அத்தியாயம்-18
“க்கூம்ம்… இப்படி சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது…” என்று மறுபடியும் அவன் காதில் கீச்சு கீச்சு என்று கத்திக் கொண்டிருந்தாள்.. அதில் சுயம் பெற்றவனோ அப்போது தான் தான் இருக்கும் நிலையே அவனுக்கு விளங்கியது… அதில் சட்டென்று அவளை தன்னை விட்டு பிரித்து நிற்க வைத்தவனோ… அவளை அனல் பார்வை பார்க்க…
எங்கே அவன் தன்னை கோபத்தில் திட்ட போகிறானோ என்று அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருக்க,.. அவனோ அவளின் பாவமான முகத்தை பார்த்தால் எங்கே தன்னுடைய கோவம் ஓடிவிடுமோ என்று நினைத்தவனோ அவளது பக்கம் திரும்புவதாக தெரியவில்லை…
அதனால் அவளோ எங்கே அவன் காதில் விழவில்லையோ என்று மறுபடியும் அதே வசனத்தை திரும்ப கூற.. அதில் சட்டென்று தன் நிலையிலிருந்து விடுபட்டவன் திரும்பி அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தவாறே… “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாடி இப்படித்தான் மேல வந்து விழுவியா…” என்று கோபமாக கேட்க…
அதில் மலர்ந்திருந்த பெண்ணவளின் முகம் சுருங்கி போயிற்று… “நான் ஒன்னும் வேணும்னு வந்து மோதல பாஸ்…” என்று கூற…
அவள் தன்னை பாஸ் என்று அழைக்கும் அவளது பேச்சு அவனுக்கு பிடிக்கவே இல்லை… ஏனோ மற்றவர்கள் போல அவள் தன்னை அப்படி அழைப்பது அவனுக்கு கடுப்பை கிளப்பியது.. “இந்த பாஸ்ன்னு சொல்றத முதல நிறுத்துடி…” என்று அவன் அடக்கப்பட்டு கோபத்துடன் கத்தினான்…
அவன் கோவத்தில் பயந்தவளோ… “ம்ச் எதுக்காக சார் இப்ப கத்துறீங்க… இந்த வீட்ல எல்லாருமே உங்களை பாஸ்னு தான் கூப்பிடுறாங்க.. அதனால நானும் பாஸ்னு கூப்பிட்டேன்.. இதுல எதுவும் தப்பா..” என்று பாவமாக கேட்க…
அவனது மனமோ “இவளும் இங்க வேலை பாக்குறவங்களும் ஒன்னா…” என்று கேள்வியை எழுப்ப.. அதனை கண்டு குழம்பி போனான்… “இது என்னடா பெரிய கொடுமையா இருக்கு… ஒரு வாரம் தாண்டா இவளையே தெரியும் உனக்கு.. இவள பத்தி இன்னும் முழுசா கூட எதுவும் தெரியாதுடா உனக்கு… இப்ப என்னனா இப்படி நினைக்கிறியேடா அவளை பத்தி… இது உனக்கே ஓவரா தெரியல…” என்று அவன் மனமோ கேள்வி எழுப்ப… அதனை அழகாக ஒதுக்கி வைத்தவனோ…. “ம்ச் அதுக்காக என்ன பாஸ்னுலாம் கூப்பிடாத இரிட்டேட்டிங் ஆகுது…” என்று கத்தியவானோ “என் பேரு மார்ட்டின் லுதாஸ்… உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படி என் பேர சொல்லியே கூப்பிடு…”என்று கூற.
