
Tag:
Mafia romance
அரிமா -15
written by Competition writers
“போ. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அதிர்ந்தது அரண்மனை மட்டுமல்ல ஆதித்யாவும் தான் .
” மதி ” என்ற ஆதித்யா மறுநொடி அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடினான்.
மதியின் அலறலில் ஏற்பட்ட பதற்றத்தால் மின்தூக்கி மறந்து வேகமாக படிக்கட்டுகளில் ஏறி, தன் அறைக்கு விரைந்தான் ஆதித்யா .
உள்ளே போக பயந்து கொண்டு வாசலில் தங்களின் கைகளை பிசைந்தபடி நின்ற வேலையாட்களிடம் நெருங்கியவன் .
” என்னாச்சு ??” கண்டிக்கும் குரலில் கேட்டான் .
” அங்க ஏன் கேட்குறீங்க என்கிட்ட கேளுங்க “என நெற்றியில் வழியும் இரத்தத்தை. மேலும் வழிய விடாமல் ஒரு துணியால் அழுத்தி பிடித்தபடி அவன் எதிரே வந்தாள் தாரா .
“மதி எப்படி இருக்கா. ??யார் இப்படி பண்ணினது. ?? செக்யூரிட்டி எல்லாரும் எங்க ?? ” என்ற தாராவின் நிலையை கண்டதும் ஆதித்யாவுக்கு மதியின் அலறல் நினைவுக்கு வர பதறியவன் , தாராவிடன் அவளை பற்றி விசாரித்தான். ஆதனால் ஆதித்யா மீது ஆத்திரம் கொண்ட தாரா ,
” ஆதித்யா என்னை கீழ தள்ளிவிட்டதே மதி தான். என்னை மட்டும் இல்லை இதோ ” என்று கையில் கர்சீப்பை கட்டிக்கொண்டு நிற்கும் வீராவை காட்டி,
“என்னை காப்பாத்த வந்த வீராவோட கையையும் கத்தியால கிழிச்சிட்டா ” ஆதங்கத்தில் தன் உதடுகள் துடிக்க கூறினாள் தாரா.
” வாட் அவளா ! ? நீங்க அவளை என்ன பண்ணுனீங்க.?? ” ஆதித்யாவின் பார்வை வீராவை ஆழ துளைத்தது.
உடனே பதறிய வீரா ,
” ஆதி நான் எதுவும் பண்ணல. தாரா அவளுக்கு ட்ரீட்மென்ட் பார்க்க போயிருக்கா , கிட்டவே வர விடாம தாராவை புடிச்சு மது தள்ளிருக்கா,
அந்த வழியா நான் ஒரு வேலையா போனேன் அப்போ உன் ரூம்ல இருந்து சத்தம் கேட்டு உள்ள வந்து பார்த்தேன். தாரா தலையில அடிபட்டு கீழ கிடந்தா. மதுகிட்ட என்னாச்சுன்னு தான் கேட்டேன். திடிர்னு பழம் வெட்ட வச்சிருந்த கத்தியை எடுத்து என் கைய கிழிச்சிட்டா, கிட்ட போனா’ என்னை மன்னிச்சிடு நான் வேணும்ன்னு பண்ணல போ போன்னு’ கத்துறா. என்னாச்சுன்னு தெரியல? ஆனா ஆதி அவ ரொம்ப பயந்து போய் இருக்கா “
” சரி நீங்க போங்க, நான் மதியை பார்த்துக்கறேன் ” என்ற ஆதித்யா தன் அறைக்குள் நுழையவும் அவனை தடுத்த தாரா,
” ஆதி அவ சைக்கோ மாதிரி நடந்துகிறா. கையில கத்தி வச்சிருக்கா. நீங்க உள்ள போகாதீங்க. உங்களை ஏதாவது செஞ்சிட போறா ” என்க,
” நான் பார்த்துகிறேன் தாரா. ஐ கேன் ஒன்லி ஹண்டில் ஹெர்.” – என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும் என்றவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .
அறை முழுவதும் தேடிய ஆதித்யா, மதி அங்கே இல்லாது போகவும், வேகமாக வந்து குளியல் அறையின் கதவை திறந்து பார்க்க, அங்கே அவள் இருந்த கோலம் கண்டு அவன் இதயத்தில் சுருக்கென்று வலித்தது.
தடதடவென ஆடும் தன் கால்கள் இரண்டையும் தன் நடுங்கும் கரங்களால் வளைத்து பிடித்து, முழங்காலுக்குள் தன் முகத்தை புதைத்து கொண்டு, குளியல் அறையின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஷவருக்கு அடியில் அரண்டு போய் அமர்ந்திருந்த மதியை கண்டதும் சில நொடிகள் வாசலிலே நின்றுவிட்டான் ஆதித்யா .
மதியின் இந்த நிலைக்கு காரணம் தான் என்கிற எண்ணமே அவனை வலிக்க செய்ய, ஆணவனின் மனதில் ஏதேதோ உணர்வுகள், போராட்டங்கள், மேலும் ஒருவித குற்ற உணர்ச்சி, இன்னதென்று அவனால் வரையறுக்க முடியவில்லை.
ஓரிரு நிமிடங்கள் கழித்து உள்ளே ஆதித்யா உள்ளே நுழைய, அவன் மதியிடம் நெருங்க நெருங்க அவளிடம் இருந்து வெளிப்பட்ட விசும்பல் சத்தம் அவனை மேலும் சங்கடப்படுத்த பெருமூச்சோடு அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.
ஆதித்யாவின் கை தானாக அவளது சிகையை தொட்டு தடவ, இறுக்கி பிடித்தும் தட தடவென நடுங்கிய அவளது மென்கரத்தை ஆதி மெதுவாக வருடினான், அவனது நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று அழுத்தியது. கத்த வேண்டும் போல் இருக்க, ஆனால் அடக்கிக் கொண்டான்.
கயிற்றால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த மதியின் மணிக்கட்டில் சதை கிழிந்து காய்ந்திருந்த ரத்த துளிகளை கண்டதும் அடிவயிற்றில் இருந்து எழுந்து வந்த துக்கம் அவன் நெஞ்சை முழுவதுமாக ஆக்கிரமித்தது.
மெதுவாய் அவளது கரத்தை பிடித்து , காயம் பட்ட அவளது கையை மெதுவாக வருடியவன், அங்கே அவளுக்கு வலிக்காது தன் இதழ் பதிக்க, ஆதிக்கு தொண்டைக்குழி அடைத்தது. அவளது தளர்ந்த மென் கரத்தை மென்மையாக பற்றி தனது வலிய கரத்திற்குள் பாதுகாப்பாக வைத்து கொண்டான். அவளுடைய காயம், அவளுடைய வலி, அவளுடைய துயரம் அனைத்தும் ஆதித்யாவை பெரிதும் பாதித்தது .
சில நிமிடங்கள் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் தன் கண்களை திறந்த பொழுது, மதியின் சோர்வான பார்வையை சந்தித்தான்.
அவளது பார்வை அவனை கேள்வி கேட்டது. அவன் மீது குற்றம் சுமத்தியது. சட்டென்று மனம் கனத்து போக ஒருவித வலியுடன் அவளை பார்த்தவன் ,
” ஆர் யூ ஓகே டா மா ?? எப்படி இருக்க ” சரிந்து விழுந்திருந்த கேசத்தை காதோரம் ஒதுக்கியபடி கேட்டான் .
மதியின் கண்களில் தெரிந்த தளர்ந்த பார்வை இப்பொழுது அக்னி பார்வையாக மாறியது ,
” இன்னும் செத்துபோல “வெறுப்புடன் அவனை பார்த்தாள். அவளது வெறுப்பு கலந்த அக்னி பார்வை அவனது மனதை பொசுக்க, அவன் உடல் விறைத்தது.
தடித்த தன் கீழ உதடுகளை பற்களால் அழுத்தி மூடிய ஆதித்யா, சில நொடிகள் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தவன். அவளது கரங்களை இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொண்டு,
” நான் இருக்கேன் மதி. என்னை நம்பு ” என்றான் .
” மாட்டேன். நா..நம்..பவே..மாட்டே..ன்.” உடனே எழுந்து கொண்டவள், தன்னிடம் இருந்த கத்தியை அவன் முகத்திற்கு எதிரே நீட்டி கடுங்கோபத்துடன் கத்தினாள்.
” மதி, கத்திய கீழ போடு. உனக்கு ஒன்னும் ஆகாது என்னை நம்பு ” அவளை அமைதி படுத்த முயற்சி செய்தான் ஆதித்யா .
” நா. நம்ப. மாட்டேன். நான் சாக போறேன். என்னை அவன் கொலை பண்ண போறான் ” வெறிபிடித்தது போல ஆக்ரோஷமாக கதறினாள் .
” மதி ” ஆதித்யா மதியை நெருங்க முயன்றான் .
“ஏய். போ. கிட்ட வராத என்னை அவன் கிட்ட கொண்டு போக தானே வந்த போ இங்க இருந்து” கத்தியை நீட்டி எச்சரித்த படி இன்னும் பின்னால் சென்றாள்.
” மதி நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நான் உன்னை காயப்படுத்த வரல ” மீண்டும் அவளை நெருங்கினான் .
“வராத யு ப்ளடி, வெளிய போடா” அகோரமாக கத்தியபடி, ஷாம்பூ பாட்டில் துவங்கி கண்ணில் பட்டத்தை எல்லாம் தூக்கி அவன் மீது தூக்கி அடித்து ரகளை செய்ய, தடுக்காமல் வாங்கிக்கொண்ட ஆதித்யா, ஒரு கணம் கூட மதியை விட்டு அகல வில்லை .
” வெளிய போ இல்லைனா, என்னை நானே குத்திக்குவேன் ” என தன்னை தானே காயப்படுத்திக்கொள்ள அவள் துணிந்த மறுநொடி, தன் இரும்பு கரங்களால் அவளை தன்னோடு இறுக்கி பிடித்துக்கொண்ட ஆதித்யா , அவளது கையில் இருக்கும் கத்தியை பிடுங்க முயற்சிக்க, அவளோ அவனிடம் இருந்து விடுபட போராடி கத்தி கதறினாள். ஆனால் அது முடியாது போகவும் ஆதித்யா மீதுள்ள கோபம் ,ஏமாற்றம் , துக்கம் , போதாக்குறைக்கு காயத்தால் ஏற்பட்ட வலி என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொள்ள, ஆத்திரத்தில் சிவந்த வதனத்துடன் ஆவேசமாக,
“ஏய்” என்று சீறியவள் தன் கையில் இருந்த கத்தியை ஆதியின் நோக்கி வீசியிருக்க, அது அவன் மார்பை குத்தி கீறியது .
” ஸ்ஸ். ” என்று கண்களை மூடித் திறந்த ஆதித்யாவுக்கு வலிக்கதான் செய்தது. ஆனாலும் காட்டிகொள்ளாதவன் அவள் கையில் இருந்த கத்தியை எப்படியோ அவளுக்கு சேதாரம் வராமல் வாங்கி கீழே எறிந்து விட,
அவ்வளவு தான் அடுத்த நொடியே,
” வேண்டாம் என்னை விட்டுடு ” என்ற மது கதறி அழுதபடி வேகமாக பின்னால் செல்ல, தவறுதலாக அவளது கரம் பட்டதில் ஷவரில் இருந்து நீர் கொட்ட துவங்க, பெண்ணவளோ இன்னும் பதறி விட்டாள்.
” மதி ரிலாக்ஸ் ஈஸி ஒன்னும் இல்லை “
என்று அவளை ஆசுவாசப்படுத்திய ஆதித்யா, ஷவரை அணைக்க முனைந்த போது, பயத்தில் தன்னை நெருங்கியவனை தள்ளி விட்டவள்,
“போ” என்று கத்தியபடி கண்களை மூடிக்கொண்டு அழ,
“ஐயோ மதி” என்று கோபத்தில் பல்லை கடித்த ஆதித்யா, பின்பு அவள் நிலையை கண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், பயத்தில் புலம்பிக்கொண்டிருந்தவளிடம்,
” நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் மதி” இயலாமையுடன் கூறினான் .
“நோ நான் சாக போறேன். அவங்க என்னை கொலை பண்ண போறாங்க” – அழுகை அதிகமானது. ஆதித்யாவுக்கு
என்ன செய்வதென்றே புரியவில்லை .
” இனிமே இப்படி நடக்காது மதி” ஆதித்யாவின் குரல் சோர்ந்து ஒலித்தது.
” இல்லை இல்லை நான் செத்துருவேன் ” கண்களை இன்னும் அழுத்தமாக மூடிக்கொண்டு குளிர்ந்த நீரில் உடல் நடுங்க கூறினாள்.
” கடவுளே என்னை நம்புடி. உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்”அவனது முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதும் கோபத்தில் கத்தினான் ஆதித்யா .
அவளோ விடமால் உளறிக் கொண்டே இருக்க, நேரம் ஆக ஆக அவள் உடல் வேறு இன்னும் அதிகமாக நடுங்க துவங்க, இப்படியே விட்டால் அவளுக்கு ஏதும் ஆகிவிட கூடும் என்று உணர்ந்தவனாக, மதியின் உதறல்கள் அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு உடனே அவளை பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான் ஆதித்யா.
மதி எவ்வளவு திமிரினாலும் தன்னை விட்டு விலகாதபடிக்கு இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆதி, முதல் வேலையாக ஷவரை அணைத்தவன், நடுங்கும் அவளது முதுகை வருடிகொடுத்து,
” சாரி சாரி பேபி. நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன், உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் ” ஆசுவாசப்படுத்தினான்.
ஆனால் அவளோ ,
” என்னை விடு ” என்று பிதற்றிக்கொண்டு அவனிடம் இருந்து விடுபட பார்க்க, விடாப்பிடியாக அவளை தடுத்து தன் பிடிக்குள் கொண்டு வந்தான் ஆதித்யா .
” விடு. ” – வான் பிளக்க கத்தினாள்.
” ஷட் அப் ” – பதிலுக்கு கத்தியபடியே மதியின் விழிகளை நேருக்கு நேராக பார்த்த ஆதித்யா ,
” நீ மட்டும் தனியா இல்லை பேபி. நானும் உன் கூட இருக்கேன். இதை சரி பண்ணிடலாம்” – உறுதியாக கூறினான்.
” இல்லை… ” என்று கத்த போனவளின் வாயை தன் கரம் கொண்டு மூடியவன்,
” நம்புடி” வேதனையுடன் கூறினான் .
மாட்டேன் என்பதாய் தலையை மட்டும் மறுப்பாக அசைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அடுத்த கணமே மதியை அணைத்துக்கொண்டான் ஆதித்யா. இன்னும் அழுதாள்.
“காம் டவுன் காம் டவுன் மதி இனி இப்படி நடக்காது ” – அவள் தலையை ஆறுதலாய் வருடி கொடுத்தான் அவளது கண்ணீர் மேலும் அதிகரித்தது. அவனுக்குள் இருக்க வேண்டிய ஏதோ ஒன்று அவனை விட்டு நழுவ, மிகவும் பலவீனமாக உணர்ந்தான்.
தன்னிலை மறந்து சற்று நேரம் அவனது அணைப்பில் அடங்கிருந்தவள். சில நொடிகள் கழித்து எதோ ஒன்று தன் மனதை அழுத்த திடீரென்று அவனிடம் இருந்து விலகினாள். குளிரில் நடுங்கியபடி நின்றவளை கண்டவன், எதுவும் பேசாமல் குளியல் அறைக்குள் இருக்கும் கப்போர்டை திறந்து ஒரு துண்டை எடுத்து அவளது உடம்பில் சுற்றி விட்டு, இன்னொரு துண்டை எடுத்து அவளது கையில் கொடுத்து,
” ரொம்ப நேரம் ஈரத்துல நிக்காத. ” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.
பின்பு சில நொடிகள் கழித்து பாத்ரூமின் கதவை தட்டியவன் அவள் கையில் மாற்று உடையை கொடுத்து,
” இது என்னுடையது தான், இன்னைக்கு இதை போட்டுக்கோ. நாளைக்கு உன்னை நான் வெளிய கூட்டிட்டு போறேன். உனக்கு வேண்டியதை வாங்கிக்கலாம்.. ” என்று அவள் முகம் பார்க்காமல் கூறியவன் அங்கிருந்து சென்றுவிட, மதியும் அவன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் .
சோர்ந்து போய் இருந்த உடம்பில் காயங்களுடன் சேர்த்து ஆங்காங்கே கடுமையாக வலித்தது. அவளது மெலிந்த உடலுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத அவனது டீ ஷர்ட்டையும், ட்ராக் பேண்ட்டையும் அணிந்து கொண்டவளின் தளர்ந்த கால்கள் நடக்க கூட வலுவில்லாமல் பின்ன, மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தவள் மெதுவாக வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
கத்தி முடித்திருந்ததில் அவளது மனதில் உள்ள அழுத்தம் சற்று குறைந்திருக்க, அப்படியே கண்களை மூடியவளுக்கு அப்பொழுது பார்த்து, துரியன் தன்னை சுட வந்தது, தன்னை காயப்படுத்தியது, அதை பார்த்தும் ஆதித்யா தடுக்காமல் சிலை போல நின்றது என அனைத்து நினைவுகளும் அழையா விருந்தாளியாக, மீண்டும் அவள் நினைவில் தோன்ற பாறையை சுமந்து போல மதியின் மனம் கனத்தது.
எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்!
அதை செய்தது மட்டுமல்லாமல். இப்பொழுது நம்மிடம் வந்து வேஷம் போட எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என்று அவள் உள்ளம் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்க,
ஈரத்தலையும் வெற்று மார்புமாக கருப்பு நிற ட்ராக் பேண்டை மற்றும் அணிந்து கொண்டு உள்ளே இருக்கும் வேறு ஒரு அறையில் இருந்து வெளியே வந்தான் ஆதித்யா .
அவனை கண்டதும் மது தன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள , அதை கண்டு கொண்ட ஆதித்யா எதுவும் பேசாமல் தன் அறையில் இருக்கும் கப்போர்டை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு மதியின் அருகில் வந்து அமர்ந்தவன், அதில் இருந்து மருந்தை எடுத்துக்கொண்டு அவளை பார்த்தான்.
அவளும் இப்பொழுது அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரின் பார்வையையும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டது. ஆணவனின் பார்வையில் தெரிந்த மென்மை, அவளது காயத்தை வருட, அவன் தொடாமலே உடம்பில் ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தாள் பெண்ணவள்.
சில நொடிகளுக்கு முன்னால் அவன் மீது இருந்த கோபமெல்லாம் காற்றில் கரைந்து போக, அப்படியே உறைந்து விட்டாள்.
மெதுவாக நாடியை சற்று தூக்கி கழுத்தில் இருந்த காயத்திற்கு மருந்தை பூசினான், அப்பொழுது மதி வலியில் முனங்க, உடனே மருந்திடுவதை நிறுத்திய ஆதி,
” ரொம்ப வலிக்குதா ?? வேகமாக பண்ணிட்டேனா ” அக்கறையுடன் கேட்டான் .
உருகிருந்த அவளது மனம் அவன் கேட்ட கேள்வியில் சட்டென்று இறுக, பெண்ணவளோ கோபமாக அமர்ந்திருந்தாள் அப்பொழுது,
” என்னாச்சு ரொம்ப வலிக்குதா ??” அக்கறையுடன் வினவினான்.
” எப்படி உங்களாலா முடியுது. ??எல்லாம் பண்ணிட்டு , எதுவுமே நடக்காத மாதிரி, என் முன்னாடி உக்கார்ந்துக்கிட்டு, வலிக்குதான்னு
கேட்க முடியுது. ??குற்ற உணர்ச்சியா இல்லை ?” ஆத்திரத்தில் படபடவென மூச்சு வாங்க பொறிந்து தள்ளினாள் மது.
” இன்னைக்கு மட்டும் இதை எத்தனை தடவை உன் கிட்ட சொன்னேன்னு தெரியலை. ஆனாலும் சொல்றேன். ஐயம் சாரி.எல்லாம் சரியாகிடும் மதி” வருத்தத்துடன் கூறினான் ஆதித்யா.
” வாவ் எல்லாம் சரியாகிடுமா ?? ஹா ” சிரித்தபடி தன் கைகளை தட்டினாள். இயலாமையுடன் அவளை பார்த்தான் .
” எதுக்கு என்னை மூணு தடவ காப்பாத்துனீங்க ஆதி.இப்படி என்னை கொடுமை படுத்தவா.??” கேட்கும்போதே அவளது விழிகளில் நீர் வழிந்தது . அவனால் பதில் சொல்ல முடியவில்லை. மௌனமாக தன் முன்னே அமர்ந்திருக்கும் ஆதித்யாவை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவள்,
” நான் போகணும் ” இன்னும் அழுத்தமாக அவன் முகத்தை பார்த்தபடி கூறினாள் .
” எங்க? “
” என் வீட்டுக்கு ?”
” இப்போதைக்கு நீ எங்கையும் போக முடியாது, வெளில உனக்கு பாதுகாப்பு இல்லை “
” ஓ அப்போ இங்க இருக்கு ” நக்கலாக கேட்டாள். அவனது முகம் கோபத்தில் சிவந்தது. ஆனால் அதை புறக்கணித்தவள் ,
” நீங்க என்ன சொல்றது, நான் போறேன் , அவ்வளவு தான் “
வெடுக்கென்று அவன் நெஞ்சில் கைவைத்து அவனை வேகமாக தள்ளியபடி எழுந்தாள். அப்பொழுது அவளது கரம் தவறுதலாய் அவன் நெஞ்சில் சற்று முன் அவள் ஏறப்படுத்திய காயத்தின் மீது பட்டுவிட,
“ஸ்ஸ்ஸ். ஆஆ ஆ ” வலியில் தன் தடித்த அழுத்தமான இதழை கடித்தவனின் முகம் ஜிவுஜிவு என்று சிவந்து விட, தனது நெஞ்சில் இருந்து ரத்தம் வந்த காயப்பட்ட பகுதியை அழுத்தி பிடித்து கொண்டான் .
அவன் கையில் தெரிந்த ரத்தத்தை கண்டு பதறிய மதி, வேகமாக அவனது கையை எடுத்துப் பார்க்க, அப்பொழுது தான் அவனது மார்பில் இருந்த காயத்தை பார்த்தாள், நான் செய்த காரியம் இப்பொழுது மெதுவாக அவளது நினைவிற்கு வர குற்றஉணர்வில் மிகவும் வருந்தியவளாக,
சட்டென்று அவன் அருகில் இன்னும் நெருங்கி வந்து அவன் நெஞ்சில் இருந்த காயத்தை தொட்டு பார்த்தாள். அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. இரும்பு மனிதன் போல, அவளையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனது உணர்வற்ற பார்வை அவளை வெகுவாய் வருத்தியது .
” ப்ளட் வருது ஆதி” தன் கையில் இருக்கும் அவனது ரத்தத்தை பார்த்தபடி பதறியவள், உடனே அவனது காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டாள். அவனது காயம் அவளை வெகுவாய் பாதித்தது. துரோகம் செய்தவன் தான் ஆனாலும் அவனுக்காக அவள் மனம் தவித்தது. கண்கள் கலங்கியது. அவனது காயம் அவளுக்கு வலியை கொடுத்தது.
