
Tag:
Romance
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2
written by Competition writers
அத்தியாயம் 2
மும்பை,
காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான் நம்ம ஹீரோயின் கவிநிலா.
அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா பார்க்கவும் சின்னதா இருக்கா செய்வதும் சின்ன பிள்ளைத்தனமா இருக்கா இவள கட்டிக்கொண்டு யாரு தான் பாடுபட போறாங்களோ பாவம் அந்த பையன்னு பொலம்பிட்டு இருக்காங்க.
சரியாக 9 மணி ஆனதும் அவளது அறைக் கதவு திறந்தது. அங்கிருந்து ஜீன்ஸ் பேண்ட் குர்த்தான்னு மாடர்ன் மங்கையாக இறங்கி வந்தாள் கவி. அவளோட அம்மாவும் ஏன் கவி இப்படி பண்ற ஒரு நாளைக்காச்சும் சீக்கிரமா எந்திரிச்சு வரியா எப்போவும் இப்படி கிளம்பி லேட்டா போனா எப்படி இன்டர்வியூ கரெக்ட் டைம்க்கு அட்டென்ட் பண்ணுவ அப்புறம் வந்து வேலை கிடைக்கல ன்னு மட்டும் பொலம்புறது அப்படின்னு சொல்றாங்க.
அதற்கு அவள் அதனால் தான்மா இன்னைக்கு 12 மணிக்கு தான் இன்டர்வியூ நான் 9 மணிக்கே கிளம்பிட்டேன் இன்னைக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு உறுதியா சொல்றாள். சரி சரி அதை நம்ம ஈவ்னிங் பார்ப்போம் இப்போ சாப்பிட்டுட்டு கிளம்புன்னு கீதா சொல்றாங்க. அவரும் ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை செய்ராங்க அதுவும் வீட்டில் இருந்து ஒரு ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கும்.
கவியும் சாப்பிட்டு விட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் இன்டர்வியூக்கு சென்று விட்டாள். கீதாவும் வீட்டை பூட்டி விட்டு ஸ்கூலிற்கு சென்றார். டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு நின்று நின்று எப்படியோ 11.40க்கு ஆஃபிஸ் வந்துவிட்டாள். அது ஒரு ஐந்து மாடி கட்டிடம் அதில் ஐந்தாவது மாடியில் எஸ்.கே டிசைனிங் ஹவுஸ் அப்படின்ற கம்பெனியில் தான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்டர்வியூ இருந்தது.
நம்ம ஹீரோயின் ஃபேஷன் டிசைனிங் படிச்சி முடிச்சிட்டு ரெண்டு மூணு கம்பெனில கொஞ்ச நாள் வேலை செஞ்சிட்டு பிடிக்காமல் மாறி மாறி இப்போ இங்கே வந்திருக்கா. இவ்வளவு நாட்கள் அட்டென்ட் பண்ணுன இடம் எல்லாமே அவள் லேட்டா போனதுனால தான் கிடைக்காம போச்சு. ஏன்னா அவளோட டிசைன்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கும் அதே மாதிரி அவ படிப்புலையும் 91% வச்சிருந்தாள். அதனால் ஈஸியாக எங்கே வேணும்னாலும் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
இப்போதும் அதே மாதிரி இன்டர்வியூ நல்லா அட்டென்ட் பண்ணிட்டு வேலையும் முடிவு செய்துவிட்டனர். அடுத்த மாதத்தில் இருந்து வந்து சேர்ந்துக் கொள்ள சொன்னார்கள். அவளும் சந்தோஷமாக ஸ்வீட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள். அங்கே சென்றால் ஆறு ஆகியும் அவளுடைய அம்மா வரவில்லை. அம்மா இன்னும் ஏன் வரவில்லைன்னு ஃபோன் பண்ணி பார்க்கிறாள்.
ஃபோன் போகவே இல்லை சரின்னு ஸ்கூலில் பார்க்கலாம்னு கிளம்பினாள் அப்போது ஒரு தெரியாத நம்பரில் இருந்து ஃபோன் வந்தது யாருன்னு எடுத்து பேசினாள். அதை எடுத்து பேசியதும் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டி ஓடியது. இப்போ எங்கே வரனும்னு கேட்டுட்டே வேகமாக போறாள்.
