
Tag:
Srivinitha novels
அந்தியில் பூத்த சந்திரனே – 2
written by Competition writers
சென்னையின் புறநகர் பகுதியில் வாழ்ந்து வரும் அம்ருதாவின் குடும்பம் நடுத்தர வர்கத்தை சார்ந்தது. வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கையறை வசதி கொண்டு சுற்றிலும் சிறியவகை தோட்டம் அமைக்கும் அளவு இடைவெளி விட்டு மதில் சுவர் அமைக்கப்பட்ட சொந்த வீடு.
தந்தை ஆறுமுகம் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர். அன்னை காவேரி இல்லத்தரசி. தங்கை நிரஞ்சனா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாள். அம்ருதா எம்.சி.ஏ முடித்து ஒரு ஐ.டி கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிபுரிகிறாள்.
குழந்தை இருப்பதால் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறையை தேர்வு செய்தாள். இன்று சில பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதால் தன் தாயிடம் கூறிவிட்டு தனது குழந்தையை தன் ஒற்றை கரத்தில் தூக்கி கொண்டு முன்பதிவு செய்த ஆட்டோவில் ஏறி சென்றவள், தி.நகர் சென்று இறங்கினாள்.
குழந்தையை சுமந்தபடியே தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி முடித்தவள், குழந்தை உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று அடம் பிடிக்கவே மீண்டும் ஆட்டோவில் ஏறி ரெஸ்டாரண்ட் ஒன்றின் முன்பு வந்திறங்கினாள்.
சூரியன் மறைந்து இரவு படரும் அந்தி பொழுதில் நுழைவு வாயிலின் வலது புறம் ஹர்ஷ மித்ரன் ரெஸ்டாரண்ட் என்ற பெயர் மிகவும் அழகாக, தனக்கே உரிய எழுத்து பாணியில் செதுக்கியப்படி, சுவரில் பதிய வைத்தார் போன்று தங்க நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதுவே பார்ப்பவரை ஈர்க்கும் வண்ணம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது.
நுழைவு வாயிலை கடந்ததும் நடை பாதையை தவிர மற்ற இடங்கள் யாவும் புல்தரையாகவும், பூச்செடிகளாகவும் ஆங்காங்கே பெரிய அளவு குடைகளுக்கு கீழே, வட்ட வட்டமான மேஜையை சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருக்க, அங்கே கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் ஆட்கள் நிறைந்து இருந்தனர்.
உள்ளே அமர்ந்து உண்பதற்கும் ஏற்றார் போன்று பெரிய கட்டிடம் கண்ணாடியாலும், மரப்பலகைகளாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த இடமே மனதிற்கு உற்சாகமூட்டும் வகையில் இருந்தது. அம்ருதா ஆத்யாவை அழைத்து கொண்டு உள்ளே செல்ல முற்படும் நேரம்,
“ம்மா.. அங்க பிக் பிக்கா கொதை இதுக்குதுமா.. ப்ளீச் அங்க போலாம்..” என்று ஆசையாக கேட்கவே அம்ருதாவுக்கு மறுக்க மனம் வரவில்லை. அவளது ஆசைக்காக சற்று தள்ளி இருந்த இரண்டு பேர் அமரக்கூடிய நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
அங்கு வந்த உணவு பரிமாருபவர் அவள் முன் நின்று உணவு பட்டியலை அவளிடம் நீட்ட,
“அங்கிள் எனக்கு பிங்க் கலத் ஐஸ் கீம்” என்று ஆத்யா முந்தி கொண்டு கூற இருவரும் குழந்தையை பார்த்து புன்னகையித்தனர்.
“ஓகே.. பாப்பாவுக்கு பிங்க் கலர் ஐஸ் க்ரீம் கொண்டு வரேன்” என்று அவர் புன்னகையித்த வாறே கூற,
“ஐ… ஜாலி…” என்று குதித்தாள் ஆத்யா.
பிறகு அம்ருதா, “ஒரு ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர்ட் ஐஸ் க்ரீம், அண்ட் ஒன் ஆப்பிள் ஜூஸ்” என்று கூற,
“ஓகே மேம்” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சுற்றியும் தனது பார்வையை சூழல விட்டவளுக்கு அந்த இடத்தின் அமைப்பும், இயற்க்கை சூழலும், வேலையாட்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் முறையும் மிகவும் பிடித்து போனது.
அவள் கேட்ட ஐஸ் க்ரீமும், ஜூஸ்ம் வந்துவிட இருவரும் பருக தொடங்கி விட ஆத்யா ஆர்வத்தில் துள்ளி குதிக்கையில் ஜூஸ்சை அம்ருதாவின் மீது தட்டிவிட்டாள். அதில் ஜூஸ் முழுவதும் அவள் மீது சிந்தி விட குழந்தையோ பயந்தவள் போல திருதிருவென விழித்தாள்.
“சாஇ ம்மா” என்று பயந்தவாறே கூற,
“சரி பரவால்ல. பாப்பா தெரியாமதான பண்ணினீங்க..” என்றவள் “வா நம்ம இதை கிளீன் பண்ணிட்டு வந்துடுவோம்” என்று அவளை தூக்க போக,
“எனக்கு ஐஸ் கீம் சாப்பிதனும்” என்று எவ்வளவு அழைத்தும் வாராமல் அடம்பிடிக்கவே,
“சரி நீ பத்திரமா இங்கயே இரு அம்மா டூ மினிட்ஸ்ல வந்துடுவேன். இடத்தை விட்டு எங்கேயும் நகர கூடாது” என்று பலமுறை பத்திரம் கூறிவிட்டு திரும்பித் திரும்பி பார்த்தவாறே வாஷ் ரூம் சென்றாள் அம்ருதா.
சுற்றி சுற்றி பார்த்த குழந்தை நாற்காலியை விட்டு தானாக கீழிறங்கி தத்தி தத்தி நடந்தவரே அழகான பூக்கள் இருக்கும் இடத்தை நோக்கி சென்றது. எட்டி எட்டி பார்த்தும் பறிக்க முடியாமல் போகவே அருகில் அலைபேசியில் பேசி கொண்டிருந்த ஹர்ஷாவின் விரலை பற்றி இழுத்தது.
ஒரு மிருதுவான குட்டி கரத்தின் ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தியவன் திரும்பி கீழ்நோக்கி பார்க்க அவனை பார்த்து அழகாக சிரித்தாள் ஆத்யா. அவளது அழகான சிரிப்பில் தன்னை மறந்து பார்த்தவன் உதடுகளும் தானாக விரிந்து கொள்ள, சுற்றிலும் குழந்தையின் பெற்றோரை தேடி தனது பார்வையை சுழல விட்டவன் மீண்டும் குழந்தையிடம் தனது பார்வையை செலுத்தினான்.
அவள் மீண்டும் அவன் விரலை பிடித்து இழுக்க, குழந்தையின் உயரத்துக்கு ஏற்ப மண்டியிட்டு அமர்ந்தவன்,
“என்ன பாப்பா? என்ன வேணும்?” என்று கேட்க
“எனக்கு அந்த பூ ஏணும் அங்கிள்..” என்று தனது கரத்தை நீட்டி அவள் சுட்டி காட்ட அவள் காட்டிய திசை பக்கம் திரும்பியவன் பூவை பறித்து கையில் கொடுத்தான். அழகான சிரிப்புடன் அதனை பெற்று கொண்டது குழந்தை.
