தேனிலும் இனியது காதலே 06

5
(4)

காதலே -06

கிங்ஸ் ஹோட்டல் வளாகத்தில் உள்ள நுழைந்தது நிதிஸுன் கார், அவனுடன் வித்யாவும் வந்திருந்தாள் இருவரும் உள்ளே நுழைந்தனர். நிதிஸ் சுகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான்.

” ராம் எங்க செகண்ட் ப்ளோர்ல” என்றான். “வித்தியா இங்க உட்காரு ஏதும் வேணும்னா சாப்பிடு, மீடிங் முடிய ஜாயின் பண்ணிக்கிறன் என அவளிடம் சொல்ல, “அவளும் ஓகே சார் என்றாள் புன்னகையோடு அவளும் அங்கே,ஒரு இருக்கலயில் அமர நிதிஸ் அங்கிருந்து அகன்றான்.

“ஹலோ பேபி,எங்கயிருக்க,ஆன் த வே ” ஓகே ரிலாக்ஸா வா” என அழைப்பை துண்டித்து அலைபேசியை பையில் போட்டபடி நிமிர,அத் தளத்தில்  மறுபுறம் , பகுதி பரபரப்பாக இயங்கியது அவ்  வழியால் சென்ற  சேர்வன்டிடம் ,”என்ன பங்சன் என ராம் கேட்க, எங்கேஜ்மென்ட் நடக்குது சார்” என்றான் .” ஓஓ ஐ சீ” என்றவன் அவ் அலங்காரஙக்ளை பார்த்தபடி  நிற்க அபப்குதியைக் கடந்து சென்றாள் கனி.

ராமைக் கன்டதும் ஒரு நிமிடம் நின்றவள்  தன்னோடு வந்த பெண்ணிடம் ” சார் நிற்கார் ” என்றார. ” இவங்கட கம்பனிலான் வேலை செய்றீயாடா”  ” ஆமாக்கா இன்னைக்கு கிளைன்ட் மீட்டிங் ” ஆபிஸ்ல இருந்து லீடர்ஸ் வந்திருக்காங்க” என்றாள்.

ஓஓஓ ” எந்த கமப்னி ” சாஃப்ட் டெக் ” ஓஓஓ அதுவா ரொம்ப ப்மஸான கம்பெனி தான். பார்த்தும் பேசாம போனா சரியில்லடா நீ பேசிடு வா நான் வேனுக்கு போரன்.

“சரிக்கா என்ற கனி ராமிடம் வந்தவள் “குட் ஆஃப்டனூன் சார்”என்றாள். அவன் முன நின்று.  அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் ” புதுசா ஜாயின் பண்ணீங்க தானே”. “ம்ம்….ஆமா சார் என்றாள் கனிமலர். ” அவள் உடையலங்காரத்தை கேள்வியாய் நோக்க,”ப்ரண்டோட எங்கேஜ்மென்ட்” என்றாள். அப்போது  அவனக்கு தரங்கினியிடம் இருந்து அழைப்பு வர ”  உங்க ப்ரண்ட்டுக்கு என்னோட வாழ்த்தையும் சொல்லுங்க என்றவன் அவளிடமிருந்து விடை பெற்றான்.”  ஹேய் பேபி செகண்ட் ஃப்ளோருக்கு வா” என அவளுடன் பேசியபடி அங்கிருந்து அகல கனியும் வேனை நோக்கி கீழே சென்றாள்.

அவளோடு வந்த பெண்னோடு இணைந்து கொண்டாள், வேனில் சகானாவிற்கு வாங்கிய கிப்டையும் அதோடு, சில பொருட்களை எடுத்துக் கொண்டு இருவரும்  மீண்டும் உள்ளே வந்தனர்.

நிதிஸைக் கண்ட  ராம், “தேங்க்ஸ் டா “என்றான். அப்போது தரங்கியும் அவ்விடம் வர “பிரதர் இவ தான் தாரா” என  தரங்கிணியே நிதிஸுக்கு அறிமுகப்படுத்தினான். அவளும் “ஹாய்” என்றாள் “ஹாய் மா” என்றான் அவனும். “கிளையன்ட் லஞ்ச்க்கு போயிருக்காங்க எப்படி வண்ணவர்ல வந்துருவாங்க” என்றான் ராம்.

நிதிஸ் தனது டைட்டன் வாட்ச்சைப் பார்க்க நேரமோ ஒன்று என காட்டியது டீடேயில்ஸ்  எல்லாம், லேப்ல இருக்கு, லாஸ்டா ரெடி பண்ண கேம் தான், அதுட டெமோ போட்டு எக்ஸ்ப்ளைன் பண்ண ஓகே” என்றான் ராம்.