அந்த ஏரியாவில் உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடலிற்கு சென்று ஸ்கூட்டியை சரியாக கூட நிறுத்தாமல் வேகமாக உள்ளே ஓடினாள். அங்கு ரிசப்ஷன் சென்று கீதான்னு அழுதுட்டே பேர் சொல்றா. அவங்களும் ரெண்டாவது மாடியில் ஐ.சி.யூவில் இருக்காங்கன்னு சொல்லி முடிப்பதற்குள் லிஃப்ட் கூட பார்க்காமல் படியில் ஓடினாள்.
அங்கே அவளோட அம்மா கூட வேலை செய்யும் டீச்சர் ஒருவர் இருந்தார். அவரிடம் அம்மாக்கு என்னாச்சு ன்னு கேட்கிறாள். அவரும் நல்லாத்தான் பேசிக்கொண்டு இருந்தார் தீடீர்னு மயங்கிட்டாங்கன்னு சொல்றாங்க. அப்போது டாக்டர் வெளியே வந்தார். அம்மா எப்படி இருக்காங்க இப்போ ஓ.கே தான டாக்டர் ன்னு கேட்கிறாள். நீங்க அவங்களோட பொண்ணா வாங்க உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க.
அவளும் டாக்டர் ரூம்க்கு போனாள். அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிறார். இல்லை டாக்டர் அம்மா ஏதோ லோ பிரசரால தான மயங்கிட்டாங்க சரியாகிடும்ல னு சொல்றா. அதற்கு அவர் அவங்களுக்கு பிளட் கேன்சர் கடைசி ஸ்டேஜ் இன்னும் எத்தனை நாள் இருப்பாங்கன்னு சொல்ல முடியல இது உங்களுக்கு முன்னாலே தெரியும்னு நினைச்சேன். இனிமே நம்ம எதுவும் பண்ண முடியாது மா அப்படின்னு சொல்லிடுறார். (எல்லாம் ஹிந்தி தான் நமக்கு தமிழில்)
அவ அப்படியே ஷாக் ஆகி இருக்காள். அப்படியே அழுதுகொண்டே இதுலாம் அம்மாக்கு தெரியுமா னு கேட்கிறாள். அவங்களுக்கு இரண்டு வருடங்கள் முன்பே தெரியும் ஆனால் உங்களுக்கு தான் சொல்லல. அப்போது இருந்தே மருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாங்க னு சொல்றார்.
இன்னும் கொஞ்சம் நாள் இங்கே தான் இருக்கணும் அவங்களோட ஆசைகள் னு எதுவும் இருந்தால் கேட்டு நிறைவேற்ற பாருங்கள்னு சொல்லி விட்டு போய்டுறார். அவளும் அமைதியாக எழுந்து போய் ஐ.சி.யு. கண்ணாடி வழியாக அம்மாவ பாத்துட்டு வந்து அங்க போட்டு இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தாள்.
சோழபுரம்,
நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறமா எப்போதும் போல சோழன் தன்னுடைய வேலையை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கான். அவனுடைய அப்பாவும் தம்பியும் கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். பொண்ணோட நம்பர் கிடைக்குமா னு சோழன் தான் தேடிக் கொண்டு இருந்தான். ஆனால் அதை கிடைக்க விடவில்லை அவனோட அப்பா.
சோழனுக்கு ஃபோன் நம்பர் கிடைக்குமா கவியோட அம்மா கடைசி ஆசை என்னவா இருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.
6. யாருக்கு இங்கு யாரோ?
written by Competition writers
அத்தியாயம் 6
ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா?
என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி…
“நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும் போது கூட சின்ன குழந்தை மாதிரி தான் டி தெரியுற..” என்றவள் கன்னம் வருட… அமுதினியின் உடலோ மிகவும் சில்லென்று இருந்தது.
“என்ன இது? அகல்யா இவளுக்கு காய்ச்சல்னு சொன்ன.. ஆனா உடம்பு ஏன் இவ்வளவு சில்லுன்னு இருக்குது?” என்று யோசித்த ஆதினி..
“அம்மு… அம்மு… இங்க என்னை பாரு…” என்று அவளை அழைத்தவள். அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாமல் போகவே..