” ஆதி இதெல்லாம் வேண்டாம்.. என்னால முடியல. நான் இங்க இருக்க முடியாது ..நான் போகணும் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க இப்போவே போறேன் ஆதி. உங்களால என்னை புடிச்சு வைக்க முடியாது ” என்று அழுதபடி எழுந்தவளை ,
அவளது முன்னங்கையை பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்தவன் அவளது காதோரம் குனிந்து ,
” முடியாது வெளியில உன் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் என்னால உன்னை விட முடியும், அதுவரை நீ இங்க தான் இருக்கனும் ” என்றவனின் மூச்சு காற்று அவளது காதுமடலை தீண்ட., இதயத்தில் ஒருவித படபடப்பு பரவியது. சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள்,
” ஆதி என்னை நீங்க கஷ்டப்படுத்துறீங்க, அது உங்களுக்கு புரியலையா ” கண்களில் கண்ணீருடன் கேட்டாள். தன் தலையை அழுந்த கோதி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன் , அவளது விழிகளை பார்க்க மறுக்க, வலுக்கட்டாயமாக அவனது தாடையை பற்றி தன் முகம் பார்க்க வைத்தவள், தன் இடது பக்க கன்னத்தைக் காட்டி,
” இது என்னன்னு தெரியுதா, உங்க நண்பன் என்னை அடிக்கும் போது உங்க கண்ணுல ஒரு சின்ன வருத்தம் கூட இல்ல, நீங்க என் பாதுகாப்பை பத்தி பேசுறீங்களா? ஹான் ” என்று கேட்டவளுக்கு கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, மிக மிக மென்மையாக அவளது கன்னத்தில் இருந்த காயத்தை தன் புறங்கையால் வருடியவன், இன்னும் மென்மையாக தன் இதழை அவளின் கன்னத்தில் ஒற்றி எடுத்து, “சாரி ” என்க,
“சாரி சொன்னா எல்லாம் சரியாகிடுமா? உங்களை எவ்வளவு நம்பினேன் ஏன் இப்படி பண்ணுனீங்க.” வாய்விட்டே கதறி அழுதவளின் வதனத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி கொண்டவன்,
“இனி இப்படி நடக்காது மதி! உன்னை அந்த மாதிரி நடத்திருக்க கூடாது. !எல்லாம் என் தப்பு தான்.! இனிமே உன்கிட்ட இங்க யாரும் இப்படி நடந்துக்க மாட்டாங்க. நடக்கவும் விடமாட்டேன். சோ அழாத மதி என்னால உன்னை இப்படி பார்க்க முடியல” அவளது விழிகளை பார்த்தபடியே கூறினான்.
“ஏன்” அவளும் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே வினவினாள்.
அஞ்சன விழிகளும் அரிமா அவனின் கனல்விழிகளும் ஒன்றை ஒன்று முத்தமிட்ட தருணம், ஆணவனின் இறுக்கமான இதழ்கள் பெண்ணவளின் மெல்லிய இதழ்களை அணைத்து கொண்டது.
ஆழமாக!
அழுத்தமாக!
ஆத்மார்த்தமாக!
மது விலக்கவில்லை மாறாக அவளது கண்களில் இருந்து கோடாக கண்ணீர் இறங்க, அவளது காரங்களோ உயர்ந்து அவனது சிகைக்குள் நுழைந்து கொள்ள, இங்கே முத்தம் கொடுக்கப்படவில்லை! பரிமாறபட்டது!
காமத்தில் சேராத அவர்களது ஆழ்ந்த இதழ் அணைப்பு இரு உள்ளங்களின் ஆத்மார்த்த காதலை வெளிப்படுத்த, நீண்ட நேர இதழ் அணைப்பின் முடிவில், முதலில் விலகிய ஆதித்யா, தனக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை மிகவும் சிரமப்பட்டு தனது கட்டுக்குள் கொண்டு வந்தவன், இன்னும் உணர்வுகளின் பிடியில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாது தலை தாழ்த்தி அமர்ந்திருந்த மதுவை பார்த்தான்.
பார்த்ததுமே பெண்ணவளின் நிலையை புரிந்து கொண்டவன், மதியை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது, மிகவும் இயல்பாக அவளை அணுகினான்.
அதன்படி முடிந்தளவு அவளது அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டவன், அவளுக்கு வலி மாத்திரை ஒன்றையும் கொடுத்தான்.
பின்பு மதுவின் ஈர கூந்தலை டிரையர் மூலம் காய வைத்தவன்,
” குட் நைட்” என்று அவளது முகத்தை கூட பார்க்காது கூறிய ஆதி மெத்தையில் இருந்து எழுந்து கொள்ள, அவனது கரத்தை மதுமதி இப்பொழுது பிடித்திருந்தாள்.
கண்களை மூடி திறந்த ஆதி, இப்பொழுது மதுவின் முகத்தை பார்க்க, துடிக்கும் இதழ்களுடன் மருண்ட விழிகள் அழ தயாராக அவனைப் தான் பார்த்தாள் பெண்ணவள்.
அவளது விழிகளில் தெரிந்த பயம், தவிப்பு, கவலை என அனைத்தையும் உள்வாங்கிய ஆதித்யா, மெதுவாக அவளது தோள்களைப் பற்றி மெத்தையில் படுக்க வைத்தவன், அவளது நிறைந்திருந்த இரு விழிகளிலும் மாறி மாறி முத்தமிட்டு விழவிருந்த கண்ணீரை தன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டான்.
பின்பு, “தூங்கு டா எதையும் யோசிக்காத.” என்று கூறி பெண்ணவளின் நெற்றியில் இதழ் பதித்து, நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி, மெதுவாக அவளது கேசத்தை தடவி கொடுக்க, மருந்தின் வீரியத்தில் தன் கண்களை மூடினாள் மதுமதி.
– காதல் சொல்வான்!!
அரிமா – 13
written by Competition writers
அன்று….
கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில்,
“மதர் மதர்” கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக குடில் அலங்காரம் செய்து கொண்டிருந்த மதர் மேரியை, கத்தி அழைத்தபடி தேவாலயத்திற்குள் நுழைந்தான் அவன்.
குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்த மேரி தன்னை நோக்கி ஓடி வரும் அச்சிறுவனை புன்னகையுடன் பார்த்தவர்,
“என்னாச்சு டா ஏன் இவ்வளவு அவசரமா ஓடி வர” என்று வினவினார்.
“மதர் அது” வேகமாக ஓடி வந்ததில், தன் இடையில் கை குற்றி மூச்சு வாங்கியவன் சிறிது வினாடிகள் கழித்து ஆசுவாசமடைந்த பின்,
“அது மதர் நம்ம ஜீவா இருக்கான்ல அதான் புதுசா வந்திருக்கிற சமையல் ஆன்டியோட பையன் அவன் சொன்னான், இந்த உலகத்துல அப்பா அம்மா இல்லாம யாரும் வர முடியாதாம்.” என்று அவன் சொல்லும்போதே மதர் மேரியின் முகம் வாடிவிட, கையில் இருந்த மலரை கீழே வைத்து விட்டு அவன் முன் எழுந்து நின்றவர் எதுவும் பேசாது அவனையே பார்த்தார்.
மதரின் முகத்தில் வந்து போன உணர்வுகள் எதையும் படிக்க தெரியாத அச்சிறுவனோ ,
” நான் ஒன்னும் கடவுளோட குழந்தைலாம் இல்லையாம். எனக்கும் அப்பா அம்மா எல்லாம் உண்டாம்.” என்று விடாமல் பேசிக் கொண்டே இருக்க, அடுத்து அவன் கேட்ட போகும் கேள்வியை எண்ணி மதரின் உள்ளம் தவிக்க துவங்க, ‘அந்தக் கேள்வியை மட்டும் கேட்டுடாதடா’ என்று அவர் தன் மனதிற்குள் மானசிகமாக வேண்டிக் கொண்ட நொடி,
“அப்போ என் அம்மா அப்பா யாரு மதர்?” என்று அவன் கேட்டுவிட, மதர் மேரியோ பதில் சொல்ல முடியாது திணறிப் போனார்.
@@@@@@@@
இன்று..
மும்பையில்,
துரியனின் கொலை மிரட்டலால் அச்சத்தில் உறைந்திருந்த மதுமதி பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு முடிவு எடுத்தாள்.
‘இனி நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு தான் ஆபத்து .
இங்கிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும்.
அவன் செய்த கொலைக்கு நாமே சாட்சி. அப்படி இருக்கும் பொழுது விட்டுவைப்பானா நம்மை?
ஆதித்யா என்ன தான் நம்மிடம் மென்மையாக நடந்து கொண்டாலும்.அவனுக்கு பொறுமை என்பது கொஞ்சமும் கிடையாது.
கோபம் வந்தால் உடனே துப்பாக்கியை எடுத்து விடுவான். அதை நாமே எத்தனை முறை பார்த்திருக்கிறோம் , எத்தனை பேரை நாம் பார்க்க அன்று அந்த பாழடைந்த வீட்டில் வைத்து கொலை செய்தான். அப்புறம் அந்த சிவகுரு. இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறமும் அவனை போய் நம்பிவிட்டேனே .!
இது எவ்வளவு பெரிய பிழை ! ஒரு உயிரை கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன ? கொலையை குற்ற உணர்ச்சியே இல்லாமல் செய்யும் இவனை போய் நம்பிவிட்டேனே !
அத்தகைய கொடூரத்தை புரிந்தவனை போய்…’ எண்ணும் பொழுதே அவளுக்கு கண்ணீர் வர,
“எவ்வளவு நம்பினேன் ஆதி” என்று வாய்விட்டே கூறியவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, ஆதித்யாவை பிடித்திருந்த தனது கரத்தை அவனிடம் இருந்து அவனே பிரித்துவிட்ட காட்சியே அவள் கண் முன் வந்து போக பெண்ணவள் கலங்கி தவித்தாள்.
அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பணிப்பெண், மது சாப்பிடுவதற்கு உணவை கொடுக்க,
” வேண்டாம் ” என மறுத்து விட்டாள் மது.
ஆனால் அந்த பெண்மணியோ எதுவும் பேசாமல் சாப்பாடு தட்டை அவள் அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம் மதிக்கு ஒரு யோசனை தோன்ற,
” ஆ ஆ ஆ ” என்று தன் வயிறை பிடித்துக்கொண்டு அலறினாள் மதுமதி.
அவள் போட்ட சத்தத்தில் பயந்து போன பெண்மணி ‘ ஐயோ என்னாச்சு மா ‘ என்று பதற்றத்துடன் அவள் அருகில் வர.
” என்னை மன்னிச்சிருங்க மா ” என்ற மதி. அந்த பெண்மணியை கீழே தள்ளியவள் ஓடி வந்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வெளியே ஓடினாள் .
ஆதித்யா சக்கரவர்த்தி வாழும் அரண்மனை காடு, கடல் என பல அடுக்கு பாதுகாப்பை கொண்டது.
முதல் அடுக்கு மின்சாரம் பொருத்திய பெரிய கோட்டை சுவர்.அங்கே சுமார் இருபதில் இருந்து முப்பது வகையான வேட்டை நாய்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலாளிகள் எந்நேரமும் விழிப்புடன் இருப்பர்.
அவர்களை தாண்டி அடர்ந்த கொடிய மிருகங்களை கொண்ட காடு. பிறகு கடல், இறுதியாக அவனுக்கு உரிமையான சாலை ஆக அது ஒரு தீவு.
அந்த தீவுக்குள் ஆதித்யாவின் அரண்மனை மட்டும் இல்லை. அவனது அரண்மனைக்கு பக்கத்தில் தான் துரியனின் அரண்மனையும் உள்ளது அவனுடன் தான் விக்டர் தேசாய் வசிக்கிறார். வீரா மற்றும் நாகா ஆதித்யாவுடன் தங்கிருக்கின்றனர்.
ஆக இது அரண்மனை அல்ல ஜித்தேரியின் மரண வாயில். ஆனால் இது எதை பற்றியும் அறியாமல். அவனது பலத்தை பற்றி தெரியாமல். குருட்டு பூனை விட்டதில் ஏறின கதையாக பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் தப்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்ட மதுமதி,கோரப் பற்களை கொண்ட நாய்களையும், துப்பாக்கி ஏந்திய வீரர்களையும் பார்த்தே மிரண்டு விட, பார்வையற்ற பூனை எப்படி வீட்டின் விட்டதின் மேல் ஏறி எங்கே குதிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் விட்டத்திலேயே நின்று கொண்டிருக்குமோ, அது போல அந்த அறையில் இருந்து ஒருவித குருட்டு தைரியத்தில் தப்பித்த மது அதன் பிறகு எங்கே எப்படி செல்வது என்று புறியாமல் அப்படியே நின்றுவிட்டாள் .
பிரம்மாண்டமான அந்த அரண்மனையில் உள்ள பெரிய பெரிய சிற்பங்களும், அறைகளும் அவளை மேலும் திக்குமுக்காட வைக்க, சில நொடிகள் எந்த திசையில் செல்லவது என்று குழம்பினாள்.
பின்பு, ‘ இப்படியே நின்றால் மாட்டிக்கொள்ள கூடும் ‘ என்பதை உணர்ந்து, ஒவ்வொரு மறைவான இடத்திலும் பதுங்கி பதுங்கி யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி எச்சரிக்கையுடன் தோட்டத்திற்குள் சென்று ஒரு அடர்ந்த புதருக்குள் மறைந்தாள் .
ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு கொண்டு விழிப்புடன் இருக்க , எப்படியோ ஒளிந்து மறைந்து அந்த வீட்டை கடந்த மது மதி , தன் உயிரை கையில் பிடித்து கொண்டு காட்டு பகுதிக்குள் ஓட ஆரம்பித்தாள் .
சிறிய ஒளிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட அந்த அடர்ந்த வனத்துக்குள். இருளின் கை ஓங்கி இருந்தது. இருட்டில் பாதையும் புலப்படவில்லை. உடலிலும் சக்தி இல்லை. போதாகுறைக்கு ஆங்காங்கே விட்டு விட்டு கண்ணடித்த மின்கல விளக்குகள் அவளுக்கு ஆதித்யாவின் காவலர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை எச்சரிக்கை விடுக்க, நடுக்கத்துடன் தட்டு தடுமாறி அந்த இருட்டுக்குள் ஓடினாள். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் கதையாக சருகுகள் மிதிபடும் சத்தம் கூட அவளை மிகவும் அச்சுறுத்த, போதாகுறைக்கு குண்டடிப்பட்ட காயதில் வேறு ரத்தம் கசிந்து, காயம் உயிர் போக வலித்தது.
இதில் மிருகங்களின் சத்தம் வேறு அவளை பயம்காட்ட,
” பாதையே தெரியலையே எப்படி போறது ” திசை தெரியாமல் திணறினாள் .
” ஒருவேளை அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா ??” என்று அவள் எண்ணிய மறுநொடி. நடுக்கத்தில் மூச்சு வேகமாக வாங்க, இதயம் காற்று பட்ட ஜன்னல் போல ‘ படார் படார் ‘ என்று அடித்துக்கொண்டது. வாயில் வந்த கடவுள் பெயரை எல்லாம் சொல்லி வேண்டினாள்.
” ஒரு வெளிச்சம் கூட இல்லையே. எந்த டைரெக்ஷ்ன்ல போனா ரோட் வரும் எவ்வளவு நேரமா போறோம். கடவுளே கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சா நல்லா இருக்கும் ” என்றபடி நடந்தவளுக்கு தொலைவில் ஹெட் லைட் வெளிச்சம் தெரிந்தது. உடனே வெளிச்சம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினாள்.
ஆதித்யாவின் அலுவலக அறைக்குள் வேகமாக ஓடி வந்த வீரா,
” மதுமதி ஹஸ் எஸ்கேப்ட்” மதுமதி தப்பித்துவிட்டாள், என்று மூச்சிரைக்க கூறினான்.
” ம்ம் அதான் பார்த்துட்டு இருக்கோம் ” என்ற துரியன், ஆதித்யாவின்
அறையில் இருக்கும் பெரிய தொலைக்காட்சி பெட்டியை காட்டினான் .
மது பதுங்கி பதுங்கி யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து செல்லும் காட்சிகள் லைவாக ஓடிக்கொண்டிருந்தது.
” நமக்கு தெரியாம போறாங்களாம். !! அதான பார்த்தேன் தயாளன் பொண்ணு எப்படி பயந்த சுபாவம் உள்ளவளாக இருக்க முடியும்ன்னு ?? அப்பனை மாதிரியே மறைஞ்சு ஓடுறா ” எள்ளலுடன் கூறிய துரியனின் பார்வை ஆதித்யாவின் முகத்தில் தெரியும் உணர்வுகளை, படிக்கும் ஆர்வத்துடன் ஆராய்ந்தது .
ஆனால் ஆதித்யா ஒரு வார்த்தை கூட பேச வில்லை. கைகள் ரெண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு உணர்வுகள் அற்ற விக்கிரகம் போல நின்றான். இல்லை அப்படி காட்டிக்கொண்டான் ! அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவனை ஏதோ ஒன்று கட்டிப்போட்டது.
அது துரியனின் நட்பா !இல்லை அவன் வகிக்கும் பொறுப்பா! இல்லை வேறு எதுவா! தெரியவில்லை ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன் போல இறுக்கத்துடன் நின்றான் .
” இப்போ என்ன சொல்ல போற ஆதி?? ” ஆதித்யாவின் விழிகளை
பார்த்தபடி தன் கன்னங்கள் அதிர கேட்டான் துரியன் .
” ஷி வில் பீ பக். அவள் திரும்பி வருவாள் ” புயலை உள்ளடக்கிய ஆதித்யாவின் குரலில் அவனது மொத்த இயலாமையும் ஆத்திரமாக வெளிவந்தது.
வெளிச்சம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடி வந்தவள், கடலின் கரையை பார்த்து எச்சில் விழுங்கினாள்.
கடலிலா குதிக்க முடியும், நீச்சலும் தெரியாதே, அவ்வளவு தானா! கண்ணீர் வழிய இயலாமையுடன் சுற்றி முற்றி பார்த்தவள் கொஞ்ச தூரத்தில், யாச்ட் எனப்படும் ஒரு வகையான படகை பார்த்தவள், அதை நோக்கி ஓடினாள்.
படகை நெருங்கும் பொழுது தான் இதுபோல நிறைய வித்யாசமான படகுகள் இருப்பதை கவனித்த மது, அதன் அருகே வாட்ட சாட்டமாக கருப்பு உடையில், அலைபேசியில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தாள். அவனது தோற்றம் அச்சமாக இருந்தாலும் வேறு வழியின்றி அவன் அருகே சென்றவள்,
“அண்ணா ப்ளீஸ் என்னை கரை பக்கம் கொண்டு போக முடியுமா” மூச்சிரைக்க வினவினாள்.
அவனோ மதுவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், அலைபேசியை அணைத்துவிட்டு, சரி என்பதாய் தலையசைத்து, அவள் உள்ளே ஏற உதவி செய்தான்.
மதுவுக்கு அவனது அழுத்தமான பார்வை பயத்தை கொடுத்தாலும், கரையை அடைய வேறு வழியும் இல்லாததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சில மணி தூர பயணத்தின் முடிவில் கரையை அடைந்த மது, அவனுக்கு நன்றி கூறிவிட்டு, சாலையை நோக்கி மகிழ்ச்சியுடன் ஓடினாள்.
தப்பித்து செல்ல வாகனங்கள் ஏதும் வருகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கு தெரிந்த வரை எந்த வாகனமும் வராததை எண்ணி கவலையுற்ற மது,
” அவங்க நம்மளை தேடி வர்றதுக்குள்ள நாம இங்க இருந்து கிளம்பணுமே , இப்போ என்ன பண்றது ?? ” மூச்சு ஒரு பக்கம் வாங்க, மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அவர்கள் வந்தால் கூட எழுந்து ஓட உடம்பில் தெம்பில்லாமல். இறைவன் மீது பாரத்தை போட்ட மது அப்படியே மடிந்து சாலையில் அமர்ந்தாள்.
வெகு நேரமாகியும் வாகனங்கள் எதுவும் வராமல் போக கவலையுடன் இருந்தவளுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது போல அவளுக்கு எதிரே ஒரு கார் வருவது தெரிய. சட்டென்று எழுந்தவள் ‘ கடவுளே ரொம்ப நன்றி. எப்படியோ தப்பிச்சிட்டேன் ‘ என மகிழ்ச்சியுடன் வேகமாக காரின் முன்னால் நின்று தன் கைகை குறுக்கே நீட்டி வேகமாக ஆட்டினாள்.
காரும் சில தூரம் தள்ளி சென்று பிரேக் போட்டு நிற்க, வேகமாக காரின் ஓட்டுநர் சீட்டுக்கு அருகில் வந்து,
” அண்ணா என்னை இங்க இருந்து ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” கெஞ்சி கேட்டாள் .
– காதல் சொல்வானா?
அரிமா – 12
written by Competition writers
ஆதித்யா மதியின் அலறலை கேட்டு தன் அறைக்கு வந்த நேரம், மதி சுவற்றுடன் சாய்ந்து நிற்க, ஆறடி உயரத்தில் ஒருவன் அவளது கழுத்தை தனது ஒற்றை இரும்பு கரங்களுக்குள் இறுக்கமாக அடக்கி நெரித்தபடி ஆவேசத்துடன் நின்றிருந்தான் . அவளோ அவனிடம் இருந்து விடுபட முடியாமல் வலியில் துடித்த படி
மூச்சு காற்றுக்காக போராடிக்கொண்டிருந்தாள்.
புயலுடன் ஆம்பல் மலர் சிக்குண்டால் என்ன ஆகும். அவள் சாக வில்லை அவ்வளவு தான், ஆனால் கடுமையான வலியில் துடித்தாள், விழிகளில் இருந்து நீர் சிந்தின .
” துருவ் ” ஆதித்யாவின் கர்ஜனையில் வாசலை பார்த்த துரியன் மதியின் கழுத்தில் இருந்த தன் கரத்தின் இறுக்கத்தை மேலும் அதிகரிக்க, ஆதித்யாவின் விழிகள் ரத்தமென சிவந்தது .
” துரியன் டிராப் யுவர் ஹன்ட்ஸ் ரைட் நவ். இந்த நொடியே கையை கீழ போடு ” ஆவேசத்தில் ஆதித்யாவின் முகம் சட்டென்று சூடேறி சிவந்தது.
ஆதித்யாவை பார்த்து இறுக்கமாக முறைத்த துரியன். மதுவின் கழுத்தில் இருந்த தன் கரத்தை மெதுவாக தளர்த்தினான். துரியனின் பிடி தளர்ந்ததும், இதற்காக தான் காத்திருந்தவள் போல அவனிடம் இருந்து தப்பித்து, முகமெல்லாம் வெளிறி போக தன் கழுத்தை பிடித்து கொண்ட மது ஓடி வந்து ஆதித்யாவின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
‘உஸ் புஸ்’ என்று மேலும் கீழும் மூச்சு வாங்க. அவளது இதயம் வேகமாக தடதடத்தது. தேகமோ வியர்வையில் குளித்துவிட, பதற்றம் கொஞ்சமும் குறையாமல் ஆதித்யாவை பின்னால் இருந்து அணைத்தவள் அவன் முதுகில் முகம் புதைத்தபடி நின்றாள் .
” ஏய் வெளிய வா டி ” என திடிரென்று வந்த துரியனின் கடுமையான குரலில் அதிர்ந்தவள். செய்வதறியாது திகைத்து நின்றாள் .
” ஏய் உன்னை தான், பயப்படுற மாதிரி நடிக்காத வெளிய வா ” அதே கர்ஜனையில் மீண்டும் அழைத்தான் துரியன். பயத்தில் ஆதித்யாவின் முதுகோடு இன்னும் ஒன்றினாள் மதுமதி.
அவளது கீழ்ப்படியாமை துரியனின் ஆவேசத்தை தூண்டியது. அவள் பயத்தில் அவனது கட்டளைக்கு இணங்காததை துரியன் திமிர் என்று நினைத்தான் அவன். சில நொடிகளுக்கு பிறகு மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள், ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் கண்களில் ஒருவித பழிவெறியுடன், பெயருக்கேற்றார் போல் கலியுக துரியோதனன் போலவே , துஷ்டனாக காட்சியளித்தான் அவன் துரியன் ஜித்தேரி. இந்த ஜித்தேரி சாம்ராஜ்யத்தின் தலைவன் அவன்.
