக்குது. நீ ஒருத்தி யாவது சாட்டைய சுழட்டினாப்ல பேசுனியே…அதுவே சந்தோசம்… நான் என்ன செய்யனும்ன்னு சொல்லு…” என்றார்.
பாண்டியனை பார்த்தாள் புகழினி .அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“ ஆத்தி….ரொம்ப பேசிட்டோமோ…?கொடூரமா மொறைக்குறாரே… இருக்கட்டும் மொத்தத்துக்கும் சேத்து ஃப்ர்ஸட் நைட்ல சரி கட்டிடலாம்…”என நினைத்து கொண்டு, “பெருசா ஒண்ணுமில்லை…ஊர்காரங்க அப்பறம் உங்க சொந்தபந்தங்களோட வந்து எங்கப்பா…எங்கண்ணன் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னைய பொண்ணு கேளுங்க…நான் உங்க வீட்டுக்கு மருமகளா வாரேன்..”என்றாள் மிதப்பாக.
இதே ஊர் மக்கள் முன்பு தான் நிலத்திற்காக தனது தந்தையை அசிங்தப்படுத்தி கைகலப்பு வரை சென்றார். எனவே அதே ஊர் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினாள் புகழினி.
சுள்ளென்று கோபம் வந்தது பாண்டியனுக்கு. வேகமாக நகர்ந்தவனின் கைகளை பிடித்துக் கொண்டார் கோமதி. அமைதியாக இருக்குமாறு கண் ஜாடை செய்தார் .
அவளை முறைத்துக் கொண்டே அமைதியானான் பாண்டியன்.
அதிகமாக பேசுகிறாளோ என்று தான் அவனிற்கு தோன்றியது .
அவரது அகங்காரத்தினால் ஏற்பட்ட இழப்பு எத்தகையது என்பது புரிய வைக்க வேண்டும் அல்லவா..? அதனாலேயே புகழினி அப்படியொரு நிபந்தனை விதித்தாள்.
சங்கர பாண்டியனுக்கு மீனாட்சியின் திருமணத்தன்று தான் நடந்து கொண்ட முறை நினைவுக்கு வந்தது அவனுக்குமே அவமானமாக தன் தானே இருந்திருக்கும்.
தற்போது அதே நிலையில் தனக்கும் . என்ன ஒன்று மீனாட்சியின் திருமணத்தில் அவனை அவரது காலில விழச் சொன்னார். புகழினி உற்றார் உறவினர் முன்பு மன்னிப்பு கேட்கச் சொல்கிறாள் . அவ்வளவு தான் வித்தியாசம்.
“என்ன யோசிக்கிறீக..? கௌரவம் தடுக்குதோ..?”என்றாள்
நக்கலாக.
மெதுவாக சிரிந்தவர், “இல்லம்மா…அடுத்த புதன்கிழமை ஊர் சனங்களோடவும் சொந்த பந்தத்தோடவும் வந்து மன்னிப்பு கேட்டுட்டு … நிச்சயம் பண்ணிடலாம்…”என்றார்.
அனைத்தையும் பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.
புகழினியை பார்த்தவனுக்கு மனதிலுள்ள உணர்வுகள் வெடித்துக் கொண்டு வர காத்திருந்தது.
அதனையடுத்து அனைவரும் ஒருவித சங்கடத்துடன் வீட்டிற்கு கிளம்பினர்.
ஈஸ்வரன் அருகில் வந்த மீனாட்சி, “எப்படி இருக்க மாமா..?” என்றாள்.
“நல்லா இருக்கேன் மீனாட்சி…நீ எப்படி இருக்க..?”என்றான்.
“ ம்ம்ம்…நல்லா இருக்கேன்…மாமா…சீக்கிரம் நீயும் கல்யாணம் பண்ணு…வயசாகிட்டே போகுது…”என்றவுடன் அழையா விருந்தாளியாக நேஹாவின் நினைவு வந்தது… கூடவே அவளது முத்தமும் நினைவில் வந்து அவனை இம்சித்தது.
“ ம்ம்…”என்றான் எங்கோ பார்த்தபடி…
அவள் விடைப்பெற்று சென்ற பிறகு ஆதி ஈஸ்வரனருகே வந்தான்.
“ எல்லாத்துக்கும் முடிஞ்சா மன்னிச்சிடு…” என்றான்.
பட்டென்று, “ அது முடியாது…” என்றான்.
திரும்பிச் செல்ல முயன்றவனை ஈஸ்வரனது குரல் தடுத்து நிறுத்தியது.
“ நண்பன்…நண்பன்னு சொன்னா மட்டும் பத்தாது…அந்த பொண்ணு நேஹா…தனியா தானே இருக்கா…அப்பப்ப கொஞ்சம் போய் பாத்துட்டு வரலாம் ல…கால் சரியாகும் வரை உங்க கூடவே வச்சிருந்து பாக்கலாம் ல…பாவம் தனியா கிடந்து அல்லாடுது…” என்றான் காட்டமாக.
ஆதிக்கோ சிரிப்பு வந்தது. அதனை வெளிக்காட்டாமல், “நாங்க கூப்பிட்டோம் தான். ஆனா அவ வந்து தங்க மாட்டேனுட்டா…” என்று கூறி விட்டு வெளியே நடந்தான்.
