காதலே – 04
கௌதம் அனைத்து வேலைகளையும் முடித்தவன் “சார் எல்லாம் ஓகே போகலாம்” என்றான்” பாட்டிமா ரெடியா? ” “ம்ம்” என்றவர் எழுந்து கொண்டார், “மிஸ்டர் முகுந்த் வந்துட்டாரா?” “ஆமா சார்”, “ஓகே வாங்க பாட்டி “என இருவரும் அலுவலக அறையை விட்டு வெளியே லிஃப்ட் மூலம் முதல் தளத்தில் குரல் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
“திவ்யா நீங்க போகலாம்” என்றாள் குரல் தேர்வை ஒழுங்கமைத்தவள், திவ்யாவும் உள்ளே செல்ல சிறிய மேடை அமைப்பில் மைக் பொருத்தப்பட்டிருந்தது அதில் ஒரு ஸ்டாண்டில் அவர்கள் பேசும் டயலாக் மற்றும் ஐந்து வரி பாடலும் இருந்தது.
அறையை சுற்றி பார்வையை சுழல விட்டபடி வந்தவள். குரல் தேர்வினை செய்யும் நடுவர்கள் நாற்காலியில் திரும்பி பாடுபவர்களுக்கு முதுகினை காட்டி அமர்ந்திருந்தனர். ஒரு பெல்லினை அழுத்திய நிதிஸ் திரும்பி இருந்தபடியே அவளுக்கு “ஸ்டார்ட்” என்றான்.
முதலில் குரலில் பயத்துடன்டயலாக்கை பேசியவள், பாடலையும் அவ்வாறே பயத்துடன் பாடி முடித்தான்.
அவள் பாடி முடித்ததும் சுழல் நாற்காலியை திருப்பிய மூவரும் அவளிடம் நிறைகுறைகளை கூறினர்.
.அவளும் “தேங்க்ஸ்” என அவ் வறையை விட்டு வெளியே வர “என்னாச்சு” என ஒருத்தி கேட்க “சத்திய தேவி அம்மா, நிதிஸ் சார், முகுந் சார் தான் இருக்காங்க “என நடந்ததைச் சொன்னாள்.
அடுத்து அடுத்து ஒவ்வொருவராக சென்றனர் “திவாகர் இதோ வார மேடம்” என நீரை அருந்தியவன் போத்தலை வைத்துவிட்டு குரல் தேர்வு நடைபெறும் அறையினுள் நுழைந்தான்.
அவர்கள் கொடுத்த டயலாக்கை அழகான உச்சரிப்புடன் பேசியவன்,பாடலையும் அவ்வாறே அவன் பாட அவன் பாடிக் கொண்டிருக்கும் போதே சத்தியதேவி அம்மா திரும்பி அவனை பார்த்தவர் அவனை தெரிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக வந்து தங்களது திறமையை காட்டி கொண்டிருந்தனர் நிதிஸுற்கு அப்போது அழைப்பு வரவே, “எக்ஸ்க்யூஸ் மீ ” என எழுந்தவன் சற்று தள்ளி அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவறையைத் திறந்து கொண்டு உள் நுழைந்தாள் அவள் வித்தியஸ்ரீ அழகாக தனக்கான டயலாக்கை பேசியவள் அதே குரலில் பாடலையும் பாட அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிதிஸோ ஒரு நிமிடம் கண்மூடி அக் குரலை உள் வாங்கியவன், அக் குரலைக் கேட்டவனுக்கு தேன் குரலின் ஞாபகம் எழுந்தது, அப்படியே அலைபேசியை தூண்டிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தவன் “மிஸ்” என்றான் அவளோ “வித்தியஸ்ரீ” என்றாள்.
“வேற ஏதும் சாங் பாடுங்க” என்றான் பாட்டி அவனை கேள்வியை பார்க்க, அவரை ஒரு முறை பார்த்தவன் எதுவும் பேசவில்லை.