அதில் தன் அழகான கண்களை சுருக்கி ஏதோ யோசித்தவாறே நின்றவள் தன்னுடைய வெண்பற்களால் அழகிய சிவந்த மென்மையான இதழ்களை கடித்தவாறு நிற்க… மார்ட்டினின் பார்வை முழுதும் அந்த உதட்டின் மீது தான் இருந்தது…
தன்னுடைய உணர்வுகள் எழுவதை தடுக்க நினைத்து தன்னுடைய தலையை அழுத்த கோதியவாறே நின்றவனின் பார்வை மட்டும் அவளிடமிருந்து நகரவே இல்லை…
“ம்ம்ம் அப்போ உங்கள தாஸ்னு கூப்டவா…” என்று கண்களை சுருக்கியவாறே கேட்க…
மார்ட்டினோ அவளையே ஆச்சரியமாக பார்த்தவனோ… “தாஸா…”என்று இழுக்க…
அவளும் ஆம் என்று தலையாட்டியவள் “மார்ட்டின்ற பேரு எல்லாருமே உங்களுக்கு கூப்பிடுவாங்கல்ல.. இந்த லுதாஸ்ன்ற பெயர்தான் எனக்கு தெரிஞ்சு அவ்வளவா கேள்விப்பட்டதே கிடையாது.. அதுல இருக்கிற அந்த தாஸ்ன்ற பேர் நல்லா இருக்குல்ல.. அதை நான் யூஸ் பண்ணிக்கிறேன்..” என்று புன்னகையுடன் கூறியவளை வித்தியாசமாக மேலே இருந்து கீழாக பார்த்தவனோ…
“ம்ம்ம் வாட் எவர்… எப்படி வேணாலும் கூப்பிடு… ஆனா பாஸ்னு மட்டும் கூப்பிடாத…” என்று கூறியவன் அவள் மீதிருந்த கோவம் மறுபடி நினைவிற்கு வர… “ம்ச் உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது… நீ ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்ல..” என்று கத்தியவனை இமைக்காமல் பார்த்தவளோ…
“அதே நேரத்துல கெஸ்டும் கிடையாது பாஸ்…”என்று மறுபடியும் பாஸ் என்று ஆரம்பித்தவளை கண்டு முறைக்க…
“ஸ்ஸ்ஸ் சாரி பழக்க தோசம்…”என்று உதட்டை கடித்தவளை கண்டு முகம் திருப்பிக்கொண்டவனோ..
“ஆமா இந்த வீட்டுக்கு நீ கெஸ்டும் கிடையாது தான்… அதேநேரம் வேலைக்காரியும் கிடையாது… நீ இங்க ஜஸ்ட் கொஞ்ச நாள் தங்கி இருக்கிற ஒரு டேனன்ட் மாதிரி தான்… அதனால இந்த வேலையெல்லாம் நீ செய்யணும்னு எந்த அவசியமும் கிடையாது.. நீ பாட்டுக்கு சீக்கிரமா இங்கிருந்து போற வழிய மட்டும் பாரு… அத விட்டுட்டு இங்கே செட்டில் ஆக ப்ளான் பண்ணி சமைச்சு போட்டு என்னை மயக்க ட்ரை பண்ணாத…” என்று எடுத்தெறிந்து பேச…
அதில் பெண்ணின் மனம் புண்பட்டு போனது. “நான் ஒன்னும் உங்களை மயக்க நினைக்கல…” என்று முகத்தை சுருக்கியவாறே கூற..
“ஓஓ அப்டியா… ஆனா எனக்கு என்ன தோணுதுனா.. இப்படி எல்லாம் சமைச்சு போட்டு என்ன மயக்க தான் பாக்குறியோன்னு தான் தோணுது… அப்டி இல்லனா வேற என்ன பண்ண முயற்சி பண்ற…” என்று கத்தியவனோ… “லுக் உன் இடத்துல நீ இருந்தா இங்க எந்த பிரச்சனையும் இல்ல.. அத தான்டி நீ வெளில வர பாத்த…“என்றவனோ… “ம்ம் இன்னொரு தடவை நீ கிச்சன் பக்கம் போன அவ்வளவுதான் சொல்லிட்டேன்…” என்று கத்தியவன் விறுவிறுவென்று அங்கிருந்து சென்று விட்டான்..
