அத்தியாயம் 13

4.8
(13)

காற்றடித்து ஓய விழிகள் நான்கும் மோத இருவரும் ஒருவருக்கொருவர் நின்றனர் அருகாமையில்.

இருவருக்குமான முதலாம் சந்திப்பு அரை நிமிட மோதல் சந்திப்பாக இருந்த போதும், இப்பொழுது இச்சந்திப்பானது பல வருட பிணைப்பிற்கான சந்திப்பாய் உயிர்தெழுந்தது இருவர் மனதிலும்.

இன்னுழவன் மேக விருஷ்டி முன் நின்றவன், “ஏய் பொண்ணே ஏன் என்ன தேங்கா பிஞ்சால அடிச்ச” என்றான் தாடை இறுகியவனாய்.

“யோவ் வளர்ந்தவரே… அதான் காத்து அடிக்குதுன்னு தெரியுது இல்ல சுத்தி முத்தி பார்க்க மாட்டீங்களா” கேட்டாள் ஆவேசமாக தேங்காய் தலையில் விழுந்திருந்தாள் என்ன நடந்திருக்கும் என்ற பதட்டத்துடன்.

முன்னும் பின்னும் திரும்பி பார்த்தான் அவள் யாரை பேசுகிறாள் என்று இன்னுழவன் புரியாது.

அவனின் செயல் மேலும் அனல் கன்ற அவன் முன் கை நீட்டியவள், “யோவ் வளர்ந்தவரே உங்கள தான் யாரையோ பேசுற மாதிரி நிக்கிறீங்க” என்றாள் கடுக்காய்.

அவனும் நெஞ்சில் விரல் பதித்து “நானா… இட்ஸ் மீ வளர்ந்தவன்!” என்று கேட்டான் இறுக்கம் தளர்ந்து உள்ளுக்குள் நகைத்து.

“ஹிம்… ஆமா நீங்க தான் எத்தனை டைம் கூப்பிட்டேன். காது கேட்காதா போன்ல அவ்வளவு பிஸியா பேசிட்டு இருக்கீங்க. அங்க பாருங்க எவ்வளவு தேங்காய் விழுந்திருக்குன்னு மண்டையில் விழுந்திருந்தா இந்நேரத்துக்கு பொளந்து இருக்கும் மண்டை” என மேலும் சீறினாள்.

அவள் கோபத்தின் சீற்றலில் சிவந்திருந்த அவள் நுனி முக்கு தன்னை பார்த்தவனுக்கோ சிந்தையில் சடுதியில் வந்து சென்றாள் அவனின் மனம் கவர்ந்து மழையாய் அவனுக்குள் பொழிபவள்.

இன்னுழவனோ அவள் திட்டுவதை எல்லாம் ஏற்க்காது, “எனக்கு என் இவங்கள பார்த்ததும் என் ரெயினி ஏஞ்சல் நியாபகம் வருது. கார்ல வச்சு பார்க்கும் போதும் அப்பிடித்தான் மனசு கிடந்து அடிச்சுகிச்சி. இப்பவும் அப்பிடி தோணுது ஏன்?” என தனக்குள்ளே கேள்விகளை கேட்டான் சில நொடி சுற்றம் மறந்து.

ஆம் காரில் முதல் முதலில் ஜன்னல் வழி அவளை பார்த்த உடனே அவன் இதயம் கட்டுக்கடங்காது துடித்தது என்பது அவன் அறிந்த நிதர்சனம். அதனாலே அடுத்த நொடி அவள் முன் நிற்காது அவள் முகம் பார்க்காது பறந்து வந்தான்.

பின் தன்னிலை அடைந்தவன், “சாரி போன் பேசினதுல கவனிக்கல அண்ட் தேங்க்ஸ்” என்றான் அவளை நுனி முதல் அடி வரை ஆராய்ந்தவனாய்.

பார்க்காதே ஒரு பெண்ணை இப்பிடி பார்ப்பது தவறு என மூளை கட்டளையிட்டாலும் அவனே அறியாது மனமானது உந்தி தள்ளியது அவளை ஆராயச் சொல்லி.

“ஹலோ சார் போன் பேசும் போதும் கவனம் சுத்தி இருக்கணும்.” என்றாள் சிறிது நேரத்திற்கு முன் தான் செய்த தவறை மறந்து.