வித்தியாவும் “வெண்ணிலவு சாரல் நீ எனத் தொடங்கும் பாடலை அழகாக பாடினாள். வெல் யூ ஆர் செலக்டட் என்றான்.அவளும் மகிழ்ச்சியுடன் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
“பாட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ஆரம்பிக்கலாம்” என்றான் நிதிஸ் தேவிப்பாட்டியும்.
“ஆமாப்பா” என்ன எழுந்து கொள்ள தங்களுக்கான பிரத்தியேகமான பாதை வழியே வெளியேற முகுந்தனும் அவர்களுடன் சென்றார் வெளியே மிகுதி பத்துப் பேருக்கு மேல் இருந்தனர்.
அங்கு வந்த கௌதம் “ஹாய் ஹய்ஸ், இப்போ லஞ்ச் பிரேக் சோ எல்லாருக்கும் கீழ ஏற்பாடு பண்ணி இருக்கு, லஞ்ச் மூடிய குரல் தேர்வு நடக்கும். என்றான். அங்கிருந்து அனைவரும் லஞ்ச் நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
தங்களது பிரத்யேக அறைக்கு வந்த நிதிஸ் பாட்டிமா நீங்க ரெஸ்ட் எடுங்க என்றவன். “முகுந்த் சார் வாய்ஸ்ல எப்படி”? “ப்ராக்டீஸ் கொடுத்தா ஓகே” என்றார்.
அதனைத் தொடர்ந்து மூவருக்கும் மதிய உணவை இங்கு வரவழைத்தவன் பேசியபடி உணவை கொண்டு முடித்ததும் மீண்டும் குரல் தேர்வு நடைபெறும் இடத்துக்கு கிளம்பினர்.” பாட்டிமா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வாங்க”,” ஹலோ கௌதம்”…..” எஸ் சார்”…… “பாட்டிமா ஒரு ஒன் ஹவர் கழிச்சு ரூமுக்கு கூட்டிட்டு வா” “ஓகே சார்” என்றான் கௌதம்.
நிதினும் முகுந்தனும் குரல் நடைபெறும் இடத்திற்கு வந்தனர் மீண்டும் ஒவ்வொருவராக தங்களது திறமையை காட்டினர். ஒரு மணி நேரம் கழித்து பாட்டியும் அவர்களுடன் இணைந்து கொள்ள முப்பது பேரில் பத்துப் பேரை தெரிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தெரிவாகியவர்களை ஒன்று திரட்டியகௌதம் ” உங்களுக்கான அப்பாயின்மென்ட் லெட்டர், மெயில்ல வரும் அண்ட் காங்கிரஸ்” என அவர்களுக்கு விடை கொடுத்தான்.அதனைத் தொடர்ந்து” தேங்க்ஸ் சார்” என முகுந்தனுக்கும் விடை கொடுத்தவன், பாட்டியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் நிதிஸ்.காரில் இருந்து இறங்கிய இருவரும் குரல் தேர்வை பற்றி பேசியபடி வீட்டிலுனுள் நுழைந்தனர்.
இங்கு ஊருக்கு வந்த கனி தாய் தந்தையிடம் தனது இன்டர்வியூ பற்றி அதுவும் காலேஜ் மூலம் நடத்தப்படும் இன்டர்வியூ எனத்தான் தந்தையிடம் சொல்லி இருந்தாள் ஆகவே அவரும் வேற எதுவுமே கேட்கவில்லை, மேகநாதன் எப்போ இன்டர்வியூ அவளும் அது பற்றி சொல்ல சரி சரி என்று விட்டார். தாயோடும், தம்பியோடும் இரு நாட்கள் கழித்தவள் மூன்றாம் நாள் சென்னைக்கு புறப்பட்டாள்.