“அம்மு…: என்றவாறு அவளை தன் பக்கம் திருப்பிய ஆதினி அப்போதே அமுதினியின் கை மணிக்கட்டில் இருந்து வழியும் ரத்தத்தை கண்டால்… ஒரு நொடி அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த ஆதினி…
“அ..ம்..மு.. அம்.. அம்மு…” என்று குரல் நடுங்க அழைத்தவள். பெண்ணவளின் கன்னம் தட்ட அப்போதும் அவள் கண் விழிக்கவில்லை என்றதும்…
“அம்மு…” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழிய அந்த அறையே அதிரும்படி கத்தினாள்… ஆதினியின் குரல் கேட்டு ஒரு நொடி பயந்து போனா அகல்யாவும் என்ன ஆனதோ ஏதேனதோ என்று மிகுந்த பதட்டத்தோடு அவள் அருகே ஓடி வந்தவள்..
“ஏய்… ஆதி… என்னாச்சு? எதுக்கு இப்போ இப்படி கத்துற?..” என்று கேட்டவாறு அந்த அறைக்குள் நுழைந்த அகல்யாவும் அமுதினி நிலை கண்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனால்…
“ஏய்… அம்மு…” என்று அவளும் அழுகையோடு அவள் அருகே வரே
“அகல்யா… மொத போய் ஃபர்ஸ்ட் எய்ட் கிட்.. எடுத்துட்டு வா.. நமக்கு டைம் இல்ல ஆல்ரெடி நிறைய ரத்தம் போயிடுச்சு” என்று கூறிய ஆதினி அமுதினியின் மணிக்கட்டில் இருந்து ரத்தம் வராதவாறு பிடித்து கொள்ள.. அகல்யாவும் ஓடி சென்று தன் அறையில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்ட எடுத்து வந்து ஆதினி இடம் கொடுக்க… அவளும் உடனடியாக அதில் இருந்த பொருட்களைக் கொண்டு முதலில் அமுதினிக்கு முதலுதவி செய்தால்… பின் ஒரு சீட்டில் சில மருந்துகளை எழுதி அகல்யாவிடம் கொடுத்தவள்..
“சீக்கிரமா போய் இதை வாங்கிட்டு வா… ரொம்ப அர்ஜென்ட் லேட் பண்ணாத” என்ற ஆதினி கூற அவளும் அந்த சீட்டை வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று அதில் இருந்தவற்றை அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தவள்… தன் போனிலிருந்து யாருக்கோ அழைக்க அதுவோ எடுக்கப்படவில்லை..
“ இவன் ஒருத்தன்… இந்த மாதிரி நேரத்துல தான் போன எடுக்க மாட்டான் இடியட்” என்ற திட்டியவாரே அங்கு நடந்த அனைத்தையும் அவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்தவள். தான் வாங்கி வந்த அனைத்தையும் ஆதினியிடம் கொடுக்க ஆதினியும் அதை வைத்து அமுதினிக்கு ட்ரீட்மென்ட் செய்தாள்.. தன் தோழிக்கு என்னானதோ எதனோதோ என்று தெரியாமல் தவிப்போடு அகல்யா ஹாலில் அமர்ந்திருக்க, அமுதினிக்கான ட்ரிட்மெண்டை முடித்த ஆதினி அந்த அறையில் இருந்து வெளியே வர..
“ ஆதி என்ன ஆச்சு? அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? நல்லா இருக்கா இல்ல?” என்று அகல்யா மிகுந்த பதட்டத்தோடு கேட்க, கண்கள் சிவக்க கோபத்தோடு அகல்யாவை நிமிர்ந்து பார்த்த ஆதினி..
“அத நான் தான் உன் கிட்ட கேக்கணும்? என்ன நடக்குது இங்க? அவ எதுக்கு இப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தா? உன்னை நம்பி தானே அவளை நான் இங்கே விட்டுட்டு போனேன்? சொல்லு அகல் உன்னை நம்பி தானே விட்டுட்டு போனேன்? அவ எதுக்கு இப்படி பண்ணுனா கண்டிப்பா உனக்கு தெரியாம இருக்காது சொல்லு அகல்” என்று ஆதினி மிகுந்த கோபத்தோடு கேட்க அகல்யாவுக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.. சொல்ல போனால் அவளுக்கும் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாதே…
அகல்யா திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பதை கண்டு மிகுந்த கோபம் உற்ற ஆதினி ஓங்கிய அகல்யாவின் கன்னத்திலேயே ஒரு அறை விட்டால்…
அந்நேரம் சரியாக அந்த வீட்டிற்குள் நுழைந்த அசோக் அகல்யாவை தன் கைகளில் தாங்கி பிடிக்க.. அகல்யாவோ தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆதினியை சிறு பயத்தோடு பார்த்தால்..
