தேனிலும் இனியது காதலே 03

4
(2)
காதலே -03
” ஹேய் கனி என்னடி டப்பிங் ஆர்டிஸ்ட் கால் பண்ணி இருக்கு அப்ளை பண்ணுடி உனக்கு கட்டாயம் கிடைக்கும்” என்றாள் அவள் தோழி சஹானா “இல்லடி வீட்டில் தெரிஞ்சா பிரச்சனை, ஊருக்கு போனாலே சோசியல் மீடியா பக்கம் வரமாட்டேன்  வாரக்கிழமையோட காலேஜ் முடியுது எதும் வேலைக்கு இங்கே அப்ளை பண்ணனும் ஊருக்கு போய் என்ன பண்றது” என்றாள்கனி.  மேகநாதன், வாணி தம்பதியின் மூத்த புதல்வி தான் கனிமலர்.க்ஷ, இரண்டாவது மகன் சுதர்சன் மேகநாதன் பாடசாலை ஆசிரியர் வாணி இல்லத்தரசி கனிமலர் கல்லூரியை முடிக்கும் தருவாயில் உள்ளாள் தம்பி சுதர்ஷன் கல்லூரியில் முதல் வருடம் ஆனது பொருளாதாரத்திற்கு கஷ்டம் இல்லாத குடும்பம் தான்  மலர்க்கோ இசையில் ஆர்வம் அதிலும் பாடகர் நிதிஸ் சரனின் பாடல்கள் என்றால் கொள்ளை பிரியம் குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்த பாடகன் என்பதால் இளம் பெண் ரசிகர் கூட்டம் அதிகம் அதில் நூற்றி ஒருத்தி தான் நம் கனி மலரும்.
 தந்தை பாடசாலை ஆசிரியர் என்பதால் வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகமே கனிமலர் இசைத் துறையை தெரிவு செய்ய மேகநாதன் அதை தடுத்து விட்டார் ஆதலால் அவள்  தொழில்நுட்ப பிரிவை தேர்ந்தெடுத்து அதிலேயே பயில்கிறாள் இசை மீதுள்ள ஆர்வத்தை போக்க சும்மா பாடுவதாக இருந்தவள்  யூடியூப்  சேனல் திறந்து அதில் தனக்கு பிடித்த பாடகனான நிதின்ஸ்  சரணின் பாடல்களை தனது குரலில் பதிவேற்ற தொடங்கினாள்.
 ஆரம்பத்தில் ஆயிரம் எதிர்மறையான கமாண்ட்ஸ் வரவே அதனை ஓரம் கட்டியவள் கமெண்ட், செக்சன் மற்றும் தன் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் இருந்து மறைத்து வைத்தாள் சொல்லப்போனால் பேக் ஐடி போல் தோன்றம் ஒன்று.
 நிதிஸ் சரனின் பாடல் வரிகள் தன்னிலை இழப்பவள் அவனை ஒருதலையாக காதலிக்க தொடங்கினாள் , அக் காதலை வெளிப்படுத்தும் விதமாக நிதிஸுக்காக சில வரிக் கவிதைகளோடும், பாடலை பதிவேற்ற தொடங்கினாள்.
 இந்தச் சென்னை மாநகரில் எத்தனையோ,ஆயிரம் ரசிகர்கள் இருக்க நம்மை யார் கண்டு கொள்ளப் போகிறார் லைக் மற்றும் கமெண்ட்ஸோடும் உடன் முடிந்து விடும் எண்ணிக்கொண்டாள்  அவள்  உயிர்த்த தோழிக்கு மட்டுமே தேனிலும் இனியது காதலே யூடியூப் சேனல் கனிமலரோடது என தெரியும்.அவள் குரலின்  இனிமையில் கவரப்பட்டு அவளை ஈ மெயிலிற்கு கூட மெசேஜ் செய்து பார்ப்பவர்களும் உண்டு  எதயுமே கண்டு கொள்ள மாட்டாள். தனது சொந்த தகவல்கள் அனைத்தையும் மறைத்து சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறாள் இப்படி இருக்க நிதிஸுனால் எப்படி அவளை கண்டுபிடிக்க முடிவது.