அவன் தோளில் தட்டிய நிதிஸ் “நான் பாத்துக்குறேன்” ஃப்ரீயா இரு” என்றவன்   மீட்டிங் நடைபெறும் அறைக்குள் நுழைந்தான்.

ஓர் ,இருவர் மட்டுமே அறையில் மற்றவர்கள் லஞ்சுக்கு சென்றிருந்தனர். ராமின்  பி ஏ நிதிஸுடம் லேப்டாப்பை கொடுக்க அவனும் கேம் பற்றிய தகவல்களை பார்க்கத் தொடங்கினான்.

ராமும் திரங்கினியும் ஹோட்டலில் தாங்கள் ரிசர்வ் செய்த இருக்கையில் அமர  சர்வென்றும் அவர்களுக்குரிய ஆடரை கேட்க, தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு உணவிற்கு காத்திருந்தனர்.

கிப்ட்டு எங்கேஜ்மென்ட் ஹாலை அடைந்த கனி தனது உயிர் தோழியிடம் அவரது கணவன் ரஞ்சித்திடமும் பரிசைக் கொடுத்து வாழ்த்துக்கள் என்றாள் சகானாவை அனைத்து.”சகானாவோ என்னடி இது” என்றாள் ரஞ்சித்திற்கு  கனியுடன் பழக்கம் இல்லாவிடினும் கனி பற்றி சகானா பேசியிருப்பாள் போலும் “எதுக்குமா?”என்றான் “பிரிச்சு பாரு” என்றாள் கனி  சகானாவும்  பரிசுசைப் பிரிக்க பிரிக்க அவள் முகம் மலர்ந்தது ரஞ்சித் மற்றும் சகானாவின் புகைப்படங்கள்  டிஜிட்டல் பெயிண்ட்டிங்கில் ப்ரேம் செய்யப்பட்டிருந்தது.”தேங்க்ஸ் டி” என்றள் சகானா.  உறவினர்கள் மேடைக்கு வரவே கனியும் மேடையை விட்டு இறங்கிக்  இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நண்பர்களுடன் இணைந்து கொண்டாள்.

ரஞ்சித்தோ….. லூசு குட்டிமா பாத்தா சிரிப்பு வருது போறீங்க பாட்டு படிச்சிட்டே இருக்காங்க என்ற அதில் பாடியவர்கள் காதல் பாடல்களை பாடி பார்ப்பவர்களை அலுப்படையச் செய்தனர்.

” கொஞ்சம் இருங்க” எனறவள் ஹால் பண்ணிய சகானா “கனி கொஞ்சம் ஸ்டேஜ்க்கு வாடி, என்றாள். அவளும் ஸ்டேஜிக்கு செல்ல “ஒரு பாட்டு பாடு என்றாள், நானா நடிக்காம பாடுடி, சுற்றி பார்வையை சுழல விட  , விருந்தினர்கள் சென்றிருக்க நெருங்கிய இருபக்க சொந்தங்கள் மற்றும் எஞ்சியிருந்தனர் “ஓகே நான் பாடுறேன், நீங்க ஆட ரெடியா?” என இவளும் கேட்க,  ஜமாச்சிடலாம்  என்றாள் சகானா.

அதைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த ரஞ்சித் மைக்கை கையில் எடுத்தவன் “ஹலோ சொந்தங்களே இனி இது ஃபேமிலி டைம்,  விரும்பினவங்க பாடலாம் ஆடலாம் என அறிவித்தவன் முதலாவது பாடல் இதோ என்றான்  ரஞ்சித்தின் தந்தை பழைய பாடல் ஒன்றைப் பாட  அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். “ப்பா பின்னிட்டீங்க” என்றான் ரஞ்சித்.

அதனைத் தொடர்ந்து பாடலைப்  பாட அங்கிருந்தவர்கள் பாடலுக்கேற்ற  ஆடத்  தொடங்கினர்.அடுத்து நாங்கள் ஆவலுடன்  எதிர்பாத்த பாடல் இதோ என அறிவிக்க, மைக்கைப் பிடித்த கனி ” மலையூறு நாட்டாம…
மனச காட்டு பூட்டாம… உன்னை போல யாரும் இல்ல மாமா… “என மம்பட்டியான்  திரைப்படப் பாடலை பாட. ….சகானாவும் அவளது மற்றைய  கல்லூரித் தோழிகளும் அப் பாடலுக்கு ஆடினர். மீட்டிங்கில் கேமை பற்றி முழுதாக கிரைண்டிடம் வீடியோ மூலம் ப்ரசண்டேசன் செய்ய அவனின் குரலும் ஆளுமையும் அதில் தெளிவான விளக்கங்களை கிளையண்ட்க்கு பிடித்து போக அவர்களும் அதில் சில மாற்றங்களை  சொல்லிக் கேட்டர்.” சோர் சார்” என்றவன். அவர்கள் செய்யச் சொன்ன மாற்றங்களை ராமின் பிஏ எடுத்துக் கொண்டான்.