“ சொல்லு அகல்… கண்டிப்பாக உனக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது அவ இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்?” என்று ஆதினி சற்றும் கோபம் குறையாமல் கேட்க
“ ஆதி… இந்த கேள்விக்கு பதில் உன் தங்கச்சி கிட்ட தான் இருக்கு… நீ அவ கிட்ட போய் கேளு… அதை விட்டுட்டு இவளை அடிச்சா என்ன அர்த்தம்?” என்று மிகுந்த கோபத்தோடு கேட்டான் அசோக்..
“ ஆதி சத்தியமாலுமே எனக்கே என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாதுடி… எனக்கு தெரிஞ்சதெல்லாம் அவ எங்க ஆபீஸ்ல ஒரு பையன லவ் பண்ணா.. அந்த பையனுக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ்… நேத்து கூட அவன்கிட்ட பேசி என்னோட லவ்வர் புரிய வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் அவன் கூட போனா ஆனா திரும்ப வரும் போது ஏதோ பித்து பிடித்தவ மாதிரி வந்தா… நான் அவகிட்ட பேச ட்ரை பண்ணப்போ அவ என்கிட்ட இதை பற்றி எதுவும் என்கிட்ட பேசல, அதுக்கு அப்றம் நானும் அவளை கேள்வி கேட்டு கஷ்ட்டப்படுத்த விரும்பல” என்று நேற்று நடந்த அனைத்தையும் அகல்யா ஆதினியிடம் கூற அதை அனைத்தையும் கேட்ட ஆதினிகோ தன் தங்கையின் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது.
“ போயும் போயும் தன்னை காதலிக்காத ஒருவனுக்காக தான் இப்படி செய்து கொண்டாளா?” என்று யோசிக்கையில் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
“ இங்க பாரு ஆதி… நானும் அம்மு கிட்ட எவ்வளவோ அவன் சரியில்ல.. நிறைய பொண்ணுங்க கூட அவனுக்கு ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்லிட்டேன். ஆனா அவ தான் அது எதையும் காதுலேயே வாங்கிக்காம நான் அவரை என் உயிருக்கு உயிரா லவ் பண்றேன் நீ சொல்ற மாதிரியெல்லாம் அவர் ஒன்னும் இல்ல, அவர் நல்லவர் வல்லவருன்னு சொல்லிட்டு.. நான் சொல்றத கொஞ்சம் கூட புரிஞ்சுக்கல.. அதோட விளைவு தான் இது” என்று அசோக் தன் பங்கிற்கு கோபத்தோடு கூற, ஆதினியோ இருவர் கூறியதையும் கேட்டு தன் தலையில் கை வைத்தவாறு அப்படியே சோஃபாவில் அமர்ந்து விட்டால்…
“ ஆதி இப்போ அவளுக்கு என்ன ஆச்சு? இப்போ அவ நல்லா இருக்கா இல்ல? ஒன்னும் பிரச்சனை இல்ல?” என்று தன் தோழியின் மீது அக்கறையோடு அகல்யா கேட்க
“ இப்போ அவ நல்லா இருக்கா… ஆனா இன்னும் கொஞ்சம் லேட்டா மட்டும் நம்ப வந்து இருந்தா அவளை கண்டிப்பா காப்பாத்திருக்க முடியாது.. பிழைக்கவே கூடாது அப்படிங்கிற எண்ணத்தோட அவ கையை ரொம்ப ஆழமா கட் பண்ண ட்ரை பண்ணி இருக்கா… ஆனா அவளோட நல்ல நேரமோ என்னமோ அவ சரியா கட் பண்ணல.. இன்னும் ஒரு இன்ச் ஆழமா கட் பண்ணி இருந்த கூட, கண்டிப்பா அவளை காப்பாற்றி இருக்க முடியாது” என்று ஆதினி கூற, அதை கேட்ட அகல்யாவுக்கு அமுதினியின் மீது கோபம் கோபமாக வந்தது.
அடுத்த மூன்று மணி நேரம் கழித்து அமுதினி கண் விழிக்க, அவள் முன் மிகுந்த கோபத்தோடு அகல்யா நின்றிருந்தாள்..
மெல்ல எழுத்து அமர்ந்த அமுதினி தன் கையை பார்க்க.. அதுவோ கட்டுக்கட்டப்படிருந்தது..
“ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா?” என்று அமுதினி கேட்க அடுத்த நொடியே ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அரை விட்ட அகல்யா.