“தேங்க் உ அங்கிள்..” என்று சொல்ல,
அவள் விழிகளிலும், பளீர் சிரிப்பிலும், குண்டு குண்டு கன்னத்திலும்,அழகான மழலை பேச்சிலும் ஒரு நிமிடம் தன்னை மறந்து குழந்தையை பார்த்து கொண்டிருக்கும்போது,
“ஆத்யா… இங்க என்ன பண்ற? அம்மா உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்று பதறியபடி வந்தாள் அம்ருதா.
நீண்ட நாள் கழித்து இளகிய அவனது முகம் மீண்டும் இருக்கத்தை தத்தெடுத்து கொண்டது.
“இப்படித்தான் குழந்தைய தனியா வெளில விடுவீங்களா? குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன செய்வீங்க? குழந்தைய பெத்துக்கிட்டா மட்டும் போதாது ஒழுங்கா வளர்க்க தெரியணும். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கீங்க?” என்று அவன் பேசி கொண்டே போக,
அவளுக்கும் கோபம் வந்தாலும் தவறு தன்னுடையதுதானே என்று பொறுத்து கொண்டு நின்றாள் அம்ருதா. ஆனாலும் அவள் முகத்தில் தெரிந்த கோபத்தை கண்டவன் மீண்டும் திட்ட தொடங்க,
“அங்கிள். அம்மாவ தித்தாதீங்க.. அம்மா பாவம்..” என்று கூற குழந்தையின் குரலில் சற்றே கோபத்தை குறைத்தவன்,
“இனிமேலாவது குழந்தையை ஜாக்கிறதையா பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
அம்ருதாவுக்குதான் அழுகையே வந்து விடும் போல இருந்தது. அவன் குரலில் அத்தனை கடுமை. முகம் இறுகி, அழுத்தமான குரலில் ஒரு ஆறடி ஆண்மகன் தன்முன் நின்று பேசிடவும் ஏனென்றே தெரியாமல் சிறு பிள்ளை போல அழ தயாரானவள் இருக்கும் இடம் கருதி தன்னை கட்டு படுத்தி கொண்டாள்.
பிறகு தனது குழந்தையை தூக்கி கொண்டு விருவிருவென அந்த இடத்தை விட்டு கிளம்பியவள், போகும் வழி எங்கும் அவன் முகமும் அவன் குரலும் என திரும்ப திரும்ப அவன் கடுமையான முகமே நினைவில் வர இன்றைய பொழுதே நிம்மதியே இல்லாமல் போனது அவளுக்கு.
வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஹர்ஷ மித்ரனை அவன் தாய் கீர்த்தனாவும் தந்தை பார்த்திபனும் தடுத்து நிறுத்தினர்.
“இன்னைக்கு நீ இந்த பொண்ணு போட்டோவை பார்த்தே ஆகணும். நீ பாத்துட்டு வேண்டாம்னு சொன்னா நாங்க வற்புறுத்தல. ஆனா ஒரு முறைக்கூட பார்க்காம சொன்னா எப்படி?” என்று அவன் தாய் கேட்க,
“இப்போ என்னம்மா உங்களுக்கு? தினமும் இதே பேச்சு. ஃபோட்டோவை பார்த்துட்டு வேண்டாம்னு சொன்னா, அப்போ உங்களுக்கு ஓகேதான? சரி கொடுங்க” என்றான். அவன் பேச்சில் சற்றே கோபமடைந்த பார்த்திபன்,
“ஹர்ஷா.. பார்க்கும் முன்னாடியே இப்படி சொன்னா எப்படி?” என்று கேட்க,
தலையை இடவலமாக அசைத்தவன், “எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றபடியே நகர முயல,
“இருப்பா. ஒரு முறை பார்த்துடு” என்று அவனிடம் பெண்ணின் சுயவிவரம் அடங்கிய புகைபடத்தை நீட்டினார் அவன் அன்னை.
அப்பெண்ணின் புகைப்படத்தை பாத்தவன் சற்றே கோபமான குரலுடன்,
“இந்த பொண்ணுக்கு இருந்தா ஒரு இருபது, இருபத்தியொரு வயசு இருக்குமா?” என்று கேட்கவும்
“இருபத்தி ஒன்னு” என்றார் அவன் தாய்.
“என்னம்மா பண்றீங்க? எனக்கு முப்பத்தி ஒரு வயசாகுது. அதுவும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் கூட ஆகல. எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க? சரி என்னவோ பண்ணுங்கன்னு விட்டா இப்படி ஒரு பொண்ண காட்டுறீங்க?” என்றதும்,
“பொன்ணு பார்க்க அழகா லட்சணமா இருந்தாடா..” என்று கூறி கொண்டிருக்கும்போதே, போதும் என்பது போல் அவன் கரத்தை உயர்த்தியவன்
“நான் இனி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா அவளுக்கும் இது செகண்ட் மேரேஜ்ஜாதான் இருக்கணும். என்கிட்ட கல்யாணம் ஆகாத இதுபோல வயசு வித்யாசம் உள்ள பொண்ணை காட்டாதீங்க” என்றவன் “இனிமேல் பொண்ணு பாக்குறேன் அது இதுன்னு வந்து நிக்காதீங்க” என்றுவிட்டு விருவிருவென தன் அறைக்கு கிளம்பிவிட்டான்.
அன்றைய தினம் முழுவதும் அம்ருதாவுக்குதான் மனம் புலம்பி கொண்டே இருந்தது. ‘என் குழந்தைதான் எனக்கு எல்லாமேன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இவன் என்ன தெரியும்னு இப்படி பேசினான்? ச்சே..’ என்று நினைத்தவள்,
எவ்வளவுதான் தன் எண்ணங்களை மாற்ற முயன்றாலும் அந்த ஆளுமையான கம்பீர குரல் தன் காதுக்குள்ளேயே கேட்பது போல் இருக்க சுழலுக்குள் சிக்கியதை போல மீள முடியாமல் சிக்கி தவித்தாள் அம்ருதா.
இதயமே இளகுமா அத்தியாயம் 3
written by Competition writers
விடியற்காலை இன்னும் பளிச்சிட ஆரம்பிக்காத நேரம்.
அறை மங்கலான வெளிச்சத்தில், சன்னல் வழியே நுழையும் காற்று, அறையை சற்று சில்லென்று தழுவியிருந்தது.
அந்த அமைதிக்குள், ஒரு அழகான படுக்கையில், பரந்த உருவமாய் படுத்திருந்தான் சமர்.
தலையணையின் ஓரமாக சாய்ந்திருந்த அவன் முகம், தூக்கத்தில் சற்றே புன்னகை செய்தது.