” உன்னை” என துரியன் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை தன் கைக்கு இடம் மாற்றவும் , துரியனை முறைத்த ஆதித்யா , மதுவை பார்த்து வெளியே வருமாறு செய்கை செய்ய, பயத்துடன் ஆதித்யாவை பார்த்தவள் தன் தலையை இடவலமாக ஆட்டி வர மாட்டேன் என்பதை தன் கண்களாலே கூறினாள் .
ஆதித்யா மீண்டும் மதியை வருமாறு கூற, வேறு வழியின்றி துரியன் முன்பு வந்தவள் அவன் முன்பு தன்னை ஒரு துரும்பாய் உணர்ந்தாள் .
” வீ..ரா ” – துரியனின் திடமான குரல் அவளது வயிற்றில் புளியை கரைத்தது. துரியனின் அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல் உடனே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அந்த பெயருக்கு சொந்தகாரன் .
வந்தவனின் தோற்றமும். தோரணையும் அவனை கொடூரனாக சித்தரிக்க, பீதியில் மதியின் கரங்கள் நடுங்க தொடங்கியது .
” உனக்கு ஆதி ரூம்ல என்ன டி வேலை ?? ” என்று அதட்டிய துரியன் ,
” வீரா இவளை பேஸ்மெண்ட் ரூமில கொண்டு போடு ” என தன் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் வீராவை பார்த்து அதிகாரத்துடன் கூறினான்.
” அப்டினா என்ன?ஏன் ? நான் ஏன் அங்க போனும் ?? நான் என்னை பண்ணினேன் ??” கலவரமான மதி ஆதியின் கரங்களை பாதுகாப்பாக பிடித்தாள் .
” வா டி ” என வீரா மதியின் கரங்களை பிடிக்க நெருங்கும் பொழுது ஏதோ ஒரு உறுத்துதலில் நிமிர்ந்து பார்த்தான்.
ஆதித்யா தான் அவனை பார்த்துக்கொண்டிருந்தான் .ஜிவு ஜிவு வென்று சிவந்திருந்த ஆதித்யாவின் முகம் வீராவை அச்சுறுத்தியது.
மதியை பிடிப்பதற்காக நீண்டிருந்த வீராவின் கரங்கள் லேசாக நடுங்கியது. கண்களில் பறக்கும் தீப்பொறியை பற்றி எங்கோ படித்திருக்கிறான். ஆனால் நேரில் இப்போ தான் பார்த்தான் .
ஆதித்யாவின் பார்வையில் தான் அப்படி ஒரு உக்கிரம். ஏன் என்று புறியாமல் விழித்தான். ‘அப்படி என்ன தவறு செய்து விட்டேன். துரியன் பாய் சொன்னதை தானே செய்யிறேன்.. ஆதி ஏன் முறைக்கிறான் ‘ என மனதிற்குள் எண்ணிய வீராவுக்கு , ஆதித்யாவின் கோபத்தின் காரணம் புரியவே நொடிகள் எடுத்தது.
வீராவின் மூளை காரணத்தை புரியவைத்து அவனை எச்சரித்த மறுநொடி, வீராவின் கால்கள் இரெண்டும் பின்னோக்கி செல்ல,
நீண்டிருந்த அவனது கரங்கள் தானாய் தரையை நோக்கியது .
” இழுத்துட்டு போ ” துரியன் திடமான குரலில் உறுமினான், ‘சொன்னதை செய்’என்று சொல்லியது துரியனின் குரல் .
‘செஞ்சி தான் பாரேன். உன் உயிர் உன்னிடம் இருக்காது ‘ சொல்லாமல் மிரட்டியது ஆதித்யாவின் விழிகள்.
இரெண்டு நண்பர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு முழித்தான் வீரா .
” ஆதி ஏன் வீராவை மிரட்டுற ” துரியனின் பார்வை ஆதித்யாவை தொட்டு மதியிடம் மீண்டது .
” என் பின்னாடி வாங்க ” ஆதித்யாவை பயத்துடன் பார்த்தபடியே வீரா மதுவை அழைக்க,
” நோ முடியாது எங்கேயும் போக மாட்டேன். ஆதி நோ ப்ளீஸ் ” கொஞ்சும் விழிகள் ஆதித்யாவிடம் கெஞ்சியது .
சில நொடிகள் மதுவையே பார்த்து கொண்டிருந்த ஆதித்யா, அவளிடம் எதுவும் பேசாமல் வீராவை நோக்கினான் .
தன் தலைவனின் கட்டளையை அவனது பார்வையில் இருந்தே உணர்ந்தவன் மதியை தன்னுடன் வருமாறு அழைக்க, மதியோ ஆதித்யா தன்னை காப்பாற்றுவான் என்ற நம்பியுடன் அவனை பார்த்தாள் .
அவனோ தன் கரத்தை இறுக்கமாக பிடித்திருந்த மதியின் கரத்தை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு, அவளது முகத்தை கூட பார்க்காது பாறை போல இறுகி நின்றிருந்தான் . அவனது முகத்தில் தெரிந்த இயலாமை சில நொடிகள் மட்டும் தோன்றி பின்பு யாரும் பார்க்காது மந்திரம் போல மறைந்தது .
ஆதித்யாவை சந்தித்ததில் இருந்து இந்த நிமிடம் வரை மது ஆதித்யா கூறியதற்கெல்லாம் மந்திரம் போட்டது போல தலையசைத்தாள் என்றால் அதற்கு ஒரே காரணம் , அவளுக்கு கொடுத்த நம்பிக்கையை அவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் காப்பாற்றியது தான், மதுவின் மனதை அவள் அறியாமலே ஆதித்யா பக்கம் சாய வைத்தது .
ஆனால் இந்த நிமிடம் ஆதித்யாவின் செய்கையில் அவன் மீது உள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிய துவங்க, வேறு வழியில்லாமல் கண்ணீருடன் ஆதித்யாவை பார்த்தபடியே அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
@@@@@@
ஆதித்யாவின் அலுவலக அறையில் எந்திரம் போல உணர்வுகளற்ற முகத்துடன் அமர்ந்திருந்த துரியனுக்கு எதிரில் விக்டர் தேசாய் அமர்ந்திருக்க, ஆதித்யாவோ இறுக்கமான முகத்துடன் ஜன்னல் கம்பிகளை அழுத்தமாக பிடித்து கொண்டு நின்றிருந்தான் .
இவர்கள் இருவரும் தான் துரியனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.
நிழல் உலகில் ஆத்தியா மற்றும் துரியனின் நட்பை பற்றி தெரியாதவர்களே கிடையாது. தன் சொந்த நிழலை கூட நம்ப முடியாத இவர்களின் உலகில் , துரியன் மற்றும் ஆதித்யாவின் உறவு மட்டும் விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் இருவரின் நட்பும் விருட்ச்சமாய் வளர்ந்திருந்தது.
துரியன் என்னும் நிழல் தேடும் நிஜமாய் ஆதித்யாவும். ஆதித்யா என்னும் நிழல் தேடும் நிஜமாய் துரியனும் என இருவரும் அவ்வளவு இணக்கமாக இருந்தனர்.
ஆதித்யாவுக்காக துரியன், துரியனுக்காக ஆதித்யா என நகமும் சதையுமாக ஒற்றுமையாய் வாழ்ந்த அவர்களின் நட்பில், இப்பொழுது நெற்கதிருக்கு இடையே புதிதாய் வளரும் புல்லுருவி போல, மதுமதி என்னும் புதிய மலரின் வருகையால் ஆதித்யா மற்றும் துரியனுக்கு இடையே பூசல் உண்டாக, அவர்களின் உறுதியான உறவு இன்று பிளவுண்டு இரு கூறுகளாய் பிரிந்து இருவரும் எதிர் எதிர் திசையில் நிற்கின்றனர்.
ஜித்தேரியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர்களை போன்றவர்களுக்குள் பிளவு ஏற்பட்டால் அது ‘ ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் ‘ என்னும் நிலை தான். ஜித்தேரியின் எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். ஏன் ஜித்தேரி என்னும் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதை நன்றாக உணர்ந்திருந்த விக்டர் தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்க, துரியன் ஆதித்யாவின் முகத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒவ்வொரு விதமான உணர்ச்சி குவியல்கள். ஆக யாருடைய மனத்திலும் அமைதி இல்லாமல் இருக்க.அந்த ஹாலில் மட்டும் அப்படியொரு அமைதி. புயலுக்கு முன் வரும் அமைதி போன்று அந்த அறையில் நிலவிய அமைதி எந்த புயலுக்கான அறிகுறியோ ?அது அவர்களுக்கே வெளிச்சம் .
” ஆதி “- துரியனே நிலவிய அமைதியை முதலில் உடைத்தான்.
ஆனால் ஆதித்யாவிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை .
” என்ன காரியம் பண்ணிருக்க ஆதி. ??நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை , இவ யாருன்னு தெரிஞ்சும் உன்னால எப்படி இவளை காப்பாத்த முடிஞ்சது . அதுவும் உன் உயிரை பணயம் வச்சு! உனக்கு ஏதாவது ஆகிருந்தா..?? என்ன பண்ணிருக்க முடியும். ??அப்படி என்ன உனக்கு அவ மேல… நீ அவ உயிரை காப்பாத்திருக்க என்பதற்காக அவ அப்பன் ஒன்னும் உனக்கு பாராட்டு விழா நடத்த மாட்டான். சமையம் கிடைச்சா உன்னை போட்டுட்டு போயிட்டே இருப்பான்” துரியனின் ஆவேசமான குரல் அறையெங்கும் எதிரொலித்தது.
அனைவரும் ஆதித்யாவின் பதிலுக்காக காத்திருந்தார்கள். ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அறை அமைதியாக இருந்தது. நொடிகள் யுகமாய் கடந்து கொண்டிருக்க,
” ஷீ இஸ் இன்னோசென்ட் ” – காரிருளில் பாய்ந்த மின்னலை போல நிலவிருந்த அமைதியை கிழித்தெறிந்தது ஆதித்யாவின் குரல். விக்டரின் நம்பிக்கை நிலைகுலைந்து போனது. அவருக்கு ஆதித்யா மீது பயங்கர கோபம் வந்தது .
” அவ இன்னோசெண்டா.?? ஷீ கான்ட் பீ இன்னோசென்ட்.. ” அடக்கப்பட்ட கோபத்துடன் கத்தினான் துரியன் .
” ஏன் ?? ” என்று கேட்டான் ஆதித்யா .
” நாகத்தோட குட்டி , நாகமா தான் இருக்கும். என்னதான் நீ அதுக்கு பாலை கொடுத்தாலும். அதுக்கு விஷயத்தை மட்டும் தான் கக்க தெரியும் ” – கோணல் புன்னகையுடன் கூறினார் விக்டர். அந்த புன்னகையில் தெரிந்த எள்ளலை கண்டுகொண்ட ஆதித்யா கோபத்துடன் அவரை பார்த்தான் .
” நம்மளோட குறிக்கோள் அவ இல்லை “
” அதுக்காக அவளை விட முடியாது ஆதி ” என்றான் துரியன் .
” விட முடியாதுன்னா என்ன பண்ண போற. அவளை கொன்னு உன் வீரத்தை காட்ட போறியா ” நக்கலாக கேட்டான் ஆதித்யா .
” ஆதி நீ இப்படி அவளுக்கு சப்போர்ட் பண்ணி எங்க கூட ஆர்க்யூ பண்ண பண்ண. எனக்கு வெறி ஏறுது. அவளை கொடூரமா கொலை பண்ணனும்ன்னு தோணுது ” கட்டுப்பாடு இழந்து கத்தினான் துரியன் .
” அவளை கொலை பண்றதுனால உனக்கு என்ன கிடைக்கும் ” கோபத்தை மறைத்தபடி கேட்டான் ஆதித்யா .
” நிம்மதி! நிம்மதி கிடைக்கும் ” தீர்க்கமாக கூறினான் துரியன் .
” ஆதித்யா அவ வலையில விழுந்திடாத ” என்ற விக்டரின் பேச்சில் எரிச்சலடைந்த ஆதித்யா,
” நீங்க நினைக்கிறது போல இல்ல அங்கிள், அவள நான் பாதுகாக்குறதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு, கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க ” கோபத்தை உள்ளடக்கிய குரலில் தன்மையாக கூறினான்.
அதைக் கொஞ்சமும் காதில் வாங்காத விக்டர், “ஆதித்யா நீ யாரு ?? ஜித்தேரிக்கு ஏன் வந்த ?? உனக்கு இங்க இருக்கிற பொறுப்பு என்ன என்பதை மறந்துடாத ?? ” என்க அவரது எச்சரிக்கும் குரல் ஆதித்யாவை வெறியனாக்கியது .
“எனக்கு தெரியும். என் வேலை என்னன்னு நீங்க எனக்கு சொல்ல வேண்டாம்.” முதலில் மிதமான கோபத்தில் ஆரம்பித்தவன், பின்பு ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவரிடம் கத்தியே விட்டான்.
” உன் நண்பன் அவ பிடியில சிக்கிட்டான் துரியன். இனிமேல் கஷ்டம் ” ஆதித்யாவை தீ பார்வை பார்த்த அந்த கிழட்டு சிங்கம் (விக்டர் ) அங்கிருந்து வேகமாக கிளம்பினார் .
” அங்கிள் கிட்ட ஏன் இப்படி நடந்து கிட்ட? அவர் அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு. அவர் நமக்கு குரு அவர்கிட்ட நீ இப்படி நடந்திருக்க கூடாது. உன்னை இதுவரை இப்படி நான் பார்த்ததே இல்லை ஆதி. அவ ஒரு சூனியக்காரி. வந்த அன்னைக்கே உன்னை எங்க எல்லாருக்கும் எதிரா திருப்பிட்டா. “
” அவரு தான் என்னை நம்பாம நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்காம பேசிட்டு போறாருன்னா. நீயும் என்னை நம்பாம பேசுறது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஜித்தேரிய அடையனும் என்பது என் லட்சியம் கிடையாது. என் நண்பன் நீ கேட்ட என்கிற ஒரே காரணத்துக்காக தான் நான் இங்க வந்தேன். உன் சந்தோசம் மட்டும் தான் எனக்கு முக்கியம். எப்போ உனக்கு என் மேல உள்ள நம்பிக்கை போச்சோ இனிமே நான் பேசுறதுல அர்த்தமே கிடையாது. போ அவளை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.இதோ என் கன்(துப்பாக்கி ) ” என தன் துப்பாக்கியை தூக்கி மேஜை மீது வைத்த ஆதித்யா,
” போ துருவ். என் குறுக்கீடு இருக்காது. உன் ஆசை தீர அவளை கொலை பண்ணு. கில் ஹெர். ஆனா ஒரு விஷயம் துரியன் எவன் ஒருவன்
தன்னுடைய கோபத்துக்கு கடிவாளம் போடலையோ அவனை அவனுடைய எதிரி இல்லை , அவனுடைய ஆத்திரமே ஒரு நாள் மண்ணுல சாய்ச்சிடும் . இதை என்னைக்கும் மறந்துடாத ” என்றவன் தன் இருக்கையில் சென்று அமர,
துரியனின் விழிகள் மேஜை மேல் இருந்த துப்பாக்கியை சில நொடிகள் பார்த்து விட்டு ஆதித்யாவிடம் மீண்டது.
மதுவை அறைக்குள் விட்டு வெளிப்புறமாக கதவிற்கு தாளிட்ட வீரா அங்கிருந்து சென்று விட மதுமதிக்கு தான் ஏதோ பாதாளத்தில் சிக்கிக்கொண்டது போல பயத்தில் மூச்சு முட்டியது.
“எப்படி இங்க இருந்து தப்பிக்க போறேன் ” வாய்விட்டு கதறியவள். பயத்தில் முழங்காலில் முகம் புதைத்து கால் இரண்டையும் கட்டிக்கொண்டு குலுங்கி அழுதாள் .
அந்த இடத்தில் இருந்த ரத்தவாடை அவளுக்கு வயிற்றை பிரட்டி கொண்டு வர, மேலாடையால் மூக்கை மூடிகொண்டவளால் எவ்வளவு முயன்றும் ஆதித்யாவின் புறக்கணிப்பை நம்பவே முடியவில்லை.
” எவ்வளவு நம்பிக்கையா பேசினான் ” மனம் வலியில் துடித்தது. ஒரு மனம் அவனை நம்ப சொல்ல, இன்னொரு மனமோ அவனை நம்பாதே என எச்சரித்தது.
போதா குறைக்கு துரியனின் கொலை மிரட்டலால் வேறு அச்சத்தில் உறைந்திருந்த மதுமதியால் சரியாக யோசிக்க முடியவில்லை. குழப்பத்தில் சிக்கி கொண்டு தவித்த மதி பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு முடிவு எடுத்தாள்.
– அரிமா வருவானா?
அரிமா – 11
written by Competition writers
இதற்கிடையில் மதுமதியோ தனது ஆழ்ந்த உறக்கத்திலும் ஆதித்யாவின் காயம் பட்டிருந்த புஜத்தை அழுத்தமாக பிடித்திருக்க, அவனுக்கோ வலிக்காமல் இல்லை ஆனாலும் பொறுத்துக்கொண்டு, மதியின் முகத்தில் விழுந்து கிடந்த முடி கற்றை நீக்கினான்.
அன்று மின்னல் ஒளியில் அவனை ஈர்த்த அதே அழகு மதி முகம் இப்பொழுதும் அவனை ஈர்த்தது. வலியை மறந்து அவளது முகத்தில் இருந்து தன் பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா.
எங்கோ இருட்டில் கிடந்தவனுக்கு மின்மினியாய் வெளிச்சத்தை கொடுத்தது அவளது முகம்.
மனதிற்குள் ஆயிரம் ஆசைகள் முளைத்தது, இந்த உலகம் இப்படியே நின்றுவிட்டால் எப்படி இருக்கும்? மனம் பேராசை கொண்டது .
“என்ன நடந்தாலும் இப்படி என் கூடவே இருப்பியா மதி” தான் யார்? தான் இருக்கும் நிலை என்ன? என்று அனைத்தும் மறந்து வாய்விட்டே கேட்ட ஆதி, அவளது உச்சந்தலை நோக்கி குனிந்த மறுநிமிடம் மெதுவாக கண்விழித்தாள் மதுமதி.
மிகவும் சிரமப்பட்டு மெதுவாக இமையை பிரித்தவள், படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள சிரமப்படுவதை புரிந்து கொண்ட ஆதி அவளுக்கு உதவி செய்ய, ஆதித்யாவின் உதவியுடன் அவனது தோள்களை பற்றியபடி எழுந்து அமர்ந்தவள் ,
” உங்களுக்கு ஒன்னும் இல்லையே ” என்று கேட்டுக்கொண்டே அவனது தோள்களை தவறுதலாக அழுத்தி பிடித்து விட,
” ப்ச் ” வலியில் அவன் சிறு முனங்களுடன் முகத்தை சுளித்ததும் தன் கைகளை எடுத்தவள்,
” சாரி சாரி ஐயம் சாரி ரொம்ப வலிக்குதா ? ” மென்மையாக அவனது காயத்தை பட்டும் படாமல் வருடியபடி கேட்டாள்.
அவனது இதயத்தை தொட்ட அவளது ஸ்பரிசத்தில் அவனுக்கு அவன் கொண்ட வலி கூட சுகமாக மாறிவிட்டது போல,
” இல்லை இப்போ வலி இல்லை ” என்று மென்னைகையுடன் கூறியவன், மது அமருவதற்கு ஏதுவாக அவள் முதுகில் தலையணைகளை கொடுத்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தவன்,
” உனக்கு வலி மருந்து கொடுத்திருக்காங்க அதனால இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு வலி இருக்காது. அதுக்கப்புறம் கொஞ்சம் வலி அதிகமா இருக்கும். ரொம்ப வலிச்சா சொல்லு மெடிசின் தரேன், நீ ரெஸ்ட் எடு ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பவும், உடனே படுக்கையில் இருந்து எழுந்து நின்ற மது,
” ஆதித்யா நான் இங்க இருந்து ” என்று கூறி முடிப்பதற்குள்,
” ஆதி ” என்று அழைத்தபடி நாகா உள்ளே வந்தான்.
அவனை கண்டதும் மதி சட்டென்று ஆதித்யாவின் முதுகுக்கு பின்னால் அவனது கரத்தை பிடித்தபடி தயக்கத்துடன் தன்னை மறைத்துக்கொண்டு நின்று கொள்ள , சில நொடிகளில் அவளது தயக்கத்திற்கான காரணத்தை உணர்ந்த ஆதித்யா,
” நாகா நீ போ நான் வரேன் ” என்று நாகாவை வெளியே அனுப்ப, ஆதித்யாவுக்கு பின்னால் மறைந்திருந்த மதியை ஒரு பார்வை பார்த்த நாகா வேகமாக வெளியேறினான்.
நாகா சென்ற பிறகு சிறு தயக்கத்துடன் ஆதித்யாவை விட்டு தள்ளி வந்த மதி மலங்க மலங்க விழிக்கவும் , “ரெஸ்ட் எடு மதி”என்ற ஆதித்யா அங்கிருந்து வெளியே சென்றான் .
ஆதித்யாவின் வருகைக்காக வெகு நேரமாக அவனது ஆஃபிஸ் ரூமில் காத்திருந்த நாகா அவனை கண்டதும்,
” என்ன நடக்குது ஆதி ” சற்று கோபமாகவே வினவினான்.
” என்னது என்ன நடக்குது எனக்கு ஒன்னும் புரியல நாகா, முதல்ல வா வந்து உக்காரு ” என்று தான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிரே இருக்கும் இருக்கையை காட்டி அமரச் சொன்ன ஆதி,உள்ளே தாரா வருவதை கவனித்து நாகாவை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தவன் அனுமதி கேட்டு நின்றவளை,
“வாங்க தாரா ” என்று உள்ளே அழைத்தான்.
” ஆதித்யா அவங்களுக்கு வேண்டியதை கொடுத்துட்டேன். வேணும்ன்னா நான் அவங்களை என் கூட தங்க வச்சுகிட்டுமா. “
” வேண்டாம் நான் பார்த்துகிறேன். வேற ஏதவது சொல்லனுமா ” சொல்ல ஏதாவது இருந்தா சொல்லு இல்லைனா கிளம்பு என்னும் தோரணையில் ஆதித்யா சொன்னதன் அர்த்தத்தை உணர்ந்தவளின் தன்மானம் அடிபட,
” இல்லை” என்று சிறு கோபத்துடன் பற்களை கடித்தாள் .
” தென் ஓகே பார்க்கலாம் ” வெளியே போ என ஆதித்யா நாகரிகத்துடன் கூற. தாரா போலியான புன்னகையுடன் வெளியேறினாள் .
@@@@@
தான் தங்கி இருந்த அறையில்,
” என்னதான் ஆதித்யா நல்லவன் மாதிரி தெரிஞ்சாலும் இங்கையே என்னால இருக்க முடியாது. ஐ ஹேவ் டூ லீவ். ஆதித்யா வந்ததும் இதை பத்தி பேசணும். சந்தியா எப்படி இருக்கான்னு தெரியலை ” என தன் உடலை போர்வைக்குள் குறுக்கிக்கொண்டு சிந்தனையுடன் மதி படுத்திருக்க, அவளது சிந்தனையை கலைத்தபடி உள்ளே நுழைந்த தாரா , மதி அணிந்துகொள்ள ஒரு செட் ஆடை மற்றும் அவளுக்கு தேவையான பொருட்களை அருகே வைக்க,
” இதெல்லாம் நான் கேட்கலையே ” என மது கூறினாள்.