அதில் மீசைக்குள் நகைத்தவன், “ஓ அத நீங்க சொல்றீங்களா மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடுரோட்ல காரை விட்டுட்டு ஃபோன் பேசிட்டு பின்னாடி ஒரு வயசானவரு வெயில்ல தனக்காக காத்து காயிறாருன்னு கூட பாக்காம ஏசில உட்கார்ந்திருந்தீங்களே, அதை மறந்துட்டீங்களோ…” என்றான் அவள் தவறை சரியாக சுட்டிக்காட்டி.

அதை எண்ணி நாக்கை கடித்து சட்டென்று தலையில் கை வைத்தவள் உதடுகள் பிதுங்க, “ஹான்… பின்னாடி அந்த தாத்தா நின்னத நான் கவனிக்கல. அதுக்கு நான் அந்த தாத்தா கிட்ட சாரி சொல்ல வந்தேன் அவங்க அதுக்குள்ள போயிட்டாங்க.

அதுக்காக நீங்களும் இப்படித்தான் போன்ல பேசும்போது கவனம் இல்லாமல் இருக்கணுமா. ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துருச்சின்னா என்னத்துக்கு ஆகுறது” என அவள் அறியாத அவன் மீது அக்கறையோடு பேசிக் கொண்டிருந்தாள் மேக விருஷ்டி.

யாருக்கோ நடந்திருந்தாள் கூட இதயம் இப்படி துடித்திருக்காது என்னவோ அவளுக்கு. மாறாக இதயம் இன்னும் துடித்து கொண்டிருந்தது சீரற்று.

ஆம், அவனை அந்நிலைமையில் பார்த்த நொடி முதல் இக்கணம் வரை அவளுக்குள் எழுந்த பதட்டம் இன்னும் அடங்கவில்லை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த நிதர்சனம்.

இங்கு இன்னுழவனுக்கோ, “யாருடா இவ பார்த்து முழுசா ஒருமணி நேரம் கூட ஆகல. ஆனா, எனக்கும் அவளுக்கும் ஏதோ பல நாள் பழக்கம் இருக்கிற மாதிரி தோணுது”

“இன்னுழவா இந்த பொண்ண நினைச்சி உன் ஏஞ்சலுக்கு நீ துரோகம் பண்ணாதடா” அவன் மனசாட்சி எச்சரிக்க…

“இல்ல என் ஏஞ்சலுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்” மனசாட்சிக்கு பதில் உரைத்தவன்,

“முதல்ல இவ யாருன்னு நான் தெரிஞ்சுக்கணும். முன்ன பின்ன நான் இவள பார்த்ததும் மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு. முக்கியமா இவளோட குரல் எனக்கு ரொம்ப பழக்க பட்ட குரலாட்டோம் இருக்கு” என மனதுக்குள் புலம்பியவன் அவள் யார் என்று விவரம் அறிய முற்பட்டான்.

“உங்களுக்கு ஏன் மேடம் என் மேல இவ்வளவு அக்கறை அப்படியே தேங்காய் மண்டி விழுந்தாலும் என் மேல தான விழுந்திருக்கும் காயம் எனக்கு தானே நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க” என்றான் அவள் பதிலை எதிர்பார்த்து, அதை வைத்து அவளை கண்டுகொள்ள யூக்கித்து.

 அவன் கேள்வியில் சட்டென்று அதிர்ந்தவள் அப்பொழுது தான் அவனுடனான பேசிய வார்த்தைகளை நீதானித்து பார்த்தாள்.

“அடியேய் விருஷ்… அவனுக்கு நீ யாருடி எதுக்காக அவன் மேல இவ்வளவு கேர் எடுத்து மூச்சு முட்ட பேசிட்டு இருக்க லூசு. இதுவே உன்ன கடிக்க போற அந்த வீணா போன ஷாப்பு பாட்டிலுக்கோ, இல்ல நீ காதலிச்சிட்டு இருக்க நம்ம இன்னுழவனுக்கோ கவலை பட்டா ஒரு நியாயம் இருக்கு. இவனுக்கு எதுக்குடி வாண்ட்டடா குடை பிடிக்கிற” என அவள் உள்மனசாட்சி கண்டமேனிக்கு காரி துப்பியது.