நீண்ட நெற்றி, நன்றாக வகுக்கப்பட்ட புருவங்கள், சீரான மூக்கு, கூர்மையான கண்கள், கிளின் சேவ் செய்த முகம், ஆண்மைக்கே உரிய அழகான மீசை என, தூக்கத்தில் இன்னும் அழகாக காட்சியளித்தான்.
அவன் மீது விரிக்கப்பட்டிருந்த வெள்ளை கம்பளத்துக்கு உள்ளே, மெலிதான கிரே கலர் டி-ஷர்ட், அவன் மார்பை மெதுவாக உயர்த்திக் கீழிறக்கியபடி, அவன் சுவாசத்தோடு ஒத்திசைந்து நடனமாடியது.
ஒரு கரம், தலையணைக்குக் கீழே மடக்கி வைக்கப்பட்டிருந்தது; மற்றது மெத்தை மேலே சாய்ந்திருந்தது.
அவன் படுத்திருந்த கட்டில் பெட், பஞ்சு நிறைந்த மெத்தை, அவனை அப்படியே உள்ளே சுருட்டி வாரிக் கொண்டிருந்தது.
வீட்டினுள் அப்படியொரு நிசப்தம். அவன் மூச்சுக்காற்றின் சத்தம் மட்டுமே அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.
அந்த அமைதியை வெடிக்கச் செய்தது, அவன் படுக்கைக்கு அருகிலிருந்த டேபிள் மேலே வைக்கப்பட்டிருந்த போன் சத்தம்.
திரையில் ஒளியுடன் மின்னியது
“Bala Calling…”
தூக்கத்தின் ஆழத்தில் இருந்த சமரின் புருவங்கள் சற்று அசைந்தன. ஆனால் அவன் கண்கள் இன்னும் திறக்கவில்லை.
சத்தம் மறுபடியும் ஒலித்தது.
அவனது நீண்ட வலது கை, மெதுவாக மெத்தையின் மேல் போனை தேடிச் சென்றது.
கண்கள் திறக்காமலேயே, போனை தொட முயன்றான்.
அழைப்பு நின்று, மறுபடியும் ஒலித்தது…
தூக்கத்தில்கூட நண்பனின் தொந்தரவை புரிந்துகொண்டவன் போல, மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான்.
“மூணாவது மிஸ்டு கால். இதுக்கப்புறம் போனை எடுக்கலை, பாலா வீட்டுக்கு வந்துடுவான்…” என மனதில் நினைத்தவன் , கண்களை இறுக்கமாக மூடி, மீண்டும் மெதுவாக விழிகளைத் திறந்தான்.
மங்கலான சூரிய ஒளி, அவன் கண்களில் விழுந்தது.
அவன் முகத்தில் ஆழ்ந்த சோம்பல்… ஒரு மெதுவான புன்னகை.
அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து, குளியலறைக்கு சென்று, தயார் ஆகி வந்தான்.
மீண்டும் அழைப்பு, இப்போது போனிலிருந்து அல்ல… வீட்டின் ஹாலின் பெல்!
வந்திருப்பது யாரென தெரியும் என்பதால், மெதுவாகவே வந்து கதவைத் திறந்தான்.
தன்னை முறைத்தபடி நிற்கும் நண்பனை, புன்னகையுடனே எதிர்கொண்டான் சமர்.
பாலாவை, “உள்ளே வா,” என்று அழைத்த சமர், அங்கிருந்து சோபாவில் அமர்ந்தான்.
“என்னடா, நீ ஹாஸ்பிடல் வரலையா…?” என்ற பாலாவிடம்.
“டேய்..! உனக்கு மனசாட்சியே இல்லையாடா! ஒரு ஹார்ட் ஆப்ரேஷன் முடிந்து, மார்னிங் நான்கு மணிக்குதான் வீட்டிற்கு வந்தேன். நிம்மதியா தூங்க கூட விடமாட்றிங்க!”
“டேய், இன்னைக்கு என் ஊருக்கு போகனும் மறந்துட்டியா?”
“நியாபகம் இருக்கு, பாலா. ஆனால் என்னால் வர முடியாது.”
“ஏன்…?”
“இன்னைக்கு அம்மா, அப்பா கல்யாண நாள்.”
“ஓஹ்… ஆமால்ல, மறந்துட்டேன்டா!
அம்மா, அப்பா எங்கே…?”
“காலையிலே கோவிலுக்கு கிளம்பிட்டாங்க.”
“சரிடா. அப்போ, நீ எங்க ஊருக்கு வரலையா?” என்றவனின் முகம், சோகமானது.
“வறேன் பாலா! நான் வராமல் எப்படி…? ஆனால் இன்னைக்கு வரமுடியாது. நீங்க போங்க. நாளைக்கு ஈவ்னிங் அங்கே இருப்பேன்.”
“கடைசி நேரத்துல இப்படி சொன்னால் எப்படி? நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வாறாங்க. உன்னை மட்டும் எப்படி விட்டு போறது?”
“டேய், நான் வரமாட்டேன்னு சொல்லல… நாளைக்கு மார்னிங் அங்கே இருப்பேன்.
உங்க ஊர் திருவிழா முடிந்து, நம்ம மெடிக்கல் கேம்ப் பத்து நாள் இருக்கு. அதுக்காகவாவது கண்டிப்பா வருவேன்.”
“சரி. இப்போ ஹாஸ்பிடல் வர்றியா இல்லையா?”
“இல்லை… இன்னைக்கு நான் லீவ். ரொம்ப டயர்டா இருக்குடா.
எப்படியும் நீ என்னை தேடி வருவன்னு எனக்கு தெரியும். அதான் எழுந்து வந்தேன்.”
“சரிடா. ரெஸ்ட் எடு.
நான் கிளம்பும்போது போன் பண்றேன், சமர்.”
“ம்ம்ம்… ஓகே டா.”
பாலா அங்கிருந்து கிளம்பினான்.
கோகிலா, சாலையை பார்ப்பதும், செம்பருத்தி முகத்தை பார்ப்பதுமாய் நடந்து கொண்டிருக்க…
“என் முகத்தில் என்ன தேனா வடியுது?” என்றவளை, மீண்டும் குறுகுறுவென பார்த்தாள் கோகி.
“எதுக்காக இப்போ இப்படி என்னையே பாத்துட்டு வர? ஒழுங்கா இப்ப சொல்லல, கல்லை தூக்கி மண்டையை உடைத்து விடுவேன்!” என்றதும்,
“இல்லை… நீ பெரிய வீட்டை சுத்தம் பண்ண வரமாட்டேன்னு நினைத்தேன். ஆனால், காலையிலேயே நீயே வந்து கிளீன் பண்ணிட்டு வரலாம்னு சொன்னியா, அதான் ஆச்சரியமா இருந்தது. உன் முகத்தை பார்த்துட்டே வரேன்…” என்ற கோகியிடம்,
“நீதானே சொன்ன, சுத்தம் பண்ணா பணம் தருவாங்கன்னு. அதான் நம்ம செலவுக்கு ஆகும். இரண்டு நாளில் வேலையில் ஜாயின் பண்ணனும். பணம் கிடைத்தால் நமக்கு துணி எடுத்துட்டு வந்துடலாம்,” என்றதும்,
“ஆமா,” என்றாள் கோகி.