“ கொஞ்சம் பாத்துக்கோ…”என்றான் ஈஸ்வரன் சத்தமாக.
முதன்முறையாக நேஹா வின் மீதிருந்த பாசத்தை வெளிப்படையாக ஆதியிடம் உணர்த்தியிருந்தான் ஈஸ்வரன்.
அவனை திரும்பி நின்று பார்த்து விட்டு, “சரி…” என்றான்.
வீட்டிற்குள் வந்தவன் கண்ட காட்சி ..புகழினி தனது தாய் தந்தையிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பதை தான்.
“ என்ன வாய்…என்ன வாய்…டி…உனக்கு…”என்று திட்டியவரை , “அம்மா…போம்மா…போய் மதிய சமையலுக்கு ஏதுனாலும் பாரு…” என விரட்டினான் ஈஸ்வரன்.
இல்லையெனில் தாயிற்கும் மகளுக்கும் பெரிய யுத்தமே ஆரம்பித்துவிடும் என்று நன்கு தெரியும் ஈஸ்வரனுக்கு.
இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும் அவனுக்கு.
ஈஸ்வனே பேச்சை ஆரம்பித்தான் .
“ ஏய்…புகழு…என்னா இப்படி பேசிப்புட்ட…?பாவம் ல பாண்டியன். .
இப்ப உம் மேல சரி கோவத்துல இருக்கான் போல…எங்களுக்காக எதுக்கு அவன் கூட சண்டை…?” என்றான் வருத்தமாக .
“இங்க பாருண்ணே…! அப்படியேல்லாம் என்னால விட முடியாது…உடம்பு சரி இல்லாதவருன்னெல்லாம் பாவம் பாக்க மாட்டேன். கேக்க வேண்டியதை கேட்டுதான் ஆகணும். நீ பட்ட கஷ்டத்துல கொஞ்சமாவது படட்டும். உணர்வுங்கறது ஒண்ணுதான்ணே…அந்த சூழ்நிலையை அவரும் உணரட்டுமே…” என்றாள்.
அவளை தன் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டு, “அப்ப…பாண்டியன்..?”என்றான்.
“உங்கிட்ட சொல்ல கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு…இருந்தாலும் இம்புட்டு தூரம் வெசனப்படுதியேன்னு சொல்லுதேன் கேட்டுக்க…அதாவது ஃபர்ஸ்ட் நைட்டல பத்து தடவை லிப் லாக் பண்ணினா சரியாகிடுவார்ண்ணே..”என்றாள் சிரிக்காமலே..
“ அடிக் கழுதை….என்ன பேச்சு பேசுற நீயு…. ரொம்ப குறைவா அவனை எடைப் போடாத …அம்புட்டுதேன்…சொல்லுவேன்.”என்று அவளது தலையை லேசாக தட்டிவிட்டுச் சென்றான் ஈஸ்வரன்.
அவளுக்குமே அவனது கோப முகம் வருத்தத்தை தந்தது தான். அவனது தந்தையை ஊர் மக்களின்
முன் மன்னிப்பு கேட்க சொல்லியிருப்பது அவனுக்கு கோபத்தை தரும் . இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.
அடுத்த ஒரு வாரத்தில் சங்கர பாண்டியன் கூறியதைப் போலவே உற்றார் உறவினருடன் வந்து முத்துக்களையிடமும் ஈஸ்வரனிடமும் மனமார மன்னிப்பு கேட்டார்.
முறைப்படி சொந்தங்களுடம் வந்து பெண் கேட்டு நிச்சயமும் செய்து விட்டார்.
பாண்டியனது முகமோ இறுக்கமாகவே இருந்தது.
புகழினிக்கு அவனிடம் தனியே பேச சந்தர்ப்பம் இல்லாமலேயே போனது.
அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது.
மீனாட்சி மற்றும் ஆதியினால் பாண்டியனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
லண்டனுக்கு திரும்பி விட்டனர் இருவரும்.
உயிர் தொடும் உறவே -37
written by Competition writers
உயிர் 37
ஈஸ்வரன் விஷயத்தில் தான் முதன்முறையாக மீனாட்சி தன் தந்தையின் மனம் ஏன் இவ்வளவு கல்நெஞ்சாகிப் போனது..? என வெறுத்து போனாள்.
ஈஸ்வரனை சங்கர பாண்டியனுக்கு அவ்வளவாக பிடிக்காது தான் ஆனால் இந்த அளவிற்கு பிடிக்காதென்பதை அன்று தான் கண்கூடாக கண்டு கொண்டாள்.
தந்தையின் மனிதாபமற்ற குணத்தை ஏற்க முடியாது போனதன் காரணமாக உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவளை தந்தையிடம் முகம் பார்த்து பேச விடாமல் செய்தது.
இன்று கைகளை பிடித்து கொண்டு இருப்பவரை காண பரிதாபமாக தான் இருந்தது அவளுக்கு.