“அட ஆமா எனக்கு இவரு யாரு? நான் ஏன் இவ்வளவு பதட்டபடுறேன்? எல்லாத்துக்கும் மேல நான் எப்போ இன்னுழவன் லவ் பண்ணேன்!” அதையே அவள் மீண்டும் அதனிடம் கேட்டு வைக்க…

“கொய்யால நான் கேட்டதையே திருப்பி கேட்குற. அங்க பாரு உன்ன தான் அவன்  குறுகுறுன்னு  பார்க்குறான் ஏதாவது பேசி தொலை. அதுமட்டும் இல்லாம நீ இன்னுழவன் லவ் பண்றது ஊருக்கே தெரியும் ஆத்தா” என வறுத்தெடுத்தது அவள் மனசாட்சி அவளை.

இன்னுழவனும் அசையாது அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்றான் பதிலை எதிர்பார்த்து.

‘பேசாம இங்க இருந்து கிளம்பிடுவோமா… ப்ச்… ஹான் சமாளிப்போம்” என தனக்கு தானே காலரை தூக்கி விட்டுக் கொண்டவள்.

அவன் விழி பார்த்தாள். விழி பார்த்தவளுக்கோ இதய கூட்டில் ஏதேதோ உணர்வுகள். அடுத்த கணம் பார்வையை திருப்பியிருந்தாள்.

இவ்வுணர்வு அவளுக்கு மட்டுமா என்றால் அது தான் இல்லை அவனுக்கும் தான்!

அவளோ, “ஹான்… எதுக்கு அக்கறைன்னா நீங்க நிக்கிறது எங்களோட வயல்ல” இன்னுழவன் புருவங்கள் இடுக்கின, ஏனென்றால் அதுவோ அவன் வயலாக்கிற்றே!

“நீங்க பாட்டு எதையும் கவனிக்காம போன் பேசி உங்க மண்ட பொளந்து அதுக்கப்புறம் ஊருக்குள்ள இவங்க தோட்டத்துல தான்னு தம்பட்டம் அடிக்கவா. அப்புறம் எங்க குடும்ப கவுரவம் என்னத்துக்கு ஆகுறது.

நீங்க சூதானமா இல்லாம உங்களுக்கா நாங்க கஷ்டப்படுறதா” என்றவள் மனசாட்சியோ, “என்னடி விருஷ் பொசுக்குன்னு உன்னோட வயலுன்னு சொல்லிட்ட” என எதிர் கேள்வி கேட்டது.

“சொல்லி போடுவோம், இவனுக்கு என்ன தெரியவா போகுது. நீ வாய மூடிட்டு பேசாம உள்ள கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு இரு, நான் முதல்ல இவன்கிட்ட இருந்து நழுவி இந்த இடத்தை விட்டு காலி பண்ணனும்” என்று மீண்டும் தன் மனசாட்சியை அடக்கினாள் மேக விருஷ்டி.

அவளின் எங்களின் வயல் என்ற உரிமை பேச்சிலே “உங்களுடைய வயலா…?” கேட்டான் புருவம் வளைய இன்னுழவன்.

அவளும், “ஹான் எங்களோட வயல் தான். ஏன் பட்டா, பத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு வந்து உங்ககிட்ட காட்டணுமா என்ன?” என்றாள் அகத்திலும் புறத்திலும் சற்றும் அசராது.

தன்னிடமே தன் வயலை தான் வயல் என்று கூறுபவளை கண்டவனுக்கு கோபம் வராது மாறாக புன்னகையே வந்தது.

உள்ளுக்குள் நகைத்தவன் அவளின் துடுக்குதன பேச்சை இரசித்து அவளுடன் மேலும் சிறிது நேரம் பேச்சை வளர்க்க எண்ணினான் சுவாரசியமா.

இருப்பினும் இவ்வளவு நாள் அவள் குரலில் இதம் கண்டவன் இன்று அறியாது அவள் அருகாமையில் இதம் கண்டான் அவள் அறியா.

“சுத்தி இருக்கிறது உங்க வயல் தானா..?” இன்னுழவன் கேட்க,

“ஹிம் ஆமா விழிகளை சூழல விட்டவள் கண்ணுக்கு எட்டுற தூரத்தில இருக்கிற எல்லாம் எங்களுது தான், உனக்கு இப்ப என்ன பிரச்சனை.

ஏதோ மண்டையில தேங்காய் விழக்கூடாதுன்னு ஹெல்ப் பண்ணா ஓவரா பேசிகிட்டு இருக்கீங்க. என்னோட பேக்ரவுண்ட் தெரியாம பேசிட்டு இருக்கீங்க” என்றாள் இடுப்பில் கை வைத்து.