அதனைத் தொடர்ந்து அக்ரிமெண்டில் சைன் பண்ணியதும், கிளைண்டும் கைகுலுக்கி விடை பெற்றனர்.நிதிஸும் வெளியே வர அவ்விடம் சத்தமாக, இருக்க அவ்விடத்தை   நோக்கி  அவன் கால்கள் நடக்க ,அடுத்த நொடி கால்கள் அசைவற்று நின்றது.” தேன் குரலில்  பாடல் ஒலித்தது.

வித்யா பாடராளோ….. என எண்ணியவன் அவவ்இடத்தை அடைய ஆட்கள் அவன் நின்ற இடங்களில் வரத் தொடங்க பாக்கட்டில் இருந்த மாஸ்கை போட்டுக் கொண்டான். அலைபேசியை  பார்க்க  அதுவும் இல்லை  அப்போது அவ்விடம் ராமும், தரங்கிணையும் வந்தனர். “எத்தனை தடவ ஹால் பண்றது” என்றான் ராம். அப்போது ராமின் பிஏ லேப்டாப் மட்டும்  மற்றும் சில பையில்களுடன் அவர்களை நெருங்கியவள். “சார் உங்க போன் ரொம்ப நேரமா அடிக்குது” என கொடுத்துவிட்டு அன்றாள்.

அலைபேசியின் திரையைப் பார்க்க அதிலோ “வித்தியா ஹாலிங்”  என மிளிர்ந்து.அதே  வேளை “தேன் குரல்” உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. நிதிஸால்  உச்செடுக்க கூட முடியவில்லை எவ்வளவு பெரிய ஏமாற்றம் என எண்ணியவன் உங்ளே  செல்ல முற்பட பாடலும் அப்போது நின்றது.

என்னாச்சுடா என ராம் அவன் முகத்தைப் பார்த்து கேட்க… அவனின் முகமோ ஏதோ சரி இல்லை என சொல்லியது. ராம் அவன் தோளைப் பற்றி உலுக்க சுய நினைவுக்கு வந்தவன்  “ஹனி வாய்ஸ்” என்றான் “ஹனி  வாய்ஸ்ஸா? ” …”ஆம்” என்றான்.தரங்கினி ராமைப் பார்க்க  ராம் கண்மூடித் திறக்க, “ஓகே நான் ஹாஸ்பிடல் போகணும் பாய்” என இருவரிடமிருந்து விடைபெற்றாள் தரங்கினி.

மீண்டும் வித்யாவிடம் இருந்து அழைப்பு அழைப்பை துண்டித்த நிதிஸ் ராமிடம் “பேசலாம்” என்றவன் திருமண மண்டபத்தை ஒரு முறை பார்த்து விட்டு வெளியேறினான்.

ராமும் அவனுடன் வர   வித்யா அங்கு இல்லை” நிதிஸ் வித்தியாவிற்கு அழைக்க,”சார் வெளிய நிற்கன் இதோ வாரன் ” என்றவள் சிறிது நேரத்தில் வப்தாள் ராம் அவளை யோசனையாய் பார்க்க, ” சாப்பிடியா ?ம்ம் சாப்பிடன் சார் என்றாள். நிதிஸ் மூவருக்கும் காஃபியை ஆர்டர் செய்தான்.காஃபியும்   வர  மூவரும் அருந்தினர்.

“வித்தியா புதிசா ஏதும் பாட்டு பாடினதா ?” எனக் கேட்க,இல்லை  சார் டப்பிங் நடக்கிறதால வேற சாங் ஒன்னும் பாடல” என்றாள்

வித்தியாவோ போகும் போது நல்லாத் தானே போனான் என்னாச்சு “என தனக்குள்  எண்ணியவள்.  யோசனையோடு காஃபியை அருந்த , ராம் இருவரையும் மாறி மாறி பார்த்தவன்.காஃபியை குடித்ததும் “நிதாஸ் நான் கிளம்புரன் என அங்கிருந்து அகன்றான்.