மைத்துவோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கோவமாக அங்கிருந்து செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் வேணும் என்று எல்லாம் அவள் சமையல் செய்யவில்லை.. அந்த வீட்டிலேயே மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு வெட்டியாக சுற்றும்படி இருக்க.. அதில் கடுப்பானவள் அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அவனுக்கு விருப்பமானதை செய்து கொடுக்க முயன்றாள்… ஆனால் அவனுக்கோ அது சுத்தமாக பிடிக்காமல் போக… இப்போது தலையை தொங்க போட்டுக் கொண்டே அறையில் போய் அடங்கிக் கொண்டாள்.
அவள் முகம் வாடி, தலையை தொங்கப்போட்டுக்கொண்டே செல்பவளையே ஏதோ தன்னுடைய போனை டைனிங் டேபிளிலையே வைத்துவிட்டு சென்றுவிட்டதை கார் ஏறுவதற்கு முன்பே நினைவுக்கு வந்து அதனை எடுப்பதற்காக வந்த மார்ட்டின் பார்த்துவிட.. அவளின் வாடிய முகம் அவனை கொஞ்சம் பாதிக்க தான் செய்தது… “ம்ச் ரொம்ப திட்டிட்டோமோ…” என்று கேட்டுக் கொண்டவனின் மனமோ… “ம்ச் ஏன் திட்டினா இப்ப என்ன…” என்று நினைத்தவாறே அங்கிருந்து வேக வேகமாக சென்றுவிட்டான்…
அடுத்து வந்த நாட்களும் இதையேதான் தொடர்ந்து கொண்டே இருந்தது.. அவனிடம் என்னதான் திட்டு வாங்கினாலும் அந்த வீட்டினை அலங்கரிப்பதில் தொடங்கி தோட்டத்தில் செடி நடுவது வரை அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவளை நினைக்க நினைக்க மார்ட்டினுக்கு புதுவிதமான புத்துணர்வு தோன்றதான் செய்தது.. அதுவும் காலையில் எழுந்து அவள் முகத்தில் முழிக்கவில்லை என்றால் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிடும்…
காலையில் அவள் தோட்டத்தில் பூக்கள் பறித்து கொண்டு இருப்பதில் தொடங்கி அவனுக்கு விருப்பமான இஞ்சி டீ கொடுப்பது வரை அனைத்துமே அவனுக்கு விருப்பப்பட்டதை செய்ய தொடங்கியிருந்தாள்.. அவன் அதற்காக கடுமையாக அவளை பேசி கூட விரட்ட பார்த்தான்.. ஆனால் அவளும் அடங்குவதாக தெரியவில்லை.
பொருத்து பொருத்து பார்த்தவளோ ஒருக்கட்டத்தில் “ம்ச் சும்மா எல்லாத்துக்கும் திட்டிட்டே இருக்காதீங்க சார்.. இந்த வீட்ல சும்மா சுத்துறதுக்கு ஒரு மாதிரி இருக்கு அதனால தான் இப்படி வேலை செய்றேன்.. உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லுங்க இனிமே நான் எதையும் செய்யல…” என்று பாவமாக முகத்தை வைத்திருப்பவளை பார்த்து அதற்கு மேல் அவனால் தான் என்ன சொல்லிவிட முடியும்…
“வாட் எவர் ஏதோ செய்…” என்று கத்தியவாறு அவன் பாட்டிற்கு சென்று விடுவான்… இதுவே தான் தொடர்ந்து கொண்டே இருந்தது..
எப்போதாவது அவன் கோபத்தில் இருந்தால் “எப்போ டி நீ இந்த வீட்டை விட்டு போவ..” என்று அவளை பார்த்து ஆத்திரமாக கத்த..
அதில் பெண்ணவளோ தன் முகத்தை சிறுப்பிள்ளை போல வைத்துக்கொண்டு.. “எனக்கான வேலை சீக்கிரமா கிடைச்சா.. நான் இங்கிருந்து போயிடுவேன் சார்..” என்று கூறியவளின் கண்களோ அங்குல அங்குலமாக அவனைத் தான் ரசித்துக்கொண்டே இருக்கும்.
