காதலே- 05
ஸ்டூடியோக்கு வந்த நிதிஸ் ரெக்கார்டிங்கை முடித்து விட்டு தனது அறைக்கு வந்தவன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தவனின் கை தானாக அவ் அறையில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தது. அதிலோ “நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை ,நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை, ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே எனபெண் குரல் மயிலிறகாக வருடிச் சென்றது.
அக்குரலில் தான் எத்தனை காந்தம் அப்படியே உள்ளெழுத்து விடுகின்றது அல்லவா இன்டராகாமில் கௌதமை அளித்த நிதிஸ் “கௌதம் வித்யா போய்ட்டாங்களா?.எனக் கேட்க, இல்ல சார், ஓகே கேபினுக்கு வர சொல்லுங்க” என்றான்.
” எக்ஸ்கியூஸ் மீ சார் ”
“யெஸ் கமிங்” என நிதிஸ் சொல்ல உள் நுழைதாள் வித்தியா அப்போது “அறையினுள் சந்திப்போமா கனாக்களில்” எனும் பாடல் தேன் குரலில் ஒலித்தது புன்னகையுடன் அவன் முன்னிற்க “சிட்” என்றான். அவளும் அமர்ந்தவள் “சார் சாங் நல்லா இருக்கு” என்றாள். அவளைப் புருவம் சுருக்கி பார்த்தவன் அவனது ஆல்பம் சாங் ஒலிக்க விட்டான், கண்களில் ஒரு எதிர்பார்ப்போடு “இந்த ஆல்பம் சாங் நல்லா பாடிருக்க என்றான். வித்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அக்குரலும் தனது குரலை ஒத்ததாக இருக்கவே “அடிச்சு விடுவம் இந்த அறையில் வேற யார் இருக்கா? ” அவளோ அழகாக சிரித்தாள். அப்போதுதான் பிடித்திருந்த மூச்சையே வெளியிட்டான் நிதிஸ் வித்யாவுக்கோ நிதிஸ் இக் குரலை தன்னோடது என நம்புகிறான் அது பொய் என்று தெயிந்தாள் என்னாவது, எண்ணம் மனதில் ஓட படபடப்புடன் “ஓகே சார் கிளம்பறேன்” என வெளியேற நிதிஸுற்கோ புன்னகை தான். அவளை கண்டு கொண்டதாலேயே இப் படபடப்பு என எண்ணிக்கொண்டான்.
மனதில் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டான் நிதிஸ் இங்கு ஹாஸ்டலில் மகிழ்ச்சியில் புதிய பாடல் ஒன்றை நிதிஸ் மேலான காதலை சொல்லி பதிவேற்றிக் கொண்டிருந்தாள் கனி.
அதன் பின் இரவு உணவை எளிதாக முடித்த கனியும் தூக்கத்தை தொடர்ந்தாள் தூக்கம் தான் வருவேனோ என்றது மகிழ்ச்சி அதிகமானாலும் தூக்கம் வராது தானே. ஒரு தலை காதல் எந்தவித எதிர்பார்ப்பு மற்றது, இருப்பினும் நிதிஸுன் பாடலில் தொடங்கிய இரசிப்பு காதலாக எப்போது மாறியது என தெரியாது ஆனால் இவ்வுணர்வு பிடித்தும் இருந்தது.
வீட்டிற்கு வந்த நிதிஸ்ற்கு தன்னவளை கண்டு கொண்டதில் அளவற்ற மகிழ்ச்சி. தான் அவளை கண்டுகொண்டதில் படபடப்பு, கூச்சம் கொண்டுள்ளாள் என எண்ணிக்கொண்டவன் அவ்விர வைத்தூக்கமற்றுக் கழித்தான், இருவருக்குமே மொத்தத்தில் அவ்விரவு தூக்காவிரவாகிப் போனது.
நாட்களும் வாரங்களாக செல்ல இதோ கனிவேலைக்கு சென்று மாதம் முடிவடைந்தது. அனைவருக்கும் முதல் மாத சம்பளம் வங்கி கணக்கு போடப்பட்டது “ஹே கனி ஈவினிங் என்ன பிளான்?” “ஒன்னும் இல்லப்பா”….” அப்போ ஷாப்பிங் போலாமா?” என்றாள் மோனிகா நாளைக்கு ஊருக்கு போகணும் ஏதாவது வீட்ட வாங்கிட்டு போகணும்” என்றாள் “கனியும் ஓகே அப்போ போலாம் என்றாள்” இருவரும் வேலை விட்டு வரும்போது அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றனர்.