” ஆதித்யா தான் குடுக்க சொன்னாரு “
” ஆதியா ” மதுவின் இதழ் அழகாய் விரிய. மது ஆதித்யாவை ஆதி என உரிமையாக அழைத்த விதம் தாராவுக்கு எரிச்சலை ஏற்படுத்த, பற்களை கடித்தபடி தாரா வெளியேறினாள் .
ஆனால் இதை உணராத மதுவோ, தாரா வைத்துவிட்டு சென்ற ஆடையை தன் கையில் எடுக்க, தன் தேவையை கூறாமலே புரிந்து கொண்ட ஆதித்யாவை பற்றியே எண்ணமே பெண்ணவளின் நெஞ்சம் முழுவதும் வியாபித்திருந்தது.
@@@@
” டிபார்ட்மெண்ட்ல அவ்ளோ பெரிய பொசிஷன்ல இருந்துட்டு என்ன வேல பாத்துட்டு வந்து இருக்க அர்ஜுன், கமிஷனர் சொல்லும்போது எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சு தெரியுமா, ஏதோ அவர் எனக்கு வேண்டப்பட்டவர் என்கிறதுனால சரியா போச்சு. வெளியே தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம்” வாசலில் நிற்க வைத்து அர்ஜுனை சரமாரியாக திட்டி தீர்த்த ராம்குமார், பின்பு அவன் அருகில் நின்றிருந்த மதனை பார்த்து,
” இந்த நேரத்துல ஏன்டா இவனை அங்க கூட்டிட்டு போன” என்று சற்று காட்டமாக வினவினார்.
” அச்சோ அங்கிள் எனக்கே அவன் போனது தெரியாது, கமிஷனர் சார் சொல்லி தான் எனக்கே தெரியும், உடனே நான் போய் கூட்டிட்டு வந்துட்டேன்”
” யார் அவன்? அவன் வீட்ல ஏன் இவன் போய் பிரச்சனை பண்ணி இருக்கான் “
என ராம்குமார் கேட்கவும் அர்ஜுனின் உதடுகள் ஆதித்யாவின் பெயரை உச்சரித்தது.
” ஆதித்யான்னா யாரு” அர்ஜுனை கேட்டார் ராம்குமார்.
” ஆதித்யா சக்கரவர்த்தி. துரியன் ஜித்தேரியோட ரைட் ஹண்ட். ஜித்தேரி சாம்ராஜ்யத்தோட ரொம்ப முக்கியமான ஒரு ஆள், இப்போ மது அவன் கூட தான் இருக்கா. பழைய பகையை மனசுல வச்சிக்கிட்டு அந்த ஆதித்யா என்னை பழி வாங்குறதுக்காக மதுவை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான். அவனை நான் சும்மா விட மாட்டேன். ” என அர்ஜுன் ஆக்ரோஷமாக சொல்ல, பெரியவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் வெவ்வேறு உணர்வுகள் வந்து போயின.
” ஜித்தேரியன்ஸ் அவங்க ரொம்ப மோசமானவங்க பா, தே ஆர் மாஃபியாஸ். மது அவனையா காதலிக்கிறா? அவ அங்க இருக்க கூடாது ” என அருள் நிதி அதிர்ச்சி கலந்த கவலையுடன் அர்ஜுனை பார்த்து சொல்ல,
” இருக்க கூடாதுன்னா என்ன பண்ண போறீங்க? போய் கூட்டிட்டு வர போறீங்களா ” எரிச்சலுடன் கேட்டார் மிருதுளா.
” கூட்டிட்டு தான் வரணும், பின்ன நம்ம வீட்டு பொண்ண அந்த மாதிரி ஆளுங்க கிட்ட விட சொல்றியா “
” இங்க இருந்து யாரோ கொண்டு போய் விட்ட மாதிரி பேசுறீங்க, அவளா தானே போயிருக்கா. எல்லாம் தெரிஞ்சுதான் போயிருப்பா, அதனால ஓடிப்போனவளுக்காக ரொம்ப வருத்தப்படாம நம்ம வீட்ட பாருங்க” என்றார் மிருதுளா.
“அம்மா நீங்க பேசுறது சரியே இல்லை, அவ சின்ன பொண்ணுமா அவளுக்கு என்ன தெரியும்? நாம எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சிக்குவா” ஒரு அண்ணனாக இளமாறன் கவலையுடன் சொல்ல,
“மாறா மது மேல எங்களுக்கும் அக்கறை இருக்கு, என்ன பண்ணனும்னு பெரியவங்க எங்களுக்கு தெரியும், நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கைய பாருங்க. இந்த பிரச்சனைய நாங்க பார்த்துக்கிறோம்.” என்ற ராம்குமார் அர்ஜுனை பார்த்து,
” இன்னைக்கு நடந்த போல இனிமே நடந்துகிட்டனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். ஆதித்யாவ பழி வாங்க போறேன். அவனை உள்ள தள்ள போறேன்னு தேவையில்லாத வேலையெல்லாம் விட்டுட்டு நீ
உன் வேலைய மட்டும் பார்த்தா போதும்.” என்று உறுதியாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட,
மதுவைப் பற்றிய எந்த உண்மையும் தெரியாததால், மது தன்னிடம் சொன்னது போல தன் தோழி சந்தியாவுடன் வேறு ஒரு ஊரில் பத்திரமாக இருக்கிறாள் என்று எண்ணி கொண்ட ப்ரீத்தா மது குறித்து நிம்மதி கொண்டாலும், அவருக்கு ஜித்தேரி என்னும் வார்த்தை கலக்கத்தை கொடுத்தது.
@@@@@@@@
கேங்ஸ்டர் கலாச்சாரம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் அதுவும் முக்கியமாக மும்பையில் அதிகமாக உள்ளது. இதில் சிலர் 1950 ஆண்டிலே சின்ன சின்ன சட்டவிரோதமானது பொருட்களை விற்ப்பதன் மூலம் தங்களது இருண்ட வாழ்க்கையை துவங்கினர்.
‘ஜித்தேரி கேங் ‘ – 1972 களில் மும்பையில் தலையெடுத்த இந்த மாபியா கேங் விஷ கிருமி போல மெல்ல மெல்ல நம் இந்திய நாடு முழுவதும் பரவி இப்பொழுது யாரும் அழிக்க முடியாதளவுக்கு மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இவர்களது முக்கியமான பிஸ்னஸ் ஹவாலா பணம் , தங்கம், மற்றும் வைரம் கடத்துதல் தான் .
நம் நாட்டில் நடக்கும் இது போன்ற முக்கால்வாசி கடத்தல் சம்பவங்கள் இவர்கள் தலைமையில் தான் நடக்கின்றது .இது அனைத்தும் அறிந்திருந்தும் நம் இந்திய அரசால் இதுவரை அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தொடுக்க முடியவில்லை.
அதற்கு முக்கிய காரணம். இவர்களுக்கு பக்க பலமாக இருப்பது நம் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களும். பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்களை வைத்திருக்கும் பணக்கார முதலைகளும் .
வெளிப்பார்வைக்கு ‘ஜித்தேரி கேங் ‘ ஒரே ஒரு குழுவாக தெரியும் ஆனால் இதற்கு கீழ் பல குழுக்கள் லோக்கல் தாதாக்களின் தலைமையின் கீழ் இயங்கி வருகின்றது .
1795 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆந்திராவில் இரு நாட்டு மன்னர்களுக்கு எதிரே நடந்த போரில் தோற்கடிப்பட்ட மன்னர் கோட்டா வம்சத்தின் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிரி நாட்டு மன்னரால் விரட்டப்படுகின்றனர். அவர்கள் பிழைப்புக்காக வடநாட்டில் நடந்த கட்டுமான பணிக்காக தங்களின் சொந்த ஊர் ஆந்திராவிலிருந்து இருந்து கூலித்தொழிலாளிகளாக இங்கே வருகின்றனர். அவர்கள் வாழ்ந்த பகுதியே ‘ ஜித்தேரி’ .
அதன் பிறகு., 1880 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சியில் அங்குள்ள ராணுவத்தினருக்கு சேவை செய்து பிழைத்து வந்தவர்கள் .
ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நாட்டை விட்டு சென்ற பிறகும், சுகந்திரம் அடையாத இந்த மக்கள் நம்நாட்டு பணக்காரர்களிடம் கொத்தடிமைகளாக வேலை பார்த்தனர் .
ஜித்தேரி இனத்து பெண்களை அவர்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள, அவர்கள் மிகவும் துன்பறுத்த பட்டனர். காலம் காலமாக அடிமைகளாகவே இருந்ததினால் ஜித்தேரி மக்கள் பல விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு ஒடுங்கியே வாழ்ந்த காலத்தில்,
‘ காலா ராவத் ‘ என்னும் பதினெட்டு வயது வாலிபன் மட்டும் அதை கண்டு எழுச்சியடைந்தான்.
முதலில் அங்குள்ள மக்களின் உரிமைக்காக வாய்வழியே போராடியவன் ஒருகட்டத்தில் ஆயுதம் ஏந்தினான்.
அவனுக்கு ஆதரவாய் பலரும் கொடிபிடிக்க. உரிமைக்காக அவன் எடுத்த கத்தி அவனை நிழல் உலகிற்குள் தள்ளியது, காலா ராவத் காலா ஜித்தேரி ஆனான். காலா ராவத்தின் தலைமையில் 1976 யில் உருவாக்கப்பட்டதே ‘ஜித்தேரி கேங் ‘ .
அவருக்கு மிகவும் நெருக்கமான விசுவாசமான ஊழியர்கள் தான் தீன தயாளன் மற்றும் வரதராஜன்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்க, காலா ஜித்தேரிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட. நீண்ட நாள் காதலர்கள் ஆன காலா ஜித்தேரியின் ஒரே மகள் மாலினிக்கும் தயாளனுக்கும் உடனே திருமணம் நிகழ்ந்தது. அவர்களது திருமணம் முடிந்த சிலநாட்களில் காலா மரணத்தை தழுவ.
ஜித்தேரியின் ஆணி வேர் ஆட்டம் காண, காலாவின் மரணம் ஜித்தேரியில் பெரிய புயலை கிளப்பியது. ‘ ஜித்தேரிக்கு ‘ அடுத்த தலைவர் யார்? என்பதில் தயாளனுக்கும் வரதராஜனுக்கும் பெரிய போரே நடந்தேறியது. தயாளன் தலைமையில் சிலர். பிறகு வரதன் தலைமையில் சிலர் என்று ஜித்தேரி கேங் இரண்டாக பிரிந்தது.
இருவருமே சம பலம் கொண்டிருக்க வேறு வழியின்றி ஜித்தேரியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து பேசி ஜித்தேரி கேங்கை வடக்கு மற்றும் தெற்காக பிரித்தனர்.
அதன் படி ‘ நார்த் ஜித்தேரி ‘ தயாளனுக்கும் மற்றும் ‘ சவுத் ஜித்தேரி ‘ வரதராஜனுக்கும் என பிரித்து 1986ல் இருவரும் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டனர். பிரிக்கும் பொழுதே இருவரும் தொழிலையும் பிரித்து கொள்ள,
தயாளன் தலைமையில் இருக்கும் ‘ நார்த் ஜித்தேரி ‘ கேங் போதை மருந்து மாஃபியா தொழிலை கையில் எடுக்க. வரதன் தலைமையில் உள்ள ‘ சவுத் ஜித்தேரி ‘ கேங் கனிம வளங்கள் மாஃபியாவை கையில் எடுத்தனர்.
இருவருமே பெரும்புள்ளிகள் .
அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக இரு கேங்குக்கும் இடையே நடந்த கேங் வாரில் தயாளன் , வரதராஜன் மற்றும் அவரது வலது கையான விக்டர் தேசாய் மீது தாக்குதல் நடத்த. இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அதில் வரதராஜன் இறந்துவிட. அதன் காரணமாக தயாளன் கேங்கில் அடுத்தடுத்து ஏகப்பட்ட இழப்புகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் தயாளன் உயிருக்கு பயந்து தப்பி தலைமறைவாக. அவரது தலைமையில் இயங்கிய ‘ நார்த் ஜித்தேரி கேங் ‘ தலைமை இல்லாது முற்றிலும் செயலற்று சிதறி போனது.
இப்பொழுது ஜித்தேரி மொத்தமும் வரதராஜனின் மகன் துரியனிடம் வந்துவிட, ஜித்தேரியின் வாரிசான துரியனை பாதுகாக்கும் பொறுப்பு விக்டர் தேசாய் எடுத்துக்கொண்டார்.
இப்பொழுது விக்டர் ஜித்தேரிக்கு ஒரு நல்ல விசுவாசியாக இருந்து துரியனை வழிநடத்தி வருகிறார்.
பழி பாவத்துக்கு அஞ்சாத இவர்கள் இதுவரை செய்யாத வேலையே கிடையாது. உளவு பார்ப்பத்தில் ஆரம்பித்து ஆள் கடத்துதல் கொலை செய்தல் என அவர்கள் கால் பதிக்காத வேலையே கிடையாது. தங்களின் லட்சியத்திற்காக எந்த இழிவான காரியத்தையும் செய்யக்கூடியவர்கள் , மிகவும் ஆபத்தானவர்கள். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு உயிரே போக வேண்டும் என்கிற வக்கிர குணம் படைத்தவர்கள் .
இப்படி பட்ட கட்டமைப்புடன் இயங்கும் இவர்களை அழிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.இவர்களை நெருங்குவதே கடினம் இதில். இவர்களை ஒழிப்பது என்பது நடக்காத காரியம் .
இவர்களில் எத்தனை குழுக்கள் உள்ளனர் ??யார் யார் தலைவர்கள் அவர்கள் என்ன என்ன பணிகள் மேற்கொள்கின்றனர் .??இவர்களின் திட்டங்கள் என்ன ?என்று யாருக்குமே தெரியாது .
நம் நாட்டின் வளங்கள், மற்றும் மக்களின் பொருளாதாரத்தை கரையான் போல் அரித்துக் கொண்டிருக்கும் இந்த மாஃபியா கும்பல் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் சிம்ம சொப்பதனமாக இருக்கின்றனர்.
ஆனால் இது இதை பற்றியும் முழுவதும் அறிந்திராத மதுமதி,
‘ ஜித்தேரி ‘ என்னும் நரக சாம்ராஜ்யத்தின் முக்கிய தளபதியான ஆதித்யா சக்கரவர்த்தி என்னும் நிழல் உலக மரண தேவனின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டாள்.
@@@@@@
ஒரு வழியாக படபடக்கும் தன் இதயத்தை சமன் செய்து கொண்டு கதவை திறந்த ஜூவாலாவுக்கு மனதில் பாரம் ஏறி போனது.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த பூக்கள் எல்லாம் தரையில் சிதறி கிடக்க, எழில் கோலமாக இருக்க வேண்டிய முதலிரவு அரை, தலைகீழாக மாறி கிடந்ததை பார்த்தவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட, தண்ணீரைத் துடைத்துக் கொண்டு அர்ஜுனை தான் தேடினாள். அவன் அங்கு இல்லை என்பது தெளிவாக தெரியவும், அறையில் மூளைக்கு ஒரு பக்கம் கிடந்த தலையணையை எடுத்து கட்டிலில் வைத்தவள், சமையலறைக்குள் சென்றாள்.
காதல் கொண்ட நெஞ்சமல்லவா இந்த நிமிடம் தன்னவனுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து கொண்டவள், கையில் டீ கப்புடன் மாடிப்படி ஏறினாள்.
ஜூவாலா நினைத்தது போலவே தன் இரு கரங்களாலும் தனது தலையை இறுக்கமாக பற்றி கொண்டு, மாடியில் கிடக்கும் ஓய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் அருகே சற்று முன் அவனால் புகைத்து தள்ளப்பட்ட வெள்ளை நச்சு குழல் அணைந்த நிலையில் கிடக்க, அதை பெருமூச்சுடன் அதை பார்த்தவள்,
” அர்ஜுன் அத்தான்” என்று அழைத்தாள்.
“என்ன கட்டாயப்படுத்தி உன் கழுத்துல தாலி கட்ட வச்ச போல, இப்போ உன் கூட வாழனும்னு சொல்லி அனுப்பினாங்களா என்ன? அதுக்கு தான் வந்தியா” ஜூவாலா அழைத்த மறுகணம், அவளைப் பார்த்து காட்டு கத்து கத்தினான் அர்ஜுன்.
வருத்தமாக தான் இருந்தது, ஆனாலும் அவனது நிலையை புரிந்து கொண்டவள், அமைதியாக அவனது விழிகளை பார்த்தபடி அவன் அருகே வந்து, தான் கொண்டு வந்த டீ கப்பை அவன் முன்னே இருந்த டேபிளில் வைத்தவள், நிதானமாக அவனது முகத்தை பார்த்து,
” விருப்பம் இல்லன்னா முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாமே, யாரால உங்கள புடிச்சு வச்சிருக்க முடியும். இங்க யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது அத்தான். சூழ்நிலை தான் மனுஷங்களை கட்டி போடுது.
அப்புறம் நீங்க கட்டின தாலி இன்னும் என் கழுத்துல தான் தொங்கிட்டு இருக்கு, உங்களுக்கு இந்த பந்தம் வேண்டாம்ன்னா நீங்களே தாலியை கழட்டிடுங்க, ஏன்னா கல்யாணம் வேணும்னா சூழ்நிலை காரணமா நடந்திருக்கலாம் ஆனா நாம வாழ போற வாழ்க்கை அப்படி இருக்கக் கூடாது, உங்களுக்கு பிடிக்கணும், நீங்களா சந்தோஷமா என் கூட வாழனும். அதுதான் எனக்கு வேணும்.
காத்திருக்க சொன்னா காத்திருக்கேன், இல்ல வேண்டாம்னா ஏற்கனவே நான் சொன்ன போல நீங்க கட்டின தாலியை நீங்களே கழட்டிடுங்க நான் போயிடுறேன்” என்றவள், திரும்பி பாராமல் அங்கிருந்து வேகமாக சென்று விட, வாயடைத்துப் போனான் அர்ஜுன்.
நிஜமாகவே அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளது கொழுசணிந்த பாதம் மறையும் வரை அவளையே அழுத்தமாக பார்த்தவன் அவள் சென்றதும் திரும்பி தன் முன்னால் ஆவி பறக்க இருந்த சூடான டீயை பார்த்தான், பின்பு சில நொடிகள் யோசனைக்கு பின் அதை தன் கையில் எடுத்து கொண்டான் அர்ஜுன்.
@@@@@@@@@@@
ஆதித்யாவின் அலுவலக அறையில்,
” அர்ஜுனுக்கும் மிருதுளா பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு” என்று நாகா சொன்னதுமே ஆதித்யா யோசனையுடன் அவனைப் பார்க்க,
“மது கல்யாணம் வேண்டாம்னு முந்தின நாள் நைட் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கா. அப்ப தான் சிவகுரு ஆளுங்க அவ ஃப்ரெண்ட் சந்தியாவ அடிச்சு போட்டுட்டு அவளைக் கிட்னாப் பண்ணி இருக்காங்க. சந்தியா இப்போ ஹாஸ்பிடல்ல சீரியஸா இருக்கா. அண்ட் மது எதுக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு வந்திருக்கா தெரியுமா” என்று நாகா கேட்கவும்,
” என்ன பெரிய காரணமா இருக்க போகுது, ஜூவாலா அர்ஜுன விரும்பி இருப்பா, அக்காவுக்காக மேடம் வீட்டை விட்டு வந்திருப்பாங்க ” என ஆதித்யா சரியாக கணித்திருக்க,
” எனக்கு அப்படி தோனல” என்ற நாகா,
” வாட்ஸ் அப்ல உனக்கு ஒன்னு அனுப்பி இருக்கேன் அதை பார்த்துட்டு சொல்லு ” என்றான்.
நாகாவை ஒரு கணம் பார்த்துவிட்டு அவன் அனுப்பியதை வாசித்து முடித்து விட்டு ஆதித்யா நாகாவை பார்க்க,
” மது வீட்டை விட்டு கிளம்பும்போது எழுதி வச்சு லெட்டர் இது, அந்த அர்ஜுன் சண்டை போடும்போது இத நம்ம வீட்டு முன்னாடி தூக்கி வீசிட்டு போய் இருக்கான், பத்ரி தான் சொன்னாரு, நான் தான் அவரை வாட்ஸாப் பண்ண சொன்னேன். அந்த லெட்டர்ல அவ காதலிக்கிறதா சொல்லிருக்கறது உன்னை தான் ஆதி.
நீ ஒன்னும் இல்லன்னு சொல்லற ஆனா அந்த பொண்ணு உனக்காக கல்யாணத்தையே விட்டுட்டு வந்திருக்கா, இப்போ இங்கயே வந்துட்டா, இதெல்லாம் தேவையா உனக்கு ” என்ற நாகாவை பார்த்து சிரித்த ஆதி,
” அந்த லெட்டர்ல என் பேரு கூட இல்ல டா, சொல்லப்போனா அவளுக்கு என் பேர் கூட இப்பதான் தெரியும் “
” ஆனா அதுல அவ உன்னை தான் மென்ஷன் பண்ணி இருக்கா “
” அர்ஜுன் நம்பனும், அவளை வெறுத்துட்டு ஜூவாலா கூட அவன் வாழனும்னு, அதுக்காக இப்படி பண்ணி இருக்கா.”
“சரி ஏதோ சொல்ற அதை விட, இப்போ மதுவை ஏன் இங்க கூட்டிட்டு வந்த, அவள ஹாஸ்பிடல் எங்கேயாவது அட்மிட் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல”
” அவ தன்னோட உயிரை பணயம் வச்சு என் உயிரை காப்பாத்திருக்கா. எப்படி என்னால விட்டுட்டு வர முடியும்,”
” இதையே சொல்லு, இப்போ அவளை காப்பாத்திட்ட. எப்பவுமே உன்னால அவளை காப்பாத்த முடியுமா ? உன்கிட்ட இருந்து உன்னால அவளை காப்பாத்த முடியுமா சொல்லு ? உன்னால முடியாது ஆதி. இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒருநாள் அவ உயிர்க்கு ஆபத்து வரலாம். ஏன் அதை நீயே கூட பண்ணலாம்.இதோ பாய் வந்துட்டு இருக்காரு முதல்ல அவளை போட்டுட்டு தான் பேசவே செய்வாரு அப்போ என்ன பண்ணுவ. ??அவர் கிட்ட இருந்து உன்னால அவளை காப்பாத்த முடியுமா. ?? “
” தேவை பட்டா வேற வழியில்ல நாகா “
“ஆதித்யா என்ன பேசிட்டு இருக்க ஆர் யூ சீரியஸ், நான் கேட்டப்போ அவ மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லன்னு சொன்ன, ஆனா இன்ட்ரஸ்ட் இல்லாத எந்த பொண்ணு மேலயும் ஒரு ஆண் இவ்வளவு கேர் எடுக்க மாட்டான் ஆதி. இவ வேண்டாம் டா. இவளால உனக்கு பிரச்சனை மட்டும் தான் வரும். என்னால உனக்கு ஒன்னுன்னா பாத்துட்டு சும்மா இருக்க முடியாது ” என்று உணர்ச்சிவசப்பட்டு கத்திய நாகாவை அணைத்து விடுவித்த ஆதி,
” பாஸ்ட் வச்சு இவள ஜட்ஜ் பண்ணாத நாகா, மதி ரொம்ப ஸ்வீட் அண்ட் இன்னசெண்ட். எல்லாத்துக்கும் மேல இப்போதைக்கு இந்த கான்வர்ஷேஷனே நமக்கு தேவையில்லை. ஏன்னா எனக்கு என் கடமையை விட வேற எதுவும் பெருசில்ல, அண்ட் மதி ரெக்கவர் ஆனதும் அவளை அனுப்பிவிடுவேன் ” என்றான் ஆதித்யா.