“எதுக்காக இப்போ உன் கண்ணு அவரையே இப்படி ரசனையா பார்த்துட்டு இருக்கு..” என்று அவளும் தன்னிடமே கேள்வி கேட்க… “ம்ம் இல்லை இவரு அழகா இருக்காரு இல்ல அதனால தான் ரசிச்சி பார்த்துட்டு இருக்கேன்…” என்று கூறிக்கொண்டவளோ ஆண்களை தாண்டி வராதவள் எல்லாம் கிடையாது… இத்தனைக்கும் அவள் கல்லூரியிலேயே படித்த ஆண்கள் பல பேரை நிமிர்ந்தும் பார்க்காதவள் அப்போது அவர்கள் மீது வராத ஒரு ரசனை மார்ட்டினின் மீது அவளுக்கு தோன்ற தான் செய்தது…
“தாஸ்… தாஸ்…” என்று அவனின் பின்னாலையே சில நேரம் சுற்றிக் கொண்டு இருக்க…
கபீரோ தன்னுடைய பாஸை உரிமையாக தாஸ் என்று பெயர் வைத்து அழைக்கும் அந்த பெண்ணை ஆச்சரியமாக பார்ப்பான். கபீரின் ஆச்சரியமான முகம் அவன் என்ன நினைக்கிறான் என்பதை மார்ட்டினுக்கு பறைசாற்ற… கபீர் மார்ட்டினை வேறு வித்தியாசமாக பார்த்து வைத்தான்.
“ம்ச் என்னடா பார்வை.. நீ நெனைக்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்ல..சும்மா கொள்ளக்கூட்டம் தலைவன் மாதிரி பாஸ் பாஸ்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தா அதனால தான் தாஸ்னு மாத்தி விட்டு இருக்கேன்… வேற ஒன்னும் இல்ல…” என்று அவனுக்கு விளக்கம் கூற.. இந்த விளக்கம் கூறும் மார்ட்டின் கபீருக்கு புதிதாக தான் தெரிந்தான்…
இப்படியே நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.. பெண்ணவள் மார்ட்டினின் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஓடி விட்டிருந்தது. இந்த இருபது நாளும் மார்ட்டினுக்கு அவளது உணவு பழக்கப்பட்டு போயிருந்தது… காலையில் அவனுக்கு மிகவும் பிடித்த கிரீன் டீயில் இருந்து ஆரம்பித்து இரவு உணவு வரை அவள் தான் செய்கின்றாள்.. ஆனால் என்ன பரிமாற மட்டும் மாட்டாள்.. அவன் விடமாட்டான்…
அவள் செய்யும் உணவுக்காக அவன் அவளை பாராட்டி விடவெல்லாம் மாட்டான்… திட்ட தான் செய்வான்… “எதுக்காக இதெல்லாம் நீ செய்ற.. என்ன என்ன மயக்க பார்க்கிறியா..”என்று அதே வசனத்தை தான் அவன் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறான்.
அவளோ “ம்ச் இல்ல தாஸ் எனக்கு ரொம்ப போர் அடிக்குது அதனால்தான் இப்படி செய்றேன்…” என்று அவனை சமாளித்துக் கொண்டே வந்த பெண்ணவளுக்கு மார்ட்டினின் குணங்கள் தெரிய தான் செய்தது… அதற்கு மேல் அவனது தொழிலும் அப்போதுதான் அவளுக்கும் விளங்கியது… மார்ட்டின் அவளுக்கு முன்னால் உட்கார்ந்து கபீரிடம் போடும் திட்டங்களில் இருந்து, கடத்தல், மர்டர் என்று அனைத்தும் பேச பேச
“அட கொள்ள கூட்டத்தோட தலைவனாடா நீ…” என்று தான் மைத்துவிற்கு தோன்றியது,,
ஒரு நாள் துணிந்து அதனை மார்ட்டினிடம் கேட்க கூட செய்துவிட்டாள்… “எதுக்கு தாஸ் இந்த தொழில் பண்றீங்க..” என்று அவளும் பயந்தவாரே கேட்க..