பேசியபடியே இருவரும் அந்த வீட்டிற்கு வந்தனர்.
அங்கே யாரும் இருப்பது போல தெரியவில்லை. வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சாவி வேண்டுமே…
“என்ன கோகி…? யாரையுமே காணோம். வீட்டை கிளீன் பண்ணனும் சொன்னாங்கன்னு சொன்ன…”
“ஆமா செம்பா. நானும் அதான் பாக்குறேன். அம்மா சொல்லிட்டேன்னு சொன்னாங்களே, அந்த காவலுக்கு இருக்கிற தாத்தா கொண்டு வந்து சாவி தருவாறுன்னு சொன்னாங்க. ஆனால், யாரையும் காணோம்…” என இருவரும் சுற்றி முற்றி, யாராவது இருக்கிறார்களா என தேடி பார்க்க, யாரும் இருப்பது போல தெரியவில்லை.
“யாரை தேடுறீங்க?” என்ற சத்தம் கேட்க, கோகியும் செம்பாவும் திரும்பினார்.
ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும், செம்பா கோகியை முறைக்க,
“எனக்கு தெரியாதுடி இவங்க வருவாங்கன்னு…” என்றவளின் முகத்தில் பயம்.
“ஆத்தா, நீங்க வந்து இருக்கீங்க? தோட்டக்கார தாத்தா எங்க…?” என கோகி அவரிடம் கேட்க…
செம்பருத்தியை பார்த்தபடியே,
“எனக்கு இங்க வரணும்னு ஆசையா இருந்துச்சு. அதான் வந்தேன்,” என்றவர், கையில் இருந்த சாவியை கொடுத்தார்.
“வீட்டைக் சுத்தம் பண்ணுங்க. நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்,” என்று வீட்டின் முன்புறம் இருந்த திண்ணையில் வெத்தலையை இடித்தபடி அமர்ந்து கொண்டார்.
“கோகி பயந்ததுபோல், செம்பா அவரை கண்டுகொள்ளவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு,” என வந்த வேலையை பார்த்தாள் செம்பருத்தி.
வீட்டிற்குள் நுழைந்ததும் இதயம் படபடவென அடிக்க செம்பாவின் உடல் புல்லரித்தது. பழைய நியாபகங்கள் பெண்ணவள் மனதை இதமாக வருடின. அந்த வீட்டின் இரண்டாவது அறையின் முது அவளின் பார்வை பட்டது., மறக்கும் நினைவுகளா அது. அதனாலே இந்த வீட்டிற்கு வரவேண்டாம் என நினைத்தாள். இந்த வீட்டிற்குள் வந்து பல வருடங்கள ஆகிறது. கண்கள் குளம் கட்டின. அழுதால் கோகி என்னவென கேட்பாள் என பல்லைகடித்தபடி மனதை அலை பாயவிடாமல் தன்னைத்தானே கட்டுபடுத்திகொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
இரண்டு மணி நேரத்திற்கு பின், இருவரும் வேலையை முடித்துவிட்டு வெளியே வர, திண்ணையில் அமர்ந்திருந்தவரை காணவில்லை.
“ஆத்தா… ஆத்தா!” என சத்தமிட்டாள் கோகி.
“நான் இங்கே இருக்கிறேன்?” என்ற சத்தம் வந்த திசையைப் பார்த்தனர்.
மல்லி, முல்லை என பூஞ்செடிகள் போட்டி போட்டு வளர்ந்திருந்த இடத்தில், நின்று கொண்டிருந்தார்.
அங்கே சென்றாள் கோகி.
“ஏன் ஆத்தா, இந்த செடிகுள்ள வந்து நிக்கிற…? ஏதாவது பூச்சி இருந்தா கடிச்சிட்டு போகுது!”
“இதுல ஒரு செடியை நட்டு வச்சிட்டு போனேன். அதான் தேடிட்டு இருக்கேன்.”
“என்ன செடி ஆத்தா…? சொல்லு, நான் கண்டுபிடித்து தரேன்,” என கோகியும் அவரோடு சேர்ந்து தேட…
“செம்பருத்தி,” என்றதும்,
செம்பாவை பாவமாக பார்த்தாள் கோகி.
செம்பா பார்வை அவர்களிடம் இல்லை. ஆனால், அவர்கள் பேசுவது அவள் காதிலும் உள்ளத்திலும் விழத்தான் செய்தது.
“ஏன் ஆத்தா…? செம்பருத்தி மரம் மாதிரி வளரும். அதை போய் இந்த செடிகுள்ள நட்டு வைத்திருக்கிற…! எப்படி வளரும்?”
“செம்பருத்தி செடி, இந்த இடத்துல எங்கேயாவது இருந்துச்சுன்னா என் மருமக வந்து புடுங்கி போட்டுடுவாள். அவளுக்கு தான் செம்பருத்தி நாளே புடிக்காதே…” என்றதும், செம்பாவின் முகம் இறுகியது.
“சரி… நீ இப்படி தெரியாத மாதிரி நட்டு வைத்தால் மட்டும், இந்த செடி வளர்வது தெரியாதா…? இது பெரிய மரம் மாதிரி வளர தானே செய்யும்…” என, தன் முக்கியமான சந்தேகத்தை கேட்டாள் கோகி.
“ஆமா கண்ணு. செம்பருத்தி என் இடத்துலே வளந்து, பூத்து குலுங்கனும்னுதான் நட்டு வைக்கிறேன். விதி நம்ம தலையில் என்ன எழுதிருக்கோ…” என்றவர், ஏக்கப் பார்வையுடன் கூறினார்.
பெண்ணவளை தீண்டியது அந்த பார்வை. அந்தப் பக்கம் பார்க்கவில்லை என்றாலும், அவரின் பார்வை தன் பக்கம்தான் இருக்கும் என்பதை பொண்ணவள் நன்கு அறிவாள்.
அந்தப் பக்கம் திரும்பாமலேயே,
“கோகி, தேவையில்லாத பேச்சு வேண்டாம்.கிளம்பனும், பணத்தை வாங்குறியா? நேரம் ஆகிடுச்சி…”
“சரி,” என அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு கிளம்பினர் இருவரும்.
தன்னை பார்க்காமலேயே போகும், தன் மகளின் மகளைப் பார்த்தபடி அமர்ந்தார் சோலையம்மாள்…
இதயமே இளகுமா அத்தியாயம் 2
written by Competition writers
செம்பாவும் கோகிலாவும் வீடு வந்து சேர்ந்தனர்.
தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே போட்டவள், மாட்டை கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.
வாசலில் அமர்ந்திருந்த செம்பாவின் அன்னை அரிசியில் கல் எடுத்து கொண்டிருந்தார். மகளின் உடை நனைந்து இருப்பதைப் பார்த்த அவர்,
“என்னடி இவ்வளவு நேரம்? மழைக்கு முன்னாடி வந்திருக்கலாமே!”
“கிளம்பும் நேரத்திலேயே மழை வந்துடுச்சி அம்மா…”
“சரி, போய் துணியை மாத்திக்கோ.”