அப்பொழுது,
” ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ. ” என்கிற மதுவின் அலறல் சத்தம் ஆபிஸ் ரூமில்பேசிக்கொண்டிருக்கும் ஆதித்யாவுக்கு மிக துல்லியமாக கேட்க,
” மதி..” என்றவன் மறுநிமிடம் நாகாவுடன் தன் அறைக்கு விரைந்தான் .
– காதல் செய்வான்..
அரிமா – 10
written by Competition writers
“இப்போ ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க? ஓடிப்போனவளையே நினைச்சுட்டு இருக்காம, அடுத்து என்ன பண்ணனும்னு யோசிங்க. எல்லாரும் வந்துட்டாங்க” என்ற மிருதுளாவிடம்,
” இனிமே என்ன பண்றது வந்தவங்க கிட்ட கல்யாணம் நடக்காதுன்னு எடுத்து சொல்லி அனுப்ப வேண்டியது தான்” என்றார் அருள்நிதி.
” கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா என் தம்பியும் என் தம்பி பையனும் அசிங்கப்பட்டு நிக்க மாட்டாங்களா”
” அதுக்காக கல்யாணம் நடக்கும்னு பொய்யா சொல்ல முடியும்”
” குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தா ஏன் பொய் சொல்லணும் “
” என்ன உளறிட்டு இருக்க, மது இல்லாம எப்படி “
” மது மது மது நம்ம எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டு அர்ஜுன ஏமாத்திட்டு போனவள பத்தி ஏன் இப்ப பேசிட்டு இருக்கீங்க. மது மட்டும் தான் பொண்ணா என்ன? நம்ம ஜூவாலா இல்லை, அர்ஜுனுக்கும் ஜூவாலாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என்று மிருதுளா கூறியதும்,
“அத்தை”,
” அம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க “,
” என்ன மிருதுளா நீ, எப்போ வந்து என்ன பேசிட்டு இருக்க” என்று அர்ஜுனை தொடர்ந்து இளமாறன் மற்றும் அருள்நிதி குரலும் சேர்ந்து ஒலிக்க, அனைவரையும் தன் பார்வையாலே அடக்கிய மிருதுளா அர்ஜுனை பார்த்து,
” என்னடா? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு என்கிட்ட எகிறிட்டு வர, அந்த ஓடிப்போனவளுக்காக நீயும் அசிங்கப்பட்டு எல்லாரையும் அசிங்க படுத்தலாம்ன்னு நினைக்கிறியா” சீற்றத்துடன் வினவினார்.
” யாரும் அசிங்கப்பட வேண்டாம் நானே எல்லார்கிட்டயும் போய் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடுறேன் போதுமா ” தன் கன்னம் அதிர கோபமாக கூறினான் அர்ஜுன்.
அப்பொழுது, “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க யாரும் எதுவும் பேச வேண்டாம்” என்ற ராம்குமார் மிருதுளா மற்றும் அருள்நிதியை பார்த்து,
” அக்கா மாமா இப்ப நான் கேட்கிறேன், உங்க பொண்ணு ஜூவாலாவ என் பையன் அர்ஜுனுக்கு தர முடியுமா” என்று கேட்டுவிட, எதுவும் செய்ய முடியாது நடக்கும் அனைத்தையும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த பிரீத்தாவை கர்வத்துடன் பார்த்த மிருதுளா தன் தமையனிடம்,
” அதான் நானே தரேன்னு சொல்றேனே அப்புறம் ஏன் கேட்டுட்டு இருக்க, போய் மத்த ஏற்பாட கவனி” என்றார்.
இருவரின் சம்பாஷணையில் இன்னும் ஆத்திரம் கொண்ட அர்ஜுன்,
” அப்பா ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க ” என்று கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த ராம்குமார்,
” நீ சும்மா இரு, இதுல நீ எதுவும் பேசக்கூடாது. உன் விருப்பப்படி விட்டு இப்ப அசிங்கப்பட்டு நிக்கிறோம். இனிமே நான் சொல்றத மட்டும் நீ கேட்டா போதும். உனக்காக தான் இந்த முடிவு எடுக்கிறேன், நீ கேட்டு தான் ஆகணும்” என்றவர் ஜூவாலாவை பார்த்து,
” உன் முடிவு என்னம்மா” என்க, ஜுவாலாவால் பதில் சொல்ல முடியவில்லை.
அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள் தான், ஆனால் இப்படி ஒரு நிலைமையில் இல்லையே. அவன் வேதனையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. எனவே ஜூவாலா அமைதியாக நின்றிருந்தாள்.
“சொல்லுமா”
“மாமா” ஜூவாலா தயங்கிக்கொண்டிருக்க,
” மது என் பையனை வேண்டாம்ன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு அவமானப்படுத்திட்டு போன போல, நீயும் என் பையன வேண்டாம்ன்னு சொல்லிடாத டா ” என்று ராம்குமார் உருக்கமாக பேசவும்,
“ஐயோ மாமா ஏன் இப்படி பேசுறீங்க, அத்தானுக்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்” என்றவள் அர்ஜுனை பார்க்க,
” அவன் ஓகே சொல்லுவான் மா” என்றார்.
அப்பொழுது, ” ஆனா மாமா ஏன் எல்லாரும் அவசரப்படுறீங்க, அர்ஜுன் பாவம் மாமா. இதுல ரெண்டு பேரோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு. அர்ஜுனுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாமே” என்றான் இளமாறன்.
அதைக் கேட்டதும் கொதித்தெழுந்த மிருதுளா, ” உனக்கு ரொம்ப தெரியுமா? ஹான், யாருக்கு என்ன டைம் கொடுக்கணும்னு பெரியவங்க எங்களுக்கு தெரியும் வந்துட்டான். நீ எல்லாம் ஒரு வார்த்தை பேசாத, நீயும் உன் அத்தையும் கொடுத்த இடத்துல தான் அந்த மது இப்படி ஒரு வேலை பார்த்து வச்சிருக்கா, பைய மாட்டிகிட்டு கண்ட இடத்துக்கும் அவ போகும் போதே நினைச்சேன் ஓடுகாளி மானத்தை வாங்கிட்டா.”
“அண்ணி ப்ளீஸ் அப்படி பேசாதீங்க. அவ பாவம்” என்ற ப்ரீத்தாவை அழுத்தமாக பார்த்த மிருதுளா,
” யம்மா புண்ணியவதியே அவ ஏமாத்திட்டு போனது உன் புள்ளைய தான். அதுக்குள்ள மறந்துட்டியா என்ன? அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க”
” என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டு பொண்ணு அண்ணி ” என்றதும் மிருதுளா ஏதோ சொல்ல வர,
” இப்ப எதுக்கு நமக்குள்ள தேவை இல்லாத வாக்குவாதம் ” என்று தன் தமக்கையை தடுத்த ராம்குமார்,
” ஏற்பாடுகளை கவனிக்கலாம் மாமா ” என்று சொல்லிவிட்டு வந்தவர்களை வரவேற்க அருள்நிதியுடன் கிளம்பி விட்டார்.
அப்பொழுது ப்ரீத்தாவிடம் வந்த மிருதுளா, ” என்ன சம்பந்திமா அப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம், போய் கோபமா போற உங்க பையன சமாதானப்படுத்துங்க” என்று நக்கலாக கூறியவர், தன் மகளை அழைத்துக் கொண்டு சென்று விட, இளமாறனும் ப்ரீத்தாவும் அர்ஜுனை சமாதானம் செய்வதற்காக அவனது அறையின் கதவை தட்டினர்.
@@@@@@
ஊருக்கு தொலைவில் இருந்து தான் இருக்கும் இடத்திற்கு, வரவே ஆதித்யாவிற்கு பலமணிநேரம் மணிநேரம் ஆகிவிட, அதற்குள் அவள் பட்ட வேதனையை விட அவன் பட்ட வேதனை தான் அதிகம்.
மயக்கத்தில் கிடந்தவளை தூக்கிக்கொண்டு தனது மாளிகைக்குள் ஓடினான் ஆதித்யா .
அவன் அங்கு வரும்பொழுது அனைத்து ஏற்பாடுகளும் அவன் சொன்னதற்கு ஏற்ப தயாரான நிலையில் இருக்க, மதுவுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது .
“அவளுக்கு வலிக்க வேண்டாம் வலிக்காம இருக்க முதல்ல அனஸ்தீஷியா குடுங்க” என தனது காயத்தை கூட பொருட்படுத்தாது , மயக்க நிலையிலும் வலியில் முகம் சுளித்தவளை பார்த்து கொண்டே கூறியவனின் கண்களில் தான் எத்தனை வலி .
” ஆதி அவளுக்கு தான் ட்ரீட்மெண்ட் குடுக்குறாங்கல்ல, வா உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்போம் உனக்கும் புல்லெட் இறங்கிருக்கு ” என நாகா அழைக்க ,
” அவளுக்கு முடியட்டும் ” என்றவனின் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது .
சில நிமிடங்களுக்கு பிறகு,
” பயப்படுறத்துக்கு எதுவும் இல்லை ஆதித்யா. கொஞ்ச நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போய்டும் ” என மருத்துவர் தாரா கூற,
.
” உஃப்” – என இயல்பாக மூச்சுவிடும் பொழுது தான் ஆதித்யாவுக்கு புரிந்தது, தான் இவ்வளவு நேரம் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருந்திருக்கின்றோம் என்று.
அதுவரை உச்சகட்ட பதற்றத்தில் இருந்தவன் மருத்துவர் மதியின் நலனை உறுதி செய்த பிறகே நிம்மதி அடைந்தான்.
ஆதித்யா மதியின் அருகிலே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துகொள்ள, மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்தார் .
” ஆதித்யா அனஸ்தீஷியா ” என மருத்துவர் தாரா கேட்க .
” நோ ” தன் கைகளினால் வேண்டாம் என தடுத்தவன். மதியையே வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தான் .
கையில் இறங்கியிருந்த புல்லட் அவனது சதையை கிழித்தபடி நீக்கப்பட, முகம் மட்டும் கொஞ்சம் சிவந்ததே தவிர அவனது உடம்பில் சிறு அசைவு கூட இல்லை,
‘ இவன் மனிதனா. இல்லை உணர்ச்சியற்ற ஜடமா ‘ என தாராவுக்கு ஆச்சரியமாக இருந்தது .
” முடிச்சாச்சு ஆதித்யா. டேக் சம் ரெஸ்ட் ” என அவர் சொன்ன மறுநிமிடம் மதுவை தன் கையில் ஏந்தியவன் தன் அறையை நோக்கி நடந்தான் .
” என்ன நாகா இது அவர் ரெஸ்ட் எடுக்கணும்.” என தாரா நாகாவை பார்த்து ஆற்றாமையுடன் கூறினாள்.
” சொன்னா கேட்க மாட்டான் தாரா. உனக்கு அவனை நல்லா தெரியுமே “
” உண்மையாவே ஆதித்யா சக்கரவர்த்தி இரும்பு மனுஷன் தான் பா. என் வாழ்க்கையிலையே இவரை மாதிரி ஒருத்தரை நான் இதுவரை பார்த்தது இல்லை ” சிறு மென்னகையுடன் கூறியவள் அங்கிருந்து செல்ல. நாகாவும் சென்றுவிட்டான் .
@@@@@
ஒருவழியாக திருமணமும் முடிந்து விட, அர்ஜுனின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நாளுக்காக எவ்வளவு கனவுகளோடு காத்திருந்தானோ , அவனே இன்றைய நாளை அறவே வெறுத்தான். அவனால் மது செய்த காரியத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
‘ உனக்கு அவர பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும், நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன் ஆனா என்னால முடியல, ரெண்டு நாள் பழக்கத்துல அது எப்படி அவன் மேல உனக்கு லவ் வரும்ன்னு உங்க எல்லாருக்கும் தோனலாம்.
ஆனா என்கிட்ட அந்த கேள்விக்கு பதில் இல்லை, எந்த இடத்தில அவர் மேல எனக்கு காதல் வந்துச்சுன்னு தெரியல, ரெண்டு முறை என் உயிரை காப்பாத்தினதுனால வந்துச்சா, இல்லை நாள் முழுக்க எங்க கூடவே இருந்து எனக்காகவும் குழந்தைகளுக்காகவும் அவர் பார்த்து பார்த்து பண்ணினதுனால அவர் மேல லவ் வந்துச்சான்னு தெரியல ஆனா என்னால அவரை மறக்க முடியல.
கண்ண மூடினாலே அவர்தான் வந்து நிற்கிறார், அப்படி இருக்கும்போது உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் வாழ்க்கையும் சேர்த்து உன் வாழ்க்கையும் அழிக்கிற மாதிரி ஆகிடும் அர்ஜுன்.
அதனால தான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கேன், இன்னைக்கு இல்லாட்டாலும் கண்டிப்பா உனக்கு ஒரு நாள் என் நிலைமை புரியும். என் காதலை தேடி நான் போறேன் அர்ஜுன், முடிஞ்சா என்னை மன்னிச்சுடு’
அர்ஜுன் நம்ப வேண்டும் என்பதற்காக ஆதித்யாவின் பெயர் கூட தெரியாத அந்த நேரத்தில், அவனை காதலிப்பதாக மது எழுதி வைத்து, விட்டுச் சென்ற பொய்யிலான கடிதத்தில் இருந்த இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் அர்ஜுனின் மனதில் தோன்றி அவனை ரணப்படுத்திக் கொண்டே இருக்க,
‘ஆதித்யா’ என்று தன் மனதிற்குள் எண்ணியபடி பல்லை கடித்த அர்ஜுனின் மொத்த கோபமும் ஆதித்யா பக்கம் திரும்பியது.
இப்பொழுது இருக்கும் நிலைமையில் கல்யாணம் செய்து கொள்ளும் மனநிலை சுத்தமாக இல்லாவிட்டாலும், தன் தாய் ஒருத்திக்காக வேண்டா வெறுப்பாக ஒவ்வொரு சடங்கையும் செய்தான் அர்ஜுன்.
வந்தவர்கள் அனைவருக்கும் பெண் மாறியது பெரிய அதிர்ச்சியை கொடுத்தாலும், தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்களே தவிர நாகரிகம் கருதி யாரும் பெரிதாக கேட்கவில்லை.
ஒரு சில நெருங்கின உறவினர்கள் மட்டும் கேட்டதற்கு மிருதுளாவே சமாளித்து விட, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் பெரிதாக ஆர்ப்பாட்டம் இன்றி இனிதாகவே முடிந்தது.
திருமணம் முடிந்ததில் வந்தவர்கள் அனைவரும் கிளம்பியதும் தான் தாமதம், யார் சொல்லியும் கேட்காத அர்ஜுனோ காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட, இப்பொழுது மிருதுளா ப்ரீத்தாவிடம் எகிறினார்.
@@@@@@@@
மெதுவாக மதுவை படுக்கையில் கிடத்தியவன். போர்வையை அவளது கழுத்து வரை போர்த்திவிட்டு அவளை பார்த்தபடி அவள் அருகிலே கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான் . கண்களை மூடி குழந்தை போல கிடந்தவள் சில மணிநேரத்துக்கு முன்பு குண்டடி பட்டு ரத்தவெள்ளத்தில் தனக்காக அலறி துடித்தது அவன் கண்முன்னே வர ,
” ஏன் மதி இப்படி செஞ்ச. நீ அப்பவே போயிருக்கணும். ” என்றவனின் மனதிற்குள் ஆயிரம் சிந்தனை ஓடியது.
அப்பொழுது அவள் உடம்பில் திடிரென்று சிறு அதிர்வு,
” நோ ஆதித்யா வேண்டாம்…ப்ளீஸ்…. நோ ஷூட் பண்ணாதீங்க” மயக்கத்திலே மதுமதி அழுது புலம்ப, உடல் வெட்டி போட்டது போல துடித்தது.
வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஆதித்யா, அவள் முகமெல்லாம் முத்துமுத்தாய் வியர்த்து இருக்க, பதற்றத்திலும் பயத்திலும் அவள் உதடுகள் துடித்தது .
” மதி.. நீ பத்திரமா தான் இருக்க ” – நடுங்கும் அவள் கரங்களை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அவளை ஆறுதல் படுத்த, அவளது அலறலும் பதற்றமும் அதிகமானது.
மதுமதியின் மூடிய இமைகள் தாண்டி கண்ணீர் வழிய,
” யாரவது காப்பாத்துங்க ப்ளீஸ் ஆதி ” சத்தமாக புலம்பினாள்.
” ஒன்னும் இல்லை பேபி நீ நல்லா இருக்க ” சட்டென்று மதுவை தன் நெஞ்சோடு அணைத்து பிடித்துக்கொண்டு அவள் முதுகை வருடினான்.
” ப்ளட்டா வருது ” விம்மியபடி அழுதாள் .
அவளது கண்ணீரை துடைத்து, சிகையை வருடி,
” ஷ்ஷ்.. நான் உன் பக்கத்துல தான் இருக்கேன் எல்லாமே சரி பண்ணியாச்சு பேபி ” அமைதி படுத்தினான் ஆதி. அவளோ அவனது வெற்று மார்பில் முட்டி மோதி, பயத்தில் அவனிடம் இருந்து விடுபட போராடினாள் .
” ட்ரஸ்ட் மீ பேபி எல்லாமே சரி பண்ணிடலாம் ” முடிச்சிட்ட அவளது புருவத்தை நீவியபடி நம்பிக்கை கூறினான் .
” ட்ரஸ்ட் யூ ஆதி ” மயக்கத்திலும் நான் உன்னை நம்புறேன் என்று அவளது உதடுகள் மெல்ல முணுமூணுக்கவும், சுகமான தென்றல் ஒன்று அவன் கனல் இதயத்தை இதகமாக வருடி செல்ல, ஆதித்யாவின் அழுத்தமான இதழ்கள் இப்பொழுது மெதுவாக புன்னகைத்தது. மதுமதியின் புலம்பலும் குறைந்து, அழுகையும் குறைந்தது.
அப்பொழுது ஆதித்யாவின் தாய் மற்றும் தங்கை வாழும் வீட்டின் தலைமை காவல்காரரிடம் இருந்து ஆதித்யாவுக்கு அழைப்பு வர, உடனே ஏற்றவன்,
” சொல்லுங்க பத்ரி எல்லாம் ஓகே தானே ” என்று வினவினான்.
” ஒரு சின்ன பிராப்ளம் சார்”
“என்னாச்சு”
” ஏ சி பி அர்ஜுன் சார் உங்கள பார்த்தே ஆகணும்னு ரொம்ப வயலென்டா நடந்துக்குறாரு, ட்ரிங்க்ஸ் வேற எடுத்திருக்காரு, இப்போ என்ன பண்றது சார்” என்று தலைமை காவலாளி கேட்கவும், அரை மயக்கத்தில் இன்னும் எதையோ முணுமுணுத்த படி படுத்திருந்த மதுவை பார்த்தவன்,
” சரி அவர்கிட்ட ஃபோனை குடுங்க” என்று கூறினான்.
தலைமை காவலாளியோ,
” சார் தான் லைன்ல இருக்காங்க பேசுங்க சார்” என்று அர்ஜுனிடம் அலைபேசி நீட்ட வாங்கிக்கொண்ட அர்ஜுன்,
” பழி வாங்கிட்டல உன்னை விடமாட்டேன்டா, உன்னை பத்தி எதுவும் தெரியாததுனால மது உன்னை நம்புறா, கூடிய சீக்கிரம் உன் முகத்திரையை கிழிச்சு, மது வாயால உன்னை வேண்டாம்ன்னு சொல்ல வைச்சு, ஜெயில்ல தள்ளல நான் அர்ஜுன் கிடையாது. எப்படி நான் இன்னைக்கு என் காதலை இழந்து தவிச்சிட்டு நிக்கிறேனோ, நீயும் ஒரு நாள் நிப்ப” என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்க, அர்ஜுனின் பேச்சில் எரிச்சல் அடைந்த ஆதி கோபத்தில் சத்தமாக பேசினால் மது விழித்துக் கொள்வாளோ என்பதை கருத்தில் கொண்டு அவனிடம் பேசுவதற்காக மெத்தையில் இருந்து எழுந்து கொண்ட நேரம், ஆதித்யாவின் கரத்தை பற்றி கொண்ட மது,
“ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க ஆதித்யா” என்று அரை மயக்கத்தில் சொல்ல,
” நீ தூங்குடா நான் எங்கையும் போகல” என்று மதுவின் கரத்தை வருடிய ஆதி அவள் மீண்டும் உறங்கியதும்.
அலைபேசியில் எதிர் முனையில் இருந்த அர்ஜுனிடம்,
“கேட்டிச்சா மிஸ்டர் கமிஷனர் சார், இனிமேலாவது என்கிட்ட சவால் விடுறத விட்டுட்டு, போட்ட காக்கி சட்டைக்கு உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாருங்க.” என்று நக்கலாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவனுக்கு, அர்ஜுனின் செயல்களும் பேச்சும் யோசனையை கொடுக்க,
‘ என்னவாக இருக்கும்’ என்னும் யோசனையில் அமர்ந்திருக்க, அர்ஜுன் தான் அலைபேசியில் மிகத் தெளிவாக கேட்ட மதுவின் பேச்சில் இன்னுமே உடைந்து விட்டான்.
– அரிமா வருவான்…
அரிமா – 9
written by Competition writers
“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது.
உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான்.
சட்டென்று அவன் கையை பிடித்தபடியே மண்டியிட்டு தரையில் விழுந்தாள், ஓடிய ஓட்டத்திற்கு அவளுக்கு மூச்சு வேகமாக வாங்கியது.
” வா கெட் அப் ” சுற்றும் முற்றும் பார்த்தபடி கூறினான் ஆதித்யா .
” ஐ.. ” நாசியாலும் வாயாலும் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவள் பேசமுடியாமல் தலையை மட்டும் மறுப்பாக அசைத்தாள் .
” மதி ” கோபமாக அழைத்தான் .
“என்னால முடியலங்க, பார்த்தீங்கள்ல எவ்வளவு பேர் இருக்காங்க, நம்மள விட மாட்டாங்க இனி அவ்வளவு தான். உங்க ஒருத்தரால என்ன பண்ண முடியும். போலீஸ் வந்தா மட்டும் தான் நம்மள காப்பாத்த முடியும். நீங்க அர்ஜுன்க்கு கால் பண்ணிட்டு கிளம்புங்க என்னால உங்களுடைய உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துரக்கூடாது.” மூச்சிரைக்க கூறியவள் ஒரு மரத்தின் மீது சாய்ந்து படி கண்ணீருடன் கீழே அமர்ந்தாள் .
அர்ஜுனின் பெயரை கேட்டதுமே ஆதித்யாவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ‘ அதுவும் என்னால் முடியாது என்கிறாளே, அப்பொழுது அவனால் மட்டும் எல்லாம் முடியுமா என்ன?’ ஆத்திரத்தில் மதுவின் கரங்களை பற்றியவன். தர தரவென்று அவளை இழுத்து கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு சென்றான் .
மதுவோ அவனது செய்கையில் அவனை அதிர்ந்து பார்க்க,
” உன்னை விட்டுட்டு போறதுக்காக நான் இங்க வரல ” ஆத்திரத்துடன் அவளது கண்களை பார்த்து கூறிய ஆதியின் கண்களில் தான் அத்தனை கோபம். அவனது சிவந்த விழிகளையே பார்த்துக் கொண்டிருந்த மதுமதியை அவனது பார்வை அச்சுறுத்த, அன்று மழை இரவில் தான் கண்ட அதே மர்ம மனிதனின் கொடூர விழிகள் தான் அவளுக்கு இப்பொழுது நியாபகம் வந்தது.
அவ்வளவு தான் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் எண்ணிப் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று புரிவது போல் தோன்ற, பயத்துடன் ஓரடி பின்னால் சென்றாள் மதுமதி.