மார்ட்டேனோ திரும்பி அவளை முறைத்து பார்த்தவன் “என்ன கொஞ்சம் லூஸ்ல விட்டா போதுமே உடனே அட்வான்டேஜ் எடுத்துப்பியே.. என்ன என்ன திருத்த பாக்குறியா.. இத தாண்டி நீ கடைசில வந்து பண்ணுவேனு எனக்கு தெரியும்.. முதல்ல மேல வந்து விழுந்து மயக்க பார்த்த.. இப்ப திருத்த பாக்குற அதானே..” என்று முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு அவன் கேட்க..
அவளோ அதற்கு இல்லை என்று வேகமாக தலையாட்டியவள் “ம்ச் தாஸ் எதுக்காக பண்றீங்கன்னு ரீசன் தானே கேட்டேன்… நான் ஒன்னும் உங்கள திருத்த பாக்கல…” என்று அமைதியாக கூறியவளை அவனோ முறைத்தவாறு சென்றுவிட்டான்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்பு வந்து அதற்கு பதிலும் கூறிவிட்டான். “இது ஒன்னும் நாங்கள் புதுசா பண்ற தொழில் கிடையாது… ஏற்கனவே மூன்று தலைமுறையா இந்த தொழில்தான் நாங்க பண்ணிட்டு இருக்கோம்.. இது ஒன்னும் தப்பான தொழில் கிடையாது எந்த பொண்ணுங்களையும் நாங்க கடத்தல, எந்த பாசங்களையும் நாங்க கடத்தல, போதை மருந்து கடத்தல, அது மாதிரி எந்த ஹியூமன் டிராபிக்கும் நாங்க பண்ணல.. நாங்க பண்றது எல்லாம் சிலையை திருடுறது, டைமண்ட் திருடுறது, ஏதாவது அரிய வகை நகைகளை திருடுறது அவ்வளவுதான்… உன் கழுத்துல இருக்கே இந்த லாக்கெட் அது மாதிரி தான்…”என்று கூற.
“லாக்கெட்ட மட்டுமா கடத்துனீங்க என்னையும் சேர்த்துல கடத்திட்டீங்க…”என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவளோ அவனையே ரசித்தவாறே பார்த்தாள்… அவனோ அவளின் பார்வையின் மாற்றத்தை கண்டுக்கொள்ளாதவனாக அங்கிருந்து சென்றுவிட்டான்…
ஆம் இன்னும் அந்த லாக்கெட் இன்னும் அவள் கழுத்தில் தான் கிடந்தது.. அந்த ப்ராஜெக்ட்டை மார்ட்டினுக்கு கொடுத்தவனோ.. திடீரென்று மார்ட்டினுக்கு அழைத்து… “மிஸ்டர் மார்ட்டின் கொஞ்ச நாள் அந்த லாக்கெட் உங்ககிட்டயே இருக்கட்டும்… அந்த நிவாஸ் இப்போ பிளாக் மார்க்கெட்ல அதிகமா உலாவுறதா நியூஸ் வந்து இருக்கு… நீங்க கொண்டு வந்து இப்போ கொடுத்தா அத அவன் மறுபடி திருடுற பிளானா கூட இருக்கலாம்.. அதனால இப்போதைக்கு சேஃபான இடம் உங்ககிட்ட இருக்கிறது மட்டும்தான்… கண்டிப்பா சீக்கிரமா அதை வாங்கிறேன்…” என்று கூற.