“அதை எதுக்கு என்கிட்ட கேக்குறே? வெளிய ஒரு பைத்திக்காரி உக்காந்து இருக்க பாரு அவகிட்ட போய் கேளு” என்று கூறிய அகல்யா அமுதினியை முறைத்தவாறு அங்கிருந்து சென்று விட, அமுதினியோ புருவம் சுருங்க யோசித்தவள். மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி வெளியே ஹாலுக்கு வந்தவள். அங்கு தன் அக்கா இருப்பதை கண்டு மிகவும் அதிர்ந்து தான் போனால்.
“ஆ… ஆதி.. நீ… நீ இங்க என்ன பண்ற? எ… எப்போ வ.. வந்த?” என்று கேட்டவாறு அவள் தன் அக்காவின் அருகே செல்ல.. ஆதினியோ கண்கள் சிவக்க தன் முன் நிற்பவளை முறைத்தவள். சோபாவில் இருந்து எழுந்த வேகத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி பல்லார் என்று அறைந்தவள்..
“எவ்வளவு தைரியம்? யாரை கேட்டு டி நீ இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்த? எவனோ ஒருத்தனுக்காக செத்துப் போயிடலாம்னு முடிவு பண்ணுவியா? அப்போ என்னை நீ ஒரு நிமிஷம் கூட நினைச்சு பார்க்கலையா?” என்று கோபத்தோடு ஆதினி கேட்க, அமுதினியோ தன் அக்காவை கட்டிக்கொண்டு கதறி கதறி அழுக ஆரம்பித்தாள்.
“நான் ஏமாந்துட்டேன் ஆதி… என்னை அவன் ஏமாத்திட்டான்.. நான் அவனுக்கு வேண்டாமாம்..” என்று கூறியதையே திரும்ப திரும்ப கூறி அமுதினி அழுக, பெண்ணவளின் மனநிலையை புரிந்து கொண்ட ஆதினியோ அவளின் முதுகை ஆறுதலாக வருடி கொடுத்தால்..
“சரி… விட்டு.. பார்த்துக்கலாம் அவன் இல்லைன்னா என்ன? இந்த உலகத்துல வேற ஆள இல்ல? அவனை விட வேற ஒரு நல்ல பையன் கண்டிப்பா உன் லைஃப்ல வருவான்.. நீ நினைச்சு கூட பார்க்காத அளவுக்கு அவன் உன்னை லவ் பண்ணுவான்” என்று ஆதினி கூற
“இல்ல ஆதி… அப்படி யாரும் என் லைஃப்ல வரமாட்டாங்க, அப்படியே வந்தாலும் நான் அவங்களுக்கு தகுதியானவள் இல்ல…” என்று அமுதினி கூற
“ஏய்… லூசு.. உனக்கு என்ன பைத்தியமா? உன்னோட லவ் ஃபெயில் ஆகிடுச்சு அவ்வளவு தான்.. சொல்ல போன இது லவ்வே இல்ல ஜஸ்ட் ஒரு இன்பெக்சிவேசன்… இன்னும் கொஞ்ச நாளே நீ இதை மறந்துடுவே” என்று ஆதினி கூற
“இல்ல அக்கா… அது என்னைக்கும் நடக்காது.. நான் அவரை எப்போவும் மறக்கவே முடியாது.. ஒவ்வொரு தடவையும் நான் கண்ணை மூடும் போதும் அவரும் நானும் ஒன்னா இருந்த அந்த நிமிஷம் மட்டும் தான் வந்து போகுது… அப்படி இருக்கும் போது என்னால எப்படி ஆதி அவரை மறக்க முடியும்?” என்று அமுதினி கேட்க
“இல்ல.. இப்போ நீ என்ன சொல்ல வர? ஒன்னா இருந்தீங்க அப்படின்னா… என்ன அர்த்தம்?” என்று ஆதினி குழப்பத்தோடு கேட்க.. அமுதினியோ தயங்கி தயங்கி தங்கள் இருவருக்கும் நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
அமுதினியின் காதலை ஆதினி சேர்த்து வைப்பாளா? இருவரின் உறவை பற்றி தெரிந்தால் ஆதினியின் முடிவு என்னவாக இருக்கும்? அடுத்தவர்கள் தப்பு செய்தாளே மன்னிக்காத ஆதினி தன் தங்கையின் தவறை மன்னிப்பாளா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
யாருக்கு இங்கு யாரோ?
3. யாருக்கு இங்கு யாரோ?
written by Competition writers
அத்தியாயம் 3
எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்
அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..