‘ பயப்படுகிறாளா ? என்னை பார்த்தா ‘ என்று எண்ணியவன் தன் நெற்றியை நீவியபடி அவளைப் பார்த்தவனுக்கு அவள் இப்போது ஓடும் நிலையில் இல்லை என்பது நன்கு புரிய ,
” பத்து நிமிஷம் இங்கையே இரு. அதுக்குள்ள நான் வந்துருவேன் ஒருவேளை வரலைன்னா, பயப்படாத நீ பாதுகாப்பா இருக்கன்னு அர்த்தம்.” அதாவது என் உயிரைக் கொடுத்தாவது உனக்கு வரும் அத்தனை ஆபத்தையும் வீழ்த்தியிருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்க,
” அப்போ நீங்க ” என கேட்டவளின் கண்களில் தான் எத்தனை தவிப்பு.
என் பாதுகாப்பை குறித்து கவலை படுகிறாளா ! என்று எண்ணியவனின் இரும்பு இதயத்தில் இதம் பரவியது.
” நான் வரலன்னா இங்க இருந்து நீ கிளம்பிரு, கொஞ்ச தூரத்துல என் கார் இருக்கும்.. இது என் கார் கீ. இது என்னுடைய ஃபோன் இதுல இருந்து உன் அர்ஜுன்க்கு கால் பண்ணி உன்னை கூட்டிட்டு போக சொல்லு.” ‘ உன் அர்ஜுனுக்கு ‘ என்ற வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தம் ஏனோ அவளை வருத்தியது .
” மாட்டேன் நீங்களும் போகாதீங்க ” என்றவள் பிடிவாதமாய் அங்கையே அமர்ந்தாள்.
” ப்ச் ” எரிச்சல் அடைந்தவன் தன் கார் கீயையும் அலைபேசியையும் அவள் அருகில் வைத்தான். பின்பு அவளை பார்த்தபடியே தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவிய ஆதித்யா,
” டென் மினிட்ஸ்ல நான் வரலன்னா நீ எனக்காக காத்திருக்க கூடாது ” என்று மீண்டும் கட்டளையாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
அவன் கையில் இருந்த பிஸ்டல் அவன் கண்களில் தெரிந்த வெறி மதுவின் மனதை மிகவும் உறுத்தியது. அர்ஜுன் சந்தியாவின் வார்த்தைகளை எண்ணிப்பார்த்தவளுக்கு ‘இவன் நல்ல மனிதன் தானா? ‘ என்கின்ற சந்தேகம் எழுந்தது.
‘ இவனை நம்பலாமா ?? ” என்ற கேள்வி அவளது மனதை போட்டு குடைந்தெடுக்க. அலைபேசியையே வெறித்து பார்த்தவள் சில நொடிகள் கழித்து அதை தன் கையில் எடுத்தாள்.
இங்கே இவள் அவன் விட்டு சென்ற அலைபேசியை எடுத்த மறுநொடி, ‘டுமீல் டுமீல் ‘ என தொடர் துப்பாக்கி சுடும் சத்தம் மதுவின் காதில் இடி முழக்கம் போல கேட்க, பயத்தில் தன் இரெண்டு காதையும் மூடியவளின் இதயம் தாறுமாறாக துடித்தது.
அப்படியே மடிந்து தரையில் அமர்ந்தவள் தான் இருக்கும் நிலையை எண்ணி அழுதாள். அவள் உடல் வேகமாக நடுங்கியது.
“இவன் வேற அங்க போயிருக்கானே ஏதாவது ஆகிருக்குமோ ?? “ என்று எண்ணியவளின் கண்களில் கண்ணீர் திரண்டது.
ஆதித்யா மறைவான இடத்தில இருந்து வெளியே சென்ற மறுநொடி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தையுமே யார் பார்த்தாலும் வேகமாக ஃபார்வர்ட் செய்யப்பட்ட காணொளி காட்சி என்று தான் நினைப்பர். யார் யாரை சுடுகிறார்கள் என்று யாரும் கணிப்பதற்குள் காட்சிகள் எல்லாம் கணப்பொழுதில் மாறியிருந்தன.
துப்பாக்கியின் சத்தம் படி படியாக குறைந்திருக்க. திடிரென்று அங்கே மயான அமைதி.
“என்னாச்சு ?? திடீர்ன்னு எந்த சத்தமும் கேட்கல, ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகிருக்குமா” என்று பயந்தவளை இந்த அமைதி கூட வெகுவாக அச்சுறுத்த, அவளது இதயம் இன்னும் வேகமாக துடித்தது.
உயிரை கையில் பிடித்து கொண்டு மறைவில் இருந்து வெளியே வந்தவள் அவனை தேடினாள். கண் தெரியும் தூரம் வரை ஒரே இருள், அவன் எங்க ?? என்று அவள் உள்ளம் நிஜமாகவே துடித்தது .ஏனோ கண்ணீர் விடாமல் வழிந்தது . துடைத்து கொண்டே தேடினாள்.
அப்பொழுது யாரோ அவள் தோளை தொட்ட அதிர்ச்சியில் பதறி திரும்பியவள் ஆதித்யாவை கண்டதும், அவன் மேல் தனக்கு எழுந்த சந்தேகம் உட்பட அனைத்தையும் மறந்து, அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் .
இருவரின் இதயமும் வேகமாக துடித்தது. சில நொடிகள் கழித்து மெல்ல அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் தன் தோளில் குருதி வழிய அவளை பார்த்தான் .
” ஐயோ என்னாச்சு.” பதறியபடி அவனிடம் நெருங்கிய மது காயப்பட்ட அவன் தோளில் தன் கைவைத்து,
” உங்களை சுட்டுட்டாங்களா !” மிரட்சியுடன் வினவினாள் .
அவன் அப்படியே கீழே அமர்ந்தான். ரத்தம் தாறுமாறாய் வழிந்தது,
” இப்ப என்ன பண்றது” கத்தினாள்.
” நீங்க ஏன் அங்க போனீங்க ?? ” தவிப்புடன் கேட்டவளின் விரிந்த கண்களில் தான் எவ்வளவு நீர் .
” ஆ ஆ ஷட் அப் ” அவளது புலம்பலை கண்டு எரிச்சலடைந்த ஆதித்யா தன் சுட்டு விரலை நீட்டி அமைதியாக இருக்குமாறு எச்சரித்தான்.
மறுநொடியே அடங்கியவள் மீண்டும்,
” ரொம்ப ப்ளட் வருது ” பயத்துடன் கூறினாள். அவள் விழிகள் மட்டும் அல்ல அவள் இதயமும் அழுதது .அது அவனது செவிக்கும் கேட்டது .
அப்பொழுது, “ அவன் அங்க தான் இருக்கனும் சீக்கிரம் டா “என்று யாரோ பேசும் சத்தம் கேட்க.மீண்டும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதில் மதி அலறி தன் கண்களை மூடினாள் .
” மதி அவங்களுக்கு நான் தான் வேணும், ஸோ நான் கிடைக்கிற வரைக்கு அவங்க விடமாட்டாங்க. கொஞ்ச பேர் தான் இப்போ இருக்காங்க, சோ நீ பயப்படாதே நான் அவங்கள சமாளிச்சுக்குவேன். நீ இந்த வழியா அப்படியே ஓடு. நான் உன் கூட இருந்தா உனக்கு தான் ஆபத்து, நீ என்கூட வராம இருக்கிறது தான் நல்லது ” என்றவன் அவள் கையில் கார் சாவியை கொடுத்து ,
” எவ்வளவு முடியுமா அவ்வளவு வேகமா ஓடு, கொஞ்ச தூரத்துல என் கார் இருக்கும். நீ தப்பிச்சு போய்டலாம், இதோ இந்த வழியா போ ” தான் இருக்கும் எதிர் திசையை காட்டி அவளை துரிதப்படுத்தினான் .
“ம்ஹூம் நீங்களும் வாங்க ” அழுது கொண்டே அவனை அழைத்தாள் .
” ம…தி ப்ளீஸ் ரன், நான் உன் கூட வந்தா உன்னையும் கொன்னுடுவாங்க”
“இல்லை நீங்களும் வாங்க” அழுது கொண்டே மறுத்தாள்.
” சரி அட்லீஸ்ட் நீ இங்க இருந்து காருக்காவது போ, நான் வந்திடுறேன்” அடுத்த தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திய படி கூறினான் ஆதித்யா.
ஆனால் அதை தன் கருத்தில் கொள்ளாதவள் ,
” ப்ளீஸ் நீங்களும் வந்திடுங்க” விழிகள் கலங்கியபடி கூறினாள். குழந்தை போல அழுபவளிடம் எரிச்சல் பட விரும்பாதவன், கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,
” கண்டிப்பா வந்துருவேன் மதி ” என்றான், ஆனால் அவளோ போகாமல் இருக்க,
” என்னை நம்புறியா மதி ” என்று வினவினான் ஆதித்யா.
” இப்போ எதுக்கு இதை கேட்குறீங்க “
” பதில் சொல்லு”
“———–“ஆம் என தலையசைத்தாள்.
” அப்போ போ.” தன்மையோடு கூறினான்.
” முடியாது ” பிடிவாதமாக கூறினாள்.
சட்டென்று எழுந்தவன் அவளது கரத்தை வேகமாக பிடித்து, ” போ..ரன்” என அடிக்குரலில் இருந்து கத்தவும், அதேநேரம் அவர்களை தூரமிருந்தே கண்டு கொண்ட சிவகுரு ஆதித்யாவை நோக்கி துப்பாக்கி நீட்டியவன் அவனை சுட போக, அதைக்கண்டு கொண்ட மதுவோ ,
” ஏய் வேண்டாம் ” என கத்திக்கொண்டு ஆதியை காப்பாற்றும் பொருட்டு அவனை தள்ளியபடி குறுக்கே விழுந்தாள்.
இதை கண்ட சிவகுரு ,
” ச்ச ” என தன் குறி தவறியதை எண்ணி கோபம் கொள்ள, தன் முகத்தில் தெறித்த ரத்தத்தில் மதியின் நிலையை பார்த்த ஆதித்யாவின் கண்கள் இரண்டும் நின்று போயின, அவனது இதயமும் தான் .
ஆதித்யாவின் உடம்பில் பாய வேண்டிய தோட்டா மதியின் மார்பில் பாய்ந்தது. அவளது மானத்தை காத்த அவனது கவசம் அவளது உயிரை காக்க தவற, வெள்ளை நிற சட்டை சிவப்பு நிற மாக மாறிவிட, வலியில் துடிதுடித்து அவன் மார்பின் மீதே விழுந்தாள் மதுமதி.
வலியில் துடித்தவளை தன் கண்கள் வெறிக்க பார்த்த ஆதியின் முகமும் விழிகளும் அக்னி குண்டம் போல தகித்தது. அவளது குருதி அவன் கையில் பிசுபிசுக்க, அவனுக்குள் ஏதோ செய்தது.
தன் வாழ்நாளில் எவ்வளவோ ரத்தத்தை பார்த்து உணர்ச்சியற்று இருந்தவனால் இப்பொழுது முடியவில்லை, இதயமும் கண்களுக்கும் கனக்க, ஒருவித வலி அவன் நெஞ்சை பிடித்து அழுத்தியது.
அது, அவனையே அறியாமல் அவனது இதயத்திற்குள் நுழைந்து அதன் துடிப்பாகவே மாறி போன அவனது மின்னல் ஒளி நிலவழகி மதுமதி அவனுக்கு கொடுத்த வலி ஆகும்.
பற்களை கடித்தபடி, ” சிவ குரு ” என கர்ஜித்த ஆதித்யா, நொடி தாமதிக்காது தன் துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினான்.
அதேநேரம், ” வேண்….டாம் ப்ளீ..ஸ் ” என தடுத்த மதியை அள்ளி தன் மார்போடு இறுக்கமாக அவள் பார்க்காத வண்ணம் அணைத்துக்கொண்ட ஆதித்யா, சிவ குருவின் நெத்தி பொட்டில் சுட்டு அவனை மண்ணில் வீழ்த்தினான் .
” உனக்கு என்ன தியாகின்னு நினைப்பா ” மதியின் கன்னங்களை தட்டியபடி அழைத்தான் ஆதித்யா.
” அவன் சுட வந்ததும், உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு அப்படி பண்ணிட்டேன். ஆனா இப்போ ரொம்ப வலிக்குது ” என்றவளின் கண்கள் சொருக ஆரம்பித்தது .
உடனே அவள் அணிந்திருந்த சட்டையை வேகமாக விலக்கிய ஆதித்யா. குண்டடி எங்கே பட்டிருக்கின்றது என்பதை ஆராய்ந்தான் .நல்ல வேலை கழுத்தில் இல்லை. கழுத்துக்கு கீழே மார்புக்கும் கைக்கும் நடுவே பட்டிருந்தது. ஆனாலும் பட்ட இடம் ஆபத்தானது. புல்லட்டை எடுக்கா விட்டால் வலியில் மூச்சு விட சிரமம் ஏற்படும். உயிருக்கு ஆபத்தாக முடியலாம்? போர்க்கலையின் நிபுணனுக்கு எல்லாம் புரிந்தது.
உடனே அவளை தூக்கிக்கொண்டு காரை நோக்கி வேகமாக ஓடினான் .
அவளோ வலியில் முனங்கி கொண்டு அவனது கரத்தில் பாதி சுயநினைவுடன் கிடந்தாள்.
” மதி கண்ணை மூடாத ” என்று சொல்லியபடி வேகமாக நடக்க, இதுவரை எதற்கும் அஞ்சாத ஆதித்யா இப்பொழுது அஞ்சினான். அரிமா அவனின் கைகள் கூட இப்பொழுது நடுங்கியது.
” ம…தி ஓபன். கண்ணை திற “
” வலிக்குது “
” இதோ இன்னும் கொஞ்ச நேரம் தான் “
என்றவன் நீண்ட ஓட்டத்திற்கு பின் காரை நெருங்கி, முன் இருக்கையில் அவளை உட்காரவைத்து அவனும் காரில் ஏறினான்.
” நான் செத்துருவேனா ” பயத்தில் உளறினாள் மது.
” ப்ச் உன்னை யாரு அப்படி செய்ய சொன்னா ?? ” கோபத்தில் கத்தினான் ஆதித்யா .
“……..” அவளது கண்கள் சொருகியது.
” நோ பாரு ” அவளது கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான் ,
” ஏய் கண்ண மூடாத, பேபி ப்ளீஸ் “- அவளது கண்களை பார்த்தபடியே கூறினான். கோபமாக ஆரம்பித்த அவனது குரல் இறுதியில் கரகரத்தது.
மதுவுக்கு திடிரென்று மூச்சு விடுவதே சிரமமாக. அவளுக்கு மேலும் கீழும் மூச்சு இழுக்க ஆரம்பிக்க, மூச்சுக்கு ஏங்கியவளை பரிதாபத்துடன் பார்த்தான் ஆதி .
” பயமா இருக்கு. நான். சாகப்போறேன்னு நினைக்கிறன் ” என முணுமுணுத்துக் கொண்டே இருந்த அவளது உதடுகள், திடிரென்று மெளனமாக சட்டென்று அவள் உதட்டுடன் தன் உதட்டை பொருத்தியவன். தன் மூச்சை அவள் உயிர் கூட்டிற்குள் செலுத்தினான்.
உடனே அவள் நெஞ்சாங்கூடு அவனது சுவாச காற்றால் ஏறி இறங்க,
சிறிது நொடியில் மீண்டும் அவளுக்கு கண்கள் சொருகியது.
” பேபி ப்ளீஸ் கண்ணை மூடாத”
” அன்னைக்கு நைட் அந்த பில்டிங்ள நான் பார்த்தது உன்னை தானே?? ” வார்த்தைகளை சிரமத்துடன் கோர்த்து கேட்டாள் .
” கண்ணை மட்டும் மூடாத பேசிட்டே இரு “
” ப்ளீஸ் பதில் சொல்லுங்க
அன்னைக்கு நைட் ஏன் என்னை காப்பாத்துனீங்க ஆ ஆ ஆ ஆ ஆ ?? ” மூச்சு விட முடியாமல் வலியில் கத்தியபடி கேட்டாள்.
உடனே அவளது இதழை தன் வசப்படுத்தி, சொல்ல வேண்டிய பதிலை தனக்கு தெரிந்த மொழியில் கூறினான் அந்த முரடன் .
பின்பு மெல்ல மதுவை தன் மேல் சாய்த்து கொண்டவன். தன்னிடம் இருக்கும் சிறு கத்தியை எடுத்து அவளது உடலில் பாய்ந்த தோட்டாவை எடுக்க முயற்சிதான், ஆனால் வலியில் அவனுக்கு ஒத்துழைக்காமல் அவள் தேகம் உதறி துடிக்கவும் அவள் இதழில் தன் இதழை பெருத்தியவன், தோட்டாவை நீக்கும் வரை தன் இதழ் அணைப்பை விடாது தொடர்ந்து, மிகவும் சிரமப்பட்டு அவள் உடம்பில் இருந்த தோட்டாவை நீக்கினான்.
தோட்டா இருக்கும் வரை வலியில் அவளால் சீரான மூச்சை வெளியிட முடியாது என்பதற்காகவே இப்படி செய்தான். ஒருவழியாக வலியில் துடித்து துடித்து தன் மீதே வலுவின்றி பாதி மயக்கத்தில் சாய்ந்திருந்த மதிக்கு தற்காலிக முதலுதவி செய்தான் ஆதித்யா .
அப்பொழுது தனக்கு முதலுதவி செய்து கொண்டிருக்கும் ஆதித்யாவின் கலங்கிய விழிகளை பார்த்தவள்,
“உங்க பேர் என்ன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ” வலியில் துடித்தபடி கேட்டாள்.
மதி கேட்கவும் நிமிர்ந்த ஆதித்யா, கண்கள் சொருக தன் மார்பில் கிடந்தவளின் விழிகளை ஒரு கணம் பார்த்தவன், குனிந்து அவளது காதுக்குள் தன் இதழ்களை பொருத்தி ” ஆதித்யா” என்று சொல்ல,
தன் உயிர் வரை தொட்டுச் சென்ற அவனது அழுத்தமான குரலை கேட்ட மது மதி, “ஆதித்யா ” என்று குளறலாக அவனது பெயரை உச்சரித்தாள்.
அப்பொழுது மதுவுக்கு, வலி தாங்காது கண்கள் மெல்ல சொருகி தலை தொங்கிவிட, அவள் முகத்தை தன் கையில் ஏந்திய ஆதி,
” சீக்கிரமா போய்டலாம் பேபி ” என்று அவளின் நெற்றி முட்டியவனின் கண்களில் இருந்து சொட்டாக சில கண்ணீர் துளிகள் உடைப்பெடுத்து அவள் மீது பட, அவளை இழுத்து தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆதித்யா அவள் நெற்றியில் தன் இதழ்களை பதிக்க, இப்பொழுது மதி முழுவதுமாக மயக்க நிலையை அடைந்திருந்தாலும் அவளால் எந்த வித சிரமமும் இன்றி மூச்சு விட முடிந்தது .
– அரிமா வருவான்..
அரிமா – 8
written by Competition writers
மயக்கம் மெது மெதுவாக தெளிய தெளிய, சிரமத்துடன் தன் இமைகளை பிரித்து பார்த்தாள் மதுமதி. பார்வையில் தெளிவில்லை, அனைத்தும் மங்கலாய் தெரிந்தது.
சுற்றியும் ஒரே இருள். காற்றில் ஜன்னல் வேறு மாறி மாறி அடித்துக்கொள்ள, இரும்பு ஜன்னலில்
‘ டமார் ‘ என்னும் சத்தம் அவளது மெல்லிய இதயத்தை நடுங்க செய்தது.
‘ எங்கே இருக்கிறோம்?’ பயத்தில் அவள் மனம் நடுங்கியது .
மிகுந்த சிரமத்துடன் எழ முயற்சித்தாள் முடியவில்லை.
அப்பொழுது தான், தன் கைகளும் கால்களும் தான் அமர்ந்திருக்கும் நாற்காலியுடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவளது மூளை எச்சரித்து, அவள் கடத்தப்பட்டிருப்பதை நினைவுக்கு கொண்டு வர, தன்னை கடத்தும் பொழுது சந்தியா தன்னை காப்பாற்ற முயற்சித்ததை எண்ணியவளுக்கு சந்தியாவின் கதறல் ஒலி மனதை பிசைய ஆரம்பிக்க,
மது கத்தினாள்! கதறினாள்!! ஆனால் அவளுடைய எதிர் ஒலியே, அவளை எக்காளமாய் அச்சுறுத்தியது .
‘ எப்படியாவது தப்பித்து விடு ‘ மூளை எச்சரிக்க, கைகளையும் கால்களையும் அசைத்து விடுவித்து கொள்ள முயற்சித்தவள், விடுபட முடியாது போகவும் கதறி அழுதாள் .
” ப்ளீஸ் யாரவது வாங்க, இளா அண்ணா அர்ஜுன் வாங்க வந்து கூட்டிட்டு போங்க பயமா இருக்கு ” தன்னால் முடிந்தவரை கத்தினாள் மது.
காற்றில் துர்நாற்றத்துடன் கலந்து வந்த ரத்த வாடை அவளை மேலும் அச்சுறுத்தி, தான் இருக்கும் இடத்தின் கொடூரத்தை உணர்த்தியது.
முடிந்தளவு பலத்தை கூட்டி மேலும் கதறினாள். ஈரம் இன்றி நா உலர்ந்தது தான் மிச்சம். அவளது கதறலுக்கு எந்த பயனும் கிடைக்க வில்லை. பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அழுத்தமான காலடிகளுடன் அவளை சில பேர் நெருங்குவதை பார்த்தவளின் கண்கள் அச்சத்தில் தானாய் விரிந்தது. தாடியும் சிவந்திருந்த கண்களும் என்று பார்ப்பதற்கு கொடூரமாக காட்சியளித்தவர்களை பார்த்தவளுக்கு பயத்தில் தேகம் நடுங்க துவங்க, நடுக்கத்துடனே அமர்ந்திருந்தாள் மதுமதி.
@@@@@@
வீட்டில் ப்ரீத்தாவோ தன் நிலையை எண்ணி ஒரு பாடு அழுது தீர்த்தவர், எங்கோ தன் அண்ணன் மகள் பத்திரமாக இருக்கிறாள் என்று ஒருவழியாக மனதை தேற்றிகொண்டவர்,
பின்பு திருமணம் முடிந்ததும் மதுவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வந்து, தன் அண்ணிக்கு வாக்கு கொடுத்தது போல மதுமதிக்கு சீக்கிரம் இன்னும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று, அவளது தற்போதைய நிலையையும், இறைவனின் கணக்கையும் அறியாது உறுதி கொண்டார் ப்ரீத்தா.
@@@@@
அதேநேரம் பயத்தில் அமர்ந்திருந்த மதுவை நெருங்கிய கயவர்கள், அவளை சுற்றி நிற்க. அவர்களுக்கு நடுவே வந்த சிவ குருவிடம் மது,
” ப்ளீஸ் என்னை விட்டுடுங்க நான் கெஞ்சி கேட்கிறேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உங்கள பத்தி வெளியில யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் ” அழுதபடி கெஞ்சினாள். ஆனால் பதிலுக்கு எக்காளமாக சிரித்தவன் ,
” என்ன விடணுமா?? விடுறதுக்கா டி உன்னை பிடிச்சு வச்சிருக்கேன். அவனும் வரட்டும் அவன் கண்ணு முன்னாடி உன்னை போடுறேன், அப்புறம் அவனை போடுறேன் ” என மதுவின் இரு கன்னங்களையும் தன் நகம் பட அழுத்தி பிடித்த சிவ குரு,
” நல்லா கத்து நீ கத்துறது அவனுக்கு கேட்கணும். டேய் பச்ச தண்ணி கூட கொடுக்காதீங்க டா. இப்படியே சாக போடுங்க.”என தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான்.