மார்ட்டேனும் சரி என்று தலையாட்டியிருந்தான்.. அவள் கழுத்தில் கிடக்கும் அந்த லாக்கெட்டை அவனுக்கும் வாங்க மனமில்லை.. ஏனென்றால் அந்த லாக்கெட் அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்தது.. அதுவும் பச்சைக்கால் கொண்டிருக்கும் அந்த டாலரை பார்க்க பார்க்க அவளது கழுத்து அவ்வளவு பளபளப்பாக தெரிந்தது அவனுக்கு…
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டே இருக்க அவனும் வார இறுதியில் அந்த பாருக்கு போவதை மட்டும் நிறுத்தவில்லை… அப்போதெல்லாம் அதிகமாக குடித்துக் கொண்டு தள்ளாடியவாறே காரில் இருந்து இறங்கி வருபவனை தன்னுடைய அறையின் ஜன்னல் வழியாக பார்த்த பெண்ணவளுக்கு முதல் முதலில் அவன் இது போல குடித்துவிட்டு வந்த போது நடந்த நிகழ்வுதான் அவள் கண்களுக்கு முன்னால் வந்து சென்றது.
அந்த வீட்டிற்கு வந்த முதல் வார இறுதியில் மார்ட்டின் மது அருந்துவதற்காக அந்த பப்பிற்கு சென்று இரவு தாமதமாக வீட்டிற்கு வர,, அப்போது மைத்ரேயியோ புது இடம் என்பதால் உறக்கம் வராமல் தோட்டத்தில் தான் உலாத்திக் கொண்டிருந்தாள்.. அப்போது மார்ட்டினின் கார் தள்ளாடியபடியே காம்பவுண்டிற்கு வருவதை பார்த்து யோசனையாக முகத்தை சுருக்கியவள் மெதுவாக நடந்து அவனிடம் செல்ல முயல..
மார்ட்டினோ தள்ளாட்டத்துடன் வேகமாக காரில் இருந்து இறங்கியவன் தள்ளாடியவாறு வீட்டினை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.. ஒரு கட்டத்தில் அன்று அதிகமாக குடித்து இருப்பதால் கொஞ்சம் நிதானம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தவன் வேகமாக ஹாலில் இருக்கும் டீபாயில் கால் தட்டி கீழே விழ செல்ல.. அதனை பார்த்தவளோ அப்போதும் அவனின் பின்னால் வந்தவள் அவனின் தள்ளாட்டத்தை பார்த்து பதறியவள்…
“ஐயோ தாஸ்…” என்று ஓடியவாறே அவனின் இடையை இறுக்க பிடித்துக்கொண்டவள் தன்னுடன் அணைத்துக் கொண்டாள்… அதனை போதை விழிகளுடன் பார்த்த மார்ட்டினோ அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டே இருக்க…
அவளும் தன் காந்த விழிகளால் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. “விழுந்துடாதீங்க தாஸ்…” என்று கூறியவள் அவனை அவனுடைய அறைக்கு அழைத்துக் செல்ல அவனும் அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தள்ளாடியவாறெ தனது அறைக்கு வந்தான்…
மார்ட்டின் தன் அறைக்கு வந்த வேகத்திற்கு அப்படியே அவளுடன் சேர்ந்து கட்டிலில் விழுந்துவிட்டான். “அய்யோ தாஸ்… என்ன செய்றீங்க.. பாஸ் நகருங்க நகருங்க..” என்று அவனை தன்னிடமிருந்து விலக்க பார்க்க…
ஆனால் அவனோ கண்களை இறுக்க மூடியவன்… “ப்ளீஸ் பேபி கொஞ்ச நேரம் அப்படியே அசையாம இறேன்… எனக்கு தூக்கம் வருது என்ன டிஸ்டர்ப் பண்ணாத..”என்ற உளறலாக கூறியவனோ அப்படியே அவளது கழுத்தில் தன்னுடைய முகத்தை புதைத்தவாறு உறங்க ஆரம்பிக்க பெண்ணவளுக்கு அதில் ஒரு மாதிரி மயக்கம் வருவது போல இருந்தது… இந்த உணர்வுகள் எல்லாம் அவளுக்கு ரொம்பவும் புதிதாக தான் இருந்தது… இதுவரை ஆண்களிடம் அதிகமாக பேசியது கூட கிடையாது ஏன் ஜான்சனிடம் கூட பத்து அடி தூரத்தில் நின்று தான் பேசுவாள்..