அவள் உள்ளே சென்றதை உறுதி செய்தவர் கோகியிடம்,
“என்ன கோகி, உன் தோஸ்து கோபமா போற மாதிரி இருக்கு?”
“இது புயலுக்கு முன்னாடி அமைதி அத்தை…”
“என்னடி சொல்ற?”
“அந்த மருது இருக்கானே, தோட்டத்துல வந்து செம்பாகிட்ட வம்பு இழுத்தான்.”
“அவன் தோட்டத்துக்கு ஏன்டி நீங்க போனீங்க?”
“அங்கேதான் புல்லு அதிகமா இருக்குன்னு பக்கத்து வீட்டு செல்லம்மா அக்கா சொன்னாங்க. அதான் மாட்டை ஓட்டிட்டு அங்கே போனோம்.”
“நல்லா போனீங்க. கொஞ்சமாவது அறிவு இருக்கா… அவனே எங்கே எந்த பொம்பள நிக்குறான்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு தேடிட்டு இருப்பான். அவன் தோட்டத்துக்கே போனால் விடுவானா…?”
“அது சரி, என் மாமா எங்கே?” அத்தை
“அந்த மனுஷன் காலையிலே வீட்டை விட்டு போனார்… இன்னும் மதியம் சாப்பாட்டுக்கு கூட வரல.”
அதே நேரம், வீட்டுக்கு வெளியே இருந்து பாடும் குரல் கேட்குகிறது:
“பாட்டு பாடவா, பார்த்து பேசவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா…”
“அத்தை! இது உங்க ஆளோட குரல் தானே?”
“ஆமா. இது அவர் குரல்தான்!”
“இருங்க, நான் பாக்குறேன்…” என கோகி வெளியே எட்டிப் பார்த்தாள்.
பக்கத்து வீட்டு பாட்டியின் கையை பிடித்தபடி பாட்டுப்பாடி ஆட கத்துகொடுத்து கொண்டிருந்தார் நல்லசிவம்.
“என்ன கிழவி ஒழுங்கா ஆடு! நீ கையை பிடிச்சு ரோட்ரோலர் மாதிரி ஒரு சுத்து சுத்து… அதுதான் டான்ஸ்? கையை ஒழுங்கா நீட்டு… கொஞ்சம் பின்னாடி போ, இப்போ முன்னாடி வா ஆஹ் அப்படிதான்!”
“டேய்..! எடுபட்ட பயலே, என் கையை விடுடா முறிச்சிடாதே” என பாட்டி கதறிகொண்டிருந்தார்.
அதை பார்த்த சிரித்தபடியே கோகி “மாமோய்…” என அழைக்க…
“அட யாரு! என் மருமகளா… இதோ வர்றேன்…” என பாட்டியை விட்டுவிட்டு கோகியிடம் வந்தார்.
பாட்டியோ தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டிற்குள் ஓடிவிட்டார்.
“கோகி தங்கம், என் ஆத்தா வீட்டுக்கு வந்துட்டாளா…?”
“வா மாமோய், உன் ஆத்தா உனக்குத்தான் வெயிட்டிங்.”
இருவரும் வீட்டிற்குள் வந்தனர். நல்லசிவம், திண்ணையில் அமர்ந்து, “ஆத்தா… ஆத்தா! என்னை பெத்தவளே” என சத்தம் போட்டார்.
“இரு மாமா, உன் ஆத்தா உனக்கு ஆசி வழங்க வருவாள்.” என்றால் கோகி நக்கலாக…
செம்பா வீட்டிலிருந்து கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தாள். தந்தையின் பக்கத்தில் அமர்ந்தவள், சத்தமில்லாமல் ஒவ்வொரு வாயாக ஊட்டத் தொடங்கினாள். அவரும் அமைதியாக சாப்பிட்டார்.
கோகி அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மருதுவின் செய்கையால் செம்பா கோபமுடன் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தாள், ஆனால் இங்கே நடப்பது வேறு.
அதே நேரம், கோகியின் அன்னை ராசாத்தியும் நடப்பதை பார்த்தபடியே சந்திராவின் அருகில் வந்து அமர்ந்தார்.
ராசாத்தி, நல்லசிவத்தின் உடன்பிறந்த தங்கை.
“அப்பா…”
“சொல்லு ஆத்தா.”
“நேற்று மருதுகூட வெளியே போனீங்களா…?”
“ஆமா ஆத்தா, போனேன். ஆனா நான் வரலன்னு தான் சொன்னேன். மார்க்கெட்டுக்கு போறேன், துணைக்கு வா போதும்னு சொன்னான்.” அப்புறம் சரக்கு வாங்கி கொடுத்தான்.
“நீ துணைக்குதான் போன மாமா. ஆனால், அவன் இன்னைக்கு செம்பாவிடம் தவறா நடந்துக்க பார்த்தான்.”
“என்ன சொல்ற…” என எழுந்தார்,
கோகி நடந்ததை சொல்ல சிவத்திற்கு கோபம் வந்துவிட்டது.
“இன்னைக்கு அவனா நானான்னு ஒரு கை பார்த்துட்டு வந்துறேன்!” என கோபத்தில் துள்ளினார்.
“உட்காருப்பா.” என்ற மகளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்தார்.
அப்பா “சாப்பிட்டல்ல தூங்கு. பக்கத்து தெருவுல தைய்க்கிறதுக்கு துணி தர்றதா சொன்னாங்க. நானும் கோகியும் வாங்கிட்டு வர்றோம். நான் வர்ற வரைக்கும் நீ இங்கேதான் இருக்கணும். சரியா?”
“சரித்தா. நான் எங்கேயும் போகல.” என அமைதியாக பதிலளித்தார்.
“அம்மா பார்த்துக்கோ” என தன் தகப்பனை பார்த்து கண்ணை காட்டிவிட்டு கோகியும் செம்பாவும் கிளம்பினர். அந்த நேரத்தில் ராசாத்தி, தன் அண்ணனின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“ஏன் அண்ணே இப்படி குடிக்கிற? நீ குடிக்கிறதாலதானே மருது மாதிரி பொறுக்கி பசங்க நம்ம வீட்டு பெண்ணுகிட்ட வாலாட்டுறாங்க…”
என்றவரது குரலில் விரக்தியும் வேதனையும் கலந்திருந்தது. ஆனால், நல்லசிவம் அமைதியாக இருந்தார்.
அண்ணே..! உங்கிட்ட தான் கேக்குறேன். இப்படியே கல்லை விழுங்குன மாதிரி இருந்தால் என்ன அர்த்தம்.
நான் ஏன் குடிக்கிறேன் சொல்லு…
“அதையும் நீயே சொல்லிடு” என்றார் ராசாத்தி.
“வேற எதுக்கு குடிப்பாங்க சாகறதுக்குத்தான்.”
என்னங்க..! அண்ணா…! என தன் மனைவியும், தங்கையும் பதற அதை பார்த்து சிரித்தவர்.