அதோ ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் பாதுகாப்பிற்கு பிரச்சினை இல்லை இருந்தாலும் ஆயிரம் அறிவுரைகள் கூறி வாணி அவளை அனுப்பினார்
அடுத்த நாள், காலையில் குளித்து இன்டர்வியூக்கு தயாராகி பஸ்ஸுற்க்கு காத்திருந்து எட்டு மணியளவில் “சாஃப்ட் டெக்” எனும் பெயர்பலகையைக் கொண்ட ஐந்ததடுக்கு நிறுவனத்தின் முன் நின்று இருந்தாள்…
வானுயர்ந்த ஐந்தடுக்கு கட்டிடத்தை நிமிர்த்து பார்த்தவளோ… இன்டர்வியூ பற்றிய பயம் இருந்தாலும் தன்னை தைரியமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்ததும் தான் தன்னைப் போல் பலர் அங்கு அமர்ந்திருந்தனர் கல்லூரி மாணவர்கள் சிலரும் அங்கு இருந்தனர். ஒன்பது மணி அளவில் நேர்முகத் தேர்வு ஆரம்பமாகியது கனிமலர் மேகநாதன் என அழைக்க அவளும் உள் நுழைந்தாள் பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தவளுக்கு மகிழ்ச்சியின் உச்சம் அவள் முதல் தேர்விலேயே தெரிவாகியிருந்தாள் .
தெரிவாகிய ஐவருக்கும் அப்போதே அப்பாயின்மென்ட் ஆர்டரை வழங்கிய நிறுவனம் நாளை வேலையில் சேரவும் சொல்லியது.
இப்போது வேலை கிடைத்ததைச் சொன்னால் ஏதும் விதண்டாவாதமாக தந்தை பேசுவார் என எண்ணியவள் இரு நாட்கள் கழித்து வேலை கிடைத்ததைப் பற்றி சொல்வோம் என முடிவெடுத்தாள்.
பின் ஹாஸ்டலுக்கு வந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தனக்கான உணவை தயாரிக்க தொடங்கினாள்.
அங்கு ஸ்டுடியோ வித்தியஸ்ரீயுடன் நட்பாகிக் கொண்டிருந்தான் நிதிஸ் அவளும் நிதிஸுன் ரசிகை தானே எப்படி மறுப்பாள் அவன் நீட்டிய நட்பு கருத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
முதல் நாள் ரெக்கார்டிங் வித்யாஸ்ரீக்கு கொடுத்த டயலாக்கை இரண்டு மூன்று டேக்கில் கட்சிதமாக முடித்து இருந்தாள். தனது அலுவலக வேலைகளை முடித்துவிட்டு ரெக்கார்டிங் அறைக்குள் வந்த நிதிஸ் வித்யாவின் ரெக்கார்டிங் கேட்டவன் ” வெரி குட் வித்யா கீப் இட் ஆப் “என அவளை பாராட்டவும் செய்தான்.
அடுத்த நாள் குளித்து மெல்லிய பட்டன் கலர் சுடிதாரை அணிந்தவள் அலுவலகத்திற்கு கிளம்பினாள் கனி. “ஹலோ அக்கா கங்கிராட்ஸ்” என்றான் சுதர்சன்.” கிளம்பிட்டியா ஆமாடா” “ஹாஸ்டல்லுக்கு வெளியே நிக்கிறேன் வா” என்றான் அவளும் தனது கை பையுடன் வெளியே வர சுதர்சன் நின்றிருந்தான்.
“தர்ஷா “என அவனிடம் வர “இங்கிருந்து தூரமா கம்பெனி இல்லடா பதினைந்து நிமிஷத்துல போயிடலாம் எட்டு முப்பதுக்கு போனா ஓகே என்றாள் தனது கை கடிகாரத்தை பார்த்து விட்டு ,”அப்போ சாப்பிட்டு ட்ராப் பண்றன் என்றான் சுதர்ஷன்.