“என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எதுக்கு இப்படி பண்ற? பாரு உன்ன பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க” என்றவள் தன் முன்னாள் நெற்றியில் இரண்டு கொம்புகளோடு முதுகில் அதன் திமிருக்கு அழகு சேர்க்கும் திம்மல்களை கொண்ட ஒரு கருப்பு நிற காளை நின்று இருக்க, இவ்வளவு நேரம் அந்த இடத்தை அமர்க்களம் படுத்திக் கொண்டே இருந்த அந்த காளையும் பெண்ணவளை பார்த்ததும் சிறு குழந்தையைப் போல் அவள் முன்னாள் அமைதியாக நிற்க,
“ என்னடா அமைதியா நிக்கிற எதுக்கு இப்ப இங்க வந்த?” என்றவள் மேலும் கோபமாக கேட்க அவளின் கோபத்தைக் கண்ட அந்த காளையோ தன் முன்னங்காலை மண்டியிட்டு அவள் முன்னாள் ஏதோ மன்னிப்பு கேட்பது போல் செய்கை செய்ய அதில் லேசாக புன்னகைத்தவள். மெல்ல குனிந்து அந்த காளையின் தலையை தடவியவள்.
“ஊர்ல திருவிழா ஏற்பட நடந்துகிட்டு இருக்கிறப்போ நீ இப்படி பண்ணுனா எப்படி சொல்லு பார்க்கலாம்… எல்லாரும் உன்ன பார்த்து பயப்படுறாங்க இல்ல இனி இன்னொரு தடவை இப்படி பண்ண கூடாது, புரியுதா?” என்றவள் அந்த காளையிடம் செல்லம் கொஞ்சு கொண்டிருக்க இதை பார்த்த அங்கிருந்த ஒருவன் தன் அருகில் பயத்தோடு நின்றிருந்தவனிடம்
“ என்ன அண்ணா இந்த புள்ள அந்த காளைகிட்ட செல்லம் கொஞ்சுக்கிட்டு இருக்கு, இங்குன அவன் அவன் டவுசர் அவுந்து போய் கிடக்கிறான். இந்த புள்ள அந்த காளையை கொஞ்சிக்கிட்டு இருக்கு” என்று கேட்க
“அது ஒன்னும் இல்ல மச்சான் இந்த ஊருக்கு நீ புதுசு இல்ல அதான் உனக்கு தெரியல, அதோ அங்க இருக்கே அந்த காளை மாடு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 70 ஜல்லிக்கட்டுல முதல் இடம் பிடித்த மாடு… அது போகாத ஜல்லிக்கட்டே கிடையாது. ஆனா, இதுவரைக்கும் ஒரு தடவை கூட இது புடிமாடு அப்படிங்கிற பேர் வாங்கினதே கிடையாது.” என்று அவன் கூற
“ என்ன மச்சான் சொல்றீங்க அப்படியா?… ஓ அதான் இப்படி எல்லாரையும் அது பந்தாடுதா?” என்று அந்த புதியவன் கேட்க
“ அது மட்டும் இல்ல மச்சான் இதோ நிக்குதே அந்த புள்ளைய தவிர அந்த மாட்ட வேற யாராலயும் அடக்க முடியாது. அந்த மாடு அந்த ஒத்த புள்ளையா தவிர வேற யார்கிட்டையும் அது அடங்கியும் போகாது, இந்தப் புள்ள தவிர அது பக்கத்துல யாரு போனாலும் குடல் சரிந்து கீழே தான் விழுகணும்… ஒரே குத்து தான் கொன்னுட்டு போயிடும், அப்படிப்பட்ட மாடு” என்றதும் சற்று பயந்தவன்.