இரவுணவை முடித்ததும் தந்தையுடம்  அன்றைய மீட்டிங் பற்றி நிதிஸும்,  ராமும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
” பாட்டி வார திங்கட்கிழமை செலக்சன் இருக்கு”.….” இந்த வயசுல என்ன யாருடா செலக்ட் பண்ற”…. “ஐயோ செலக்ஷன் நீங்க பண்றீங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு”
 ஐயே எனக்கேலாப்பா”.  ” ப்ளீஸ் பாட்டிமா”…..”ம்ம் யோசிக்க” என அவரும் பேரனை சுத்தலில் விட்டார்.
 அறைக்கு வந்த நிதிஸும் அவள் குரலில் ஆல்பம் சாங்கை ஒலிக்கச் செய்ய அவள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது “ஹனி எங்கடி இருக்க என்ன ரொம்ப சுத்தல விடுற நீ என மனதோடு சொல்லிக்கொண்டான்.
 அடுத்த நாளும் மெல்லப் புலவர அவர் அவர் தமது வேலைகளில் ஈடுபட்டனர். காலை பயிற்சியினை முடித்துக் கொண்டு ராம் உள்ளே வர நிதிஸ் உடற்பயிற்சி செய்திருப்பான் போலும் உடலெங்கும் வியர்வையில் குளித்திருக்க ஹாலில் அலைபேசியோடு  அமர்ந்திருந்தான்.
”  என்னடா ஆபீஸ் போகலையா? “போகத்தான்” என்றவன் சிறிது நேரத்தில்  அலுவலகத்திற்குக் கிளம்பினான். “நிதிஸ் சாப்பிட்டு போ கல்யாணி கட்டளையிட, அம்மா நேரமாச்சுமா?” என உண்ணாமலேயே சென்று விட்டான் ” என்ன ஆச்சு இவனுக்கு ” காலைல நல்லா தானே இருந்தான்”
“உம் மகன் எப்ப எப்படியிருப்பான்னு எப்படித் தெரியும்” என நொடித்துக் கொண்டார் தேவிப்பாட்டி.
 ஸ்டூடியோவிற்கு வந்ந நிதிஸ் காரினை பார்க் செய்துவிட்டு அலுவலகத்தினுள்  நுழைந்தான். அவனது அலுவலகத்திலேயே அவனுக்கு பெண் விசிறிகள்  அதிகம் யாரையும் சட்டை செய்யாது எதிர்ப்படுபவர்களின் காலை வணக்கத்தை ஒரு தலையேசைப்போடு  ஏற்றுக்கொண்டு தனது வேக எட்டுக்களால் தனது அறையினுள் நுழைந்தான்.
“கௌதம் இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்?” “ரெக்கார்டிங் இருக்கு கிருஷ்ணன் சார்ட, அப்புறம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அப்ளிகேஷன் வந்து இருக்கு…. என்றான்.
 அப்ளிகேஷன் அனைத்தையும் நிதிஸுன் முன்  வைத்த கௌதம்   அவர்களிடம் இருந்து வந்த ஓடியோ கிளிப்பையும் லாப்டாப்பில் வைத்தான்  ஒவ்வொன்றாக பார்த்து அதில் முப்பது பேரைத்தெரிவு செய்தனர் இருவரும் .
 “ஓகே  முப்பது பேருக்கும் இன்பார்ம் பண்ணுங்க என்றவன். ரெக்கார்டிங் மாதேவ் கிருஷ்ணாவை சந்திக்க சென்றான். மகாதேவ கிருஸ்ணா கைகுலுக்கி நிதிஸை வரவேற்றவர். ரெக்கார்டிங் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அதுவும் ஒரு காதல் பாடல் தான். “மனதோடு ஒரு காயம் உன்னை என்னாத  நாளில்லை நானாக நானும் இல்லையே, விழியெங்கும் பல பிம்பம் அது நான் சாய தோள் இல்லையே என அப் பாடலை ஒரு டேக்கில் க பாடி முடிக்க….. எப்போதும் போல் அவனது திறமை பாரட்டினார் கிருஷ்ணன்.அப் படத் தயாரிப்பாளருக்கோ ஏக சந்தோசம் நிதிஸை அனைத்து தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.  செமயா வந்திருக்கு சாங்  இந்த சாங் கிட்டாகும் என்றார் அவர்.