அவளை கைகளைப் பிடித்து அருகில் அமர வைத்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
“ மீனாட்சி…இந்த அப்பாவை…மன்னிச்சிடு ..டா…பேசா…ம இருக்கா…த மா…முன்ன…மாதிரி…இல்லைன்னாலும்…ஏதாவது ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசு…தங்கம்…எல்லா..ரோட…வெறுப்பை…சம்பாதிச்சு..வச்சிருக்கேன்இந்த…பாவி…ஆனா…நீங்க எல்லாரும்…வயசுல…சின்னவகளா..இருந்தாலும்.. பெரியவங்க மாதிரி நடந்துகிட்டீக…நான்..நான்…தான்…”என உணர்ச்சிவசப்பட்டார்.
“ இது பாருங்க…மொத…உடம்பு தேறி வாங்க…. அப்பறம் பேசிக்கலாம்…இப்ப கண்ணை மூடி தூங்குங்க…” என்றாள் அதட்டலாக.
அவரோ “ இல்ல…நீ இந்த அப்பா..வ மன்னிச்சிட்டேன்னு சொல்..லு…” என்றார் விடாப்பிடியாக .
ஒரு பெருமூச்சுடன் அவரருகில் குனிந்தவள் அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “மன்னிச்சிடுவேன்னு நினைக்கேன்….வெசனப்படாதீக..நல்லா தூங்குங்க..நான் இங்கனதேன் இருக்கேன்… மனசை போட்டு உழப்பிக்காதீக..” என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தாள்.
ஆதியை ஏற்றுக்கொள்ள அவள் எடுத்துக் கொண்ட நேரமே அதிகம்.
சட்டென்று அவளால் மன்னித்து விட்டேன் என்று தந்தையிடம் கூற முடியவில்லை. நாளைடைவில் மாறும் என்று நம்பினாள்.
சங்கர பாண்டியனுக்கு இந்த அளவிற்காகவது மகள் இறங்கி வந்து பேசினாளே..என்றிருந்தது.
ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை ஆயாசமாக மூடிக் கொண்டார்.
சற்றே அமைதியடைந்தது அவரது மனம் .
காலத்தினால் நிச்சயமாக எதனையும் மாற்றக் கூடிய சக்தி உள்ளது என்பது உண்மையே…
அவளது பலவந்தமாக பெற்றுக் கொண்ட ஆதி…வலுக்கட்டாயமாக அவளது உடலையும் எடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக மீனாட்சி உதறி தள்ளியிருப்பாள்.
அவளுக்கான நேரத்தையு
ம் அவளுக்கான அடையாளத்தையும் கொடுத்தான்.
மெல்ல மெல்ல தான் அவளால் ஆதியை கணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தது .
சில நேரங்களில் சில விஷயங்களை கிளறாமல் இருப்பதே அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
வடிவாம்பாளும் மயில் வாகனமும் வந்து சங்கர பாண்டியனை பார்த்து விட்டு சென்றார்கள்.
வடிவாம்பாள் வழக்கம் போல மீனாட்சியிடமும் கோமதியிடமும் பேசவில்லை.
ஏற்கனவே மீனாட்சி ஆதியிடம் நடந்துகொண்ட முறையை பார்த்தவருக்கு அவள் மீது கோபம் இருந்தது.
ஆதி அதற்கான காரணத்தை அவரிடம் எடுத்துக் கூறினான்.
ஆனாலும் அவர் சமாதானம் ஆகவில்லை.
சங்கர பாண்டியன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு பத்து நாட்கள் ஆகியிருந்தது.
மீனாட்சியும் ஆதியும் லண்டனுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம்.
எனவே இருவரும் அவரிடம் விடைப்பெற்றுச் செல்ல வந்திருந்தனர்.
“ மாமா…நாங்க கிளம்புறோம்…உடம்பை பாத்துக்கோங்க…தனியா எங்கேயும் போகதீங்க…” என்றான் ஆதி.
மீனாட்சியும், “ உடம்பை பாத்துக்கோங்க…கிளம்புறேன் பா” என்றாள்.
சங்கர பாண்டியன் , “கோமதி…இங்க வா…” என்றார்.
“ என்னங்க…என்ன வேணும்..?” என்றார்.
“பாண்டியனையும் கூப்பிடு…நான் சொல்ற இடத்துக்கு போவணும்…அம்மா.. மீனாட்சி நீயும் எங்கூட வா..ஒரு மணி நேரத்தில வந்துடலாம்” என்றார்.
யோசனையுடன் “சரிப்பா…” என்றாள்.
“உடம்பு கொஞ்சம் நல்லா ஆகட்டுமே…அப்பறம் வெளியே போலாம்ல…?” என்றார் கோமதி.
“ இல்லை கோமதி…சில விஷயங்களை உடனே செஞ்சிபுடனும்…காக்க வைக்க கூடாது…ஆதி நீயும் வாப்பா…”என்றார்.
தேனிலும் இனியது காதலே -18
written by Competition writers
காதலே-18
இன்றுடன் ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் சென்றிருந்தது.இருவரும் தங்களது வேலைகளில் வழக்கம் போல் ஈடுப்ட்டுக் கொண்டிருந்தனர்.ஸ்ரூடியோவில் இருந்து வந்து அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றதென்னவோ ‘ஹனி வாய்ஸ்” தான் கால்கள் நடுங்க பாடல் வந்த பால்கனியை நோக்கிச் செல்ல அப் பாடல் கனியின் அலைபேசியில் இயங்கிக் கொண்டிருந்தது.