“ ஆனா எப்படி இந்த புள்ள கிட்ட மட்டும் அடங்கி போகுது?” என்று அவன் குழப்பத்தோடு கேட்க
“பின்ன அடங்கி போகாம அந்த காளைக்கு அவ தான அம்மா, அது பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் கூட இருந்து பார்த்துக்கிறது அவ ஒருத்தி தானே” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கே தன் கதிரிடம் பேச்சு வார்த்தையை முடித்த ஆதிலட்சுமி கதிரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றவள். அதனிடத்தில் அதை கட்டிவிட்டு வீட்டிற்கு நுழைய…
“ உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? ஒரு தடவை சொன்ன நீ கேட்க மாட்டியா?” என்று அந்த கிழவி கோபத்தோடு வெத்தலையை இடித்த படியே கேட்க
“இங்குன பாரு கிழவி என்னோட கதிர பத்தி ஏதாவது பேசுனா அப்படியே வெத்தலையை இடிக்கிற மாதிரி உன்னை அதுல போட்டு இடிச்சுடுவேன்.. ஒழுங்கா உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு..” என்றவள் கோபமாக கூற
“அடேய்… பாத்தியா டா உன் மக என்னையா எம்புட்டு பேச்சு பேசுறான்னு, பொட்ட பிள்ளை மாதிரியே இருக்கா? போகும் போது ஏதோ அடக்கம் ஒடுக்கமா மகாலட்சுமி மாதிரி வீட்டை விட்டு போயிட்டு திரும்பி வரும் போது ஏதோ பத்து பேர் கூட சண்டை போட்டு வந்த மாதிரி நிற்கிற, பாவம் இவள கட்டிக்க போற அந்த பையன் ஆனா, இவள பத்தி தெரிஞ்சும் கட்டுனா இவளை தான் கட்டுவேன் ஒத்த கால்ல நினைக்கிறான்.. அதுக்கு மேல அவனுடைய அப்பங்காரன் என் வீட்டுக்கு மருமகளா வந்தா என் தங்கச்சி மகத்தான் வரணும்னு குவியாட்டம் போடுறான்… என்னை கேட்ட இந்த ஊரிலேயே எவனாவது வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து இவளுக்கு கட்டி வைங்க… சென்னைக்கு எல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று கூறிய ஆதியின் பாட்டி வெற்றிலையோடு சேர்த்து ஆதியையும் இடிக்க ஆதியோ கோபத்தில் ஏதோ பேச வர…
“ இந்த பாரும்மா… என்ற மவளை ஏதாவது சொல்ற வேலை வச்சுக்காத உன்கிட்ட இத பத்தி நான் ஏற்கனவே பேசிட்டேன். இது இன்னிக்கு நேத்து எடுத்த முடிவு கிடையாது எப்ப லட்சுமி பொறந்தாலோ அப்பாவே அவனுக்கு தான் லட்சுமி அப்படின்னு பேசி முடிச்சாச்சு சும்மா சும்மா இதையே பேசாத, இவ என் வீட்டு மகாலட்சுமி.. இந்த வீடு இவ்வளவு செல்வ செழிப்போடு இருக்க என்னோட லட்சுமி தான் காரணம், இதுவரைக்கும் அவ ஆசைக்கு நான் குறுக்க நிக்கல, இதுக்கு மேலையும் நான் அவ விருப்பத்துக்கு எதிரா நான் நிக்க மாட்டேன். அப்றம் இது தான் உனக்கு கடைசி கல்யாண தேதி நெருங்கி வருது திருவிழா முடிஞ்சதும் கல்யாணம், வீட்டுக்கு சொந்த பந்தெல்லாம் வர ஆரம்பிச்சுடுவாங்க இதே மாதிரி தேவையில்லாம பேசிட்டு இருக்காத.. நீ இப்படி பேசிட்டு இருக்கிறது அந்த சக்திவேல் காதுல விழுந்தது நான் இல்ல அவனே உன்னை வெத்தலையாட்டம் இடிச்சுப்புடுவான் பாத்துக்கோ” என்று கூறி தன் துண்டை உதறி தோலில் போட்டபடி தன் அறைக்கு சென்று விட்டார் முத்துசாமி… அவர் சென்றதுமே அவரின் பின்னால் மிகவும் அடக்க ஒடுக்கமாக கையில் சொம்பொடு சென்றார் அவரை மனைவி அம்பிகா.
அவர் அந்த அறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அவரின் அறைக்குள் நுழைந்த ஆதிலட்சுமி..
“ அப்பா நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று கூற
“சொல்லுடா கண்ணு என்ன விஷயம்?” என்று கேட்டவர் புன்னகை முகத்தோடு தன் மகளை அழைத்து தன் அருகே அமர்ந்து கொள்ள, அவளும் ஓடிச் சென்று தன் தந்தையின் அருகே சிரித்த முகத்தோடு அமர்ந்தவள்.