 இப்படியே நாட்கள் செல்ல வீட்டிலும் திருமணம் செய்ய சொல்லி நச்சரிப்பு, கல்யாணி கணவனுக்கு கண்ணைக் காட்ட அவரும்  “நிதிஸ்   ப்ரோடியூசர் ராஜா சார்   தெரியும் தானே அவர் ஒரு டாக்டர் எப்படி, தெர்லப்பா , ரீசன்டா கூட ஒரு ஹிட் படம் வந்துச்சி.” ….ஆமா ”  அதுக்கென்ன என்றான்.
அவன் பதிலில் கல்யாணியை முறைத்த ப்ரதாப் இவன் கூஞ மனிசன் பேசுவானா…..”  “என்னப்பா” அவர் மகளுக்கு உன் பேசலாம்னு நினைக்கன் நீ என்ன சொல்ற “
 தந்தையை நிமிர்ந்து பார்த்தவன்,  அவர் பக்கத்தில் தாயோ தவிப்புடன் அமர்ந்திருக்க இது அவயின் வேலை தான் என புரிந்து கொண்டவன்,     ப்ளீஸ்பா கொஞ்ச நாள்  என்னை நிம்மதியா இருக்க விடுங்க அம்மா,அடிக்கடி இதே பேசுறாங்க,   நீங்களும் அதே பேசுறீங்க  வெட்டிங்கிற்கு ஓகேனா நானே சொல்லறன். அது வர ப்ளீஸ்” என  கடிந்து கொண்டான்.
அவளது  பதினான்காவது  பாடலில் மொத்தமாக விழுந்தே விட்டான் நிதிஸ் , “நிதிஸ் நீ நீயா இல்லை என்ன பிரச்சினை ஒரு தரத்துல சாங்க முடிக்கிற நீ ரெண்டு மூன்று ரெக்கார்டிங்னு போற  அப்படியே சாங்க. முடிச்சாலும் ,   சந்தோசமான சாங்க கவலையான சாங் போல பாடிருக்க……..   கிருஷ்ணன் ஆங்கிள்  அப்பாட பேசிருகக்காரு”….               ” சாரிடா மைனட்  டிஸ்டர்ப்டா
 இருக்கு”…..  ” அப்படி என்ன பிரச்சனை உனக்கு என ராம் கேட்டான்.
முதலில் தயங்கினாலும் தேன் குரலுக்காரியைப் பற்றி சொல்லிவிட்டான் தனது தம்பியிடம் “எவ்ளோ ட்ரை பண்ணி கண்டுபுடிக்க முடியல அவளா வெளிய வந்தா  தான் உண்டு என்றான் பெருமூச்சுடன்.
“ஸ்டுப்பி மாதிரி பேசாதடா ஒருவேளை உன் தீவிர ரசிகையா இருக்கலாம், ஆன்டி வயசானவங்களாக் கூட இருக்கலாம் டா,  என்றான் கடுப்பாக, ஏன் நம்ம பாட்டியை எடுத்துக்க இப்ப கூட உன்னோட ஜோடியா டூயட் பாடச் சொன்னாலும் பாடுவாங்க அப்படி மெல்டான வாய்ஸ் அவங்களோடது.
” புரியுது டா ஆனா என்ன அந்தக் குரலை மறக்க முடியல டா” தலையில் அடித்துக் கொண்ட ராமு “நம்ம  உன் பாட்டிக்கும் வாய்ஸ் பிடிக்கும் ஏன் இது அவங்களா இருக்க கூடாது”……. “அடேய் என்னடா சொல்ற” “வாய்ப்பு இருக்கு இல்ல”…” நீ வேற சும்மா இருடா” என்றான் நிதிஸ், ராமோ சத்தமாக சிரிக்க தொடங்க, அவன் பேச்சில் நிதிஸும் சிரித்துக் கொண்டான்.
