காதலே – 02
அன்று ஆல்பம் இசை வெளியிட்டு விழாவிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான் நிதிஸ், பின் கீழே இறங்கி வந்தவன். ” ராம் ரெடியா போலாமா?” “ராம் ஆபீஸ் போயிருக்கான் அப்படியே ஜாயின் பண்ணிக்கிறானாம்” என்றார் கல்யாணி, “சரிம்மா” என்றவன் இசை வெளியீட்டு விழா நடக்கும் பாரதி உள்விளையாட்டு அரங்கிற்குச் சென்றான்.
இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டான்
பார்வையாளர்கள் ஒருபுறம், மீடியா ஒருபுறம் அவனை சூழ பாதுகாப்பாக ஹாட்ஸ் அவனை அழைத்துச் சென்றனர்.அப்போது ராமும் அங்கு வந்து சேர்தவன், தனக்கான இடத்தில் அமர்ந்து கொண்டான் நிதிஸோ மேடையில் அமர்ந்து கொண்டான். அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவும் ஆரம்பமானது.
” லவ் ஃபேர்ட்ஸ் ” எனும் திரைப்படம் கார்த்திக் இயக்கத்தில் நிதிஸ் சரன் இசையமைக்க நடிகர் கரன்,பூஜா ஜெயராஜ்,என பலர் அதில் நடித்துள்ளனர்.
தற்போது முன்னணியில் இருக்கும் பாடகரும் நிதிஸரனின் குருமான மகாதேவ் கிருஷ்ணா தான் இசை ஆல்பத்தை வெளியிட்டு வைத்தார்.அதனைத் தொடர்ந்து.
நடிக ,நடிகைகள் படத்தைப பற்றியும் பாடலைப் பற்றியும் கூற இடையிடையே ஆடல், பாடல் நிகழ்வுகளும் இடம் பெற்றது….அறிவிப்பாளர் அடுத்ததாக நிதிஸை அழைத்தவர் பாடலைப் பற்றிக் கேட்க நிதிஸோ பாடலை பற்றி கூற…. அறிவிப்பாளரோ “சார் எங்களுக்காக இரண்டு லைன்” என்றார்.அறிவிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங் நிதிஸ் அப்பாடலை தனது காந்தக் குரலால் பாடினான் அவன் குரலில் அனைவரும் கட்டுண்டு இருந்தனர். இப் படத்தில் பணியாற்றிய அனைவரும் இணைந்து பெரிய சிடி வடிவிலான அமைப்பை பற்றி பிடித்தபடி நிற்க மீடியாவும், புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர்.
பிரபல நடிக நடிகைகளா என பெரும் புள்ளிகள் வந்திருப்பதால் பார்வையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர் நிதிஸை பற்றி திரைத் துறையினர் புகழ்ந்து பேச ஒரு சிலர் அவனுக்கு நடிகராக வர வாய்ப்பிருப்பதாகவும் பேச அப்படியே….அவனோ அனைத்தையும் ஒரு தலையசைப்புடன் கேட்டுக் கொண்டிருதான். மகாதேவ் கிருஸ்ணாவின் சிறு உரையைத் தொடர்ந்து அந் நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து மீடியா சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது “பாடகர், பாடலாசிரியராக அடுத்த நடிகரா என ஒரு மீடியா” கேள்வி எழுப்ப… அழகாக சிரித்த நிதிஸோ “இப்போதைக்கு நடிப்பில் இன்ட்ரஸ்ட் இல்ல” என்றான் அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதில் அளித்தவனை “சார் லாஸ்ட் கொய்ஸ்டன் இளம் பெண்கள் கனவு நாயகன், உங்க வெட்டிங் பத்தி சொல்லுங்க அவர்களையே பார்த்தவன் ” “எனக்கானவள இன்னும் காணல ,கண்டதும் கட்டாய சொல்ரன், பட் அது லவ் மேரேஜா தான் இருக்கு புன்னகையுடன்,ஓகே கைஸ் தேங்க்யூ ஐ அம் லிவிங்” என மீடியா காரர்களிடம் இருந்து விடைபெற்றார்.அதனைத் தொடர்ந்து நடிகர் நடிகைகளை மீடியாவும் சூழ்ந்து கொள்ள , மீடியாவிற்கோ அவன் லவ் மேரேஜ் என்ற ஒரு பாயிண்டே போதுமாக இருந்தது அவனைப் பற்றி பேச ,எழுத, ராமும் நிதிஸும் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற இடம் இருந்து வெளியேறினார்.