 இடுப்பில் கை வைத்து நிற்கும் அவள் அழகை அவன் விழிகள் அழகாய் படம் பிடித்து வைக்க… மூளையோ உன் ரெயினி ஏஞ்சல்டா ஏஞ்சல் என குச்சலிட… அதை எல்லாம் எங்கே அவன் கேட்டான்.

இதழ் கடித்து விடுத்தவன், “அப்படி என்ன உங்களுக்கு இந்த ஊர்ல பெரிய பேக்ரவுண்ட் இருக்கு. சொன்னீங்கன்னா நான் கொஞ்சம் தெரிஞ்சிக்குவேன்” என்றான் நக்கலாய்.

“தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?” அவள் விழிகள் சுருக்க

அவனும் விடாது “நீங்களோ பெரிய இடம் உங்ககிட்ட நாங்க கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்குவோமில” என்றான் பவ்வியமான பாவனையில் கேலியாய்.

“ஹலோ என்ன பக்குவம் அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க” என்றவளுக்கோ அப்பொழுதே அவள் மனதிற்கு தன் தந்தை சகோதரியின் மகன் தான் இந்த ஊர் தலைவர் நாட்டாமை எனக் கூறியது நினைவில் வர…

“நீங்க இப்பிடி பேசுறத மட்டும் எங்க அத்தான்ட சொன்னேன் வீச்சருவாள் எடுத்து வகுந்திருவாரு பார்த்துக்கோங்க. அப்புறம் தலை தனியா முண்டம் தனியா தான் இருக்கணும், யாரு என்னனு பார்த்து பேசணும் புரிஞ்சுதா…” என தில்லா மிரட்டினாள் சிற்றிடையில் கரம் பதித்து.

தன் முன் நிற்பவன் தான் அவள் கூறும் அத்தான் என் அவளும் அறியாது போனால், அவள் புகழ் பாடுவது தன்னை தான் என்று அவனும் அறியாது தான் போனான்.

அவள் பேச… பேச… அவள் பேச்சை ரசித்து அதில் லயித்தவனோ “அத்தானா ஓ அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா.. விட்டா உன் அத்தான் இந்த ஊருக்கே பெரிய மஸ்துன்னு சொல்லுவ போலயே” என்றான், இருப்பினும் சிந்தை அவள் குரல் வளத்தை ஆராயாமல் இல்லை.

“ஆமா என் அத்தான் இந்த ஊர் மஸ்துதான் அவர் தான் இந்த ஊர் தலைவர் உனக்கு தெரியுமா. அவர் பெயரை சொன்னா எல்லாரும் நடுங்குவாங்க. அவர் முன்னாடி வர்றதை பார்த்தா கூட எல்லாருமே தல குனிஞ்சு வணக்கம் வச்சு தான் போவாங்க. அது சின்ன சின்ன நண்டுல இருந்து பெரிய பெரிய சுண்டுவர” என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள் மெச்சுதலாக.

இன்னுழவன் முகமோ கோண, “ங… சுண்டுவா…” என்றவனோ அவளே கூறாது அவள் வாய்மொழி தன்னில் வைத்தே தன்னை பற்றி அவள் கூறியதை அவதானித்து விட்டான் மிகச் சரியாக இவள் தன் மாமாவின் மகள் என்று.

எனினும் அதையும் தாண்டிய நெருக்கம் அவளிடத்தில் அவனின் ஆழ்மன ஏஞ்சலுக்கு நிகராய் காணாமல் இல்லை. அது என்னவென்று தான் அலசிக் கொண்டு இருந்தான்.

இன்று நடந்த சந்திப்பை எண்ணி ஆராய்ந்தவன் பருவ வயதில் அவளுடனா நடந்த சந்திப்பை சற்று சிந்தை ஏற்று ஆராய்ந்திருந்தால், உடையவள் கடந்து வந்த இன்னல்களை அறிந்து இன்றே இக்கணமே தனக்குள் மீட்டெடுத்திருப்பானோ என்னவோ!

இன்று நழுவ விட்டவனுக்கு இனி வரும் காலத்தில் மிட்டெடுக்கும் நிலையை அறிந்தாலும் விதி அதன் வேலையை செய்யும்.

செங்கோதை மணம் வீசும்…

எப்பிடியோ விதி மேல பழிய போட்டாச்சி. இனி நிம்மதியா தூங்குவோம்…🤗🤗.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!