“பதறாதீங்க…! உண்மைய சொல்லப்போனால் என்னால் என் குடும்பத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. எல்லாம் என் ஆத்தா, என்னை பெத்தவ பாத்துக்குறாள். அவளை பேச்சுக்கு ஆத்தான்னு சொல்றேன்னு நினைச்சியா, ராசாத்தி..! இல்லை, இங்க இருந்து சொல்றேன் என தன் இதயத்தை சுட்டிக்காட்டினார். என்னை பெற்றவள் சோறு ஊட்டி வளர்த்தாள். அதை இப்போது என் மகள் செய்கிறாள், அப்போ அவள் என் அம்மாதானே.
அவர் குரலில் இருந்த வலி சந்திரா, ராசாத்தி இருவரின் மனதையும் பிசைந்தது.
தொண்டையை செருமியபடி “நான் சுமக்க வேண்டிய சுமையை அவ தலையில் ஏத்திக்கிட்டாள். எல்லாரும் ஓடி விளையாடி சந்தோஷமா இருக்க வேண்டிய வயசுல, என் பொண்ணு காட்டுல களை எடுக்கவும் உரம் சுமக்கவும் போனாள். நான் நல்லா இருந்திருந்தால் என் பிள்ளைக்கு இந்த நிலைமை வருமா, என் வீட்டு இளவரசி. அவ என் மகள் இல்லை. என் குலசாமி.
தொண்டையை செருமியபடி
“ எனக்கு இரண்டும் பொம்பள பிள்ளைங்கன்னு நான் கவலைப்பட்டதே இல்லை. மூத்தவ அமைதியான குணம். கோபமே வராது அவங்க அம்மா மாதிரி. ஆனால், என் ஆத்தாவை நான் ஆண்பிள்ளை மாதிரி வளர்த்து இருக்கேன். யாருக்கும் வளைந்து போக மாட்டாள். அவ தைரியம், துணிச்சலும் அவளை காப்பாற்றும்.” இன்னும் எத்தனை நாளைக்கு என் ஆத்தாளுக்கு நான் பாரமா இருப்பேன் சொல்லு…! இப்போது கூட என் மகள் நான் குடிச்சிருக்கேன்னு வெறும் வயிரா படுக்க கூடாதுன்னு சாப்பாடு கொடுத்துட்டு போறாள். நான் இருந்து என் மகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அதான் குடிக்கிறேன். நீ கூட உன் அண்ணண் குடிக்கிறதுக்கு காரணம் சொல்றேன்னு நினைப்ப, அப்படி இல்லை. இதோ உன் மதனி. பெரிய பணக்கார வீட்டு பொண்ணு. அந்த வீட்டோட இளவரசியா வாழ்ந்தவள். என் மேல் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணி எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருப்பாள் தெரியுமா. உனக்கு தெரியாதது இல்லை. ஆனாலும் ஒரு நாள் கூட என் மனசு கஷ்டப்படுற மாதிரி அவள் பேசினது இல்லை. இப்படி தினம் தினம் என்னையே நினைச்சு நான் வருந்தி சாகறதுக்கு பதில் அந்த விபத்தில் என் உயிர் போயிருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பேன். ஆனால் இப்படி முதுகு வளைந்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை வரும்னு நான் நினைக்கலை. குடிச்சிட்டு ரோட்ல வர்ற வண்டியில் எதுலையாவது விழுந்துடலாம்னு தோணும். ஆனால் என் ஆத்தா முகத்தை பாக்காமல் என்னால் இருக்க முடியாதுன்னு ஓடி வந்துடுவேன்” என கண்ணீர் வடித்தார் நல்ல சிவம்.
அவர் குரல் கமறியது. அதில் அத்தனை வலி.
தன் அண்ணன் கலங்குவதை கண்ட ராசாத்தியும் தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
நம்மளை வேணான்னு விட்டுட்டு போனாளே, அவளையும் நான் நல்லாதான் வளர்த்தேன். அவளை நான் குறை சொல்ற மாதிரி வளர்க்கவில்லை. அவளும் இந்த குடும்பத்துக்கு இன்னொரு தூணாகதான் இருந்தாள். என்ன ஒன்னு, நம்ம எல்லார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுத்திருப்போம். உன் மகன்கூட நிச்சயம் முடிந்து இரண்டு நாளில் வீட்டைவிட்டு ஓடிபோய்ட்டாள். முன்னாடியே சொல்லியிருந்தால் உனக்கு அவமானம் வந்திருக்காது. ஆனால், என் மகளால் பட்ட அவமானத்தை ஒரு நாளும் நீயும் உன் மகனும் சொல்லிகாட்டியதில்லை. எனக்கு இருந்த ஒரு குற்றவுணர்ச்சி உன் பையன் கல்யாணம் ஆகாமல் ரொம்ப நாள் இருந்ததுதான். இப்போ அவனுக்கும் கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு. அது ஒரு தாய்மாமனாய் எனக்கு நிம்மதி” பெருமூச்சொன்றைவிட்டார்.
மூத்தவள் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை தேடி போனாள். எங்கே இருக்காளோ, என்ன பண்றாளோ, எதுவும் தெரியலை. நம்மளை தேடி வரவும் இல்லை. எங்கேயோ சந்தோசமா இருக்காள், சந்தோஷமா இருக்கட்டும். அதே மாதிரி என் ஆத்தா வாழ்க்கையை நினைச்சி நான் கஷ்டபட மாட்டேன். ஏன்னா அவள் என் குலசாமி அம்சம். அவள் தங்கமான மனசுக்கு அவள் அரசனோட அரசி மாதிரி வாழ்வாள். இன்னும் ரெண்டு மூணு நாள்ல வேலைக்கு போக போறாள். இவ்வளவு நாள் காட்டிலும் வேலை பார்த்து, ராத்திரி முழுக்க முழித்து இருந்து துணியும் தைய்த்து கொடுப்பாள். இனிமே காட்டு வேலைக்கு போக மாட்டள் இல்லை. அவளோட கை இனிமேல் மறத்து போகாதுல்ல ராசாத்தி. அதற்கு மேல் பேச அவருக்கு சுயநினைவு இல்லை மதுவின் பிடியில் இருந்தார். என் பொண்ணு நல்லா இருப்பாள், நல்லா இருக்கனும் என உளறியபடியே அதே திண்ணையில் படுத்து தூங்கினார்.
சிவத்தை பார்த்து இருவரின் மனமும் வலித்தது.
“தன் குடும்பம் தான் தனக்கு எல்லாம் என வாழ்ந்தவர் தான் நல்லசிவம். விபத்து நடப்பதற்கு முன்புவரை அவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை. அதே ஊரில் ஒரு செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்தான் சந்திரமதி. இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். அதனால், சந்திரமதியை அவள் குடும்பத்தினர் முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டனர். நல்ல சிவம், சந்திரமதி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் மனோரஞ்சிதா, இளையவள் செம்பருத்தி.
நல்லசிவத்தின் உடன்பிறந்த தங்கை ராசாத்தி. அவர் கணவர் உயிரோடு இல்லை. ஒரு மகனும் மகளும். மகன் வேலாயூதம் திருமணம் முடித்து திருப்பூரில் குடும்பத்துடன் இருக்கிறான். மகள் கோகிலா.