இருவரும் ஷாப்பில் மாலைச் சுற்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு பஸ்ஸுற்கு காத்திருந்தனர்.அப்போது கனியின் அலைபேசி தனிருப்பைக் காட்ட அதில் முகம் மலர “ஹலோ கல்யாணம் பொண்ணு என்ன, எனக்கெல்லாம் கால் பண்ணி இருக்கீங்க” என்ன விசயம்?” மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ” நெக்ஸ்ட் வீக் தானே டூ டேஸ் முன்ன வாரேன்” மறுபுறம் சகானா “என்னடி சொல்ற என கோபமாய்க் கேட்க, இப்பதான் வேலைல ஜாயின் பண்ணிருக்கேன் சோ லீவு எடுக்க முடியல என்றாள்.
“சரி சரி சுதர்சனையும் கூட்டிட்டு வந்துடு “என்றாள் அவளோடு சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டிக்க பஸ்ஸும் வந்தது இருவரும் பஸ்ஸில் ஏற பஸ் புறப்பட்டது.
கனி தனது தரிப்பிடத்தில் இறங்க,மோனிகா தனக்கான இருப்பிடத்தை நோக்கி பஸ்ஸில் பயணப்பட்டாள்.
நிதிஸ் வித்யாவுடன் ஆன பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்தது. அடிக்கடி அவளிடம் தேன் குரலில் பாடலில் காண்பித்து பாராட்டுவான் அவளும் புன்னகையுடன் அவன் பாராட்டை ஏற்றுக் கொள்வாள். அவளோடு பேசிப் பழகினாலும் அத் தேன் குரலையும் வித்தியாவையும் அவனால் சம்பந்தப்படுத்தி யோசிக்க கூட முடியவில்லை ஆல் மீது தேன் குயலில் எத்தனை முதிர்ச்சியான கவிதைகளை பதிவிட்டிருந்தாள் ஆனால் அதற்கும் வித்தியாவிற்கும் சம்மந்தம் இருப்பது போல் தெரியவில்லை. அடிக்கடி நிதின் சின் சந்தேக பார்வை படியும் அது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நிதீஸின் குரலில் ஒரு மாதம் முன்பு வெளியாகிய லவ் பேர்ட்ஸ் படத்தில் இருந்து பாடலை வித்யா ஸ்டூடியோவில் பாட ஸ்டுடியோவில் இருந்த அனைவரும் அவள் குரலில் இனிமையில் அவளை பாராட்டினர். ஸ்டுடியோவில் உள்ள அனைவரும் வித்தியா மீது நிதிஸ் கூடுதலாக கவனம் செலுத்துவதாகவே கருதினர். வித்யாவுக்கு நிதிஸ் தன்னை வேறொரு நபர் என எண்ணிக்கொண்டு உள்ளான் என புரிந்து வந்தது. அக் குரலைத் தான் தன்னுடையது என தவறாக எண்ணி உள்ளான் என்பதும் அவளுக்கு புரிந்தது.
இருந்தும் அவளால் உண்மையைச் சொல்ல முடியவில்லை காரணம் இப்படிப்பட்ட புகழின் உச்சத்தில் உள்ளவனை எப்படி இழப்பது அன்று இரவு உணவின் போது “கல்யாணி நீ கேளு, அத்தை நீங்க கேளுங்க என இருவரும் மாறி மாறி குசுகுசுக்க “ராமோ யாராவது ஒருத்தர் கேளுங்க என்றான் உணவினை வாயில் வைத்த படி நிதிஸோ இதழ்களுக்குள் புன்னகையை மறைத்தபடி “என்ன பாட்டி” உன் கல்யாணத்தப் பற்றித் தாண்டா” அழகாக புன்னகைத்தவன் அதுக்கென்ன பண்ணிக்கலாம் என்ன அவசரம் என்றன் சிரிப்புடன்.
கல்யாணியும் தேவிப் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் அப்போது அனைவரும் உணவு உண்டு அங்கிருந்து கலைய “பிரதர் என்ன பேஸ் ஆயிரம் பல்ப் போட்ட போல பிரைட்டா இருக்கு, என்ன விஷயம்? “எல்லாம் நல்ல விஷயம் தான்” என்றான் கண் சிமிட்டி “அப்ப இப்போ சொல்ல மாட்ட”எனக் கேட்க நிதிஸோ “வாய்ப்பில்லை” என்றான்.