நிதிஸைக் கண்டவள் புன்னகைக்க, “இந்த வாய்ஸ்ல இந்த சாங் டிபரண்ட் பீல்ல” என்றான்.அவளோ எதுவுமே சொல்லாது அவனையே ஆழ்ந்து பார்க்க,அவள் பார்வையில் ஏதோ உணர்வு, அப் பாடலை முழுதாக கேட்டதும் தான் மீண்டும் அறைக்கு வந்தவன் குளித்து இரவுணவை உண்ண . வந்தவன் முகத்திலோ ஒரு கடுமை,நீண்ட நாள் பின் ஹனி வாய்ஸை கேட்டதில் இருந்து ஒரு தடுமாற்றம்,கல்யாணியோ என்னாச்சு என கனியிடம் நிதிஸைக் காட்டி சைகையில் கேட்க, அவளும் தெரியல என்றாள் சைகையில்.
உணவை உண்டவன். லாப்டாப்புடன் அமர்ந்து கொண்டான். வழமையாக அலுவலகம் இருந்து வந்தால், அவளுடன் பேசுவது, உணவுண்டதும் செஸ்,கேரம் என அவளுடன் விளையாடுவது என இருப்பவன் இன்று ஏதோ போல் இருக்க அவன் பேசுவான் என எதிர்பாத்தவள் அவன் எதுவும் பேசாது வேலையில் மூழ்க அவளும் தூக்கத்திற்கு சென்றாள்.அவனும் நேரம் சென்றே தூங்கினான்.
அடுத்த நாளும் மெல்லப் புலர நேரத்துக்கே எழுந்த நிதிஸ் ஸ்டூடியோவிற்குக் கிளம்ப,கனியும் அன்று நிதிஸுடன் சாஃப்ட் டெக்கிற்கு புறப்பட்டாள் புது ப்ராஜெக்ட் வந்திருப்பதால் அதன் மீட்டிங் இன்று நடைபெற இருப்பதால் அலுவலக்த்திற்கு வந்தான்.
ஸ்டூடியோவிற்க்கு வந்த நிதிஸ்கும் ஹனி வாய்ஸையே மனம் தேட, எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாது. கலைஞர், பாடகர்கள், பாடலை ரசிப்பதில் என்ன தவறு என்று தன்னையே தேற்றியவன், நான்கு மாதங்களின் பின் “தேனிலும் இனிது காதலே “எனும் யூடியூப் தளத்தில் நுழைந்தான்.
அவள் வீடியோ போட் மாட்டன் என்றதோடு அவனும் யூடியூப் பக்கம் வரவில்லை.ரஅவள் இறுதியாக போட்ட வீடியோவை பார்த்தவனுக்கு ஆச்சரியம் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை
ஊட்டியில் பொட்னிகல் கார்டினில் எடுத்த அசைந்தாடும் மலர்கள் ஸ்லோ மோஷனில் எடிட் செய்யப்பட்டு அதுவும் ஹனி வாய்ஸில் “அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா……” என பாடியது. இது எப்படி அப்ப கனிமலர் என யோசித்தவனுக்கோ தலை வெடிப்பதை போல் இருந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” உள் நுழைந்தான் கௌதம், சார் ரெக்கார்டிங் எல்லாம் ஓவர், நீங்க செக் பண்ணா? எடிட்டர்க்கு கொடுத்துடலாம் என்றான்.
” கௌதம் ஐ நீட் காஃபி ரொம்ப ஹெடேஜா இருக்கு என்றான் கௌதமும நிதிஸுக்கு காஃபியை கொடுத்தவன். நிதிஸும் அதை அருந்தியவனுககோ கனிமலர் எண்ணம் தான். ” முகேஸ்ட கொடுங்க ஐ அம் லிவிங், நாளைக்கு பார்க்கலாம்” என்றான்.
இரவு பத்து மணியாகியும் நிதி ஸ் வீட்டுக்கு வரவில்லை நிதிஸுக்கு அழைப்பெடுத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்தப் பதிலும் வராததால் ராமுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் கனி.
ராமோ “நான் பாத்துக்குறேன் என்ற ஒரு நிதிஸை அழைக்க முதல் ரிங்கிலி அழைப்பை ஏற்றவன் “எங்க இருக்க கெஸ்ட் கவுன்ஸ்ல அருகில் கனி நிற்பதால் ஆப்பிஸ்ல தான் இருக்கான்.
“வேலை கொஞ்சம் அதிகமாம், ஒன் ஹவர்ல வந்துருவானாம் என்றவன் காரை எடுக்க கனிக்குத்தான் தனக்கு லேட்டாகினாலும் தனக்கு மெசேஜ் அனுப்புவான் இன்று அனுப்பவில்லையே என அவள் யோசனையில் இருக்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ராம் கெஸ்ட் ஹவுஸ்க்கு.
காரை நிறுத்தியவன் உள்ளே செல்ல நிதிஸ் அன்று போல் இன்றும் இருளிலே இருந்தான்.