அப்பொழுது அந்த அடியாட்களுக்கு தலைவன் போல் இருந்த ஒருவன் சிவகுருவை தனியே அழைத்து,
” குரு பாய் ஆதித்யாவ பழிவாங்க தான இந்த பொண்ணை கடத்திருக்கோம் “
” ஆமா அதுக்கு என்ன “
” இல்லை சும்மா இவளை கடத்திவச்சு இப்படி பார்த்துட்டே இருக்குறதுக்கு..”
” இருக்கிறதுக்கு.. ” குருவின் பார்வை அவனுக்கு எதிரே இருப்பவன் மேலே நிலைத்திருந்தது.
” குட்டி வேற சும்மா கும்முன்னு இருக்கு. செஞ்சி வச்ச சிலை மாதிரி இருக்கா பாய். தினமும் ஒவ்வொரு பொண்ணோட இருப்பீங்க இன்னைக்கு இவ கூட இருங்க “
” அப்படியே போட்டேனா. அடுத்தவன் பொண்டாட்டி கூட போய் ச்ச.. “
” பாய் பழிவாங்கணும்ன்னு வந்துட்டா பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க கூடாது. அவன் நம்ம ஐயாவை போடும் பொழுது பாவம் புண்ணியம் பார்த்தானா என்ன? நாம மட்டும் ஏன் பார்க்கணும்?அதுவும் இல்லாம அவன் என்ன இவளுக்கு தாலியா கட்டிட்டான். எப்படியும் இவளை போட போறோம். சாக போறவளுக்கு கற்பு எதுக்கு? இன்னொரு விஷயம் பாய் இவ உயிர் போனா துடிக்கிறது விட இவ மானம் போனா தான் ஆதித்யா ரொம்ப துடிப்பான். ஆதித்யாவை துடிக்க துடிக்க பழிவாங்கணும்ன்னா இது தான் பாய் சரியான சந்தர்போம். கொஞ்சம் யோசிங்க பாய் ” என அவன் ஏத்தி விட, சிவகுருவும் யோசித்தான்.
யோசனையின் முடிவில் மதுவின் அழகில் மதி மயங்கிய சிவகுரு பின்விளைவுகளை யோசிக்காமல் இச்சையுடன் மதுவை நோக்கினான் .
” கட்டை அவிழ்த்து விட்டுட்டு எல்லாரையும் போக சொல்லுடா, நீயும் போ டா “என குரு கட்டளையிட, அவனது கட்டளைக்கு இணங்க, மதுவின் கட்டுகள் அவிழ்க்க பட, அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே கிளம்பினர் .
அவர்கள் சென்றதும் தான் இருக்கும் திசை நோக்கி நடந்து வந்த சிவ குருவை பார்த்து மதுவுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது .
” சும்மா சொல்ல கூடாது அழகா தான் இருக்க ” என்றவன் தன் சட்டையின் பொத்தானை கழற்றியபடி வக்கிர பார்வையுடன் மதுவை நெருங்கினான். அவனது பேச்சில் இன்னும் பயந்த மது,
” ப்ளீஸ் என்னை விட்ருங்க “என்றபடி பின்னால் சென்றாள்.
” விடுறேன் அதுக்கு முன்னாடி என்னை கொஞ்சம் சந்தோஷப்படுத்து ” என்றவன் வேகமாக மதுவை நெருங்கி தன்னோடு பிடித்து கொண்டான்.
அவனிடம் இருந்து தன் பெண்மையை காப்பாற்றிக்கொள்ள மது எவ்வளவோ திமிரினாள், அடித்தாள் , ஆனால் அதையெல்லாம் தூசியை போல உதறியவன். அவளை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டான் .
“என் அத்தை பையன் போலீஸ் அவனுக்கு தெரிஞ்சா உன்னை சும்மா விட மாட்டான், என்னை விடு டா “
” யாரு டி அது புதுசா! ஓ ரெண்டு பேரா. அப்போ மூணாவதா என்னையும் சேர்த்துக்கோ ” என்றவன் நக்கலாக சிரிக்க மதுவோ,
” என்னை விடுடா ” என்று அவனை தன் காலால் மிதிக்க, கோபமுற்ற சிவகுரு பற்களை கடித்துக் கொண்டு கெட்ட வார்த்தையால் அவளை திட்டிய படி, அவளுக்கு ஓங்கி அறைய, கீழே விழுந்த மதுவின் கண்களில் கண்ணீர் புரண்டோடியது.
வேறு வழி தெரியாது அவனது காலை பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். ஆனால் சிவகுரு தன் காலால் அவளை உதறி தள்ளி, அவளது கேசத்தை இறுக்கமாக பற்றி தூக்கினான்.
ஒருகையால் கொத்தாக அவளது முடியை இறுக்கமாக பிடித்திருந்தவன், மறு கையில் மதுபான பாட்டிலை எடுத்து பற்களால் அதை கடித்து திறந்தான். பின்பு சிவப்பு திரவத்தை ஒரே மூச்சில் தன் வாயில் சரித்து, மது கெஞ்ச கெஞ்ச அவளிடம் அத்துமீறினான் .
அவமானத்தில் கூனி குறுகி நின்றவள் முடிந்தளவு பலம் கூட்டி அவனை எதிர்த்தாள். பின்பு ஒரு கட்டத்தில் அத்துமீறிய அவனது கரத்தை கடித்து விட்டு வேகமாக ஓட முயல, வெறி பிடித்தவன் போல கத்திய சிவகுருவோ வேகமாக அவள் முன்னே வந்து, அவள் சுதாகரிப்பதற்குள் சட்டென தன் கரம் நீட்டி அவளது மேல்புற ஆடையை பிடித்து இழுத்திருக்க, அவன் இழுத்த வேகத்தில் அவள் ஆடையின் முன்புறம் அப்படியே கிழிந்துவிட, பெண்ணவள் அலறி விட்டாள்.
அவளுக்கு மாலில் ஆதித்யா சொன்னது இப்பொழுது நினைவிற்கு வர, அவன் பெயர் தெரியாததால் அவனை எண்ணியபடியே,
“ப்ளீஸ் வந்திருங்க” என்று வாய்விட்டே கதறியவள், அந்த நிலையிலும் சிவகுருவுடன் போராடினாள்.
ஆனாலும் அவளைவிட மூணு மடங்கு உடம்பை வளர்த்து வைத்துக் கொண்டு போதையின் பிடியில் வெறி பிடித்தவன் போல நிற்கும் அவன் முன்னால் சிறு ஆம்பல் மலரால் என்ன செய்ய முடியும். தன் இயலாமையை எண்ணி அழுதவள் உதவி வேண்டி கத்தி கூச்சலிட்டாள்.
” என்னை ஏதும் பண்ணாதீங்க போக விடுங்க ப்ளீஸ் ” மூடி இருக்கும் அறையில் இருந்து தப்பிக்க வழி தெரியாது மீண்டும் அவனிடம் கெஞ்சினாள் .
அதையெல்லாம் பொருட்படுத்தாத சிவகுருவோ,
” என்னையே அடிச்சிருக்க உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் டி” என்றவன் மதுவை கீழே தள்ளி, அவளின் மீதி ஆடையில் கைவைக்க நடுங்கி போனவள், கையில் கிடைத்த பாட்டிலால் சிவ குருவின் தலையில் ஓங்கி அடித்திருக்க, அவ்வளவு தான் தன் தலையில் இருந்து வலியும் ரத்தத்தை தன் கையால் தொட்டு பார்த்தவன் வலியில் கத்தியபடி, மீண்டும் மதுவுக்கு அறைந்திருக்க, அவளோ உடலில் வலு இழந்த போதிலும், அவனோடு போராடி கொண்டிருக்க, அந்த கயவனோ அவளுக்கென்று பாதுக்காப்பாக மிச்சமிருந்த ஆடையையும் பறித்து விட்டு அவளை ஸ்பரிசிக்க முனைந்த நொடி,
‘ தடார் ‘ என்னும் சத்தத்துடன் கதவை திறந்து கொண்டு, அங்கே வந்த ஆதித்யா,
” ஹவ் டேர் யு. உனக்கு எவ்வளவு தைரியம் டா ” என கர்ஜித்தபடி சிவகுருவை நெருங்கியவன் , அவன் சுதாரிப்பதற்குள் தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியால் மதுவை ஸ்பரிசிக்க துடித்த அவனின் விரல்கள் நோக்கி வீசியிருக்க, இப்பொழுது சிவகுரு வலியில் அலறிவிட்டான்.
குருதி வழிய சிவகுரு கதறி கொண்டிருக்கவும் தான் மது, கையில் குருதி படிந்த கத்தியுடன் வேட்டையாடும் அரிமாவாய் நின்றிருந்த ஆதித்யாவை பார்க்க, மதுவுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை, செல்லவிருந்த உயிர் வந்தது போல அவை யாவும் பெண்ணவளுக்கு செத்துப் பிழைத்த நொடிகள்.
இப்பொழுது தன்னை பார்த்தவள், தன்னை மறைக்க வழி தேட, ஆனால் ஆதித்யாவின் பார்வையோ சிவகுருவை விட்டு சிறிதளவும் அகல வில்லை.
கடுங் கோபத்தில் சிவப்பேறிய விழிகளுடன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக தன் முன்பு கொலைவெறியுடன் காட்சியளித்த ஆதித்யாவை கண்டதும் சிவ குருக்கு அந்த வலியிலும் ஆக்ரோஷம் வர,
அதன் பிறகு நடந்தது அனைத்தும் பயங்கரமே. சிவ குரு எழ எழ அடித்து தாக்கினான் ஆதித்யா. இறுதியாக தன் பிஸ்டலை எடுத்து சிவ குருவின் தலைக்கு குறிவைத்த ஆதித்யாவை சிவ குருவின் அடி ஆட்களில் ஒருவன் ஓடிவந்து தள்ளிவிட, ஆதித்யா தடுமாறி கீழே விழுந்தான். அப்பொழுது ஆதித்யா கீழே விழுந்த நேரத்தில் சிவ குரு தன் அடியாளுடன் தப்பி ஓடிவிட,
” விட மாட்டேன் சிவா ஐ வில் கில் யு ” என்று கர்ஜித்த ஆதித்யா. அடிபட்ட சிங்கம் போல் தரையில் இருந்து சீறி எழுந்தவன். பழிவாங்கும் வெறியுடன் உரக்க கத்தினான்.
ஆதித்யாவுக்கு சுத்தமாக நிதானம் இல்லை, ஆனாலும் தன்னை நிதான படுத்திக் கொள்ள பெரு முயற்சி எடுத்தவன், இப்பொழுது சிவ குரு பின்னால் செல்வது முட்டாள்தனம் என்பதை உணர்ந்து, மதுவை எப்படியாவது இங்கிருந்து பத்திரமாக அழைத்து செல்வது ஒன்றே இப்போதைக்கு சரியான முடிவு என்பதை கருத்தில் கொண்டு தன் கோபத்தை விடுத்து. மதுவை அழைத்தான் .
அங்கே நடப்பதை காண பயந்த மது தனது கிழிந்த ஆடைகளால் தன்னை மறைத்தபடி, தன் கண்களை மூடி கொண்டு ஒரு ஓரமாய் மறைந்திருக்க, ஆதித்யாவின் சத்தத்தில் கண் திறந்தவளுக்கு தான் இருக்கும் கோலம் கண்டு அழுகை தான் வந்தது.
” மதி வா, வீ ஹவ் டூ கோ, போனவங்க கண்டிப்பா ஆளுங்களோட திரும்பி வருவாங்க, சீக்கிரமா நாம கிளம்பனும் ” என்றான் ஆதித்யா.
” சாரி என்னால வர முடியாது நீங்க போங்க ” பயந்தபடி கூறினாள் மது.
” என்ன நான் போகணுமா ?? நான் போறதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தேன். இப்போ நீ வரியா இல்லை நான் அங்க வரட்டுமா ” எரிச்சலுடன் கேட்டான்.
” நோ ப்ளீஸ் என் நிலைமைய புருஞ்சிக்கோங்க. என்கிட்ட ட்ரெஸ் இல்லை என்னால உங்களை ஃபேஸ் பண்ண முடியாது ” வார்த்தைகள் வர மறுக்க அழுது கொண்டே கூறினாள் .
அவளது நிலையை புரிந்து கொண்ட ஆதித்யா தன் மேல் சட்டையை கழற்றி அவள் இருக்கும் இடம் நோக்கி நீட்டினான்,
” சீக்கிரம் வா மதி ” இப்பொழுது பொறுமையாக கூறினான் .
மறுக்காமல் வாங்கிகொண்டவள்,
” இது ஷார்ட்டா இருக்கு. ப்ளீஸ் நீங்க போங்க, என்னால உங்க உயிர்க்கும் ஆபத்து, நீங்க அர்ஜுன்க்கு கால் பண்ணுங்க அவனால மட்டும் தான் நமக்கு ஹெல்ப் பண்ண முடியும் ” விவரம் புரியாது சொல்ல, அர்ஜுன் என்ற பெயரை கேட்டதுமே ஆதித்யாவுக்கு சுர்ரென்று ஏறியது.
” அர்ஜுன் வர்ற வரைக்கும் இங்க இருக்க முடியாது மதி “பற்களை கடித்தபடி கூறினான் ஆதித்யா.
” நீங்க எப்படி இங்க வந்தீங்க ?? நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும். ?? அந்த ஆளு பேரு சிவ குருன்னு சொன்னீங்க உங்களுக்கு அவரை தெரியுமா ?? என்னை சுத்தி என்ன நடக்குது ?? அன்னைக்கு நைட் அந்த கொலைகாரன் கிட்ட இருந்து காப்பாத்துனீங்க. அப்புறம் அந்த ஆக்சிடென்ட்ல இருந்து காப்பாத்துனீங்க, மார்னிங் எஸ்கலேட்டர்ல , இப்போ இவன்கிட்ட இருந்து. இவங்க எல்லாம் யாரு ??? முதல்ல நீங்க யாரு ?? மால்ல வச்சு என்னை ஏன் வெளிய வர வேண்டாம் சொன்னீங்க. ” மனதில் எழுந்த கேள்விகளை படபடப்புடன் வினவினாள்.
அவளது கேள்விகளில் கடுப்பான ஆதித்யா தன் இடதுகையால் தலையை அழுந்த கோதி மூச்சை இழுத்து விட்டு,
” இப்போ உனக்கு பதில் வேணுமா இல்லை இங்க இருந்து தப்பிக்கணுமா ” எரிச்சலுடன் கேட்டான் .
” —————————–“பதில் சொல்லாமல் மௌனமானாள் மது.
அவள் மௌனமானதும்,
” மதி என்னை நம்புறீங்களா? டூ யு ட்ரஸ்ட் மீ ” ஆதித்யா ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான். சில நொடிகள் கழித்து அவன் சட்டையை அணிந்து கொண்டவள் அதை கீழே இழுத்து இழுத்து விட்டபடி தயங்கி தயங்கி வெளியே வந்தாள்.
மதுவின் மனமோ, ‘ யார் நீ ? எனக்கு பிரச்சனை வரும் பொழுதெல்லாம் நீ தான் என் முன்னாடி வந்து நிக்கிற ?? எப்படி ?? ‘ என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்ள, பெண்ணவளிடம் அதற்கு பதில் இல்லை, அவன் விடை தெரியாத புதிராகவே இருக்க, குழம்பி தான் தவித்தாள். ஆனாலும் மனம் ஏனோ அவனை நம்ப சொல்ல, அவன் அவ்வாறு கேட்ட மாத்திரம் அவன் முன்னே வந்து நின்றுவிட்டாள் மது.
மதுவின் தயக்கத்தை உள்வாங்கிய ஆதித்யா,
” மதி நான் இப்போ உனக்கு ஒரு சத்தியம் பண்றேன். என் பார்வை உன் கண்ணை தாண்டி போகாது. நம்பி வா” எனத் தன் கரம் நீட்டி, அவள் விழி நோக்கி கூறியவனின் பார்வை தவறி கூட அலைபாயவில்லை.
மதுவும் ஆதித்யாவின் ஆண்மையான குரலுக்கு கட்டுப்பட்டவள் போல தன் கரத்தை அவனிடம் கொடுத்தவள், மறுநொடி கேள்விகள் இன்றி அவனுடன் சென்றாள்.
– அரிமா வருவான்…
அரிமா – 7
written by Competition writers
ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர்.
அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து,
“டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?” என்று வினவினாள் ஜுவாலா.
” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்” உண்மையை கூறினால் நிச்சயம் அது அர்ஜுனின் காதிற்கு செல்லும், அவன் கண்டிப்பாக பிரச்சினை செய்வான், நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு அவனது நிம்மதியையும் கெடுத்து தனது நிம்மதியும் கெடுத்துக் கொள்ள விரும்பாது இவ்வாறு பொய் கூறினாள் மது.
” ஓ ஆனா டிரஸ் உனக்கு ஓவர் சைஸ்னு நினைக்கிறேன், ஓவர் கோட் ரொம்ப பெருசா இருக்கு” என்ற ஜூவாலாவிடம்,
” ஆமா ஆல்டர் பண்ணிக்கலாம்” என்றவள், “ஜூவாலு எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு, நான் வீட்டுக்கு போகட்டா” என்று கேட்டாள்.
” வீட்டுக்கு போறியா? என்ன சொல்ற இன்னும் நிறைய வாங்க வேண்டியது இருக்கே பா, உனக்கு வேணும்னா ஒரு காஃபி சாப்டுட்டு பர்சேஸ் கண்டின்யூ பண்ணுவோமா” என்றாள் ஜூவாலா.
” இல்லை ஜூவாலா ரொம்ப தலை வலிக்குது நான் போறேனே ” என்கவும்,
” அது இல்ல மது” என்று ஆரம்பித்த ஜுவாலாவை தடுத்த இளமாறன்,
“விடு ஜுவாலா அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், நாம பார்த்துக்கலாம், சரி மது மா வா நானே உன்னை ட்ராப் பண்றேன்” என்றான்.
” இல்ல அண்ணா நீ வேண்டாம் அதான் டிரைவர் இருக்காருல. நான் வீட்டுக்கு போயிட்டு காரை ரிட்டன் அனுப்புறேன், அர்ஜுன் கிட்ட சொல்லிடுங்க” என்றவள் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
மதுமதி வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது, பிரீத்தாவின் காரும் அங்கே நிற்பதை கண்டவள்,
” லேட் ஆகும்னு சொன்னாங்க அதுக்குள்ள வந்துட்டாங்களா ” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.
பின்பு தனக்கு வாங்கிய பொருட்களை காட்டுவதற்காக ப்ரீத்தாவை தேடி அவரது அறைக்குள் சென்றவள், அங்கே அவர் இல்லாததும், அவரைத் தேடி மாடிக்கு வரவும், அங்கே மிருதுளாவின் அறையில் பிரீத்தாவின் குரல் கேட்க்க,
” ஓ சித்தி ரூம்ல இருக்காங்களா சரி அப்போ ரெண்டு பேருக்கும் காட்டிடலாம்” என்ற மது புன்னகையுடன் மிருதுளாவின் அறையை நெருங்கிய கணம், தான் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து விட்டாள்.
அறையினுள்,
“ப்ளீஸ் அண்ணி அப்படி மட்டும் பண்ணிடாதீங்க” கண்ணீர் மல்க ப்ரீத்தா மிருதுளாவின் கால்களை பற்றிக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, கால் மேல் கால் போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்த மிருதுளாவின் முகம் வழக்கத்துக்கு மாறாக கோபத்தில் சிவந்திருந்தது.
” உன் ஃப்ளீஸ் எல்லாம் எனக்கு வேண்டாம், நாளைக்கு உன் பையன் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டணும், இல்லை உன் பையன் உனக்கு இல்லை ப்ரீத்தா. அம்மாவுக்கும் பையனுக்கும் நிம்மதி இல்லாம பண்ணிடுவேன்.”
” ஐயோ ப்ளீஸ் அண்ணி அப்படி மட்டும் பண்ணிடாதீங்க”
” நான் சொன்னது நடக்கலனா கண்டிப்பா பண்ணுவேன்”
” கொஞ்சம் மதுவையும் அர்ஜுனையும் பத்தி யோசிங்க அண்ணி”
” அவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை, ஜூவாலா அர்ஜுன விரும்புறா, எனக்கு என் பொண்ணோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம். சோ நாளைக்கு அர்ஜுன், ஜூவாலா கழுத்துல தாலி கட்டணும் கட்டல நான் சொன்னதை செய்வேன். ராம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்ற மிருதுளா இன்னும் ஏதேதோ கூற, அது அனைத்தையும் கேட்ட மதுமதிக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அப்பொழுது ப்ரீத்தா அழுது கொண்டே வெளியே வருவது தெரியவும், வேகமாக தனது அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு, பிரீத்தாவின் நிலை எண்ணி அழுகையாக வந்தது.
இரவு நெருங்கிக் கொண்டிருக்க விடிந்தால் கல்யாணத்தை வைத்துக்கொண்டு, என்ன செய்வது என்று புரியாது தவித்த மதுமதி அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள்.
வெளியே சென்றவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்திருக்க, மதுமதிக்கு தலைவலி என்பதை அறிந்து கொண்டு அவளைப் பார்க்க வந்த அர்ஜுன் இளமாறன் மற்றும் ஜூவாலாவிடம் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள பெரும்பாடு பட்டுப் போனாள் பெண்ணவள்.
ஜூவாலாவின் விருப்பத்தை அறிந்து கொண்ட பிறகு மதுவின் மனமோ கனத்து போனது.
அப்பொழுது அதே நேரம், அர்ஜுனை எண்ணி பார்த்தவளுக்கு அவனது நிலை இன்னும் வேதனை கொடுக்க, அவனுக்காக திருமணம் செய்து கொண்டாலும், ஜூவாலாவின் கண்ணீரில் தன்னால் அர்ஜுனுடன் நிம்மதியாக வாழ முடியுமா என்று கேட்டால் அவளால் நிச்சயமாக முடியாது. மேலும் மிருதுளா, தான் சொன்னது போல செய்து விட்டால், பிரீத்தாவின் நிலையை எண்ணிப் பார்த்தவளுக்கு இதயத்தில் இன்னுமே பாரம் ஏறி போக, அதே கனத்த மனதுடன் ஜூவாலாவின் அறையின் கதவை தட்டினாள் மது.
அழுது கொண்டு இருந்திருப்பாள் போலும் சில நிமிடங்கள் கழிந்த பிறகு தான், வந்து கதவைத் திறந்தாள் ஜூவாலா. அழுகையை மறைப்பதற்காக அவள் தன் முகத்தை கழுவியிருக்க, பார்த்ததும் கண்டுபிடித்துக் கொண்ட மதுமதி,
‘ அர்ஜுன புடிக்கும்னு முதல்லயே சொல்லி இருக்கலாமே’ என்று தன் மனதிற்குள் எண்ணியவள் வேகமாக வந்து அவளை அணைத்துக் கொள்ள, ஜூவாலா தடுமாறி போனாள்.
“என்னாச்சு மது? இந்த நேரத்துல, ஏன் ஒருமாதிரி இருக்க” என்று கேட்டாள் ஜூவாலா.
” ஒன்னும் இல்லை ஜூவாலு, தூக்கம் வரல இன்னைக்கு மட்டும் உன் கூட தூங்கிக்கவா” என்று கேட்டாள் மதுமதி.
” சரி வா” என்ற ஜூவாலா மதுமதி அருகே இருந்ததால் அழக்கூட முடியாது அவளுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அப்படியே உறங்கிவிட, அவளது உறக்கத்தை உறுதி செய்த பிறகு அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அறையில் இருந்து வெளியேறியவள், நேரே அர்ஜுனின் அறைக்குள் சென்றாள்.