வித்யா பற்றி ஒரு நெருடல் இருந்தது என்னவோ உண்மை அதனால் என்னவோ அவன் அன்று வித்யா பற்றி ராமிடம் சொல்லவில்லை.
அன்று அலுவலகத்திற்கு வந்த கனி அரைநாள் விடுப்பிற்கு விண்ணப்பிக்க விடுப்பும் கிடைக்க , சகானாவின் திருமணத்திற்கு போக வெள்ளி ,சனி, ஞாயிறு தான் திட்டமிட்ட படி வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணி போல் ஹாஸ்டலுக்கு வந்தவள். திருமணத்துக்கு செல்வதற்காக உடைகளை எடுத்துக்கொண்டு சகானாவின் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள்.
சகானாவிற்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம், சனிக்கிழமை எங்கேஜ்மென்ட் ஆகவே வெள்ளிக்கிழமை போவது என முடிவெடுத்தவள் இதோ ஆட்டோவிற்காக காத்திருந்தாள்.
” ஹலோ அம்மா கிளம்பிட்டியா” “ஆமாமா’ இதுக்கு தானாக ஏதும் நகை வச்சுக்குனு கல்யாணம், கோயிலுக்கு போறது தேவைப்படும் என அவர் சொல்ல” ” ஐயோ அம்மா இங்க சேஃப் இல்லாம வச்சிருக்கிறது இமிடேஷன் செட் டிரஸ்க்கு மேட்ச்சா வச்சிருக்கன்” என்றாள் “எப்ப நான் சொல்றதை கேட்டு இருக்க” க்ஷ தர்ஷன் வருவான்னு சொன்னான்மா “சனிக்கிழமை தான் வருவானாம் என்றார் அவர்” “ஓஓஓஓ” என்றவள் அன்னையோடு சிறிது நேரம் பேசிவிட்டு ஒரு ஆட்டோவுக்கு கைகாட்டியவள் ஆட்டோவும அவர அதில் ஏறியவள் சிறிது நேரத்தில் சகானாவின் வீட்டின் முன் நின்றது ஆட்டோ.
ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு தனது பையுடன் நுழைய, “வாமா கனி என சகானாவின், அம்மாவும் தங்கையும் வரவேற்றனர். சகானாவின் குடும்பம் சற்று வசதியானவர்கள் தான், பணத்தின் செழுமை பார்த்தாலே தெரிந்தது. கனிக்கா அக்கா மேல இருக்கா வாங்க இத சகானாவின் தங்கை கனியை அழைத்துச் சென்றாள்.
வரையினுள் சகானாவின் தங்கையை தொடர்ந்து கனி உள்நுழைய “கனி வா வா கனிக்கு காப்பி எடுத்து வாடி” என தங்கையை ஏவியவள் “பேக்க அதுல வச்சுட்டு வாடி எந்த டிசைன் நல்லா இருக்குனு சொல்லு என மெஹந்தி டிசைன்ஸேக் காட்டினாள். சகானா. அப்போது அனைவருக்கும் காப்பியும் வந்தது . உறவுக்கார பெண்ணொருத்தி தான் மெஹந்தி போட்டாள். “செமையா இருக்குப்பா? என்ன “கனி நீயும் வச்சுக்க” “ஐயோ எனக்கு வேணாம்” என்றாள். “கனி எல்லாருமே மெஹந்தி போடுறோம் என அவளுக்கும் சிம்பிள் டிசைன் ஒன்றை போட்டனர். அவ் வறையில் இருந்து அனைவரும் கலைய தோழிகள் இருவருக்கும் பேச ஆயிரம் கதைகள் இருந்தன.
இரண்டு மணித்தியாலம் கடந்ததும் இருவரும் குளியலறை நுழைந்து மெஹந்தியை கழுவிக்கொண்டு வந்தனர் ” வாவ் ரெட்டிஷ்ஷா இருக்குடி” என்றபடி இருவரும் கீழே வர அனைவருக்கும் இரவு உணவு தயாராக இருந்தது.
இரவுணவை உண்டதும் மீண்டும் அறைக்கு வந்தனர். மத்த ப்ரண்ட்ஸ் எப்போ வராங்க, அவங்க வெளிய ஹோட்டல்ஸ்ல தங்கி இருக்காங்கடி”. அவங்க கூட நானும் தங்கி இருக்கலாம்” என்றாள்,….”அடி வாங்கப் போற….” என்றாள் சகானா.