“ அப்பா பாப்பா ஏன் இன்னும் ஊரிலிருந்து வரல?” என்று கேட்க இவ்வளவு நேரம் புன்னகையோடு இருந்தவரின் முகம் அப்படியே வாடி போக, மெல்ல நிமிர்ந்து தன் மனைவியை கோபத்தோடு பார்த்தார். இவ்வளவு நேரம் ஒன்றும் தெரியாதவர் போல இருந்த
அம்பிகாவின் முகம் சட்டென்று கோபமாக மாற,
“ இத பத்தி எதா இருந்தாலும் நீ உன் அம்மாகிட்ட பேசிக்கோ டா” என்று அவர் கூறியதுமே ஆதிக்கு புரிந்து விட்டது என்ன நடந்திருக்கும் என்று அதனால் கோபத்தோடு நிமிர்ந்து தன் அன்னையைப் பார்த்தவள்.
“ அம்மா அப்போ நீங்க தான் பாப்பாவ ஊருக்கு வர வேண்டான்னு சொன்னீங்களா?” என்றவள் கேட்க அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தார்.
“அம்மா உங்க கிட்ட தான் கேட்கிறேன். நீங்க தான் பாப்பாவ ஊர்ல இருந்து வர வேண்டாம்னு சொன்னீங்களா?” என்று இம்முறை மிகுந்த கோபத்தோடு அவள் கேட்க
“அவ கல்யாணத்துக்கு வந்து என்ன பண்ண போற? கல்யாணம் உனக்கு தானே, அதோட அவ ஊருக்கு வந்தா இந்த ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் அவ யாரு என்னன்னு நான் பதில் சொல்லணும் அதுக்கு அவ அங்கேயே இருந்துட்டு போகட்டும்.. அதுவும் இல்லாம அவளை பார்க்கவே எனக்கு பிடிக்கல” என்று அம்பிகா தன் முகத்தை திரும்பியவாறு கூற
“அம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க? அவளும் உங்க பொண்ணு தான்” என்று ஆதி கோபத்தோடு கூற
“அது எனக்கு தெரியும் அதனால் தான் அவளை இங்க வர வேண்டாம்னு சொன்னேன்” என்றவர் கோபமாக கூற
“ சரி நீங்க உங்க பொண்ணை தானே இந்த கல்யாணத்துக்கு வர வேண்டாம்ன்னு சொன்னிங்க.. ஆனால், நான் என் தங்கச்சி வர வேண்டாம்னு சொல்லல, எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும் நீங்க உடனடியா அவளை கிளம்பி வர சொல்லுங்க” என்று ஆதி கோபமாக கூற
“இல்ல இனி யார் என்ன சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு வரமாட்டா, அவளுக்கு எதோ முக்கியமான வேலை இருக்குதாம்” என்று விடாப்பிடியாக அம்பிகா கூற
“அப்படியா? அப்போ சரி, என் தங்கச்சியை எப்படி இங்க வர வைக்கணும் எனக்கு தெரியும்” என்றவள் உடனடியாக தன் போனில் இருந்து தன் தங்கைக்கு அழைக்க மறுக்கவோ அழைப்பு எடுக்கப்படவில்லை.. அதில் கடுப்பானவள் ஆதிலட்சுமி.
“நீங்கள் அவகிட்ட என்ன சொன்னீங்கன்னு எனக்கு தெரியாது.. ஆனா, அவ மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதோ சொல்லி இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது.. எனக்கு இது சுத்தமா பிடிக்கல ம்மா… அவ இல்லாத ஒரு விசேஷம் இந்த வீட்ல நடக்காது இப்ப சொல்ற கேட்டுக்கோங்க என் தங்கச்சி இருந்தா தான் இந்த கல்யாணம் நடக்கும் அதோட அவளை நீங்க யாரும் கூட்டிட்டு வர வேணாம் நானே போய் கூட்டிட்டு வரேன்” என்றவள் அந்த அறையில் இருந்து வெளியேற போக
“லட்சுமி என்ன பண்ற? நீ கல்யாணம் பொண்ணு, ஊரை தாண்டி எல்லாம் போக கூடாது” என்று அம்பிகா கூற
“அப்படியா? ஆனா கல்யாண புடவை எடுக்க நான் ஊர் எல்லையை தாண்டி தானே போகணும்?” என்று அவள் கேட்க
“ஆனா…” என்று அம்பிகா எதோ கூற வர
“இங்க பாருங்க ம்மா… இனி நீங்க யார் என்ன
சொன்னாலும் நான் கேட்கிற மாதிரி இல்லை, நான் இப்பவே கிளம்புறேன் அவ இல்லாம இங்க வர மாட்டேன். இப்ப சொன்னது தான் அவ இல்லாம இந்த கல்யாணம் நடக்காது” என்று கூறியவள் தன் தங்கையை அழைத்து வருவதற்காக கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.