February 2025

உயிராய் உணர்வில் உறைந்தவளே..(6)

அந்த கல்லூரி வாசலில் தன் புல்லட்டில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் உதிரன்எழிலமுதன். யூனிபார்மில் சார் செம்ம மாஸ்ஸா கைகட்டி பைக்கில் சாய்ந்து நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் நின்ற அழகைக் கண்ட எந்த பெண்ணும் அவனை பார்க்காமல் செல்ல மாட்டாள். ஆனால் இந்த குந்தவைக்கு மட்டும் ஏன் தான் அவனை பிடிக்கவில்லையோ. குந்தவை தன் தோழி பானுமதியுடன் வெளியே வந்தாள். அது ஒரு கல்வியியல் கல்லூரி குந்தவை அங்கு பி.எட். படித்துக் கொண்டிருந்தாள். யூனிபார்ம் புடவை […]

உயிராய் உணர்வில் உறைந்தவளே..(6) Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 12

கனவு – 12   சுவற்றில் கையை ஓங்கி குத்தியவன் பார்வையோ ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. வேறு எங்கே ? லாக்கரில் தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்காக அவன் எழுதி வைத்த கவிதைகள் யாவும் சேமித்து வைத்திருக்கும் லாக்கரின் அருகில் சென்றவனுக்கு இதற்கு மேல் தன்னிடம் அப் பொக்கிஷங்களை எல்லாம் வைத்திருப்பது தவறு என்ற எண்ணம் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் புரிய வைத்து இருந்தது. கரங்கள் நடுங்க லாக்கரை திறந்துவனுக்கு விழிகள் இரண்டும்

நிதர்சனக் கனவோ நீ! : 12 Read More »

வேந்தனின் அளத்தியிவள் 2

வேந்தனின் அளத்தியிவள் 2 அத்தியாயம் 2 மகிழ மரமே தன் மலர்களை இறைவனைச் சுற்றியும் மலர் படுக்கையை விரித்திருக்க, அதனருகிலேயே சேர்ந்தாற் போல பவளமல்லி மரமும் தன் மலர்களை உதிர்த்து நறுமணத்தையும், அழகுக்கு அழகையும் வாரி வழங்கியது அவ்விடத்திற்கே.  இரண்டு கையையும் சேர்த்து பிடித்தால் அதற்குள் அடங்கிப் போகும் அளவுக்கு ஒரு சிவலிங்கம் மகிழமரத்துக்கு அடியில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தியும் வல்லமையும் பெரியதாயிற்றே. அனைத்திற்கும் மூலமான ஆதிசிவனின் ரூபத்தின் எதிரே மெய்யிருகி அமர்ந்திருந்த

வேந்தனின் அளத்தியிவள் 2 Read More »

இன்னிசை-19

,இன்னிசை – 19 மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள். ‘ ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன்‌. நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.’ என்று எண்ணிக்

இன்னிசை-19 Read More »

இன்னிசை-18

இன்னிசை- 18 குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன். மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன். ” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க. ” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள். ” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே.

இன்னிசை-18 Read More »

வேந்தனின் அளத்தியிவள்…

முன்னோட்டம் வேந்தனின் அளத்தியிவள்… ஹாய்… என்னைப்பற்றிய அறிமுகம் ஏற்கனவே தந்திருக்கேன். rajani எனும் பெயரை vageeswari என மாற்றி எழுதுகிறேன். இனிமேல் என்னுடைய கதைகள் அனைத்தும் vageeswari எனும் penname ல வெளிவரும். பொழுது விடிந்து எழுந்தவள் அவனின் குறுஞ்செய்திக்காக மொபைலை எடுக்க, அதில் நேற்று இரவு செய்தி மட்டுமே இருந்தது. தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு வியப்பு என்ன இது எதுவுமே அனுப்பாம இருக்காரு, ஒன்றும் புரியாமல் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நிதர்சனம் உரைக்க, “ஆஆ..

வேந்தனின் அளத்தியிவள்… Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 11

அத்தியாயம் – 11 ஆஹித்தியாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை வெறித்தவள் அவளின் வாடிய வதனத்தை பார்த்தாள். ஏனோ இதற்கு காரணமான அவன் மேல் ஆத்திரம் தலைக்கு ஏறியது. அழுகை தொண்டையை அடைக்க, “நான் வீட்டுக்கு கிளம்புறேன் மா என்றவள் திரும்பி அக்கா நீயும் வர்றியா?” என்று கேட்டாள். “நீ போ… நான் அப்புறமா வரேன்” என்றவள் சுவரோடு சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள். திரும்பி நடந்தாள். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்பவே இருந்தன.

நிதர்சனக் கனவோ நீ! : 11 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு..

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13

வாழ்வு : 13 ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12

வாழ்வு : 12 மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12 Read More »

error: Content is protected !!