ஏய் என்ன ஆச்சுடா என்றபடி லைட்டை ஆன் செய்தான்.”கனி அங்க டென்ஷனா உன்ன கேட்டுட்டு இருக்கா, உனக்கு ஹால் ,மெசேஜ் பண்ணா நீ எடுக்கவே மாட்டேங்குறியே என்றான்.அவனருகில் அமர்ந்தபடி.
“ஊட்டியில் எடுத்த வீடியோ யூடியூப் ல வந்திருக்கு” என்றான் “ஓ கனிய பற்றியா ரொம்ப நாள் முன்னாடியே எனக்கும் தெரிஞ்சிருச்சு சொல்லிடாளா???” எனக் கேட்க ,எழுந்து அமர்ந்த நிதிஸோ. “உனக்கு முன்னாடியே தெரியுமா?” ” ஆம்” என்றவனையே நிதிஸ் வெறிக்க
சொன்னா கவலைப்படுவது தான் சொல்லல, அவ சொல்லிருப்பானும் நினைச்சேன் என்றான். “நான் ஏன் கவலைப்பட போறேன்” அது வந்து ஆபீஸ் முன்னாடி கனிய ஆக்சிடென்ட் பண்ணது நீதான், அதை மறைக்க, நான் எவ்வளோ பண்ணுனேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்” என்றான். நிதிஸ் புருவச்ளிப்புடன் பார்த்தவன் “ஓ மை காட்” என்றவனுக்கோ என்ற சொல்வதென்றே தெரியவில்லை.
நிதிஸோ “அப்போ அப்போ என்னால தான் அவளுக்கு வாய்ஸ் போயிடுச்சா” என… கவலை தோய்ந்த குரலில், அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டான். “அதான் அவக்கு ஒன்னுமில்லனு டாக்டர் சொல்லிடார் தானே….என்ற ராம்
” தரங்கிணி அனுப்பிய வீடியோவை காட்ட நிதிஸோ அதைப் பார்த்தவன் தன்னையே நொந்து கொண்டான்.
முகம் கசங்க இருளை வெறித்தபடி இருந்தவனின் அலைபேசியில் மீண்டும் அலர்ட் வந்திருந்தது அந்த வீடியோவை ஓபன் பண்ண ராமோ “தேனிலும் இனியது காதலே, உயிர் தேகம் தந்தது காதலே, நம் உயிரின் அர்த்தம் காதலே இந்த உலகம் அசைவதும் காதலே” எனும் பாடல் பொட்டானிகல் கார்டினில் எடுத்த வண்ணத்துப் பூச்சிக் கூட்டத்தோடு ஓடியது. நிதிஸுற்கோ பெருமூச்சுடன் ‘எங்கெல்லாம் தேடினன்டி கடைசியா என்கிட்டயே வந்திருக்க நானும் மடையை மாதிரி தெரியாம இருந்திருக்கன்’ என எண்ணிக் கொண்டான். “சரி வீட்டுக்கு போய் பீல் பண்ணலாம் வா” என நிதிஸை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் ராம்.
இருவரும் வீட்டிற்கு வந்து விட்டனர் நிதிஸ் அறைக்குள் நுழைய கனி தூக்கத்தில் இருந்தாள், தூங்கும் அவளையே சிறிது நேரம் பார்த்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவளருகில் துங்கிப் போனான்.
அடுத்த நாளும் மெல்லப்புலர நிதிஸுன் பார்வை அடிக்கடி தன்னில் படிவதாய் இருந்தாள் கனி மறு மறுநிமிடம் அது பொய்யோ எனும் வகையில் அவன் பார்வை இருந்தது அவன் பார்வையில் என்ன உள்ளது என புரியவே இல்லை.
நிதிஸுக்கும் முதல் புரியாத பல விடயங்கள் இப்போது புரிவதாய் நூறு வீதம் தேன் குரல் அவள் தான் என தெரிந்து கொண்டான்.
அன்று கட்டில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். நிதிஸ் பால்கனியில் நின்று இருந்தான் அவன் பார்வை அவளிலேயே,
அவள் முன் வந்தமர்ந்தவன் “கனி லேப்டாப் கொஞ்சம் வேணும் மெயில் பாத்துட்டு தாரேன் “என்றான். அவளும் கொடுக்க அதனை பார்த்தவனின் சிந்தையில் ராம் சொல்லியதே ஓடியது .சிறிது நேரத்தில் கொடுத்தும் விட்டான
” பாத்துட்டீங்களா?” நிதிஸோ ” ஓ எஸ் தேங்க்ஸ்” என்றவன் மறு நிமிடம் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தவன். “இப்போ, பேசினியா?” அவ்ளோ ‘இல்லை’ எனத் தலையாட்டினாள் நிதிஸோ யோசனையுடன் இங்கிருந்து அகன்றான்.
இப்படி சில நாட்கள் சென்றிருக்கும் தனக்கு குரல் வந்ததை சொல்லாது கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டினாள் கனி நிதிஸும் இப்போது அவளையும் அவளையும், செயற்பாட்டையும் ரசிக்கத் தொடங்கினான்.