இதனாலான் வெட்டிங் வேணாம்றீயாடா,முட்டாள் மாதிரி இருக்காமா,  அடுத்த வேலையப் பாரு என்றான் ராம்.அதே வேளை ராமும் தனது அலைபேசியில்  ” தேனிலும் இனியது யூடியூப் சேனலை சாப்ஸ்கிரைப் பண்ணிக் கொண்டான்.
” சரன் எனத் தொடங்கியவள்  நீ என்னை  சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை  ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்  வாழ்வே சொர்க்கம் ஆகுமே…என் காதலும் கனவு தானே என முடித்திருந்தாள்.
கல்லூரியின் இறுதி நாள் அனைவரும் மனக் கவலையுடன் தான் விடை பெற்றனர்.” வீட்ட கொஞ்ச நாள் வந்து இருடி என்றாள் சஹானா ” ” இல்லடி அடுத்த மாதம் உன்  வெட்டிங்குக்கு வாரன் ” ம்ம் அப்போ  ஒரு வாரம் முன்னாடி  வரனும் என்ற சஹானா தனக்காக ஹாஸ்டலின்  முன்   காத்திருந்த தந்தையுடன் புறப்பட்டாள். ரெண்டு,  மூன்று  வேலைக்கு அப்ளை பண்ணியும் ஒன்றுக்குமே பதில் வரவில்லை , வீட்டிற்கு சென்றால்  தந்தையின் கட்டுப்பாடு என்ன செய்வதென்று தெரியாது  ஒரு வித சோர்வு தன்னை  சூழவே  தன்னை சமநிலைப் படுத்தும் பொருட்டே  நிதிஸுன்  பாடலைக் கேட்கத் தொடங்கியவள்  புதிய வீடியோ ஒன்றையும்  பதிவேற்றம் செய்திருந்தாள்.
நாட்கள் செல்ல ” கனி இந்தாம்மா லெட்டர் ஏதோ வந்திருக்கு என வார்டன் அவளிடம் கொடுத்துச் சென்றார்.அதனைப் பிரித்தவளுக்கோ  அவ்வளவு சந்தோசம்  ஆம் அவள் வேலைக்கு  விண்ணப்பித்த இரு  கம்பனியில் இருந்தும்  நேர்முகத் தேர்விற்கு. அழைந்திருந்தனர்.
” ஹலோ அம்மா சொல்லும்மா, இன்டர்வியூக்கு  வந்திருக்கு என்றாள்உட்சாகமான குரலில் மறுபுறம் ஏதோ பேசும் சத்தம் ,”எப்போ இன்டர்வியூ ???? ” வெள்ளிக்கிழமை என்றாள். முன்னே வரும் இன்டர்வியூவை மனதில் வைத்து.
“சரி சரி ஊருக்கு வா பார்க்கலாம் ,”அம்மா” ” உங்கப்பா பற்றித் தான் தெரியுமே ” வாமா” என தாயும் அழைப்பைத் துண்டித்தார்.
தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்து விட்டாள்.இன்டர்வியூ. லெட்டர் வந்து போது இருந்த சந்நோசம் எங்கு போனதென்றே தெரியவில்லை.
அன்று மாலையே ஊருக்குப் போக ஆயத்தமானார்.தந்தையோடு எப்படி பேச வேண்டும் என்றும் தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
மாலை பஸ் ஸ்டாப்பில்  பஸ்ஸிற்கு காத்திருக்க பஸ்ஸும் வந்து சேர்ந்தது.அதில் ஏறியமர பஸ்ஸும் புறப்பட்டது.முப்பது நிமிடம் பயணத்தில் சென்னையில் இருந்து   பூம்புகாறிற்கு  வந்து சேர்தாள்.
பஸ்ஸில் இருந்து இறங்கி சுதர்சன்  அவளுக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான்.அவளும் தம்பியுடன்  தனது வீட்டிற்கு புறப்பட்டாள்.
மறு நாள் சென்னையில் நிதிஸுன் ஸ்ரூடியோ பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இன்று டப்பிங் ஆர்டிஸ்ட்டிற்கான குரல்த் தேர்வு  நடைபெறவிருக்கிறது. தெரிவாகியுள்ள முப்பது  பேரும்  வருகை தந்திருந்தனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!