நிதிஸுக்கு தான் ஒரு பாடகனாக  இருந்து ஒரு குரலை அடையாளம் காண முடியாமல் போய்விட்டதே என எண்ணியவன், வித்யா தன்னை ஏமாற்றியதாகவே கருதினான். “அடிக்கடி தான் கேட்டும் அவள் வாய் திறக்கவில்லையே….

அவளை ஸ்டூடியோ அருகில் இறக்கி விட்டவன்  சென்றதென்னவோ கெஸ்ட் ஹவுஸ்க்கு தான்.

கெஸ்ட் ஹவுஸினுள் ராம் நுழைய வீடு இருட்டாகவே இருந்தது திறந்த கதவின் ஊடாக நிலவழி ஊட்டியில் வர அவ் வெளிச்சத்தில் நிதிஸ் ஷோபாவில் கைகளால் கண்ணை மறைத்தபடி படுத்திருப்பது  தெரிந்தது.

ராம் மின் விளக்கினை போட ஹால் எங்களின் வெளிச்சம் “நிதிஸ்” “ம்ம்…”

” எந்திரி  என்னாச்சு” எனக்கு கேட்க எழுந்து அமர்ந்த நிதிஸ் ” ராம்  ஹனி வாய்சை கண்டுபிடிச்சனு  ஹேப்பியா இருந்தன்…..” “கண்டுபிடிச்சியா?? சொல்லவே இல்ல” ஆனா பயங்கரமா ஏமாந்துடன்டா என தலையை அழுத்தப் பற்றிக் கொண்டான்.

நிதிஸை பார்க்கவே, அவன் சரியான நிலையில் இல்லை என புரிந்தது கண்கள் சிவக்க தலை முடி கலைந்து இருந்தான் ” முழுசா என்ன நடந்தது சொன்னாத்தானே தெரியும்” என்றான் ராம்  ராமை ஏறிட்டு பார்த்த நிதிஸ் “ட்ரிங்க் பண்ணுவோமா? “எனக் கேட்க ராமோ  அதிர்ந்து நிதிஸைப் பார்த்தவன்.” டேய் என்னடா பேசிட்டு இருக்க பார்ட்டிக்கு போனாலும் சும்மா கைல வச்சுட்டு இருக்குறாள் நீ, அதெல்லாம் இல்ல, உன் வாய்ஸ் நாளைக்கு டல்லா இருக்கு நாளைக்கு கனடா கிளம்பனும் ஞாபகம் இருக்கு தானே??? அத விட்டுட்டு முதல்ல என்னனு சொல்லு” எனக் கேட்க.

நிதிஸும்  வாய்ஸ் சேலஞ்ச் சோ, பற்றியும்  வித்யாஸ்ரீ பற்றியும் அவளை “ஹனி வாய்ஸ்” என எண்ணியதையும் சொன்னவன் கடந்த ஒரு மாதமாக அவளோடு ஒரு சுமுகமாக நட்புறவில் இருந்ததையும் சொன்னான் முகம் கசங்க.

“அப்போ ஈவினிங் பார்த்த பொண்ணு அவ”

“ம்ம்” என்றான்.

நிதிஸ் தனது அலைபேசியில்  இறுதியாக வித்தியா பாடிய பாடலை போட்ட காட்டியவன், “இது வித்தியா பாடினதுடா” “அப்போ இவ இல்லனா” கண்மூடி திறந்தவன் ஒரு பெருமூச்சுடன்  “ஹோட்டல்ல எங்கேஜ்மென்ட் பங்க்ஷன்ல வந்த வாய்ஸ் தான் என்னோட ஹனி வாய்ஸ்” என்றான். எத்தனையோ தடவை கேட்டிருக்கேன்டா ஹனி வாய்ச காட்டி தான் படிச்சதா சொன்னாடா இவ்ளோ பெரிய ஏமாற்றி வேலை இது  என்றான். நிதிஸ்

தமையனின்  நிலை புரிந்தாலும் “யார் என்றே தெரியாத பெண் மீது எப்படி  காதல் கொள்வது” எனும் கேள்வி எழ இதோ கண் முன் நிதிஸ். ஒரு பெருமூச்சு மட்டுமே ராமிடம் “ஓகே டா பங்க்ஷன் நடந்த இடத்துல விசாரிச்சா தெரிஞ்சிடும்” என தமையனைத்  தேற்றினான்.

“வா வீட்டு போலாம்” என்றான் ராம். அப்போது வித்யாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது “சார்… ஆர் யூ ஓகே? ரொம்ப டல்லா இருந்தீங்க” என மெசேஜ் வந்திருந்தது அதைப் பார்த்து நிதிஸ்  பதிலளிக்காது பையில் போனை போட்டுவிட்டு எழ ராமு எழுந்தவன் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியேறினர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!