“ரஞ்சிதாவிற்கும் ராசாத்தியின் மகன் வேலாயுதத்திற்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட இரண்டு நாளில் தன் மனதுக்கு பிடித்தவருடன் செல்கிறேன்” என லெட்டர் எழுதி வைத்துவிட்டு போனவள்தான் இன்று வரை இவர்களை பார்க்க வரவே இல்லை.
இரண்டாவது செம்பருத்தி. துரு துருதுருவென சுட்டித்தனம் செய்யும் பெண்ணாய் சுற்றித்திரிந்தவள். ரஞ்சிதாவின் திருமணம் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்தான் நல்லசிவத்திற்கு விபத்து ஏற்பட்டது. அதில் அவர் முதுகின் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. அப்போது செம்பருத்திக்கு 16 வயது. தன் தந்தையால் வேலை செய்ய முடியாது என்பதால் தாயுடன் எல்லா வேலைக்கும் செல்வாள். நல்லசிவம் எவ்வளவு சொன்னாலும் வீட்டில் இருக்க மாட்டாள் செம்பா. அம்மாவுடன் நானும் செல்கிறேன் என சென்று விடுவாள். அந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த கசப்புகளினால் அவளின் குணமே மாறிவிட்டது. சுறுசுறுப்பு , சுட்டித்தனம் எதுவும் இல்லாமல் தன்னை இறுக்கமாக மாற்றிக் கொண்டவள். தன் தந்தைக்கு விபத்து நடந்ததினால் படிக்க முடியாமல், படிப்பு பாதியில் நிறுத்தினாள். அவள் படிக்க போகாததால் கோகிலாவும் அவளுடன் சேர்ந்து படிப்பை நிறுத்தினாள். பின் இரண்டு வருட இடைவெளி விட்டு மீண்டும் படித்து இப்போதுதான் செவிலியர் படிப்பை முடித்து வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் நம் தோழிகள் இருவரும்.
மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெயில்
வேலைதான் ஆசை
பூக்கும் நேரம் புல்லின்
மீது வாடைதான் பனியை
மெல்ல தூவும்
போதும் போதும்
தீர்ந்தது வேதனை
என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள்.
அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க,
சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின் பொன் மேனியை பட்டும் படாமல் தொட்டு உறவாட ஆரம்பித்தன. மழையில் தன் உடைகள் நனைய ஆரம்பித்ததும், மழையின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்தவள், அவளின் கைப்பேசியை எடுத்து நனையாதவாறு தாவணி முந்தியில் வைத்து இடையில் சொருகியவள். இவ்வளவு நேரம் அவள் அறுத்த புல்லுக்கட்டையும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு சலசலவென நீரோடும் வாய்க்காலின் வழியாக அந்த தோட்டத்தில் இருந்த ஓலை குடிசைக்கு அருகில் வந்து மழைக்காக ஒதுங்கி நின்றாள். பயங்கரமாக காற்று வீச தென்னை மரம் எல்லாம் ஆடியது. அந்த இடத்தில் நிற்பதில் அவளுக்கு விருப்பம் இல்லைதான் இருந்தாலும் தற்போதைக்கு அவளுக்கு வேறு வழியில்லையே.
“மழை எப்போதான் நிக்குமோ தெரியலையே..! நேரம் வேற ஆயிடுச்சு..! அம்மா தேடுவாங்களே” என மனதிற்குள் நினைத்தபடி பெய்யும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள் செம்பருத்தி. அது ரசனையான பார்வை அல்ல. அவள் விழிகள் ரசிப்பதை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. 23 வயது பருவ மங்கை. மாநிற தேவதை அவள். படிப்பு இடைநிறுத்தம் செய்து மீண்டும் கஷ்டபட்டு படிக்க ஆரம்பித்து இப்போதுதான் செவிலியர் படிப்பை முடித்திருக்கிறாள். முகத்தில் கவலையோ, பயமோ சிறிதும் கிடையாது. ஆண்களுக்கு நிகரான இறுக்கம் அவள் முகத்தில் அதிகமாகவே தெரிந்தது. அது அவளின் கடந்தகால கசப்பான நினைவுகளின் பரிசு. மருந்துக்கும் அவள் இதழ்கள் புன்னகைப்பதை மறந்திருந்தன. மீன் போன்ற விழிகளில் உயிர்ப்பு இல்லை. அவள் அணிந்திருந்த சாயம்போன நீல வண்ண தாவணியே அவள் வீட்டு ஏழ்மையை அழகாக எடுத்துச் சொல்லும். அவளின் இடை நீண்ட கூந்தலை அழகாக பின்னலிட்டு மடித்து ரிப்பனால் கட்டியிருந்தாள். கழுத்தில் கருப்பு நிற கயிறு, காதில் சின்னதாக பொட்டு போன்ற தோடு, கையில் இரண்டு பிளாஸ்டிக் வளையலும் அணிந்திருந்தாள். அடிக்கடி கண்ணாடி வளையல்கள் உடைந்து விடுவதால் அவள் அன்னை பிளாஸ்டிக் வளையல்களை வாங்கிகொடுத்திருந்தார்.
இவ்வளவு நேரம் மழையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு. தீடிரென தன் பின்னால் சூடான மூச்சுக்காற்றப்படுவது போல தோன்ற தன் கையில் வைத்திருந்த அறிவாளை எடுத்து சற்றும் யோசிக்காமல் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தில் வைத்தாள்.
ஒரு நொடி அதிர்ச்சி அவன் முகத்தில் தெரிய… அடுத்த நொடியே சுதாரித்தான் அந்த ஊரில் மைனராய் சுற்றும் மருது.
பல்லை காட்டியபடியே “ என்ன செம்பா ஆள் தெரியாமல் கழுத்துக்கு அறிவாளை வச்சுட்டியோ” என ஒரு மார்க்கமாய் சிரிக்க…
அவனைப் பார்த்து முறைத்தவள் கழுத்தில் வைத்த அறிவாளை எடுக்காமலேயே “ஆளு தெரியாமல் தான் கழுத்தில் வைத்தேன். நீதான்னு தெரிந்திருந்தால் கழுத்தை அறுத்துறுப்பேன்” என்றால் திமிராக….
என்ன செம்பா வரவர ரொம்ப பேசுறியே..!
நீ என் கண்ணு முன்னாடி இருக்க இருக்க இன்னும் பேசுவேன். எப்படி வசதி..! என்றால் ஒற்றை புருவத்தை உயர்த்தி பல்லை கடித்தபடி…
நான் யாருன்னு உனக்கு தெரிந்தே பேசுறியே…!
தெரிந்ததால்தான் பேசுறேன்.
நாலு காசுக்கு வழி இல்லனாலும் திமிருக்கு குறைச்சல் இல்லை உனக்கு.
ஓஹ்…! பணம் இருக்கிற இடத்துல தான் திமிர் இருக்கணுமா என்ன..! அப்படி ஏதும் சட்டம் புதுசா வந்திருக்கா..?