அப்படி இருக்கும்போது மார்ட்டினின் இந்த நெருக்கம் அவளுக்கு ஒரு வித பயத்தை தான் உண்டு செய்தது. “ஆஆஆ ஹலோ தாஸ் தாஸ் நகருங்க… எனக்கு மூச்சு முட்டுது…” என்று அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயல…
ஆனால் அவனோ மலைமாடு போல அவள் மேலையே படுத்து உறங்கி விட்டிருந்தான். பெண்ணவள் அதிக நேரம் அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சித்துக் கொண்டே இருக்க… ஆனால் கடைசி வரை அது முடியாமல் போக ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அப்படியே உறங்கி விட்டாள் மைத்து..
அப்படியே அந்த இரவு கழிய.. அடுத்தது இருவரும் முழித்தது என்னவோ மார்ட்டினின் காட்டுக் கத்தலில் தான்… “உனக்கு அறிவு இருக்கா ஒரு ஆம்பள பையனோட ரூம்ல இப்படி வந்து பப்பரக்கான்னு படுத்திருக்கியே.. டு யூ ஹேவ் எனி மேனர்ஸ்…” என்றதும் கத்திக் கொண்டிருந்தான்..
அதற்கும் காரணம் இருக்கு அல்லவா… மார்ட்டின் காலையில் கண்விழித்தவன் “என்ன ஏதோ ரொம்ப சாஃப்ட்டான வெண்பஞ்சில படுக்கிற மாதிரி இவ்வளவு சாஃப்டா இருக்கு..” என்று கண்விழித்து பார்த்தவனோ தன் கையில் வாகாக படுத்துறங்கும் பெண்ணவளை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவே இல்லை..
“காட் இவளா…” என்று அதிர்ச்சியுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்… மார்ட்டின் சிறிது நேரம் அவளை அதிர்வுடன் பார்க்க எப்போது அந்த அதிர்ச்சி ரசனையாக மாறியது என்று அவனுக்கே தெரியவில்லை.. அவளின் அழகிய வதனத்தையே தனது கண்களால் அளந்துக் கொண்டிருந்தவனுக்கு உள்ளம் படப்படவென அடித்துக் கொண்டிருக்க… அதுவோ இதுவரை தோன்றாத உணர்வுகள் எல்லாம் தோன்றிக் கொண்டே இருந்தது..
ஒரு கொத்து முடி மைத்துவின் நெற்றியில் வந்து விழுந்து அவளை உசுப்பிக் கொண்டே இருக்க அதனை அப்படியே கையில் பிடித்தவன் அவளது காதுக்கு பின்னால் கொண்டு போய் சொருகிவிட்டவனோ அப்படியே அவளது ஈரமான உதட்டுகளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்.. சப் என்று அதில் முத்தம் கொடுப்பதற்காக குனிந்துக் கொள்ள.. அப்போதுதான் அவன் செய்யும் காரியமே அவனுக்கு விளங்கியது…
பட்டென்று அவளிடமிருந்து விலகியவன்.. “காட் மார்ட்டின் என்னடா செய்ய பாத்த..” என்று வேகமாக கட்டிலிலிருந்து எழுந்து நின்றவன் அவள் தன்னுடைய அறைக்கு வந்ததை நினைத்து அவள் மீது தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது…
மார்ட்டின் கோவமாக அங்கும் இங்கும் பார்வையை ஓடவிட்டவனின் பார்வையில் அங்கிருந்த தண்ணீர் குவளை பட.. அதனை அப்படியே கையில் எடுத்தவனோ அதனை வேகமாக அவளின் மீது ஊற்ற.. ஜில்லென்று தன் மீது ஊற்றிய தண்ணீரில் பதறி அடித்து எழுந்து நின்றவளோ முதலில் ஒன்றும் புரியாமல் அந்த அறையையே சுற்றி முற்றி பார்க்க.. அப்போது தான் அவளின் கண்களுக்கு தன் இடையில் கைவைத்துக்கொண்டு கோவமாக முறைத்தவாறே நின்றிருந்த மார்ட்டின் விழுந்தான்..