நிதிஸிம் வெளியேறி வீட்டுக்கு வந்தான் “ஹலோ சார் சொல்லுங்க கௌதம், ஓகே ஈவினிங் வாரேன் அது வர இருக்கிர டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சி பாத்துக்கோ, ஓகே சார். வீட்டுகு வந்த நிதிஸை அனைத்து விடுவித்த ராம், கங்ராஸ்டடா ,லிரிக்ஸ் மியூசிக் எல்லாமே அமேசிங் என தனது வாழ்க்கை தெரிவித்தான்.
“ராம் சாப்பிட்டு போ” என்றார் கல்யாணி இல்லமா, நான் வெளியே போயிட்டு வரேன்” என்றான் “என்ன ப்ரோ மேட்டர்”… அது வந்து தாராவ மீட் பண்ண போறேன்டா,அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க இந்த கிராணி தான் அம்மாவையும் சேர்த்து குழப்பி விட்ருவாங்க” என்றான்.அவன் பேச்சில் சிரித்த நிதிஸ் “ஓகே ஓகே”என்றான். ராமின் காதல் விவகாரம் வீட்டில் அனைவருக்குமே தெரியும்.
தரங்கிணி ராம்சரனின் காதலி கல்லூரியில் ஆரம்பித்த காதல் இன்றும் தொடர்கிறது. தரங்கிணி ஒரு மருத்துவர்.ராம் சரண் வணிக பிரிவு தரங்கிணியோ மருத்துவ பிரிவு எந்த பிரிவு என்று இல்லாமல் ட்ராக்கிங் நடக்கும், அப்படி ட்ராக்கிங்கில் ஆரம்பித்த காதல் தான் அவர்களுடையது. கல்லூரி முடித்ததும் தரங்கிணிக்கு லைஃப் கேர் ஹாஸ்பிடலில் வேலை கிடைக்க அவளும் அதில் இணைந்து கொண்டாள், ராம் வணிக பிரிவில் மாஸ்டர் செய்தவன் ஒரு வருடம் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவிட்டு தற்போது தந்தையின் தொழிலில் கையில் எடுத்து அதனை திறம்பட நடத்தி வருகிறான்.
ராம் தனது காதலியை சந்திக்க கிளம்பி விட்டான் தரங்கினியோடு அலைபேசியில் அடிக்கடி பேசுவது தான் ஆனால் நேரில் சந்திக்க வில்லை காலம் மாற்றத்தின் காரணமாக நாமும் அதன் போக்கில் செல்ல வேண்டி இருப்பதால் ராம் வேறு ஊரிலும் தரங்கிணி வேறு ஊரிலும் வேலை செய்வதால் இரு வருடமாக இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவளது குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம் ஆதலால் இப் பிரிவு இப் பிரிவு கூட அவர்கள் காதலை மேலும் அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை இப்போது தான் தரங்கிணிக்கு தான் லைஃப் கேர் ஹாஸ்பிட்டலின் சென்னை கிளையில் டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது.
ராஜ் ரெஸ்டாரண்டில் தரங்கிணி ராமிற்காக காத்திருந்தாள் ராம் தனது காரை பார்க்ங்கில் விட்டுவிட்டு பூங்கொத்துடன் அவளை சந்திக்க ரெஸ்டாரண்டில் நுழைந்தான்.
கண்களை நாளா புலமும் சுழல விட்டவன் தரங்கிணியை கண்டு கொண்டவனின் கண்களில் ஒரு மின்னல் அவன் தூரத்தில் வருவதைக் கண்டு தரங்கிணியின் கண்களோ அவனைத் தான் பார்த்தது ஆறடி உயரத்திற்கும் மேலிருப்பான் உடற்பயிற்சி முறுக்கேறிய புஜம் சீராக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை என்னை நேர்த்தியாக இருந்தால் இருப்பினும் அவர் பார்வையில் ஒரு அழுத்தம் கல்லூரி காலங்களில் பார்த்தவனுக்கும் இப்போது பிசினஸ் மேனுக்கும் தான் எவ்வளவு மாற்றம் அவளின் பார்வையில் தனக்குள் சிரித்தவன் “தாரா” என அழைத்தபடி அவளுக்கு பூக்கொத்தை கொடுக்க அவளும் அதனை புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.