கனி மலர் “ஹனி ப்ளூம்” இரண்டு ஒற்றுமையையும் இன்று தான் அவனுக்கு புரிந்தது அன்று நிதிஸுன் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவள் அழைப்பு வர பாடல் நின்றது அலைபேசி காதில் வைக்க அதே பாடல் மீண்டும் கேட்டது,
அலைபேசியை திருப்பித் திருப்பி பார்த்தபடி கதவின் புறம் திரும்ப இது நிதிஸ் தான் மீதிப் பாடலை பாடிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தபடியே முழுப்பாட்டையும் பாடி முடித்தவன் “பிடிச்சிருக்கா?” என கேட்க அவளும் “ஆம்” என்று தலையாட்டினாள் அவனும் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டான் அவளின் ஆசைகளில் அதுவும் ஒன்று தனக்காக பாட வேண்டும் என்று அவள் யூடியூப்பில் சொல்லி இருந்தாள்.
நிதிஸ் கன்சென்ட் ஒன்றிற்கு சென்று மூன்று நாட்கள் முடிந்து விட்டது. அவனும் மகிழ்ச்சியான காதல் பாடல்களை தனது ரசிகர்களுக்கு விருந்தளித்தான் அவனது மகிழ்ச்சி அவன் ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது
கனியோடு அலைபேசியில் மெசேஜுல் பேசிக் கொள்வான். “சாப்டியா?, எப்படி இருக்க?, குட் நைட்” என்பதோடு முடியும்.
நான்காம் நாள் காலையில் வீடு திரும்பிய நிதிஸ் அறைக்குள் நுழைய குளியலறையில் இருந்து பாடல் தான் அவனை வரவேற்றது குளியலறை ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் கொண்டு வந்த பேக்கை அலமாரியில் வைத்தவன் உடை கூட மாற்றாது கட்டிலில் விழுந்தான்.
குளியலறையில் இருந்து மார்பில் டவ லை சுற்றி வெளியே வந்த கனியும்” தீய தீயே வா தீயே எனும் பாடலை பாடிய வண்ணம் கண்ணாடி முன் ஒன்று தலையை துவட்ட அவள் சத்தத்தில் கண் விழித்த நிதிஸோ அவள் ஆடை இல்லாத தோள்கள் தான் அவனுக்கு காட்சியளித்தது.
அவள் நின்ற கோலத்தைக் கண்டவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க “அழகான வார்த்தை நீ என்றால்முற்றுப் புள்ளி வெட்கம், மெதுவாக உன்னை வர்ணித்தால், மொழியே சொர்கி நிற்கும்,அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்,இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்,அட மேல் உதட்டைக் கீழ் உதட்டை,ஈரம் செய்யும் நேரம்உயிர் மேலிருந்து கீழ் இறங்கி, என்னென்னவோ ஆகும்,இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும், இடையில் உள்ள மோகம்,முத்த தேனில் மூழ்க முன்நேரம் தீயே தீயே” மீதி பாடலை பாடியவளுக்கோ ஏதோ வித்தியாசம் தோன்ற கட்டில் பார்த்தவர்களுக்கு மூச்சேன் நின்று விட்டது. நிதிஸ் அவளை விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வழமையாக உடையை உடை மாற்றும் அறையில் மாற்றுபவள் இன்று நிதிஸ் இல்லாததால இரவு தான் வருவான் என எண்ணியவள் குளிதத்தும் அப்படியே வந்து விட்டாள்.
தான் நின்ற கோலம் புத்திக்குறைக்க மீண்டும் குளியலறை நூல் நுழைய முயன்றவளை நுழைய விடாது பாய்ந்து அவள் முன் மறைத்தபடி நின்றவன் அவள் கையைப் பிடித்து அருகில் இருந்த சுவரில் சாய்த்தவன் “வாய்ஸ் ஓகே ஆயிடுச்சா “எனக் கேட்க,” பேச முடியுது என்றாள் தலையை குனிந்தபடி “பேச மட்டுமில்ல, பாடவும் நல்லா முடியுது என்றான் ஒரு மார்க்கமாக, ஒற்றைக் கையால். அவள் முகத்தை நிறுத்தியவன் அவள் இதழ்ளைப் பார்த்தபடி இதழ்களில ஆழ்ந்து முத்தமிட அவன் முத்தத்தில் திகைத்தவள், பின் அவன் முத்தத்தில மூழ்கவாரம்பிக்க அவளை மூச்சுக்காக விட, அவள் மார்பில் இருந்து நவழும் டவலை அவள் விழிகளைப் பார்த்த வாரே அவளது மார்புடன் கட்டியவன் “டிரஸ் சேஞ்ச் பண்ணிடுவா பேசணும்” என்றான்.
இதழ் மட்டுமல்ல உடல் கூட அவன் முத்தத்தால் சிவந்து விட்டது ஆடை மாற்றும் அறைக்குள் சென்றவளால் நிலை கொள்ளவே முடியவில்லை.அவன் முத்தமிட்ட இதழ்கள் குறுகுறுக்க அதனை வருடியவளுக்கோ வெட்கம் தான் மேலிட்டது.