“நாளைக்கு என்ன டிரஸ்….. இரு காட்டுரன் என சகானா தனது எங்கேஜ்மென்ட் ரெஸ்ஸை காட்ட அதுவோ நீலமும், வெள்ளையும் சேர்ந்த வெள்ளை நிற கற்கள் பறிக்கப்பட்ட லெஹங்கா, “அழகா இருக்குடி இருவரும் காலேஜ் கலாட்டாகக்ளை பேசி சிரிக்க “என்ன இன்னும் தூங்கலையா?” என அவர்களின் வயதை ஒந்த சகானாவின் உறவுமப் பெண் அங்கு வந்தாள். கல்யாண வீட்டில் ஆட்கள் அதிகம் என்பதால் அவர்களும் அவ்வறையிலேயே தூங்கிக் கொண்டனர்.
உன்கூட லாஸ்ட் நைட் இன்னைக்கு தான் என்றாள் கனி சகானாவோ கிலுங்கி சிரிக்க, கனியும் சிரித்துக் கொண்டாள்.
ஹேய் கனி லாஸ்ட்டா நீ அப்லோட் பண்ண வீடியோ ஃபைவ் கே விவ்யர்ஸ் தாண்டிருக்கு ” என்றாள். ஓஓஓ அப்லோட் பண்றதோட சரி அதுக்கப்புறம் அந்தப் பக்கம் போகலடி ,என்றாள் கனி.”இப்பயும் நிதிஸ் மேல லவ் தானா” ” ம்ம் ” லூசு மாதிரி வீகேவ் பன்ற ” ” என்னடி” ” நீ சரிப்பட்டு வரமாட்ட உங்கப்பா நாளைக்கு கல்யாணம் வானு இன்றைக்கு கூப்பிடுவார் அப்ப தெரியும், “ஹேய் குரங்கே பேசாம தூங்குடி ” என இருவரும் சீண்டிக் கொண்டே தூங்கினர்.
” நிதிஸ் நாளைக்கு ஏதும் வேர்க்கா?? ” இல்ல ப்ரியா தான் இருப்பன்டா, நாளைக்கு மீட்டிங் ஹோட்டல் கிங்ஸ்ல அரேஞ்ச் பண்ணிருக்கு போவோம் என்றான்.
அவனை நிதிஸ் நிமிர்ந்து அழுத்தமாய் பார்க்க, “தாராவா லஞ்க்கு இன்வைட் பணண் இருக்கனாடா,தம்பிக்காக அவன் லவ்க்கு இதக் கூட பண்ணமாட்டியா ??? ” நாங்க உன் லவ்க்கு கெல்ப் பண்ணுவம் தானே…என்றான் கண்சிமிட்டி.
” நிதிஸோ தாடையைத் தடவியவாறு வித்தியாவ கூட்டிப் போவமா??? என எண்ணியவன்,ஓகே போகலாம் என்றான்.
அடுத்த நாளும் மெல்லப் புலர சகானாவோ அழகுக்கலை நிபுணர்களாளல் அழகாக தயாராகி வர ,கனியும் தனது மற்றைய நண்பர்களுடன் தயாராகி வர அனைவரும் வேனில் கிங்ஸ் ஹோட்டலுக்குச் சென்றனர்.
அங்கிருந்த திருமண மண்டபம் எல் ஈ டீ மின்குமிழ்களால் ஜொலித்தது.மெல்லிய இசை நிகழ்வு ஒருபுறம் சாப்பாடு ஒருபுறமும் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டாரும் நேரத்திற்கே வர எங்கேஜ்மென்ட் நிகழ்வுகள் யாவும் இனிதே ஆரம்பமானது.மணமகனும் ,மணமகளும் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.பின் பெற்றோர்,பெரியோர்,சுற்றத்தினர் முன் இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து எங்கேஜ்மென்ட் பார்ட்டியும் களை கட்டியது.
ஆடல்,பாடல் ஒருபுறம் உணவுகளும் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.கனியோ சகானவின் அத்தை மகளுடன் நின்று வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள்.
” சகானாவின் தாயோ இனி ஆட்கள் குறைய தான் வருவாங்க நீங்க போய் சாப்பிடுங்க நான் பார்த்துக்கிறன்” என்றார். ” சரி ஆன்டி” என இருவரும் உணவுண்ணச் சென்றனர்.தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு இருவரும் ஆடல்,பாடலை பார்க்கும் வண்ணம் அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.