அவள் முன்னிருந்து இருக்கையில் அமர்ந்தவன். “யூ ல லுக் சோ ப்ரிடி தாரா” அவளுக்கோ கன்னங்கள் சிவக்க “தேங்க்ஸ்” என்றாள். “நான் எப்படியிருக்கன்” என்றான். அவன் பேச்சில் தடுமாறிய தாரா “நீங்களும் பிரீட்டியா தான் இருக்கீங்க” என்று சொல்ல “நானும் ப்ரீட்டியா ஓகே ஓகே” என சிரித்துக் கொண்டான். இருவரும் ஒரு சில நிமிடங்கள் பேசி இயல்பாகிக் கொண்டனர் கல்லூரி கால கதைகள் என அவர்கள் நேரமும் செல்ல ராமின் அலைபேசி தண்ணீருப்பைக் காட்டியது . “தென் நெக்ஸ்ட் எப்போ மீட் பண்ற”?? ” நெக்ஸ்ட் வீக் என்ட்ல” என்றாள். பின்னர் இவரும் தங்களுக்கு தேவையான உணவை வரவழைத்து உண்டு விட்டு ரெஸ்டாரண்டில் இருந்து வெளியேறினர்.
அன்று இரவு தேன் குரலில் மற்றும் ஒரு பாடலை ஆன் செய்தான் நிதிஸ் அதிலோ ” உன்னோடு பேச எனக்கு பிடிக்கும் ஆனால் அதைவிட எனக்கு பிடித்தது உன் அருகில் இருந்து உன்னுடன் பேசாமல் உன் முகத்தை ரசிப்பது தான் ரொம்ப பிடிக்கும்” …..
” சந்திப்போமே கனாக்களில் சில முறையா பலமுறையா எனும் பாடல் அவள் குரலில் மனதை ஏதோ செய்தது அவனிற்கு”
அடுத்த பாடலை ஒலிக்கச் செய்ய அதுலோ…..” ஒவ்வொரு நாளும் உன் நீதான என் காதல் உன் நினைவில் தொடங்கி உன் நினைவிலேயே முடிகிறது சரன் என்றவள் தொடர்ந்து ” அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும் உதிர்ந்து போன மலரின் வாசமா முடிந்தது அப்பாடல் அவள் குரலைக் கேட்டபடியே தூங்கி போனான் நிதிஸ்.
இப்படியே நாட்கள் செல்ல தேன் குரலை நிதிஸும் தேடிக் கொண்டு தான் இருந்தான். ஆனால் யாரென்று தான் தெரியவில்லை வாரத்தில் ஒரு பாடலோ ,கவிதையோ அவ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்ட்டுக் கொண்டிருந்தது..
“ப்ரோ”என்டா….. பிஸியா??? ம்ம் சொல்லு லிங்கொண்டு செயார் பண்ணிருக்கன் ஃப்ரீயா இருந்தா பாரு” என்ற ராம் அழைப்பை துண்டித்தான். அடிக்கடி அவன் இப்படி ஏதாவது அனுப்புவது தான்…..
“ஹலோ டாட் ம்ம்….. அங்க தான் கிளம்பிட்டிருக்கன்” என்ற நிதிஸ் அரை மணி நேரத்தில் ஒரு ப்ராஜெக்ட் லிசயமாக வெளியே சென்றிருந்தான்.மாலை வேளையில் தான் மீண்டும் ஸ்டூடியோவிற்கு வந்தழன்.சோர்வாய் அமர்ந்தான்.
ஜீகே கேர்ள்ல் ஹாஸ்டலில் ஒரு அறையில் தனது லாப்டாபுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள் அவள். ” கனிமலர்” பெயருக்கேற்றது போல் கனியைப் போல் இனிமையான குரலையும் மலரைப் போல் மென்மையான குணமும் கொண்டவள்.
ஐந்தரையடி இருப்பாள், அழகான திருத்தமான முகம் மஞ்சளில் குழைத்தெடுத்த சருமம்,நீண்ட கார் கூந்தல் அவளது கண்கள் கூட பேசும் அவளைக் கடந்து செல்வோர் ஒருமுறையேனும் திரும்பிப் பார்த்துத் தான் செல்வர்.அவள் தான் நம் நாயகி.
” தேனிலும் இனியது காதலே யூடியூப் சேனலினை ஓனர். பல்லாயிரக்கணக்கான சாப்ஸ்கிரைபர்ஸை வைத்திருப்பவள் நிதிஸ் “தேடும் தேன்” குரலுக்கு சொந்தக்காரி இவள் “கனிமலர்” நிதிஸின் இறுதியா வெளிவந்த பாடலைத் தான் தனது குரலில் பதிவேற்றிக் கொண்டிருந்தாள்.