ஒரு நீளமான ஃபிராக்கை அணிந்து வெளியே வர குளியலறையில் சத்தம் கேட்டது குளியலறை கதவை ஒரு கணம் பார்த்தவள் கீழ் இறங்கிச் செல்ல தேவி பாட்டியோ “நிதிஸ் எங்கமா” எனக் கேட்க, “அவளோ குளிக்கார் பாட்டி என்றாள். அவள் சைகையில் சொல்வாள் என்ற பாட்டிக்கோ இன்ப அதிர்ச்சி ” கல்யாணி இங்க வா” என்ன அவர் சத்தமாய் அழைக்க கல்யாணியின் வர “என்னக் கொஞ்சம் கிள்ளு” என்றார்,அவரும் கிள்ள அவுச் என கையைத் தேய்த்த பாட்டியோ பாட்டியோ, “உண்மையா இப்ப பேசுனியா?” “ஆமா பாட்டி” என்றாள் புன்னகையுடன். தேவிப் பாட்டிக்கும் கல்யாணிக்கும் அளவில்லாத சந்தோசம்.
” உங்க வீட்ட சொல்லிட்டியா?” இல்ல இனிமேதான் பாட்டி என்றாள் “முதல்ல அவங்களுக்கு சொல்லு ரொம்ப சந்தோஷப்படுவாங்க”என்றார்.
அவளும் தாய்க்கு அழைக்க “ஏங்க மலர் ஹால் பண்றா?, மெசேஜ் தானே பண்ணுவா” என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவரோ மறுபுறம் “ஹலோ அம்மா, “எனும் கனியின் குரலில் சற்று வித்தியாசம் இருந்தாலும் கனியுடைய குரல் தான் என அடையாளம் காணக்கூடியதாகவே இருந்தது “மலர் எப்பமா சரி ஆச்சு” இப்போதம்மா என்றாள்,” ஓகே மா ஈவினிங் வாறோம் என்றவர் அழைப்பை துண்டித்தார்.
பாடசாலைக்கு செல்ல தயாராகிய கணவனிடம் “ஏங்கே மலர் தான் பேசினா, குரல் சரியாயிடுச்சு என்றார் மனம் கொள்ள புன்னகையுடன். அப்படியே மகனிற்கும் அழைத்து மகிழ்சியை பகிர்ந்து கொண்டார் வாணி
குளித்துவிட்டு வெளியே வந்த நிதிஸ் கனியை காணாது கீழே வர அவளை சுற்றி கல்யாணி, பாட்டி, பிரதாப், ராம் என வேலை செய்பவர்கள் என அனைவரும் இருந்தனர் நிதிஸோ அவளை முறைத்தபடி உணவு மேசையில் அமர அவனைக் கண்டதுமே அவன் முத்தமிட்ட ஞாபகம் வர அவனைப் பார்க்காது மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
நிதிஸ் எவ்வளவு முயன்றும் அவளை தனியே சந்திக்க முடியவில்லை “பிரதாப் டாக்டருக்கு அழைத்து வீட்டுக்கு வரவைத்து கறிய செக் செய்து அவளுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என தெளிவு படுத்திக் கொண்டனர்.
ராமோ “கங்கராட்ஸ் ப்ரோ” என அவன் தோளில் தட்டி விட்டு அலுவலகம் கிளம்பி விட்டான். அன்று மாலை வேளையில் கனியின் பெற்றோர் வந்து பார்த்துச் சென்றனர் .
பகல் பொழுது வீட்டினருடன் கழித்தவள் இரவு உணவின் பின் தயங்கி தயங்கி அறையினுள் நுழைய அவள் குரல் தான அவளை வரவேற்றது.
நிதிஸ் பாடிய “சந்திப்போமா,இருவரும் சந்திப்போமா ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்,ஒரு முறை சந்திப்போமா” எனும் பாடலை சத்தமாக ஒலிக்க விட்டிருந்தான். வாங்க மிஸ்ஸிஸ் கனிமலர் நிதீஸ்சரன். என்றவன் பால்கனிப் பக்கம் இருந்து ” தேனிலும் இனியது காதலே” உங்களோட சேனல் தானே எனக் கேட்க,அவளுக்கோ படபடப்புடன் அவனை நோக்க, அவனும் பால்கனியில் இருந்து அவளை அழுத்தமாகப் பார்த்தபடி அறைக்குள் வந்தான்.
அவனோ ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நெருங்க ,அவளோ ஒரு வித பயத்தில் கைவிரல்களை கோர்த்துப் பிரித்தபடி தலை குனிந்து நின்றாள்.
அவள் நாடியை நிமிர்த்தியவன் ” உன்ன எங்கல்லாம் தேடின்டி, என்ன ரொம்ப சுத்தல்ல விட்டுட்ட என்றவன் மறு நொடி அவளை இழுத்து காற்றுப் புகாதளவிற்கு அனைத்துக் கொண்டான்.
அவளோ புரிந்தும் புரியாமலும் அவன் அனைப்பில் இருந்தாள் தன்னில் இருந்து அவளைப் பிரித்தவன் அவளை சோஃபாவில் அமர வைத்தவன் தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவள் கைகளை தனது கையினுள் வைத்தவன் .