மகிழ்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தைப் வருத்தத்துடன் பார்த்தவள்,
” என் முடிவு உனக்கு நிச்சயம் வலிய தான் கொடுக்கும், என் மேல வெறுப்பு வரும், ஆனா ஜூவாலா உன்னை நல்லா பாத்துக்குவா. என் முடிவு உனக்கு இப்போ தப்பா தெரிஞ்சாலும், ஃபியூச்சர்ல நீ கண்டிப்பா சந்தோஷமா இருப்ப, நீ ரொம்ப நல்லவன் அர்ஜுன், கண்டிப்பா நீ ஜூவாலா கூட சந்தோஷமா இருக்கணும்” என்றவள் அழுது கொண்டே அறையை விட்டு வெளியேறி, உறக்கத்தில் இருந்த இளமாறன் மற்றும் அருள் நிதியை பார்த்துவிட்டு நேரகாக தனது அறைக்கு வந்த நேரம், அவள் எதிர் பார்த்தது போலவே பிரீத்தா அவளை தேடி வந்திருந்தார்.
“சொல்லுங்க அத்தை” என்ற மதுவிடம், எதுவும் பேச முடியாது தவித்த ப்ரீத்தா அவளது கரங்களைப் பற்றிக்கொள்ள வரவும், அவரை அணைத்துக் கொண்ட மது,
“ப்ளீஸ் நீங்க என்கிட்ட கெஞ்ச கூடாது அத்தை. நான் போயிடுறேன்” ப்ரீத்தாவின் கண்ணீரை துடைத்து விட்டபடி கூறினாள் பெண்ணவள்.
மதுவின் பேச்சில் நிஜமாகவே அதிர்ந்து போன பிரீத்தா அதே அதிர்ச்சியுடன் அவளை பார்க்க,
” மிருதுளா சித்தி உங்ககிட்ட பேசுனத நான் கேட்டுட்டேன் அத்தை ” என்றதும் ப்ரீத்தா ஒவ்வொன்று அழுது விடவும், அவரைத் தாங்கி பிடித்து கட்டிலில் அமர வைத்தவள்,
” ப்ளீஸ் அத்தை அழாதீங்க, பழசை பேச வேண்டாம் நான் போயிடுறேன். சித்தி சொன்னது போல நீங்க அர்ஜுனுக்கும் ஜுவாலாவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க. எல்லாம் சரியானதும் நான் வரேன். இந்த உண்மை உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரியட்டும், எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் தெரிய வேண்டாம். சும்மா நான் போனா அர்ஜுன் கண்டிப்பா தேடி வருவார், அதனால என்னோட டேபிள்ள வேற ஒருத்தரை விரும்புறதா, அவர் கூட போக போறதா லெட்டர் எழுதி வச்சிருக்கேன். அப்பதான் அவருக்கு என் மேல வெறுப்பு வரும், என் மேல வெறுப்பு வந்தா தான் ஜூவாலா கூட வாழ்வாரு ” என்றவள்,
” அழுதுட்டே இருக்காதிங்க அத்தை என்னை பத்தி கவலைப் படாதீங்க, என் ஃப்ரண்ட் சந்தியா வெளியில தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ கூட அவளோட சொந்த ஊருக்கு நான் போயிடுவேன், அங்க கொஞ்ச நாள் இருக்கேன், இங்க எல்லாமே நார்மல் ஆனதும் சொல்லுங்க நான் வந்துடுவேன். உங்கள பிரிஞ்சு எனக்கு ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது” என்றவள் அழும் பிரீத்தாவை மீண்டும் ஒருமுறை அணைத்து விடுவித்து விட்டு வீட்டை விட்டு வெளியேற, மதுவை தடுக்க முடியாத தன் நிலையை எண்ணி வேதனையுற்ற பிரீத்தாவின் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்தது.
@@@@@@@@@@@
நிலுவையில் உள்ள தன் பணிகளை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடிய தருணம், ஆதித்யாவின் அலைபேசி வைப்ரேஷனில் உறுமியது.
யோசனையுடன் அலைபேசியை தன் கையில் எடுத்தவன், வாட்சப்பில் புதிய எண்ணில் இருந்து வந்திருந்த
குறுஞ்செய்தியை புருவம் சுருக்கி பார்த்தவன், அதை ஓபன் செய்த பொழுது அவனது கண்கள் கோபத்தில் சிவந்தது.
அப்பொழுது உடனே ஆதித்யாவுக்கு அழைப்பு வர அழைப்பை ஏற்ற ஆதித்யா,
” சிவகுரு நீ உன் எல்லைய மீறிட்ட டா ” அடி தொண்டையில் இருந்து சீறினான்.
அதைக் கேட்டு எதிர் முனையில் இருந்த சிவகுரு,
” அப்படி தான் டா செய்வேன் உன்னால முடிஞ்சத செய்டா. உன் காதலி என் கையால கொஞ்சம் கொஞ்சமாக சாக போறா ஆதி. அக்கறை இருந்தா வந்து கூட்டிட்டு போ ” என்று கூறி எக்காளமாய் சிரிக்க,
” உன்னை போட்டுட்டு அவளை கூட்டிட்டு போறேன் டா ” என்று கர்ஜித்தான் ஆதித்யா.
– அரிமா வருவான்…
அரிமா – 6
written by Competition writers
ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க,
“ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார்.
” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன்,
” நான் ஒன்னும் கிராண்டா வேணும்னு சொல்லலையே மாமா, சிம்ப்பிளா நம்மளோட வீட்டிலயே பண்ணிக்கலாம்ன்னு தானே சொல்றேன். நம்ம கம்பெனி ஸ்டாப்ஸ், என்னோட ஃப்ரெண்ட்ஸ் அப்புறம் நம்மளோட க்ளோஸ் ரிலேடிவ்ஸ் இவங்க மட்டும் போதும். நம்ம வீடே பெருசா அரண்மனை போல தானே இருக்கு, எப்படியும் ரிசப்ஷன கிராண்டா தான பண்ண போறோம் அப்புறம் என்ன?”
“இவ்வளவு சிம்பிளா அவசர அவசரமா ஏன் பண்ணனும், கொஞ்சம் பொறுமையாவே பண்ணலாமே.” என்றார் ராம்குமார்.
” இதுல காரணம்னு எதுவும் இல்லை பா, பண்ணனும்னு தோனுது பண்ணிடுவோமே. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க எல்லா ஏற்பாடும் நானும் மாறனும் பார்த்துகிறோம் . நீங்களும் மாமாவும் நேர்ல கூட போக வேண்டாம், ஃபோன்ல இன்வைட் பண்ணுங்க, வர்றவங்க வரட்டும் பாத்துக்கலாம் பா” என்றான் அர்ஜுன்.
அப்பொழுது,
“ஆனா அர்ஜுன் ” என்று ஏதோ சொல்ல வந்த ராம்குமாரின் கரம் மீது தன் கரத்தை வைத்த பிரீத்தா,
“அர்ஜுன் தான் அவ்வளவு சொல்றானே பண்ணிடலாம்ங்க, அவன் சொல்றது போல ரிசப்ஷன நல்லா விமர்சையா பண்ணிடலாம்” என்க அதேநேரம்,
“ஓகே சொல்லிடலாம் ராம், அர்ஜுன் தான் சிம்பிளா போதும்ன்னு சொல்லிட்டானே. பணம் கொடுத்தா வேலை செய்யறதுக்கு ஆளுங்க இருக்காங்க அப்புறம் என்ன? ” என்று அருள் நிதியும் சொல்லவும் யோசனையில் அமர்ந்திருந்த ராம்குமார் ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க தோன்றாது சரி என்று தன் சம்மதத்தை தெரிவித்தார்.
ராம்குமார் சம்மதம் தெரிவித்ததும் மகிழ்ச்சியுடன் எழுந்து கொண்ட ப்ரீத்தா, தன் மகனையும் மதுவையும் அதே சந்தோஷத்துடன் வாழ்த்து கூறி கட்டி தழுவிக்கொள்ள, கண்ணீரை அடக்கியபடி நின்றிருந்த தன் மகளை பார்த்துவிட்டு, சிரித்த முகமாக நின்றிருந்த அர்ஜுன் பிரீத்தாவை வன்மத்துடன் நோக்கினார் மிருதுளா.
அனைவரும் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாது அதிர்ச்சியுடன் நின்றிருந்த மதூவுக்கு, அப்பொழுது பார்த்து தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரவும், சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்றவள்,
” சொல்லுங்க யாரு ” என்று கேட்ட நொடி, ” ஹலோ மதி என்று தன் காதில் கேட்ட அழுத்தமான குரலில் பெண்ணவளின் இதயம் நின்று துடிக்க, மதி என்ற விழிப்பிலே அழைத்தது யார் என்று அவன் சொல்லாமலே கண்டு கொண்ட மதுமதிக்கு, பேச்சே வரவில்லை.
‘ இப்ப ஏன், இவரு கால் பண்ணி இருக்காரு, என் நம்பர் எப்படி கிடைச்சிருக்கும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,
“ஹலோ மதி ஆர் யூ தேர்” எதிர் முனையில் இருந்த ஆதித்யாவின் விழிப்பில் சுயம் பெற்றவள்,
“ஹான் சொல்லுங்க என்னாச்சு கால் பண்ணி இருக்கீங்க என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது ” சிறு தடுமாற்றத்துடன் வினவினாள்.
” அதெல்லாம் முக்கியம் இல்ல, நான் இப்ப சொல்லப்போறத மட்டும் கவனமா கேளுங்க, கொஞ்ச நாளைக்கு ” என்று ஆதித்யா ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்க,
” என்னாச்சு மது தனியா இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டபடி அங்கே வந்தான் அர்ஜுன்.
அப்பொழுது, ” ஹான் தெரிஞ்சவங்க கூட பேசிட்டு இருந்தேன் ” என்று அர்ஜுனிடம் கூறியவளவோ, அலைபேசியில் இருந்த ஆதித்யாவிடம்,
” நான் அப்புறமா பேசறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.
மதுமதிக்கு ஆதித்யாவுடம் பேசுவதில் ஒரு பிரச்சனையும் கிடையாது, ஆனால் அர்ஜுன்? அவனை எண்ணும் பொழுது தான் தயக்கமாக இருந்தது. ஆதித்யா என்று வரும் பொழுது அர்ஜுன் காட்டும் கண் மண் தெரியாத கோபமும் அவன் விடும் வார்த்தைகளும் தான் பெண்ணவளுக்கு ஐயத்தை கொடுக்க அதனாலே அழைப்பை உடனே துண்டித்திருந்தாள்.
தான் சொல்ல வருவதை கூட கேட்காது, அழைப்பை துண்டித்த மதுமதியை எண்ணி கோபத்தில் நெற்றியை நீவினான் ஆதித்யா.
அப்பொழுது, ” என்ன ஆதி பேசிட்டியா?” என்று வினவினான் நாகா.
” அப்புறம் பேசுறேன்னு ஃபோன வச்சுட்டா ” என்றான் ஆதித்யா. அதைக் கேட்டதும் நாகாக்கு கோபம் வந்துவிட,
” இதெல்லாம் உனக்கு தேவையா ஆதி, நீ யாரு உன் ரேன்ஞ் என்ன? நீ அவ கிட்ட பேசணுமா என்ன? அவளை விடு, அவளுக்கு ஆபத்துன்னா அவளை பார்த்துக்க அவ வீட்டு ஆளுங்க இருக்காங்க, நீ இனிமே அவ கிட்ட பேசாத” என்ற நாகா அங்கிருந்து சென்றுவிட, பால்கனியின் கம்பிகளை இறுக்கமாக பற்றியிருந்த ஆதித்யாவின் விழிகள், இருண்ட வானில் ஒளிர்ந்து கொண்டிருந்த முழுமதி மீது பதிந்திருந்தது.
@@@@@@@@@
” பேசணும்னா பேசிட்டு வா மது” என்ற அர்ஜுனிடம்,
” இல்ல நான் அப்புறமா பேசறேன் ” என்றாள் மது.
” என்னாச்சு மது ஒரு மாதிரியாக இருக்க, கல்யாண விஷயம் பேசும்போது தனியா வந்துட்ட, உனக்கு விருப்பம் இல்லையா என்ன? ” அவளது விழிகளை பார்த்தபடி கவலையுடன் வினவினான் அர்ஜுன்.
” அப்படி எல்லாம் எதுவும் இல்லை அர்ஜுன், அவசர அவசரமா பண்றதுக்கு கொஞ்சம் டைம் எடுத்து பண்ணிக்கலாமேன்னு தான்”
” நான் உன்னை அடிச்சதுல இன்னுமே என் மேல கோபமா இருக்கியா மது” அர்ஜுன் அவ்வாறு கேட்டதுமே, மதுவின் கண்களில் நீர் கோர்த்து விட,
“சாரி மது என்னதான் சாரி சொன்னாலும் நான் செஞ்சது தப்பு இல்லன்னு ஆகிடாது, ஆனா சாரி சொல்றதை விட வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.
என்னன்னு தெரியல ரெண்டு பேரும் ரொம்ப விலகி இருக்கிறது போலவே பீல் ஆகுது, அதனால தான் நமக்குள்ள இப்படிப்பட்ட பிரச்சனை வருதோன்னு தோனுது கல்யாணம் பண்ணிக்கலாம் மது.
எனக்கு பிடிக்காததை மட்டும் எப்பவுமே செய்யாத , மத்தபடி எனக்கு உன்கிட்ட எந்த பிரச்சனையும் இல்லை. என்னை நம்பு நாம நிச்சயம் ஹப்பியா இருப்போம். அப்புறம் மது நான் ஆல்ரெடி சொன்னதுதான் இனிமே அந்த ஸ்கூல் போறத பத்தி நீ யோசிக்காத, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அது சரி வராது.
புரிஞ்சிக்குவன்னு நினைக்கிறேன். சரி வா தூங்க போகலாம் நாளைக்கு ஷாப்பிங் போக வேண்டி இருக்குல” என்றவன் அவளது பதிலை கூட கேட்காது அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
எல்லாம் சரி இந்த பள்ளிக்கூட விஷயம் மதுவுக்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் இப்பொழுது இருக்கும் நிலைமையில் இதைப் பற்றி பேசி பிரச்சனை செய்ய விரும்பாத பெண்ணவள் அமைதியாக இருந்துவிட, அவளுக்கு இப்பொழுது ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்பதும் மறந்து போயிருக்க, ஒரு வித கவலையுடனே மெத்தையில் படுத்து கண் மூடினாள்.
ராயல் மாலில், வந்தவுடனே மதுக்கு தேவையானவற்றை முதலிலே வாங்கி விட்டிருந்ததால், அனைவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்வதில் மும்மரமாக இருந்தனர்.
அந்நேரம் எதற்சயாக அங்கே ஆதித்யா யாருடனோ பேசியபடி கீழே சென்று கொண்டிருப்பதை மேல் தளத்திலிருந்து பார்த்த மதுவுக்கு, முந்தின நாள் அவன் தனக்கு அலைபேசியில் அழைத்தது இப்பொழுது நினைவிற்கு வர,
“இப்ச் நேத்து பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டு, திரும்ப கூப்பிடுறேன்னு கூப்பிடவும் இல்லை என்ன நினைச்சிருப்பாரு” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள்,
நேரிலேயே அவனிடம் பேசி விடலாம் என்று எண்ணி, தன்னுடன் இருந்த ஜுவாலாவிடம் இப்பொழுது வந்து விடுவதாக கூறிவிட்டு, எஸ்கலேட்டரை நோக்கி வந்த மது, ஒற்றை ஃபிலீட்டில் விடப்பட்டிருந்த புடவையின் முந்தானை, அதில் மாட்டியது கூட தெரியாது அவசர அவசரமாக எஸ்கலேட்டரில் கால் வைத்தாள்.
சேஃப்டி பின்னின் பாதுகாப்பில் ஜாக்கெட்டுடன் இணைந்திருந்த முந்தானை, நகரும் படிக்கட்டில் சிக்கியதில் ஜாக்கெட்டை கிழித்துக்கொண்டு உள்ளே இறங்கும் நேரம், சுதாரித்த பெண்ணவளோ தானும் அதனுடன் போராடிக் கொண்டிருக்க, வலிய கரம் ஒன்று வேகமாக அவள் தோள் தொட்டு, ஜாக்கெட்டில் இருந்த சேஃப்டி பின்னை விடுவித்தது.
பின்பு அடுத்த நொடி அவளின் இடை தழுவி, புடவையை உருவி கொண்டிருக்க, அந்த வலிய கரத்திற்கு சொந்தக்காரனான ஆதித்யாவைத்தான் மதுமதி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஆதித்யா மதுமதியை பார்க்கவில்லை, தன் கரத்தில் மீதம் இருந்த புடவையை அவன் வீசியதும் அது எஸ்கலேட்டரின் உள்புறம் சென்று விட, மொத்த கூட்டமும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, மதுமதியின் கலங்கிய விழிகளை இப்பொழுது ஏறிட்டுப் பார்த்தவன்,
” ஸ்டெப்ஸ் பாத்து வா” என்று பற்களை கடித்த படி கூற, ஆனால் அவளோ கலங்கிய விழிகளுடன் அவனது விழிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, இறங்கும் நேரம் நெருங்கியும் அவள் அசையாது இருப்பதை கவனித்த ஆதித்யாவோ, நொடி தாமதிக்காது அப்படியே அவளது இடைப்பற்றி தூக்கியவன் வேகமாக அவளுடன் அருகில் இருந்த டிரையல் ரூமிற்குள் நுழைந்தான்.
” அப்படியே நிக்கிற என்னதான் நினைச்சிட்டு இருக்க? ஹான், எப்பவும் உன் பின்னாடியே வந்துட்டு இருக்க முடியாது, கொஞ்சம் கூட கவனம் இல்லை. ஃபோன் பண்ணினா பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ற.” கர்ஜிக்கும் குரலில் பற்களை கடித்த படி வினவினான் ஆதித்யா.
ஆனால் மது மதியோ அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, அவளது நிறைந்த கண்களில் இருந்த கண்ணீர் துளிகளோ, அவளது இமையைத் தொட்டு கீழே விழ காத்திருக்க, ஒரு வார்த்தை பேசாது அப்படியே சிலையென நின்றாள் மதுமதி.
புடவை இன்றி அவன் முன்னால் தான் நிற்கும் கோலம் கூட அவள் கருத்தில் பதியவில்லை, தன்னை மறைத்துக் கொள்ளும் முயற்சி கூட செய்யாது இதயம் வேகமாக துடிக்க, தற்காலிகமாக செயலிழந்த புத்தியுடன் பெண்ணவள் நின்றிருந்தாள்.
அவள் இப்பொழுது இருக்கும் கோலத்தை, வேறு யாராக இருந்தாலும் சபலத்துடன் பார்த்திருக்க கூடும், ஆனால் ஆதித்யாவின் விழிகள் அவளது விழிகளைத் தாண்டி எங்கும் செல்லவில்லை.
அஞ்சிய அஞ்சன விழிகளும், அரிமா அவனின் கனல்விழிகளும் நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டிருந்தன. ஆதித்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இவ்வளவு நடந்து இருக்கின்றது அவ்வளவு திட்டுகிறான், ஆனால் ஒரு வார்த்தை பேசாது தன்னையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பவளிடம் இதற்கு மேல் கோபம் கொள்ள விரும்பாதவன், வேகமாக தான் அணிந்திருந்த மேல்கோட்டை கழட்டி அவளிடம் நீட்டினான்.
பின்பு அவளது நடுங்கும் கரத்தை பார்த்து என்ன நினைத்தானோ தானே அதை வாங்கி முன்புறமாக அவள் மேல் தன் விரல் நகம் கூட படாது போர்த்தி விட, இப்பொழுது அவளது கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
இவ்வளவு நேரம் கழித்து இப்பொழுதுதான் நிதானத்திற்கு வந்திருப்பாள் போலும் தலையை தாழ்த்திக் கொண்டு இன்னும் அழுதாள்.
அவனோ அவளையும் அவளது கண்ணீரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, வெயிட் பண்ணு என்றவன், வேகமாக டிரையல் ரூமை விட்டு வெளியேறி, சில நிமிடத்தில் கையில் ஒரு ஆடையுடன் உள்ளே வந்து அதை அவளிடம் நீட்டி,
“சீக்கிரம் வியர் பண்ணு ” என்றவன் தலையை கோதியபடி திரும்பி நின்றுக்கொள்ள, சில நிமிடத்தில் அவன் வாங்கி வந்த மேக்சியை தலை வழியாக அணிந்து கொண்டவள் தன் குரலை செருமவும், திரும்பி அவள் முகம் பார்த்தவன்,
“நேத்து ஏன் திரும்ப கால் பண்ணல” நிதானமாக வினவினான்.
“மறந்துட்டேன்” உள்ளே சென்ற குரலில் மெதுவாக கூறினாள்.
“இங்க பாரு கொஞ்ச நாளைக்கு நீ எங்கையும் வெளிய போகாத. ஒவ்வொரு தடவையும் உனக்கு என்ன ஆகுதுன்னு நான் பாத்துட்டே இருக்க முடியாது. சோ கவனமா இரு. எல்லாம் கொஞ்ச நாள் தான் சீக்கிரம் சரி பண்ணி விடுவேன்.” என்க, எந்த கேள்வியும் கேட்காது சரி என்றாள்.
“சரி நீ மட்டுமா வந்த “
” இல்ல வீட்ல எல்லாரும் வந்திருக்காங்க, மேல ஷாப்பிங் பண்ணிட்டு இருக்காங்க, நான் உங்கள பார்த்ததும் பேசலாம்னு நினைச்சு வந்தேன் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு” தன் கீழ் அதரத்தை பற்களால் கடித்துக் கொண்டு அழுகையை அடக்கியபடி குழந்தை போல அவள் கூறவும், ஆதித்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட,
“இட்ஸ் ஓகே மதி இட்ஸ் ஹப்பன்ஸ், சரி தனியா நிக்காத அவங்க கூட போ” என்று ஆதித்யா தன்மையான குரலில் கூறவும், அவளும் வெளியேறிய சமயம்,
” ஒரு நிமிஷம் மதி” என்ற ஆதித்யா, சற்றென்று அவள் பின்னால் மண்டியிட்டு, கொஞ்ச தூரத்திற்கு மேலே தூக்கி இருந்த அவள் மேக்சியை கீழ் நோக்கி இழுத்து விட்டு சரி செய்தவன், அப்படியே எழுந்து அவள் முன்பு வந்து அவளது கைகளில் இருந்த தனது கோட்டை எடுக்க வர, அது புரியாது அவளோ பயத்தில் அவனது கோட்டை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரண்டு அடி பின்னால் நகரவும்,
“என் கோர்ட் மா” என்றவன் அவளது கையில் இருந்த கோட்டை வாங்கியிருக்க, இப்பொழுது அவளது கரம் நடுங்குவது அவன் கண்ணுக்கு நன்கு தெரிந்தது.
ஒரு சில வினாடிகள் அவள் விழிகளையே பார்த்திருந்த ஆதி, சட்டென்று அவளை நெருங்கி,
” மறுபடியும் சொல்றேன் கொஞ்ச நாளைக்கு கவனமா இரு மதி, வெளில போகாத” என்று தனது கோர்ட்டை அவள் மீது போர்த்தி விட்டபடி கூறி, பயத்தில் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளது மென் கரங்களை எடுத்து அவள் அணிந்திருக்கும் தனது கோட்டின் இரு பாக்கெட்டுகளிலும் நுழைத்து விட்டு, அவள் சொல்லாமலே அந்நேரம் அவளுக்கு தேவைப்பட்ட பாதுகாப்பு உணர்வை கொடுத்துவிட்டே அங்கிருந்து சென்றிருந்தான் ஆதித்யா.
–அரிமா வருவான்
Newer Posts