எஸ்கியூஸ் மீ சார் என உள்நுழைந்த கௌதம் நிதிஸுன் சோர்வு கண்டு இன்டர்காமில் ” காஃபி கொண்டு வாங்க ” என பணித்தவன்.காஃபியும் வர “சார் காஃபி என அவன் முன் வைத்தான் “தாங்ஸ்” என்றவன் அதனைப் பருகினான். காஃபி உள்ளே சென்றதும் சற்று புத்துணர்ச்சியாக உணர்ந்தான்.
” கௌதம் வேற டப்பிங் ஆர்டிஸ்ட் கிடைச்சாங்களா? ,இல்ல சார் , என்ன பண்ணலாம்…..என தனது ரீம் செய்யப்பட்ட தாடியை தடவியவன் …” வாய்ஸ் சேலன்ஜ் அப்பிடினு அட்வடைஸ்மென் வைப்போம் அதுல செலக்ட் பண்ணிப்போம்.சாங் இல்லனா டயலாக் தத்துரூபமா பேசறவங்கள செலக்ட் பண்ணுவோம்” என்றான். “ஓகே சார், புது வாய்ஸ் கிடைக்கும் …அப்போ நான் நாளைக்கே அட்வடெயிஸ்மென்ட் கொடுக்கன்” என்றான் கௌதம்.
வீட்டிற்கு நிதிஸ் வர கல்யாணி காஃபியோடு வர “இப்போ தான்மா ஆபிஸ்ல குடிச்சன்” என்றான்.” சரி சரி காஃபிய இங்க தா என சத்தியதேவி வாங்கிக் கொண்டார். ” பாட்டிமா உங்களுக்கு தான் சுகர் இருக்குல, அப்புறம் எதுக்கு காஃபி” என நிதிஸ் அவரை முறைக்க அவனை பாவமாய் பார்த்தவர் இன்னைக்கு மட்டும் தான்டா என்றார்.
பாதிக் காஃபியை தான் அவரை குடிக்க வைத்தவன் தனதறைக்கு நுழைய ” உன் பையன் என்ன கொடும படுத்துறான்டி என மருமகளிடம் முறையிட உங்க நல்லதுக்கு தானே அத்த ” என்றார் கல்யாணி சிரிப்புடன்.
தனதறைக்கு வந்த நிதிஸ் குளித்து உலர்ந்த ஆடையணிந்து கீழே வர ராமும் வந்திருந்தான் வந்திருந்தான் சிறிது நேரத்தில் தேவ் ப்ரதாப்பும் வர அனைவரும் ஹாலிலேயே அமர்ந்தனர்.பேச்சும் சிரிப்புமாக மாலை வேளையில் கழிய ” கல்யாணி சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியும் , காஃபியும் வந்தார்.
தேவிப்பாட்டியோ காஃபிப் பக்கம் கை போக ராமும் நிதிஸும் ஒருமித்த குரலில் “பாட்டீடீடீ” என்றனர். “இல்லப்பா இல்லப்பா நா பஜ்ஜி தான் எடுத்தன்” என்றார் அவர். ராமும் நிதிஸும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
” நிதிஸ் நான் அனுப்புனத பார்த்தியா ,….ஓ…இல்லடா மறந்துடன் என தனது அலைபேசியை அவன் எடுக்க ,”இதப் பாரு ஒரு வீடியோவை காண்பித்தான் ராம் அதிலோ…….” பேரன்பு ஒன்றே பெண்களின் தேடல், அரவணைப்பு ஒன்றே அவளின் அணைத்திற்கும் ஆறுதல் ” என அப்பாடல் அவள் குரல் குழைந்து ஒலித்தது இறுதியில் என்னவனுக்காக என முடிவடைந்த்து.
” யார்டா ? இது இவளோ அழகாக பாடிருக்கிறது ,” தெர்ல பாட்டி ” நல்ல வாய்ஸ்டா அருமையா இருக்கு, நிதிஸ்ட வாய்ஸ் கேட்டது விட இந்த குரல்ல ரொம்ப பொருத்தமாயிருக்கு என்றார் தேவிப் பாட்டி. இது தான் அவர் தனது பேரன் என்பதற்காக தனது கருத்தை சொல்லாமல் இல்லை.