தம்பியுடன் பைக்கில் கிளம்பியவள் அருகில் இருந்த உணவகத்தினுள் நுழைந்தனர் இருவரும் காலை உணவாக இட்லியை ஆடர் கொடுத்தனர். “என்னடா இந்த பக்கம்,” “அம்மா தான் காலையில ஹால் பண்ணி பேசினாங்க” என்றான். நீ அப்பாட சொல்லலையா இன்னைக்கு ஜாயின் பண்றது இல்லடா அப்பா பத்தி தான் தெரியுமே நாளைக்கு தான் சொல்லணும் ஃபைனல் ப்ரொஜெக்டர் வச்சு தான் செலக்ட் பண்ணாங்க, நீயும் பைனல் ப்ரொஜெக்டே இப்ப இருந்தேன் ஃபுல் எஃபெக்ட் போடுடா” என இருவரும் பேசியபடி உணவை முடித்ததும் சுதர்சன் பணத்தை செலுத்து “அடேய் பெரியவன் ஆயிட்டியாடா?? பில் எல்லாம் செட்டில் பண்ற” என அவன் தோளில் தட்ட “அதான் ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வந்தா பாட்டி வைக்க மாட்டியா என்ன??” என்றபடி கனியை பைக்கில் ஏற்றிக்கொண்டவன் சாஃப்ட் டேக்கில் இறக்கி விட்டு விடை பெற்ற சுதர்சன்.
அலுவலகத்தினுள் நுழைந்து தனது அப்பாயின்மென்ட் ஆர்டரை ரிசப்ஷனில் கொடுக்க ரிசிப்ஷன் இஷ்ஸ்ட்டும் “செகண்ட் ப்ளோர் பிப்த் ஹாலுக்கு போங்க “என்றாள் புன்னகையுடன் கனியும் லிப்டிங் “செகண்ட் ப்ளோர் பிப்த் ஹாலுக்குள் நுழைய தெரிவாகிய ஐவரும் அங்கிருந்தனர்.ஐவரில் இரு பெண்கள் மூன்று ஆண்கள் “ஹாய் ஐ அம் மோனிகா”,” ஜ அம் கனிமலர் என கனியுடன தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள் அப்போது
கதவை திறந்து உள்ளே நுழைந்தார் ஒரு வயதான நபர்.அதனைத் தொடர்ந்து அவ்வரையே அமைதியாகினர். அவரைத் தொடர்ந்து கம்பீரமாக உள் நுழைந்தான் ராம்.
“குட் மார்னிங் எவ்ரி ஒன் ஐ அம் ராம் சரன், சாஃப்ட் டெக் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் நினைக்கிறேன் இப்போ முன்னனில இருக்கிறது நம்ம கம்பெனி தான். இப்போ ரெண்டிங்ல இருக்கிறது. சாஃப்ட் டெக்ல புதிதா லான்ஞ் பன்ன கேம் தான் என கம்பனி பற்றி பேசியவன் ஒன் வீக் உங்களுக்கு ட்ரைனிங் பீரியட் அதுக்கு பிறகு உங்களை ஒவ்வொரு டீம்லயும் ஜாயின் பண்ணி விடுவோம் என்றான் . அவன் அழகான அளுமையாக புதியவர்களுக்கு அவர்கள் வேலை பற்றி கூறியவன் பின் இருந்தவரைப் பார்த்து “டாட்” என்றான்.
மகனையே பெருமை பொங்க பார்த்திருந்த தேவ் பிரதாப், “வெல் செட் மை பாய்” என்றவர். “வெல்கம் சாஃப்ட் டேக் கைஸ், உங்க ஃபுல் எஃபெக்டோட வர்க் பண்ணுங்க என சில அறிவுரைகளை வழங்கியவர் அவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்து விடை பெற்றார்.
ராமின் பி ஏ ரூபி அனைவரையும் ட்ரைனிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் விட்டவள் “ஆல் த பெஸ்ட்” என வெளியேறினாள்.
அன்றைய பொழுது ட்ரெய்னிங்கில் கழிய மாலை ஐந்து மணி போல் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.” கனி எங்க ஸ்டே பண்ணி இருக்க?”. ” ஜி கே ஹாஸ்டல்ல தான்” என்றாள் “நான் வீட்டிலிருந்து தான் வாரன் தூரம் கஷ்டமா இருக்கு, ட்ரைனிங் முடிய இங்க குவாட்டர்ஸ் இருக்கானு கேட்கணும் என்றாள் மோனிகா. தங்களது இருப்பிடத்திற்கான பஸ்ஸும் வர இருவரும் பஸ்ஸுல் ஏறிப் புறப்பட்டனர்.
தொடரும்…………