“ஹனி ப்ளூம்” என்றான் அவளோ அவனை அதிர்ச்சியாய் நோக்க “கனிமலர் அலையன்ஸ் ஹனி ப்ளூம்” ரொம்ப தான் யோசிச்சு நேம் வச்சிருக்க, இப்படி யோசிக்காவிட்டன் என்றவன். அவளோ தலையை குனியமுற்பட அவள் தலையை நிமிர்த்தியவன் அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன் “உன்னோட ஃபர்ஸ்ட் சாங் வைரலானதும் அதுல இருந்து உன்ன ப்லோ பண்ண தொடங்கினேன். உன் காதலை சொன்ன, என் காதலை கேட்காமலே போயிட்ட ஒரு வாய்ப்பு கூட தராம விட்டடுடியேடி
” உன் எவளோ கண்டுபிடிக்க ட்ரை பண்ணன் முடியல, ராம் கிட்ட லோகேஷன் கண்டுபிடிக்க சொன்ன், லொகேஷன மாத்திடே இருந்திருக்க,விபீஎன் யூஸ் பண்றதா ராம் சொன்னான் படிச்ச மொத்த வித்தையையும் இதுல இறக்கிட போல என்றான்.
பாட்டியும்,அம்மாவும் கல்யாணம் பண்ண சொல்லிட்டே இருந்தாங்க அப்புறம் நானும் ஒத்துக்கிட்டேன் அதுக்கு பிறகு கடட்இகிறவளுக்கு உண்மையா இருக்கணும் உன் யூடியூப் சேனல பாக்குறதே விட்டன்.
இனி வீடியோ போட மாட்டேன்னு சொன்ன அதுல ரொம்பவே உடைஞ்சிட்டேன் டிப்ரஷன்ல திரிஞ்சன். ராம் பாத்துக்கிட்டான் அப்போதான் ஒரு நாள் குடிச்சிட்டு ஆக்சிடென்ட் பண்ணிட்டேன். அதுவும் உன்னத்தான் என்றானீ பெருமூச்சுடன். “ஆக்சிடென்ட் பணண்து நீங்களா?” என அவள் அதிய்ச்சியாய் கேட்க,” ” ஆமா என்றான். அவன் “இப்போ உனக்கு ஓகே ஆயிட்டு இல்லனா இந்த குற்றவேணர்ச்சியிலேயே இருந்திருப்பேன்.
இப்பதான் நிம்மதியா இருக்கு என்றவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
இந்தக் காதல் எவ்வளவு விசித்திரமானது, நிதிஸையே அவள் பார்க்க “என்ன பேபி” எனக் கேட்க அவளோ “இல்லை” என தலையாட்டினாள்.
நேரமும் செல்லவே “வா தூங்கலாம்” என்றவன் அவளை அணைத்தபடி தான் தூங்கினான். அவளுக்கு தான் சுகமான இம்சையாகிப் போனது.
அடுத்த நாள் என்றும் இல்லாத அழகாகவே காலைப் பொழுது புலர்ந்தது கனிக்கு மெல்ல கண்விழிக்க நிதிஸுன் கையனைவில் தான் இருந்தாள்.கூச்சத்துடன் அவன் கையை விலக்கியவள் மெல்ல எழுந்து குளியலறை நுழைந்து கொண்டாள்.கண்விழித்த நிதிஸ் அவளைக் காணாது எழுந்து அமர,கனியும் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் ” குட் மார்னிங் பேபி” அவளும் குட் மார்னிங் என்றாள் புன்னகையுடன் ” காஃபி எடுத்து வாரன்” என்றவள் கீழிறங்ஙிச் செல்ல ….அவளின் முகத்தைப் பார்த்த பாட்டியோ ” முகத்துல தௌசன் வல்ப் எரிது, எப்போ நல்ல செய்தி சொல்ல போற” என்றார் அவளோ வெட்கத்துடன் சமையலறை நுழைந்தவள் இரு காஃபிகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
நிதிஸுடம் ஒரு காஃபியை கொடுத்தவள் தானும் ஒன்றை காபி எடுத்துக்கொண்டு பால்கனிப் பக்கம் சென்றாள்.
அவளையே பார்த்தபடி அவனும் பால்கனிக்குச் சென்றவன் “என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்க” என்றான் அவளும் அவனையே பார்க்க, ” ஏன் வீடியோஸ் போட மாட்டேன்னு சொன்ன” வீட்டு வெட்டிங் அரேஞ்ச் பண்ணிருந்தாங்க கதிர்னு ஒருத்தன் ,என்னோடது ஒன் சைட் லவ் எப்படி வீட்ட சொல்லறது எதுவுமே சொல்லல ரொம்ப கவலைல இருந்தன்.
அதான் வீடியோஸ் போட மாட்டேனு சொன்னேன் என அனைத்தையும் சொன்னாள்.தன்னைப் போல் தான் அவளும் என்பதை புரிந்து கொண்டான்.
“ஓகே எல்லாம் முடிஞ்சிட்டு…” எனக்கும் இப்ப நீயும் கிடைச்சுட்ட, ரொம்ப நாள் காத்திருக்க முடியாது எல்லாத்துக்கும் தயாரிக்க” என்றான்.அவளோ அதிர்ச்சியாய் அவனை நோக்கஅவனும் கண்சிமிட்டியபடி அவள் கன்னத்தை தட்டிக்க கொண்டு அங்கிருந்து அகன்றான்.
Newer Posts