அப்போது தான் பெண்ணவளுக்கு அவனின் கோவம் புரிய தன் முகத்தில் வழியும் தண்ணீரை வழித்து எடுத்தவளோ… ஈஈஈஈ என்று அவனை பார்த்து சிரிக்க… அவனுக்கோ கோவம் பன்மடங்காகியது… பின்னே இருக்காதா அவனே அவளின் நெருக்கம் ஏற்படுத்திய தாக்கத்தில் அவளிடம் நெருங்காமல் சுற்ற இவள் என்னவென்றால் அவனுடன் கட்டிக்கொண்டு அல்லவா படுத்திருக்கின்றாள்…
“ஹேய் இடியட்.. நீ எப்டி என்னோட ரூமுக்கு வந்த… உனக்கு என்ன உரிமை இருக்குன்னு என் ரூமுக்குள்ள வர… ம்ம்ம்…” என்று கர்ஜனையாக கர்ஜித்தவனை பார்த்து பெண்ணவளுக்கு மிரட்சியாக இருந்தது..
“இல்ல தாஸ்…”என்று ஆரம்பித்தவளோ இரவில் நடந்தது அனைத்தையும் கூறியவள்… “நீங்க கீழ விழ போனீங்க.. அதான் உங்களை ரூம்ல விட வந்தேன்.. ஆனா நீங்க என்னை டைட்டா ஹக் பண்ணிட்டு அப்படியே படுத்துட்டீங்க…” என்று கூறியவளின் முகமோ அப்படியே வெட்கத்தில் சிவந்து போனது…
மார்ட்டினுக்கோ அப்போது தான் இரவில் நடந்தது அனைத்தும் கண் முன்னால் வந்து செல்ல… “ம்கூம்…”என்று மயங்கிய மனதை சரி செய்தவாறே… “ம்ச் அதுக்காக இப்டியா வழிஞ்சிட்டு என் ரூம்ல வந்து படுப்ப…”என்றவனோ… “என்ன உன் மனசுல இருக்கு… என்ன என்னை மயக்க பார்க்கிறியா…” என்று அதே வார்த்தையால் அவளை காயப்படுத்தினான்…
அதில் அவனை பொய்யாக முறைத்தவளுக்கோ அவன் பேச்சு மனதை வாட்ட தான் செய்தது.. “ம்ச் அதையே சொல்லாதீங்க தாஸ்… எனக்கு ஒன்னும் உங்கள மயக்குறதுல அவ்வளவா விருப்பமும் கிடையாது… உங்கள் வாழ்க்கையில நுழையவும் நான் நினைக்கல…” என்று கீச் கீச் குரலில் கத்தியவளை கண்டு அவனுக்கு சோதனையாகி போனது..
ஒன்று அவன் பேசுவதற்கு அழவேண்டும்.. இல்லையா கத்தவாது வேண்டும் இப்படி கத்துவதாக பேர்க்கொண்டு அவனை கீச் கீச் குரலில் மயக்கினால் அவனும் என்ன தான் செய்வான்…
“ம்ச் இன்னொரு தடவை நான் குடிச்சிட்டு வரும்போது என் கண்ணு முன்னாடி வந்துராத… அது உனக்கு நல்லது கிடையாது.. இப்பவே சொல்லிட்டேன்..”என்று கத்த… அதனை இப்போது நினைத்து பார்த்தவாறே ஜன்னல் வழியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் நிலை மனதை கலக்கமாக்கியது..
(கேப்பச்சினோ…)