ஆமா..! கஞ்சிக்கே வழி இல்லாத உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு…
கஞ்சிக்கு வழியில்லனுதான் கடவுள் யாருக்கும் தலைகுனியக் கூடாதுன்னு திமிரை அதிகமா கொடுத்திருக்கிறார் போல…
சத்தமாக சிரித்தவன் “நேத்து தான் உன் அப்பன் என்கிட்ட பிச்சை எடுத்து குடிச்சான்.”
ஓஹ்…! பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்ட வள்ளலே அதை ஏன் என்கிட்ட வந்து சொல்றிங்க.
இந்த திமிர் பேச்சு என்கிட்ட வேணாம். என் வீட்ல வேலை செய்யகூட ஒரு தகுதி வேணும். அந்த தகுதிகூட இல்லாத உன்னை நான் கட்டிக்கனும்னு ஆசைப்படுறேன். அதுக்காவே நீ எனக்கு கோவில் கட்டி கும்பிடனும்.
கஞ்சிக்கே வழியில்லாத நான் எப்படி உங்களுக்கு கோவில் கட்டிகும்பிட முடியும் தர்மபிரபுவே.
ஏய் என்னடி நக்கலா…?
இந்த “டி” போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத சங்க அறுத்துடுவேன்.
அறுப்படி அறுப்ப..! நீ இப்படி எல்லாம் என்கிட்ட பேசுறதுக்கு உன் அப்பன் மூலமா உன் கழுத்துல நான் தாலி கட்டலைன்னா பாரு..
பார்க்கலாம் பார்க்கலாம்…! என் அப்பா சும்மா தான் இருக்கார். வேணும்னா நீ அவரை கட்டிக்கோ.
“ஏய் நீ பேசுற வாய்க்கு சீக்கிரம் உன்னை என் கட்டிலுக்கு இரையாக்கலை என் பேரு மருது இல்லடி” என காலரை தூக்கி விட பதிலுக்கு செம்பருத்தி பேச வருவதற்குள் “செம்பா” என அவளை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்து அவள் முன் நின்றாள். அவளின் தோழியும், அத்தை மகளுமான கோகிலா.
“நீ ஏன் இப்படி ஓடி வந்து நிற்கிற…? மாட்டை தானே உன்னை பார்த்துக்க சொன்னேன்” என அவளை பார்த்தபடியே செம்பா கேட்க.
ஒரு எருமை இந்த பக்கம் வர்றதை பார்த்தேன். மழையும் வந்ததா அப்போ நீ கண்டிப்பாக அந்த எருமை இருக்கிற குடிசை பக்கம்தான் ஒதுங்கி ஆகணும். அதான் மாட்டை பக்கத்துல இருந்தவனங்ககிட்ட பார்த்துக்க சொல்லிட்டு உன்ன தேடி ஓடி வந்தேன். நான் நினைத்த மாதிரி அந்த எருமை இங்கே தான் வந்து இருக்கு” என்றால் மருதை பார்த்து முறைத்தபடி.
ஆமாடி..! அந்த எருமை ரொம்ப வாலாட்டுது.
வாலை ஒட்ட நறுக்கிய வேண்டியதுதானே செம்பா.
“என்னங்கடி இரண்டு பேரும் சேர்ந்து என்னையே கிண்டல் பண்றீங்களா, செம்பா நீ என் காலுல வந்து விழுகிற நேரம் சீக்கிரம் வரும்” என்றவன். செம்பருத்தியை முறைத்து விட்டு அந்த இடத்தை காலி செய்தான்.
கோகியும் செம்பாவின் தலையில் புல்லுக்கட்டை தூக்கி விட… மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தனர் இருவரும்.
வரும் வழியிலேயே மாமரத்தில் மாங்காய் பறித்து தின்றபடியே வந்து கொண்டிருந்த கோகிலா “செம்பா நா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள்.
“கேளு”
“நம்ம ஊர் பெரிய வீட்ல எங்க அம்மா வேலை பாக்குறாங்கல்ல”
“ம்ம்ம்”
“அன்னைக்கு கூட நம்ம எல்லாரும் இருக்கும்போது அம்மா தோட்டத்து வீட்டை சுத்தம் பண்ண போறதா சொன்னாங்களே”
“ம்ம்ம்”
அம்மாவுக்கு கால் வலி அதிகமாகிடுச்சி. உனக்கே தெரியும். அதனால என கோகிலா இழுக்க….
அதனால்…?
“நம்ம ரெண்டு பேரும் போய் சுத்தம் பண்ணிட்டு வந்துடுவோமா” என பாவமாக கேட்டாள்.
செம்பா கோகியை முறைக்க…
“செம்பா உன்கிட்ட கேட்டால் உனக்கு கோபம் வரும்னு எனக்கு தெரியும். ஆனால் எனக்கு வேற வழி தெரியலை. அம்மாவால் முன்னாடி மாதிரி வேலை செய்ய முடியலை. அது மட்டும் இல்லாமல் அந்த பெரிய வீட்டு ஆத்தாகிட்ட முன்பணம் வாங்கின காசையும் செலவு பண்ணிட்டாங்க. இன்னும் மூனு நாள்ல திருவிழாவுக்கு வெளியூர்ல இருந்து ஆட்கள் வாறாங்களாம்.
வெளியூர்ல இருந்தா…?
ஆமா செம்பா. பாலா அண்ணாவும் அவங்க ப்ரெண்ட்ஸ் வாறாங்களாம் என கோகி சொல்ல…
அதை கேட்டதும் ஒரு நொடி தன் நடையை நிறுத்தியவள் பின் நடந்தாள்.
அதான் அதுக்குள்ள வீட்டை சுத்தப்படுத்த சொல்றாங்க. வேற யாரையாவது அனுப்பினால் அம்மா கையில இருந்து தான் பணம் கொடுக்கணும். இதே நீயும் நானும் போனால் பிரச்சனை இல்லை. அந்த பணத்தை நமக்கு வச்சுக்கலாம். நம்ம வேலைக்கு சேருறதுக்கு துணி வேற வாங்கனும்ல, அந்த செலவுக்கு ஆகும் செம்பா. அதுமட்டும் இல்லாமல் அங்கே யாரும் உனக்கு பிடிக்காதவங்க வர மாட்டாங்க. அந்த தோட்டத்தை பார்க்கிறவர் மட்டும்தான் இருப்பார் போகலாமா ப்ளீஸ்டி” என கெஞ்சினாள் கோகி.
செம்பாவிடம் பதில் இல்லை. சில கசப்பான சம்பவங்கள் அவள் மனதிற்குள் ஓட மௌனமாகவே நடந்து கொண்டிருந்தாள்.
அவளின் மௌனம் கோகிலாவுக்கு புரிந்தது.
“ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியுது செம்பா” நாளைக்கு யோசிச்சு சொல்லு, இல்லன்னா வேற யாரையாவதுதான் அங்கே அனுப்பனும் அம்மா சொன்னாங்க.
“ம்ம்ம்” என்றாள்
அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசவில்லை வீட்டை நோக்கி நடந்தனர்.
நீ எந்தன் மோக மழையடி
written by Competition writers
பாகம் – 3
மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க..
குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார்.